Beautiful. ஜாதி என்கிறது தமிழர்களுக்குள் இருக்கல. குலத்தளவேயாகுமாம் குணம் என்று அவ்வை சொன்னபோது அவங்க சொன்ன குலம்கிறது தொழில், தொழிலின் அடிப்படையாக ஒருவனின் குலத்தை வகுத்தாலும் அங்கே ஏற்றத்தாழ்வு எப்போதும் இருந்ததில்லை. பலத்த வழிபாடு இருந்திருக்கு ஆனா அதுவும் இயற்கை வழிபாடுகள்தான், கெட்டது செய்த விலங்கை எங்களுக்குத் தீங்கு செய்யாதே என்று வணங்கினார்கள், நலலது செய்த விலங்கினங்களைப் போற்றி வணங்கனாங்க, ஆக அந்த வழிபாடு என்கிறது வாழ்க்கை முறையாகத்தான் இருந்தது, அதுக்கு மதமில்லை. எப்போது ஒரு வழிபாடு சட்டதிட்டங்களுக்கு ஒட்பட்டு ஒரு நூல்தனைப் பின் பற்றுகிறதோ அது மதம் ஆகிறது, எப்போது ஒரு வழிபாட்டு முறை மதமாகிறதோ அப்போது மனிதர்களுக்கும் மதம் பிகெ்கிறது. சங்க இலக்கியங்களுக்குள் வாழ்ந்த மக்களுக்கு மதமில்லை. இப்போது கூடக் கீழடியின் அகழ்வாராய்ச்சியில் ஒரு பொட்டுக் கூட வழிபாட்டு சாதனம் எடுக்கப்படவில்லை. ஆக மதம் என்கிற ஒன்று அவங்க கிட்ட இருக்கலை என்பதுதான் நிஜம். நம் இலக்கியங்கள் வாழ்வாதாரத்தை சொல்லிக் கொடுத்தது, அது மட்டுமல்ல அது சரித்திரத்தையும் சொன்னது. இன்ன இன்ன அரசன் இருந்தான், இன்னது மக்களுக்க செய்தான், என்கிற நிஜத்தை கல்வெட்டுகளாகப் பதித்தது. ஆனா வட இலக்கியங்கள் தங்களைக் கடவுளாக்கும் முனைப்பில் இருந்ததால் சங்க காலத்தில் இருந்த மனித வாழ்வியலை அது பதிய மறந்து போனது. இங்கேதான் தமிழன் உயர்ந்து நிற்கிறான், இலக்கியத்திற்கு மட்டுமில்லை வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்த தமிழனுக்கு இணையாக யாரும் வர முடியாது, அவனை அழிக்க ஆரம்ப காலம் தொட்டு நடந்த சதிகளில் இந்த புராணக் கதைகளும் அடக்கம் ஹிந்து என்கிறது சிந்து சமவெளி மக்களுக்கான அடையாளம், சிந்து என்று சொலலத் தெரியாமல் பேர்ஷிய இன மக்கள் ஹிநது என்றார்கள், அது மதமில்லை சிந்து என்கிறது இந்தியாவில் வாழக் கூடிய மக்கள் கூட்டத்திற்கான பெயர். அவர்கள் வழிபடும்்முறைக்கு ஹிந்து ஆச்சு, நான் சுத்த சைவம், கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவள். ஆனால் ஹிந்து என்று சொல்லப் பயப்படுகிறேன். ஏன் என்றால் உண்மையில் ஹிந்து மதம் என்கிறது எல்லா மதத்தையும் ஆதரிக்கணும். போற்றணும். வழிவிடணும். மனிதனை மனிதனா பாக்கணும், இன்னிக்கு ஹிந்து என்கிற பெயரில் மனிதனுக்கு மனிதன் வேறுபாடுதான் தெரிகிறது. நான் பெரிது என்கிற மமதை தெரிகிறது. ஹிந்து என்கிற மகத்துவத்தில் மதம் புகுந்துவிட்டதே என்கிற வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு.