என் கண்கள் இந்த சம்பவங்களை எப்படி பார்க்கிறது என்று தெரியவில்லை.....
என் மனம் இந்த காட்சிகளை எப்படி உள் வாங்குகிறது என்று புரியவில்லை...
பலவாறு யேசித்தும் என் சிந்தனை யில் தெளிவில்லை...
பண்ணிய பாவம் கொஞ்சமில்லை நஞ்சமில்லை...
அதனால் அபலையாய் அவள் பட்ட வேதனை சொல்வதற்கியில்லை...
புரையோடிப்போன புண்ணுக்கு மருந்திட்டால் ஆறுமா ...
புதைந்த புண்ணை கீறினால் ரணம் ஆறுமா...
மன்னித்தால் மட்டும் தவறு சரியாகுமா....
கடந்த வந்த பாதை கண்ணிலே படமாய் விரியையிலே....
அவள் கண்ட கனவு கானல் நீராய் போய் கதறி துடித்த அவல நிலையை அறிவாயா...
வீதியிலேயே வேறுந்த மரமாய் விழுந்த கிடந்த நிலை மறந்திடுமா மறந்திட இயலுமா...
தமையனாய் தமக்கையின் இழிநிலைக்கு வன்மம் தீர்த்துகொண்டாய் அவளிடம்....
இழிவான தந்தைக்கு மகளாய் பிறந்ததே காரணம் என்றாய்....
அந்தோ!!! அவள் யாரை பழி தீர்த்து அவள் வன்மத்தினை தீர்த்து கொள்வாள்...
எந்த மருந்தை கொண்டு அவள் மனதின் வலியை போக்கி கொள்வாள்...!!!!
அவள் மனம் முழுவதும் நீயே சிம்மாசனமிட்டு வீற்றிருந்தாலும் ....
அவள் கொண்ட காதலின்... நம்பிக்கை பொய்த்து போனதை எவ்வாறு மறப்பாள்....!!!!
ஆதி அந்தம் நீயே ஆனாலும் ...ஆழ் நெஞ்சில் மாறத வடுவாய் இருப்பதை எப்படி மறப்பாள்....
காலத்தின் ஓட்டம் மங்கையவளின் ரணத்தினை ஆற்றுமா .... மாறத வடு மறைந்து கறைந்து போகுமா....
கதையேடு பயணம் செய்ய காத்திருக்கிறேன்.... காலம் சொல்லும் பதிலுக்காக ...
மீண்ம் ஒரு உறைய வைக்கும் பதிவிற்காக...