All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ரித்வி, இது அவனே பார்த்துகொண்ட அரேன்சு மேரேஜ் என்றதும் நித்துவிற்கு பக்கென்று ஆனது போல எனக்கும் பக்கென்று தான் ஆனது. ரித்வியின் வாயால் இப்படியொரு பதில் கேட்கவே மிகவும் கஷ்டமாக உள்ளது. அதற்கு பின்னும் விதி வழியே சென்று ஜெயித்து காட்டுவேன் எனும்போது, மனம் இன்னும் கனக்கத்தான் செய்கிறது.நித்து அவனை நந்தினியின் கதாபாத்திரத்தோடு ஒப்பிட்டது போல் அவன் பேச பேச மற்றவர்களை அவன் சொல்வதை ஒப்புக்கொள்ள வைப்பான், நந்தினி என்ன நினைக்கிறாள் என்பது அவள் மட்டுமே அறிந்த ரகசியம், அவள் ஒரு புரியாத புதிர். இதுவும் நம் ரித்விக்கு பொருந்தும். இந்த இரு விஷயங்களில் நந்தினியுடன் ஒப்பிட்டது அருமை. ஆனால் நந்தினி பேச்சை கேட்பவர்களுக்கு நன்மை என்றும் இல்லை, ரித்வி அடுத்தவர் நலனை என்றுமே பெரிதாக கருதுபவன். உயர்ந்த குணமுடையவன் ரித்வி. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு திருமணம், ஒரு பெண் தன் வாழ்க்கையில் இருக்க வேண்டும் என்பதற்காக தட்ஸ் இட் என்று ரித்வி முடிக்கும் போது பாரம் நித்துவின் மனதினில் மட்டுமல்ல நம் மனதிலும் தான். அப்படி என்ன விரக்தி ரித்வி, அதுவும் உனக்கு இப்படியொரு வாழ்வா எண்ணி பார்க்கவே முடியவில்லை, கமிட்மென்ட் லைப் இந்த வார்த்தைகள் எல்லாம் உன்னிடம் இருந்து வருகிறதா என்று நம்பவே மனம் மறுக்கிறது. நித்துவிற்கு பதில் நாமே சென்று அவனிடம் பேசவே மனம் துடிக்கிறது. அவனை விட நமக்கு மனம் வலிக்கிறது. (உங்களுக்கு பெரிய பாராட்டு ராஜீ அவர்களே அவனை எங்களில் ஒருவன் போன்ற தாக்கத்தை ஏற்படுத்தியதற்கு, நமக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு ஒன்றென்றால் எப்படி துடிப்போமோ அப்படி துடிக்கிறது நம் மனம் அவனுக்காக ) அவளின் திருமணம் ஏற்பாட்டை பற்றி கேட்டு ருத்திரமூர்த்தியாக மாறிவிடுகிறான். கோவம் மட்டும் அப்படியே இருக்கிறது அதற்கும் அவனளிக்கும் பதில்.... போதும் ரித்வி சீக்கிரம் மீண்டு வா. உனக்கும் ஒரு ஆண்துணை வேண்டுமென்று சொல்லும்போது அவள் பதில் அழகு. தன் வருகையை நித்து விரும்பவில்லையோ என்று எண்ணி ஏமாற்றம் கொள்வது இந்த அனுபவம் ரித்விக்கும் நமக்கும் புதிதே. நித்துவிடம் இருந்து பாசிட்டிவ் எனர்ஜியை சேமித்து வைத்து கொள்கிறேன் என்கிறான் (உன்னிடம் இருந்துதான் இது அவளுக்கே சென்றது, அதை நீ மறந்தாயோ ரித்வி ) கடற்கரையில் "வாழ்க வளமுடன் " என அவன் கலாய்க்கும் போது நித்து அருகில் இருக்கும்போது தான் அவன் உயிர்ப்புடன் இருக்கிறான் என எண்ண வைக்கிறது. இவன் தண்ணீர் எடுத்து வரும்முன் வேறொருவன் கொடுத்ததை அவள் வாங்கிவிட இவன் முகம் வாடியது பெரும்மாற்றமே. நித்துவின் மேலிருந்து ரித்வியினால் கண்களை அகற்றவே முடியவில்லையா ( அதை நீங்கள் விவரித்த விதம் அற்புதம் )அந்த உணர்வை அவன் ஆராயும் முன் அவள் அழைத்துவிடுகிறாளே !! உடனே அவன் பதில் சொல்ல தடுமாறுவது அழகோ அழகு !!! புதிராய் இருந்தவனுக்குள் புதிருடுன் சேர்த்து புதிதும் அவளிடமிருந்து அவனிடம் பெயர்ந்ததை இதை விட அழகாக எப்படி சொல்ல முடியும். அருமையோ அருமை.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.