All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
படித்து விட்டு உங்கள் கருத்துக்களை அங்கேயே பதிவிடுங்கள்..
ஒரு சிலருக்கு இந்த லிங்க் வேலை செய்யவில்லை என்றால் இருபத்து நான்கு மணி நேரத்திற்கு பிறகு முயற்சிக்கவும்.. கிண்டிலின் புதிய அப்டேட் சிலருக்கு அப்படி உள்ளது..
இந்த புதிய வருடத்தின் புது துவக்கமாக என் 3 புத்தகங்கள் வெளியாகிறது
*********
1) கலாபமே காதலாய்..!!
ஆத்மன் ஸ்ரீவத்சன் - ஆராத்யா
உங்களை சந்திக்க நேரடி புத்தகமாக வருகிறார்கள்..
Teaser 1
சமையலறையில் காய்களை வெட்டிக் கொண்டிருந்த தியாவால் இயல்பாக வேலைகளைத் தன் போக்கில் செய்ய முடியவில்லை. லேசான தடுமாற்றத்தோடு தியா வேலைகளைச் செய்து கொண்டிருக்க.. அவளையே தான் விழி எடுக்காமல் பார்த்தவாறு அந்தச் சமையலறையிலேயே இருந்த சிறு உணவு மேஜையில் அமர்ந்திருந்தான் ஆத்மன்.
அந்த சிறு இடத்தை முழுமையாக ஆக்கிரமித்தது போல் அமர்ந்திருந்தவனின் பார்வை தந்த குறுகுறுப்பே தியாவை தடுமாறச் செய்து கொண்டிருந்தது. திரும்பி பார்க்காமலேயே அந்தப் பார்வையை உணர்ந்தவளின் மனம் லேசாகப் படபடக்க.. விழியைத் திருப்பி அவனைப் பார்க்க உண்டான தயக்கத்தோடு நின்றிருந்தாள் தியா.
தன் பார்வை அவளிடம் உண்டாக்கும் மாற்றங்களைக் கண்டு இதழில் பூத்த மென்னகையோடு ஆத்மன் அமர்ந்திருக்க.. ஓர விழியில் இதைக் கவனித்தவளின் படபடப்பு மேலும் அதிகமானது.
அதில் அவளின் கைகள் லேசாக நடுங்க துவங்கியது. அதை கவனித்த ஆத்மனும் வேண்டுமென்றே மேலும் சாய்ந்து அமர்ந்து அவளையே இமைக்காமல் பார்த்தான்.
சமீபமாகத் தன்னை நேருக்கு நேர் பார்த்துத் தைரியமாக எதிர்த்து நின்று கேள்வி கேட்பவளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு தியாவிடம் தோன்றியிருந்த இந்த அழகிய மாற்றம் வெகுவாக அவனை ஈர்த்தது.
கல்லூரி பட்டாம்பூச்சியாய் அவள் சிறகடித்துக் கொண்டிருந்த நேரங்களில் ஆத்மனை கண்டதும் இப்படி நேருக்கு நேர் பார்க்க தயங்கி விழிகளை அவள் தழைத்துக் கொள்வதைக் கண்டிருக்கிறான் ஆத்மன்.
அதன் பிறகு நீண்ட நெடிய இத்தனை வருடங்களுக்குப் பின் இப்போதே அப்படி தியா இவனை கண்டதும் விழிகளைத் தழைத்துக் கொள்கிறாள். ஆனால் இந்த இடைப்பட்ட காலங்களில் அவள் விழிகளில் வெளிப்படும் பாவங்கள் தான் முற்றிலும் வேறாகி இருந்தது.
அதை ரசித்தப்படியே ஆத்மன் அமர்ந்திருக்க.. அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் தியா வேகமாக நகர முயன்ற நொடி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதில் புது இடமென்பதால் தடுமாறி இருளில் கையை நீட்டி மெல்ல மெழுகுவர்த்தியை தேடியப்படி நகர்ந்தவள் ஆத்மனின் மேல் மோதி நின்றாள்.
திடீரென ஆத்மனை இங்கு எதிர்பாராததால் உண்டான அதிர்வோடு தியா “ஆஆ..” எனக் கத்தியவாறே, பின்னுக்கு வேகமாக விலக முயன்றவளை சட்டென இடையோடு சேர்த்து வளைத்து பிடித்து “ஷ்ஷ்ஷ்.. நான் தான்.. பயப்படாதே, எமர்ஜென்சி லைட் ஆன் செய்யத் தான் வந்தேன்..” என்றப்படியே ஆத்மன் அவளுக்குப் பின்னிருந்த லைட்டை ஆன் செய்தான்.
அதில் அங்கு வெளிச்சம் பரவ.. தன்னை நெருங்கி நின்றிருந்தவனையே படபடப்போடு தியா பார்த்துக் கொண்டிருக்க.. அவளின் அந்தப் பார்வையில் ஈர்க்கப்பட்டு ஆத்மனும் அவளையே தான் பார்த்திருந்தான்.
இருவரின் பார்வையும் ஒன்றையொன்று ஈர்க்க.. தன்னை மறந்த ஒரு மௌன நிலையில் விலக வேண்டுமென்ற எண்ணமே இல்லாதது போல் இருவரும் நின்றிருந்தனர்.
அந்த நெருக்கமும், பார்வையும், உள்ளிருந்து இத்தனை நாளாக அலைகழித்துக் கொண்டிருந்த நேசமும் தன் கை வளைவில் நின்றிருந்தவளின் முகத்தை நோக்கி ஆத்மனை நெருங்க செய்ததில் அதை ஏற்க தயாராகி விழி மூடி நின்றாள் தியா.
****************
அந்த வீட்டை கண்டு பிடித்து அசுர வேகத்தில் காரை அங்குக் கொண்டு வந்து நிறுத்திய ஆத்மன் ஒரு பதட்டத்தோடே இறங்கி உள்ளே ஓடினான்.
அழைப்பு மணியை அவன் விடாமல் அடித்த விதத்திலேயே உள்ளிருந்தவளுக்கு வந்திருப்பது யாரெனப் புரிய.. அதில் உண்டான பயத்தோடும் படபடப்போடும் மிரட்சியோடு மூடியிருந்த கதவையே பார்த்தப்படி நின்றிருந்தாள் தியா.
எப்படியும் ஆத்மன் ஒரே நாளில் தன்னைத் தேடி இங்கு வந்து விடுவான் என முன்பே கணித்திருந்தவள், பயணத்துக்கான ஏற்பாடுகளை வேகமாகச் செய்யச் சொல்லி விக்கியிடம் பலமுறை சொல்லி இருந்தாள் தியா.
ஆனால் இடையில் நடந்த சில இடையூறுகளால் இந்தத் தாமதம் தவிர்க்க முடியாததாகி போனது.
இல்லையெனில் ஆத்மன் வருவதற்கு முன் இங்கிருந்து கிளம்பி விட்டிருப்பாள் தியா.
இப்போது ஆத்மனிடம் சிக்காமல் எப்படித் தப்பிப்பது என்ற யோசனையே அவளுள் பெரிதாக இருக்க.. வேகவேகமாக யோசித்துப் பின் வாசல் வழியே வெளியேற நினைத்து முன்பே தயார் செய்து வைத்திருந்த பையை எடுத்துக் கொண்டு திரும்பியவள், மாடி வழியே கம்பியை பிடித்து ஏறி வீட்டிற்குள் குதித்து உள்ளே வந்திருந்த ஆத்மனை கண்டு திகைத்து நின்றாள் தியா.
அவனைக் கண்டதில் உண்டான பதட்டமும் திகைப்பும் நொடியில் மாறி கோபம் அந்த இடத்தை ஆக்ரமிக்க.. வேகமாக அங்கிருந்து வெளியேற முயன்றவளை “ரதி.. நான் சொல்றதை கேளு.. நீ நினைக்கறது போல எல்லாம் எதுவுமில்லை..” என்றவாறே வழி மறிப்பது போல் வந்து நின்றான் ஆத்மன்.
ஆனால் அவன் சொல்வதைக் கேட்கவே விரும்பாதது போல் தியா வேகமாக அங்கிருந்து நகர முயல, அவளின் முழங்கையைப் பிடித்துத் தன்னை நோக்கி திருப்பியவன், “ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளு ரதி..” என்றவன் பேசுவதைக் கேட்கவே தயாராக இல்லை என்பது போல் முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்றிருந்தாள் தியா.
“ம்ப்ச்.. நிமிர்ந்து என் கண்ணைப் பாரு ரதி.. நான் அப்படி எல்லாம் எதுவும் செய்யலை.. நான் ஏன் அப்படிச் செய்யப் போறேன், அது எனக்கும் தானே வலி.. உனக்கு ஏன் இது புரியலை..” என்று வார்த்தைகளில் வலியோடு பேசியவனைக் கண்களில் வலியோடும் கண்ணீரோடும் நிமிர்ந்து பார்த்தவள், பதிலேதும் சொல்லாமல் பார்வையைத் தழைத்துக் கொண்டாள் தியா.
“இந்தப் பார்வையே நீ என்னை நம்பலைன்னு சொல்லுது.. எனக்கு ஒரு சான்ஸ் கொடு ரதி..” என அவளுக்கு விளக்க முயன்றுக் கொண்டிருந்தவனின் பேச்சுச் சட்டெனத் தடைப்பட்டது.
அப்படியே நம்ப முடியா திகைப்போடு பார்வையைத் திருப்பியவன், தியா இறுகிப் போன முகத்தோடு அவனுக்கு ஊசிப் போட்டு முடித்து அதை எடுப்பதை அதிர்வோடு பார்த்தான் ஆத்மன். அதில் ஆத்மனுக்குத் தலை சுற்ற துவங்க.. லேசாகத் தடுமாறி அருகில் இருந்த சுவரை பிடித்தான் ஆத்மன்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு அவனிடமிருந்து வேகமாக விலகியவள், “சாரி.. இப்படி ஒரு சூழ்நிலை வரும்னு நான் முன்னேயே எதிர்பார்த்தேன்.. உங்களை என்னால் உடல்பலத்தால் வீழ்த்த முடியாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்.. அதான்..” எனும் போதே அதற்கு மேல் சுவரை பிடித்துக் கொண்டு நிற்க முடியாமல் தள்ளாடியவாறே விழியை மூடி தலையை உதறிக் கொண்டு தன்னைச் சமன் செய்து கொள்ள முயன்றான் ஆத்மன்.
“அது ஒண்ணுமில்லை.. வெறும் மயக்கம் தான், எட்டு மணி நேரம் இப்படித் தான் இருக்கும்.. அதுக்குப் பிறகு எல்லாம் சரியாகிடும்.. உங்களை எதிர்த்து போராடி என்னால் ஜெயிக்க முடியாது.. நான் இங்கே இருந்து போயாகணும்.. அது நீங்க சுய நினைவில் இருந்தா நடக்காது.. அதனால் தான் இப்படி செஞ்சேன்.. சாரி..” என்றவளை விழிகள் சொருக பார்த்தப்படியே தரையில் சரிந்தான் ஆத்மன்.
இந்த டீசர் படிச்சவங்களுக்கு நினைவு இருக்கும்.. தியா ஏன் இப்படி செஞ்சான்னு நிறைய பேர் என்கிட்ட கேட்டு இருந்தீங்க.. அதற்கான விடையை கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்..
**********
2) உயிரென உனை சேரவா..!! 1&2
கௌஷிகன் - அர்ப்பணா
நேரடி அமேசான் கதையாக வந்த இவர்களை அவ்வளவு சீக்கிரம் மறந்து இருக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன்..
தன் பிள்ளையோடு தனியே வாழும் அபி, இப்படி ஒரு பிள்ளை இருப்பதே தெரியாமல் இரண்டாம் திருமணத்துக்கு தயார் ஆகும் கௌஷிக்..
திடீரென குழந்தையை பற்றி அறிய நேரும் கௌஷிக் என்ன முடிவெடுக்கிறான்.. அதை அபி எப்படி ஏற்கிறாள் என்பதை அறிய வேண்டுமானால் இந்த கதையை வாங்கி படியுங்கள்..
இவங்களும் இப்போ புத்தகமா வந்து இருக்காங்க..
*********
3) தன்மயா..!!
நம்ம சஞ்சய் தத்தாத்ரேயன் அவன் ஸ்டைலில் செய்யும் இன்வஸ்டிகேஷனை படிக்க விரும்பினால் இந்த புத்தகத்தை வாங்கி படித்து மகிழுங்கள்..
இதுவும் நேரடி அமேசான் கதை தான்..
மூன்றுமே ஆன்லைனில் வராத கதை.. விருப்பம் உள்ளவர்கள் வாங்கி படித்து மகிழுங்கள்..
ஒரு சிலருக்கு லிங்க் வேலை செய்யவில்லை என்றால் 24 மணி நேரம் கழித்து முயற்சிக்கவும்.. இல்லையென்றால் நேராக கூகுளில் சென்று கதையின் பெயரை போட்டு தேடினால் ஓபன் ஆகும்..
இப்போதைக்கு இந்த கதை ப்ரீ இல்லை..
கதையை படித்து விட்டு உங்கள் மேலான கருத்துக்களையும் ரேட்டிங்கையும் அங்கேயே என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.