sivanayani
விஜயமலர்
ஆஹா ஆஹா நன்றி நன்றி நன்றி சாந்தினி. உங்கள் கருத்துப் பகிர்வு பார்த்து நான் மனம் விட்டு சிரித்துவிட்டேன். அதுவும் உங்கள் மகன் ஓடிவந்தார் என்றதை படித்ததும் வாய்விட்டு சிரித்தேன், கடவுள் சிலருக்கு மட்டும்தான் நல்ல நட்புகளை கொடுப்பார். எனக்கும் உங்களைப் போன்ற வாசகர்களை மாசற்ற நண்பர்களாகக் கொடுத்திருக்கிறார். மிக நன்றி சாந்தினி. இதை விட ஒரு எழுத்தாளனுக்கு மாபெரும் விருது எதுவும் கிடைத்துவிடப் போவதில்லைஅந்தரியின் காண கிடைக்காத கலகலப்பான அள்ளி தெளிக்கும் சிரிப்பை நாங்களும் கண்டு மகிழ்ந்த பதிவு...
மூவரின் கூட்டணி செய்த சமையல் வீர பிரதாபங்களை அறிந்த அந்தரி அவர்களுக்கு உதவ வர அதையும் தடுத்து இந்த கூட்டணி சமையல் உச்சம் சர்வாவின் தீக்காயம்... சர்வாவின் தீக்காயம் கண்டு பதறிய அந்தரி தவிப்பை கண்டு ரசிக்கும் சர்வாவிற்கு மருந்திட வந்த பிரகாஷ் பூஜை வேளை கரடியே தான்...
மறுபடியும் சமைக்க இவர்களை அந்தரி இரு கை தட்டி வணங்கி மறுப்பது.. ஒவ்வொரு நிகழ்வும் கண் முன் காட்சியாய்... அற்புதம் சிவா...
சமையலை சரி செய்த அந்தரி அவர்களை தண்டிக்க அவர்கள் செய்த உணவு வகைகளை முதலில் பரிமாறி அவர்கள் முகம் போன போக்கை கண்டு கலகலத்து சிரிப்பது... பிரகாஷ் தாமரை இருவரின் கண்ணில் கண்ணீர் வர.. சர்வாவிற்கோ சொல்ல முடியா ரசிப்பு... ஆஹா! இந்த இடத்தில் அவள் முகத்தின் அழகின் வர்ணனை இருக்கே அப்பப்பா! உள்ளது உள்ள படி சொல்லும் கிளிப்பிள்ளையே என்று கொஞ்ச தோன்றுகிறது சிவா தங்களை... அற்புதம்...
இது எல்லாம் கூட பரவாயில்லை அடுத்த காட்சியின் வர்ணனை இருக்கே... நான் சிரித்து என் பையன் கூட ஓடி வந்து விட்டான் என் அறைக்கு... ஹா! ஹா! பலியாடு வர்ணனையும் ஆடி வெட்டி கெட்டப்பும் நெஞ்சை நிறைத்து படிக்கும் போதே நிரந்தர புன்னகையை எங்கள் முகத்தில் தவழ.. அருமை சிவா...
சர்வா அவள் சமையலை ரசித்து உண்பது அழகென்றால் சமையல் செய்த கைக்கு தங்க காப்பு போட வேண்டும் என்பது அழகோ அழகு...
மொத்தத்தில் இவ்வத்தியாயம் சந்தோஷத்தின் புகலிடம்...
வாழ்த்துக்கள் சிவா...