All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரிஷியின் 'உயிரோடு கலந்தவள் 02' - கதை திரி

Status
Not open for further replies.

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஓட்டம்....ஓட்டம்....ஓட்டம்!!



ஓட்டமே வாழ்கையானது...



எங்கிருக்கிறோம் என தெரியாது... எந்த மாநிலத்தில் எந்த மாவட்டத்தில் இருக்கிறோமென தெரியாது....



ஓட்டம் மட்டுமே துணை....



ஊனில்லை.... உறக்கமில்லை....



மயக்கம்.... மயக்கம் தெளிந்து தண்ணீரை குடித்தாள் ஓட்டம்!!!



.....



டாக்டர்ஸ் காண்பரண்ஸுக்காக சென்னை வந்து கொண்டிருந்தான் ஜீவா....



மழை வேறு அடித்து ஊற்றிக் கொண்டிருக்க பாதையை மழைநீரால் மறைத்தது கார் கண்ணாடி!!!



வாகனங்கள் குறைவாக இருக்க மெதுவா வண்டியை செலுத்திக் கொண்டிருந்தவன் திடீரென தனக்கு முன்னால் வந்து விழுந்தவரால் சடன் பிரேகடித்து நிறுத்தி நெஞ்சில் கை வைத்தவன் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு அவசரமாக இறங்கி அவளருகே வந்தான்.



பெண்!!!



"ஓ காட்.... செத்துட்டாளா?" மூக்கில் கை வைத்துப் பார்த்தான் மூச்சு வந்தது.



முடி முகத்தை மறைத்திருக்க அவளை தூக்கி காரில் போட்டவன் மருத்துவமனைக்கு வேகமெடுக்க அதை நெருங்கவே நள்ளிரவை தாண்டி இருந்தது.



"டாக்டர்...." வாசலில் அவளை ஏந்திக் கொண்டு கத்த அவசரமாக வெளிய வந்தார் டாக்டர் அர்ஜுன்....



ஸ்டெச்சரில் படுக்க வைத்து அவளை ஐ.சி.யு விற்கு அனுப்பும் வரை அவள் முகத்தை கூட அவன் பார்க்க வில்லை....



"தோ வந்துட்றேன்" பைசி விட்டு அழைபேசியை வைத்தவனுக்கு உடனே போக வேண்டிய கட்டாயம்...



ரிசப்ஷனில் தன் விசிட்டிங் கார்டை கொடுத்து விட்டு வெளியேற பதற்றமாய் வெளியே வந்து அவனை தேடினார் டாக்டர் அர்ஜுன்....



அதற்குள் அவன் தான் சென்று விட்டிருந்தானே....



அவள் ஆராதனா என உறுதிப்படுத்திக் கொண்டு ரகசியமா அன்றிரவே தன் நண்பன் வாசுவின் ராஜ்கோட் ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தார்.



ஜீவாவும் அங்கே தான் டாக்டராக இருப்பதால் அதிஷ்டவசமாக அன்று அவளை பார்க்க நேர்ந்திருந்தது))



கைகள் இரண்டையும் சேர்த்து வைத்து நாடி குற்றி தன்னவளை பார்த்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான் ஜீவா.



மனம் இன்னும் முனுக்முனுக்கென வலித்துக் கொண்டிருந்தது.



அவனால் அவள் சொன்னவற்றை ஜீரனித்துக் கொள்ளவே முடியவில்லை....



எழுந்து திரும்பியவன் சகோதரர்கள் இருவரும் அங்கே இருப்பதை கண்டு அதிர்ந்து போனான்.



ஆரவ் கண்களிலிருந்து விடாமல் கண்ணீர் வடிந்து கொண்டிருக்க ரிஷியின் என்றுமில்லாமல் அன்று சற்று அதிகமாகவே சிவந்திருந்தது.



"அ....அண்....ணா" ரிஷியை உலுக்கியவன்



"ஜீவா..." என்ற ஆராவின் குரலில் சலேரென திரும்ப தன்னை கட்டுப்படுத்த முடியாமல் விறுட்டென வெளியேறினான் ரிஷி.



"ஆரு...ஏன் உன் கண்ணு சிவந்திருக்கு?" தங்கை குரலில் நடப்புக்கு வந்தவன் வலுக்கட்டாயமாக சிரித்து விட்டு



"தேங்க்ஸ் ஆனந்த்.... பாத்துக்கோ" வெளியேறி விட்டான்.



அதற்கு மேல் அவனுக்கு சக்தி இல்லை போலும்!



***



தன் மடியில் தலைசாய்த்து படுத்திருந்த கணவனின் சிகையை கோதிக் கொடுத்தாள் கயல்...



ஆரா ஜீவாவுடன் வந்து விட்டிருக்க ஆரவ் சற்று தாமதமாக வந்ததிலேயே ஏதோ நடந்திருக்குமென புரிந்து கொண்டவள் அவனை அழைத்துக் கொண்டு வந்து உணவூட்டி தன் மடியில் சாய்த்துக் கொண்டாள்.



"ஆரு....அதான் எல்லாம் முடிஞ்சிடுச்சுல....எதுவும் யோசிக்காம தூங்கு...." அவள் வயிற்றில் முகம் புதைத்தவன் அப்படியே உறங்கிப் போனான்.



***



கேஸ் விஷயமாக வேலை செய்து விட்டு தாமதமாகவே வீடு வந்து சேர்ந்திருந்தாள் அஷ்வினி....



இரவு பத்தை தாண்டி இருக்க தூங்கிக் கொண்டிருந்த மகனின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு ப்ரஷப்பாகி வந்தவள் கீழே வந்து சாப்பிட்டு முடித்தும் இருக்க அப்போதும் அவளவன் வந்திருக்கவில்லை....



"காலைல ஆராக்கு ட்ரீட்மெண்டுக்கு ட்ரீட்மெண்டுக்கு போனாங்களே..... என்ன ஆச்சு?" யோசித்துக் கொண்டே மாடி ஏறியவள் மொபைலை எடுத்து கதிருக்கு அழைக்கப் போகவும் ரூம் கதவை திறந்து கொண்டு ரிஷி உள்ளே வரவும் சரியாக இருந்தது.



நடை தள்ளிடியது....



குடித்திருக்கிறானா???



கோபமாய் நிமிர்ந்தவள் அவன் கண்கள் கலங்கி சிவந்திருப்பதை கண்டு அவனருகே வந்தாள்.



குடித்திருக்கவில்லை....



'என்ன ஆச்சு....' மனதிற்குள் கேட்டுக் கொண்டு நின்றவளை இறுக்கி அணைத்தான்.



அவள் தங்கை உயிரோடு இருக்கிறாள் என காட்டிய போது அணைத்தானே அதே அணைப்பு!!!



அவ்வளவு இறுக்கம்....



முதுகை தடவிக் கொடுத்தவள்



"என்னாச்சு தேவ்?" என்றாள் மென்மையாய்....



அவள் அழைப்பில் இன்னுமின்னும் தனக்குள் அவளை இறுக்கியவன் அப்படியே நின்றான் ஆறுதல் தேடியவனாய்!!!



காலை....



டையை கட்டிக் கொண்டிருந்தவனின் முன் வந்து நின்றாள் பாவை...



ஒரு நொடி அவளை பார்த்தவன் மீண்டும் தன் வேலையில் கவனமானான்.



"தேவ்....நேத்து என்னாச்சு?"



"ஆனந்த் கிட்ட கேளு.... இத பத்தி என் கிட்ட பேசாத" அவன் முகம் உணர்வுகளை தொலைத்திருக்க அவன் முகத்தையே பார்த்திருந்தவள் விலகி நடந்தாள்.



"ராத்திரி வீட்டுக்கு வர மாட்டேன்.... காத்துட்ருக்காம படு" நடையை நிறுத்தி விட்டு அவனை திரும்பிப் பார்க்க அவன் கவனமாக அவளை தவிர்த்துக் கொண்டிருந்தான்.



'மறுபடியும் குற்றத்த ஒத்துக்க போறேன்னு நீதி நேர்மைன்னு கிளம்பி இருப்பான்... அதான் மூஞ்சி இஞ்சி திண்ண குரங்காட்டம் இருக்கு... கமாண்டர்.... இவன எந்த கேட்டகரில சேக்குறதுன்னே தெரில' மனதிற்குள் நன்றாக திட்டித் தீர்த்தவள்



"இன்னிக்கு டாக்டர் அர்ஜுன் செக் அப்புக்கு வர சொல்லி இருக்காரு" என்றாள் அறிவிப்பாய்....



"நாளைக்கு போலாம்.... இன்னிக்கு எனக்கு முக்கியமான மீட்டிங் ஒன்னு இருக்கு"



"அதெல்லாம் எனக்கு தெரியாது... ஈவினிங் நாளு மணிக்கு நீங்க வீட்ல இருக்கீங்க"



"அதான் மீட்டிங் இருக்குன்னு சொல்றேன்ல?"



"அது உங்க பாடு.... நீங்க என்ன பண்ணுவீங்களோ அது எனக்கு தேவயில்ல.... டான்னு நாளு மணிக்கு வீட்டுக்கு வர்றீங்க.... அவ்வளவு தான்" திரும்பிப் பார்க்காமல் அவள் சென்று விட பல்லை கடித்தவன் கோர்ட்டை போட்டுக் கொண்டு தடதடவென படிகளில் இறங்கி வந்தான்.



"அண்ணா மெதுவா" ஜீவா தான் பதற்றமாய் கத்த அனைவரும் திரும்பிப் பார்க்கவும் மனைவியை முறைத்தவன் விறுட்டென வெளியேற தோள்களை குழுக்கி விட்டு திரும்பினாள் பெண்.



"பய் மாம்...."



"பய்டா...." ஆனந்தின் கையை பிடித்துக் கொண்டிருந்தவனை வழியனுப்பி வைத்து விட்டு தானும் கிளம்பினாள்.



***



ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ்....



"சார்.... பத்து மணிக்கு ஹோட்டல் சமுத்ரால மீட்டிங் அர்ரேன்ஜ் ஆகி இருக்கு" லேப்டாப்பிலிருந்து கண்களை அகற்றாமலேயே ஆமோதிப்பாய் தலையசைத்தவன்



"உட்கார்..." என்றான் அவனை பார்த்து...



"சார்...."



"சார் இல்ல உட்காரு.... உன் கிட்ட பேசணும்" எச்சிலை விழுங்கிக் கொண்டே அமர்ந்தான் பீ.ஏ கதிரவன்.



"என்ன சார்?"



"என்ன இது?" தான் பார்த்துக் கொண்டிருந்த லேப்டாப் திரையை அவன் புறம் திருப்ப திடுக்கிட்டான் கதிர்.



ஆம், அதில் இருந்தது அன்று இவன் ஏதோ பேசி விட்டு போவதும் மது கண்ணீரை துடைப்பதும்....



அது தெளிவாக சி.சி.டிவி கேமிராவில் ரெக்கார்டாகி இருக்க அதை தான் கதிர் வரும் போது பார்த்து விட்டு கேட்டான்.



"மதுவுக்கும் உனக்கும் என்ன பிரச்சனை?"



"எந்த பிரச்சனையும் இல்ல சார்"



"அப்போ அவ அழறதுக்கு காரணம் நீ இல்ல... ரைட்?"



"அ...அ...அது...."



"ஸ்ட்ரைட்டா பேசு கதிர்" அவன் குரலில் கடுமை ஏறியது.



"அவங்க என் கிட்ட வந்து அவங்கள கல்யாணம் பண்ணிக்க கேட்டாங்க... நா முடியாதுன்னு சொன்னேன்.. சாரி சார்"



"ஏன் முடியாது?"



"அவங்களுக்கு என் மேல லவ்வெல்லாம் இல்ல சார்.... என் பாஸ்ட் பத்தி தெரிஞ்சி கிட்டு என் கூட இருக்கனும்னு நெனக்கிறாங்க.... மோர் ஓவர்.... எனக்கும் அவங்க மேல லவ் இல்ல..."



"அவ ஏன் உன் கூட இருக்க ஆச பட்றான்னு யோசிச்சியா?"



"அது...."



"இல்லல்ல?"



"நோ சார்"



"அவக்கு உன் மேல ஒரு ஈர்ப்பு வராம உன் கூட உன் துன்பத்துக்கு ஆறுதலா இருக்கனும்னு நெனச்சிருப்பாளா... லுக் கதிர்.... அவள நீ ஏத்துக்கன்னு நா போர்ஸ் பண்ணல... பட் புரிஞ்சிக்க ட்ரை பண்ணு"



"சார் நான் தான் அவங்கள லவ் பண்ணவே இல்லயே?"



"லவ் பண்ணவே இல்லன்னு சொல்லாத.... லவ் பத்தி யோசிக்கலன்னு சொல்லு"



"என் மனசுல என் மனைவிக்கும் மகளுக்கும் தவிர வேறு யாருக்கும்...." அவன் முடிக்கும் முன்



"அவங்க உன் பாஸ்ட்" இடையிட்டான் ரிஷி.



"பட் சார்...."



"நோ கதிர்.... அவங்க உன் பாஸ்டுங்குறத முதல்ல நீ புரிஞ்சிக்க ட்ரை பண்ணு.... தென் மது உன் ப்ரஸண்ட்.... பாஸ்ட்ல செத்து போனவங்களுக்காக ப்ரஸண்ட்ல இருக்க அவளோட அன்ப அவாய்ட் பண்ணாத"



"...."



"ஓகே நீ போ.... பட் நல்லா யோசி....."



"தேங்க்ஸ் சார்...." எழுந்து வெளியே செல்ல மதுவை அழைத்தான்.



......



"எஸ்கியூஸ் மீ சார்"



"கம் இன்.... உட்கார்... நீ கதிர லவ் பண்றியா?" அதிரடியாய் விடயத்திற்கு வந்தவனை பார்த்து அதிர்ந்து விழித்தாள் பெண்.



"அ...அ...அத்தான்"



"சொல்லு....லவ் பண்றியா இல்லியா?"



"தெரில" நைந்து ஒலித்தது பெண்ணவள் குரல்....



"சரி விடு.... நீ ஏன் அவன் கூட இருக்கனும்னு நெனக்கிற?"



"தெரில அத்தான்... பட் நீங்க பேசிட்ருக்கும் போது அவங்க பாஸ்ட் பத்தி கேட்டேன்.... என்னால தாங்கிக்க முடில.... கதிர எனக்கு புடிக்கும்.... லண்டன்ல இருந்தப்போவே அவர் மேல க்ரஷ் இருந்திருக்கு.... பட் அவர் இவ்வளவு கஷ்டப்பட்ருப்பார்னு எதிர் பாக்கல.... ரொம்ப கஷ்டமா இருந்துது.... இதுக்கப்பறமா அவர் கூடவே இருக்கனும்னு தோனிச்சு.... அதனால தான் கல்யாணம் பண்ணிக்க கேட்டுட்டேன்.... பட் முடியாதுன்னு சொன்னாரு.... அவர் மனசுல அவரோட மனைவிக்கும் மகளுக்கும் தவிர வேறு யாருக்கும் இடம் இல்லன்னு சொல்லிட்டாரு.... அதான் விலகிக்க முடிவு பண்ணிட்டேன்" தலையை குனித்திருந்தவளின் கண்கள் கண்ணீரில் மிதந்தது.



"அப்போ வேற ஒருத்தன உன்னால ஏத்துக்க முடியும் ரைட்...?"



"நோ...." உடனே மறுக்க மெலிதாய் சிரித்தவன்



"மனச போட்டு குழப்பிக்காம போய் வேலய கவனி.... அவனுக்கு கொஞ்சம் டைம் கொடு..." என்றான் அக்கறையாய்....



"சரி அத்தான்.... தேங்க்ஸ்...." சந்தோஷமாய் தலையாட்டி விட்டு செல்லவே மீட்டிங்குக்கு தேவையானவற்றை கவனிக்க துவங்கினான் அவளவன்.....



***



இராமநாதபுரம்.....





சாப்பிட அழைக்க வந்த மனைவியின் வெற்றிடையை பின்னால் இறுக்கி அணைத்திருந்தன அஜய்யின் கைகள்....



"என்ன பண்றீங்க அஜய்.... விடுங்க"



"என்ன பண்றேன்னு உனக்கு புரியலயா?" கேட்டுக் கொண்டே இருந்தவன் அவள் கழுத்தில் முத்தமிட சிலிர்த்தது பெண் தேகம்....



"அஜய்....ப்ளீஸ்...அத்தை மட்டும் இருப்பாங்க....விடுங்க என்ன" அவள் திமிறவே மீண்டும் இதழ் பதித்தவன் பிடிவாதமாய் நின்றிருந்தான்.



அதற்கு மேலும் போராட முடியாமல் அவனுக்கு இசைந்து கொடுத்தவள் கண்களை இறுக்க மூடிக் கொண்டாள்.



"ஈஷ்...."



"ம்...." அவளை விடுவித்து திருப்பி அவள் இதழ்களை சிறை செய்ய கண் மூடி கிறங்கி நின்றவள் யாரோ வரும் அரவம் கேட்டு அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளி விட்டாள்.



"ப்ச்.... ஏன் இப்பிடி பயப்பட்ற?" எரிச்சலில் கத்தியவன் வாசலில் நின்ற மகனை பார்த்து வாயை மூட அவன் பார்வை போன திசையில் தானும் பார்த்தவள் அவனை ஒரு நிமிடம் பார்த்து விட்டு வெளியேற மானசீகமாய் தலையிலடித்துக் கொண்டான் அஜய்.



***



தன் கேபினில் அமர்ந்து தன்னவளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான் ஜீவா....



இன்னும் கூட அவள் சொன்னவற்றை நினைத்து துடித்த மனசாட்சிக்கு சமாதான வார்த்தை கூட சொல்ல முடியவில்லை அவனால்....



அவள் சொல்லும் போது கழுத்து நரம்பு புடைத்து அவர்களை கொன்று போடும் வெறி வந்திருக்க அவள் நிலை உணர்ந்து அதன் பின் அழுகை தான் வந்தது.



சாப்பாட்டு நேரம் நெருங்கவும் உண்டு முடித்தவன் வேலையை ஷிப்ட் பண்ணி விட்டு வீட்டுக்கு கிளம்பினான்.



....



"ஹாய்...." கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த ஜீவாவை பார்த்து தான் படித்துக் கொண்டிருந்த நாவலை அருகில் வைத்தவள் அவனை பார்த்து புன்னகைத்தாள்.



"என்னடா இந்த நேரம் வந்திருக்க?"



"சும்மா தான்..."



"ம்...உட்கார்"



"இல்ல தேவயில்ல.... வீட்டுக்குள்ளயே இருக்க.... வெளில போலாமா?"



"வெளிலயா....?" அவள் முகம் வெளிறியது கண்டு அவனுக்கு தான் வலித்தது.



"நான் தான் உன் கூடவே இருப்பேன்ல.... என்ன பயம்?"



"இ...இல்ல...."



"என் மேல நம்பிக்க இல்லயா?"



"உன் மேல இருக்கு ஜீவா...."



"அப்போ என்னமா.... வா"



"இ...இல்ல நா வர்ல"



"சரி....அப்போ ஹாஸ்பிடல் போயிட்டு வர்லாமா?"



"அங்க எதுக்கு?"



"சும்மா ஒரு ரவுண்டு.... குழந்தைங்கள பார்த்தா மனசு லேசாகும் வா"



"இ...இல்ல இல்ல நா ஹாஸ்பிடல் வர மாட்டேன்...."



"இது நம்ம ஹாஸ்பிடல் மா.... எவனும் உள்ள வர மாட்டானுங்க" அவளை மாற்றியே ஆக வேண்டிய கட்டாயம் அவனுக்கு....



"நோ....எனக்கு பயமா இருக்கு...."



"நா எந்த நேரத்துலயும் உன் கூட இருப்பேன்மா.... சத்தியம்.... வா போலாம்"



"ஊஹூம்...."



"வேற எங்கயாவது போலாமா அப்போ?"



"ம்...."



"சரி நீயே சொல்லு எங்க போலாம்?"



"ஷாப்பிங்"



"ஷாப்பிங்கா...." கேட்டு சிரித்தவன்



"சரி கெளம்பு...." என்றான் அதே சிரிப்புடன்....



"எதுக்கு சிரிக்குற?"



"இல்ல.... எங்கேயுமே மேடம் வர மாட்டேன்னு சொன்னிங்கல்ல.... அதான் ஷாப்பிங்னு சொன்னதும் சிரிப்பு வந்துடுச்சு...."



"நீ சிரிக்குற.... நா வரமாட்டேன் போ"



"அய்யய்யோ.... சிரிக்கலமா...வா போலாம்"



"நீ ரொம்ப மாறிட்ட ஜீவா"



"ஏன் அப்பிடி தோனுது?"



"தெர்ல.... ஏனோ உன் கிட்ட பேசும் போது அண்ணா இருக்கா மாறி பாதுகாப்பா இருக்கு" உணர்ந்து தான் சொன்னாளோ என்னவோ ஆனால் நிச்சயமாக அவன் சந்தோஷத்தின் எல்லையை கடந்து கொண்டிருந்தான்.



வெறு என்ன வேண்டும் ஒரு ஆண் மகனுக்கு!!!



***



மணிக்கட்டை திருப்பி நேரத்தை பார்த்து விட்டு பார்த்துக் கொண்டிருந்த பைலை அப்படியே மூடி வைத்து எழுந்தாள் அஷ்வி.



'இப்போவே போயி அவன கூட்டி கிட்டு போனா தான் சரியா இருக்கு' மனதிற்குள் முடிவெடுத்தவள் மீண்டும் அமர்ந்தாள்.



'நாளு மணிக்கு டான்னு வீட்ல இருன்னு அந்த ஆபிஸர் கிட்ட சொல்லிட்டு வந்தேனே.... அவன் வருவானா நாம போலாமா....

ஊஹூம்.... அவன் வர மாட்டான் கமாண்டர்..... நாம ஆபிஸ் போயி பாக்கலாம்' முடிவெடுத்து விட்டு எழுந்தது வெளியே வந்தவள் நேரே கணவன் ஆபிஸை நோக்கி சென்றாள்.



***



ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ்.....



"மிஸ்.மதி" ரிசப்ஷனிஸ்ட் சாருமதியின் முன் வந்து நின்று அழைக்க சிரிப்புடன் எழுந்து நின்றாள் பெண்.



"வெல்கம் மேம்"



"ஓஹ்...வரவேற்குறியா?" பதில் சொல்லாமல் சிரித்தாள்.



"சரி.... உங்க எம்.டி ரூம்ல இருக்காரா இல்லயா?"



"நோ மேம்....மாறன் சாரும் கதிர் சாரும் முக்கியமான மீட்டிங்காக காலைல கிளம்பி போனாங்க.... இன்னும் வர்ல"



"இன்னும் வர்லியா.... எப்போ வர்றாங்கன்னு ஏதாவது தெரியுமா உனக்கு?"



"நோ மேம் தெரியாது.... சாரி"



"இட்ஸ் ஓகே விடு.... என்ன பண்ணலாம்..." தாடையில் கை வைத்து யோசித்தவள்



"மதி...நா இங்க சும்மா சுத்தி பாத்துட்டு இருக்கேன்.... உங்க எம்.டி வந்தா எனக்கு இன்பார்ம் பண்ணு" என்று விட்டு உள்ளே சென்றாள் பெண்....



....



'இது நம்ம நிலா மாறி இருக்கே.... அவ இங்கேயா வேலை பாக்குறா.... சரி போய்த்தான் பார்ப்போமே' அவளை நோக்கி நடை போட்டவள் அவள் முன் போய் நிற்க நண்பியை கண்டு மலர்ந்தது அவள் முகம்...



"அஷ்வி...." எழுந்தவளை அணைத்தவள் விலக்கி அமர வைத்து தான் டெஸ்கில் சாய்ந்து நின்றாள்.



"எப்பிடி இருக்கடி?"



"நல்லா இருக்கேன் நிலா... ஆமா... உனக்கு கல்யாணம்னு அபி சொன்னா.... நீ என்னடான்னா ஆபிஸ் வந்து வேல பாத்துகிட்ருக்க?"



"அதோ அவன் தான் ஆளு.... அதனால தான் ஆபிஸ் வர்றேன்" அவளுக்கு சற்று தள்ளி இருந்தவனை கை காட்ட அதே நேரம் அவனும் பார்க்கவும் ஸ்நேகமாக புன்னகைத்தாள் பாவை....



"அவனுக்கு பக்கத்துல இருக்கவன் ஹேண்ட்ஸம்மா இருக்கான்ல?" நண்பியை பாராமல் கேட்டவள் பின்னால் வந்து பேண்ட் பாக்கெட்டில் கைகளை விட்டபடி நின்று முறைத்துக் கொண்டிருந்தவனை கவனிக்க வில்லை....



"நிலா.... அவன் ஹேர் ஸ்டைல பாரேன்.... செம.... அவன லவ் பண்ணி இருக்கலாமோ?" தன் பாட்டில் பேசிக் கொண்டிருந்தவளின் கையை இழுத்து சைகை காட்ட நினைத்தவளை "உஷ்..." வாயில் விரலை வைத்து தடுத்தான் ரிஷி.



"நிலா...ஏன்டி பேசாம இருக்க.... ஓஹ் பக்கத்துல உன் ஆள் இருக்காங்குற பயமா.... பரவாயில்ல பாரு.... நா எதுவும் சொல்ல மாட்டேன்...அவன் கிட்ட ஒரு தடவ பேசி பாக்கலாமாடி... என்னா கலரு.... என்னா ஸ்டைலு.... வாவ்.... பாத்து கிட்டே இருக்கலாம் போல இருக்கே"



"...."



"என்ன நிலா நீ.... நா எவ்வளவு நேரமா பேசிட்ருக்கேன் நீ அமை...." திரும்பியவளின் வார்த்தைகள் தொண்டை குழியை விட்டு வர மறுக்க பல்லை கடித்து கொலை வெறியில் முறைத்துக் கொண்டிருந்த கணவனை பார்த்து சமாளிப்பாய் இளித்தாள்.



"ஹி....மாறன் சார்.... நீங்க எப்போ வந்தீங்க?"



"நிலா....வாட் இஸ் திஸ்?" மனைவியை தவிர்த்து அவளிடம் பாய நடுங்கிப் போனாள் பெண்.



"சா...ர்....வந்து நா...."



"தேவ்.... அவளுக்கு ஏன் கத்துறீங்க.... தப்பு என் மேல.... வாங்க டீல் பண்ணிக்லாம்" அவன் கையை பிடிக்க வெடுக்கென தட்டி விட்டான்.



"ஆபிஸ் நேரத்துல வேலய கவனிக்காம என்ன பண்றீங்க?" மீண்டும் காய்ந்தவனை பார்த்து



"அட தேவ்.... நீங்க வாங்க என் கூட.... அட வாங்க தேவ்...." கையை பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு செல்ல வாயை பிளந்தனர் அனைவரும்....



"பொண்டாட்டி கிட்ட அடங்கி போகலன்னா என்ன ஆகும்னு பாஸுக்கே தெரிஞ்சிருக்கு பாரேன்" ஒருவன் அருகிலிருந்தவனிடம் கிசுகிசுப்பது நன்றாகவே கேட்டது.



.....



வெளியே வந்து அவள் கையை வெடுக்கென தட்டி விட்டவன் அவளை உறுத்து விழித்தான்.



"டைமாச்சு வாங்க தேவ் ஹாஸ்பிடல் போலாம்" எதுவுமே நடக்காதது போல் அவன் காரில் சென்று ஏற பல்லை கடித்தவன் தானும் ஏறி கதவை அறைந்து சாற்ற காதை பொத்தினாள் பெண்....



"தேவ்...." காரை உறும விட்டு அவன் கிளப்பிய வேகத்தில் நடுங்கியவள் அதன் பிறகு எதுவுமே பேசவில்லை....



ஹாஸ்பிடல் போன போதும் சரி.... டாக்டர் அர்ஜுனிடம் பேசும் போதும் சரி முறுக்கிக் கொண்டே இருந்தவன் அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை....
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"தேவ் பீச்சுக்கு போலாமா?" கண்கள் பிரகாசிக்க கேட்டவள் அவன் முகம் இறுகி இருப்பதை பார்த்து மீண்டும் அமைதியாகி விட சற்று நேரத்தின் பின் குழுங்கி நின்றது அவனின் ரால்ஸ் ராய்ஸ்....



"என்ன கோபம் இருந்தாலும் உங்களுக்கு என் மேல அதுக்கு மேல லவ் இருக்கு சார்" தோளை தட்டி கடுப்பேத்தினாள் மனைவி.



"நீங்களும் வாங்க தேவ்...."



"...."



"நான் மட்டும் போயி நிக்கும் போது உங்க எதிரி யாராவது என்ன கொல்ல முயற்சி பண்ணா காப்பாத்த நீங்க இருக்கனும்ல?" விளையாட்டாய் கேட்டவள் இறங்கி நடக்க படக்கென கதவை திறந்து கொண்டு வெளியே இறங்கியவன் சுற்று முற்றும் தான் பாதுகாப்புக்காய் நிற்க வைத்திருந்த ஆட்களை கவனித்தான்.



அங்கொன்றும் இங்கொன்றுமாக சில இடங்களில் நின்று கொண்டிருந்தவர்களை பார்த்து திருப்திப் பட்டுக் கொண்டவன் அவள் பின்னே சென்றான்.



அவனுக்கென்று மட்டுமல்ல....



வீட்டில் மட்டுமல்லாம் குடும்பத்தினர் அனைவருக்குமே தனித்தனி பாடி காட்டை நியமித்து இருப்பது அவன் மட்டுமே அறிந்த ரகசியம்!!!



"தேவ்...." கத்தி அழைத்தவள் அவன் முதுகுக்கு குறி பார்த்து வந்து கொண்டிருந்த தோட்டாவை கண்டு அசுர வேகத்தில் ஓடி வந்தவள் அவன் இன்னதென்று யோசிக்கும் முன்னரே அவனை பிடித்து தள்ளி விட அவனவளின் தோற் பட்டையை உரசிச் சென்றது தோட்டா!!!



"ஆ...." கையை இறுக்கிப் பிடித்தவள் கீழே இருந்தவனுக்கு ஏதாவது ஆபத்தா என அலச அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தவன் திடுக்கிட்டு எழுந்தவனுக்கு உலகமே தட்ட மாலை சுற்றுவது போல் இருந்தது.



"அஷூ...."



"எனக்கு ஒன்னில்ல.... உங்களுக்கு அடி பட்றுச்சா?" வலியை பொறுக்க பல்லை கடித்தாள் பாவை...



"இடியட்....ஒன்னில்லன்னு சொல்ற... ப்ளட் போகுது பாரு" தன் ஷர்ட்டை கலற்றி அவள் தோற் பட்டையை இறுக்கிக் கட்டு முன் அவன் தோளில் மயங்கினாள் அவனவள்!



ஹாஸ்பிடல்.....



தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தவன் அருகில் பதற்றமாய் வந்தமர்ந்தனர் வருணும் ரகுவும்....



"மச்சான்...." வருண் தோளில் கை வைக்க நிமிர்ந்து பார்த்தவனின் கண்கள் இலேசாக கலங்கி இருந்தனவோ....



"ரிலாக்ஸ்டா...." மறு பக்கம் ஆதரவாய் பிடித்தான் ரகு.



"என்னாச்சு?" ரகுவின் கேள்விக்கு நடந்தவற்றை கூறியவன் மீண்டும் தலையை குனிக்க



"யாருன்னு தெரிஞ்சுதா?" கேட்டான் வருண்.



"கதிர் கிட்ட சொல்லி இருக்கேன்.... தெரிஞ்சிடும்" அவன் சொல்லி முடிக்க க்ளவுஸை கழற்றிக் கொண்டு வெளியே வந்தார் டாக்டர் அர்ஜுன்.



"அங்கிள்..." பதறியவனை



"டோன்ட் ஒர்ரி மாறா.... நோ ஒர்ரீஸ்.... புல்லட் இலேசா உரசிட்டு போனதுல தான் ப்ளட் வந்திருக்கு.... மத்தபடி எந்த ஆபத்துமில்ல.... கட்டு போட்ருக்கேன்... டூ டேய்ஸ்ல சரி ஆகிடும்.... அண்ட் கங்க்ராட்ஸ்..." தோளில் தட்டி புன்னகைக்க நிம்மதியாய் இழுத்துப் பிடித்திருந்த மூச்சை விட்டவன் அவர் வாழ்த்தில் புருவம் சுருக்கினான்.



"எதுக்கு டாக்டர் கங்க்ராட்ஸ்....?" வருணும் புரியாமல் கேட்டான்.



"மிஸ்டர்.மாறன் அப்பா ஆக போறாரு...."



"வாட்...." சந்தோஷத்தில் கத்தினான் ரகு...



"மயக்கம் வந்ததுக்கு அதுவும் ஒரு காரணம்.... பயப்பட வேண்டிய அவசியம் இல்ல மாறன்...." சென்று விட நண்பனை இறுக்க தழுவிக் கொண்டான் வருண்.



"கங்க்ராட்ஸ் மச்சி...." ரகு தானும் அணைக்க பேசாமல் அப்படியே நின்றவனுக்கு சந்தோஷத்தில் மீண்டும் கண்கள் கலங்கி இருந்தன.



"நா வீட்ல இருக்கவங்களுக்கு இப்போவே தகவல் சொல்றேன்" ஆரம்பித்த வருணை



"வீட்டுக்கு முதல்ல கூட்டிட்டு போயிடலாம்.... இங்கன்னா சும்மா பதறுவாங்க.... வீட்டுக்கு போயி சொல்லிக்கலாம் மச்சான்...." முடித்து விட்டான் ரிஷி.



"ஓகேடா.... நீ போயி சிஸ்டர பாரு.... நானும் வருணும் மத்த பார்மாலிடீஸ் எல்லாம் முடிச்சிட்டு வர்றோம்" தலையை ஆமோதிப்பாய் அசைத்தவன் உள்ளே நுழைந்தான்.



......



கண்கள் மூடி நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணருகில் வந்து அவள் தலை கோதி நெற்றியில் முத்தமிட்டவன் அவள் வலது கையை தன் கைகளுக்குள் பொத்திப் பிடித்தவாறு அமர்ந்து கொண்டான்.



'ஏன்டா அப்பிடி பண்ண....ஏன் எப்போவும் எதயும் யோசிக்காம பண்ற...ஏதாவது ஆகி இருந்தா' நினைக்கவே பதறியது அவனுக்குள்....



அவன் கைபிடி அவனையறிமாலேயே இறுகவும் விழி திறந்தாள் பாவை....



அவனவள் கை அசையவும் விழியுயர்த்திப் பார்த்தவன் அவள் விழி திறந்திருப்பது கண்டு புன்னகைக்க



"உங்களுக்கு ஒன்னும் இல்லல்ல தேவ்?" என்றாள் மெதுவாய்....



இல்லையென தலையசைத்தவன் எழுந்து அவள் நெற்றி முடியை ஒதுக்கி விட்டு மீண்டும் நெற்றியில் முத்தமிட்டு அமர



"எனக்கு ஒன்னில்ல தேவ்....அம் சேஃப்" என்றாள் அவன் மனம் உணர்ந்து....



"ஏன் அப்பிடி பண்ண கண்ணம்மா?"



"நீங்க கவனிக்கல தேவ்.... நா இல்லன்னா என்ன ஆகி இருக்கும்?"



"என்ன ஆகி இருக்கும்.... தோட்டா முதுகுல துளச்சி இருக்கும்..... நீ எதுக்கு இடியட் மாறி நடுவுவ வந்த..... ஏதாவது ஆகி இருந்தா என் நிலமைய யோசிச்சு பாத்தியா நீ?" ஆத்திரத்தில் வெடித்தான்....



"சாரி மாமா...." அவள் தவறு அப்போது தான் மண்டையில் நன்றாக உறைத்தது போலும்.....



அவள் அழைப்பில் கொபமெல்லாம் பனிக்கட்டியாய் கரைந்து போக அவளை பொய்க் கோபத்தில் முறைத்தான்.



"உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும் தேவ்"



"எதுனாலும் வீட்ல வந்து பேசுடா.... இப்போ போலாம்"



"இல்ல எனக்கு இப்போவே சொல்லி ஆகணும்" அவள் குழந்தை விடயத்தை கூற வருகிறாள் என தெரிந்தும் வேண்டுமென்றே தவிர்த்தான்.



"அதான் கண்ணம்மா.... நாம வீட்டுக்கு போயி பேசிக்கலாம்"



"இல்ல தேவ்....ப்ளீஸ் நா சொல்ல வர்றத கொஞ்சம்....." அவள் முடிக்கும் முன் எழுந்து கொண்டவன்



"போலாம் பேபி" என்றான் சிரிப்பை மறைத்து....



"ஏன் நான் சொல்ல வர்றத கேக்காம இருக்கீங்க தேவ்....?" அவள் கண்கள் கண்ணீரில் மிதக்க துடைக்க துடித்த கைகளை கட்டுக்குள் கொண்டு வந்தவன்



"போலாமா அஷு?" என்றான் எதுவும் அறியாதது போல்....



"இனிமே நீங்க கேட்டாலும் நா சொல்லப் போறது இல்ல...." முறுக்கிக் கொண்டவள் இறங்க முற்பட கைகளில் ஏந்தினான் தன்னவளை....



"எதுக்கு இப்போ மட்டும் தூக்குறீங்க இறக்கி விடுங்க" காதே கேட்காதது போல் அவன் நடக்க நெஞ்சில் இடது கையால் குத்தியவள் அவன் கழுத்தில் முகம் புதைக்க தன்னவளை நினைத்து வசீகரமாய் சிரித்தான் அந்த ஆறடி ஆண் மகன்!!!



***



"யாழ்...." மனைவியை தூக்கி சுற்றினான் வருண்....



"விஷு....என்ன பண்றீங்க இறக்கி விடுங்க.... நாம ஹால்ல இருக்கோம்" மெதுவாய் எச்சரிக்கவும் அப்போது தான் சுற்றுப் புறம் உணர்ந்தான் அவன்....



ஹாலில் ரித்து சித்தார்த் அவன் அத்தை மாமா மற்றும் ரித்விக் உட்பட அனைவரும் இருக்க மெதுவாக இறக்கி விட்டவன் சங்கடமாய் நெளிந்தான்.



"நாங்க பாக்கலணா.... நீங்க கண்டினியூ பண்ணுங்க.... இல்ல ரிதி மா?" சித்தார்த் கலாய்க்க அசடு வழிந்தவன்



"நா ரூமுக்கு போறேன் யாழினி.... வா" அவசரமாக படிகளில் ஏறிச் சென்று விட பின்னால் தொடர்ந்த சிரிப்பலை அவன் காதுகளை நிறைத்தது.



......



"என்ன விஷு....?" பால் கனியில் நின்றிருந்தவனை பின்னால் வளைத்தணைத்தாள் பெண்.



"சந்தோஷமான விஷயம் சொல்ல போறேன்..."



"சொல்லுங்க சொல்லுங்க...." அவசரப்படுத்தியவளை முன்னால் இழுத்து கழுத்தில் தன் கைகளை மாலையாய் கோர்த்தவன்



"நீ மறுபடி அத்தை ஆக போற?"



"மறுபடியும்னா..... அஷ்வி அக்காவாஆஆஆ?" கத்தி ஆர்பரிக்க ஆமென தலையாட்டியவனை இறுக்க அணைத்துக் கொண்டாள்.



"யாழ்...."



"ம்...."



"அன்னக்கி ஏதோ சொல்ல வந்தல்ல...."



"எப்போ?"



"அதான் அன்னக்கி ரித்து கூட ப்ரக்ணன்ட்டா இருக்கானு சொன்னியே?"



"ஆ...ஆமா...."



"அப்போ ஏதோ சொல்ல வந்தல்லமா.... நானும் மறந்தே பொய்ட்டேன்.... இப்போ சொல்லு"



"முடியாது போங்க.... நா கோபமா இருக்கேன்"



"அப்போ கட்டி புடிச்சி கிட்டு நிக்கிற?"



"அ...அ...அது...அது ஆமா.... எனக்கு புடிச்சிருக்கு நா நிக்கிறேன்..... உங்களுக்கு என்ன வந்துது?"



"உன்ன.... சரி சொல்லு"



"ஸ்ரீக்கு செகண்ட் பர்த்டே வருது..."



"அட ஆமால்ல...."



"அதுக்காக தான் ஷாப்பிங் போலாமான்னு கேட்டேன்.... நீங்க பிஸியா இருந்தீங்க.... நா ரித்து கூட பொய்ட்டு வந்துட்டேன்" முகத்தை தூக்கி வைக்க அவள் முகத்தை நிமிர்த்தி அவளதரங்களை சிறை செய்ய கண்களை மூடிக் கொண்டாள் பாவை....



***



காரை திறந்து இறங்கி நடக்கப் போனவளை கைகளில் ஏந்த ஆச்சரியமாய் விழி விரித்து தன்னவனை பார்த்தாள் மாது.



"என்னாச்சு தேவ் உங்களுக்கு.....?"



"ஏன்டா?"



"வித்தியாசமா நடந்துக்குறீங்களே.... அதான் கேட்டேன்"



"ஓஹ்....நத்திங் கண்ணம்மா..." நெற்றி முட்டியவன் உள்ளே நுழைய ஜீவா ஆராவை தவிர ஹாலில் பதைப்புடன் நின்றிருந்தனர் அனைவரும்....



"வெல்கம் வெல்கம்..." இடை வரை குனிந்து நக்கலடித்தான் ஆரவ்....



"போடா..... தேவ் பாருங்க" தங்கையை புருவ முடிச்சுடன் தேடிக் கொண்டிருந்தவன் மனைவியின் சிணுங்கலில் அவளை குனிந்து பார்த்தான்.



"என்னடா?"



"இந்த ஆருவ பாருங்க....." புகார் வாசிக்க



"ஐ....மாம்ம டாட் தூக்கி இருக்காங்க" கத்திக் கொண்டே மேலிருந்து ஓடி வந்த யாதவ் மேல் திரும்பியது அனைவர் கவனமும்....



"கண்ணா பாத்துடா" துள்ளி இறங்கியவளை



"பாத்து கண்ணம்மா" கடிந்து கொண்டான் கணவன்.



ஓடி வந்தவனை கைகளில் அள்ளியவள் கணவனை மீண்டும் ஆராய்ச்சி பார்வை பார்த்து வைத்தாள்.



'ஒரு வேல தெரிஞ்சிருக்குமோ.... இல்லையே.... எப்பிடி....நோ நோ தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல' தனக்குள் பேசிக் கொண்டிருந்தவள் அப்போது தான் ஜீவாவும் ஆராவும் இல்லாதது உணர்ந்தாள்.



"ஜீவா எங்கே ஆரு?"



"அவன் ஆரா கூட ஷாப்பிங் போயிருக்கான்"



"ஷாப்பிங்கா?" கேட்டு விட்ட அவள் சிரிக்க அதே போல் கேட்டவன் தலையை அழுத்தக் கோதினான்....



"ஏன் என்னாச்சுணா?" "என்னாச்சு அத்தான்?" "என்னாச்சு தேவ்?" "டாட் வாட் ஹபெண்ட்?" அனைவர் கேள்விக்கும் அமைதியையே பதிலாக கொடுத்தவன் அரும்பாடுபட்டு தன்னை நிதானத்திற்கு கொண்டு வந்தான்.



"ஆரு.... பீ கேர்புல்..... வீட்ல இருக்க யாரயும் வெளில போக விடாத.... நீயும் போகாத.... நா இப்போ வந்துட்றேன்" பாக்கெட்டில் கைவிட்டு கார் சாவியை வெளியே எடுத்தவன் அதனை ஆன் பண்ணியவாறே வெளியே ஓட



"ணா....என்னாச்சு?" ஆரவ்வின் குரல் காற்றோடு கரைந்து போனது.



***



ஷாப்பிங் மால்....



"இது அண்ணிக்கு.... இது அண்ணாக்கு.... இது அந்த எருமைக்கு.... இது கயலுக்கு.... இது மதுவுக்கு...." ஒவ்வொன்றாய் காட்டிக் கொண்டிருந்தவளை சிரித்தபடி பார்த்திருந்தான் ஜீவா....



"எல்லாம் ஓகே.... பட் என்னவோ மிஸ் ஆகுதே...."



"யாதவ்"



"எஸ் எஸ் குட்டிப் பையாக்கு எடுக்கலல.... வாடா அந்த பக்கம் பாக்கலாம்" கையை பிடித்து இழுத்துக் கொண்டே போனவள் பின் விரும்பியே சென்றான் அவன்....



"இது நல்லாருக்குமாடா.... ஊஹூம் வேண்டாம்.... இது நல்லா இருக்காது" கேள்வியையும் அவளே கேட்டு பதிலையும் சொல்லிக் கொண்டாள்.



அடுத்தது இன்னொரு செக்ஷன்....



அதற்குள் இந்தப் பக்கமிருந்து நுழைபவர் தனக்கு பக்கத்தில் இருப்பவருடன் நெருங்கி நின்றாள் தான் அந்த பக்கம் வருபவர் வெளியே வர முடியுமாயிருக்க இரு பக்கமும் ஆடைகள் குவிந்து கிடந்தன.



உள்ளே நுழையப் போனவள் முன்னால் ஒருவன் வந்து கொண்டிருப்பது கண்டு சட்டென ஜீவாவை அணைக்க திடீர் அணைப்பில் அவன் தான் உறைந்து போனான்.



"ஜீவா....கொஞ்சம் இருடா.... அவன் அந்த பக்கமா நகர்ந்ததும் விலகிக்குறேன்" அவன் நிலை அறியாது யாரும் தன் மேல் பட்டு விடக் கூடாது என்றதில் கவனமானவள் இன்னுமின்னும் அவனுக்குள் ஒன்ற அவன் தான் தவித்துப் போனான்.



"இருமா...." சட்டென அவளை இழுத்து தன் முதுகுக்கு பின்னால் நிறுத்தியவன் தான் அவளை காப்பது போல் நிற்க பெண்ணவள் மனது அவன் செயலில் முதன் முறையாக தடதடக்க ஆரம்பித்தது.



ஆண் வாசமே சந்திக்காதவள் அல்ல அவள்....



இருந்தும் ஏதோ ஒன்று மனதிற்குள் இதத்தை பரப்ப அப்படியே நின்று விட்டாள்.



"ஆரா..ஆராதனா....." இரு தோள்களையும் பிடித்து உலுக்கவும் மாயையிலிருந்து வெளியே வந்தவள் மலங்க விழித்தாள்.



"என்னாச்சுமா.... ஏதாவது பண்ணுதா?" அவன் பதற்றம் புதிதாய் தெரிய அவனையே பார்த்தாள்.



"ஆரா.... ஆரா...."



"ஹாங்....என்ன ஜீவா?"



"ஏன் ப்ரீஸாகி நிக்குற.... என்ன பண்ணுது?"



"ஒ...ஒ...ஒன்னில்ல ஒன்னில்ல...."



"ஆர் யூ ஷூர்?"



"எஸ் வா போலாம்..." அவனை பார்க்காமல் முன்னேறி விட நெற்றியை தேய்த்துக் கொண்டே பின்னால் நுழைந்தான்.



......



"டாமிட் கால அடண்ட் பண்ணூடா...." ஸ்டியரிங் வீலில் தட்டினான் ரிஷி.



"ஆனந்த்...." பல்லை கடித்தவன் மீண்டும் மீண்டும் அழைப்பை ஏற்படுத்திக் கொண்டே இருந்தான்.



.....



"என் போன் ரிங் ஆகுறா மாறி இருக்கு ஆரா.... கொஞ்சம் இரு" மொபைலை எடுத்து திரையை பார்த்தவன் அவசரமாக காதிற்கு கொடுத்தான்.



"ணா...."



"இடியட்.... போன் பண்ணா அடண்ட் பண்ண மாட்டியா?"



"சாரி ணா கவனிக்கல"



"எங்க இருக்க?"



"***ஷாப்பிங் மால்"



"நா வந்துகிட்ருக்கேன்.... சேபா வெளில வா.... க்வீக்..."



"ஓ...ஓகே ஓகே ஓகே ணா...." அழைப்பை துண்டிக்க கேள்வியாய் பார்த்தவளிடம் தன் பதற்றத்தை மறைத்தவன்



"கிளம்பளாமா?" என்றான் அமைதியாய்...



"ம்...பட் உனக்கு எதுவும் வாங்கலயே?"



"இட்ஸ் ஓகே மா.... இன்னொரு நாள் பாக்கலாம்.... எனக்கு அர்ஜன்ட்டான ஹாஸ்பிடல் கேஸ் ஒன்னு இருக்கு.... போலாம்"



"இல்ல உனக்கும் எடுத்துட்டே போலாம்டா ப்ளீஸ்...."



"எனக்கு தேவயில்லமா.... போலாமே"



"நோ....இரு வர்றேன்..." அவள் ஓட



"ஏய்...." கத்திக் கொண்டே அவள் பின் ஓடினான் அவன்....



.....



"ம்...இப்போ ஓகே..." வெள்ளை நிற ஜெர்ஸி ஒன்றை எடுத்து அவன் மேல் வைத்துப் பார்க்க தூக்கி எறிந்தவன்



"வான்னு சொல்றேன்ல.... வா... ட்ரஸ்ஸும் மண்ணாங்கட்டியும்" அவளை தரதரவென இழுத்துக் கொண்டு வெளியே வர அவன் கோபப்பட்டதை உறைந்து போய் பார்த்திருந்தாள் அவள்....
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவளை இழுத்துக் கொண்டு வெளியே வரவே அவர்கள் முன் வலுக்கிக் கொண்டு வந்து நின்றது ரிஷியின் ரோல்ஸ் ராய்ஸ்....



"கெட் இன்...." பதற்றமாய் கத்த அவளை முன்னிருக்கையில் ஏற்றி விட்டவன்



"நீ போணா நா வந்துட்றேன்...." என்றான் குனிந்து...



"லூசாடா நீ.... ஏறு முதல்ல"



"இல்லணா நா ஹாஸ்பிடல் போக வேண்டி இருக்கு"



"என் கோபத்த கிளப்பாம ஏறு ஆனந்த்" பல்லை கடித்தான்.



"நோ.... நீங்க போங்கணா" பிடிவாதமாய் மறுத்தவன் விலகி நடக்க காரை புல் லாக் கொடுத்து விட்டு இறங்கியவன் ஈரெட்டில் அவனை அடைந்து இழுத்துக் கொண்டு வந்தவன் பின் சீட்டில் தள்ளி கதவை அறைந்து சாற்றி விட்டு உறும விட்டு கிளப்பவும் தான் கலைந்தாள் பெண்....



"அப்பிடி என்னடா பெரிய வேல உனக்கு.... எதாவது ஆச்சுனா?" பொறிந்துத் தள்ளினான்.



"என்னணா ஆச்சு?"



"ஒன்னில்லடா.... சும்மா ஒரு பாதுகாப்புக்கு தான்"



"ம்...."



"ஆனந்த்..." அமைதியாய் வந்தவனை அழைக்க கண்ணாடியினூடு அவனை பார்த்தாள் பெண்....



"என்னணா?"



"என்ன ஆச்சு.... ஏன் டல்லா இருக்க?" தன்னை நிதானப்படுத்திக் கொண்டு கேட்டான்.



"ஒன்னில்ல ணா..." ரிவர்வியூ கண்ணாடியூடு தானும் பார்த்தவன் அதன் பிறகு எதுவும் பேசவில்லை....



.....



"நீங்க ரெண்டு பேரும் உள்ள போங்க நா வந்துட்றேன்" அவன் கிளம்பவே போர்டிகோவில் நடந்தவனை நிறுத்தினாள் பெண்.



"ஜீவா...ஜீவா டேய்..." அவனருகே சென்று அவனை தன் புறம் இழுத்து திருப்ப முகம் காண மறுத்தான்.



"இப்போ என்ன ஆகி போச்சுன்னு மூஞ்ச இப்பிடி வெச்சிருக்க?"



"சாரி..."



"எதுக்குடா?"



"அ...அது அது...."



"ஷாப்ல நடந்தத நானே மறந்துட்டேன் நீ ஏன் பீல் பண்ற.... மூஞ்ச இப்பிடி வெச்சிகாதடா பாக்க முடில"



"சாரி ஆரா.... நான் அப்பிடி நடந்திருக்க கூடாது"



"டேய்....திரும்ப திரும்ப அதயே பேசிட்ருக்க"



"இல்ல...."



"போதும் வா...." அவன் கையை பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு செல்லவும் தான் அவன் முகம் இயல்பானது.



***



"கதிர்.... எங்க இருக்க?" காரை லாவகமாக திருப்பிய படியே கேட்டான் ரிஷி.



"நம்ம இடத்துல தான் சார்"



"யாரவன்னு தெரிஞ்சுதா?"



"எஸ் சார்.... நீங்க வாங்க.... இங்க தான் இருக்கான் திமிர் புடிச்சவன்" கடைசி வார்த்தையை கதிர் முணுமுணுத்த விதத்தில் சிரித்தவன்



"குட்.... இரு நா வந்துட்றேன்" கட் பண்ணி விட்டான்.



.....



தெனாவெட்டாய் தன்னை பார்த்திருந்தவனை பார்க்க சிரிப்பு தான் வந்தது அவனுக்கு....



"கதிர்... யாருடா இவன்.... கோமாளி மாறி இருக்கான்" கேட்கும் போதே சிரிப்பு வந்து விட சிரித்தவனை பார்த்து அவ்வளவு நேரம் முறைத்துக் கொண்டிருந்தவனும் சிரித்து விட்டான்.



"திமிர் புடிச்சவன் சார்.... எதுவுமே வாய தொறந்து சொல்ல மாட்டேங்குறான்" மீண்டும் முணுமுணுத்தான் கதிர்.



"உனக்கு ஏன் இவ்வளவு காண்டு?"



"பின்ன என்ன சார் எவ்வளவு நேரம் இவன கடத்தி.... நீங்க வேற வர்ல.... வாம இறுக்க மூடி கிட்டு ஹீரோ லுக்கு கொடுக்குறான்"



"ஓஹ் அதான் கோபமா... பட்.... இவன எங்கேயோ பார்த்தா மாறி இருக்கு கதிர்"



"நோ சார்...."



"இல்லடா.... அவன நல்லா பாரு.... அவன் மீசய எடுத்து விட்டா...." ரிஷி சொல்ல வருவது புரிந்து அவன் மீசையை இழுக்க அது கையோடு கழன்று வர ரிஷியை சலேரென திரும்பி பார்த்தவன் உண்மையில் பயந்து தான் போனான்....



இவ்வளவு நேரம் சிரித்துக் கொண்டிருந்தவனல்ல இவன்!!!



இவன் வேறு....



தேவமாருதன்!!!



"கதிர்.... முதல்ல இருந்து ஆரம்பிக்கலாமா?" அவன் இரு கைகளும் தானாய் பேண்ட் பாக்கெட்டுக்குள் நுழைய கால்களை சற்றே அகற்றி நின்று கேட்டவனின் தோரணை கதிருக்கே பயத்தை வரவழைத்தது என்றால் முன்னிருந்தவனை கேட்கவா வேண்டும்???



"ஹூ அம் ஐ கதிர்....?"



"சா....சா...ர்"



"சும்மா சொல்லுடா... கேட்டு ரொம்பபபபப நாளாச்சு"



"யூ ஆர் அ கிரிமினல் பேட் பாய் சார்" சொல்லும் போதே நடுங்கியது குரல்....



"எஸ் அதே தான்.... கேட்டல்ல.... பேட் பாய் மட்டுமில்ல ராஜா.... கிரிமினலும் கூட...." முன்னிருந்தவனுக்கு வியர்த்து வழிந்தது.



"சார்....விட்டுடுங்க"



"நா உன்ன விடனும்னா நீ எனக்கு ஒரு வேல பண்ணனுமே"



"பண்றேன் பண்றேன்...." உடனே ஒத்துக் கொள்ள இகழ்ச்சியாய் வளைந்தது அவன் உதடுகள்....



"சரி சொல்லு.... யாரு சொல்லி செஞ்ச?"



"சார் இவன் அந்த ரிப்போர்டர் தானே?" அவ்வளவு நேரம் ஆராய்ந்து கொண்டிருந்தவன் அப்போது தான் அவனை அடையாளம் கண்டு கொண்டான் போலும்....



((நண்பா....இந்த ரிப்போர்ட்டர்....

உங்களுக்கு ஞாபகம் இருக்கா ஒரு தடவ அஷ்வி ரிஷிய பத்தி நியூஸ்ல வந்துதுன்னு ஆரு சித்து அப்பறம் மதன் ஒரு ரிப்போர்டர வெச்சி செஞ்சானுங்களே....

ஞாபகம் இருக்கா???



அவனே அவனே....



இன்னொன்னு.... அது எப்பிடி இவனுக்கு தெரியும்னு நீங்க யோசிக்கலாம்... பட் நமக்கு தான் அவன பத்தி தெரியும்ல...



இவன் கிட்ட மாட்னதுக்கப்பறம் தான் நம்ம ஆரு கேங் கிட்ட மாட்டி இருந்தான்....தம்பி இப்பிடி பண்ணது தெரிஞ்சாலும் பேசாம விட்டுட்டான்...))



"அவனே தான் கதிர்"



"இவன் எங்க சார் இப்போ என்ட்ரி ஆகறான்?"



"இருடா சார் கிட்ட கேக்கலாம்.... ம் சொல்லு யாரு சொல்லி பண்ண?"



"...."



"நான் கேள்வி கேட்டு பதில் சொல்லாதவனுங்கள எனக்கு புடிக்குமா கதிர்?"



"நோ சார்..."



"சொல்ல போறியா இல்லயா....?"



"அ...அ...அது....அது..."



"நடிக்காம ஒழுங்க பேசு.... இல்லன்னா எங்கிட்ட வாங்கி கட்டுவ"



"பாஸ் தான்...."



"தோ பார் இந்த பாஸுன்னு மழுப்புற வேல என்கிட்ட வெச்சிகாத...." அவன் பொறுமை காற்றில் பறந்து கொண்டிருந்தது.



"ராம் பாஸோட அப்பா..."



"ராம் பாஸோட அப்பாவாஆஆ.... அது யாருடா அது?"



"கேசவன் சார்....."



"ஓஹ்.... அவனா... ச்சி அவரா?" நக்கல் தெறித்தது அவன் குரலில்...



((நண்பா ராம் ஞாபகம் இருக்குல...

நம்ம அஷ்வி கேஸ் ராம்....

கடத்தி கூட வெச்சானே...

அவள காப்பாத்த ராமோட அப்பா கேசவன இவன் கடத்துனான்.

அவரே தான் நண்பா....))



"அவன் புள்ளய நான் போட்டேன்னு நெனச்சி துள்றான்... அதானே.. ஷப்பாஹ்.... சத்தியமா முடிலடா... எங்க இருந்துடா எனக்குன்னு கிளம்பி வர்றீங்க... கதிர்....இந்த டப்பா கேஸ விட்டுடு... நாம மிஸ்டர்.கேஸவன் கிட்ட டீல் பேசிக்கலாம்"



"ஷூர் சார்...."



"ஆமா....இது அவரு சொல்லி செஞ்ச.... அன்னக்கி யாரு சொல்லி செஞ்ச?"



"இராமநாதன் சார்..."



"அப்போல இருந்தே பயபுள்ள நமக்கு எதிரியா தான் இருந்திருக்கு பாரு.... அவன் தான் போய் சேந்துட்டானே.... விடு...கதிர் இவன விட்டுடு....பட் இவன் மேல நம்ம வாட்சிங் இருக்கட்டும்...."



"ஓகே சார்"



"ஓகே பய்...நீயும் போ.... நா ஆபிஸ் கெளம்புறேன்" டையை அங்குமிங்கும் தளர்த்தியவாறே வெளியேறி விட்டான்.



***



"ஆனந்த்.... அண்ணா எங்கடா?" பதற்றமாய் கேட்டான் ஆரவ்...



"அவங்க ஏதோ வேலையா பொய்ட்டாங்க...."



"தனியாவா போனாங்க ஜீவா?" இடையிட்டாள் அவனவள்...



"ஆமா அஷ்வி...."



"அண்ணி பயப்படாதீங்க.... ரிலாக்ஸ்.... யாது அத்தை கிட்ட வாடா...." தான் தூக்கிக் கொண்டவள் அனைவருக்கும் எடுத்து வந்ததை கொடுக்க உள்ளே சென்று விட்டான் ஜீவா....



"அண்ணாக்கு எடுக்கலயா ஆரா?" கயல் தான் கேட்டாள்.



"ஜீவா வேணாம்னு சொல்லிட்டான் கயல்...."



"ஓஹ்...ஓகே...."



"அண்ணி....என்ன எதுவும் பேச மாட்டேங்குறீங்க...பிடிக்கலயா....?"



"ச்சே அப்பிடி இல்ல... புடிச்சிருக்கு.... எனக்கு தல வலிக்கிறா மாதிரி இருக்கு...நான் ரூமுக்கு போறேன்...."



"என்னடி ஆச்சு?" நண்பன் பதற



"ஒன்னில்லடா.... லேசா தல வலி.... அவ்வளவு தான்" அவள் கட்டை துப்பட்டா மறைத்திருந்ததால் யாரும் கவனிக்கவும் இல்லை....



அவள் எழுந்து செல்ல முற்பட யாதவ் துப்பட்டாவை இழுக்கவும் அனைவரும் கண்டு கொள்ள



"என்னாச்சு கா?" பதறி எழுந்து வந்தாள் கயல்....



"மாம்...." யாதவ் உதட்டை பிதுக்கி அழ ஆரம்பித்த சத்தத்தில் வெளியே வந்த ஜீவாவும் அதிர்ந்து போனான்.



"என்னாச்சு அஷ்விமா?"



"என்னடி ஆச்சு?" சற்றே கண்டிப்புடன் ஆரவ் கேட்கவும் தான் நடந்ததை கூற அப்போது தான் ஜீவாவிற்கு அவனின் பதற்றம் புரிந்தது.



"இவ்வளவு நடந்திருக்கு.... எங்க கிட்ட சொல்லனும்னு தோனலியா அஷ்வி?" மது தான் சற்று கோபப்பட்டாள்.



"சாரி...."



"மன்னிப்பு கேட்டா ஆச்சா அண்ணி?" ஆதங்கமாக கேட்டாள் ஆராதனா.



"சாரி....நான்...." முறைத்துக் கொண்டு நின்ற நண்பனை பார்த்து கண்களால் மன்னிப்பு கேட்க இன்னும் முறைத்தான்.



"நான் ரூமுக்கு போறேன்...."



"இருங்கண்ணி நான் வர்றேன்"



"இல்ல இல்ல.... நானே போய்குறேன்...."



***



இரவு....



வர சற்று தாமதமாக விழித்திருந்தவர்களை கண்டு தன் புருவத்தை நீவி விட்டவன்



"என்னாச்சு?" என்றான் பொதுவாய்....



"அத நாங்க தான் கேக்கனும்ணா"



"என்னமா?" தங்கை கேட்க வருவது புரியவில்லை அவனுக்கு...



"இவ்வளவு நடந்திருக்கு....ஒரு வார்த்த எங்க கிட்ட சொல்லல.... இப்போ தனிய போயிருக்க.... என்னணா இதெல்லாம்?" ஆரவ்வும் ஜீவாவும் சொல்லி வைத்தது போல் ஒரே கேள்வியை கேட்டு விட்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.



"அது...."



"உன் பொண்டாட்டி உனக்கு மேல இருக்கா..... அவ்வளவு நேரம் இருந்தவ துப்பட்டாவால மறச்சி கிட்டு சொல்லவே இல்ல" மீண்டும் காய்ந்தான் ஆரவ்.



"டென்ஷனாக்க வேணாமேன்னு சொல்லலடா....சாரி" மன்னிப்பு கேட்டும் நன்றாக பிடிபிடியென பிடித்து எடுத்து விட்டே விலகிச் செல்ல மேலேறிச் சென்றான் ரிஷி.



.....



அவனுக்காக காத்திருந்தவள் சோபாவிலேயே உறங்கி விட்டிருக்க தலையாட்டி சிரித்தவன் ப்ரஷப்பாகி விட்டு வந்து தன் கைகளில் ஏந்திக் கொண்டு போய் கட்டிலில் கிடத்த அவன் ஷர்ட்டை இறுக்கப் பற்றி அருகில் இழுத்தாள் பாவை....



"தூங்கலயாடா?" நெற்றி முட்டியபடி கேட்டான் காளை....



"நா உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்"



"காலைல சொல்லிக்கலாம்"



"நோ...."



"சரி சொல்லு"



"நான்...."



"ம்...நீ...."



"நான் க..."



"கொஞ்சம் இரு கண்ணம்மா...." அவளை தடுத்து விட்டு உள்ளே சென்றவன் கையில் ஒரு நகை பெட்டியுடன் திரும்பி வர முறைத்தாள் மனைவி.



"என்ன பண்றீங்க தேவ்....நா பேசணும்னு சொல்லிகிட்ருக்கேன்"



"கண்ணம்மா.... கண்ணாடி முன்னால வந்து இருடா" கத்திய மனைவியை அவன் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை....



"முடியாது" முகத்தை திருப்பவும் தானே தூக்கியவன் கொண்டு போய் ட்ரஸ்ஸிங் டேபிளின் முன் அமர வைத்து தான் கொண்டு வந்திருந்த வைர நெக்லசை அணிவித்து விட்டு அவள் தோளில் நாடி குற்றி இருவரையும் இணைத்துப் பார்க்க முறைத்தாள் பெண்.



"பேபி... உனக்கு ஒரு பேபி வர போகுது.... நீ கண்ஸீவா இருக்க அதானே?" கண்ணாடியில் பார்த்து கேட்க கண்கலங்க ஆமென தலையாட்டியவளை எழுப்பி அணைத்துக் கொண்டான் அவளவன்.....



தொடரும்.....



01-06-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 10 [ A ]



மனைவியின் நெற்றியில் மென்மையாய் இதழ் பதித்து விட்டு எழுந்தான் ரிஷி.



மகன் அன்னையை வளைத்துப் பிடித்திருப்பது கண்டு அவன் உதடுகள் புன்னகைக்க அவள் தூக்கம் கலையாதவாறு தன் கைகளில் தூக்கினான்.



"ம்...விடுங்க டாட்...."



"யாது...டேய்...." தன் தோளில் மீண்டும் தூக்கத்தை தொடர்ந்த மகனை தட்டினான் தந்தை....



"யாது எந்திரிடா...."



"ஊஹூம் நா ஸ்கூல் போகல"



"அப்போ நீங்க அம்மாப்பா மாதிரி பெரிய ஆள் ஆக வேணாமா?"



"ஆகணும்...." தூக்கத்திலேயே சிணுங்க சிரித்தான்.



"தூங்குனா எப்பிடி ஆகறது.. டேய் படுத்தாம எந்திரிடா"



"மாம் மட்டும் தூங்குறாங்க"



"மாம்கு கொஞ்சம் தலவலியா.... அதனால போகல ஆபிஸ்"



"மாம்கு தல வலியா?" படக்கென எழுந்தவன் தந்தை முகம் பார்த்தான்.



"டேய் இவ்வளவு நேரம் நா எழுப்பிக்கிட்ருக்கேன்.... கும்பகர்ணன் மாறி தூங்குன.... உன் மாம்கு தல வலின்னு சொன்னதும் எந்துரிச்சுட்ட?"



"மாம்கு என்னாச்சு டாட்?"



"யாதுக்கு குட்டி பாப்பா வேணும்னு சொன்னீங்கல்ல...."



"எஸ் எஸ்..."



"மாம் வயித்துகுள்ள குட்டி பாப்பா இருக்கா.... அப்போ மாம்ம நல்லா பாத்துகணும்ல....அதான் டாட் மாம வேலைக்கு போக கூடாதுன்னு சொல்லி இருக்கேன்"



"நெஜமாவா டாட்.... எனக்கு தங்கச்சி பாப்பா வர போறாங்களா?" ஆமோதிப்பாய் தலையசைக்க அவன் முகம் மலர்ந்து விகசித்தது.



"ஸ்கூல் போனா தானே பாப்பாக்கு சொல்லி தர முடியும்.... நாம ஸ்கூல் போலாமா?"



"ஓகே டாட்...." அவன் அவசரப்படுத்த குளியலறை தூக்கிச் சென்றான் ரிஷி.



***



ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ்.....



மீட்டிங் அறையில் லேப்டாப்பினூடு வீடியோ காண்பரண்ஸ் மீட்டிங்கில் இருந்தான் ரிஷி.



"மிஸ்டர்.மாறன் உங்க கம்பெனி எக்ஸ்போர்ட் பண்ற இந்த பொருளுக்கு எத்தன வருஷ கேரண்டி?"



"அஞ்சு வருஷ கேரண்டி இருக்கு மிஸ்டர்.ராஜ்"



"ஓஹ்.... ஓகே...."



"சப்போஸ் இது அஞ்சு வருஷம் தாக்கு பிடிக்கலனா உங்க கம்பெனி அதுக்கான நஷ்ட ஈட ஏத்துக்குமா?" இன்னொருவர் கேட்க அவன் வாயை திறக்கும் முன் பதற்றமாக உள்ளே நுழைந்தாள் மது.



"அத்தான்...." கவனம் சிதற



"எஸ்கியூஸ் மீ" என்றவன் லேப்பை மூடி வைத்து விட்டு கோபமாய் திரும்பினான்.



"அத்தான் அஷ்வி மயக்கம் போட்டு விழுந்துட்டாங்கன்னு அண்ணா கால் பண்ணான்"



"வாட்..." சேரை தள்ளி விட்டு எழுந்தவன் அதிர்ந்து கத்தினான்.



"டாக்டர் செக் பண்ணிட்டாங்களாம்... சாதாரண மயக்கம் பயப்பட...."



"கதிர் கிட்ட சொல்லி ரகுவ மீட்டிங் அடண்ட் பண்ண சொல்லு" அவள் முடிக்கும் பாய்ந்து ஓடினான்.



.....



"எஸ்கியூஸ் மீ சார்" கதிரிடம் அனுமதி வேண்டி நின்றாள் பெண்.



"கம் இன்..." உள்ளே நுழைந்தவளை என்னவென்பது போல் பார்த்தான்.



"அத்...ஐ மீன் மாறன் சார் உங்க கிட்ட ரகுவ மீட்டிங் அடண்ட் பண்ண நியூஸ் கொடுக்கட்டாம்னு சொல்ல சொன்னாங்க"



"ஓகே...." திரும்பியவள் அவன் கேள்வியில் நின்றாள்.



"ஏன் சார் எங்க பொய்ட்டாரு?"



"அஷ்வி மயக்கம் போட்டுட்டான்னு இப்போதான் வீட்டுக்கு போனாங்க"



"ஓஹ்...ஓகே தேங்க்ஸ்...." அவள் வெளியேற முற்படவும் வெளியே இருந்து ஒருவன் கதிரிடம் பைல் காட்ட வரவும் சரியாக இருக்க மோதி பின்னால் விழப் போனவளை



"ஏய் பாத்து...." ஈரெட்டில் அடைந்தவன் அவள் இடையை அழுத்தப் பற்றிப் பிடித்துக் கொண்டான்.



"சாரி சாரி..." முன்னால் வந்தவன் அவசரமாக மன்னிப்பு வேண்ட துள்ளி விலகினாள் பெண்.



"எஸ்கியூஸ் கேட்டுட்டு வர மாட்டியா?"



"சாரி சார்...."



"என்ன மேட்டர்?" தன் கையிலிருந்த கோப்பை கொடுத்து விட்டு சென்று விட அவளிடம் திரும்பினான் அவன்.



"ஆர் யூ ஓகே மது?"



"எஸ் சார்... தேங்க்ஸ்...."



"இட்ஸ் ஓகே...." கதவில் கை வைத்தவள் அவனை மீண்டும் திரும்பிப் பார்க்க புரியாமல் பார்த்தான் கதிரவன்.



"இனிமே இடுப்புல எல்லாம் கை வெக்கிற வேல வெச்சிக்காதிங்க சார்"



"வாட்.... இடியட்.... நா என்ன...." அவன் கத்தட்டுமென்று சென்று விட பல்லை கடித்தான்.



'இவ பெரிய உலக அழகி.... போடி....' திட்டினாலும் மனம் தான் அடங்குவேனா என சண்டித்தனம் செய்து கொண்டிருந்தது.



.....



சிரித்துக் கொண்டே தன் கேபினில் வந்தமர்ந்தாள் பாவை....



'வர்ரே வாஹ்.... கதிருக்கு கோபம் கூட வருது....உன்ன எப்பிடி என் பக்கம் வர வெக்கிறதுன்னு தெரியும்டா....நா வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கணுமா....இரு உனக்கிருக்குடா மவனே' மனதில் அர்ச்சனை செய்தவள் லேப்டாப்பில் வால் பேப்பராக இருந்த அவன் படத்துக்கு ஒரு பறக்கும் முத்தத்தை அனுப்பி வைத்து விட்டு மீண்டும் சிரித்தாள்.



***



ரூமிற்குள் பதற்றமாய் நுழைந்தவன் மனையாளை தலை முதல் பாதம் வரை அலசிய பின்பே சற்று ஆசுவாசமானான்.



"வா ணா.... எப்போ வந்த?" ஆராதனா தான் முதலில் கண்டு விட்டு கேட்டாள்.



அப்போது தான் தன்னவனை கண்டவள் அவன் கண்களில் தெரிந்த தவிப்பு கண்டு மெல்ல சிரித்துக் கொண்டாள்.



ஆரவ்வும் மதுவும் வேலைக்கும் யாதவ் ஸ்கூலுக்கும் சென்றிருக்க கயலும் ஆராவும் ஜீவாவும் மட்டுமே இருந்தனர்.



"ஆரா... நாம போலாம்...." கயலையும் அழைத்துக் கொண்டு வருமாறு கண் காட்டி விட்டு ஜீவா வெளியேறவே பின்னால் நாங்களும் வெளியேறிய அடுத்த நிமிடம் தன்னவளை நெருங்கி அமர்ந்து சட்டென அணைத்துக் கொண்டான் ரிஷி.



"தேவ்.... எதுக்கு எமோஷனல் ஆகுறீங்க?" அவள் விலக்க நினைக்கவுமில்லை அவன் விலகுவதாயுமில்லை....



"என்னாச்சுடா?" சற்று நேரம் விட்டு விலகி அமர்ந்து கேட்டான்.



"காலைல சாப்புட்ட சாப்பாடு ஒத்துக்கல போல.... வாந்தி எடுத்தேனா.... மயக்கம் வந்துடுச்சு.... கயல் பயந்துட்டா...."



"ஏன் அது ஒத்துகல?"



"தெரில தேவ்"



"வேற ஏதாவது சாப்புட்றியா?"



"இல்ல எனக்கு வேண்டாம் தேவ்"



"பசிக்குமேடா....?"



"பசிச்சா சொல்றேன் தேவ்.... பட் இப்போ என்னால முடியாது ப்ளீஸ்...."



"நம்ம குடும்பத்து ஆளுங்க கிட்ட விஷயத்த சொல்லல.... அதான் பயந்திருப்பாங்க.... நா எல்லோருக்கும் இன்பார்ம் பண்ணிட்டு வர்றேன்...."



"ம்..."



.....



சற்று நேரத்தில் அனைவரும் அவளை சூழ்ந்து கொள்ள ஓரமாய் நின்று தன்னையே சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவனை தானும் பார்த்தாள் பாவை....



"அட ராட்சஸி..... ரொமான்ஸ் வேறயா?" ஆரவ் கிண்டலடிக்க முறைத்தாள் பெண்.



"தடியா.... உனக்கு பொறாமை"



"பொறாமயா.... குட் ஜோக்"



"போடா...."



"ஏன் அம்மு.... இவ வயித்துக்குள்ள இருக்க பாப்பா இவள மாதிரியே வந்துடுச்சுனா நம்ம மித்து ரொம்ப பாவம்ல?"



"ஆமாடா...." அவளும் சிரிக்க



"அப்பிடியெல்லாம் இல்ல...." சிலிர்த்துக் கொண்டு சப்போர்டுக்கு வந்தாள் ஆரா.



"அதானே.... அப்பிடி சொல்லு ஆரா.... இந்த கிழவனுக்கு ரொம்ப தான் கொழுப்பு"



"குட் நேம் அண்ணி...." கலகலத்து சிரிக்க தங்கையை ஆசையுடன் வருடியது சகோதரர் இருவர் பார்வைகளும்.....



"அப்பிடி கூப்புடாதன்னு சொல்லி இருக்கேன்லடி ராட்சஸி....?"



"நான் உன் பேச்ச கேப்பேன்னு சொல்லவே இல்லையே"



"தேவயா உனக்கிது?" சிரித்தான் ஜீவா.



"போடா...."



"ஹாஹாஹா...."



"நல்லா சிரி ஜீவா" தானும் சேர்ந்து சிரித்தாள் அஷ்வி.



"அண்ணா.... ஏன் தனியா இருக்க வா இங்க" ஆரவ் அழைக்க புன்னகைத்தவன் அருகில் வர மொபைல் சிணுங்கவும் அடண்ட் செய்து காதிற்கு கொடுத்தவன் விலகி சென்றான்.



"எஸ் ரகு"



"..."



"ஓஹ்...ஓகே டீல் முடிச்சிடு"



"...."



"ம் ஓகே பய்" வைத்தவன் மீண்டும் கதிருக்கு அழைத்தான்.



***



ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ்.....



ரகுவிற்கு அழைத்து சொல்லி விட்டு கோபமாய் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் கதிர்.



மனம் குமுறிக் கொண்டிருந்தது.



'இவள என்ன பண்ணலாம்.... இவள காப்பாத்துனது தப்பா போச்சு.... அப்பிடியே விட்ருக்கணும் விழுன்னு....ச்சேஹ்.... எப்போ பாரு மூளைக்குள்ள வந்து குடைச்சல் கொடுத்து கிட்டே இருக்கா....இவ எப்போ வந்தாளோ அப்போ புடிச்சது சனி....இந்த சார் வேற ஏன் தான் அவளுக்கு சப்போர்ட் பண்றாரோ.... அவரு பேச்ச தட்ட கூட முடில....' நடை தடைபட அவளை தேடிச் சென்றான்.



....



"எஸ்கியூஸ் மீ" அவள் டேபிளுக்கு அருகே வந்து நின்றான் கதிரவன்.



'ஐ...நம்மாளு குரலாச்சே' மனம் துள்ளிக் குதிக்க ஏதும் அறியா பிள்ளை போல் கம்பியூட்டரை விட்டு பார்வையை விலக்கி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.



"மிஸ் மது.... உங்க கிட்ட பேசணும்"



"வாட் சார்" எழுந்து நின்றாள்.



"என் கேபினுக்கு வாங்க" அவள் பதிலை எதிர்பாராமல் சென்று விட மனதிற்குள் சிரித்துக் கொண்டே பின் தொடர்ந்தாள்.



....



"லுக் மிஸ்.மது... நான் ஒன்னும் உங்க.... வந்து..." அவனால் அதற்கு மேல் பேசவே முடியவில்லை....



"என்ன சார் சொன்னிங்க..." மொபைலிலிருந்து கண்களை எடுக்க



'இவ நடிக்கிறா' பல்லை கடித்தான்.



"மது....நா உங்கள காப்பாத்த தான்..."



"ஏன் காப்பாத்தணும்?"



'அதானே...'



"சார்...."



"ஹாங்...."



"ஏன் காப்பத்தணும்?"



'அப்பிடியே விழ விட்ருக்கணும்டி உன்ன' மனதிற்குள் நன்றாக திட்டினான்.



"சா....ர்........"



"என்ன?" விட்டால் கடித்து குதறி விடுவான் போலும்...



"ஒன்னில்லன்னா நான் போகட்டுமா சார்.... எனக்கு நிறைய வேல இருக்கு"



"முதல்ல அத செய்ங்க மது...."



"சார்.... நீங்க கூப்டு தான் வந்தேன்... சும்மா சும்மா கோபப்பட்டீங்கன்னா அப்பறம் நான் மாறன் சார் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணுவேன்"



"வாட்...லூசா நீ?"



"நான் லூசா இல்லயாங்குறது உங்களுக்கு தேவயில்லாதது சார்"



'இவள என்ன பண்றது....எல்லோர் கிட்டவும் அமைதியா தான் இருக்கா....நம்மள மட்டும் கடுப்பேத்திகிட்டு....சின்ன பப்பான்னு நெனப்பு.... கம்ப்ளைன்ட் பண்ண போறாளாம்....போடி....'



"மது....எனக்கு வேல இருக்கு நீங்க போறதுன்னா போங்க" கடைசி வரை அவன் சொல்ல வந்ததை சொல்ல விடாமல் செய்து விட்ட பிறகே வெளியேறினாள் பெண்!!!



.......



"கதிர்...."



"சொல்லுங்க சார்...."



"அந்த மாடல் கம்பெனிக்கு ஆள் கேட்டாங்களே.... அர்ரேன்ஜ் பண்ணி கொடுத்தியா?"



"எஸ் சார் நேத்தே முடிச்சுட்டேன்...."



"குட்.... அப்பறம் என் பைல்ஸ எல்லாம் என் கிட்ட கொண்டு வந்து தர்றியா?"



"ஷூர் சார்.... இப்போவே வேணுமா?"



"ம்....நோ.... நீ ஆபிஸ் முடிஞ்சு வர்றப்போ கொண்டு வா..."



"ஓகே சார்"



"ராத்திரி பத்து மணிக்கு நம்ம இடத்துக்கு மிஸ்டர்.கேசவன கூட்டிட்டு வா...."



"ஓகே சார்...."



"ஷார்ப் டென்... மறந்துடாத.... பய்" மொபைலை அனைத்து விட்டு உள்ளே வர ரூமில் யாருமே இல்லாதது கண்டு புருவம் சுருக்கியவன் வெளியே வந்து மேலிருந்து ஹாலை எட்டிப் பார்த்தான்.



முழுக் குடும்பமும் அங்கே தான் ஆஜராகி இருக்க நடுவில் அமர்ந்திருந்தாள் மனைவி....



"டைம் என்னாச்சு..." மணிக்கட்டை தூக்கி வாட்ச்சை பார்த்தவன் அது ஒன்று என காட்டவும் மகனை அழைத்து வர எண்ணி கீழிறங்கி வந்தான்.



"ராட்சஸி.... அதோ உன் அப்பாடாக்கர் புருஷனே வந்துட்டாரு.... போட்டு குடு போ" ஆரவ் நண்பியை வெறுப்பேற்ற



"தேவ்...." கத்தினாள் பெண்.



வெளியேறப் போனவன் சட்டென திரும்பி அவளருகே வந்தான்.



"என்ன அஷு?"



"இந்த தடியன உங்க கூட கூட்டிட்டு போங்க.... ரொம்ப கலாய்க்குறான் தேவ்.... எல்லோர் கிட்டவும் சொல்லிட்டேன் யாருமே என்ன கண்டுக்கவே இல்ல...." மூக்கை சுருக்கி அனைவரையும் மாட்டி விட்டு அவள் சொன்ன விதத்தில் மூச்சடைத்தது அவனுக்கு....



'கொல்றாளே..... சரியான இம்சை.... மனுஷன கொஞ்ச நேரம் சும்மா இருக்க விட மாட்டேங்குறா' தன்னை நினைத்தே புலம்பியவன்



"ஆரவ்.... சின்ன வேல இருக்கு.... வா" முறைத்தான்.



"தேவையா உனக்கு.... என் தேவ் அப்பாடாக்கர் தான்.... போடா கிழவா" வாய் பொத்தி சிரிக்க மண்டையில் கொட்டி விட்டு சென்றான் நண்பன்....



"விஜீஈஈஈஈ...."



"என்ன அஷ்வா எதுக்கு கத்தற?" சமையலறையிலிருந்து பதற்றமாய் வெளியே வந்தார் தாயார் விஜயலக்ஷ்மி....



"உன் மருமவன பாரு...." கணவன் செல்ல தாயை துணைக்கழைக்கவும் அவள் கூத்தை பார்த்து வாய் விட்டுச் சிரித்தான் ஜீவா.



"ஏன் என் மருமகனுங்களுக்கு என்ன?"



"அவனுங்களுக்கு என்ன நல்லா தான் இருக்கானுங்க.... என் உயிரு தான் போகுது"



"நீ அடுத்தவங்க உயிர வாங்குறல்ல... அதுக்காக ஆண்டவனே பாத்து அனுப்பி வெச்சிருக்கான் பாரு" காலை வாரி விட்டார்.



"நீ போ உனக்கு வேல இருக்கும்ல... ஆரா மா.... வா நாம தோட்டதுக்கு போலாம்" முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.



"அண்ணி அண்ணி.... எனக்கே உங்கள லவ் பண்ணனும்னு தோனுது.... அண்ணா நிலம ரொம்ப பாவம்.... சின்ன குழந்தையாட்டம் இருக்கீங்க.... வாங்க போலாம்...."



"நாங்களும் வர்றோம்" யாழ்...ரித்து....கயல்.... அபி அனைவரும் கோரஸாக கத்த சிரித்தவள் அவர்களையும் அழைத்துக் கொண்டு வெளியே செல்ல ஹாலில் அமர்ந்திருந்த ஜீவாவும் எழுந்து கொண்டான்.



சித்தார்த்...அஜய்... வருண்....ரகு.... அர்வி... அர்ஜுன்.... அனைவரும் வேலைக்கு சென்றிருக்க ஆண்கள் மூவரில் தேவும் ஆரவ்வும் வெளியே செல்லவே தானும் கிளம்பலாமென அறைக்குள் செல்ல அறைக்கதவை தட்டினாள் ஆராதனா.



"வா...ஆரா..."



"ஏன்டா தனியா இருக்க?"



"அப்பிடில்லாம் இல்லமா.... நான் ஹாஸ்பிடல் கிளம்ப போறேன்..."



"ஓஹ்....ஓகே..." திரும்பி நடந்தவளை நிறுத்தினான்.



"ஆரா...."



"என்னடா?"



"இல்ல நீ காதல பத்தி என்ன நினைக்குற?"



"காதலா....ஏன்டா திடீர்னு?"



"கேக்கனும்னு தோனிச்சு கேட்டேன்.... சொல்லனும்னு தோனினா சொல்லு..."



"ஏய் எதுக்கிப்போ இப்பிடி பேசுற.... நீ ரொம்ப வித்தியாசமா நடந்துக்குறடா"



"கேள்விக்கு பதில சொல்லுமா"



"ம்....எனக்கு அது மேல எல்லாம் நம்பிக்க இல்ல ஜீவா...."



'கிழிச்சுது போ'



"ஏன்?" என்றான் ஒரு மாதிரிக் குரலில்....



"ஆண்கள் மேல இருக்க நம்பிக்க எனக்கு சுத்தமா போச்சு.... இதுல என் கிட்ட எப்பிடி லவ்வ எதிர்பாக்குற?"



'உண்மைதானோ???'



"ஆப் கோர்ஸ்.... நல்லவங்க இருக்காங்க.... நா இல்லன்னு சொல்லல.... பட்.... எனக்குள்ள ஏதோ ஒன்னு யாரயும் நம்ப விடாம தடுக்குதுடா"



"அ..அப்போ... அண்ணா...ஆரு... அஜய் அப்பறம் நா.... எங்கள பத்தி என்ன நெனக்கிற?"



"அண்ணா ஆரு மேல நம்பிக்க....அது எப்போவுமே இருக்கும்டா.... அஜய் சார் காப்பாத்துனதால அவரு நல்லவரா தோன்றினாரு...."



"அப்போ நா?" இதயம் எகிறி வெளியே குதித்து விடும் போல் தான் இருந்தது அவனுக்கு.....



"நீ...."



"நான்?"



"உன் மேல நம்பிக்க இருக்குடா......பட் அதயும் தாண்டி உன் கிட்ட ஏதோ ஒரு பாதுகாப்ப நா உணர்ந்திருக்கேன்" மின்னி மறைந்த ஷாப்பிங் மால் செய்கையில் புன்னகைத்துக் கொண்டாள்.



ஹப்பாடாவென மூச்சை நிம்மதியாய் விட்டாலும் அவள் பதில் அவனுக்கு திருப்தியை தரவே இல்லை....



இன்னும் வேறு ஏதோ ஒன்றை எதிர்பார்தது மனது...



"ஓஹ்.... தேங்க்ஸ்...." நீண்ட நேரத்திற்கு பிறகு தான் பதிலை சொன்னான்.



"ஏன் திடீர்னு கேட்ட?"



"சும்மா தான்...."



"நம்புறா மாதிரி இல்லையே.... யாரயாவது லவ் பண்றியா என்ன?"



"ஆமா...."



"வாவ்..... பொண்ணு எப்பிடிடா இருப்பா?"



'இவளுக்கு பீலிங்கே இல்லயா....நா லவ் பண்றன்னு சொல்றேன்.... கொஞ்சம் கூட வருத்தமே இல்லாம பொண்ணு யாருன்னு கேக்குறா'



"பொண்ணு மாதிரி இருப்பா...." கடுப்பாகி விட்டான்.



"அத ஏன்டா இவ்வளவு டெர்ரர்ரா சொல்ற?"



"வேற எப்பிடி?"



"தேவதை மாதிரி இருப்பான்னு பீலிங்கா சொல்லனும்டா"



'நீ பீலிங்க பத்தி எனக்கு க்ளாஸ் எடுக்குற.....எல்லாம் என் நேரம்'



"அதெல்லாம் சொல்லிக்கலாம் நீ கிளம்பு...."



"இரு இருடா.... பொண்ணு போட்டோ காட்டு"



"என் கிட்ட இல்ல...."
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"என் கிட்ட இல்ல...."



"என்கிட்ட இந்த டகால்டி வேல எல்லாம் காட்டாம ஒழுங்கா போட்டோவ காட்டு"



"காட்டுவேன் ஆனா இப்போ இல்ல...."



"பின்ன?"



"அவளுக்கும் என் மேல லவ் இருக்கான்னு தெரிஞ்ச அடுத்த நொடி காட்டுவேன்...."



"அவளுக்கு லவ் வரும் வர நா எதுக்குடா வெயிட் பண்ணனும்.... எனக்கு காட்டு"



'நீதானேடி லூசு வெயிட் பண்ணனும் ஏன்னா பொண்ணே நீதானே'



"அது எல்லாம் அப்பிடி தான்.... என்னால இப்போ காட்ட முடியாது"



"என்ன லாஜிக்கோ.... சரி சரி காட்டாத.... எப்பிடி இருப்பான்னாவது சொல்லுடா"



"அதான் சைன்னேனே.... பொண்ணு மாதிரி இருப்பான்னு"



"அது எனக்கு புரில.... வர்ணிச்சு சொல்லு...."



"வர்ணிக்கனுமா?" கண்களில் தன் முழுக் காதலையும் தேக்கி அவள் கண் பார்த்து அவன் கேட்ட விதத்தில் அவனுள் தொலைந்து போனாள் பாவை....



"ம்...." அவளையறியாமலேயே அவள் தலையாட அவளை நெருங்கி நின்றவன்



"அவ அழகுக்கு அழகு சேக்குறது அவளோட கண்ணு தான்....." அவள் கண்களை வட்டமாய் அளவெடுத்துக் கூற உள்ளுக்குள் படபடப்பாய் உணர்ந்தாள் பேதை....



"அப்பறம்...."



"அவ முகம் நிலாவ போவ ரொம்ப ப்ரைட்டா....." அவள் முகத்தை கோடிழுக்க உறைந்து போனாள்.



"ப்...ப்...ப்ரைட்டா....?"



"ப்ரைட்டா தேவதய மிஞ்சுற அளவுக்கு இருக்கும்"உதட்டை குவித்து அவள் முகத்தில் ஊதியவன் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு சட்டென விலக திடுக்கிட்டு கலைந்தவள் அவசரமாக வெளியேறி விட்டாள்.



'கடவுளே..... இவள லவ் பண்ண வெக்கிறதுக்குள்ள நா லவ்வ உளறிடுவேன் போல இருக்கே' அண்ணார்ந்து பார்த்து வாய் விட்டுப் புலம்பியவன் தானும் வெளியேறினான்.



***



"எங்கணா போறோம்..... என்ன வேலை?" லாவகமாய் காரை ஓட்டிக் கொண்டிருந்த அண்ணனிடம் கேட்டான் ஆரவ்.



"யாதுவ ஸ்கூல்ல இருந்து அழச்சிட்டு வர"



"நா எதுக்கு?"



"என் பொண்டாட்டி சொன்னா செஞ்சேன்"



"என்னாதூ.... அந்த ராட்சஸி சொன்னாங்குறதுக்காக என்ன உங்க கூட கூட்டிட்டு வந்தீங்களா?"



"டெபனிட்லி"



"அடப்பாவி.... உனக்கு ஏன் என் மேல இவ்வளவு காண்டு" திரும்பி கண்ணடித்தவன் பாடசாலை வளாகத்திற்குள் நுழைந்தான்.



"ஆரு...."



"என்ன?" முகத்தை உர்ரென வைத்துக் கொண்டு பாய்ந்தான்.



"நீ யாதுவ கூட்டி கிட்டு வந்துடு.... எனக்கு ப்ரின்ஸிபால் கிட்ட பேச வேண்டி இருக்கு நா அந்த வேலய முடிச்சிட்டு வந்தட்றேன்"



"ம்..." தலையாட்டி விட்டு இறங்கிச் செல்ல தானும் இறங்கி நடந்தான் ரிஷி.



.....



"எஸ்கியூஸ் மீ"



"கம் இன்...."



....



"ஹல்லோ மிஸ்டர்.மாறன்...." கை குழுக்கியவர்



"ஹேவ் அ ஸீட்" உட்காருமாறு கூறி விட்டு தானும் அமர்ந்தார்.



"என்ன சார் இந்த பக்கம்?"



"யாதவ் பத்தி பேசணும்"



"ஓஹ் ஓகே தாராளமா...."



"ம்.... ஏதாவது கம்ப்ளைன்ட் வருதா அவன பத்தி...."



"அன்னக்கி அப்பறம் இல்ல மாறன்.... மேபீ உங்க ஒய்ப் அவனுக்கு சொல்லி இருப்பாங்க" அவர் சிரிக்க



"எப்போ?" என்றான் புரியாமல்....



"அன்னக்கி ஒரு பையனுக்கு அடிச்சுட்டான்.... கூப்டு கண்டிச்சோம்.... அஷ்வினி மேம் தான் வந்து அழச்சிட்டு போனாங்க"



"ஓகே ஓகே....சப்ஜெக்ட்ஸ்ல எல்லாம் எப்பிடி இருக்கான்?"



"பென்டாஸ்டிக்....."



"குட்.... அப்போ நா கிளம்புறேன்...." விடை பெற்று வெளியே வர மொபைல் அலறியது.



"எஸ் கதிர்...."



"சார்.... ***கம்பெனி அர்ஜன்ட் மீட்டிங் அர்ரேன்ஜ் பண்ண கேட்டிருக்காங்க"



"வாட்.... வாட்ஸ் த ப்ராப்ளம்?"



"தெரில சார்...."



"சரி ஓகே சொல்லிடு" கட் பண்ணியவனின் வலக்கை நடு விரல் தன் புருவத்தை தானாய் நீவியது.



***



ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ்.....



கதிரிடம் காட்ட வேண்டிய ஒரு பைலை எடுத்துக் கொண்டு அவன் கேபினுக்கு வந்தாள் மது.



"எஸ்கியூஸ் மீ சார்"



'மறுபடியும் இவளா' மனதிற்குள் அலறியவன்



"கம் இன்" என்றான் யோசனையாய்...



"சார் இந்த டாகுமெண்ட்ட செக் பண்ணிட்டு மாறன் சார் கிட்ட கொடுங்க" காரியமே கண்ணாய் கோப்பை நீட்ட எடுத்து வைத்தான்.



"எனிதிங் எல்ஸ் மது?"



"நத்திங் சார்.... பட் நீங்க ஏதாவது எதிர்பாக்குறீங்களா?"



"வாட் ரப்பிஷ்....?"



"சாதாரண கேள்விக்கு ஏன் இப்பிடி எகிர்றீங்க சார்?"



"அது என் இஷ்டம்"



"அது எப்பிடி உங்க இஷ்டமாகும் சார்?"



"மது....ப்ளீஸ் போறீங்களா.... எனக்கு வேல இருக்கு"



"இது என்ன சார் அநியாயமா இருக்கு.... நா என்னமோ வெலை வெட்டி இல்லாம உங்க கிட்ட வந்து வம்பு பண்றா மாதிரி சொல்றீங்க?"



"இல்லையா பின்ன?"



"இல்ல.... நா உங்க கிட்ட பைல கொடுக்க வந்தேன்.... பட் நீங்க தான் நிக்க வெச்சி கேள்வி கேட்டுகிட்ருக்கீங்க"



"ஓ...காட்.... சரி என் மேல தான் தப்பு போமா...." கையெடுத்து கும்பிட்டே விட சிரித்தவள் அவன் பார்க்கவும் சாதாரணமாக காட்டிக் கொண்டாள்.



"ஒரு பொசிஷன்ல இருக்கவங்க இப்பிடி தான் தன்னை பாக்க வர்ற ஸ்டாப் கிட்ட நடந்துக்குவாங்களா சார்.... மாறன் சார் கிட்ட இத பத்தி பேசியே ஆகணும்"



"என்ன தான்டி உன் பிரச்சனை?" கடுப்பில் 'டி' போட வேண்டுமென்றே அதற்கும் குதித்தாள்.



"சார் டி போட்டு பேசற வேலை வெச்சுக்காதிங்க"



"நா எப்போ அப்பிடி சொன்னேன்....?"



"இப்போ தான்...."



"நா அப்பிடி சொல்லல"



"அவ்வா.... கடவுளே...."



"சரி சொல்லி இருந்தா சாரி...."



"இட்ஸ் ஓகே"



"நீங்க கிளம்புறதுன்னா கிளம்புங்க.... இல்லன்னா இங்கேயே இருங்க"



"சார்.... அண்டீஸண்டா பேசாதீங்க"



"நா என்ன பேசினேன்?"



"உங்க கூட இருக்க சொல்றீங்க... நா கல்யாணம் ஆக வேண்டிய பொண்ணு...."



"அதுக்கு....?"



"உங்க கூட இருக்கறத யாராவது பாத்துட்டாங்கன்னா என்ன யாரு கல்யாணம் பண்ணிப்பா?"



'எவனும் பண்ணிக்க மாட்டான்.... சரியான வாயாடி'



"இப்போ என்ன தான் பண்ணணும்?"



"ஒன்னும் தேவயில்ல.... நான் கிளம்புறேன்" அவள் வெளியேற தலையை தாங்கிப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான் கதிரவன்.



***



"ஆரு.... எனக்கு அர்ஜன்ட் மீட்டிங் இருக்கு.... ராத்திரி வர லேட் ஆகிடும்... காத்துட்ருக்காம அஷுவ தூங்க சொல்லு" கேட்டின் முன்னால் வண்டியை நிறுத்தியவன் உள்ளே செல்லாது தம்பிக்கு கட்டளை இட்டான்.



"டாட் எங்க போக போறீங்க?"



"எனக்கு ஒர்க் இருக்குடா கண்ணா.... அப்பா வந்துடுவேன்.... அம்மாக்கு தொந்தரவு கொடுக்காம சமத்தா இருக்கணும் சரியா?"



"ஓகே டாட்...." ஆரவ்வின் மடியில் இருந்த படி தலையாட்டிய மகனின் தலை முடியை கலைத்தவன் இருவரையும் இறக்கி விட்டு காரை எடுத்துக்கொண்டு சென்று விட்டான்.



......



ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ்.....



மீட்டிங்கை முடித்து விட்டு மீண்டும் ஆபிஸிற்கே திரும்பினான் ரிஷி.



தலை விண்விண்னென தெறிக்க நெற்றிப் பொட்டை தட்டியவாறே கேபினுக்குள் நுழைந்தவன் பின் நுழைந்தான் கதிர்.



"சார் தல வலிக்குதா?"



"எஸ் கதிர்.... டேப்லேட் போட்டா சரியாகிடும்.... அந்த ட்ரால இருக்கு.... எடுத்து கொடு" அதற்காகவே காத்திருந்தவன் போல் அவசரமாக சென்று எடுத்து வந்தவன் தண்ணீர் க்ளாஸுடன் நீட்ட வாங்கி குடித்து விட்டு கண்களை மூடி சாய்ந்து கொண்டான்.



"சார் என்ன பண்ணுது?"



"நத்திங் டா.... டென்ஷன்னால தான்.... நீ போ...." தயங்கித் தயங்கி சென்றவன் டாக்டர் அர்ஜுனை வலுக்கட்டாயமாக வரவழைத்து விட்டான்.



.....



"எஸ்கியூஸ் மீ"



'டாக்டர் அர்ஜுன்??' புருவம் சுருக்கி யோசித்து விட்டு



"கம் இன்..." என்றான் நேராக அமர்ந்து....



"உட்காருங்க அங்கிள்"



....



"ஏதாவது ப்ராளமா டாக்டர்?"



"மாறா தல வலி எப்பிடி இருக்கு?"



"தல வலியா.... உங்களுக்கு எப்..." நிறுத்து விட்டு கதிரில் பார்வையை ஒரு நிமிடம் நிலைக்க விட்டவன் மீண்டும் டாக்டரிடம் திரும்பினான்.



"ஒர்க் டென்ஷன் அங்கிள்.... மத்தபடி பயப்பட்றா மாறி இல்ல...."



"குட்.... டேப்லேட் போட்டியா?"



"எஸ் அங்கிள்....."



"ஓவரா ஸ்ட்ரைன் பண்ணிக்காத மாறா.... ஏற்கனவே தலைல அடி பட்டு இருக்கறதுனால ஆபத்தாயிடும்"



"ஓகே அங்கிள் நா பாத்துக்குறேன்"



"அஷ்வினி?"



"ஆல்ரைட் டாக்டர்" எங்கிருந்து தான் அத்தனை கனிவு வந்ததோ....



அவளை பற்றி பேசும் போது மட்டும் முகம் என்றுமே இல்லாதவாறு மென்மையை தத்தெடுத்துக் கொள்ளும் காளைக்கு....



"ஏதாவது ப்ராப்ளம்னா கால் பண்ணு.... நா கிளம்புறேன்...." அவருடனேயே வெளியேறப் போன கதிரை நிறுத்தினான் ரிஷி.



"கதிர்.... கம் ஹியர்..."



"சார்...."



"ஏன் இப்போ டாக்டர் அர்ஜுன வரவழைச்ச?"



"அஷ்வினி மேடமோட ஸ்ட்ரிக் ஆர்டர் சார்"



"வாட்.... அவ எப்போடா உன் கிட்ட பேசினா?"



"அன்னக்கி ஆக்ஸிடன்ட் ஆச்சுல.... அந்த நாள் தான்"



"நான் உனக்கு பாஸா..... இல்ல அவளா..... என் கிட்ட இருந்து கிட்டு அவளுக்கான ஸ்பையா இருக்கியா நீ?" கோபமாய் கேட்டாலும் கண்கள் பெருமிதத்தில் மின்ன உதடுகள் சிரிப்பில் துடித்தன.



"சாரி சார்.... நீங்க பாஸ்னாலும் உங்கள கேர் பண்ற அவங்க பேச்சுக்கு தான் நான் மதிப்பு கொடுப்பேன்"



"அர்ரே.... தங்கச்சி பாசமா.. சரி நீ கிளம்பு.... ஹாங்... காலைல கொண்டு வர சொன்ன பைல்ஸ் எங்கே?"



"அது என் கேபின்ல சார்...."



"அது அங்கேயே இருக்கட்டும்.... நா வீட்டுக்கு கிளம்புறேன்.... பத்து மணிக்கு நம்ம இடத்துக்கு மிஸ்டர்.கேசவனோட வந்துடு"



"ஷூர் சார்" சரியென எழுந்தவன் சுழல் நாற்காலியில் போட்டிருந்த கோர்ட்டை எடுத்து போட்டவாறு வெளியேறினான்.



***



"ஏன்டா சாப்புடல?" சோபாவில் அமர்ந்திருந்த கணவனிடம் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தாள் கயல்விழி.



"பசிக்கல" பேச்சை கத்தரித்து விட்டு முகத்தை திருப்பினான்.



அன்று அஷ்வியுடன் இணைந்து மதுவிற்கு சப்போர்ட் பண்ணி பேசியதிலிருந்து இப்படித் தான் முறுக்கிக் கொள்கிறான்....



அனைவர் முன்னிலையிலும் நன்றாக இருப்பது போல் நன்றாகவே நடிப்பான்....



ஏதாவது கேட்க வந்தாலும் பேச்சை கத்தரித்து விட்டு எழுந்து செல்பவளை என்னவென்று தான் சமாதானப்படுத்த???



பெரு மூச்சுடன் அவனருகில் அமர்ந்து தோளில் கைவைக்க படக்கென தட்டி விட்டான்.



அவளுக்கும் தெரியும் அவனது பொய்க் கோபம்....



இருந்தும் அவளே வந்து சமாதானப்படுத்த வேண்டுமென்ற பிடிவாதம் அதிகமாய்....



"ஆரு ஏன்டா பேச மாட்டேங்குற?"



"...."



"சாரிடா.... நா சும்மா விளையாட்டுக்கு தானே பண்ணேன்?"



"அதுக்காக எல்லொருக்கும் விட்டு கொடுப்பியா என்னை.. எனக்கு பசியில்ல... போ...."



"என் தங்கம்ல.... மன்னிச்சிடுடா" கண்ணத்தில் சட்டென முத்தம் வைக்க தேய்த்து விட்டு முறைத்தான்.



"எச்சில் படுத்தாத"



"என் முத்தம் ஒனக்கு எச்சில் படுத்துறா மாதிரி இருக்கா?"



"ஆமா...."



"போடா...."



"....."



"ஆரூஊஊஊ" முள்ளங்கைக்குள் தன் கையை நுழைத்து அவனை உலுக்கினாள்.



"விடு"



"ஏன்டா கோபம் காட்ற....ப்ளீஸ் பேசு ஆரு... ஐ அம் சாரிடா"



"...."



"பேசமாட்டியா... டேய்....ஏதாவது சொல்லேன்?"



"...."



"ஆரூ...." சிணுங்கி விட்டு மீண்டும் இதழ் பதிக்க இம்முறை எதுவும் செய்யாமல் அமர்ந்திருந்தான்.



"டேய்...." மீண்டும் உலுக்கினாள்.



"நா உன்ன விட்டு கொடுப்பேனாடா... அப்பிடி இருந்தா உன் லவ்வே தேவையில்லன்னு சொல்லி இருக்க மாட்டேனா... ஏன்டா இப்பிடி இருக்க....பேசு ஆரு" அவ்வளவு கெஞ்சியும் அவன் அசைந்து கொடுக்காததில் கண்கள் கலங்கி விட சட்டென எழுந்தவளின் கை பிடித்து இழுக்க அவன் மடியிலேயே வந்து விழுந்தாள் பெண்.....
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அழறியா....?" கேட்டுக் கொண்டே கண்ணீரை சிரிப்புடன் துடைத்து விட அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் மனைவி.



"என்ன இப்போல்லாம் கண்டுக்கறதே இல்ல அம்மு நீ.... இப்பிடி கோபமா இருந்தா தான் அட்லீஸ் கண்ணத்துலயாவது முத்தம் கிடைக்குது... இல்லன்னா உன் குடும்பத்...." அவனை அடுத்த வார்த்தை பேச விடாமல் அவன் டீ-ஷர்ட்டை இழுத்து அவன் இதழ்களுக்குள் தன்னிதழ்களை பொருத்த தாமாக மூடிக் கொண்டன இரண்டு ஜோடிக் கண்களும்!!!



***



"சாப்டியா கண்ணம்மா?" மகனை நெஞ்சில் போட்டு தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தவளிடம் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தான் ரிஷி.



"வந்துட்டீங்களா தேவ்.... அந்த தடியன் நீங்க வர மாட்டேன்னு சொன்னான்.... இப்போ தலை வலி எப்பிடி இருக்கு.... டேப்லேட் போட்டீங்களா.... சாப்டீங்களா.... இப்போ பரவாயில்லயா....???" மகனை கிடத்தியவள் அவசரமாக அவனருகே வந்து நெற்றியை தொட்டுப் பார்த்துக் கொண்டே கேள்விகளை அடுக்கினாள்.



"கண்ணம்மா அம் ஆல்ரைட் டா.... மெதுவா கேளு" சிரித்தான்.



"உங்களுக்கு எப்போ பாரு சிரிப்பா.... சீரியஸ்னஸ்ஸுங்கறதே இல்ல.... நா எவ்வளவு பயந்தேன் தெரியுமா?"



"ஆல்ரைட் ஆல்ரைட்.... சிரிக்கல போதுமா...?"



"அஃது"



"இரு நா ப்ரஷப்பாகிட்டு வந்தட்றேன்"



"ம்...."



.....



அவன் வெளியே வரும் போது காரிருலில் தெரிந்த நிலவை அண்ணார்ந்து பார்த்தவாறு பால்கனியில் நின்றிருந்தாள் பாவை....



அவளை நெருங்கி பின்னாலிருந்து அணைத்தவன் அவள் தலையில் நாடி குற்றி தானும் அண்ணார்ந்து பார்த்தான்.



"தேவ்...."



"ம்...."



"யாதவ்ங்குறது எனக்கு பிடிச்ச பேருன்னு உங்களுக்கு எப்பிடி தெரியும்?"



"ஏன்?"



"நம்ம குழந்தைக்கு யாதவ்வுன்னு நீங்க வெச்சிருப்பீங்கன்னு எதிர் பாக்கவே இல்ல தேவ்...."



"...."



"அன்னக்கி லண்டன் வந்து உங்கள எப்பிடி கண்டு பிடிச்சன்னு நினைக்குறீங்க?"



"கதிர்...."



"நோ.... அண்ணா இருக்காகங்குறதே தெரியாது"



"பின்ன?"



"கவி தான் நீங்களும் யாதவ்வும் இருக்க போட்டோ அனுப்பி வெச்சா....போட்டோல ஸ்கூல் பேரு தூரத்துல தெரியுறா மாதிரி ஷூட் ஆகி இருந்துது.... அத பாத்து ஸ்கூலுக்கு போய் விசாரிச்சேன்.. பட் குழந்தை பேரு யாதவ்வா இருக்கும்னு எதிர்பாக்கல... சொல்லுங்க எப்பிடி தெரியும்?"



"உன் பழைய டயரி ஒன்னுல இருந்துது"



"டயரியா.... உங்களுக்கு எப்பிடி?"



"கப்போர்ட்ல இருந்தது.... ட்ரஸ் பேக் பண்ணும் போது தவறுதலா மாட்டிருச்சு....லண்டன் கிளம்புற அவசரத்துல அதயும் தூக்கி போட்டுட்டு பொய்ட்டேன்"



"நா உங்கள ரொம்ப ஹேர்ட் பண்ணிட்டேன்ல தேவ்?"



"டெபனிட்லி நாட்னு தான் சொல்லுவேன் கண்ணம்மா.... ஏன்னா உன்ன நா அதை விட அதிகமா ஹேர்ட் பண்ணி இருக்கேன் சாரிடா"



"நான் தான் சாரி கேக்கணும் தேவ்.... அன்னக்கி கூட சாரி கேக்கவே இல்ல"



"அந்த நாள விடு அஷு ப்ளீஸ்" அவன் அணைப்பு இறுகலில் அவன் மனம் புரிய அமைதியானாள் பெண்.



"டைமாச்சு.... தூங்கலாமா....?"



"உங்களுக்கு வேலை இருக்கு.... வெளில கிளம்ப போறிங்களா?" அவன் கையை எடுத்து விட்டு அவன் புறம் திரும்பினாள் காரிகை....



அவள் கழுத்தில் தன் கைகளை மாலையாய் கோர்த்தவன்



"அர்ஜன்ட் ஒர்க்டா.... பண்ணிரண்டு மணிக்கு முன்னாடி வீட்ல இருப்பேன்" நெற்றி முட்டினான்.



"...."



"ப்ளீஸ்...."



"கண்டிப்பா வந்துடுவீங்கல்ல?"



"கண்டிப்பாடா?" அவள் இதழில் இலேசாக முத்தம் வைத்தவன் அவளை உறங்க வைத்து போர்த்தி விட்டே வெளியேறினான்.



***



"ஐ அம் தேவா..."



"சொல்லு தேவா?" மறுபுறத்திலிருந்த அஜய்யின் குரல் காரின் புளூ டூத் வழியாக கேட்டது.



"எங்க இருக்க?"



"ஆபிஸ்..."



"ஓகே தென்.... நான் உன் ஆபிஸ் வர்றேன்..."



"பட்...."



"வந்து பேசிக்கலாம்" காலை கட் பண்ணியவனின் கைகளில் பறந்தது ரோல்ஸ் ராய்ஸ்....



.....



அவனுக்காகவே ஆபிஸ் முன் காத்திருந்தான் அஜய்....



சிறிது நேரத்தில் வழுக்கிக் கொண்டு வந்து நின்ற காரில் ஏற நேரே அவன் இடத்திற்கு காரை விட்டான் ரிஷி.



"எனி ப்ராப்ளம்?"



"நத்திங் அஜய்.... சின்ன க்ளாரிபிகேஷன்....மிஸ்டர்.கேசவன வர சொல்லி இருக்கேன்...."



"கேசவன்?"



"ராமோட அப்பா"



"ஓஹ்...பட் நா எதுக்கு?"



"சும்மா தான்...."



"காரணமில்லாம ஒரு விஷயத்துல இறங்க மாட்டியே நீ?" தன் முத்துப் பற்கள் தெரிய சிரித்தவன் எதுவும் பேசாமல் அமைதியானான்.



......



வெளியே காரை நிறுத்தி விட்டு அஜய்யுடன் உள்ளே நுழைந்தான் ரிஷி.



"சார்.... அங்க இருக்காரு மிஸ்டர்.கேசவன்...."



"ம்..... நா ரெடி பண்ண சொன்னத பண்ணிட்டியா?"



"எஸ் சார் ரெடி" அவர்கள் பேசுவது என்ன விடயம் என புரியாவிட்டாலும் ஏதோ முக்கியம் என்று மட்டும் புரிந்தது அஜய்க்கு....



"வா அஜய்" அவன் முன் செல்ல பின் தொடர்ந்தனர் இருவரும்....



.....



காலுக்கு மேல் கால் போட்டு அலட்சியமாய் அமர்ந்திருந்தார் கேசவன்....



ராமின் தந்தை....



அவரை பார்த்து ஏளனச் சிரிப்பொன்றை உதிர்த்தவன் எதுவும் பேசாமல் தானும் அமர்ந்தான்.



"வெல்கம் மிஸ்டர்.மாறன்...." அவர் எள்ளலில் எதுவும் பேசாமல் சிரித்தான்.



"வெல்..... மிஸ்டர்.கேசவன்..... நேரடியாவே விஷயத்துக்கு வர்றேன்.... உங்க பையன... நான்.. கொல்லல...."



"அப்பிடியா?" என கேட்டவரை சட்டை செய்யாது கதிருக்கு கண் காட்ட தன் கரத்தில் வைத்திருந்த பெண்ட்ரைவ்வை ஏற்கனவே ஏற்பாடு செய்து வைத்திருந்த அந்த பெரிய எல்.இ.டி டீவியின் ஓரத்தில் இருந்த அதன் இடத்தில் குற்ற படமாக விரிந்தது கொலை ஆதார வீடியோ.....



இராமநாதன் தன் கையாலேயே கொலை செய்யும் வீடியோ அதில் ஓட மேடையிலிருந்த அவரது கால் தானாக கீழே இறங்க இவனது கால் மேலே ஏறியது.



இதில் அதிர்ந்து போனதென்னவோ அஜய் தான்!!!



தன் தந்தையா???



அவருக்குத் தான் பிறந்தோமா???



உடல் கூசியது அவனுக்கு.....



மீண்டும் தன் பீ.ஏ விற்கு கண் காட்ட அந்த திரை மூடப்படவும் பேசினான் ரிஷி.



"என்ன மிஸ்டர்.கேசவன்.... என்ன ஆச்சு?"



"...."



"நா உன் பையன கொல்லல.... அதுக்கான அவஷியம் வர்ல.... சப்போஸ் வந்திருந்துதுன்னா இந்த வீடியோல நான் தான் இருந்திருப்பேன்" நான் தான் கொலையாளியாக இருப்பேன் என சொல்லும் அவன் தைரியத்தை மெச்சவா???



அமைதியாகவே அமர்ந்திருந்தார்.



"உங்க புள்ளய கொல பண்ணவன் இப்போ உயிரோட கூட இல்லயே..... என்ன பண்ணலாம்... ஜஸ்ட் ஒரு க்ளாரிபிகேஷனுக்காக தான் இந்த டீல்..... புரிஞ்சிருக்கும்னு நெனக்கிறேன்.... இதுக்கு மேல என் குடும்பத்து மேல உன் நிழல் கூட பட கூடாது....." முதல் வார்த்தைகளில் இருந்த அமைதி கடைசி வார்த்தைகளில் இரும்பை விட கடினமா மாறி இருக்க பயந்து போனார் கேசவன்....



"உங்க வழியில நான் இனிமே வர மாட்டேன் மிஸ்டர்.மாறன்.... எனிவேய்ஸ் சாரி" உண்மையாகவே உணர்ந்து கேட்க மெலிதாய் சிரித்தவன் தலையசைக்க அவர் வெளியேறவே அவ்வளவு நேரம் அதிர்ந்து நின்ற அஜய்யை பார்த்து எழுந்தான் ரிஷி.



"அஜய்...." தோள் தொட இன்னதென்று வர்ணிக்க முடியாத உணர்வோடு திரும்பி தன் மச்சானை பார்த்தான்.



"உனக்கு என் மேல இந்த விஷயத்துல டவுட் இருக்கும்னு தெரியும்.... அத க்ளியர் பண்ண தான் உன்னயும் அழச்சிட்டு வந்தேன்.... ஹேர்ட் பண்ண நினைக்கல...." மன்னிப்பு கேட்க விழையவில்லை அவன்....



"இட்ஸ் ஓகே தேவா...." சிரிக்க முயன்றான்....



முடியவில்லை.....



உள்ளத்து வலி கண்களில் அப்பட்டமாக வழிந்து கொண்டிருந்தது.



"அஜய்...உன் கிட்ட சில விஷயம் பேசனும்" இன்னும் என்ன என்று தான் பார்த்தான்.



அவன் மன உணர்வை புரிந்து கொண்டவன் தோள் பற்றி அமர வைத்து தண்ணீர் க்ளாஸை நீட்ட அதை வாங்கி மடமடவென குடித்து விட்டு கேள் என்பது போல் முகம் பார்த்தான்.



அஜய்யிடம் ரிஷிக்கு பிடித்த விடயம்....



சூழ்நிலைகளை சட்டென தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவான்.



எப்போதும் போல் உள்ளுக்குள் மெலிதாய் சிரித்தவன் அவன் கேள்வியை துவங்க அவனை கூர்ந்து நோக்கினான் அஜய்.



"ராம் யாரு அஜய்?"



"ராம்???"



"அஸ் அ பிஸ்னஸ் மேனா அவன எனக்கு தெரியும்...ஐ மீன் ராமுக்கும் அஷுக்கும் என்ன சம்பந்தம்?" தன்னையே சந்தேகப் படுவது கூசியது கணவன் உள்ளம்...



"இத அஷ்வி கிட்ட கேட்கலாமே தேவா?"



"அஷு கிட்ட இத பத்தி என்னால பேச முடியாது அஜய்.... இந்த விஷயம் தெரியாம ஒரு தடவ அவள காயப்படுத்தி இருக்கேன்.... மறுபடி அவள ஹேர்ட் பண்ண முடியாது... அப் கோர்ஸ்.... இத பத்தின அவஷியம் என்ன வந்துதுன்னு நீ யோசிக்கலாம்.... பட் பின்னால இத வெச்சி நா அவள மறுபடி ஒரு தடவ காயப்படுத்த கூடாதுன்னு நெனக்கிறேன்.... அவ பாஸ்ட் எதுவா இருந்தாலும் அவ எப்போவுமே எனக்கு மட்டும் தான் பொண்டாட்டி.... அத மட்டும் நா உறுதியா சொல்லுவேன்" அவன் கண்களில் தெரிந்த காதலில் அஜய்யின் உதடுகள் மெலிதாய் புன்னகைத்தன.



"ராமுக்கும் அஷ்விக்கும் உங்களுக்கு முன்னாடி எங்கேஜ்மன்ட் ஆச்சு... ராம பத்தி முதல்ல அவளுக்கு முழுசா கூட தெரியாது தேவா.... நா முதல் முதலா தொழிலுக்கு வந்தப்போ அவன் கம்பெனி கூட ஒரு டீல் ஓகே ஆகி இருந்துது.....அடிக்கடி சந்திச்சதால வீட்டு ஆளுங்க கூடவும் அவன் பழக்கம் இருந்துது....அப்போ தான் அஷ்விய கண்டு தான் காதலிக்கிறதா சொன்னான்....அப்... க்கும்.... இராமநாதன் விசாரிச்ச வரைல எந்த கம்ப்ளயினும் அவன் பேருல இருக்காததுனால உடனே ஒத்துகிட்டாங்க....பட் அஷ்விக்கு முதல்ல இருந்தே அவன பிடிக்கல.... அவன் பார்வையே சரி இல்லணா.... அவன எனக்கு புடிக்கலன்னு வந்து சொன்னா....என்னால அவரு (அப்பா ) கிட்ட எதிர்த்து பேச முடியாததால நானே ரகசியமா அவன வாட்ச் பண்ண ஆரம்பிச்சேன்....."



"...."



"அப்போ அஷ்வி காலேஜ் போய் கிட்டு இருந்தா....ஏதோ ஒரு பங்ஷன் முடிஞ்சு வர லேட் ஆகி இருக்கு.... இவன் தான் வெளில நின்னுருக்கான்....அவ அவன பாக்காத மாதிரி கடந்து போக நினைக்க அவன் கைய பிடிச்சு வலுக்கட்டாயமா இழுத்திருக்கான்.... இவளும் போராடி அவன் கிட்ட இருந்து தப்பிச்சு வந்துட்டா....பட் ராத்திரி முழுக்க ஜுரம்.... நா வேலை விஷயமா வெளில போயி இருந்தப்போ அடுத்த நாளே அவரு எங்கேஜ்மன்ட கட்டாயப்படுத்தி பண்ணி வெச்சிருக்காரு...."



"...."



"அந்த போட்டோ தான் பாத்திருப்பீங்க....நா வீட்டுக்கு வர என்கிட்ட சொல்லி அழுதா.... நானும் கல்யாணத்த நிறுத்த இன்னும் அதிகமா வாட்ச் பண்ணேன்.... கல்யாணத்துக்கு இரண்டு நாள் முன்னாடி ராத்திரி ரொம்ப அழுதா.... என் கிட்ட வந்து இந்த கல்யாணம் நடந்தா நா செத்துடுவேன்னு கூட சொன்னா....நா அவரு (அப்பா) கிட்ட போயி மறுபடி பேசினேன்....அவரு ஒத்துக்கவே இல்ல...சீர் எதுவும் இல்லாம உங்க பொண்ணு மட்டுமே போதுங்குற மாப்பிள்ள யாருக்கு கிடைக்கும்னு பேசி கிட்டே இருந்தவரு அவளுக்கு இதுல விருப்பம் இருக்கா இல்லயான்னு கேட்கவே இல்ல....அடுத்த நாள் காலேஜ் முடிஞ்சு காபி ஷாப்ல மீட் பண்ணி அவன் கிட்ட பேச போறதா சொன்னவ நா வர்றேன்னு சொல்லியும் கேக்காம பொய்ட்டா.... காலேஜ் முடிஞ்சு நான் அவளுக்கு தெரியாம காபி ஷாப்புக்கு போனேன்....அவன் கெஞ்சறதும் இவ மறுக்குறதும் எனக்கு தெளிவா புரிஞ்சாலும் அவ கிட்ட போக முடியாத நிலை..."



"...."



"அப்போ ராத்திரி இந்த ஹோட்டலுக்கு மறுபடி வா.... அப்போ இந்த கல்யாணத்த நா நிறுத்துறேன்னு அவன் சொல்ல இந்த லூசும் எதுவும் யோசிக்காம தலையாட்ட எனக்கு தூக்கி போட்டுடிச்சு....ராத்திரி அவ போறதுகுள்ள நா போக முயற்சிக்க ஹோட்டல் முழுசா அவன் புக் பண்ணி இருக்கறதா சொன்னாங்க....பின் வழியா நுழஞ்சி ஹோட்டலுக்குள்ள போய்ட்டேன்....அவ பயத்துல உள்ள வர்றது எனக்கு புரிஞ்சிச்சு....அவ வர அவ எதிர்பாக்கா நேரத்துல அவன் தப்பா நடக்க முற்சிக்க நான் தான் போயி காப்பாத்துனேன்... அதுக்கப்பறம் கல்யாணம் நின்னுடுச்சு.... பட் அவளுக்கு அவன கண்டாலே நடுக்கம்....கல்யாணமே வேணாம்னு கிட்டு இருந்தவ உங்களுக்கு எப்பிடி ஓகே சொன்னான்னு எனக்கு ரியலி ஷாக் தான் தேவா" மெலிதாய் புன்னகைத்தவன் அவன் முகத்தை ஏறிட அதுவோ கோபத்தில் சிவந்து இறுகிப் போய் இருந்துது.



"கூல் தேவா.... அதான் நா காப்பாத்திட்டேன்ல....?"



"தேங்க்ஸ்...."



"தேவா....அவ என்னோட தங்கச்சி.... அவள காப்பாத்துறது என்னோட கடம.... இதுக்கு தேங்க்ஸ் எதுக்கு?"



"உன் தங்கச்சியா இருந்தாலும் என் பொண்டாட்டி.... என் பொண்டாட்டிய காப்பாத்தி இருக்க... அதுக்காக தான்..." என் பொண்டாட்டி என்றதில் அவன் கொடுத்த அழுத்தம் அஜய்யை சிலிர்க்கச் செய்தது.



இப்படியும் காதலிக்க முடியுமா???



அதுவும் தன் சொந்த குடும்பத்தாரிடமே விட்டுக் கொடுக்க கூடாதென்று நினைக்கும் அளவுக்கா???



மீண்டும் புன்னகைத்தன அவன் உதடுகள்!!!



"லெட்ஸ் கோ...." எழுந்து கொண்டான்.



***



தன்னறையில் தனியாய் அமர்ந்து தனக்குள் உழன்று கொண்டிருந்தாள் ஆராதனா.



இன்று அவளிடம் ஜீவா நடந்து கொண்ட முறையில் பெண்ணவள் இதயம் அந்த நேரத்திலும் கூட அதிவேகமாய் அடித்துக் கொண்டிருந்தது.



"வேற ஒரு பொண்ண லவ் பண்றவன் ஏன் இப்பிடி பண்றான்" விடை தெரியாமல் குழம்பித் தவித்தது பேதை மனம்.



'நோ....இது கூடாது இவன் கிட்ட பேசியே ஆகணும்' மணி பண்ணிரெண்டை நெருங்கிக் கொண்டிருக்க போவதா வேண்டாமா என பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தவள் கடைசியாக போவதென முடிவெடுத்து தன் கதவை திறக்கவும் ரிஷி வெளியிலிருந்து முன் ஹால் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழையவும் சரியாக இருக்க வாசலில் நின்று கொண்டிருந்த தங்கையை பார்த்து புன்னகைத்தவன் அவளருகே வந்தான்.



"என்னடா... தூங்காம என்ன பண்ற?"



"சு...சும்மா தான்ணா.... த...தண்ணி.... தண்ணி குடிக்கலாம்னு...." தலை தடவி வாஞ்சையாய் கேட்ட அண்ணனிடம் பொய் சொல்லி பழக்கமில்லாததால் அவள் வார்த்தைகள் தந்தியடிக்க அவள் கண்களை கூராய் துளைத்தன அவன் பார்வை....



"பொய் சொல்றதுக்கு எப்போல இருந்து கத்துகிட்ட ஆராதனா?" கண்டிப்பான அவன் குரலில் அவள் கண்கள் சட்டென கலங்க கணவன் குரல் கேட்டு கீழே வந்தவள் அவன் கண்டிப்பாய் பேசிக் கொண்டிருப்பது கண்டு அவசரமாக இறங்கி அருகில் வந்து நிற்க அண்ணியிடம் ஒன்றினாள் பெண்.



"சொல்லு எப்போதுல இருந்து?" அவனுக்கு பொய் சொல்வது பிடிக்காதென தெரிந்தும் பொய் சொன்னதனால் வந்த கோபம்....



"சா...சா....சாரி" மழுக்கென கண்ணத்தை தொட்டது கண்ணீர்.



"ப்ச் எதுக்கு அழற?" கோபமாய் கேட்டாலும் அவளை நெருங்கி கண்ணீரை துடைத்து விட்ட கைகள் தன் தோளோடு சேர்த்தணைக்க தனியாய் நின்றிருந்த மனைவியை இழுத்து மறு தோளோடு சேர்த்தணைத்தன.



"ப்ச்....விடுங்க தேவ்.... ஆரா.... வா என்கூட.... நீங்க மேல போங்க நா வந்துட்றேன்" அவன் பதிலை எதிர்பாராது அவளை அழைத்துக் கொண்டு சென்று மறைய அவர்களையே பார்த்திருந்தவன் ஒரு பெரு மூச்சுடன் மேலேறிச் சென்றான்.



.....



"என்னமா....என்ன ஆச்சு?" கட்டிலில் அமர வைத்து தானும் அருகில் அமர்ந்து கொண்டாள்.



"அண்ணி.... அண்ணா என் மேல கோபமா இருக்காங்களா?"



"இல்ல இல்ல.... அவங்க கோபமெல்லாம் நீ அழற வர தான்.... இப்போ சரியாகிடுச்சு....சரி சொல்லு....என்ன ஆச்சு?"



"ஜீவா கூட பேச வெளில வந்தேன் அண்ணி.... அண்ணா வந்தாங்க..... ஜீவாவ தப்பா நினச்சிட கூடாதுன்னு தண்ணி குடிக்க வந்தேன்னு பொய் சொல்லிட்டேன்"



"ஜீவாவையா....?"



"ம்...."



"இப்போ எதுக்கு?"



"அ...அது...பேசணும்?"



"காலைல பேசலாமே?"



"இல்ல இல்ல அண்ணி என்ன தப்பா நினச்சிடாதீங்க....."



"உன்ன போய் தப்பா நினைப்பேனா ஆரா.... உனக்கும் ஜீவாக்கும் ஏதாவது பிரச்சனயா?"



"பிரச்சனல்லாம் இல்லண்ணி.... " இன்று நடந்ததை அவள் கூற வாயை பிளந்தாள் பெண்.



'அடப்பாவி.... லவ்வ சொல்ல மாட்டேன் சொல்ல மாட்டேன்னுட்டு என்னடா பண்ணி வெச்சிருக்க' மனதிற்குள் நினைத்து சிரித்தவள்



"சரி.... இப்போ எதுக்கு அவங்கள பாக்க நினைக்குற?" என்றாள்.



"ஜீவா ஏன் இப்பிடி நடந்துக்குறான்னு புரிய மாட்டேங்குது அண்ணி.... எனக்கு ஒரே குழப்பமா இருக்கு"



"ஜீவா உன்ன லவ் பண்றேன்னு சொன்னால் நீ என்ன பண்ணுவ?"



"வாட்...இல்ல அவன் என்ன லவ் பண்ணல"



"சப்போஸ் அவன் அப்பிடி சொன்னா நீ என்ன பண்ணுவ.... சும்மா சொல்லு"



"அ...அது...தெரில"



"அவன உனக்கு புடிக்குமா?"



"புடிக்கும் அண்ணி... பட் அது நிச்சயமா காதல் இல்ல" அடித்துக் கூறினாள் பெண்.



"அப்போ அவன் வேற பொண்ண லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கறதுல உனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல?" ஏனோ திடீரென ஏமாற்றம் நெஞ்சில் பரவ அது முகத்திலும் பிரதிபலித்தது.



"சொல்லு...."



"அண்ணி.....அது..."



"ம் அது?"



"அவன் கூட இருந்தா பாதுகாப்பா இருக்கும்னு தோனுது அண்ணி பட் அவன் வேற பொண்ண லவ் பண்ணா அவன் கூட இருக்க முடியாதே"



'கடவுளே இவ தெரிஞ்சு தான் பேசுறாளா....என்னயவே குழப்பி விடுறா.... இவளுக்கு ஜீவாவ பிடிச்சிருக்கா இல்லயா' மண்டை காய்ந்தது காரிகைக்கு....



"ஸோ அவன் மேல உனக்கு எந்த வித பீலிங்ஸும் இல்ல?"



"இ...." மறுக்கப் போனவளுக்கு மீண்டும் மின்னியது ஷாப்பிங் மால்....



"சொல்லு ஆரா..."



"அது வந்து அண்ணி...."



"சரி...இன்னிக்கு நிம்மதியா தூங்கு.... நாம நாளைக்கு இத பத்தி பேசலாம் சரியா?"



"ம்...." தலையாட்டியவளின் முடியை பாசமாக வருடியவள் புன்னகைத்து வெளியேற அவள் அணுகுமுறையில் நெகிழ்ந்தது பெண்ணுள்ளம்....



.....



உள்ளிருந்த ஆபிஸ் ரூமில் பல்ப் எரிய



'இவன் என்ன கட்டிக்கிறதுக்கு பதிலா இந்த வேலைய கட்டிகிட்டு இருந்திருக்கலாம்' சலித்துக் கொண்டே உள்ளே நுழைய அவன் ஏதோ கோப்பை படித்துக் கொண்டிருப்பது கண்டு கடுப்பாகி விட்டாள் அவனவள்.



"மிஸ்டர்.ரிஷி" இதுவரை அழைத்திராத அழைப்பில் அழைத்த மனைவியை சலேரென திரும்பிப் பார்த்தான் காளை.....



"என்ன பண்றீங்க.... வாங்க எனக்கு தூக்கம் வருது"



"இல்லடா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு...நீ தூங்கு"



"இப்போ நீங்க வர்லன்னா நானும் தூங்க போறது இல்ல" அவள் கர்ப்பம் வேறு முகம் சுளிக்கக் கூட விடாமல் தடுக்க மூடி வைத்தவன் நிதானமாய் எழுந்தான்.



"நா உங்களுக்கு ரொம்ப டாச்சர் கொடுக்குறேனா?" அவள் கேட்க புன்னகைத்துக் கொண்டே அருகில் வந்தவன் அவளை தூக்கிக் கொள்ள பதிலுக்காய் அவனையே பார்த்தாள் பெண்.



"ஆமா" அவன் பதிலில் சுருங்கிய முகம்



"ஆனா புடிச்சிருக்கு" சட்டென மலர்ந்தது.



"என்ன இப்பிடியே தூக்கிட்ருக்க ஐடியாவா?"



"அதுல என்ன பேபி இருக்கு.... உன் கூட இருக்கறது எனக்கென்ன கசக்கவா செய்யும்?" ஒற்றை கண் சிமிட்டி அவன் கேட்ட மேனரிஸத்தில் சொக்கிப் போனாள் மாது.



சற்றே எம்பி அவன் கண்ணத்தில் முத்தமிட்டவள் வேண்டுமென்றே அவன் மீசை நுனியை பிடித்து இழுக்க



"வலிக்குதுடி" எப்போதும் போல் கத்தவும் கலகலத்து சிரித்தவளை அணைத்தவாறே ஏந்திச் சென்று கட்டிலில் கிடத்தியவன் தானும் படுத்து அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.



"தேவ்...."



"ம்..."



"ஐ லவ் யூ...."



"லவ் யூ டூ டா கண்ணம்மா"



"தேங்க்ஸ்"



"எதுக்கு?"



"அந்த கடவுள் உங்கள எனக்கு கொடுத்ததுக்காக"



"அதுக்கு கடவுளுக்கு தானே நன்றி சொல்லனும் லாயரம்மா?"



"கடவுள்னா யாரு?"



"ம்.... நமக்கு எல்லாமே அவர் தான்...."



"கரெக்ட்.... எனக்கு எல்லாமே நீங்க தானே சார்" இதை விட வேறு வார்த்தை கொண்டு அவள் காதலின் ஆழத்தை உணர்தத்தான் முடியுமா???



அவள் உச்சந் தலையில் அழுத்தமாக தன் முத்திரையை பதித்தவன் நிம்மதியாய் கண் மூட அவனையே பார்த்துக் கொண்டு விழித்திருந்தாள் பெண்!!!



தொடரும்.....



02-06-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 10 [ B ]



காலை....



ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ்....



பைல்களை புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தவனின் கவனம் சட்டென நின்றது வேறு ஏதோ மனது எடுத்துரைத்ததில்....



பைலை அப்படியே மூடி வைத்தவன் அதை ஓரமாக நகர்த்தி விட்டு ரகுவை அழைத்தான்.



"எஸ்கியூஸ் மீ?"



"வாடா"



"என்ன மச்சான்?"



"அத்தை கூட இன்னிக்கு போயி கல்யாண தேதிய குறிச்சிட்டு நாளைக்கு ரிசப்ஷன் வெச்சிக்கலாம்" திடுமென அறிவித்தவனை பார்த்து அதிர்ந்து போனான் நண்பன்.



"ஹே....இப்போ என்னடா அவசரம் அதுக்கு.... மெதுவா பண்ணிக்கலாம்டா"



"நோ ரகு.... உன்னோட கல்யாணம் மட்டுமில்ல இன்னும் இரண்டு பேருக்கு எடுக்க இருக்கு"



"என்னடா சொல்ற.... யாரு அந்த ரெண்டு பேரும்?"



"ஆனந்த்-ஆரா அண்ட் கதிர்-மது"



"வாட்....அவங்க லவ் பண்றாங்களா?"



"லவ் இருக்கு ஆனா ஒத்துக்க மாட்டானுங்க....அவ ஒத்துக்கவே மாட்டா (ஆரா) ஸோ.... கதிருக்கான ஷாக் ட்ரீட்மெண்ட்ட கொடுத்தா ஆராவ ஈஸியா பிடிச்சிடலாம்"



"சத்தியமா புரில மச்சான்" உண்மையில் அவனுக்கு புரியவே இல்லை அவன் பேசியது.



"ஆரா மேட்டர அஷு பாத்துப்பா.... நாம கதிர் மேட்டர முடிக்கணும்"



"இப்போ என்ன பண்ணனும்?"



"ஒருத்தன மதுவ லவ் பண்றா மாறி நடிக்க சொல்லு.... இது மதுவுக்கும் கதிருக்கும் தெரிய கூடாது"



"ஓகேடா...."



"அண்ட் கதிர் கண்பார்வைலயே எதேர்ச்சையா நடக்குறா மாதிரி அவன நெருங்கி பழக சொல்லு.... அவனையே கல்யாணம் பேசுறா மாதிரியும் பேசலாம்.... கல்யாணத்துக்கு முன்னாடி கதிர் நிச்சயமா ஒத்துக்குவான்...."



"தென்....?"



"தென் மூணு பேரு கல்யாணத்தையும் ஒன்னா முடிச்சிடலாம்"



'அப்போ தான் மீதி வேலய தொடங்கலாம்' பின் பாதியை மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.



"ம்....ஓகே மச்சி நீ சொல்ற படி பண்ணிட்றேன்.... பட்"



"பட்...?"



"ஏன் இவ்வளவு அவசரப்படுற?"



"அது...நத்திங்... நீ போய் நா சொன்ன வேலய பாரு" கண்களை சந்திக்காது கணினித் திரையில் பார்வையை திருப்பியவனின் செய்கையில் ஏதோ நெருடியது ரகுவிற்கு....



***



"சார்...." தன் முன் சல்யூட் அடித்து நின்ற கான்ஸ்டபிளை நிமிர்ந்து பார்த்தான் ஆரவ்.



"சொல்லுங்க மாரி"



"மிஸ்ஸிங் கேஸுக்கு ஒரு கம்ப்ளைன்ட் வந்திருக்கு.... இன்ஸ்பெக்டர் சூர்யா கிட்ட கம்ப்ளயின் பண்ணவங்க உங்கள பாத்தே ஆகனும்னு அடம் பிடிக்கிறாங்க"



"ஓ....அவங்கள வர சொல்லுங்க" அவன் அனுமதியளிக்க அவர் செல்லவும் சற்று நேரத்தில் உள்ளே நுழைந்தார் ஒரு பெண்மணி....



"உட்காருங்க மா" அவர் தோற்றத்திற்கு மரியாதை கொடுத்தவன் அவரை அமர பனிக்க அமர்ந்து கொண்டவரின் கண்கள் கலங்கி இருந்தது.



"ம்...சொல்லுங்க.... நா என்ன உதவி பண்ணனும்?"



"என் பொண்ணு காணாம போயி இரண்டு நாளாச்சு சார்.... சூர்யா சார் கிட்ட கம்ப்ளயின் கொடுத்துட்டேன்..... ஆனா யாரும் கண்டுகறதாவே இல்ல சார்...." அடக்க மாட்டாமல் குழுங்கி அழுதவர் சொன்ன செய்தியில் கோபம் தாறுமாறாக எகிறியது அந்த ஆறடி ஆண் மகனுக்கு.....



பெரும் பிரயத்தனப்பட்டு தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவன்



"நீங்க கம்ப்ளைன்ட் பண்ணி கொடுங்க மா.... நா இப்போவே ஆக்ஷன் எடுக்குறேன்...." என்றான் பல்லை கடித்துக் கொண்டு....



கம்ப்ளைன்ட் எழுதி கும்பிடப் போனவரை தடுத்து விட்டு அவரை அனுப்பி வைத்தவன் அவர் சென்ற மறுநொடி விறுட்டென சேரை தள்ளி விட்டு எழுந்த சப்தத்தில் வெளியே தங்கள் வேலையில் இருந்தவர்களில் அப்படியே உறைந்து போயிருக்க ஆவேசமாய் வெளியே வந்தவன் யாரும் உணரும் முன்னே இன்ஸ்பெக்டர் சூர்யாவின் காலரை பற்றி எழுப்பி விட்டான் பளாரென்றொன்று.....





"யாரு நீ?" அவன் அறைந்ததில் உறைந்து சிலையாய் சமைந்திருந்தவன் அவன் கர்ச்சனையில் திடுக்கிட்டு நடப்புக்கு திரும்பினான்.



இது வரை பார்த்திராத அவன் கோபத்தில் அனைவரும் ஸ்தம்பித்திருக்க கணவனின் கேஸ் விடயமாக அவனுக்கே தெரியாமல் நண்பனை சந்திக்க வந்திருந்தவள் அதிர்ந்து வாசலிலேயே நின்று விட்டிருந்தாள்.



"சொல்லு.... ஹூ ஆர் யூ?"



"சா...சா...ர்"



"ஹூ ஆர் யூ?"



"இன்....இன்...இன்ஸ்பெக்டர் ஆப் *** ஸ்டேஷன்" திக்கித்திணறி சொல்லி முடிக்க மீண்டும் விழுந்தது அறை....



"மிஸ்ஸிங் கேஸ் கம்ப்ளைன்ட் வந்து இரண்டு நாளாச்சு.... அந்த பொண்ண பெத்தவ வந்து கதறி சொல்லிட்டு போறா.... நீ என்ன பண்ணிகிட்ருக்க?"



"சா...ரி சார்"



"இடியட் மன்னிப்பு கேட்டா ஆச்சா.... இப்போவே போயி தேடுற.... இன்னிக்கு ராத்திரிகுள்ள அந்த பொண்ணு வீட்ல இருக்கல.... " அடுத்த வார்த்தை உதிர்க்காது விரலை நீட்டி எச்சரித்தவன் மீண்டும் அறைக்குள் செல்ல அப்போதுதான் இழுத்துப் பிடித்திருந்த மூச்சை விட்டனர் அனைவரும்....



"வாங்க மேடம்...." ரிஷியை நன்கு அறிந்தவன் ஒருவன் வரவேற்க சட்டென தன்னிலைக்கு மீண்டவள் சுற்றி ஒரு முறை பார்த்து விட்டு நண்பனை தேடிச் செல்ல உடனே கிளம்பினான் இன்ஸ்பெக்டர் சூர்யா.



....



"எஸ்கியூஸ் மீ"



"கம் இன்" இதுவரை கேட்டிராத நண்பனின் குரலில் பக்கென சிரிப்பு வரவே வாயை பொத்திக் கொண்டே உள்ளே நுழைந்தவளை கண்கள் இடுங்கப் பார்த்தான் ஆரவ்.



"உட்காரலாமா சார்?"



"உட்கார்"



"தேங்க்ஸ் சார்"



"எதுக்கு வந்த.... அண்ணா வெளியில வர வேணாம்னு சொல்லி இருக்காங்கல்ல?" மிச்சம் மீதமிருந்த கோபம் கண்டிப்பு குரலாய் அவள் மீது பாய முகம் சுருங்கவும் தன் கோபத்தை இழுத்துப் பிடித்தான் நண்பன்.



"தேவ் கேஸ் விஷயமா வந்தேன்"



"சரி சொல்லு...."



"இப்பிடி கோபமா கேட்டின்னா சொல்ல மாட்டேன்"



"ப்ச் அஷ்வி கடுப்பேத்தாத... சரி சரி... கோபப்படல சொல்லு"



"...."



"ராட்சஸீஈஈஈ.... படுத்தாம சொல்லுடி" அப்போதுதான் அவன் சாதாரண நிலைமைக்கு திரும்பி இருந்தான்.



"ரகு அண்ணா பேசினாரு"



"ரகு அண்ணனா.... அவரு ஏன் உன் கிட்ட பேசினாரு?" அவன் கேட்கவே இன்று அவன் ஆபிஸில் நடந்து கொண்டதை அவன் சொன்னதாக சொல்ல நெற்றி சுருக்கினான் நண்பன்.



"ஆரா....ஆனந்த்.... கதிர்....மது....?"



"எஸ்...."



"லவ்வா?" ஆச்சரியம் தாளவில்லை அவனுக்கு....



"ம்..."



"உனக்கெப்பிடிடி தெரியும்?"



"அதெல்லாம் தெரியும்....பட் கதிர் அண்ணா மது மேட்டர் எனக்கும் ஷாக் தான்டா"



"ச்சே அப்பிடி இருக்காதுடி" தங்கை நினைவில் மறுத்தான்.



"ஜீவா லவ் பண்றதா என் கிட்ட ஒத்து கிட்டாரு...."



"வாட்.... ஆர் யூ கிட்டிங்.... லூசா நீ?"



"நீதான்டா லூசு.... கண்ண திறந்து சுற்று வர பார்த்தா தான் கண்டுக்கலாம்.... நீ என்ன தான் பண்றியோ?"



"சீரியஸா தான் பேசுறியா?"



"ஆமாடா எரும.... நம்புடா"



"போடி நா நம்ப மாட்டேன்"



"டேய்...." பல்லை கடித்தவள் ஜீவா ஒத்துக் கொண்டதையும் நேற்றிரவு ஆரா பேசியதையும் ஒப்பிக்க வாயை பிளந்தான் ஆரவ்....



"அடப்பாவிகளா.... அப்புராணி மாதிரி இருந்து கிட்டு இவ்வளவு நடந்திருக்கு.... ஆரா என்ன சொல்றா.... பேசினியா?"



"ஊஹூம்.... இன்னும் இல்லடா... பேசலாம்னு பாத்தப்போ தான் ரகு அண்ணா கால் பண்ணாங்க.... அதனால கேக்கல"



"இத சொல்றதுக்காவா அவ்வளவு தூரம் வந்த?"



"இல்லடா தடியா.... நா தேவ் மனசுக்குள்ள இப்போ என்ன ஓடிட்ருக்கு.... நாம என்ன பண்ணலாம்னு டிஸ்கஸ் பண்ண தான் வந்தேன்"



"இப்போ என்ன பண்றது....?" அவன் யோசிக்கவே அவளும் யோசனையில் ஆழ்ந்தாள்.



"அண்ணாவ வாட்ச் பண்ண ஆள் ஏற்பாடு பண்ணி இருக்கேன் அஷ்வி... பட் இவரு வேற ஐடியால இருந்தார்னா எல்லாமே சொதப்பிடும்"



"எஸ் ஆரு"



"ஒன்னா சேத்து கல்யாண ஏற்பாடு பண்ணி இருக்கார்னா.... மேபி அதுக்கு அடுத்த நாள் சரண்டர் ஆகணும்னு முடிவெடுத்திருக்கனும்" திக்கென அதிர்ந்தது பெண் மனம்....



"பயப்படாத அஷ்விமா.... அவர் நினைக்குறது நடக்காது.... அவன் ஒத்துக்க போற அதே நாள்ள இன்னொருத்தன ஒத்துக்க வைக்கலாம்.... அடுத்த நாள் கேஸ் கோர்ட்டுக்கு வந்துடும்.... அதுக்கப்பறம் நீ பாத்துக்கோ"



"என்னடா இப்படி தனியா தவிக்க விட்ற..... பயமா இருக்கு ஆரு"



"நா எப்போவும் உனக்கு தோள் கொடுப்பேன் அஷ்வி.... என் மேல நம்பிக்க வை.... உன்னால முடியும்டி" அவன் ஆறுதல் வார்த்தைகளை விட அவன் தோழமையே அவளுக்கு பலமாய்!!!



"தேங்க்ஸ் டா" உணர்ந்து சொன்னவளை முறைக்க புருவம் சுருக்கி பார்த்தவள்



"ஓகே ஓகே நோ தேங்க்ஸ்" என்றாள் புன்னகைத்து....



"சரி... தனியாவா வந்த?"



"ஆ...." திரையில் கமாண்டர் எனும் பெயர் மின்னி அழைப்பேசி தன் இருப்பை உணர்த்த பேசியதை நிறுத்தியவள் அதனை ஏற்று காதில் வைக்க மறுமுனையில் சீறினான் கணவன்.



"எங்க இருக்க?"



"நான் நான்.... வீட்ல தேவ்...."



"நானும் வீட்ல தானே இருக்கேன்.... ஏன் என் கண்ணுக்கு தெரியமாட்டேங்குற?" நக்கல் வழிந்தாலும் கோபம் தெறித்தது குரலில்....



"அ...அ...அது...அது..."



"அது?"



"நான் நான் ஆ...ஆரு.... ஆரு கூட வெளியில வந்தேன்" அவனுக்கு பொய் சொல்வது பிடிக்காதென மூளை எடுத்துரைத்ததில் சட்டென பொய் கூட வரவில்லை பேதைக்கு.....



"பொய் சொல்றியா....?"



"இல்ல இல்ல தேவ்...." அவள் முடிக்கும் முன் கேட்ட பீப் சத்தத்தில் தலையில் கை வைத்த நண்பியை பார்த்து சிரிப்பை அடக்கியவனை பார்த்து பல்லை கடித்தவள் தன் முன்னிருந்த பைலினால் எட்டி அடித்தாள்.



"ஹாஹாஹா.... என்னடி இப்பிடி பம்முற?"



"நீ என் தங்கச்சி கிட்ட வழியிறத விடவுமா?"



"நானாவது வழிய தான் செய்றேன்.... நீ?" மீண்டும் சிரிக்க முகத்தை சுருக்கிக் கொண்டு அமர்ந்து விடவும் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கினான் நண்பன்.....



"சரி வா சேந்து வீட்டுக்கு போலாம்" அவனே ஐடியா கொடுக்கவும் தான் விகசித்தது பெண் முகம்.....



***



தன் முக்கியமான பைலொன்றை வீட்டிலேயே மறந்து வைத்து விட்டிருக்க அதை எடுப்பதற்கு வீட்டுக்கு வந்தவன் அறையில் மனைவியை காணாது ஒரு தடவை வீட்டை அலசி விட்டு புருவத்தை நீவி யோசித்துக் கொண்டே தான் தன்னவளுக்கு அழைத்திருந்தான்.



வெளியில் எங்காவது சென்றிருப்பாள் என யூகித்திருக்க சட்டென கிளர்ந்த கோபம் அவள் பொய் சொல்லவும் எல்லை கடக்க ஏதாவது சொல்லி விடக் கூடாதே என வைத்து விட்டான்.



அவனுக்கு தெரியும் இப்போது தம்பியுடன் வந்து நம்ப வைப்பாளென....



இருந்தும் பேசாமல் இருந்தவன் கீழே வர அவனை ஈர்த்தது தங்கை மடியிலிருந்த அந்த சின்னஞ்சிறு மழலை....



கண்கள் மின்ன அருகே வந்து அமர்ந்தவன் தன் கைகளில் அள்ளிக் கொண்டு செல்லம் கொஞ்ச தன் பொக்கை வாயை திறந்து சிரித்த மழலையின் அழகில் சொக்கிப் போனான்.



"மித்து குட்டி.... என்ன யாருன்னு தெரியுதா?" மீண்டும் அது அதே போல் சிரிக்கவே அதன் கண்ணத்தில் அழுத்த முத்தமிட்டவன் தங்கையிடம் கொடுத்து விட்டு எழவும் ஆரவ்வுடன் உள்ளே நுழைந்தாள் அவனவள்....



"ஆரு....என்னடா ஹால்லயே நிக்கிறாங்க?" நண்பன் காதில் கிசுகிசுத்தவளுக்கு பொய் சொல்லி அவன் கோபத்தை கிளப்பி இருப்பது மனதிற்குள் பயத்தை ஏற்படுத்தி இருந்தது.



"சமாளிக்கலாம் வாடி" தானும் கிசுகிசுத்தவன் ஹாலில் நின்று கொண்டிருந்த அண்ணனை அதற்குள் நெருங்கி இருக்க தன் பார்வையை தவிர்த்த மனைவியை துளைத்தது அவளவன் பார்வை....



"நா கிளம்புறேன்...." பொதுவாய் தலையசைத்தவன் விறுட்டென வெளியேற நெஞ்சில் கை வைத்து தன்னை ஆசுவாசப்படுத்தியவளை விசித்திரமாய் பார்த்தாள் ஆராதனா.



"என்னண்ணி இப்பிடி பயப்பட்றீங்க?"



"ஹி...அது உங்க அண்ணன பாத்தாலே வந்துடுதே....நானும் என்னதான் பண்றது?" அவள் உதட்டை பிதுக்க மனைவியை கண்களால் துளாவிய ஆரவ்



"ஆரா.... கயல் எங்கடா?" என்றான் தங்கையிடம்.....



"கயல் தலவலியா இருக்குன்னு சொன்னாங்க.... அதான் மித்துவ எங்கிட்ட கொடுங்க வாங்கிக்கறேன்னு சொன்னேன்... இப்போதான் மேல போனாங்க"



"ஓஹ்....ஓகே இரு நா பாத்துட்டு வந்தட்றேன்" என்றவாறே மேலேறிச் செல்ல ஆராவிடம் திரும்பினாள் பாவை.....



"ஆரா"



"என்னண்ணி?"



"இப்பிடி வந்து உட்காரு.... கொஞ்சம் பேசணும்" நீண்ட சோபாவில் அமர்ந்தவள் தன் பக்கத்தில் இருக்குமாறு அழைக்க நேற்றிரவு இடையில் விட்டது பற்றி தான் கேட்கப் போகிறாள் என யூகித்தவளாய் சிறு பயத்துடன் அருகில் அமர்ந்தாள்.



"சொல்லுங்கண்ணி"



"என்ன முடிவு பண்ணி இருக்க... நீ அமைதியா இருக்கறத பாத்தா உனக்கு பிடிக்கலன்னு எடுத்துகட்டுமா ஆரா..."



"அ...அண்ணி...ஜீ...ஜீவாவ எனக்கு புடிக்கும்....பட்.... அது காதல் இல்ல"



'மறுபடியுமாஆஆஆ' நெஞ்சுக்குள் அலறியே விட்டாள் பெண்.



"காதல் இல்ல சரி.... அவன இன்னொருத்திக்கு விட்டு கொடுக்க முடியுமா உன்னால?"



"அ...அது அவன் லவ் பண்ணா நா எதுக்கு நடுவுல நிக்க போறேன்?"



"அப்போ உனக்கு அவன் தேவயில்ல... சரி இந்த பேச்சை இதோட முடிச்சிக்கலாம்.... பட்...." அவள் நிறுத்த கலங்கிய விழிகளுடன் பெண்ணவளை ஏறிட்டுப் பார்த்தவளின் கண்களில் தவிப்பு....



"ப்ச்...என்னமா...?"



"அ...அ...அண்ணி எ...எ....எனக்கு.... ஜீவாவ விட்டு இ... இருக்க மு.... முடியாது" திக்கித்திணறி சொல்லி முடிக்க முகம் மலர புன்னகைத்தாள் பெண்.....
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அம்மு...." சுருண்டு தூங்கி இருந்த மனைவியின் அருகில் அமர்ந்து நெற்றியில் கை வைத்தான் ஆரவ்.



"அம்மு....என்னமா பண்ணுது?"



"ஒன்னில்ல ஆரு.... இலேசா தலை வலி தான்" எழுந்தமர முயற்சித்தவளை தடுத்து மீண்டும் படுக்க வைத்தான்.



"டாக்டர வர சொல்லட்டுமா?"



"வேணாம் ஆரு"



"டேப்லேட் போட்டியா?"



"ம்...."



"என்ன பண்ணுது.... ஏன் திடீர்னு?"



"ராத்திரி மித்து முழிச்சி கிட்டு இருந்தாளா.... அதான் சரியா தூங்கல.... அதனால தான்"



"ஏன் அம்மு என் கிட்ட எதுவும் ஷேர் பண்ணிக்க கூடாதுன்னு இருக்கியா?"



"ஏன்டா?"



"பின்ன.... என்ன எழுப்பி விட்ருக்கலாம்ல?"



"நீ நல்லா தூங்கிட்டு இருந்...." அவள் முடிக்க வில்லை



"உன்னயும் குழந்தையையும் விட எனக்கு தூக்கம் தான் முக்கியமா?" இடையிட்டான் கணவன்.



"....."



"நா ஏதாவது தப்பு பண்றேனா?" அந்த ஆண் மகனின் கண்கள் சட்டென கலங்கவும் படக்கென எழுந்தமர்ந்தவள் அவன் நெஞ்சில் தலைசாய்க்க



"சொல்லு அம்மு.... நா ஏதாவது தப்பு பண்றேனா.... அதனால தான் என் கிட்ட எதுவும் ஷேர் பண்ணிக்க கூடாதுன்னு இருக்கியா?"



"இல்ல ஆரு.... சத்தியமா அப்பிடில்லாம் இல்லடா"



"ஆரு...." நிமிர்ந்து கணவனை நோக்கியவளின் முகம் அவன் கலக்கத்தை கண்டு தானும் கலக்கமுற்றது.



இருவருக்கும் மௌனமே மொழியாக அவன் நெஞ்சில் அமைதியாய் சாய்ந்திருந்தாள் பெண்ணவள்....



"சாரி...." சொல்லி வைத்தார் போன்று இருவரும் ஒரே நேரத்தில் கேட்க மனக்கவலையையும் மீறி இருவருக்குமே சிரிப்பு வந்தது.



"சாரி அம்மு குட்டி.... ஒர்க்னால நா என்ன பண்றேன்னு எனக்கே தெரிய மாட்டேங்குது"



"ப்ச் விடு.... நானும் சாரி" அவளும் மன்னிப்பு யாசிக்க உச்சந்தலையில் முத்தமிட்டவன் தன்னுடன் வளைத்து இறுக்க அணைத்துக் கொண்டான்.



***



ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ்.....



மதுவுடன் வேலை சம்பந்தமாக காரியமே கண்ணாக அலசிக் கொண்டிருந்தவனை கலைத்தது கதவு தட்டும் சத்தம்...



"எஸ்கியூஸ் மீ சார்"



"கம் இன்" என்றவன் புதிதாய் வந்து நின்றவனை பார்த்து புருவம் சுருக்க தானும் அதே போலவே பார்த்துக் கொண்டிருந்தாள் பெண்.....



"சார் நான் சன்ஜய்.... இன்னிக்கு தான் ஜாயின் ஆகி இருக்கேன்...."



"இத மாறன் சார் கிட்டல்ல நீங்க போயி பேசி இருக்கணும்?"



"மாறன் சார் தான் கதிர் கிட்ட போங்கன்னு சொன்னாரு" அவன் பதிலில் குழம்பிப் போனான் ரிஷியின் பீ.ஏ....



வேலை விடயத்தில் விட்டேற்றியாய் இருப்பவனல்ல அவன்....



தானே இன்டர்வியூ எடுத்து தேர்ந்தெடுத்திருந்தாலும் தானும் ஒரு முறை அலசிப் பார்த்து குடும்ப பின்னனி தொடக்கம் பர்ஸனல் வரை ஆராய்ந்த பின்பே சம்மதிப்பவன் ஏன் இன்று மட்டும் தன்னிடம்???



குழப்ப ரேகைகள் முகத்தில் படர்ந்தது கதிருக்கு....



"அபாய்ன்மென்ட் லெட்டர்?"



"இதோ இருக்கு சார்" கொடுத்தவன் மதுவை பார்த்து ஸ்னேகமாய் புன்னகைக்க தானும் புன்னகைத்தவளை பார்த்து எரிச்சல் வந்தது கதிருக்கு....



"யூ மே கோ சன்ஜய்.... இன்னும் கொஞ்ச நேரத்துல வாங்க"



"ஓகே சார்" என்றவன் மீண்டும் புன்னகைத்து வெளியேற திரும்பியவள் கதிரின் முகத்தில் கண்ட எரிச்சலில் உள்ளுக்குள் சிரிப்பை அடக்க அரும்பாடுபட்டுப் போனாள்.



"சார்....கதிர் சார்"



"வாட்....?"



"முடிஞ்சுதுனா போகவா?"



"ஏன் அப்படி என்ன நெட்டி முறிக்கிற வேல?"



"அந்த சன்ஜய் இருக்கார்ல.... அவருகிட்ட ப்ரண்ட் ஆகிக்கலாம்னு தான்"



"வாட் ரப்பிஷ்....?"



"ஏன் சார்?"



"ஒன்னில்ல போ...."



"ஓகே.... தேங்க் யூ சார்" என்றவள் வெளியேற எரிச்சலில் அவன் பைலை புரட்டினான் கதிரவன்....



ஏனிந்த எரிச்சலென்று அவனுக்கே புரிந்து தொலைக்காததில் மேலும் மேலும் எரிச்சல் வந்தது.





.....



"எஸ்கியூஸ் மீ சார்" கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்த தன் பாழ்ய நண்பனை பார்த்து கண்ணடித்து சிரித்தான் ரிஷி.



வந்தது சன்ஜய்....



((நண்பா நீங்க கெஸ் பண்றது கரெக்ட் தான்.....கதிர வெறுப்பேத்த நடிக்க வந்தவன் சன்ஜய் தான்....))



"வாடா...."



"சாதாரணமா சிரிச்சதுக்கே பையன் முகத்த பாக்கணுமே" இருவரும் வாய் விட்டு சிரித்தனர்.



"மச்சான் என் ஆளுக்கு மட்டும் இது தெரிஞ்சுது.... என்ன வீட்ல இருந்து இமயமலைக்கு துரத்தி விட்டுடுவாடா"



"டோன்ட் ஒர்ரி மச்சான்.... அவகிட்ட நா பேசுறேன்...."



"என்னவோ நீ சொன்னதுக்காக நடிக்கிறேன்..... என் லைப காப்பாத்திருடா"



"ஹாஹா....ரிஷி இருக்க பயமேன்"



"நீ இருக்கதால தான் டா பயமே பாவி...."



"ஹாஹாஹா....." நீண்ட நாட்களுக்கு பின் மனம் விட்டு சிரித்தான் அவளவன்.....



"நாளைக்கு ரிசப்ஷன் வெச்சிருக்கேன்டா"



"எத்தன தடவடா கல்யாணம் பண்ணுவ?"



"போடாங்..... எனக்கு இல்லடா நம்ம ரகுக்கு"



"அட.... சாருக்கு தானா..... பட் என் கிட்ட பேசும் போது கூட சொல்லல பாத்தியா அவன்..... அவன் வரட்டும்" அவர்கள் தன்னை பற்றித்தான் பேசுகிறார்கள் என தெரிந்தோ என்னவோ கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் ரகு.



"மச்சீ....." கத்திக் கொண்டே வந்தவன் சன்ஜையை கட்டியணைக்க



"வாடா புது மாப்பிள்ளை" வரவேற்றான் நண்பன்.....



"டேய் ஓட்ட துவங்கிடாதடா" கையெடுத்து கும்பிட்டவன் ரிஷிக்கு முன்னால் சன்ஜய்க்கு பக்கத்தில் அமர்ந்து கொள்ள சிரிப்பும் கூத்துமாய் நகர்ந்தது நேரம்......



.....



இடைவேளை....



"மச்சான்...."



"என்ன ஆர்.கே?"



"சாப்புட்ற டைமாச்சு.... நீ போயி மது கூட சாப்புடு"



"அடுத்த ட்ராமாவா.... ஷ்ப்பாஹ்.... உன்னால முடிலடா" அலுத்துக் கொண்டாலும் எழுந்து சென்ற நண்பனை பார்த்து சிரித்தனர் இருவரும்....



......





"கதிர் சார்...."



"என்ன?" எரிந்து விழுந்தான்.



"பசிக்குது"



"பசிக்குதுன்னா நா என்ன பண்றது....?"



"இந்த பைல அப்பறமா பேசிக்கலாம் சார்.... ப்ளீஸ்...." சோர்வாய் இறைஞ்சியவளை பார்த்து என்ன நினைத்தானோ சரி என்று விட்டு தானும் எழுந்தான் கதிர்.



அவர்கள் வெளியே வரவும் சன்ஜய் இவர்களை நோக்கி வரவும் சரியாக இருக்க கொஞ்ச நேரம் முன்னால் தோழமையாய் பேசி இருந்தவனை பார்த்து கையை உயர்த்தி அழைத்தாள் பெண்.



"சன்ஜய்...."



"ஹே ஹனி...." ஓரக் கண்ணால் கதிரை பார்த்தவனுக்கு அவன் முகத்தில் தெரிந்த கோபத்தில் சிரிப்பாய் வந்தது.



'ஹனியாம் ஹனி.... உவ்வேக்' மனதிற்குள் பல்லை கடித்தான்.



"சாப்பிடலயா?"



"நீயும் அங்க தான் போறியா..... அப்போ சேர்ந்தே போலாமே"



"ஓஹ் ஷூர்..... கதிர் சார் நீங்க வர்றீங்களா?" தன்னை பார்த்து கேட்டவளை பார்த்து முறைத்தவன் விடுவிடுவென சென்று விட தோளை குழுக்கினாள் பெண்....



"எதுக்கு ஹனி கதிர் கோபமா போறாரு...?"



"அவர் கோபமா போகலன்னா தான் நாம யோசிக்கணும்... நீ வா நாம போலாம்... நமக்கு சோறு தான் முக்கியம்" அவள் சொன்ன திணுசில் சிரித்தவன் அவளுடன் இணைந்து நடந்தான்.



......



மதியம் இரண்டு மணி.....



இன்டர்காமில் ரகுவை அழைத்தவன்



"ரகு.... லெட்ஸ் கோ டா...." என்றான் தானும் எழுந்து கோர்ட்டை சரி செய்தவாறே.....



நாளை ரிசப்ஷன் என்பதால் இன்று ஷாப்பிங் செல்வதாக இருக்க குடும்பத்தினர் அணைவரையும் வர சொல்லி இருந்தவன் தானும் ரகுவும் மதுவும் இணைந்து கொள்வதாக கூறி இருந்தான்.



"மது....?"



"ஆமால்ல.... இரு...." என்றவன் ஏதோ யோசித்து விட்டு கதிருக்கு அழைத்தான்.



"எஸ் சார்"



"கதிர்.... நா ரகு கல்யாண விஷயமா வெளில போறேன்.... நீ மதுவ அழச்சிட்டு நேரா ***மால் வர்றியா?"



"நானா....நா எதுக்கு சார்?"



"எனக்கு சின்ன வேல இருக்கு.... மதுவ அழச்சிட்டு போக முடியாது.... ஸோ நீ அழச்சிட்டு வா" சட்டென துண்டித்தவன் நண்பனுடன் வெளியேறினான்.



***



மால்.....



அனைவரும் வந்திருக்க ஓரமாய் அமர்ந்து அழைப்பேசியில் மூழ்கி இருந்த ஜீவாவிடம் அவ்வப்போது படிந்து மீண்டது பெண்ணவள் பார்வை....



"ஆரா.... எல்லோரும் இங்க தான் இருக்கோம்" காதில் கிசுகிசுத்த அண்ணியின் குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தவள் சமாளிப்பாய் சிரித்து வைக்க உள்ளே நுழைந்தனர் ரிஷியும் ரகுவும்....



"டாட்...." கத்திக் கொண்டே ஓடி வந்தவனை அள்ளி எடுத்து சுற்றினான் தந்தை....



"கண்ணா.... இன்னிக்கு ஜாலியா இருக்கீங்க போல?"



"எஸ் டாட்....ரொம்ப... நியூ ட்ரஸ் வாங்க போறோம்ல?"



"மாம் எங்க....?"



"அதோ இருக்காங்களே?" மகன் காட்டிய திசையில் பார்த்தவன் சிரித்து பேசிக் கொண்டிருப்பவளிடம் கோபத்தை காட்ட மனமில்லாது மகனை தூக்கிக் கொண்டு ஆண்கள் பகுதிக்கு நுழைந்தான்.



.....



"டாட்.... இது நல்லாருக்குல?" இள நீல நிறமும் கருப்பு நிறமும் கலந்த டீ-ஷர்ட ஒன்றை காட்டிய மகனை பார்த்து



"உனக்கு புடிச்சிருக்கா?" என்றான் புன்னகையுடன்....



"நோ டாட்"



"குட்.... மனசுக்கு பிடிச்சிருந்தா சாய்ஸ் பண்ணு.... மத்தவங்க கிட்ட ஒப்பீனியன் கேளு பட் டிஸிஷன நீதான் எடுக்கனும்.... அண்டர்ஸ்டாண்ட்?"



"எஸ் டாட்...." புரிந்து கொண்டு தலையாட்டியவன் கண்ணத்தில் முத்தமிட்டு கீழே இறக்கியவனை நெருங்கினான் ஒரு இளம்பெண்....



"எஸ்கியூஸ் மீ சார்.... கென் ஐ ஹெல்ப் யூ?"



"ஓ ஷூர்.... இவனுக்கான ட்ரஸ் செக்ஷன காட்ட முடியுமா?" தானும் ஆங்கிலத்திலேயே கேட்க அவள் பதில் சொல்ல வாயை திறக்கும் முன் இடுப்பில் கை வைத்து கணவன் முன்னால் முறைத்தபடி வந்து நின்றாள் பெண்....



"எஸ்கியூஸ் மீ..... நீங்க போங்க... நா பாத்துக்குறேன்" அந்த இளம்பெண்ணை அனுப்பி வைத்தவன் மீண்டும் அவன் புறம் திரும்பினாள்.



"என் கிட்ட கேட்க வேண்டியது தானே.... அவ கிட்ட எல்லாம் எதுக்கு பேசுறீங்க?" அவள் பொறாமையுணர்வில் பொங்கிய சிரிப்பை அடக்கியவன்



"யாதவ்...." என்றான் வேண்டுமென்றே அவளை தவிர்த்து....



"ப்ச்....நா பேசிட்ருக்கேன்ல?" நகர எத்தனித்தவனின் கையை பற்றி தடுக்க அவள் கையை விலக்கியவன் யாதவ்வை அழைத்துக் கொண்டு செல்ல கோபமாய் பெண்கள் இருந்த இடத்திற்கே சென்றவள் எதுவும் எடுக்காமல் பிடிவாதமாய் அமர்ந்திருந்தாள்!!!



ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ்.....



"மது...." சன்ஜய்யுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தவளை அருகில் வந்தழைக்க வேறு ஏதோ நினைவில் இருந்தவளுக்கு அவன் பேசியது கேட்கவில்லை....



"மதுமிதா...." சற்றே அழுத்தமாக அழைக்கவும் சலேரென திரும்பியவள் படக்கென எழுந்து நின்றாள்.



"சாரி சார்.... நான் கவனிக்கல"



"உன்ன ***மால் அழச்சிட்டு வர சொல்லி இருக்காரு மாறன் சார்.... கிளம்பு"



"ஏன்....ஓஹ் ரகு அண்ணா கல்யாணத்துக்காகவா..... வாவ்.... கிளம்பலாம் கிளம்பலாம்" கண்கள் மின்ன குதூகலித்தவளை இரசிப்பது போல் நடித்தவனை கண்டு பற்றிக் கொண்டு வந்தது கதிருக்கு....



"வா....." அவன் முன்னே நடக்க சன்ஜய்யிடம் விடை பெற்றவளை திரும்பி முறைத்தவன்



"எனக்கு நிறைய வேலை இருக்கு.... வாரதுன்னா வா" வார்த்தைகளை கடித்துப் துப்பினான்.



"வர்றேன் சார் கோபப்படாதீங்க" மெதுவாய் முணுமுணுத்தவள் அவன் பின்னால் நடந்தாள்.



.....



"சார் சார் ஏன் இவ்வளவு வேகமா போறீங்க?"



"ம்...." அவளை திரும்பி முறைத்தானே தவிர வேகத்தை குறைத்தானில்லை....



"இதுக்கு சன்ஜய் கூட பைக்லயே வந்திருக்கலாம்" அவள் அழுத்துக் கொள்ளவும் எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல் ஆக்ஸிலேட்டரை மிதித்தவனின் கோபத்தில் கார் முன்னை விட வேகமெடுக்க நடுங்கிப் போனாள் பெண்....



"க....க...கதிர் பயமா இருக்கு" கண்களை இறுக்க மூடி அவன் தோள்பட்டையை இறுக்க பற்றி இருந்தவள் திணறவே சட்டென வேகத்தை குறைத்தான் கதிர்.



"ஏன் சார் இவ்வளவு வேகமா போறீங்க?" தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள் பெண்.



"உங்க கோபத்த காட்ட என் உசுரு தான் கெடச்சுதா?"



"....."



"ரொம்ப வித்தியாசமா நடந்துக்குறீங்க கதிர் சார்"



"ஏன்?"



"முன்னெல்லாம் விட ரொம்ப கோபப்படுறீங்க.... நீங்க கோபப்பட்டு நா பாத்தது இல்லன்னு இல்ல... பட்...."



"பட்....."



"ஒன்னில்ல" அமைதியாகி விட்டவளை திரும்பிப் பார்த்தவன் தோளை குழுக்கி விட்டு திரும்பி விட்டான்.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மால்.....



"அண்ணி...."



"ம்...."



"ஏன் டல்லா இருக்கீங்க?"



"ஒன்னில்ல சொல்லு ஆரா"



"நாம பாய்ஸ் செக்ஷன் கொஞ்சம் பொய்ட்டு வருவோமா?"



"வா...." என்றவள் அவளுடன் நடக்க அன்று ஜீவாவுடன் வந்த நேரம் அவளை எடுக்க விடாது அவன் தூக்கி எறிந்த அந்த வெள்ளை நிற ஜெர்ஸியை தேடினாள் மாது.....



"என்ன தேட்ற?" காதிற்கருகில் கேட்ட ஜீவாவின் குரலில் திடுக்கிட்டு திரும்பியவள் அதிர்ந்து தடுமாறி விழப்பொக சட்டென அவள் இடைபற்றி நிறுத்தியவனின் செய்கையில் விதிர்விதிர்த்துப் போனாள் பெண்ணவள்.....



"அ....அ....அண்ணி எங்க?"



"அவளுக்கு வேல இருக்குன்னு உனக்கு துணையா என்ன இங்க வர வெச்சிருக்கா" துணை என்றதில் அவன் கொடுத்த அழுத்தத்தில் சிலிர்த்தது பெண் மனம்....



"க...கை....கைய எடு ஜீவா" தன் இடையில் இருக்கும் அவன் கையை எடுக்க முயற்ச்சிப்பவளை சிரிப்புடன் பார்த்தவன்



"என் லவ்வர் போட்டோ கேட்டல்ல.... அவளும் வந்திருக்கா.... வா காட்றேன்" என்றதில் வெடுக்கென அவள் கையை தட்டி விட்டவளுக்கு கண்கள் கண்ணீரில் மிதக்க அவன் காணாது திரும்பி துடைத்தவள்



"எ...எ...எங்கே?" என்றாள் போலிப் புன்னகையுடன்....





"வா....." கையை பிடித்து இழுத்துக் கொண்டு போனவன் அங்கிருந்த ஆளுயரக் கண்ணாடியின் முன் நிறுத்தி பின்னால் நின்று தோளை பற்ற புரியாமல் விழித்தாள் பெண்.



"இந்த கண்ணாடில பாரு...... அப்பறம் அந்த ஜெர்ஸி இதோ இருக்கு" அவள் கைகளில் திணித்தவன் விலகி நடக்க ஒன்றுமே புரியாமல் விழித்தவள் ஜெர்ஸியை இருக்கிப் பிடித்தவாறே அந்த கண்ணாடியின் புறம் திரும்ப அதில் அவள் பிம்பத்தை தவிர வேறு எதுவும் தெரியாததில் குழம்பிப் போனவளுக்கு அப்போது தான் உறைத்தது அவன் தன்னை தான் கூறி விட்டுச் சென்றிருக்கிறானென.....



இதழ் புன்னகைக்க வழிந்த கண்ணீரை துடைத்தவள் திரும்பி தன்னவனை தேட அவன் எங்குமே தென்படாததில் தானும் அந்த தளத்தை விட்டு வெளியே வந்தாள்.



......



மாலை ஆறு மணியை நெருங்க கிளம்ப ஆயத்தமாக அக்காள் கணவனை தேடி வந்தாள் கயல்விழி.



"அத்தான்...." யாருடனோ பேசி விட்டு துண்டித்தவன் அவள் அழைப்பில் சட்டென திரும்பினான்.



"என்ன கயல்?"



"அக்கா எந்த ட்ரஸ்ஸுமே எடுக்கல...."



"வாட்....ஏன்?"



"தெரில.... ஏற்கனவே எடுத்தத கூட தூக்கி போட்டுட்டு காருக்கு போறேன்னுட்டு பொய்ட்டா"



"வாட் ஹபெண்ட்?"



"எனக்கும் புரில அத்தான்...."தன் வலக்கை நடு விரலால் தன் புருவத்தை நீவியவன்



"நா பாத்துக்குறேன் நீ போ" என்றவனுக்கு அவள் பிடிவாதம் தெரிந்திருந்தாலும் அவளை தேடிச் சென்றான்.



......



கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தவளின் பக்கமாய் இருந்த கதவில் தன் கைகளை குற்றியவன் அவளை குனிந்து நோக்கினான்.



"ஏன் ட்ரஸ் எடுத்துகல?"



"பிடிக்கல.... உங்களுக்கு என்ன வந்துது?"



"ப்ச்.... சும்மா அடம்பிடிக்காம வந்து எடு"



"எனக்கு தேவயில்ல"



"இப்போ என்ன நடந்து போச்சின்னு இப்பிடி ரியாக்ட் பண்ணி கிட்டு இருக்க அஷ்வினி.... நான் தான் உன் மேல கோபப்படணும்.... நீ எதுக்கு கோபப்பட்டுகிட்ருக்க?"



"நீங்க ஏன் கோபப்...." பேச்சை பாதியில் நிறுத்தி விட்டாள்.



"ஏன் கொபப்படுறேனா... ஏன்டி பொய் சொன்ன?"



"சாரி...."



"ஆ ஊன்னா இத ஒன்ன கேட்டுட வேண்டியது" பொறிந்து தள்ளினான்.



"ஏன் கோபப்பட்றீங்க தெவ்?" கரகரவென கண்ணீர் வழியவும் ஹையோடாவென தான் இருந்ததில் டாக்டர் அர்ஜுன் கூறியது அப்போது தான் ஞாபகம் வந்தது.



"இந்த மாறி நேரத்துல சும்மா கோபப்படுவாங்க.... அதே நேரம் நாம திரும்ப கோபத்த காட்டினா சட்டுனு உடஞ்சி போயிடுவாங்க.... காரணமே இல்லாம கூட அழுவாங்க.... சில நேரங்கள்ல பிடிவாதம் ஜாஸ்தியா இருக்கும்.... சில நேரங்கள்ல மனச வலிக்க வெக்கிறா மாறி பேசுவாங்க மாறன்.....பட் இந்த நேரத்துல ரொம்ப கவனமா இருக்கனும்..... அவகிட்ட கோபத்த காட்ட நெனக்காத....

அதுவே அவள வேற மாதிரி சிந்திக்க வெச்சிடும்....டெலிவரி ஆகற வர அவள கண்ணாடி பாத்திரம் மாறி ஹேண்டில் பண்ணு....ஏன்னா ஹார்மோன் செய்ற மாற்றங்களால அவ வித்தியாசமா நடந்துகிட்டாலும் அவ சுமக்குறது உன் குழந்தையை.... ஸோ.... ப்ளீஸ் உன்ன கட்டுபடுத்திகிட்டு அவள கவனி"



கையை நீட்டி அவள் கண்ணீரை துடைத்து விட்டவன்



"சரி சாரி கோபப்படல.... என் செல்லம்ல.... வா ட்ரஸ் பாக்கலாம்" என்றான் சிறு குழந்தையை சமாதானப்படுத்துவது போல்.....



"உங்களுக்கு என் மேல பாசமே இல்ல.... எப்போ பாரு கோபப்பட்டுகிட்டே இருக்கீங்க...."



"ஓகே ஓகே....சாரி சாரி.... வா...."



"நா வரமாட்டேன்... போங்க அந்த பொண்ணு கிட்டவே" மூக்கை உறிஞ்சியவள் மறு புறம் திரும்ப வாய்விட்டுச் சிரித்தவன்



"நீ டிவோர்ஸ் கொடுக்காம எப்பிடி இன்னொருத்தி கிட்ட போறது கண்ணம்மா?" என்றான் குறும்புடன்.....



"வாட்....." சிலிர்த்தெழுந்தவள் அவனை பிடிக்கப் போக சட்டென தலையை பின்னோக்கி இழுத்தவன் நகர்ந்து நிற்க கதவை திறந்து கொண்டு இறங்கியவள் அவள் நெஞ்சில் குத்த அவளை தன் தோள் வளைவில் நிறுத்தியவன்



"ஜஸ்ட் பார் கிட்டிங் பேபி..... உன்ன தவிர வேறு யாருக்கும் இங்க இடமில்ல போதுமா" இதயத்தை சுட்டிக் காட்டி பேசியவனின் காதலில் தொலைந்து போனவள் அவனுள் இன்னும் ஒன்ற தோள்களில் அழுத்தத்தை கூட்டியவன் அவளுடன் மீண்டும் மாலுக்குள் நுழைந்தான்.



.......



இரவு பத்து மணி.....



வீட்டுக்குள் கூட நுழையாமல் கதிரையும் அழைத்துக் கொண்டு தங்கள் இடத்திற்கு வந்திருந்தான் ரிஷி.



"நீ உள்ள போய் ராஜனையும் ஆத்மிகாவையும் பாரு.... நா காரை பார்க் பண்ணிட்டு வந்தட்றேன்"



"ஓகே சார்" அவன் இறங்கவே காரை ஓரமாக பார்க் பண்ணி விட்டு வந்தவன் அவர்களை நோக்கி நடந்தான்.



சேரில் கயிற்றால் கட்டப்பட்டிருந்த இருவர் முகமும் அதீத சோர்வை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.



அவர்களுக்கு முன்னால் இருந்த நாற்காலியில் அமர்ந்து தன் முழங்கையை மடக்கி கண்ணத்தில் குற்றி அதில் தாடையை பதித்தவாறே அமர்ந்தவன் பார்வை இருவரையும் கூர்மையாய் துளைத்தது.



"டாக்டர் அர்ஜுன ஏன் கடத்துனீங்க?"



"...."



"நான் கேட்டா பதில் வரணும்" குரல் அதீத அழுத்தமாய் இருந்தாலும் அவன் என்னவோ நிதானமாகத் தான் அமர்ந்திருந்தான்.



"உ...உனக்காக தான் தேவா" அவன் தோரணையில் பயந்தே உளற்றினாள் பெண்.



"ஹாஹா....குட் ஜோக்.... எனக்காக வா?"



"ஆ...ஆ...ஆமா"



"என்ன மிஸ்டர்.ராஜன்.... உங்க பொண்ணு சொல்றது உண்மையா இல்லையா?"



"...."



"ஸோ....நீங்க பதில் சொல்ல மாட்டீங்க?"



"ஆ...ஆமா ஆமா...." வேகமாக தலையாட்டி வைத்தார்.



"நீங்க இவ்வளவு வேகமா சொல்றீங்க.... ஆனா பாருங்க என்னால நம்பவே முடியலயே"



"...."



"மிஸ்டர்.ராஜன்..... நீங்க உங்க மனைவிய காதலிச்சு தானே கல்யாணம் பண்ணிகிட்டீங்க?"



"...."



"ஆன்ட்டி ரொம்ப நல்லவங்க....பட் ஏன் உங்க மக இந்த வழில வாழனும்னு நெனக்கிறா?" எந்த தந்தைக்குத் தான் தன் வளர்ப்பை பற்றி பேசும் போது அவமானமாக இருக்காது???



கூனிக்குறுகிப் போனார் அவர்.....



"ஏன் ஆத்மிகா.... ஒரு வேல நீ வேற யாருக்காவது பொறந்திருப்பியோ.... ராஜன்.... சொத்துக்காக தான் டாக்டர் அர்ஜுன் மூலமா எங்கிட்ட உங்க பொண்ணு நெருங்க வந்தான்னு எனக்கு தெரியும்....கல்யாணம் ஆகி வேற ஒருத்திக்கு சொந்தமானவன்னு தெரிஞ்சும் உங்க பொண்ணு என் பின்னாடி வர்றானா.....அவக்கு பேரு என்ன தெரியுமா?" அவன் வார்த்தைகள் இருவர் மனதையும் பெரும் அதிர்வுக்குள் உள்ளாக்கியது என்றால் அது மிகையல்ல....



"அதுக்கு பேரு ***.....அதுலயும் பொண்ணுக்கு நீங்களே சப்போட்ர்டா வேற இருக்கீங்க.... உங்களுக்கும் பேரு இருக்கு....." வழிந்த கண்ணீர் கண்ணத்தில் பட்டு தெறித்து விழுந்தது பெண்ணுக்கு....



எந்தப் பெண்ணும் கேட்க விரும்பாத வார்த்தைகள்!!!



எந்த தந்தையாலும் தாங்கவியலாத சொற்கள்!!!



இந்த நிலமைக்கு தான் காரணமாகிப் போனோமே என்ற கழிவிரக்கத்தால் வந்த கண்ணீர் அருகில் அமர்ந்திருந்த ராஜனையும் உலுக்கிப் போட்டது.



தாய் இருந்திருந்தால் இந்த அவப் பெயர் வந்திருக்காதோ???



முதன் முறையாய் நெஞ்சு வலியில் துடித்தது அவருக்கு....



கண் முன்னே மகள் நடத்தையை கேவலமாக சித்தரித்துக் கொண்டிருப்பதை நிச்சயமாய் ஒரு நல்ல தந்தையால் பொறுத்துக் கொள்ள முடியவே முடியாது.....



யாரு கெட்டவர்களாக இருந்தாலும் தாய் தந்தை ஒரு போதும் கெட்டவர்களாகி விட மாட்டார்கள்.....



தன் மகவை காக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது....



நல்ல வழியில் செலுத்த வேண்டிய நானே அவளுக்கு உடந்தையாகிப் போனேனே???



காலம் கடந்து புத்தி தெளிந்தது பெரியவருக்கு.....



அவர் முகத்தில் தெரிந்த மாற்றத்திலேயே அவர் மனதை படித்தவன்



"உனக்கு சொத்து முக்கியம்னா தாராளமா என்கிட்ட கேளு.... நா கொடுத்துட்றேன்.... பட் அடுத்தவங்களுக்கு சொந்தமான பொருளை எடுத்து தனக்கு சொந்தமாக்கி அதுல வாழ நெனக்காத..... என்ன ஒரு அண்ணனா....இல்ல ஒரு ப்ரண்டா.... அதுவும் இல்லனா ஒரு வெல் விஷரா நெனச்சி நா சொல்றத கேளு...பணம் முக்கியம் தான்....ஆனா உறவுகள் அதை விட முக்கியம்....உனக்குன்னு ஒருத்தன் பிறந்திருப்பான்.... அவன தேடு.... அப்பிடி அவன கண்டு பிடிச்சிட்டன்னா.... பணம்குறது நாம கொடுக்குற மதிப்புல தான் அடங்கி இருக்குன்னு புரிஞ்சிக்குவ....பணம் முக்கியம்னா பாசம் என்னன்னு தெரியாம போயிடும்.... அதே பாசம் காதல் முக்கியம்னா பணம் ஒன்னுமே இல்லன்னு தோனும்.... தட் இஸ் லைப்...." தன் நீண்ட விளக்கத்தை முடித்து விட்டு எழுந்தவன்



"புரிஞ்சு நடந்துக்குவன்னு எதிர்பாக்குறேன்.... ஆஸ் அ ப்ரண்டா நெனச்சின்னா என் எதிர்பார்ப்ப பூர்த்தியாக்கிட்டு என் முன்னாடி வா....கதிர் அவங்கள வீட்ல கொண்டு போய் விட்டுடு...." மணிக்கட்டை உயர்த்தி மணியை பார்த்தவாறே வெளியேறியவனின் பிம்பம் பெரும் மரியாதையுடன் நெஞ்சில் குடியேறியது அந்த இருவருக்கும்....



காலம் மாறும்....சிலரை மாற்றும்!!!



இங்கு விதி ரிஷி ரூபத்தில் அவர்களுக்கு வழி காட்ட மனது அப்பழுக்கில்லாமல் சுத்தமாகிப் போனது இருவருக்கும்....



விதி வலியது!!!
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அண்ணன் வரும்வரை ஹாலில் காத்துக் கொண்டிருந்தாள் ஆராதனா....



சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் கடந்து நேரம் சரியாக பதினொன்று முப்பதை தொடவும் காலிங் பெல் சத்தம் கேட்கவும் சரியாக இருக்க அவசரமாக வந்து கதவை திறந்த தங்கையை புருவம் சுருக்கி ஒரு நொடி பார்த்தவன் கைகளை பிசைந்து கொண்டு தலை குனிந்து நிற்பவளின் தொள் பற்றி அணைத்தவாறே அழைத்துச் சென்று அமர வைத்து தானும் அமர்ந்து கொண்டான்.



"என்னடா?"



"அ...அண்ணா.... நா வந்து...."



"ம்...நீ?"



"அது அது....ஜீ...ஜீ..... ஜீவா.... அவன் எனக்கு வேணும்னா" இதே போல் அன்று ஆரவ் கேட்டதும் எதிர்பாராவிதமாய் தன்னவளை மணந்து கொண்டதும் நினைவிலாட உதட்டில் உறைந்தது புன்னகை....



எத்தனையோ கடந்து வந்து விட்டாலும் அவள் மீது அவன் கொண்ட நேசம் ஒரு போதும் குறையப் போவதில்லை....



தன் கூறியதற்கு பதில் ஏதும் கூறாமல் அமைதியாய் இருந்த அண்ணனை கலக்கத்துடன் ஏறிட்டவள் அவன் புன்னகையை கண்டு தான் சற்றே நிம்மதியானாள்.



"அண்ணா...."



"ஹாங்...."



"எனக்கு ஜீவா வேணும்"



"ஓகே வாங்கிடலாம்" சிரியாமல் சொன்னவனை பார்த்து சிணுங்கிக் கொண்டே உரிமையாய் நெஞ்சில் சாய கூந்தலை ஆதரவாக வருடி விட்டான் அண்ணன்.....



......



சோபாவிலேயே உறங்கி விட்டிருப்பளை கண்டு தனக்காக காத்துக் கொண்டு உறங்கியிருப்பது புரிந்தாலும் அவள் உடல் நிலையை கருத்திற் கொள்ளாமல் இருப்பவள் மீது கோபம் தான் வந்தது.



தலையாட்டி விட்டு ப்ரஷப்பாகி வந்தவன் அவளை கைகளில் அள்ளிக் கொண்டு போய் கட்டிலில் கிடத்த வழமையான அவள் செய்கையில் அப்படியே தொலைந்து போனான் கணவன்....



"இன்னுமே பேபியாவே இருக்க கண்ணம்மா" தன் ஷர்ட்டை இறுக்கப் பற்றி இருந்த கையை எடுத்து விட்டு அவளருகே படுக்க நெஞ்சில் தலை சாய்த்தவள்



"தேவ்...." எனவும் சிலிர்த்தது தேகம்....



ஆழ்ந்த உறக்கத்தில் கூட தன்னை உணர்கிறாளா???



உச்சந்தலையில் முத்தமிட்டவன் தன்னுடன் வளைத்து இறுக்க அணைத்துக் கொண்டு தானும் கண்ணை மூடினான்.



......



காலை.....



அன்று ரகு மற்றும் வசுவின் ரிசப்ஷன் வேறு இருக்க வரமுடியாது என அடம்பிடித்தவளை கெஞ்சி ஹாஸ்பிடலுக்கு செக் அப்புக்காக அழைத்து வந்திருந்தான் ரிஷி.



"ரிசப்ஷன் முடிஞ்சதுக்கப்பறம் வர்லாம்ல?" வீட்டிலிருந்து வெளியேறியதிலிருந்து ஹாஸ்பிடல் வரும் வரை அதே கேள்வியையே கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு சலிக்காமல் பதிலளித்துக் கொண்டே வந்தான் அவளவன்....



"ரிசப்ஷன் ஈவினிங் மூணு மணிக்கு அஷு..... இப்போ மணி பத்து தான் ஆகுது.... அதுக்கு இடைல நாம போயிடலாம்டா"



"தேவ்...." முகத்தை சுருக்கியவள் டாக்டர் அர்ஜுன் அறை வரவே வாயை மூடி விட்டாள்.



"ஹலோ அங்கிள்...."



"அடடே வா மாறா.... வாம்மா...." அமர வைத்தார்.



"போன வாரம் வர வேண்டியது.... இன்னிக்கு தான் அழச்சிட்டு வந்திருக்க?"



"சாரி அங்கிள் ஐ அம் பார்கெட்...."



"நல்லது..... " கண்டித்தாலும் அவர் குரலில் அக்கறை தெரிந்தது.



"அஷ்வினி.... வாமா" திரைக்கு பின்னால் அவளை அழைத்துச் சென்றவர் கட்டிலில் படுக்க வைத்து ஸ்கேன் செய்ய ஆரம்பிக்க யாதவ்வின் நினைவுகளில் கண்கள் கலங்கியது பேதைக்கு....



அவன் எப்போதும் போல் தான் இருக்கிறான்.... ஆனால் அவள் தான் யாருக்காகவோ அவன் நம்பிக்கையையே பொசுக்கி விட்டாளே....



அன்றும் துடித்தானே.... ஒரு முறை கூட அவனை நெருங்கக் கூட விடவில்லையே அவள்....



நம்பிக்கை என்ற ஒற்றை வார்த்தைக்கு இலக்கணமாய் இருப்பவனை எட்டி உதைத்து எவ்வளவு வலிகளை கொடுத்திருக்கிறாள்....



இருந்தும் அவன் காட்டும் நேசம்???



அந்த நேசத்திற்கான தகுதி தனக்கு இருக்கிறதா???



மனம் விம்மி வெடித்ததில் மௌனமாய் கண்ணீர் வடித்தவளை ஆறுதலாக பற்றின கணவன் கரங்கள்.....



திடுக்கிட்டு எழுந்தமர்ந்தவள் "தேவ்" என கேவிக் கொண்டே அவனை இறுக்க அணைக்க தன்னவளின் மனப் போராட்டம் புரிந்து அவள் முதுகை தடவிக் கொடுத்தான் அவளவன்.....



"ஐ லவ் யூ தேவ்.... ஐ லவ் யூ ஸோ மச்.... என்ன மன்னிச்சுடுங்க தேவ்....." தேம்பி அழுதவளிடம்



"ஷ்....கண்ணம்மா எதுக்குடா அழற.... ப்ளீஸ் அழாத" கெஞ்சினான் கணவன்....



"இல்ல தேவ்...நா உங்கள ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்கேன்.... யாது வயித்துல இருக்கறப்போ உங்கள என் கிட்ட நெருங்க கூட விடல.... யாரோ ஒருத்தருக்காக உண்மை என்னன்னு தெரியாம உங்க மேல வெறுப்ப வளத்து கிட்டது எவ்வளவு பெரிய தப்பு.... ப்ளீஸ் மன்னிச்சுடுங்க தேவ்.... "



"கண்ணம்மா எனக்கு உன் மேல கோபப்பட முடியுமா..... நா அதை எல்லாம் மறந்துட்டேன்டா.... என் மேலயும் தானே தப்பு இருக்கு.... என்ன ஆச்சுன்னு நான் சொல்லி இருக்கணும்ல.... நா சொல்லி இருந்தா நீ புரிஞ்சிகிட்டு இருந்திருப்ப"



"இல்ல என்ன சமாதானப்படுத்த சொல்றீங்க"



"நீ என்ன தப்பு பண்ணி இருந்தாலும் அத நா மன்னிச்சுட்டேன் போதுமா...."



"சாரி தேவ்.... நா இனிமே இப்பிடி பண்ணவே மாட்டேன்" அண்ணார்ந்து பார்த்தவளின் கண்ணீரை கட்டை விரலால் துடைத்து விட்டவன் மீண்டும் டாக்டர் அர்ஜுனை அழைக்க மறுபடியும் அதே போல் படுக்க வைத்தவர் அவள் வயிற்றை ஸ்கேன் செய்யத் துவக்கவும் சட்டென மனைவியின் கையை பற்றினான் தேவ்.....



கணவனை தானும் இறுக்கப் பற்றிக் கொண்டவளுக்கும் மனம் நிறைந்திருந்தது.



.....



தன் கை வளைவுக்குள்ளேயே வைத்துக் கொண்டு வெளியே வந்த இருவரையும் திடுக்கிட்டு திரும்பச் செய்தது தூரத்தே கேட்ட அந்தக் கதறல்!!!



திடீரென வீரிட்ட குரலில் பயந்து போய் கணவனை சட்டென கட்டிக் கொண்டாள் காரிகை.....



அது அவளது குரலென அடித்துக் கூறிய மனசாட்சிக்கு செவி சாய்த்தவளின் இதயம் திக்கென அதிர இன்னுமின்னும் தன்னவன் நெஞ்சுக்குள் புதைந்து போக அவளின் தேகத்தின் நடுக்கம் உணர்ந்து தனக்குள் அவள் முகத்தை அழுத்தியவன் சத்தம் வந்த திசை பக்கம் சலேரென திரும்ப மீண்டும் கேட்டது அந்த வார்த்தைகள்....



நிச்சயமாய் அது அனன்யாவின் குரலே தான்!!!



"நா அவன விட மாட்டேன்.... நா என் கையால கொல்லுவேன்..... நோ..... என் புருஷன கொன்னுட்டு நிம்மதியா அவன் பொண்டாட்டி கூட இருக்கவன நா கொன்னே தீருவேன்....என்ன விடு....என்ன விடு" கிட்டத்தட்ட ஹாஸ்பிடலே அதிர கத்திக் கொண்டிருந்தாள் அவள்....



"அஷு....அஷு...." பயத்தில் நடுங்குபவளை தனக்குள் இறுக்கினான்.



"எ...எ....எனக்கு ப.... ப....பயமா இருக்கு.... தே...தே....வ்...."



"ஒன்னில்ல....ஒன்னில்லடா...."



"இ...இல்...ல...ப...பய... மா இ....ருக்கு"



"ஷ்....அதான் நா இருக்கேன்ல.... என் கிட்ட தானேடா இருக்க....எதுக்கு பயம்?" தன் ஷர்ட்டையும் தாண்டி தன் நெஞ்சை நனைத்த கண்ணீரில் சட்டென பிரித்தவன் அவள் கண்ணங்களை தாங்கி தன் முகம் காண வைத்தான்.



"கண்ணம்மா....இங்க பாரு நா உன் கூட தான் இருக்கேன்.... என் மேல கை வைக்க முடியுமா சொல்லு" பதில் கூட பேச முடியாமல் நெஞ்சுக் கூடு அதிர்ந்ததில் சில்லிட்டுப் போனது பெண்ணவள் தேகம்....



"அஷு....ரிலாக்ஸ்டா..... ஒன்னில்ல..... ஒன்னில்ல...." மீண்டும் அணைக்க அவர்களை நோக்கி வந்தான் ஜீவா....



"ஆனந்த்" அவனை அங்கு தான் தான் வேலைக்கு அமர்த்தியது என்றே மறந்து போயிருக்க அந்நேரம் அவனை எதிர்பாராமல் கண்டதில் சற்றே குழம்பிப் போனவன் சட்டென சுதாரித்தான்.



"அண்ணா...." அவனும் அங்கு அவர்களை எதிர்பார்க்கவே இல்லை....



"என்னாச்சு....யாரு கத்தறது?" தெரிந்துமே கேட்டான்.



"ஓ...அதுவா...அது ஒரு பொண்ணுணா... கொஞ்ச நாளைக்கு முன்னால யாரோ அட்மிட் பண்ணாங்க....அவ புருஷன யாரோ கொன்னுட்டாங்க போல....அதையே நெனச்சி டிப்ரஷன் ஆகி இருக்கா.... இப்போ கொஞ்ச நாளா இப்பிடி தான் நடந்துக்குறா....மன அழுத்தம் அதிகமாகி கிட்டத்தட்ட பைத்தியமான மாறி தான் இருக்கா....நானும் எவ்வளவோ ட்ரீட்மெண்ட் கொடுத்து பாத்துட்டேன்ணா.... பட் நோ யூஸ்...." அவன் கூறி முடிக்க அமைதியாய் கேட்டிருந்தவன் அவள் மேலும் மேலும் அழுவது உணர்ந்து



"ஓஹ் ஓகேடா.... நா கெளம்புறேன்...." என்றான் மனைவியை அங்கிருந்து வெளியே அழைத்துப் போக வேண்டிய கட்டாயத்தில்....



"ஹே அஷ்விமா.... என்ன பயந்துட்டியா... அது ஒன்னில்ல...." தன் பங்கிற்கு சமாதானப்படுத்தியவன் விடைபெற அவளை அழைத்துக் கொண்டு வெளியேறினான் அவளவன்....



***



ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ்.....



ரிஷி இன்னும் அலுவலகத்திற்கு வராமலிருக்க முக்கியமான மீட்டிங் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததில் அவனுக்கு அழைத்து கலைத்துப் போய் டென்ஷனாக வெளியே நின்று கொண்டிருந்தவனின் பீபியை ஏற்றுவது போல் சன்ஜய்யுடன் சிரித்தபடி உள்ளே நுழைந்தாள் மதுமிதா.



'என் கிட்ட மட்டும் சண்ட போட்டு கடுப்பேத்த வேண்டியது....அவன்னா இளிச்சு இளிச்சு பல்ல காட்டிக்க வேண்டியது....ச்சேஹ்....' கடுப்பாய் எண்ணியவன் தலையை அழுத்தக் கோதினான்.



....



"ஓகே ஹனி நா வேலய பாக்குறேன்" என்றவனின் பார்வை வட்டத்திற்குள் விழுந்தான் கதிர்.



"அட நம்ம கதிர் சாரும் இங்க தான் இருக்காரா.... ஹனி... வா அவர் கிட்ட போய் பேசலாம்" அவள் பதில் கூறு முன் அவள் கை பற்றி இழுத்தவன் அவன் முன் போய் நிற்க அதிர்ச்சியில் விரிந்து பின் கோபத்துடன் முறைத்தன அவன் கண்கள், அந்த இணைந்திருந்த கையை பார்த்ததில்....



"ஹாய் சார்" வெண்டுமென்றெ அவள் கையை கெட்டியாக பிடித்துக் கொள்ள அவள் விலக்கக் கூட முயற்சிக்காதது கண்டு அவளை முறைத்துப் பார்த்தான்.



"சார்....ஹாய்னு சொன்னேன்"



"ஹலோ"



"சார் மாறன் சார் இல்ல..... இருந்திருந்தா அவர் கிட்டவே கேட்டிருப்பேன்.... ஒரு ஒன் அவர் டைம் தர்றீங்களா சார்?"



"ஏன்?"



"இல்ல....நானும் ஹனியும் வெளில போறதா இருக்கோம்...அதான்"



"வாட்.... இது ஆபிஸா இல்ல பார்க்கா சன்ஜய்?" இருந்த கோபத்தில் கத்தியவன் பார்வை கோர்த்திருந்த கைகளிலேயே நிலைத்தது.



"சாரி சார்....அப்போ நா மாறன் சார் கிட்டவே கேட்டுக்குறேன்...."



"வாட் தி ஹெல்.... மது....வில் யூ ப்ளீஸ் ஆபிஸ் ஒர்க்க பாக்க என்கூட வர்றீங்களா?"



"ஓகே சார்...."



"கம் ஆன்" அப்போதும் பார்வையை விலக்கினான் இல்லை....



"ஓகே ஹனி நீ போய் அப்பறமா வா.... பட் ஐ மிஸ் யூ பேட்லி" பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி வழிந்தவன் கண்ணடிக்க ஒரு நிமிடம் உறைந்து போனவள் அவள் விளையாட்டுத்தனத்தில் பக்கென சிரித்து விட



"மதூ...." சீறினான் கதிர்.



"சாரி சார்....பய் சன்ஜு...." கதிரின் முகத்தை கூர்ந்து பார்த்தவன் விசிலடித்துக் கொண்டே அகல விறுட்டென தன் கேபினுக்குள் நுழைந்தவன் தலையை அழுத்தக் கோதிக் கொண்டான்.



'ஹனியாம் சன்ஜுவாம்.... என்ன கண்ராவி....' மனதிற்குள் மட்டுமே புலம்ப கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்தாள் பெண்....



"சார்.. சா....ர்"



"வாட்?"



"எதுக்கு வர சொல்லி இருக்கீங்க?"



"ஏன் டைம் ரொம்ப கம்மியோ?"



"நோ நோ இல்ல சார்...."



"பின்ன?"



"என் பர்ஸனல் எல்லாம் நா ஏன் சார் உங்களுக்கு சொல்லனும்?"



"ஓஹ்...பர்சனல்.... ஐ அம் சாரி" அவன் குரலில் என்ன இருந்ததென்று அவளால் வரையறுக்கவே முடியாமற் போக தான் விளையாட்டாய் சொன்னது அவனை கஷ்டப்படுத்தி இருக்குமோ என நினைத்தவள்



"சாரி" என்றாள் அவசரமாக.....



"எதுக்கு?"



"இ...இல்ல வந்து நா ஏதோ...." வார்த்தைகளை முடிக்கும் முன் கையுயர்த்தி தடுத்தவன்



"ஒர்க் டைம்ல ஒர்க் பத்தி மட்டும் பேசுங்க மது" பேச்சை கத்தரிக்கவே நொந்து போனாள்....



***



ஹாலில் அமர்ந்திருந்த அனைவரின் கேள்வியையும் ஒருவாறாக சமாளித்து முடித்தவன் தங்களறைக்குள் வருவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.



"கண்ணம்மா.... அதான் ஒன்னில்லல்ல.... அப்பறமும் என்னடா?" கட்டிலில் அமர வைத்து தன் நெஞ்சில் சாய்த்தவாறே கேட்டான் ரிஷி.



"அவ இப்பிடி ஆகறதுக்கு...." பேச்சை பாதியில் நிறுத்தி கணவன் முகம் பார்த்தாள் பெண்....



"நான் தான் காரணம்குறியா?"



"இ...இல்ல தேவ் நா அப்பிடி சொல்ல வர்ல"



"அவனும் சரி அவளும் சரி இந்த உலகத்துல இருக்கறதுக்கு தகுதி இல்லாதவங்க அஷு..... அவனுக்கு தண்டன நா கொடுத்தேன்..... அவளுக்கு கடவுள் கொடுத்திருக்காரு.... இதுல நான் என்ன பண்றது?" குற்ற உணர்வாய் இருந்தாலும் அதையும் நிமிடத்திற்குள் தூக்கி எறிந்து விட்டான்.



"இல்ல....அவங்க..."



"அஷு....இனிமே இத பத்தி நாம பேச வேணாம்..... ரிசப்ஷனுக்கு ரெடியாகு.... எனக்கு மீட்டிங் ஒன்னு இருக்கு.... அத முடிச்சிட்டு இரண்டு மணிக்கு வந்தட்றேன்...."



"எங்கேயும் போகாதீங்க தேவ்.... எனக்கு பயமா இருக்கு"



"பயப்படாதடா.... ஐ அம் ஆல்ரைட்"



"ப்ளீஸ் தேவ்.... இன்னிக்கு மட்டும் என் கூடவே இருங்க ப்ளீஸ்...." வேறு வழியின்றி நெற்றிப் பொட்டை அழுத்தத் தேய்த்தவன் சரி என்று விட்டு கதிருக்கு அழைத்தான்.



"எஸ் சார்"



"மீட்டிங்க கேன்ஸல் பண்ணிடு கதிர்"



"வாட்....ஏன் சார்.... இது ரொம்ப முக்கியமான ப்ராஜக்ட்.... அவர மீட் பண்ண எவ்வளவு நாளா வெயிட் பண்ணோம்.... இப்போ ஏன் சார் திடீர்னு?"



"டூ வட் ஐ சே" அழுத்தம் தெறித்தது குரலில்...



"சாரி சார்...ஓகே...." அழைப்பை துண்டித்தவன்



"கீழ போயி சாப்புட ஏதாவது எடுத்துட்டு வரட்டுமா?" என்றான் அக்கறையாய்....



"இல்ல வேணாம்...."

அவளை ஒரு நிமிடம் பார்த்தவன் வேலைக்காரன் ஒருவனை அழைப்பேசியில் அழைத்து உணவை கொண்டு வருமாறு உத்தரவிட்டு விட்டு வைத்தவன் அருகில் அமர்ந்து கொண்டான்.
 
Status
Not open for further replies.
Top