All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரேவதியின் "ஒரு புன்னகைப் பூவே!!!" - கதைத் திரி

Status
Not open for further replies.

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீக்ஷாவிற்கு பிரபா காப்பாத்த வந்துவிட்டான் என்ற நிம்மதியை அனுபவிக்க கூட இயலாது தான் நின்றிருந்த கோலம் நினைத்து நடுங்கினாலும், எதுவும் தனக்கு நேரும் முன்னே தன்னுடைய உடன் பிறவா சகோதரனை கண்டு நெஞ்சின் ஒரு ஓரத்தினில் நிம்மதி உண்டானது.


அதற்குள் இவளினை பிடித்திருந்தவர்களின் பிடி தளர, பிரபாவை கண்டதும் அவளின் கட்டி இருந்த கைகளினாலும் அனிச்சை செயலாக கழட்டி விட்டான் ஒருவன் சிறிது முளைத்த பயத்தின் விளைவினால். வேகமாக அங்கு அடுக்கி வைக்கபட்டு இருந்த முட்டைகளின் பின் மறைந்து அமர்ந்தவள் வெடித்து கதறினாள். தீக்ஷாவினால் எதையுமே ஜீரணிக்க முடியவில்லை.


தன்னை நோக்கி வந்த இருவரையும் அருகில் கிடந்த கம்பியினை எடுத்து பலமாக ஆதி விழாது அதே சமயம் எழுந்துகொள்ள ய்து செய்து கீழே தள்ளி விட்ட பிரபா தீக்ஷாவின் ஆடைகளை எடுத்து கொண்டு துளியும் மாசு இல்லாது, தன் உடன் பிறவா சகோதரியினை தேடி சென்று அவள் அமர்ந்திருந்த முட்டைகளின் அருகில் சென்றவன் எதுவும் வாய் மொழி வார்த்தையாக அல்லாது உடைகளை மட்டும் குடுத்து விட்டு தள்ளி நின்று கொண்டான். அவனின் மனம் உலைக்களமாக கொதித்து கொண்டிருந்தது. அப்பொழுது தான் நியாபகம் வந்தவனாக ஆதிக்கு அழைத்து தாங்கள் இருக்கும் இடத்தினை தெரிவித்தவன் ஆதியும் எங்கு வந்து கொண்டிருக்கிறான் என்பதையும் தெரிந்து கொண்டு அலைபேசியை அணைத்தான்.



சிறிது நேரம் முன் துப்பட்டாவினை வரும் வழியில் கண்டு கொண்டவன் அந்த பாதையில் வண்டியினை செலுத்த அங்கு கீழே சரிந்து கிடந்த தீக்ஷாவின் வண்டியினை கண்டதும்,இந்த பாதையில் தான் வண்டி சென்றிருக்க வேண்டும் என்ற நினைப்பில் தன்னுடைய வாகனத்தினை விரட்டியவன் கட்டிடத்தினையும் அடைந்துவிட்டான். தாழிடாத கதவாக இருந்ததில் பிரபா கை வைத்து சிறிது திறக்கவும் திறந்து கொண்டது கதவு. இங்கு பெரும்பாலும் யாரும் வர போவதில்லை என்றே எண்ணி இங்கு வந்தனர். ஆனால் இது ஆதியின் கட்டிடம் தான் என்றும் , இங்கு இருந்த காவலாளியும் சற்று முன் தான் அந்த இடத்தினை விட்டு அகன்றார்.


கட்டிடத்தின் உள்ளே பேச்சு குரல் கேட்க காதுகளை கூர்மையாக்கி கேட்ட பிரபா இதில் ஒருவனின் குரல் எங்கோ கேட்டது போல் தோன்ற யோசனையுடன் கதவினை திறக்க அங்கு கண்ட கட்சியில் அதிர்ந்து விட்டான். நின்றது ஒரு நொடி தான், அதன் பின் தான் அவர்களை நெருங்கி பேசியது.அதன் பின் நிகழ்ந்த நிகழ்வுகள் அவனை கொல்லாமல் கொல்ல கண்களில் பழிவாங்கும் எண்ணத்துடன் கொலைவெறியில் நின்றிருந்தான்.


இங்கு நிகழ்ந்த நிகழ்வினை தன் நண்பனிடம் சொல்லாதும் இருக்க இயலாது,சொன்னாலும் தன்னுடைய உயிர் நண்பன் தாங்கி கொள்வானா என்றும்,எதுவும் அசம்பாவிதம் நடப்பதற்கும் தான் வராவிட்டால் தன் தங்கையின் நிலை என்ன என்றும் யோசித்து நடுங்கியவன் கோபத்தினை கட்டுப்படுத்த இயலாது காற்றில் கை முஷ்டியை குத்திக்கொண்டு இருந்தான்.


அதற்குள் தீக்ஷா உடையினை மாற்றி விட்டு தயங்கி தயங்கி பயத்தினாலும்,நடுக்கத்தினாலும்,வந்தாள், அவளின் வரும் அரவம் கண்டு திரும்பியவன் தன்னை கண்டு கண்களில் கண்ணீர் குளம் கட்டி நின்றவளை கண்டவனின் கண்களும் கண்ணீரை சுரந்தது.


தீக்ஷாவின் தயக்கத்தினை கண்டு அவளின் மனம் படித்தவன் அவளை நெருங்கி கைகளை பற்றியவன் கரகரப்பான குரலில் "நீ இப்போ என்ன நினைக்கிறேன்னு புரியுதும்மா,இங்க நடந்த சம்பவத்தை இங்கயே மறந்திடுன்னு சின்ன புள்ள மாதிரிலாம் சொல்ல மாட்டேன்டா,அப்படி சொல்ல நானும் முட்டாள் இல்லை,ஆனா ஒன்னு மட்டும் மனசுல வச்சிக்கோ,நான் உன்ன என்கூட பிறந்த தங்கச்சி மாதிரி தான் நினைக்கிறேன் எப்போ நீயும் ஆதியும் லவ் பண்றீங்கன்னு தெரிஞ்சதோ அப்போ இருந்து இப்போ வர, அதனால என்ன இங்க நினைச்சு உன்ன நீயே வதைச்சி ஆதியையும் விட்டு போயிடாதடா,நீ எனக்கு குழந்தை மாதிரி மாதிரி தான், எல்லா அண்ணனுக்கும் அவனோட தங்கச்சி தான் குழந்தை தான்" என்று அவளின் கண்ணீரை துடைத்தவனை கண்டு "அண்ணா" என்று கத்தியபடி பிரபாவின் மார்பில் சாய்ந்து கதறினாள்.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவளின் அழுகையினை சமாதானம் செய்ய இயலாது பின் வரவழைக்கப்பட்ட கண்டிப்பும் உரிமையும் கலந்த குரலில் "இப்போ எதுக்குடா இந்த அழுகை, அப்படினா இவ்வளவு நாளும் நீ என்ன அண்ணானு கூப்பிட்டது ஒரு வாய் வார்த்தை தானா? " என்றான். அதில் இல்லை என்று தலையாட்டியவளை கண்டு சிறிது சம்மந்தம் அடைந்த பிரபா "இங்க பாருடா,இப்போ கொஞ்சம் நாளா தான் ஆதி உயிர்ப்போடு நடமாடிட்டு இருக்கான் அது உன்னால தான்னு நான் சொல்ல தேவை இல்லை,இத பத்தி நீயும் கவலை பட்டு அவனையும் யோசிம்மா ,வேற என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியலடா" என்றான் பிரபா.


அதற்குள் ஆதியும் இங்கு வந்து சேர்ந்திருந்தான். உள்ளே வந்தவுடன் ஆதியின் கண்களில் முதலில் பட்டது தன் நண்பனின் நெஞ்சில் சாய்ந்து சிறு குழந்தை போல் தேம்பி தேம்பி அழுதபடி சீராக அணியாத உடையுடன் மேல் துப்பட்டா இல்லாது நின்ற தன் உயிரானவளும், அவளினை சமாதானம் செய்து கொண்டிருந்த தன் நண்பன் பிரபாவையும் தான். ஆதியை கண்டு விட்ட பிரபா கீழே விழுந்தவர்களை கண்களால் சுட்டி காட்டி பின் தீக்ஷாவினையும் காட்டி எதுவும் பேசாதே என்பது போல் சைகை செய்தான்.


தன் நண்பனின் சைகை மொழியினை புரிந்த கொண்ட ஆதி அந்த கட்டிடமே நடுங்கி கிடு கிடுவென ஆடும்படி கத்திய "அம்மு............" கத்தலில்.தன்னுடைய உயிரின் பாதியானவனின் கத்தலில் "பிரபாவிடம் இருந்து சரேலென விலகியவள் "அத்தான்......" என்ற கூவலுடன் காத்துக்கூட புகாதபடி இறுக அணைத்து கொண்டாள் ஷாலினி (தீக்ஷாலின) தன் அத்தான் தர்ஷன் என்ற ஆதர்ஷனை.

“அண்ணன்களோடு பிறக்காத எல்லா பெண்களுக்கும் உண்டு, எந்த ஆணாவது தங்கச்சி என்று அழைக்கமாட்டார்களா என்ற ஏக்கம்”.



பூக்கும்.

 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரெண்ட்ஸ் அண்ட் லவ்லி சிஸ்டர்ஸ்,

ரொம்ப நாள் அப்பறம் ஆதி - தீக்ஷா ஓட வந்துருக்கேன், யாரும் மறந்து இருக்க மாட்டீங்கனு நினைக்கிறன், ரொம்ப ரொம்ப தாமதமா வந்ததுக்கு மன்னிச்சு, படிச்சுட்டு ரெண்டு வார்த்தையாச்சும் கமெண்ட் பண்ணிட்டு போனீங்கன்னா இந்த வாரத்துல ஒரு பெரிய சர்ப்ரைஸ் இருக்கும்.


இப்படிக்கு

என்றும் அன்புடன் உங்கள் தங்கை ரேவதி
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புன்னகை 24 :


தன்னை கதறியபடி அணைத்திருந்த தன் உயிரினும் மேலானவளை கண்டு கலக்கத்துடன் பிரபாகரை பார்த்தான். இருந்தும் தன்னவளிற்கு ஆறுதல் அளிக்க தவறவில்லை. பிரபா தன்னை பார்த்த ஆதியை கண்டு அறையில் விழுந்து கிடந்தவர்களை கண்களால் சுட்டி காட்டினான். அவர்கள் இருவரை கண்ட தர்ஷனின் உள்ளம் எரிமலையாய் வெடித்து சிதறும் நிலையில் இருந்தது.


நண்பனின் மனநிலையை சரியாக கணித்த பிரபாகர் எதுவும் பேசாது இருக்குமாறு சைகை செய்தவன் கீழே விழுந்த கிடந்த ரோஹித்தயும்,விக்ரமையும் சுட்டி காட்டினான். ஆம் ஷாலினியை கடத்தியவர்கள் இவர்கள் இருவரே. இவர்கள் இருவரால் பிரச்சனை வரும் என்பதினை கனவிலும் நினைத்திடாத ஒன்று.

தன்னை ஷாலினியின் பொருட்டு கோபத்தினை அடக்கிய தர்ஷன் "இங்க பாருடி அம்மு, எதுக்கு இப்போ இந்த அழுகை,அதான் உன்னோட அத்தான் வந்துட்டேன்லடி, உனக்கு ஒன்னும் ஆக விட மாட்டேன், நிமிர்ந்து பாருடா" என்று கூறிய வார்த்தைகள் பலன் இன்றியே போனது. மேலும் மேலும் தர்ஷனில் புதைந்து விடுபவன் போல் ஒன்றினாள் ஷாலினி.


மேலும் பல பல ஆறுதல்கள் அளித்த தர்ஷனின் வார்த்தைகளுக்கு பதில் அழுகை மட்டுமே குடுத்த ஷாலினி அடுத்த சில நிமிடங்களில் தர்ஷனின் கைகளில் தொய்ந்து சரிந்தாள். அதிக அதிர்ச்சியோ,இல்லை தன் இருப்பிடம் சேர்ந்த நிம்மதியோ, தர்ஷனின் கைகளில் மயங்கி சரிந்தாள்.

மயக்கத்திலும் அவரகள் இருவரும் பேசிய வார்த்தைகள் ரீங்காரமாய் வட்டமடித்தது "இனி உன்ன அவன் தொட்டா கூட எங்களோட நினைப்பு தான்டி வரனும், அவன் உன்ன பக்கத்துல நெருங்கும் பொது எல்லாம் இப்போ இருக்குற நிலைமை தான்டி உனக்கு நியாபகம் வரனும்" என கூறிய விக்ரமின் வார்த்தைகளில் சில மாதங்கள் முன் நடந்த விளைவின் செயலே இவை.

சில மாதங்கள் முன் எதிர்பாரா விதமாக ஷாலினியை விக்ரம் சந்திக்க நேர்ந்தது. விக்ரமின் மனதில் அப்பொழுது எந்த எண்ணமும் இருக்கவில்லை தான். ஆனால் அவனின் பார்வை ஷாலினிக்கு அவ்வளவு உவப்பாக இல்லை போலும். அவனின் பார்வையை உணர்ந்தவள் அவனை விட்டு தள்ளி நடக்க திரும்பியதும் தன்னை கண்டு பேசாது சென்றதில் கோபம் பெற்றவனாக தன்னை நோக்கி திருப்பினான் ஷாலினியின் கைப்பற்றி.

அதில் கோபம் பெற்றவளாக "என்ன தொட உனக்கு என்ன உரிமைடா இருக்கு. எங்க மாமாவோட சொந்தம்னு நினைச்சு தான் உன்கிட்ட நின்னு பேசிட்டு இருந்தேன். ஆனால் உன்னோட ஒரு பார்வையில் கூட சுத்தமா கண்ணியம் கிடையாது. எங்க அத்தான் பக்கத்துல இல்லாதப்போ தைரியமா பேசுறவன், என்கிட்ட வம்பு பண்ண பார்க்கறியா?" என்றாள் ஷாலினி.

அதில் கடுப்பான விக்ரம் அவளை தன்னை நோக்கி இழுத்ததில் சிறிதே நிலை தடுமாறியவள் தன்னை சமாளித்து கொண்டு அவனை அறைந்திருந்தாள். "உனக்கு என்ன அடிக்க அவ்வளவு தைரியமா... உனக்கு இருக்குடி ஒரு நாள். உன்னோட அத்தான் ஒன்னும் பண்ண முடியாத மாதிரி பண்றேன் பாரு " என்று ஷாலினியிடம் மொழிந்தவன் தன்னுடைய காரில் ஏறி சென்று விட்டான். அதன் விளைவே இவ்வளவும்.

தன் கைகளில் தொய்ந்து விழுந்தவளை மடி தங்கியவன் ஆத்திரம் தலைக்கேற வெடிக்க துவங்கினான். "பிரபா என்னோட அம்முவை தொட நினைச்சாலே அவன் அடுத்து எந்த பொண்ணையும் தொட யோசிக்கனும், இவனுங்க என்னனா என்னோட அம்முவை கிட்டத்தட்ட கடத்தி, தப்பா நடக்க முயற்சி செஞ்சுருக்கானுங்க. உயிரோட என் கையில அவனுங்க அணு அணுவை துடிச்சு சாகனும், போலீஸ் வந்தாலும் சரி, வரலைனாலும் சரி" என உறுமி கொண்டிருந்தான் தர்ஷன்.

சரியாக இவர்களின் நண்பன் கம்பீரமாக காக்கி சட்டையில் இரு கான்ஸ்டபில்களுடன் உள்ளே நுழைந்தான். இவனின் கம்பீர நடையும் திமிர் பார்வையையும் இறுக்கமான முகத்தினையும் கண்டால், இவனா ஷர்மிளாவின் பின் நாய்க்குட்டி போல் காதலுக்காக சுற்றுபவன் என்றும், தர்ஷன் மற்றும் பிரபாவினுடன் பப் என்று சுற்றுபவன் என்று சத்தியம் சத்தியம் செய்து சொன்னாலும் நம்ப இயலாதவாறு நடந்து வந்தான் அஷ்வின்.

அலுவலகத்தில் தன் டீம் லீடருடன் வேலை விஷயமாக தன் சந்தேகங்களை கேட்டு கொண்டு மேலும் சில நேரம் அவருடன் அரட்டை அடித்து கொண்டு வெளியில் வந்தவள், பிரபாவின் அறையை பார்க்க அது காலியாக இருக்கவும் சலிப்புடன் தன் இருப்பிடத்திற்கு சென்று அமர்ந்தாள் யாழினி.

அங்கு ஒரு பத்து நிமிடங்கள் கூட அமர்ந்திருக்க மாட்டாள் பொழுது போகாதது போல் தோன்ற ஷாலினியின் கேபினை நோக்கி சென்றவள் அங்கு அவள் இல்லாது போக கேன்டீன் சென்றிருப்பாள் என எண்ணி அங்கு சென்றும் இல்லை என்றவுடன் போன் செய்து பார்த்தாள் அது எடுத்த பாடு இல்லை.

மீண்டும் மீண்டும் அடித்து அது எடுக்கப்படாமல் போக யோசனையுடன் முயன்று கொண்டிருந்தாள். ஷாலினியை பற்றி நன்கு தெரியும் யாழினிக்கு. இவ்வளவு போன் செய்தும் எடுக்காது இருக்க மாட்டாள் என. எனவே சிறிது பதட்டமானவள் ரெஸ்ட் ரூம் சென்று பார்க்க அங்கும் ஷாலினி இல்லாது போக மீண்டும் போன் செய்தாள்.

பிரபாவிடம் ஷாலினியின் போன் உள்ளதை அறியாது பல முறை முயன்றாள். யாழினியின் அழைப்பை கண்ட பிரபா அதை அட்டென்ட் செய்து காதில் வைத்தவுடன் "ஏன்டி எவ்வளவு தடவை தான் உனக்கு போன் பண்றது எடுக்க மாட்டியா" என ஆரம்பித்தவளை பிரபாவின் குரல் தடை செய்தது.

"யாழினி தீக்ஷவோட போன் என்கிட்ட இருக்கு, நீ ஷர்மிளாகிட்ட சொல்லிட்டு இந்த ஹாஸ்பிடல் வந்துரு, மத்ததை நேர்ல சொல்றேன்" என்று வைத்து விட்டான் பிரபா ஹாஸ்பிடல் மற்றும் தன் தோழியின் போனை பிரபா எடுத்து என யோசித்து கொண்டே ஷர்மிளாவையும் அழைத்து கொண்டு ஆஃபீஸ் காரில் சென்றனர் பதட்டத்துடன் .



தன் கைகளில் மயங்கி கிடந்தவளை கண்டு கோபம்,பதற்றம் என அனைத்து வித உணர்வுகளும் சேர்ந்து எழ கோபத்தில் கத்திக்கொண்டிருந்தான் தர்ஷன். அதே நேரம் சரியாக கான்ஸ்டபில்களுடன் உள்ளே கம்பீரமாக காக்கி உடையில் நுழைந்தான் அஷ்வின். தர்ஷனின் கோபத்தினை கண்டு பிரபாவிடம் என்னவென்று விசாரித்த அஷ்வின் பின் நிலைமை புரிந்தவனாக ஷாலினியை ஹாஸ்பிடல் அழைத்து செல்ல சொன்னான். அதன் பின்னே தர்ஷனும் உணர்வு பெற்றவனாக ஷாலினியை தன் கரங்களில் அள்ளிக்கொண்டு காரினை நோக்கி சென்றான். பின் அதி வேகத்தில் சென்று மருத்துவமனையில் சிகிச்சையும் ஆரம்பம் ஆனவுடன் அங்குள்ள நீள் வராந்தாவில் தளர்ந்து அமர்ந்தான்.

அவனின் மனம் கொதித்து கொண்டிருந்தது, ரோஹித் மற்றும் விக்ரமினால் பிரச்சனை வரும் என்று சிறிதும் எதிர்பார்த்திராத ஒன்று. அவர்கள் இருவரை அடுத்து என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தான். அதற்குள் பிரபா,யாழினி,அஷ்வின், ஷர்மிளாவும் வந்து சேர்ந்தனர். யாழினி தான் என்னவென்று தெரியாதும்,இன்னும் தன் தோழியை காணவில்லை என்றும்,தன் எம்.டி யின் சோர்ந்த முகத்தினை கண்டு குழம்பியும் நின்றிருந்தாள். அவளின் பொறுமை சிறிது நேரம் தான், நேராக சென்று பிரபாவிடம் தன் கேள்விகளை தொடங்கினாள்.

"தீக்ஷா எங்க பிரபா, நீங்க எல்லாரும் இங்க இருக்கீங்க, என்னையும் வர சொல்லிட்டு இப்போ அமைதியா இருந்தா என்ன அர்த்தம், நம்ம ஆதி சார் இப்படி கவலையா இடிஞ்சு போயும் கோபமாவும் இருக்காரு,என்ன பிரச்சனை" என்று அடுக்கி கொண்டே போனாள் தன் கேள்வியை. பிரபாவும் தர்ஷன்,ஷாலினியின் காதல்,தர்ஷனின் அத்தை மகள் தான் ஷாலினி என்றும்,இன்று நடந்த பிரச்சனை என்று அனைத்தையும் சுருக்கமாக சொல்லி முடித்தான். தன் தோழி தன்னிடம் ஏதும் சொல்லவில்லை என்ற கோபம் ஒருபுறம் இருந்தாலும் இப்பொழுது அவள் சரியாக வேண்டும் என்றே நின்றிருந்தாள் கலங்கிய கண்களுடன்.

அதற்குள் ஷாலினிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர் வெளியில் வந்து "மிஸ்டர் ஆதர்ஷன், இப்போ ஒரு ப்ரோப்ளமும் இல்ல,ஷீ இஸ் பெர்ப்பெக்ட்லி ஆல்ரைட், ஓவர் ஸ்ட்ரெஸ்ல தான் மயங்கிருக்காங்க, மத்தபடி வேற எதுவும் இல்ல, ஒன் டே மட்டும் ஹாஸ்பிடல்ல இருக்கட்டும், இப்போ நீங்க போய் பார்க்கலாம்" என்று
சொன்னவுடன் ஆதர்ஷனை தாண்டி கொண்டு உள்ளே செல்ல முயன்ற யாழினியை பிடித்து தன்னுடன் நிறுத்திய பிரபா தர்ஷனை சுட்டி காட்டினான்.

அதனால் யாழினி பின் தங்கிவிட்டாள். தர்ஷனிடம் பிரபா "ஆதி நீ உள்ளே போய் சிஸ்டரை பாரு" என்றான். அதில் நண்பனை கண்டவன் தலையை மட்டும் அசைத்தவாறு உள்ளே சென்றான். அங்கு மருத்துவ உபகரணங்களுடன் படுத்திருந்தவளை கண்டு "அம்மு" என்று கரகரப்பான குரலில் அழைத்தான். அவனின் குரலில் குற்ற உணர்ச்சியும், கலக்கமும் அதிகம் இருந்தது.

ஷாலினியின் பெற்றோர் தன்னை மட்டுமே நம்பி சென்னையில் வேலை பார்க்க அனுமதித்தனர். அதுவும் ஷாலினியின் தந்தை தன்னை நம்பி முழு பொறுப்பையும் குடுத்தார். ஷாலினி தற்பொழுது தங்கி இருக்கும் வீடு,அவள் அலுவலகத்திற்கு சென்று வரும் வண்டி என அனைத்தும் தர்ஷன் தன் வருங்கால மனைவிக்காக ஏற்பாடு செய்தது.

அவளின் வலது கையினை எடுத்து தன் இரு கரங்களுக்கும் இடையில் பிடித்து கொண்டவன் சத்தம் வராது அழுகையில் குலுக்கினான். இதுநாள் வரை தாயின் அரவணைப்பு இல்லாது தந்தையின் கண்டிப்பில் நிழலில் இருந்தவன் ஷாலினியை விரும்ப துவங்கியதும் தாயின் அரவணைப்பில் இருப்பவன் நிம்மதியாக இருந்தவன், தொழிலில் சிறந்து விளங்கி வருபவன் இப்பொழுது அழுவது அவனின் உயிரானவளிற்கு பொறுத்து கொள்ள முடியவில்லை.



பூக்கும்.


-------------------------------------------------------------------------------
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சிஸ்டர்ஸ் அண்ட் ப்ரண்ட்ஸ், ஒரு புன்னகை பூவே -இன் அடுத்த அத்தியாயத்துடன் வந்துட்டேன், இன்னும் 2 அத்தியாயம் தான் இதனை பற்றி போகும், அதன் பின் ஒன்லி ரொமான்ஸ் தான் போகும், நம்பி படிக்கலாம். படிச்சுட்டு கமெண்ட்ஸ் போற்றுங்க மறக்காம, இந்த எபி படிச்சுட்டா நெஸ்ட் எபி ஒரு சர்ப்ரைஸ் எபி தான்.

இது வரை லைக்ஸ் கமெண்ட்ஸ் போட்ட மை சிஸ்டர்ஸ்க்கு நன்றிகள். லவ் யு ஆல்

 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புன்னகை 25 :


தர்ஷனின் முதுகு அழுகையில் குலுங்குவதை கண்டவள் "அத்தான்" என்று குரலில் அழைத்தாள் ஷாலினி. அதில் தன் கண்களை துடைத்து தன்னை சமன் செய்து கொண்டவன் "கொஞ்ச நேரத்துல என்ன பயமுறுத்திட்டியேடி, என்னை பார்க்க பிடிக்காம தான் இவ்வளவு நேரமும் வீம்பா கண்மூடி படுத்துருந்தியாடி" என்று அவளின் மயங்கிய நிலையை கூறினான்.

அதில் தர்ஷனை கண்டு "இல்லை " என்று தலையசைத்தவள் "உங்களை பார்க்க பிடிக்கலைன்னு சொன்னா அது என்ன நானே பிடிக்கலைன்னு சொல்ற மாதிரி ஆது அத்தான்" என்றாள் மெல்லிய குரலில். அதில் சிறிது தன்னை சமன்படுத்தியவன் நாற்காலியில் இருந்து எழுந்து நின்று "ரொம்ப ஸ்ட்ரைன் வேணாம் அம்மு, நீ ரெஸ்ட் எடு,நான் வெளியில் இருக்கேன்" என்று அவளின் நெற்றியில் பட்டும் படாமலும் இதழ் பதித்து விலகியவன் வெளியில் சென்று விட்டான். அதனை அடுத்து பிரபாகர்,யாழினி,அஷ்வின், ஷர்மிளா அனைவரும் பார்த்துவிட்டு வெளியில் சென்று விட்டனர்.

வெளியில் அனைவரும் வந்ததும் பிரபா மற்றும் யாழினியை பார்த்து "நீங்க ரெண்டு பேரும் இங்கேயே இருங்க, அம்மு பக்கத்துல ஆள் வேணும், நானும் அஷ்வினும் போய்ட்டு வரோம்" என்று வெளியேறினான். அந்த சூழ்நிலையிலும் அஷ்வினின் பார்வை ஷர்மிளாவின் மேல் இருந்ததை கண்ட பிரபாவோ மனதிற்குள் "மவனே நீ உன்னோட ஆளை லுக்கு விட்றதை ஆதி மட்டும் இப்போ பார்த்தான், இந்த ஹாஸ்பிடல்ல இன்னொரு பெட் போற்றுவான்டா உனக்கும் " என்றான். ஷர்மிளாவும் அதையே தானும் நினைத்தவளாய் "இங்க வச்சும் பார்க்குறது பாரு,ஆதி சார் பார்த்தாரு தொலைஞ்ச" எனும் விதமாய் அஷ்வினை முறைத்து கொண்டு நின்றிருந்தாள்.

அதன் பின் ஷர்மிளா அலுவலகத்திற்கும், தர்ஷன் மற்றும் அஷ்வினும், ரோஹித்,விக்ரமும் இருந்த இடத்தினை நோக்கி விரைந்தனர். ஷாலினியை கடத்தி சென்றது தர்ஷனின் சிமெண்ட் பாக்டரியை சேர்ந்த இடமே. அதனில் ஸ்டாக் சேமித்து வைக்க பயன்படுத்தி வந்தனர். எப்பொழுதும் காவலர்கள் இருப்பர் , இன்று யாரின் நேரமோ அந்த நேரத்தில் யாரும் இல்லாது போனது, யாரின் நேரமோ ??

இடத்தினை அடைந்த ஆதர்ஷன் அஷ்வினை பார்க்க "இன்னும் கேஸ் பைல் பண்ணலை டா " என்றான் அஷ்வின். அதில் தர்ஷன் வேகமாக இருவரையும் கட்டி வைக்க பட்டிருந்த இடத்தினை நோக்கி விரைந்தான். இவன் செல்வதற்குள் ரோஹித்தும் விக்ரமும் மயங்கிய நிலையில் இல்லாது இருந்ததை கண்டு புன்னகைத்தான் தர்ஷன். அவனின் இந்த புன்னகையின் அர்த்தம் நல்லதற்கு அல்ல என்பதை அறியாத முட்டாள்கள் அல்லவே?

ரோஹித்,விக்ரம் இருவரும் எதிரில் நின்று புன்னகைத்தவனை கண்டு விதிர் விதித்து போயினர். முகம் மட்டுமே புன்னகையாகவும்,உடலின் மற்ற பாகங்கள் அதற்கு எதிராக இருந்தது. முதலில் விக்ரமினை நெருங்கியவன் "ஏன்டா, நீ எல்லாம் எங்க சொந்தம் தானா, அப்படி நினைச்சு பார்க்க கூட கேவலமா இருக்கு,
எங்க சித்தப்பா உன்ன நல்லவனும்,அவரோட சொந்த மகனாவும் நினைச்சு தான எங்க வெளியே போனாலும் உன்னையும் சேர்த்து கூட்டிட்டு போறாரு, நீ இப்போ பண்ணுன கேவலமான இந்த விஷயத்தை சித்தப்பாகிட்ட சொல்லவா டா ??" என்றான்.

அதில் விக்ரம் முகம் வெளிறியது. ஏனெனில் தன் பெரியப்பாவின் குணம் நன்கு அறிந்தவனாயிற்றே, தர்ஷன் கூட இவ்வளவு நடந்தும் பொறுமையாக பேசிக்கொண்டிருக்கிறான் என்று. அவரின் கட்டப்பஞ்சாயத்து விதிமுறைகள் தன் தந்தை மூலம் கேள்வி பட்டிருக்கிறானே. இந்நேரம் தன்னுடைய பெரியப்பா இங்கு இருந்திருந்தால் தான் உயிர் எப்பொழுதோ போய் சேர்ந்திருக்கும் என்றே யோசித்தான்.


விக்ரமிடம் பேசியவன் பின் அஷ்வின் புறம் திரும்பி "மச்சி, இவனுங்களுக்கு மச்சானோட கவனிப்பு எப்படி ஸ்டராங்கா இருக்கும்னு நீ முதல்ல காட்டுறியா,இல்லை அண்ணன் கவனிப்பு எப்படி இருக்கும்னு நான் காட்டட்டுமா" என்றவன் அஷ்வினை கண்டு கண் சிமிட்டினான். மச்சான் என்று போலீஸ்காரனான அஷ்வினை தான் சொல்கிறான் என்று அறியாதவர்களா ??

அதில் விக்ரம் "இங்க பாரு தர்ஷன், எனக்கு எதாவது ஆச்சுன்னா, அதுவும் உன்னால எனக்கு எதுவும் ஆனா நீ தான் நம்ம குடும்பத்துக்கு பதில் சொல்ல முடியாம திணறனும், அதுவும் என்னோட பெரியப்பாக்கு நானா,நீயானு வந்தா எனக்கு தான் முதல் உரிமை குடுப்பாரு, உன்னை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவாரு பார்த்துக்கோ" என்று படபடவென பயத்தில் உளறியவனை கண்ட தர்ஷன் "யாரு.........?? உனக்கு.........?? ராஜு சித்தப்பா........?? முதல் உரிமை........?? இப்படியே நினைச்சிட்டே இரு, அப்பறம் என்ன சொன்ன, நம்ம குடும்பமா...அந்த நினைப்பு உனக்கு கொஞ்சம் நாலும் இருந்துருந்தா இப்படி லோக்கலா நடந்துருக்க மாட்ட.......பொறுக்கி ராஸ்கல்" என்று உடற்பயிற்சி செய்து வலுவேறியிருந்த தன் உடலின் ஒட்டு மொத வலுவையும் சேர்த்து கைகளில் கொண்டு வந்தவன் விக்ரமின் முகத்தில் ஓங்கி குத்தினான். அதில் நாற்காலியோடு கீழே தள்ளப்பட்டான் விக்ரம்.

தர்ஷனின் ஒரு அடியை கூட தாங்க இயலாதவனை பொறி கலங்கி போனான். அதன் பின் அவன் வாங்கும் அடியின் வழியை கூட உணர விடாது அடுத்து அடுத்து அடித்தே நினைவினை இழந்தவன் இறுதியில் ஆத்திரம் மிகுதியால் தர்ஷனின் அடியில் அவனின் உயிரினை விட்டிருந்தான் விக்ரம். விக்ரம் ஆதி வாங்கியே தன் உயிரை விட்டதை கண்ட ரோஹித் பயத்தில் கெஞ்ச துவங்கினான். சொந்தமான விக்ரமிற்கே இந்த நிலைமை என்றால் தனக்கு என்ற எண்ணம் தோன்ற கெஞ்சலில் இறங்கினான் ரோஹித்."சார் நான் தெரியாம செஞ்சிட்டேன் சார், வேலையை விட்டு தூக்கிட்டேங்கனு அவளால தானு இப்படி செஞ்சிட்டேன், என்ன மன்னிச்சிருங்க சார், இனி தீக்ஷா பக்கம் திரும்பி கூட பார்க்க மாட்டேன் சார், என்ன நம்பி தான் என் குடும்பமே இருக்கு, என்ன விட்டுருங்க சார்" என்று கெஞ்சுனான் தர்ஷனிடம்.


தர்ஷன் "உன்ன வேலையை விட்டு தூக்கினத்துக்கு தான் இப்படி செஞ்சியா, அந்த கம்பெனி எம்.டி என்னோட உயிர் அவ, அவளை நீ டின்னர் அப்போ வம்பு பண்ணுனதுக்கு உன்ன இவ்வளவு நாள் வேலையை விட்டு மட்டும் தூக்கிட்டு ஏதும் செய்யாம விட்டதே பெரிய விஷயம், உன்ன எல்லாம் அப்போவே உண்டு இல்லைனு செஞ்சிருக்கணும், விட்டு வச்சது தான் தப்பு" என்றவன் மேலும் "உனக்கு எப்படி விக்ரமை தெரியும்,


இதுக்கு முன்ன இரண்டு பேருக்கும் பழக்கம் இருக்க வாய்ப்பே இல்லையே, பின்ன எப்படி" என்று சரியாக கேட்ட தர்ஷனின் கேள்வியில் பக்கத்தில் இருந்த அஷ்வின் "இவன் சிஸ்டர் மேல உயிரே வச்சுருக்கான், கரெக்டா கெஸ் பண்றான், பேசாம நம்ம மச்சியும் போலீஸ்ல சேர்ந்திரலாம் போல" என்றே தோன்றியது.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரோஹித்திடம் விசாரிக்கும் பொழுது தான் தர்ஷனிடம் விக்ரமினை சந்தித்தது பற்றி விளக்கினான். விக்ரம் சென்னையில் தான் ஒரு சிறிய அளவிலான கம்பெனி நடத்தி வருகிறான் தன் நண்பர்களுடன் சேர்ந்து. அந்த கம்பெனி நான்கு பேரின் கீழ் இயங்கி வருவது. விக்ரமின் குடும்பமும் ஓரளவு வசதியானர்வர்களே. தன் தந்தையிடம் தொழில் தொடங்க பணம் கேட்காது வங்கியில் லோன் வாங்கியே தன் முதலீட்டை போட்டான். இவனின் இந்த செயலில் பெற்றோரிற்கு பெருமை தான் என்றாலும் தங்கள் ஒரே மகன் லோன் என்று அலைய கூடாது என்று வற்புறுத்தி பணம் குடுக்க முன் வந்ததை மறுத்து விட்டான். அவனின் சொந்த ஊரிலும் பெண்களிடம் காட்டும் கன்னியமான பார்வையும்,பேச்சும், அவனின் வசீகர தோற்றமும் இளம்வயது பெண்களின் கண்கள் விக்ரமை சுற்றி வந்ததும், இவன் அவர்களை தவிர்த்தும் உண்மை.


அவனின் கன்னிய பார்வை,பேச்சிற்கு மூடு விழா நடத்துவது போல் நடந்த நிகழ்வே அவன் காதலில் விழுந்தது. சென்னையில் அலுவலகம் துவங்கிய சில மாதங்களில் அவனின் அலுவலகத்தில் பணி புரியும் ஒரு பெண் இவனிடம் காதலை சொல்லியதும் முதலில் மறுத்தவன், பின் அவளின் செய்கையிலும்,பேச்சிலும் கவர பட்டு காதலை ஒத்துக்கொண்டான். அனைத்தும் நன்றாக சென்று கொண்டு தான் இருந்தது. ஒரு டிரைவர் போலவும், எ.டி.எம் மெஷின் போல் பயன்படுத்தினாள் அந்த பெண். முதலில் தன் காதலிக்காக தானே என்று விக்ரமும் சலிக்காது, சளைக்காது வாங்கி குடுத்தவன், பின் அவளின் செய்கையில் சந்தேகம் வர பெற்று வெளியில் செல்வதை நிறுத்தி இருந்தான்.

அதன் பின் தான் அவள் சாதாரண குடும்பத்தினை சேர்ந்தவள் என்றும், ஏற்கனவே நிச்சியம் செய்த பெண் என்றும்,பணத்திற்காகவே தன்னிடம் காதல் என்று பழகினாள் என்றும் அறிந்தவன் பெண்கள் என்றாலே இவ்வாறு தானோ என்று நினைத்து அதன் பின் தண்ணி,போதை, பெண்களின் சகவாசம் என மாறினான்.
அந்த சமயத்தில் தான் பிரான் மலை பயணமும் சென்றது.அங்கு ஷாலினியை கண்டவன் முதலில் எதார்த்தமாக பார்க்க அதற்கு தர்ஷனின் கோபமும்,பின் தர்ஷன் ஷாலினியின் நெருக்கமும் வெறுப்பை சுமந்தது.

விக்ரமிற்கு தர்ஷனை பற்றி தெரியும், பின்னே அடிக்கடி தன்னுடைய பெரியப்பாவின் பாதி நேர புராணமே தர்ஷன் பூரணமாக தானே இருக்கும். தர்ஷனின் தொழில், தொழிலில் அவனிற்கு இருக்கும் செல்வாக்கும் தெரியுமே. பணத்திற்காக தான் இவளும் இவன் பின் சுற்றுகிறாளோ,அதும் தன்னை கண்டதும் ஷாலினியின் பார்வையும் என மனதிற்குள் பதித்ததன் விளைவு தான் இவ்வளவும்.

அதன் பிறகு விகரமும் வேலையில் பிஸி ஆகிவிட கிட்டத்தட்ட ஷாலினியை மறந்தும் போயினான். பின் எதார்த்தமாக ஒரு நாள் பார்க்க நேர்ந்ததும், அவள் தன்னிடம் ஒரு வார்த்தையும் பேசாது போனது ஆத்திரம் அடைய செய்தது. டின்னர் அன்றும் தன் நண்பர்களுடன் வந்த விக்ரமின் பார்வையில் ஷாலினி விழுந்தாள் கூடவே தர்ஷனும். அப்பொழுது தான் தெரியும் விக்ரமிற்கு ஷாலினி தர்ஷனின் அலுவலகத்தில் வேலை செய்வது. இன்று எப்படியும் பேசியே அகா வேண்டும் என்று அவளை பின் தொடரும் பொழுது தான் கவனித்தான் ரோஹித்தும் பின் தொடருவதை.

அந்த நேரத்தில் தான் ரோஹித் அவள் வண்டியை தள்ளி விடவும் அதே நேரத்தில் ஆதியும் வருவது, ரோஹித்தை அறைந்தது என பார்த்தது. ஷாலினியும் தர்ஷனும் சென்றதும் தான் ரோஹித்தை சந்தித்து பேசி இன்று இந்த நிலையில் இருப்பது வரை அனைத்தையும் ரோஹித் தர்ஷனிடம் சொல்லி விட்டு பயம் அப்பட்டமாக முகத்தில் தெரிய தர்ஷனையும், அஷ்வினையும் பார்த்தான்.


பூக்கும்
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரண்ட்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் "ஒரு புன்னகை பூவே" அடுத்த அத்தியாயம் இதோ, உங்களின் கருத்துக்களை கீழே உள்ள லிங்க்கில் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த அத்தியாயம் பிறகு ஒரு ஸ்வீட் இன்சிடென்ட் இருக்கும்.


இது வரை கமெண்ட்ஸ் லைக்ஸ் பண்ணுன சிஸ்டர்ஸ் லவ் யு ஆல்.

இப்படிக்கு

உங்கள் அன்பு தங்கை

ரேவதி முருகன்
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புன்னகை 26 :

ரோஹித் விக்ரமினுடன் ஏற்பட்ட பழக்கத்தினையும்,அதன் விளைவின் முடிவில் தான் இருக்கும் தற்போதைய நிலையையும் முழுவதும் தர்ஷன் மற்றும் அஷ்வினிடம் சொல்லிவிட்டு, இருவரையும் பயப்பந்து தொண்டை குழியில் ஏறி இறங்க, உயிரினை தேக்கி வைத்து பார்த்தான் ரோஹித்.

அவனிற்கு தெரியும், சொந்தம் என்றும் பாராது விக்ரமினை அடித்தே உயிர் போக செய்த தர்ஷன், நிச்சியம் தன்னை அப்படியே விட போவது இல்லை என்று. திரும்பி தன் அருகில் மூச்சினை விட்டு கிடைக்கும் விக்ரமை பார்த்தான்.

ரோஹித்தால் விக்ரமிற்கு மனதிற்குள் அர்ச்சனை மட்டுமே செய்ய முடிந்தது. விக்ரம் உயிரோடு இருந்தாலும் அர்ச்சிக்க இயலாதே...தர்ஷனின் கண்கள் கோவைப்பழம் போல், செக்க சிவலென்று, சிவந்து இறுகிய முகத்துடன் இருந்தது. ரோஹித்தை நெருங்கியவன் "ஏன்டா அவ்வளவு பெரிய தப்பு ஒன்னும் என் அம்மு பண்ணலையேடா, உங்களை பிடிக்கலைனு டீசெண்டா சொல்லிட்டு தானடா போனா... நீ அவகிட்ட லவ் சொல்ற உரிமை உனக்கு இருக்குற மாதிரி, உன்ன, உன்னோட லவ் வேணாம்னு சொல்ல, அவளுக்கு உரிமை இருக்கும்ல, இன்னைக்கு உங்களால அவளுக்கு எதுவும் ஆகலை, அப்படி ஆகியிருந்தா.......???

அவளை கூட்டிட்டு வந்ததுக்கே உங்க உயிர் உங்களுக்கு சொந்தம் இல்லாம போயிருச்சு... அவளுக்கு மட்டும் எதாவது ஆகியிருந்தா, உங்க சாவு இன்னும் பயங்கரமா இருந்திருக்கும்" என்று கோபத்தில் பேசியபடியே அடி பிண்ணி எடுத்து விட்டான் தர்ஷன்.

தர்ஷனின் அடிக்கு சாவே மேல் என்பது போல் நினைத்த ரோஹித்தின் உயிரும் அவனிடம் இல்லாது பிரிந்து சென்றது. அவர்கள் இருவரும் உயிருடன் இல்லை என்று தெரிந்த பிறகு தரையில் கால்கள் மடங்கி சரிந்தவன், அழுகையில் குலுங்கினான்.

தன் நண்பனின் அழுகையினை தாங்கி கொள்ள இயலாத அஷ்வின், பெரும்பாடு பட்டு தேற்றி தர்ஷனை அழைத்து கொண்டு மருத்துவமனை விரைந்தான். போகும் முன் அங்கு காவலிற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவலர்களிடம் ரோஹித் மற்றும் விக்ரமின் உடலை ஆக்ஸிடென்ட் போல் அவர்கள் வந்த நான்கு வலி சாலையில் போட்ட சொல்லி பின்பே கிளம்பினான்.

அதன் பின் ஷாலினியின் பெற்றோர் மற்றும் தன் அத்தை மாமாவை அழைத்து, மருத்துவமனையில் இருப்பதாகவும், வந்து அவள் உடன் இருக்கும் படியும் கூறிய தர்ஷன் ஷாலினியின் தந்தை விஸ்வநாத மூர்த்தி மற்றும் அன்னை சசி பாரதியை அழைத்தான்.

அவர்கள் இருவரும் தங்களின் ஒரே செல்ல மகள் மருத்துவமனையில் இருக்கிறாள் என்று கேள்வி பட்டதும் மிகுந்த பதட்டமும் பயமும் கொண்டிருந்தாலும் தங்களின் மருமகன் அருகில் இருக்கிறான் என்றே நிம்மதி அடைந்தனர்.

தர்ஷன் போன் செய்தவுடன் கிளம்பியவர்கள் நடு இரவு சென்னை அடைந்தனர். அதன் பின் இரு நாட்கள் மட்டும் சென்னையில் இருந்து விட்டு தன் தந்தை மற்றும் அன்னையுடன் தர்ஷன் மற்றும் அவனின் தந்தை எவ்வளவு தூரம் சொல்லியும் கேட்காது திருச்சி கிளம்பி சென்றாள்.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தன்னிடம் ஷாலினியை தங்களின் வீட்டிற்கு அழைத்து வர சண்டை போட்ட தன் தந்தையை ஓரளவு சமாளித்து பின் அவர் கேட்காது சண்டை போட துவங்கவும் "அவ அங்க கொஞ்சம் நாள் இருந்துட்டு வரட்டுமே, இப்போவே அவளை போய் கூட்டிட்டு வந்து எதாவது அவ நினைச்சுட்டே இருப்பா, கொஞ்சம் அத்தை கூடவும் மாமா கூடவும் இருந்துட்டு வரட்டுமே, உங்களுக்கு உங்க மருமகளை பார்க்கனும்னா திருச்சி போய் பார்த்துட்டு வாங்க, இல்லை அவ இங்க வர வரைக்கும் அங்கேயே இருங்க" என்று படபடவென கத்திய தன் மகனின் உணர்வுகள் துல்லியமாக புரிந்தது.


தர்ஷனும் ஷாலினியின் அருகாமையை நாடுகிறான், அவளை தன் அருகில் வைத்துகொள்ள விரும்புகிறான் என்று எல்லாம் சில காலம் தான் காலம் மற்றும் என்று மனதினை தேற்றிக்கொண்டார்.

ஆகி விட்டது..... இன்றோடு தன் உயிரானவனை பார்த்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது..தான் தான் பார்க்க கூடாது என்று தவிர்த்ததை வசதியாய் மறந்து விட்டு, தன்னை பார்க்க வரவில்லை என்று மனதிற்குள் மருகிக்கொண்டு, சோக சித்திரமாய் தன் அறையில் அமர்ந்து, அதிகாலை வேளையின் அழகினை ரசிக்கும் மனது இல்லாது வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

இந்த இரண்டு மாதங்கள் தர்ஷனின் நினைவு அதிகமாக இருந்தாலும், இன்று தன்னவனின் அருகாமைக்காக ஏங்கிய மனதினை கட்டுப்படுத்த இயலவில்லை... தெரியும், தான் ஒரு வார்த்தை சொன்னால், அடுத்த சில மணி நேரங்களில் தன் கண்முன், தன் கையருகில், தன்னுடைய அத்தான் இருப்பார் என்று.

ஆனாலும் அவளை அப்படி சொல்ல விடாது ஒரு மனது படுத்தி எடுத்தது. ஆனால் ஷாலினி அறியவில்லையே... அவளின் உயிர் தன்னை தேடி வந்து விட்டான் என்று.. இரண்டு மாதங்களும் ஷாலினியை பார்க்க, பேச முயன்று தோற்றவன், இன்று நேரில் வந்து இறங்கி விட்டான்.


ஹாலில் அமர்ந்து பேசியபடி அன்றைய செய்தித்தாளை படித்து கொண்டிருந்த விஸ்வநாதனும், அவரின் அருகில் அமர்ந்திருந்த பாரதியும், இவ்வளவு அதிகாலை வேளையில் தர்ஷனை கண்டவர்கள், அவனிடம் நலம் விசாரிக்கும் முன் சிறு தலையசைப்புடன் விறுவிறுவென ஷாலினியின் அறை நோக்கி சென்று விட்டான்.

விஸ்வநாதன் பாரதியை கண்டு சிறு புன்னகை முகத்தோடு "உன் மருமகன் போற வேகத்துக்கு, இப்போவே உன் பொண்ண சென்னைக்கு பார்சல் செஞ்சிருவான் போலயே"என்றார். பாரதியும் தன் அண்ணன் மகனின் வரவில் சிறு புன்னகையும், மகிழ்வும் உண்டாக, "ஆமா, அப்படியே அடங்காம வீம்பு பண்ணிட்டு இருக்கப்போ மட்டும் என் மகள், அதே சொல்றதை கேட்டுட்டு சமத்தா இருந்தா, உங்க மகளா உங்களோட லொள்ளுக்கு அளவே இல்லையா, பாவம் இன்னைக்கு தர்ஷன் பையன் தான் என்ன பாடு பட போறானோ" என்றபடி பெருமூச்சு விட்டார் பாரதி.

ஷாலினியின் அறை வாசலில் நின்று முதலில் கதவை தட்டலாம் என்று எண்ணியவன், பின் தட்டாது லேசாக திறந்து இருந்த கதவை முழுவதும் திறந்து, கதவின் மேல் சாய்ந்து நின்று ஜன்னலின் வழியே வெறித்து பார்த்தபடி அமர்ந்து இருந்த ஷாலினியை பார்த்தான்.

கதவு திறக்கும் சத்தம் கேட்டும் எதுவும் அறியாது, வாழ்வே போனது போல் முகம் அவளின் பொலிவை இழந்து, மெலிந்த தோற்றமாக இருந்தவளை கண்டவனின் உள்ளம் கோபத்தில் எரிமலையாய் கனன்றது. பின்னே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு இவ்வளவு வீம்பு பிடிவாதம் தேவை இல்லையே என்று கோபம் பெருகியது. அதே கோபத்தில் கதவினை சாய்ந்து நின்றபடியே படபடவென தட்டினான்.


திடீரென தட்டப்பட்ட சத்தத்தில் அதிர்ந்து, பயந்து திரும்பியவள், அங்கு நின்ற தர்ஷனை சத்தியமாக எதிர் பார்க்கவில்லை. அந்த திரும்பி தர்ஷனை கண்ட ஒரு நொடி பார்வையில் ஷாலினியின் கண்களில் வந்து போன ஒளி, மகிழ்ச்சி, தன் பொருள் தன்னிடம் வந்த சந்தோஷம் என்று பல வித உணர்வுகள் எழுந்து அதிர்ந்து நின்றாள்.

பூக்கும்
 
Status
Not open for further replies.
Top