All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரிஷியின் 'உயிரோடு கலந்தவள் 02' - கதை திரி

Status
Not open for further replies.

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 04 [ A ]



இராமநாதபுரம்....



இப்போதே தன் மகளுடன் பேசியே ஆக வேண்டுமென அடம்பிடித்துக் கொண்டிருந்தார் விஜயலக்ஷ்மி.



அஜய் அதை மறுத்துக் கொண்டிருந்தான்.



"மா...தெரிஞ்சு தான் பேசுறியா நீ... இந்த நேரத்துல போய் அவள எப்பிடி கூப்புட்றது... சொல்றத புரிஞ்சிக்கோமா"



"முடியாதுடா...எனக்கு பதறிகிட்டே இருக்கு அஜய்...."



"அஜய்...அதான் அத்த இவ்வளவு சொல்றாங்கல்ல..."



"ஏன்டி நீயும் புரியாம....டைம் என்ன பாரு...அவங்களுக்கு ரெண்டாம் ஜாமமா இருக்கும்....இப்போ போய்..."



"அஜய் எனக்கு அவ குரல் கேட்டா போதும்பா...."



"மா..." வேறுவழியின்றி தங்கைக்கு அழைத்தான் அந்த சகோதரன்...



ரிங் போய் கொண்டே இருந்ததே தவிர தூக்கும் வழியைக் காணாததால் கடுப்பானவன்



"அதான் அவ தூங்கிகிட்டு இருப்பான்னு சொன்னேன்லமா.. அவ அடண்ட் பண்ண மாட்டேங்குறா" என்றான் எரிச்சலில்...



"அப்போ அந்த தம்பிக்கு போடுடா..." என்க அவரை முறைத்தவன்



"என்கிட்ட அவனோட நம்பர் இல்லமா...." என்றான் கோபமாக....



"என்னடா இப்பிடி சொல்ற...?"



"ப்ளீஸ்மா படுமா..." கிட்டத்தட்ட கெஞ்சும் நிலைக்கே வந்து விட்டான் வருண் அஜய்.



"இன்னும் ஒரே ஒரு தடவ பண்ணிப்பாருடா" அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் மோபைல் ஒலி எழுப்பியது.



***



ராகேஷின் கேஸ் விஷயமாக ஸ்டேஷன் வந்திருந்தவனுக்கு மனம் நெருடலாகவே இருந்தது.



மீண்டும் மீண்டும் தன் தோழியின் சிரித்த முகமே வந்து கொண்டிருக்க எரிச்சலில் சலித்துக் கொண்டான்.

வேலையும் ஓடவில்லை....



அவளுக்கு அழைக்கவும் ஈகோ தடுக்க அப்படியே மேசை மேல் கவிழ்ந்து படுத்தான் ஆரவ்.



போன் அடித்துக் கொண்டே இருக்க எடுக்கும் எண்ணம் கூட இல்லாமல் இருந்தவன் அது அடித்து ஓய்ந்து மீண்டும் ஒலி எழுப்ப கவிழ்ந்தவாறே கைகளால் துலாவி எடுத்தவன் காதில் வைக்க மறுமுனையின் அழுகுரலில் திடுக்கிட்டு எழுந்தமர்ந்தான்.



"அ...அண்ணா..."



"ஆ...ஆரு எனக்கு என் அஷு வேணும்டா ப்ளீஸ்டா என்கிட்ட அவள திருப்பி குடுத்துடு...என்கூட பேச மாட்டேங்குறாடா...ப்ளீஸ்டா அவள என் கிட்ட பேச சொல்லு...

அவளுக்கு இனிமே திட்ட மாட்டேன் சொல்லுடா...." அவன் அழுத அழுகையில் ஆரவ்விற்கு இங்கே தானாக வடிந்து கொண்டிருந்தது.



"அ...அண்ணா...அ..அஷ்வி...?"கேட்க முடியாமல் தொண்டை அடைக்க அத்தோடு நிறுத்திவிட்டான்.



"ஆ..ஆரு இங்க பாருடா அவ என்ன பாக்க மாட்டன்றாடா...."



"அ...அ..அண்ணா நாங்க கிளம்பி வர்றோம்....அஷ்விக்கு ஒன்னும் ஆகாது...ஆகாது...." அண்ணனுக்கு சமாதானம் சொன்னானா இல்லை அவனுக்கு அவனே சமாதானம் சொல்லிக் கொண்டானா என்பது அந்த கடவுள் மட்டுமே அறிந்த உண்மை!!!



அழைப்பை துண்டித்தவன் அடுத்து என்ன செய்து லண்டனுக்கு டிக்கட் போட்டானென்று கேட்டால் அது அவனுக்கே தெரியாது....



எல்லாம் இயந்திர கதியில் நடந்து முடிந்து விட்டிருந்தது.



......



அஜய்யின் கையிலிருந்த போன் நழுவி கீழே விழ அதிர்ச்சியில் உறைந்திருந்தவனை தொட்டு உலுக்கினார் விஜயலக்ஷ்மி.



"அஜய்...அஜய்...அஜய்..டேய் என்னடா...?"



"அஜய்...என்னங்க" ஈஷ்வரியும் சேர்ந்து கொள்ள நினைவுக்கு வந்தவனின் கண்களிலிருந்து கரகரவென கண்ணீர் கொட்டத் துவங்க பயந்து போயினர் இருவரும்....



"என்னடா....எதுக்குடா அழற... டேய்...." அவர் கோபத்தில் கத்த அவரை இறுக்க அணைத்துக் கொண்டவன் சிறு பிள்ளை போல் ஏங்கி ஏங்கி அழுதான்.



"அ...அம்மா....அ...அஷ்வி...அஷ்வி..."



"என்னடா என்னாச்சு அஷ்வாக்கு?"



"அ...அஷ்வி...அஷ்விக்கு ஆக்ஸிடென்டாம்மா...." அவன் விலக நெஞ்சை பிடித்துக் கொண்டு அப்படியே அமர்ந்த விஜயாவை



"அம்மா...."என கத்திக் கொண்டே தாங்கிப் பிடித்தான் அஜய்.....



லண்டன்.....



ஹாஸ்பிடல்....



அன்று பார்த்துத் தானா அவன் வெள்ளை ஷர்ட் அணிய வேண்டும்???



அது மட்டும் போதாதென்று அவன் முகத்தில் வேறு இரத்தக் கரை!!!



கை முழுதும்....



அவனுக்கு கழுவும் எண்ணம் வர வில்லையோ???



அப்படித்தான் இருந்தது அவன் தோற்றமும்...



கண்கள் நிலைகுத்தி உயிரிருந்தும் பிணமாக வெறித்து அமர்ந்திருந்தவனுக்கு ஆசை மகனின் ஓலம் கூட செவியை தீண்டவே இல்லை...



அவன் நினைவெல்லாம் அவள் மனையாளின் கடைசி வார்த்தைகளிலேயே தங்கி இருந்தது.



"ஐ...ல...ல...லவ் யூ மா...மாமா" இதை சொல்லத் தான் மீண்டும் கண் விழித்தேன் என்பது போல் மீண்டும் மூடிக் கொண்டது அவளவனின் விழிகள்!!!



ஹாஸ்பிடல் வந்தே முழுதாக ஐந்து மணி நேரம் கடந்திருந்தாலும் உள்ளே போனவர்கள் வெளியே வரும் எண்ணமே இல்லாமல் தான் இருந்தனர்.



தன்னை பார்த்து பயந்து கதிரிடம் ஒட்டிக் கொண்டு கதறி அழும் மகனையாவது பார்க்க மாட்டானா???



காதல் சொல்லப்பட்ட அழகான தருணம் என அனைவரும் சொல்லலாம்....



ஆனால் அவனால் தங்கள் தருணத்தை நினைத்துக் கூட பார்க்க முடியாதே...



......



முழுதாக இரண்டு நாள் முடிந்திருக்க அவளிடமும் எந்த மாற்றமுமில்லை அவளவனிடமும் எந்த மாற்றமுமில்லை...



குடும்பத்தார் அனைவரும் வந்திருந்ததுவே அங்கு கூடுதலாக இருந்தது.



அவளின் ஹார்ட் பீட் அளவு கூடுவதும் குறைவதுமாக இருக்க அவள் நிலையை பற்றி டாக்டர்களால் கூட ஊகிக்க முடியாமற் தான் போயிற்று!!!



முதல் நாள் எப்படி இருந்தானோ அதே அமைப்பில் அதே உடையில் இருந்தவனை பார்த்து அனைவருக்கும் அப்படி ஒரு அதிர்ச்சி...



ஒரு பொட்டுத் தூக்கம் கூட இல்லை....



நிலைகுத்திய கண்கள் அதே நிலையிலேயே இருக்க அவனை பார்த்து இன்னும் பயந்து விட்டனர் அனைவரும்.



சாதாரண சத்தத்திற்கு கூட விழிப்பவன் இன்று காதிற்கருகில் மகவின் அழுகுரலுக்கு கூட அவனிடம் எந்த பிரதிபலிப்புமே இல்லை!!!



தாய் தந்தையரை கேட்டு ஏங்கி அழுத அண்ணன் மகனை கண்ணீருடனேயே அணைத்துப் பிடித்திருந்தான் ஆரவ்.



ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையிலிருக்க நர்ஸ் ஒருவரின் வீல் என்ற அலறல் சத்தத்தில் அடித்துப் பிடித்துக் கொண்டு உள்ளே ஓடினார் அங்கே ரௌண்ட்ஸ் வந்து கொண்டிருந்த ஒரு வைத்தியர்.



அடித்துப் பிடித்துக் கொண்டு உள்ளே ஓடிய வைத்தியரை பார்த்து அனைவருக்கும் ஒரு நிமிடம் இதயம் நின்று துடித்தாலும்

அவனிடம் சிறு அசைவு கூட ஏற்பட வில்லை என்பது தான் அதிசயமே!!!



தன் நண்பன் நிலை பார்த்து அதிகமாக அதிர்ந்து போன வருண் அவசரமாக அவன் பக்கத்தில் செல்லவும் டாக்டர் கலவரத்துடன் வெளியே வரவும் சரியாக இருந்தது.



அனைவர் கவனமும் அவர் மேல் திரும்ப



"ஷீ இஸ் நோ மோர்" அவர் முடிக்கும் முன் அவர் சட்டையை பிடித்திருந்தான் அஜய்.



"பொய் சொன்னா கொன்னுடுவேன்டா உன்ன....என் அஷ்வி சாகல....சாகல....சாகல...." வெறி பிடித்தவன் போல் கத்த அவனை பிரித்தெடுப்பதற்குள் எல்லோரும் ஒருவழியாகி விட்டனர்.



மூளையில் மின்னல் வெட்ட சடாரென திரும்பி தன் அண்ணனை தேடிய ஆரவ்விற்கு மூளை அப்படியே வேலை நிறுத்தம் தான் செய்து விட்டதோ???



ஆம்....இருந்த இடத்தில் அவன் இல்லை!!!



"அண்ணா...." அவன் வாய் தானாக முணுமுணுக்க அந்த சத்தத்தில் திரும்பிப் பார்த்த வருண்



"நோ" என கத்திக் கொண்டே உயிர் நண்பனை தேடி ஓடினான்.



அவன் அவ்வளவு தூரமெல்லாம் சென்றிருக்க வில்லை....



ஆனால் அவனை சுற்றி ஆட்கள் இருக்கவும் வருணுக்கு இன்னும் பயம் அதிகமாகி விட அவனை நோக்கி வி்ரைந்தான்.



ஆனால் அவன் இருந்த நிலை???



கீழே அமர்ந்து தலையில் அடித்துக் கொண்டு தன்னால் தான் எல்லாம் என அரற்றிக் கொண்டிருந்தவனை பார்க்க தலையில் இடி விழுந்தது வருணுக்கு....



மின்னல் வேகத்தில் அவனை நெருங்கியவன் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு தானும் அழுதான்.



"ஏன்டா இப்பிடில்லாம் பண்ற....ப்ளீஸ் ஆர்.கே எனக்கு பயமா இருக்குடா..."



"இல்ல...இல்ல என்னால தான் எல்லாம்....அவள நானே கொன்னுட்டேன்.... நானும் உயிரோட இருக்க கூடாது....நானே என் அஷுவ கொன்னுட்டேன்...." பைத்தியம் தான் பிடித்து விட்டதோ இவனுக்கு???



அப்படித்தான் எண்ணினர் கூடியிருந்த அனைவரும்....



"மச்சான் ப்ளீஸ்டா...." கதறி அழுதான் வருண்...



"நானே கொன்னுட்டேன்..." இது மட்டுமே அவன் வாயிலிருந்து வந்து கொண்டிருந்தது.



....



இங்கே மீண்டும் பரபரப்பு.....



நர்ஸின் கத்தலில் மீண்டும் உள்ளே விரைந்தார் டாக்டர்.



சற்று முன் பார்த்த உயிரற்ற உடலா இது???



வைத்தியருக்கே ஆச்சரியம் தாங்க முடியவில்லை.....



ஹார்ட் பீட் சீராக இயங்கிக் கொண்டிருந்தது.



"தேங்க் காட்...." ஆனந்தக் கண்ணீரை துடைத்துக் கொண்டு வெளியே வந்தவர் ரிஷியின் நிலை பார்த்து திடுக்கிட்டுப் போனார்.



நிலைமையின் தீவிரம் உணர்ந்து அவள் உயிருடன் திரும்பி விட்டாள் என சொல்லியும் அவனிடம் மட்டும் எந்த மாற்றமுமே இல்லை....



அவனுக்குத் தான் அது எட்டவே இல்லையே!!!



திடீரென செவிகளில் தீண்டிய தன்னவளின் குரலில் வற்றிப் போயிருந்த கண்ணீர் கரகரவென வழிந்தாலும் அவன் திரும்பவே இல்லை...



அவள் காற்றோடு கரைந்து போவதை பார்க்கும் சக்தி அவனுக்கு இல்லவே இல்லை....



மறுபடியும் கேட்க காதை இறுக்க மூடிக் கொண்டான்.



ஆனால் அவள் நின்றிருந்தாள் உண்மையிலேயே!!!



ட்ரிப்ஸை பிய்த்து எரிந்து விட்டதற்கு சான்றாய் கையில் இரத்தம் வடிந்து கொண்டே இருந்தது.



தலை மற்றும் கைகளில் கட்டு போடப்பட்டிருந்த்து.



அவளுக்கு நிற்கவே முடியவில்லை போலும்....



ஆனாலும் அவனவளுக்காக நின்று கொண்டிருந்தவளுக்கு அவன் கண்ணீரை பார்த்தே கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.



சட்டென அவன முன் மண்டியிட்டு அமர்ந்தவள் தன்னவன் முகத்தை கைகளில் ஏந்தி



"நோ தேவ்....நா உயிரோட தான் இருக்கேன்....என்னப் பாருங்க தேவ்....." அவளும் அழுதாள்.



"நானே கொன்னுட்டேன்...." மீண்டும் மீண்டும் அவன் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்க....



பேசிப் பார்த்தாள் முடியவில்லை.....



உலுக்கிக் கூட பார்த்து விட்டாள்....



ஊஹூம்....அவன் தன் நிலையிலிருந்து இறங்குவதாகவே இல்லை...



முடியாமல் தன் பலத்தையெல்லாம் திறட்டி விட்டாள் ஒரு அறை!!!



அனைவருக்கும் இதயம் நின்று துடிக்க தன் முன் ஏங்கி ஏங்கி அழுதவளை அப்போது தான் உணர்ந்தான் அவன்.



நம்ப முடியாமல் நடுங்கும் விரல்களால் அவளை தொட நீண்ட கைகளை சட்டென இழுத்து தன் கண்ணத்தில் பதித்தவள் அவனையே பார்த்திருந்தாள்.



தன்னவளை உணர்கிறான்!!!



அப்போ கனவல்ல.... நிஜம்தானா???



"அஷு....."அவன் வாய் முணுமுணுக்க ஆமோதிப்பாய் தலையசைத்தவள் அடுத்த நிமிடம் அவளவனின் இறுகிய அணைப்பிலிருந்தாள்.



காற்றுப்புக முடியாதளவு இருந்தது அவன் செய்கை!!!



தொடரும்....



20-05-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 04 [ B ]



ஒரு மாதத்திற்குப் பின்......



இந்தியா.....



ஏதேதோ யோசனையில் ஆழ்ந்தவாறே தன் மகனை தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் அஷ்வினி....



எல்லாம் சரியாகத் தான் இருந்து கொண்டிருக்கிறது...



ஆனாலும் ஏதோ ஒன்று குறைவதாகவே தெரிந்தது பேதைக்கு....



அன்பு காட்டுகிறான் தான்... ஆனாலும் எதுவோ ஒன்று இடித்தது.



அவள் எழு முன் ஆபிஸ் சென்று விடுபவன் அவள் உறங்கிய பின் தான் வருவான்...



லண்டனில் இருந்ததால் வேலை அதிகமென்று சொல்லியிருக்க இவளும் அதற்கு மேல் ஒன்றும் கேட்க வில்லை....



இடையில் மறக்காமல் சாப்பிட்டாயா என்றெல்லாம் கேட்பான் தான்....



இருந்தாலும்????



இன்று எப்படியாவது பேசி விட வேண்டும் என முடிவெடுத்த பிறகே சற்று ஆசுவாசமானது மனது.....



இரவு பத்து மணிக்கு மேல் வந்தவன் அவளைப் பார்த்து புன்னகைத்து விட்டு பாத்ரூம் சென்று விட கடுப்பாகி விட்டாள் அவன் மனையாள்.



"நா இங்க ஒருத்தி குத்துக்கல் மாறி உக்காந்திருக்கேன்.. கண்டுக்குறானா பாரு..... சரியான டெர்ரர் ஆபீஸர்.... கமாண்டர்..... வரட்டும் இன்னிக்கு இருக்க அவனுக்கு...." அவனுக்கு அர்ச்சணை பண்ணிக் கொண்டிருந்தவள் கதவு திறக்கும் சத்தத்தில் கப்பென வாய் மூடிக் கொண்டாள்.



உடை மாற்றி விட்டு லேப்டாப் முன் அமரப் போனவனை மறைத்தவாறு வந்து நின்றாள் அவள்....



"என்ன அஷு?" என்றான் அமர்த்தலாக....



"எதுக்கு இப்பிடி பண்றீங்க?"



"நா என்ன பண்ணேன்?"



"நீங்க....நீங்க....?" அவளுக்கு எப்படி கேட்கவென்றே தெரியவில்லை....



அவளுக்கு விளங்கித் தொலைக்க வேண்டுமே முதலில்....



"நான்.....?" எடுத்துக் கொடுத்தான்.



"ப்ச்...ஏன் நீங்க என்கூட சரியா பேச மாட்டீங்குறீங்க?" கேட்கும் போதே தொண்டை அடைத்து கண்ணீர் வந்து விட்டது அவனவளுக்கு....



அவளால் உணர்ந்து கொள்ளவே முடிவில்லை....



"தேவ்...." அவனை கட்டிப் பிடித்தே அவள் கதற தானும் இறுக்க அணைத்து அவள் கூந்தலை ஆதறவாக வருடிக் கொடுக்க அவள் அழுகை இன்னுமின்னும் கூடிற்று....



"ஷ்....எதுக்காக இப்போ அழற?"



"நீங்க எதுக்காக என்ன விட்டு தள்ளி தள்ளி போய்கிட்டு இருக்கீங்க?" அவனை அண்ணார்ந்து பார்த்தவள் மூக்கை உறிஞ்சிக் கொண்டே கேட்டாள்.



"நா உன் கண்ணு முன்னாடி இருக்கும் போதே நா விலகினா வலிக்குதுல.... நீ பண்ண காரியத்துக்கு எனக்கு எப்பிடி வலிச்சிருக்கும்னு யோசிச்சியாடி?" ஆக்ரோஷமாய் அவளை உலுக்க விக்கித்துப் போனாள் அவள்.



இதனை எப்படி சமாளிக்க???



ஏதாவது சொன்னாலும் ஏற்றுக் கொள்வானா என்பது சந்தேகமே...



எதுவும் பேசாமல் இதழ் கடித்து குனிந்து கொள்ள



"எ....என் உசுறே போயிடுச்சுடி" அவன் குரல் கரகரத்து அந்த சம்பவத்தை நினைத்தவனின் உடல் வெளிப்படையாகவே நடுங்க அவன் நெஞ்சில் இறுக்கமாக அணைத்துக் கொள்ள காற்றுக் கூட புக முடியாதளவு அணைத்துக் கொண்டான் தன்னவளை....



"ஐ லவ் யூ தேவ்" அவள் வார்த்தைகளில் அவன் உடல் சிலிர்க்க அவன் பிடி இன்னும் இறுகியது.



"யாரோ மதுவ கல்யாணம் பண்ணிக்க சொன்னாங்களே?" குறும்பு கூத்தாடியது அவன் குரலில்....



"தேவ்...." சிணுங்கியவள் அவனுள் தன்னை ஆழ்மாய் புதைத்துக் கொண்டாள்.



"சாரி தேவ்"

"தேவ்" அண்ணார்ந்து அவன் முகம் நோக்க அவளின் முன் உச்சி முடியை ஒதுக்கி அவள் நெற்றியில் மென்மையாக முத்தம் பதிக்க கண்களை இறுக்க மூடிக் கொண்டாள் அவன் மனையாள்!!!



***



"சித்து க்வீக்....." பிஸ்டல் துப்பாக்கியை முதுகுக்கு பின்னால் சொறுகியவாறே தன் நண்பனுக்கு வாக்கி டாக்கியில் தகவல் அறிவித்து விட்டு முன்னால் ஓடிக் கொண்டிருந்தவனின் பின்னால் ஓடிக் கொண்டிருந்தான் ஆரவ் தேவமாறுதன்.



((ஓடிக் கொண்டிருந்தது சாட்சாத் நம்ம ராகேஷேதானுங்க...

அது எப்பிடி மாடாடிகிட்டான்னு யோசிக்கிறீங்களா....

இருங்க நண்பா....

அது எப்பிடின்னா....

மொறக்காதிங்க சொல்லிட்றேன்....

அது....நம்ம ஹீரோ... ச்சி ஹீரோயின் நம்ம ஹீரோவ தேடி லண்டன் போனாங்கல்ல...அப்போ ஆரு வேற சித்து கிட்ட சபதமெல்லாம் சொன்னானே.... ஞாபகமிருக்கா நண்பா....

அப்பறம் அவன் பொண்டாட்டி கிட்ட வேற பர்மிஷன் கேட்டு கெஞ்சிகிட்டு இருந்தானே...



அதுக்கப்பறம் ஸ்டேஷன் பொய்ட்டு அவனுக்கு கால் வர்றதுக்கு முன்னுக்கு சில வேலைகள செஞ்சிட்டு தான் உக்காந்து கிட்டு இருந்தான்.



அவன் எடுத்திருந்ந ஆர்கன் கடத்தல் கேஸுகெகு பின்னால ராகேஷ் இருக்காங்குறத கண்டு பிடிச்சிட்டான்.



அதுக்கப்பறமா ராக்கேஷ கண்டு புடிக்கிறதுக்குள்ள தான் லண்டன் பொய்ட்டானே...



இந்த ஒரு மாசதுக்குள்ள தான் கண்டு புடிச்சிருக்கான்.



அவன தான் இப்போ கண்டு புடிச்சி விரட்டிகிட்டு இருக்கான்.



எப்பிடியும் புடிச்சிருவான்னு தான் நினக்கிறேன்...



பாக்கலாம் நண்பா...))



"ஆரு நா வேற பக்கம் வந்துகிட்டு இருக்கேன்..... நீ ஜாக்கிறத மச்சான்" அவன் அன்பில் நெகிழ்ந்தவன்



"ஓகேடா" என்றுவிட்டு ராகேஷின் காலுக்கே குறி பார்த்து சுட கீழே விழுந்தாலும் அவன் வரு முன் எழுந்து எக்கி எக்கி ஓட இகழ்ச்சியாய் வளைந்தது ஆரவ்வின் உதடுகள்.....



மீண்டும் காலுக்கே சுட உருண்டு போய் கீழே விழுந்தான் அவன்....



***



"மாம்...." மகன் சிணுங்கவும் தன் அணைப்பிலிருந்து விலகப் போனவளை தன்னுள் இறுக்கினான் அவள் கணவன்.



"தேவ் விடுங்க.... யாது அழறான்"



"அவன் தூங்கிடுவான்...நீ இரு"



"மாம்..." அவன் அழத் தயாராக



"விடுங்க தேவ்" என்றவள் திமிறி விடுபட்டுச் செல்ல அவளை முறைத்தான் அவன்.



மகனை தூங்க வைத்து விட்டு மறுபடி அவனிடம் வர அவன் முறுக்கிக் கொண்டு திரும்பி நிற்க வாய் பொத்திச் சிரித்தவள் அவனை பின்னாலிருந்து அணைத்துக் கொள்ள அவள் கையை தட்டி விட்டான்.



சிரித்துக் கொண்டு மறுபடியும் அணைக்க மீண்டும் தட்டி விட இம்முறை அமைதியாக நின்றிருக்கவும் அவள் கையை எடுத்து தானே அணைத்தவாறு வைத்தான் அந்தக் காதல் கணவன்.



......



தன்னவன் நெஞ்சில் சுகமாய் கண்மூடி சாய்ந்திருந்தாள் அஷ்வினி ரிக்ஷிதா....



அவள் இடையை வளைத்து தனக்குள் அடக்கி அவள் தலையில் தன் நாடி பதித்து அணைத்திருந்தான் அவள் கணவன்.



"அஷு"



"ம்...."



"நீ மாமான்னு சொல்லும் போது எவ்வளவு கிக்கா இருக்கும் தெரியுமா?"



"போங்க தேவ்" வெட்கம் பிடுங்கித் தின்றது அவளுக்கு....



"ஒரு தடவ கூப்புடுடி"



"முடியாது தேவ்"



"ஏன்டி?"



"ஊஹூம் நா மாட்டேன்..."



"ப்ளீஸ்டி ஒரே ஒரு தடவ"



"இல்ல முடியாது எனக்கு அது சடனா வர மாட்டேங்குது தேவ்" அவள் அண்ணார்ந்து பார்க்க அவள் முகத்தில் தன் விரல்களால் கோலம் போட்டவன் அவள் உதடுகளுக்கு வந்து இளைப்பாற அவன் கண்கள் தாபமாய் மொய்த்தது அவளை...



அதில் செவ்வானமாய் சிவந்து போனவள் அவனுள் தன்னை மறைக்க முயல அதற்கு விடாமல் அவளிதழ்களை கவ்வி சுவைத்தான் அவளின் கமாண்டர்.



***



தன் அன்புக் கணவனை அணைத்து அழுது கொண்டிருந்தாள் கயல்விழி.



அவளை சமாதனப்படுத்தி ஓய்ந்து போனவன்



"அம்மு....போதும் நிறுத்துடி....அதான் எனக்கு ஒன்னும் ஆகலல்ல?"



"ஆகியிருந்தா....அந்த ராகேஷ் எவ்வளவு மோசமானவன்...."



"அதான் அய்யா என்கவ்ண்டர்ல போட்டு தள்ளிட்டேன்ல?"



"போடா"



"முதல்ல அழறது நிறுத்து அம்மு" அவனுக்காக கஷ்டப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டாள் அவன் மனையாள்.



"நாளக்கு அய்யாக்கு ப்ரமோஷன் இருக்கு... நீ என்னடான்னா அழுதுகிட்டு இருக்க?" அன்பாக கடிந்து கொண்டவன் அவள் கண்ணீரை துடைத்து நெற்றியில் இதழ் பதித்து விலகினான்.



காலை.....



அந்த பிரம்மாண்டமான பெரிய ஹாலில் வரிசையாக அமர்ந்திருந்தனர் ரிஷியின் குடும்பத்தினர்.



இன்று ஆரவ்விற்கு பாராட்டு விழாவுடன் சேர்த்து ப்ரோமஷன் வேறு....



எ.ஸி யில இருந்து டி.ஸி யா பதவி ஏற்க போறான்.



பேசிக் கொண்டிருந்த அஜய்யின் பார்வை ரிஷியை தொட்டு மீண்டது.



இருவர் உதடுகளிலும் அழகான புன்னகை...



இராமநாதனின் உலகை விட்டு பிரிந்து விட்டதில் அங்கு யாருக்கும் எந்த பாதிப்புமே இல்லை போலும்....



விழா ஆறம்பமானது.



தன் சகோதரன் தன் கண் முன்னாலேயே வளர்ந்து பாராட்டு வாங்குவதை கண் கலங்க பார்த்துக் கொண்டிருந்தான் ரிஷிகுமார் தேவமாருதன்.



முகத்தில் அப்படி ஒரு தேஜஸ்!!!



தன் பதக்கத்தை வாங்கிவிட்டு தன் அண்ணன் முன் வந்தவன் அவனுக்கு அணிவிக்க அவனை இழுத்து அணைத்துக் கொண்டான் ரிஷி.



"தேங்கஸ்ணா....தேங்க்ஸ் பார் எவ்ரிதிங்....." நா தழுதழுத்தது.



"...."



"ஐ லவ் யூ ணா.....யூ ஆர் மை டாட் அண்ட் யூ ஆர் மை ரோல் மாடல்" அவன் கண்களிலிருந்து கரகரவென கண்ணீர் கொட்ட அதை துடைத்து விட்டவன்



"அப்பாவுக்கு யாராவது தேங்க்ஸ் சொல்லுவாங்ளா?" அவன் கேட்ட கேள்வியில் அவனை மறு படி தாவி அணைத்து கதறினான் ஆரவ்.



வெளிவரவிருந்த கண்ணீரை இமை சிமிட்டி அடக்கியவன் தானும் அவனை அணைத்துக் கொண்டான்.



எல்லோர் மனதும் கசிந்தது.



"ப்ரமோஷன் வாங்கிட்ட... பட் ராகேஷ் உயிரோட தான் இருக்கான் நீ அவன போட்டு தள்ளல" திடுக்கிட்டு விலகியவன் தன் அண்ணனை அதிர்ந்து பார்த்தான்.



யாருக்குமே தெரியாத விடயம் இவருக்கு மட்டும் எப்படி தெரிந்து விடுகிறது???



இருவர் உதடுகளிலும் மர்மப் புன்னகை!!!



அவன் யோசித்துக் கொண்டிருக்க அதை உணர்ந்தோ என்னவோ



"உன்னோட சின்ன மூவும் எனக்கு தெரியும்" என்றான் அமர்த்தலாக....



"பட் அண்ணா....அது எப்பிடிணா உங்களுக்கு மட்டும் கரெக்டா வந்துடுது?" அவனால் வியக்காமல் இருக்க முடியவில்லை....



அவனை பார்த்து கண் சிமிட்டியவனின் பார்வை வட்டத்திற்குள் அப்பொழுது தான் விழுந்தான் அஜய்.



அவன் தன்னிடம் ஏதோ கேட்கப் போவது போல் உணர்ந்தாலும் இன்று வரை அவனால் அதற்கான சந்தர்ப்பத்தை கொடுக்கவே முடியவில்லை...



இன்று மட்டும் ஏனோ பேசத் தோன்றிட அவன் கால்கள் தானாய் அவனிடம் நகர்ந்தது.



அஜய்யை நெருங்க இரு அடிகளுக்கு முன்னால் திடிரென இடையில் வந்து நின்றாள் அவனின் அருமை பத்தினி.



நடை அப்படியே தடை பட்டுப் போக அவன் பார்வை ரசனையாய் அவள் மேல் படிந்தது.



இளம் பிங்க் நிற டிசைனர் சாரியில் தேவதையாய் தெரிந்தவளை உரிமையாய் வருடியது அவன் பார்வை....



அவளுக்கு அதுவெல்லாம் உறைக்கவே இல்லை போலும்....



"தேவ்...." என்றாள் அவனை தடை செய்து விடும் நோக்கில்...



அவனுக்கும் அஜய்க்கும் முதலிலிருந்தே ஆவதே இல்லை...



இதில் இந்த அழகிய தருணத்தில் ஏதும் ஆகி விடக் கூடாதே என்றிருந்தது அவளுக்கு...



கணவனையே தொடர்ந்திருந்த கண்கள் அவன் அஜய்யின் பக்கம் நகரவும் திக்கென்றானதில் அவன் முன் வந்து விட்டிருந்தாள்.



"அஷு....எ" அவன் பேசத் தொடங்குவதற்குள் தன் தலையை திருப்பி அஜய்யிடம் பேசினாள் பாவை....



"அஜய்...உன்ன அண்ணி தேடுறாங்கடா...நீ இங்க என்ன பண்ணிகிட்டு இருக்க?" அவனை அனுப்பி விடும் வேகம் அவளிடம்....



அவள் கூற்றில் அவள் மணாளனின் கண்களில் குழப்பம்...



அஜய் சென்று விடவே அவன் புறம் திரும்பினாள் அவள்...



அவன் நெற்றி சுருங்கி இருப்பதை பார்த்து அசடு வழிந்தவள் மெதுவாக நகரப் போக அவளை எட்டிப் பிடித்து நிறுத்தியிருந்தான் ரிஷி.



"அஷு...." என்க அவன் புறம் திரும்பி



"என்ன தேவ்?" என்றாள் எதுவும் நடக்காதது போலவே....



"எதுக்கு இப்பிடி நடந்துக்குற?" அவன் கண்கள் கூர்மையடைந்தது.



"எப்பிடி?" அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு அவனிடமே அவன் கேள்வியை திருப்பிப் படிக்க பல்லை கடித்தான் கணவன்.



"நா என்ன கேக்க வர்றேன்னு புரியல?"



"இல்லயே தேவ்" உதட்டை பிதுக்கியவள் அவன் உணரும் முன் மின்னலென மறைந்திருந்தாள்.



.....



"கங்க்ராட்ஸ் புருஷா" முகம் விகசிக்க வந்து நின்றவளை சட்டென இழுத்து அணைத்தான் ஆரவ்.



"ஆரு...என்ன பண்ற விடு என்ன.... பாரு எல்லோரும் நம்மளயே பாக்குறாங்க" அவனிடமிருந்து விடுபடத் திமிறிக் கொண்டே இருந்தவளை சிரிப்புடன் இன்னுமின்னும் இறுக்கினான் அந்தக் காதல் கணவன்.



"ஆ....ரூ....." பல்லை கடித்தவள் அவன் நெஞ்சில் கை வைத்துத் தள்ளி விட்டு அவனை முறைத்தாள்.



"ஏன் அம்மு குட்டி முறைக்குற?" சிரித்தவன் மீண்டும் அணைக்கப் போக இன்னும் இரண்டடி தள்ளிப் போனாள்.



"அங்கேயே நின்னுகிட்டு பேசு... கிட்ட வந்த கொன்னுடுவேன்"



"ஓகே ஓகே கூல்" உடனே சரண்டர் ஆகி விடவும் தான் அவள் உதடுகளில் மெல்லிய புன்னகை....



"சிரிக்கிறியா....வீட்டுக்கு வா வெச்சிக்குறேன்" கடுப்புடன் மொழிந்தவன் "சித்தா....." கத்திக் கொண்டே ஓடி வந்த யாதவ்வை கைகளில் அள்ளிக் கொண்டான்.



தொடரும்.....



21-05-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 05 [ A ]



"சித்தா....." கத்திக் கொண்டே ஓடி வந்தவனை கைகளில் அள்ளிக் கொண்டான் ஆரவ்.



"சித்து....மாம் கோபமா இருக்காங்க" அவன் புகார் வாசிக்க அப்பொழுது தான் வந்து நின்ற நண்பியை சிரிப்புடன் ஏறிட்டான்.



"டேய் அவன இறக்கி விடு....வர வர ரொம்ப பிடிவாதம் பிடிச்சிக்கிட்ருக்கான்... எது சொன்னாலும் குறுக்க குறுக்க பேசிகிட்டு.... விடு அவன முதல்ல...." மூச்சு விடாமல் படபடவென பொரிந்து கொட்டியவளை அடக்கினாள் கயல்.



"அக்கா....அக்கா...மெதுவா" அவளுக்குமே சிரிப்பாகத் தான் இருந்தது.



தங்கையை ஒரு பார்வை பார்த்தவள் நண்பனிடம் திரும்ப அவனும் சிரிப்பது கண்டு கடுப்பாகி விட்டாள்.



"இப்போ எதுக்குடா சிரிக்குற?" அவனிடமும் காய்ந்தாள்.



"இப்போ எதுக்கு இவ்வளவு கோபம்.... என்ன ஆச்சின்னு சொல்லு"



"அவன் ட்ரஸ் எல்லாம் அழுக்காகிடுச்சுடா... மாத்தி விட்றேன் வான்னு சொல்றேன்.... என்னால முடியாதுன்னு மறுத்துகிட்டு இருக்கான்" இப்போது அவள் புகார் வாசிக்க சற்று சத்தமாகவே சிரித்து விட்டான்.



அவனை முறைத்தவள் திரும்பிப் போக எத்தனிக்க அவளவனுடன் மோதி தடுமாறி விழப் போக அவளை பிடித்து நிறுத்தி வைத்தவன் அவள் முகம் பார்த்தான்.



அவ்வளவு தான் நடந்ததை அப்படியே ஒப்பிக்க தொடங்கி விட்டாள் பாவை....



"தேவ்....என்னால முடில....இவன கொஞ்சம் என் பேச்ச கேக்க சொல்லுங்க" சிணுங்கினாள் தன்னவனிடம்....



"என்னடா என்னாச்சி?"



"இவன ட்ரஸ் மாத்திக்க சொன்னா கேக்க மாட்டேங்குறான்" மனைவியின் கூற்றில் மகனைப் பார்த்தான் அந்தத் தலைவன்.



"நோ டாட்....நா எதுவும் பண்ணல.... மாம் தான் என்ன திட்றாங்க" இப்போது மகன்.



"அம்மா பேச்ச எதுக்காக கேக்க மாட்டேங்குற யாது?" சற்று கண்டிப்பு இருந்ததோ!!!



உதட்டை பிதுக்கியவன் சட்டென தாயிடம் தாவி அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கொள்ள இப்போது தன்னவனை முறைத்தாள் பேதை...



"என்ன எதுக்குடி முறைக்கிற?"



"இப்பிடி தான் குழந்த கிட்ட கோபமா பேசுவீங்களா.... பாருங்க இப்போ பயந்துட்டான்"



"யாரு....அவன் பயந்துட்டானா....?"



"ஆமா....வாடா கண்ணா நாம போலாம்....இந்த கமாண்டருக்கு இதே வேலயா போச்சு" குழந்தையின் முதுகை வருடியவாறே அவள் நகர அண்ணன் நிலையை பார்த்து கத்தி கத்தி சிரித்தான் ஆரவ்.



"என் மருமக உன்ன படுத்தி எடுக்குறப்போ தெரியும்டா.... கயல் உன் புருஷன கொஞ்சம் கவனிமா" சொல்லி விட்டு நகர்ந்தவனின் உதட்டில் புன்னகை உறைந்திருந்தது.





இரவு.......



ஹோட்டலிலேயே அனைவரும் உணவை முடித்து விட்டிருக்க வீடு வந்து சேரவே இரவாகி இருந்தது.



காரை மிதமான வேகத்தில் செலுத்திக் கொண்டிருந்த ரிஷி தன்னவளையும் தன் மகவையும் திரும்பிப் பார்த்தான்.



குழந்தையை தோளில் போட்டு தலை சாய்த்து உறங்கியிருந்தவளை பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்டான்.



"ஏன் தான் இப்பிடி இருக்காளோ.... சரியான வாலு" அவள் தலையை செல்லமாக கலைத்து விட



"தேவ்...." தூக்கத்திலேயே சிணுங்கியவள் அப்படியே உறங்க அவன் புன்னகை இன்னும் கூடிற்று....



வீடு வரவே வண்டியை பார்க் பண்ணிவிட்டு அவள் பக்க கதவை திறந்தவன் தன்னவளை மெதுவாக எழுப்பினான்.



"அஷு....எந்திரிடா..."



"ம்...விடுங்க தேவ்..."



"கண்ணம்மா உள்ள போய் தூங்கிக்கலாம்டா..."



"என்ன தூக்கிட்டு போங்க தேவ்" மீண்டும் சிணுங்க அப்படியே உருகிற்று அவளவனுக்கு....



யாதவ்வை தூக்கிக் கொண்டு போனவன் அவனை படுக்க வைத்து விட்டு மீண்டும் கீழிறங்கி வந்தான்.



அவளை கைகளில் ஏந்திக் கொண்டவன் காலால் கதவை மூடி விட்டு உள்ளே நுழைந்தான்.



அவளை கட்டிலில் கிடத்தியவன் கிடத்தியவனுக்கு அவள் வழமையான செய்கையில் மீண்டும் புன்னகை....



கைகளை எடுத்தவன் அவளை ஒழுங்காக உறங்க வைத்து இருவருக்கும் போர்வையை போர்த்தி விட்டு குளியலறை சென்றான்.



***



எங்கும் கும்மிருட்டு...



அந்த இடத்தின் மூலையில் ஒரு சிறிய கதவு....



அதிலிருந்து மட்டுமே சிறு வெளிச்சம் வந்து கொண்டிருக்க அதை வெறித்தவாறு அந்த இருட்டுக்குள் அமர்ந்திருந்தான் ஒருவன்!!!



கதவு திறக்கப்பட்டதில் இருளையே வெறித்திருந்த கண்கள் சட்டென வாசல் புறம் நோக்கியது.



கையில்லா டீ-ஷர்ட்டும் இறுக்கிப் பிடித்த ஸ்கார்ட்டுமாக ஒயிலாக உள்ளே நுழைந்தாள் அவள்...



அவள் ஆத்மிகா!!!



((பார்ட் 1 ல வந்து என்ட்ரி மட்டும் குடுத்துட்டு போனாங்களே அவங்களே தான் நண்பா))



திடீரென பரவிய வெளிச்சத்தில் அவர் கண்கள் கூசியது போலும்...



இமைகளை சட்டென மூடிக் கொண்டவர் மெதுவாக திறக்க முயன்றார்.



அதற்குள் அவளருகே வந்து விட்டிருந்தவள் அவர் நாடியை பிடித்து தன் புறம் திருப்பியவளுக்கு அவரைப் பார்கப் பார்க்க கோபம் கூடிற்றோ!!!



அவர் எதிர்பாரா நேரத்தில் அவர் கண்ணத்திற்கு ஓங்கி அறைய அவர் உதடு கிழிந்து இரத்தம் வழிந்திற்று...



அவர் ஒரு டாக்டர்....



டாக்டர் அர்ஜுன்.



((நீங்க நெனக்கிறது சரிதான் நண்பா...



நம்ம ரிஷி அப்பறம் அஷ்வினி ரெண்டு பேருக்கும் வைத்தியம் பாத்தவரே தான்....))



***



காலை......



கண்களை கஷ்டப்பட்டு திறந்தாள் கயல்விழி.



தன் முகத்துக்கு மிக அருகில் இருந்த கணவன் முகம் பார்த்தவளுக்கு நெஞ்சுக்குள் அப்படி ஒரு பெருமிதம்....



தன்னவன் முடியை தாய்மையாய் வருடியவள் அவன் நெற்றியில் இதழ் பதித்து விலக அவளை உடும்பாய் வளைத்திருந்தது அவன் கைகள்!!!



அதை விலக்கப் போனவள் அது முடியாமல் போகவும் பாவமாய் கணவன் முகம் பார்க்க அந்தக் கள்வனோ அவள் பார்க்கவும் சட்டென கண்களை மூடிக் கொண்டான்.



"ஆரு...." அவனை உலுக்கினாள் பெண்.



"ஆரு....டேய் எந்திரிடா.... இன்னிக்கு வேலைக்கு கெளம்புற ஐடியா இருக்கா இல்லயா?"



"...."



"ஆரவ்..."



"எதுக்குடி கத்துற?" கண்கள் மூடியிருக்க வாய் மட்டும் பேசி விட்டு மூடியதில் வெகுவாய் குழம்பிப் போனாள் அவள்....



"டேய் இப்போ நீ ஏதாவது பேசுன?"



"ஒரு வேல பிரம்மயா.... அப்பிடின்னா குரல் எப்பிடி கேட்டுது?"



தன்னவள் நிலை பார்த்து சிரிப்பை அடக்க படாத பாடு பட்டுப் போனான் அந்த ஆண் மகன்!!!



மகள் சிணுங்கவே சற்றே கடுப்பாகி விட்டாள்.



"இவன் கூட இதே ரோதனயா போச்சு.... டேய் எந்திரி.... மித்து அழறா"



"ஒரே ஒரு முத்தம் குடு.... விட்டுட்றேன்"



"முத்...." ஏதோ பேசப் போனவளுக்கு அப்போது தான் அவன் நடித்துக் கொண்டிருப்பதே உறைத்தது போலும்.



அவனை ஆன மட்டும் முறைத்தவள் அவன் தலையில் நங்கென கொட்டி விட அவன் தலையை தேய்க்கவென கையை உயர்த்திய கேப்பில் சட்டென விலகி ஓடினாள்.





ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ்.....



சுழல் நாற்காலியில் கண்களை மூடி அமர்ந்திருந்தவனின் வலக்கை நடு விரல் தன் புருவத்தை நீவிய படி இருக்க ஆழ்ந்த சிந்தனையின் பிடியில் ஆழ்ந்திருந்தான் ரிஷிகுமார்.



கதவு தட்டப்படவே ஏழுந்தமர்ந்தவன் உள்ளே வர அனுமதியளிக்க அவன் முன் வந்து நின்ற கதிரை கேள்வியாய் ஏறிட்டன அவன் கண்கள்.



"இஸ் எனிதிங் சீரியஸ்?"



"நோ சார்... மீடிங்குக்கு டைம் ஆச்சு சார்"



"ம்..." அவன் திரும்பிப் போக எத்தனினிக்க அவனை தடுத்தான் ரிஷி.



"கதிர்..."



"எஸ் சார்"



"இல்ல....டாக்டர் அர்ஜுன் கிட்ட அபாய்ன்மண்ட் வாங்குங்க"



"சார்..."



"நத்திங் கதிர்.... அடிக்கடி தல வலி வர்றா மாதிரி இருக்கு...அதான்"



"சார் நா வேணும்னா...." அவன் பதறி விட மெலிதாக சிரித்தவன்



"ஜஸ்ட் ஒரு பார்மாலிட்டீஸுக்காக தான்.... அஷுக்கு தெரிய வேண்டாம்" உடனே மறுத்து விட அப்படியே ஒத்துக் கொள்ள வேண்டியதாய் போயிற்று....



"லீவ் இட்....வில் மூவ் டு தி கான்பரன்ஸ் ஹால்" தன் கோர்ட்டை சரி செய்தவாறு அவன் வெளியேற அவன் பின்னால் சற்று இடைவெளி விட்டு நடந்தான் பீ.ஏ கதிரவன்.



***



தன் முன் அப்பாவி போல் தலையை குனிந்து நின்றிருந்தவனை ஒரு பார்வை பார்த்து விட்டு டெலி போனில் கை வைத்தார் அந்த பாடசாலை அதிபர்.



எதிரில் அழுது கொண்டே ஒரு மாணவி....



அவர் எண்களை அழுத்து முன் அவரை அவசரமாக தடுத்தான் யாதவ் தேவமாருதன்.



"சார்....மாம்கு வேண்டாம்....டாட்கு கூப்புடுங்க" அவன் மன்னிப்பு கேட்பானென இவர் நினைத்திருக்க அவன் சொன்ன வார்த்தைகளில் கடுப்பின் உச்சிக்கே சென்று விட்டார்.



அவனை முறைத்து விட்டு அஷ்வினிக்கே அழைக்க மனதிற்குள் மெல்ல சிரித்துக் கொண்டான்.



அவனுக்கு தெரியாதா அவரைப் பற்றி.... அதற்காகத் தானே மாற்றி சொல்லியதும்...



((அடேய்.... பக்கா கேடிடா நீ....

அப்பனயே மிஞ்சிருவ போ....))



.....



"எஸ்கியூஸ் மீ " அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தாள் அஷ்வினி.



லாயர் உடையிலேயே இருக்க அப்படியே வந்திருக்க கூடுமென ஊகித்தவராய் இருக்கையை காட்டி அமரச் சொன்னார்.



'என்ன தான் பண்ணி தொலச்சானோ' மனதிற்குள் மகனை அர்ச்சித்தவள் அவர் காட்டிய இடத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்.



"சார்...."



"மிஸஸ்.மாறன்...இது இரண்டாவது வார்னிங்.... உங்க புள்ளய கண்டிச்சு வெக்க மாட்டீங்களா?"



"சாரி சார்"



"இன்னிக்கு இந்த பொண்ணுக்கு அடிச்சிருக்காரு.... இவ பேரண்டஸுக்கு நாங்க என்ன பதில் சொல்றது?"



'அத யேன்டா என்கிட்ட கேட்டுக்கிட்ருக்க?'



"...."



"இனிமேலாவது இப்பிடி நடக்காம பாத்துக்கோங்க"



"ஷூர் சார்.... சாரி"



"நீங்க கேக்குறீங்க சாரி....பட் உங்க புள்ள அம்மாவுக்கு கால் பண்ணாதீங்க... அப்பாவுக்கு கால் பண்ணுங்கன்னு ஆர்டர் போட்டுகிட்டு இருக்கான்"



'அவன் அறிவாதான் இருக்கான்.... அவன் கணக்கு உனக்கு தான் புரில... சரியான மரமண்ட'



"சாரி சார்....இனிமே இப்பிடி நடக்காம பாத்துக்குறேன்"



"ம்...." அவள் இருக்கையிலிருந்து எழுந்து கொள்ள



"எங்க அழைப்ப மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றி" பெருந்தன்மையாய் நன்றி கூறியவரை பார்த்து புன்னகைத்தவள்



"இட்ஸ் ஓகே சார்" என்றவாறே வெளியேறினாள் தன் மகனுடன்....



.....



"ஏன் யாது அப்பிடி பண்ண?" கார் ஓட்டியவாறே மகனை விசாரித்தாள் தாய்.



"அவங்க மேல தான் தப்பு மாம்.... நான் எதுவும் பண்ணல"



"இட்ஸ் ஓகே டா கண்ணா.... அதுக்காக இப்பிடி தான் அடிப்பாங்களா...பாவம்ல?"



"...."



"இனிமே இப்பிடி பண்ண கூடாது சரியா?"



"ஓகே மாம்....சாரி"



"சாரி எல்லாம் தேவயில்லடா....நீ தப்ப உணர்ந்தா அதுவே போதும்"



"ஷூர் மாம்"



"குட் பாய்" என்றவள் அவள் தலையை வருட



"ஐ லவ் யூ மாம்" என்றான் சிரித்த படி...



"லவ் யூ டூ கண்ணா..." அவள் சாலையில் கவனமாக அவளை கலைத்தான் யாதவ்.



"மாம்..."



"சொல்லுடா"



"பீச் போலாமா?"



"போலாம் கண்ணா...பட் அம்மாக்கு நிறைய ஒர்க் இருக்கேடா"



"இட்ஸ் ஓகே மாம்... இன்னொரு நாள் போலாம்" அவள் சொல்ல வந்ததை உடனே புரிந்து கொண்டவனை பார்த்து அவளுக்கு பெருமை பொங்கியது....



***



"ரொம்ப நல்லவரா இருக்கீங்களே டாக்டர்" அவள் கண்களில் அப்படி ஒரு வெறி....



"....."



"ஒழுங்கு மரியாதயா நீங்க ஆராவ பத்தி கண்டு பிடிச்சத சொல்லிடுங்க....இல்ல..... அத யாருகிட்டவும் சொல்லவே முடியாத படி பண்ணிடுவேன்" அப்பட்மான மிரட்டல் அவள் குரலில்.....



***



ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ்.....



வேலையில் மூழ்கி இருந்தவனுக்கு நேரம் போனதே தெரியவில்லை...



அழைப்பேசியும் அதன் இயக்கத்தை நிறுத்தியிருக்க தன்னவளுக்கும் அழைக்க முடியாமல் போயிற்று அவனுக்கு.....



தலையை இறுக்கிப் பிடித்து அமர்ந்தவன் ஆபிஸ் லேன் லைனிலிருந்து அழைத்தான்.



"தேவ்....." அவள் அழைக்கும் போது மட்டும் எங்கே தான் காணாமல் போகிறதோ இருக்கும் டென்ஷனெல்லாம்....



அவன் உதட்டில் வசீகரப் புன்னகை!!!



"என்னாச்சு தேவ்.... ஏன் அமைதியா இருக்கீங்க.... ஏதாவது ப்ராப்ளமா?"



"...."



"தேவ்....."



"இல்லடா ஒன்னில்ல..."



"அப்போ ஏன் ஆபிஸ் நம்பர்ல இருந்து எடுத்திருக்கீங்க?"



"அது....போன் சுவிட்ச் ஆப் ஆகிருச்சுடா....அதான்"



"ம்....ஆமா உங்க வாய்ஸ் ஏன் டல்லா இருக்கு?"



"ரொம்பவே டயர்டா இருக்கு அஷு" அவன் பதிலில் அவளுக்கு கண்கள் கலங்கியே விட்டது.



"தே...தேவ்...."



"ஹே கண்ணம்மா... என்னடா..... எனக்கு ஒன்னில்ல...." அவள் காதலில் கரைந்து கொண்டிருந்தான் அவளவன்.....



"நீங்க வீட்டுக்கு வாங்க முதல்ல" குரலில் அப்படி ஒரு பிடிவாதம்.....



"தோ கெளம்பிட்டேன்டா..."



"ம்...." அழைப்பை துண்டித்தவன் அவ்வளவு வேலையையும் வைத்து விட்டு கிளம்பி விட்டான்.



***



"இவன் சரிபட்டு வர மாட்டான் டாடி.... நீங்க ஹாஸ்பிடல் போயி இவன் கேபின பாக்க ஆள் ஏற்பாடு பண்ணுங்க" ராஜனிடம் திவிரமாய் பேசிக் கொண்டிருந்தாள் ஆத்மிகா.



"ஆத்மி....கொஞ்சம் பொறுமயா இருமா.... இவன் கிட்ட எதுக்கும் இன்னொரு வாட்டி கேக்கலாம்.... அதுக்கப்பறம் பாத்துக்கலாம்"



"நோ டாடி....தேவா விஷயத்துல நீங்க சொன்னத நம்பி அவன தவற விட்டது போதும்..... இந்த தடவ என் குறி மிஸ் ஆகாது...."



"அதில்லமா....நா...."



"போதும் டாடி..... நீங்க எதுவும் பேசாதீங்க....ஆராவ வெச்சி தான் நான் அவன நெருங்க போறேன்.... பட்.....இந்த அர்ஜுன் அவள பத்தி வாயே தொறக்க மாட்டேங்குறானே.... அதான் பெரிய தடயா இருக்கு"



"பாத்துக்கலாம்மா"

அவர் யோசனையில் ஆழ எழுந்து வெளியே சென்றாள் அவள்....



***



ப்ரஷப்பாகி விட்டு வந்தவன் பால்கனியில் நின்று கொண்டிருந்த தன் மனையாளை பின்னாலிருந்து கட்டிக் கொண்டான்.



"தேவ்....." முகம் விகசிக்க திரும்பியவள் தன்னவனை இறுக்க அணைத்தாள்.



"என் அஷுக்கு எதுக்காக இன்னிக்கு இவ்வளவு இமோஷன்....ம்...?"



"கண்ணம்மா....என்னடா....?" அவள் கண்ணம் தாங்க தன்னவனையே விழியெடுக்காமல் பார்த்தாள் பேதை....



"ஓய்....என்னடி?" இல்லையென தலையசைத்தவள் மீண்டும் அவனவள் நெஞ்சில் சாய அவள் கூந்தலை ஆதரவாக வருடி விட்டான்.



"நீங்க எதயோ என்கிட்ட இருந்து மறைக்குறீங்கல்ல தேவ்?"



"ஏய் அப்பிடி இல்லடா...."



"பொய் சொல்லாதீங்க.... நீங்க இப்போல்லாம் ரொம்ப சோர்வா தெரியுறீங்க... சொல்லுங்க தேவ்... என்ன ப்ராப்ளம்.... என்கிட்ட ஷேர் பண்ணிக்க பிடிக்கலயா?"



"அய்யோ அஷு.... எதுவுமில்லமா.... அடிக்கடி தல வலி வர்றா மாறி இருக்கு....அவ்வளவு தான்.... வேறொன்னில்ல..."



"வாட்....?" அதிர்ந்து விலகினாள் பெண்.



"என்னடா....என்ன?"



"இத ஏன் என்கிட்ட சொல்லல நீங்க.... வாங்க ஹாஸ்பிடல் போலாம்....." அவள் பதறவே அவளை இழுத்து இறுக்க அணைத்தான்.



"என்ன தேவ் பண்றீங்க....விடுங்க என்ன....முதல்ல நீங்க கெளம்புங்க" அவள் அதிலேயே நிற்க



"இதுக்காக தான் சொல்லல.... ஒன்னில்லடா ஜஸ்ட்...."



"ஓ...அப்போ அந்த மது மாதிரி டேக் இட் ஈசி பொண்ணுங்கன்னா சொல்லி இருப்பீங்கல்ல?"



"இப்பொ எதுக்குடி அவங்கள இழுக்குற?"



"அவங்கள இழுத்தா சாருக்கு ஏன் குத்துது?"



"எனக்கு தானேடி குத்தனும்?" அவன் சிரிப்புடன் சொல்ல அவன் நெஞ்சில் குத்தியவளின் உதட்டை சட்டென சிறை பிடித்தான் அவளவன்!!!!



***



"அண்ணா.... அன்னக்கி டாக்டர் அர்ஜுன் என்கிட்ட முக்கியமான விஷயமா பேசனும்னு சொன்னாரு.... பட் அவன் லைன் கெடக்கவே மாட்டேங்குதுணா" ஏதோ பைலில் மும்முரமாய் இருந்த வருண் அர்விந்தின் குரலில் சட்டென பார்வையை திருப்பினான்.



"என்னடா சொல்ற?" அவன் முகத்தில் குழப்ப ரேகைகள்....



"ஏன்ணா.....உங்க கிட்டவும் பேசனும்னு சொன்னாரா?" அவனும் நெற்றி சுருக்க



"ஆமாடா....ரெண்டு நாள் முன்னாடி தான் சொன்னாரு" பதில் சொன்னவனாலும் அதை சாதாரண விஷயமாக எடுக்க முடியவில்லை.....



"எதுக்காக ணா?"



"தெரிலயேடா..... நாம ஆருகிட்ட இல்லன்னா மதன் சித்து கிட்ட கேட்டு பாக்கலாம்"



"எஸ் ணா....இப்போவே கேட்டுட்டா என்ன?"



"நோ அர்வி....இட்ஸ் டூ லேட்.... காலைல பாத்துக்கலாம்" அவன் சொல்லி வாய் மூடு முன் மொபைல் தன் இருப்பை உணர்த்த பார்வையை திருப்பியவர்கள் அதில் ஒளிர்ந்த "ஆரு காலிங்" எனும் எண்ணில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.



தொடரும்....



22-05-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 05 [ B ]



"சொல்லு ஆரு?" ஸ்பீக்கரில் போட்டே பேசினான் வருண் விஷ்வா.



"அண்ணா....நீங்க இப்போ ப்ரீயா இருக்கீங்களா?"



"சொல்லு ஆரு.... என்ன மேட்டர்?"



"நானும் மதனும் வந்துகிட்டு இருக்கோம்ணா ....நேர்ல பேசிக்கலாம்"



"ஓகே.... ஓகேடா....."



......



"ஹாய் ணா....ஹாய் அர்வி"



"ம்...ஹாய் வந்து உட்காருங்கடா"



"தேங்க்ஸ் ணா...."



.....



"அண்ணா...வந்து...."



"டாக்டர் அர்ஜுன் முக்கியமான ஒரு விஷயம் பேசனும்னு சொன்னாரு.... அதானே?"



"அண்ணா..." அதிர்ந்து போயினர் இருவரும்....



"அப்போ உங்க கிட்டவும் சொன்னாங்களா?" முதலில் கலைந்தது மதன் தான்.



"எஸ் டா...."



"அண்ணா....எனக்கு என்னவோ தப்பா படுது" அப்போது தான் தன்னை மீட்டுக் கொண்டு கேட்டான் ஆரவ்.



மூவரின் தலையும் ஆமோதிப்பாய் ஆடியது.



"அண்ணா....நா வேனும்னா டாக்டர போய் பாத்துட்டு வந்துடவா?" அர்விந்த் மௌனத்தை கலைக்க அவனை தடுத்தான் வருண்.



"அது சரியா வராது அர்வி.... நாம வேற ப்ளான் தான் பண்ணனும்"



"ஏன்ணா... ஏன் அவரு வீட்டுக்கு போக முடியாதுன்னு சொல்றீங்க?" புரியாமல் கேட்டான் ஆரவ்.



"டாக்டர் அர்ஜுன் ஏதோ ப்ராப்ளம்ல மாட்டி இருக்காரு.... ஐ கெஸ்....."



"பட் அண்ணா அவரோட மொபைல் ஆக்டிவ்ல தான் இருக்கு" நெற்றி சுருக்கினான் மதன்.



"எஸ் டா..... அது தான் இங்க ப்ராப்ளமே"



"தெளிவா குழப்புறீங்கணா" அர்வி புலம்ப சோகமாய் ஆமோதித்தான் ஆரவ்.



"டாக்டர் அர்ஜுன் கிட்ட நம்ம குடும்பம் சம்மந்தப்பட்ட ஏதோ இருக்கு.... அதனால தான் அவரு நம்ம கிட்ட பேச முயற்சி பண்ணி இருக்காரு...."



"ஓகே...."



"டாக்டர் அர்ஜுனோட மொபைல் ரெண்டு நாளா ரீச் ஆகல"



"ஆமா ணா"



"சோ.... அர்ஜுன் கிட்ட நம்ம வீட்டு ஆளுங்க யாராவது பேசினால்..... எங்களுக்கும் விஷயம் தெரியும்னு நெனச்சி கிட்டு அவர கொடும படுத்துவாங்க"



"...." "...." "...."



"அதனால தான் சொல்றேன் இந்த விஷயத்த நாம யோசிச்சு தான் பண்ணனும்"



"அப்போ முதல்ல டாக்டர் அர்ஜுன் எங்க இருக்காருன்னு கண்டு புடிக்கனும்... ரைட்டா ணா?"



"எஸ் மதன்"



"பட் அண்ணா.... அவர எதுக்காக கடத்தனும்?"



"கிட்னாப் ?" மூவரும் ஒரு சேர கேட்கவே அப்பொழுது தான் அவர்களுக்கும் அப்படியும் இருக்குமோ என்றே தோன்றிற்று.



"எஸ் ணா அர்வி சொல்றதும் கரெக்ட் தான்" ஆமோதித்தான் மதன்.



"அப்போ ஏன் அண்ணாவுக்கு டாக்டர் முயற்சிக்கல?"



"ஆரு.... ஆர்.கேய பத்தி இன்னுமா உனக்கு புரியல... அவன் கிட்ட சொல்லி இருந்தார்னா இருக்குற விஷயத்தயும் இல்லாம பண்ணிடுவான்....

ஐ மீன் விஷயத்த வாங்குறதுக்கு முதல்லயே தேடி போய் கொன்னிருப்பான்" சிரித்துக் கொண்டே சொன்னான் வருண்.



காலை......



தன்னவன் நெஞ்சில் தலைசாய்த்து படுத்திருந்தவளுக்கு அப்பொழுது தான் விழிப்புத் தட்டியது போலும்....



மெதுவாக கண்களை திறந்தவள் அவளவனை அண்ணார்ந்து பார்த்தாள்.



உதடுகளை இறுக்க மூடி படுத்திருந்தவனை பார்க்க சிரிப்பாய் வந்தது.



"சரியான டெர்ரர் மூஞ்சி ஆபிஸர்.... கதிர் அண்ணா பாவம்" அவன் முடியை கலைத்து விளையாடியவள் அவனை விட்டு மெல்ல எழுந்து கொண்டாள்.



......



மகனுக்கு பூஸ்டும் அவனுக்கு காபியும் எடுத்துக் கொண்டு அவள் உள்ளே நுழையவும் அவன் ப்ரஷப்பாகி விட்டு வெளியே வரவும் சரியாக அவளை பார்த்து கண் சிமிட்டினான் அவளவன்....



அவனுக்கு ஒரு பறக்கும் முத்தத்தை அனுப்பி வைத்தவள் அவன் ஆச்சரியப் பார்வையில் கிளுக்கிச் சிரித்து விட்டு நகர்ந்தாள்.



மேசையில் இரு கப்பையும் வைத்தவளை நகர முடியாத படி பின்னாலிருந்து இறுக்கிப் பிடித்திருந்தான் அவன்.....



விதிர்விதிர்த்துப் போனவள் தன் கையை விடுவிக்கப் போராட மர்மமாய் சிரித்தவன் அவள் பின்னங்கழுத்தில் தன் முத்திரையை பதிக்க கண்களை இறுக்க மூடிக் கொண்டாள் பாவை!!!



தன்னை நோக்கி திருப்ப அவள் அதே நிலையில் கண்ணை மூடிக் கொண்டு நிற்பதை கண்டு வாய் விட்டுச் சிரிக்கவும் தான் சிந்தை கலைந்தாள் பெண்....



"அஷு...." கிறக்கமாய் அவன் அழைக்க அவனை முறைத்தவள் திரும்பி நடக்க எத்தனிக்க சட்டென அவளை பிடித்து இழுத்தவன் சுவற்றில் சாற்றி தன் இரு கைகளாலும் சிறை செய்தான்.



"தே...தேவ் என்ன பண்றீங்க விடுங்க... யாதுக்கு டைம் ஆச்சு"



"யாது மட்டும் தான் உன் கண்ணுக்கு தெரிவானா?" அவன் அவளை இன்னும் நெருங்க அவளுக்கோ வார்த்தைகள் தந்தியடிக்கத் துவங்கியது.



"தே...தே...தேவ்.....ப்ளீஸ்"



"...."



"தேவ்வ்..."



"நா கேட்டதுக்கு இது பதில் இல்லயே கண்ணம்மா" அவன் கைவிரல் அவள் முகத்தில் கோலம் போட அவஸ்தையில் நெளிந்தாள் மாது....



"ம்....பேசுடி...."



"ப்...ப்...ப்ளீஸ் தேவ்"



"ஊஹூம்....உன்ன இன்னிக்கு எனக்கு விட்ற ஐடியாவே இல்ல... சொல்லு"



"...."



"நானும் லண்டன்ல இருந்து வந்ததுல இருந்து பாத்துட்ருக்கேன்.... என்ன கண்டுக்கவே மாட்டேங்குற"



"அ...அப்பிடியெல்லாம் இ...இல்ல தேவ்"



"அப்பிடி இல்லணா எப்பிடிடி?"



"அ....அ...அது....ப்ளீஸ் தேவ்...."



"சரி...அப்போ ஒரே ஒரு தடவ உன் வாயால என்ன மாமா....ன்னு கூப்புடு... விட்டுட்றேன்" தன்னவனை பாவமாய் பார்த்தாள் பெண்....



"உன் அப்பாவி லுக்க நம்ப நா உன் அண்ணன் இல்ல பேபி"



"தேவ்....ப்ளீஸ்...."



"ஊஹூம்....முடியவே முடியாது"



"...."



"ஓகே தென்.... அப்போ நான் மது கிட்ட கேட்டுக்...."



"மாமா...." கத்தி விட்டிருந்தாள்.



"வாட்....என்ன என்ன சொன்ன என்ன சொன்ன.... திரும்ப சொல்லு" சட்டென தலையை குனிந்து கொண்டவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.



"அஷு ப்ளீஸ்டி... இன்னும் ஒரே ஒரு வாட்டி"



"ஊம்..." சிணுங்கியவள் அவன் நெஞ்சில் தன் முகத்தை புதைத்துக் கொள்ள அவனுக்கு அப்படியே வானத்தில் மிதக்கும் உணர்வு....



அந்த வெட்கம் கூட அவனுக்கானதல்லவா???



***



மீண்டும் அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் ஆத்மிகா.



அவன் தலை ஒரு பக்கம் சரிந்து கிடக்கவே முகத்திற்கு தன்னீரை அப்படியே ஊற்றி விட்டாள்.



"எனக்கு இங்க தலையே வெடிச்சிடும் போல இருக்கு....உனக்கு என்னயா தூக்கம்?"



"...."



"சொல்லு அந்த ஆராவ எங்க மறைச்சி வெச்சிருக்க?"



"...."



"அவ உயிரோட இருக்க விஷயம் எனக்கு தெரியும் டாக்டர்" அவர் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி!!!



"ஹே....என்னடா யாருக்கும் தெரியாத விஷயம் இவளுக்கு எப்பிடின்னு தானே பாக்குற... உன் ஹாஸ்பிடல்ல இருக்க என் ஆளு தான் சொன்னான்... புரிலல்ல?"



"...."



"பொதுவா தேவா சம்மந்தப்பட்ட இடத்துல என் ஆளுங்க இருப்பாங்க... அவன் சின்னதா சறுக்கினா கூட நான் அவன என் பக்கம் திருப்பலாம் இல்லையா... அதான் அப்பிடி... தேவாவோட பொண்டாட்டிக்கு ஆக்ஸிடென்டுனு எல்லோரும் லண்டன் கெளம்பி போன அந்த நாள் ராத்திரி உன் ஹாஸ்பிடலுக்கு ஒரு கேஸ் வந்துது கரெக்ட்டா?" அவள் வார்த்தைகளை சிறு அதிர்வுடன் உள்வாங்கிக் கொண்டிருந்தார் டாக்டர் அர்ஜுன்....



"அந்த கேஸ நீயே ஹேண்டில் பண்ணிக்கிறியாம்னு சொன்னதா என் ஆளு சொன்னப்போ உன் மேல சின்னதா டவுட் வந்துச்சு... நா கன்பார்ம் பண்றதுக்குள்ள அவள வேற இடத்துக்கு மாத்தின பாத்தியா..... அங்க நிக்கிறயா நீ"



"...."



"இப்போ சொல்லு எங்க இருக்கா அவ?" அவள் கத்தவே அவளைப் பார்த்து சிரிக்கத் தொடங்கினார் அவர்!!!





ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ்.....



"கதிர்....டாக்டர் அர்ஜுன் கிட்ட அபாய்ன்மண்ட் வாங்க சொன்னேனே.... என்னாச்சு?"



"சார்....அது....அவர் மொபைல் ரீச் ஆகல... நிறைய தடவ நானும் ட்ரை பண்ணிட்டேன் சார் பட்....நோ ரெஸ்பான்ஸ்... சா...சாரி சார்....நா வேணும்னா ஹாஸ்பிடல் போயி பாத்துட்டு வந்துடட்டுமா?"



"நோ...நோ...இட்ஸ்...இட்ஸ் ஓகே கதிர்.... அவரு பிஸியா இருந்தா டிஸ்டர்ப் பண்ண வேணாம் விடுங்க"



"ஓகே சார்"



"ஆ....அப்பறம் நம்ம மைக்கேல் கிட்ட ஒரு முக்கியமான டொகுமன்ட் டைப் பண்ண குடுத்திருந்தேன்... அத கரக்ஷன் பாத்து எடுத்துட்டு வாங்க"



"ஓகே ஓகே சார்"



"ம்....யூ மே கோ"



.....



"எஸ்கியூஸ் மீ சார்"



"எஸ் கம் இன்"



'என்னா கெத்துடா' வழமை போல் மனதிற்குள் எண்ணி சிரித்துக் கொண்டான் கதிர்.



"சார்....." அவன் ரிஷியிடம் நீட்ட அதை வாங்கி தானும் ஒருமுறை சரி பார்த்தவன்



"பர்பக்ட்....நல்லா இருக்கு....இத அந்த ஆர்.வி கண்ஸ்ரக்ஷன் தீபன் கிட்ட கொடுத்துடுங்க.... அண்ட்... வர்ற புதன்கிழம அவங்களோட மீட்டிங்கு டைம் பிக்ஸ் பண்ணிடுங்க"



"ஓகே சார்"



"ம்...குட்....நா மீட்டிங் அரேன்ஜ்மன்ட்ஸ் பத்தி ராம் கிட்ட. (ராம் வேல் - ஆர்.வி) பேசிட்றேன்.... நீங்க மத்த விஷயங்கள முடிச்சிடுங்க"



"ஓகே சார்...." அவன் வெளியேறவே தன் வேலைக்குள் மூழ்கினான் தேவ்.



***



"வருண் சா.....ர்" ராகம் இழுத்துக் கொண்ட நுழைந்த தங்கையை முறைத்துப் பார்த்தான் விஷ்வா.



அவன் முறைப்பை அசட்டை செய்து விட்டு சிரித்துக் கொண்டே வந்தமர்ந்து கொண்டாள் பாவை...



"என்னடி?" சற்று கடுப்பு அவன் குரலில்....



"போண்ணா நா சொல்ல மாட்டேன்" சிறு பிள்ளை போல் உதட்டை பிதுக்கியவளை பார்த்து தலையிலடித்தவன்



"இப்போ நீ ஒரு குழந்தைக்கு அம்மா ரிக்ஷிமா.... சரி சொல்லு என்ன விஷயம்?"



"...."



"என் செல்ல தங்கச்சில....அண்ணன் தெரியாம கடுப்புல பேசிட்டேன்.... மன்னிச்சுரு"



"ம்...ம்....இருக்கட்டும்.... இருக்கட்டும்....."



"அடிங்க" அவன் கை ஓங்கவே கலகலத்து சிரித்தாள் பெண்.



"என்னமா என்ன விஷயம்?"



"ஒன்னில்லயே"



"உன் ஒன்னில்லயேல தான் எல்லாம் இருக்கு சொல்லு"



"...."



"ரிக்ஷிமா நெறய கேஸஸ் இருக்குடா... ப்ளீஸ்"



"அப்பிடி நீ ஒன்னும் பேச தேவயில்ல... எப்போ பாரு டைம் இல்ல டைம் இல்ல... நா கேட்டா டைம் இல்ல.....அடுத்தவங்களுங்கு டைம் இருக்கு"



"ஜஸ்ட் ஷட் அப் அஷ்வினி....இப்போ எதுக்கு சும்மா இர்ரிடேட் பண்ணிகிட்ருக்க?"



"நா உங்களுக்கு இர்ரிடேட்டா அண்ணா?"



"ஆமா போதுமா.... தயவு செஞ்சு போ இங்க இருந்து... இருக்கற டென்ஷன்ல இவ வேற" அவன் கோபத்தில் வார்த்தையை விடவே விறுட்டென வெளியேறி விட்டாள் பேதை!!!



முதல் தடவையாக அவள் மீது கோபம் காட்டி இருக்கிறான்....



" ஷிட்...." தலையை அழுத்தக் கோதிக் கொண்டவனுக்கு தன் மேலேயே கோபம் வந்தது.



மனைவி மேலுள்ள கோபத்தை தங்கையிடம் கொட்டி விட்டோமே!!!



"காட்...." எழுந்து ஓடினான் அண்ணன்.



அவளை தேடி அவள் அறைக்குள் சென்று வந்தவனின் கண்களிலிருந்து மறைந்தது அவள் ஸ்கூட்டர்.



***



வெளியே செல்ல எழுந்தவனை கதவு தட்டப்பட்ட ஓசை புருவம் சுருக்க வைக்க



"எஸ் கம் இன்" என்றான் குழப்பத்துடன்.



கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த மனைவியை கண்டு அதுவும் அவள் அழுதிருப்பது கட்டு வேகமாக அவளருகில் வர தன்னவனை பாய்ந்து கட்டிக் கொண்டாள் பெண்.



"அஷு....என்னடா என்னாச்சு....ஏன் அழற?"



"அஷு....என்னமா என்ன?" உண்மையில் பதறித் தான் போனான் அந்த ஆறடி ஆண்மகன்.



"...."



"கண்ணம்மா....என்னடா.... சொன்னா தானே தெரியும்"



"ப்ச்...அஷு" கண்ணத்தை ஏந்தி தன் கட்டை விரலால் அவள் கண்ணீரை துடைத்து விட்டவன்



"என்னடா...யாரு என்ன சொன்னாங்க?"



"தேவ்...." மீண்டும் வழிந்தது கண்ணீர்.



"அழ கூடாது...என்ன நடந்துதுடா?"



"வ...வருண் அண்ணா..."



"ம்...வருண் என்ன பண்ணான்?"



"அவருக்கு ந்...நா பேசுறது இர்ரிடேட்டா இருக்காம்" மீண்டும் அழ



"வாட்....இதுக்கா அழற?" என்றான் சிரிப்பை அடக்கிக் கொண்டு...



"எனக்கு கோபமா கத்திட்டாங்க.... அவங்க கிட்ட பேசாம போ சொல்லிட்டாங்க"



"அச்சச்சோ....என் கண்ணம்மாவயே திட்றானா அவன்... இரு அவன் கிட்டயே கேட்டுக்கலாம்" தன்னவளை நெஞ்சில் சாய்த்துக் கொண்டே அழைப்பை ஏற்படுத்த கையில் போனை எடுத்தவனை கலைத்தது ஒரு பெண் குரல்.....



நண்பனுக்கு அழைக்க தன் பாக்கெட்டிலிருந்த மொபைலை கையில் எடுத்தவன் உள்ளே வர அனுமதி கேட்ட பெண் குரலில் மனைவியை குனிந்து பார்த்தான்.



அவளுக்குமே குழப்பம் தான் போலும்....



புருவத்தை சுருக்கி வாசல் புறம் தலையை திருப்பி இருந்தாள்.



தன்னவளை விட்டு தூரமாகி நின்றவன்



"எஸ் கம் இன்" என்றான் கம்பீரமாக...



உள்ளே நுழைந்தாள் மது!!!



மதுமிதா!!!



இருவர் கண்களும் ஆச்சரியமாய் விரிய அவள் கண்கள் ஆர்வமாய் ரிஷியின் மீது படிந்தது.



சட்டென தன்னை மீட்டவன்



"வெல்கம் மது...." என்றான் வரவேற்பாய்....



"ஹாய்...." பதிலுக்கு அவனுடன் பேசியவள் கை குழுக்கிக் கொள்ள தன்னை முறைத்த மனைவியை சுவாரஷ்யமாய் பார்த்தான் அவளவன்....



"ஹலோ அஷ்வினி" அவள் கை நீட்டவும் புன்னகைத்தவள் தானும் குழுக்கினாள்.



"மது....வாட் ஹெபண்ட் டு லண்டன்?"



"ஜாப்ப ரிஸைன் பண்ணிட்டு இந்தியால செட்டில் ஆகிட்டேன் மிஸ்டர்.தேவ்" அவள் அழைப்பில் அவன் சிரிப்பை அடக்கிக் கொண்டு மனைவியை பார்க்க அவளோ பல்லை கடித்தாள்.



"மது...இப் யூ டோன்ட் மைன் நீங்க என்ன ரிஷி ஆர் தேவான்னே கூப்புடுங்க"



"இ...இ...இட்ஸ் இட்ஸ்... ஓகே...நா தேவான்னே அழக்கறேன்"



"இட்ஸ் பெட்டர்" புன்னகைத்தவனின் வசீகர சிரிப்பில் மயங்கித் தான் போனாள் பெண்...



"தென்....?"



"ஓஹ்...இங்க இருக்க கம்பெனி ஒன்னுல ஜாயின் ஆகனும்"



"வட் அபவ்ட் யூர் டீச்சிங்?"



"நான் மேனேஜ்மென்ட் படிச்சிருக்கேன் தேவா"



"ஒஹ்....என் கம்பெனிலயே ஜாயின் பண்ணிக்கலாமே?" வெளியேறப் பார்த்த மனைவியின் கைகளை எட்டிப் பிடித்து தனக்குள் இறுக்கினான் அவன்....



"ஷுர் தேவா.... தேங்க்ஸ்...."



"வெல்கம்"



"உ...உங்க ஒய்ப் பேச மாட்டாங்களா?" அவள் கேட்டு முடிக்கு முன் அவன் இறுமத் துவங்க தண்ணீரை தேடி திரும்பியவள் அதற்குள் மது அதனை எடுத்திருக்கவும் அப்படியே நின்று விட்டாள்.



"என்னாச்சு தேவா.... இத குடிங்க"



"தேங்க்ஸ்" குடித்து விட்டு நிமிர்ந்தவன் மனைவியிடம் கண்களால் கெஞ்சினான்.



"என்ன கேட்டீங்க மது?"



"இல்ல....உங்க ஒய்ப் பேச மாட்டாங்களான்னு கேட்டேன்"



"ஊஹூம்....அவ அதிகமா பேச மாட்டா.... அப்படியே அவ தங்கச்சி கயல் மாதிரி அப்பிடி ஒரு அமைதி"



"இஸ் இட்.....?"



"யாஹ்....ரொம்.......ப அமைதி"



"நைஸ்...."



"ஆ...அஷு...." என்னவென்று கேட்காமல் தன்னவனை ஏறிட்டாள் மாது!



"நீ மது கூட பேசி கிட்டு இரு....நா...."



"இல்ல தேவா.... இட்ஸ் கெட்டிங் லேட்...ஐ ஹேவ் டு கோ"



"இட்ஸ் குட்....தேங்க் பார் கம்மிங்"



"இட்ஸ் மை ப்ளஷர்" சொன்னவள் வெளியேறு முன் விறுட்டென வெளியேறி இருந்தாள் அவனவள்!!!



***



"எதுக்கு இப்போ லூசு மாறி சிரிக்குற?" உச்ச கடுப்பில் கேட்டாள் ஆத்மிகா.

"யோவ்....என்னனு சொல்லுயா"



"...."



"டேய்....இப்போ சிரிப்ப நிறுத்தல...."



"என்ன பண்ணிட முடியும் உண்ணால?" நக்கலாய் கேட்டார் டாக்டர்.



"ஏய்...." அவள் விரல் நீட்டவே



"என் வாய்ல இருந்து உண்ம வர்ற வர உன்னால என் *** கூட புடுங்க முடியாது"



அப்படியே வாயடைத்துப் போய் நின்று விட்டாள் அவள்...



உண்மைதானோ???



"சொல்லுங்க மிஸ்.ஆத்மிகா ராஜன்... நீ என்ன கொன்னே போட்டா கூட அவ இருக்க இடத்த நா சொல்ல போறது இல்ல.... நா செத்துட்டா கூட அவ அண்ணன் ரெண்டு பேரு இருக்கானுங்கள்ள... அவனுங்க பாத்துப்பானுங்கன்னு எனக்கு நம்பிக்க இருக்கு"



"...."



"அதுலயும் அவ மூத்த அண்ணன் இருக்கான்ல....உனக்கு கூட தெரிஞ்சிருக்குமே...தி கிரேட் பிஸ்னஸ் மேக்னட் ஆர்.கே..... அவன் உன்ன சும்மா விட்டுடுவான்னு நெனக்கிற?"



"....."



"இந்நேரம் அவனுக்கு இல்லன்னா அவன் தம்பிக்கு....சந்தேகம் கிளம்பி இருக்கும்"

சொல்லி விட்டு அவர் மீண்டும் சிரிக்க தீவிர யோசனையில் ஆழ்ந்தாள் அவள்....



***



"அண்ணா....என்ன முடிவு பண்ணி இருக்கீங்க?" வருணிடம் கேட்டான் ஆரவ்.



"...."



"அண்ணாஆஆஆ"



"ஹாங்...என்னடா என்ன சொல்லி கிட்டு இருந்த?"



"சரியா போச்சு போங்க"



"ரிக்ஷி கிட்ட இன்னக்கி ரொம்ப ஹார்ஷா பேசிட்டேன் டா...." உண்மையான வருத்தம் அவன் குரலில்....



"என்னாது....நீங்க ஹார்ஷா பேசினீங்களா.... என்ன சொன்னீங்க?" அவன் நடந்ததை கூற



"நீங்க ரொம்ப மோசமாகிட்டீங்க ணா.... பாவம் என் ராட்சஸி....." அவனுக்குமே கோபம் வந்தது.



"சாரிடா"



"அத என்கிட்ட எதுக்கு கேட்டு கிட்டு இருக்கீங்க...அவ கிட்ட போயி கேளுங்க"



"...."



"சரி விடுங்க பாத்துக்கலாம்"



"சரி....மத்தவனுங்க எங்கடா?"



"அவனுங்களுக்கு ஏதோ வேல போலண்ணா"



"ம்...."



"ணா.....டாக்டர் அர்ஜுன்?"



"ஆரு....நாம ஆர்.கே கிட்ட இது பத்தி சொல்லிடலாம்னு தோனுது"



"கரெக்ட்ணா...." ஆமோதித்தான் எ.ஸி.பி ஆரவ் தேவமாருதன்.



***



"யாது....என்ன கண்ணா என்ன ஆச்சு?" வீறிட்டு அழுத மகனிடம் பதறி ஓடினாள் தாய்.



ஏதோ கெட்ட கனவு கண்டிருப்பான் போலும்!!!



அவள் வரவே பாய்ந்து தாயை கட்டிக் கொண்டவன் ஏங்கி அழ அவன் முதுகை ஆதரவாய் வருடிக் கொடுத்தாள்.



"கண்ணா....என்னடா....என்னாச்சு யாது...."



"...."



"யாது கண்ணா"



"மாம்"



"என்னமா....?"



"டாட்...டாட் வேணும் டாட் இல்ல...."



"ஷ்....இதோ அப்பாவுக்கு பேசலாமா?"



"டாட் வேணும்" அவன் அழ தன்னவனுக்கு அழைத்தாள்.



"சொல்லு பொண்டாட்டி"



"...."



"ஓய் கொபமா இருக்கியா?"



"...."



"கண்ணம்மா....ஐ லவ் யூ டி" வருடங்கள் கழித்தும் சிலித்தது அவள் தேகம்....



சட்டென காதிலிருந்து எடுத்தவள் மகன் காதில் வைத்தாள்.



"டாட்...."



"க...க...கண்ணா.... என்னடா...ஏன் அழறீங்க....?"



"டாட்..."



"என்னமா...என்ன ஆச்சு என் கண்ணாக்கு?"



"நீ வா...." அவன் மீண்டும் அழ



"மாம் கிட்ட குடுங்கடா...." கைப்பேசி இடம் மாறியது.



"அஷு....என்னாச்சி ஏன் அழறான்"



"நீங்க தான் வேணுமாம்"



"அப்போ உனக்கு வேணாமா?"



"...."



"ஓய்....சாரிடி"



"...."



"சரி இரு இதோ வந்துட்றேன்" அவன் பேசி முடிக்கவே பட்டென வைத்து விட்டாள்.



***



வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தவனின் மொபைல் திடீரென அலறியது.



"மாறன் ஹியர்"



"என்ன மிஸ்டர்.ரிஷி ரொம்ப சந்தோஷமா இருக்கீங்களா?"



"...."



"உன் தொங்கச்சி உயிர் என் கைல"



"உன்னால முடிஞ்சத பாத்துக்கோ" பட்டென துண்டித்து விட்டவனுக்கு எரிச்சலாய் வந்தது.



பின்னே அவன் கையால் கொள்ளி வைக்கப்பட்ட தங்கை உயிர் அவன் கையிலாம்....



இதை எவன் நம்ப???



ஆனால் உண்மை அதுவல்ல என்பதை அவனுக்கு யார் சொல்லி புரிய வைக்க???

..........

மகனை தோளில் போட்டு தட்டிக் கொடுத்தவள் கதவு நிலையில் சாய்ந்து இரு கைகளையும் மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பவனை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை....



பின்னே அந்த மதுவிடம் மட்டும் இளித்துக் கொண்டு நின்றால் அவளுக்கு கடுப்பு ஆகாதா???



அதற்குள் தேவ் ஆம் தேவ்!!!



தனியே இருந்திருந்தால் அறைந்தே விட்டிருப்பாள்.



அது மட்டுமா.... அவள் தண்ணீரை கொடுத்ததற்கு நன்றி வேறு!!!



மெல்ல அடியெடுத்து நெருங்கியவனை விட்டு சட்டென விலகியவள் மகனை சீராக உறங்க வைத்து விட்டு கீழே சென்று விட தலையாட்டி சிரித்துக் கொண்டவன் ப்ரஷப்பாக சென்றான்.



.....



"வாடி ராட்சஸி" உணவை உள்ளே இறக்கியவாறே அழைத்தான் ஆரவ்.



"கடுப்பேத்தாத ஆரு...நானே செம்ம காண்டுல தான் இருக்கேன்"



"அஷ்வி நீ காண்டுல இருக்கேன்னா கண்டிப்பா அதுல மா....சாரி...சாரி... முறைக்காத.... அத்தான் இன்வால்வ் ஆகி இருக்கனுமே" இது கயல்



"கரெக்ட்டா சொன்ன அம்மு.... இப்போ பாரு இவ புருஷன் வருவாரு" தேவ் வரவே இருவரும் சிரிக்க அவளுக்கும் புன்னகை!!!



"எதுக்குடா சிரிக்குற?" கேட்டுக் கொண்டே அமர்ந்தான்.



"ஒன்னில்லயே...." இருவரும் கோரசாக கத்த மனைவியை பார்த்தான்.



எங்கே....அவள் அவன் புறம் திரும்பினாலல்வா பார்க்க.....



தட்டை எடுத்து வைத்தவள்



"கயு உன் அத்தானுக்கு போட்டு விடு.... நா இதோ வந்துட்றேன்" வேண்டுமென்றே சமையலறைக்குள் சென்றாள்.



"என்னாது....என் அத்தானா.....

அப்போ கண்பார்மா இன்னிக்கு அத்தானுக்கு சங்கு இருக்கு" அவள் சொல்லவே பக்கென சிரித்தான் ஆரவ்.



"அண்ணா....என்ன பண்ணி வச்ச?"



"அத ஏன்டா கேக்குற" பெரு மூச்சு விட்டவன் இன்று ஆபிஸில் நடந்ததை கூற விழுந்து விழுந்து சிரித்தனர் இருவரும்....



"அத்தான் உண்மைல நீங்க ரொம்ப..... பாவம்"



"உனக்கு எதுக்குணா வம்பு... மதுவ வெல்கம் பண்ணி முடிஞ்ச கையோட அனுப்பி விட்டிருக்க வேண்டியது தானே?"



"அப்பிடி சட்டுனு அனுப்ப முடியாது டா" அவன் மரியாதை குறைவாக நடத்தக் கூடாதே என்ற அர்த்தத்தில் சொல்ல மீண்டும் சாப்பாட்டு மேசைக்கருகே வந்து நின்றிருந்தவள் அவன் சொல்வதை கேட்டு தண்ணீர் க்ளாஸை படக்கென வைத்து விட்டு அவனை முறைத்தாள்.



"அஷு....நா வேற அர்த்தத்துல சொல்ல வர்லடா...நா...."



"அண்ணா உங்களுக்கு உங்க வாய்ல தான் இன்னிக்கு சனி" இடையிட்ட ஆரவ்விற்கு சிரித்து சிரித்து கண்ணீரே வந்து விட்டது.



"அஷு இங்க பாருடி"



"அஷ்வி....அத்தான கொஞ்சம் பாரு.... இல்லன்னா அந்த மது பாத்துடுவா" கயல் நன்றாக பற்றி விட இருமத் துவங்கியவனிடம் செல்ல அவசரமாக எழுந்தவள் வீட்டு வேலைக்காரப் பெண்மணி அவன் முதுகை தட்டியது கண்டு கண்களை இறுக்க மூடித் திறந்தாள்.



"ஐயா....பாத்து...."



"நன்றி அம்மா...நா பாத்துக்குறேன் விடுங்க...." நாசூக்காக விலகிக் கொண்டான்.



ஆரவ்வும் கயலும் வாய்ப் பொத்திச் சிரிக்க மனைவியை ஏறிட்டான்.



அவனையே பார்த்திருந்தவள் மாடியேறிச் செல்ல அவசரமாக கையை கழுவியவன் அவளுக்கு சாப்பாட்டை வரவைத்து விட்டு அவள் பின்னே ஓட இருவர் சிரிப்புச் சத்ததமும் வீட்டை நிறைத்தது.



இராமநாதபுரம்.....



"அர்வீ...." கத்திக் கொண்டே உள்ளே நுழைந்தான் அர்ஜுன்.



"அந்த வாலு இவனுக்கும் அர்வின்னே சொல்லி வளத்து வெச்சிருக்கா.... கொஞ்சமாவது மரியாத தெரியுதா பாரு...." புலம்பியவன் ரூமிலிருந்து வெளியே வந்தான்.



"வாடா...."



"அதான் வந்திருக்கேன்ல.... அப்பறமும் என்ன வாடா"



"அடேய்....ஏன்டா ஏன்...." கண்ணடித்து சிரிக்க தானும் புன்னகைத்தான் அர்விந்த்.



"ம்...சொல்லு என்ன விஷயம்?"



"எனக்கு சில சப்ஜெக்ட்ஸ்ல டவுட் இருக்கு....சொல்லி தர்றியா....?"



"கண்டிப்பாடா....ஆமா எங்க உன் கேர்ள் ப்ரண்டு?"



"அவள பத்தி எதுக்கு என்கிட்ட கேக்குற?" காய்ந்தான்.



"ஏன்டா...?"



"நா அவ மேல கோபமா இருக்கேன்"



"அவளோட பாய் ப்ரண்ட எப்பிடி வழிக்கு கொண்டு வரணும்னு அவளுக்கா தெரியாது?" கேட்டு விட்டு சிரித்தான்.



"ம்...ம்...எங்க உங்க அரும பொண்ணு?"



"இப்போவே ரூட் போட்றியாடா?"



"ச்சி...ச்சி...."



"ஏன்டா....என் பொண்ண கட்டிக்க மாட்டியா?"



"நா அப்பிடி சொல்ல வர்ல அர்வி..."



"அப்போ கட்டிப்பேன்னு சொல்ற?"



"அய்யோ...."



"ரொம்ப சலிச்சுக்காத" அவன் பேச்சில் புன்னகைத்தான்.



"சரி அப்போ நா கெளம்புறேன்.... ராத்திரி வர்றேன்"



"இருந்துட்டு போடா"



"இல்ல நா வர்றேன்" சென்றே விட்டான்.



***



"அஷு...." தன் புறம் திருப்பினான் கணவன்.



"ஏய் நா அத மென்ஷன் பண்ணல கண்ணம்மா" அவன் கையை தட்டி விட்டவள் கட்டிலில் சென்று அமர்ந்து கொண்டாள்.



"ஓய்...நில்லுடி" பேசிக் கொண்டே அவள் அருகில் வந்தமர தலையனையை எடுத்து அடித்தாள்.



"ஏய் விடுடி...போதும்...."



"போடா" அடித்துக் கொண்டே இருந்தாள்.



"கண்ணம்மா ஐ லவ் யூ டி" அடிப்பதை நிறுத்தியவள் அவன் சிரிக்க மீண்டும் அடித்தாள்.



"ஐ ஹேட் யூ...ஐ ஹேட் யூ"



"பரவால்ல ஒனக்கும் சேத்து நானே லவ் பண்ணிக்கிறேன்"



"போ....அந்த மது கிட்ட போ"



"எனக்கு நீ தான் வேணும்"



"ஒன்னும் தேவயில்ல போடா"



"ஐ லவ் யூ டி"



"ஐ ஹேட் யூ"



"ஐ லவ் யூ "



"ஐ ஹேட் யூ...ஐ ஹேட் யூ"



"ஐ.....லவ்....யூஊஊ"



"ஐ ஹேட் யூ"



"ஓகே நானும் ஹேட் யூ"



"என்னடா சொன்ன... ஐ ஹேட் யூ சொல்லுவியாடா சொல்லுவியா?" கேட்டுக் கொண்டே அடிக்க தலையனையை பறித்து எறிந்து விட்டு தன்னவளை இழுத்து தன் மடி மீது அமர்த்திக் கொண்டான்.



"விடுடா கமாண்டர்... உனக்கு தான் அவ்வளவு பேரு இருக்காங்கல்ல.... போ அவங்க கிட்டவே" அவள் திமிற அவன் தன் பிடியை அவள் வயிற்றை சுற்றி இறுக்கினான்.



"விடு....விடு"



"முடியாது"



"விடுடா..."



"சாரி கண்ணம்மா... நா வேணும்னே அப்பிடி பண்ணலடி... சாரி சாரி சாரீ...."



"ப்ச்...விடுங்க என்ன"



"பரவாயில்ல சீக்கிரமாவே மரியாதைக்கு தாவிட்ட"



"போடா"



"கண்ணம்மா...." தன் முகத்தை அவள் முதுகில் தேக்க நெளிந்தாள் பெண்.

"இன்னுமே கோபம் போகலியா உனக்கு?"



"...."



"ஓய்....இங்க பாரு" தன்னை நோக்கி திருப்பியவன்



"உனக்கு என் மேல நம்பிக்க இல்லையா?" அவன் கண்களுக்குள் ஊடுருவினான்.



அவனையே பார்த்தவள்



"ஐ லவ் யூ" சட்டென அவனை கட்டிக் கொள்ள தன்னவளை தன்னோடு இன்னும் இறுக்கினான் அவளவன்....



***



அந்த அடுக்கு மாடி கட்டிட தனியார் மருத்துவமனையில் இரகசிய அவசர சிகிச்சை பிரிவில் படுக்க வைக்கப் பட்டிருந்த பெண்ணின் கைகள் திடீரென அசையவே அந்த இடமே பரபரப்பானது!!!!



தொடரும்.......



23-05-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 06 [ A ]



காலை....



குளியலறையில் இருந்தவன் மொபைல் சிணுங்கலில் தன் மனையாளை அழைத்தான்.



"அஷூஊஊ"



"...."



"அஷ்வினி"



"...."



"அஷூஊஊ"



"என்ன தேவ்?"



"என் மொமைல் அடிக்குது எடுத்து பேசுடா....ஏதாவது முக்கியமான விஷயமா இருக்க போகுது"



"சரி தேவ்" அவனுக்கு பதில் சொல்லியவள் நகர்ந்து சென்று அவன் தொடு திரையை பார்த்தாள்.



மது காலிங்!!!



குளியலறை கதவை முறைத்தவள் எடுக்காமல் அப்படியே விட்டு விட அடித்து ஓய்ந்து மீண்டும் ஒலியெழுப்பவும் அவனுக்கும் கோபம் வந்து விட்டதோ...



"அஷ்வினி.... என்ன பண்ணிகிட்ருக்க.... கால அடண்ட் பண்றதுக்கு என்ன?" கத்திக் கொண்டே ப்ரஷப்பாகி விட்டு வெளியே வந்தவன் தன் மொபைலில் ஒளிர்ந்த எண்ணில் கப்பென வாயை மூடி விட்டு மனைவியை பாவமாய் பார்த்தான்.



"அ...அஷ்"



"டிபன் எடுத்து வெக்கிறேன் வாங்க" விடுவிடுவென கீழே சென்று விட தலையிலடித்தான் அவளவன்.



"போச்சு...நாசமா போச்சு....அமைதி இருந்திருந்தா கூட கோபமா இருக்கான்னு கண்டு புடிக்கலாம்... பேசிட்டு போறாளேஏஏ...." வாய் விட்டே புலம்பியவன் யாதவ்வையும் எழுப்பி ட்ரஸ் சேன்ஜ் பண்ணி விட்டு அவனுடன் தானும் கீழிறங்கிச் சென்றான்.



"மாம்...." ஓடிச் சென்று தாயை கட்டிக் கொண்டவனை தூக்கி முத்தமிட்டவள் அவனை மேசை மீது அமர வைத்து விட்டுச் செல்ல தன்னவளை பின் தொடர்ந்தது காளையவன் பார்வை!!!



.....



"கண்ணா இத குடி" மகனுக்கு பூஸ்டை கொடுத்தவள் கணவன் டீ கப்பை மேசை மேல் வைத்தாள்.



"சித்தாஆ...." படியிறங்கிய ஆரவ்வை கண்டு விட்டு கத்தினான் மகன்.



"அடடே....என் யாது இன்னிக்கு சமத்து புள்ளயா?" கேட்டுக் கொண்டே வந்தவன் கண்ணம் கிள்ளினான்.



"எஸ்...நான் தான் சமத்து"



"ம்....இன்னிக்கு சித்தப்பா கூட வர்றியா?"



"சாக்லேட் வாங்கி தருவியா?"



"யாது....மரியாதயா பேச சொல்லி இருக்கேன்ல" மகனை அதட்டியவளை அடக்கினான் தோழன்.



"விடு அஷ்வி....பாரு அழ தயாராகுறான் யாது...வாடா" மெல்லியதாக கடிந்து கொண்டவன் தன் கைகளில் ஏந்திக் கொண்டான்.



குடித்து விட்டு காலி கப்பை நீட்டியவனிடமிருந்து அதை எடுத்தவள் உள்ளே சென்று விட ஒரு பெரு மூச்சுடன் எழுந்தான் ரிஷி.



"எண்ணன்னா?"



"ப்ச்...ஒன்னில்லடா"



"ஏன் அப்ஸட்டா இருக்க?"



"அப்பிடியெல்லாம் ஏதுவுமில்ல டா.... இன்னிக்கு ஈவ்னிங் நம்ம இடத்துக்கு சித்து கூட வந்துடு"



"ஓகே ணா...."



"டாட்...அப்போ நான்?" கேட்ட மகனின் தலையை கலைத்தவன் நேரமாவதை உணர்ந்து அவசரமாக வெளியேறினான்.





ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ்.....



"எஸ்கியூஸ் மீ சார்"



"எஸ்...."



"சார்....மதுன்னு ஒரு பொண்ணு வெயிட் பண்றாங்க"



"ஓஹ்....அவங்கள அனுப்பி வைங்க கதிர்"



"ஓகே சார்"



......



"எஸ்கியூஸ் மீ"



"கம் இன்...."



"ஹாய் தேவா" மெலிதாக சிரித்தவன் இருக்கையை காட்டினான்.



"தேங்க்ஸ்"



"வெல்கம் டு அவர் ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ் மிஸ்.மதுமிதா"



"...."



"ஸோ....இன்டர்வியூவ ஆரம்பிக்கலாமா?"



"ஷுர்...." அவள் உடன்படவே தன் கேள்விக் கணைகளை தொடர்ந்தான் ரிஷிகுமார்.



.....



"குட் ஜாப் மது....யூ ஆர் ஸிலெக்டட்"



"தேங்க யூ தே...."



"கால் மீ சார்" இடையிட்டவனை ஆச்சரியமாய் பார்த்தாள் மாது.



"ஆபிஸ்ல சார்னே கூப்புடுங்க.... வெளியில யூர் விஷ்"



"ஓகே சார்"



"தட்ஸ் குட்" இன்டர்காமில் கதிரை அழைத்தான்.



.....



"சொல்லுங்க சார்"



"இவங்க மதுமிதா..... மது இவன் கதிர்.... கதிரவன்....என்னோட பீ.ஏ"



"ஹலோ" அவள் புன்னகைக்க பெயருக்கு சிரித்தவன் தன் முதலாளியை பார்த்தான்.



"செக்ஷனல் ஹெட்டா இவங்கள அபாய்ன்ட் பண்ணி இருக்கேன் கதிர்"



"எஸ் சார்"



"இவங்களுக்கு நம்ம கம்பெனியோட ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ சொல்லி குடுங்க"



"எஸ் சார்"



"அண்ட்....இவங்க கேபின காட்டிட்டு அந்த ஆர்.வி கான்ஸ்ரக்ஷன் மீட்டிங்க நம்ம ஹோட்டல்ல ஏற்பாடு பண்ணிருங்க"



"ஓகே சார்" அவன் அவளுடன் வெளியேறவே மனையாளுக்கு அழைத்தான்.



"சொல்லுங்க"



காலையிலிருந்து அவள் பிரத்தியேக அழைப்பு வராததில் எரிச்சலாகத் தான் இருந்தது.



"சொல்லுங்க மிஸ்டர்.மாறன்"



'ரொம்ப கோபமா இருக்கா போலயே'



"ஹலோ....லைன்ல இருக்கீங்களா?"



"கண்ணம்மா....ஏன் இப்பிடி பேசிகிட்டு இருக்க... நா அது ஏதோ கம்பெனி விஷயமான காலா இருக்கும்னு தான் கோபப்பட்டேன்டி"



"இட்ஸ் ஓகே மாறன்"



"ப்ச்....அதான் சொல்றேன்ல?"



"இதுக்கு மேல நா என்ன பண்ணனுங்குறிங்க?"



"என் ஆபிஸ் வர கொஞ்சம் வர்றியாடி?"



"எனக்கு வேல இருக்கு மாறன்"



"ப்ளீஸ் கண்ணம்மா..... ஐ பீல் லைக் ஹக் யூ டி



"...."



"சரி விடு....சாரி டி"



"...."



"ஓய்....இருக்கியா?"



"ம்...."



"படபட பட்டாசு மாறி பேசுவ.... இப்போ என்னாச்சு?"



"ஒன்னில்ல"



"கோபமா இருக்கன்னு புரியுது..... பட் நா என்னடி பண்ணட்டும்?"



"....."



"ரொம்ப வேலை இருக்கா?"



"ஏன்?"



"வெளியில போலாமா....எனக்கு நீ வேணும் அஷு" தாபம் வழிந்தது அவன் குரலில்.



"அஷு இன்னிக்கு..." யாரோ உள்ளே வர அனுமதி கேட்க



"அப்பறமா பேசுறேன்டி" துண்டித்தவன் உள்ளே வர அனுமதித்தான்.



***



தனியார் மருத்துவமனை......



பல வருடமாக அசைவின்றி படுத்திருந்த உடலில் திடீர் மாற்றம்!!!



கை விரல்கள் இரண்டும் திடீரென அசைந்ததில் அருகிலிருந்த நர்ஸ் வீரிட பரபரப்பானது அந்த அறை!!!



"டாக்டர்....டாக்டர்...." கத்திக் கொண்டே வெளியே ஓடினார் அவர்.....



.....



அந்தப் பெண்ணின் பல்ஸை சரி பார்த்துக் கொண்டிருந்த டாக்டருக்கும் ஆச்சரியம் தாளவில்லை!!!



"ஹலோ...." மெதுவாக பேச்சுக் கொடுத்தார்.

இதயத்துடிப்பு திடீரென வேகமெடுத்ததில் அப் பெண்ணை அமைதிப் படுத்த முயன்றார் டாக்டர்.



"ரிலாக்ஸ்....ரிலாக்ஸ்.... ஒன்னில்ல.... நீங்க நல்லா தான் இருக்கீங்க" அப்போது தான் கொஞ்சம் சீரானதோ???



"....."



"மிஸ்.ஆராதனா.... கென் யூ ஹியர் மீ... ஆர் யூ ஆல்ரைட்.... நீங்க சேஃபா தான் இருக்கீங்க...."



"...."



"ஹலோ...." ஒரு முறை உடல் தூக்கிப் போட அவசரமாக நர்ஸிடம் திரும்பினார்.



"நர்ஸ்....நீங்க போயி டாக்டர் அர்ஜுனுக்கு இன்பார்ம பண்ண சொல்லுங்க....க்வீக்"



"ஓகே டாக்டர்"



***



ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ்.....



ஆரவ்விற்கு அழைக்க போனை கையிலெடுத்தவனின் இதயம் திடீரென அதிர்ந்து அடங்கியது.



ஏனோ இதயம் அதிவேகமாக துடிக்க ஆரம்பிக்கவும் தன் மனையாளுக்குத் தான் ஏதாவதோ என உண்மையில் பயந்து தான் போனான் அந்த ஆறடி ஆண்மகன்!!!



கை தானாய் கார் சாவியை தேடி எடுக்க நடயை எட்டிப் போட்டான் தன் மனையாளை தேடி!!!



((அடேய்....அடேய்.... அவ நல்லா தான்டா இருக்கா...இங்க உன் தங்கச்சி தான் அல்லாடி கிட்டு இருக்கா))



......



சர்ரென வந்து நின்ற கார் சத்தத்தில் உள்ளே எழுதிக் கொண்டிருந்தவள் அப்படியே விட்டு விட்டு யோசனையாய் எழுந்து வாசலருகே நடந்தாள்.



அவ்வளவு தான் அவளுக்கு ஞாபகம் இருந்தது.



அடுத்த நிமிடம் புயலென நுழைந்தவனின் இறுகிய கையணைப்புக்குள் இருந்தாள் பாவை!!!



விலகப் பார்த்தவளை இன்னுமின்னும் இறுக்கினான் தன் மன அதிர்வு அடங்கும் வரை!!!



நெஞ்சில் தலை வைத்திருந்தவளுக்கும் அவன் வேக இதயத் துடிப்பு கேட்டதோ என்னவோ தன்னவன் முதுகை ஆதரவாய் தடவியது அவள் கை.....



அவள் விலக எத்தனிக்க

"அஷு ப்ளீஸ்...." அவன் குரலில் அப்படியே அடங்கிப் போனாள்.



நிமிடம் கடந்தும் தன்னை விலக்காதவனை அண்ணார்ந்து பார்த்தவள் கண் மூடி இறுக்கிப் பிடித்திருந்தவனை பார்த்து நெற்றி சுருக்கினாள்.



"என்னாச்சு தேவ்?"

"தேவ்...." சட்டென விழி திறந்தவன் அவள் நெற்றியில் அழுத்த முத்தமிட்டான்.



"ஏன் பதட்டமா இருக்கீங்க?"



"சொல்ல தெரில கண்ணம்மா.... ஏதோ ஏதோ மாதிரி...." அவனுக்கு தன் உணர்வை எப்படி விளக்கவென்று புரியவே இல்லை....



"ஷ்....ஜஸ்ட் ரிலாக்ஸ் மாமா" அவள் அழைப்பில் விழி விரித்தவன் சட்டென அவளிதழ்களை சிறைபிடிக்க இப்போது அவள் கண்கள் விரிந்தது.



தன்னவனை ஒரே தள்ளாக தள்ளியவள் அவனைப் பார்த்து முறைத்தாள்.



அவள் இடையோடு கையிட்டு தன்னை நோக்கி இழுக்க வந்து மோதியவளின் விழியோடு விழி கலக்க கரடியாய் கத்தியது அவன் மொபைல்.....



எடுத்துப் பார்த்தவனுக்கு மது அழைத்திருக்க இம்முறை சற்று எரிச்சல் வந்து விட்டதோ???



"எஸ் மதுமிதா" அவன் காதில் வைத்துப் பேச சட்டென விலகி விட்டாள்.



"இல்ல நீங்க கதிர் கிட்ட கேளுங்க அவன் சொல்லுவான்"



"இட்ஸ் ஓகே இட்ஸ் ஓகே"



"க்ரேட்" அழைப்பை துண்டித்தவன் மனைவியை கண்களால் தேடினான்.



ஊஹூம் அவள் இருந்ததற்கான அடையாளமே இல்லை....



வழமை போல் தன் வலக்கை நடு விரலால் புருவத்தை நீவி விட்டுக் கொண்டவன் வெளியேறவும் எதிரில் நண்பன் வரவும் சரியாக இருந்தது.



"ஹாய் மச்சி"



"ஹாய் ஆர்.கே.... என்னடா இந்த பக்கம்?"



"உன் முகம் ஏன் டல்லா இருக்கு?"



"எல்லாம் உன் பொண்டாட்டியால தான்டா....அன்னக்கி கோபமா பேசிட்டேன்... இன்னிக்கு வரைக்கும் சுத்த விட்டு கிட்டு இருக்கா" நண்பன் பேச்சை கேட்டவன் வாய் விட்டுச் சிரித்தான்.



"அட...நாம மட்டும் தான் வாங்கி கட்டிகாட்ருக்கோம்னு பாத்தா....நீயுமா?" அவன் மீண்டும் சிரிக்க அவனுக்குமே புன்னகை!!!



"சரி விடு மச்சி...நீ அஷுவ பாத்தியா... இங்க தான்டா இருந்தா...அதுக்குள்ள எங்க போனான்னு தான் தெரில" பார்வை மீண்டும் ஒருமுறை மனைவியை தேடி அலசியது.



"அவ கெளம்பிட்டாளே மச்சான்"



"வாட்?"



"ஆமாடா...நா இப்போ தான் பாத்தேன்....சொல்லாம கொல்லாம கெளம்பி போயிருக்கான்னா.... இன்னிக்கு டோஸ் அதிகமா தான் இருக்கும்"



"டேய்...."



"ஆல் தி பெஸ்ட் நண்பா" அவன் கலாய்க்கவே சிரித்தவன் வீடு நோக்கிச் சென்றான் பெரும் கடுப்புடன்....



......



யாதவ்வை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தவள் அவனுக்கு சாப்பாடு ஊட்டி விட்டு அவன் அர்ஜுனிடம் செல்ல அடம்பிடிக்கவே அவனை கொண்டு போய் விட்டு விட்டு வீடு வரவும் அவன் கார் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.



அவளை கடுப்புடன் முறைத்தவன் அவளை மறைத்துக் கொண்டு நின்றான்.



"வழி விடுங்க" என்றாள் எங்கோ பார்த்த படி....



"முடியாதுடி"



"ப்ச்..."



"எதுக்குடி சலிச்சுக்குற?"



"வழி விடுங்க முதல்ல" அவள் குரலிலும் கோபம்...



"எதுக்கு சொல்லாம வந்த?" அவன் பிடியிலேயே நின்றான்.



"...."



"ஏய்....உங்கிட்ட தான்டி கேக்குறேன்" அவனை தள்ளி விட்டவள் விடுவிடுவென படியேறிச் சென்று விட பல்லை கடித்தவன் இரண்டிரண்டு படிகளாய் தாவி ஏறினான்.



அவள் பின்னாலேயே சென்றவன் நகரப் போனவளை வேகமாய் தன் புறம் திருப்ப



"வலிக்குது விடுங்க" என்றாள் சிறு முக சுழிப்புடன்....



சட்டென விட்டவன் அவள் இரு தோள்களையும் பற்றினான்.



"அஷ்வினி எதுக்கு சொல்லாம வந்தன்னு கேட்டேன்"



"...."



"உங்கிட்ட தான் கேக்குறேன்....பேசுடி" உண்மையில் கோபம் வந்து விட்டது அவனுக்கு....



"ஏன் சொல்லனும்?"



"வாட்....?"



"ஏன் சொல்லனும்னு கேட்டேன்?"



"நா உன்ன காணோம்னு தேடி கிட்டு இருக்கேன் நீ சொல்லாம வந்தா என்ன அர்த்தம்?"



"சொல்ல தோனலன்னு அர்த்தம்"



"ப்ச்....நானும் எத்தன தடவ தான் உனக்கு புரிய வெக்கிறது.... ஏன் மதுவ புடிச்சி தொங்கி கிட்டு சில்லி ரீஸன்ஸுக்கு எல்லாம் கோபப்பட்டுகிட்ருக்க.... நீ எவன் கூடவாவது பேசிட்டு இருந்தேன்னா.... நா கோபப்பட்ருக்கேனா?" கண்கள் குளம் கட்டி விட அவன் வார்த்தைகளில் அதிர்ந்து கணவனை பார்த்தாள் பெண்!!!



தன்னவனை அதிர்ந்து நோக்கினாள் பாவை!!!



என்ன வார்த்தை சொல்லி விட்டான்!



கண்ணீர் சட்டென கண்ணத்தை தொடவும் அவனுக்குமே அது உறைத்தது போலும்.



"அ...." அவன் பேச தொடங்கும் முன் முகத்துக்கு நேரே கையை உயர்த்தினாள்.



கண்ணீரை புறங்கையால் அழுத்தத் தூடைத்தவள் அவனை தாண்டி குளியலறை சென்று தடாரென கதவை அடைத்து விட்டு அதன் மீதே சாய்ந்து அழுதாள்.



"அஷு ப்ளீஸ் கொஞ்சம் கதவ தொறயேன்" படபடவென தட்டினான் கணவன்.



அவன் தட்டுவது ஓய்ந்து அமைதியாகி விடவே முகத்தில் நீரை அடித்துக் கழுவியவள் வெளியே வர கட்டிலில் அவளுக்காக அமர்ந்து காத்திருந்தவன் சட்டென எழுந்து கொண்டான்.



"அஷு...ப்ளீஸ் நா ஏதோ கோபத்துல அப்பிடி கேட்டுட்டேன்.... ரியலி சாரிடி"



"இட்ஸ் ஓகே தே..." வாய் வரை வந்த அழைப்பை கண்ணீருடன் உள்ளிழுத்துக் கொள்ள அவனுக்குத் தான் வலித்தது.



"அஷு உனக்கே தெரியும் நீ அழுதா என்னால பாக்க முடியாது....ப்ளீஸ்" அவளை நோக்கி வர எத்தனிக்க அதையும் கை நீட்டி தடுத்தவள் இரண்டடி பின்னால் நகர்ந்தாள்.



"கண்ணம்மா....ப்ளீஸ் டா"



"விடுங்க....நீங்க என்ன பொய்யா சொ....சொல்லிட்டீங்க?" எவ்வளவு முயன்றும் கேவலை அடக்க முடியாமல் போனதுவோ!!!



"ஏய்...என்னடி பேசுற?" ஓரெட்டில் அவளை நெருங்கியவன் தன்னோடு சேர்த்து அணைத்தான்.



"நான் தான் ஏதோ கோபத்துல அப்பிடி கேட்டுட்டேன்....அதுக்காக நீ அப்பிடி பட்டவன்னு சொல்வியா இடியட்" பின்னந் தலையில் கை கொடுத்து தன் நெஞ்சில் இன்னும் அவளை இறுக்கினான்.



அவள் விலக முற்படவில்லை....



அப்படியே அசையாது நின்று கொண்டாள்.



"ஐ அம் ரியலி சாரி அஷு.....என்ன தான் இருந்தாலும் நானும் அப்பிடி பேசியிருக்க கூடாது....சாரிடா... நீ என் கிட்ட சொல்லாமலேயே கிளம்பி வந்த கோபம்...அதான் கடுப்பாகிட்டேன்...சாரி கண்ணம்மா ப்ளீஸ் சாரி...சாரி..... சாரி" பெரும் போராட்டத்தில் அவனிடமிருந்து பிரிந்தவள் அவன் முகம் காண மறுத்தாள்.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"நா அம்மா வீடு வர பொய்ட்டு வரட்டுமா?"



"அத என்ன பாத்து கேளு"



"இல்ல...யாது அங்க தான் இருக்கான்" அவனை அவள் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.



"ஏய் முகத்த பாத்து பேசுடி"



"போகட்டுமா?"



"ஷ்ஷப்பாஹ் உனக்கு புடிவாதம் ஜாஸ்தி ஆகிடுச்சு"



"போகட்டுமான்னு கேட்டேன்"



"மனுஷன கண்டுக்குறாளா பாரு....சரி வா நானும் வர்றேன்"



"இல்ல நா உங்க கூட வர்ல"



"அர்ரே....இவ்வளவு நாள் அப்போ அம்மணி யார் கூட வந்தாங்களாம்?"



"...."



"வாடி என் செல்ல பொண்டாட்டி" அவள் திமிற விடாமல் கை பற்றி கூட்டிச் சென்றான் சிறு சிரிப்புடன்.....



***



"இங்க பாருங்க அர்ஜுன்....நீங்களா சொன்னீங்கன்னா உங்களுக்கு நல்லது" கால் மேல் கால் போட்டு முன்னால் அமர்ந்திருந்தாள் ஆத்மிகா.



"உங்க போன் ஆக்டிவ்ல தான் இருக்கு...பட்....இங்க இல்ல....ஸோ.... அத ட்ரேஸ் பண்ணி வந்தா கூட உங்கள கண்டு புடிக்க முடியாது"



"...."



"ஆரா உங்க கஸ்டடியில தான் இருந்தா....இப்போ இல்ல.... சப்போஸ் உங்க உதவி அவங்களுக்கு இப்போ தேவ பட்டுதுன்னா.... பாவம் என்ன பண்ணுவாங்களோ?"



"அத பத்தி உனக்கென்ன கவல?"



"அட....இருக்காதா பின்ன....நா கட்டிக்க போறவனோட தங்கச்சி....அவளால தான் நா அவனயே நெருங்க முடியும்"



"ச்சி அடுத்தவ புருஷனுக்கு ஆச பட்டுகிட்ருக்க.... வெக்கமா இல்ல உனக்கு?"



"அதெல்லாம் நமக்கு எதுக்கு டாக்டர் சரி சரி அவசரமா சொல்லுங்க எங்க இருக்கா?"



"இதுக்கான பதில நா ஏற்கனவே உன்கிட்ட சொல்லிட்டதா ஞாபகம்"



"ஏய்...."



"சும்மா சவுண்டு விட்றத நிறுத்திட்டு முதல்ல மனுஷனா நட" அவர் பேச்சில் கோபம் கொண்டு ஓங்கியவளின் கை அந்தரத்தில் நின்றது அர்ஜுனின் மொபைலை ஒருவன் எடுத்துக் கொண்டு வரவும்!!!



***



"அண்ணா இதுக்கு மேல தள்ளி போட்றது ஆபத்து" எச்சரிக்கை தொணித்தது சித்தார்த்தின் குரலில்.



"எஸ் அண்ணா...." மற்ற மூவரும் அதையே ஆமோதிக்கவும் அவர்களை நிமிர்ந்து பார்த்தான் வருண்.



"நாம இத முதல்ல ஆர்.கேக்கு இன்பார்ம் பண்ணிடலாம்"



"ஓகே ணா"



.....



கார் ஓட்டிக் கொண்டெ மனைவியை சீண்டிக் கொண்டிருந்தவன் மொபைல் அலறவும் கார் புளூ டூத்தில் கனெக்ட் பண்ணி விட்டான்.



"மாறன் ஹியர்"



"ஆர்.கே....அம் வருண்"



"சொல்லு மச்சி"



"எங்க இருக்க?"



"இராமநாதபுரம் போய்கிட்டு இருக்கோம்டா....வோய் எனிதிங் சீரியஸ்?" அவன் விரல் தானாய் புருவத்தை நீவியது.



"ஒரு இம்பார்டண்ட் மேட்டர் பத்தி சொல்லனும்....அர்ஜன்ட்"



"ஓகே தென்.... நா அஷுவ வீட்ல விட்டுட்டு உன் ஆபிஸ் வந்தட்றேன்"



"ஓகே மச்சான்" அவன் துண்டிக்கவும் வீடு வரவும் சரியாக இருந்தது.



தன்னை பார்க்காமலேயே இறங்கிச் சென்றவளை பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்டவன் நேரே வருண் ஆபிஸ் சென்றான்.



***



"வாடா...." உள்ளே நுழைந்தவனை வரவேற்றான் வருண்.



"எஸ் மச்சி" என்றவாறே அமர்ந்தவனின் பார்வை அனைவரையும் ஒரு தடவை அலசியது.



"ஆர்.கே....டாக்டர் அர்ஜுன் கிட்ட சமீபத்துல பேசினியா?"



"இல்லடா...அவர் லைன் கெட்கவே இல்லன்னு கதிர் சொன்னான்...பட் என்னன்னு சரியா தெரில"



"ம்....டாக்டர் அர்ஜுன் கடத்தப்பட்டு ஒன் வீக் ஆகுது"



"வாட்....ஆர் யூ ஜோக்கிங்?"



"அம் சிரியஸ் மச்சி...." அவன் நடந்ததை கூற அதிர்ச்சி மீறாமலே கேட்டுக் கொண்டிருந்தான் ரிஷி.



"இத ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல?" கோபம் தம்பியின் மீது பாய்ந்தது.



"இ....இ....இல்லணா... வந்து..."



"கீபிட் அப்"



"சாரிணா"



"...."



"சாரி ப்ளீஸ்...."



"அவன் கிட்ட எதுக்குடா கோபப்பட்ற... எங்ளுக்கு கன்பார்மா தெரியுற வர நான் தான் சொல்ல வேணான்னு சொன்னேன்"



"ப்ச்....." தன் நெற்றியை அழுத்தத் தேய்த்தவனுக்கு எங்கிருந்து ஆரம்பிக்கவென்றே புரியவில்லை.....



"பட் ஏன்....அப்பிடி என்ன விஷயம் டாக்டர் அர்ஜுன் கிட்ட நம்ம சம்மந்தமா இருக்கு?"



"தெரியலணா...." இது அர்வி.



"மதன்..."



"ணா..."



"அர்ஜுனோட வீட்ட சுத்தியும் அவர் ஹாஸ்பிடல் சுத்தியும் உன் ஆளுங்கள மஃப்டில நிக்க வெச்சிரு.... இட்ஸ் டூ லேட் தான் இருந்தாலும் பரவால்ல...."



"ஷூர் ணா...."



"அர்வி...சித்து..."



"சொல்லுங்க ணா"



"நீங்க ரெண்டு பேரும் கெட்டப்ப மாத்திட்டு அர்ஜுன் கேபினுக்கு போய்.... சந்தேகம் வர்றா மாறி இருக்குற பொருள எடுத்துட்டு வந்துடுங்க"



"ஓகேணா...."



"அண்ட் வருண்.... நீ டாக்டர் அர்ஜுன் காலுக்கு இது வர வந்த நம்பர்ஸ எல்லாம் கலெக்ட் பண்ணு"



"ஓகேடா"



"அப்பறம் நீ...."



"ணா...." அண்ணனை பாவமாய் பார்த்தான் ஆரவ்.



"நீ என் கூட இரு"



"சரி...."



"அதுக்கு ஏன் மூஞ்சி இப்பிடி இருக்கு?"



"சாரி ணா..." அவன் கேட்ட விதத்தில் அணைவரும் சிரிக்க வந்த சிரிப்பை மெல்லிய கீற்றில் அடக்கிக் கொண்டான் அவன் அண்ணன்.



"வருண்...."



"சொல்லு மச்சான்"



"நோ...நோ...மதன்... அர்ஜுன் மொபைல் ட்ரேஸ் பண்ணி இருப்பல்ல...."



"எஸ் ணா"



"அது காட்ற இடத்த குறிச்சி வெச்சிக்கோ....இப்போ உடனே போய் திரும்ப ட்ரேஸ் பண்ணு.... க்வீக்" வெளியே பாய்ந்து ஓடினான் மதன்.



"காய்ஸ்....நீங்க உங்க வேலய முடிச்சிட்டு கால் தாங்க....ஆரு லெட்ஸ் கோ" சொல்லி விட்டு அவன் முன்னால் நடக்கவே தன் அண்ணனே நினைத்து எப்போதும் போல் ஒர் ஆச்சரியம் அவனுள்!!!



இவரால் மட்டும் எப்படி???



***



"டாக்டர்...."



"எஸ்...." பரபரப்பாக திரும்பினார் அவர்.



"டாக்டர் அர்ஜுனோட போன் ரிங் ஆகி கிட்டே இருக்கு....யாரும் அடண்ட் பண்ண மாட்டேங்குறாங்க"



"ம்...இட்ஸ் ஓகே... நா முடிஞ்ச அளவு ஆராதனாவ ரிலாக்ஸ் பண்றேன்... நீங்க அவருக்கு லைன் கெடக்குற வர கால் பண்ணிகிட்டே இருங்க... நமக்கு வேற வழி இல்ல"



"ஓகே டாக்டர்" அவர் செல்லவே பெண்ணின் புறம் திரும்பியவர்



"மிஸ்.ஆராதனா....டிட் யூ ஹியர் மீ" தன் குரல் கேட்க வைக்க முயன்றார்.

" நீங்க சேஃபான இடத்துல தான் இருக்கீங்க" உடல் தூக்கிப் போட்டது ஒரு முறை!!!



ஒரு முறை அதிர்ந்து அடங்கிய உடல் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பியது.



நிம்மதியாக பெரு மூச்சு விட்டவர் திடீரென மீண்டும் இதயத் துடிப்பு அதிகமாகவே குழம்பிப் போனார்.



"ஏன் இப்பிடி நடக்குது?"



அப்போது தான் அவருக்கு அந்த யோசனையே ஓடியது.



"இவங்க மனசுல எதயோ நெனச்சி பயப்பட்றாங்க..."



சரியாக புரிந்து கொண்டவர் தன் அலை பேசியை எடுத்து தனக்கு தெரிந்த மனநில மருத்துவர் ஒருவருக்கு அழைத்தார்.



"நான் டாக்டர் வாசு பேசுறேன்"



"சொல்லுங்க டாக்டர்?"



"உன்னால கொஞ்சம் சீக்ரெட் வார்டுக்கு வர முடியுமா ஆனந்த்?"



"ஷூர் டாக்டர்.... இதோ வந்தட்றேன்"



.....



கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் அந்த ஆறடி ஆண்மகன்!!!



ஆண்மையின் இலக்கணமாய் அலையலையான கேசத்துடன்....



அவன் ஆனந்த்!!!



ஜீவானந்த்!!!



முகம் சிரிப்பை தொலைத்திருந்தாலும் சாந்தமான முகம்.



"வா ஆனந்த்"



"எனிதிங் சீரியஸ்?" ஆராதனாவில் பார்வையை நிலைக்க விட்டவாறே கேட்டான்.



"எஸ்....இவங்க...." அவர் தொடங்கும் முன் நர்ஸ் வரவே பரபரப்பாக அவரிடம் திரும்ப பெண்ணவளை நெருங்கினான் அவன்.



ஆக்சிஜன் மாஸ்க் போண்டிருந்ததால் அவள் முகம் தெரியாமல் போக காதிற்கு கொஞ்சம் கீழாக கழுத்திற்கு மேலாக உள்ள இடத்தில் தெரிந்த பர்த் மார்க்கை பார்த்தவனின் கண்களின் ஓர் அதிர்வு!!!



"ஆரா...." அவள் பெயரை அதிர்வாய் முணுமுணுத்தது அவள் உதடுகள்!!!



***



டாக்டர் அர்ஜுனை அடிக்க கையை ஓங்கியவள் தன் முன் மூச்சிறைக்க வந்து நின்றவன் பக்கம் சலேரென திரும்பினாள்.



"மேடம்.... இந்த மொபைல் ரிங் ஆகுது" சொல்லி விட்டு வந்தவன் கொடுக்க டாக்டர் அர்ஜுன் போனை கையிலெடுத்தவள் அவரை ஏளனமாய் ஏறிட்டாள்.



அவருமே அதிர்ந்து போய் தான் பார்த்திருந்தாரோ???



"ஏன் யா போன்ல நம்பர் சேவ் பண்ண மாட்டியா நீ.... இப்போ பாரு என்ன மாறி ஆளுங்களுக்கு எவ்வளவு கஷ்டம்" அவள் கூற்றில் இன்னுமின்னும் அதிர்ந்து போனவருக்கு அது வாசு ஹாஸ்பிடல் கால் என்று தெரிந்தே தான் இருந்தது.



.....



"இங்க கொடுங்க நா பாக்குறேன்...." நர்ஸிடமிருந்து போனை வாங்கி திரும்ப அழைத்தார் டாக்டர் வாசு.



.....



கையிலிருந்த மொபைல் அலற அடண்ட் செய்து காதில் வைத்தவள் அமைதியாக இருந்து கொண்டாள்.



......



அழைத்தவருக்கு சந்தேகம் துளிர் விட பேசாமல் விட மறுபக்கமும் அமைதி.



'இல்ல...டாக்டர் அர்ஜுனோட கைல போன் இல்ல....' அடித்துக் கூறிய மனதுக்கு செவி சாய்த்தவர் பட்டென துண்டித்து விட்டார்.



.....



அழைப்பு துண்டிக்கப்படவே குழப்பமாய் காதிலிருந்து எடுத்தவள் டாக்டர் அர்ஜுனை ஏறிட்டாள்.



அவரிடம் அப்பிடி ஒரு நிம்மதி!!!



***



"சொல்லு மதன்" போனை காதிற்கு கொடுத்தான்.



"அண்ணா....மொபைல் இப்போ வேற இடத்த காட்டுது" அவனுள் பரபரப்பு.



காருக்கு வெளியே நின்றவன்



"ஆரு....கெட் இன்... க்வீக்" சொல்லிக் கொண்டே ஏற அவசரமாக மறுபக்கம் ஏறி அமர்ந்தான் ஆரவ்.



"சொல்லு மதன் எங்க காட்டுது....?"



"ணா....அது ஜெய்பூர் காட்டுதுணா"



"வாட்...ஓ காட்...." நெற்றியை அழுத்தத் தேய்த்தான்.



ப்ளைட்டில் போகலாமென்று பார்த்தால் மனைவியை எப்படி சமாளிக்க???



ஒரு முறை நடந்த சம்பவத்திற்கே வெளியே ஒரு நாள் தங்கி விட்டாலும் அழுபவள் இதற்கு???



என்ன செய்ய???



மீண்டும் தேய்த்தான்.



"அண்ணா டிட் யூ ஹியர் மீ?" போன் வழியே கேட்ட குரலில் சட்டென சிந்தை கலைந்தவன்



"எஸ்...மதன்....நீ மத்த ஒர்க பாரு நா வெச்சிட்றேன்" துண்டித்து விட்டு தம்பியை பார்த்தான்.



"என்னாச்சுணா?"



"ஜெய்பூர் போகனும்"



"வாட்....எதுக்குனா அங்க?"



"டாக்டரோட போன் அங்க தான் ஆக்டிவ் காட்டுது.... அஷுவ சமாளிச்சிட்டு எப்பிடி டா போறது?"



"பிஸ்னஸ் விஷயம்னு சொல்லலாமே ணா"



"என்ன கிழிச்சிட்டு தான் மறுவேல பாப்பா" அவன் சிரிக்கவே



"ஏன் சார் என்ன சொல்றதா உத்தேசம்" என்றான் கடுப்புடன்.



அன்று வீட்டுக்கு வராமல் இருந்ததற்கே அவள் போட்ட யுத்தம் ஞாபகம் வர கப்பென வாயை மூடிக்கொண்டான்.



"இப்போ புரியுதா....?" சோகமாக தலையாட்ட சிரித்தான் ரிஷி.



"இட்ஸ் டூ லேட் ணா"



"எஸ் ஆரவ்....பட் போய் தான் ஆகனும்" அவன் குரலில் தீவிரம்!!!



தொடரும்......



24-05-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 06 [ B ]



"மாம்...." மகன் உச்சாஸ்தியில் கத்தவே திடுக்கிட்டு திரும்பினாள் தாய்.



"என்ன என்னடா?"



"நீங்க என்ன திங்க் பண்ணிகிட்டு இருக்கீங்க?"



"நானா....ஒன்னில்லயே"



"பொய் சொல்றீங்க மாம்"



"டேய்..."



"டீப்பா திங்க் பண்ணிகிட்டு இருக்கறவங்களுங்கு நாம பேசறது கேக்காதாம்"



"அடேய்...யாருடா உனக்கு இதெல்லாம் சொல்லி கொடுக்குறது?"



"டாட் தான் சொல்லி கொடுத்தாரு"



"யாரு அந்த டெர்ரர் ஆபிஸரா? " அவள் அழைப்பில் கிளுக்கிச் சிரித்தான் மகன்.



"டெர்ரர் ஆபிஸரா மாம்?"



"ஆமாடா சரியான சிடுமூஞ்சி"



"அப்போ அன்னக்கி கமாண்டர் சொன்னீங்க?" கேட்டு விட்டு மீண்டும் சிரித்தான்.



"ஹி...உனக்கு அவ்வளவு புடிக்குமா உன் டாட் ஐ?



"ம்...ரொம்ப...." கையை அகல விரித்தான் மகன்.



"அப்போ நானு?" அவள் மடி மீது ஏறி கழுத்தை சுற்றி கண்ணத்தில் முத்தமிட்டவன்



"உங்களையும் மாம்.... யூ ஆர் த பெஸ்ட் மாம் இன் தி வேர்ள்ட்" அவன் சொல்லவே அவன் நெற்றியில் ஆசையாய் இதழ் பதித்து தன்னோடு அணைத்துக் கொண்டாள் பாவை.



***



"என்னணா பண்றது இப்போ?"



"அதான்டா ஒன்னுமே புரிய மாட்டேங்குது... இந்த அஷுவ சமாளிக்கிறது பெரிய தல வலியா இருக்குடா" அவன் வாய் பொத்தி சிரிக்க



"நீ வீட்டுக்கு போடி.... உனக்கு இருக்கு பெரிய ஆப்பு"



"சாபம் உடாதணா" அவன் பாவமாய் சொல்ல வாய் விட்டுச் சிரித்தான்.



"நீ வீட்டுக்கு போயி உன் பொண்டாட்டிய சமாளிச்சு அத்த வீட்ல கொண்டு விட்டுட்டு என் ஆபிஸ் வந்துடு.... நா நேர்ல போயி நின்னா அசைய கூட விட மாட்டா.... ஸோ...நா உன்ன வீட்ல விட்டுட்டு ஆபிஸ் கெளம்புறேன்"



"அப்போ....நா மட்டும் நொந்து நூடுல்ஸ் ஆகனும் அதானே?"



"ஹாஹாஹா.... இல்லடா தம்பி.... நான் சட்னி அரை பட்றதுக்கு பதிலா நீ இப்பிடி ஆகுறது பரவாயில்லயேன்னு ஐடியா சொன்னேன்"



"நல்லா சொன்னணா ஐடியா" தலையாட்டி சிரித்தவன் காரை கிளப்பி அவனை வீட்டில் விட்டு விட்டு ஆபிஸ் சென்றான்.



***



"அம்முகுட்டி" பின்னாலிருந்து அணைக்க பயந்து போனாள் பெண்.



"எரும எரும.... சொல்லிட்டு வர மாட்டியாடா...நா பயந்து பொய்ட்டேன்"



"சாரி செல்லம்"



"ம்....அது இருக்கட்டும் என்ன இன்னிக்கு முன்னாடியே வந்துட்ட?"



"உன்ன பாக்கனும் போல இருந்துது வந்தேன்"



"யாரு....உனக்கு?"



"ஏன்டி நம்ப மாட்டியா?"



"ம்கும்....வீக் எண்ட்ல கூட வேலய கட்டி கிட்டு அழறவன்.... உனக்கு பாக்கனும்னு தோனிச்சா... போடாஆஆ"



"ஹி....ஹி...."



"கேவலமா இருக்கு"



"தேங்க் யூ" அவன் கையிலேயே ஒரு அடி போட்டாள்.



"அம்மூஊஊ...."



"என்ன இழுவ?" சற்று முறைப்புடன்.



"இல்ல....கேஸ் விஷயமா ரெண்டு நாள்..."



"என்னாதூ...."



"நா இன்னும் முடிக்கவே இல்லடி"



"நீ ஆணியே புடுங்க வேணாம்.... வீட்லயே இரு" விலகி இடுப்பில் கை வைத்து முறைத்தாள்.



"ப்ளீஸ் டி செல்லம்.... ரெண்டு நாள் தான்"



"ஊஹூம் முடியவே முடியாது"



"ப்ளீஸ் அம்மு ப்ளீஸ்"



"முடியாது முடியாது"



"ரொம்ப கிருடிகலான கேஸ் செல்லம்....ப்ளீஸ்...."



"எங்க போக போற?"



'ஹப்பா...வழிக்கு வர்றா'



"அதுவா....அது....ஜெ...ச்சி....கேரளா"



"முடியாது"



'கேர்ளாவுக்கே முடியாது...அப்போ ஜெய்பூர்.... நல்ல வேல சொல்லல'



"ப்ளீஸ் அம்மு....என்ன நம்பி கேஸ ஒப்படிச்சிருக்காங்கடி"



((யாரு....உன் அண்ணனா??))



"என் மேல உனக்கு அக்கறயே இல்லல்லடா?" அவன் அமைதியாகி விட பட்டென கேட்டு விட்டவளை இழுத்து அணைத்தான்.



"ஏன் இப்பிடி பேசுற அம்மு?" அவன் குரலிலுமே கலக்கம்.



"பின்ன....நா ஒருத்தி இருக்கேங்குறத கண்டுகுறியா நீ.... காதலிக்கும் போதும் சரி.... கல்யாணத்துக்கு அப்பறமும் சரி..... உனக்கு என்ன விட எல்லோரும் முக்கியமா பொய்ட்டாங்கல்லடா?"



"ப்ச்....அப்பிடி இல்ல அம்மு....நான்"



"என்ன விளக்கம் சொல்ல போற?" அவள் கேள்வியில் அவன் பேச்சு அப்படியே தடை பட்டுப் போனது.



"ஐ அம் ரியலி சாரி அம்மு.....பட் ஒன்ன மட்டும் நீ புரிஞ்சிக்கோ.... ஐ லவ் யூ டி" அவனை அண்ணார்ந்து பார்க்க அவள் நெற்றியில் மென்மையாய் முட்டினான்.



"ஐ அம் சாரி டி"



"இட்ஸ் ஓகே விடு...."



"நா எதுவும் தெரிஞ்சி பண்ணலடி... இனிமே இப்பிடி நடக்காது"



"ப்ராமிஸ்?" அவள் கேள்வியில் தான் அவ்வளவு விலகி இருக்கிறோமா என நினைத்து நொறுங்கிப் போனவன்



"ப்ராமிஸ் அம்மு...." என்றான் மென்மையாய் சிரித்து.



"லவ் யூ டூ டா...." தன் நெஞ்சில் சுகமாய் சாய்ந்து கொண்டவளை தன்னால் முடிந்த அளவு இறுக்கினான்.



"அம்மு....அப்போ நா போகட்டுமா?" அவ்வளவு தான்....



அவனை விலக்கி விட்டு தலையணையை எடுத்து அடித்தாள்.



"ஏன்டி அடிக்குற?"



"இப்போ தானே சொன்ன என் கூடவே இருக்கேன்னு.... எரும"



"ரெண்டு நாள் அவகாசம் கொடு அம்மு ப்ளீஸ் மா... என்ன தான் இருந்தாலும் உன் கிட்ட கேக்காம ஏதாவது செஞ்சிருக்கேனா சொல்லு?" அவள் இல்லை என தலையாட்ட



"அப்போ என் மேல நம்பிக்...."



"நம்பிக்க எல்லாம் இருக்கு....நீ போ" இடை புகுந்தவள் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள இவனுக்குத் தான் எங்காவது சென்று முட்டிக் கொள்ளலாம் போலிருந்தது.



"சரி விடு....நா போகல... அண்ணா கிட்ட நா வர்லன்னு சொல்லிட்றேன்" அவன் உளற



"நீ எதுக்கு அத்தான் கிட்ட சொல்லனும்?" சந்தேகமாக கேட்டாள் மனைவி.



"நா அப்பிடியா சொன்னேன்.... இல்லயே அண்ணா மாஆஆதிரி இருக்க என் மேலதிகாரி கிட்ட சொல்றேன்னு தானே சொன்னேன்... மாறி வந்துடுச்சு போல"



"ம்...." அவனை முறைக்க சமாளிப்பாக சிரித்து வைத்தான்.



"திரும்பி வந்துடவல்ல?"



'ஹப்பா....வழிக்கு வந்துட்டா'



"ஆமாடி அம்முகுட்டி"



"சரி....எப்போ கெளம்புற?"



"இன்னிக்கு"



"...."



"என்னடி அமைதியாகிட்ட?" கலவரமானான் அவன்.



அவனருகே வந்தவள் அவன் காலரை இழுத்து தன் இநழ்களுக்குள் அவனிதழ்களை நுழைக்க அவன் கை தானாய் அவள் இடையை வளைத்தது.



குழந்தை சிணுங்கலில் சட்டென நடப்புக்கு வந்தவள்



"ரெண்டு நாள் தான் டைம்....அது தாண்டிச்சு...." மிரட்டினாள்.



"தாண்டாதுமா தாண்டாது....நீ கெளம்பு உன்ன அத்த வீட்ல விட்டுட்டு நா கெளம்புறேன்...."



"ஏன்?"



"உன் அக்காவும் அங்க தான் இருக்காளாம்"



"ம்..."



ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ்.....





தன்னவளுக்கு அழைத்து விட்டவன் எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டான்.



டில்லி சம்பவத்திற்கு பிறகு வெளியில் செல்லக் கூட அனுமதிக்காதவள் இதற்கு???



"சொல்லுங்க" அவள் குரல் சிந்தை கலைக்க அமைதியாகவே இருந்து கொண்டான்.



"மிஸ்டர்.மாறன்"



"அஷூ....நான் ஜெய்பூர் போறேன்"



"இப்போ எங்க இருக்கீங்க?"



"ஏன்?"



"கேட்டதுக்கு பதில்"



"ஆபிஸ்...."



"ஓகே..." அழைப்பு துண்டிக்கப்பட குழம்பிப் போனான்.



மீண்டும் மீண்டும் அழைக்க ரிங் போனதே தவிர எடுக்கப்படவில்லை....



"ப்ச்....."தூக்கி அடிக்க போனவன் லேன் லைன் அலறலில் அப்படியே தனிந்தான்.



"சொல்லுங்க மிஸ்.சாருமதி" மறுமுனை என்ன சொல்லியதோ



"வாட்....?" அதிர்ந்து எழுந்தவன் சட்டென எழுந்து மேசையை தாண்டி செல்ல போக படாரென கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் அவன் மனைவி.



அதிர்ந்து நின்றவன் அவள் தலை முதல் பாதம் வரை அவசரமாக அலசினான்.



பின்னே....பேசி ஐந்து நிமிடம் கூட இருக்காது....அதற்குள் தன் முன் நிற்கிறாள் என்றால் எவ்வளவு வேகமாக வண்டியை செலுத்தியிருப்பாள்???



நெஞ்சே பதறியது அவனுக்கு....



வந்த கோபத்தில் ஓங்கி ஒன்று விட்டவன் கைகளை கட்டிக் கொண்டு அசையாமல் தீர்க்கமாக அவனை பார்த்த படி நின்றவளை கொலை வெறியில் முறைத்தான்.



"இடியட்....எரும.... அறிவிருக்கா உனக்கு.... அவ்வளவு அவசரமா வந்தியா?"



"இல்ல" பட்டென பதில் வரவே மீண்டும் அடிக்கப் போனவன் அப்படியே நிறுத்தி விட்டான்.



"ஏன்டி என் உயிர வாங்குற?"



"நீ ஏன் டா இப்பிடி இருக்க?" சட்டென அவன் சட்டை காலரை பிடித்து உலுக்கினாள்.



"நா என்ன பண்ணேன்?" சத்தியமாக அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.



"என் மேல கோபம்னா என் கிட்ட காட்ட வேண்டியது தானே.... ஏன் என்ன விட்டு விலகி போக நெனக்கிற?" அவன் காலரை விட்டு விட்டு நெஞ்சில் அடித்தாள்.



"அய்யோ....நா பிஸ்னஸ் விஷயமா தான் போகனும் கண்ணம்மா... நா ஏன் உன் மேல கோபம் காட்ட போறேன்?"



"கண்ணம்மா.... நா பிஸ்னஸ் விஷயமா ஜெய்பூர் போகனும்" அவள் கண்ணம் தாங்கினான்.



"போடா...." விலகி நடந்தவளின் கை பிடித்து தடுத்தவன் அவள் முன் வந்து நின்றான்.



"ரெண்டு நாள் தான்"



"டில்லி போக முன்னாடி இப்பிடி தானே சொன்னீங்க தேவ்?" குரல் தழுதழுத்தது பேதைக்கு....



இதற்காக தானே அவன் பயந்ததும்.



"எவ்வளவு சொன்னேன் போகாதீ்கன்னு....என் பேச்ச கேட்டீங்களா.... க...கடைசியில...."



"அது....கவனக்குறைவா நடந்தது கண்ணம்மா"



"வேண்டாம்...." பட்டென தட்டி விட சிரித்தான் அவன்.



"சிரிக்காதடா" மீண்டும் நெஞ்சில் அடிக்க அவள் இடையில் கையிட்டு தன்னுடன் இறுக்கியவன் மற்றைய கையால் அவள் கைகளை பிடித்தான்.



"அஷு ப்ளீஸ்"



"வேண்டாம் அவ்வளவு தான்"



"ரெண்டு நாள் தானே கண்ணம்மா"



"அப்போ நானும் வருவேன்"



"ம்....ஓகே... வாட்?"



"ஏன் இவ்வளவு பதட்டம்?"



"அஷு ப்ளீஸ்...." மீண்டும்....



"அப்போ நானும் வருவேன்"



"ப்ளீஸ்...." மூச்சை இழுத்துப் பிடித்து பெரும் நிதானமாய் கேட்டான்.



"நோ வே"



"அஷு...." கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் பறந்து கொண்டிருந்தது பொறுமை.



"இல்ல...."



"ஏய் என்னடி நானும் சொல்லி கிட்டே இருக்கேன்....சும்மா..."அவளை உதறியவன் கோபமாக கத்தவே நீண்ட நாளைக்குப் பிறகான அவன் கோபத்தில் அவளுக்கு நெஞ்சுக் கூடு அதிர்ந்து அடங்கியது.



"நா இன்னிக்கு ஜெய்பூர் போறேன் அவ்வளவு தான் நீ கிளம்பு...." அவனுக்குமே அதை விட இறங்க முடியவில்லை.....



தன்னை சமன் படுத்தி கொண்டு அவளை பார்க்க நின்ற இடத்தில் அவள் இல்லை.....



***



காரை அதி வேகத்தில் செலுத்திக் கொண்டிருந்த அண்ணனை பார்க்கவே பயந்தான் ஆரவ்....



'பொண்டாட்டி கிட்ட சண்ட புடிச்சிட்டு எங்கள குதற வேண்டியது' மனதில் பெரு மூச்சு விட்டவன் தன் மனைவிக்கு அழைத்தான்.



"அம்மு...." அவ்வளவு தான் பேசியிருப்பான்....



நவீன ரக அழைப்பேசி ரோட்டில் கிடந்தது மறு நிமிடம்.



அதை பரிதாபமாக ஏட்டிப் பார்த்தவன் அண்ணனை அதை விட பாவமாய் பார்த்தான்.



"என்ன?"



"என் போன் உன்ன என்னணா பண்ணிச்சு.... இன்னிக்கு நீ எனக்கு புதுசு வாங்கி கொடுக்கல.... அப்புறம் பஸ் புடிச்சு ஊருக்கு திரும்பி போய்டுவேன் பாத்துக்க" அவன் முகத்தை திருப்ப இதழ் கடையோரம் மெல்லிய புன்னகை அவன் அண்ணனுக்கு!!!



"அண்ணோவ்"



"ப்ச் என்னடா?"



"இல்ல கார்லயே தான் போக போறோமா?"



"அதுக்கென்ன?"



"ப்ளைட்ல போனா ரெண்டு அவர்ல போய் சேந்துருவோம்ல?"



"எனக்கு தெரியாது பாரு"



"ணா....உன் கோபத்த சமாளிச்சிட்டு என்னால கார்ல எல்லாம் வர முடியாது"



"ஏன்....மகாராஜா ப்ளைட்ல மட்டும் தான் போவிங்களோ?"



"ப்ளைட்ல போனா ரெண்டு அவர் தான் உன் கோபத்த சமாளிக்கனும்.... இதுவே கார்லயே போனோம்னு வெய்யி.... முழுசா ஒரு நாள் எட்ட்ட்டு அவர் முடியும்.... என்னால முடியாது" தம்பியை கடுப்புடன் முறைத்தான் ரிஷி.



"எதுக்கு இப்போ உர்ருனு கிட்டே வர்ற.... நீ பேசாம அமைதியா இருந்த..."



"என்ன பண்ணுவ?"



"கொஞ்சம் இருணா ப்லோவுல சொல்லிட்டு இருக்கும் போது குறுக்க குறுக்க பேசாத"



"ம்....சரி சொல்லுங்க சார்"



"நீ பேசாம இருந்தன்னு வெய்யி.... ஒன்னும் பண்ண மாட்டேன்"



"தூ....இத சொல்றதுக்கு தான் இவ்வளவு பில்ட்டப் ஆ?"



"ஹி....ஹி..."



"டேய்....வருணுக்கு கால் பண்ணி கலெக்ட் பண்ண டீடெய்ல்ஸ கேளு"



"...."



"டேய் ஒன்னத்தான்"



"போன் யாரு உங்கப்பனா கொடுப்பான்?" கடுப்புடன் கேட்க வாய் விட்டுச் சிரித்தவன் தன் மொபைலை நீட்டினான்.



"அட அந்த ராட்சஸிய தான் வால் பேப்பர் வெச்சிருக்கியா நீ?"



"டேய் அவள ஏன் அப்பிடி கூப்புட்ற?"



"உண்மை சில வேளைகளில் கசக்கத் தான் செய்யும்"



"அடிங்க....என் கிட்டவே என் பொண்டாட்டிக்கு மரியாத இல்லாம பேசுறியா நீ?"



"அப் கோர்ஸ்...."



"இனிமே அண்ணின்னு கூப்புடு"



"வாட்....உவ்வேக்..... என்னால முடியாது" அவன் பாவனையில் விழுந்து விழுந்து சிரிக்க அவனுக்கும் புன்னகை....



"ஏன்?"



"அவ என் ப்ரண்டுணா"



"என் பொண்டாட்டி"



"நீயே வெச்சிக்க"



"இட்ஸ் ஓகே"



"போன் வாங்கி குடுணா"



"என் போன்ல பேசு"



"அதெல்லாம் முடியாது"



"உனக்கு உன் ரசிகர் மன்றத்தால வாங்கி குடுக்குறாங்கலாம்டா"



"அது அவங்க அன்பு... நீ வாங்கி கொடு"



"போற வழில பாத்துக்கலாம் விடு"



"அஃது"



"என்ன?"



"ஒன்னுமே இல்ல மகாராஜா.... ஒன்னுமே இல்ல"



"அஃது"



'நாங்க அதே வார்த்தய சொன்னா தப்பு இவரு சொல்லுவாரு'



"என்ன முணங்குற?"



"ஹி...ஒன்னில்ல... ணா...."



"என்னடா?"



"இல்ல அப்போ நாம கார்ல தான் போறோமா?"



"நீ ப்ளைட்ல வர்றியா?"



"ஏன்?"



"உனக்கு தான் என்ன சமாளிக்க முடிலல்ல?"



"அது சும்மா உல்லலாய்க்கு...."



"பரவாயில்லை நீ ப்ளைட்ல வாடா"



"ணா விளயாடாத"



"ஐ அம் சீரியஸ்.... என்ன... நா பேசாம இருந்தான்னு மெரட்டிட்டு நீ அமைதியாகிட்ட?"



"நா உன் கூட தான் வருவேன்"



"அப்போ என்னமோ"



"அதெல்லாம் நா சமாளிச்சுகுவேன் நீ வண்டிய ஓட்டு"



"சரி....நா வருணுக்கு கால் பண்ண சொன்னேன்ல?" வார்த்தைகளில் சற்று கொபம் தெரிக்கவே



"சரி சரி...அதுக்கு ஏன் கமாண்டர் மாறி மூஞ்ச மாத்துற?" அவன் எண்களை அழுத்த அவன் கண்களுக்கும் அவனவளின் மதி முகம்!!!



***



அதிர்ந்து நின்றிருந்தவனை தோள் தொட்டு திருப்பினார் டாக்டர் வாசு.



"டா...டாக்டர் இ...இவ...இவங்க?"



"ஆராதனா தேவமாறுதன்"



"இவ எப்பிடி இங்க...அதுவும் குஜராத் ராஜ்கோட்ல?"



"அத அப்பறமா சொல்றேன் ஆனந்த்....முதல்ல இவளுக்கு என்னன்னு பாரு.... உடல் திடீர்னு தூக்கி போடுது.... ஹாட்பீட் வேகமாகுது"



"டாக்டர் நீங்க இவ அண்ணன்களுக்கு சொல்லி இருக்கலாமே?"



"வாட்....இவள உனக்கு முன்னாடியே தெரியுமா?"



"நீங்க ஏன் இன்னும் சொல்லல டாக்டர்.... மாறன் சார் இத கேள்வி பட்டா ரொம்ப சந்தோஷப்படுவாரு" அவன் பிடியிலேயே நின்றான்.



"ஆனந்த் உனக்கு இவள எப்பிடி தெரியும்னு முதல்ல சொல்லு"



"அதெல்லாம் தெரியும்....நீங்க ஏன் இன்பார்ம் பண்ணல?" அவன் குரலில் கோபம்.



"டாக்டர் அர்ஜுன் தான் வெளியில விஷயம் தெரியுறது ஆபத்துன்னு சொன்னாரு....இன்பாக்ட் நீ சொல்லும் வர எனக்கு இவக்கு அண்ணங்க இருக்காங்கன்னே தெரியாது"



"வாட்"



"எஸ் ஆனந்த்"



"அவ அண்ணன விடவுமா யாராவது பாதுகாப்பு குடுக்க போறாங்க..... முதல்ல இன்பார்ம் பண்ணுங்க டாக்டர் ப்ளீஸ்"



"பட் டாக்டர் அர்ஜுன்...."



"மண்ணாங்கட்டி.... முதல்ல இவ இருக்காங்குற விஷயத்த தெரியப்படுத்துங்க அதுக்கப்பறம் பாக்கலாம்" பொரிந்து தள்ளினான்.



"ஆனந்த் கூல்.... நீ ஏன் இவ்வளவு எமோஷனல் ஆகற... ஆராதனாவ உனக்கு எப்பிடி தெரியும்?"



"அவ...." அவன் தொடங்க அவள் உடல் தூக்கிப் போடவும் அப்படியே நிறுத்தி விட்டு அவளை பார்த்தான்.



"டாக்டர் நீங்க வெளியில இருங்க நா இவள பாக்குறேன்" அவன் மனநிலை மருத்துவன் என்பதால் அவரும் எதுவும் கேட்காமல் வெளியேறி விட அவளருகே அமர்ந்தவன் அவள் கைகளை தன் கைகளுக்குள் பொத்திப் பிடித்தான்.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இராமநாதபுரம்.....



முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு திரிந்த தமக்கையை இழுத்து அருகில் அமர வைத்தாள் கயல்விழி.



"ப்ச்...என்னடி... எதுக்கிப்போ என்ன உட்கார வெச்சிருக்க?" எரிச்சலில் கேட்டாளும் எழுந்து போக முயலவில்லை அவள்....



"என்ன தான்டி பிரச்சின ஒனக்கு?"



"ஒன்னில்ல"



"அப்போ ஏன் இஞ்சி தின்ன குரங்கு மாறி மூஞ்ச வெச்சிருக்க?"



"நா உனக்கு குரங்கா?"



"நா என்ன சொல்ல வந்தா நீ எத புடிச்சி கிட்டு தொங்குற?"



"ப்ச்"



"அஷ்வி....இங்க பாரு மா...சரி சரி அத்தான் உன்கிட்ட சொல்லாம கெளம்பினாரா?"



"இல்ல"



"இல்லல்ல....அப்பறமும் எதுக்கு வரட்டு பிடிவாதம்.... அவரு சொல்லாம போயிருந்தா நீ கோபப்பட்றதுல அர்த்தம் இருக்கு.... அவரு தான் உன் கிட்ட சொல்லிட்டாரே அஷ்வி....இன்னும் என்ன எதிர்பாக்குற?"



"எனக்கு பயமா இருக்கு கயு.... டில்லி போனாரு...என்ன ஆச்சின்னு பாத்த இல்ல?" அவள் நன்றாக மனதிற்குள் பயந்திருப்பது கண்டு மென்மையாக அணைத்து விடுவித்தாள்.



"அக்கா இதுல பயப்பட்றதுக்கு என்ன இருக்கு?"



"உனக்கு தெரியாது கயு....அந்த வலிய என்னால திரும்ப அனுபவிக்க முடியாதுடி... எனக்கு அவரு வெளில கெளம்புறன்னு சொன்னாலே பயமா இருக்கு.... அப்போ யாதுவுக்கு ஒன்னும் தெரியாது... இப்போ ஏதாவது நடந்துருச்சுனா.... அவன் மனசுல அது ஆழமா பதிஞ்சு போயிடும்....அதுக்கப்பறம் தேவ் பேசியும் பேசலனா அவர் மனசு வலிக்கும்லடி....என்னால அவர் வருத்தப்பட்றத பாக்க முடியாது கயு"



'என்ன மாதிரியான அன்பு இது' உடல் புல்லரிக்க கனிவாய் தமக்கையை பார்த்தாள்.



"உனக்கு அத்தான் மேல நம்பிக்க இருக்கா?"



"என்ன விட நா அவர அதிகமா நம்புறேன்டி"



"அப்போ மனச போட்டு குழப்பிக்காம இரு... முதல்ல அத்தான் கூட பேசு.... எல்லாம் சரியாகிடும்"



"முடியாது"



"ஏன்?"



"அவன் எனக்கு கோபமா கத்திட்டான்.... நா அவன் மேல கோபத்துல இருக்கேன்" சொல்லிவிட்டு எழுந்து செல்பவளை பார்த்து சிரித்தாள் தங்கை.



***



"டாக்டர்.....உங்க போனுக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" டாக்டர் அர்ஜுனிடம் கேட்டாள் ஆத்மிகா.



"ஏன் உனக்கு கண்ணு தெரியலயா?"



"ஏய்...."



"இந்த வார்த்தய தவிற வேற எதுவும் உனக்கு வராது போலயே" பல்லை கடித்தாள் ஆத்மி.



"அர்ஜுன் ரொம்ப ஓவரா பேசிகிட்ருக்க... ஆராவ எங்க வெச்சிருக்க?"



"...."



"நா பேசறது காதுல விழுதா இல்லயா?"



"சொல்ல முடியாதுடி"



"ஏய்...."



"ப்ச்"



"கிடக்கிறதுல பாதி உனக்கு தர்றேன்"



"நீ முழு அமவுன்டுமே தந்தாலும் என்னால சொல்ல முடியாது"



"அவ்வளவு விஸ்வாசமோ?"



"விஸ்வாசமா இருக்க நா ஒன்னும் மாறன் கிட்ட வேல பாக்கல"



"அப்பறம் ஏன்?"



"அவன் என் ப்ரண்டு பையன்.....என் நட்பு மேல உள்ள நன்றிக் கடனா நா அவன் மேல பாசம்வெச்சிருக்கேன்... ஸோ....நீ எவ்வளவு கேட்டாலும் என்னால முடியாது"



"அப்போ....உன் மகள தூக்கிட்டா.... அப்பன் பாசம் இருக்குல....இப்போ சொல்லுங்க டாக்டர்"



"முடியாது"



"புள்ளய விடவா முக்கியமா பொய்ட்டான்?"



"நீ அவங்கள நெருங்க முடியாது"



"சவால்?"



"ஆமா...."



"நெருங்கிட்டா?"



"நீ நெருங்குறதுக்குள்ள அவனுங்க உன்ன நெருங்கிருவாங்க"



"யாரு தேவா வா?" அலட்சியம் அவள் குரலில்.



"இன்னுமா உனக்கு புரியல?"



"நீ கடத்தப்பட்ட விஷயமே முதல்ல தெரியாது.....எப்பிடி வருவானுங்க?"



"அவனுங்களால உன்ன கண்டு பிடிக்க முடியாது.... அறிவா நம்பர் ட்ரேஸ் பண்ணாலும் அது இப்போ இருக்க இடத்த தான் காட்டும்" அவள் அறியாமையில் மனதிற்குள் சிரித்துக் கொண்டார் டாக்டர் அர்ஜுன்.



***



"ஆ....ஆரா...நீ சேஃபா தான் இருக்க....உன் அண்ணன் வந்துடுவான் பாரு" அவள் கடைவிழியோரம் கண்ணீர் வடிந்தது.



"நீ சேஃபா தான் இருக்க மா.... உனக்கு ஒன்னில்ல.... உனக்கு எதுவும் ஆகாம உன் அண்ணன் தான் காப்பாத்தினான்" அவள் குடும்பத்தை சார்ந்தே பேசினான்.



"நா பேசுறது கேக்குதா?"



"....."



"நீ உன் அண்ணன பாக்க வேண்டாமா.... இப்படியே இருந்தீன்னா எப்பிடி அண்ணா கூட பேசுவ?" சீராக இயங்கியது அவள் இதயத் துடிப்பு.



அவள் தலை தடவி முத்தமிடப் போனவன் அவள் மனநிலை உணர்ந்து மெதுவாக விலகிக் கொண்டான்.



......



"டாக்டர் வாசு"



"எஸ் ஆனந்த்"



"அவ உள்ள தூங்கறா..... இப்போதைக்கு இது போதும்....பட் எப்பவும் அவ சேஃபா தான் இருக்காங்குறத அவ மனசுல பதிய வைங்க....அப்பறம்....இன்பார்ம் பண்ண சொன்னேன்ல?"



"ஆனந்த் அவ அண்ணன் நம்பர் என் கிட்ட இல்லபா"



"நா தர்றேன்"



"நீயே இன்பார்ம் பண்ணிடேன் ஆனந்த்?"



"என்னால முடியாது டாக்டர்" வேதனையாய் கண்களை இறுக்க மூடிக் கொண்டான் அவன்!!!



"ஆனந்த்" டாக்டர் வாசு தோள் தொடவே படக்கென விழிகளை திறந்தவன்



"சாரி டாக்டர்...நா ஏதோ...ப்ச் அத விடுங்க...இதோ இது தான் ஆரவ் நம்பர்....உங்களுக்கு அனுப்பி விட்ருக்கேன்....இப்போவே இன்பார்ம் பண்ணிடுங்க ப்ளீஸ்" அவனை புரியாமல் பார்த்தவர் உடனே அவன் கொடுத்த நம்பருக்கு அழைத்தார்.



"நாட் ரீச்சபல்னு வருது ஆனந்த்" அவர் சொல்லவே



"நா வேணும்னா சென்னை கிளம்பட்டுமா டாக்டர்?" என்றான் யோசனையாய்....



"என்னபா சொல்ற?"



"வேற வழி தெரிலயே.... இவ உயிர் பொழக்கனும்"



"உன் தேவ இங்க அதிகம் ஆனந்த்.... அத யோசி.... இவ கேஸ் சீக்ரெட்டா நடந்து கிட்டு இருக்குன்னு தான் உனக்கே தெரியுமே.... நீ நான் டாக்டர் அர்ஜுன் அப்பறம் நர்ஸ் சுஜி.... நம்மள தவிர வேறு யாருக்கும் இது தெரியாது..... இவ உடம்புக்கு வேற திடீர்னு என்ன ஆகுதுன்னே புரிய மாட்டேங்குது...."



"டாக்டர்...."



"டாக்டர் அர்ஜுன் வேற இக்கட்டான சூழ்நிலையில மாட்டிகிட்டு இருக்கார்னு நெனக்கிறேன்"



"வாட்..." அவன் அதிர நடந்ததனைத்தையும் கூறி விட்டார்.



"இப்போ எப்பிடி...?" அவனுக்குமே புரியவில்லை....



"அதனால தான் சொல்றேன்.... கொஞ்சம் யோசிச்சு முடிவு எடு.... "



***



இராமநாதபுரம்.....



"அக்கா....ஆரு மொபைல் நாட் ரீச்சபல்னு வருது....என் மொபைலுல பேலண்ஸ் இல்ல" கவலையாய் தங்கை கூறவே அவள் தலையை பிடித்து ஆட்டியவள்



"அதுக்கு ஏன்டி உறிஞ்சுற....என் மொபைலால ட்ரை பண்ணு" உடனே கொடுத்து விட்டாள்.



"அஷ்வி...."



"இப்போ என்ன?"



"நாட் ரீச்சபல்....என்னால முடியாது எனக்கு ஆரு கூட பேசியே ஆகனும்"



"நா என்னடி பண்ண?"



"மாம்" மகன் வந்து நிற்கவே



"திரும்ப ட்ரை பண்ணு இதோ வந்துட்றேன்...." யாதவ்வை தூக்கிக் கொண்டு போய் விட மீண்டும் மீண்டும் முயற்சித்துக் கொண்டிருந்தாள் தன் கணவனுக்கு....



.....



"மாம்...."



"என்னடா ஏன்?"



"எனக்கு தூக்கம் வருது"



"சரி வா அம்மா கூட படுத்துக்க"



"இல்ல எனக்கு டாட் வேணும்... நா டாட் கூட பேசனும்" அவன் அடம்பிடிக்க



"சரிடா கண்ணா இரு வர்றேன்" கயலிடம் சொல்லி விட்டு மொபைலை எடுத்துக் கொண்டு மீண்டும் வந்தாள்.



.....



"பிரதர்.....வருண் அண்ணா உங்க வாட்ஸ் ஆப் கு டீடெயில்ஸ் அனுப்பி வெச்சிருக்காங்களாம்" ஆரவ் கையிலிருந்த அலை பேசி சிணுங்க



"ணா அந்த ராட்சஸி தான் காலிங்... பிடிங்க"



"அவ கூப்டிருக்க மாட்டா....சரியான பிடிவாதங்காரிடா.... புளூ டூத்த ஆன் பண்ணு" காரிலிருந்த புளூ டூத்தை ஆன் பண்ணி விட்டான்.



"டாட்...."



"அடடே யாது கண்ணா...எப்பிடி டா இருக்கீங்க?"



"நீயாணா இது"



"பேசினா கொன்னுடுவேன்" தம்பியை மிரட்டியவன் மீண்டும் மகனிடம் பேசினான்.



.....



மறுமுனையில் ஸ்பீக்கரில் போட்டிருந்தவளுக்கு தெள்ளென விளங்கியது நண்பன் குரல்....



யாதவ்வை விட்டு விட்டு கயலை இழுத்துக் கொண்டு வந்தவள் அருகில் அமர்த்திக் கொண்டாள்.



.....



"டாட் எப்போ வர்றீங்க?"



"வேல முடிஞ்ச உடனே கண்ணா முன்னாடி நிப்பேனாம்.....அது வர அம்மா கிட்ட அடம்பிடிக்காம இருக்கனும் சரியா?"



"ஓகே டாட்....யாது குட் பாய்"



"எஸ் யாது கண்ணா குட் பாய்"



"டாட் நா தூங்க போறேன்....மாம் இருக்காங்க....."



"யாதவ்"



"டாட்"



"அம்மாக்கு ஒரு கிஸ் கொடுடா...."



.....



எம்பி கண்ணத்தில் முத்தமிட்ட மகனை முறைத்தாள் தாய்...



கயல் வாய் பொத்தி சிரிப்பை அடங்க தலையில் நங்கென கொட்டி விட்டாள்.



.....



"டாட் மாம் முறைக்கிறாங்க"



"உன் மாம்கு முறைக்கிறது....சண்ட போட்றது.... கண்ண கசக்கறது எல்லாம் கை வந்த கலை கண்ணா" இம்முறை வாய் பொத்தி சிரித்தான் ஆரவ்.



"டாட்.....சித்தி கூட இருக்காங்க" அண்ணைன முறைத்தான் ஆரவ்.



"அடுத்த கடைல பாக்கலாம்டா...."



"நோ எனக்கு அம்மு கூட பேசனும்"



.....



எவ்வளவு முயன்றும் அவன் குரல் இலேசாக கேட்டு விட பல்லை கடித்தாள் கயல்.



"ஆரவ்" அவள் கோபமாக கத்த



.....



தம்பியை முறைத்தான் ரிஷி.



"கயல் என்னமா?"



"அத்தான் ஆரு உங்க பக்கத்துல தான் இருக்கான்னு தெரியும்.... ப்ளீஸ் அவன் கிட்ட தர்றீங்களா?"



"இதோ மா" ப்ளூ டூத்தை கட் பண்ணியவன் தம்பியிடம் மொபைலை நீட்டினான்.



"கோர்த்து உட்டியேணா"



"அதுக்கு காரணம் நீ தான்...." அவள் சாலையில் கண்களை பதிக்க காதில் வைத்தான் ஆரவ்.



"அம்மு குட்டி....சாரிடி"



"கேரளா....?"



"அ...அது...."



"இதுக்கும் பொய் காரணம் தேடி அப்பறமா கால் பண்ணி சொல்லு"



"அம்...." கால் கட்டாகி விட போனை டேஷ் போடில் தூக்கிப் போட்டு விட்டு அண்ணனை முறைத்தான்.



"என்ன எதுக்குடா முறைக்குற?"



"கோச்சிகிட்டாணா" அவன் சிரிப்பை அடக்குவது கண்டு



"ணா சிரிக்காத" கடுப்பானான்.



"சரி இறங்கு" வண்டியை நிறுத்தி விட்டு இறங்க அவனுடன் இறங்கினான் ஆரவ்.



அது ஒரு டிடெக்டிவ் ஏஜன்ட் ஆபிஸ்....



"இங்க எதுக்குணா?" அவன் புரியாமல் கேட்க



"வா சொல்றேன்" முன்னால் நடந்தான் ரிஷி.



"மிஸ்டர்.குமரன்... ஐ அம் மாறன் ஹியர்" அந்த டிடெக்டிவ் ஆபிஸ் வெளியில் நின்றவாறு அழைத்திருந்தான் ரிஷி.



"சார் நீங்களா.... எனிதிங் சீரியஸ் சார்?"



"எஸ் குமரன்....நா உங்க ஆபிஸ் வெளியில தான் இருக்கேன் கொஞ்சம் வர்றீங்களா?"



"இதோ...." அடுத்த இரண்டாவது நிமிடம் ரிஷியின் முன் நின்றிருந்த குமரனை ஆச்சரியமாய் பார்த்தான் ஆரவ்.



அவனுடன் போலிஸ் டிரைனிங்கிள் நண்பனாக இருந்தவன்....



"குமரா...நீ..." அவன் விழி விரிக்க



"ஆரவ்...." சட்டென அணைத்து விடுவித்தான்.



"அண்ணா இவன ஏற்கனவே உங்களுக்கு தெரியுமா....இவன் என் ப்ரண்டு"



"நான் சாரோட சீக்ரட் ஏஜன்ட் ஆரவ்..." அவன் பதிலளிக்கவே ஸ்னேகமாய் புன்னகைத்தான்.



"சார்...."



"எஸ் குமரன்.... நீ எனக்கு சின்ன ஹெல்ப் பண்ணனும்"



"சொல்லுங்க சார்"



"டாக்டர் அர்ஜுன் போட்டோ உன் போனுக்கு அனுப்பி வெச்சிருக்கேன்.... அவர யாருக்கும் தெரியாம கண்டு பிடிக்கனும்...."



"ஷூர் சார்..."



"அப்போ நாங்க கெளம்புறோம்"



"ஓகே சார்...பட் இத போன்லயே சொல்லி இருக்கலாமே... ஏன் இவ்வளவு தூரம்?"



"இல்ல குமரன்.... இந்த பக்கம் கொஞ்சம் வேல இருந்துது...அதான்"



"ஓகே ஓகே சார்"



"நாங்க வர்றோம்"



.....



"நாங்களும் தேடித்தானேண்ணா போறோம்... அப்பறமும் எதுக்கு டிடெக்டிவ்?" பாதையில் கவனமாக இருந்த அண்ணனிடம் கேட்டான் ஆரவ்.



"டிடெக்டிவ்ஸ் ரொம்ப ஷார்ப் ஆரு... நமக்கு முன்னாடியே கண்டு பிடிச்சா சொல்லுவாங்களேன்னு தான்"



"ம்...பட்...எதுக்காக நாங்க அவர தேடிகிட்டு தான் போய்ட்டிருக்கோம்னு சொல்லலணா?"



"நாம தேடுறமேன்னு கொஞ்சம் அலட்சியமா இருப்பாங்க அதான்" அண்ணனை மனதில் மெச்சிக் கொண்டான் ஆரவ்.



"ணா...பசிக்குது" கார் வேகமெடுக்க



"ணா மெதுவாணா" சொன்னாலும் அண்ணன் பாசத்தில் நெகிழ்ந்தது உள்ளம்.



அந்த உயர் ரக ஹோட்டல் முன் கார் கிரீச்சிட்டு நிற்க



"நீ உள்ள போயி ஆர்டர் பண்ணு நா பார்க் பண்ணிட்டு வந்தட்றேன்" ஆமோதிப்பாய் தலையசைத்தவன் இறங்கிங் கொண்டான்.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இராமநாதபுரம்.....



"அர்ஜூ....." வாசலில் நின்றிருந்த அண்ணன் மகனை கண்டு கத்தினாள் அஷ்வினி.



கண்கள் பிரகாசமாக அஷ்வியை நோக்கி வந்தவன் அணைக்கப் போன அவள் கைகளை படக்கென தட்டி விட்டான்.



"ஏன்டா" பாவமாய் கேட்டவளை முறைத்தவன் அவளை கண்டு கொள்ளாமல் செல்ல அவன் பின்னாலேயே போய் நின்றாள்.



"சாரி அர்ஜூ குட்டி.... சாரிடா சாரி"



"...."



"நா வேணும்னா தோப்புகரணம் போடட்டுமா?" காதில் கை வைத்து அவள் கேட்க



"போடு" என்றான் இரக்கமே இல்லாமல்....



"எத்தன?"



"நூறு..."



"டேய்...." அலறினாள்.



"இல்லன்னா போ" முகத்தை தூக்கவும்



"ஓகே ஓகே" உடனே ஒத்துக் கொண்டாள்.



"ஒன்னு....ரெ..." குனியப் போனவள் முன் கண்ணை கசக்கிக் கொண்டு வந்து நின்றான் யாதவ்.



"கண்ணா....இரு அம்மா வந்துட்றேன்"



"மாம்...நீங்க முதல்ல எந்திரிங்க" அவன் கோபமாக கத்த ஆச்சரியத்தில் விழி விரித்தனர் அனைவரும்....



"ஏன் கண்ணா?"



"நீங்க இப்பிடி பணிஞ்சு போறது எனக்கு பிடிக்கல" அர்ஜுனை திரும்பி முறைக்க அவன் பேச்சை கேட்டுக் கொண்டே உள்ள நுழைந்த அஜய் ஆச்சரியமாய் அப்படியே நின்று விட்டான்.



'அப்பிடியே அவன போலவே வளத்து வெச்சிருக்கான்' ரிஷிக்கு அர்ச்சனை பண்ணியவனுக்கு புன்னகை பூத்தது உதட்டில்....



"கண்ணா அம்மா மேல தான் தப்புடா"



"உங்க மேல தப்பு இருந்தா மன்னிப்பு கேளுங்க மாம்" வாயடைத்துப் நின்றிருந்தவளை பார்த்து சிரித்துக் கொண்டே அருகில் வந்தான் அஜய்.



"அஜய் மாமா.... அர்ஜு அத்தான் மாம்கு தண்டன கொடுக்குறாங்க.... எனக்கு பிடிக்கல" அவர் புகார் வாசிக்க



"அப்படியாங்க மருமகனே....அப்போ என்ன பண்ணலாம்னு நீங்களே சொல்லிடுங்க" அவன் தலையை செல்லமாய் கலைத்து விட்டான்.



"அர்ஜு அத்தான்..... உங்களுக்கு என் மாம்ம மன்னிக்க முடியுமா?" அவன் கேட்ட தினுசில் பக்கென சிரித்தவன்



"சரியான விடாக்கண்டன்டா நீ" என்றான் சமாதானமாய்....



"நீங்க பதில் சொல்லவே இல்ல" மீண்டும் நினைவுபடுத்த



"உனக்காக மன்னிச்சு விட்டுட்றேன் ஓகே வா?" அவனிடமே கேட்டான்.



"ஓகே....மாம் ப்ராப்ளம் சால்வ்ட்...." பெரிய மனிதனாய் சொல்லி சிரிக்க அவன் முன் அவன் உயரத்திற்கு மண்டியிட்டவள் அவனை தன்னோடு அணைத்தாள்.



"மிஸ்.ஆத்மிகா...."



"சொல்லுங்க டாக்டர் அர்ஜுன்?" எகத்தாளமாய் வந்து விழுந்தன வார்த்தைகள்....



"என் பொண்ண தூக்க போறதா சவால் விட்ட.... என்ன ஆச்சு?" அவர் நக்கலில் நறநறவென பல்லைக் கடித்தவள் அவரை உறுத்து விழித்தாள்.



"டாடி.....எனக்கு அந்த ஆராவோட டீடெயில்ஸ் தேவயே இல்ல.... முதல்ல இவன சாவடிக்கனும்"



"ஆத்மி மா....எதுக்கு டென்ஷன் ஆகுற.... அதான் நா இருக்கேன்ல.... நீ உள்ள போ நா பாத்துக்குறேன்" தந்தை சொல்ல டாக்டர் அர்ஜுனை முறைத்தவள் விறுட்டென வெளியேறி விட டாக்டர் முன் வந்தமர்ந்தார் ராஜன்.



"மிஸ்டர்.அர்ஜுன்... என் பொண்ணு மாதிரி நா இருப்பேன்னு தப்பு கணக்கு போட்டுடாதீங்க"



"ஓகே" அவர் சட்டென ஒத்துக் கொள்ள அவருடைய நக்கலில்



"ஏய்..." கர்ச்சித்தார் தந்தை.



"மிஸ்டர்.ராஜன் இவ்வளவு டென்ஷன் உடம்புக்கு ஆகாது"



"என்ன நக்கலா?"



"இல்லயா பின்னே?"



"அர்ஜுன் உன் உயிரோட விளையாடி கிட்டு இருக்க"



"ஊஹூம்.... உங்க ரெண்டு பேரு உயிருக்கு உத்தரவாதமில்லன்னு பரிதாபப் பட்டேன்"



"ஏய்...."



"ப்ச்....அதென்ன அப்பனும் மகளும் ஓரே டயலாக யூஸ் பண்றீங்க?" எள்ளலாய் கேட்டவரை உறுத்து விழித்தவர் சட்டென எழுந்து நின்று



"நாளை காலைல உன் பொண்ணு கதறி தூடிக்கிறப்போ பாக்குறேன் டா"



"பாக்கலாம்....." சவால் விட்டவருக்கு ரிஷி அதற்குள் வந்து விட வேண்டும் என்ற வேண்டுதலே பெரிதாய்....
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ஆரு...."



"சொல்லு ணா" சாப்பாட்டை உள்ளே தள்ளிக் கொண்டே கேட்டான்.



"இப்போ கிளம்பினா நாளை காலைல ஜெய்பூர் போய் சேந்துடலாம்.... ப்ளைட் புக் பண்ணிட்டேன் சீக்ரம் சாப்புடு"



"என்னணா எனி ப்ராப்ளம்?" அவன் முகத்தில் குழப்ப ரேகைகள்....



"நத்திங் டா.... பட் டயர்டா இருக்கு" தலை வேறு திடீரென வலிக்க பேசிக் கொண்டிருந்தவன் சட்டென தலையை பிடித்துக் கொள்ள உணவை அப்படியே வைத்து விட்டு எழுந்தவன் அண்ணன் அருகில் வந்தான் பதறியபடி....



"என்னணா என்ன பண்ணுது?"



"ஹே...ஒன்னில்லடா....ரிலாக்ஸ்"



"இல்ல நீ கிளம்பு நாம ஹாஸ்பிடல் போயி பாக்கலாம்"



"ஏய் அதான் சொல்.."



"கிளம்புன்னா கிளம்பு" கையை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றவன் அவனை அமர வைத்து விட்டு தானே காரை எடுக்க கண் மூடி இருக்கையில் சார்ந்தான் ரிஷிகுமார்.



......



"ணா...." காரை ஓரமாக நிறுத்தி விட்டு விழி மூடியிருந்தவனின் தோள் தொட்டான் ஆரவ்.



அதில் மெதுவாய் விழி திறந்தவன்



"என்னடா?" என்றான் சோர்வாய்....



"ஹாஸ்பிடல் வந்தாச்சு.... வா"



"டேய் எதுக்குடா?"



"ப்ச்....எதுவும் பேசாம வா என் கூட" அவன் பிடிவாதமாய் இறங்க வேறு வழியில்லாமல் இறங்கி நடந்தான் ரிஷி.



......



"சொல்லுங்க"



"டாக்கடர் ஐ அம் மாறன்.... எனக்கு சில வருடங்களுக்கு முன்னால...." தொடங்கி நடந்ததனைத்தையும் கூற கவனமாக கேட்டுக் கொண்டவர்



"இப்போ அடிக்கடி தல வலி வர்றா மாறி இருக்கு" அவன் கடைசியாய் சொன்னதை கேட்டு புருவம் சுருக்கினார்.



"உங்களுக்கு ட்ரீட்மெண்ட் பாத்த டாக்கடர் யாருன்னு தெரிஞ்சிக்கலாமா?"



"யா ஷூர்..... டாக்டர் அர்ஜுன்"



"ம்....ஓகே....உங்க மெடிக்கல் ரெக்காட்ஸ் எல்லாம்?"



"டாக்டர் நாங்க இங்க கொஞ்சம் அவசர வேலயா வந்தோம்..." இடையிட்டான் ஆரவ்.



"ஓகே....அப்போ நா பெயின் கில்லர் கொடுக்குறேன்.... எதுக்கும் நீங்க ஸ்கேன் ஒன்னு பண்ணிகிறது நல்லது.. "



"ஷூர் டாக்டர்"



"அப்பறம் டாக்டர் அர்ஜுன் கிட்ட பேசிடுங்க... ப்ராப்ளம் ஒன்னும் இல்ல... அதிக ட்ரெஸ் அப்பறம் டயர்டா இருந்தா வர்றது தான்... உங்களுக்கு தலையில அடிபட்டதுனாலதான் அடிக்கடி வருது... மத்தபடி எதுவுமில்ல... பயப்பட தேவயில்ல.. " அவர் ஸ்கேன் செய்ய அனுமதி எழுதிக் கொடுக்க மருந்து பத்திரத்தையும் வாங்கிக் கொண்டு வெளியேறினர் இருவரும்.





இராமநாதபுரம்.....



மனதில் தன்னவனை அழைப்போமா வேண்டாமா என பட்டிமன்றம் நடக்க அறையின் நீள அகலத்தை அளந்து கொண்டிருந்தாள் அஷ்வினி.



"கமாண்டர்.....நா கோபமா இருக்கேன்னு தெரிஞ்சும் எடுக்குறானா பாரு.... யாது கிட்ட வெக்கமே இல்ல கிஸ் வேற..... டெர்ரர் மூஞ்சி ஆபிஸர் என் மேல லவ்வே இல்ல அவனுக்க" கரித்துக் கொட்டியவள் மீண்டும் மொபைலை பார்த்தாள்.



ஊஹூம் அவனிடமிருந்து அழைப்பு என்ன மேஸேஜ் கூட இல்லை....



அவள் பல்லை கடிக்க போன் அலறவும் முகம் பிரகாசமாக அடண்ட் செய்து காதில் வைத்தவள்



"அம்மு" நண்பனின் கெஞ்சலான குரலில் பல்லை கடித்தாள்.



"எரும அதான் அவகிட்டயும் மொபைல் இருக்குல....அதுக்கு எடுக்குறதுக்கு என்ன" கடுப்பானாள்.



"அவ சுவிட்ச் ஆப் பண்ணி வெச்சிருக்காடி"



"போடா....சரி அந்த கமாண்டர் எங்க?" அவள் கேள்வியில் காரை ஓட்டிக் கொண்டிருந்த ஆரவ் அண்ணனை பார்க்க கண் மூடி சாய்ந்திருந்தவனின் உதடுகள் சிரித்தன.



கார் புளூ டூத்தில் கணெக்ட் பண்ணியிருப்பது தெரியாமல் நன்றாக கணவனுக்கு அர்ச்சனை பண்ணிக் கொண்டிருந்தாள் பாவை.



"இங்க ஒருத்தி கூட சண்ட போட்டுட்டு வந்தோமே.... சமாதானப்படுத்தனுமே எதுவும் இல்ல....டெர்ரர் மூஞ்சி..... அவன பேசாம ஏதாவது மிலிட்டரி இருந்தா சேத்து விட்டுடா.... கமாண்டர்.... " கணவன் சிரிப்பை அடக்க வாய் விட்டுச் சிரித்தான் ஆரவ்.



"சரி சரி சாப்டியா?"



"ம்...ஆமாடி இப்போ தான்"



"கமாண்டர் சாப்டானா?"



"ஆமா"



"நல்லா பாத்துக்குற வழிய பாரு..... அவனுக்கு ஏதாவது ஆச்சு உன்ன கொன்னுடுவேன்"



"புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் ஜோடி பொருத்தம் பிரமாதம்"



"இல்லயா பின்ன?" அவன் கடுப்பை புரிந்து கொள்ளாமல் பெருமை பேசிய நண்பியை நினைத்து பல்லை கடித்தவன்



"அம்மு கிட்ட கொடுடி ராட்சஸி" என்றான் கடுப்பாய்.



அதில் ரிஷி கண்களை திறந்து முறைக்க அவள் கத்தினாள்.



"எரும அப்பிடி கூப்புடாதன்னு எத்தன தடவடா சொல்றது உனக்கு"



"அம்மு கிட்ட கொடு"



"போடா கெழவா" ஏசியவள் நேரே சென்று கயலின் கைகளில் போனை தினித்தாள்.



"யாரு அஷ்வி"



"ம்.... தாத்தா"



"தாத்தாவா....நமக்கு தாத்தா இருக்காங்களா?" அவள் புரியாமல் கேட்க இவள் நமுட்டுச் சிரிப்பு சிரிக்க மறுமுனையில் ரிஷி வாய் விட்டுச் சிரித்தான்.



"ராட்சஸீஈஈஈ" அவன் பல்லை கடிக்கவும் தான் ஆரவ் என புரிந்து கொண்டவள் பட்டென கட் பண்ணி விட்டாள்.



மீண்டும் மீண்டும் அழைப்பு வந்ததில் சுவிட்ச் ஆப் பண்ணி தூரப் போட அலறினாள் தமக்கை.



"ஏஏஏஏய்....அது என்னோட மொபைல்டி"



"ப்ச்...."



"இங்க கொடு" வெடுக்கென இழுத்தவள் முறைக்க



"அதான் ஒன்னும் ஆகலல்ல?" இவளும் கடுப்பானாள்.



"உன் புருஷன் மேல உள்ள கோபத்த தீர்த்துக்க உனக்கு என் போன் தான் கெடச்சுதா?"



"ஆமா பெரீய போனு"



"ஆமா"



"போடி..."



"நீ போடி" இவள் கத்த மித்ராவை தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்த விஜயலக்ஷ்மி விஜயலக்ஷ்மி தன் தலையிலேயே அடித்துக் கொண்டார்.



***



"ஆனந்த்....." டாக்டர் வாசுவின் அலறலில் அடித்துப் பிடித்துக் கொண்டு உள்ளே ஓடினான் டாக்டர் ஜீவானந்த்.



உடல் தூக்கி தூக்கி போட்டுக் கொண்டிருக்க அவள் ஹார்ட் பீட் அதி வேகமாய் ஓடிக் கொண்டிருந்ததில் அதிர்ந்து நின்றான் வாசலில்....



"ஆனந்த்" டாக்டர் வாசு மீண்டும் அழைக்கவும் தான் தன்னை மீட்டவன் அவசரமாக அவளருகே ஓடினான்.



"என்னாச்சு டாக்டர்... ஏன் இப்பிடி?" அவன் கண்களில் அப்படி ஒரு தவிப்பு....



"தெரில ஆனந்த்..... எனக்கும் எதுவுமே புரிய மாட்டேங்குதுடா"



"மேபி இவளுக்கு லாஸ்டா நடந்த இன்ஸிடண்ட் தான் இப்படி நடக்க காரணமா இருக்கலாம் அங்கிள்"



"அப்போ...." டாக்டர் அர்ஜுன் மூலம் அறிந்தவற்றை அவர் அப்படியே ஒப்பிக்க கோபத்தில் கை முஷ்டியை இறுக்கினான் அவ்வாண்மகன்.



"நீங்க இருங்க டாக்டர் நா பாக்குறேன்" அவர் வெளியேற தொய்ந்து போய் அமர்ந்தவன் மீண்டும் அவள் உடல் தூக்கிப் போடவும் துள்ளி எழுந்தான்.



"அ.. அ.. ஆரா...ஆராதனா....எனக்கு தெரியும் நீ கேட்டு கிட்டு தான் இருக்கன்னு..... ஏதாவது பேசு" அவள் மனதை தாசை திருப்ப முயல அது நன்றாகவே வேலை செய்தது.



ஹார்ட் பீட் நார்மலுக்கு வர அவள் உடலும் அப்படியே அமைதியாய் அடங்கியது.



"ம்....குட் இப்போ சொல்லு இந்த ஆரவ்வ என்ன பண்ணலாம்" ஏதேதோ பழைய ஞாபகங்கள்....



"....."



"நீ அமைதியா இருந்தா அவன் கிண்டல் பண்ணிகிட்டே இருப்பான்... அண்ணா கிட்ட போட்டு கொடுத்து அடி வாங்க வைக்கலாமா" அவன் கேட்க அவள் இதயக் கதவு திறந்து அந்நாளுக்கே சென்றது.



(குட்டி ஆராதனா இடுப்பில் கை வைத்து முறைக்க அவளுக்கு பழிப்பு காட்டி நின்றிருந்தான் குட்டி ஆரவ்.



"ப்பா....." அவள் வீடே அதிர வைக்க பயப்படுவானென்று பார்த்தாள் சிரித்துக் கொண்டிருந்தான்.



"ஏன்டா சிரிக்குற?"



"அப்பா தான் வீட்ல இல்லயே"



"அண்ணா கிட்ட போட்டு கொடுப்பேன் உன்ன"



"அவனும் இல்ல...." மீண்டும் நாக்கை துறுத்தி அழகு காட்ட உதட்டை பிதுக்கவும் உள்ளே நுழைந்தான் ஜீவா.



"என்ன ஆரா...ஏன்?"



"ஆரு ரொம்ப மோசம் ஜீவா"



"சரி சொல்லு இவன என்ன பண்ணலாம்?" தனக்கு துணை வந்து விட்ட சந்தோஷத்தில் ஆரவ்விற்கு பழிப்பு காட்டினாள்.



"அண்ணா கிட்ட போட்டு கொடுக்கலாமா?" அவன் கேட்கவும் ரிஷி உள்ளே நுழையவும் சரியாக இருக்க ஓடி போய் கட்டிக் கொண்டாள் தங்கை....)



உணர்வற்றிருந்த உடற் பாகங்கள் இயங்க ஆரம்பிக்க அவள் கைகள் இலேசாய் அசைந்து மூடிய இமைகளுக்குள் கருமணிகள் அங்குமிங்கும் சுழன்றன.



தொடரும்......



25-05-2021.
 
Status
Not open for further replies.
Top