All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நெஞ்சில் என்றும் நீயடா... கதைத்திரி

Status
Not open for further replies.

MekalaArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 5...

ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த யாழினியும் வடிவழகியும் சிறிது நேரம் பேசிக்கொண்டே வந்தனர்...

"வடிவு... உங்க ஊர்ல திருவிழால்லாம் சினிமாவுல காட்டுற மாதிரி சூப்பரா இருக்குமா?" என்று வினவினாள் யாழினி...

"என்னடி இப்புடி கேட்டுப்புட்ட? எங்க ஊர்ல ஒரு வட்டம் திருவிழாவை பார்த்துட்டன்னு வெச்சிக்கோ... அப்புறம் எங்க ஊரைவிட்டு வாரதுக்கு உனக்கு மனசே வராது... ரெங்கராட்டினம், வெளையாட்டுப் போட்டி, பஞ்சு முட்டாயி, ஜவ்வு முட்டாயி, கலர் கலரா சேமியா ஐஸ், ஆளுங்க எல்லாம் விதவிதமா வேஷம் போட்டுக்கிட்டு சுத்துவாய்ங்க... உங்க சென்னையில இருக்கமாதிரி இல்லாம, பொண்ணுங்க எல்லாம், பாவாடை தாவணிதான் கட்டிக்கிட்டிருப்பாய்ங்க... இல்லயின்னா சீலை கட்டிக்கிட்டிருப்பாய்ங்க... தலை நெறைய மதுரை மல்லிய வெச்சிக்கிட்டு மொளப்பாரி தூக்கிக்கிட்டுப் போற அழகே தனிதேன்... பாக்க பாக்க அம்புட்டு அளழகா இருக்கும்... பொம்பளைங்க எல்லாருமா சேந்துக்கிட்டு குளவை போட்டு பாட்டு பாடுவாய்ங்க பாரு... அருமையா இருக்கும் கேக்கறதுக்கு... ஆம்பளைங்க மட்டும் என்ன சும்மாவா? ஜல்லிக்கட்டு, கபடின்னு நிறைய வெளையாட்டு வெளையாடுவாய்ங்க... சும்மா தூள் கௌப்பும் திருவிழாவே... அதுலயும் ஐயனாரு சாமி எறங்கி பூசாரி ஆடுவாரு பாரு... அந்த ஐயனாரே நேர்ல வந்த மாதிரி இருக்கும்..." என்று பேசிக்கொண்டே போனவளை, "அடியேய் வடிவு... கொஞ்சம் மூச்சு வாங்கிக்கோடி... ஊரைப் பத்தி பேச ஆரம்பிச்சதும் தலைகால் புரியாம பேசிக்கிட்டே போற... நான் எங்கேயும் ஓடிப் போயிட மாட்டேன்... இன்னும் பத்து நாளுக்கு உன்கூடதான் சுத்திக்கிட்டிருக்கப் போறேன்... ஒண்ணொண்ணா மெதுவா சொல்லுடி..." என்று கேலி செய்தாள் யாழினி...


அதைக் கேட்ட வடிவோ, "என்ன அம்மு நீ? இப்படி கேலி பேசுத என்னியப் பாத்து... ஆனா.. நீ சொன்னதும் உண்மைதாண்டி... எங்க ஊரப்பத்தி பேச ஆரம்பிச்சதும் சந்தோஷத்துல என்னையே மறந்துட்டேன்... அதுவும் திருவிழான்னா சொல்லவே வேணாம்... திருவிழா முடியற வரை ஊரே கலைகட்டும் ... ஆனா என்ன நம்ம ஊருல நேத்திக்கிதான் திருவிழா முடிஞ்சிது..." என்று ஆனந்தமாக ஆரம்பித்த வடிவு சிறிது மனத்தாங்கலுடன் முடித்தாள்...

அதைக்கேட்ட யாழினியோ சிறிது அதிர்ச்சியுடன், "ஐயோ... என்னடி சொல்ற?.திருவிழா முடிஞ்சிடுச்சா? திருவிழாக்கு கூட்டிக்கிட்டுப் போறன்னு சொல்லிதானே என்னை கூப்பிட்ட... இப்ப இப்படி சொல்ற?" என்று யாழினி கேட்டாள்...

"அடியேய்... அதுக்குள்ள 'டென்சன்' ஆகாத... எங்க ஊருக்குப் பக்கத்து ஊரு கிடாரிப்பட்டியில நாளைக்கு திருவிழா ஆரம்பிக்குது... நாம அங்கிட்டுப் போவலாம்... வெசனப்படாத... உன்னிய அப்புடி எல்லாம ஏமாத்திப்புடமாட்டேன்..." என்று வடிவு கூறி முடிக்கவும், "கிடாரிப்பட்டியா?" என சந்தோஷக்குரலில் கேட்டாள் யாழினி...

தன் தோழியின் குரலில் இருந்த குதூகலத்தில் சிறிது யோசித்த வடிவு, "ஏண்டி... ஏற்கனவே அந்த ஊருக்குப் போயிருக்கியா? இல்லயின்னா அந்த ஊருல யாரையாவது உனக்கு ஏற்கனவே தெரியுமா?" என சந்தேகமாகக் கேட்டாள் வடிவு...

தான் செய்த முட்டாள்தனத்தை எண்ணி தனக்குத் தானே மனதிற்குள் ஒரு குட்டு வைத்துக்கொண்டவள், தன் தோழியை சமாளிப்பதற்காக, "இல்லடி... ஊர் பேரு கேக்க கொஞ்சம் வித்தியாசமா இருந்துதா... அதான் அப்படி கேட்டேன்... வேற ஒண்ணுமில்ல...".என்று அசடு வழிந்தாள்...

தன் தோழியை நம்பாத பார்வை பார்த்த வடிவிடம், "என்னடி? என்னை நம்பலயில்ல நீ? போ... இனி உன் கூட பேசமாட்டேன்" என பொய்யாக கோபம் கொண்டு சிணுங்கிய யாழினியிடம், "என்ன புள்ள இப்புடி பேசிப்புட்ட? நான் உன்னிய நம்பாம வேற யாரை நம்பப்போறேன்... சரி நேரம் ஆச்சு... வா தூங்குவோம்... காலையில வெள்ளனே மதுரைக்குப் போய்ச் சேர்ந்துடும் வண்டி..." என்று தன் தோழியை படுக்க வைத்தாள் வடிவு..

"சரிடி... குட் நைட்..."என்று கூறிய யாழினிக்கோ, தன் தோழியிடம் உண்மையை மறைத்தது சிறிது உறுத்தவே செய்தது...

மறுநாள் விடியலில் வைகை ஆற்றின் நீரில் இளஞ்சூரியனின் பொற்கதிர்கள் விளையாடும் நேரம், ஆமை போல் ஊர்ந்து சென்று மதுரை ஜங்க்ஷனை அடைந்தது அவர்கள் பயணித்த பாண்டியன் எக்ஸ்பிரஸ்....

பத்து நிமிடங்களுக்கு முன்பாகவே உறக்கத்தில் இருந்து விழித்த வடிவு, யாழினியையும் எழுப்பிவிட்டாள்... இருவரும் தயாராகி, தங்களின் உடமைகளை எடுத்து வைப்பதற்கும், ரயில் நிலையத்தினுள் ரயில் நுழைவதற்கும் சரியாக இருந்தது...

உடமைகளை எடுத்துக்கொண்டு இறங்கியவர்கள், ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து சுத்தமான காற்றை சுவாசித்தனர்... ரயில் நிலைய வாசலில் அமைந்திருந்த விநாயகர் கோவிலை மூன்று முறை சுற்றி திருநீறு பெற்றுக்கொண்டார்கள்...

"பிள்ளையாரப்பா... என் காதல் மேல இருக்க தைரியத்துல இங்க கிளம்பி வந்துட்டேன்... நான் நினைச்ச காரியம் நல்லபடியா முடிய நீதான் எனக்கு பக்கத்துணையா இருக்கணும்... " என்று யாழினி கண் மூடி வேண்டவும், யாரோ ஒரு பெண்மணி கோயில்மணியை அடிக்கவும் சரியாக இருந்தது...

அதை நல்ல சகுனமாக நினைத்தவளின் மனதில் இன்பம் பெருக்கெடுத்தது...

அவளின் முகமாற்றங்களை பார்த்துக் கொண்டிருந்த வடிவோ தன் மனதினுள், 'இவ நம்ம கிட்ட இருந்து எதையோ மறைக்கிறா... என்னன்னுதான் தெரியல... ஹ்ம்ம்... எப்படியும் நம்மகிட்ட சொல்லிதானே ஆகணும்... அப்ப பார்த்துப்போம்...' என்று நினைத்தாள்...

சாமி கும்பிட்டு முடித்ததும் அங்கிருந்து பேருந்தில் ஏறி, வடிவின் பெரியம்மா வீட்டிற்கு பயணப்பட்டுக் கொண்டிருந்தார்கள்...

மஞ்சம்பட்டி...

கிராமத்திற்கே உரிய மண்வாசனையுடன் உள்ள ஊர்... புழுதியைக் கிளப்பிக்கொண்டு நிறுத்தத்தில் நின்றது பேருந்து... இறங்கிய இருவரையும் பார்த்த ஒரு பெரிய மூதாட்டி, "ராசாத்தி... வந்துட்டியா... நீ வெள்ளனே வந்துடுவன்னு உங்கண்ணேன் நேத்து ஃபோன்போட்டு சொன்னான்... அதான் தாயி... உனக்காக காத்துக்கெடக்கேன்... எப்படியிருக்கடி என் ராசாத்தி? பாத்து எம்புட்டு நாளாச்சி? கெறங்கி போயிட்டியேடியம்மா... ஒழுங்கா சாப்புட்றியா இல்லையா?" என கண்கள் கலங்க தன் பேத்தியின் கைகளை பற்றிக்கொண்டு ஆசையாகக் கேட்டார்...


"அப்பத்தா... நான் நல்லாதேன் இருக்கேன்... எனக்கு ஒரு கொறையுமில்ல... ஏன் இப்புடி கண்ணைக் கசக்கிக்கிட்டு கெடக்க? மொதல்ல அழுவுறத நிறுத்து... இப்பதேன் நான் வந்துட்டேன்ல... இனி மெட்ராஸ் பக்கம் போவ போறதில்ல... இனி இங்கனயேதான் இருக்க போறேன்... சரியா..." என்று தன் அப்பத்தாவை சமாதானம் செய்தவள், "இங்ஙன பாரு... நீ அழுததுல நான் என் ஃபிரெண்டை பத்தி மறந்து போயிட்டேன்... இவதான் யாழினி... பத்து நாளுக்கு நம்ம வீட்டுலதான் தங்கப் போறா... இப்படி அழுதுக்குட்டு கெடக்காம, அந்த புள்ளய ஒரு வார்த்தை 'வா'ன்னு கூப்புடு" என்றாள்...

இவர்கள் இருவரின் பேச்சில் இரசித்திருந்த யாழினியை, "வா தாயி... எப்புடி இருக்க? வீட்டுல எல்லாரும் சொகந்தானே? நான் வேற ஒரு கிறுக்கச்சி... வந்த புள்ளைங்கள வீட்டுக்கு கூட்டிப் போகாம பேசிக்கிட்டுக் கெடக்கேன்..." என்றவருக்கு, "எல்லாரும் நல்லாயிருக்கோம் பாட்டி" என்ற வார்த்தையோடு முடித்துக் கொண்டாள் யாழினி...

தன் பெற்றோர் எப்பொழுது இப்படி தன்னிடம் பாசமாக பேசுவார்கள் என்று எண்ணியவளுக்கு ஒரு பெருமூச்சு மட்டுமே விடையாக கிடைத்தது...

"அம்மு... இங்ஙன வீடு ஒண்ணும் அவ்ளோ வசதியா இருக்காது புள்ள... கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோடா... ப்ளீஸ்..." என்ற வடிவை முடிந்த மட்டும் முறைத்த யாழினி, "அடியேய் கொலைவெறி ஆக்காதடி... இந்த வார்த்தையை சென்னையில கௌம்பனதுல இருந்து இப்ப வரைக்கும் எப்படியும் நூறு முறை சொல்லியிருப்ப... என்னால முடியலடி... அழுதுடுவேன்..." என்று போலியாக சிணுங்கியவளை கட்டியணைத்துக் கொண்டவள், "சரிடி... சரிடி.... சாரி..." என்றாள்...

"என்ன ஆத்தா? பேத்தி வந்தாச்சா? கெடந்து தவியா தவிச்சிக்கிட்டு கெடந்தியே... இப்பவாச்சும் சந்தோசமா?" என்ற எதிரே வந்த ஒரு பெண்மணி, பாட்டியிடம் கேட்டுவிட்டு மற்ற இருவரையும் நலம் விசாரித்துவிட்டு சென்றார்... சில பல நல விசாரிப்புகளுடன் தன் பெரியம்மா வீட்டை அடைந்தாள் வடிவு...

தன் பெரியம்மாவுக்கு பிள்ளைகள் இல்லாததால் வடிவு என்றுமே அவர்களின் செல்லப்பிள்ளை...

"ஏ ஆத்தா வந்துட்டியா?" என்று விசாரித்த பெரியப்பனும் பெரியம்மாவும் தோழிகள் இருவருக்கும் காலை சிற்றுண்டியை கொடுத்துவிட்டு சிறிது நேரம் உறங்க சொன்னார்கள்...

வீடு பெரிய வீடாக இல்லாவிட்டாலும் ஒரு வரவேற்பரை, சமையலறை, ஒரு படுக்கையறை, வீட்டிற்கு வெளியே பின்புறம் ஒரு கிணறு, அதற்கு பக்கத்தில் குளியலறை, கழிப்பறை... வேலியுடன் கூடிய சிறு தோட்டம் என்று அழகான வீடாக இருந்தது...

"அடியேய் சொர்க்கம் மாதிரி இருக்கு இந்த வீடு.... அதுவும் அந்த கெணத்துக்குப் பக்கத்துல மாமரம்... அதுல நமக்காக ஊஞ்சல் வேற கட்டி வெச்சிருக்காங்க... இதையாடி அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ, அட்ஜெஸ்ட் பண்ணிக்கோன்னு உயிரை எடுத்த... லூசாடி நீ..." என்று தன் தோழியை முறைத்தவள், "செமையா இருக்குடி.. எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு" என்று கூறிவிட்டு காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு சிறு தூக்கம் போட்டவர்கள், மதிய உணவை முடித்துக்கொண்டு மாலை நான்கு மணி அளவில் கோயிலுக்கு கிளம்பினார்கள்...

கிடாரிப்பட்டி

கோயிலுக்கு போகும் வழியில் இருந்த கபடிப் போட்டி பலகைகளைப் பார்த்தவள், அதில் இருந்த ஒருவனின் புகைப்படத்தைக் கண்டதும் சிலையாக நின்றுவிட்டாள்...

அதைப் பார்த்த வடிவு, "அம்மு... இங்க இப்டிதான்... எல்லாத்துக்கும் 'பேனர்' வெப்பாய்ங்க... காது குத்துல இருந்து கருமாதி வரைக்கும்..." என்றவள், அந்த பேனரை சுட்டிக்காட்டி, "அம்மு... இதுல நடுவுல இருக்காருல்ல... அவிங்க பேரு செந்தூரப்பாண்டியன்...எல்லாரும் 'பாண்டி'ன்னு கூப்புடுவாய்ங்க..." என்று ஆரம்பித்தாள்...

யாரைப் பார்த்து சிலையாக நின்றாளோ, தன் தோழி அவனைப் பற்றியே பேச ஆரம்பிக்கவும் மிகவும் ஆர்வமாகக் கேட்க ஆரம்பித்தாள்... அவனுக்காகதானே இங்கே வந்தது... எப்படி? யாரிடம் ஆரம்பிப்பது என்று யோசித்தவளுக்கு, தானே தன் தோழி மூலம் அவனுடைய விவரங்கள் கிடைக்கப்பெற்றால் கசக்குமா என்ன?

"அவிங்கதான் இந்த கபடிக் குழுவுக்கு தலைவரு... சூப்பரா விளையாடுவாய்ங்க... எந்த போட்டியில கலந்துக்கிட்டாலும் அவிங்க 'டீம்' தான் மொதப் பரிசை செயிக்கும்... ரொம்ப நல்லவிங்க... அவங்க குடும்பந்தேன் இந்த ஊருக்கு பெரிய குடும்பம்... ஊர்ல எந்த நல்லது கெட்டது நடந்தாலும் அவிங்கள கேட்டுதேன் நடக்கும்... இதெல்லாம் பயத்துனால இல்ல... மரியாதையினால... ஊருல பாதிக்கு மேல வாய்க்கா வரப்பெல்லாம் அவிங்களோடதுதேன்... ஆனால் அந்த ஆடம்பரம் எதுவும் அவிங்க குடும்பத்துல யாருகிட்டயும் இருக்காது... ரொம்ப அடக்கமானவிங்க... ரொம்ப நல்லவிங்க... கோவில் செய்முறை எல்லாம் அவிங்க தலைமையிலதேன் நடக்கும்... பரிவட்டம் மரியாதை அவிங்களுக்குதேன் நடக்கும்..." என்று நீளமாய்ப் பேசியவள் சிறிது மூச்சு வாங்கினாள்...

"என்ன இருந்து என்னடி... இந்த பாண்டி அண்ணனுக்கு இன்னும் கல்யாணமாகல... மூணு வருசத்துக்கு முன்னாடி சென்னையிலதான் பொண்ணு பாத்தாய்ங்களாம்... கல்யாணம் வரைக்கும் போய் நின்னுடுச்சாம்... அதுல இருந்து அவரு கல்யாணமே வேணாம்னுட்டு கெடக்காராம்..." என்று பெருமூச்சுவிட்டாள்...

இதைக்கேட்டவளோ தன் மனதில், 'எனக்குத் தெரியும்டி... அதை சரி பண்ணத்தாண்டி இப்ப நான் இங்க வந்திருக்கேன்' என்று நினைத்தாள்...

வடிவு மேலும் சொன்ன வார்த்தையில் இதயம் கலங்கி நின்றாள் யாழினி...

"என்ன காரணும்னு தெரியலடி...யாராவது அவர "மாமா"ன்னு கூப்புட்டா கொலைவெறி ஆயிடுவாராம்... ஒரு தடவை அப்டிதேன் அவிங்க மாமா பையன் ஒருத்தன், இவரை தோப்புல வெச்சி, 'உங்கள அப்பா கூப்புடறாரு மாமா'ன்னு சொல்லியிருப்பாரு போல... மனுஷன் என்னடான்னா எளநி சீவ வெச்சிருந்த அருவாளை அந்தப் பையன் கழுத்தை நோக்கி வீச எடுத்துட்டாராம்... எல்லாரும் அலறிட்டாய்ங்களாம்... ஆனா நல்ல வேளை கையில எடுத்ததோட சரி, வீசல... அதனால அந்தப் பையன் தப்பிச்சான்... அதுக்கப்புறம்கூட ரெண்டு மூணு முறை இதை மாதிரி சம்பவம் நடந்திருக்கும்போல... அதுல இருந்து அவரை யாரும் 'மாமா'ன்னு கூப்புட கூடாதுன்னு எல்லார்கிட்டயும் சொல்லிவெச்சிட்டாரு... அத்தை மக, மாமன் மகளுங்க கூட 'அண்ணா'னுதான் கூப்பட்றாய்ங்கன்னு சொன்னாய்ங்க... பாவம்" என்று முடித்தாள் வடிவு...

இதைக் கேட்டவளின் மனதிலோ, 'இந்த அளவுக்கு 'மாமா'ன்ற வார்த்தையையே வெறுக்கறீங்களே... நான் எப்படி உங்களை மாத்துவேன்னு தெரியலியே... அந்த அளவுக்கு என்னை வெறுத்துட்டீங்களா மாமா... நான் பண்ணனு தப்புதான் மாமா... ஒத்துக்கறேன்...ஆனால் நீங்க இவ்வளவு தூரம் வெறுத்துடுவீங்கன்னு நான் கொஞ்சம் கூட நெனைக்கல மாமா... எது எப்படி இருந்தாலும் நான் உங்களை மாத்தி காட்டுவேன்... இந்த ஊருல இருந்து போகும்போது ஒண்ணு உங்க மனசை மாத்திட்டுப் போவேன்... இல்லயின்னா பொணமாத்தான் போவேன்...' என்று மனதினுள் சபதமெடுத்துக் கொண்டாள்...

தன் தோழியின் அமைதியைக் கண்ட வடிவு, "என்னடி என்ன ஆச்சு.? ஏதோ யோசனை பண்ற மாதிரியிருக்கு? எதுவும் பிரச்சினையா?" என்றாள்...

தன்னை சமன் செய்தவள் தன் தோழியைப் பார்த்து, "அதெல்லாம் ஒண்ணுமில்லடி... நீ சொன்ன கதை வித்தியாசமா இருந்துதா... அதான் யோசனை பண்ணிக்கிட்டிருந்தேன்... வேற ஒண்ணுமில்ல... வா போகலாம்..." என்று கூறிவிட்டு தன் தோழியுடன் நடக்கலானாள்...

இதைக் கண்ட வடிவுக்கோ, 'இவ எதையோ மறைக்கிறா... என்னன்னுதான் தெரியல... அவளே சொல்றாளான்னு வெயிட் பண்ணிப் பாப்போம்... இல்லயின்னா நாமளே களத்துல எறங்கி கேட்டுபுடுவோம்...' என்ற முடிவுடன் நடக்க ஆரம்பித்தாள்...


யாழினி செய்த தவறு என்ன?
தன் தோழியிடம் மனம் திறப்பாளா?
தன்னவனை கரம் சேர்ப்பாளா?
அடுத்த அத்தியாயத்தில் காண்போம்...
 

MekalaArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃபிரெணட்ஸ்....

நெஞ்சில் என்றும் நீயடா...


சாரி... நேத்து அப்டேட் பண்ண முடியல...


இதோ... அடுத்த அத்தியாயத்தோட வந்துட்டேன்...

படிச்சிப் பாத்துட்டு எப்படி இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போங்க....
http://srikalatamilnovel.com/community/threads/நெஞ்சில்-என்றும்-நீயடா-கருத்துத்திரி.332/
 

MekalaArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 6...

கோவில் திருவிழாவில் தன்னவன் விளையாடப் போகும் கபடிப் போட்டியைக் காண ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தாள் யாழினி...

அங்கே மேடை ஏறியவனைக் கண்டதும் அவளால் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல்தான் அவனை 'மாமா' என்று அழைத்து சீண்டியது... இதைக் கண்ட வடிவுக்கு தலை சுற்றாத குறைதான்...

"அடியேய்... என்னடி பண்ணுற? நான் அவ்வளவு சொல்லியும் அவரை 'மாமா'ன்னு கூப்புடுற? உனக்கு கிறுக்கா புடிச்சிருக்கு? நீ மட்டும் அவிங்க கண்ணுல மாட்டுனன்னு வை.. அம்புட்டுதேன்.. கொன்னுடுவாய்ங்க... கோயிலுக்கு வந்தோமா.. சாமியப் பாத்தோமா... திருவிழாவுக்கு வந்தோமா.. ரசிச்சோமான்னு போய்க்கிட்டே இருக்கணும். .. அத விட்டுபுட்டு இப்புடி ஏதாவது கிறுக்குத்தனம் பண்ணிக்கிட்டு இருந்தேன்னு வெச்சிக்கோ... அப்புறம் ஊருக்கு ஒழுங்கா போய்ச் சேரமுடியாது... மனசுல வெச்சிக்க சொல்லிபுட்டேன்..." என்று புலம்பிய வடிவைப் பார்த்த யாழினி.. "எனக்கு எல்லாம் தெரியும்டி... நான் பத்திரமா இருந்துக்குவேன்.. உனக்கு என்னைப் பத்தின கவலை எதுவும் வேண்டாம்... நான் செய்யறத கண்டுக்காம வா.. புரிஞ்சிதா?" என்று அடக்கினாள்..

"அடிப்பாவி... உன்னைப் பத்தி நான் கவலப்படாம? வேற யாரு கவலப்படுவாய்ங்களாம்? உங்க அப்பா அம்மா என்னிய நம்பிதேன் உன்னை அனுப்பியிருக்காய்ங்க... உனக்கு ஏதாவது சேதாரம்னா நான்தேன் பதில் சொல்லியாகணும்... அதை தெரிஞ்சிக்க.." என்றாள் வடிவு...

"சரிடி சரிடி.. நீ டென்ஷன் ஆகாத...உனக்கும் எனக்கும் எந்த சேதாரமும் இல்லாம நான் பாத்துக்கறேன்... சரியா... வா போகலாம்..." என்று வடிவை இழுத்துக்கொண்டு சென்றாள் யாழினி...

மறுநாள் காலையிலும் பாண்டியனை கடையில் வைத்து யாழினி 'மாமா' என்று சீண்டியதைப் பார்த்த வடிவுக்கு, 'இவ தெரிஞ்சிதேன் செய்யிறாளா? இல்லையின்னா வெளையாட்டுக்கு செய்யிறாளா? மீனாட்சியாத்தா.. எதுவா இருந்தாலும் அவள நீதேன் பாத்துக்கணும்...' என்று வேண்டிக்கொண்டாள்...

இங்கோ அவளின் பெயரை உச்சரித்த பாண்டியனுக்கோ, உடல் முழுதும் யாரோ தீயை வாரி இரைத்தாற்போல இருந்தது...

அவனின் மனம் கொதிகலனாய் கொதித்துக் கொண்டிருந்தது...

மருதுவும் வடிவேலுவும் அவளின் பெயரைக் கேட்டதும் சிலையாய் சமைந்திருந்தனர்...

முதலில் சுயம் உணர்ந்த மருது, வடிவேலுவின் தோளைத் தட்டி, அவன் காதருகே, "மாப்ள... இப்ப என்னடா பண்றது?" என்றான் சிறுகுரலில்...

நண்பனின் பேச்சில் சுயம் உணர்ந்த வடிவேலு, "மாப்ள... இவன் இம்புட்டுக் கோவக்காரனா மாறுனதுக்குக் காரணமே அவதேன்... அவ பண்ணின காரியத்தாலதான் இவன் இம்புட்டு வருஷமா கல்யாணம் பண்ணிக்கிடாம சுத்திக்கிட்டுக் கெடக்கான்... அவ பண்ணத மறக்கவும் மாட்டேங்கான்... அவள மன்னிக்கவும் மாட்டேங்கான்... முன்னமாதிரி இல்லயின்னாலும் இப்பதேன் கொஞ்சம் நல்லமாதிரி நடக்க ஆரம்பிச்சிருக்கான்... அது பொருக்கலபோல அந்த புள்ளக்கி...
இப்படி வந்து ஒரண்டை இழுக்குது..." என்றவன் சிறிது யோசித்துவிட்டு "மாப்ள... நாம அந்தப் புள்ளயப் பார்த்து பேசுவோம்டா... அந்தப் புள்ளய மொதல்ல இந்த ஊர விட்டுப்புட்டுப் போக சொல்லணும்... என்ன மாப்ள? நான் சாெல்றது சரிதானே?" என்றான்...

"சரிதான் மாப்ள... மொதல்ல இவன வீட்டுக்கு அனுப்புவோம்... பொறவு அந்தப் புள்ளயப் பாத்து பேசுவோம்..." என்ற மருதுவும் வடிவேலுவும் பாண்டியின் அருகில் வந்தனர்...


பாண்டியின் தோள்களில் கைவைத்து அவனைத் தன் பக்கம் திருப்பிய வடிவேலு, "ஏலே.. பாண்டி... நீ வெசனப்படாம வீட்டுக்குப் போ... நாங்க எல்லாத்தையும் பாத்துக்கிடுதோம்... இனி அந்த புள்ள உங்கிட்ட வராத அளவுக்கு நாங்க பாத்துக்கிடுதோம்... நீ மொதல்ல இங்ஙனயிருந்து கௌம்பு..." என்று அவனிடம் கூறிக்கொண்டிருந்தான்...

ஏதோ மறுத்துப் பேச வந்த பாண்டியை, "நீ ஒண்ணும் பேச வேணாம்... நீ மொதல்ல கௌம்பு" என்று அனுப்பி வைத்தான் மருது...

பாண்டியனுக்கும், தான் இங்கே இருந்தால், மறுபடியும் அவள் ஏதாவது தன்னிடம் வம்பு செய்வாள் என்று தோன்றியது...

அந்நேரத்தில் கோபத்தில் தான் ஏதாவது அவளை செய்துவிடக்கூடும் எனத் தோன்றவே, தன் நண்பர்கள் கூறியபடியே அங்கிருந்து வண்டியைக் கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டான்...

"மாப்ள... நீ கடையைப் பாரு... வியாவார நேரம்... நான் அந்த புள்ள எங்ஙன இருக்குன்னு பாத்துட்டு வாரேன்..." என்றான் வடிவேலு மருதுவிடம்..

"சரிடா... கடை வேலை இல்லயின்னா.. நானும் உங்கூடவே வருவேண்டா... இன்னும் சத்த நேரத்துல சித்தப்பா வருவாக... அவுக வந்ததும் நான் உங்கூட வாரேன்... அதுக்குள்ளாற அந்தப் புள்ளயப் பாத்தாக்கா... நம்ம கடைக்கு கூட்டியாந்துரு.. தனியா வச்சிப் பேசுவோம்... திருவிழாக் கூட்டத்துக்குள்ள வெச்சி எதுவும் பேசிப்புடாத... பாவம்... பொட்டப்புள்ளடா.. அப்புறம் தப்பாயிடும்... சரி நீ கௌம்பு... என் வண்டி எடுத்துக்கிட்டுப் போறியாடா?" என்றான் மருது...

"சரிடா மாப்ள... சித்தப்பாரு வந்ததும் நீ வா.. அதுக்குள்ள அந்தப் புள்ளய பாத்தாக்கா.. இங்ஙன கூட்டியாறேன்... வண்டி வேணாம்டா..இங்ஙன எங்கயாவது பக்கத்துலதேன் இருக்கும் அந்தப் புள்ள.. எதுனானா உனக்கு ஃபோன் போட்றேன்... நான் கௌம்புதேன்...." என்று விடைபெற்றுவிட்டு கிளம்பினான் வடிவேலு...

அங்கே யாழினியிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள் வடிவு...

"இந்தா புள்ள ... நீ செய்யிறது கொஞ்சம்கூட எனக்கு சரியாப்படல... நீ என்னவோ வெளையாட்டுக்கு இப்புடி பண்ணினேன்னு நான் மொதல்ல நெனச்சேன்... ஆனா.... இப்ப பாத்தாக்கா.. எனக்கு அப்புடி தோங்கல... அன்னைக்கு என்னடான்னா... கிடாரிப்பட்டின்னு ஊர் பேரைச் சொன்னதும் உன் மூஞ்சி அப்புடி பிரகாசமாச்சி... அன்னைக்கு 'பேனர்' பாத்துட்டு பாண்டி அண்ணனைப் பத்தி சொன்னப்ப... அவ்ளோ ஆசையாக் கேட்டுக்கிட்ட...
அந்த அண்ணன பாத்தப்பலயிருந்து அவுகள 'மாமா மாமா.'ன்னு கூப்புட்டு ஒரண்ட இழுத்துக்கிட்டு கெடக்க... இப்ப என்னடான்னா.. அவுகள கடையில வெச்சி ஒரண்டை இழுத்தது மட்டுமில்லாம ஒரசிட்டு வார... அவுகளப் பத்தி இதுநாள்வரை நான் கேள்விப்பட்ட வரைக்கும், ரொம்ப கோவக்காரர்னு சொல்லுவாய்ங்க... ஆனா.. அவுக என்னாடான்னா... உன்னிய ஒண்ணும் பண்ணாம சிலையாட்டம் சமஞ்சி நிக்கிறாக... உண்மைய சொல்லுடி... அவுகள உனக்கு ஏற்கனவே தெரியுமா? அவுகள பாக்கதேன் எங்கூட மதுரைக்கு வந்தியா? அவுகளுக்கும் உன்னை தெரியுமா? ஒழுங்கு மரியாதையா எங்கிட்ட மறைக்காம சொல்லுடி..." என்று எகிறிக் கொண்டிருந்தாள் வடிவு...

இவ்வளவு பேசியும் அமைதியாக அமர்ந்திருந்த யாழினியைப் பார்த்த வடிவு, "சரிடி உன் இஷ்டம்... எங்கிட்ட சொல்லக்கூடாதுன்னு நினைச்சாக்கா.. நான் உன்னிய வற்புறுத்தமாட்டேன்... ஆனா.. எனக்கு நீ முக்கியம் ... உனக்கு எந்த பிரச்சினையும் வந்துடக் கூடாதுன்னுதேன் நான் கவலப்பட்றேன்..." என்று கூறி முடித்தாள்....

இனியும் தன் தோழியிடம் எதையும் மறைக்கக் கூடாது என்று எண்ணிய யாழினி, "சாரிடி... உங்கிட்ட சொல்லக் கூடாதுன்னு நெனைக்கல... நேரம் வரும்போது சொல்லலாம்னு நெனச்சேன்... சாரிடி..." என்று கண்களில் நீர் துளிர்க்க பேசிவிட்டு தலையை குனிந்துகொண்டாள்...

அவளின் தோற்றம் வடிவின் மனதை உருக்க, "என்ன அம்மு நீ? சாரி எல்லாம் எதுக்கு? ஏன் இப்ப அழுகுற? நீ எங்கிட்டயிருந்து எதையோ மறைக்கிறங்கற கோவத்துலதான் அம்மு நான் அப்புடி பேசிப்புட்டேன்... உன்னிய அழ வெக்கணும் நான் நெனைக்கல அம்மு... விடு... நீ இம்புட்டு கஷ்டப்பட்டுக்கிட்டு எங்கிட்ட எதையும் சொல்ல வேணாம்... வா... நாம கோயிலுக்குள்ளாற போய் சாமிய கும்பிட்டுட்டு வரலாம்..." என்று தன் தோழியை சமாதானப்படுத்தினாள் வடிவு...

தன் சிறுதுளிக் கண்ணீரைக்கூடத் தாங்கமுடியாத தன் தோழியை நினைத்து மகிழ்ச்சியடைந்தவள், "வடிவு..." என்று அணைத்துக்கொண்டு, "உங்கிட்ட சொல்லாம வேற யார்கிட்டடி சொல்லப் போறேன்... சொல்றேண்டி..." என்று கூறிவிட்டு அவளை விடுவிக்கவும், "நானும் அததேன் கேக்க வந்திருக்கேன்... எனக்கும் கேக்குறமாதிரியே சொல்லிப்புடு புள்ள..." என்ற கோவமான ஆண்குரலில் தோழிகள் இருவரும் திரும்பிப் பார்த்தார்கள்...

அங்கே மார்புக்குக் குறுக்கே இரு கைகளையும் கட்டிக்கொண்டு நின்றிருந்தான் வடிவேலு...

வடிவேலுவைப் பார்த்ததும் வடிவு அவனைப் புரியாமல் பார்த்தாள்...

"நீங்க யாரு? நீங்க எதுக்கு இவ சொல்லுறதக் கேக்கணும்? " என்று முறைத்துக்கொண்டே கேட்டாள் வடிவு...


"புள்ள நீ உன் சோலியப் பார்த்துக்கிட்டு போ... நான் அந்த புள்ளகிட்டதேன் பேசிக்கிட்டிருக்கேன்..." என்று பதிலுக்கு கோவமாக உரைத்தான் வடிவேலு....


வடிவேலுவுக்கு கோபமே வராது... ஆனால் தன் நண்பனின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டவள், மறுபடியும் அவன் வாழ்வில் நுழைந்து அவனை வருந்தச் செய்வதை அவன் விரும்பவில்லை... தன் சுயத்தை தொலைத்துவிட்டு வெறும் கோவக்காரனாக மட்டும் வலம் வந்து கொண்டிருக்கும் தன் நண்பனின் நிலையை எண்ணி கவலை கொண்டான்... தன் நண்பனை சீண்டி விளையாடி, அவனை மேலும் பொல்லாதவனாக மாற்றிக் கொண்டிருப்பவளை இந்த ஊரைவிட்டே வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் யாழினியைத் தேடிவந்தான்... இங்கேயோ அவன் கேட்ட கேள்விக்கு அவள் வாயைத் திறக்காமல் நிற்கவும், வடிவேலுவிற்கு என்றுமில்லாத அழையா விருந்தாளியாக கோவம் வந்துவிட்டது... அதிலும் வடிவு அவனை கோவமாகக் கேள்வி கேட்கவும் அவளிடமே எகிறினான்...

வடிவேலுவின் வார்த்தைக்கு பதில் வார்த்தைப் பேசப்போன வடிவழகியை தடுத்த யாழினி, "வடிவு.. நீ அமைதியாயிரு... நான் பேசிக்கிறேன்..." என்றாள்...

அதற்கு வடிவோ, "இல்லடி... இவுக யாருன்னே தெரியலியே.. இவுக எதுக்கு நீ பேசுறதக் கேக்கணும்னு சொல்லுறாக?" என்றாள்...

இன்னும் தன் கேள்விக்கு பதில் கூறாமல் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கும் தோழிகளைக் கண்டு கடுப்பானவன், வடிவைப் பார்த்து, "என்ன புள்ள என்னியத் தெரியலியா? நான்தேன் உன் மாமன் மகன்... உங்கூட சோடி சேர்ந்து வெளையாடத்தேன் வந்தேன்... நீ இங்ஙன இந்த புள்ள கூட பேசிக்கிட்டிருக்கவும் எனக்கு போறாமை வந்துடுச்சி... அதான் அந்த புள்ள உங்கிட்ட என்ன பேசப்போகுதுன்னு கேக்க வந்தேன்..." என்று முறைத்தவாறே கூறிவிட்டு, "நல்லா கேக்குற பாரு கேள்வி... கேனச்சி மாதிரி... உன் ஃபிரெண்டு பண்ணி வெச்சிருக்குற வேலைக்கு பாண்டி அவள கொல்லாம விட்டதே பெருசு... ஒழுங்கு மருவாதையா அந்த புள்ளய மூட்டை முடிச்ச கட்டிக்கிட்டு ஊரப்பக்கம் பாத்து போக சொல்லிப்புடு... இல்லயின்னா நடக்கற சங்கதியே வேற... சொல்லிபுட்டேன்... ஆமா..." என்று விரல் நீட்டி எச்சரித்தான்...


அதில் வெகுண்டெழுந்த வடிவு... "என்னலே... கொஞ்சம் விட்டா என்ன வேணாலும் பேசிடுவீகளோ... எங்க இவ மேல கைய வெச்சிப் பாருங்க பாக்கலாம்... ஆஞ்சிப்புடுவேன் ஆஞ்சி... எங்கிட்ட எகுறுற வேலை வெச்சிக்கிட்டீங்க... எளநீ சீவர மாதிரி சீவிப்புடுவேன்... சாக்கிரத..." என்று தன் பங்கிற்கு எகிறினாள்...

தன் தோழியைப்பற்றி அவன் பேசியது அவளுக்குப் பிடிக்கவில்லை... பதிலுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தாள் வடிவு...

முதலில் தன் நண்பனின் நிலையை எண்ணி ஏதோ வேகத்தில் பேசிய வடிவேலு, வடிவின் பேச்சில் அரண்டுவிட்டான்...

'அடியாத்தி... நமக்கே இப்பதேன் வாழ்க்கையில மொதமொதலா... அதிசயமா கோவம் வந்துது... அது பொருக்கலயா இந்த மகராசிக்கு... இப்புடி வாங்கு வாங்குன்னு வாங்குறா? எப்படி சமாளிக்கறதுன்னே தெரியலியே... அய்யோ... சொக்கநாதா... என்னிய காப்பாத்தி விடுப்பா... ' என்று மனதினில் வேண்டுதல் வைத்தாலும், வெளியே தன் கம்பீரத்தை விட்டுத்தராமல் வடிவை முறைத்தவாறே நின்று கொண்டிருந்தான்...

இவர்களின் சண்டை அதிமாகவே, இருவரிடமும் சண்டையை நிறுத்தச்சொல்லி மாற்றி மாற்றி போராடிக் கொண்டிருந்த யாழினி, தன் பொறுமையையிழந்து, "இப்ப நீங்க சண்டையை நிறுத்தப் போறீங்களா.? இல்லையா? எல்லாரும் நம்மளதான் பாத்துக்கிட்டிருக்காங்க" எனக் கத்திவிட்டாள்...

அவள் கத்திய பிறகுதான் சுற்றுப்புறத்தையே இருவரும் பார்த்தனர்... திருவிழாவிற்கு வந்த சிலர் தங்களின் சண்டையைப் பார்த்து நின்று கொண்டிருப்பதை...

என்ன செய்வதன்று புரியாமல் வாயை மூடிக் கொண்டனர் இருவரும்...

கூட்டத்தில் ஒரு பெரியவர் இவர்களிடம் வந்து வடிவேலுவைப் பார்த்து, "என்ன தம்பி? தனியா இருக்க பொம்பளப் புள்ளைங்ககிட்ட ஒரண்ட இழுத்துக்கிட்டுக் கெடக்க? " என்று தன் மீசையை முறுக்கியவாறே அதட்டவும், 'யோவ் பெருசு... நாந்தான்யா இங்ஙன தனியா மாட்டிக்கிட்டுத் தவிக்கேன்.. இது புரியாம நீ வேற வந்து உசுர வாங்குற' என்று மனதில் புலம்பினான்...

பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த யாழினி, "அய்யோ தாத்தா... நீங்க தப்பா நெனச்சிட்டீங்க... இவரு என்னோட அண்ணன்... இவ எங்க மாமா பொண்ணு... ரொம்ப நாளாச்சி இவளப் பார்த்து.. அதான் 'ஏன் இவ்ளோ நாளா என்னைப் பாக்க வரலன்னு சண்டை போட்றா... வேற ஒண்ணும் இல்ல..." என்று முதியவரிடம் கூறியவள் தன் தோழியைப் பார்த்து பார்வையால் கெஞ்சிக் கொண்டு, "அப்படிதானடி.... தாத்தா கிட்ட 'ஆமா'ன்னு சொல்லுடி" என்றாள்...

அதில் யாழினியை முடிந்தமட்டும் முறைத்தவள், முதியவரைப் பார்த்து,"ஆமா தாத்தா... ஒண்ணும் பிரச்சினையில்ல... நீங்க கௌம்புங்க" என்று அனுப்பிவைத்தாள்...

பின் தன் தோழியைப் பார்த்து, வடிவேலுவை சுட்டிக்காட்டி, "இது ஒரு மூஞ்சி.. இந்த மொகரயப் பாக்காம நான் ஏங்கிப் போய்க் கெடக்கேன் பாரு... இதுல, 'ஏன் என்னியப் பாக்க வரல'ன்னு சண்டை வேற போட்றாய்ங்க... பொய் சொல்றதுக்கும் ஒரு அளவு வேணாமாடி உனக்கு" என்று எகிறினாள் வடிவு...

அதற்கு வடிவேலு ஏதோ கூற வரவும், தன் இரு கைகளை எடுத்து தலைக்கு மேலே வைத்து பெரிய கும்பிடு போட்டவள், "மறுபடியும் ஆரம்பிச்சிடாதீங்க... ப்ளீஸ்..." என்று கெஞ்சினாள்... அதில் இருவரும் அமைதியாயினர்...

வடிவைப் பார்த்து, "வடிவு... இவரு பாண்டியன் அண்ணாவோட ஃபிரெண்ட் வடிவேல்" என்று கூறிவிட்டு, வடிவேலுவைப் பார்த்து, "வேலு அண்ணா..." என்றாள்..

அவளின் வார்த்தையில் அவளை உற்று நோக்கினான் அவன்...

"ஒருவேளை இவ்ளோ நேரம் நான் யாருன்னு உங்களுக்கு தெரியாம இருந்தாலும், இப்ப நான் கூப்பிட்ட, 'வேலு அண்ணா'ங்கிற வார்த்தையில என்னைக் அடையாளம் கண்டிருப்பீங்க." என்றாள்...

"எனக்கு மொத அப்பவே தெரியும்" என்றான் அவன் முறைப்பாகவே...

"ம்ம்ம்" என்று தலையசைத்தாள் யாழினி கண்ணின் ஓரம் நீர்த்துளியுடன்...

'நான் எல்லாருடைய பாசத்தையும் இழந்துட்டேனே ஆண்டவா... இதுவே பழைய மாதிரியிருந்தா... எவ்வளவு ஆசையா விசாரிச்சிருப்பாங்க என்னை? 'தங்கச்சி தங்கச்சி'ன்னு உருகியிருப்பாங்களே... எல்லாத்தையும் தொலைச்சிட்டு நிக்கறேனே... திரும்பவும் பழைய சந்தோஷம் கிடைக்குமா எனக்கு?' என்று மனதினில் உழன்று கொண்டிருந்தவளை மற்ற இருவரும் ஒரு சேர அழுத்தமான குரலில், "எதுக்காக நீ இங்க வந்தேன்னு சொல்லு" என்ற கேள்வியில் நிகழுலகிற்கு வந்தாள் யாழினி...

அவர்களின் கேள்வியில் அவர்களை நிமிர்ந்து பார்த்தவள், தன் கண்களைத் துடைத்துக் கொண்டு, உறுதியான மனதுடன், "பாண்டி மாமாவைக் கல்யாணம் பண்ணிக்கதான் வந்தேன்... இந்த ஊரை விட்டுப் போகும்போது, ஒண்ணு அவர் மனைவியா அவர்கூட போவேன்... இல்லயின்னா..." என்று நிறுத்தியவள், ஆழ்ந்த மூச்சொன்றை விட்டுவிட்டு, "பொணமாத்தான் போவேன்" என்றாள்...

அவளின் வார்த்தையில் இருவரும் உறைந்து நின்றிருந்தனர்...


அவளின் எண்ணம் ஈடேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..
 

MekalaArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃபிரெண்ட்ஸ்...

நெஞ்சில் என்றும் நீயடா...

அடுத்த அத்தியாயத்தோட வந்துட்டேன்...

படிச்சிப் பார்த்துட்டு ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போங்க... ப்ளீஸ்...

http://srikalatamilnovel.com/community/threads/நெஞ்சில்-என்றும்-நீயடா-கருத்துத்திரி.332/
 

MekalaArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் ஏழு...

யாழினியின் வார்த்தையில் உறைந்த இருவரில் முதலில் சுதாரித்த வடிவு, "ஏ புள்ள... என்ன பேச்சு பேசுத நீயி... இன்னொரு வட்டம் நீ இப்புடி பேசனன்னு வை... அவ்வளவுதான் சொல்லிப்புட்டேன்..." என்று தன் தோழியின் வார்த்தையை தாங்க முடியாமல் கத்திக்கொண்டிருந்தாள்...

வடிவேலு, "இந்தா புள்ள... இ்ப்ப என்ன நடந்துப்போச்சுன்னு இப்புடிப் பேசுத... இனி ஒருக்கா அந்த வார்த்தை உன் வாயிலயிருந்து வரக்கூடாது புரிஞ்சிக்கோ..." என்று அதட்டினான்...

இருவரையும் பார்த்து கசந்த புன்னகை புரிந்த யாழினி, "நான் சொல்றது உண்மை... நான் மாமா மனச மாத்தி என்னை கல்யாணம் பண்ணிக்க வெப்பேன்... இல்லையின்னா இந்த ஊரை விட்டுப் பொணமாத்தான் போவேன்..." என்று தீர்க்கமாகக் கூறி முடித்தாள்...

வடிவேலு, "புள்ள... நீ நினைக்கறது எதுவும் கண்டிப்பா நடக்காது... நீ உன் நெனைப்பை மாத்திக்கோ... அவன் உன் மேல ரொம்ப கோவத்துல கெடக்கான்... இப்ப நீ மட்டும் தனியா அவங்கிட்ட சிக்குனன்னு வெய்யி... கொண்டு(று) போட்டுடுவான்... நீ அவன சீண்ட ஆரம்பிச்சப்பலேர்ந்து அவன் எம்புட்டுக் கோவத்தோட சுத்துக்கிட்டுக் கெடக்கறாங்கறத நான் கூடவே இருந்து பாத்துக்கிட்டுதேன் இருக்கேன்... அதனாலதேன் இம்புட்டு உறுதியா சொல்லுதேன்... நல்லா கேட்டுக்கோ... உன் நெனப்பு எதுவும் இங்ஙன நடக்காது... நாளைக்கே மொத வண்டிய புடுச்சி ஊருக்குப் போய் சேருற வழியப் பாரு..." என்று யாழினியிடம் கூறியவன் வடிவைப் பார்த்து, "இந்தா புள்ள... மொத உன் சிநேகிதப் புள்ளய ஊருக்கு முழுசா அனுப்பி வெக்கிற வழியப் பாரு" என்று கோபமாகக் கூறினான்...

"அதெல்லாம் நாங்க பாத்துக்கிடுதோம்... அதப் பத்தி நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்... ம்க்கும்" என்று கூறிய வடிவு தன் கன்னத்தை தன் தோளில் இடித்து பார்வையால் ஒரு வெட்டு வெட்டினாள்...


அவளின் செய்கையில் கோபம் கொண்ட வடிவேலு அவளைத் திட்டும் முன்பே, "வேலு அண்ணா" என்ற உருகிய அழைப்பில் அப்படியே நின்றான்...

யாழினி அப்படி அவனைக் கூப்பிடவும், அவளுக்கு தன் முகத்தின் உணர்ச்சிகளைக் காட்டாமல், தலையை குனிந்து கொண்டான்...

அதில் கசந்த புன்னகையை தன் இதழில் நிறுத்திய யாழினி, "ம்ஹ்ம்.. அவருக்குதான் நான் 'மாமா'ன்னு கூப்பிட்டா பிடிக்கலன்னு நெனச்சேன்... ஆனா... உங்களுக்கும் நான் உங்கள 'அண்ணா'ன்னு கூப்பிடறது பிடிக்கலல்ல... என் முகத்தைக் கூடப் பார்க்காம இப்படி தலையை குனிஞ்சி நிக்கறீங்க... என்னை நீங்களும் வெறுத்துட்டீங்க... அப்படித்தானே..." என்று கண்கள் கலங்க குரல் தழுதழுக்க பேசினாள்...

அவளின் மேல் பாசம் சுரந்தாலும், தன் நண்பனின் இன்றைய நிலைக்கு இவள்தானே காரணம் என்று எண்ணிய அடுத்த கணமே, பாசம் மறைந்து கோபம் குடி கொண்டது...

ஆழ்ந்த மூச்சொன்றை வெளியிட்டவன், அவளை நேருக்கு நேராக பார்த்து, "ஆமாம்... உன்னிய பாக்கப் புடிக்கல... உங்கிட்ட பேசப் புடிக்கல... உன்னியப் பாத்தாலே பத்திக்கிட்டு எரியுது உள்ளுக்குள்ளாற.. எங்க பாண்டி இப்ப இப்படி ஜீவனில்லாம சுத்துறதுக்கு காரணமே நீதான... அதுக்காகவே உன்னிய கொன்னு பொதைச்சிருக்கணும்... என்ன பண்ணுறது? தெரிஞ்சோ தெரியாமலோ... கொஞ்ச நாள் உன்னிய என் தங்கச்சியா நெனச்சிப்புட்டேன்... அந்த பாவத்துக்குத்தேன் இப்ப உன்னிய கொல்லாம, ஊருக்குப் போகச் சொல்லிட்டுக் கெடக்கேன்..." என்றான் அழுத்தமாக...

"இந்த அளவுக்காவது எங்கிட்ட பேசறீங்களே.. அதுவே போதும்ணா... ஆனா... .நீங்க சொன்னமாதிரி நான் இந்த ஊரைவிட்டுப் போகமாட்டேன் அண்ணா... மாமா மனச மாத்தி என்னைக் கல்யாணம் பண்ணிக்க வெப்பேன்... இதுக்கு நீங்க ரெண்டு பேரும்தான் எனக்கு உதவி பண்ணனும்.. ப்ளீஸ்" என்று கெஞ்சினாள்...

"என்ன புள்ள நீ? புரிஞ்சி பேசுதியா? இல்லயின்னா புரியாம பேசுதியா? நீ நெனைக்கறது உன் கனவுல மட்டும்தேன் நடக்கும்... நெசத்துல நடக்க வாய்ப்பேயில்ல..." என்றான் வடிவேலு...

"ஏன் அண்ணா? உங்க 'க்ளோஸ் ஃபிரெண்டு'க்கு கல்யாணம் ஆகணும்னு உங்களுக்கு ஆசையில்லையா? அவரும் மத்தவங்கள மாதிரி மனைவி குழந்தையோட வாழணும்னு உங்களுக்கு எண்ணமில்லையா?" என்று கேள்வி கேட்டாள் யாழினி...

அவளின் கேள்வியில் கோபமுற்றவன், "ஏ புள்ள... இந்தாரு... அவனுக்கு கல்யாணமாகி சந்தோஷமா வாழணும்னு எல்லார விடவும் நான்தான் அந்த சொக்கநாதங்கிட்ட தெனமும் வேண்டிக்கிட்டுக் கெடக்கேன்... என்னிய பாத்து என்ன கேள்வி கேட்டுப்புட்ட?" என்றான் கோவமாக...

"தெரியும்ணா... ஆனா அவரப் பத்தி உங்களுக்குதான் புரியலண்ணா... நல்லா யோசிச்சி சொல்லுங்கண்ணா... என்னைத் தவிர வேற யாராவது அவரை நெருங்க முடியுமா? இல்லை... அவரைக் கல்யாணத்துக்கு சம்மதிக்கதான் வைக்க முடியுமா? அவர் கோவமா இருந்தாலும், அவர் மனசுல இப்ப, நான் மட்டும்தான் இருக்கேன்... அவர பழைய பாண்டியனா மாத்துறதுக்கு என்னால மட்டும்தான் முடியும்... அதுக்கு நீங்க ரெண்டு பேரும் உதவி பண்ணனும்... எனக்காக இல்லன்னாலும், கண்டிப்பா உங்க ஃபிரெண்டுக்காக நீங்க எனக்கு உதவி பண்ணுவீங்கன்னு தெரியும்.... என்ன அண்ணா? நான் சொல்றது சரிதானே?" என்றாள் சிரித்த முகத்துடன்...

அவளின் பேச்சில் இருந்த உண்மை புரிந்தாலும், இது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பது தெரியாது என்பதால், "நீ சொல்லுறது சரிதேன்.. நீ சொல்லுற மாதிரி நடந்தா ரொம்ப சந்தோஷமா இருக்கும்... ஆனா இது நடக்குமா?" என்றான் வடிவேலு எதிர்பார்ப்புடன்...

"கண்டிப்பா நடக்கும்ணா... நீங்க ஹெல்ப் பண்ணீங்கன்னா... கண்டிப்பா நடக்கும்... இப்ப எனக்கு தேவையெல்லாம் உங்க ஹெல்ப்தான்... பண்ணுவீங்கல்ல?" என்றாள் தயக்கத்துடன்...

சிறிது யோசித்தவன், "கண்டிப்பா மா... அவன் நல்லாயிருக்க நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன் மா..." என்றான்...

அவன் வார்த்தையைக் கேட்டவள் சந்தோஷத்தில் துள்ளி குதித்தாள்...

"தேங்க்ஸ் அண்ணா... தேங்க்யூ சோ மச்... இப்ப நீங்க சொன்ன வார்த்தையை எப்பவும் மனசுல வெச்சிக்கோங்கண்ணா.... அது போதும் எனக்கு... சரி இப்பவே நாம களத்துல எறங்கலாமா? ஆர் யூ ரெடி?" என்றாள் யாழினி..

அவளின் மகிழ்ச்சி அவனையும் தொற்றிக்கொண்டது... தன் நண்பன் இனி சந்தோஷமாக வாழ்வான் என்ற எண்ணமே வடிவேலுக்கு பேருவகையை அளித்தது... அந்த சந்தோஷத்தில், "ஐ யம் வெய்ட்டிங் தங்கச்சி" என்றான்...

அவனின் 'தங்கச்சி' என்ற வார்த்தையை இத்தனை வருடங்களுக்குப் பிறகு கேட்டவளின் கண்களில் நீர் கோர்த்தது...

கலங்கிய கண்களுடன், "நீங்க என்னை 'தங்கச்சி'ன்னு கூப்பிட்டுட்டீங்கண்ணா... இதுவே எனக்கு முதல் வெற்றிதான்.. இனி எல்லாம் நல்லபடியா நடக்கும்னு நம்பிக்கை வந்துருச்சிண்ணா எனக்கு" என்றாள் யாழினி...

அவள் கூறியபிறகுதான், தான் அவளை அவ்வாறு அழைத்தது உரைத்தது வடிவேலுவுக்கு...

அதில் சிரித்தவன், "வாழ்த்துக்கள் தங்கச்சி... இனி எப்பவும் நான் உங்கூடவே இருப்பேன்... சரி... இப்ப நான் என்ன பண்ணனும்னு சொல்லு... சிறப்பா செஞ்சிடுவோம்" என்றான்...


"அது வந்து அண்ணா..." என்று யாழினி ஆரம்பிக்கவும், இவர்கள் இருவரும் பேசிக்கொண்டதை இவ்வளவு நேரம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த வடிவு, "அடியேய் இங்ஙன ஒருத்தி இருக்கேன்னு நியாபகம் இருக்கா? இல்லையா? ரெண்டு பேரும் சேந்துக்கிட்டு நல்லா ஓட்றீங்க படம்... யப்பா... சிவாஜி கணேசனும் சாவித்திரியும் தோத்தாய்ங்க போங்க..." என்று சீண்டினாள்...

அதற்கு வடிவேலு, "பொறாமையில பொங்காத புள்ள..." என்று நக்கல் செய்தான்...


"அய்ய..." என்று தலையிலடித்துக் கொண்ட வடிவு, "பொறாமை பட்ற அளவுக்கு இங்க எந்த 'சீனும்' ஓடல... உங்க அலப்பறை தாங்கல... அதான் அத நிறுத்த சொல்றேன்..." என்றாள் வடிவு...

"இந்தா புள்ள... இது நல்லாயில்ல சொல்லிபுட்டேன்... எது பேசினாலும் எடக்காவே பேசுத நீயி... பொட்டப்புள்ளயா அடக்கமா இருக்க பழகிக்கோ... புரியுதா?." என்றான்...

"ம்க்கும்... எடக்கு மடக்கா... எகன மொகனயா பேச நீ என் அயித்த மவன் பாரு... போயா அங்கிட்டு" என்றாள் வடிவு...

"அடிங்க..." என்று அவளை அடிக்க போவது போல் கையைத் தூக்கியவன், அவள் பயந்து ஓரடி பின்னால் எடுத்து வைக்கவும், "அது... அந்த பயம் இருந்தா சரி.." என்றவாறே ஓங்கிய கையை இறக்கி பின்தலையை கோதிவிட்டு, மீசையை முறுக்கிவிட்டான்...

அதற்கு அவனை முறைத்தவள், "இவரு பெரிய இவரு... இவரப் பாத்து பயப்படுறாக.... போவியா அங்கிட்டு..." என்றாள் நக்கலாக...

'என்ன பேச்சு பேசுதுபா இந்த புள்ள... இதுகிட்ட பேசி செயிக்க முடியாது போலயே... யப்பா... இந்த புள்ளயக் கட்டிக்கிடப் போறவன் ரொம்ப பாவம்... மீனாட்சியாத்தா அவன காப்பாத்து' என்று மனதில் வேண்டியவன்... "அம்மா தாயே... மதுரை மீனாட்சி... காஞ்சி காமாட்சி... காசி விசாலாட்சி... என்னிய விட்டுடு... உன் அளவுக்கு எனக்கு பேச வராது தாயி... நான் பாவம்... இத்தோட நிறுத்திக்க...." என்று தலைக்குமேல் இரு கைகளையும் தூக்கி கும்பிடு போட்டான்...

அவன் செய்கையில் அடக்கமாட்டாமல் வடிவு சிரிக்க, கூடவே யாழினியும் சேர்ந்து சிரித்தாள்...

"என் பொழப்பு சிரிப்பா சிரிக்குதுல்ல... எல்லா என் நேரம் அப்புடி" என்று புலம்பினான் வடிவேலு...

"சரி சரி... போனா போவுதுன்னு பாவம் பாத்து விட்றேன்... பொழச்சிப் போயா..." என்றாள் சிரிப்புடன் வடிவு...

"நல்லது தாயே... ரொம்ப சந்தோசம்." என்றான்...

இப்பொழுது யாழினியிடம் திரும்பிய வடிவு, "இன்னும் நீ என் கேள்விக்கு பதில சொல்லல" என்றாள் இடுப்பில் கைவைத்துக் கொண்டு அவளை முறைத்தவாறே...

அதற்கு, "உன்னை எப்டிடி மறப்பேன்... நீதான்டி இப்ப எனக்கு எல்லாம்..." என்று அவளை அணைத்துக் கொண்டாள் யாழினி...

"ம்க்கும்" என்று தொண்டையை செருமிய வடிவேலு, ஏதோ சொல்ல வருவதற்குள், "தொண்டையில் கிச் கிச்சா? விக்ஸ் மாத்திரை சாப்டுங்க... கிச் கிச் போக்குங்க.." என்றாள் வடிவு...

அதில் அவளை முறைத்தவன், "நாம தான் ஒப்பந்தம் போட்டாச்சுல்ல... இப்ப ஏன் என்னிய ஒரண்ட இழுக்குற நீயி... " என்றான்...

"இல்ல... அதுவந்து..." என்றவளிடம், மறுபடியும் பெரிய கும்பிடு போட்டுவிட்டு, "இனி உனக்கும் எனக்கும் எந்தப் பேச்சும் இல்ல... நான் என் தங்கச்சிக்கூட பேசிக்கிடுதேன்..." என்றான்...

"ம்ம்ம்... சரி... சரி..." என்றாள் நக்கலாக வடிவு...

"ஏய் சும்மா இருடி..." என்று தன் தோழியை இடித்த யாழினி, "சரி வாங்க... எனக்கு பசிக்குது... ஏதாவது சாப்பிட வாங்கலாம்... அப்புறம் பேசலாம்..." என்றவாறு அங்கிருந்த கடைகளில் நொறுக்குத் தீனியை வாங்கிக்கொண்டு, மரத்தின் நிழலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாட்டு வண்டியில் ஏறி அமர்ந்தனர்... (வண்டி மட்டும்தான் அங்க இருந்தது ... மாடு இல்ல...)

"சொல்லு அம்மு... முதல்ல என்ன பண்ணப் போற நீ?" என்றாள் வடிவு...

"ம்ம்ம்... சொல்றேன்... மொதல்ல மாமா வீட்டுக்குள்ள போகணும்... அவங்க வீட்டுல இருக்கவங்க மனச மொதல்ல மாத்தியாகணும்..." என்ற யாழினி, வடிவேலுவைப் பார்த்து, "அண்ணா... அவங்க வீட்டுக்குள்ள போறதுக்கு நீங்கதான் ஹெல்ப் பண்ணனும்" என்றாள்...

அதில் அவன் ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பொறிகடலை புரையேறியது...


"அய்யோ அண்ணா... பாத்து...." என்றவள் அருகிலிருந்த தண்ணீரை எடுத்துக் கொடுத்தாள்...


தன்னிலை சமாளித்தவன், "ஆடு, கோழி... ஏன் மாடு கூட காவு குடுப்பாய்ங்க... ஆனாக்கா... நீ என்னடான்னா... என்னிய காவு குடுக்க பாக்குறியா? ஏம்மா இந்த கொலவெறி? நான் மட்டும் உனக்கு ஒ(உ)தவி பண்ணேன்னு தெரிஞ்சிதுன்னு வெய்யி... அந்த ஐயனாரு (நம்ம ஹீரோ பாண்டியன்தான்... வேற யாரு...) என்னிய கொன்டே(னே) போட்டுடுவான்... வேறு எதுனாலும் பண்ணச் சொல்லு நான் பண்ணுறேன்... இது மட்டும் என்னால முடியவே முடியாது..." என்றான் திட்டவட்டமாக...

"என்ன அண்ணா நீங்க... அப்ப என்னன்னா... 'என் நண்பன் நல்லாயிருக்க... நான் எது வேணும்னாலும் பண்ணுவன்'னு சொன்னீங்க... இப்ப என்னடான்னா... இப்படி பயப்பட்றீங்க" என்று கேட்கவும் வடிவேலுவின் செல்ஃபோன் சிணுங்கவும் சரியாக இருந்தது...

அழைப்பது மருது என்கவும் அதை உயிர்ப்பத்து காதில் வைத்தவன், "சொல்றா மாப்ள...." என்றான்...

"மாப்ள எங்ஙன இருக்க? அந்தப் புள்ளயப் பாத்தியா? பேசுனியா?" என்றான் மருது...

தன் நண்பனுக்கு இன்னும் இதைப்பற்றி சொல்லாதது அப்போதுதான் நினைவு வந்தது வடிவேலுவுக்கு...

"மாப்ள... பாத்துட்டேண்டா.. அந்தப் புள்ள கூடதேன் இருக்கேன்... நான் சொல்லுற எடத்துக்கு வெரசா வா..." என்று தாங்கள் இருக்கும் இடத்தைக் கூறிவிட்டு அவன் வருகைக்காக காத்திருந்தான்... அவன் வந்ததும், அங்கே நடந்தவற்றை சுருக்கமாகக் கூறியவன், "இப்ப எப்படிடா இந்த புள்ளய அவன் வீட்டுக்குள்ளாற கூட்டிக்கிட்டுப் போறது" என்றான் வடிவேலு..

சிறிது யோசித்த மருது, "ஏலே... நீ அப்பத்தாக்கிட்ட மொதல்ல இந்தப் புள்ளய கூட்டிக்கிட்டுப் போ... நீ பேசுனாக்கா.. அப்பத்தா புரிஞ்சிக்கிடும்... அப்புறம் மத்ததை அப்பத்தாவே பாத்துக்கிடும்... என்ன நாஞ்சொல்றது?" என்றான் மருது...

"நீ சொல்றதுதாண்டா சரியான வழி.." என்று ஆமோதித்தவன், "தங்கச்சி... நீ இந்த புள்ளயயும் கூட்டிக்கிட்டு வா... வீட்டுக்குப் போவோம்... அதுக்கு முன்னாடி அந்த ஐயனாரு எங்ஙன இருக்கான்னு கேட்டுக்கிடுவோம்...." என்றான் வடிவேலு...

பாண்டியனுக்கு ஃபோன் போட்டு பேசியவன், அவன் வீட்டிலிருப்பதாகவும், அப்பத்தாவும் அம்மாவும் பக்கத்து தெருவில் உள்ள வீட்டில் நடக்கும் விசேஷத்திற்கு சென்றுள்ளதாகவும் கூறினான்...

"இதுதாண்டா சரியான நேரம்... அப்பத்தாவையும் அம்மாவையும் ஒண்ணா சேத்து வெச்சே பாத்துடலாம்..." என்ற மருது.. "உங்களுக்கு வண்டி ஓட்டத் தெரியுமா.?" என்றான்...

யாழினிக்கு ஓட்டத் தெரியும் என்பதால் அவளிடம் தன் நண்பர் ஒருவரின் 'ஸ்கூட்டி'யை வாங்கிக் கொடுத்தான்...

"நாங்க முன்னாடி போறோம்... பாத்து கோளாறா பின்னாடியே வாங்க...." என்றவாறு சென்றனர்...


அந்த வீட்டை அடைந்ததும் அப்பத்தாவையும் அம்மாவையும் தேடி வெளியில் கூட்டி வந்தவன், அருகிலிருந்த அம்மன் கோவிலுக்கு கூட்டி சென்றான்... ஏற்கனவே யாழினி, வடிவு மற்றும் மருது ஆகிய மூவரும் இவர்களுக்காக அங்கே காத்திருந்தனர்...

"அடேய்... எதுக்குடா இப்ப கோயிலுக்கு இவ்ளோ அவசரமா கூட்டிக்கிடுப் போற? புளிசோறு பொங்கசோறு எதுவும் குடுக்கறாய்ங்களா? உனக்கு நிறைய வேணும்னுட்டு எங்களை கூட்டிக்கிட்டுப் போய் வாங்கப் போறியா?" என்று கேட்டவாறே கோவிலுக்குள் நுழையவும், இதைக் கேட்டுக் கொண்டிருந்த வடிவு, 'களுக்' என்று சிரிக்கவும் சரியாக இருந்தது...

"அப்பத்தாஆஆஆ..." என்று பல்லைக் கடித்தவன், "என் மானத்த வாங்குறதுக்கு நீ மட்டும் போதும்... நான் உனக்கு எம்புட்டுப் பெரிய நல்ல விஷயம் பண்ணப் போறேன்னு தெரியாமப் பேசுத நீயி... நான் சொல்லப் போறதக் கேட்டீன்னு வெய்யி... பொங்க சோறென்ன? பொங்க சோறு? கடா வெட்டி விருந்தே வெப்ப எனக்கு..." என்றான்...

"அப்புடி என்னப்பா விஷயம்" என்று அம்மாவும் கேட்க, "ம்ம்ம் சொல்றேன்..." என்றவன், யாழினியைக் காட்டி, "இந்தப் புள்ள யாருன்னு தெரியிதா?" என்றான்...

அவர்கள் இருவருக்கும் அவளை எங்கோ பார்த்த ஞாபகம் இருக்க, சிறிது யோசித்தனர்...

ஏதோ ஒரு தைரியத்தில் வந்துவிட்டாலும், மனதின் ஒரு ஓரம் பயம் சூழ்ந்துகொண்டுதான் இருந்தது யாழினிக்கு...

இவர்கள் இருவரும் தன்னிடம் எப்படி நடந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம், தன்னை நினைவிருக்குமா என்ற கேள்வி ஒரு பக்கம், தான் பேச வருவதைக் கேட்பார்களா என்ற எண்ணம் ஒரு பக்கம் என பல மனக்குழப்பத்தில் நின்று கொண்டிருந்தாள் யாழினி...


முதலில் அவளை அடையாளம் கண்டுகொண்ட லட்சுமி, "ஏலே... இது... யாழினிதானே..." என்றார்...

"யாரும்மா அது" என்றார் வள்ளியம்மை...

"அத்தை... அவதான் அத்தை... நம்ம பாண்டிக்கு கல்யாணத்துக்குப் பாத்தோமே... அவளோட தங்கச்சி..." என்றார் லட்சுமி...

இப்பொழுது அவளை அடையாளம் கண்டுகொண்ட வள்ளியம்மை, "இப்ப எதுக்கு இங்ஙன வந்திருக்கா? ராசா மாதிரி சுத்திக்கிட்டு கெடந்த எம் பேரனை இப்புடி ஆக்கிப்புட்டா, இப்ப என்ன? அவன் இருக்கானா செத்தானான்னு பாக்க வந்தாளா?." என்றார் கோவத்துடன்...

"ஏலேய்... எங்கள எதுக்குடா இங்ஙன கூட்டியாந்த? இவளக் காட்டத்தானா?" என்றார் கோவமாக வடிவேலுவிடம்...

"அப்பத்தா... அந்த புள்ள எதுக்கு வந்திருக்குன்னு கேட்டுட்டு அப்புறம் பேசு.. மொதல்ல கோவப்படாத" என்று சமாதானம் செய்ய முயன்றான் வடிவேலு...

"இங்ஙன பாரு வடிவேலு... என் புள்ள கல்யாணம் நிக்க போதுன்னு தெரிஞ்சும், எதையும் வெளியில சொல்லாம எங்ககிட்ட எல்லாத்தையும் மூடி மறச்சிட்டா... இவ அக்காவவிட இவ மேலதானே நாங்க பாசமா இருந்தோம்... எங்க நம்பிக்கையில மண்ணள்ளிப் போட்டுட்டாளே... எம்மவன் இப்படி கல்யாணம் வேணாம்னுட்டு சுத்திக்கிட்டுக் கெடக்கான்னா.. அதுக்கு காரணம் இவளோட நம்பிக்கை துரோகம்தான்... இனி இவ ஒரு நிமிஷங்கூட இங்ஙன இருக்கக் கூடாது... இந்த ஊர விட்டுப் போகச் சொல்லு.." என்று கத்திக் கொண்டிருந்தார் லட்சுமி...

வள்ளியம்மையோ, "ஏலேய்...நேத்து நீ சொன்ன பொண்ணு இவதானா?" என்றார்...

அதற்கு 'ஆம்' என்பதாய் தலையசைத்தான் வடிவேலு...

அதைப் புரியாமல் பார்த்த லட்சுமிக்கு, ஏற்கனவே நடந்ததை கூறினார் வள்ளியம்மை...

சிறிது நேரம் தன் மருமகளை அமைதியாக இருக்க சொன்னவர், "வாலு... இப்ப எதுக்கு அவ இங்ஙன வந்திருக்கா? எங்கள எதுக்கு இங்ஙன கூட்டிக்கிட்டு வந்த? தெளிவா சொல்லு" என்றார் வள்ளியம்மை..

அவரின் நிதானத்தில் நிம்மதிப் பெருமூச்சை விட்டவன், ஒரே மூச்சாக யாழினியின் எண்ணம் பற்றிக் கூறி முடித்தான்...

அதைக் கேட்டு மாமியாரும் மருமகளுக்கும் அதிர்ச்சி ஒரு பக்கம் என்றாலும், அப்படியாவது பாண்டிக்கு திருமணம் நடந்துவிடாதா என்று இரு தாயுள்ளமும் ஆசை கொண்டது...

"ஏலேய் நீ சொல்றது நடக்குமாலே? எம் பேரனும் குடும்பம் குட்டின்னு சந்தோஷமா இருப்பானாலே?" என்றார் எதிர்பார்ப்புடன் வள்ளியம்மை... அதே கேள்வியைத் தன் கண்களில் தேக்கி நின்றார் லட்சுமி...

அவர்களின் எதிர்பார்ப்பை புரிந்துகொண்ட யாழினி, அவர்கள் அருகில் வந்து நின்று, "நீங்க என்னை ஏத்துக்கிட்டா... கண்டிப்பா இதை நான் நடத்தி காட்றேன்... நான் பண்ணின தப்பை நானே நேர் செய்யறேன்... உங்க ஆசை எல்லாம் கண்டிப்பா நிறைவேறும்" என்றவள், ஏக்கத்துடன், "என்னை ஏத்துப்பீங்களா அப்பத்தா? நீங்களும் என்னை ஏத்துப்பீங்களா அத்தை.?." என்றாள்...

"ராசாத்தி... நாங்க ஏன் உன் மேல கோவமா இருக்கோம்னு உனக்கே தெரியும்... கோவம் இருந்தாலும், உன் மேல நாங்க வெச்ச பாசம் துளிகூட குறையாமதேன் இருக்கு... எதை வேணும்னாலும் தாங்கிக்கிடமுடியும்... ஆனா யாராலயும்... எப்பவும் நம்பிக்கை துரோகத்தை மட்டும் தாங்கிக்கிடவே முடியாது..." என்றார் லட்சுமி...

"புரியுது அத்தை... ஆனா... அன்னைக்கு நான் இருந்த நிலமை அப்படி அத்தை... அது என்னைத் தவிர யாருக்கும் தெரியாது... தெரியவும் கூடாது... இனி மாமா வாழ்க்கையில எந்த தவறும் நடக்காது... அப்படி நடந்ததுன்னா... நான் உயிரோட இல்லன்னு அர்த்தம்..." என்றாள் யாழினி...

"அம்மாடி...கோவில்ல நின்னுக்கிட்டு இப்படி பேசாத தாயி...." என்ற வள்ளியம்மை... "தீர்க்காயிசா என் பேரனும் நீயும் புள்ளக்குட்டிங்களோட சந்தோஷமா வாழணும்" என மனமாற வாழ்த்தினார்...

அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியவள் லட்சுமி காலிலும் விழப்போக, அவளைத் தடுத்து அணைத்துக் கொண்டவர், "அன்னைக்கு நடந்தது நடந்து போச்சு... எல்லாம் விதின்னு மனச என்னால தேத்திக்க முடியலமா... என் பையன் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட அந்த நாளுக்கு முக்கிய காரணம் நீதான்னு நெனைக்கும்போது மனசுக்கு கஷ்டமாயிருக்கு.... ஆனா... அத நேர் செய்ய வந்திருக்கன்னு நீ சொல்றது சந்தோஷமாயிருக்கு... இதை நீ ... நீ பண்ணின தப்புக்கு பிராயச்சித்தமா பண்ண வந்திருந்தா.. அது தப்புமா.... அதனால உங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் பாதிக்கும்... " என்று பேசிய லட்சுமியை இடைமறித்தவள், "இல்ல அத்தை... இத நான் பிரயாச்சித்தமா பண்ண வரல... அவரை என் மனசார ஏத்துக்கிட்டதாலதான் வந்திருக்கேன்... இனி எனக்கு வாழ்க்கைன்னு ஒண்ணு இருந்தா.. அது என் மாமா கூடதான்... இல்லாட்டி எனக்கு வாழ்க்கையேயில்ல... இது சத்தியம் அத்தை" என்றாள் உறுதியாக...

அவளின் பேச்சில் இருந்த உறுதியும் ... அதில் உறைந்திருந்த உண்மையும் லட்சுமிக்கும், வள்ளியம்மைக்கும் நிறைவாக இருந்தது...


"நான் முடிவு பண்ணிட்டேன்மா.... நீதான் என் பேரனுக்கு பொண்டாட்டின்னு" என்று அவளுக்கு திருஷ்டி கழித்தார் வள்ளியம்மை...

"எனக்கும் இதுல முழு சம்மதம் மா" என்றார் லட்சுமி...

"ஷப்பா... வந்த வேலை நல்லபடியா முடிஞ்சிது... தங்கச்சி அடுத்த பிளான் என்ன? " என்றான் வடிவேலு...

"ம்ம்ம்... நானும் அதான் யோசிக்கறேன்...." என்றாள் யாழினி...


அவளோடு சேர்ந்து நீங்களும் அடுத்த பிளானை யோசியுங்கள்...
 

MekalaArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃபிரெண்ட்ஸ்...

நெஞ்சில் என்றும் நீயடா...


போன வாரம் அப்டேட் போட முடியல... சாரி...

இப்ப அடுத்த அத்தியாயத்தோட வந்துட்டேன்...

படிச்சிப் பார்த்துட்டு ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போங்க... ப்ளீஸ்...

http://srikalatamilnovel.com/community/threads/நெஞ்சில்-என்றும்-நீயடா-கருத்துத்திரி.332/


உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கும்

உங்கள்
மேகலா அருள்...
 

MekalaArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் எட்டு...

பாண்டியனை எவ்வாறு திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பது என்ற யோசனையில் யாழினியிருந்தாள்...

அவளைக் கலைக்கும் விதமாக, "யாழினி... வந்ததுல இருந்து என்னென்னமோ பேசிட்டே இருந்துட்டோம்... வீட்டுல அப்பா அம்மா சொகந்தானே... அக்கா எப்படி இருக்கா? அக்காவுக்கு கல்யாணம் முடிச்சிட்டீங்களா? இப்ப எப்படி இருக்கா அவ?" என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார் லட்சுமி...

வள்ளியம்மையும், "ஆமாம் புள்ள... வீட்டுல இருக்கவுக எப்படி இருக்காகன்னு கேக்க மறந்துட்டேன் நானும்... எல்லாரும் சொகந்தானே..." என்றார்...


தன் பெற்றோரைப் பற்றிப் பேசியதும், சிறிது முகம் வாடியவள், அடுத்த நொடியே யாரும் அறியாவண்ணம் அதை மறைத்தவள், தன் இதழி்ல் புன்னகையை தவழவிட்டவாறே, "எல்லாரும் நல்லாயிருக்காங்க பாட்டி..." என்ற வாக்கியத்துடன் முடித்துக் கொண்டாள்...

மேலும் அவர்கள் அதைப் பற்றி கேட்காமலிருக்க, "அத்தை... பாட்டி... நீங்க ரெண்டு பேரும் என்மேல ரொம்ப கோவத்துல இருக்கீங்கள்ல? இன்னமும் கோபம் இருக்கா என்மேல?" என்றாள் சிறு வருத்தத்துடன்...

"கோவம் இருந்துதுதாண்டா... கல்யாணத்தன்னிக்கு என்ன நடந்துதுன்னு இன்னிய வரைக்கும் எங்க யாருக்கும் தெரியாது... "கல்யாணம் நின்னு போச்சி... கௌம்பலாம்"னு மட்டும்தான் சொன்னான் அவன்... உன்னிய பெத்தவுக, 'கல்யாணத்தை நிறுத்திட்டியேடி'னு உன்னிய அடிச்சதுனாலதேன், கல்யாணம் நின்னது உன்னாலதேன்னு தெரிஞ்சிக்கிட்டோம்... 'யாரையும் எதுவும் கேக்க வேணாம்'னுட்டு பாண்டி சொன்னதுனால, நாங்க எதுவும் விசாரிக்கல..." என்ற லட்சுமி சிறிது இடைவெளிவிட்டார்...

தன் மகனின் திருமணம் நின்ற அந்நாளைய நிகழ்விற்கு அவரது மனம் ஓடியது... வலுக்கட்டாயமாக அதை தடுத்து நிறுத்தியவர், மீண்டும் பேசத் துவங்கினார்...

"பாண்டி எது செஞ்சாலும், சொன்னாலும் அதுல ஒரு அர்த்தமிருக்கும்... அதனாலதேன் நாங்க கௌம்பிட்டோம்... எங்களுக்கு உன் அக்காவ எங்க மருமகளா ரொம்ப பிடிச்சிது.. ஆனாக்கா அவள விட, நீ எங்ககிட்ட நல்லா பேசி பழகின... சின்னப்புள்ளயாட்டம் நீ செஞ்ச சேட்டையெல்லாம் நாங்க அம்புட்டு ரசிச்சோம்... உன்னிய எங்க எல்லாத்துக்கும் அம்புட்டு புடிச்சியிருந்துச்சி... ஆனா... என் பையன் கலியாணம் நின்னுபோக நீதான் காரணமுன்னு தெரிஞ்சபோது, உன் மேல வெச்சியிருந்த பாசம், நம்பிக்கை எல்லாம் சுக்குநூறா ஒடஞ்சி போச்சி... ஒருவேளை எம்மவன், வேற கலியாணத்துக்கு ஒத்துக்கிட்டிருந்தா, உன் மேல இருந்த கோவம் எறங்கியிருந்து இருக்குமோ என்னமோ... அவன் இப்படி ஒண்டிக்கட்டையா திரியறதப் பாக்கும்போது மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு... அதனாலதான் உன்மேல கோவமா இருக்கோம்.. அதனாலதான் உன்னியப் பாத்த உடனே வஞ்சிப்புட்டோம்.. ஆனா.. நீ இப்ப என் புள்ளய கலியாணம் பண்ணிக்கறேன்னு சொன்னதும் ரொம்ப சந்தோஷமாயிருந்துது... அதுவும் இதை நீ, நீ பண்ணின தப்புக்கு பிராயச்சித்தமா பண்ணலன்னு சொன்னதும் மனசுக்கு நெறைவா இருந்துது... நீயும் பாண்டியும் கலியாணம் முடிச்சிக்கிட்டு புள்ள குட்டியோட ரொம்ப வருஷம் சந்தோஷமா இருக்கணும்... என்று மனமாற வாழ்த்தியவர், "அத்த.. நாஞ்சொல்றது சரிதானே?" என்றார்...

"ஆமா லட்சுமி..." என்று ஆமோதித்த வள்ளியம்மை, யாழினியைப் பார்த்து, "ஆத்தா... அப்ப உம்மேல இருந்த கோவமெல்லாம், நீ எம் பேராண்டிய கட்டிக்கிடுதேன்னு சொன்னதும் பஞ்சாப் பறந்துப்போயிடிச்சி....நீ மகராசியா வாழணும் தாயி..." என்று வாழ்த்தியவர், அவள் தலையில் கைவைத்து ஆசீர்வாதம் செய்தார்...

மூன்று தலைமுறையும் ஒன்று சேர்ந்துவிட்டதைப் பார்த்த வடிவேலு, "அப்பத்தா.. போதும் படம் ஓட்டுனது... இன்னும் எம்புட்டு நேரந்தேன் இங்ஙன நின்னுக்கிட்டே பேசிக்கிட்டுக் கெடப்பீய்ங்க... வீட்டுக்குப் போயி மத்த கதையெல்லாம் பேசிக்கிடுங்க... வாங்க..." என்று அனைவரையும் அங்கிருந்து கிளப்பினான்...

"அட.. ஆமாலே... வாழ்க்கையில மொதமொறையா இன்னிக்குதேன் நல்லவிதமா யோசிச்சியிருக்க..." என்ற அப்பத்தாவை முறைத்தவன், "வேணாம் அப்பத்தா... சும்மாயிருக்கவன சீண்டிப் பாக்காத... அப்புறம் சேதாராமாயிப்புடும்.. சொல்லிப்புட்டேன்..." என்றான்...

"சேதாரமா? யாருக்கு?" என்றார் அப்பத்தா தன் வலது கையை தன் மோவாயில் வைத்தபடி...

"யாருக்கோ..." என்றான் அசால்ட்டாய்...

"அந்த 'யாருக்கோ' யாருன்னு சொல்லுலே...." என்றார்...

அதில் அவரை முறைத்தவன், "ஏன் ஒனக்குத் தெரியாதா? அத நான் என் வாயால சொல்லணுமோ?.." என்றான்...

"உன் வாயால சொன்னாத்தானே ராசா, கேக்குறதுக்கு நல்லாயிருக்கும்" என்றார் வள்ளியம்மை...

அதில் அவரைப் பார்த்து பல்லைக் கடித்தவன், "ஆனாலும் உனக்கு இம்புட்டு குசும்பு ஆகாது அப்பத்தா... சொல்லித் தொலைக்கிறேன்" என்றவன், "வேற யாருக்கு? எனக்குத்தேன்... போதுமா?" என்றான் பல்லைக் கடித்தவாறே கூறினான்...

அவன் பதிலில் அனைவரும் சிரிக்க... வடிவும் தன் வயிறைப் பிடித்துக் கொண்டு சிரித்தாள்...

அனைவரின் சிரிப்பும் அடங்கிய பிறகும் சிரித்துக்கொண்டிருந்த வடிவைப் பார்த்தவன், அவளை நெருங்கிவந்து, "ஏ புள்ள .. இந்தாரு... இப்ப எதுக்கு இப்புடி சிரிச்சிக்கிட்டுக் கெடக்க? மொதல்ல சிரிக்கறத நிப்பாட்டு... நிப்பாட்டுன்னு சொல்றேன்ல..." என்று அதட்டினான்...

அவனின் அதட்டலில் சிரிப்பை நிறுத்தியவள், அடக்கிய சிரிப்புடன் யாழினி அருகில் வந்து நின்றாள்...

அதைக் கண்டு பல்லைக் கடித்தவன், மனதினுள், 'எல்லாம் இந்த அப்பத்தாவால... என்னிய அசிங்கப்படுத்தணும்னே கங்கணம் கட்டிக்கிட்டுத் திரியுது... இருக்கு ஒரு நாள் அதுக்கு....' என்று எண்ணியவன், வடிவைப் பார்க்க... அவளோ இன்னும் வரும் சிரிப்பை அடக்கியவாறு நின்றிருந்தாள்..

அதைக் கண்டவன், 'இந்த சில்வண்டு தொல்ல தாங்கலியே சொக்கநாதா...' என்று நினைத்தவாறு அவளை முறைத்துக்கொண்டே வந்து, யாழினி அருகினில் வந்து நின்றான்...

யாழினி வடிவை தோளில் இடித்து, "ஏய்... சும்மாயிருடி... அண்ணன் கோவிச்சிக்கப்போறாங்க...." என்றாள்....

"யாரு? இவனா கோவிச்சுக்குவான்? இவனுக்கு கோவமே வராதுமா... தங்கமான புள்ள... விளையாட்டுக்கு பேசுவானே தவிர... மனசுல எதையும் வெச்சிக்கிடமாட்டான்... அவன சுத்தி இருக்க எல்லாரையும் சந்தோஷமா வெச்சிக்கிடுவான்... ரொம்ப நல்லவன்மா...." என்று வடிவேலுவைப் பற்றி பாராட்டுப் பத்திரம் வாசித்தார் வள்ளியம்மை...

"அப்பத்தா... என் மானத்தக் காப்பாத்திட்ட... ஐய்யோ உன்ன மனசுல வஞ்சிப்புட்டேனே அப்பத்தா.. என்னிய மன்னிச்சிடு அப்பத்தா... என்னிய மச்சிடு..." என்று சாஷ்டாங்கமாக காலில் விழுந்தான்...

"அடப்பாவிப் பயலே... என்னிய வஞ்சியா நீ?" இரு இரு... ராவுக்கு வீட்டுக்கு சோறு திங்க வருவல்ல... மொளகாப்பொடிய கொட்டி வெக்கிறேன்..." என்றார் வள்ளியம்மை...

அவரின் பேச்சில் சாஷ்டாங்கமாக படுத்துக் கொண்டிருந்தவன், தலையை மட்டும் நிமிர்த்திப் பார்த்து, "அப்பத்தா... எதுனாலும் பேசித் தீத்துக்கலாம்... சோத்துல மண்ணள்ளிப் போட்டுடாத..." என்றான்...

வடிவோ, "மண்ணா? அவிக மொளகாத் தூளல்ல போடுறேன்னு சொன்னாய்ங்க?" என்ற அதிமுக்கிய கேள்வியைக் கேட்டாள்...

அவளின் பேச்சில் எழுந்து அமர்ந்தவன், தன் தலையில் கையை வைத்துக்கொண்டு அவளைப் பார்த்தவன், "ஏம்மா பரதேவதை... உன் சந்தேகத்துல தீய வெக்க... இப்ப ரொம்ப முக்கியம்... என்னிய ஒரண்ட இழுக்கறதுன்னா உடனே ஓடியாந்துருவியே" என்றான் காட்டமாக..

அவனுக்கு பதில் கொடுக்க வடிவு வாயைத் திறக்கும் முன் வள்ளியம்மை, "அடேய்... உனக்கு கோவம் வருமுன்னு இப்பதேன் தெரியுதுடா... பரவால்ல... நல்லாத்தேன் கோவப்பட்ற..." என்றார் லட்சுமி...


அதற்கு வடிவு, "அவரு எங்கிட்ட கோவமா மட்டுந்தேன் பேசியிருக்காரு...." என்றாள்...

"அப்படியா.?" என்று அதிசயித்த லட்சுமியையும் வள்ளியம்மையும் பார்த்தவன், "தெரியாம வந்து சிக்கிட்டேன்... வுட்டுடுங்க..." என்று கும்பிடு போட்டுவிட்டு, யாழினியையும் மருதுவையும் பார்த்தான்...

"தங்கச்சி... இனி ஒரு நிமிசம் நான் இங்ஙன நின்னாய்க்கா.. என்னிய உண்டு இல்லையின்னு ஆக்கிப்புடுவாய்ங்க... நான் கௌம்புறேன்... டேய் மாப்ள... வா போலாம்..." என்று கிளம்ப தயாரானான்...

அவன் கைகளைப் பிடித்து நிறுத்திய அப்பத்தா, "ஏன் வாலு... உன்னிய பேசாம வேற யாரப் பேசுவோம்... உன் மேல உரிமையிருக்கறதால தானேய்யா பேசுறோம்... வாய்யா..." எனக் கூறிக்கொண்டே அவன் தலையை வருடிக் கொடுத்தார்...

அதில் நெகிழ்ந்தவனின் கண்களில் இருசொட்டு நீர் கசிய நின்றான்...

அவனை சகஜமாக்கும் பொருட்டு, "ஐயோ அண்ணா... நீங்க கௌம்புனா எப்புடி? நீங்கதான் 'மெயின் ரோல்' பண்ணப் போறீங்க..." என்றாள் யாழினி...

"என்னது நானா?" என்றவன்... "என்னிய வெச்சி எதுவும் பெருசா திட்டம் போட்டுருக்க போல... எதுவா இருந்தாலும் கொஞ்சம் யோசிச்சி செய்மா" என்றான்...

"அம்மு... இப்ப என்ன திட்டம் வெச்சியிருக்க... மொதல்ல என்ன பண்ணப் போறன்னு சொல்லு" என்று பரபரத்தாள் வடிவு...

வடிவைப் பற்றி லட்சுமியும் வள்ளியம்மையும் கேட்டுத் தெரிந்துகொண்டனர்...

அதில் அவளும் தன்னைப்போல் தாயை இழந்தது மட்டுமல்லாது தந்தையையும் இழந்து நிற்பது தெரிந்ததும், வடிவேலுவுக்கு மனம் பாரமானது...

ஒரு வழியாக அனைவரும் பேசி முடிக்க, யாழினி தன் திட்டத்தின் முதல் அடியை சொன்னாள்...


"அத்தை நீங்க இப்ப வீட்டுக்குக் கௌம்புங்க... நானும் வடிவும் வேலு அண்ணா கூட நம்ம வீட்டுக்கு வர்றோம்..." என்றாள்...

"என்னதூஊஊஊஊ... எங்கூடயா?" என்று அதிர்ந்து கத்திய வடிவேலு, "அய்யய்யோ... அவன் இப்ப வீட்டுலதான் இருக்கான்னு தெரிஞ்சும், என்னிய காவு குடுக்கணுங்கறதுக்காகவே திட்டம் போடுறியாமா நீ?" என்றான்

யாழினி ஏதோ சொல்ல வாயெடுக்கவும், "வேணாத்தா... சென்டிமன்ட்டா பேசி என்னிய ஒத்துக்கிட வெக்கப்போற.. அவ்ளோதான... என் நண்பன் நல்லாயிருந்தா அது போதும்... அதுக்காக எதையும் தாங்கிக்கிடுவேன்..." என்றான் பொறுமையாக...

"அதுக்காக.. வெச்ச்ச்சி செஞ்சிடாதமா.." என்று கூறியவன் அவளின் தலையசைப்பின் பின்னரே நிம்மதியானான்...

"அண்ணன் ஒரு நிமிஷம் உங்க ஃபோனைக் குடுங்க..." என்றவள், அவன் மொபைலில் ஏதோ டவுன்லோட் செய்து வைத்துவிட்டு இன்னும் சில வேலைகளையும் செய்துவிட்டு கொடுத்தாள்...

"என்னம்மா ஆச்சி" என்றவனுக்கு, "ஒண்ணுமில்லண்ணா... உங்க நம்பரை என் மொபைல்ல சேவ் பண்ணினேன்" என்றாள்...


தாயும் அப்பத்தாவும் வீட்டிற்கு வந்ததும் ஹாலிற்கு வந்தவன், அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தான்...

மருது கடையைப் பார்க்க சென்றுவிட்டதால், வடிவேலு, வடிவு, யாழினி மூவரும் அதே சமயம் வீட்டிற்கு வந்தனர்...


ஊரிலுள்ள அனைத்து தெய்வங்களையும் மனதில் வேண்டிக்கொண்டே வடிவேலு உள்ளே போக, அவன் அலைபேசி அடிக்கத் துவங்கியது...

"மணமகளே மருமகளே வா வா...
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா...
குணமிருக்கும் குலமகளே வா வா..
தமிழ்க் கோயில் வாசல் திறந்து வைத்தோம் வாவா..." என அடித்தது..

"அடியாத்தி இது என்ன புதுசா இருக்கு?" என்று கேட்டவாறே மொபைலை எடுத்துப் பார்க்க, அதில், 'யாழினி தங்கச்சி' என்ற பெயரிலிருந்து அழைப்பு வந்து கொண்டிருந்தது...

ஒன்றும் புரியாமல் யோசனையுடன் தன் நண்பனைப் பார்க்க, அவனோ முறைத்துக் கொண்டிருந்தான்...

எதற்காக முறைக்கிறான் என்று யோசித்தவனுக்கு மூளையில் மின்னல் வெட்ட திரும்பிப் பார்த்தான்...

அவன் கைப்பேசியில் அந்த பாடலை 'டவுன்லோட்' செய்து அதை தன் அழைப்புக்கு 'ரிங் டோனா'க சேமித்தவள், அவள் உள்ளே வரும் நேரம் சரியாக ஒலிக்குமாறு தன் அலைபேசியிலிருந்து அவன் அலைபேசிக்கு அழைப்பு விடுத்தாள்...

அந்த பாடல் ஒலிக்கவும், பாடலின் சத்தத்தில் பாண்டி வாசலைப் பார்க்கவும், யாழினி வலது காலை எடுத்து வைத்து உள்ளே வரவும் சரியாக இருந்தது...

'வெச்சி செஞ்சிட்டாளே என் தங்கச்சி' என்று மனதில் புலம்பியவன், 'சொக்கநாதா... உன் புள்ளய இவிங்ககிட்டக்க இருந்து காப்பாத்துப்பா..." என்று வேண்டுதலையும் வைத்தான்...

இன்முகத்தோடு யாழினி நிற்க,
அனல் கக்கும் பார்வையுடன் பாண்டியன் நிற்க,
இந்தப் பதிவு இத்துடன் நிற்கிறது...
 

MekalaArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃபிரெண்ட்ஸ்... சொன்ன மாதிரி இந்த வாரம் கரெக்ட்டா அப்டேட் கொண்டு வந்துட்டேன்...

நெஞ்சில் என்றும் நீயடா...

அடுத்த அத்தியாயத்தோட வந்துட்டேன்...

படிச்சிப் பாத்துட்டு எப்படி இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போங்க...

உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கும் உங்கள்

மேகலா அருள்...

http://srikalatamilnovel.com/community/threads/நெஞ்சில்-என்றும்-நீயடா-கருத்துத்திரி.332/
 

MekalaArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் ஒன்பது...

வலது காலை எடுத்து வைத்து யாழினி வீட்டினுள் வரவும், ருத்திரமூர்த்தியாய் எழுந்து நின்றான் பாண்டியன்...

வடிவேலுவோ வயிற்றில் புளியை கரைக்க நின்றிருந்தான்...

யாழினியோ வடிவேலுவைப் பார்த்து, "அண்ணா.. ரொம்ப தேங்க்ஸ் அண்ணா...என் மேல எவ்ளோ பாசம் இருந்தா... என்னை இப்படி ஒரு பாட்டப் போட்டு வரவேற்பீங்க... இங்க பாருங்கண்ணா... உங்க பாசத்த நெனச்சி என் கண்ணு வேர்க்குது..." என்று உணர்ச்சி பொங்க கூறுவது போல் கூறிவிட்டு வராத கண்ணீரை சுண்டி எறிந்தாள்...

அதைப் பார்த்த வடிவேலுவுக்கோ, 'அடியாத்தி... எப்புடி நடிக்குது இந்த புள்ள... எல்லா ஏற்பாட்டையும் இவளே பண்ணிப்புட்டு, நான் பாசத்துல பாட்ட போட்டேன்னு சொல்லுது... இருந்தாலும் இம்புட்டு குசும்பு ஆகாது இந்த புள்ளைக்கு' என்று மனதில் நினைத்தவாறே தன் நண்பனைப் பார்த்தவன் அரண்டு நின்றான்...

கண்களில் அனல் பறக்க நின்றிருந்தான் பாண்டியன்... ' ஐயோ... சொக்கநாதா... இவன் வேற கண்ணாலயே பொசுக்கிடுவான் போலயே... இன்னிக்கு மட்டும் உன் புள்ள சேதாரம் இல்லாம தப்பிச்சாக்கா... உனக்கு நேந்துக்கிட்டு கிடா வெட்டுறேன் கருப்பண்ணசாமி... உன் புள்ளய காப்பாத்துப்பா...' என்று அவசர வேண்டுதலை வைத்தான்...

லட்சுமியும் வள்ளியம்மையும் புதியதாக பார்ப்பதைப் போல் பார்த்தனர் யாழினியை...

லட்சுமி வடிவேலுவைப் பார்த்து, "ஏலே... யாருலே இது? உன் சொந்தக்காரய்ங்களா? வீட்டுக்கு கூட்டி வந்துட்டு கல்லு மாதிரி நிக்க... புள்ளைங்கள உள்ளாற கூட்டிக்கிட்டு வா..." என்று அதட்டினார்...

'என்னாது? யாரு இதா? என்னாமோ புதுசா பாக்குறாப்ல பேசுறாய்ங்க இவிங்க.. ஐயோ வடிவேலு... உன்னிய எல்லாரும் வெச்சி செய்றாங்கடா...' என்றவன் லட்சுமியை பார்த்தவாறு சிலையாகி நிற்க... வள்ளியம்மை அடுத்த ஷாக்கை கொடுத்தார் வடிவேலுவுக்கு...

"ஏலே சில்வண்டு... இந்த புள்ளைங்க உன் தூரத்து சொந்தமோ... இது வரைக்கும் பாத்ததே இல்லிய இங்குட்டு... இந்த புள்ளய பாத்தாக்கா... பட்டணத்துப் புள்ள மாதிரியில்ல இருக்கு... ஆத்தா... உன் பேரு என்னத்தா... பாக்க லட்சணமா மகாலட்சுமியாட்டம் இருக்க... வா வந்து இப்புடி ஒக்காரு... இந்தா புள்ள நீயும் வாம்மா... வந்து இங்ஙன ஒக்காரு..." என்று வடிவேலுவிடம் ஆரம்பித்து, யாழினியிடம் சென்று முடிவில் வடிவிடம் முடித்தார்...

'ஐயோ இந்த சின்ன இதயத்துக்கு இப்புடி ஷாக் மேல ஷாக் குடுக்கறாய்ங்களே... சொக்கநாதா... தாங்க முடியல என்னால... இவிங்க எல்லாரும் கொல கேசுல உள்ள போறது கன்ஃபார்ம்....' என்றபடியே பெண்கள் நால்வரையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தான்...

வடிவோ, இங்கு நடக்கும் அலப்பறையைக் கண்டவள், வரும் சிரிப்பை மிகவும் கடினப்பட்டு உதட்டைக் கடித்து அடக்கிக் கொண்டிருந்தாள்...

அதைப் பார்த்தவனுக்கோ, 'ஐயோ இந்த சில்வண்டுங்களாம் என்னிய பார்த்து சிரிக்கற மாதிரி என் நெலைமைய வெச்சிருக்கியே சொக்கநாதா...' என்று மனதினுள் புலம்பிக் கொண்டிருந்தான்...

யாருக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் நிற்கும் வடிவேலுவைப் பார்க்க பாவமாக இருந்தது அனைவருக்கும்...

யாழினி வடிவிடம் ஏற்கனவே தன் திட்டத்தைப் பற்றி தனியாக கூறியிருந்தாள் வடிவேலுவுக்கு தெரியாதவாறு...

அவளின் திட்டப்படி யாழினி கண் ஜாடை காண்பித்தாள் வடிவிற்கு...

அதைப் பார்த்த வடிவும் புரிந்துகொண்டு, "ஆச்சி... என் பேரு வடிவு... நான் மஞ்சம்பட்டியில இருந்து வாரேன்... இது என் சிநேகித புள்ள... சென்னையில நாங்க ஒண்ணா படிச்சோம்... இங்ஙன திருவிழா பாக்க கூட்டியாந்தேன்... நேத்து பாண்டியண்ணன் சூப்பரா கபடி வெளையாண்டதப் பாத்துப்புட்டு, அவிகள பாக்கணம்னு சொன்னா... அதேன்... விலாசம் கேட்டு வந்தோம்.. இவிகதேன் வீட்ட அடையாளம் காட்டினாக..." என்றாள் வடிவேலனை சுட்டிக் காட்டி...

"ஓ... அப்புடியா சங்கதி... ஏலேய்.. இத சொல்றதுக்கு என்னடா. என்னவோ முளு மாம்பளத்த முளுசா முளுங்குன மாதிரி நிக்கே... உள்ளாற வாடா...." என்றார் வள்ளியம்மை...

'இப்புடி ஸ்கிரிப்டே குடுக்காம நடிக்க சொன்னா எப்புடி? அது சரி.. இவிங்க எல்லாருக்கும் ஸ்கிரிப்டக் குடுத்துட்டு எனக்கு மட்டும் குடுக்கலியா? இல்லையின்னா... இவிங்களும் ஸ்கிரிப்ட் இல்லாமதேன் நடிக்கறாய்ங்களா? நமக்குதேன் சொந்தமா டயலாக் சொல்ல வரலியோ... அச்சச்சோ வடிவேலு... உனக்கு பொய்யா நடிக்கக் கூட தெரியாத அளவுக்கு பச்ச புள்ளயா சூது வாது தெரியாம வளந்திருக்கியே... நான் இப்ப என்ன டயலாக் பேசுறதுன்னே புரியலியே...' என்று நினைத்தவன் அப்பத்தாவைப் பாவமாக பார்த்து வைத்தான்...

அவனின் நிலைமை புரிந்த யாழினி வாயைத் திறப்பதற்குள், அவள் முன் அனல்வீசும் பார்வையுடன் வந்து நின்றான் பாண்டியன்...

"இங்ஙன எதுக்கு வந்த இப்ப? எங்கிட்ட ஒரண்ட இழுத்தது பத்தாதுன்னு இப்ப வீட்டுக்கே வந்துட்டியா? எம்புட்டு நெஞ்சு தெகிரியம் இருந்தா, இந்த வூட்டுக்குள்ள காலடி எடுத்து வெச்சிருப்ப?" என்று அவளிடம் காய்ந்தவன், வடிவேலுவைப் பார்த்து அதே கோவத்துடன், "நீயும் இதுக்கு ஒடந்தையா? உன்னியதேன்.... உன்னிய மட்டுந்தேன் என் நண்பனா இத்தன வருஷமா நெனச்சிருந்தேன்... என் நம்பிக்கயில நீ தீய வச்சிப்புட்டல்ல..." என்று கோவத்தில் ஆரம்பித்து ஆற்றாமையில் முடித்தான்...

தன் நண்பனின் இந்த வார்த்தையில் ஸ்தம்பித்து நின்றுவிட்டான் வடிவேலு.... கண்களின் ஓரம் ஈரம் பூத்தது....

நிலைமையின் வீரியத்தை உணர்ந்த வடிவு, யாழினி இப்பொழுது எது பேசினாலும் எடுபடாது என்பதை புரிந்துகொண்டு, வடிவேலுவின் கண்ணீரைத் தாங்க முடியாமல், வடிவேலுவுக்கும் பாண்டியனுக்கும் இடையில் வந்து நின்றாள்...

"ஐயோ... அண்ணன்... இவிக மேல எந்தத் தப்பும் இல்ல... நாந்தேன்... என் சிநேிதி கேட்டான்னுட்டு... இவிகள வற்புறுத்தி கூட்டியாந்தேன்...

நேத்து திருவிழாவுல இவிகள உங்க கூட பாத்தோம்... அதேன் உங்க சிநேகிதரா இருக்கும்னுட்டுதேன் நாங்க இவிக கிட்ட உங்க வீட்டப்பத்தி விசாரிச்சோம்...

அவிக காட்டமாட்டேன்னுட்டுதேன் சொன்னாய்ங்க... நான் வற்புறுத்தவுந்தேன் கூட்டியாந்தாய்ங்க... அவிக மேல எந்தத் தப்பும் இல்லீங்கண்ணா... அவிகள வைய்யாதீய்ங்க... " என்று பேசி முடித்தாள் வடிவு...

வடிவு தனக்காக பேசியதும் அவளை நன்றியுடன் பார்த்தான் வடிவேலு, அதே நேரம் தன் நண்பன் கூறியதுபோல், 'தான் அவனுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டோமோ' என்ற மனக்குன்றலில் தலையைக் குனிந்தவன், அவனை நிமிர்ந்தும் பார்க்காது கண்களில் வழிந்த நீரைத் துடைக்கக்கூடத் தோன்றாமல் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டான்...

தன் நண்பனின் கண்ணீர்த் தோற்றம் பாண்டியனை வருந்தச் செய்தது...

'தேவையில்லாம அவன வஞ்சிப்புட்டோமோ...' என்று வருந்தினான் பாண்டியன்...

'சரி அவங்கிட்ட அப்புறம் பேசிப்போம்' என்று நினைத்தவனது கோபம் இப்பொழுது வடிவிடம் திரும்பியிருந்தது...

"புள்ள நீ மதுரக்காரிதானே... நம்மூரு பழக்க வழக்கம்லா தெரியும்ல... பட்டணத்துல படிச்சவுக பழக்கவழக்கம் வேற... நம்ம வழக்கம் வேறன்னு தெரியாதா ஒனக்கு? அவுக கேட்டாய்க்கா... யாரு என்னுன்னு தெரியாம ஒரு ஆம்பள வீட்டுக்கு தேடி வருவீயா? அதுவும் ஒரு ஆம்பளத் தொணயில்லாம... இப்புடிதேன் வளத்தாய்ங்களா உன் வீட்டுல..." என்று வார்த்தைகளை வீசினான் பாண்டியன்...

அவனின் வார்த்தையில், தன் வளர்ப்பைப் பற்றி பேசிய பாண்டியனின் வார்த்தைகள் வடிவை வெகுவாக வாட்டியது...

அவன் கூறுவதும் நியாயம்தானே... அவன் பா்வையிலிருந்து பார்ப்பதற்கு, ஒரு அந்நிய ஆண்மகனை.. அதுவும் அவனைப்பற்றி எதுவும் தெரியாத நிலையில், கபடிப் போட்டியில் நன்றாக விளையாடியதால் அவனைப் பார்க்க வேண்டும் என்று தன் தோழி கூறியதால், இன்னொரு அந்நிய (வடிவேலு) ஆணிடம் கெஞ்சி, அவனது வீட்டீற்கு வந்துள்ளது அவனது பார்வையில் தவறுதானே...

அதற்கு அவன் பேசிய விதமும் சரிதானே.. தனக்கு ஒரு சகோதரி இருந்திருந்தால் எப்படி நடந்துகொள்வானே... அதே அக்கறையுடன் அவன் கேட்டது வடிவுக்கு புரிந்தது....


அதனால் அவள் தன் தலையை குனிந்து கொண்டு, "என்னிய மன்னிச்சிடுங்கண்ணா... நான் பண்ணினது தப்புதேன்... ஆனாக்கா... என் வளர்ப்ப பத்தி தப்பா பேசாதீங்கண்ணா..." என்று கூறினாள்..

அப்பொழுதுதான் தன் வார்த்தையின் வீரியத்தை உணர்ந்தான் பாண்டியன், அவன் அவளிடம் ஏதோ பேச வருவதற்குள் தன் வாய் திறந்தாள் யாழினி...


தனக்கு உதவி செய்ய வந்த வடிவேலுவும் வடிவும் மனம் வருந்தும்படி ஆகியிருந்தது யாழினிக்கு வருத்தத்தை அளித்தது...

தன் சுயநலத்திற்காக தன் நட்பையும் தன் உடன்பிறவா சகோதரனின் பாசத்தையும் பணையமாக வைத்தது உறுத்தியது அவளுக்கு..

யாழினி இப்பொழுது ஏதாவது பேசினால், பாண்டியன் அவளை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவான் என்று அறிந்த வள்ளியம்மை, பாண்டியனைப் பார்த்து, "ஏலே ராசா... ஏன் இப்புடி எல்லாரையும் வஞ்சிக்கிட்டுக் கெடக்க? வூட்டுக்கு வந்தவிங்ககிட்ட நடந்துக்குற விதமா இது? எப்பத்துலயிருந்து நீ இப்புடி மாறின? பாவம் அவன்... அவனப் போய் அந்த வார்த்த சொல்லி வஞ்சிப்புட்ட... வடிவேலு மொகம் செத்து போச்சி.... அவனயும் நம்பமாட்டேங்க... அவனுக்கு எதுவும் தெரயாதுன்னு சொல்லுற இந்தப் புள்ளயயும் நம்பமாட்டேங்க.. என்னதான் ராசா உன் பிரச்சினை?" என்று அதட்டலில் ஆரம்பித்து ஆறுதலாய் முடித்தார்...


"அப்பத்தா... உங்களுக்கு இவள யாருன்னு தெரியலியா? இல்லயின்னா தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்கறீங்களா?" என்றான் கோபம் மாறாமல்..


அவன் கூறியதும் ஸ்தம்பித்து நின்றார் வள்ளியம்மை...

இனியும் தாமதிக்கக் கூடாது என்று எண்ணிய யாழினி, பாண்டியனைப் பார்த்து, "மாமா" என்று அழைத்தாள்...

"அடிச்சி பல்ல கில்ல எல்லாம் பேத்துப்புடுவேன் சாக்கிரத... யாருக்கு யாருடி மாமன்? இன்னொரு வட்டம் உன் வாயிலயிருந்து அந்த வார்த்தை வந்துச்சின்னு வெச்சிக்க... கொன்னு பொதச்சிடுவேன்... சொல்லிப்புட்டேன்..." என்று ருத்திரமூர்த்தியாய் கத்திக்கொண்டிருந்தான்...

யாழினியோ இதை எல்லாம் எதிர்பார்த்தவள் போல், "சரி இப்ப உங்கள அப்படி கூப்படல... நீங்க எல்லாரயும் திட்டுறத மொத நிறுத்துங்க... வடிவுக்கு எந்த விஷயமும் தெரியாது... வேலு அண்ணாவுக்கும் நான் எதுவும் சொல்ல... அத்தையும் பாட்டியும் இன்னைக்குதான் என்னை திரும்பவும் பாக்கறாங்க... வீணா யாரையும் எதுவும் உங்க வார்த்தையால மத்தவங்கள நோகடிக்காதீங்க... நான்தான் தப்பு பண்ணினது... எதுவா இருந்தாலும் என்னை திட்டுங்க... என்னை மட்டும் திட்டுங்க..." என்று திடமாகக் கூறிவிட்டு தலையை குனிந்து நின்றாள்...


"நீயெல்லாம் ஒரு ஆளு... உன்னிய நான் திட்டணுமா? ஒரு புண்ணாக்கும் வேணாம்... ஒழுங்கு மரியாதையா இந்த ஊரவிட்டு ஓடிப்போய்டு... எங்கண்ணு முன்னாடி இனி நீ வரக்கூடாது... அப்படிப் பார்த்தேன்னு வெய்... என்ன பண்ணுவேன்னு எனக்ககேத் தெரியாது..." என்று கர்ஜித்தான்..

அவனின் வார்த்தையில் முதுகுத் தண்டு சில்லிட்டாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்ட யாழினி, "நீங்க என்ன வேணாலும் பண்ணிக்கோங்க... நானும் ஒரு முடிவோடதான் இந்த ஊருக்கு வந்திருக்கேன்... ஒண்ணு உங்கள கட்டிக்கிட்டு உங்க பொண்டாட்டியா இந்த ஊரவிட்டுப் போகணும்... இல்லன்னா... பொணமாத்தான் இந்த மண்ண விட்டுப் போவேன்.." என்றாள் தீர்க்கமாக...


"அதையும் பாக்கலாம்டி..." என்றான் உறுமலாக...

தன் தாயை நோக்கிய பாண்டியன், "ம்மா.. நீங்களாவது எங்கிட்ட உண்மையா இருப்பீங்களா? இல்லயின்னா நீங்களும் மத்தவங்க மாதிரிதானா?" என்றான் ஒரு எதிர்பார்ப்புடன்...

அவனுக்கு என்ன பதில் பேசுவது என்று புரியாமல் முதலில் நின்றவர், பின் தெளிவாக அவனை நோக்கி, "ஆமா பாண்டியா... இங்ஙன எல்லாருக்கும் அவள மொதல்லயே தெரியும்... அவ எதுக்காக இங்ஙன வந்துருக்காங்கறதும் எங்க எல்லாத்துக்கும் தெரியும்... இனி எம்புட்டு நாளைக்குதேன் நீ ஒண்டிமரமாவே நிப்ப... உனக்கு ஒரு கலியாணங்காட்சிய பண்ணிப் பாக்கணும்னு எங்களுக்கெல்லாம் ஆசையிருக்காதா? நாங்களும் மொதல்ல இவளப் பாத்ததும் கோவத்துல வஞ்சிப்புட்டோம்.. ஆனா உங்கிட்ட சொன்ன அதே வார்த்தையதேன் எங்ககிட்டயும் சொன்னா... அவ எப்புடியாவது உன் மனச மாத்தி, கலியாணத்துக்கு சம்மதிக்க வெச்சிடுவான்னு தோணுச்சி... உனக்கு ஒரு கலியாணத்தப் பண்ணி என் பேரக் குழந்தைங்கள பாக்குறதுக்கு இதவிட்டா வேற வழி தெரியல எங்களுக்கு... யாரும் உன்னிய ஏமாத்தணும்னு நெனைக்கல... எல்லாரும் உன் நல்லதுக்குதேன் இப்புடி நடந்துக்கிட்டோம்..." என்று தன் மனதின் உணர்வுகளை கூறி முடித்தார் லட்சுமி...

அப்பத்தாவும் அதை ஆமோதிப்பது போல, "ஆமாண்டா ராசா... உனக்கு கலியாணத்தப் பண்ணி வெக்க எங்களுக்கும் வேற வழி தெரியல... உன்னிய மாத்தி அவ வழிக்குக் கொண்டு வந்திடுவாங்கற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு... அதுமட்டுமில்ல... இனி யாழினி இங்ஙனதேன் தங்கியிருக்கப் போறா... என்று அலுங்காமல் குண்டை வீசினார் அப்பத்தா...

யாழினிக்கும், லட்சுமிக்கும், வடிவுற்கும் இது புது செய்தி... ஏன்? இவ்வாறு கூறிய அப்பத்தாவிற்கே இது புதிய செய்தி...

இனி யாழினியின் திருவிளையாடல்களைக் காண்போம் அடுத்த அத்தியாயம் முதல்...
 

MekalaArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு பெரிய்ய்ய்யயயய சாரி கேட்டுக்கறேன்... இன்னைக்கு என்னால அப்டேட் கொடுக்க முடியல...நாளைக்குக் கண்டிப்பா உங்க யாழினியையும் பாண்டியனையும் கூட்டிக்கிட்டு வர்றேன்...

இன்னொரு முக்கியமான விஷயம் கேக்கணும் உங்ககிட்ட...

என்னுடைய முதல் கதை "செந்நிலவில் என் பெண்ணிலா"... எத்தனை பேர் படிச்சிருக்கீங்கன்னு தெரியல... அதை ரீரன் பண்ணலாம்னு இருக்கேன்...நீங்க விரும்பினா ரீரன் பண்றேன்... அப்படி ரீரன் பண்ணினா தினமும் ஒவ்வொரு அப்டேட் பண்ணவா? இல்லன்னா.. .முழு கதையும் மொத்தமா ஒரே லிங்க்ல போடவா...

உங்கள் கருத்துக்களுக்காக வெயிட்டிங்...

உங்கள்
மேகலா அருள்
 
Status
Not open for further replies.
Top