All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நெஞ்சில் என்றும் நீயடா... கதைத்திரி

Status
Not open for further replies.

MekalaArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃபிரெண்ட்ஸ்....

அடுத்த அத்தியாயம் கொண்டு வந்துட்டேன்...

படிச்சிட்டு எப்படி இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க...

http://srikalatamilnovel.com/community/threads/நெஞ்சில்-என்றும்-நீயடா-கருத்துத்திரி.332/unread
உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கும்

உங்கள் மேகலா அருள்...
 

MekalaArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 10...

"இனி யாழினி இங்ஙனதேன் தங்கியிருக்கப் போறா..." என்ற அப்பத்தாவின் வார்த்தையில் அனைவரும் ஒன்றும் புரியாமல் அவரையேப் பார்த்தனர்...

"அப்பத்தா" என்று பாண்டியன் கோபத்தில் கத்தினான்...

"என்னிய மன்னிச்சிடு ராசா... இது ஒனக்குப் புடிக்காத விசயமுன்னு தெரியும்... ஆனாக்கா எங்களுக்கு வேற வழி தெரியல... இப்பவும் நாங்க சும்மா இருந்தாக்கா.. நீ கலியாணமே பண்ணிக்காம ஒண்டி மரமாவே இருந்துடுவியோன்னு பயமா இருக்குய்யா... அதுவுமில்லாம யாழினி மாதிரி நல்ல பொண்ணு கெடைக்காதுய்யா ராசா... உன் மனச மாத்திக்கோ ராசா... சீக்கிரமே நீயும் இவளும் கலியாணத்த முடிச்சிக்கிட்டு எனக்கு ஒரு கொள்ளுப் பேத்தியயோ பேரனயோ பெத்துக்குடுங்க... அதுகளப் பாத்துட்டு நிம்மதியாப் போய்ச் சேருவேன்... கொஞ்சம் புரிஞ்சிக்கோ சாமி... " என்று தன் மனபாரத்தை தன் பேரனிடம் இறக்கி வைத்தார் வள்ளியம்மை..

"அவுக சொல்லுறதும் நெசந்தான் பாண்டி... ஒனக்கு கலியாணத்தப் பண்ணிப் பாக்க எங்களுக்கு வேற வழி தெரியலப்பா... எப்படியும் இந்த புள்ள உன் மனச மாத்தும்... நீயும் கண்டிப்பா இந்தப் புள்ளய மனசாற பொஞ்சாதியா ஏத்துப்பங்கற நம்பிக்கை எங்களுக்கு இருக்குப்பா… எங்கள தப்பா நெனச்சிக்காத ராசா..." என்று லட்சுமியும் தன் பங்கிற்கு பேசினார்...

இதையெல்லாம் பொறுமையில்லாமல் கேட்டு முடித்தவன், "அப்படின்னா.. இது எல்லாம் உங்க சம்மதத்தோட நடக்குதுங்கறீங்க... சந்தோஷம்... இப்ப நான் கலியாணம் பண்ணிக்காததுதான் உங்களுக்கு கொறையா?" என்று கேட்டான்...

லட்சுமியும் வள்ளியம்மையும் ஒரு சேர, "ஆமாம் ராசா.. நீயும் குடும்பம் குழந்தைன்னு வாழுறத நாங்க கண்ணாறப் பாக்கணும்ப்பா" என்றனர்...

அவர்களின் கூற்றில் எதையோ யோசிப்பது போல் யோசித்தவன், பின் ஒரு முடிவு எடுத்தவனாக, தீர்க்கமான பார்வையுடன், தன் அப்பத்தாவைப் பார்த்து, "சரி அப்பத்தா.. நான் கலியாணம் பண்ணிக்கிட ஒத்துக்கிடுதேன்..." என்றான்...

அதில் மகிழ்ந்த தாயும் அப்பத்தாவும் அவன் அருகில் வந்து நின்று, "ஏலே ராசா.. உண்மையாத்தேன் சொல்லுறியா? " என்றனர்...

"ஆமா மா.. உண்மையாத்தேன் சொல்லுதேன்... நான் கலியாணம் கட்டிக்கிட சம்மதிக்கிறேன்..." என்றான்..

ஆனால் இவனின் வார்த்தையில் நம்பிக்கையில்லாத யாழினியோ யோசனையுடன், "நான் இங்க இருக்கணும்னு அப்பத்தா சொன்னதால என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றீங்களா? இல்லன்னா... கல்யாணம் பண்ணிக்க மட்டும் சம்மதம்னு சொல்றீங்களா? எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லுங்க மாமா..." என்றாள் கூரிய பார்வையுடன்..

அவள் கேள்வியை செவிமடுத்தவன், அவள் புறம் திரும்பியும் பாராது... தன் அப்பத்தாவைப் பார்த்து, "உங்களுக்கென்ன? நான் கலியாணம் கட்டிக்கிடணும் அம்புட்டுதானே? நல்ல ஒரு பொண்ணா பாருங்க... அடுத்த முகூர்த்தத்துலயே நான் அந்த புள்ள கழுத்துல தாலி கட்டுறேன்... ஆனா.. இப்ப நீங்க எனக்குப் பாத்துருக்குற பொண்ணு எனக்கு வேணாம்... இவளதேன் கட்டிக்கிடணும்னு நீங்க சொன்னீங்கன்னா.... எனக்கு கலியாணமே வேணாம்... கடைசி வரைக்கும் ஒண்டிக் கட்டையாவே வாழ்ந்துடுறேன்..." என்று கூறிக் கொண்டு போனவனை, "ஐயோ ராசா.. இந்த வார்த்தைய மட்டும் சொல்லாதய்யா..." என்று தடுத்தார் வள்ளியம்மை...

"சரி... அப்படி சொல்லல அப்பத்தா.. நீங்க சீக்கிரம் பொண்ணப் பாருங்க... பொண்ணு எப்படி இருந்தாலும் பரவாயில்ல.. நான் பாக்கணும்னு அவசியமில்ல... நீங்க பாத்து முடிவு பண்ணினாக்கா போதும்... தாலி கட்டும் போது நான் வந்துடுறேன்..." என்று தீர்க்கமா கூறி முடித்தான்..

அவனின் இந்த பதிலை எதிர்பார்த்திராத அனைவரும் ஒரு நிமிடம் என்ன பேசுவது என்றே புரியாமல் நின்றனர்...

"ராசா... என்ன ராசா.. நீ இப்புடி சொல்லிப்புட்ட?" என்றார்..

"இதுதான் என் முடிவு" என்றவன் அங்கு நிற்காமல் வேகமாக நடந்தான்..

அவன் நடையை தடுப்பதுபோல் அவனின் குறுக்கே கை நீட்டி தடுத்தவள், "மாமா... இந்த ஜென்மத்துல நீங்க தாலின்னு ஒண்ணு ஒரு பொண்ணுக்கு கட்டினா... அது என் கழுத்துக்கானதாதான் இருக்கும்... என் கழுத்துல தாலின்னு ஒண்ணு ஏறுனா... அது நீங்க கட்டினதாதான் இருக்கும்.. இத யாராலயும் மாத்த முடியாது.. ஏன்... நீங்களே நெனச்சாலும் மாத்த முடியாது... அது வரைக்கும் இந்த ஊர விட்டு போக மாட்டேன்... என்னை மீறி எந்த பொண்ணு கழுத்துல நீங்க தாலி கட்டுறீங்கன்னு நானும் பாக்குறேன்... அத உங்க கனவுல கூட நடக்கவிடமாட்டேன்... ஒரு முறை உங்கள விட்டுக்கொடுத்துட்டு இத்தன வருஷமா நான் பட்ட கஷ்டம் போதும்.. இனி ஒரு நிமிஷம் கூட உங்கள யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுக் கொடுக்கமாட்டேன்... " என்று உறுதியாகக் கூறினாள்..

இதுவரை அவள் கூறியதை அனல் கக்கும் பார்வையை அவள் மீது வீசியபடி கேட்டுக்கொண்டிருந்தவன், "முடிஞ்சத பாத்துக்கோடி..." என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டான்...

அவன் வெளியே சென்றதும், நான்கு பெண்களும், (வள்ளியம்மை, லட்சுமி, யாழினி, வடிவு) ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்...

யாழினியோ அவ்வளவு தைரியமாக அவனிடம் பேசிவிட்டாலும், அவன் சென்றதும் அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தவாறு முகத்தை முடிக்கொண்டு அழத்துவங்கினாள்...

வடிவு அவள் அருகில் வந்து மண்டியிட்டு அமர்ந்து, "அம்மு... ஏன் அம்மு அழற? அதான் அவிககிட்ட அம்புட்டு தைரியமா பேசிட்டல்ல.. அப்புறம் என்ன? எல்லாம் நல்லபடியா நடக்கும்.. ஒண்ணும் வெசனப்படாத... நாங்க எல்லாரும் இருக்கோம்ல... மொதல்ல கண்ணத் தொட..." என்று தேற்றிக் கொண்டிருந்தாள்..

லட்சுமியோ, "அவன் ஏன் இப்புடி கோவமா நடந்துக்கறான்னே தெரியலம்மா... அப்படி என்னதான் நடந்தது கல்யாணத்தன்னிக்கி... அவனும் அதப் பத்தி சொல்லவும் மாட்டேங்கான்.. உங்க வீட்டுலயும் எதுவும் கேக்க கூடாதுன்னு சொல்லிட்டான... நீயாவது சொல்லும்மா... என்ன நடந்துது?" என்றார்...

அவர்களின் கேள்வியில் தன் தலையைத் தாழ்த்திக் கொண்டவள், மெதுவான குரலில், "என்னை மன்னிச்சிடுங்கத்தை... எங்கிட்ட அதப் பத்தி எதுவும் கேக்காதீங்க.... ப்ளீஸ்... அது எனக்கு மட்டுமே தெரிஞ்ச விஷயம்... அத நான் யார்கிட்டயும் சொல்ல விரும்பல... ஒரு தடவை நான் மாமாவ விட்டுக் கொடுத்துட்டு இத்தன வருஷமா கஷ்டப்பட்றேன்... இனி அந்த தப்ப மறுபடியும் செய்ய மாட்டேன்... எனக்கும் மாமாவுக்கும் நடுவுல வேற யாரையும் வரவிடமாட்டேன்... மாமாவ என்னைவிட யாரும் நல்லபடியா பாத்துக்குவேன்... என்னை முழுசா நம்புவீங்கள்ல நீங்க?" என்று தலையை நிமிர்த்தி எதிர்பார்ப்புடன் கேட்டாள் யாழினி...

வள்ளியம்மையும் லட்சுமியும் அவளின் தலையை வருடிவிட்டு, "கண்டிப்பா உன்னிய நம்புறோம்... உங்க ரெண்டு பேருக்கும் கலியாணம் நடக்க நாங்க முழு ஒத்துழைப்பு குடுப்போம்..." என்றனர்...

வள்ளியம்மை, "உங்க மாமனார்கிட்டயும் தாத்தாக்கிட்டயும் நான் சம்மதம் வாங்கிக் கொடுத்துட்றேன்... அவிங்க ரெண்டு பேரும் புரிஞ்சிக்கிடுவாங்க... இப்ப அவிங்க வார நேரந்தேன்... அவிங்கள பத்தி நீ கவலப்படாத... நீ உன் மாமன எப்புடி உன் வழிக்குக் கொண்டாரதுன்னு மட்டும் யோசி... புரியுதா?" என்றார்...

"ரொம்ப தேங்க்ஸ் பாட்டி" என்று மகிழ்ச்சியில் கூறியவள், அவரை அணைத்துக் கொண்டாள்...

வடிவு அவள் தோளைத் தட்டி, "அம்மு... அத்தையும் ஆச்சியும் உன் பக்கம் இருக்கப்ப உனக்கு என்ன கவல... ஆச்சி சொன்னத கேட்டீல்ல? அவுக வீட்டுலயும் சம்மதம் வாங்கிக்கிடுதேன்னு சொல்லுறாக... நீ பாண்டி அண்ணனை மட்டும் கவனிச்சா போதும்... சரியா..." என்றாள்....

மற்றவர்களின் வாா்த்தையில் தெளிந்தவள், சற்றே முகம் பிரகாசமாக, "ம்ம்ம்... சரி..." என்றாள் பேச்சற்றவளாக...

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் நேரம் வேதநாயகம் மற்றும் வேல்முருகன் உள்ளே நுழைந்தனர்...

வீட்டினுள் நுழைந்தவர்கள், புதியதாக இரு பெண்கள் நிற்பதைக் கண்டு யோசித்தார்கள்...

வேதநாயகம், "யாரு புள்ளைங்க வள்ளி? புதுசா இருக்கமாதிரில்ல இருக்கு... இந்த புள்ளய பாத்தாக்கா பட்டணத்துப் புள்ள மாதிரியிருக்கே... புள்ளைங்களுக்கு குடிக்க எதுவும் குடுத்தியா?" என்று தன் கேள்விகளை அடுக்கிக் கொண்டிருந்தார்...

அவர் கேள்விக்கு, "இந்த புள்ள யாருன்னு தெரியலியா?" என்று யாழினியைக் காட்டிக் கேட்டார் வள்ளியம்மை...

வேதநாயகமும் வேல்முருகனும் ஒரு சேர, "எங்ஙனயோ பாத்த மாதிரியிருக்கு" என்று யோசித்தனர்...

அவர்களுக்கு யாழினியைப் பற்றி ஞாபகப்படுத்திய வள்ளியம்மையும் லட்சுமியும் இதுவரை நடந்ததை சுருக்கமாகக் கூறிமுடித்தனர்..

"நீங்க ரெண்டு பேரும் என்ன சொல்லுறீக?" என்றார் வள்ளியம்மை...

சிறிது நேரம் யோசித்த இரு ஆண்களும் தங்களுக்குள் ஒரு முடிவு எடுத்துவிட்டு, "சரி.. உங்க இஷ்டம்தான் எங்க இஷ்டம்... எல்லாம் நல்லபடியா நடக்க, நாங்க உனக்கு உதவி பண்ணுறோம்..." என்று கூறி சம்மதத்தை தெரிவித்தனர்...

மகிழ்ச்சியில் அனைவரின் கால்களிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள் யாழினி...

அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்திருக்க, வீட்டை விட்டு வெளியே சென்ற பாண்டியன், தன்னுடன் ஒரு நபரை அழைத்துவந்தான்....

அனைவரும் ஏன் என்று யோசிக்கும் முன்னர், அவனே வாய் திறந்தான்...

"என்ன ஆச்சி? இவர யாருக்கும் அடையாளம் தெரியலியா? இவருதேன் காசிலிங்கம் மாமா... இவரும் பட்டணத்துல போய் செட்டிலானவருதேன்... ஒரே பொண்ணுதேன் இவருக்கு... காலேஜ் படிப்பு படிச்சிருக்கு... அந்த பொண்ணத்தேன் நான் கட்டிக்கிடப் போறேன்... எப்ப முகூர்த்தம், எப்ப கலியாணங்கற வெவரத்த இவருகிட்ட பேசிக்கிடுங்க..." என்று அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, இறுதியாக யாழினியைப் பார்த்தவாறே புதியவரிடம், "மாமா... உங்க பொண்ணை எனக்கு ரொம்ப புடிச்சிப் போச்சி மாமா... ஃபோனுல ஃபோட்டாவுல அழகா இருக்குது அந்த புள்ள... வீட்டுல இருக்கவங்ககிட்டயும் காட்டுங்க... எல்லாரும் பாக்கட்டும்..." என்று கூறி முடித்தவன் யாழினியைப் பார்த்து ஒரு எகத்தாளமான பார்வையை வீசினான்..

மற்றவர்களின் ரியாக்ஷன் என்ன என்பதையும் அதற்கு யாழினியின் ஆக்ஷன் என்ன என்பதையும் அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்...
 

MekalaArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃபிரெண்ட்ஸ்...

சாரி... கொஞ்சம் ஃபீவர்... அப்டேட் டைப் பண்ண முடியல... முடிஞ்ச அளவுக்கு சீக்கிரம் கொண்டு வர முயற்சி பண்றேன்...

உங்கள்
மேகலா அருள்...
 

MekalaArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃபிரெண்ட்ஸ்....

எனக்கு காய்ச்சல் னு சொன்னதும் நீங்க என்மேல காட்டின அக்கறைக்கு நன்றி...

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... எல்லா நலமும் வளமும் பெற்று இன்பமாய் வாழ வாழ்த்த்துக்கள்...

நெஞ்சில் என்றும் நீயடா..

அடுத்த அத்தியாயத்துடன் வந்துட்டேன்...

படிச்சிட்டு எப்படி இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போங்க...

உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும் உங்கள்
மேகலா அருள்..

நெஞ்சில் என்றும் நீயடா... கருத்துத்திரி...
 

MekalaArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 11...

பாண்டியன் சொன்னதைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்....

ஆனால் காசிலிங்கமோ அனைவரின் மனநிலையை அறியாமல், பாண்டியனின் வார்த்தையைக் கேட்டு, தன்னுடைய அலைபேசியை எடுத்து தன் மகளின் புகைப்படத்தை முதலில் வேதநாயகத்திடம் காண்பித்தார்...

வேதநாயகமோ, புதியவர் முன் எதுவும் பேச விரும்பாததால், "வா.. காசி... எப்புடி இருக்க? வீட்டுல எல்லாரும் சொகமா? பாத்து அநேக வருசமாச்சி..." என்று அவர் நீட்டிய அலைபேசியை பார்க்காமல் தவிர்த்து பேச்சை திசைமாற்றினார்...

காசியோ, "எல்லாரும் நல்லாயிருக்கோங்க... நீங்க எல்லாரும் எப்டி இருக்கீங்க? சென்னையில போய் செட்டில் ஆயிட்டதால, நல்லது கெட்டதுன்னு எதுலயும் கலந்துக்க முடியல... அக்கா பொண்ணுக்கு கல்யாணம் இன்னைக்கு... அதான் வந்தேன்... நான் மட்டுந்தான் வந்தேன்... இவ்ளோ தொலைவுல வர முடியாதுன்னுட்டாங்க வீட்டுல... என் பொண்ணுக்கும் என் மனைவிக்கும் இந்த மாதிரி கிராமம்லா புடிக்காது.. அதான்" என்றார்...

அவரின் கடைசி வார்த்தையைக் கேட்டதும், அனைவருக்கும் ஒரு பெரும் நிம்மதி தோன்றியது பாண்டியனைத் தவிர...

யாழினியோ, நக்கலாக ஒரு பார்வைப் பார்த்தாள்...

"இப்பொழுதுதான் வள்ளியம்மை நிம்மதியாக உணர்ந்தார்... "வாப்பா... வந்து உக்காரு மொதல்ல... நின்னுக்கிட்டேயிருக்கியே..." என்று கூறியவர், சமயலறை நோக்கி, "ஏலே பேச்சி... குடிக்க மோர் கொண்டா..." என்று கட்டளையிட்டார்...

லட்சுமியும் வேல்முருகனும் தன் பங்கிற்கு நலம் விசாரித்தனர்...

பேச்சியம்மா அதற்குள் மோர் கொண்டுவரவும் அதை தன் கைகளில் வாங்கி, காசிலிங்கத்திற்கு கொடுத்தாள் யாழினி...

"அங்கிள்... இந்தாங்க.. வெயில்ல சூடா வந்திருப்பீங்க... சில்லுன்னு மோர் குடிங்க..." என்றவள் அவர் மோர் குவளையை வாங்குவதற்குள் கையை விட்டிருந்தாள்...

அது அவரின் கால்சட்டையை நனைத்தது... வேண்டுமென்றே அவ்வாறு செய்தவள், ஒன்றுமறியாதவள்போல், "அய்யோ அங்கிள்... சாரி அங்கிள்.. நீங்க கிளாஸை பிடிச்சிட்டீங்கன்னு நெனச்சி விட்டுட்டேன். எக்ஸ்ட்ரீம்லி சாரி அங்கிள்..." என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள்...

அங்கிருந்த அனைவருக்கும் இது தெரியாமல் கைதவறி நிகழ்ந்த தவறு என்றே தோன்றியது...



காசிலிங்கமோ என்ன செய்வது என்று புரியாமல் பார்க்க, யாழினியோ, "அங்கிள்... அந்தப் பக்கம் 'வாஷ் ரூம்' இருக்கு... 'க்ளீன்' பண்ணிக்கிட்டு வாங்க... பேச்சியக்கா... அங்கிள்கு ஒரு துண்டு எடுத்துக் குடுங்க" என்று இருவரையும் அவ்விடத்தைவிட்டு நகர்த்தினாள்...

அவர்கள் அங்கிருந்து நகர்ந்ததும், பாண்டியனின் அருகில் வந்தாள்...

ஏற்கனவே, காசிலிங்கம் தன் மகளுக்கு கிராமம் என்றால் பிடிக்காது, கிராமத்து வாழ்க்கையை அவள் விரும்பாட்டாள் என்று கூறியதில் கடுப்பாகியிரு்தவன், யாழினி செய்த செயலால் அவளை முறைத்துக் கொண்டிருந்தான்...

அவள் வேண்டுமென்றேதான் அவ்வாறு செய்தாள் என்பது அவனுக்கு மட்டும் புரிந்திருந்தது...

முறைத்தவன் அருகில் வந்தவள், அவனுக்கு மட்டும் கேட்கும்படி "மாமோய்... என்னை வெச்சிக்கிட்டே வேற பொண்ண பாக்கறீங்களா கல்யாணத்துக்கு? நான் அப்ப சொன்னதுதான்.... மறுபடியும் சொல்றேன்... நல்லா கேட்டுக்கோங்க.... ஒரு தடவை உங்களை விட்டுக் கொடுத்துட்டு நான் ரொம்பவே கஷ்டத்த அனுபவிச்சிட்டேன்... இனி யாருக்காகவும் எதுக்காவும் உங்கள விட்டுக் கொடுக்கமாட்டேன்... நம்ம கல்யாணத்த யாராலயும் தடுக்க முடியாது... உங்களாலயும் நிறுத்த முடியாது... புரிஞ்சிதா.." என்று சவால் விட்டாள்...

அதில் அவன் கோவம் இன்னும் தலைக்கேற, அடிக்குரலில் அடக்கப்பட்ட கோவத்துடன், "இம்புட்டு பேச்சு பேசற அளவுக்கு உனக்கு நெஞ்சு தெகிரியம் வந்துடுச்சா? இப்ப சொல்றேன் கேட்டுக்க... நான் பாத்த இந்த பொண்ண ... யாருக்கு புடிக்கிதோ இல்லையோ... கவலயில்ல எனக்கு... அவ கழுத்துல தாலிகட்டி கூட்டிக்கிட்டு வர்றேன் பாருடி..." என்று சீறினான்....

அங்கிருந்த மற்றவர்களுக்கு இவர்கள் பேசிக்கொள்வது சரியாக கேட்காவிடினும், ஏதோ அவர்களுக்குள் வாக்குவாதம் நடைபெறுகிறது என்பதை மட்டும் புரிந்துகொண்டனர்....

அதற்குள் காசிலிங்கம் தன் கால்சட்டையை சுத்தப்படுத்திக் கொண்டு வந்துவிட்டார் ... பாண்டியன் அவரிடம் ஏதோ கூற போக, அதற்குள் யாழினி முந்திக்கொண்டு அவர் அருகில் சென்று நின்று, "சாரி அங்கிள்.... வெரி வெரி சாரி அங்கிள்..." என்றாள்....

அதற்கு அவரோ, "ஐயோ என்னம்மா நீ? கொஞ்சம் மோர் துணியில பட்டதுக்கு இத்தன மொற சாரி கேக்குற... விடும்மா...பராவாயில்ல ..." என்றார்...

"இல்ல அங்கிள்... நான் அதுக்காக சாரி கேக்கல அங்கிள்" என்றாள்...

அதில் அவளை புரியாமல் பார்த்தவர், "பின்ன வேற எதுக்குமா?" என்றார்

"அதுவந்து அங்கிள்... அதை எப்படி சொல்றதுன்னு தெரியல... சொன்னா நீங்க கஷ்டப்படுவீங்க... ஆனா சொல்லாமலும் இருக்க முடியல..." என்று கையை பிசைந்து கொண்டு நின்றாள்...

அவள் வார்த்தையில் அங்கிருந்த அனைவரும் குழம்பி நின்றனர்... பாண்டியன் உட்பட...

அவள் வார்த்தைக்காக காத்திருக்க பொறுமையில்லாதவர், "எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லுமா" என்றார்...

"ம்ம்ம்... சொல்றேன் அங்கிள்..." என்றவாறு முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு, "நீங்க உங்க பொண்ணு கல்யாண விஷயமா பேச வந்தீங்க... ஆனா அபசகுணமா மோர் கீழ விழுந்திருச்சி... நல்ல விஷயம் பேசும்போது இப்படி ஆச்சுன்னா... அந்த காரியம் உருப்படாதுன்னு சொல்லுவாங்க... அதையும் மீறி கல்யாணம் பண்ணினா... அது நல்லாவே அமையாதுன்னு சொல்லுவாங்க... நீங்க வேற... ஒண்ணே ஒண்ணு... கண்ணே கண்ணுனு கருவேப்பில கொத்து மாதிரி.... ஒரு பொண்ணப் பெத்து வெச்சிருக்கீங்க... அந்தப் பொண்ணு இந்த வீட்டுக்கு வாழ வந்தா என்ன ஆகும்னு யோசிச்சாலே பயமாயிருக்கு அங்கிள்.... எதுக்கும் ஒரு முறைக்கு ரெண்டு முறை யோசிச்சிப் பாருங்க அங்கிள்...." என்றவள் அவர் யோசிப்பதைப் பார்த்து, தன் பின்பக்கம் நின்றிருந்த தன் பாட்டியைப் பார்த்து கண்ணடித்துவிட்டு, "அப்படிதானே பாட்டி" என்றாள்....

இதுவரை அவள் ஏன் அப்படி பேசினாள் என்பது அனைவருக்கும் புரிய, பாட்டியோ, "ஆமாந்தாயீ..." என்று அவளுக்கு ஒத்து ஊதினார்...

தன் மகள் மற்றும் மனைவியின் அன்றாட அத்தியாவசிய (அநாவசிய) செலவுக்கு பணம் ஈட்ட முடியாமல் விழி பிதுங்கி கடனில் தத்தளிக்கும் வேளையில், கோவிலில் தன்னைப் பார்த்து நலம் விசாரித்த பாண்டியன், அவர் மகளுக்கு வரன் தேடுவதைப் பற்றிக் கூறியவுடன், யாழினி மீதிருந்த கோவத்தில் அவன் அவரின் மகளை திருமணம் செய்ய ஒப்புக் கொண்டான்...

அவனின் பணபலம் ஏற்கனவே அவருக்கு தெரியுமாகையால், தன் மகளை இவனின் பணத்தை காட்டி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்து, திருமணம் முடிந்த பின் சொத்தை எழுதி வாங்கிக்கொண்டு சென்னைக்கு அவனுடன் சென்று சுகமாக காலம் முழுதும் வாழ்ந்துவிடலாம் என்று எண்ணி வந்திருந்தார் காசி...

என்னதான் பணத்திற்காகப் பார்த்தாலும் தன் மகளின் திருமண வாழ்க்கை நன்றாக அமையாமல் போகும் என்ற வார்த்தை வரும்போது ஒரு தகப்பனாக யோசிக்க ஆரம்பித்துவிட்டார்...

"தம்பி..தப்பா நெனச்சிக்காதீங்க... இந்த பொண்ணு சொல்றதுலயும் அர்த்தமிருக்கு... இந்த கல்யாணப் பேச்ச இத்தோடு நிறுத்திக்குவோம்... நான் வர்றேன் தம்பி..." என்று பாண்டியிடம் உரைத்தவர், மற்றவர்களைப் பார்த்து, "நான் கௌம்பறேங்க..." என்று கூறிவிட்டு, பாண்டியன் பேச வந்ததை கேட்காமல் வெளியேறிவிட்டார்...

வெளியே செல்லும் அவர் முகத்தையேப் பார்த்திருந்தவன் கோவத்துடன் திரும்பினான்...

தன் தாயையும் அப்பத்தாவையும் கோபத்துடன் பார்த்தவன், "உங்க புள்ள நான் உங்களுக்கு முக்கியம் இல்லாமப் போயிட்டேன்... இப்ப வந்த இவளுக்கு நீங்க சப்போர்ட் பண்றீங்க... எல்லாரும் கூட்டு சேந்துதேன் இந்த வேலையெல்லாம் பாக்குறீங்கள்ல.. அப்பா நீங்களும் அவங்க கூட சேந்துக்கிட்டீங்களா? தாத்தா நீங்களுமா?" என்றான் ஆற்றாமையுடன்...

வேதநாயகம் மிகவும் பொறுமையாக, "ஐயா, ஏன்யா அப்புடி சொல்லுதே... இந்த ஒலகத்துல ஒன்ன விட வேற யாரும் எங்களுக்கு ஒசத்தியில்ல... நாங்க எது செஞ்சாலும் அது ஒன் நல்லதுக்காகத்தேன் இருக்கும்..." என்றுவிட்டு சில வார்த்தைகள் பேசிவிட்டு பாண்டியனின் தோளைத் தட்டிவிட்டு சாப்பிட அமர்ந்தார்...

அனைவரும் சாப்பிட அமர்ந்தனர்..

வடிவும் யாழினியும் சாப்பிட அமர்ந்ததும், பாண்டியன் முறைத்தவாறே, "நான் கெளம்புறேன்.. எனக்கு சாப்பாடு வேணாம்..." என்றுவிட்டு எழும்பி நகரப் போகவும் தன் கால்களை நீட்டி அவன் கால்களைத் தட்டிவிட்டாள் யாழினி.. கீழே விழப்போனவன், தட்டுத்தடுமாறி நேராக நின்று, அவளை முறைத்து ஏதோ பேச வருவதற்குள், "ஐயோ, மாமா... சாரி மாமா.. தெரியாம கால் பட்டுடுச்சி... மன்னிச்சிக்கோங்க..." என்றுவிட்டு, "ஏன் மாமா.. பசிக்கலியா? இல்ல நான் எல்லாத்தையும் காலி பண்ணிடுவேன்னு நெனச்சிக்கிட்டு வேணாம்னு சொல்லுறீங்களா? அதெல்லாம் உங்களுக்கு பங்கு வெக்காம சாப்பிட்டுட மாட்டேன்... உக்காருங்க..." என்று கூறிவிட்டு அவனுக்கு வழிவிடாதவாறு நின்றுகொண்டாள்...

வேல்முருகனும், "பாண்டி.. என்ன பழக்கம் இது... சாப்பிட ஒக்காந்துட்டு, சாப்புடாம எழுந்து போறது? ஒக்காந்து சாப்பிட்டுட்டு போ..." என்று அதட்டினார்...

தன் குடும்பத்தாரின் முன்னிலையில் எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக அமர்ந்தான் சாப்பிட... அவன் அருகில் அமர்ந்த யாழினி, அவனை சாப்பிடவிடாமல் சேட்டைகள் செய்து கொண்டிருந்தாள்.. அவனுக்கு வைத்த பதார்த்தங்களை "எனக்கு இது புடிக்கும் நான் கொஞ்சம் எடுத்துக்கறேன்" என்று கூறிவிட்டு எடுத்துக்கொண்டாள்.. அவளின் சேட்டைகளை தன் குடும்பத்தினருக்காக தாங்கிக்கொண்டவன், ஏதோ பெயருக்கு சாப்பிட்டுவிட்டு எழுந்து சென்றுவிட்டான்...

அவன் கை அலம்பும் நேரம், அவன் பின்னால் சென்றவள், அவன் அருகில் நின்று, "மாமோய்.... இனி யாழினி தொல்லையை சமாளிச்சிதான் ஆகணும்... விடாது கருப்பு மாதிரி உங்கள விடாம தொரத்திக்கிட்டேதான் இருப்பேன்... இனி இன்னொரு முறை கல்யாணத்துக்குப் பொண்ணு பாத்தீங்கன்னா... இன்னைக்கு மாதிரி சில்லுன்னு மோர் ஊத்தமாட்டேன்... சுடச்சுட காஃபி தான் ஊத்துவேன்... மனசுல வெச்சிக்கோங்க... அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் மாமா... இனி இந்த யாழினி இங்கேயே, இந்த வீட்டுலயே தங்குறதா முடிவு பண்ணிட்டா... அதனால கொஞ்சம் அலர்ட்டாவே இருங்க...." என்று கூறிவிட்டு நகர்ந்தாள்...

அதில் மேலும் கோபமுற்றவன், 'இவ போற வரைக்கும் இந்த வீட்டுப் பக்கம் வரவே கூடாது' என்று மனதில் நினைத்துக் கொண்ட அடுத்த நொடி அவன் காதருகில், "அப்படியெல்லாம் முடிவு எடுத்துடாதீங்க மாமோய்... அப்புறம் ராமர் இருக்குற இடம்தான் சீதைக்கு அயோத்திங்கற மாதிரி... நீங்க எங்க இருக்கீங்களோ அங்கயே நானும் வந்துடுவேன்..." என்று கூறிய யாழினி, அவன் கன்னத்தை தன் விரலால் சுண்டிவிட்டு, கண்ணடித்துவிட்டு, "மாமோய்... வர்ட்ட்டா..." என்று கூறிவிட்டு ஓடிவிட்டாள்...

"இவள..." என்று பல்லைக் கடித்தவன், "ச்சே" என்று தலையை உலுக்கிக்கொண்டு வண்டியைக் கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டான்...

அவன் சென்றதும், அனைவரையும் அழைதனதாள் யாழினி...

"தாத்தா... பாட்டி... அத்தை....மாமா... உங்க எல்லாருக்கும் நான் பண்றது கோவத்தக் கொடுக்கலாம்... ஆனா...மாமாக்கிட்ட கெஞ்சிக் கேட்டா, எதுவும் வேலைக்கு ஆகாது... அதான் இப்படி அதிரடியா நடந்துக்கறேன்... என் மேல முழு நம்பிக்கை வெச்சி நான் பண்ணுறத கண்டுக்காம விட்ருங்க.. அதே மாதிரி உங்களுடைய முழு சப்போர்ட்டையும் எனக்கு குடுங்க... மத்த எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்..." என்று கூறினாள்....

அனைவரும் ஒரு மனதுடன் அவளின் வாரத்தையை ஏற்றுக்கொண்டனர்...

"நீ வடிவை அந்த புள்ள வீட்டுல விட்டுட்டு உன் துணியெல்லாம் இங்கன கொண்டாந்துரு ... பக்கத்துலயே இருந்தாதான் அவன உன் வழிக்கு கொண்டார முடியும்...." என்று வள்ளியம்மை கூறியதை அனைவரும் ஆமோதிக்கவும் அவளை அழைத்துக்கொண்டு கிளம்பினாள்...

இங்கு வண்டியைக் கிளப்பிக்கொண்டு வந்தவன், கோவத்தில் என்ன செய்வதென்று புரியாமல், வடிவேலுவுக்கு அழைத்தான்... அப்பொழுதுதான் வடிவேலுவைத் திட்டியது நினைவிற்கு வந்தது பாண்டிக்கு.... தன் தலையில் அடித்துகொண்டவன் அலைபேசியை வெறித்துப் பாா்த்தான்...அதற்குள் மறுமுனை எடுக்கப்பட்டு, "சொல்றா மாப்ள...." என்றான் வடிவேலு... அதில் நிம்மதியுற்றவன், "எங்ஙன இருக்கடா?" என்று கேட்டுவிட்டு அவன் இருக்கும் கம்மாய்க்கரைக்கு சென்றான்...

பாண்டியனைக் கண்டதும், தலையை குனிந்தவாறே எழுந்து நின்ற வடிவேலு , "என்னிய மன்னிச்சிரு மாப்ள... உனக்கு நல்லது நடக்கும்னு நெனச்சிதேன்..." என்று இழுத்தவனை தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் பாண்டி...

"நான்தாண்டா மன்னிப்பு கேக்கணும்... உன்னிய பத்தி தெரிஞ்சிருந்தும் நான் அந்த வார்த்தைய உன்னிய பாத்து சொல்லியிருக்கக் கூடாது... அவ மேல இருந்த கோவத்த உன் மேல காட்டிப்புட்டேன்... மன்னிச்சிருடா..." என்றான் பாண்டி...


"விடு மாப்ள..." என்றான் வடிவேலு....

தோழர்கள் இருவரும் தங்களின் மனபாரம் நீங்கி சகஜ நிலைக்கு மாறிவிட்டிருந்தனர்...

ஒரு மணி நேரம் சென்றிருந்த வேளையில், வடிவேலுவுக்கு யாழினி அலைபேசியில் அழைத்தாள்...

அதே நேரம் பாண்டிக்கும் வேறொரு அழைப்பு வரவும் அதில் பேசிக் கொண்டிருந்தான்...

தன் தோழியின் வீட்டிற்கு சென்று அங்கிருப்பவர்களிடம் தன் நிலையைக் கூறிவிட்டு தன் துணிமணிகளை எடுத்துக்கொண்டு வண்டியில் வந்தவள், அவ்வண்டியை வடிவேலுவிடம் ஒப்படைப்பதற்காக அவனுக்கு அழைத்திருந்தாள்...

அவனும் தான் இருக்கும் இடத்திற்கு வரும் வழியைக் கூறிவிட்டு, ஊரில் உள்ள அனைத்து தெய்வங்களையும் வேண்டிக் கொண்டிருந்தான்...

அவன் எண்ணம்போலவே அவள் வண்டியை ஓட்டிவரும் போதே தூரத்திலேயே கண்டுவிட்டான் பாண்டி...

அவன் கோவத்துடன், "இவள..." என்று பல்லைக் கடிக்கவும், வடிவேலு, பாண்டியிடம், "மாப்ள... வண்டிய எங்கிட்ட குடுக்கதான் வருது அந்த புள்ள... வஞ்சிப்புடாதடா.." என்றான் கெஞ்சலாக...

அதற்கு, "வந்த வேலையை மட்டும் பார்த்துட்டு போனாக்கா.. நான் ஒண்ணும் பண்ண மாட்டேன்... இல்லன்னு வை...." என்ற பாண்டியிடம்., "இல்ல மாப்ள... அந்த புள்ள ஒண்ணும் பண்ணாது ... அதுக்கு நான் பொறுப்பு" என்றான்...

வடிவேலு கூறியதைப் போல் யாழினியும் அமைதியாக வந்து வண்டியை அவன் அருகில் நிறுத்திவிட்டு, "தேங்க்ஸ் அண்ணா..." என்று கூறினாள்...

அதற்கு மேல் அங்கிருக்கப் பிடிக்காதவனாய் பாண்டி, "மாப்ள கௌம்பறண்டா" என்று கூறிவிட்டு வண்டியைக் கிளப்பினான்...

அவன் எதிர்பாரா நேரம் அவன் வண்டியில் ஏறி அமர்ந்த யாழினி, "அண்ணா நானும் கௌம்பறேண்ணா..." என்று வடிவேலுவைப் பார்த்து கூறிவிட்டு, பாண்டியிடம், "நாம கௌம்பலாம் மாமா... " என்றாள் கூலாக...

அதில் வடிவேலுவைப் பார்த்து முறைத்தான் பாண்டி...

மூவரின் ரியாக்ஷன் என்னன்னு அடுத்த அத்தியாயத்துல பாக்கலாம்...
 

MekalaArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃபிரெண்ட்ஸ்...

என்னோட உடல்நிலை மற்றும் சில சொந்த காரணங்களால் என்னால அடுத்த அத்தியாயத்தை பதிவிட முடியல... அதுக்காக உங்க எல்லார்கிட்டயும் சாரி கேட்டுக்கறேன்.... ஒரு பெரிய்ய்ய்ய சாரி.... என்னுடைய முதல் கதையான "செந்நிலவில் என் பெண்ணிலா" கதையை மறுபதிவு போடலாம்னு இருக்கேன்.. இப்போதைக்கு "நெஞ்சில் என்றும் நீயடா" பதிவு போடமுடியல... "செந்நிலவில் என் பெண்ணிலா" இந்தக் கதையை படிச்சி என்ஜாய் பண்ணுங்க...

உங்கள் மேகலா அருள்
 
Status
Not open for further replies.
Top