All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தோஷியின் "நினைவில் தத்தளிக்கும் நேசமது" - கதை திரி

Status
Not open for further replies.

Thoshi

You are more powerful than you know😊❤
நினைவில் தத்தளிக்கும் நேசமது 21:


அசம்பாவிதம் நேர போவதுபோல் ஓர் எண்ணம் மத்தியநேர கடல் அலையாய் மனதின் ஓரம் சலசலத்தாலும் , கூடவே அறிய பொக்கிஷத்தை அடைய போவதை போல மகிழ்ச்சியும் தோன்ற, இருவேறு விசித்திர உணர்வுகளுக்கிடையே தத்தளித்து கொண்டிருந்தாள் அவள்...


அதிலிருந்து வெளிவந்து மனம் தெளிவுறுவதற்க்காய், மூடிய விழிகளுக்குள் கருமணிகள் உருள, உதடுகள் எதையோ தீவிரமாய் முணுமுணுத்தவாறு, அகிலத்தை ஆளுபவளாய் தான் கருதும் அகிலாண்டேஸ்வரி முன் மனமுருக நின்றிருந்தாள் அவள்... மித்ராளினி.


"ங்க....ம்ங்க ....ஙங்க" என கை கால்களை உந்தி அவளின் கவனத்தை தன்புறம் திருப்ப முயன்று கொண்டிருந்தது அவளின் கைகளில் சிம்மாசனமிட்டிருந்த சின்னசிறு சிட்டு(மித்ரேந்தர்).


அவனின் சேட்டையையும், அவனை கைகளை ஏந்தியவாறு நின்றுகொண்டிருந்த மித்ராளினியையும் கண்களில் ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள் சித்ராங்கதா.


சிறுதுநேரமேனும் மித்ரேந்தரை தனியே விடாமல் திரியும் மித்ராளினி ஆகட்டும் , வந்த நாளில் தன் அண்ணனை தவிர எவரிடம் சென்றாலும் அழும் மித்ரேந்தர் மித்ராளினியிடம் இயல்பாய் ஒன்றியதாகட்டும் அனைத்தும் சித்ராங்கதாவிற்கு ஆச்சர்யம் தான்.


தன்னிடம் வர அழுத தன் அண்ணன் மகன் மித்ராளினியிடம் ஒட்டிக்கொண்டதில் சிறிதே சிறிது பொறாமை தோன்றினாலும் அவர்களை பார்க்கும் பொழுது...தாய் - மகனை பார்ப்பதுபோல தோன்ற , சில நாட்களில் எப்படி இருவருக்குள்ளும் இப்படி ஒரு பந்தம் என எண்ணம் அவளிற்குள் ஓடிக்கொண்டிருந்தது.


மித்ராளினி மற்றும் சித்ராங்கதா இருவரின் எண்ண அலைகளையும் அறுக்க செய்தது "சித்து " என்றழைத்த குரல்.


"ஏய் கீர்த்தி "என சித்ராங்கதாவும் பதிலுக்கு கத்த,


கண்களை திறந்த மித்ராளினி , எதிரில் தங்களை பார்த்தவாறு நின்றிருந்த மங்கையைக்கு ஓர் புன்னகையை உதிர்த்தவள் சித்ராங்கதாவிடம் , "இவங்க தான் நீங்க சொன்ன அந்த ப்ரெண்டா??" என கேட்டாள்.


"என்ன கேக்குறாங்க இவங்க ?" என ஒருநிமிடம் யோசித்த சித்ராங்கதா, "ஓஒ இவங்க நம்ப கார்ல வரும்போது சொல்லியதை வச்சி கேக்குறாங்க போலயே" என சரியாய் கணித்தவள், "ஆமா ஆமா "என அவசரமாய் சொல்ல,


"என்ன ??? என்னை பத்தி சொன்னாளா" என கீர்த்தி வியப்பாய் கேட்க,


"ஹீஹீ ஆமா டி !!! இன்னிக்கு நம்ப பார்க்குறதா இருந்தது தான" என அந்த "தான" வில் அழுத்தம் குடுக்க, எதிரிலிருந்தவள் திருதிருத்தாள்.


இவ வேலைக்காகமாட்டா என நினைத்த சித்ராங்கதா, " ஆங் !!! எங்களுக்கு நேரமாகுது மித்து , நாங்க கிளம்புறோம் ..சீக்கிரம் வந்துர்றேன், அதுவரைக்கும் இங்கயே இருங்க. நான் வந்த அப்றம் கிளம்பலாம் " என மித்ரேந்தருக்கு ஒரு அவசர முத்தமிட்டவள், கீர்த்தியை இழுத்து கொண்டு சென்றாள்.


அவர்கள் போவதை சிரிப்புடன் பார்த்துகொண்டிருந்த மித்ராளினி, மீண்டும் தன் வழிபாடை தொடர்ந்தாள்.


" ஏய் !!! எங்கடி இழுத்துட்டு போற?? கோவிலுக்கு வந்த இடத்துல உன்ன பார்த்தோமேனு கூப்பிட்டா ...நீ ஏதோ நம்ப ஏற்கனவே சொல்லிவச்சு பாக்குறாப்ல பேசி இழுத்துட்டு வர " என கீர்த்தி தன் கையை அவளின் பிடியில் இருந்து உதறி இடுப்பில் வைத்து முறைக்க,


சித்ராங்கதா பதிலுக்கு "ஹீஹீ!!!" என சிரிக்கிறேன் பேர்வழியென அசடு வழிந்தாள்.


"கருமம்...கருமம்! பல்லக்காட்டாதடி . ச்சே !! கேக்கவந்ததை மறந்துட்டேன் பாரு , அது நம்ப ஏஞ்சல் அக்கா தான ? நீ எப்படி அவங்க கூட?" என சந்தேகமாய் கேட்டாள்.


அவளின் கேள்வியில் வாயை பிளந்த சித்ராங்கதா, " அடியே கீர்த்தி! உனக்கும் அவங்க ஏஞ்சலாலாலா??? ஆமா உனக்கு எப்படி அவங்கள தெரியும் " என பதிலுக்கு கேள்வி கேட்டாள்.


"ஏண்டி மண்டைல எதாவது அடிகிடி பட்டுச்சா என்ன ???? அடியே !!!அவங்க நம்ப சீனியர் டி, அந்த வசந்தோட பேட்ச்".


சித்ராங்கதா,"என்னாதுது ! நம்ப சீனியராஹ்ஹ் , எனக்கு இது தெரியாம போச்சே " என மூக்கை சுருக்க,


"பக்கி நடிக்காதடி, எங்க எல்லோரையும் விட நீ தான எப்பவும் அவங்க இருக்க இடத்துலயே சுத்திகிட்டு திரியுரவ".


"இல்லடி! எனக்கு அவங்கள பார்க்கும்போது எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேனு நினைச்சேன். ஆனா நம்ப தினமும் எத்தனையோ பேர பார்க்குறோம் அப்படிதானோனு விட்டுட்டேன். ஆனா இது என்னடி புது கதை? நான் எப்போ அவங்க பின்ன சுத்துனேன் ?" என குழம்ப,


"நீ சொல்றது நம்புற மாதிரியே இல்லையே....ஏண்டி அந்த பி.எம் அ கூடவா நியாபகம் இல்ல "


"பி.எம் ஆஹ் ? அது யாரு டி."


"ஏய் நீ என்னடி எல்லாத்தையும் காந்தி செத்துட்டாரானு கேக்குறனு ஷாக்கா கேட்டு தொலையுற?..பி.எம் -னா போலீஸ் மச்சான் டி . இவங்களோட ஆளு.வெள்ளையா மாவு மாதிரி முகத்துல தாடி மீசைலாம் இல்லாம பக்கா சாக்லேட் ஹீரோ மெட்டிரியல் டி.எப்பவும் ஏஞ்சல் அக்காகாக நம்ப காலேஜ் வாசல்லயே டியூட்டி பார்ப்பாரேடி" என சிரிப்புடன் சொன்னவள் தொடர்ந்து,


"ஆளு சும்மா அப்படி இருப்பாரு .நம்ப காலேஜ்ல முக்காவாசி பொண்ணுங்க இவரை பார்குறத்துக்கே காலேஜ் வருவாளுங்க, அவளுங்க வச்ச பேருதான் போலீஸ் மச்சான். ஏன் எனக்கு கூட அவருனா ஒரு இது தான். உண்மைய சொல்லு உனக்கு அவரை தெரியாது "என விளையாட்டாய் கண்ணடித்தாள்.


கீர்த்தி சொல்லியதை கேட்ட சித்ராங்கதாவிற்கு உள்ளுக்குள் தானாய் அதிர்வலைகள் கிளம்பி அவளின் உணர்வலை பொங்கி வெள்ளபெருக்கெடுக்க முயற்சிக்க , உதடுகளோ சந்தேகமாய் "ஜிஷ்ணு" என சொல்லியது, ஆனால்... அவளின் உணர்வலையோ அவ்வாறிருக்கக்கூடாது என ஆர்பரித்துக்கொண்டிருந்தது .


இவள் சந்தேகமாய் அவனின் பெயர் சொல்லிய நொடிமுதல் அதற்க்கு பதில் சொல்ல கீர்த்தி எடுத்து கொண்ட அந்த பத்து வினாடிகளில் , மனித மனதின் இயல்பாய் சித்ராங்கதாவின் மனமும் எதையெதையோ எண்ணி கலங்கியது.


"பெயரா ?? எனக்கு எங்கடி அது தெரியும். போலீஸ் மச்சான்-ற பெயரு தான் தெரியும், அதுவும் நம்ப பொண்ணுங்கலாம் தான் அப்படி சொல்லி பேசிப்பாளுங்க " என கீர்த்தி சொல்லிய பதிலால் அவளின் கலக்கம் மறைய வாய்ப்பில்லாமல் போனது.


தனது மொபைல் கால் சத்தத்தில் அதில் ஒளிர்ந்த எண்ணை கண்ட சித்ராங்கதாவிற்க்கு, ஜிஷ்ணுவுடனான இன்றைய சந்திப்பு நினைவுவர கீர்த்தியிடம் விடைபெற்று கிளம்பினாள்.


அவளின் உருவம்தான் அங்கிருந்து நகர்ந்ததே ஒழிய, அவளின் மனமோ ஜிஷ்ணு, மித்ராளினி, கீர்த்தி, போலிஸ் மச்சான் என எண்ணியவாறு அங்கேயே சுழன்றது.


அன்று மித்ராளினி சிறுவயது முதல் உடன் வளர்ந்தவன் என ஒருவனை கூறியது, ஜிஷ்ணு ஒருநாள் தான் தேடியது இங்கிருப்பதை அறிந்து தான் வந்ததாய் கூறியது என இரண்டு காட்சிகளும் மாறிமாறி கண்முன் தோன்றின.


அவளின் மூளையோ தோன்றும் காட்சிகளில் குழம்பிப்போக பார்க்க, மனமோ "இல்லஇல்ல அது நம்ப ரவுடி பேபியா இருக்காது. அவர் என்னை பார்குறதுக்காகத்தான ￰ஒவ்வொருநாளும் காலேஜ்க்கு வந்தாரு. அத்தோட இதுவரைக்கும் நான் இவங்கள அவர் கூட பார்த்ததே இல்லையே.இவ சொல்றத பார்த்தா அந்த போலீஸ்காரரும் மித்ராளினியும் ஜோடி மாதிரி தெரியுது, ஆனா நம்ப மச்சான் கண்ணுல நம்பள பார்க்கும்போதுதான டன்னு டன்னா காதல் வழியும்" என சொல்லி அவளை திடம் பெற செய்தது.


அவளின் திடத்தை சோதிப்பது போல் அவளின் மனசாட்சி," தினமும் வந்தவன் ஆறு மாசத்துக்கு மேல அந்த பக்கமே வரவேஇல்லையே, கீர்த்தி சொல்றத வச்சி பார்த்தா மித்ராளினி காலேஜ் முடிச்ச பிறகுனு தான கணக்கு வருது" என முனங்க,


"சோ..."என அதனின் தலையில் தட்டியவள், "நீ எதுக்கு தேவைஇல்லாததலாம் கணக்கு போடற. இப்போ என்ன? என் மச்சான் என்னை தான் காதலிக்கிறாரு அவர் என்னை பார்க்க தான் வந்தாருனு அவரே கொஞ்ச நேரத்துல சொல்லுவாரு . நீ என்கிட்ட கொட்டு வாங்காம ஓடிடு" என விரட்டினாள்.


-------------------------------------------------------------------------------------


அந்த விமானநிலையம் பரபரப்பாய் இயங்கி கொண்டிருந்தது.அப்படி அனைவரும் எதை தேடி ஓடுகின்றனரோ? எங்கு திரும்பிலும் அவசரஅவசரமாய் சென்று கொண்டிருக்கும் மக்கள்.


அங்கு ￰காத்திருப்பிற்காய் போடப்பட்டிருக்கும் நாற்காலியிலும் ஒரு சிலரே அமர்ந்திருக்க, அவர்களும் கைகளில் இருக்கும் அலைபேசியிலும், மடுந்த மடிகணிணியினிலுமே தங்களை புதைத்திருந்தனர்.


"இன்னும் இரண்டு நிமிஷத்துல நம்ப கிளம்பனும் ஷாலினி" என அழுதுகொண்டிருப்பவளை கவனித்தும் கவனியாததை போல் சொன்னான் ஜித்தேந்தர்.


திடீரென அவன் பேசியதில் திடுக்கிட்ட ஷாலினி "அத்..அத் தான்...விஷ்....வி...விஷ்வா" என தடுமாறினாள்.


அவளின் கண்களை ஆழ்ந்து பார்த்த ஜித்தேந்தர் , "இன்னும் எத்தனை நேரம் அழுதுட்டு இருக்க போற ஷாலினி. நீ இங்க இருந்து அழுதா அவன் அங்க சரி ஆகிடுவானா ?இப்போவும் அப்பவும் அவனோட கஷ்டத்துக்கு நீ தான் காரணமா இருக்க நீ மட்டும் தான்" என்றவன் அவள் புரியாமல் விழிப்பதை கண்டு இடதுகை மோதிரவிரல் கொண்டு புருவத்தை நீவிக்கொண்டான் .


ஒருநொடியில் தன்னை நிதானித்துக்கொண்டவன் , அவளின் அருகில் அமர்ந்து , "நான் உன்கிட்ட இப்போ ஒருவிஷயம் தான் சொல்ல முடியும் ஷாலினி , இப்போ நீ அழுதுட்டு இருக்கிறதுல்ல எந்த பிரயோஜனமும் இல்ல. உங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியாது, அதே மாதிரி விஷ்வா உன்மேல வச்சிருக்க காதலோட அளவு உனக்கு தெரியாது. அத தெரிஞ்சிக்க முயற்சி பண்ணவேண்டாம் ஆனா அந்த காதல் காயப்படாம பார்த்துக்க" என்றவன் அங்கிருந்து எழுந்து சென்றான் .


அவன் பேசி சென்ற நொடி ஷாலினிக்கு விஷ்வாவின் வார்த்தைகளே எதிரொலித்தது " நான் விளையாட்டா இருக்கலாம் என் காதல் எப்பவும் விளையாட்டு இல்லை ". அவனின் காதல் வார்த்தையில் கரைந்தவளிற்கு , இந்த நிமிடமே அவனின் கைகளில் சரணடைந்து தன்னை பேசவிடாமல் கோபப்பட்டதற்கு அவனிடம் செல்ல சண்டையிட்டு கொஞ்ச வேண்டுமென ஏக்கம் வந்தது.


தன்னவன் தன் மேல் கொண்ட காதலில் அழுகை மறைந்து பெருமை வர , ஜித்தேந்தரை தொடர்ந்து நடந்தவள்" டேய் விஷ்வா! என்கிட்ட உன்னால கோபப்படமுடியுமா என்ன ? எருமமாடு என்னை அழவச்சிட்டல... மவனே வரண்டா உன் காத்தாயியோட புது அவதாரத்தை பார்க்க தயாரா இரு வந்துக்கிட்டே இருக்கேன் "என மனதினுள் விளையாட்டாய் நினைக்க , கரங்கள் கன்னங்களில் வழிந்த கண்ணீரை துடைக்க , உதடுகள் தங்களது புது அத்தியாயத்திற்கு வரவேற்ப்பாய் புன்னகையை சிந்தியது.


விமானத்தில் ஏறும் நொடிவரை ஜித்தேந்தர் எவருடனோ அலைபேசியில் பேசிக்கொண்டுவர , ஷாலினியின் சிந்தனை தன்னுயிரானவனை சுற்றியே இருந்தது.


விமானத்தில் அமர்ந்த நொடி ஷாலினியின் முகத்தை பார்த்த ஜித்தேந்தர் அங்கு அழுகை நின்று தெளிந்திருப்பதை கண்டு, விஷ்வாக்கு அடிப்பட்டிருக்குனு இவ கிட்ட எப்படி சொல்றது என யோசித்தவன் இறங்கிய பின் சொல்லிக்கொள்ளலாம் என முடிவெடுத்தான்.


ஷாலினியின் கலக்கத்தை கண்டவன் மனதின் சஞ்சலம் காரணமாய் விஷ்வாவின் நிலையை அவனின் பாதுகாப்பிற்க்காய் தான் நியமித்தவரிடம் தொடர்பு கொண்டு தெள்ளத்தெளிவாக அறிந்துகொண்டவன் ,


தலையில் அடிபட்டிருப்பதாய் கேட்டபொழுது அவனின் ஒருவருடம் முன்பான நிலை நினைவு வர விரைவாய் கட்டளைகளை விடுத்து இங்கிருந்தவாரே தன் தம்பியை காத்தான்.


இத்தனை நேரம் தனது மனத்திற்கான சஞ்சலத்தின் விடை தனது தம்பியின் நிலையே ஆகையால் இனி எதுவும் தவறாய் நேராது என தவறாக கணித்தவன், அந்நிம்மதியில் தன்னவளை காணும் நொடிகளை கற்பனை கண்டவாறு வந்தான்.


விமானம் தரை இறங்க தத்தம் மனதிலுள்ள பாரமும் இறங்கியதை உணர்ந்தவாறு ஜித்தேந்தரும், ஷாலினியின் சென்னை விமானநிலையைத்தின் வெளியே வந்தனர்.


அங்கு அவன் ஏற்கனவே கட்டளையிட்ட படி அவனின் காரும் அருகில் மற்றொரு காரும் இருக்க, ஷாலினி அவனை கேள்வியாய் பார்த்தாள்.


அவளின் கேள்வியை உணர்ந்த ஜித்தேந்தர், " விஷ்வா இப்போ உங்க வீட்ல தான் இருக்கான்.சோ " என்றவன் தன் பேச்சை நிறுத்தி மற்றொரு காரை காட்ட,


விஷ்வாவின் திடீர் நடைவடைக்கைகான காரணத்தை ஓரளவிற்கு யூகித்தவள் எந்தவித உணர்வையும் வெளிக்காட்டாமல் ஜித்தேந்தரை நோக்கி ஓர் புன்னகையை சிந்தி, " அத்தான் அக்காவை பார்த்தவுடனே எங்களை மறந்துராதீங்க. அண்ட் ஒன் மோர் திங் பார்த்து ரொம்ப நாள் ஆகுதுன்னு கடத்திட்டு கிடத்திட்டு போய்டாதிங்க, அப்றம் என் ஆள் உங்கள சும்மா விடமாட்டான் சொல்லிட்டேன் " என விளையாட்டாய் அவனை கிணடலடித்தவள் , தனக்கும் விஷ்வாவிற்க்கும் எப்பிரச்சனையும் வராது என மறைமுகமாய் உணர்த்தினாள்.


தனது காரில் அமர்ந்த ஜித்தேந்தருக்கு என்றுமில்லாவகையில் மகிழ்ச்சி கொப்பளிக்க மனதின் ஓரமிருந்த சஞ்சலத்தையும் மறந்து தனது காரை வீட்டை நோக்கி செலுத்தினான்.


இங்கு இனி அனைத்தும் சுகமே என தன்னவனை சந்திக்க சென்ற ஷாலினியின் கண்களை கலங்க செய்தது அங்கிருந்த விஷ்வாவின் நிலை.


*********************************************************************************


கோவிலின் நடை சாற்றும் நேரம் ஆகியதால் அருகிலிருந்த பூங்காவிற்கு வந்தவள் சித்ராங்கதாவிற்கு செய்தியை அனுப்ப மறக்கவில்லை.


பூங்காவின் மரநிழலில் அமர்ந்தவாறு மித்ரேந்தருடன் கொஞ்சி விளையாடியதில் நேரம் ஆகியதை அவள் கவனிக்கமறந்திருந்தாள்.


இன்னும் சித்ராங்கதா ஏன் வரவில்லை என யோசித்தவள், அவள் வருமுன் விஷ்வாவிற்கு அழைக்க வேண்டாம் என சொல்லி சென்றதில் என்ன செய்வது என விழித்துக்கொண்டிருந்தாள்.


திடீரென அவளின் மனம் படபடப்பாகியது, அவளின் வாழ்வின் முக்கிய அங்கம் அவளிடம் சேரப்போவதுபோல் ஓர் எண்ணம் அவளுள் ப்ரவாகமெடுத்தது. அதன் தாக்கத்தில் மித்ரேந்தரை தன்னோடு இறுக்கி அணைத்தவளின் கண்கள் வேகவேகமாய் சுற்றுப்புறத்தை ஆராய்ந்தது.



அதேநேரம் காரில் வந்துகொண்டிருந்த ஜித்தேந்தரின் மனதில் இனம்புரியா உணர்வு கட்டவிழ , அது தன்னவளிர்க்கானது என அறிந்திருந்தவன் அவள் அருகிலிருப்பதை உணர்ந்துகொண்டான். சாலையின் ஓரமாய் காரை நிறுத்தியவன், தன் ராணிமாவிற்க்கான தேடலை கண்களில் கொண்டு அவ்விடத்தை ஆராய ஆரம்பித்தான் .



அவனின் உடம்பில் உள்ள ஒவ்வொரு அணுவும் தன்னவளை காணப்போகும் ஆவலில் குதுகலித்து ஆட்டம் போட இதழ் மட்டுமில்லாமல் கண்களும் சேர்ந்து சிரித்தவாறிருந்தது.



இங்கு மித்ராளினியோ தன்னுள் ஏற்படும் உணர்வுகளுக்கு அர்த்தம் புரியாமல்போக அதை ஆராயமுற்படாமல் அறியமுற்பட்டாள். ஏதோ ஒரு சக்தி தன்னை தன்னுள் ஆழிப்பேரலையாய் சுருட்டிக்கொள்ள முற்படுவதை அறிந்தவள் தானும் அதில் சுருண்டுபோக ஆசைகொண்டாள் .



அவ்வுணர்வின் ஈர்ப்பில் மெதுவாய் அப்பூங்காவை விட்டு வெளிவந்தவளின் கண்கள் தன் தேடலை இன்னும் நிறுத்தவில்லை. தற்பொழுது யாரவது அவளிடம் எதை தேடுகிறாய் என கேட்டாலும் அவளிற்கு விடை அளிக்க தெரியாது. ஆயினும் அவளின் மனம் தன் இணை அங்கிருப்பதை உணர்ந்து அவளை அங்கு சேர்க்க எண்ணி உசுப்பியது.



முன்பைவிட வேகமாய் ஜித்தேந்தரின் இதயம் துடிக்கஆரம்பிக்க எங்கு தன் இதயம் வெளியேவந்துவிடுமோ என அச்சம் கொண்டானோ அது தன்னவளிற்கு சொந்தமானது என தன் கரம் கொண்டு அதனை பொத்திக்கொண்டான் .



வெளியே வந்த மித்ராளினியின் கண்கள் தன் இலக்கை அடைந்ததோ இல்லையோ அவளின் கரங்களில் இருந்த மித்ரேந்தர் தன் தந்தையை கண்டுகொண்டான்.



இவர்கள் நின்றுகொண்டிருந்த அந்த முக்கியசாலையின்( மெயின் ரோட்) மறுப்பக்கம் அவன் நின்றிருந்தாலும் தன் தந்தையை மிக சரியாக கண்டுகொண்டான் புத்திரன்.



"ம்நா......நா...ம்ங்க..னா..."என குதூகலித்தவன் அவளின் கைகளில் துள்ள , தடுமாறிய மித்ராளினி அவனை சரியாய் பிடித்தவாறு எதிரே கண்டாள்.



பார்த்தவள் பார்வையை விலக்கமுடியாதவாாறு அவனின் முகம் அவளுள் பதிந்து தன் உரிமையை உணர்த்தி அவளின் நினைவை அசைக்க, காதோரமாய் " ராணிமா நான் எவ்வளவு தூரத்துல இருந்தாலும் சரி, எவ்வளவு கூட்டத்துக்கு நடுவுல இருந்தாலும் சரி, உன்னோட இந்த பார்வை ஒன்னு போதும் டி எனக்கு, நீ இருக்க இடத்தை கண்டுபிடிக்க...இந்த ரெண்டு கண்ணுலையும் என்னை பார்குறப்போலாம் தெரியுற அந்த காதல் இருக்கே ப்ப்பாஆ ..... சும்மா காந்தம் மாதிரி என்னை கட்டி இழுக்குதுடி" என காதலில் பிதற்றும் குரல் அட்சரம் பிசகாமல் கேட்டது.



அதன் பிரதிபலிப்பாய் அவளின் கண்களிலும் அந்த குரலுக்கு குறைவில்லா காதல் வெளிப்பட எதிரிலிருந்தவனையே இமை கூட அசைக்காமல் பார்த்திருந்தாள்.



அந்த குரலின் சொற்கள் உண்மைதானோ ? இவள் தன்னையுமறியாமல் காதல் பொங்க அவனை பார்த்ததில் அவளின் அக்காந்தபார்வை அவன் சொன்னது போலவே அவனின் காதல் மனதை ஈர்த்த அடுத்தநொடி அவன் இவளின்புறம் திரும்பிருந்தான் .



ஏழு கடல் ஏழு மலை தாண்டி என இதை தான் சொல்வனரோ என ஓர் சந்தேகம் ஜித்தேந்தருக்கு எழுந்தது . அவளை கண்ட நொடி சத்தியமாய் அவனின் இதயம் ஒருமுறை துடிப்பதை நிறுத்தி பின் தன் இணையை கண்ட ஆனந்தத்தில் முன்பே விட வேகமாய் மீண்டும் துடித்தது .



அவளை கண்டவனோ தன் உயிர் தன்னுடல் சேர்ந்ததாய் உணர்ந்தான் . அவளை நிதானமாய் உச்சி முதல் பாதம் வரை பார்த்தவாறு தன்னவளை மெதுமெதுவாய் தன்னுள் உள்வாங்கினான்.



இருவருக்கும் இடையில் இருக்கும் இடைவெளி அதிகமாயினும், அருகில் செல்லும் நொடியில் கூட அவளை காணாமல் போக கூடாது என அங்கிருந்தே சிறிது சிறிதாய் ரசித்தவனின் உயிர் பூ இப்பொழுதுதான் பூத்ததாய் கொண்டாட்டமிட , கண்களோ அவளின் கைகளில் இருந்த தங்களின் மகவை கண்டு மின்னின .



ஏனோ அவள் தங்கள் மகவை ஏந்தியவாறு தன் வருகைக்காக காத்திருப்பதை தோன்ற அந்த உணர்வை ஆழ்ந்து அனுபவித்தவன் " உன்னோட பாவா வந்துட்டேன் டா ராணிமா " என முனங்கியவாறு ,அது நகரின் முக்கிய சாலை என்பதையும் உணராமல் அதை கடக்க ஆரம்பித்தான்.



அவனை கண்டுகொண்ட அவளின் இதயமும் அவனுடன் இணைய அவளை தூண்ட அவளின் மூளையோ அவன் யாரென அறிய பிரயாதனப்பட்டது. மூளையின் முயற்சியை இதயத்தின் மகிழ்வு தடுக்க உறவறியா உணர்வுடன் அவளும் அவனை நோக்கி தன் எட்டுக்களை எடுத்து வைத்தாள்.


காதலதை உணரும்
முதல் தருணம்
பூவின் மென்மையை
உணர வைப்பதெனில் ,
தொலைத்த காதலதை
மீண்டும் உயிரோட்டமாய் கண்டுகொள்ளும் நொடி ...
மழலையின் பாதமது
நெஞ்சில் உதைக்கும்
மென்மைக்கு ஒத்தானது...!!!



-கரைவாள்...
 
Last edited:

Thoshi

You are more powerful than you know😊❤
நீண்ட நாட்களுக்கு பிறகான எபி என்பதால் எந்த கஷ்டமும் துயரமும் ஏற்படாவண்ணம் எழுத்திற்கேன் டியர்ஸ் மீ ரொம்ப ரொம்ப குட் கேர்ள்😍😍😍படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்கள் .....
 
Last edited:

Thoshi

You are more powerful than you know😊❤
நினைவில் தத்தளிக்கும் நேசமது 22 :


குழப்பத்துடன் கோவிலில் இருந்து கிளம்பிய சித்ராங்கதா சிறிது நேர பயணத்தில் அந்த இடத்திற்கு வந்திருக்க, கதவை திறந்து செல்லும் பொழுதே "டப்ப் " என்ற ஓசை கேட்டதில் அடுத்த நொடி இடது கையை கன்னத்தில் வைத்தவாறு முழித்தாள் .


"யாருடா அந்த பயபுள்ள... ??இப்படி அடிவாங்குவது. சத்தத்தை கேட்டதுக்கே எனக்கு காது கிழியுதே" என அடித்தவனை எட்டிப்பார்த்தாள்.


"ஆத்தாடி! நம்ம ரவுடி பேபில இது, எதுக்கும் கொஞ்சம் கிட்ட போய் பார்ப்போம் " என கால் எடுத்து வைத்தவள், அடுத்து அடித்தவன் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்ததை பார்த்து விட்டு, "ரைட்டு! இனி டௌட்டே வேணாம் இது நம்ம ஆளு தான்.இவருக்கு போலீஸ் ட்ரைனிங்ல என்ன கத்துக் கொடுத்தாங்களோ இல்லையோ ஆனாவூனா துப்பாக்கிய தூக்க சொல்லிக்கொடுத்து இருக்காங்க" என மனதில் கவுண்டர் அடித்தவளுக்கு,இத்தனை நேரம் மனதில் இருந்த குழப்பம் அனைத்தும் நொடியில் கரைவது போல் இருந்தது.


அவனை ஜொல்லியவாறு வாயிலிலேயே நின்று கொண்டிருக்க, சிறிது நேரம் பிறகு அவளை கண்ட ஜிஷ்ணு சிரித்தவாறே கூட்டிச் சென்றான்.


அவனின் அதிரடியிலே மயங்கும் அவள், அவனின் அத்தி பூத்தார் போன்ற இவ்வசிய சிரிப்பில் மொத்தமாய் சறுக்கினாள்.


எவ்வளவு நேரம் சென்றதோ ,அவளின் ரசிப்பை ரசித்தவன் "பேபி போதும்டி!!! இது பப்ளிக் பிளேஸ் உன் மச்சான் ஒரு போலீஸ்னு மறந்துடாத" என்றான் .


அசடு வழிய, "ஏதோ பேசணும்னு சொன்னீங்க வந்து ஒரு மணி நேரம் ஆகுது" என சமாளித்த அவளுக்கு அப்பொழுதுதான் தான்கேட்க வேண்டியது எல்லாம் நினைவுக்கு வந்தன.


இத்தனை நேரம் அவளை ரசித்தவாறு அமர்ந்திருந்தவன், அவளின் கேள்வியில் காதலை சொல்லும் தருணம் வந்ததும் சிறிது படபடத்தான்.


"முதல்ல ....அது...எனக்கு ...நான் .. அதை எப்படி சொல்றதுன்னு எனக்கு " என இருபது பேரை ஒரே நேரத்தில் அசால்டாய் சமாளிப்பவன் காதலை சொல்ல தடுமாறினான்.


அவன் தடுமாற்றத்தில் அவன் சொல்ல வருவதை உணர்ந்தவள் அது சரிதானா என அறிவதற்குள் இதற்கு முன் தனக்கு தோன்றிய கேள்விகளை தெளிவுபடுத்திக் கொள்ளலாம் எனத் தவறாக முடிவு எடுத்தாள்.


ஆழமூச்செடுத்து தன்னை நிதானப்படுத்திக் கொண்ட ஜிஷ்ணு, "பேபி ...ஐ "என சொல்லி முடிப்பதற்க்குள்..


சித்ராங்கதா," நீங்க எனக்காகவா தினம் காலேஜ் வந்தீங்க" என கேட்டிருந்தாள்.


காதலை சொல்ல வந்தவன் அவளின் திடீர் கேள்வியில் புரியாமல் பார்க்க,


அதை உணர்ந்த சித்ராங்கதா,"இல்லை, நீங்க போலீஸ்தான. போலீஸ்க்கு எப்பவும் வேலை இருக்கும்னு சொல்லுவாங்க. ஆனா, நீங்க எங்க காலேஜ் வாசலில் வாட்ச்மேன் வேலை தானே பார்த்தீங்க" என தனது கேள்வியை விளையாட்டாய் கேட்டவளின் மனமோ, "உன்னை பார்க்கத்தான் வந்தேன் பேபினு சொல்லுடா" என வேண்டியது.


ஜிஷ்ணு அனைவரிடமும் அழுத்தமாய் தன்னை காட்டிக் கொண்டாலும் அதை உடைத்து அவனை பாசமான தந்தையாகவும், அடம்பிடிக்கும் குழந்தையாகவும் மாற செய்தவள் மித்ராளினியே. அவளைத் தவிர வேறு ஒருவரிடம் அவன் அப்பரிமாணத்தை வெளிப்படுத்துவான் என்றால் அது சித்ராங்கதா மட்டுமே.


அவள் தன் கேள்வியை விளையாட்டாய் கேட்டிருக்க, இவனும் தன் காதலை சொல்லப் போகும் தருணத்தில் கொண்ட பரபரப்பில் அதை, அவளின் மனதின் வேண்டுதலை உணராமல் "பேபி அது நான் பாப்பாவ ட்ராப் பண்ண வந்தேன்டா... ஆஹாஹா.... அதுக்கு நீ என்ன வாட்ச்மேன் ஆகிட்டியா" என சிரித்தான்.


" பாப்பா...வா..." என சித்ராகதாவின் குரல் தந்தியடிக்க,


"ஹான் எப்பவும் வெளியே அப்படி சொல்லியே பழக்கம் ஆகிடுச்சு. ஆக்ஷுயலா நானே உன்கிட்ட அவளை அறிமுக படுத்தனும்னு நினைச்சேன் ஆனா அதுக்குள்ள என்னன்னவோ ஆகிடிச்சி. ம்ம்ம்ம் ...!!!அவ என்னோட உயிர், என் தேவதை, சின்னதுல இருந்து எப்பவும் என்னோடவே இருக்கிறவ , இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் பேபி. உனக்கு கூட தெரிஞ்சு இருக்கும் உன் காலேஜ் தான, அவளை கூட்டிட்டு போறதுக்கும் விடுவதற்காகவும் தான் உன் காலேஜ்க்கு வருவேன் அண்ட் அதுனால தான உன்னையும் பார்த்தேன்" என இத்தனை நாளாய் பேசாததற்கும் சேர்த்து அவன் பாட்டுக்கு பேசிக்கொண்டே போக, எதிரிலிருந்தவள் சிறிது சிறிதாக உடைய ஆரம்பித்தாள்.


"அப்போ இவர் எனக்கானவர் இல்லையா ? அன்னைக்கு என்னை பார்க்கும் போது காதல் தெரிஞ்சுதே அது எனக்கானது இல்லையா ? இல்ல அது என் கற்பனையா ? நான் தான் எல்லாத்தையும் தப்பா புரிஞ்சுகிட்டேனா? அப்போ... அப்போ...என் காதல் தப்பானதா?"எனவும்...
"இல்லை கீர்த்தி சொன்னமாதிரிலாம் இருக்காது ...ஆமா இருக்காது..இவர் என்னுடையவர், என்னோட ரவுடி பேபி தான்" எனவும் உள்ளுக்குள் ஒரு வாதத்தை நடத்திக் கொண்டிருந்தாள்.


சித்ராங்கதாவின் முகத்தை பார்த்த ஜிஷ்ணு தன் பேச்சை நிறுத்தி,"பேபி என்னாச்சுடா? ஏன் உன் முகம் இவ்வளவு வலியை காட்டுது" என பதறினான்.


"தான் சொல்லாமலே தன் முகம் பார்த்து வலியை உணரும் அவனை எண்ணி பெருமைப்படுவதா?இல்லை இத்தனை நாள் போல் இல்லாமல் இடைவிடாமல் அவன் பேச அதில் சந்தோஷப்படுவதா? இல்லை தான் எண்ணியது அனைத்தும் பொய்யாய்ப் போக அவன் தனக்கு இல்லை என்பதில் அழுவதா" என எந்த உணர்ச்சியை வெளிப்படுத்துவது என அறியா பிள்ளையாய் கண்கள் கலங்க விழித்தாள்.


இவளின் முகம் காட்டும் உணர்வுதனில் அவனின் மனம் கசங்க எழுந்து அவளருகில் அமர்ந்து, "என்ன ஆச்சு பேபி ! சொல்லுடா "என, அந்த கேள்வி அவளின் காதில் விழவேயில்லை.


அவள் கவனம் முழுக்க டேபிளில் வைத்து இருந்த அவனின் தொலைபேசியின் ஒளியில் தெரிந்த எண்ணிலே இருந்தது.


ஜிஷ்ணு மொபைலை சைலன்டில் போட்டிருக்க, சத்தமில்லாததில் அவன் அதை கவனிக்காமல் இருக்க, அதற்குள் அவன் அலைபேசி மூன்று நான்கு முறை கிறுகிறுத்து அடங்கியது .


அதில் அவன் மித்ராளினிக்கு புதிதாய் வாங்கி கொடுத்த அலைபேசியின் எண் ஒலிக்க, திரையில் (என் உயிரானவள்)மித்துமா என இருந்தது .


அதை பார்க்க பார்க்க தன் காதல் ஒன்றுமில்லாததாய் தோன்ற, ஜிஷ்ணுவின் குரல் அவளின் செவியில் கேட்காமல் போக, சித்ராங்கதாவின் மனதின் குரல் அதிகமாய் கூக்குரலிட்டது .


"இவன் உனக்கானவன் இல்லை வேறுஒருவருக்கு சொந்தமானவன். நீ போ இங்கிருந்து . அவன் சித்ராங்கதாவிற்கானவன் இல்லை அவன் மித்ராளினியின் முறைமகன் " என சத்தமிட அதற்கு மேல் அதை கேட்க முடியாதவள், காதை பொத்தியவாறே " இல்லை... நீ... நீங்க... எனக்கு வேணாம்... எனக்கு... வேணாம்.." என கத்தினாள்.


அவள் திடீரென இவ்வாறு நடந்து கொண்டதில் ஜிஷ்ணு புரியாமல் அவளை பார்க்க, அவளோ "வேண்டாம் ..போங்க... போயிருங்க... நான் உங்களுக்கு ஒண்ணுமே இல்ல தானே போங்க" என கத்த,


அவன் " பேபி மா "என அருகில் வர,


"வராதீங்கனு சொல்றேன்ல... போயிருங்க ...போங்க.."என அவள் கூச்சலிட்டதும் தான் அவனும் சுற்றுபுறம் உணர்ந்து பார்த்தான்.


அங்கிருந்த அனைவரும் இவர்களை வேடிக்கை பார்ப்பது அறிந்து சற்று இறுக்கமாய் உணர்ந்தாலும், காரணம் புரியவில்லை எனினும் கதறிக் கொண்டிருக்கும் தன்னவள் மட்டுமே முக்கியமாய் பட்டதில் முதலில் அவளை அமைதிப்படுத்த தண்ணீர் இருந்த கண்ணாடி தம்ளரை எடுத்துக் கொண்டு கதறி கொண்டிருப்பவளை, "பேபி" என அழைக்க,


தன் காதல் பொய்யாய் போனதாய் தப்பாய் புரிந்துகொண்டவள் அதன் கனத்தை தாங்கமுடியாததால் சரியாய் யோசிக்கமுடியாமல் போக, பாய்ந்து அவன் சட்டையை இரு கைகளாலும் பற்றி," ஏன் மச்சான் இப்படி சொன்னீங்க? அப்போ நீங்க எனக்காக வரலையா? அப்போ நான் உங்களுக்கு முக்கியம் இல்லையா? "என மீண்டும் மீண்டும் அதையே கேட்டவாறு இருந்தாள்.


அப்பொழுதுதான் சிக்கலின் நுனியை கண்டுகொண்ட ஜிஷ்ணு, "இல்ல டா பேபி "என ஆரம்பிக்க,


அவனை பேசவிடாமல்," வேணாம் நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். உங்க உயிரானவங்ககிட்டயே போங்க. அவங்க தான உங்களுக்கு முக்கியம்ல போயிடுங்க" என கத்த இவ்வளவு நேரம் காதலர்களின் சண்டையை சுவாரஸ்யமாய் பார்த்தவர்கள் இப்போது இன்னும் ஆர்வமாய் பார்க்க,


ஏற்கனவே இந்நிலையில் சிறிது இறுக்கமடைந்திருந்தவன் சித்ராங்கதாவின் தற்போதைய பேச்சில் இன்னும் இறுக கோபத்தை அடக்கும் வழி அறியாமல் கையில் இருந்த கண்ணாடி தம்ளரை கைகளால் இறுக்கி உடைத்தான் .


உடைத்த பின்பும் கோபம் அடங்காமல் போக மேலும் கைகளை இறுக்க உடைந்த கண்ணாடித் துண்டுகள் அவனின் கையை கிழித்து , ரத்தம் வேகவேகமாய் அத்துண்டுகளை அலங்கரித்தது.


இதை கண்டு சித்ராங்கதா பதறி அருகில் வர, இப்பொழுது அவன் விலகியவாறு அவளை நோக்கி இடதுபுற உதடு வளைய சிரித்தான்.


அவனின் சிரிப்பினை புரியாமல் அவள் பார்க்க , "என்னோட யோசனை சரினா.. நீ இதுவரைக்கும் என்னையும் அவளையும் சேர்த்து கூட பார்த்திருக்க மாட்ட. நான் இப்போ சொல்லலைன்னா உனக்கு இது சரியாக கூட தெரிஞ்சு இருக்காது . நான் அவளை எப்படி பாக்குறேன்... இனிமே எப்படி பார்ப்பேன்... அவ என்ன எப்படி பார்த்தா... இது எதுவும் தெரியாது. ஏன் இப்ப நான் உன் கிட்ட சொல்ல வருவதை கூட நீ முழுசா கேட்கல. ஆனா அதுக்குள்ள சந்தேகம் .வாவ்...நைஸ்... சூப்பர்... பென்டாஸ்டிக்" என ரத்தம் கசியும் கையையும் பொருட்படுத்தாமல் கை தட்டினான்.


அவனின் உரத்த கேள்வியில் தவறு செய்த குழந்தையாய் அவள் திருத்திருக்க , அந்நிலையிலும் அவளை அள்ளி அணைத்திடவே அவன் நெஞ்சம் விரும்பியது.


எப்படி ஆரம்பித்தது இந்த நாள்.. தன் காதலைச் சொல்லி அவளுடன் எப்படி எல்லாம் பேச வேண்டும் என சிந்தித்து பலமுறை தனக்கு தானே சிரித்த நொடிகள் அனைத்தையும் நினைத்துப் பார்த்தவனிற்கு அதற்கு மேலும் அங்கு நிற்க முடியாமல் போக விலகியவன் அவளை திரும்பி பார்க்கவேண்டுமென தோன்றிய உணர்வில் மறுபடியும் வந்தவன் அங்கிருந்த அலைபேசியை கண்டு அதை எடுத்தவாறு வெளியேறினான்.


சித்ராங்கதாவோ, அவனின் காதல் தனக்கு இல்லையோ என மனதில் எழுந்த சிறுகுழப்பத்தில் மிக இலகுவாய் பேசவேண்டியவற்றை , தனக்கு வேண்டியதை பிறர் பறித்துவிடுவாரோ என அவசரம் கொள்ளும் குழந்தையாய் செயல் பட்டு அவர்களின் உணர்வலையை அறுத்தவள், அவனின் விலகலையும் தாங்க முடியாமல் அழுதவாறே வெளியேறினாள்.



வலியே என்
உயிர் வலியே நீ
உலவுகிறாய் என்
விழி வழியே சகியே
என் இளம் சகியே உன்
நினைவுகளால் நீ
துரத்துறியே மதியே என்
முழு மதியே பெண் பகல்
இரவாய் நீ படுத்துறியே
நதியே என் இளம் நதியே
உன் அலைகளினால் நீ உரசிறியே

மனம் மனம்
எங்கிலும் ஏதோ கனம்
கனம் ஆனதே தினம்
தினம் ஞாபகம் வந்து
ரணம் ரணம் தந்ததே
அலைகளின் ஓசையில்
கிளிஞ்சலாய் வாழ்கிறேன்
நீயா முழுமையாய்...
நானோ வெறுமையாய்..
நாமோ இனி சேர்வோமா...

யாரோ மனதிலே
ஏனோ கனவிலே நீயா
உயிரிலே தீயா தெரியலே
மிக மிகக்
கூர்மையாய் என்னை
ரசித்தது உன் கண்கள்தான்
மிருதுவாய் பேசியே என்னுள்
வசித்தது உன் வாா்த்தை தான்
கண்களைக் காணவே இமைகளை
மறுப்பதா வெந்நீர் வெண்ணிலா
கண்ணீர் கண்ணிலா நானும்
வெறும் கானலா



ஜீப்பின் ஸ்டியரிங்கை பிடித்திருந்த கரத்திலிருந்து இரத்தம் சிந்தியவாறிருக்க அதன் வலி சிறிதும் ஜிஷ்ணுவிடம் இல்லை. ஒருவேளை அவன் கொண்ட மனக்காயம் அதை விட பெரியதோ ?


அவனின் காயம் அவனது அலைபேசிக்கு எவ்வாறு தெரியப்போகிறது. அது சைலண்டில் போட்டிருந்ததால் தொடர்ந்து கிறுகிறுத்தது(வைப்ரேடிங் பா) .


தன் ரத்தம் சொட்டும் கை கொண்டு அதை எடுத்தான்.


அந்த பக்கம் என்ன சொன்னார்களோ இதுவரை வெற்று பார்வை பார்த்திருந்த கண்கள் இரண்டும் யோசனையாய் சுருங்கியது.


"அவன் யாரு என்னனு உடனடியா விசாரிச்சு சொல்லுங்க இன்னும் பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன் " என அதுவரை இருந்த காதலனின் முகம் போய் காவலனுக்கு உரிய கம்பீரத்துடன் சொன்னான் ஜிஷ்ணு.


கையின் காயமதை உணராதவன்,மனதின் காயமதில் துவண்டிருந்தாலும் கடமை அதை வெல்ல, தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டுவந்தான்.


தனக்கு வந்த ஃபோன் காலிற்க்கு பிறகு அலுவலகம் நோக்கி சென்றுகொண்டிருந்த ஜிஷ்ணு, சிறிது நேரம் பிறகே தன்னை பின்தொடர்ந்து வரும் அந்த கருப்பு நிற காரை கண்டுகொண்டான்.


கண்களில் கவனம் ஏற , யாரென அறிய முற்பட்டான் .தற்போது மீண்டும் அவன் அலைபேசி அலறியதில் அதை எடுத்து ஸ்பீக்கரில் போட்டவாறே பின்னால் வரும் காரை நோட்டமிட்ட, அவனின் நோட்டம் வீண் என்பதுபோல் அலைபேசியில் ," என்ன மாப்ள சௌக்கியமா...??!! திரும்பி திரும்பி பார்த்துட்டே போற கொஞ்சம் முன்னாடியும் பார்த்து போ மாப்ள" என்றது மறு புறத்திலிருந்த குரல்.


அதில் ஜிஷ்ணுவின் புருவங்கள் இரண்டும் யோசனையாய் சுருங்க,.


"என்ன மாப்ள?!!! அதுக்குள்ள என்னை மறந்துட்டியா...ச்சுச்சு.. உன் காதல் அவ்வளவு தானா ?? ஆனா உன் முத காதலி கூட உன்னைவிட்டுட்டு வேறொருத்தன் பின்னாடி போய்ட்டா போல...ச்சுச்சு ...சரி விடு அது தான் இப்போ வேற பொண்ணு கூட சுத்துற போலயே... அந்த பொண்ணு வேற பணக்காரி போல ...ஆனா பாவம் இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த பொண்ணு கதி என்னவோ" என சொல்லிக் கொண்டு இருந்தவன் பாதியில் நிறுத்தி போனை அணைத்திருந்தான்.


அதே நேரத்தில் ஜிஷ்ணுவின் ஜீப்பை இத்தனை நேரம் தொடர்ந்து வந்த காரும் வேறு பாதையில் சென்றது .


சட்டென்று திரும்பி அக்காரை தொடர முடியாமல் போனவனுக்கு இதற்க்குமுன் அந்த குரலை மிகவும் வேண்டாத தருணத்தில் கேட்டதை போல் தோன்ற, அவனின் மனம் ஏதோ தவறு நேரபோவதாய் உணர்தியது.


"ஆபத்து " என்றவுடன் அவனுக்கு தன் உயிர் மற்றும் வாழ்வே பிரதானமாய் தெரிய, முதலில் மித்ராளினியின் பாதுகாப்பிற்க்காய் தான் நியமித்தவருக்கு அழைப்பை விடுக்க அவர் , அவள் குழந்தையுடன் பார்க்கில் இருப்பதாய் சொன்னதில் நிம்மதியானவன் சித்ராங்கதாவிற்கு அழைத்தான்.


அப்பக்கம் அழைப்பு எடுக்கப்படாமல் போக தனது உதவியாளருக்கு அழைத்தபடியே அவளைத் தேடிச் சென்றான்.


அவன் தன்னவளை காக்க செல்ல காலனோ அந்த காரை வேறுவொருவரை நோக்கி செலுத்தினார்.


அந்த கருப்பு நிற காரின் உள்ளே,"இப்போ நம்ம அந்தப் பெண்ணைத் தேடிப் போறமா மச்சி??" என ஒருவன் கேட்க,


"அவ எதுக்கு மச்சி நமக்கு , அந்த ஏசிபிய சும்மா சுத்தல்ல விடலாம்னு சொன்னேன்டா. இவங்களால நான் எவ்ளோ அவமானபட்டேன் அதுக்கு தான் ஒருத்தனையும் அடையாளமில்லாம ஆக்கினேன்....மம்ஹா... இப்பவும் அந்த காட்சியை நினைக்கும்போதுலாம் சும்மா ஜிவ்வுனு இருக்கு மச்சி" என்றவன் ,



"இப்ப பாரு இந்த ஏசிபி அந்த பொண்ண தேடி போய் இருப்பான். ஆனாலும் அவனும் என்ன பண்ணுவான் அவனுக்குனு இருந்தவளையும் நம்ப காலி பண்ணிட்டோமே" எனச் சொல்லி சிரித்தான். ( இந்த கேரக்டர் ரொம்ப முக்கியம்ங்க நல்லா பாத்துக்கோங்க).


**************************************************


"டேய் லூசு...எரும விஷ்வா... நான் என்ன சொல்ல வரேன்னு கூட கேட்காமல் அப்படி என்னடா உனக்கு "என விஷ்வாவை தலையணையால் மொத்தி எடுத்தாள் ஷாலினி.


விமான நிலையத்தில் இருந்து வந்தவள் கண்டது, தலையில் கட்டுடன் அமர்ந்திருந்த விஷ்வாவை தான். ஒரு வருடம் முன்பு ஒரு தடவை இவ்வாறு அவன் இருந்திருக்க அன்றைய நினைவுகளின் தாக்கத்தில் பதறியவாறு அவனின் அருகில் சென்றாள் ஷாலினி.


அசைவை உணர்ந்து விழித்த விஷ்வா , " என்னடி ?!! மாமன வச்ச கண்ணு வாங்காம பாக்குற" என வழமைபோல் கண் சிமிட்டி சிரித்தான்.


அதில் நெஞ்சோரமாய் இருந்த சிறு துளி பாரமும் விலக அவனை முறைத்தவள், அவன் மேல் தலையணை போர் தொடுக்க ஆரம்பித்திருந்தாள். .


சிறிது நேரம் கழித்து மூச்சுவாங்க சோபாவில் அமர்ந்த இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள, ஒரேநேரத்தில் இருவரும் " சாரி" என்றனர்.


அதில் சிரிப்புடன் ஷாலினியின் அருகில் இன்னும் நெருங்கி அமர்ந்து அவளின் கரம்பற்றிய விஷ்வா, "சாரிடி!!! நான் அந்த மாதிரி ரியாக்ட் செஞ்சிருக்ககூடாது. அதும் நீ போய் சந்தேகப்பட்டனு " என தன் கரம் கொண்டு தலையில் அடித்துக்கொண்டான்.


"ச்சு ..அத்தான் ..என்ன இது ? " என்று குறுக்கிட்ட ஷாலினியை தடுத்தவன்,


" ஹாஹா நான் சொல்லிறேன்டி...!!!அது அப்போ எனக்கு எந்த மாதிரி இருந்துச்சுனு உனக்கு புரிய வைக்கமுடியுமானு எனக்கு தெரியல . அது சில வருஷம் முன்னாடி எப்படி நான் இருந்தேன்னும், என்ன பண்ணனும் உனக்கு தெரியும் நல்லாவே. சோ அப்போ இருந்தமாதிரியே இப்பவும் தொடருமோ? உனக்கு என்னை, என் காதலை புரியவே இல்லையோனு நானே கேட்டுகிட்டேன்டீ . அது தான் இவ்வ்ளோத்துக்கும் காரணம் " என்றவன் அவளின் பற்றிய கரம் விலக்காமலே அவளின் முன் மண்டியிட்டு,


"அப்போ சொன்னது தான் இப்பவும் சொல்றேன் ...நான் விளையாட்டுத்தனமா தான் இருப்பேன், ஆனால் என்னோட காதல் விளையாட்டு இல்ல . உன்கிட்ட சத்தியமா என்னால பொய்யா இருக்க முடியாதுடி . இப்போ இந்த அடிபட்ட நிமிஷம் கூட உன் முகம் தான் எனக்கு தெரிஞ்சது. திரும்பவும் உன்ன விட்டுட்டு அந்த இருட்டுக்குள்ள போயிடுவேனோன்னு நெஞ்சு பதறிடிடுச்சிடி" என்றான்.


சிறிது நேரம் அந்தநேரத்தின் உணர்வுகளில் லயித்திருந்து அமைதியாயிருந்தனர் இருவரும்.


முதலில் அதிலிருந்து வெளிவந்த விஷ்வா ," ஹா ஹா ஹா ஹா ...!!!உனக்கு ஒன்னு சொல்லவேஇல்லைல, என் அண்ணனு ஒருத்தர் இருக்காரே அவர் எப்போவும் தள்ளியே இருப்பார். நம்ப போய் பேசும்போதுகூட சொல்றியா சொல்லுபோறியா போனு இருப்பான் . ஆனா அவனுக்கு எங்க எல்லோரும் மேலயும் பாசம் ஜாஸ்தி தான். எனக்கு எதுவும் ஆகக்கூடாதுனு ஒருத்தனை பாதுகாப்புக்கு போட்டு இருக்காரு. அதுவே எனக்கு இன்னிக்கு தான் தெரிஞ்சது.


அவன்தான் டாக்டரை கூட்டிட்டு வந்து கட்டு போடுற வரைக்கும் கூட இருந்தான் . நான் கண்ணை முழிக்குறவரைக்கும் எங்க அண்ணா அவனை போன வைக்கவிடல" என சிரிப்பாய் தன் அண்ணனின் புகழ் பாடினான் விஷ்வேந்தர்.


போனில் பேசிய நொடி முதல் தவிர்த்திருந்தவளின் அந்நேர பதட்டத்தை நீக்கியதும் ஜித்தேந்தர் தான் என்பதில் ஷாலினியுமே அவனின் புகழை கேட்டவாறிருந்தாள்.


இத்தனை நேரமாய் இருந்த இறுக்கமான சூழ்நிலை விலகியிருக்க, தற்பொழுது தன் வழக்கமான சிரிப்புடன் விஷ்வா பேசுவதை ரசித்தவளின் கரம் , தன் முன் மண்டியிட்டு இருந்தவனின் தலையில் போடபட்டிருந்த கட்டை மிருதுவாய் வருடியது.


அந்நேரத்தில் அவர்களிடம் அனுமதி கேட்கும் நேரம்கூட இல்லாதது போல் அங்கு மூச்சிரைக்க வந்து நின்றிருந்தார் விஷவேந்தருக்காய் , ஜித்தேந்தர் நியமித்திருந்த பாதுகாவலர்.



அங்கு ஜிஷ்ணுவும், சித்ராங்கதாவும் தங்களின் உணர்வலை அறுந்ததாய் எண்ணி வருந்திருக்க,


இங்கு விஷ்வாவும், ஷாலினியும் தங்களின் உயிர்அலை உயிரற்று போவதற்கு முன்பே தங்களின் காதலை கொண்டு அதை உயிர்த்திருந்தனர் .


**************************************************


நீண்ட இடைவெளிக்கு பிறகு தன்னுயிரின் உரிமையானவளை கண்டுகொண்ட ஜித்தேந்தர் , அவளின் உரிமை சாசனத்தை அவளிடமே சேர்ப்பிக்கும் வேகத்துடன் மித்ராளினியை நோக்கி நடந்தான் .


அவனின் ஒவ்வொரு அசைவையும் மித்ராளினியின் கண்கள் படம் பிடிக்க ,மனமோ" இது இது என்னவனின் அசைவுகள்" என இதற்க்கு முன்பான அவனுடனான தருணங்களை எடுத்துக்கொடுத்தது.


உதடு மட்டுமில்லாமல் கண்களும் சேர்ந்து சிரித்து, மற்றவர்களை ரசிக்க வைக்கும் சிரிப்பு . ' தன்னை பார்க்கும் நொடிகளில் மட்டுமே அக்கண்களில் சிரிப்புடன் சேர்ந்து வெளிப்படும் அவனின் காதல்' என கண்கள் இந்நாள் காட்சியையும் ,மனம் அந்நாள் காட்சியையும் ஒருங்கிணைத்து காட்டியது.


இருவரின் உதட்டிலும் சிரிப்பிருக்க, இருவரின் கண்களும் கண்ணீரில் பளபளத்தது.


அவர்களின் அத்தருணத்தை கண்ட அக்காலனும் தான் விதியை மாற்றலாமா என சிந்திக்க அதற்குள் காலம் கடந்து, அந்த கருப்பு நிற கார் இவர்கள் இருந்த ரோட்டினுள் நுழைந்திருந்தது .


ஜித்தேந்தர் தன் வழக்கமாய் மோதிரவிரல் கொண்டு இடது புருவத்தை நீவியவாறே சிரித்தபடி சாலையை கடப்பதை சற்று தொலைவில் வந்துகொண்டிருந்த காரில் இருந்தவன் கண்டு அதிர்ச்சியுடன் நிறுத்தினான்.


"டேய்****...எதுக்கு இப்போ வண்டிய நிறுத்துன " என அவனின் அருகிலிருந்தவன் எகிற,


காரை ஓட்டியபடி வந்திருந்தவன் கண்களில் பயத்துடன், " ஆர்....ஜே....ஆர்ஜே " என்றவனின் பார்வை ஜித்தேந்தரை விட்டு விலகவில்லை.


அவன் சொன்னதில் அருகிலிருந்தவனும் அதிர்ந்து , அவன் தொடர்ந்து பார்த்தவனின் உதடும் " ஆர்ஜே " என பயத்துடன் உச்சரித்தது .


ஆனால் அவனின் பயம் ஒருநொடி தான் ," டேய் !!!இவன் எப்படி டா இங்க ....??தூக்குடா... அடிச்சி தூக்கு " என கத்தினான்.


அதில் காரை ஓட்டுபவன் சிறிதுநடுக்கத்துடன் அருகிலிருப்பவனை பார்க்க,


"என்னடா மச்சான் பார்த்துட்டு இருக்க.இவன் உயிரோட இருக்கிறது எவ்வளவு ஆபத்துனு தெரியும்ல அதும் நம்ப செஞ்சதுலாம் தெரிஞ்சிது அவ்வளவு தான் .அடிச்சி தூக்குடா " என மீண்டும் கத்தினான்.


தன்னுயிர் சேர போகும் திருப்தியுடன் மித்ராளினியும், தன் தந்தையை கண்டு துள்ளியவாறு மித்ரேந்தரும் பார்த்திருக்க அவர்களை தன்னுடன் அணைத்துக்கொள்ளும் ஆசையுடன் வந்த ஜித்தேந்தரை தூக்கியடித்தது அந்த கருப்பு நிற கார்.


தூக்கியெறியப்பட்ட ஜித்தேந்தரின் தலை எதிர்புறம் ரோட்டில் இருந்த கல்லில் மோத , வீசப்பட்ட வேகத்தில் அவனின் வலதுகை முட்டி விலகி உயிர்போகும் வலியை அளித்தது .


சட்டென்று நிகழ்ந்த இந்நிகழ்வின் தாக்கத்தில் திகைத்திருந்த மித்ராளினி தன் அடிமனதிலிருந்து எழுந்த உணர்வில் "பாவாவாவா!!!" என கத்தியவள் மித்ரேந்தரை அணைத்தபடி ஜித்தேந்தரை நோக்கி ஓடினாள் .


ஜித்தேந்தரின் மேல் மோதிய திமிருடன் சிரித்தவர்கள் காதில் விழுந்த குரலில் திகைத்து திரும்பி பார்த்தனர்.


" டாக்டர் .மித்ராளினி!!!" என காரை ஓட்டியவன் சொல்ல,


"ஆஆஆஆ...!!!!!எப்படிடா எப்படி .???? மொத்தமா சாய்ச்சுட்டதா நினைச்ச எல்லோரும் எப்படிடா திரும்ப வந்தாங்க...???ஆஆஆ ...தூக்குடா அவளையும் தூக்கு...." என அலற , முன் சென்ற கார் மீண்டும் அதே வேகத்துடன் வருவதை கண்ட ஜித்தேந்தர் எழ முற்பட , அதற்குள் அது மித்ராளினியை மித்ரேந்தருடன் சேர்த்து தூக்கி எறிந்திருந்தது .


அதிலும் இவ்விதியை என்ன சொல்ல? இத்தனை நாள் இருவரையும் சந்திக்கவிடாமால் செய்த அவ்விதிதான் தற்பொழுது காரில் தூக்கியெறியப்பட்டதில் அவர்களை அருகருககே விழசெய்திருந்தது .




தன் கண்முன்னாலே தன்னவளுக்கு ஏற்பட்ட நிலையை கண்ட ஜித்தேந்தர் எதுவும் செய்ய முடியாமல் சிறிது சிறிதாய் நகர்ந்து அவளின் அருகில் சென்றான்.


சிறிதுசிறிதாய் நகர்ந்தபடி அவர்களிடம் வந்தவன் மித்ராளினியை தன்னை நோக்கி திருப்பினான் .


முகம்முழுக்க ரத்தம் தோய்ந்திருக்க தன்னை பார்த்தவளை கண்ட ஜித்தேந்தர் , " இத்தனை நாள் பிறகு உன்னை பார்த்தப்பவும் உன்னை இப்படி ஒரு நிலைமைக்கு ஆளாக்கிட்டனே" என புலம்ப,


அவனை தடுத்தவள் அவனின் முன் தன் கரங்களில் பத்திரமாய் பாதுகாத்து அணைத்திருந்த மித்ரேந்தரை நீட்டினாள் .


ஜித்தேந்தரின் நெற்றியில் இருந்து வழிந்த ரத்த துளிகள் மித்ராளினியின் முகத்தில் விழுந்து அவளின் முகத்தில் வழியும் ரத்தத்துடன் கலந்தது.


அவர்களின் மகவிற்கு கடவுளின் பேரருளால் பேரடியாய் எதுவும் ஏற்படாமல் இருக்க அதை கண்டு அந்நிலையிலும் இருவரும் நிம்மதி பெருமூச்செய்தினர் .



அவர்களை சுற்றி அனைவரும் கூடினாலும் எவரும் உதவிக்கு வராமல் போக, மித்ரேந்தரை அணைத்தபடி இருந்த மித்ராளினியையும் சேர்த்து அணைத்தபடி தனது இடது கரத்தில் முழுபலமும் , அடிபட்டிருக்கும் வலதுகையை அணைவாகவும் கொடுத்து தூக்கினான் ஜித்தேந்தர்.


அடுத்தடுத்து நடந்த நிகழ்வில் செய்வதறியாமல் நின்றிருந்த மித்ராளினியின் பாதுகாப்பிற்க்காய் ஜிஷ்ணு அமைத்திருந்த பாதுகாவலர் தற்பொழுது வேகமாய் முன்னே வர,


அந்நிலையிலும் அவரை கூர்மையான பார்வையால் அளவிட்டபிறகே அவரின் உதவியை ஏற்றான் ஜித்தேந்தர்.


அவர் அவர்களை தூக்க கை கொடுக்க, தடுத்த ஜித்தேந்தர் தன் வலியை பொருத்தவாறு காரின் கதவை திறக்க சொல்லினான்.


அவர்கள் இருவரையும் அணைவாய் தூக்கியபடியே தான் காரினுள்ளும் அமர்ந்தான் .இந்நொடிவரை மித்ராளினியின் கண் ஜித்தேந்தரை விட்டு விலகியிருக்கவில்லை.


தொடர்நிகழ்வால் அழுதுகொண்டிருந்த மித்ரேந்தரின் அழுகையை நிறுத்த முயற்சித்துகொண்டிருந்த ஜித்தேந்தர் அவளின் பார்வையை உணர்ந்து மித்ராளினியின் புறம் திரும்ப,


மீண்டுமாய் அவனின் புருவம் மேல் இருந்து வழிந்த ரத்தம் அவளின் இதழில் விழுந்தது .


அவனை பார்த்தவாரே தனது ஒருகையால் தான் வழக்கமாய் செய்யும் செயலாய் அவன் அணிந்திருந்த சட்டையின் முதல் பட்டனை அவிழ்த்தாள் .


அவள் செய்யப்போகும் செயலை உணர்ந்த ஜித்தேந்தர் காரின் சீட்டில் தன் அடிபட்ட தலையை சாய்த்து கண்களை மூடினான்.


அவனின் செயலை பார்த்தவாரே தான் திறந்த பட்டனின் வழியே தெரிந்த அவனின் நெஞ்சில் அழுத்தமாய் முத்தமிட ,அவளின் உதட்டில் விழுந்திருந்த அவனின் ரத்தத்தின் துளி அவனின் நெஞ்சில் மேல்எழுதியிருந்த அவ்வெழுத்துக்களின் மேல் அச்சாய் பதிந்தது.


ஆம் அது அவளுக்கான இடம் . எப்பொழுதும் தனிமையில் அவனை பார்க்கும் நொடிகளில் அவள் முத்தமிடும் இடம். அது அவளுக்கான சமஸ்தானம் என அவனால் சாசனம் கொடுக்கப்பட்டு அதன் அச்சாரமாய் அவனின் நெஞ்சில் "ஜித்ராணி " என எழுதபட்டிருந்த இடம்.



-கரைவாள்...
 
Last edited:

Thoshi

You are more powerful than you know😊❤
நினைவில் தத்தளிக்கும் நேசமது 23 :


எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் தன் சிரிப்பால் அதை கடந்து செல்லும் சித்ராங்கதா, தன் காதலின் நிலைபாடை அறிய முடியா குழப்பத்தில் சிக்கி அதன் மூலம் தன்னை மட்டுமல்லாமல், தன்னவனையும் துயரத்தில் தொலைத்துவிட்டாள்.


தன் துயரில் மித்ராளினியையும், மித்ரேந்தரையும் மறந்து தன்போக்கில் நடந்து கொண்டிருந்தவளின் கண்களில் இப்போது கண்ணீரின் சாயல் துளியும் இல்லை.


கைகளால் தன்னைத்தானே இறுக்கியவாறு நடந்து கொண்டிருந்த அவளின் முகமும் அதற்கு ஈடாக இறுகி இருக்க மனமோ நினைவுகளிடம் ஆறுதல் தேடி ஓடியது.


இவள் தன்னை மறந்து ஜிஷ்ணுவை நினைத்துகொண்டிருக்க , இவளுக்கு ஏதேனும் நேர்ந்து விடுமோ என்ற படபடப்பில் இருந்தான் ஜிஷ்ணு.


இத்தனை நேரமாய் அவள் நடந்து கொண்ட விதத்தில் கோபமாய் இருந்தவன் இப்போது தன்னை தானே திட்டிக் கொண்டான் .


"எல்லாமே என் தப்புதான்.. எப்படி இருந்திருக்க வேண்டிய நாள்?? எப்பவும் நான்தான் ஓவரா பண்ணுவன் அவ அதை எவ்வளவு அழகா சிரிச்சுக்கிட்டே ஒன்னும் இல்லாம பண்ணுவா.

இன்னைக்கு ஏதோ குழப்பத்துல அவ அப்படி நடந்துகிட்டானா நானும் கோபப்பட்டு ச்சே" என கைக்கொண்டு ஸ்டியரிங்கில் குத்தியவன் ,


"ஏழுகுண்டலவாடா !!! நீ தான் என் பேபிக்கு துணையா இருக்கணும். ப்ளீஸ்.... என் பேபிக்கு எதுவும் ஆகக்கூடாது, அவ குழந்தை மாதிரி எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்கணும் அவள போய் அழ வச்சுட்டேன்" என அந்த கடவுளிடம் வேண்டிக் கொண்டும் தனக்குத்தானே புலம்பிக் கொண்டும் வந்த ஜிஷ்ணுவின் கரங்கள் சித்ராங்கதாவை தேடி வண்டியை செலுத்தினாலும் அவனின் மனம் அவளுடன் கழித்த நாட்களை நோக்கி ஓடியது.



--------------------------------------------------------------------------------



தங்கள் முன் மூச்சுவாங்க நின்றிருந்த அந்த பாதுகாவலரை கண்ட விஷ்வா, "என்னாச்சு?? ஏன் இவ்வளவு அவசரம்??" என கேட்க,


"சார் ...சார் ....உங்க... உங்ககூட நீங்க கூட்டிட்டு வந்தவங்களுக்கு ஆக்சிடென்ட் சார் " என படபடப்பாக சொன்னான் .


அவன் சொன்ன செய்தியில் இருவரும் அதிர்ந்தாலும் முதலில் சுதாரித்த ஷாலினி," அண்ணா ! என்ன சொல்றீங்க? யாருக்கு என்னாச்சி ? நிதானமா என்ன விஷயம்னு சொல்லுங்கள் " என தெளிவு படுத்திக்கொள்ள கேட்டாள்.


"இல்லைமா ..!! நம்ப விஷ்வேந்தர் சார்க்கு பாதுகாப்புக்கு என்னை நியமித்த ஜித்தேந்தர் சார் அவரோட கூட ஒருத்தங்க வர போறதாவும் அவங்க பாதுகாப்பிற்கும் ஒருத்தரை ஏற்பாடு பண்ண சொல்லியிருந்தார்மா. அவன் வழக்கம் போல இன்னிக்கும் அவங்களை தொடர அங்கு ஏதேதோ ஆகிபோய்ச்சிமா .அவன் சுதாரிக்கிறதுக்கு முன்னாடியே விபத்து ஆகி இரண்டு பேர் அவங்கள ஆஸ்பத்திரிக்கு தூக்கிகிட்டு போய்ட்டதாவும் இப்போ தான்மா சொன்னான் " என்று கடகடவென தனக்கு தெரிந்த தகவல்களை ஒப்பித்தார் பாதுகாவலர் .


ஷாலினி ஏதோ பேச வர இடையிட்ட விஷ்வா, " ஷாலினி ! விசாரணைக்கு இப்போ டைம் இல்ல . சார் நீங்க போய் வண்டியை எடுங்க "என தன் வழக்கத்துக்கு மாறாய் மிகவும் படபடப்பாய் பேசிய விஷ்வா காரை நோக்கி செல்ல, ஷாலினியும் அவனை தொடர்ந்தாள்.


முடிந்த அளவு அவர் காரை வேகமாக செலுத்திக் கொண்டிருந்தார். பின்சீட்டில் அமர்ந்திருந்த ஷாலினிக்கும் இந்த செய்தி அதிர்ச்சியை அளித்திருந்தாலும் , எதையும் பேசாமல் ஒருவித பரிதவிப்புடன் அமர்ந்திருந்த விஷ்வாவின் நிலையில் , அதில் தெரிந்த அலைபுறுதலில் அதற்குமேல் அமைதியாய் வர அவளால் முடியவில்லை.


முன்னிருப்பவர்க்கு கேட்காத வண்ணம் குரலைத் தாழ்த்தியவள், " என்னடா ! இப்படி ஆயிடுச்சுனு எனக்கும் கவலையா தான் இருக்கு, ஆனால் தயவு செஞ்சு இப்படி எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்காதடா, அத என்னால பார்க்க முடியால. அவங்களுக்கு எதுவும் ஆகாது ...ஆகவும் கூடாது ... அதுவும் இன்னிக்குதான் பெரியத்தான் " என ஆரம்பித்தவள் அதை நிறுத்தி ,


"நீதான சொன்ன அவங்க உன் ஏஞ்சல்னு. ஏஞ்சல்லுக்கு பிரச்சினை வரும் ஆனால் ஆபத்து வருமா" என சிறு குழந்தையை சமாதானம் செய்வது போல சொல்ல அவளின் கைகளை தன் கைகளில் பொத்தி கொண்ட விஷ்வாவின் உள்ளங்கைகள் இரண்டும் அத்தனை ஜில்லிட்டிருக்க அவனும் வியர்த்திருந்தான் .


சிறு குழந்தை என அவளின் கைகளை இறுக்கமாக பற்றியபடி அவளின் முகம் பார்த்து " எனக்கு பயமாயிருக்கு ..அவங்களுக்கு எதுவும் ஆகாது தான ... எதுவும் ஆகக்கூடாது ஆமா எதுவும் ஆகக்கூடாது, அவங்களுக்கு எதுவும் ஆகாது " என மீண்டும் மீண்டுமாய் நிலை இல்லாமல் புலம்ப, அவனின் நிலை கண்டு என்ன செய்வது என அறியாமல் தவித்து போனாள்.


" அண்ணா கொஞ்சம் சீக்கிரம் போங்க " என முன்னிருப்பவரை துரித படுத்தியவளை பார்த்த விஷ்வா தொடர்ந்து, " உனக்கு தெரியாது என் வாழ்க்கையில் நடந்த நிறைய விஷயங்கள் உனக்கு தெரியாதுடி. நான் அவங்கள சும்மா பேச்சுக்கு ஏஞ்சல்னு சொல்லலை . என் வாழ்க்கையோட மோசமான பக்கங்களை அழிச்சி எனக்கு என்னோட வாழ்க்கையை சரிப்படுத்தி தந்த தேவதைடி அவங்க. அவங்கள போய் சந்தேகப்பட்டியேனு தான் எனக்கு கோபம். சொல்லுடி அவங்களுக்கு எதுவும் இல்லை தான " என மாற்றி மாற்றி சொல்லி தன்னுள் புதைத்திருந்த விஷயங்களை சிறிது சிறிதாக வெளிக்கொணர ஆரம்பித்தான் .


தன் காதல் , தன் வாழ்வின் மறக்க வேண்டிய நாட்கள் , மித்ராளினியின் வருகை அவன் வாழ்வை மாற்றியது என ஒவ்வொரு நிகழ்வுகளாய் தன் வாழ்வை பின்னோக்கிச் சென்று ஷாலினியிடம் கூற ஆரம்பிக்க, அவளும் அவன் சொல்லும் நிகழ்வுகளை காட்சிப்படுத்தி , அச்சூழல்களில் தன் நிலைப்பாடுகளை நோக்கி தன் நினைவை செலுத்தினாள்.


--------------------------------------------------------------------------------


மித்ராளினி ஜித்தேந்தரை பிரிந்து ஆறு மாதங்கள் தான் கடந்திருந்தது , ஆனால் சென்றது வெறும் ஆறு மாதங்கள் தானா இல்லை வருடங்கள் ஆயினவா என தோன்றக் கூடிய அளவு இந்த நிமிடம் வரை ஒவ்வொரு நாளின் ஆரம்பத்திலும் வேண்டுவதை கண்டு விடுவோமோ என்ற ஆர்வத்திலும், முடிவில் ஏமாற்றத்தையும் சுமந்து கொண்டு சென்ற இரவுகளையும் சந்தித்த ஜித்தேந்தருக்கு இந்த நிமிடம் அத்தனை அர்த்தம் நிரம்பியதாக இருந்தது .


நீண்ட நெடிய இடைவெளியாய் தோன்றிய நாட்களுக்குப் பிறகு கண்டுகொண்ட அவனின் இதய ராணி அவனின் நெஞ்சில் முத்தமிட்ட அத்தருணம் அவனின் மனம் அமைதியாய் இதுவரை அனுபவித்த துயர் நீங்கி அந்த உணர்வை மட்டும் ஆழ்ந்து அனுபவித்து .



தன் சிம்மாசனத்தை மீண்டுமாய் ஆக்கிரமித்து அது என்றும் எனது என்பது போல் அவனின் நெஞ்சமதில் இதழ்பதித்துக்கொண்டிருந்த மித்ராளினிக்கு , நடுக்கடலில் மூழ்கி மூச்சுவிட முடியாமல் தத்தளித்து இறுதியில் நலமாய் கரை சேர்ந்தது போல் ஒரு எண்ணம்.


தன் சுயம் அறியா நிலையிலும் அவளால் தன் உயிர் அறியமுடிந்ததே அவளின் காதலின் ஆழமற்கு அத்தாட்சி. இந்த நொடி வரை அவளின் நினைவில் எதுவும் மாற்றம் இல்லை. ஆனால் அவள் மனமோ இந்த சிம்மாசனம் உனக்கே உனக்கானது எனக் கட்டியம் கூறியதில் மேலும் அவனிடம் ஒன்றியவள் இன்னும் அழுத்தமாய் தன் இதழ் பதித்தாள் .


அவளின் செயலில், உடல் முழுக்க ஏற்பட்டிருந்த காயத்தின் விளைவாய் வெளிப்பட்ட சிறு வலி கூட காணாமல் போக, ஜித்தேந்தரின் உதடுகள் இரண்டும் அழகாய் புன்னகைத்தன .



உடலின் கடைசி துளி ரத்தம் வற்றும்வரை எத்தனை வலி இருந்தாலும் அதை மறைத்துக்கொண்டு தன் மனைவி மற்றும் பிள்ளைகளின் கண்களில் சிறு தூசியும் படாமல் காக்கும் ஆண்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு தன் மனதில் உள்ள பாசத்தை வெளிப்படுத்த அறியாமல் இருக்கலாம், அதற்காக அவர்கள் பாசம் இல்லாதவர்கள் அல்ல .


அவர்களில் ஒருவனாய் இருந்த ஜித்தேந்திருக்கு உடல் முழுக்க காயங்கள் ஏற்பட்டு ஆடை முழுவதும் அவன் மற்றும் மித்ராளினியின் இரத்தத்தில் நனைந்து இருந்ததை உணர்ந்தவனுக்கு தனக்கு ஏற்பட்ட காயங்களை விட தன்னவளுக்கு ஏற்பட்ட காயமும் , தன்னால் அவளையும் தங்கள் பிள்ளையையும் காக்கமுடியவில்லையே என்ற எண்ணமே அதிக வலியை கொடுத்தது.


கண்களைமூடியபடியே, சிறிது நகர்த்தினால் கூட உயிர் போகும் வலியை கொடுத்த வலது கையில் தன் மகனை சமாதானப்படுத்துவதற்காக மெதுவாய் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.


அவனின் வருடலில் மித்ரேந்தர் அமைதியாக, மித்ராளினியும் தன்னிடம் சேர்ந்ததில் அந் நிமிட சந்தோஷத்தை அனுபவித்தபடி தன் வலி உணராமல் அமைதியாய் இருந்தாள்.


முன்புற கண்ணாடியில் இவர்களை கண்ட ஜிஷ்ணு அமைத்த பாதுகாவலருக்கு, மித்ராளினி குழந்தையை அணைத்திருக்க இருவரையும் சேர்ந்தாற்போர் அணைத்து தலையில் இருந்து வந்த ரத்தம் கழுத்துமுழுக்க வழிய அமர்ந்திருந்த ஜித்தேந்தரை கண்டு கண்கள் கலங்கியது.


அந்த கார் அவர்களின் மருத்துவமனை நோக்கி பயணபட, ஜித்தேந்தரின் மனமோ தன்னவளுடன் இருந்த தன் வாழ்வின் பொக்கிஷநாட்களை நோக்கி பயணப்பட ஆரம்பிக்க , மித்ராளினியின் ஆழ்மனமும் அவனுடன் சேர்ந்து சென்றது.



இத்தனை நாட்கள் நினைவலை (ஜித்தேந்தர்- மித்ராளிணி), உயிர் அலை (விஷ்வேந்தர்- ஷாலினிவர்தன்), உணர்வலை (ஜிஷ்ணு- சித்ராங்கதா) என தனித்தனியாக தத்தளித்துக் கொண்டிருந்த இந்த அறுவரது மனங்களும் தற்பொழுது தத்தமது "நினைவில் தத்தளிக்கும் நேசமது"வை (நேசம்+அது)தேடி ஒன்றாய் பயணித்தது.





ஐந்து வருடங்களுக்கு முன்பு:


ஆறடிக்கு குறையாத உயரத்தில் மைதாமாவு நிறத்தில் முகத்தில் மீசை , தாடி என எதுவும் இல்லாமல் வழுவழுவென இருந்த கன்னம் கோபத்தில் சிவக்க,

"பாட்டி" என பற்களை கடித்தவன் "நான் உன்கிட்ட என்ன சொன்னேன்? ஏர்போர்ட்டுக்கு யாரும் வர வேண்டாம் நானே போய்க்கிறேன். முக்கியமா பாப்பாவ உங்க கூடவே வெச்சுக்கோங்க எந்த திருட்டுத்தனமும் பண்ணாம பாத்துக்கோங்கன்னு சொல்லிட்டுதான வந்தேன் " என போனில் கத்திக்கொண்டிருந்தான் ஜிஷ்ணு .


பதிலுக்கு அந்தப் பக்கம் என்ன சொல்லப்பட்டதோ, " ஆமா நீங்க அப்படியே கண்காணிப்பு புலி தான் !! உங்க பாப்பா திருட்டுத்தனமா என் காரு டிக்கில உட்கார்ந்து வந்திருக்கு. என்ன திட்டினாலும் எருமை மாட்டுல மழை பெஞ்ச மாதிரி எங்கேயோ பார்த்திட்டிருக்கா. ஒழுங்கா நம்ப டைரைவருக்கு போன் போட்டு இங்கே வந்து கூட்டிட்டு போக சொல்லுங்க" என தொடர்ந்து சில பல அர்ச்சனைகளை தன் பாட்டிக்கு போன் மூலம் அனுப்பிகொண்டிருந்தான்.


அருகில் நின்றிருந்த மித்ராளினியோ அவன் சொன்னது போலவே அந்த ஏர்போட்டில் போவோர் வருவோரை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்.


ஒருவழியாய் பாட்டிற்கு செய்த அர்ச்சனையை முடித்தவன், போனை அணைத்து விட்டு அவளை பார்த்து முறைக்க ..அவளோ அவனைப் பார்க்கக் கூட இல்லை. அதில் மீண்டும் பற்களை கடித்து "மித்துமா" என கடித்த பற்களின் இடையில் கூப்பிட ,


மெதுவாய் திரும்பியவள் பார்க்க குமரியாய் இருந்தாலும் கண்கள் இரண்டும் சிறுபிள்ளையின் குறும்பு தனத்தை விடாமல் இருந்தது .


திரும்பியவள் "சொல்லுடா! ஆமா எதுக்கு இப்ப கருங்கல் மாதிரி நிற்கிற உனக்கு டைம் ஆகுதில்ல கிளம்பு கிளம்பு " என்று சொல்லி மீண்டும் தன் வேலையை (வேடிக்கை பார்ப்பதை) தொடர்ந்தாள் .


"ஏழுகுண்டலவாடா ! இவ இம்சை தாங்கமுடில எந்த தைரியசாலி இவ கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்க போறானோ, முழி பிதுங்க போறானோ தெரியலையே " என உதட்டிற்குள் முனங்கியவன் ,


"உன்னை யாரு இங்க வரச்சொன்னா? நான் என்ன வெளிநாடா போறேன் ?இங்க இருக்கு டெல்லி அதுவும் அங்க போன உடனே வீட்டுக்கு தான் போன் பண்ண போறேன் . எப்பவும் எது செய்யாதனு சொன்னாலும் அதையே தான் செய்ய வேண்டுமா" என மித்ராளினிக்கும் தன் அர்ச்சனைகளை ஜிஷ்ணு வழங்க தொடங்க ,


சிறிது நேரம் போனால் போகிறதென அவனின் பேச்சை கேட்ட மித்ராளினி, அவன் நிறுத்தாமல் தொடர்ந்ததில் ,


" போதும்டா காது வலிக்குது. நான் என்னவோ நீ போறனு வருத்தப்பட்டு வந்தனு நினைச்சியா ? அதுக்குலாம் வாய்ப்பில்லை ராஜா" என நக்கலடித்தவள் "நான் வந்தது என் ஜித்தனை பார்க்க" என உளறினாள் .


அவளை சந்தேகமாக பார்த்த ஜிஷ்ணு, "அது யாரு ஜித்தன் " என்று கேட்டான்.


அவனின் பார்வையில், " ஹீஹீ ஜித்தனா ??என்ன பாவா ஜித்தன் யாரு " என வழக்கமாய் எதையாவது செய்து அவனிடம் மாட்டிக் கொள்ளும் பொழுது பயன்படுத்தும் வார்த்தையை சொல்லி அவனிடமே கேள்வியை திருப்பினாள்.


அவனோ சிறிதும் அசைந்துகொடுக்காமல் நேர்பார்வை பார்க்க,


"ப்ச்...இப்போ ஏன் ஜிணுபாவா இப்படி பாக்குற? எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்பா. உன்கிட்ட சொல்லணும்னு தான் இருந்தேன் அதான் இன்னிக்கு உன் கூட வந்தேன்" என்றாள்.


சிறு வயது முதல் மற்ற நேரங்களில் அவளிடம் சரிக்கு சரியாக சண்டையிட்டாலும் இத் தருணங்களில் சிறுபிள்ளையாகவே அவன் கண்களுக்கு தெரி்வாள்.


மித்ராளினி பிறந்த தினம் தொட்டே அவள் ஜிஷ்ணுவிற்கு என அவ்வீட்டு பெரியோர் முடிச்சு போட்டு இருந்ததால், அவர்களின் குடும்பம் அவளை ஜிஷ்ணுவின் பொறுப்பில் விட்டதுமில்லாமல் அவனை "பாவா" என்றழைக்கவும் பழக்கி இருந்தனர் .


அந்த வயதில் வார்த்தைகளின் அர்த்தம் தெரியாத போதிலும் அது தனக்கு வேண்டியதை பெற்று தரும் ஆயுதம் என்ற புரிதலுடன் அவள் அழைக்க, ஜிஷ்ணுவிற்கும் அவ்வழைப்பு தன் பொறுப்பில் ஒருவர் இருக்கிறார் என்ற நினைப்பை தோற்றுவிக்க அவளின் சிறு சிறு தேவைகளை கவனித்து செய்ய ஆரம்பித்தவனுக்கு ஒரு தந்தையின் ஸ்தானம் அப்பொழுதே கிடைத்துவிட்டது .


எத்தனை குறும்புகள் செய்தாலும் இருவருமே பெரியவர்களின் ஆசையை நிறைவேற்றுவது முதல் அவர்களின் பாசவிதிகளை இதுவரை சரியாய் பின்பற்றி வந்தனர்.


அமைதியாய் இருந்த ஜிஷ்ணுவிடம் "டேய்! எவ்வளவு முக்கியமான விஷயம் பேசிட்டு இருக்கேன். நீ என்னன்னா நின்னுக்கிட்டே தூங்குற " என அவன் தலையில் கொட்டினாள் .



"ஸ்ஸ்ஆஆ" என தலையை தேய்த்துக்கொண்டவன் அவளை முறைத்தபடி, " சொல்லுமா யாரு அந்த ஜித்தன் " என கேட்டவனின் குரலும் வழக்கத்துக்கு மாறாக இறுகி இருந்தது .


அதில் முகத்தை சுருக்கியவள்,"அதை ஏன் இப்படி சேத்துல விழுந்த மாதிரி மூஞ்சிய வச்சுட்டு கேட்குற" என கோபமாய் சிணுங்கினாள்.


அவளின் செயலில் சிரித்தவன், "போதும்டி எனக்கு பிலைட்க்கு டைம் ஆகுது சொல்லு" என்றான்.


"அவரு ...அவரு" என்றவளின் முகம் வெட்கத்தில் சிவந்துபோயிருக்க ,


அதை கண்ட ஜிஷ்ணு " மித்துமா !என்னடா திடிர்னு வெட்கம்ல "பட்ற என நெஞ்சை பிடித்துக் கொண்டு மயக்கம் வருவது போல் நடித்தான் .


இம்முறை சற்று ஓங்கி அவன் தலையில் கொட்டிய மித்ராளினி, "மவனே கிண்டலா பண்ற . நானே கஷ்டப்பட்டு தகவல் சேகரிச்சு அவர் இங்க வரப் போறாருனு தெரிஞ்சு பார்க்க வந்தா நீ வெட்டியா பேசிட்டு இருக்க " என முறைத்தவள்,


மறுநொடியே " டேய் ஜிணு !எனக்கு ஒரு மாதிரி படபடப்பா இருக்கு , இப்பதான் பிரஸ்ட் டைம் பார்க்க போறேன் என்ன நடக்கும் தெரியலையே" என இவனிடம் பேசுவதாய் சொல்லி அவளுக்கு அவளே பேசிக்கொண்டு இருந்தாள்.


"மித்துமா ! என்ன உளர்ற ? இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் பார்க்க போறியா .அப்றம் எப்படி "என கேட்டவனின் கண்களில் சந்தேகம் எட்டிப்பார்த்தது .


தன்னவனை முதல்முறை காணபோகும் ஆர்வத்தில் மித்ராளினியோ அதை கவனிக்காமல், " பின்னநான் பார்த்த பேப்பர்லலாம் அவர் போட்டோ எங்கையும் கிடைக்கலையே . நானும் எல்லாத்துலையும் தேடிட்டேன் அவர் போட்டோ மட்டும் கிடைக்கலை" என வருத்தமாய் சொல்ல,


"ஹாஹா போட்டோவ கூட பார்க்கலையா . ஏன் மித்துமா வீட்ல எல்லோரும் கூப்புட்ற மாதிரி பாப்பாவாவே இருக்கியே ஹாஹா . இவ்ளோ நேரம் பேப்பர்ல பார்த்த யாரோட பேரையோவா சொல்லிக்கிட்டு இருந்த" என அவள் சொல்லியதை விளையாட்டு என புரிந்து கொண்டவன் பின்னொரு நாளில் அவளின் இக்காதலை கண்டு வியக்க போவதை அறியவில்லை.


அவனின் சிரிப்பிலும் , பேச்சிலும் கோபம் கொண்டவள், " டேய் எரும மாடு! எது விளையாட்டு "என கோபமாய் கேட்டவள்,


"ஆமா உனக்கு நேரம் ஆகலை நின்னு கதை பேசிட்டு இருக்க . நான் என் ஜித்தனை பார்க்கணும் நீ மொதல்ல கிளம்பும் கிளம்பி தொலையும்." என அசால்ட்டாக சொல்ல,


ஜிஷ்ணு "அடிபாவி" என வாயை பிளந்தான் .


அதேநிமிடம் அங்கு கேட்ட மற்றொரு குரலில் ஜிஷ்ணு மற்றும் மித்ராளினி இருவருமே அந்த இடம் நோக்கி ஆச்சர்யம் மற்றும் சிரிப்புடன் திரும்பினர்.


அங்கு மித்ராளினியை போலவே கிண்டலாய் " டேய் நீ இன்னுமா கிளம்பல. சீக்கிரம் கிளம்பும் கிளம்பிதொலையும்" என விஷ்வேந்தரிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் சித்ராங்கதா.


விஷ்வாவும்," குரங்கு ! உன்னை யார் இங்கே வர சொன்னது? நீ முதல்ல கிளம்புடி" என பதிலுக்கு கத்தினான்.


அவளோ அதை சட்டை காலரின் தூசியை தட்டுவது போல் தட்டி," அப்பா ! அவன தூக்கிட்டு போயி அந்த ப்ளைட்டுல போட்டுட்டு வாங்க . இங்கிட்டு இருக்க ஊருக்கு போக சீன போட்டுட்டு இருக்கான்" என மீண்டும் ஆரம்பிக்க,


பதிலுக்கு விஷ்வா ஏதோ சொல்ல போக வழக்கம் போல் இருவரும் தங்கள் இருக்கும் இடத்தை மறந்து அடித்துக்கொண்டனர்.


அதை நாச்சியாரும், ரவிச்சக்கரவர்த்தியும் "இதுங்க ரெண்டும் திருந்தாதுங்க "
என்பதை போல் கண்டுகொள்ளாமல் இருக்க, .


இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த ஜிஷ்ணு , மித்ராளினி இருவருக்கும் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.


" ஹாஹா...ஹாஹா...ஜிணு !!!பாரேன் என்ன மாதிரியே ஒரு பயபுள்ள இருக்கு " என மித்ராளினி ஜிஷ்ணுவிடம் குதூகலிக்கத்தாள்.


" ம்ம்ம்ஹும் ....உன்னை மாதிரி மட்டுமா, என்னை மாதிரியும் ஒரு அப்பாவி இருக்கான் பாரு " என விஷ்வாவை பார்த்து பொய்யாய் பெருமூச்சுவிட்டான்.



அவனைக் கண்டுகொள்ளாத மித்ராளினி ,அவர்கள் தன் மனம் கவர்ந்த ஜித்தனின் குடும்பம் என அறியாமலே அக்குடும்பத்தை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.


அவள் கவனம் தன்னிடம் இல்லை என புரிந்து கொண்ட ஜிஷ்ணுவும் தன் கவனத்தை அக்குடும்பத்தை நோக்கித் திருப்பினான்.


அன்னையிடம் கிண்டலடித்துக் கன்னத்தில் முத்தமிட்டு ,அப்பாவை ஒவ்வொருநொடியும் ஓட்டிக் கொண்டு, தங்கையிடம் வம்பிழுப்பது என விஷ்வேந்தர் செய்து கொண்டிருந்தனைத்தையும் , சேட்டை செய்து அனைவரையும் வசீகரிக்கும் குழந்தையை ரசிப்பதை போல் ரசித்தாள் மித்ராளினி .


அவனின் கண்களுக்கு தற்பொழுது அவன் குழந்தையாய் தெரிந்ததுனாலையோ என்னவோ பின்னாளில் அவனிற்கு அவள் தேவதையாய் மட்டுமின்றி தாயாகவும் மாறினாள்.


மறுபுறம் ஜிஷ்ணுவின் கண்களோ , குறும்பில் மித்ராளினியை பிரதிபலித்து கொண்டிருந்த சித்ராங்கதாவை தான் பார்த்துக் கொண்டிருந்தது.


" பார்த்தா பதின்னொன்னோ , பன்னிரெண்டோ படிக்குறமாதிரி தான் இருக்கா ஆனா பேசுறத பாரு நம்ப மித்துமாக்கும் மேல இருப்பா போல" என அவளை நிந்திப்பது போல் நடித்த மனம் அவனையும் அறியாமல் சித்ராங்கதாவிடம் மயங்கித்தான் போனது.


ஜிஷ்ணுவின் விமானம் புறப்படும் நேரமாக மித்ராளினியிடம் விடைபெற்று சென்றவனின் மனதில் தன் வேலை பற்றிய நினைவுகள் மேலெழும்ப சித்ராங்கதாவின் முகம் முழுதாய் அவன் மனதை ஆக்கிரமிப்பதற்கு முன்பே வெளியேவும் செல்லாமல் அடிமனதில் சென்று தங்கியது.



-கரைவாள்..


ஒருவரை சித்திரவதை செய்ய சிறந்த ஆயுதம் அவரின் நினைவுகளை தவிர வேறொன்றுமில்லை !!!
 
Last edited:

Thoshi

You are more powerful than you know😊❤
ரொம்ரொம்ப ரொம்ப சாரி டியர்ஸ் ...சிலபல காரணங்களால் எபி எழுதவே முடில .வீட்ல இருக்கிற டயமே ரொம்ப கம்மியா இருக்கு ஆனா எப்படியும் இந்த வாரத்துல எபி குடுத்துர்றேன் பா . அதுவரைக்கும் யாரும் வன்முறைய கையில எடுக்க கூடாது ஐ யாம் பாவம் 😰😰😰
 
Status
Not open for further replies.
Top