All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் புத்தகங்கள் மற்றும் அமேசான்

Status
Not open for further replies.

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்

"காதல் தீரவே வா என்னருகிலே..!!"

கதையை இனி அமேசான் கிண்டிலில் படிக்கலாம்..

சுடர் கொடி மாத இதழில் வெளியான கதை இது..

இந்தியா லிங்க்


வெளிநாட்டு லிங்க்


விருப்பம் உள்ளவர்கள் படித்து விட்டு மறக்காமல் உங்கள் கருத்துக்களை அங்கேயே என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்

அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை வாழ்த்துக்கள் ❤️

"நின்னைச் சிந்தையாலும் தொடேன்..!!" கதையை இனி அமேசானில் படிக்கலாம்..

இந்தியா லிங்க்

வெளிநாட்டு லிங்க்

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை அங்கேயே என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
31283

ஹாய் டியர்ஸ்

மீண்டும் ஒரு சந்தோசமான விஷயத்தோடு உங்களை சந்திக்க வந்திருக்கேன்..

"எனை சுடும் பனி..!!"

இந்த மாத சுடர் கொடி இதழில் வெளி வந்திருக்கும் ஒரு ஆன்டி ஹீரோ கதை..

அதிலிருந்து ஒரு குட்டி டீ..

********

உடனடியாக இலக்கியாவிற்கு வேறு வேலைகளும் கிடைக்கவில்லை. அதற்கான முயற்சிகளில் தினம் அலைந்து கொண்டிருந்தவளை அவ்வப்போது ஆனந்தியின் வார்த்தைகள் வழக்கம் போல் பிழைக்கத் தெரியாதவள் என்ற வகையில் குத்தி கிழிக்கத்தான் செய்யும்..! ஆனால் அதையெல்லாம் இப்போது வழக்கம் போல் கண்டு கொள்ளாமல் கடந்து சென்று கொண்டிருந்தாள் இலக்கியா.

அப்படி ஒரு நாள் கொஞ்சம் நகரத்தை விட்டு வெளியில் உள்ளடங்கிய பகுதியில் இருக்கும் ஒரு ஹோட்டலுக்கு இன்டர்வ்யூக்காகச் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த இலக்கியாவின் முன் வேகமாக வந்து வழி மறிப்பது போல் நின்றது அந்தக் கார்.

அதுவோ அதிகம் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதி. அதிலும் மாலை மங்கி இருள் கவிழத் துவங்கி இருந்த நேரத்தில் அந்த வீதியில் அவளைத் தவிர வேறு யாருமே இல்லை.. இதில் உண்டான பயத்தோடு சுற்றும் முற்றும் பார்த்தவாறே இரண்டு அடிகள் இலக்கியா பின்னுக்கு நகர.. அந்தக் காரில் இருந்து இறங்கி வெளியில் வந்தான் அத்விக்.

“அப்புறம் ஒரு தென்றல் புயலாகி வருதேன்னு வீரமா சுத்திட்டு இருப்பேன்னு பார்த்தா..! என்ன இவ்வளவு சோர்வா நடக்கக் கூட முடியாம நடந்துட்டு இருக்கே..!” எனக் கேலியாகக் கேட்டவாறே தன் காரின் மேல் சாய்ந்து கைகளைக் கட்டிக் கொண்டு நின்றான் அத்விக்.

அதில் அவனைக் கண்டதும் உண்டான வெறுப்பில் முகத்தைத் திருப்பிக் கொண்டவள் காரைச் சுற்றிக்கொண்டு செல்ல முயல.. “அப்படி அவ்வளவு ஈஸியா என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிட முடியும்னு நினைக்கறியா..!” என்றவாறு அவளின் கைகளைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்தவன் இலக்கியா நடப்பதை உணர்ந்து வேகமாக விலகும் முன் அவளைப் பின் இருக்கையில் தள்ளி அதே வேகத்தில் காரையும் எடுத்திருந்தான்.

இதை எதிர்பாராமல் திகைத்து விழித்தவள், எழுந்து கதவை திறக்க முயல்வதற்குள் சென்ட்ரல் லாக் போட்டு காரை எடுத்திருந்தவன் ஜெட் வேகத்தில் அதைப் பறக்க விட்டுக் கொண்டு இருக்க...

எப்படியாவது இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற முனைப்போடு “ஹெல்ப்.. ஹெல்ப்..” என இலக்கியா கத்தியது எல்லாம் அவர்கள் இருவரை தவிர வேறு யாருக்கும் கேட்காமலே போனது.
காரணம் அத்விக் சென்று கொண்டிருந்த பாதை அப்படிப்பட்டது.

சில நிமிடங்களிலேயே தன் உதவிக்கு யாரும் வர போவதில்லை என்று புரிய.. முழுக்க முழுக்க இருளில் மூழ்கியிருந்த ஆள் அரவமற்ற பாதை வழியாகவே சென்று கொண்டிருந்தவனைப் பின்னால் இருந்து இழுத்து கைகளைப் பிடித்துக் காரை நிறுத்த முயன்று கொண்டிருந்த இலக்கியாவின் அத்தனை முயற்சிகளும் வீணாகப் போனது.

“கொலைகாரா.. கொலைகாரா.. காரை நிறுத்துடா.. ரஞ்சுவை கொன்னது போதாதா..? அடுத்து என்னையும் கொல்லணுமா..!” என அவள் கத்திக் கொண்டிருந்ததையெல்லாம் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் தன் போக்கில் சென்று கொண்டிருந்தவன், ஒரு கட்டத்தில் இவளின் தொல்லை அதிகமாகவும், டேஷ் போர்டில் இருந்த க்ளோரோபார்ம் ஸ்ப்ரேவை எடுத்து அவளின் முகத்தில் அடித்திருந்தான் அத்விக்.

அதில் அப்படியே மயங்கி சரிந்தவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தவனின் இதழ்கள் கேலியாக வளைந்தது.

************

அந்த அறையின் ஒரு மூலையில் சிறு மேஜை மேல் தண்ணீர் ஜக் இருப்பது தெரிய.. வேகமாக எழுந்து செல்ல முயன்றவளின் முயற்சிக்கு அவளின் உடலே ஒத்துழைக்காமல் போக லேசான தள்ளாட்டத்தோடு அங்குச் சென்றவள் அந்த ஜக்கை வேகமாக எடுத்து அப்படியே குடிக்கத் துவங்க.. “பார்த்தா பயங்கரமான குடிகாரியா இருப்பே போலேயே..!” என்ற நக்கலான அத்விக்கின் குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பினாள் இலக்கியா.

அவள் நின்றிருந்த இடத்திற்கு வெகு அருகில் இருந்த கதவின் மேல் சாய்ந்தவாறு நின்றிருந்தான் அத்விக்.

அவனைக் கண்டவுடன் தண்ணீர் குடிக்கும் எண்ணம் கூட இல்லாமல் போக.. ஜக்கை அங்கு வைத்து விட்டு திரும்ப எண்ணியவளை “ஜஸ்ட் கொஞ்சம் ஸ்பிரே செஞ்சதுக்கே இவ்வளவு தள்ளாடறே.. இதுக்கே இப்படினா இன்னும் எவ்வளவோ இருக்கே..!” என்ற அத்விக்கின் கேலி குரல் அவளின் நடையைத் தடை செய்தது.

அதில் அவனை எரிச்சலோடு நிமிர்ந்து பார்த்தவள், “இப்போ எதுக்கு என்னை இங்கே கூட்டிட்டு வந்திருக்கீங்க.. நான் எங்கேயும் வந்து சாட்சி சொல்ல மாட்டேன்.. அப்படிச் சொன்னாலும் எந்தப் பயனும் இல்லைன்னு தான் எனக்குத் தெரிஞ்சு போச்சே.. உங்க பணபலத்தையும் அதிகார பலத்தையும் மீறி, நான் என்ன செஞ்சுட முடியும்.. ப்ளீஸ் என்னை விட்டுடுங்க..” என்றாள் சோர்வான குரலில் நிற்க முடியாத அயர்வோடு.

அதில் சத்தம் போட்டு சிரித்தவன், “ஓ.. நீ எனக்கு எதிரா சாட்சி சொல்லிடுவேன்னு பயந்து நான் உன்னைக் கடத்திட்டு வந்துட்டேன்னு நினைக்கறியா..!” எனக் கேட்டு மீண்டும் ஒருமுறை அதேபோல் சிரித்தவன் அப்படியே இலக்கியாவை நெருங்க.. அத்விக்கின் அந்த நெருக்கம் பிடிக்காமல் வேகமாகப் பின்னுக்கு நகர முயன்றவளுக்கு, அவளின் உடல் ஒத்துழைக்காமல் போனதில் அப்படியே பின்னால் சரிய முயன்றவளை அத்விக் காலை இடறி விட.. பின்னால் இருந்த இருக்கையில் பொத்தென விழுந்தாள் இலக்கியா.

திடீரென விழுந்த அதிர்விலிருந்து அவள் மீளும் முன்னே இலக்கியாவின் இரு பக்கமும் கைப்பிடியில் தன் கரங்களை ஊன்றி இலக்கியாவின் முகத்திற்கு வெகு அருகே குனிந்தவன் “நீ சாட்சியே சொன்னாலும் எனக்கு எந்தக் கவலையும் இல்லை.. அதை எப்படி ஹாண்டில் செய்யணும்னு எனக்கு நல்லாவே தெரியும்.. ஆனா நான் உன்னை இங்கே கொண்டு வந்ததற்கான காரணமே வேற..” என அவளின் தலை முதல் கால் வரை பார்வையால் வருடியவனின் அந்தப் பார்வையில் உடல் கூசி போனாள் இலக்கியா.

அந்தப் பார்வை கொடுத்த அருவருப்பைத் தாங்க முடியாமல் “ச்சீ..” என முகம் சுழித்தவளின், முகத்தைத் தன் ஒற்றை விரலில் பிடித்துத் திருப்பியவன், “என்னது ச்சீயா..? இதுக்கேவா..!” என்றான் ஒரு மாதிரியான குரலில்.

அந்தக் குரலும் அவனின் பார்வையும் சொன்ன செய்தியில் உண்டான அழுகையைத் தனக்குள்ளேயே இழுத்துக் கொண்டவள், அதையும் மீறி லேசான கலங்கிய விழிகளோடு “ப்ளீஸ்.. என்னை விட்டுடு..” எனக் கெஞ்சலாகக் கேட்கவும், “உன்னை அவ்வளவு சீக்கிரம் விடவா ஒரு மாசமா பொறுமையா திட்டம் போட்டு தூக்கினேன்..” என்றவாறு தன் இரு கரங்களையும் பேண்ட் பாக்கெட்டில் விட்டவாறு நிமிர்ந்து நின்று அத்விக் கேட்கவும், “என்.. என்னது ஒரு மாசமாவா..?” எனும் போதே இலக்கியாவின் குரல் லேசாகப் பயத்தில் நடுங்க துவங்கியது.

*********

இந்த கதையை படிக்க விரும்புபவர்கள் உங்கள் அருகிலுள்ள வார இதழ்கள் மற்றும் மாத இதழ்கள் விற்பனை செய்யும் கடைகளில் வாங்கி படித்து மகிழுங்கள்..

விலை ₹ 40

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை அறிய ஆவலோடு காத்திருக்கிறேன்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்

"நின்னு நின்னுகா பிரேமிஞ்சனா..!!" கதையை இன்று முதல் கிண்டிலில் படிக்கலாம்..

நம் ஸ்ரீராம் - ஷ்ராவனியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து இருக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன்.. அவர்களை இனி உங்கள் விருப்பம் போல படித்து மகிழுங்கள்..

படித்து விட்டு உங்கள் கருத்துக்களையும் ரேட்டிங்கையும் மறக்காமல் அங்கேயே பதிவு செய்யுங்கள்.. உங்களின் கருத்துக்களை அறிய ஆவலோடு காத்திருக்கிறேன்..

இந்தியா லிங்க் 👇🏻

வெளிநாட்டு லிங்க் 👇🏻

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்

நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி ❤️❤️

அனைவருக்கும் தனிதனியே பதிலளிக்க முடியவில்லை.. கண் முன்பை விட இப்போது கொஞ்சம் பரவாயில்லை..

*******

சுடர்க் கொடி மாத இதழில் வெளிவந்த "எனை சுடும் பனி..!!" கதையை இனி அமேசானில் படிக்கலாம்..

இப்போதைக்கு இந்த கதை ப்ரீ இல்லை..



விருப்பம் உள்ளவர்கள் படித்து மகிழுங்கள்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ❤️❤️💐💐

2023 புத்தாண்டின் புதிய தொடக்கமாக கவி சந்திரா பதிப்பகத்தின் இரண்டு புத்தகங்கள் வெளி வருகிறது..

32461
1."பிறவி பிழை காதல் திருத்தம்..!!"

நம்ம யது நந்தன் மற்றும் சங்கமித்ரா இருவரையும் யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்து இருக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன்❤️❤️
"நின்னைச் சிந்தையாலும் தொடேன்..!!" கதையின் கதா மாந்தார்கள் தான் இவர்கள்..

இவர்களோடு இன்னும் கொஞ்சம் பயணிக்க ஆசைப்பட்டவர்களுக்கும் இரண்டாம் பாகமாக கதையை தொடர்ந்து கேட்டு கொண்டிருந்தவர்களுக்கும் இதோ உங்கள் நந்தனையும் மித்ராவையும் அடுத்த பாகத்தில் கூட்டி வந்து விட்டேன்..

ஒன்றாக சேர்ந்த பிறகு நின்னை சிந்தையாலும் தொடேன் என கூறினால் நன்றாக இருக்காது இல்லையா.. அதான் அவன் தவறை உணர்ந்து திருந்தி இருப்பதை குறிக்கும் விதமாக "பிறவி பிழை காதல் திருத்தம்..!!" என்ற பெயரில் இந்த கதை நேரடி புத்தகமாக வெளிவருகிறது..

இப்போது கதையில் இருந்து ஒரு சின்ன டீ

*******

“அங்கிள்.. உங்களை நினைச்சு நான் எவ்வளவு கவலைப்பட்டுட்டு இருந்தேன் தெரியுமா..! இப்பவாவது கண் விழிச்சீங்களே, எங்க கல்யாணம் நடந்த நேரம் உங்களை நான் ரொம்ப மிஸ் செஞ்சேன்.. உங்க முன்னாடி வெச்சு தான் எங்க கல்யாணமே நடந்துது தெரியுமா..! சொல்லு நந்து..” என்றெல்லாம் அழுது நடித்து கொண்டிருந்தாள்.

இப்போதைக்கு தயானந்தனிடம் எதையும் மறுத்து பேசாமல் இருந்து விட்டு பொறுமையாக கொஞ்சம் கொஞ்சமாக ஸ்வராவோடு தனக்குத் திருமணம் ஆகவில்லை என்றெல்லாம் அவரின் நிலைமையை பார்த்து எடுத்து சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்திருந்த நந்தன் திடீரென ஸ்வரா இப்படி வந்து பேசி நடிக்கவும் உண்டான திகைப்போடு லேசாக திரும்பி அவளை பார்த்து “என்ன செஞ்சுட்டு இருக்கே நீ..?” என்றான் பல்லை கடித்துக் கொண்டு அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் அடிக்குரலில்.

ஆனால் அதற்கும் “ஏன்..? என்ன நந்து..? நம்ம அங்கிள் தானே, சொன்னா என்ன..? நாம அவர் மேலே எவ்வளவு அன்பு வெச்சு இருக்கோம்னு அவருக்கும் தெரியட்டுமே..!” என வேண்டுமென்றே நந்தன் சொல்ல வருவது புரியாதது போல ஸ்வரா கேட்கவும், “இவனை பற்றி எனக்கு தெரியாதா.. இன்னும் என்னவெல்லாம் செய்வான்னு கூட தெரியும்.. ஆனா அதுவரைக்கும் கல்யாணமே செய்யாம இருக்கும் தப்பான முடிவுக்கு வராம இருந்தானே அதுவே எனக்கு போதும்..” என்றிருந்தார் நிம்மதியோடான குரலில் தயானந்தன்.

“ஆமா அங்கிள்.. நந்துவுக்கு நீங்கனா அவ்வளவு உயிர்.. அது உங்களுக்கே தெரியுமே..!” என்றவளுக்கு ஆமோதிப்பாக தலையசைத்து புன்னகைத்தார் தயானந்தன்.

பின் அப்போதே நினைவு வந்தவராக “எங்கே நந்து என் தங்க பேத்தி.. அப்போ கண்ணில் காட்டியதோட சரி, அப்பறம் கண்ணிலேயே காட்டலை..” என்று கேட்கவும், “அது மித்ராகிட்ட இருக்காப்பா..” என அப்போதிருந்த மனநிலையில் சட்டென சொல்லி விட்டிருந்தான் நந்தன்.

அதன் பின்னே நந்தன் தன் தவறை உணர்ந்து நாக்கை கடிக்கவும், அதற்குள் “மித்ராவா அது யாரு..?” என்று கேட்டிருந்தார் தயானந்தன்.

“அது குழந்தையை பார்த்துக்க வெச்சு இருக்க வேலைக்காரி அங்கிள்..” என நந்தனை முந்திக் கொண்டு வன்மத்தோடு பதிலளித்து இருந்தாள் ஸ்வரா.

இதில் நந்தன் வெளிப்படையாகவே ஸ்வராவை முறைக்கவும், “ஏன் என்ன நான் தப்பா சொல்லிட்டேன்னு என்னை இப்படி முறைக்கறீங்க நந்து..?” என்றிருந்தாள் வேண்டுமென்றே ஸ்வரா.

“ஹ்ம்ம்.. வேற ஒண்ணுமில்லை.. இப்படியே நீ வளவளன்னு பேசிட்டு இருந்தா அப்பா எப்போ ரெஸ்ட் எடுக்கறது.. அதான்..” என்றான் நந்தன்.

அதற்குள் “போதும் கண்ணா நான் ரெஸ்ட் எடுத்தது எல்லாம்.. அதான் வருஷ கணக்கா எடுத்துட்டானே..! தங்கக்கட்டி அப்படியே உன்னை போலவே இருக்கா நந்து.. குழந்தையை வாங்கிட்டு வா.. கொஞ்ச நேரம் என்கிட்ட இருக்கட்டும்..” என்றார் தயானந்தன்.

**********

“ஏய் நில்லுடி..!” என அவளின் வழியை மறித்தது போல இடையில் வந்து நின்றிருந்தார் கௌரி. மித்ரா வந்த வேகத்தில் கெளரி வழி மறித்ததை எல்லாம் கண்டு கொள்ளாமல் கடந்து செல்ல முயல.. “யாரை கேட்டுடி இங்கே வந்தே..! வெளிய போ..” என்றார் ஆத்திரத்தோடு குரலை உயர்த்திக் கெளரி.

அதில் அவரைக் கோபமாக ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் கௌரியிடமிருந்து மித்ரா விலகிச் செல்ல முயல.. “ஹேய்.. உன்னைத் தான் டி நில்லு..” என மித்ராவின் கையைப் பற்றி நிறுத்தி இருந்தார் கௌரி.

“கையை விடுங்க..” என்று கோபத்தோடு கேட்க நினைத்தாலும் அப்போதிருந்த சூழ்நிலையில் மித்ராவுக்கு அழுகையே முதலில் வந்தது. ‘நிர்மலா எப்படி இருக்கிறாரோ...! என்ற எண்ணமும் கவலையுமே அவளை நிலைக் கொள்ளாமல் தவிக்கச் செய்து கொண்டிருக்க.. நிர்மலா இருக்கும் இடத்தை நெருங்கி விட்ட இந்த நிலையில் உள்ளே சென்று அவரை சென்று பார்க்க விடாமல் இடையூராய் வந்து நின்று தேவையில்லாமல் பேசி நேரம் கடத்தும் கௌரியை கண்டு எரிச்சலும் கோபமுமே உண்டானது.

ஆனால் இப்போதிருக்கும் அவளின் மனநிலை அதையும் அழுகையாகவே வெளிப்படுத்த.. அதைக் கேலியாகப் பார்த்து “வந்துட்டா நீலி கண்ணீரை வடிச்சுட்டுக் காரியம் சாதிக்க.. வெளிய போடி..” என்றார் கௌரி.
“நான் ஏன் வெளிய போகணும்..? நான் எங்க அம்மாவை பார்க்கணும்..” என மித்ரா வாதிடவும் “அம்மாவா..! யாரு சொன்னா அவ உன் அம்மான்னு.. இப்போ தான் இந்த ஓடுகாலிக்கு அம்மா ஆட்டுக்குட்டி எல்லாம் ஞாபகம் வருதோ..! அவ ஒண்ணும் உனக்கு அம்மா கிடையாது.. வெளியே போ..” என்றிருந்தார் ஆத்திரத்தோடு கௌரி.

“நான் எங்க அம்மாவை பார்க்கணும்..” என அதுவரை விடாமல் வழிந்து கொண்டிருந்த அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு சற்றே அழுத்தமான குரலில் மித்ரா கூறவும், “உன்னை மாதிரி மானங்கெட்டவளை பார்க்க அவளுக்குக் கொஞ்சமும் இஷ்டம் இருக்காது.. மரியாதையா வெளியே போடி..” என மித்ராவின் கையைப் பிடித்து இழுத்து அந்தப் பக்கமாகத் தள்ளினார் கௌரி.

“நான் ஏன் போகணும்.. நான் போக மாட்டேன்.. நான் எங்க அம்மாவை பார்க்கணும்..” என்று மித்ராவும் சரிக்குச் சமமாக வாதாட துவங்கியதில் ஆத்திரமும் எரிச்சலுமாக அவளை நெருங்கியவர் “இத்தனை நாள் கண்ணுக்குத் தெரியாத நாங்க எல்லாம் இப்போ தான் உன் கண்ணுக்கு தெரிஞ்சோமா..! அன்னைக்கு நாங்களே வந்து வீட்டுக்கு வாடின்னு கூப்பிட்டப்போ.. வந்தியா..! நீள நீளமா வசனம் எல்லாம் பேசின.. இப்போ எங்கே இருந்து திடீர்னு பாசம் பொத்துக்கிட்டு வந்தது.. ஏன் இவ்வளவு நாளா உன்னை வெச்சுட்டு இருந்தவன் விரட்டி விட்டுட்டானா..!” என்று குத்தலாகக் கெளரி கேட்கவும், அவருக்கு எந்தப் பதிலும் அளிக்காமல் திரும்பியவள், சற்று தள்ளி நின்றிருந்த ஜெயராஜை ஒரு பார்வை பார்த்தாள் மித்ரா.

**********
32462
அடுத்ததாக "பாவை பார்வை மொழி பேசுமே..!!" மற்றும் "மழை நின்ற பின்னும் தூறல்..!!" இரண்டு குறு நாவல்களும் இணைந்து ஒரே புத்தகமாக வெளி வருகிறது..

ஹரி சரண் - கமலி
விஷ்வேஷ்வரன் - சம்யுக்தா

இவர்களையும் மறந்து இருக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன்.. இது முன்பே ஆன்லைனில் வந்த கதை தான்..

விருப்பம் உள்ளவர்கள் வாங்கி படித்து மகிழுங்கள்..

இவை சென்னை புத்தக கண்காட்சியிலும் கிடைக்கும்..

ஆன் லைனில் புத்தகங்களை வாங்க விரும்புபவர்கள் தொடர்புக் கொள்ள வேண்டிய அலைபேசி எண் :

கவி சந்திரா பதிப்பகம்
99623 18439

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விழியா மொழியா எதில் பேசவே..!!

கதையின் அடுத்த இரண்டு எபி படிக்க கீழே உள்ள லிங்க்கை கிளிக்குங்கள்..



இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
33284

33285

இப்படி மொத்தமா நம்ம புத்தகங்களை யாராவது வாங்கறதை பார்க்கும் போது 😍😍

உங்க அன்புக்கு நன்றி டியர்ஸ் ❤️❤️😘😘

அத்தனை புத்தகங்களும் மீண்டும் இருப்பில் உள்ளது..

வாங்க நினைப்பவர்கள் தொடர்புக் கொள்ள வேண்டிய அலைபேசி எண்👇🏻

கவி சந்திரா பதிப்பகம்

99623 18439
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"விழியா மொழியா எதில் பேசுவே..!!"

கதையின் அடுத்த இரண்டு அத்தியாயங்கள் கீழே உள்ள லிங்கில் சென்று படிக்கலாம்..



இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்

அனைவருக்கும் இனிய அன்பர்கள் தின வாழ்த்துக்கள்❤️❤️💐💐

பிறவி பிழை காதல் திருத்தம்..!! (நின்னைச் சிந்தையாலும் தொடேன் கதையின் இரண்டாம் பாகம்)

கதையை இனி அமேசானில் படிக்கலாம்.. இப்போதைக்கு இது ப்ரீ இல்லை..

நந்தன் மித்ராவை மீண்டும் ஒருமுறை காண நீங்கள் தயாரா..

கீழே உள்ள லிங்கில் சென்று கதையைப் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை அங்கேயே பதிவிடுங்கள்..

உங்கள் கருத்துக்களை அறிய ஆவலோடு காத்திருக்கிறேன்..



இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 
Status
Not open for further replies.
Top