All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா? அமைதியின் உருவமாக கண்ட தன் காதலியை அநியாயத்தை கண்டால் பொங்கி எழும் ஜான்சிராணியாவாள் என்பதை கண்டு பெருமைக் கொண்ட பதிவு... அருமையான பதிவு சிவா...

குளித்து முடித்து வந்த அதுவரை மகிழ்ச்சியில் திளைத்து தன்னை மறந்த அந்தரிக்கு தான் மாற்றுடை கொண்டு வராததே ஞாபகம் வருகிறது... அவள் சிறு செயலையும் கவனிக்கும் சர்வா சில மணி துளிகளில் அதற்கான ஏற்பாட்டை செய்தும் அவள் தான் கொண்டு வந்ததை உடுத்துவாளோ இல்லையோ என்று சந்தேகம் கொண்டு அதற்கான விளக்கத்தை கதவிற்கு அந்தப் புறம் இருந்து சொல்வது அருமை...

அவளின் ஒவ்வொரு செயலையும் நிலையையும் அவள் உணர்வுகளையும் அழகான புரிந்து வைத்துள்ளான் நம் சர்வா... ஆனால் அவனை அவள் புரிந்து கொள்வாளா????

விதவையான இவளுக்கு மறுமணம் என்பது எட்டா கனியே என்றாலும் இந்த சமூகத்தில் பெண்களின் நிலை??? தீர்வு சர்வாவின் முன்னிலையில்...

இருபுறமும் வாகனம் வர குழந்தை ஒன்று நடு ரோட்டில் ஓட அக்குழந்தையை காப்பாற்ற அந்தரி வித்தியாச குரல் எழுப்பி கொண்டு ஓட அவ்வோசைக்கு கேட்டு சர்வா ஓட... அப்பப்பா! ஒவ்வொரு நிகழ்வும் எங்கள் கண் எதிரில்... அருமை சிவா!
காரில் வந்த ரஞ்சனி பேசிய பேச்சை கேட்டு பொங்கிய நம் அந்தரி விட்டாள் பாரு ஒரு அறை எங்கே சர்வா ஆச்சரியப்பட்டு தனக்கும் ஏதாவது பேசினால் அடிவிழுமோ என்று பயந்து அவன் கன்னத்தில் கை வைத்து கொள்வானோ என்று நினைத்தேன்... ஹா! ஹா!

வள்ளியம்மை சகோதரனின் மகள் ரஞ்சனி சர்வாவின் மேல் கண் வைத்து விட்டாள்... விழுந்த அறைக்கு பழி தீர்க்கவும் சர்வா அவளை விட்டு அந்தரியின் பக்கம் நகர்ந்தால்... அச்சோ!பாவம் அந்தரியின் நிலை!சர்வா எந்த நேரமும் அவளிடம் துணை இருப்பானா? அப்படி தான் இருக்க முடியுமா?

விறுவிறுப்பான பதிவு... அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் நோக்கி.,
நன்றி நன்றி நன்றி. எப்போதும் போல குளிர்விக்கும் கருத்துப் பதிவு. நிஜமாக இளம் விதவைகள் மறுமணம் செய்ய முடியாமல் ஒரு சமுகத்தின் கட்டுப்பாட்டுக்கு அடிபணிந்து தன் வாழக்கையை இளமையைத் தொலைப்பது எத்தனை கொடுமை. ஏன் அவளுக்கென்று ஆசா பாசங்கள் இருக்காதா? இருக்கத்தான் கூடாதா? அதன் தாக்கம்தான் இந்தக் கதை சாந்தி, :love::love::love::love:
 
ilakkiyamani

Bronze Winner
sema epi siva mam ,ramayanam pattriya unmaikalai ningal sarva mulam kuriya anaithum rasithu errkka kudiyavaiyaga than ullathu,super 👏👏 next epikaga eagarly waiting siva mam😍:love:
 
K.Venigovind

Well-known member
அருமையான பதிவு நயனிம்மா.. காப்பியங்கள் பற்றிய புது விளக்கம்.. புதிய கண்ணோட்டம்.. அருமை...
 
sivanayani

விஜயமலர்
sema epi siva mam ,ramayanam pattriya unmaikalai ningal sarva mulam kuriya anaithum rasithu errkka kudiyavaiyaga than ullathu,super 👏👏 next epikaga eagarly waiting siva mam😍:love:
நிஜம் அதுதான், ராமனுக்கு ஒருத்தின்னும் நம்ம தமிழ் கடவுள்களுக்கு 2 பொண்டாட்டின்னும் கூறியதுக்குப் பின்னாடி இருக்கும் அரசியல் பெரியது:love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
அருமையான பதிவு நயனிம்மா.. காப்பியங்கள் பற்றிய புது விளக்கம்.. புதிய கண்ணோட்டம்.. அருமை...
நன்றி நன்றி நன்றி. வடமொழி இலக்கியங்கள் நம் வழிபாட்டு முறையை முடக்கியது, இலக்கியத்தை செல்லாக் காசாக்கியது, சமஸ்கிருதத்தை முதன் மொழியாகவும் தமிழை அடிமை மொழியாகவும் ஆக்கியது, வருத்தத்திற்கு உரிய விடயம் இது,:love::love::love::love:
 
Daffodil

Well-known member
I too agree with your opinion nayani ma .... I also undergone lot of discussion about this puranas.....
Our thirukkural taught lessons more than Geethaupadesam.... We will follow that in any century...In kural he doesn't mention any God names in that also we didn't get proper hint about thiruvalluvar... But they attached that in samana kappiyam...
They made us to believe that If we are Hindu, Geethacharam is the holy book... But the fact is that we have lot of Books which taught philosophy to people than Puranas...
In Purana the hero is like god, whatever he does is the moral to people... But in our sanga ilakkiyams explain only the Normal people lifestyle.... Based on the nature how their life has changed accordingly...
After Sanskrit enters they classified Tamil epics and novels based on religions and castes...
Recently a famous person in his interview he says that he liked Kaniyan poongundranar poems... But he felt that we will not give more importance to him because we don't know about his caste...
In this way they changed us, and they decided what we have to read...
 
ரொம்ப அருமையான பதிவு
ரஞ்சனி பிசாசு என்ன செய்யுமோ

இப்ப இந்த ரவுடி கும்பல்
இவங்க பக்கத்தில்
 
Beautiful. ஜாதி என்கிறது தமிழர்களுக்குள் இருக்கல. குலத்தளவேயாகுமாம் குணம் என்று அவ்வை சொன்னபோது அவங்க சொன்ன குலம்கிறது தொழில், தொழிலின் அடிப்படையாக ஒருவனின் குலத்தை வகுத்தாலும் அங்கே ஏற்றத்தாழ்வு எப்போதும் இருந்ததில்லை. பலத்த வழிபாடு இருந்திருக்கு ஆனா அதுவும் இயற்கை வழிபாடுகள்தான், கெட்டது செய்த விலங்கை எங்களுக்குத் தீங்கு செய்யாதே என்று வணங்கினார்கள், நலலது செய்த விலங்கினங்களைப் போற்றி வணங்கனாங்க, ஆக அந்த வழிபாடு என்கிறது வாழ்க்கை முறையாகத்தான் இருந்தது, அதுக்கு மதமில்லை. எப்போது ஒரு வழிபாடு சட்டதிட்டங்களுக்கு ஒட்பட்டு ஒரு நூல்தனைப் பின் பற்றுகிறதோ அது மதம் ஆகிறது, எப்போது ஒரு வழிபாட்டு முறை மதமாகிறதோ அப்போது மனிதர்களுக்கும் மதம் பி‍கெ்கிறது. சங்க இலக்கியங்களுக்குள் வாழ்ந்த மக்களுக்கு மதமில்லை. இப்போது கூடக் கீழடியின் அகழ்வாராய்ச்சியில் ஒரு பொட்டுக் கூட வழிபாட்டு சாதனம் எடுக்கப்படவில்லை. ஆக மதம் என்கிற ஒன்று அவங்க கிட்ட இருக்கலை என்பதுதான் நிஜம். நம் இலக்கியங்கள் வாழ்வாதாரத்தை சொல்லிக் கொடுத்தது, அது மட்டுமல்ல அது சரித்திரத்தையும் சொன்னது. இன்ன இன்ன அரசன் இருந்தான், இன்னது மக்களுக்க செய்தான், என்கிற நிஜத்தை கல்வெட்டுகளாகப் பதித்தது. ஆனா வட இலக்கியங்கள் தங்களைக் கடவுளாக்கும் முனைப்பில் இருந்ததால் சங்க காலத்தில் இருந்த மனித வாழ்வியலை அது பதிய மறந்து போனது. இங்கேதான் தமிழன் உயர்ந்து நிற்கிறான், இலக்கியத்திற்கு மட்டுமில்லை வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்த தமிழனுக்கு இணையாக யாரும் வர முடியாது, அவனை அழிக்க ஆரம்ப காலம் தொட்டு நடந்த சதிகளில் இந்த புராணக் கதைகளும் அடக்கம் ஹிந்து என்கிறது சிந்து சமவெளி மக்களுக்கான அடையாளம், சிந்து என்று சொலலத் தெரியாமல் பேர்ஷிய இன மக்கள் ஹிநது என்றார்கள், அது மதமில்லை சிந்து என்கிறது இந்தியாவில் வாழக் கூடிய மக்கள் கூட்டத்திற்கான பெயர். அவர்கள் வழிபடும்்முறைக்கு ஹிந்து ஆச்சு, நான் சுத்த சைவம், கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவள். ஆனால் ஹிந்து என்று சொல்லப் பயப்படுகிறேன். ஏன் என்றால் உண்மையில் ஹிந்து மதம் என்கிறது எல்லா மதத்தையும் ஆதரிக்கணும். போற்றணும். வழிவிடணும். மனிதனை மனிதனா பாக்கணும், இன்னிக்கு ஹிந்து என்கிற பெயரில் மனிதனுக்கு மனிதன் வேறுபாடுதான் தெரிகிறது. நான் பெரிது என்கிற மமதை தெரிகிறது. ஹிந்து என்கிற மகத்துவத்தில் மதம் புகுந்துவிட்டதே என்கிற வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு.:love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
ரொம்ப அருமையான பதிவு
ரஞ்சனி பிசாசு என்ன செய்யுமோ

இப்ப இந்த ரவுடி கும்பல்
இவங்க பக்கத்தில்
ஆமா இனித்தான் சங்க ஊதப்படும் :love::love::love::love:
 
Top