அழைப்புமணியை அடித்தவுடன் அவன் கதவை திறந்து ஆச்சரியமாக பார்க்கையிலேயே தெரிகிறது இது வரை அவனை தேடி யாரும் அங்கு வந்ததில்லையென்றும், நித்துவின் வரவையும் அவன் எதிர்பார்க்கவில்லை என்பதும். பின் அவளை உள்ளே அழைத்து சென்று அவன் பாட்டிற்கு அவன் உறக்கத்தை தொடரும் அந்த காட்சி இரசிக்க வைக்கிறது.அவன் வேலைகளை அவனே செய்து கொள்கிறான். அவன் சொல்வது போல மற்றவர்களுக்கு அவனை பற்றி தெரியாது, ஆனால் அவனை பெற்றவர்கள் அவன் மேல் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். நண்பர்களின் இரக்க பார்வையையும் விரும்பவில்லை, உண்மையில் அப்படி பார்க்கும் போது தான் நம் துயர் இன்னும் அதிகரிப்பது போல் இருக்கும்.நித்துவை குறித்து அவனுடைய குற்றவுணர்வு, எல்லாம் சேர்த்து அவனை லண்டனுக்கு பயணிக்க வைக்கிறது. தாய்நாடு திரும்பியபின் தான் அவன் நிலை முன்பிலும் மோசமாகி போனது. பெற்றவர்கள் இருந்தும் இல்லாமல் இருப்பது போன்று இருப்பது கொடுமையிலும் கொடுமை. பிஸினெஸ்ஸிலும் அவன் கூற்று சரியாக இருந்தபோதும் அதை ஏற்காமல் நஷ்டமே ஏற்பட்டது. பின் அவனை விடுத்து வேறொருவரை மேற்பார்வையிட சொல்லும்போது அவன் விரக்தி அடையாமல் இருந்தால் தான் ஆச்சர்யம். இந்த இடைப்பட்ட காலத்தில் நித்துவின் நிலைக்கும் ரித்வின் நிலைக்கும் எத்தனை மாற்றம். அவளை தேற்றி அனுப்பியவன் தன்னை கவனியாமல் விட்டது ஏனோ? அவள் வெற்றியை பெருமையாக கருதிய அவனால் அவளுக்கு செய்து கொடுத்த சத்தியத்தால் அவளை பார்க்க முடியவில்லை. உண்மையில் காதல் வந்திருந்தால் அனைத்தையும் மீறி வந்திருப்பான்தான் அவன். தனியே வந்து தொழில் மேற்கொண்டு குறைந்த லாபம் வந்தாலும் ஸ்பான்ஸர்சிப்பை நம்பியிருப்பவர்களை ஏமாற்றமால் உதவுது அவனின் உயர்ந்த உள்ளத்தை காட்டுகிறது. கிடைத்தற்கரிய பொக்கிஷம் தான் அவன். உண்மையில் அவன் உள்ளத்தில் உதிப்பதை அப்படியே வெளிபடுத்தி விடுகிறான். உள்ளும் புறமும் ஒன்றே அவனுக்கு, பொதுவாக நம் மனது நம்மை பற்றி நம் முன் நன்றாகவும் நம் பின் தவறாக பேசுபர்களையே விரும்புகிறது. ரித்வியை போல் உள்ளவர்களை விரும்புவதில்லை, அதனால் தான் நாம் அவனை முரண்பாடானவன் என்கிறோம். உண்மையில் அவன் தான் இயல்பானவன். நாம் தான் முரணானவர்கள். அவனை போன்றோர் கோடியில் ஒருவர் தான் இருப்பர். தேனீரை பகிர்வதை போல அவளிடம் தான் அவனால் தன் மனதில் உள்ளதை இலகுவாக பகிர முடிந்தது . மிருதுளாவை பற்றி கேட்கும் போது, என்னை பற்றி என்றால் சொல்வதில் தயக்கம் இல்லை, ஒரு பெண்ணை பற்றி எனும்போது தயக்கமாக இருக்கிறது என்கிறான், இதுவல்லவா நீ ரித்வி !! (ரித்வி மட்டுமல்ல நாமும் நமக்கு நெருக்கமானவர்கள் நாம் சொல்லாமலே நாம் குற்றமற்றவர் என்று எண்ண வேண்டும் என்று தான் விரும்புவோம் )அவளுக்கு பாதுக்காப்பாக இருக்கிறேன், எனக்கும் மற்றவர்கள் போல் காதல், திருமணம் என்று செட்டிலாக ஆசை இருக்கிறது என்று நித்துவுக்கு விளக்கும் போது அவன் தனிமை உணர்வு நம்மையும் வாட்டுகிறது.( இதை சொல்லும்முன் அவன் சிகையை கோதி கொள்வது கூட அழகு தான்) நித்து புரிந்து கொள்ளாமல் விட்டதாக அவன் சொல்ல மறுத்தது : நீ விட்ட சாபம் தானோ நித்து எனக்கு லவ்வும், திருமணமும் செட்டே ஆகவில்லை என்று முதலில் சொல்கிறானே அதுவோ
அதனால் தனக்கும் ஒரு உறவு இருக்கிறது என்று அவனுக்கும் சமூகத்துக்கும் ஒரு பிம்பத்தை உருவாக்க நினைக்கிறானோ. இதன் மூலம் அவன் தனிமையும் தவிர்க்க நினைக்கிறானோ? நீங்கள் தான் நான் கணித்தது சரியா என்று சொல்லவேண்டும்.
என்னை பொறுத்தமட்டில் அவன் காதலிலும் சரி திருமணத்திலும் சரி தோற்கவில்லை, நித்துவின் மேல் காதல் இல்லாமல் அந்த உறவை தொடர்ந்திருந்தாலும் , சஞ்சீஷ்வினியும், அவனும் கடமைக்காக திருமணம் புரிந்திருந்தாலும் தான் அவன் உண்மையாக தோற்றிருப்பான்.அவனுக்கு ஆழ்மனதில் நித்து அவன் மேல் கொண்ட காதலை போல் வேறு எந்த பெண்ணிடமும் உணரமுடியவில்லை, நித்துவின் பால் அவனுக்கு இருக்கும் குற்றவுணர்வு, அவள் திருமணம் செய்து கொண்டால் ஒருவேளை நீங்கலாம். இவை இரண்டும் தான் அவனை திருமணத்தை நோக்கி பயணிக்க தடுக்கிறது என்று நினைக்கிறன். படித்து விட்டு சொல்லுங்கள் ராஜீ, சரியா இல்லை ரொம்ப அதிகமாக யோசித்து விட்டேனா என்று...