All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரிஷியின் 'உயிரோடு கலந்தவள் 02' - கதை திரி

Status
Not open for further replies.

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 08 [ B ]



அனைவருக்குமே சற்றே அதிர்ச்சியாயிருக்க முதலில் கலைந்தது அஷ்வினி தான்...



"அஜய் உனக்கு முன்னாடியே ஆராவ தெரியுமா?"



"இவங்க...."



"ஆராதனா தேவமாருதன்"



"எஸ் அஷ்வி....ஐ நோ.... பட் இங்க எப்பிடி?"



"வாட்....தெரியுமா உனக்கு?"



"ம்...யாஹ்..."



"எப்பிடி?"



"சார் தான் என்ன காப்பாத்துனாங்க அண்ணி...." இடையிட்டாள் பெண்....



"காப்பாத்துனானா?" சற்றே தெளிந்த வருண் தான் கேட்டான்.



"ம்...இவங்க தான் என்ன காப்பாத்துனாங்கணா..." அனைவர் கவனமும் அஜய்யை கேள்வியாய் நோக்கியது.



"வாட் ஹேப்பண்ட்?" பேண்ட் பாக்கெட்டில் கைகளை விட்டு படி நிதானமாய் கேட்டான் ரிஷி.



"அது....அன்னக்கி... அஷ்விமா.... நா பர்ஸ்ட் டைம் பிஸ்னஸ் விஷயமா குஜராத் போனேன் ஞாபகம் இருக்கா...?"



"எஸ் ணா...."



"அ...அப்போ தான் அங்க..." என்றவனின் நினைவலைகள் பின்னோக்கி சென்றன.



((தன் பட்டப்படிப்பை முடித்து விட்டு முதன் முதலாக தந்தையின் தொழிலை கையிலெடுத்த நேரம்....



முதல் ப்ராஜக்ட்டே குஜராத்திலுள்ள பெரிய கம்பெனியுடன் ஒப்பந்தம் ஆகி இருந்தது.



அங்கே முழுவதுமே வெளிநாட்டு ஒப்பந்தங்கள் தான் அதிகமாக கைச்சாத்திடப்படுவதனால் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் அதிகம்....



அதே போலவே இருந்ததில் இவனுக்கும் நேரடியாக சென்று சந்திக்க வேண்டிய நிலை....



அன்று மீட்டிங் சற்று தாமதமாக முடிய ஹோட்டல் வாசல் பக்கம் வந்தவனை கலைத்தது போன் அலறல்....



எடுத்து காதிற்கு கொடுத்தவன் பேச்சு சுவாரஷ்யத்தில் ஹோட்டல் பின் புறம் நடந்து வந்து விட்டிருந்தான்.



"ம்...ஓகே பாய் மா... நா காலைல பேசறேன்..." சொல்லி விட்டு திரும்ப போனவனை கலைத்தது தூரத்தே தெரிந்த புதருக்கு பின்னால் கேட்ட முணகல் ஒலி!!!



"என்ன சத்தம்.... ஏதாவது விலங்கா இருக்கும் போல" யோசித்து விட்டு திரும்பி நடந்தவன் பின்னால் கேட்ட பேச்சு குரலில் சட்டென நிற்க அது அப்படியே அடங்கிற்று....



மீண்டும் நடக்கவே மீண்டும் கேட்க சற்றும் தாமதிக்காமல் அதனை நோக்கி ஓடத் துவங்கினான்...



"டேய் யாரோ வர்றா மாறி இருக்கு.... இவள தூக்குங்கடா..."



"ம்...ம்...." வாய் கட்டப்பட்டிருந்ததால் முணகினாள் பெண்.



"டேய் நீ அவன கவனி...நா இவள இங்க இருந்து நம்ம குடோனுக்கு ஷிப்ட் பண்ணிட்றேன்..."



"சரி..." என்றவன் புதர் மறைவிலிருந்து கத்தியுடன் பாய சுதாரித்து விலகியவன் அந்த கத்தியை எடுத்து அவன் நெஞ்சிலேயே சொறுகி விட்டு எழுந்து ஓடினான்.



"டேய்....டேய் வந்துட்டான்டா.... பிடிடா...." அவளை கட்டி காம்பவுண்ட் சுவருக்கு மறுபக்கம் இருப்பவனுக்கு கை மாற்றிக் கொண்டிருந்த கடைசி நேரத்தில் அவனையும் அடித்து அவளை தன் புறம் இழுக்க மறு பக்கம் நின்றிருந்தவன் தப்பித்து ஓடிவிட மயக்கமாய் இருந்த அவளின் கண்ணத்தை பதற்றமாய் தட்டினான் அஜய்.



"ஹே....வேக் அப்...."



"ம்...." அவள் முணக வாயில் கட்டி இருந்த துணியை கழற்றி வீசியவன் மீண்டும் தட்டினான்.



"ஹே....டிட் யூ ஹியர் மீ...?"



"அ...அ....அண்ண..."



"யா...யாருமா நீ... பே...பேரு என்ன?"



"ஆ...ஆ...ஆரா...த...னா....."



"ஓ...ஓகே ஓகே.... யாரு இருக்காங்கமா....?"



"நீ...நீங்க....யா....?"



"நான்...நான் அஜய்... குடும்பத்துல யாரையாவது சொல்லுமா?"



"தே....தே....ங்...க்...ஸ் சா...ர்....ரொ...ரொ... ம்...ப.... தேங்....க்...ஸ்"



"வெக் அப்...ஆரா... ஆராதனா....." கண்ணத்தில் தட்டிக் கொண்டே இருந்தவன் அவள் சுயநினைவு இழந்து கொண்டிருப்பது கண்டு கைளில் ஏந்திக் கொண்டு ஹாஸ்பிடல் ஓடினான்.



.....



தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தவன் கதவை திறந்து கொண்டு வந்த டாக்டரிடம் விரைந்தான்.



"டாக்டர் என்னாச்சு?"



"அவங்களுக்கு தலைல அடிபட்டு அதிகமா ப்ளட் லாஸ் ஆகி இருக்கு... ஷீ இஸ் இன் கோமா நௌ"



"வாட்....ஹௌ இட்ஸ் பாஸிபல்... இப்போ கூட பேசினாங்களே என் கூட?"



"திஸ் இஸ் தி ரிப்போர்ட் மிஸ்டர். அஜய்" அவர் ரிப்போர்ட்டை காட்டி விலக்க திக்கு தெரியாத காட்டில் மாட்டிக் கொண்டது போல் விழித்தான் அவன்....



"எப்போ சரி ஆகும்..."



"அத சொல்ல முடியாது அஜய்.... பாக்கலாம்....அவங்க பேஃமிலிக்கு இன்பார்ம் பண்ணிட்டீங்களா?"



"அ...அ..."



"இட்ஸ் ஓகே....ஐ கெட் அ கால் ப்ரம் ஹேர் பேமிலி.... நாங்க பாத்துக்குறோம்.... நீங்க கிளம்புங்க..." தோள் தட்டினார் போலி டாக்டர்....



டாக்டர் ராகவன்



((நண்பா பார்ட் ஒன்ல முதல் அத்தியாயத்துல செத்து போனாரு ஞாபகம் இருக்கா....



ராக்கேஷ் கூட போவேன்னு அடம் பிடிச்சு நின்னானே...



அவனே அவனே....



மறுபடி மறுபடி சொல்றேன் நண்பா...



பகுதி ஒன்ன நல்லா ஞாபகம் வச்சிகங்க...



ஓகே😂))



"தேங்க் காட்.... அவங்க பேமிலில யாரு வர்றன்னு சொல்லி இருக்காங்க..?"



"அப்பா...." பிசிரில்லாமல் ஒலித்த குரலில் சந்தேகம் காண முடியாமற் போக திரும்பி நடந்நான் வருண் அஜய்....))



"அதுக்கப்பறம் நான் ஊருக்கு வந்துட்டேன்.... அடிக்கடி ஞாபகம் வந்தாலும் எங்க தேடுறதுன்னு தெரியாம விட்டுட்டேன்.....பட்..." அவன் சொல்லி விட்டு நிறுத்த அந்த நாள் நினைவின் தாக்கத்தில் கண்கள் மேல் நோக்கி சொறுகி கொண்டிந்தவளிடம் பாய்ந்து ஓடினான் ஜீவா.....



"ஆ...ஆரா....ஆரா...." கண்ணத்தை தட்ட திடீரென பரபரப்பாகியது அந்த இடம்....



"ஐல் கால் தி டாக்டர்" போனை எடுக்கப் போன ரிஷியை தடுத்தான் ஜீவா....



"ப்ரோ....தேவயில்ல... கை கால தேச்சி விட்டு ரிலாக்ஸ் ஆக்கினா சரியாகிடும்" அவனை பாராமலேயே பேசியவன் கைகளை சூடு பறக்க தேய்க்கத் துவங்கினான்.



***



ஹாஸ்பிடல்.....



தங்கையை சாதாரண நிலைக்கு கொண்டு வந்து அவளை உறங்க வைத்தவன் கிளம்பி நேரே டாக்டர் அர்ஜுனின் முன் வந்து நின்றான்.



"வாங்க மாறன்...."



"ம்...." அவர் இருக்கையை காட்டவே அமர்ந்து கொண்டான்.



"எனி ப்ராப்ளம்?"



"நோ டாக்டர்...பட் ஐ ஆஸ்க் யூ ஒன் திங்"



"எஸ்...ஷூர்...."



"ஆரா எப்பிடி உங்க கஸ்டடிக்கு வந்தா.... நீங்க ஏன் முதல்லயே இன்பார்ம் பண்ணல?"



"மாறா...டோன்ட் கெட் ஆங்ரி....லெட் எக்ஸ்ப்ளைன்..."



"ம்..."



"அஷ்வினிக்கு ஆக்ஸிடண்டுன்னு எல்லோரும் லண்டன் கிளம்பி வந்தாங்கல்ல....அன்னக்கி ராத்திரி தான் ஆராதனா அட்மிட் ஆனா.... உடனே கால் பண்ணி சொல்லி இருக்கலாம்லாம் தான் மிஸ்டர்.மாறன் .... பட் ஷீ இஸ் இன் டேன்ஜர்.... அஷ்வினிக்கும் இப்பிடி நடந்ததுனால நான் உங்கள காண்டாக்ட் பண்ணல.... அடுத்தவங்க மொபைல் அந்த நேரம் ரீச் பண்ண முடியாததுனால அவங்க திரும்பி வந்த உடனே காண்டாக்ட் பண்ணி சொல்லிட்டேன்...."



"எனக்கு இன்பார்ம் பண்ணி இருக்கலாமே?"



"உங்களுக்கு நிறைய தடவைகள் ட்ரை பண்ணேன் மாறன்... பட் நாட் ரீச்சபல்.. கடைசி முயற்சியா ட்ரை பண்ண நெனச்சப்போ தான் ஆத்மிகா ஸ்பையா வெச்ச பையன் என்கிட்ட மாட்டினான்.... அந்த விஷயம் அவளுக்கு லீக்காக முன்னாடி என் ஃப்ரண்ட் வாசு ஹாஸ்பிடலுக்கு ஷிப்ட் பண்ணிட்டேன்....அதுக்கப்பறமா தான் கிட்னாபிங் நடந்துது....இதுல சொல்ல முடியாம போயிடுச்சு"



"இட்ஸ் ஓகே டாக்டர்.... அண்ட் ஐ அம் சாரி"



"இட்ஸ் ஓகே மிஸ்டர்.மாறன்.... ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட்"



"ஹாஸ்பிடல்ல சேத்தது யாரு....?"



"மிஸ்டர்.ஜீவானந்த்"



"வாட்....பட் ஹௌ..?"



"அத அவருமே சொல்லல மாறன்"



"அஜய் சொன்னபடி பாத்தா மதுரைல இருந்து அவ பர்த்டே அன்னிக்கு கடத்தப்பட்டு இருக்கா"



"மே பீ..."



"இங்க இருந்து கடத்தி குஜராத்துக்கு கொண்டு போயிருக்காங்க"



"ம்...எஸ்..."



"அதே நேரம் இங்க வேற யாரோட பாடிய அவ பாடின்னு நம்ப வெச்சிருக்கணும்.... கோமால இருந்து எந்திருச்சு தப்பிக்க நெனச்சவள தான் ஆனந்த் காப்பாத்தி இருக்கான்....இதுல... ஒன்னு ஆரா கிட்ட கேக்கனும்....அடுத்தது.... அவன் கிட்ட கேக்கணும்.... ஆரா இருக்க கண்டிஷன்ல அவ கிட்ட கேக்க முடியாது....ஸோ... ஆனந்த்...."



"நீங்க கெஸ் பண்ணினது சரியா இருக்கலாம் மாறன்....பட் ஆரா கிட்ட எப்பவும் இது பத்தி கேக்காம இருக்கறது தான் சேஃப்...."



"ம்...ஐ அண்டர்ஸ்டாண்ட் டாக்டர்...தேங்க் யூ" விடை பெற்று வெளியே வந்தவனுக்கு எப்படி ஆனந்திடம் கேட்பது என்று தான் இருந்தது.



***



காரை பார்க் பண்ணி விட்டு இறங்கியவன் வெளியே மகன் அர்ஜுனுடன் அமர்ந்திருந்த அஜய்யை கண்டு அவனிடம் கால்களை எட்டிப் போட்டான்.



.....



"இந்த அர்ஜு எங்க போனான்...." தேடிக் கொண்டே வெளியே வந்தவளுக்கு கணவன் அஜய்யிடம் செல்வது கண்டு மனது திக்கென அதிர அவனிடம் ஓடுவதற்குள் அஜய்யை அடைந்திருந்தான் அவளவன்....



"ம்கூம்...." தொண்டையை செறும பார்வையை திருப்பியவன்



"அர்ஜு நீ போ...நான் இப்போ வந்துட்றேன்..." என்றான் மகனிடம்...



"ஓகே பா...." அவன் செல்லவே



"உட்காரு தேவா..." என்றான் அருகிலிருந்த இருக்கையை காட்டி...



தலையசைத்து அமர அவன் முன்னால் மூச்சிறைக்க வந்து நின்றாள் மனைவி...



"வா அஷ்வி.... எதுக்காக இப்பிடி மூச்சு வாங்குற?" நிமிர்ந்து கேட்டான் அண்ணன்.



"இ...இல்ல இல்ல சும்மா தான்..."



"ம்...."



"அஜய்....உன் கிட்ட பேசனும்"



"பேசணுமா...?" மனைவியின் பயம் உணர்ந்தாலும் அவளை பாராமலேயே அமர்ந்திருந்தான் கணவன்.



"ஏன் நீ பதர்ற?"



"ஹி....சும்மா....நானும் இருக்கட்டுமா தேவ்?"



"ம்...." ஒற்றை சொல்லோடு முடித்து விட மனம் சுணங்கினாலும் ஹப்பாடாவென அமர்ந்து விட்டாள்.



"சொல்லு தேவா?"



"க்கூம்....வந்து...ஐ...நான்.... ஐ அம் சாரி" அவன் மன்னிப்பு கேட்டதில் அவன் மனையாளின் வாய் ஆவென பிளக்க தங்கை நாடியை பிடித்து மூடி விட்டு



"எதுக்கு மன்னிப்பு?" என்றான் சிரித்தபடி...



"அ...அது..."



"கெஷுவலா பேசு... இதுக்கு முன்னாடி நடந்ததுக்கு மன்னிப்பு கேக்குறன்னா நானும் கேக்கனும்.... ஐ அம் சாரி"



"அட நீங்க ரெண்டு பேரும் சமாதாணமாயிட்டீங்களா..... ஹப்பாடா..."



"சரி விடு...வேற ஏதாவது கேக்க நெனக்கிறியா?"



"எஸ் அஜய்... எண்ட் தேங்க் யூ பார் சேவிங் மை சிஸ்டர்..."



"இட்ஸ் ஓகேடா...."



"நீ என் கிட்ட ஏதோ கேக்கணும்னு இருக்க....ஐ கெஸ்... கேளு"



"தேவா....அது....உனக்கு எப்பிடி?"



"அது தெரியும் கேளு"



"நீ...நீ.... கார் ரேஸர் ஆ?" அவன் கேள்வியின் நிதானமாய் புன்னகைத்தவன் ஆமென தலையாட்ட உச்ச கட்ட அதிர்ச்சியில் பேயறைந்தது போல் அமர்ந்திருந்தாள் அவனவள்!!!



.....



அதே நேரம் ஆபிஸில் தன் கேபினில் அமர்ந்திருந்த கதிரவனுக்கும் அதே நினைவலைகளே வந்து கொண்டிருந்தது!!!



(( "ப்பா....ப்ரீதி ட்ரஸ் அழகா இருக்காபா" தன் புது சட்டையை விரித்துக் காட்டி தலை சாய்த்து கேட்டாள் ஒரு சிறு பெண்....



கையில் க்ளவுஸை மாட்டிக் கொண்டிருந்த வெங்கட் மண்டியிட்டு மகள் முன் அமர்ந்து



"அட....ப்ரீத்தி ட்ரஸ் செம்மயா இருக்கே... யாரு வாங்கி கொடுத்தாங்க?" என்றான் கண்ணம் கிள்ளி.....



"தேவ் அங்கிள்...." கண்சிமிட்டி சொன்னவளை கைகளில் அள்ளிக் கொண்டவாறு அறையிலிருந்து வெளியே வந்து சமயலறை கட்டில் ஏற்றியவன் காபி மேக்கரில் காபி போட ஆரம்பித்தான்.



"ப்பா....ப்பா...."



"என்னடா?"



"இன்னிக்கும் நீங்க தான் ஜெயிக்க போறீங்களா பா?"



"ப்ரீத்தி பாப்பா என்ன நினைக்கிறாங்க?"



"அப்பா தான் ஜெயிக்க போறாங்க...... ஹே....."



"பாப்பா சொல்லிட்டாங்க.... அப்பா தான் ஜெயிக்க போறேன்" மீண்டும் கண்ணம் கிள்ளினான்.



"ப்பா அங்கிள் கூட வர்றேனே?" வாயை சுருக்கி கொஞ்சியவளிடம் சரியென தலையசைத்தவன் வெளியே வரவும் முன் வீட்டிலிருந்து அவன் வெளியே வரவும் சரியாக இருந்தது.



"தேவ் அங்கிள்....." கத்திக் கொண்டே ஓடியவளை கைகளில் அள்ளினான் தேவ்...



ரிஷிகுமார் தேவமாருதன்....



((ராகேஷிடம் சொத்தை தூக்கி எறிந்து விட்டு வந்திருந்தவனிடம் அறிமுகமானவள் ப்ரீத்தி....



வெங்கட்டின் ஒரே புதல்வி....



அவள் பிறக்கும் போதே தாய் இறந்து விட அவளை தனியாக வளர்த்தவனுக்கு வாழ்வின் ஒரே பற்று கோல்!!!



ரிஷி அங்கு வந்த புதிதில் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க சந்தர்ப்பவசமாக மழைநாளில் அறிமுகமானாள் ப்ரீத்தி....



குழந்தை அழுகுரல் கேட்டு வெளியே வந்தவன் மழையில் ஒரு பெண் கீழே விழுந்து அழுது கொண்டிருந்தது கண்டு அவளிடம் ஓடினான்.



"பாப்பாக்கு அடி...." தனக்குத் தானே சொல்லிக் கொண்டு தேம்பி அழுதவளை பார்க்க அவன் மனம் அப்படியே உறுகிற்று!!!



"பாப்பாக்கு எங்க அடி பட்டிருக்கு?" ஒரு காலை குற்றி அமர்ந்தவன் அவளிடம் கனிவாய் பேச முயன்றான்.



"பாப்பாக்கு இங்க அடி...." காலை காட்ட இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.



"சரி நாம வீட்டுக்கு போலாமா?" சரியென தலையாட்டியவளை தூக்கிக் கொண்டு உள்ளே சென்றவன் மருந்திட்டு அவளை தன்னுடனே இருத்திக் கொண்டான்.



"பாப்பா பேரு ப்ரீத்தி...."



"என் பேரு ரிஷ்.... க்கூம்.... என் பேரு தேவமாருதன்...."



"ரொம்ப நீளமா இருக்கே....தேவ் அங்கிள் நல்லா இருக்குல?"



"ம்..." பொம்மை போல் தலையாட்டி வைத்தான்.



"உங்க அப்பா எங்கடா?"



"அப்பா ஜெயிக்க போயிருக்காங்க..."



"ஜெயிக்க போயிருக்காங்களா... எங்கேமா?"



"அதுவா....அது அப்பா கார் பூம் பூம் ஓட்டுவாங்களா.... அதான் ஜெயிக்க போயிருக்காங்க..." அவனுக்கு புரிந்தது அவள் தந்தை ஒரு கார் ரேஸரென்று....



"ம்...அம்மா எங்க?"



"அம்மா சாமி கிட்ட போயிருக்கறதா அப்பா சொல்லி இருக்காங்களே...." தலைசாய்த்து சொன்னவளை பார்த்து கண்கள் கலங்க அணைத்துக் கொண்டான்.



மழை ஓய்ந்திருக்க அவளுடன் சேர்ந்து வெளியே வந்தவன் தன் வீட்டுக்கு முன் வீட்டை அவள் காட்டவும் சிரித்து விட்டு உள்ளே சென்றான்.



"யாருமே இல்லயேடா.... அப்பா வரும் வர தனியா இருப்பீங்களா?"



"எதிர் வீட்டுல தான் இருப்பேன்.... அப்பா ராத்திரி வந்து அழச்சிட்டு போவாங்க.... இன்னிக்கு உங்க கூட...." குதூகலித்தாள் பெண்....



இரவு ஏழுமணியளவில் அவன் வீட்டுக்கு வரும் வரை அவளுடனேயே இருந்தவன் நல்ல நண்பனாகிப் போனான்.



"ப்பா வந்துட்டாங்க..." மடியிலிருந்து இறங்கி ஓட இருக்கையிலிருந்து எழுந்தவனின்ய அருகே வந்தான் வெங்கட்....



வெங்கட் கதிரவன்!!!



"தேங்க்ஸ் சார்...."



"இட்ஸ் ஓகே..."



"ஐ அம் வெங்கட் கதிரவன்"



"தேவமாருதன்..." கை குழுக்கினான்.



"அப்பா....பாப்பாவும் அங்கிளும் ப்ரண்டு..."



"புது ப்ரண்ட்டா?"



"ம்...."



"சார் தேங்க்ஸ் சார்..."



"இட்ஸ் ஓகே கதிர்... அப்போ நா கிளம்புறேன்....யூ கேரி ஆன்"



"ம்...." வாசல் வரை சென்றவன்



"கதிர்....நாளைல இருந்து ப்ரீத்தி என்கூட இருக்கட்டும்" என்றான் திரும்பி....



"சார்....உங்களுக்கு..."



"நோ ப்ராப்ளம்..." புன்னகைத்து வெளியேற அவனும் தன் பெண்ணுடன் ஐக்கியமாகி விட்டான்.



நாட்கள் நகர மெல்ல மெல்ல நண்பர்களாயினர் இருவரும்.....



கதிர் விடயத்தில் தெரிய வந்த அதிர்ச்சி தகவல் ப்ரீத்தியின் சுகவீனம்....



ஆம் அவளுக்கு இதயத்தில் ஓட்டை!!!



அதற்காக தான் கதிர் வெளிநாடு வந்திருப்பதுவும் அவனுக்கு தெரியாத கார் ரேஸில் கலந்து கொண்டிருப்பதுவும்....))



பழைய நினைவுகளிலிருந்து மீண்டவன் தலையை உலுக்க அவன் கைகளில் ஏதேதோ பேசியபடி இருந்தாள் பெண்.



"கதிர்....ஆல் தி பெஸ்ட்...." கட்டை விரலை உயர்த்திக் காட்டியவன் திடீரென தன் மேல் ஈரமாகவும் ப்ரீத்தியை குனிந்து பார்த்தான்.



வாயிலிருந்து நுரை வெளியேறிக் கொண்டிருக்க அவன் தோளில் மயங்கி இருந்தாள்.



"ப்ரீத்தி....." கார் சாவியை தூக்கி எறிந்து விட்டு ஓடி வந்தவனிடம்



"கதிர்.....நா இவள பாத்துக்குறேன்.... நீ ஸ்பாட்டுக்கு போ....." என்றான் அவசர கதியில்....



"இல்ல எனக்கு எதுவும் தேவயில்ல சார்.... ப்ரீத்தி....என் குழந்தைய எனக்கு திருப்பி கொடுங்க" அழுதான்.....



"இடியட்....அதான் நா பாத்துகுறேன்னு சொல்றேன்ல.... ஸ்பாட்டுக்கு போ" கத்திக் கொண்டே காரில் ஏறியிருக்க அவன் மறுத்தும் கேளாமல் பிடிவாதமாய் தானும் காரில் ஏறி இருந்தான் கதிர்....
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாஸ்பிடல்.....



"சார் ப்ளீஸ் சார்..... எனக்கு என் குழந்தைய காப்பாத்தி கொடுங்க சார்....." அழுது கையெடுத்து கும்பிட்டவனை கண் கலங்க அணைத்துக் கொண்டான்.



"கதிர்.... இன்னிக்கு ஃபைனல்ஸ்.... இதுல ஜெயிச்சி காட்டுவேன்னு ப்ரீத்தி கிட்ட ப்ராமிஸ் பண்ணி இருக்க...."



"எனக்கு எதுவும் வேணாம் சார்....." கெஞ்சி கலைத்தவன் கண்களை இறுக்க மூடி திறந்தான் ஒரு முடிவுடன்....



"கதிர்.... நீ போட்டிருக்க ட்ரஸ்ஸ கழட்டு...."



"சா....ர்...."



"கழட்டு...." அடுத்த ஐந்தாவது நிமிடம் அவன் உடை இவனிலும் இவன் உடை அவனிலும் பொருந்தி இருந்தது.



"சார் வேணாம் சார்...." அவனுக்கு பழகவே அவ்வளவு நாள் பிடித்தது....



பழக்கமே இல்லாதவன் பைனல்ஸில் கலந்து கொள்ள போகிறானென்றால்!!!



நினைக்கவே நடுங்கியது கதிருக்கு....



.....



பழக்கமில்லாமல் ஓட்டியிருந்ததால் தலையில் சின்ன அடியுடன் தப்பிந்திருந்தவன் தான் வெற்றி வாகை சூடியிருந்தான்.



உலக அளவில் நடந்த போட்டியாதலால் அனைத்திலுமே இது தான் வெளி வந்து கொண்டிருந்தது.



பிரசுரிக்கப்பட்ட நியூஸ் பேப்பரொன்றில் அவன் முகத்தை பார்த்திருந்த அஜய்யிற்கு அவனை எங்கோ பார்த்தது போல் இருக்க அவனை பற்றி தேட துவங்கியதில் கிடைத்த மறைமுக தகவல் அது....



அதற்கு பின்னால் கதிரவன் இருந்திருப்பான் என்றது அவனுமே எதிர் பாராதது.



ப்ரீத்திக்கும் உடல்நிலை சரியாகி இருக்க கையில் ஐ பாட்டை தூக்கி கொண்டு ரிஷி அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்தாள் பெண்.



"அங்கிள்....இங்க பாருங்க....உங்கள போலவே ஒருத்தர் இது உள்ள இருக்காரு...." மாறி மாறி அவனைப்பற்றியே போய் கொண்டிருந்த வீடியோ ஒன்றை காட்டி குதூகலித்துக் கொண்டிருந்தவள் திடீரென மயங்கி விழ கையில் ஏற்றப்பட்டிருந்த ட்ரிப்ஸை பிய்த்து எறிந்து விட்டு அவளிடம் ஓடினான் ரிஷி.



"ப்ரீத்தி....ப்ரீத்தி...."



"அப்பா...."



"கதீர்....." ஹாஸ்பிடலே அதிரும் படி கத்தியவனின் கத்தலில் வெளியே இருந்த கதிரவன் உள்ளே ஓடி வந்தான்.



"அய்யோ ப்ரீத்தி...." மயங்கி இருந்தவளை கைகளில் அள்ள மறுபக்கம் மயங்கி சரிந்தான் ரிஷி.



"சார்....டாக்டர்...." ரிஷியை டாக்டரிடம் ஒப்படைத்து விட்டு தன் குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடினான்.



.....



முகம் முழுதும் வயர்களால் சுற்றப்பட்டிருக்க மேலே சென்று கீழே வந்து கொண்டிருந்தாள் பெண்......



"ப்பா....."



"ப்ரீத்தி...ப்ரீத்தி...."



"என்ன அங்கிள் கிட்ட கூட்டிட்டு போறீங்களாபா...."



"இ...இதோ இதோ..."



"ப்பா....அவரு கிட்ட என் ட்ரஸ் இருக்கு... அவருகிட்ட வெச்சிக்க சொல்றீங்களா?"



"சரிடா...." குலுங்கி அழுதான்.



"ப்பா என்ன அங்கிள் கிட்ட கூட்டிட்டு போறீங்..." உதட்டில் உறைந்த புன்னகையுன் அந்த சிறு உயிர் இவ்வுலகத்தை விட்டு பிரிந்தது.



.....



"ப்ரீத்தி...." கத்திக் கொண்டே விழித்தான் ரிஷி.



அவன் இறுக்கத்தை தளர்த்தி அவனை உயிர்ப்புடன் இருக்க செய்தவள்....



நான்கு வயது சிறுமி!!!



முகத்தில் எப்போதும் குடி கொண்டிருக்கும் சிரிப்பை பார்த்தாலே இவன் முகமும் மலர்ந்து போகும்....



"சார் சார் ரிலாக்ஸா இருங்க...." நர்ஸ் ஒருவர் அமைதிப்படுத்த அவருக்கு கத்தி விட்டு எழுந்து வெளியே வந்தவன் கதிரவனின் உயிரை உலுக்கிய அழுகுரலில் நடந்ததை யூகித்து மடங்கி அமர்ந்து அழத் துவங்கினான்....



தங்கையின் பிரிவுக்கு பின் அந்த சிறு குழந்தையை நினைத்து தான் அழுதிருக்கிறான்!!!))



கண்கள் கண்ணீரில் மிதக்க நிமிர்ந்து பார்த்தவன் தலை கவிழ்ந்து அழுது கொண்டிருந்த மனைவியின் தலையை தடவிக் கொடுத்து விட்டு அஜய்யை பார்த்தான்.



அவனுமே அழுதிருப்பான் போலும்!!!



கண்கள் சிவந்திருந்தது.



"அதுக்கப்பறம் கதிர நான் இன்டியாக்கு கூட்டிட்டு வந்துட்டேன்... அவனுக்கு அந்த சம்பவம் நினைவுக்கு வந்துட கூடாதுன்னு அன்னிக்கு வெளியாக்கப்பட்ட எல்லா சேனல்ஸ்... மேகஸின்ஸ்.... நியூஸ் பேப்பர்ஸ்.... எல்லாத்துலயும் உள்ள நியூஸ்ஸ வேற எங்கேயும் லீக் ஆக முடியாத படி பண்ணினேன்....மே பீ அன்னக்கி வந்த நியூஸ நீங்க பாத்திருப்பீங்க.... அதனால தான் என்ன எங்கேயோ பாத்தா மாறி இருந்திருக்கும்"



"தேவா....ரியலி யூ ஆர் க்ரேட்...." வேறு வார்த்தை வரவில்லை அவனுக்கு.....



அவன் கூற்றில் புன்னகைத்தவன் மனைவியை அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல அவனையே பார்த்திருந்த அஜய்க்கு மனதில் அழுத்தம் குறைந்து விட்ட உணர்வு!!!



***



திக்பிரமை பிடித்தவள் போல் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தாள் மது...



எல்லோரும் வந்து விட்டது தெரிந்து ரிஷியின் வீட்டுக்கு வந்தவள் வெளியே பேசிக் கொண்டிருந்த ரிஷியை பார்த்து உள்ளே செல்ல பயந்து தயங்கி நிற்க எதிர்பாராமல் கேட்க நேர்ந்தது கதிரின் கடந்ந காலம்!!!



ரிஷி உள்ளே செல்லவும் இவளும் வந்த வழியே திரும்பி விட்டாள்.



நெஞ்சுக்குள் ஏதோ பாரம் அழுத்தியது!!!



***



கண்கள் மூடி அமர்ந்திருந்த கதிரின் கடைவிழி ஓரம் கண்ணீர் வழிந்து மேசை மீது விழுந்து சிதறியது...



"ப்பா என்ன அங்கிள் கிட்ட கூட்டிட்டு போறீங்களாபா...."



"மிஸ்டர்.கதிரவன்... ஷீ இஸ் நோ மோர்"



"க...கதிர்...ப்ரீத்தி..."



மீண்டும் அதே மூவரின் முகம் மிண்ணி மறைந்தது.



அறைக்குள் அடைந்து கிடந்தவனுக்கு மூச்சு முட்டுவது போலிருக்க ரிஷியின் வீட்டுக்கு கிளம்பினான்.



.....



அதே நினைவில் நடந்து கொண்டிருந்தவள் முன்னால் வந்த லாரியை கவணிக்க மறக்க கடைசி நேர நூலிழையில் தன்னை நோக்கி இழுத்தெடுத்தான் கதிர்.



"இடியட்.... பாத்து நடக்க மாட்ட....டாமிட்...." நினைக்க நினைக்க பதறியது அவனுக்கு....

அனுபவித்தவனுக்கு தெரியும் ஓர் உயிரின் வலி!!!



"க...தி...ர்...." தடுமாறி அழைத்தவள் அவன் கழுத்தை கட்டிக் கொண்டு கதறியழ மீண்டும் உறைந்தான் அவன்...



முதலில் லிஃப்ட்.... அடுத்தது சாலை!!!



அவளை சந்திக்கும் நேர சம்பவங்களெல்லாம் தன் மனைவியை சந்தித்த சம்பவங்கள் போலவே இருக்க அவன் அதிர்ச்சி நியாயமானது தானே???



......



தன் கை வளைவுக்குள்ளேயே வைத்து நடந்தவன் அறைக்குள் வந்ததும் விட்டு விட்டு திரும்பி நடக்க



"தேவ்...." என்றவளின் அழைப்பில் நின்றது நடை....



"ஏன் அவாய்ட் பண்றீங்க....நா என்ன தப்பு பண்ணேன்?"



"நத்திங்...." வாசல் தாண்டப் போனவனை தன் புறம் இழுத்து நிறுத்தி அவன் முகம் பார்க்க அவன் வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தான்.



"என்ன பாருங்க தேவ்...."



"சொல்லு கேக்குது"



"நீங்க என்ன பாருங்க முதல்ல...."



"அதான் கேக்குதுங்குறேன்ல.... சொல்லு..."



"நா சொல்ல போறது இல்ல...."



"ஓகே நா கெளம்புறேன்..."



"ஏ....இருங்க தேவ்" மீண்டும் இழுத்து திருப்பினாள்.



"என் கண்ண பாத்து பேச முடியாதா உங்களால....வாட்ஸ் ராங் வித் யூ தேவ்....?"



"நத்திங்"



"ப்ச்....என்ன பிரச்சனன்னு சொன்னா தானே புரியும்"



"உனக்கு புரிய வேண்டிய அவசியம் இல்ல... என்ன கேக்கணும்னு நெனக்கிற....?"



"நத்திங்....நீங்க போங்க" திரும்பி நின்றவள் வெளிவரத் துடித்த கண்ணீரை இமை சிமிட்டி அடக்கினாள்.



அவளையே பார்த்திருந்தவன் ஒரு பெரு மூச்சுடன் வெளியேற குளியலறை சென்று முகத்தை அடித்து கழுவியவள் கீழை இறங்கி வந்தாள்....



"அக்கா....இங்க வாங்க" கைகாட்டி அழைத்தாள் யாழினி....



புன்னகைத்தவள் அருகில் சென்று அமர்ந்து கொள்ள தூரத்திலிருந்து அழைத்தான் ஜீவா...



"அஷ்வினி...." அவன் கத்தியதில் திரும்பிப் பார்த்தவள் அவன் வருமாறு சைகை காட்டவே எழுந்து நடந்தாள்.



"என்ன ஜீவா...?"



"ஏன் உன் கண் கலங்கி இருக்கு?"



"அது நத்திங்.... என்ன விஷயம்?"



"பொய் சொல்லாத... என்னமா என்ன பிரச்சனை?"



"நத்திங்...." கலங்கிய கண்ணீரை மறைத்தவள்



"நா அப்பறமா பேசுறேன்...." திரும்பி நடக்க மறைத்த படி வந்து நின்றான் ஆரவ்....



"ஓய் ராட்சஸி....ஏய் என்னடி...?" முகத்தை நிமிர்த்த கண் கலங்கி இருந்தது கண்டு இழுத்துக் கொண்டு வெளியே வந்தான்.



"என்னடி என்னாச்சு?"



"ஒன்னில்ல ஆரவ்"



"ப்ச்....உன்ன பத்தி தெரியாதா எனக்கு... அண்ணா ஏதாவது சொன்னாங்களா... சொல்லுடி"



"இல்ல...."



"அப்பறம் என்ன?"



"அதான் ஒன்னில்லன்னு சொல்றேன்ல"



"இத நா நம்பனுமா...அண்ணா என்ன சொன்னாங்க?"



"நத்திங்....எதுவும் சொல்லல...."



"இப்போ சொல்லலன்னா என் கூட பேசாத"



"டேய்...." இயலாமையில் நிமிர்ந்து பார்த்தாள்.



"தேவ் என் கூட சரியா பேசறது இல்ல"



"என்ன ப்ராப்ளம்... என்ன உளர்ற?"



"நம்புடா....ராஜ்கோட்ல கூட நல்லா தான் இருந்தாங்க.... வீட்டுக்கு வந்ததுக்கு அப்பறம் தான் இப்பிடி நடந்துக்குறாங்க"



"என்ன சொல்ற....?"



"எஸ் டா....என் முகத்த கூட பாக்குறது கிடையாது.... என் கூட பேசறதும் இல்ல"



"ஹே...வெயிட் வெயிட்...."



"என்ன?"



"வீட்டுக்கு வந்ததுக்கு அப்பறமா தான் இப்பிடி நடந்துது ரைட்?"



"ம்...." சிறு பிள்ளை போல் மேலும் கீழும் தலையாட்டினாள் பெண்.



"அஷ்வி....அண்ணா வாலண்டியரா ஆரா கேஸ்ல ஒத்துக்க போறாங்களோ?"



"வாட்....என்னடா சொல்ற?"



"நீயே யோசி.... அவங்களுக்கு எதுலனாலும் நேர்மை இருக்கனும்"



"ம்...ஆமா...அதுக்கு?"



"ஆராவ கொன்னன்னு நெனச்சி தானே அவங்க மூனு பேரையும் கொன்னாங்க?"



"ம்...ம்...."



"ஆரா தான் உயிரோட இருக்கால்ல... அப்போ அவங்க பண்ண தப்புக்கு என்ன அர்த்தம்?"



"...."



"அதனால அவங்களே வாலண்டியரா ஒத்துக்க நெனச்சி உன்ன விட்ட விலக ட்ரை பண்றாங்க" அடித்துக் கூறினான் ஆரவ்....



"ஹௌ டேர்...." பல்லை கடித்தவள்



"நா இங்கே கஷ்டப்பட்டு எப்பிடி வெளிய எடுக்குறதுன்னு யோசிச்சு கிட்டு இருந்தா அந்த கமாண்டர் தானா போய் கூண்டுக்குள்ள நிக்க போறானாமா?" என்றாள் ஆத்திரமாய்....



"ரிலாக்ஸ்டி...."



"எப்பிடி ரிலாக்ஸா இருக்கறது ஆரு.... அவர் யார பத்தியும் கொஞ்சம் கூட நெனச்சி பாக்கலல்ல?"



"ஹே....அவங்களுக்கு குற்ற உணர்ச்சியா இருக்கலாம்லமா?"



"அதுக்காக?" கோபமாய் கேட்டவளுக்கு கரகரவென கண்ணீர் வழிந்தது.



"ப்ச்...எதுக்கு அழற?" கண்ணீரை துடைத்து விட்டவன்



"சிரிடி..." என்றான் வாயை இழுத்து விட்ட படி...



"அப்பிடி பண்ணிட்டாங்கன்னா என்னடா பண்றது?"



"ம்....மே பீ... எப்பிடியும் மெயின் நியூஸ் ரிப்போர்டருக்கு தான் விஷயம் சொல்லப்பட்டு அடுத்த நாள் காலைல நியூஸா வரும்...."



"ம்..."



"அந்த ரிப்போர்டரயும் ஆல் நியூஸ் சேனல்ஸயும் நாம வாங்கலாம்"



"ஐ....சூப்பர் சூப்பர்"



"அண்ணா சொல்றா மாறி சொல்லட்டும்... அவர் பாக்கறதுக்காக வைக்க வேண்டிய நியூஸ் பேப்பர்ல மட்டும் அந்த விஷயம் லீக்கானா மாறி செய்யலாம்"



"ம்...ஓகே"



"அதுகப்பறம்..."



"அதுக்கப்பறம் நா பாத்துக்குறேன் ஆரு"



"என்ன ப்ளான்...?" அவன் கேட்கவே அன்று ஜீவாவை சந்தித்த நாளன்று பேசியதை கூற



"அப்போ நீங்க தான் அண்ணா பக்க லாயராங்க மேடம்?" என்றான் ஆச்சரியமாய்....



கண் சிமிட்டி சிரித்தவள்



"தேவ் மேல வேற ஒருத்தர் கேஸ் பைல் பண்றா மாறி செட் பண்ணனும்டா" என்றாள் யோசனையாய்....



"அதெல்லாம் பாத்துக்கலாம்.... இப்போதைக்கு ரிலாக்ஸ்டா இரு.... எதுவும் தெரிஞ்சா மாறி காட்டிகாத"



"ஓகே"



"சரி போ...."



"ஆரூ..."



"இழுக்குற....முக்கியமான விஷயம் கேக்க போற"



"ஹி...."



"பாக்க முடில சிரிக்காத"



"இப்போ கொஞ்சம் முன்னாடி சிரின்னு சொன்ன?"



"ஓஹ்...அதுவா.... அது ஒரு ப்ளோவுல வந்திருக்கும்" என்றவன் முதுகில் நன்றாக போட்டாள்.



"வலிக்குதுடி ராட்சஸி...."



"வயசு போன காலத்துல அப்பிடி தான் இருக்கும் தாத்தா...." வாய் பொத்தி சிரித்தவளின் காதை பிடித்து திறுக கலகலத்து சிரித்தவளை பார்த்து தானும் சிரித்தவன்



"சரி என்ன கேக்க வந்த...கேளு" விட்டு விட்டு கேட்டான்.



"ஜீவா...."



"அவனுக்கு என்ன?" என்றான் வெடுக்கென....



"அவங்க கூட பேச மாட்டியா... தப்பு அவங்க மேல இல்லல்ல?"



"அதுக்காக?"



"ஏன்டா கோபப்பட்ற?"



"ப்ச்....விட்டுத் தள்ளு"



"ப்ளீஸ் டா பேசுடா"



"நீ ஏன் அவனுக்காக கெஞ்சுற?"



'அண்ணனும் தம்பியும் ஒரே கேள்விய கேக்குறானுங்க பாரு'



"அவன் என் ப்ரண்டு...."



"எதூ....உன் ப்ரண்டா...அது எப்பிடி ப்ரண்டு?"



"உனக்கு என்ன....?"



"என்னமோ....நீ ஏன் அவன் கூட ப்ரண்டா இருக்க?"



"உனக்கு என்னடா வந்துது?"



"எனக்கு பிடிக்கல அவ்வளவு தான்"



"அதுக்கு நான் என்ன பண்ணனும் நான் பேசுவேன்" என்றாள் சிரிப்பை அடக்கி....



"நீ அவன் கூட பேசறதா இருந்தா என் கூட பேசாத"



"டேய் எதுக்குடா கோச்சுகுற...ஜீவா உனக்கும் ப்ரண்டு தானே....அப்பிடி தான் எனக்கும்...இதுல என்ன இருக்கு.. ப்ளீஸ் பேசுடா"



"ம்...ம்...பாக்கலாம் பாக்கலாம்"



"இப்போவே பேசுறியா....வா வா" அவன் சுதாரிப்பதற்குள் இழுத்துக் கொண்டு போய் அவன் முன் நிறுத்த இருக்கையில் அமர்ந்திருந்த ஜீவா சட்டென எழுந்து நின்றான்..
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ஜீவா....ஆரு உன் கூட பேசுறானாம்"



"ராட்சஸி....என்னடி பண்ற?" காதிற்கருகில் குனிந்து பல்லை கடித்தான்.



"ஜீவா...நா சொல்லல.... இவனே வந்து பேசுவான்னு... நீங்க பேசிட்ருங்க நா வந்தட்றேன்...." ஓடி விட நிமிர்ந்து விழித்தான் ஆரவ்.



"அ...அது...."



"சாரிடா" சட்டென போட்டு உடைத்தான் ஜீவா...



"அம்மா இது தான் பண்ணாங்கன்னு புரிஞ்சிக்கிட்ட டைம்ல நா உன்ன விட்டு ரொம்ப தூரமா இருந்தேன்... சாரிடா ரியலி சாரி"



"...."



"டேய் ஏதாவது பேசுடா"



"அ...ம்...இ...ட்ஸ் ஓகே"



"ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட்... மன்னிக்க டைம் ஆகும்...இட்ஸ்... இட்ஸ் ஓகே"



"இல்ல ஆனந்த்...நா வந்து...."



"இல்ல விடு.... நீ பேச தோனுன டைம் பேசு... ஸீ யூ...." அவன் விலகி நடக்கவும் பெருமூச்சு விட்டவன்



"ராட்சஸீஈஈஈ.....இவள.... இரு வர்றேன்' பல்லை கடித்தான்.



.....



"யாழி..."



"என்னகா?" நிமிர்ந்து பார்த்து கேட்டாள் பெண்.



"யாதுவ பாத்தியா?"



"இல்லயே கா.... கொஞ்ச நேரம் முன்னாடி ஈஷ்வரி அண்ணி கூட இருந்தான்"



"ம்...ஓகே நா பாக்குறேன்...." நேரே சமையலறைக்குள் நுழைந்தாள்.



"ஹாய் அண்ணி.... விஜி....நீயும் இங்க தான் இருக்கியா....?" சமயலறை கட்டில் ஏறி அமர்ந்தாள்.



"அத்தை....நம்ம கூட பேசறதுக்கெல்லாம் அவங்களுக்கு டைமே இல்ல.... ஏதாவது வேலயா வந்திருப்பா....."



"ம்...ஆமா...என்ன வேலன்னு கேளுமா"



"மிஸ்.அஷ்வினி.... ஏதாவது ஹெல்ப் வேணுமா?"



"அண்ணி..." சிணுங்கிக் கொண்டே இறங்கியள் தாயை பின்னாலிருந்து அணைத்தாள்.



"விஜி..."



"என்னடா?"



"ஐ மிஸ் யூ" என்றவள் கண்ணத்தில் முத்தமிட தன் தலையை அவள் தலையோடு சேர்த்து செல்லம் கொஞ்சினார்.



"சரி...யாதுவ பாத்தியா நீ?"



"அத்தை நான் சொல்லல...?"



"போங்க அண்ணி.... சும்மா கலாய்ச்சு கிட்டு...." காலை தரையில் அடித்தவள் வெளியே வர யாதவ் ரிஷியின் கையை பிடித்துக் கொண்டு வெளியே தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தது கண்ணில் படவும் சிரித்துக் கொண்டே சென்றாள்.



"யாதூ....பேஹ்...." காதிற்கருகில் குனிந்து கத்த துள்ளி விலகினான் மகன்.



"மாம்.....நா பயந்துட்டேன்...."



"சாரி..." என காதை பிடித்தவள் கீழே மண்டியிட்டாள்.



"இட்ஸ் ஓகே மாம்..." என்றவனையும் முன்னாள் மண்டியிட்டு அமர்ந்திருந்தவளையும் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டு சிறு புன்னகையுடன் பார்த்திருந்தான் தேவ்.



"பசிக்குதுன்னு சொன்ன.... சாப்டியா?"



"எஸ் மாம்....நான் டாட் கூட சாப்டேன்... நீங்க?"



"நா...நான்...ஆ..ஆமா ஆமா சாப்டேனே"



"பொய்...." தெறித்து விழுந்த கணவன் வார்த்தைகளில் நிமிர்ந்து பார்த்தவள் முகத்தை திருப்பினாள்.



"டாட் மாம் பொய் சொல்ல மாட்டாங்க"



"ஆமாமா....எனக்கு தெரியாது பாரு"



"யாது நீ வர்றியா நாம உள்ள போலாம்"



"ஓகே மாம்....பட்...டாட்...."



"அவருக்கு என்ன... அடுத்தவங்கள கஷ்டப்படுத்தனும்னு இருக்காருல்ல.... இன்னும் வேற யாரையாவது கஷ்டப்படுத்திட்டு வரட்டும்....நாம போலாம் வா" என்றாள் வெடுக்கென....



"ஒய் மாம்....டாட் கூட கோபமா இருக்கீங்களா?"



"நா எதுக்குடா கோபப்பட போறேன்.... எனக்கு என்ன உரிமை இருக்கு.... இல்லயா மாறன்?" அவன் பேச அவகாசமளிக்காமல் குழந்தையை கூட்டிக் கொண்டு உள்ளே சென்றவளுக்கு கோபம் கோபமாய் வந்தது.



***



"க...கதிர்...." தேம்பி அழுதவளை தன்னிலிருந்து பிரித்தான் கதிர்.



"மது என்னாச்சு?"



"இ...இல்ல இல்ல ப்ரீத்தி...." உடல் விறைத்தது அவனுக்கு....



"க..கதிர்...என்னால... ஐ அம் சாரி... அ...அத்தான் சொல்றத கேட்டேன்..எ...எனக்கு...எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துது"



"இட்ஸ் ஓகே நாம போலாம் வாங்க...." அவளை அழைத்துக் கொண்டு மீண்டும் ஆபிஸிற்கே சென்றான்.



.....



"ரிலாக்ஸ்...." அமர வைத்து நீரை எடுத்துக் கொடுத்தான்.



"தேங்க்ஸ்...." எடுத்துக் குடித்தவள் சற்றே ஆசுவாசமானாள்.



"இட்ஸ் ஓகே...."



"ஐ அம் சாரி"



"எதுக்கு?"



"இல்ல...நா மறுபடி உங்களுக்கு ஞாபகபடுத்திட்டேன்ல....?"



"நோ...நோ... பரவாயில்ல விடுங்க... சரி நா அப்பறமா பேசுறேன்" எழுந்து சென்றவனை பார்த்துக் கொண்டிருந்தவள் இலேசாக சிரித்தாள்.



அவளுக்கு தெரியும் இது அந்த சிறு குழந்தைக்காக மட்டுமே வெளிவந்த கண்ணீரென்று!!!



முதல் தடவை பார்த்த போதே பிடித்திருந்தது தான்...



ஏனோ அவன் அமைதியாய் இருப்பது பிடிக்கவில்லையும் கூட....



அந்த அமைதிக்கு பின் இப்படி ஒரு காரணம் அவள் நினைத்துக் கூட பார்த்திராதது.



அழுதாள் தான் அதற்கென்று அவன் மீது காதலெல்லாம் இல்லை...



ஏனோ ஒரு வித உணர்வு அவளுள்....



தலையை உலுக்கி யோசனையை கலைந்தவள் தன் வேலையில் மூழ்கினாள்.



.....



பேப்பர் வெயிட்டை சுற்றிக் கொண்டிருந்த கதிரவனின் நினைவுகள் தன் மனையாளையே சுற்றி வந்தது.



இருவரும் ஒரே காலேஜ் தான்...



எதிர்பாராவிதமாய் அன்று போலொரு மழைநாளில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸுக்குள் இருந்த லிப்டில் மாட்டிக் கொண்டனர் இருவரும்....



அன்று தான் அவளை அவ்வளவு நெருக்கத்தில் பார்த்திருக்கிறான்...



அதன் பிறகு ஏதோ யோசனையில் வந்து கொண்டிருந்தவளை இவளை போலவே பிடித்திழுத்து காப்பாற்றினான்....



அதன் பிறகு தப்பாக நடக்க முயற்சி செய்த சில தெருப் பொறுக்கிகளிடமிருந்தது காப்பாற்றி விட்டான்...



இதுவெல்லாம் எதிர்பாராவிதமாய் நடந்தது தான்...



அதன் பிறகு காதலித்து கைபிடிக்க ப்ரீத்தியின் பிரசமவமன்று பிரிந்தது அவள் உயிர்!!!



ஆனால் இந்த மது...???



அவனுக்குமே புரிந்தது அவள் மனது ப்ரீத்தியின் உயிரை நினைத்துத் தான் துடிக்கிறதென்று....



'எதார்த்தமாய் நடந்திருக்கும்' கடைசியாய் முடிவெடுத்த பின்பே அவனுக்கு சற்று தளர்ந்தது இறுக்கம்!!!



***



"அஷூ...." தான் பேசுவது கேட்காதது போல் சென்றவளை பார்த்து பல்லை கடித்தவன் கோபமாய் உள்ளே நுழைந்தான்.



வீடு முழுக்க உறவுகள் நிரம்பி இருக்க அவனால் அவளை தனிமையில் சந்திக்கவும் சங்கடமாய் இருந்தது.



கண்களால் துலாவினான்....



அர்விந்திடம் ஏதோ கெஞ்சிக் கொண்டிருக்க இங்கே காதில் புகை வராதது தான் குறை!!!



நிதானமாய் அவளருகில் நடந்து செல்வதற்குள் அவன் வருவது தெரிந்தே ஜீவாவிடம் போய் நின்று கொண்டாள்.



'இவள...' பல்லை கடித்தவன் நேரே சென்று முழங்கையை பற்றி திருப்பினான்.



"உன் கூட பேசனும்"



"டைம் இல்ல"



"நான் உன் கிட்ட பர்மிஷன் கேக்கல... ரூமுக்கு வா" வார்த்தைகளை கடித்து துப்பியவன் இரண்டிரண்டு படிகளாக தாவி ஏறிச் சென்று விட



'கமாண்டர்....டெர்ரர் மூஞ்சி ஆபிஸர்.... வர மாட்டேன் போடா' அர்ச்சித்தவள் மேலிருந்து கேட்ட "அஷ்வினிஈஈஈ" என்ற கர்ச்சனையில் பாய்ந்து மாடிக்கு ஓட வாய் விட்டுச் சிரித்தான் ஜீவா.



உள்ளே நுழைந்தவளை இழுத்து சுவற்றோடு சாய்த்து அதிரடியாய் அவள் அதரங்களை சிறை பிடிக்க விதிர்விதிர்த்துப் போனாள் பாவை....



முதலில் விடுபட திமிறி அப்படியே அடங்கி கண்களை மூடிக் கொண்டாள்.



சற்று நேரம் கழித்து விட்டவன்



"என்ன உரிமன்னு கேட்டல்ல.... இதான் உரிமை...." என்றான் அவள் கண்களை ஊடுருவி....





"ப்ச்...விடுங்க...." அவன் கையை தட்டி விட்டு நகர்ந்தவளின் இடைபிடித்து தன்னை நோக்கி இழுக்க முதுகுப் பக்கமாய் வந்து மோதி நின்றவளின் வயிற்றோடு சேர்த்தனைத்து அவள் தோளில் நாடி குற்றி நின்றிருந்தான்.



"விடுங்க என்ன"



"முடியாது"



"அப்போ இப்பிடியே இருங்க" மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டவள் முகத்தை திருப்பினாள்.



"என் பொண்டாட்டிக்கு கோபமெல்லாம் வருது"



"உங்களுக்கு மட்டும் தான் வரனும்னு சட்டம் இருக்கா?"



"என்னையே மடக்குறியா?"



"நீங்க எப்பிடி வேணா எடுத்துக்கோங்க"



"அழுதியா பேபி?"



"நா எதுக்கு அழனும்?"



"ஏன்னா உன்னால என் கோபத்த தாங்கிக்க முடியாது"



"நீங்களா கற்பன பண்ணி பேசறதுக்கு நான் பொறுப்பாக முடியாது"



"ஈஸிட்....?"



"எஸ் டெபனிட்லி"



"அப்போ...என் கோபம் உன்ன பாதிக்காது?"



"...."



"ஏன் அமைதியாகிட்டீங்க மிஸஸ்.மாறன்....?"



"ஆமா பாதிக்குது.... இப்போ என்ன.... முதல்ல விடுங்க என்ன" திமிறியவளை இன்னுமின்னும் இறுக்கி வளைத்தான்.



"ஐ லவ் யூ..." அவள் காதுக்குள் கிசுகிசுக்க கண்களை இறுக்க மூடிக் கொண்டாள்.



"ப்ரீஸாகிட்டியா பேபி" மீண்டும் கிசுகிசுக்கவே படக்கென விழிகளை திறந்தவள் கழுத்தை திருப்பி அவனை முறைக்க



"கண்ணம்மா...." என்றவன் அவள் மீண்டும் திரும்ப முடியாதபடி அவள் அதரங்களை மூடி இருந்தான்.



"விடுடா...." நெஞ்சில் கை வைத்து கோபமாய் தள்ளியவள் விலகி நின்று முறைத்தாள்.



"ரொமான்டிக் லுக் விடாத பேபி" என்றவனை பார்த்து பல்லை கடிக்க



"அட அப்பறமா என் முகத்த பாத்துக்கலாம்" என்றான் மீண்டும்...



"யூ....இடியட்...." நெருங்கி வந்து அவன் நெஞ்சில் அடிக்க சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவன் ஒரு கட்டத்தில் அவள் கையை இறுக்க பற்றினான்.



"வலிக்குதுடி"



"பரவாயில்ல...."



"சாரி...."



"எனக்கு எதுவும் தேவையில்ல....." கண்களில் நீர் கோர்க்க இறுக்கி அணைத்தான்.



"இனிமே ஹேர்ட் பண்ண மாட்டேன் சாரி கண்ணம்மா"



"...."



"எனக்கு ஒரு சத்தியம் பண்ணி தர்றியா.. ப்ளீஸ் டா...."



"என்ன...எதுக்காக?"



"அ...அது யாதுவ... ஆரா...அண்ட் அதேர்ஸ்.... எல்லோரையும் நல்லா பாத்துப்பேன்னு சத்தியம் பண்ணி கொடு" அவன் வார்த்தைகளில் பொங்கி வந்த கோபத்தை அடக்கியவள்



"ஏன் திடீர்னு?" என்றாள் சாதாரணம் போலும்....



"திடீர்னு எல்லாம் இல்ல....ஏதோ கேக்கனும்னு தோனிச்சு.... சத்தியம் பண்ணி கொடு" வலது கையை விரித்து அவள் புறம் நீட்ட



"அதான் நீங்க இருக்கீங்கல்ல.... நீங்களே நல்லா தானே பாத்துக்குறீங்க.... அது போதும்" மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டாள்.



"ப்ச்...சொன்னா புரிஞ்சிக்கயேன் அஷு....ப்ளீஸ்"



"இதுல புரிஞ்சிக்க என்ன இருக்கு மாறன்?"



"கடுப்பேத்தாத கண்ணம்மா..... சத்தியம் பண்ணு"



"முடியாது...." அவனிடம் அகப்படமல் ஓடி விட



'விலக நெனச்சி முதல் அடி எடுத்து வெச்சா கிஸ்ஸுல வந்து நிக்கிது.... ஓ காட்....எப்பிடி தான் சமாளிக்குறது.... இது சரியா வராது... நோ..இவ அழறத பாத்தா தானே தாங்க முடில... இவள பாக்கவே கூடாது...ரிலாக்ஸ்டா ரிஷி... கண்ட்ரோல் பண்ணு....கண்ட்ரோல் பண்ணு....' மனதிற்குள் புலம்பியவன் மூச்சை நன்றாக இழுத்து விட்டான்.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவருக்கு சத்தியம் பண்ணி கொடுக்கனுமாம்...எங்கள பத்தி கண்டுக்காம வாலண்டியரா போய் மாட்டிப்பாராம்....போடா டேய்..... இந்த தடவ உன்ன என்ன செய்றேன் பாரு' முணுமுணுத்துக் கொண்டே வருணிடம் வந்து நின்றாள்.



"என்ன ரிக்ஷிமா?"



"வெளில போலாமா?"



"ஏன்...எனி ப்ராப்ளம்?"



"என்னன்னு சொன்னாதான் வருவீங்களா நீங்க?"



"இல்லமா தாயே.... வா போலாம்...." வாசல் வரை சென்றவர்களை தடுத்தான் சித்தார்த்.



"அண்ணா...எங்க கெளம்பிட்டீங்க.... அம்மா (விஜி) சாப்புட அழக்கிறாங்க... வாங்க..."



"சித்து நானும் அண்ணாவும் முக்கியமான விஷயமா வெளியில போறோம்டா.... அங்கேயே சாப்புடுறோம்....ப்ளீஸ் சமாளிடா..."



"எதுக்கு....ஏ...ஏ.... இருடி..." அவன் குரல் காற்றில் கரைந்து போனது.



***



"என்னமா என்ன விஷயம்?" முன் இருக்கையில் அமர்ந்து கேட்டவனிடம் அனைத்தையும் ஒப்பித்தவள் கண்ணத்தில் கை குற்றி சோகமாக அவனை பார்த்தாள்.



"வாட்...என்னடி சொல்ற?"



"இது சின்ன கெஸ் தான்ணா...."



"ச்சேஹ்....இந்த ஆர்.கேக்கு மண்ட குழம்பி இருக்கு போல....இடியட்"



"ஆமா லூசு கமாண்டர்"



"சரி விடு.... என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்... ஆருவையும் ஜீவாவையும் காபி ஷாப் வர சொல்லு"



"இருங்க...." என்றவள் இருவரையும் அழைத்து விட்டு வைத்தாள்.



"தேவ்கு சந்தேகம் வந்துடுச்சுனா?"



"அவன் தான் தங்கச்சி மயக்கத்துல மண்ட குழம்பி போய் இருக்கானே.... அவன் கவனிச்சிருக்க மாட்டான்"



"நடந்தா சரிதான்"



***



"யாது அம்மாவ பாத்தியா?"



"நோ டாட்" அவன் ஓடி விட கண்களால் துலாவியவன் அவள் இல்லாமல் போக கதிருக்கு அழைத்தான்.



"எஸ் சார்"



"முக்கியமான மீட்டிங் இன்னிக்கு இல்லல்ல கதிர்?"



"நோ சார்.... எவ்ரிதிங் இஸ் ஓகே"



"ஆரா இருக்கறதுனால இன்னிக்கு ஆபிஸ் வர முடியல.... ஏதாவது முக்கியமான மீட்டிங் இருந்தா நாளைக்கு போஸ்ட் பண்ணிடு"



"ஓகே சார்"



"நீ இன்னும் ஆபிஸ்லயா இருக்க?"



"எஸ் சார்..."



"ம்....ஓகே அப்போ நீ இரு இதோ நா வர்றேன்"



"ஷூர் சார்"



.....



ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ்.....



கைச்சாத்திட வேண்டிய பைல்கள் அனைத்தும் மேசை மேல் குவிந்து கிடப்பதை கண்டவனுக்கு ஹையோடாவென தான் இருந்தது.



கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆபிஸ் பக்கமே எட்டிப் பார்க்காததற்கான தண்டனை!!!



பெருமூச்சு விட்டவன் இன்டர்காமில் கதிரை அழைத்தான்.



"எஸ்கியூஸ் மீ"



"கம் இன்..."



"ஹலோ சார்...."



"ம்..."



"எதுக்கு சார் கூப்டீங்க?"



"என்ன யாரு மீட் பண்ணனும்னு சொன்னாலும் நான் பிஸியா இருக்கேன்னு சொல்லு....அண்ட் யாரயும் உள்ள வர விடாத..."



"ஷூர் சார்"



"இவ்வளவு பைல்ஸ் இருக்குனு இன்பார்ம் பண்ணி இருக்கலாம்ல?"



"அது சார்...நீங்க.... உங்கள டிஸ்டர்ப் பண்ண வேணாமேன்னு சொல்லல சார்.... சாரி"



"இட்ஸ் ஓகே....நீ போ" வாசல் தாண்டப் போனவனை மீண்டும் நிறுத்தினான்.



"கதிர்...."



"சார்...."



"என் கார இன்னிக்கு ஹேண்ட் ஓவர் பண்றதா சொல்லி இருக்காங்க.... அத போயி எடுத்துட்டு வந்துடு..."



"ஓகே சார்"



"அட்ரஸ் உன் போனுக்கு அனுப்பி இருக்கேன்"



"ஓகே சார் நா பாத்துகுறேன்..."



"ஆ...கதிர்..."



"சொல்லுங்க சார்"



"ராஜனையும் ஆத்மிகாவையும் ராக்கி....ஐ...ஐ மீன் ராகேஷ் இருக்க இடத்துக்கு கொண்டு வந்திருப்பாங்க...நீ ஒரு தடவ செக் பண்ணிட்டு எனக்கு கால் பண்ணு வந்தட்றேன்"



"ஷூர் சார்...."



"ஓகே நீ வேலய முடிச்சிட்டு அங்க வந்துடு.... நானும் வர்றேன்" ஆமோதிப்பாய் தலையசைத்தவன் வெளியேற மீண்டும் பைல்களை பார்த்து மலைத்துப் போனது மனது.



***

"ஜீவா...." கையசைத்து அழைத்தாள் பெண்.



"ஹாய்...." வந்து அஷ்வினிக்கு பக்கத்தில் அமர அவளை முறைத்துக் கொண்டே வருண் அருகில் அமர்ந்தான் ஆரவ்.



'நம்மல எதுக்கு முறைக்குறான்... அவனா வந்து பக்கத்துல உட்காந்ததுக்காக நான் என்ன பண்ண முடியும்.... அவ்வளவு அக்கறைன்னா இவனே வந்து உக்காந்திருக்க வேண்டியது தானே.... அண்ணனுக்கும் தம்பிக்கும் இதே வேலயா போச்சு....' நன்றாக மனதிற்குள் திட்டி தீர்த்தவள் அவனை பார்த்து இளித்து வைத்தாள்.



"சும்மா சிரிக்காம எதுக்கு கூப்டன்னு சொல்லு" எரிந்து விழுந்தான்.



"அவ மேல எதுக்குடா கோபப்பட்ற?"



"ஒன்னில்லணா.... எதுக்கு கூப்டா?"



"ஆரு....ஏன்டா கோபமா பேசுற?" அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு கேட்க



"சரி சரி முகத்த அப்பிடி வெச்சிகாத" கொஞ்சம் இறங்கி வந்தான்.



"ஆனந்த்...."



"சொல்லுங்க வருண்?"



"ஏதாவது சாப்புட்றீங்களா?"



"இல்ல வேண்டாம்.... இப்போ தான் சாப்டேன்"



"அஷ்விமா நீ சாப்டியா?" அவள் பக்கம் திரும்பி கேட்க



'ஆமா அப்பிடியே பாசம் பொங்கி வழியுது' உள்ளுக்குள் பல்லை கடித்தான் ஆரவ்.



"ஆமா ஜீவா.... நானும் அண்ணாவும் இப்போதான் சாப்டோம்"



"ம்..."



"ஆரு நீ சாப்டியா?"



"உனக்கென்ன வந்துது....சீக்கிரமா விஷயத்த சொல்லு" அவன் கோபம் புரிந்தாலும் தற்காலிகமாய் தள்ளி வைத்தவள் விடயத்திற்கு வந்தாள்.



"அண்ணாவ வாட்ச் பண்ண நான் ஆள் செட் பண்றேன்" என்ற ஆரவ்விடம் சரியென தலையசைத்தனர் மூவரும்....



"அப்பறம் ஜீவா.... ஆரா கிட்ட என்ன நடந்துதுன்னு கேளுங்க.... அப்போ தான் கேஸ எப்பிடி டீல் பண்றதுன்னு பாக்கலாம்"



"பட் இது ரிஸ்காச்சே அஷ்வி...."



"அவங்களுக்கு ரேப் அடம்ப்ட் நடக்க முயற்சி நடந்திருக்கா இல்லன்னா வேற ஏதாவதான்னு தெரிஞ்சா தான் நாம அடுத்த ஸ்டெப் மூவ் ஆகலாம்" என்றான் வருண் யோசனையாய்....



"ஆமா ஜீவா....அண்ணா சொல்றது கரெக்ட்..ஒரு டாக்டரா அவ கிட்ட பேசுங்க ப்ளீஸ்..."



"ஓகே...." ஆமோதித்து விட்டாலும் உள்ளுக்குள் பயப்பந்து உருள ஆரம்பித்தது.



"ஆரு...."



"சொல்லு...."



"நியூஸ் கேஸ் தான் முக்கியம்"



"ம்...ம்..."



"அண்ணா நாம கேஸுக்கு தேவயான விட்னஸ கண்டு புடிக்கலாம்"



"சரி மா...." கனத்த மௌனம் நிலவ



"அப்போ நா கெளம்புறேன்" எழுந்தான் ஆரவ்....



"ஏ...ஆரு இருடா... நானும் உன் கூட வர்றேன்"



"என்னால முடியாது"



"ப்ளீஸ் ப்ளீஸ்..."



"வா வந்து தொலை..." கடுப்பாய் சொல்லி விட்டு நடக்க



"அண்ணா...ஜீவா... நீங்க வந்துடுங்க... டேக் கேர்...பய்..." அவன் பின்னால் ஓடினாள்.



***



"எஸ்கியூஸ் மீ சார்"



"ப்ச்...." பைலில் கவனம் சிதற



"கம் இன்..." என்றான் எரிச்சலாய்....



உள்ளே நுழைந்தவளை பார்த்து எரிச்சல் பன்மடங்காய் அதிகரித்துத் தான் போனதுவோ!!!



வந்திருந்தது மது....



"சார்...."



"வாட்....?" என்றான் உள்ளடக்கிய கோபத்தில்....



"அ...அ...அது க...கொ...ஞ்... ச...ம் பேசணும்"



"அப்பறமா பேசுங்க மிஸ்.மதுமிதா பாலகிருஷ்ணன்" அவள் தந்தை பெயரை நன்றாக அழுத்தி அழைக்க திடுக்கிட்டு நிமிர்ந்தாள் பெண்.



"அ...அ...அத்தான்"



"கெட்டவுட்...."



"சா...ரி அத்தான்"



"ஐ சே ஜஸ்ட் கெட் அவுட்" அவன் கத்தியதில் கண்கள் கண்ணீரில் மிதக்க திரும்பி செல்லவும் கையிலிருந்த பைலை தூக்கி ஓங்கி மேசையில் அடித்து விட்டு கண்கள் மூடி சாய்ந்து அமர்ந்து கொண்டான்.



எவ்வளவு நேரம் தான் அப்படியே இருந்தானோ இரவு எட்டு மணியளவில் கதிர் கால் பண்ணவும் சுழல் நாட்காலியின் பின் புறம் போட்டு வைத்திருந்த கோர்ட்டை கையில் போட்டுக் கொண்டு வெளியேறினான்.



.....



சர்ரென வந்து நின்ற கார் சத்தத்தில் வெளியே வந்து நின்றான் கதிரவன்.



"நீங்க சொன்னா மாதிரி ராஜனையும் ஆத்மிகாவையும் அந்த பக்கம் இருக்க இடத்துல வெச்சிருக்கேன் சார்" வந்ததும் வராததுமாக படபடவென அனைத்தையும் கூறிக் கொண்டிருந்தவனை பேண்ட் பாக்கெட்டில் கைகளை விட்டபடி பார்த்து தலையாட்டி கேட்டுக் கொண்டான் ரிஷி.



கோர்ட்டை காரிலேயே வைத்து விட்டிருக்க ஷர்ட்டுக்கு மேல் போடப்பட்டிருந்த ஸ்லீவ்லஸ் ப்ளேஸருடன் வந்திருந்தான்.



"ஓகே...போலாம்...." முன்னே நடக்க பின் தொடர்ந்து சென்றவன் ராகேஷை கை காட்டி விட்டு சற்று தள்ளி பின்னால் நின்று கொண்டான்.



மயங்கி தலை ஒரு பக்கம் சரிந்திருக்க இருபக்கமும் காவலுக்கு நின்றிருந்தவர்களில் ஒருவனிடம் கண்ணை காட்டி விட்டு முன்னால் சற்றே கால்களை அகற்றி மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டு நின்று விட்டான்.



அவன் கண் காட்டவே நீரை எடுத்து வந்து தெளித்தவன் மீண்டும் தன் இடத்தில் காவலுக்காய் நின்று கொள்ள விழி திறந்தான் ராகேஷ் கண்ணா!!!



"ஆ....ர்...கே...தப்பு பண்ற"



"ஆமா...தப்பு தான் பண்றேன்.... அதுக்கு என்னாங்குற?" தெனாவெட்டாய் வந்து விழுந்தன வார்த்தைகள்...



"பரவாயில்ல.... இன்னும் அப்பிடியே தான் இருக்க" மயக்கம் முற்றாக தெளிந்திருந்தது.



"இப்போ எதுக்கு வந்திருக்க?"



"கட்டாயம்.... உன் கிட்ட சொல்லாமலா?" கதிர் கொண்டு வந்து வைத்த சேரில் அமர்ந்து காலுக்கு மேல் கால் போட்டான்.



"அன்னிக்கு....பாம் வெச்ச ஸ்கூல்ல நீங்க போறதுக்கு முன்னாடியே பாம எடுத்துட்டாங்களாமே?"



"எ...என்ன சொல்ற?"



"குழந்தைங்க உயிர பத்தின சின்ன வருத்தம் கூட இல்லல்ல உன் கிட்ட?"



"நா எதுக்குடா வருத்தப் படணும்?"



"நீ சொல்றதும் சரி தான்... ஆனா பாரு.... உன்ன போல என்னால இருக்க முடியாதுல்ல..அதனால...."



"அ....அதனால?"



"அவங்க உயிர நீ எடுக்க நினைச்ச.... உன் உயிர நா எடுத்துட்றேன்.... டீல் நல்லா இருக்குல?"



"வேணாம் ஆர்.கே தப்புக்கு மேல தப்பு பண்ற"



"இட்ஸ் ஓகே....இட்ஸ் ஓகே....நான் தப்பு தான் பண்றேன்"



"நா செத்து போயிட்டேன்னா எங்க அடுத்த ப்ளான கண்டு பிடிக்க முடியாம போயிடும் உன்னால...."



"ஈஸிட்....?"



"ஆ...ஆமா..."



"ம்...அப்போ ஒன்னு பண்ணலாம்.... முதல்ல அவங்க ரெண்டு பேரையும் போட்டுடலாம்...அப்பறம் நிதானமா உன்ன போடலாம்.... எப்பிடி?"



"வே...வே...ணாம் ஆர்.கே"



"இந்த பாம் ப்ளாஸ வெச்சி உன்ன வெளியெடுக்குறது தானே ப்ளான்?" அதிர்ந்து விழித்தான் ராகேஷ்.



"ஓஹ்....இவனுக்கு எப்பிடி தெரியும்னு யோசிக்கிறியா.... அன்னக்கி என் பொண்டாட்டி அவ அப்பன கூட்டிட்டு போனதுல ரொம்ப ஃபீலா இருந்தேனா...அதனால அன்னக்கி சும்மா விட்டுட்டேன்... ஆனா அப்பிடியே விட முடியாதுல்ல.... அதான் உன் ஆருயிர் தோழன் ஹரிஷ போட்டு தள்ளிட்டு...."



"ஏய்...."



"அட இருடா....இன்னும் மெயின் பிக்சரே சொல்லல...." காதை குடைந்தான்.



"என்ன சொன்னேன்....ஹாங்... உன் ஆருயிர் தோழன் ஹரிஷ போட்டு தள்ளிட்டு.... ஹைபர் ரியலிஸ்டிக் ஃபேஸ் மாஸ்க் இருக்குல.... அதான்டா ஒருத்தன மாதிரியே எந்த சந்தேகமும் வராத மாதிரி போட்டுப்பாங்களே.... அதே அதே..."



"என்னடா சொல்ற?"



"அந்த மாஸ்க் இருக்குல....அதை என் ஆருயிர் தோழன் ரகு முகத்துல மாட்டி விட்டேன்...."



"டேய்...."



"ஏன்டா கத்துற.... இரு இரு.... சான்ஸே இல்ல மச்சான்.... ஹரிஷ்... ச்சேஹ்...ரகு ஹரிஷாவே மாறிட்டான்னா பாத்துக்கோயேன்..... கதையோட க்ளைமாக்ஸ் என்னன்னா.... ஹரிஷ போட்டு தள்ளிட்டு தான் நான் லண்டனே போனேன்... இப்போ உன் பொண்டாட்டி அனன்யா கூட இருக்கறது ஹரிஷ் இல்ல....ரகு.... மனசிலாயி?" கண்ணத்தை தட்டி கேட்க பயத்தில் உறைந்து போய் அமர்ந்திருந்தான் ராகேஷ்....



ரிஷியின் கண்களில் தெரிந்த பழிவெறி உயிரையே உலுக்கிப் போட்டது நிச்சயமாய்!!!



"இப்போ சொல்லு.... என் ஆளு உன் பொண்டாட்டி பக்கத்துலேயே இருக்கும் போது உன் ப்ளான் எனக்கு தெரியாம இருக்குமா?"



"...."



"என்ன அமைதியாகிட்ட.... பயமா இருக்கா?" அவன் கேட்ட தோரணையில் அவன் தலை அவனையறியாமலேயே மேலும் கீழும் ஆட குரூரமாய் சிரித்தவன் நிதானமாய் எழுந்து வெளியே நடந்தான்!!!



தொடரும்....



30-05-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 09 [ A ]



"கதிர்... அந்த ராஜன் மேட்டர நாளைக்கு வந்து பாக்குறேன்.... இட்ஸ் டூ லேட்.... அஷு வேற கால் பண்ணிகிட்டே இருக்கா..."



"ஓகே சார்"



"அவனுங்களுங்க பாடிகாட் வெச்சிட்டு நீயும் கெளம்பு" சொல்லிக் கொண்டே நடந்தவன் கார் கதவை திறந்து விட்டு மீண்டும் திரும்பினான்.



"சார்...."



"பீ கேர்புல்.... டேக் கேர்" காரிலேறி சென்று விட அவன் மறைமுக அக்கறையில் தனக்குள் சிரித்துக் கொண்டான் கதிர்.



.....



மீண்டும் மொபைல் ஒலிக்க காரில் கனெக்ட் பண்ணி விட்டான்.



"மாறன்..லைன்ல இருக்கீங்களா?"



"...."



"ஹலோ....மாறா...." அவள் கத்தவே சிரிப்பை அடக்கியவன் பிடிவாதமாய் அமர்ந்திருந்தான்.



'மாறனா.... நீ தேவ் சொல்ற வர நா வாயே திறக்க போறதில்ல பேபி...'



"டேய் பேசறது கேக்குதா இல்லயா.. கமாண்டர்....ஏன்டா படுத்துற.... என்னன்னு தான் கேளேன்"



"...."



"அய்யோஓஓஓ....எங்க இருக்கீங்க?"



"...."



"தேவ்...." சிணுங்கவும் வாய் விட்டுச் சிரித்தவன்



"தோ....இன்னும் பைவ் மினிட்ஸ்ல வந்தட்றேன் கண்ணம்மா...." என்றான் காதலாய்...



"இவ்வளவு நேரமா பேசிட்டே இருக்கேன்"



"கேட்டுதுடா.... இங்க ரொம்ப ட்ராபிக்கா இருக்கு.... அதான் நான் பேசறது கேட்டிருக்காது" நன்றாக அள்ளி விட்டான்.



"ட்ராபிக்கா....ஓஹ்... பட்.... நீங்க கார்ல உள்ள புளூ டூத்ல தானே வழமயா கனெக்ட் பண்ணுவீங்க.... அது எப்பிடி கேக்காம போகும்?"



"நா அப்பறமா பேசறேன்....பய்..." சட்டென துண்டித்தவன்



'ஷார்ப்பா தான் இருக்கா' வெளிப்படையாகவே புலம்பினான்.



***



"ஆரு...."



"என்னமா....?" தங்கை அருகில் சென்றான் ஆரவ்.



"அண்ணா இன்னுமா வர்ல?"



"இதோ இப்போ வந்துடுவாங்க"



"ம்....ஜீவா எங்கே.... நான் அவன பாக்கவே இல்லயே?"



"அ...அவன் அவன் இருக்கான்...."



"வர சொல்றியா?"



"எதுக்கு?"



"வேற எதுக்குடா.... பேச தான்" அவளிடம் கோபப்பட முடியாமல் ரூமிலிருந்து வெளியே வந்தான்.



அனைவரும் சென்று விட்டிருக்க

ஹாலில் அமர்ந்து ஏதோ யோசித்துக் கொண்டிருந்தவன் அரவம் உணர்ந்து கலைந்தான்.



"வாடா...."



"ஆரா உன் கூட பேசனுமாம்" என்றான் எங்கோ பார்த்தபடி....



"ஓஹ்....ஓகே..." எழுந்தவன்



"கோபம் காட்ட தெரிலனா காட்ட கூடாது ஆரு...." சிரித்துக் கொண்டே தோளில் கைவைக்க வெடுக்கென தட்டி விட்டவன்



"போடா...." என்று விட்டு செல்ல மீண்டும் தலையாட்டி சிரித்தான் ஜீவா.



மாடியேறப் போனவன் காலிங் பெல் சத்தத்தில் அப்படியே நிற்க ஆராவை தேடிப் போனவனும் அப்படியே நின்று திரும்பினான்.



"ஆரு....எரும.... அதான் சத்தம் கேக்குதில்ல.... போய் திறக்க வேண்டியது தானே?" திட்டிக் கொண்டே மாடியிலிருந்து இறங்கி வந்து கதவை திறந்து விட்டாள் ரிஷியின் மனையாள்....



"மாம்....நானும்" பின்னாலேயே அவனும் ஓடி வர கயலும் சத்தம் கேட்டு வெளியே வந்தவள் அனைவரும் அங்கிருப்பது கண்டு இறங்கி வந்தாள்.



கதவை திறந்தவள் பின்னால் தலை குனிந்து நின்றிருந்த மதுவை பார்த்து அதிர உள்ளே நுழைந்தான் ரிஷி.



'யாரிவ?' ஆரவ்வினதும் கயலினதும் மனது ஒரே கேள்வியையே கேட்டுக் கொண்டிருக்க



"ஐ....மிஸ்....." என்ற படி அவளிடம் பாய்ந்தோடிய யாதவ்வின் குரலில் கலைந்தனர் அனைவரும்....



"ஆரவ்...."



"அண்ணா..."



"இவ ஆனந்தோட தங்கச்சி"



"வாட்....?"



"இனிமே இங்கேயே தங்கட்டும்...."



"அ...அத்தான்...." கண் கலங்க அழைத்தவள் மறு வார்த்தை பேசு முன் அவன் மாடியேறி சென்றிருக்க அவள் தோளில் ஆதரவாய் கை வைத்தாள் அஷ்வினி.



"ஜீவா....நீங்க போங்க நா பாத்துக்குறேன்"



"இல்ல...நா"



"நீங்க போங்க..." அழுத்திச் சொல்லவும் சென்று விட அவளை முறைத்துக் கொண்டு நின்றிருந்த ஆரவ்வை அழைத்துச் செல்லுமாறு கயலிடம் கண் காட்டினாள் பாவை...



"யாது...நீங்க அப்பா கூட இருங்க நா இதோ வந்துட்றேன்"



"ஓகே மாம்...பய் மிஸ்...." அவன் செல்லவே அவளுக்கு கீழுள்ள ஒரு அறையை காட்டி அவளுடன் கொஞ்ச நேரம் இருந்து விட்டு அவனுக்கு சாப்பாட்டை எடுத்துக் கொண்டு மேலே வந்தாள்.



மகன் கனவன் மார்பில் உறங்கி இருக்க கைகளை மடக்கி கண்களை மறைத்தபடி நேராக படுத்திருந்தான் அவன்...



மகனை தூக்கி சற்றே நகர்த்தி படுக்க வைத்தவள் இறங்கி அவன் மறுபக்கமாய் போய் நின்றாள்.



"தேவ்...எந்திரிங்க...சாப்பிட்டு படுங்க"



"எனக்கு பசியில்ல நீ படு"



"பசி இல்லனாலும் பரவாயில்ல.... வெறும் வயித்துல தூங்க கூடாது... எந்திரிங்க"



"ப்ச்...எனக்கு வேண்டாம்....படு"



"தேவ்..." என்றவள் அவன் கைகளை எடுத்து விட்டு இழுத்து அமர வைத்தாள்.



"ஏன்டி டாச்சர் ப..." அவன் அடுத்து பேசு முன் அவன் வாய்க்குள் சாப்பாட்டை திணித்திருக்க முறைத்தான் மனைவியை...



"ம்..." அடுத்த கவளத்தையும் நீட்ட அவளையே பார்த்தவன் ஏதும் பேசாமல் வாங்கிக் கொண்டான்.



"நீ சாப்டியா?"



"ஆமா"



"மதுவ அழச்சிட்டு வந்ததுல உனக்கு கோபம் இல்லையா?"



"நா எதுக்கு தேவ் கோபப்படணும்.... நீங்க இப்பிடி பண்ணீங்கன்னா அதுக்கு பின்னாடி நிச்சயமா ஒரு காரணம் இருக்கும்"



"தேங்க்ஸ்...ஆனந்த் மட்டும் இங்கே இருக்கான்... அவ தனியா ஹோட்டல் ரூம்ல தங்கி இருந்தா.... அதனால தான் அழச்சிட்டு வந்தேன்"



"ம்...."



"முன்னெல்லாம் அவ பேர எடுத்தாலே குதிப்ப... இப்போ என்னாச்சு?" என்றான் சிறு சிரிப்புடன்....



"எப்போதும் ஒரே மாதிரியா இருப்பாங்க"



"உண்மதான்....பட் நம்ப முடிலயே"



"அவள பாத்தா பாவமா இருக்கு.... அவ மேல தப்பு இல்லல்ல... அதனால தான்"



"ஓஹ்...."



"ஏன் தேவ்....ஜீவா மேல உங்களுக்கு கோபம் இல்லல்ல?"



"ஏன் கேக்குற?"



"இன்னும் எதுக்கு ஒதுக்கம் காட்றீங்க... பேசலாமே?" அவள் கண்களில் தெரிந்த எதிர்பார்பில் முடியாதென சொல்ல முடியாமல்



"ம்..." என முடித்து விட்டான்.



"நிஜமாவா?"



"ம்..." என்றவனுக்கு கடைசி கவளத்தை நீட்ட அவள் குழந்தை தனத்தை நினைத்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.



***

"ஆரு...." கணவனை இறுக்கி அணைத்தபடி படுத்திருந்தாள் கயல்.



"டிஸ்டர்ப்டா இருக்கியா?"



"ஊஹூம் இல்ல"



"மது உனக்கு அத்த பொண்ணுல?"



"ப்ச்...அத விட்டுட்டு வேற ஏதாவது பேசு அம்மு... இர்ரிடெட்டிங்கா இருக்கு"



"ஆமா.... நீ இன்னிக்கு எங்க கிளம்பி போன?"



"எப்போ?"



"அதான் அம்மா சாப்புட கூப்டாங்களே அப்போ தான்.... எங்க அவ்வளவு அவசரமா கிளம்பின?"



"அது....அது.... ஹாங்.... முக்கியமான கேஸ் விஷயமா ஒருத்தர மீட் பண்ண போனேன்"



"அன்னக்கி எதுக்குடா பொய் சொன்ன?"



"டாக்டர் அர்ஜுன் மேட்டர பத்தி உன் கிட்ட சொன்னா நீ பயப்புடுவல்ல அம்மு குட்டி.... அதனால தான் மறைக்க வேண்டியதா போச்சு.... சாரிமா"



"ம்...எனக்கு கோபம் வந்துது"



"சாரிடி செல்லம்.... உனக்காக தானே பாத்தேன்"



"சரி சரி விடு"



***



காலை....



அவனுக்கு முன்னாலேயே தயாராகி இருந்த மனைவியை புருவம் சுருங்க பார்த்தவன் எதுவும் பேசாமல் டையை சரி செய்து கொண்டிருந்தான்.



"தேவ் நா கட்டி விடட்டுமா?" எழுந்து வந்தவள் அவனை தன்னை நோக்கி இழுக்க அருகே தெரிந்த அவள் முகத்தில் லயித்தவனுக்கு மூச்சு முட்டியது.



'நாம என்ன முடிவெடுத்தாலும் இவகிட்ட செல்லாதுன்னு ஏற்கனவே கடவுள் எழுதி வெச்சிட்டானோ' தீவிரமாய் சிந்தித்தவன் சட்டென விலக மனதிற்குள் சிரித்தாள் பாவை...



"இல்ல தேவயில்ல விடு நா பாத்துக்குறேன்" அவளிடமிருந்து டையை இழுத்தெடுத்து மறு புறம் திரும்பி நின்றான்.



"அட நா இன்னும் போட்டு விடவே இல்ல தேவ்.... இங்க வாங்க"



"நீ யா...யாதுவ கூட்டிட்டு கெளம்பு" கோர்ட்டை போட்டு விட்டு அவசரமாக வெளியேற



'விலக நினக்கிறீங்களா மிஸ்டர்.மாறன்' வாய் பொத்தி சிரித்தாள்.



.....



ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ்.....



"சார் மீட்டிங்குக்கு டைமாச்சு...." பைலுடன் வந்து நின்றான் கதிரவன்.



"ம்..." கோர்ட்டை சரி செய்தவாறே எழுந்து நடந்தான்.



.....



"ஹலோ மிஸ்டர்.மாறன்" எழுந்து கை குழுக்கினார் ராம்.



"ஹலோ...." கைகுலுக்கி விட்டு அமர்ந்து கொள்ள சம்பாஷனை துவங்கியது.



அது ஒரு புதிய சென்ட் கண்டு பிடித்திருந்ததற்கான மாக்கெட்டிங் மீட்டிங்....



முதல் முதலில் ஆர்.கே இண்டஸ்ட்ரீஸுக்கு அறிமுகப்படுத்தி டீல் பேச வந்திருந்தனர்.



.....



ப்ராஜக்டரில் அது பற்றி விளக்கி விட்டு ஒருவன் அமர கவனமாக கேட்டுக் கொண்டான் தேவ்.



"மிஸ்டர்.மாறன்.... உங்க கம்பெனி மாக்கெட்டிங் அதிக ரேட் இருக்குறதுனால உங்களுக்கே முதல்ல அறிமுகப்படுத்தனும்னு இருந்தோம்...." ராம் தன் கருத்தை துவங்கினார்.



"ம்..."



"நீங்க இத பத்தி என்ன நெனக்கிறீங்க?"



"குட்.... பிஃப்டி பர்ஸர்ண்ட் டீல் பண்ணிக்கலாம்"



"வாட்...பிஃப்டி பர்ஸண்டா?"



"எஸ்.... மாக்கெட்டிங் ரேட்ல லீடிங் கம்பெனினா கொஞ்சமா சொல்லுவேன்னு எதிர்பாத்தீங்களா ராம்?" காலுக்கு மேல் கால் போட்டு அவரை கூர்ந்து பார்த்தான்.



ஆம்.... அவன் கேட்டது உண்மை தான்...



நன்றாக குறைத்து கூறுவானென்று பார்த்தால்.... அவன் அவரையே அல்லவா நடுங்க வைக்கிறான்.



"இல்ல மிஸ்டர்.மாறன்.... நாங்க வந்து..."



"இனஃப்.... பிஃப்டி பர்ஸண்டுக்கு ஓகேன்னா மேற்கொண்டு பேசலாம்.... இல்லன்னா...." அவன் வாசலுக்கு கை நீட்டும் முன் அவசரமாக ஒத்துக் கொள்ள காண்ட்ராக்ட் ஒத்துக் கொள்ளப்பட நிதானமாக எழுந்து வெளியேறியவனை வழமை போல் ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டே பின்னால் சென்றான் கதிர்.



.....



"கதிர்..."



"சார்..."



"வேற மீட்டிங்ஸ் இருந்தா கேன்ஸல் பண்ணிடு.... ரகுவ மீட் பண்ண போலாம்..."



"ஓகே...." என்றவன் வெளியேற பேப்பர் வெயிட்டை உருட்டிக் கொண்டிருந்தவன் மூளை வேறு எதையோ சிந்தித்துக் கொண்டிருக்க அவனை கலைத்தாள் வசுந்ரா.



"எஸ்கியூஸ் மீ சார்"



"கம் இன்...." அவள் உள்ளே வர இருக்கையை காட்டினான்.



"சொல்லு வசு...." அவனுக்கு தெரியும் ரகு காரணமாகத் தான் வந்திருப்பாளென்று...



பிஸ்னஸ் விஷயமாக வெளியூர் அனுப்பி வைத்திருக்கிறேன் என பொய் சொல்லி வைத்திருந்தான்.



வருண் மூலம் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த கல்யாண விடயத்தை யோசித்து கொண்டிருந்தவனை தான் கலைத்திருந்தாள்.



"சார்....வந்து ரகு...."



"அவன் இன்னிக்கு வந்துடுவான்..."



"ம்...." எழுந்து கொண்டவளை திடுக்கிட்டு திரும்ப வைத்தன அவன் கேள்வி.



"இன்னிக்கும் பொண்ணு பாக்க வர்றாங்க.... அதானே?"



"சா...சார்...."



"இன்னிக்கு நிச்சயமா அவன் தான் வருவான்.... நீ போமா"



"தேங்க் யூ சார்...."



"ம்..." மெலிதாக புன்னகைத்தான்.



***



அந்த ஆடம்பர செவன் ஸ்டார் ஹோட்டல் அறைக்குள் ரிஷியும் கதிரும் அமர்ந்திருக்க உள்ளே நுழைந்தான் ஹரிஷ்....ச்சி ரகு.



"ஹாய்டா...." வந்து அமர்ந்தவன் முகத்திலிருந்த மாஸ்கை கழற்றி வைத்து விட்டு சென்று முகத்தை அடித்துக் கழுவி விட்டு வந்தான்.



"ஏன்டா உனக்கு நா என்ன பண்ணேன்... அரிக்குதுடா" தன் முகத்தை தடவியவனை பார்த்து வாய் விட்டுச் சிரித்தான் ரிஷி.



"நல்லா சிரி.... எரும"



"ஹாஹாஹா...."



"கடுப்பேத்தாத..."



"ஓகே ஓகே...."



"ம்...அஃது...மச்சான் அவ சந்தேகப்பட ஆரம்பிச்சிருக்காடா"



"எதை பத்தி?"



"அவள யாரோ க்ளோஸா வாட்ச் பண்றதா என்கிட்டயே சொல்றா"



"குட்...."



"மண்ணாங்கட்டி குட்.... அவள மாதிரியே நடிக்கிறதுக்குள்ள என் உயிரே போயிடுச்சு.... எல்லாமே உன்னால தான்டா"



"...."



"சிரிக்காத....சிரிக்காத"



"சரி கிளம்பு"



"எங்க?"



"பொண்ணு பாக்க போறோம்"



"ஏன்டா ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்க போறியா என்ன?"



"போடாங்.... உனக்கு தான்"



"எ...எ...எனக்கெதுக்கு?"



"கல்யாணம் பண்ண தான்..." தோளை குழுக்கி விட்டு அவன் நடக்க வழிமறித்து நின்றான் ரகு.



"மச்சி....வந்து நா ஒரு...ஒரு பொண்ண லவ் ப... பண்றேன்"



"அவகிட்ட இத சொல்ல துப்பில்ல... என்கிட்ட எதுக்கு வந்து பம்முற.... என் வாய்ல நல்லா வந்துடும்.... போ... போயி ட்ரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வா.... அவ வீட்டுக்கு தான் போறோம்" அவன் நட்பில் நெகிழ்ந்தது நெஞ்சம்.



***



இரவு....



ஆராவுடன் அமர்ந்திருந்தான் ஜீவா....



அவள் மட்டும் தான் பேசிக் கொண்டிருந்தாள்....



அவளை பார்த்துக் கொண்டே இருந்தவன் மெதுவாக பேச்சை துவங்கினான்.



"ஆரா...."



"சொல்லுடா...."



"வ....வ...வந்து....இல்ல ஒன்னில்ல" அவளை விட அவனுக்குத்தான் உள்ளுக்குள் இதயம் அதிவேகமாக துடித்துக் கொண்டிருந்தது.



"ஒரு டாக்டரா உன் கிட்ட சில கேள்விகள் கேக்கனும்மா?" ஒருவாறு தைரியத்தை வரவழைத்தவன் வார்த்தைகளை கோர்த்தான்.



"கேளுங்க டாக்டர் சார்"



"இல்ல.... நீ....நீ...."



"டாக்டர் சார்..... என்னாச்சு....?" வேடிக்கையாகவே கேட்டாள்.



"இல்லமா....நீ ரெஸ்ட் எடு.... நா இதோ வந்துட்றேன்" விறுட்டென வெளியே வந்தவன் நன்றாக மூச்சை இழுத்து விட்டான்.



....



தன்னறையில் அமர்ந்து கேஸை அலசிக் கொண்டிருந்தவள் அடுத்து சொல்லப்பட்டிருந்த செய்தியில் ஸ்தம்பித்து நின்று விட்டாள்.



அதாவது.... கொலை குற்றம் செய்தவருக்கும் அதை மறைக்க உதவி செய்தவருக்கும் தண்டனை கட்டாயம் கிடைக்குமென்பது சட்டம்....



'அப்பிடின்னா ஆருக்கு....' அதிர்ந்து போன உள்ளம் வெளிவரத் தெரியாமல் தத்தளித்தது!!!



......



கோர்ட்டை தூக்கி சோஃபாவில் போட்டவன் பேயரைந்தது போல் அமர்ந்திருந்த மனைவியை விசித்திரமாய் பார்த்தான்.



'தான் வந்தது கூடத் தெரியாம அப்பிடி என்ன பண்றா' யோசித்துக் கொண்டே அவளருகில் சென்று பார்த்தான்.



ஏதோ வைத்து கிறுக்கி வைத்திருக்க கையிலிருந்து பென்சில் தரையில் கிடந்தது.



மீண்டும் ஒருமுறை பார்த்தவன் தோளை குழுக்கி விட்டு ப்ரஷப்பாக சென்று விட்டான்.



அவன் திரும்பி வரும்போது அவள் இல்லை.... யாதவ் மட்டும் தனது பாடசாலை நோட் புத்தகத்தில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தான்.



'எங்க போனா....' மனதிற்குள் கேட்டுக் கொண்டவன் மகன் பக்கத்தில் வந்தமர தந்தையை பார்த்து லரவேற்பாய் சிரித்தவன் மீண்டும் தலையை திருப்பி விட்டான்.



"யாதவ்..."



"சொல்லுங்க டாட்" நோட்டிலிருந்த கவனம் தந்தை மேல் பாய நிமிர்ந்து அமர்ந்தான்.



"ஸ்கூல்ல சப்ஜெக்ட்ஸ் எல்லாம் எப்பிடி போயிட்டிருக்கு?"



"குட் டாட்...."



"ம்...அப்பறம் சாப்டியா?"



"ம்...ஆச்சு டாட்...."



"குட்...."



"டாட் இன்னிக்கு நடந்த ஆர்ட் ட்ராயிங்ல நான் தான் பர்ஸ்ட் தெரியுமா?" துள்ளி எழுந்தவன் தன் பரிசை எடுத்துக் கொண்டு வந்து அவனிடம் நீட்டினான்.



அதை தூக்கி ஓரமாக வைத்தவன் அவன் தோள்களை பற்றி அருகில் இழுத்து நெற்றியில் முத்தமிட்டு விட்டு தலையை தடவி விட்டான்.



"யாது கண்ணா எப்போவும் பர்ஸ்ட் தான்..."



"தேங்க்ஸ் டாட்...."



"பட் யாதவ்.... நாம எப்போதுமே வெற்றி நமக்கு அத்துபடின்ன மைண்ட் செட்ட வளத்துக்க கூடாது.... அது நம்மல கீழ தள்ளி விட்டுடும்..... புரிஞ்சுதா?"



"எஸ் டாட்....ஐ அண்டர்ஸ்டூட்"



"குட்.... யாது பர்ஸ்ட் வந்ததுக்கு என்ன வேணும்?"



"நாளைக்கு என்னையும் மாமையும் பீச்சுக்கு கூட்டிட்டு போறீங்களா?"



"நாளைக்கா....ம்...."



"ப்ளீஸ் டாட்...."



"ம்...ஓகே டா"



"தேங்க் யூ டாட்..." அவன் கழுத்தை கட்டிக் கொண்டு குதூகலித்தான்.



"சரி தூங்கலாமா?"



"ம்...." என்றவன் கையை விரிக்க கைகளில் அள்ளியவன் கட்டிலருகே செல்லவும் அவன் மனையாள் உள்ளே வரவும் சரியாக இருந்தது.



"தேவ்....சாப்புடல்லயா நீங்க?" இயந்திரம் போல் கேட்டவளிடம்



"நா சாப்டேன்டா" என்றான் புருவம் சுருக்கி....



"ம்...." என்றவள் பால் கனியில் போய் கூடை நாட்காலிக்குள் ஏறி அமர யாதவ்வை உறங்க வைத்தவன் அவளை நோக்கி வந்தான்.

"அஷு"



"ஹாங்...என்ன தேவ்?"



"தூங்கல?"



"நீங்க போங்க நா வந்தட்றேன்" அவளை ஒரு நிமிடம் கூர்ந்து பார்த்து விட்டு அவளை இழுத்து தூக்க பயத்தில் அவன் கழுத்தை கட்டிக் கொண்டவள் அவன் நெஞ்சில் ஒன்ற இதழ் கடையோர சிரிப்புடன் உள்ளே வந்தவன் கட்டிலில் கிடத்தி தானும் ஏறி மீண்டும் இழுத்து தன் நெஞ்சில் போட்டுக் கொண்டு கூந்தல் வருடினான்.



"என்னடா யோசிக்குற?"



"ஒன்னில்ல தேவ்"



"எதுவா இருந்தாலும் நிதானமா யோசி.... நிச்சயமா விடை கிடைக்கும்.... மனச போட்டு குழப்பி கிட்டோம்னா இருக்குறதும் இல்லாம போயிடும்"



"ம்...." என்றவள் அவனை இறுக்க அணைத்து கண்ணை மூட தானும் கண் மூடினான் ரிஷி.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காலை....



ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ்.....



தன் மொபைலை எடுத்து மனையாளுக்கு அழைத்தான்.



"சொல்லுங்க தேவ்"



"ஆனந்த் கிட்ட ஆபிஸ் வர சொல்லிடு"



"வாட்....நிஜமாவா...?"



"எஸ் கண்ணம்மா"



"ம்...ஓகே...இதோ நா சொல்லிட்றேன்" வைத்து விட தன் வேளையில் மூழ்கினான்.



.....



"ஜீவா"



"சொல்லு அஷ்வி"



"உங்கள தேவ் ஆபிஸ் வர சொல்றாரு"



"ம்...ஓகே நா பாத்துகுறேன்"



"ஏன் ஜீவா....என்னாச்சு.... ஏன் வாய்ஸ் டல்லா இருக்கு... எனிதிங் ராங்?"



"இல்லமா...ஒன்னில்ல"



"பொய் சொல்லாதீங்க... ஆரா விஷயமா தான் அப்ஸட்டா இருக்கீங்களா?"



"ம்..."



"வாட் ஹெபண்ட்?"



"எ...என்னால அவகிட்ட பேச முடிலமா.... கஷ்டமா இருக்கு... ப்ளீஸ் இது வேணாமே....பயமா இருக்கு"



"நாம வேண்ணா வேற ஒன்னு பண்ணலாமா?"



"சொல்லு"



"ஆராக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கலாமா?"



"அதுக்கு ரிஷிண்ணா ஒத்துகணுமேமா?"



"இப்போ தேவ் உங்கள வர சொல்லி இருக்கார்ல?"



"ம்...."



"போயி ஆரா ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கா.... நாம ட்ரீட்மெண்ட் கொடுத்து மனசுல இருக்கத தெரிஞ்சிக்கலாம்... இல்லன்னா பெரிய சிக்கலாயிடும்னு சொல்லுங்க... என்ன ஓகே வா?"



"சரிமா.... பட் சரியான கேடிடி நீ" என்றான் சிரிப்புடன்....



"ஓவரா புகழாதடா..."



"அடிங்க.... டாவா?"



"எஸ்டா ஜீவா...அப்போ வெக்கட்டுமாடா?"



"உன்ன...."



"ஹாஹாஹா.... பய்" துண்டித்து விட எழுந்தவன் ஆபிஸ் செல்ல தயாரானான்.



***



"எஸ்கியூஸ் மீ சார்"



"கம் இன்....உட்காரு" என்றவன் முன் அமர்ந்தான் ஆனந்த்.



"என்னணா...?" பதில் சொல்லாமல் ஒரு வெள்ளை கவரை நீட்ட எடுத்துப் பார்த்தவன் மெலிதாய் புன்னகைத்தான்.



"டாக்டர் அர்ஜுன் இருக்க ஹாஸ்பிடல்ல உன்ன சீப் டாக்டரா அபாய்ண்ட் பண்ணி இருக்கேன்.... ஜாயின் ஆகு"



"ஓகே ணா... அ...அண்ணா..."



"ம்...."



"சாரி...."



"இட்ஸ் ஓகே விடு"



"தேங்க்ஸ்...."



"மது கூட எதுக்காக பேசாம இருக்க?"



"இ...இல்லணா பேசுறேனே?"



"என் கிட்ட பொய் சொல்ல நினைக்காத ஆனந்த்"



"சத்தியமாணா...."



"அப்போ ஒரு அண்ணனா நீ என்ன பண்ணி இருக்கணும்?"



"புரில"



"இடியட் அவள ஹோட்டல்ல தங்க வெச்சிட்டு என்னத்த கிழிக்குற?" அவன் கோபப்படவே தலை குனிந்தான்.



"சரி இனிமே இப்பிடி நடக்காம பாத்துக்கோ"



"ம்....அ...அண்ணா... ஆராக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கலாமா?"



"ஏன்?"



"இல்ல....அவ ஏதோ உள்ளுக்குள்ள யோசிக்கிறாவோன்னு தோனுது.... மனசு விட்டு பேச வெச்சா ரிலீஃபா இருக்கும்ல?"



"நீ அவள லவ் பண்ற.... ரைட்?" அதிர்ந்து போனான் ஆனந்த்.



"இ....இல்ல...ணா... அ...அது..."



"லவ் பண்ணா தைரியமா ஒத்துக்க பழகு முதல்ல... சொல்லுடா.... லவ் பண்றியா இல்லியா?"



"எஸ்...."



"ட்ரீட்மெண்ட் கொடுக்கலாம்" மலர்ந்து நிமிர்ந்து அமர்ந்தவனை பார்த்து உள்ளுக்குள் சிரித்தாலும் விரைப்பாகவே இருந்தான்.



"சரி...நீ போ நாம அப்பறமா பேசலாம்...."



"தேங்க்ஸ் ணா...." எழுந்து வெளியே செல்ல புன்னகைத்தான் ரிஷி.



அவன் காதல் விடயம் இன்னறைக்கு நேற்றல்ல....



வருடங்கள் முன்னாடியே தெரிந்தது தான்...



ஆனால் அதே காதல் அப்படியே இருப்பதை கண்டு கொண்டது அவன் அன்று ஆராவிற்காக துடித்த போது தான்...



ஆராவை அவனிடம் ஒப்படைப்பதில் அவனுக்கு எந்த வருத்தமுமில்லை...



ஆனால் தங்கை ஏற்பாளா என்பதில் தான் குழம்பிப் போனான்....



ஒரு குடும்பத் தலைவன் ஸ்தானத்தில் மதுவுக்கும் மண முடித்து வைக்க வேண்டி இருந்தது.



இதில் ரகுவின் திருமணம் வேறு....



எல்லாவற்றையும் முடித்தால் தான் தான் நினைத்தது பொல் குற்றத்தை ஒப்புக் கொள்ள முடியும்...



அதற்குள் இதெல்லாம் சாத்தியமா???



தலை விண்விண்னென தெறிக்க தலையை தாங்கிப் பிடித்தவனுக்கு எல்லாம் மங்களாக தெரிந்தது.



.....



சுமார் ஒன்றரை மணித்தியாளங்கள் கழித்து சைன் வாங்குவதற்காக உள்ளே நுழைந்த கதிர் அதிர்ந்து போனான்.



"சா...ர்....சார்....சார் என்னாச்சு?" அவன் பதற மெதுவாக விழி திறந்தவன்



"ஒ....ஒ...ன்னில்ல கதிர்" என்றான் சோர்வாய்...



நீரை நிரப்பி அருந்தக் கொடுக்க மிடர்களாய் குடித்தவன் சற்றே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு நிமிர்ந்தான்.



"சார் ஹாஸ்பிடல் போலாம் வாங்க"



"இல்ல.... நத்திங் கதிர்.... எனக்கு ஒன்னில்ல....நீ போ"



"இல்ல சார்.... ப்ளீஸ் வாங்க போலாம்..."



"இல்லடா ப்ளீஸ் ஒன்னில்ல நீ போ...."



"என் சார் புரிஞ்சிக்காம நீங்க வேற....ப்ளீஸ் சார்"



"அப்போ நாளைக்கு போலாம்.... டாக்டர் அர்ஜுன் கிட்ட அபாய்ண்மெண்ட் வாங்கிடு.... ஓகேவா?"



"நோ சார்.... இன்னிக்கே போலாமே ப்ளீஸ்...."



"கதிர் எனக்கு நெறய ஒர்க் இருக்கு "



"ஹெல்த்த விட வேல முக்கியம் இல்ல சார்"



"ப்ச்....ப்ளீஸ் நாளைக்கு கண்டிப்பா வர்றேன்" மனமே இல்லாமல் தலையசைத்தவன் எதுவும் பேசாமல் வெளியேறி விட்டான்.



***



"டேய்....அண்ணா ராகேஷ் மேட்டர ஈஸியா ஹேண்ட்ல் பண்றாரு.... நாமலும் தான் இருக்கோமே" சிரித்த மதனை பார்த்து தானும் சிரித்தனர் ஆரவ்வும் சித்துவும்....



"ஆமாடா....சான்ஸே இல்ல மச்சான்...." என்ற சித்தார்த்திற்கு



"எஸ் டா.... நான் எதிர் பாக்கவே இல்லடா.... அண்ணா கிட்ட பம்முனத நீ பாக்கனுமே" ஒத்து ஊதினான் ஆரவ்....



"டேய் நாம மூணு பேரும் வெளில போயி ரொம்ப நாள் ஆச்சுல்லடா..." கேட்டான் மதன்.



"ஆமா....பட் நா எங்கேயும் வர்றதா இல்ல ஆள விடுங்கடா" உடனே ஜகா வாங்கிய ஆரவ்வை பார்த்து இருவரும் சிரிக்க முறைத்தான்.



"ஏன் மச்சான்.... நீ பொண்டாட்டி தாசனாவே மாறிட்ட போல?" சிரித்துக் கொண்டே கேட்ட சித்தார்த்திர்க்கு நன்றாக முதுகில் ஒன்று போட்டான்.



"இந்த ஜெய்பூர் கேஸ்ல வாங்கி கட்டிகிட்டதே போதும் மச்சான்"



"கயல் ரொம்ப சாப்ட்னு நெனச்சிருந்தேன் டா" மதன் இடையிட



"ஆமாமா.... ரீடர்ஸ் கூட அப்பிடி தான் நெனச்சிட்டு இருந்தாங்க.... கூட இருக்க எனக்கு தானே தெரியுது அவ பாலிஸி" கண்ணத்தில் சோகமாய் கை குற்றி அமர்ந்து விட்டான்.



"டேய்....நம்ம ரவி இருக்கான்ல?"



"எந்த ரவிடா?" சித்தார்த் கேட்க இருவரும் குழம்பினர் கோரசாக....



"அதான் மச்சான் ஒரு தடவ அண்ணா கிட்ட அடி கூட வாங்கினானே"



"ஓ...எஸ் எஸ்டா.... ஹாஸ்பிடல் போயி படுத்திருந்தான்.... அவனா?" நினைவு கூர்ந்தான் ஆரவ்.



"யாரடா சொல்றீங்க?" மதன் புரியாமல் கேட்க



"அது காலேஜ் மேட்டர்டா... ஒரு தடவ அண்ணா கிட்ட பந்தா காட்டி வாங்கி கட்டி கிட்டு ஹாஸ்பிடல்ல படுத்திருந்தான்" விளக்கினான் ஆரவ்.



"சரி.... இப்போ அவனுக்கு என்ன?"



"அவன் சீப் நியூஸ் ரிப்போர்டரா இருக்கான்டா..... நேத்து கேஸ் விஷயமா போனப்ப தான் தெரிஞ்சுது.... ஆள் அடையாளமே தெரியாமா மாறி இருக்கான்டா"



"வர்றே வாஹ்.... சீப் நியூஸ் ரிப்போர்டரா?" ஆர்வமாய் கேட்ட ஆரவ்விற்கு ஆமென தலையாட்டினான் சித்தார்த்.



கைகளை மேலே தூக்கி சோம்பல் முறித்தவன்



"அப்போ.... நம்ம வேல ஈஸியா முடிஞ்சிடும்டா" என்றான் சாவகாசமாய்....



"என்ன வே...." இடையிட்ட இருவரும் புரிந்து மர்மமாய் புன்னகைத்தனர்.



"பட் மச்சி.... அவன் நம்ம கூட பேசவே மாட்டானே.... அண்ணா மேட்டருக்கு ஒத்துகுவானா?" சித்தார்த்தின் முகத்தில் குழப்ப ரேகைகள்....



"அதெல்லாம் பாத்துக்கலாம்டா...." ஒரு ஆர்வத்தில் சொல்லி விட்டாலும் உள்ளுக்குள் யோசனையாகவே இருந்தது ஆரவ்விற்கு....



***



ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ்....



மாலை நான்கு மணி....



கதிரை இன்டர்காமில் அழைத்தான் ரிஷி.



"கதிர்.... நீ வேலய முடிச்சிட்டு ராக்கேஷ் இருக்க இடத்துக்கு வந்துடு... எனக்கு கொஞ்சம் வேல இருக்கு.... நா அத முடிச்சிட்டு வர்றேன்"



"ஓகே சார்...." இன்டர்காமை வைத்தவன் கோர்ட்டை போட்டு விட்டு கிளம்பினான்.



கீழே பார்கிங்கிற்கு வந்தவனுக்கு காருக்குள் ஏறும் முன்னே நடை தள்ளாட துவங்கி விட தலையை உலுக்கி தன்னை சமன்படுத்தியவன் சென்று காரில் ஏறினான்.



....



கிளம்பிய போது தூரலாய் துவங்கிய மழை வேறு இடைநடுவே திடீரென வலுக்க ஆரம்பித்து விட கார்பேர்ட் சாலையில் வழுக்கிக் கொண்டு சென்றவனின் கார் கைளில் தடுமாறத் துவங்கியது.



கண்ணை மீண்டும் கசக்கி தலையை உலுக்கி விட்டுக் கொண்டவனுக்கு கொஞ்ச நேரம் தாண்டி மீண்டும் தலை விண்விண்னென தெறிக்க ஆரம்பித்தது.



முன்னிருந்த சாலை மங்கலாக துவங்க மறுபடியும் கைகளில் தடுமாறிய கார் நிலை கொள்ளாமல் தாறுமாறாக சென்று முன்னிருந்த மரத்தில் மோதி தன் இயக்கத்தை நிறுத்த ஸ்டியரிங் வீலில் மயங்கிச் சரிந்தான் ரிஷிகுமார் தேவமாருதன்!!!



ஹாஸ்பிடல்.....



குடும்பத்தினர் அனைவரும் அந்த வராண்டாவில் பதற்றமாய் நின்றிருக்க அவனவள் மட்டும் முகத்தை கைகளில் புதைத்து அமர்ந்திருந்தாள்.



ஒவ்வொருவராக சென்று பார்த்து விட்டு வந்தாலும் அவள் இருந்த இடத்திலிருந்து அசையாமல் இருந்ததுவே அவர்களை பதற்றத்திற்கு உள்ளாக்கி இருந்தது.



நெற்றியில் சின்ன அடியை தவிர வேறு ஏதும் ஆபத்தில்லை என்றதன் பின்னரே அனைவருக்கும் உயிர் வந்திருந்தது.



அனைவரையும் ஒரு முறை பார்த்து விட்டு அருகில் வந்தமர்ந்தாள் மது.



"அஷ்வினி....அத்தானுக்கு எதுவும் இல்ல...நல்லா தான் இருக்காங்க.... போய் ஒரு தடவ பாருங்க"



"...."



"ப்ளீஸ் ஒரு தடவ போய் பாத்துட்டு வாங்க" அவள் கெஞ்சிக் கொண்டிருக்கும் போதே சட்டென எழுந்தவள் விறுவிறுவென கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.



அவனும் தன்னவளைத் தான் எதிர்பார்த்திருப்பான் போலும்....



"கண்ணம்மா எ..." அடுத்த வார்த்தை பேசு முன் அவள் கை அவன் கண்ணத்தை பதம் பார்த்திருக்க அதிர்ந்து விழித்தான் அந்த ஆறடி ஆண் மகன்!!!



பத்ரகாளியாய் முறைத்துக் கொண்டு நின்றிருந்தவளின் கோபம் புரிய அவன் முகம் புன்னகையை தத்தெடுத்தது.



"சிரிக்காதடா.... உன் கிட்ட அன்னக்கே கேட்டேனா இல்லையா?"



"சாரி"



"யாருக்கு வேணும் உன் சாரி.... கதிர் அண்ணா கூப்டப்பவே போயிருக்கலாம்ல?"



"சாரிடா சாரி"



"அன்னக்கி ஜெய்ப்பூர் போனப்போ கூட வந்திருக்கு.... அத கூட சொல்ல முடில உன்னால"



"கண்ணம்மா சாரிடி"



"ஏன்டா இப்பிடி பண்ற?" கத்திக் கொண்டிருந்தவள் தொப்பென அமர்ந்து முகத்தை மூடிக் கொண்டு அழ சாய்ந்திருந்தவன் எழுந்து அவளை தொடப் போக அவன் கையை ஆவேசமாக தட்டி விட்டாள் பெண்.



அவள் செயலில் சிரித்தவன் இழுத்து தனக்கருகில் அமர வைக்க அவன் நெஞ்சில் சாய்ந்து கதறி அழுதவளை இறுக்க அணைத்தான்.



"நா ஏதோ சும்மா அப்பிடி தல வலின்னு நெனச்சிட்டேன்டி... மத்தபடி உன் கிட்ட மறைக்கனும்னு இல்லடா..... ப்ளீஸ் அழாத..... கஷ்டமா இருக்கு"



"என்ன விட்டு எங்கேயும் போயிடாதீங்க தேவ்.... என்னால தாங்கிக்க முடியாது...." மீண்டும் அழுதவளை எப்படி சமாதானப்படுத்தவென தெரியாமல் அப்படியே அணைத்தபடி அமர்ந்திருந்தான்.



"கண்ணம்மா அழாதடா..... அதான் எனக்கு ஒன்னில்லல்ல.. ஐ அம் ஆல்ரைட்...."



"டாக்டர் கிட்ட பேசிட்டேன்" விசும்பியவள் அவனை விட்டு விலகி கண்ணீரை துடைத்துக் கொண்டு பேசினாள்.



"ம்....என்ன சொன்னாங்க?"



"ஏற்கனவே ஒரு தடவ அடி பட்டதுனால இருக்கலாம்னு சொன்னாங்க..... ட்ரீட்மெண்ட் எடுத்தா பெட்டர்னும் சொன்னாங்க"



"வேற என்ன சொன்னாங்க?" சிரிப்பை அடக்கிக் கொண்டு அவளைப் போலவே சொல்லிக் காட்ட



"போடா....." சிணுங்கியவள் அவன் நெஞ்சில் குத்தினாள்.



"ஹாஹா...."



"சிரிக்காத" பல்லை கடித்தவளின் கண்ணம் ஏந்தி கண்ணீரை துடைத்து விட்டவன் நெற்றியில் இதழ் பதித்து விலகினான்.



"அஷு....."



"ம்...."



"ஐ லவ் யூ டி" அவன் கண்களில் தெரிந்த கரை காணா காதலில் ஆழ்ந்து போனவள் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.



இருவர் மௌனத்தையும் கலைக்கும் விதமாய் கதவு தட்டப்பட மோன நிலையிலிருந்து வெளி வந்தவன் உள்ளே வர அனுமதிக்க எழுந்து நின்றாள் அவனவள்.



"டாட்...." ஆரவ்வுடன் வந்திருந்தவன் இறங்கி ஓடிச்சென்று அவனருகே நிற்க தூக்கி எடுத்து மடியில் அமர்த்திக் கொண்டான்.



"ஹௌ ஆர் யூ டாட்?"



"அம் ஓகே டா கண்ணா"



"ம்.... வீட்டுக்கு போலாமா?"



"ஓகே ஓகே டா.... இதோ இப்போவே போலாம்" அவன் பேசிக் கொண்டிருக்க உள்ளே நுழைந்தார் டாக்டர் அர்ஜுன்.



"ஹலோ மிஸ்டர்.மாறன்"



"ஹலோ அங்கிள்"



"ஹௌ டூ யூ ஃபீல் நௌ?"



"பர்பெக்ட்"



"குட்.... மிஸஸ்.மாறன்"



"சொல்லுங்க டாக்டர்"



"உங்க கூட கொஞ்சம் பேச வேண்டி இருக்கு.... ஷல் வீ?"



"ஷூர்...." என்றவள் அவர் பின்னே நடக்க டிஸ்ஜார்ஜ் ஆவதற்கான பார்மாலிடீஸை ஆரவ்விடம் முடிக்க பனித்தான் தேவ்...
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"டேக் யூர் சீட்"



"தேங்க் யூ டாக்டர்... எனிதிங் சீரியஸ்?"



"இல்லமா.... பட்...."



"ப....பட்...."



"ரிலாக்ஸ்.... ஜஸ்ட் ஒரு இம்ப்ரூவ்மெண்டுக்கு தான்... மாறனுக்கு ஏற்கனவே கார் ரேஸிங்ல ஒரு தடவ அடிபட்டதுனால தான் அன்னக்கி லேசான அடில கூட அம்னீஷியா வந்திருக்கு.... இப்போவும் லேசான அடிதான்.... பட் அவர அதிகமா டென்ஷன் ஆக விடாதிங்க"



"ம்...."



"ஒர்க் டென்ஷனுக்கும் மேல அவருக்கு நெறய விஷயத்த நெனச்சி ஸ்ட்ரைன் பண்ணிக்கிறாரு.... மனச ரிலீஃபா வெச்சிக்க ஹெல்ப் பண்ணுங்க"



"ஷூர் டாக்டர்..."



"ம்...."



"டாக்டர்.... ட்ரீட்மெண்ட் எப்போ எடுக்கலாம்?"



"ம்....மன்த்லி செக் அப் ஒன்னு முடிச்சிட்டு டூ மன்த்ஸுக்கு ஒரு தடவ ட்ரீட்மெண்ட் கொடுக்கலாம்"



"ஓகே..."



"அவரு சீரியஸ் கன்டிஷனுக்கு போகாம இருக்கது உங்க கைல தான் இருக்கு மிஸஸ்.மாறன்"



"நா பாத்துக்குறேன் டாக்டர்....என் தேவ்கு எதுவும் ஆக நா விட மாட்டேன்...." அவள் செல்லவே ஆதூரமாய் புன்னகைத்தார் டாக்டர் அர்ஜுன்.



***



"கதிர்.... நா இப்போவே வர்றேன்" கதிரிடம் பேசி விட்டு துண்டித்தவன் இடிப்பில் கை வைத்து முறைத்துக் கொண்டிருந்த மனைவியை அப்போது தான் கண்டு கொண்டான்.



"என்னடா....?"



"எங்க போக போறீங்க?"



"அது.... சின்ன ஒர்க் அஷு.... ரொம்ப அர்ஜன்ட்...."



"என்ன ஒர்க்கா இருந்தாலும் வீட்ல இருந்தே பாருங்க...."



"ப்ளீஸ் டா...ப்ளீஸ் ஒரே ஒரு தடவ"



"நோ....நோ....நோ...."



"ப்ளீஸ் கண்ணம்மா.... என் செல்லம்ல.... ப்ளீஸ் டி"



"முடியவே முடியாது"



"வேணா ஆருவயும் கூட கூட்டிட்டு போய் வரட்டுமா?"



"...."



"அதான் ஆரு இருப்பான்ல.... என் போன் கூட அவன் கிட்டவே இருக்கட்டும்"



"ம்....பட்...."



"பட் இல்லடா... சரின்னு சொல்லு"



"ஓகே...." ஹப்பாடாவென மூச்சு விட்டவன் ஆரவ்வையும் அழைத்துக் கொண்டு ராகேஷ் இடம் நோக்கி சென்றான்.



***



"ஹரி...."



"...."



"ஹரிஷ்...டேய்...." மொபைலில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தவனை உலுக்கவும் சலேரென திரும்பினான் ரகு.



"என்னயா கூப்ட?"



"பின்ன....நீதானே இங்க ஹரிஷ்?"



"ஓஹ் எஸ்....அதுல உனக்கென்ன சந்தேகம்?"



"சந்தேகமெல்லாம் இல்லடா.... கூப்டேன் நீதான் திரும்பி பாக்கவே இல்ல"



'என் பேரு சொல்லி கூப்டிருந்தா தானே நான் திரும்புவேன் மரமண்ட'



"அதுவா...அது நா முக்கியமான நியூஸ் பாத்துட்டு இருந்தேனா... அதான் கவனிக்கல"



"ஓகே ஓகே லீவ் இட்.... அடுத்த ப்ளான் என்ன?"



"ப்ளானா....என்ன ப்ளான்?"



"ஏதாவது கழண்டு போச்சா உனக்கு.... என்ன ப்ளான்னு கேக்குற.... ராக்கிய காப்பாத்த வெச்சிருந்த ஐடியா எப்பிடியோ ப்ளாப் ஆகிடுச்சு.... வேற ஏதாவது தான் பண்ணனும்"



"ம்...."



"ராக்கி....இப்போ அந்த குடோன்ல தான் இருக்கான்னு காட்டுது.... பேசாம பாம் வெக்கலாமா?"



'ஒரு வேல இவ அரக்கர் வம்சமா இருப்பாளோ'



"டேய்...."



"ஹாங்...."



"என்ன ஆச்சு உனக்கு?"



"நத்திங்.... சொல்லு"



"அதான் கேட்டேனே பாம்....பாம் வெக்கலாமா?"



"ஊஹூம்.....அது கரெக்ட்டா வராது"



"ஏன்டா?"



"அவன எப்பிடி காப்பாத்துறது?"



"அவன காப்பாத்திட்டு வெடிக்க வைக்கலாமே?"



"அவன் ஏற்கனவே செத்து போயிட்டதா தான் இருக்கு.... இதுல மாட்டிகிட்டோம்னா அப்பறம் வெளியில வர்றது ரொம்ப கஷ்டம்"



"ம்....அப்போ என்ன பண்ணலாம்?"



"உனக்கு எப்பிடி அவன் எங்க இருக்கான்னு தெரியும்?"



"டேய்...உண்மையிலேயே உனக்கு மண்ட குழம்பி போய் தான் இருக்கு"



"ஏன்...ஏன்?"



"பின்ன.... நம்ம மூணு பேரும் தானே இந்த லொக்கேஷன் காட்ற பெண்ட்ரைவ் வந்த சங்கிலிய கழுத்துல மாட்னோம்..... அப்போ எப்படி தெரியாம போகும்?"



"அட ஆமா....நா மறந்தே பொய்ட்டேன் பாரேன் அனு"



"அதான் சொல்றேன்... உனக்கு கழண்டு போச்சு...."



"ஹி...."



"சரி நான் வேற ஏதாவது ப்ளான் யோசிக்கிறேன்.... லேட் ஆகிடுச்சு.... போய் படு" கொட்டாவி விட்டுக் கொண்டே எழுந்து சென்றவளை பார்த்து மர்மமாய் சிரித்தவன் எழுந்து கதவை பூட்டி விட்டு கதிருக்கு அழைத்து விடயத்தை சொல்ல அவன் ரிஷிக்கு சொல்லவும் தான் ராக்கேஷை பார்க்க கிளம்பி இருந்தனர் இருவரும்.....



***



"விஷு..."



"ம்..."



"விஷு என்ன கொஞ்சம் பாருங்க" தேவ் கேஸிற்காய் படித்துக் கொண்டிருந்தவன் குறிப்பெடுப்பதை நிறுத்தி விட்டு நிமிர்ந்து பார்த்தான்.



"என்ன யாழ்?"



"இல்ல சும்மா தான்"



"ப்ச்....முக்கியமான கேஸ் விஷயமா பாத்துட்டு இருக்கேன்..... ஏன்மா டிஸ்டர்ப் பண்ற?"



"ஏன் விஷு..... உங்களுக்கு கோபமே வராதா?" என்றவளை பார்த்து சிரித்தவன் மீண்டும் வேலையில் மூழ்கத் திரும்ப மீண்டும் முதுகை கையால் சுரண்டினாள்.



"என்னமா என்ன பிரச்சனை?"



"குட் நியூஸ்...."



"சொல்லு"



"ரித்து கர்பமா இருக்கா"



"ம்...கங்க்ராட்ஸ்... நா அப்பறமா பேசறேன்" மீண்டும் திரும்ப மீண்டுமே சுரண்டினாள்.



"ப்ச்....என்ன யாழ்.... என்ன விஷயமா இருந்தாலும் அப்பறமா பேசலாம்... என்ன டிஸ்டர்ப் பண்ணாம போ" சற்றே கோபம் எட்டிப் பார்த்தது குரலில்....



"சாரி...." வேகமாய் எழுந்து சென்றவளை சமாதானப்படுத்த தோன்றினாலும் நண்பனே முக்கியமாய் பட வேலையில் மூழ்கினான்.



***



ரிஷியிடம் பேசி விட்டு வெளியே வந்தவனுடன் மோதி நின்றவள் விழுந்து விடாமல் அவன் ஷர்ட்டை இறுக்கப் பற்றிக் கொண்டாள்.



ஹாஸ்பிடலிலிருந்து அனைவரும் வீட்டுக்கு சென்றிருக்க இருவரும் ஆபிஸ் வந்திருந்தனர் வேலை காரணமாக...



வேலையை முடித்து விட்டு எழுந்தவள் அவன் கேபினில் பல்ப் எரியவும் அவன் கதவில் கைவைக்கப் போக அவன் திறந்ததில் அவனில் மோதி நின்றிருந்தாள்.



அவள் விழுந்து விடாமலிருக்க இடை பற்றி நிறுத்தியவன் அவளை விட்டு விலகி நின்றான்.



"வொய் மது....?"



"ந...ந...நத்திங் சும்மா தான்"



"ம்....வீட்டுக்கு கிளம்பல?"



"அதுக்காக தான் வெளியில வந்தேன்.... உ...உங்க கேபின் பல்ப் எரிஞ்சுது.... அதான் சும்மா பாக்கலாம்னு...."



"எனக்கு முக்கியமான வேல ஒன்னு இருக்கு நா கெளம்புறேன்" அவள் பதிலை எதிர்பாராமல் நடந்தவனை நிறுத்தினாள் பெண்.



"கதிர்...." திரும்பிப் பார்க்காமல் என்னவென்பது போல் நிற்க அவனருகில் வந்தாள்.



"க...க...கதிர் உங்க கிட்ட ஒன்னு கேக்கலாமா?"



"ம்...."



"இ...இல்ல...வந்து எ....என்ன..." அவள் சொல்லு முன் அவன் இதயம் வேகமாக அதிர இடையில் நிறுத்தினான்.



"மது.... நீ வேற நல்ல பையனா பாத்து கல்யாணம் பண்ணிகிட்டா நல்லா இருப்ப...."



"இ...இல்ல... நா"



"ப்ளீஸ்.... என்ன கில்டியா பீல் பண்ண வைக்காத.... நா ஒருத்திய இன்னும் லவ் பண்ணிட்டு தான் இருக்கேன்.... என் மனைவி.... அவ பக்கத்துல இல்லன்னாலும் அவ நினைவுகளோட வாழ்ந்துடுவேன்.... ஸோ ப்ளீஸ்....உனக்கு நல்ல ப்யூச்சர் இருக்கு மது..... என் மேல உனக்கு காதல் இல்லன்னு உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும்.... பின்ன எதுக்கு கல்யாணம் பண்ணிக்கனும்னு நெனக்கிற?"



"உ...உங்க கூட இருக்கனும்னு நெனக்கிறேன் கதிர்"



"இருக்கலாம்.... ஆஸ் அ கலீக்கா ( உடன் வேலை செய்பவர்) அஸ் அ ப்ரண்டா.... பட் இதுக்கு மேரேஜ் தான் முடிவு இல்ல"



"...."



"மது....மறுபடி சொல்றேன்.... நான் என் மனைவிக்கும் மகளுக்கும் மட்டும் தான் என் மனசுல இடம் கொடுத்திருக்கேன்... உன் மனச கஷ்டப்படுத்த நா இத சொல்லல.... சாரி... உனக்காக ஒருத்தன் வருவான்.... மனச போட்டு குழப்பிக்காத.... பய்... டேக் கேர்" அவளை திரும்பியும் பாராமல் சென்றவனின் உருவம் கண்ணீரில் மங்களாக தூரத்தே தெரிந்தது.



***



ரிஷியும் ஆரவ்வும் ஏற்கெனவே வந்து விட்டிருக்க உள்ளே நுழைந்தான் கதிர்.



எப்போதுமே அமைதியாய் இருக்கும் அவன் முகத்தில் குழப்ப ரேகைகள் ஓடுவதை கண்டு புருவம் நெறித்து விட்டு பேண்ட் பாக்கெட்டில் கைகளை விட்டபடி ராகேஷ் முன் நின்றான் ரிஷி.



அவன் கண்களில் எப்போதுமிருக்கும் திமிர் இல்லாமல் போய் முகம் முழுதும் பயம் அப்பிக் கிடக்க தடதடக்கும் நெஞ்சத்தோடு ரிஷியை நிமிர்ந்து பார்த்தான் ராகேஷ்.



"இது...இது தான் வேணும் எனக்கு... என் கேரக்கடர வெச்சி துரோகம் பண்ண நீ இப்போ என் கேரக்கடர வெச்சே பயப்பட்ற பாத்தியா.... அதுல இருக்க கிக்கே தனி ராகேஷ் கண்ணா"



"எ...என்ன ஒன்னும் பண்ணிடாத ஆர்.கே.... ப்ளீஸ் நீ என்ன சொன்னாலும் செய்றேன்"



"ஈஸிட்?"



"ஆ...ஆமா... நீ என்ன சொன்னாலும் பண்றேன்"



"ஓகே...."



"சொ...சொ...சொல்லு பண்றேன்"



"செத்துடு" அதிர்ந்து விழித்தான் அவன்.



"என்ன.... சத்தத்தயே காணோம்...."



"ப்ளீஸ்...."



"நோ.... நீ இருந்து எந்த யூஸும் இல்ல... நீ செத்துட்டதா ரிப்போர்ட் வேற இருக்கு.... ஸோ நீ இன்னிக்கு சாவு"



"...."



"கதிர்...." கையை நீட்ட பிஸ்டல் துப்பிக்கி வைக்கப்பட்டது.



வியர்த்து வழிய மரண பயம் கண்களில் அப்பட்டமாய் தெரியவே கெஞ்சினான் அவன்....



"ப்ளீஸ்...என்ன விட்டுடு...ப்ளீஸ்.... நா இனிமே உன் பக்கமே வர மாட்டேன்.. சொம்துக்காக தான் இவ்வளவு பண்ணேன்... இனி பண்ண மாட்டேன் ப்ளீஸ் " துப்பாக்கியை எடுத்து அவன் நெஞ்சில் தவழ்ந்து கொண்டிருந்த சங்கிலியை அதனால் தூக்கி எடுத்தவன் இடது கையால் அதை பிய்த்து எடுத்தான்.



"உன் பொண்டாட்டி என் நண்பன் கிட்ட எல்லாதயும் சந்தேகமே இல்லாம சொல்லிட்றா பாறேன்" ஏளனம் வழிந்தது அவன் குரலில்....



"ப்ளீஸ்...விட்டுடு ஆர்.கே..."



"ஆரவ்....இத செக் பண்ணு" சங்கிலியை தம்பியின் கைகளில் கொடுத்தவன் பிஸ்டல் துப்பாக்கியை எடுத்து அவன் நெஞ்சில் வைத்தான்.



"நா எப்பவும் உனக்கு துரோகம் பண்ண நெனச்சதில்ல ராக்கி..... உன்ன நா எப்போவோ மன்னிச்சுட்டேன்.... ஈவன் என்ன ஆக்ஸிடன்ட் பண்ணதுல கூட எனக்கு கோபம் இல்ல பட் நீ எப்போ பெண் ஆர்கன் கடத்தல் கேஸ்ல இன்வால்வ் ஆகினியோ அதுல உன்ன....உன்ன நீ இந்த உலகத்துக்கு தகுதியானவன் இல்லன்னு முடிவு பண்ணிட்டேன்.... நான் கெட்டவன் தான்....ஆனா.... ஒரு அண்ணனா பெண்கள் விஷயத்துல நான் பக்கா நல்லவன்டா... ஸோ.... நீ நாசம் பண்ணி கெடுத்த பெண்களுக்காக ஒரு அண்ணனா இது நா வாங்கிக் கொடுக்குற தண்டன" தலை ஒரு பக்கம் சரியவும் தான் அண்ணன் கையிலிருந்த பிஸ்டல் துப்பாக்கியின் புல்லட் நெஞ்சில் பாய்ந்திருந்தது தெரிந்தது.



இறந்தவனை வெறித்துப் பார்த்தவனின் கண்கள் கலங்கி சிவந்திருந்தன.



அவன் துரோகம் நினைத்திருக்கலாம் ஆனால் அவன் நினைக்க வில்லையே....



என்ன தான் நடந்திருந்தாலும் மனதிற்கு நெருக்கமானவன்!!!



அவன் ஷர்ட் காலரை அருகில் இழுத்து முகத்தை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தவன் அடுத்த நிமிடம் உதறித்தள்ளி விட்டு எழுந்தான்.



"ஆரவ்....அவன் பெண்ட்ரைவ்வ செக் பண்ணு.... அதுல நிச்சயமா எனக்கு வேண்டியது இருக்கும்.... இருக்கணும்" இயந்திரமாய் வார்த்தைகளை உதிர்த்தவன் கதிரிடம் திரும்பினான்.



"சா...ர்" நடந்த அதிர்ச்சியிலிருந்து அப்போது தான் சற்று கலைத்திருந்தான்.



"க்கும்....உன் கிட்ட கொஞ்சம் பேசணும்" எப்படித் தான் தன்னை நிமிடத்திற்குள் மீட்டெடுத்தானோ!!!



"எ...என்ன சார் பேசனும்?"



"வீட்டுக்கு வர்றியா எங்க கூட?"



"சார்....வந்து...நா... நாளைக்கு பே....பேசலாமா?"



"ம்...." தாடையை தடவியவன்



"இட்ஸ் ஓகே...நீ போ..." என்றான் உடனே....



"சாரி சார்"



"இட்ஸ் ஓகே..."



"ஆரவ்...."



"ணா...."



"சரக்கடிக்கலாமா?"



"அண்ணா...." அதிர்ந்து போனவனுக்கு வார்த்தைகள் வெளிவர மறுக்க பாவமாய் கதிரை ஏறிட்டான்.



"சார் இப்போ வேணாம் சார்"



"நோ...."



"சார் ப்ளீஸ்...."



"நோடா ஐ நீட்.... இல்லன்னா என் மனசு...." அப்படியே நிறுத்தி விட ஆரவ் கையிலிருந்த மொபைல் சிணுங்கவும் அடண்ட் செய்து விட்டு பேசாமல் இருந்து விட்டான்.



அண்ணனுக்கான ஒரே வழி நண்பி மட்டும் தான்!!!



"சார் இப்போ என்ன ஆகிடுச்சு.... தூங்கி எந்திரிச்சா சரியாகிடும்.... வாங்க சார் வீட்டுக்கு போலாம்" அங்கு ஒருத்தி கேட்டுக் கொண்டிருக்கிறாள் என தெரியாமல் அவர்கள் சம்பாஷனை தொடர்ந்தது.



"நோ ஐ நீட்.... எனக்கு இப்போ சரக்கடிச்சே ஆகனும்" மறுமுனையில் கேட்டுக் கொண்டிருந்தவள் அதிர்ந்து போய் கத்தினாள்.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"தேவ்...."



"ப்ளீஸ் ஆரவ்...."



"தேஏஏஏவ்..."



"அவன் ஏன்டா இப்பிடி பண்ணான்?" கண்கலங்க கேட்டவனை பார்க்கவும் தான் அவன் மனநிலை புரிந்தது இருவருக்கும்....



உயிர் நண்பன்!!!



"ணா நாம வீட்டுக்கு போலாம்"



"நோ ஐ காண்ட்...." உறுதியாக மறுக்க ஸ்பீக்கரை ஆன் பண்ணி விட்டான்.



"தேவ்...." அவள் அழைப்பில் அதிர்ந்து போனவன் சுற்று முற்றும் பார்த்துவிட்டு ஆரவ்வை முறைத்தான்.



"தேவ் வீட்டுக்கு வாங்க பேசிக்கலாம்" அவன் மதிலை எதிர்பாராமல் வைத்து விட்டாள்.



மண்டை காய்ந்தது அவனுக்கு....



இருவரையும் கூர்ந்து பார்த்தவன் அவர்கள் சுதாரிப்பதற்குள் காரை கிளப்பி செல்ல உறைந்து நின்றிருந்த ஆரவ்வை இழுத்துக் கொண்டு ஓடினான் கதிர்.



***



ஹாலில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள் பாவை...



நள்ளிரவு இரண்டு மணியை தாண்டிக் கொண்டிருந்தது.



கணவனையும் நண்பனையும் அழைத்து கலைத்துப் போனவளுக்கு மனம் உலைக்கலமாக கொதித்தது.



திடீரென அடிக்கப்பட்ட காலிங் பெல் சத்தத்தில் ஓடிப் போய் கதவை திறந்தவள் கணவனை தாங்கிப் பிடித்தபடி வந்த நண்பனை கொலைவெறியுடன் முறைத்தாள்.



"சாரி அஷ்வி.... அண்ணா திடீர்னு கார் எடுத்து கிட்டு போய்ட்டாங்க.... என்ன பண்றதுன்னே தெரில.... நாங்க போறதுகுள்ள அவங்க எண்டராகி குடிச்சிட்டாங்க"



"ச்சேஹ்...போடா..." என்றவள் மறுபக்கம் வந்து அவன் கையை தன் தோள் மீது சுற்றிப் போட்டாள்.



"என்னாச்சு?"



"அ...அது...அது... வந்து அண்ணா.... ராகேஷ போட்டுட்டாங்க"



"வாட்...என்னடா சொல்ற....அவன் தான் ஏற்கனவே செத்துட்டானே"



"அது ரூமர்"



"வாட்..."



"அண்ணா கஸ்டடிக்கு எடுக்கறதுக்காக நா என்கவுண்டர்ல போட்டதா சீன் க்ரியேட் பண்ணோம்"



"என்னடா சொல்ற?" நடந்ததை ஜீரணிக்கவே முடியவில்லை அவளால்....



பேசிக் கொண்டே மாடி ஏறியவர்கள் அவனை கட்டிலில் படுக்க வைத்து விட்டு நிமிரவும் தான் அவள் கேட்டிருந்தாள்.



"ட்ரூ அஷ்வி....அண்ணா ராகேஷால ரொம்ப டிஸபாயின்ட் ஆகிட்டாங்க...."



"ஏன்?"



"அவங்க ரொம்ப நம்புன ஆள் அவன்.... அவன் துரோகம் செஞ்சப்போவும் இப்பிடி தான் இருந்தாங்க...இப்போ அவங்க கையாலேயே கொண்ணுட்டாங்கல்ல.... அதனால அது அவங்கள டிஸ்டர்ப் ஆக்கி இருக்கு... அவன் மெமரீஸ தனக்குள்ள பொதச்சிக்க தான் ட்ரீங்க் பண்ணி இருக்கனும்.... ஐ கெஸ்....சாரிடி"



"பரவாயில்ல நீ போ... நா பாத்துக்குறேன்" அவன் செல்லவே அவன் ஷூவை கலற்றி வைத்தவள் போர்வையை கழுத்து வரை இழுத்து விட்டு நிமிர அவளை போகாமல் கையை இறுக்கப் பற்றிக் கொண்டு புலம்பினான் அவன்.



அவன் நிலையில் அவனை விட்டு விலக முடியாமல் அவன் தலை மாட்டில் அமர்ந்தவள் அவன் தலையை எடுத்து தன் மடிமீது சாய்த்தாள்.



"ஏன் இப்பிடி ஆச்சு ஆரு....அவன ரொம்ப நம்பினேன்டா நான்... கடைசியில... க....கடைசியில.... எ... என் கை.... கையாலேயே கொல்ல வெச்சிட்டானே பாவி"



"ஷ்...தேவ் எதுவுமில்ல....எதுவுமில்ல எல்லாம் சரியாகிடும்.... தூங்குங்க" தலைகோதி நெற்றியில் முத்தமிட்டாள்.



"அ...அஷூ....அஷூ..."



"என்ன தேவ்..."



"எங்கேயும் போயிடாத.... எனக்கு நீ வேணும் கண்ணம்மா.... என்ன விட்டு போயிடாத...."



"நா எங்கேயும் போகல தேவ்.... எப்போதும் உங்க கூடவே தான் இருப்பேன்" அவன் கைகள் அவள் வயிற்றை வளைத்து அணைத்தன.



"எப்போவும் இருப்பல்ல?"



"எஸ் தேவ்.... நா உங்கள விட்டு எங்கேயும் போக மாட்டேன்.... ஐ ப்ராமிஸ்"



"அப்போ ஏன்டி அன்னக்கி என் கூட இருக்கல நீ?"



"எ...எப்போ தேவ்?"



"அ...அன்னக்கி ராக்கி அப்பிடி செஞ்சப்போ?"



இதற்கு என்னவென்று கூற...



அப்போது இப்படி ஒருவன் இருக்கிறானா என்பதே தெரியாதே அவளுக்கு....



"சொல்லு....எங்க போன என்ன விட்டு... நீ பொய் சொல்ற... உனக்கு என்ன பிடிக்கல?"



"தேவ்....அப்பிடில்லாம் இல்ல"



"அப்போ ஏன் என் கூட இருக்கலன்னு சொல்லுடி.... எனக்குன்னு யாருமே இல்ல.... உனக்கு என்ன பிடிக்கல"



"இல்ல தெவ்....."



"மறுபடி பொய் சொல்லாத.... என்ன பாக்கவே பிடிக்கலன்னு உன்ன விட்டு தூரமா போக சொன்னல்ல?"



அவளுக்கு புரிந்தது அவன் நினைவுகள் அந்த ஆறு வருடத்தில் சிக்கிக் கொண்டிருப்பது....



அவள் வேண்டுமென்று அப்படி கூறவில்லையே....



உண்மை தெரியும் முன் விட்ட வார்த்தை உண்மை தெரிந்த போது அவனை விலக்கி இருந்தது.



"சாரி"



"எனக்கு துரோகம் பண்ணிட்டான்டி அவன்..... சொத்து தான் முக்கியமா போச்சா அவனுக்கு?"



அவன் மாறி மாறி புலம்பிக் கொண்டிருக்க முதுகை ஆதரவாய் தட்டிக் கொடுத்தவள் பேசாமல் அமர்ந்திருந்தாள்.



***



காலை.....



தலையை அழுத்தப் பற்றியவாறு எழுந்தமர்ந்தான் ரிஷி.



தான் எங்கிருக்கிறோம் என்ற சந்தேகம் வேறு....



சுற்றிப் பார்த்தான் தங்கள் அறை....



ஆனால் எப்படி???



முன்னால் க்ளாஸ் நீட்டப்பட நிமிர்ந்து பார்த்தான்.



கையில் லேமன் ஜூஸுடன் நின்றிருந்த மனைவியை பார்க்த் தயங்கி எதுவும் பேசாமல் எடுத்து குடித்து விட்டு குளியலறை செல்ல ஒரு பெரு மூச்சுடன் கீழே இறங்கிச் சென்றாள் பாவை....



"மாம்.....மாம்...." ஆரவ்வுடன் உள்ளே நுழைந்தவன் கத்தி ஆர்ப்பரித்தான்.



"என்னடா?"



"இன்னிக்கு சன்டே"



"அட ஆமால்ல.... அப்போ யாதுக்கு நோ ஸ்கூல்..."



"எஸ்...ஹெ...." துள்ளிக் குதித்தவன் மித்ராவுடன் கீழே இறங்கி வந்த கயலிடம் ஓடினான்.



"சித்தி...."



"மெதுவாடா...."



"என்கிட்ட மித்துவ கொடுங்க"



"நோ யாது அவ குழந்தை"



"விடு அஷ்வி" நண்பியை தடுத்தவன் அவனை சோபாவில் அமர வைத்து தன் ஒரு வயது மகளை அவன் மடியில் அமர்த்தினான்.



"ஐ....அழகா இருக்கா சித்து" அவன் துள்ளலை மூவரும் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருக்க கீழே இறங்கி வந்தான் தேவ்.



"வாணா..." ஆரவ்வின் குரலில் நிமிர்ந்து பார்த்தவள் பாராதது போல் திரும்பிக் கொள்ள அவளையே பார்த்தவன் எதுவும் பேசாமல் ஹாலுக்கு வரவும்



"ஹாய் காய்ஸ்...." என்றபடி ஜீவா டிராக் சூட்டுடன் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.



"வாங்க ஜீவா...." என்றவள் அவ்விடம் விட்டகல தன்னவள் பின்னாலேயே சமயலறைக்குள் நுழைந்தவன்



"சாரி" என்றான் பெரும் தயக்கத்துடன்....



"எதுக்கு சாரி?"



"ஆரு...." அவனை கண்டு கொள்ளாமல் மீண்டும் ஹாலுக்கு சென்றவள் கையிலிருந்த காபியை அனைவருக்கும் கொடுக்க அவன் பிடிவாதமாய் அங்கேயே நிற்பது கண்டு பெரு மூச்சு விட்டவள் அவனருகே சென்றாள்.



"காபி...." அவள் நீட்ட அதை எடுத்து சமயலறை மேடை மேல் வைத்தவன் திரும்ப எத்தனித்தவளின் கை பற்றினான்.



"சாரிடி"



"அதான் எதுக்குன்னு கேட்டேனே?"



"ட்ரிங் பண்ணதுக்கு"



"அது உங்க இஷ்டம்..."



"ப்ச்...நா ஏதோ" அவன் சொல்ல வருவது கேட்காமல் கையை விடுவித்துக் கொண்டு சென்று விட தானும் வெளியே வந்தான்.



"கயு.... ஆராவயும் இங்கேயே கூட்டிட்டு வா" எல்லோரும் ஹாலில் இருக்கவும் தங்கையை ஏவினாள் தமக்கை....



"ஓகே அஷ்வி.... இதோ வந்தட்றேன் இரு...." எழுந்து சென்று அழைத்து வர



"ஆரு நீ மதுவ அழச்சிட்டு வா..." என்ற நண்பியை முறைத்தான் ஆரவ்...



"அண்ணிய எதுக்குடா முறைக்குற.... உன் அத்தை மகள் ரத்தினத்தை கையோட போய் அழச்சிட்டு வா....." வாய் பொத்தி சிரித்து விட்டு அஷ்வினியின் பக்கத்தில் வந்தமர்ந்தாள் ஆராதனா.



"அதானே..... அத்த பொண்ண போய் கூட்டிட்டு வாடா" மனைவியும் அமர்ந்து கொண்டு அவர்கள் இருவருக்கும் ஒத்து ஊத அண்ணனை பார்த்தான் அவன்....



தங்கை சிரிப்பில் இறுக்கம் தளர்ந்திருந்தவன்



"என்ன எதுக்கு பாக்குற.... அதான் ஒன்னு கூடி முடிவு சொல்லிட்டாங்கல்ல... போ..." என்றான் இரக்கமே இல்லாமல்.....



"ணா.... நீயுமா?" பல்லை கடித்தவன் மூன்று பெண்களையும் முறைத்தான்.



"ஆரு போடா...." ஆரா மீண்டும் சொல்ல அவளிடம் ஹை-பை போட்டாள் அஷ்வினி.



"முடியாது"



"ஏன் முடியாது?" இடையிட்ட மனைவியை முறைத்தவன் எதுவுமே அறியாமல் குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்த யாதவ்விடமே சரணடைந்தான்.



"யாது...."



"என்ன சித்து"



"போயி மதுவ அழச்சிட்டு வாடா"



"ஓஹ் வெயிட் சித்து.... மித்துவ பிடிங்க" அவன் பதிலுக்காகவே காத்திருந்தவன் போல் பாய்ந்து தூக்கியவன்



"போ...." என்றான் அவசரமாக....

எழுந்து சென்றவனை தடுத்து நிறுத்தினாள் தாய்...



"யாதவ்...."



"என்ன மாம்?"



"அவன எதுக்குடி கூப்புட்ற?" நண்பியிடம் பாய்ந்தான் ஆரவ்.



"இங்க வா கண்ணா"



"என்ன மாம்...."



"நீ போக தேவயில்ல... உன் அப்பாவ அனுப்பு.... அவரு தான் சும்மா இருக்காரு" என்றாள் தன்னவனை கடை கண்ணால் பார்த்தபடி....



"ஓகே மாம்.... டாட்... நீங்க போங்க" என்றான் தந்தையிடம்....



அதில் அனைவரும் சிரிக்க



"என்னதூ....நானா?" அலறியே விட்டான் ரிஷி.



"அண்ணா போயி கூட்டி கிட்டு வர்றதுல என்ன இருக்கு.... போங்க" தங்கை வார்த்தையை தட்ட முடியாமல் எழுந்தவன் கூரையில் பார்வை பதித்திருந்த மனைவியை முறைத்து விட்டு மித்ராவை கயலிடம் கொடுத்து விட்டு அப்போது தான் நிமிர்ந்த தம்பியின் கையை பிடித்து இழுத்தான்.



"ணா.... நா வர்ல நீ போ"



"உன்னால தான் எல்லாமே.... வாடா" கழுத்தை சுற்றி கையை இறுக்கி இழுத்துக் கொண்டு சென்றவனை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தனர் அனைவரும்....



.....



"ணா.... உனக்கு ஏன் என் மேல காண்டு?"



"பின்ன.... நீயே போயிருக்க வேண்டியது தானே?"



"ஏன் நீ போ"



"முதல்ல உன் கிட்ட தானே சொன்னாங்க"



"அ...அ...ஆமா... அதுக்கு?"



"மூடி கிட்டு கதவ தட்டு" கழுத்திலிருந்த கையை இறுக்க



"டேய் எரும விடுடா... சரியான முரடனா இருக்க...." திமிறிய தம்பியை பார்த்து சிரித்தவன் தட்டுமாறு கண்களால் சைகை காட்டினான்.



"ஏன் நீ தட்ட வேண்டியது?"



"அட சும்மா தட்டுடா"



"இரு.... முதல்ல விடு என்ன" சிரித்துக் கொண்டே விடவும் கசங்கி இருந்த டீ-ஷர்ட்டை இழுத்து விட்டவன் கதவில் கை வைக்கப் போக திறந்தது கதவு....



அதிர்ந்து விலகியவர்கள் பார்வையை திருப்ப திருதிருவென விழித்தாள் பெண்....



"அ...அத்தான்...."



"க்கும்...." தொண்டையை சரி செய்தவன் தம்பியிடம் பேசுமாறு கண் காட்ட அவன் தான் தலையை திருப்பவே இல்லையே....



"என்னத்தான்?"



"அ...அ....அது....க்கும்.... அது வந்து உன்ன ஹா...லுக்கு வர சொல்றாங்க"



"யாரு?"



"ஆ...ஆ..ஆரா... ஆரா"



"போலாம் அத்தான்" ரிஷி தன்னிடம் பேசியதில் அப்படி ஒரு சந்தோஷம் அவளுக்கு....



"நீ முன்னாடி போ நாங்க வந்தட்றோம்"

அவள் செல்ல அடிக்க கையோங்கிய அண்ணனை தள்ளி விட்டு ஓடினான் ஆரவ்.



.....



ஹாலில் இருந்த அனைவரும் ஒருவரை ஒருவர் கலாய்த்தபடி இருக்க அவன் பார்வை மட்டும் தன்னவளையே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.



ஒரு தடவை கூட திரும்பினாளில்லை அவன் புறம்....



"மாம்... மித்துவ போல எனக்கு தங்கச்சி பாப்பா வேணும்" அவன் பேச்சில் அதிர்ந்தவளுக்கு அனைவர் முகத்தை பார்க்கவே சங்கடமாய் இருக்க தலை குனிந்தவளை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்தான் அவளவன்.



"யாது இங்க வா.... நாம மொபைல் கேம் விளையாடலாம்" அவனை தன் புறம் இழுத்தெடுத்த ஜீவாவிற்கு மானசீகமாய் நன்றி சொன்னவள் அனைவரையும் நிமிர்ந்து முறைத்தாள்....



"தாத்தா"



"ராட்சஸி.... என் கூட பேசாத.... என்ன எதுக்கு கூப்புட்ற?"



"மது ஆருக்கு உன் கிட்ட பேசனுமாம்... என்னன்னு கேளு" நன்றாக மாட்டி விட்டவள் ஜீவாவின் அருகில் சென்றமர புருவம் சுருக்கி தன்னவளை பார்த்தவன் சட்டென எழுந்து சென்று அவளை இழுத்து விட்டு அவன் அமர்ந்து கொள்ள மெல்ல சிரித்தான் ஜீவா.



"எந்திரிங்க"



"போடி"



"நான் ஜீவா பக்கத்துல தான் உட்காருவேன்... எந்திரிங்க...." அவள் வார்த்தைகளில் சுள்ளென எழுந்த கோபத்தை பல்லை கடித்து அடக்கியவன் இழுத்து பக்கத்தில் அமர்த்தி இடையை அழுத்த கப்பென வாயை மூடிக் கொண்டு நெளிந்தாள் பெண்.



"அவன் பக்கத்துல உட்காரணுமா.... கடுப்பேத்துறியா?"



"எடுங்க கைய.... என்ன பண்றீங்க... எல்லோரும் இருக்காங்க"



"எவன் இருந்தா எனக்கென்னடி.... என் பொண்டாட்டி.... நா புடிச்சிருக்கேன்"



"ப்ச்...ப்ளீஸ் எடுங்க கைய"



"ஊஹூம்.... எடுங்க கைய தேவ் ஆர் மாமான்னு சொல்லு விட்டுட்றேன்"



"எடுங்க...." பல்லை கடித்தாள் பாவை....



"என் முகத்த கூட பாக்க மாட்டல நீ.... இப்படியே இரு"



"ஆரா...." திடீரென அவள் கத்த திடுக்கிட்டு திரும்பிய அந்த கேப்பில் சட்டென எழுந்தவள் அவனை வெற்றிப் பார்வை பார்த்து விட்டு ஆராதனா அருகில் போய் அமர்ந்தாள்.



"அண்ணி.... அண்ணா கூட நீங்க ரொமான்ஸ் பண்றதுல எங்களுக்கு ஆப்ஜக்ஷன் இல்ல" காதில் கிசுகிசுக்க செவ்வானமாய் சிவந்து போனாள் காரிகை....



"அட.... அண்ணிக்கு வெக்கமெல்லாம் வருது"



"சும்மா இரு ஆரா..."



"அண்ணி.... நீங்க வெக்கப்படும் போது ரொம்ப கியூட்டா இருக்கீங்க"



"ப்ளீஸ்...." கண்களால் கெஞ்சவும் கலகலத்து சிரித்தாள் பெண்.



"உங்க கூட இருந்தா சிரிச்சு கிட்டே இருக்கலாம் அண்ணி" உணர்ந்து சொன்னவளிடம்



"நீ முதல்ல அண்ணின்னு கூப்புட்றத நிறுத்து" என்றாள் சலுகையுடன்....



"மரியாத தர்றது ஒரு குத்தமா?"



"அதுக்காக.... நான் ஆருவ விட இரண்டு மாசம் சின்னவளும் கூட..."



"ஓகே ஓகே.... அதுக்கு ஏன் மூஞ்ச தூக்கி வெச்சிக்குறீங்க.... நான் சொல்லல போதுமா.... சிரிங்க" அவள் கையால் வாய் ஓரத்தை இழுத்து விட ரசித்து சிரித்தவளை பார்த்து தானும் சிரித்தாள் ஆராதனா.



.....



"ஏன் ப்ரோ.... உங்களுக்கு என் மேல கோபம் தானே?" காதிற்கருகில் குனிந்து கேட்ட ஜீவாவிடம்



"ஏன்?" என்றான் மொட்டையாய்....



"பின்ன.... உங்க பொண்டாட்டி என் பக்கத்துல வந்து இருந்ததுக்காக தானே இழுத்து விட்டு என் பக்கத்துல நீங்க உக்காந்திருக்கீங்க?"



"அப்படில்லாம் எதுவுமில்ல நீ மூடு" வாயை அடைத்தவனின் பார்வை தங்கையுடன் பேசிக் கொண்டிருந்தவளையே மொய்த்தன.



"க்கூம்....நாங்களும் இங்கே தான் இருக்கோம்"



"நீ வேணா பாரு.... என்ன ஏன் தடுக்குற?"



"இருந்தாலும் அஷ்வி ரொம்ப க்யூட்ல?"



"டேய் நா உன் காதலிய தான் பாருன்னு சொன்னேன்.... நீ ஏன் என் பொண்டாட்டிய பாக்குற?" திரும்பி முறைக்க அவன் வாய் விட்டுச் சிரித்ததில் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கயல் பக்கத்தில் அமர்ந்திருந்த ஆரவ்வின் பார்வை இவர்கள் புறம் பாய்ந்தது.



"ஆரவ் என் கூட கோபமா இருக்கான்ணா"



"அவன் வீம்பு புடிச்சி கிட்டு இருக்கான்... ஈகோ ஜாஸ்தி... சீக்கிரமா பேசுவான்... பயப்படாத...."



"ம்...."



"இப்போ நமக்கு ரெண்டு பேருக்கும் நடுவுல வந்து இருப்பான் பாரு" ரிஷி முணுமுணுக்க சட்டென எழுந்து வந்து அண்ணனுக்கும் ஜீவாவிற்கும் இடையில் அமர்ந்தான் ஆரவ்.



.....



"மது.... என் பக்கத்துல வந்து உட்காரு" மித்ராவுடன் ஐக்கியமாகி இருந்த மதுவை அழைத்தாள் அஷ்வினியை பார்த்து சிரித்தவள் பக்கத்தில் வந்தமர ஆராவின் பக்கத்தில் வந்தமர்ந்தாள் கயல்...



ஆண்கள் அனைவரும் ஒரு பக்கமும் பெண்கள் அனைவரும் ஒரு பக்கமும் அமர்ந்திருக்க அவர்களை கலைத்து தன் புறம் திருப்பினான் நடுவில் வந்து நின்ற யாதவ்.



"மாம்...." அவன் கத்தியதில் தமக்குள் பேசிக் கொண்டிருந்தவர்கள் அவனை திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தனர்.



"யாதவ்.... எதுக்கு கத்துற?" ரிஷி குரல் உயர்த்தவே



"அண்ணா அவன் கிட்ட ஏன் கண்டிப்பு காட்ற?" அடக்கினாள் தங்கை....



"இல்லமா...."



"நீ இரு.... யாது இங்கே வாடா..."



"ஊஹூம் மாம்...." சென்று அவள் மடியில் ஏறி அமர்ந்தவன் அவள் கழுத்தில் முகம் புதைக்க அவன் முதுகை தடவினாள் தாய்....



"யாது குட்டி எதுக்கு அம்மாவ கூப்டாங்க?"



"டாட் பீச்சுக்கு கூட்டிட்டு போறன்னு சொன்னாரு"



"அவங்களுக்கு வேல இல்ல.... நாம இன்னொரு நாள் போலாமா?"



"ம்..."



"அப்போ.... யாது குட்டி இப்போ சிரிங்க" வயிற்றில் கிச்சு கிட்சு முட்ட துள்ளி விலகி ஓடினான் யாதவ்.



"அஷ்வி ரொம்ப பசிக்குது.... இப்பிடியே உக்காந்தூட்ருக்க ஐடியாவா?" கயல் கேட்க



"அட ஆமா... சரி வா நாம போய் அத பாக்கலாம்"



"இருங்க அஷ்வி நாங்களும் வர்றோம்" கோரஸாக சொல்லிக் கொண்டு எழுந்தனர் ஆராவும் மதுவும்.



......



"ஆரு..."



"என்னணா?"



"பெண்ட்ரைவ் செக் பண்ணிட்டியா?"



"அச்சோ இல்லணா.... இதோ இரு வர்றேன்"



"இட்ஸ் ஓகே அத என் கிட்ட கொடு நா பாத்துக்குறேன்" அவன் சென்று பெண்ட்ரைவை எடுத்து வந்து கொடுக்க எழுந்தவன்



"நா ரூமுக்கு போறேன்.... ஆரு.... ஆனந்த் கிட்ட பேசு.... எதுக்கு வீம்பு பண்ற?" என்றான் நின்று....



"...."



"சரி நீங்க பேசிட்ருங்க இதோ வந்தட்றேன்"



***



மொபைல் சிணுங்கவும் அடண்ட் செய்து காதில் வைத்தான் ரகு....



"ரகு.... ராத்திரி கேம் ஓவர்.... நீ வந்துடு..."



"ஓகே" செல்லை அணைத்தவனை கேள்வியாய் பார்த்தாள் அனன்யா.



"யாருடா?"



"ப்ரண்டு...."



"ப்ரண்டா.... எங்கள விட்டு யாரு உனக்கு ப்ரண்டு?"



"ஆர்.கே..."



"வ....வ...வாட்.... என்ன உளர்ற?" கோபத்தில் கத்தியவளை சட்டை செய்யாமல் எழுந்து நின்றவன்



"இதுக்கே கோபப்பட்டா எப்பிடிமா.... முதல்ல இரு நா யாருன்னு காட்டிட்றேன்" தான் போட்டிருந்த ஹைபர் ரியலிஸ்டிக் பேஸ் மாஸ்க்கை இழுத்தெடுக்க உச்ச கட்ட அதிர்ச்சியில் உறைந்து போனாள் அவள்.....



தொடரும்......



31-05-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 09 [ B ]



அவள் அதிர்ந்திருந்தது ஒரு நிமிடத்திற்கும் குறைவு தானோ???



சட்டென சுதாரித்து விட்டு அருகில் பழம் வெட்ட வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்தவளின் கண்கள் பலிவெறியில் மின்ன அவனை நோக்கி பாய்ந்தவளை பிடித்து தள்ளி விட்டவன் கண்ணத்திலேயே ஓங்கி அறைய சுவற்றில் மோதி கீழே விழுந்தவளின் உதடு கிழிந்து இரத்தம் வழிந்தது.



"ச்சி.... நீயெல்லாம் மனுஷ ஜென்மமா இல்லயான்னு கூட யோசிக்க முடில.... உன்ன போல ஒருத்திய ஏன் தான் உன் அம்மாப்பா இந்த உலகத்துக்கு கொடுத்துட்டு செத்து போனாங்களோ..... அப்பிடி என்னடி பண்ணிட்டான் அவன் உங்களுக்கு.... பணக்காரனா பிறக்குறது ஒரு தப்பா.... அதான் அவன் முதுகுல குத்தி மனச கிழிச்சு சொத்தை புடுங்கி கிட்டீங்கல்ல.... இன்னும் என்னதான் கோபம் அவன் மேல... நீங்க அவனுக்கு அவ்வளவு செஞ்சப்போவும் அமைதியாதானே இருக்கான்.... நீ மட்டும் ஏன் அவன கொல்லனும்னு துடிக்குற... தோ பார்... உன் புருஷனும் ஹரிஷும் செத்துட்டானுங்க.... அதுக்கான ஆதாரத்த நீ அந்த குடோன்லயும் ஹரிஷ புதச்சிருக்க இடத்துலயும் போய் பாத்து தெரிஞ்சிக்கோ.... இதுக்கு மேலயும் அவன் மேல கை வைக்க நெனச்ச.... உன்ன நானே என் கையால கொண்ணுடுவேன்.. ஹாங்... அப்பறம் உன் அம்மாப்பாக்கு தான் நீ பிறந்தியான்னு ஒரு தடவ செக் பண்ணு.... இல்ல ஏன் சொல்றேன்னா எனக்கு தெரிஞ்ச வரைல அவங்க நல்லவங்களா தான் இருந்தாங்க.... நல்ல வேல அவங்க செத்து போயிட்டாங்க.... இல்லன்னா உன்ன நெனச்சே தூக்குல தொங்கி இருப்பாங்க...இனிமேலும் நீ வாழனுமான்னு முடிவு பண்ணிக்கோ.... குட் பய்" காரித் துப்பாத குறையாய் திட்டியவன் விறுட்டென வெளியேற நெஞ்சு அதிர கண்ணீர் வடிக்கக் கூட தோன்றாமல் அப்படியே அமர்ந்திருந்தாள் அவள்....



***



லேப்டாப்பை எடுத்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்து அந்த பெண்ட்ரைவை குத்தினான் ரிஷி.



அவன் எதிர்பார்தது போல் நிறைய பால்டர்கள் குவிந்து கிடக்காமல் இரண்டே இரண்டு தான் இருந்தது.



அதில் ஒன்றை மேதுவாக கிளிக் செய்தவன் உன்னிப்பாய் கவனிக்க ஆரம்பித்தான்.



முதலில் ஒரு உலக வரைபடமும் அதில் சில ரெட் புள்ளிகளும் குறிக்கப்பட்டிருக்க குழம்பிப் போனவன் அடுத்த படத்தை தட்டினான்.



முன்னால் வந்து நின்றது ஒரு பெண்ணின் போட்டோ....



"யாரிவ" வாய்க்குள் முணுமுணுத்தவன் அந்த பெண்மனியின் ஜாடையை வைத்து தனக்குள் கணக்கிட்டு அதிர்ந்தான்.



'ஓ... காட்.... இது... அக்ஷயா மாறி இருக்கே.... அ...அப்போ அவ அம்மாவா....?பட் ராகேஷுக்கு என்ன தொடர்பு?'

கலங்கிய மனதிற்குள் மின்னலென வந்து போனார் இராமநாதன்.



'ஸோ.... இந்த போட்டோல இருக்கவ.... தென் அக்ஷயா.... ராகேஷ் அப்பறம் இராமனுக்கும் தொடர்பு ஏற்கனவே இருந்திருக்கு.... பட் அக்ஷயாவ யாரு இன்வால்வ் ஆக்கி இருப்பா....ஓ எஸ்.... ராகேஷ்.... மேபி அன்னக்கி காலேஜ் முதல் நாள் அக்ஷயாவ என் கிட்ட அறிமுகப்படுத்தினானே.... அப்பவே இவனுக்கு இராமநாதன் கூட லிங்க் இருந்திருக்கு...ரைட்....'



தனக்குள்ளே சில பல முடிவுகளை எடுத்தவனுக்கு நாட்கள் பின்னோக்கி சென்றது.



((அவனுக்கு சிறு வயதிலிருந்தே ஒரு பழக்கம்...



தனக்கு தெரிந்தவர் மற்றும் தன்னை சுற்றி இருப்பவர்கள் அனைவர் இன்பர்மேஷனையும் விரல் நுனியில் தெரிந்து வைத்துக் கொள்வான்.



அதுவே அவனுக்கான வெற்றிக்கு ஈடாய் இருந்தாலும் எப்போதும் போல அவன் சறுக்கியது ராகேஷ் விஷயத்தில் தான்...



அதுவும் அந்த சம்பவத்திற்கு பிறகு வெளிநாடு செல்ல ஆரவ்வை பற்றி கூட அதன் பிறகு அலசிப் பார்ப்பதில்லை....



அந்த சறுக்கல் அவன் கனவையே மாற்றி அமைத்திருக்குமென்று அன்று தானே தெரிந்து கொண்டான் ..



(நண்பா இது போலிஸ் ஆகுனன்னு மூணு பேரும் அறை வாங்குனானுங்களே...அந்த மேட்டர்))



அதன் பிறகு அவன் தேட நினைத்ததில் சிக்கியது தான் அக்ஷயா பற்றிய விபரங்கள்....



அவள் ஒரு மருத்துவ மாணவி....



முதலிலிருந்தே ஆர்வம் இருந்ததால் வீட்டில் அவ்வப்போது ஏதாவது கலவையை மாற்றி புதிய பார்முலாவை உபயோகித்து ஏதாவது செய்து கொண்டிருப்பாள்.



அக்ஷயாவின் அம்மா சிவகாமி ஒரு விபச்சாரி....



பெண்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அவர்களை வேறு இடம் விற்பதில் கூட கை தேர்ந்தவர்....



மகளின் திறன் அறிந்து அவளை பயன்படுத்தி பார்முலா ஒன்றை உருவாக்கி பெண்களை மயக்கி ஆண்களிடம் தானாய் வருவது போல் செய்ய வைத்தனர் தாயும் மகளும்....



இராமநாதனுக்கு இதில் பங்கில்லை என்றாலும் இருவர் விடயமும் கண்டு பிடிக்கப்பட முடியாதபடி பலத்த பாதுகாப்பு கொடுத்திருந்தார்.



நிறைய பெண்களை சில நேரம் தோழிகளையும் கூட இதற்கு உட்படுத்தி தாயிற்கு உதவி புரிந்தவள் கடைசியாக அவன் மனையாளை குறி வைத்த போது தான் இவனுக்கு அவளை பற்றி தெரிய வந்திருந்தது.



அவர்களின் அடுத்த குறி இந்தப் பெண் தான் என தெரிந்திருந்தாலும் அவன் மனைவி என்று அப்போது தெரியாது.



அக்ஷயா மருத்துவ மாணவியாக இருந்தாலும் ரிப்போர்டரும் கூடவே என்பதால் அஷ்வினிக்கு நண்பி....



மற்றபடி வேறெந்த தொடர்புகளுமில்லை....



தான் அந்த மர்மக் கொலையாளி பற்றிய பெண்ட்ரைவை ஒப்படைப்பதாக பொய் கூறி இருந்தவளை தான் அன்றிரவு கொன்றான் ரிஷி.



அதன் பிறகு ஹோட்டலில் அஷ்வினியை பார்த்த போது அக்ஷயாவின் பையை எரிக்கும் போது அவன் கண்ணில் பட்ட இவளது போட்டோவே அவளை தாலி கட்ட தூண்டி இருந்தது.



அவளை சுற்றி ஆபத்து இருப்பதால் தன் கண்பார்வையில் வைக்க வேண்டுமென நினைத்து தான் எதுவும் யோசிக்காமல் கட்டி விட்டான்.



ஆனால் ஏன் அவளை தான் பாதுகாக்க நினைத்தோம் என்பதை மட்டும் யோசிக்கவே இல்லை அவன்....



ஒருவேளை ஆரவ்வின் நண்பி என்ற உந்துதலோ???



அதன் பிறகு அவள் அம்மாவை பற்றி தேடிய போது அவர் தற்கொலை பண்ணிக் கொண்டதாக தெரிய வர அத்துடன் அதை மறந்தும் போனான்.



அன்று வருண் தான் இன்னொருவருடன் அப்பாவை கண்டதாக சொன்ன போது போலியாக அதிர்ந்தவன் அவரை பற்றி சொன்னால் தேவியில்லாமல் பிரச்சனையென்று தனக்குள் மறைக்க அது அப்படியே அவனுக்குள் மட்டுமான ரகசியமாகவே போனதுவோ???



இதில் கடைசியாக ராகேஷ் பெண் ஆர்கன் கடத்தல் கேஸில் இன்வால்வ் ஆகி இருப்பது ஆரவ்விற்கு முன்னாடியே தெரிய வந்தாலும் மனைவியுடன் இருந்த குழப்பத்தில் எதுவும் யோசிக்க கூட முடியவில்லை அவனால்....))



பழையதை நினைத்து தலையை உலுக்கியவன் அடுத்த பால்டரை தட்ட அதில் சில பெண்களின் போட்டோ இருக்கவே ராகேஷை கொன்றதில் தப்பே இல்லை என்று தான் நினைக்கத் தோன்றியது.



இனி இந்த பெண்ட்ரைவ் தேவையில்லை....



மூளை உணர்ந்த லைட்டரை எடுத்துக் கொண்டு வந்து அதை உருக்கினான்.



.....



"யாது... போயி அப்பாவ கூட்டிட்டு வாடா.... சாப்புடலாம்" தமக்கை மகனை ஏவினாள் கயல்....



"ஓகே சித்தி...." சிட்டாய் பறந்தவனை பார்த்து சிரித்து விட்டு அனைவருக்கும் சாப்பாட்டை எடுத்து வைத்தாள் பெண்.



....



"டாட்...." கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவன் தந்தையை கண்களால் தேட ஆபிஸ் அறையிலிருந்து வெளியே வந்தான் ரிஷி.



"யாதவ்...."



"டாட்.... உங்கள தான் தேடிகிட்ருக்கேன்"



"ஏன்?"



"சித்தி சாப்புட அழச்சிட்டு வர சொன்னாங்க"



"உன் அம்மா எங்க?"



"அவங்க இருக்காங்களே.... ஒய் டாட்?"



"ஹூம்... சும்மா தான்டா"



"சரி வாங்க போலாம்" கதவை நெருங்கியவனை அழைத்தவன் கட்டிலில் அமர்ந்தான்.



"வாட் டாட்?"



"டீஸன்ஸ் ரொம்ப முக்கியமில்ல?"



"டெபனிட்லி டாட்...."



"அப்போ.... இன்னிக்கு எல்லோர் முன்னாடியும் மாம் கிட்ட அப்பிடி கேட்டீங்க?"



"தப்பா டாட்....?"



"கேக்குறது தப்பில்ல கண்ணா... ஆனா மாம்கு சங்கடமா இருக்கும்ல... அதனால அப்பிடி பேச கூடாது"



"ஓஹ்... ஓகே டாட்... சாரி"



"இட்ஸ் ஓகே டா கண்ணா...."



"இனிமே இப்பிடி நடக்காம பாத்துக்குறேன் டாட்.... ரியலி சாரி... நான் மாம் கிட்டவும் சாரி கேட்டுட்றேன்"



"ம்...குட் பாய்"



"தேங்க்ஸ் டாட்..."



"யாது... அப்பாவுக்கு ஒரு ப்ராமிஸ் பண்றீங்களா?"



"ஷூர் டாட்...."



"எப்போவும் அம்மாவ அழ விட கூடாது.... அவங்க கஷ்டப்பட்றா மாறி நடந்துக்க கூடாது... டாட் ரொம்ப ஹேர்ட் பண்ணி இருக்கேன்... பட் யாது அப்பிடி பண்ண கூடாது சரியா?"



"ஷூர்...ஷூர் டாட்... ஐல் ப்ராமிஸ்"



"குட்.... அப்பா இல்லன்னா கூட நல்லா பாத்துக்கனும்" தலையை தடவியவன் மகனை தூக்கிக் கொண்டு கீழே சென்றான்.



***



"வசு....பேசேன்டி... எவ்வளவு நேரம் தான் கெஞ்சறதுமா?"



"...."



"அதான் கல்யாணம் பிக்ஸ் ஆகிடுச்சுல்ல... நீ எதிர்பாத்தா மாறி நான் தானே வந்தேன்.... இன்னும் ஏன் கோபம்?" தன் வருங்கால மனைவியிடம் போனில் கெஞ்சிக் கொண்டிருந்தான் ரகு.



அன்று ரிஷியின் ஏற்பாட்டில் விஜயலக்ஷ்மியுடன் சென்று பேசி விட்டு வந்திருக்க அடுத்த மாதம் திருமணமென ஏற்பாடாகி இருந்தது.



"வசு....ஏன்டி கெஞ்ச விட்ற... இப்போ என்ன தான் பண்ணனும்குற?"



"உனக்கு காதல சொல்ல கூட தயக்கமா இருக்குல?" விட்டாள் அழுது விடுபவள் போல் கேட்டவளை எப்படி வழிக்கு கொண்டு வரவென்றே தெரியவில்லை அவனுக்கு...



"சொல்லுங்க சார்..." வழமையாகவே சார் என்று தான் அழைப்பாள்...



இருந்தாலும் இன்று ஏனோ சுறுக்கென தைத்தது.



"வசுமா... சாரி ப்ளீஸ்"



"உங்களுக்கு உண்மையிலேயே என்ன பிடிக்குமா?"



"ஏய்...என்னமா.... புடிக்கும்டி...." அவள் பதில் சொல்லாமல் விசும்ப



"ஹே அழாத வசு ப்ளீஸ்....எல்லாம் சரி ஆவிடுச்சுல்ல... இன்னும் ஏன் இந்த அழுகை...ம்....?" சமாதானப்படுத்த முயன்றான்.



"அப்போல இருந்து காதலுக்கு நான் மட்டும் தான் போராடி கிட்டு இருக்கேன்.... உங்களுக்கு லவ் பண்றத ஒத்துக்கவே தயக்கம்.... இப்பிடில்லாம் பண்றது என்ன புடிக்காம தானே?"



"ஸ்.... மறுபடி முதல்ல இருந்து ஆரம்பிக்காத வசு... எனக்கு உன்ன புடிக்கும்....புடிச்சிருக்கு.... இனிமேலும் புடிக்கும்.... ஐ லவ் யூ... ஐ லவ் யூ.... ஐ லவ் யூ....போதுமா?" மறுமுனை எந்த பதிலுமே இல்லை....



"ஓய்....லைன்ல இருக்கியா.... வசு....வசு...."



"ம்...."



"ஓ...இருக்கியா.... என்ன மேடம் ஸைலன்ட் ஆகிட்டீங்க.... வெக்கப்பட்றியா என்ன?"



"...."



"பேசுடி...."



"ர...ரகு....தேங்க்ஸ்...."



"எதுக்கு?"



"எல்லாதுக்குமே... உங்கள முத தடவ பாத்துல இருந்து புடிக்கும்....பட் பேச பயமா இருந்துது"



"பயமா....ஹாஹாஹா...."



"ரகு...." சிணுங்கியவளை அணைக்கத் தூண்டிய உணர்வை தனக்குள் அடக்கியவன்



"வசு..." என்றான் கிறக்கமாய்....



"ம்...."



"உன்ன வந்து பாக்கட்டுமா?"



"அம்மாப்பா இருக்காங்க"



"அப்போ நாளைக்கு வெளில போலாமா?"



"ம்..." அவள் சம்மதிக்க சந்தோஷமாய் செல்லை அணைத்தான் ரகு....



***



அனைவரும் உண்டு விட்டு தங்களறைக்கு சென்றிருக்க தான் மட்டும் வீம்பாய் ஹாலிலே அமர்ந்திருந்தாள் அஷ்வினி.



யாதவ் மதுவுடன் சென்றிருக்க குறுக்கும் நெடுக்குமாக நடந்தவன் அதற்கு மேல் பொறுமையின்றி கீழே இறங்கி வந்தான்.



"க்கூம்...." தொண்டையை கனைத்தவன் பேண்ட் பாக்கெட்டில் கைகளை விட்டுக் கொண்டான்.



"மேல வர்றியா இல்ல தூக்கிட்டு போகட்டுமா?" என்றவனை நிமிர்ந்து முறைத்தவள் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டு அசையாது அமர்ந்திருந்தாள்.



"அப்போ நான் தூக்கிட்டு போகனும்னு தான் இவ்வளவு நேரமா இங்க இருக்கியா...ஏன் பேபி...இத முதல்லயே சொல்ல மாட்டியா நீ?" குறும்பாய் கேட்டவன் அவளை தூக்கக் குனிய சட்டென எழுந்து அவனை விட்டு விலகி நின்றாள்.



"சின்ன குழந்தை அடம் புடிக்கிறா மாறி இருக்கு பேபி"



"நான் ஒன்னும் பேபி இல்ல" முகத்தை திருப்பவும் பக்கென சிரித்தவன் சட்டென அவளை தூக்க திடீரென தூக்கப்பட்டதில் அதிர்ந்து விழித்தவள் அவன் கழுத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.



"தேவயில்லன்னு சொன்ன...இப்போ கட்டி பிடிச்சிருக்க?" படக்கென விழி திறந்து அவனிடமிருந்து விடுபட திமிற தனக்குள் இன்னும் இறுக்கியவன் சிரித்துக் கொண்டே மேலேறினான்.



.....



"விடுங்க..." துள்ளி இறங்கி சென்றவளை பிடித்து இழுக்க மோதி நின்றவளை பின்னாலிருந்து வளைத்து அணைத்தான்.



"ஏன்டி படுத்துற... தப்புதான்.... பட் என்னால கண்ட்ரோல் பண்ண முடிலடி"



"சரி விடுங்க..."



"ப்ச் ஏன் பேபி.... ப்ளீஸ் மன்னிச்சுடுடி... நான் அவன ரொம்ப நம்பினேன் அஷு..... அப்பாக்கும் மேல... அதான் தாங்கிக்க முடில"



"என் கிட்ட ப்ராமிஸ் பண்ணி இருந்தீங்களே.... அது என்னாச்சு.... என்ன மறந்துட்டீங்க அப்பிடி தானே?"



"ப்ச் இல்லடா.... என் சிச்சுவேஷன் அப்பிடி..... உன்ன என்னால மறக்க முடியும்னு நெனக்கிறியா கண்ணம்மா?"



"...."



"ரியலி சாரி...."



"நா அவ்வளவு சொல்லியும் என்ன கண்டுக்காம போனீங்கல்ல... ப்ச் விடுங்க...." விலகியவளை திருப்பி இழுத்தவன் அதிரடியாய் அவளிதழ்களை சிறை செய்ய போராடியவளுக்கு முடியாமல் போகவும் கண்ணீர் பெருக்கெடுத்தது.



அவளுள் மூழ்கி இருந்தவன் கண்ணீர் சுவை உணர்ந்து சட்டென விலகி அவள் தோள் பற்றினான்.



"என்ன ஆனாலும் ஒரு இதழ் முத்ததுல முடிவுக்கு கொண்டு வந்துடலாம்னு நெனக்கிறீங்களா தேவ்?"



"....."



"என் பேச்ச கேக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டு கிஸ் பண்ணா என்ன அர்த்தம்?" இதழ் துடிக்க கேட்டவளின் இடை பற்றி மீண்டும் இழுத்தவன் மறுபடியும் சிறை செய்து விடுவித்து விட்டு சிரித்தான்.



"எதுக்கு கிஸ் பண்ணீங்க?" சீறினாள் பெண்...



"எனக்கு புடிச்சிருக்கு நான் பண்றேன்....."



"எனக்கு பிடிக்கல"



"புடிக்காம தான் கண்ண மூடி கிறக்கமா நின்னியா?" அவன் சிரிப்பை அடக்குவது கண்டு சோபாவிலிருந்த குஷனை எடுத்து அவனுக்கு அடித்தாள்.



"உன் கையால அடிச்சாலே வலிக்காது..... இதுல இது வேறயா?" சிரித்தவன் அசையாமல் நிற்க குஷனை வீசி விட்டு அருகில் வந்தவள் அவன் மீசையை பிடித்து நன்றாக இழுத்து விட்டு கிலுக்கிச் சிரிக்க கத்தினான் கணவன்.



"ராட்சஸி....வலிக்குதுடி"



"அப்பிடி கூப்புடாதிங்க" இவளும் முறைத்தாள்.



"ஆரு கரெக்ட்டா தான் வெச்சிருக்கான்.... சரியான ராட்சஸிடி நீ"



"போடா கமாண்டர்... சிடுமூஞ்சி.... டெர்ரர் ஆபிஸர்...."



"என்ன பாத்தா அப்பிடியாடி தெரிது?"



"ஆமாடா...."



"என்னாது... டாவா... உன்ன...." அவள் ஓடும் முன் பிடித்துத் தூக்கி கட்டிலில் போட்டவன் அவள் மீது சரிந்தான்.



"என்ன பண்றீங்க விடுங்க என்ன"



"டாவா.... டான்னு சொன்ன இந்த வாய்க்கு தண்டன வேணாமா?" அவள் கண்கள் விரிய அவள் இதழ்களை மென்மையாய் சிறை செய்தவன் அவளுடன் ஒன்றினான்.



***



காலை.....



தன் நெஞ்சில் தலைசாய்த்து குழந்தை போல் உறங்கிக் கொண்டிருந்த மனைவியை ரசித்துப் பார்த்தவன் அவள் கட் முடியை காதிற்கருகில் ஒதுக்கி விட்டான்.



மணி ஏழை கடந்து கொண்டிருக்க மெதுவாக தட்டினான்.



"அஷூ...கண்ணம்மா.... எந்திரிடா"



"ம்...ஊஹூம்....இன்னும் கொஞ்சம் தேவ்"



"தூக்கத்துல மட்டும் தான் தேவ்னுவா.... எழுந்தா பேர வெச்சே கடுப்பேத்துவா.... இம்சை...." சிரித்தவன் அவள் கண்ணத்தில் அழுத்த இதழ் பதித்தான்.



"கண்ணம்மா..... இன்னிக்கு திங்கள்கிழமை.... யாதுவ ஸ்கூல் அனுப்ப வேணாமா?"



"ஊஹூம்...." தூங்கிக் கொண்டிருந்தவள் வாரி சுருட்டிக் கொண்டு எழுந்து குளியலறைக்கு ஓட வாய் விட்டுச் சிரித்தான் ரிஷி.



.....



தங்கை கையை அழுத்தப் பற்றிக் கொண்டு ஜீவாவின் அறைக்குள் ரிஷி நுழைய பின்னால் தானும் நுழைந்தான் ஆரவ்....



"வாங்கணா....வாடா... வா ஆரா...." மூவரையும் வரவேற்றவன் ஆராவை மட்டும் அடுத்த அறைக்குள் செல்ல பனிக்க அண்ணனை பார்த்தாள் தங்கை....



கண்களால் உள்ளே செல்லுமாறு சொன்னவன் அவள் செல்லவே ஜீவாவிடமும் ஆரம்பிக்குமாறு தலையசைக்க ஆமோதிப்பாய் தலையசைத்தவன் உள்ளே சென்றான்.



"ஆரா...."



"சொல்லுடா"



"இப்பிடி வந்து படு மா" அவன் ஒரு சாய்விருக்கையை காட்ட எதுவும் பேசாமல் அமைதியாய் போய் அமர்ந்தவள் கண்களை மூடிக் கொண்டாள்.



"ஆராதனா....ஏதாவது சொல்லனும்னு நினக்கிறியா?" அவன் கேட்கவே சற்று நேர அமைதிக்கு பின் வாயை திறந்தாள் பாவை.....
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
(( அன்று ஆராவின் பிறந்த நாள் வெகு விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



தந்தை மரணித்து அதன் பின் வரும் முதல் பிறந்ந நாள்.



ஹாலில் அமர்ந்திருந்த ரிஷியின் கண்கள் சுற்றிக் கொண்டிருந்த தங்கையையே வட்டமடித்தன.



முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு....

அவள் தான் அவனுக்கு எல்லாமே....

அவன் முதல் மகவு....



"என்னடா அப்பிடி பாக்குற?" தோளை தட்டி விட்டு அருகில் வந்தமர்ந்தான் ராக்கி.



நண்பனை திரும்பி பார்த்து புன்னகைத்தவன் எதுவும் இல்லையென தலையாட்டி விட்டு மீண்டும் திரும்பினான்.



"ரொம்ப அழகா இருக்காடா.... இன்னும் என் கைல அப்பா வெச்சா மாதிரியே இருக்கு"



"டேய் டேய்....ஓவர் சென்டிமென்ட்டா பேசாம வா...." எழுந்து அவனை இழுத்தெடுக்க சிரித்துக் கொண்டே அகன்றான்.



"ஆரா...." தோழி ஒருத்தி அழைக்க திரும்பினாள் பெண்.



மஞ்சள் நிற லெகங்கா அணிந்திருந்தவள் அதற்கேற்ற ஜிமிக்கியும் போட்டிருக்க அவள் திரும்பிய வேகத்தில் அதுவும் நர்த்தனமாடி நின்றது.



கொஞ்சம் நீள முகம்.... கயல்விழி கண்களுகளுக்கு மை தீட்டி இன்னும் அழகாக்கி இருந்ததுவோ!!!



அரைத்த சந்தனத்தின் மஞ்சளும் வெள்ளையும் கலந்த அவள் தேகத்திற்கு அவள் சிரிப்பே தனித்துவம்....



"ம்...என்ன நிவி?"



"இன்னிக்கு பார்ட்டி முடிச்சிட்டு எங்க வீட்டுக்கு வருவல்ல?"



"எஸ் எஸ்.... கண்டிப்பா"



"ஹே...." துள்ளிக் குதித்த நண்பி சென்று விட அண்ணனை தேடி ஓடினாள் பெண்.



"ஆரு" தன் நண்பர்களுடன் இருந்தவன் சட்டென திரும்பினான்.



"என்னடி?"



"அண்ணாவ பாத்தியா?"



"இல்லயே.... நீ எதுக்கும் ராக்கிண்ணா கிட்ட கேளு"



"ம்...சரி...." அவள் அகல சுற்றிப் பார்த்தவன் என்ன நினைத்தானோ அவள் பின்னே நடந்தான் அவள் பாதுகாப்பு கருதி....



"ராக்கிண்ணா...."



"என்னமா....?" நண்பன் ஒருவனுடன் பேசிக் கொண்டிருந்தவன் திரும்பி அவளை பார்த்தான்.



அவன் கண்களில் வந்து போன நொடி நேர வக்கிரப் பார்வையை அப்போதே பார்த்திருக்கலாமோ!!!



"அண்ணா எங்க?"



"அதோ இருக்கான்டா" தூரத்தே கை காட்ட துள்ளி ஓடினாள்.



"அண்ணா...."



"என்னடா?" அவசரமாக திரும்பி கேட்டான்.



"நா என் ப்ரண்டு வீட்டுக்கு போகட்டுமா?"



"வேணாம்டா.... அதான் அவங்க வந்திருக்காங்கல்ல..."



"ப்ளீஸ்..." என்றவளின் முகம் வாட



"சரி...." என்று விட்டான்.



"தேங்க்ஸ்...." கையை பிடித்துக் கொண்டு ஆர்ப்பரித்தவள் அவனை கட்டிக் கொள்ள சிரித்துக் கொண்டே வந்து நின்றான் ஆரவ்.



"வாடா...."



"ணா...."



"நானும் ப்ரண்ட்ஸ் கூட வெளியில போறேன்"



"அண்ணா ஆருவ விடாத.... அவன் ப்ரண்ட்ஸ் ரொம்ப மோசம்...."



"ஏன்டா?"



"அப்பிடில்லாம் இல்லணா இவ பொய் சொல்றா"



"இல்லணா அவன் தான் பொய் சொல்றான்" ரிஷிக்கு தெரியாமல் பழிப்புக் காட்டினாள்.



"போடி லூசு..."



"நீ போடா மெண்டல்"



"நீ பைத்தியம்"



"நீ புத்தி கெட்டவன்"



"நீ...." என தொடங்கியவன்



"ஆரா...ஆரவ்...." எனும் ரிஷியின் அதட்டலில் வாயை கப்பென மூடி விட்டான்.



"நீ ப்ரண்ட்ஸ் கூட வெளியில போகனும்னல்ல போ...." ஆரவ்வை அனுப்பியவன் தங்கையையும் அனுப்பி வைத்து விட்டு வேலைகளை கவனித்தான்.



.....



விழா முடிந்து அனைவரும் சென்று விட்டிருக்க ஆரவ்வும் வெளியே செல்லவே அண்ணனிடம் வந்தாள் ஆராதனா.



"ணா...."நா போறேன்" அவள் சொன்ன வார்த்தைகள் அவனை திடுக்கிட்டு நிமிர வைத்தது.



"பொய்ட்டு வர்றேன்னு சொல்லுடா"



"சாரி சாரி... பொய்ட்டு வர்றேன்"



"கண்டிப்பா போயே ஆகணுமாடா?" மனம் ஏனோ தடதடவென அடித்துக் கொண்டே இருந்தது.



"ப்ளீஸ் இன்னிக்கு மட்டும்..."



"ம்...சரி.... பட் என்ன பிரச்சனன்னாலும் அண்ணனுக்கு கால் பண்ணனும் சரியா?"



"ஓகேணா...பய்..." அவள் செல்ல ஏனோ எதுவுமே செய்யத் தோன்றாமல் அப்படியே அமர அருகில் வந்தான் ராகேஷ்.



"ஆர்.கே...."



"ம்...என்னடா...?"



"ஏன் ஒரு மாதிரியா இருக்க?"



"தெர்லடா....என்னமோ நடக்க போறா மாதிரி பீல் ஆகுது"



"ப்ச்...சும்மா மனச போட்டு குழப்பிக்காத... சரி நா கிளம்புறேன்டா... என்ன ஹெல்ப்னாலும் கால் பண்ணு"



"ஓகே மச்சான்... தேங்க்ஸ்"



"அடி வாங்குவ என் கிட்ட"



"ஓகே ஓகே நோ தேங்க்ஸ்"



"அஃது... பய்டா...." எழுந்து வெளியே வந்தவன் ஜெய்யிற்கு கால் பண்ணினான்.



"எல்லாம் ஓகே மச்சி.... நம்ம கஸ்டடியில தான் இருக்கா....இன்னும் மயக்கம் தெளியல" மறுமுனையில் சொல்லப்பட்டதில் திருப்தியாய் புன்னகைத்தவன் சென்று விட்டான்.



.....



இரவு.....



மாலை மூன்று மணிக்கெல்லாம் ஆரவ்வும் வந்து விட்டிருக்க தங்கையை காணாமல் தவித்துப் போயினர் இருவரும்....



மணி ஐந்தை கடந்ததும் நேரே தோழிகள் வீடுகளுக்கு சென்று பார்க்க அவர்களோ அங்கு வரவே இல்லையென தலையில் இடியை இறக்க துவண்டு தான் போனான்.



இரவு எட்டை கடந்தது....



சல்லடை போட்டுத் தேடியும் தங்கையை பற்றிய ஒரு சிறு துரும்பு கூட கிடைக்கவில்லை இருவருக்கும்....



மணி பதினொன்றை கடந்தது....



ஆரவ் அழ ஆரம்பித்து விட அவனையும் தேற்றி மீண்டும் தேடலானான்.



"ஆர்.கே.... ஆல் இஸ் வெல்டா.... எங்கேயும் போயிருக்க மாட்டா ரிலாக்ஸ்...." நண்பனுக்கு ஆறுதல் கூறினான் அவன் துரோகி.



இரவு இரண்டை கடக்க தலையை தாங்கிக் கொண்டு அமர்ந்தவனின் கண்களில் மௌனமாய் கண்ணீர் வடிந்தது.



நேரம் காலை ஏழு....



அவனையறியாமலேயே சோபாவில் உறங்கி விட்டிருந்தவன் இரைச்சலாய் கேட்ட அழுகுரலில் வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தமர்ந்தான்.



அவனுக்கு முன்னால் வெள்ளை துணியால் மூடப்பட்டிருந்தது ஒரு உடல்!!!



ஒரு வேலை கனவோ???



அவனுக்கும் அப்படித் தான் இருந்தது போலும்!!!



கண்களே கசக்கியவன் மீண்டும் மீண்டும் உற்றுப் பார்த்தான்.



அப்படியே தான் இருந்தது.



சுற்று முற்றும் பலத்த அழுகுரல்....



விடயம் அப்போதுதான் அவன் மூளையை தாக்கியதோ!!!



தன் தோள் மீது வைக்கப்பட்ட கரத்தை தட்டி விட்டு பாய்ந்து கீழே அமர்ந்தவன் பெருங் குரலெடுத்து அழ ஆரம்பிக்க இங்கே கடத்தப்பட்டவள் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்தாள்.



***



ஒரு வாரம் கடந்திருந்தது தங்கை இறந்து!!!



வீடே வெறிச்சோடி இருக்க ஆளுக்கொரு திசையில் அமர்ந்திருந்தனர் இரு சகோதரர்களும்....



உறவினர்கள் வந்து விட்டுப் போனாலும் அவன் ஒரு வார்த்தை கூட பேசினானில்லை....



தானும் போயிருக்க வேண்டுமோ..... அனுமதிக்காமல் இருந்திருக்கலாமோ???



இது மட்டுமே அவனை ஆட்கொண்டிருந்தது.



எல்லாமே தன்னால் தான் என நினைவனுக்கு மனம் ரணமாய் வலித்தது.



.....



இருட்டறையில் நான்கு நாட்கள் உணவின்றி கட்டி வைக்கப்பட்டிருந்தாள் தங்கை....



உணர்வுகளை மங்கச் செய்து நினைவுகளை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க வைப்பதற்கான வழிகளில் ஒன்று பட்டினியில் அடைத்து வைப்பது.



அதை தான் அவர்களும் செய்திருந்தார்கள்.



கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தனர் ஜெய்... ராகேஷ் மற்றும் ராகவன்.



"அங்கிள் இவள இங்கேயே வெக்கிறது சேப் கிடையாது.... யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி மன்த்லி ஒன்ஸ் வேற இடத்துக்கு மாத்தி கிட்டே இருக்கலாம்" யோசனை கூறினான் ஜெய்....



"எஸ் ராக்கி....ஜெய் சொல்றது தான் சரி... நாம இப்போதைக்கு இவள குஜராத் கொண்டு போலாம்...."



"ஓகே அங்கிள்"



"அதுக்கப்பறம் என்ன செய்றதுன்னு அங்கே வெச்சி யோசிக்கலாம்"



"யாஹ்....அங்கிள் சொல்றா மாறி பண்ணலாம் ராக்கி"



அவர்கள் திட்டத்தின் படி அப்போதைக்கு கேரளாவில் வைக்கப்பட்டிருந்தவள் குஜராத்திற்கு கொண்டு செல்லப்பட்டாள்.



அங்கு இருந்த ஹோட்டல் அறையில் அவளை விட்டு விட்டு வெளியே சென்ற போது ஏற்கனே இலேசாக மயக்கம் தெளிந்திருந்தவள் தட்டுத்தடுமாறி நடுங்கும் கரம் கொண்டு தண்ணீரை குடித்து விட்டு வெளியேறினாள்.



மயக்கத்தில் தான் இருப்பாளென நினைத்து கதவை பூட்டாமல் சென்றிருந்தது அவர்கள் தவறோ???



.....



"டேய்....அவ இல்லடா...."



"என்னடா சொல்ற?"



"வெளில இருக்க நம்மாளுங்க கிட்ட அவசரமா விஷயத்த சொல்லு" ராகேஷ் ஜெய்யிடம் சொல்லவே வெளியே விடயத்தை சொன்னவன் மறுபுறம் தேடிச் சென்றான்.



.....



புதருக்கு பின்னால் மறைந்திருந்தவள் எழுந்து திரும்ப அதிர்ந்து போனாள்.



அவளை சுற்றி அவனது வெளியே நின்றிருந்த ரவுடிகள் வளைத்திருக்க பயந்து கத்தினாள் பாவை....



.....



தன் பட்டப்படிப்பை முடித்து விட்டு முதன் முதலாக தந்தையின் தொழிலை கையிலெடுத்த நேரம் அஜய்க்கு....



முதல் ப்ராஜக்ட்டே குஜராத்திலுள்ள பெரிய கம்பெனியுடன் ஒப்பந்தம் ஆகி இருந்தது.



அங்கே முழுவதுமே வெளிநாட்டு ஒப்பந்தங்கள் தான் அதிகமாக கைச்சாத்திடப்படுவதனால் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் அதிகம்....



அதே போலவே இருந்ததில் இவனுக்கும் நேரடியாக சென்று சந்திக்க வேண்டிய நிலை....



அன்று மீட்டிங் சற்று தாமதமாக முடிய ஹோட்டல் வாசல் பக்கம் வந்தவனை கலைத்தது போன் அலறல்....



எடுத்து காதிற்கு கொடுத்தவன் பேச்சு சுவாரஷ்யத்தில் ஹோட்டல் பின் புறம் நடந்து வந்து விட்டிருந்தான்.



"ம்...ஓகே பாய் மா... நா காலைல பேசறேன்..." சொல்லி விட்டு திரும்ப போனவனை கலைத்தது தூரத்தே தெரிந்த புதருக்கு பின்னால் கேட்ட முணகல் ஒலி!!!



"என்ன சத்தம்.... ஏதாவது விலங்கா இருக்கும் போல" யோசித்து விட்டு திரும்பி நடந்தவன் பின்னால் கேட்ட பேச்சு குரலில் சட்டென நிற்க அது அப்படியே அடங்கிற்று....



மீண்டும் நடக்கவே மீண்டும் கேட்க சற்றும் தாமதிக்காமல் அதனை நோக்கி ஓடத் துவங்கினான்...



"டேய் யாரோ வர்றா மாறி இருக்கு.... இவள தூக்குங்கடா..."



"ம்...ம்...." வாய் கட்டப்பட்டிருந்ததால் முணகினாள் பெண்.



"டேய் நீ அவன கவனி...நா இவள இங்க இருந்து நம்ம குடோனுக்கு ஷிப்ட் பண்ணிட்றேன்..."



"சரி..." என்றவன் புதர் மறைவிலிருந்து கத்தியுடன் பாய சுதாரித்து விலகியவன் அந்த கத்தியை எடுத்து அவன் நெஞ்சிலேயே சொறுகி விட்டு எழுந்து ஓடினான்.



"டேய்....டேய் வந்துட்டான்டா.... பிடிடா...." அவளை கட்டி காம்பவுண்ட் சுவருக்கு மறுபக்கம் இருப்பவனுக்கு கை மாற்றிக் கொண்டிருந்த கடைசி நேரத்தில் அவனையும் அடித்து அவளை தன் புறம் இழுக்க மறு பக்கம் நின்றிருந்தவன் தப்பித்து ஓடிவிட மயக்கமாய் இருந்த அந்த பெண்ணின் கண்ணத்தை பதற்றமாய் தட்டினான் அஜய்.



"ஹே....வேக் அப்...."



"ம்...." அவள் முணக வாயில் கட்டி இருந்த துணியை கழற்றி வீசியவன் மீண்டும் தட்டினான்.



"ஹே....டிட் யூ ஹியர் மீ...?"



"அ...அ....அண்ண..."



"யா...யாருமா நீ... பே...பேரு என்ன?"



"ஆ...ஆ...ஆரா...த...னா....."



"ஓ...ஓகே ஓகே.... யாரு இருக்காங்கமா....?"



"நீ...நீங்க....யா....?"



"நான்...நான் அஜய்... குடும்பத்துல யாரையாவது சொல்லுமா?"



"தே....தே....ங்...க்...ஸ் சா...ர்.... ரொ...ரொ... ம்...ப.... தேங்....க்...ஸ்"



"வெக் அப்...ஆரா... ஆராதனா....." கண்ணத்தில் தட்டிக் கொண்டே இருந்தவன் அவள் சுயநினைவு இழந்து கொண்டிருப்பது கண்டு கைளில் ஏந்திக் கொண்டு ஹாஸ்பிடல் ஓடினான்.



.....



தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தவன் கதவை திறந்து கொண்டு வந்த டாக்டரிடம் விரைந்தான்.



"டாக்டர் என்னாச்சு?"



"அவங்களுக்கு தலைல அடிபட்டு அதிகமா ப்ளட் லாஸ் ஆகி இருக்கு...ஷீ இஸ் இன் கோமா நௌ"



"வாட்....ஹௌ இட்ஸ் பாஸிபல்... அப்பிடி அடி படவே இல்லயே"



"திஸ் இஸ் தி ரிப்போர்ட் மிஸ்டர். அஜய்" அவர் ரிப்போர்ட்டை காட்டி விலக்க திக்கு தெரியாத காட்டில் மாட்டிக் கொண்டது போல் விழித்தான் அவன்....



"எப்போ சரி ஆகும்..."



"அத சொல்ல முடியாது அஜய்.... பாக்கலாம்....அவங்க பேஃமிலிக்கு இன்பார்ம் பண்ணிட்டீங்களா?"



"அ...அ..."



"இட்ஸ் ஓகே....ஐ கெட் அ கால் ப்ரம் ஹேர் பேமிலி.... நாங்க பாத்துக்குறோம்.... நீங்க கிளம்புங்க..." தோள் தட்டினார் போலி டாக்டர்....



டாக்டர் ராகவன்!!!



"தேங்க் காட்.... அவங்க பேமிலில யாரு வர்றன்னு சொல்லி இருக்காங்க..?"



"அப்பா...." பிசிரில்லாமல் ஒலித்த குரலில் சந்தேகம் காண முடியாமற் போக திரும்பி நடந்நான் வருண் அஜய்....



....



ஐ.சி.யு.....



"இவ எப்பிடிடா தப்பிச்சா.... இப்போதைக்கு மயக்கம் தெளியாதுன்னு சொன்ன?" ஆத்திரத்தில் வெடித்தான் ராகேஷ்.



"கூல் ராகேஷ்.... இரு இரு பாத்துக்கலாம்"



"அங்கிள் இப்போவே பாத்தீங்க தானே என்ன ஆச்சுனு...?"



"அங்கிள் அக்ஷு வந்திகிட்ருக்கா" அறிவிப்பாய் சொன்னான் ஜெய்...



அவள் கண்டு பிடித்திருந்த அதிக சக்தி வாய்ந்த விஷ மருந்து அது!!!



அதை எடுத்துக் கொண்டு தான் வந்து கொண்டிருக்க மூவர் முகமும் விகாரமாய் கொக்கரித்தது.



சொத்தை அடைவதற்கு ஏதுமறியா பெண்ணின் வாழ்க்கையை அழிக்கிறோமென்ற எண்ணமே இல்லை அவர்களுக்கு!



....



"அங்கிள்...." உள்ளே நுழைந்தாள் அக்ஷயா...



"வா வா....அவசரமா வாமா...."



"இந்தாங்க" பையிலிருந்த இன்ஜெக்ஷனை எடுத்து ராகவனிடம் கொடுத்தாள் பெண்.



"என்ன ஆகும்?" ராகேஷ் தான் ஆர்வம் தாங்க மாட்டாமல் கேட்டான்.



"இது உள்ள இறக்கி கொஞ்ச நேரத்துல மயக்கத்துக்கு போயிடுவாங்க.... அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா மூளைல இருக்க ஞாபக அலைகளுக்குள்ள ஊடுருவி நினைவுகள் அழிஞ்சு போயிடும்...கொஞ்ச நேரத்துல கண்ணு முழிச்சிடுவா.... பட் கொஞ்சம் அப்நார்மலா இருப்பா....இருந்தாலும் யாருக்கும் சந்தேகம் வராது"



"எத்தன நாள்?" இடையிட்டான் ஜெய்.



"கிட்டத்தட்ட ஏழு வருஷத்துக்கு அவ நினைவலைகள் தற்காலிகமா மறந்து போயிடும்.... சப்போஸ் இவ தப்பிச்சாலும் தான் யாருங்குறது தெரியாம தான் இருப்பா....ஸோ ஈஸியா கண்டு பிடிச்சிடலாம்"



"வாவ்..." பாராட்டினான் ராகேஷ் கண்ணா....



"ஆரம்பிங்க அங்கிள்" அரை மயக்க நிலையில் சொன்னவற்றை கேட்டவள் எழும்ப எத்தனிக்க முன் அந்த விஷ மருந்து ஏற்றப்பட்டிருக்க ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தாள் ஆராதனா தேவமாருதன்!!!





***



நடு இரவில் விழி திறந்தாள் பெண்....



சுற்று முற்றும் பார்த்தாள்....



தனக்கு சொந்தமான இடத்திலிருந்து அன்னியமாய் இருப்பது போல் இருந்தது.



அவர்களின் மருந்தின் தாக்கம் பெண்ணவளுக்கு கொஞ்சமாக தான் அப்போதைக்கு தாக்கம் செலுத்தி இருந்ததால் தான் கடத்தப்பட்டதிலிருந்து அஜய் காப்பாற்றிய வரை நன்றாகவே நினைவிருக்க சத்தம் காட்டாமல் மெதுவாக எழுந்தவள் வெளியே எட்டிப் பார்த்தாள்.



வராண்டாவில் காவளுக்கு இருந்தவர்கள் தூங்கி இருக்க தள்ளாடியபடி தட்டுத் தடுமாறி வெளியே வந்தாள்.



எங்கே இருக்கிறோமென தெரியாது ஆனால் இங்கிருந்து தப்பித்தால் போதுமென தோன்ற கண்மண் தெரியாமல் ஓடத் துவங்கியவளுக்கு அப்போதுதான் அதன் தாக்கம் தன் வேலையை காட்ட ஆரம்பிக்க காள்கள் தள்ளாட அந்த அடர்ந்த காட்டில் மயங்கினாள் பெண்.



.....



முழுதாக ஒரு பகல் ஒரு இரவு நல்ல ஆழ்ந்த மயக்கத்தில் உறங்கி விட்டிருந்தவள் மெதுவாக விழி திறந்து பார்த்தாள்.



ஏதோ குடிசை போல் தெரிந்தது....



வாசலில் ஒரு பெரியவர் முதுகு காட்டி அமர்ந்திருக்க அந்த மரக்கட்டிலிலிருந்து இறங்கி நடந்து போய் அவர் முன் நின்றவள் புரியாமல் விழித்தாள்.



"அம்மாடி....எழுந்துட்டியாமா... நான் பயந்து கிட்டே இருந்தேன்.... அந்த காட்டு பக்கமா மயக்கம் போட்டு விழுந்திருந்த நான் தான் இங்க கொண்டு வந்து வைத்தியம் பாத்தேன்"



"நான் யாரு?" அதிர்ந்து போனார் பெரியவர்....



"என்னமா சொல்ற... நீ யாருன்னு உனக்கே தெரியாதா?"



"ஊஹூம்..." உதட்டை பிதுக்கி இல்லையென தலையாட்ட நெஞ்சில் இரக்கம் பிறந்தது அவருக்கு...



"இப்பிடி உட்காருமா..." அருகில் அமர்த்திக் கொண்டார்.



"நா உங்கள எப்பிடி கூப்புடட்டும்?"



"தாத்தான்னு சொல்லுமா...."



"ம்...சரி...."



"உன் பேரு இன்னில இருந்து சஞ்சனா.... யாரு கேட்டாலும் அத தான் சொல்லனும்"



"சரி தாத்தா...." வாஞ்சையாய் தலை தடவியவர் எழுந்து உள்ளே செல்ல வெளிப் புறத்தை ஆராய்ந்தவளின் கண்கள் ஆச்சரியமாய் விரிந்தன.



கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மஞ்சள் நிற பூக்களால் நிறைந்திருக்க அதன் நடுவே இருந்த ஒற்றையடிப் பாதையில் நடக்கத் துவங்கியவள் சற்று நேரம் கழித்து மீண்டும் வந்தாள்.



"எங்கமா பொய்ட்ட?" பதற்றம் அவருக்கு....



"சாரி தாத்தா..."



"சரி உள்ள வா..." அழைத்துச் சென்று உண்ண வைத்தவர் அவருக்கு அருகிலேயே ஒரு விரிப்பை போட்டுக் கொடுத்து படுக்க வைத்தார்.



கிட்டத்தட்ட ஏழு வருடங்கள்....



தான் யாரென்றே தெரியாத நிலையில் அந்த பெரியவருடன் இருந்து வந்தாள் பெண்....



ஏழு வருடங்கள் முடியும் தருவாயில் ஒரு தடவை வெளியே சென்று விட்டு வந்து கொண்டிருந்தவளுக்கு தலை சுற்றிக் கொண்டு வர அப்படியே மயங்கி விட விழித்த போது மீண்டும் அதே குடிசை வீட்டில் இருந்தாள் மாது.



ஆனால் பெரியவர் இல்லை....



அவளை சுற்றி நான்கைந்து தெருப் பொறுக்கிகள்....



"தாத்தா...." மெல்ல முனகிய அவள் சத்தத்தில் அவளை பார்த்து கேவலமாய் சிரித்தான் ஒருவன்.



"தாத்தா உன்ன காப்பாத்த வந்தாரா... அதான் போட்டு தள்ளிட்டு உள்ள வந்துட்டோம்" என்றான் மற்றவன்.



"தாத்தா...தாத்தா...." அழ ஆரம்பித்தவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக நினைவுகள் திரும்பிக் கொண்டிருந்தது.



"அழாத செல்லம்...." கொஞ்சிக் கொண்டே நெருங்கினான் ஒருவன்...



"கிட்ட வராத...கிட்ட வராத" கையை நெஞ்சோடு மறைத்தவள் சுவற்றில் ஒன்றினாள்.



"அட இரு டார்லிங்.... என் கிட்ட என்ன பயம் உனக்கு...." பாவாடை தாவணி அணிந்திருந்தவளின் தாவணியை பிடித்து இழுக்க அழுது கொண்டே மறைத்தாள் பெண்.



"டேய்.... இவ கைய பிடிடா...." இன்னொருவன் வந்து கையை பிடிக்க நெருங்கிய முதலாமவன் அவள் முகத்தை இழுத்து வன்மையாய் சிறை செய்ய துடித்தாள் பாவை....



"விடு....விடுடா..."



"விட்டுட்றதுக்காகவா உனக்காக உன் தாத்தன போட்டு தள்ளினோம்" கேட்டுக் கொண்டே அவள் ரவிக்கையில் கைவைத்து ஒரே கிழியாக கிழிக்க கூசிப் போனவள் மடங்கி அமர்ந்து கதறி அழுதாள்.



"ப்ளீஸ்....விட்டுடுங்க என்ன.... ப்ளீஸ்.... அண்ணா.... பயமா இருக்குணா.... வாணா" ரிஷியின் கனவில் வந்த அதே சொற்கள்!!!



"ஹாஹா... இங்க எவனும் வர மாட்டான்" சொல்லி விட்டு நெருங்க பக்கத்தில் வைத்திருந்த பானையால் அவன் மண்டைக்கு அடித்தவள் எல்லோரையும் தள்ளி விட்டு தாவணியை எடுத்துக் கொண்டு ஓட பின்னால் ஓடினர் ஐவரும்....



பாதை அத்துப்படி ஆதலால் அவசமாக ஒரு ஒற்றையடியில் புகுந்தவள் தலைக்கு மேல் வளர்ந்திருந்த அந்த பூக்களின் தண்டின் பின்னால் மறைந்து வாயை இறுக்க மூடிக் கொண்டு கதறினாள்.



"அண்ணா....பயமா இருக்குணா....எங்கணா இருக்க.... எனக்கு பயமா இருக்கு.... வாணா..." அரற்றியது உள்ளம்.



தேடிக் கலைத்தவர்கள் அவளை விட்டு விட்டு சென்று விட கையிலிருந்த தாவணியை எடுத்துப் போர்த்தியவள் மீண்டும் ஓட ஆரம்பித்தாள்.
 
Status
Not open for further replies.
Top