கவிதாசுப்பரமணி
Bronze Winner
அருமையான பதிவு சகோ
ரித்வியை எப்படியோ நித்து புரிந்து கொண்டள் இனி அவன் வாழ்க்கையை சரி செய்வாளா சகோ
ரித்வியை எப்படியோ நித்து புரிந்து கொண்டள் இனி அவன் வாழ்க்கையை சரி செய்வாளா சகோ
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Ok ana neenga second part azhuthuvanu thana sonnenga please konjam consider panunga Raji maa inagi ud illayaசெக்ன்ட் பார்ட்டா..
இப்போதைக்கு இல்லை நித்யா
wow amazing comments Rithvi Nithya semmaya admire panni eluthirikinga...ரித்வி ... உன்னை பற்றி நண்பர்கள் சொன்ன செய்திகள் எல்லாம் நித்துவை போல நம் மனதையும் பிழிகிறது. நம்பவே முடியவில்லை......... இந்த நிதர்சனத்தை புரிந்து கொள்ள கொஞ்சம் அவகாசம் கண்டிப்பாக வேண்டும். ஏனென்றால் ரித்வியின் குணாதிசயம் அப்படி. மனம் ஏற்கவே மறுக்கிறது. நித்து அவனை பார்த்தே ஆக வேண்டும் என்று நண்பர்களிடம் சொல்கிறாள். அது சரி தான் எப்படி அவளால் அவன் இப்படி இருக்கும் போது நிம்மதியாக இருக்க முடியும். நாற்காலியில் அமர்ந்திருந்த நித்து ரித்வியை தேடியது போல நாமும் ரித்வியின் வரவுக்காக தான் காத்திருத்தோம். இது தேவையில்லாத வேலையோ என்ற அவளின் மனசாட்சியின் கேள்விக்கு அவள் ஆம் என்று சொல்லவேயில்லை, எப்படி சொல்வாள் அவன் அவளுக்கு எவ்வளவு முக்கியமானவன். ரித்வியின் குரலை கேட்டவுடன் நாமும் அவனை திரும்பி பார்த்தால், நிச்சயமாக இப்படியொரு ரித்வியை எதிர்பார்க்கவில்லை, எங்கே ரித்வி உன்னுடைய அந்த சுறுசுறுப்பும், துடிப்பும், துருதுருவென்று குறும்பு மின்னும் கண்களும், உன் உடையிலும் தோற்றத்திலும் கூட எத்தனை மாற்றம். உன்னை இப்படி பார்க்கவே முடியவில்லை ரித்வி, மிகவும் கஷ்டமாக உள்ளது. அவன் நித்துவை தவிர்த்து விட்டு செல்வதும், இவள் விடாமல் அவனை எப்படியோ பிடித்து பேச, அவன் ஒரு அந்நியத்தன்மையுடன் பேசி செல்வது, திரும்ப பேச முயலும் போது, அவளை பத்திரிகையாளர்கள் தவறாக சித்தரித்து விட கூடாது என்று ஒதுக்குவது எல்லாமே அவளின் மேல் அவன் கொண்டுள்ள அன்பும், அக்கறையும் என்றுமே மாறாது என்பதன் சான்று. ரித்வியை பற்றி அவர்கள் தவறாக பேசும்போது, அவன் சண்டையிட்டு சட்டை கசங்கியதை போல் நம் மனதும் கசங்கியது. ஏன் அவனுக்கு இப்படியொரு நிலை என்றே தோன்றியது. அவள் எப்படியோ விடாப்பிடியாக காரில் ஏறி அமர்ந்து அவனுடன் மிருதுளா வீட்டிற்க்கானாலும் வருகிறேன் என்று சொல்வதும் இவனும் பதிலுக்கு சூப்பர் என்று சொல்லும் போது அவள் அருகாமையில் அவன் துடுக்குத்தனம் மீண்டுவிட்டது. அவன், என் ஞாபகம் திடிரென்று உனக்கு எப்படி வந்தது என்று கேட்டதற்கு திருமணமானவனை நினைக்ககூடாது என்றும், நீ சந்தோசமாக இருக்கிறாய் என்று எண்ணியிருந்தேன் என்று கூறும் பதில் அருமை. திரும்பவும் குத்தி கிழிக்கும் கேள்வி அவனிடமிருந்து, அவள் பதிலோ அவன் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாய். நித்து ஒரு தோழியாக ஆறுதல் சொல்ல நினைக்கையில் காதலியாக தோள் சாய வேண்டும் என்கிறான். வழக்கமாக அவன் பேசுவதை இவள் பேசுகிறாள் இவன் பேசுவதை அவள் பேசுகிறாள். காதலியாக வருவாயா என கேட்கும் போது கூட, அவன் அவளை விரும்பவில்லை, எனக்கு பொய்சொல்லவும் நடிக்கவும் தெரியாது என்று உண்மையை சொல்லிவிடுகிறான். இது தான் அவனின் குணம், எப்போதும் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசாதவன். சரியோ தவறோ போலியான நம்பிக்கையை யாருக்கும் தர மாட்டான். அவன் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறான்.அவன் முரண்பாட்டின் மொத்த உருவாக இருந்தாலும் அவனுடைய குணத்தால் நம்மை ஈர்க்கவே செய்கிறான். முரண்பாடே உன்னிடம் பாடம் கற்றாலும் அதன் முழு இலக்கணத்தை நீ ஒருவனே அறிவாய் ரித்வி.
wow really like it yours comments, superb...ரித்வி, அவளை உன்னை அறைய சொல்கிறாயே, எப்படி முடியும் அவளால் , உன் மீது அவள் கொண்ட பேரன்பு அவளை நீ வெறுத்தாலும் இப்படியொரு செயலை செய்ய விடாது. யாரிடமும் காரணம் சொல்லாத நீ நித்துவிடம் சொல்ல விளையும்போதே தெரியவில்லையா உனக்கு அவளிடம் இருக்கும் நெருக்கம். அதிலும் திருமணம் நின்றதற்கு நீ சொல்லும் காரணம், ஆஹா நித்துவின் பார்வை உன்னை எந்தளவு பாதித்திருந்தால் சஞ்சீஷ்வினி மீது அவளை காதலிப்பவன் செலுத்தும் பார்வையை வைத்தே புரிந்துகொண்டாயே !! அது அறிந்தபின் அவளிடம் தெளிவுபடுத்தி அவள் பெற்றோரிடமும் பேசி அவர்கள் திருமணத்தையே முடித்து விட்டாய், நீ என்றுமே யூனிக் தான் ரித்வி.உனக்கு நிகர் நீயே தான். பூமராங் மாதிரி அடித்ததா, சஞ்சீஷ்வினிக்கு செய்த நியாயம் உன் மீது உண்மையான அன்பு கொண்டவளுக்கு செய்யவில்லை என்ற குற்றவுணர்வுடன் இருக்கிறாய், அந்த உணர்வே உன்னை கொல்லுது என்று சொல்லும்போது, உன் வேதனை புரிகிறது. உன் கையில் அடிபட்டவுடன் அவள் கொள்ளும் வேதனை, அக்கறை எப்போதும் போல்.லவ் செய்யாமல் காதலிலும், மேரேஜ் செய்யாமல் திருமணத்திலும் தோல்வி அடைந்திருக்கிறேன் என்று சொல்லும் போது நீ எத்தகைய மனவுளைச்சலில் இருக்கிறாய் என்று புரிகிறது.பெற்றோர் புறக்கணிப்பு, தொழிலிலும் தோல்வி இவையனைத்தும் மீறி எப்படியோ வாழ வேண்டும் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறாய். இரத்தம் வந்தும் வலியே தெரியவில்லையா ரித்வி, உனக்கு வலிக்கவில்லை உன் நிலை நினைத்து நமக்கு வலிக்கிறது. நித்து ஆறுதலாக பேச முற்படும் போது, நான் மற்றவர்கள் நிலையை நினைத்து பேசுவதில்லை நீ ஏன் அதை செய்கிறாய் என்கிறாய், அவள் அதற்கு எவ்வளவு அழகாக பதில் சொல்கிறாள், நீ மற்றவர்கள் நிலையை யோசிக்காதவன் தான் ஆனால் மற்றவர் நல்லா இருக்க வேண்டும் என்று நினைப்பவன் 100% உண்மையான வார்த்தை. அவள் உன் வழியிலியே பேசி உன் இயல்பான துடுக்குத்தனத்தை மீட்கிறாள். நீ இரண்டு ஆப்ஷன் தருகிறாய் அவள் மூன்றாவதாக ஒன்றை தேர்ந்தெடுக்கும் போது உன்னை போல் நானும் அவள் காதலிக்கிறேன் என்று சொல்லுவாள் என்று கொஞ்சம் ஆசைப்பட்டேன், ஆனால் அவளுடைய தெளிவான பதிலில் நானும் உன் போலவே மிகுந்த மகிழ்ச்சி கொண்டேன்.பின் அவள் பேச பேச உன் விளையாட்டு தனம் வெளிவருகிறது. உனக்கு நிம்மதியான உறக்கம் கூட இல்லையென்று நீ காரின் மேல் சாய்ந்து உறங்குவதிலேயே தெரிகிறது. நண்பர்களை தள்ளி நிறுத்திய உன்னால் அவளை நிறுத்த முடியவில்லை, உன் வருத்தத்தை அவளிடம் மட்டுமே பகிர்ந்து கொண்டாய். உன் ஆழ்மனதில் அவள் மேல் காதல் இருக்கிறது. அது உனக்கு தெரியவில்லை. ஒருவேளை சர்வேஷ் உடன் அவளை கண்டால் உணர்ந்து கொள்வாயோ தெரியவில்லை. உன் ஒருவனுக்கே அனைத்தும் தெரியும். நாளை உங்கள் இருவருக்கும் என்ன காத்திருக்கிறதோ ஆனால் இன்று நீ நெடுநாளைக்கு பின் மகிழ்ச்சியாக இருக்கிறாய் அதனால் தான் இவ்வளவு பொறுமையாக நான் எழுதியதை படித்து கொண்டிருக்கிறாய். உன் முகத்தில் இந்த சந்தோசம் என்றும் நிலைக்கட்டும். விரைவில் உன் துயர் அனைத்திலும் இருந்து மீண்டு வா ரித்வி. அந்த நாளுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.