All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் புத்தகங்கள் மற்றும் அமேசான்

Status
Not open for further replies.

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"விழியா மொழியா எதில் பேசுவே..!!"

கதையின் அடுத்த இரண்டு அத்தியாயங்கள் கீழே உள்ள லிங்கில் சென்று படிக்கலாம்..



இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"விழியா மொழியா எதில் பேசுவே..!!"

கதையின் அடுத்த ஐந்து அத்தியாயங்கள் பதிந்து இருக்கிறேன்..

இறுதி அத்தியாயங்களை கீழே உள்ள லிங்கில் சென்று படிக்கலாம்..

எபி : 27 & 28



எபி : 29 & 30 & 31



கதையின் முதல் அத்தியாயத்தில் இருந்து படிக்க விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கில் சென்று படிக்கலாம்..

விழியா மொழியா எதில் பேசுவே..!! 1 & 2: Vizhiya Mozhiya Ethil Pesuve..!! 1 & 2 (Tamil Edition) விழியா மொழியா எதில் பேசுவே..!! 1 & 2: Vizhiya Mozhiya Ethil Pesuve..!! 1 & 2 (Tamil Edition) eBook : Chandra, Kavi: Amazon.in: Kindle Store

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"முகவரி தொலைத்த முகிலினம்..!!"

கதையை இன்று முதல் அமேசானில் படிக்கலாம்..

கதையை பற்றிய உங்களின் கருத்துக்களை அறிய ஆவலோடு காத்திருக்கிறேன்..

இப்போதைக்கு இந்த கதை ப்ரீ இல்லை..



இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்

விழியா மொழியா எதில் பேசவே..!!

கதையை முழு கதையாக பதிவேற்றம் செய்து இருக்கேன்.. ஒரு சிலர் முழுதாக போடும் போது சொல்ல சொல்லி இருந்தீங்க..

விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள லிங்கில் சென்று படிக்கலாம்..



படித்து விட்டு உங்கள் கருத்துக்களை அங்கேயே என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்

"மௌனமே இசையாய்..!!" கதை ப்ரீ டவுன்லோட் கொடுத்து இருக்கேன்..

(24-6-2023இன்று மதியம் 1 மணி முதல் 25-6-2023நாளை மதியம் 1மணி வரை மட்டுமே..)

விருப்பம் உள்ளவர்கள் படித்து மகிழுங்கள்..

உங்களின் கருத்தையும் ரேட்டிங்கையும் அங்கேயே என்னோடு பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி..

நிறைய பேர் ரிவியூ போட்டும் வரவில்லை என சொல்லி இருந்தீங்க.. முழுக்க தமிழிலோ இல்லை முழுக்க ஆங்கிலத்திலோ ரிவியூ போட்டால் அங்கே பப்ளீஷ்
ஆகும்.. இரண்டும் கலந்து எழுதினால் அது அங்கு வராது..



இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா

இன்று ஒரு நாள்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்

"பிளான் பி (Plan B)..!!"

இந்த மாத சுடர்க்கொடி வெளியீடு..

கதையில் இருந்து ஒரு குட்டி டீ..

**********
அவசரமாக அங்கிருந்து கிளம்பி வரும் அவசரத்தில் விக்கிக்கு விளையாட்டு பொருட்களைக் கூட அவள் எடுத்து வந்திருக்கவில்லை. இந்த ஆள் அரவமற்ற பகுதியில் அவனுக்கும் பொழுது போக்குக்கு ஏதாவது வேண்டுமே என்றே அமைதியாக இருந்தாள் கார்த்திகா.

இனி அதை எல்லாம் போற்றிப் பாதுகாக்கும் அளவிற்கு அவளுக்கு நேரமும் பொறுமையும் இருக்குமோ.. என்னவோ..! அதனாலேயே அவன் விளையாட தகுந்த சீக்கிரம் உடைந்து விடாதது போன்ற சில பொருட்களை மட்டும் எடுக்க அனுமதித்திருந்தாள் கார்த்திகா.

இந்தக் கடிகாரத்தையே இரவு தான் கார்த்திகா கவனித்திருந்தாள். ‘இதை அவன் எப்போ எடுத்தான்..?’ என்ற யோசனையோடு கையில் எடுத்துக் கவனமாகப் பார்த்தவளுக்கு அது மரத்தில் செய்யப்பட்டிருப்பதும் எளிதில் உடையும்படியான கண்ணாடி எதுவும் இல்லை என்பதாலும் அவனிடம் கொடுத்து விட்டாள் கார்த்திகா.

ஏனெனில் அதை அவன் பொக்கிஷம் போல் அவளிடம் தர முடியாது எனத் தன் சட்டைக்குள் ஒளித்து வைக்க முயன்ற அழகு அவளுக்கு அத்தனை ரசனையாய் இருந்தது. இது போன்ற செயல்களை எல்லாம் இதற்கு முன் அவள் விக்கியிடம் கண்டதே கிடையாது.

எப்போதும் ஒரு மிரட்சியோடு திகைத்து விழித்த விழிகளும் பதட்டமுமான முகமுமாகவே தன் துப்பட்டாவை பிடித்துக் கொண்டு சுற்றி வரும் விக்கியையே பார்த்து பழகி இருந்தவளுக்கு இப்போதாவதுக் கொஞ்சமேனும் அவனிடம் குழந்தை தனம் மீள்வதைக் கண்டே குழந்தையைத் தடுக்க நினைக்காமல் விக்கியிடமே கொடுத்து விட்டாள் கார்த்திகா.

அதை எல்லாம் எண்ணி கொண்டிருந்தவளின் முகத்தில் ஒரு கசப்பான புன்னகை வந்தது. அதே நேரம் அவளின் முகத்தைப் பற்றி “ம்மா.. ம்மா..” எனத் தன்னை நோக்கி திருப்பினான் விக்கி.

அதில் தன் கவனத்தை அவன் பக்கம் திருப்பினாள் கார்த்திகா. விக்கி தன் கையில் இருந்த சின்னக் கடிகாரத்தைக் காண்பித்து “தைம்.. தைம்..” என்று ஏதோ சொல்ல முயன்று பின் திரும்பி அவள் முகத்தைப் பார்த்து தடுமாற..

“டைம்மாடா கண்ணா..? அது ஓடாதுடா தங்கம்.. இப்போ மணி ஆறரை இருக்கும்..” என்று அதை வாங்கிப் பார்த்தவள், “இது பழசுடா.. பெரிய தாத்தாவோடது.. அவர் ஆசையா வெச்சு இருந்தார்..” எனக் கலை வேலைப்பாடுகளோடு கூடிய அந்தக் கையடக்கக் கடிகாரத்தைத் தன் விரல் கொண்டு வருடியவாறே குமாரசுவாமியின் நினைவில் கூறினாள் கார்த்திகா..

குமாரசுவாமி இதையெல்லாம் எவ்வளவு பொக்கிஷம் போல் பத்திரமாகப் பாதுகாத்தார் என்பது நினைவுக்கு வந்தது. இரண்டு நாட்களுக்கு முன் அந்த அறையைச் சுத்தம் செய்ய கார்த்திகா சென்ற போது உடன் சென்ற விக்கி அங்கிருந்து நான்கைந்து பொருட்களை விளையாடுவதற்காக எடுத்து வந்திருந்தான்.

அழகாகத் தன்னருகில் அமர்ந்து விளையாடும் மகனையே அவன் தலையைச் செல்லமாகக் கோதியவாறு கார்த்திகா விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்க.. வெளியே அழைப்பு மணி அழைக்கும் ஒலி கேட்டது.

அதில் யோசனையோடு நிமிர்ந்தவள், ‘இங்கே இந்த நேரத்தில் யார்..? பால்காரம்மா கூடப் பத்து மணிக்கு தானே வருவாங்க..?” என்ற யோசனையோடே எழுந்து சென்று சிறு தயக்கத்தோடே கதவை திறந்தவள், அங்கு வாயிற்படியில் கோணல் சிரிப்போடு சாய்ந்து நின்றிருந்த யுகேந்திரனை கண்டு திகைத்து விழித்தாள் கார்த்திகா.

யுகேந்திரனை இங்குத் துளியும் எதிர்பார்த்திராதவள், திகைப்பும் அதிர்வுமாக அப்படியே அசையாமல் நின்றிருக்க.. அவளை அதே கோணல் சிரிப்போடு பார்த்தப்படியே “இங்கே வந்து ஒளிஞ்சுகிட்டா உன்னைக் கண்டுப்பிடிக்க முடியாதுன்னு நினைச்சுட்டியா..?” என்றவாறே அசையாமல் நின்றிருந்தவளை அலட்சியமாக ஒதுக்கி விட்டு உள்ளே நுழைந்தான் யுகேந்திரன்.

அவனை இங்குக் கண்டதும் உண்டான பதட்டத்தோடு செய்வதறியாது நின்றிருந்த கார்த்திகா என்ற சிலைக்கு, உள்ளே நுழைந்தவனைக் கண்டு பயந்து ஓடி வந்து விக்கி தன் காலை கட்டிக் கொண்டே பின்பே உயிர் வந்தது.

அதில் இருவரையும் கேலியான ஒரு பார்வை பார்த்தவன், “என்கிட்டே இருந்து உன்னால் தப்பிக்கவே முடியாதுன்னு உனக்கு இன்னும் எத்தனை முறை சொன்னாலும் புரியாதா..?” என்றான் யுகேந்திரன்.

“நீங்.. நீங்க.. இங்.. இங்கே.. எப்.. எப்படி..?” என்பதற்குள் கார்த்திகாவின் நாக்கு மேல் அண்ணத்தில் சென்று ஒட்டிக் கொண்டது.. “ஓ.. வரமாட்டேன்னு வேற நினைச்சியா..?” என எகத்தாளமாகச் சிரித்தவன், பார்வையாலேயே அந்த இடத்தை ஒருமுறை சுற்றி வர.. கார்த்திகாவிற்குப் பயத்தில் உடலோடு சேர்த்து மனமும் தடதடக்கத் துவங்கியது.

“என்ன ஒண்ணு இங்கே வந்திருப்பேன்னு யோசிச்சு வர தான் கூட இரண்டு நாள் ஆகிருச்சு.. இல்லை எப்போவோ வந்திருப்பேன் அவ்வளவு தான்.. உன்னால் முடியாததை இன்னும் எத்தனை முறை முயற்சி செய்யப் போறியோ..? நீ எங்கே ஓடி ஒளிஞ்சாலும் தேடி வந்து தூக்குவேன்னு இன்னும் உனக்கு எத்தனை முறை தான்டி சொல்றது..” எனக் கேலியில் மெதுவாக ஆரம்பித்துக் கோபத்தில் கொஞ்சம் கொஞ்சமாகக் கடினமாகி கொண்டே செல்லும் குரலில் பேசிக் கொண்டே சென்றவன், இறுதியாகப் பேசி முடிக்கும் போது பளாரென கார்த்திகாவை அறைந்திருந்தான்.

எத்தனையோ முறை அவனிடம் இது போலப் பல அடி(இடி)களை வாங்கிப் பழகியவள் தான் என்றாலும் இப்போதிருந்த அதிர்வான மனநிலையில் எதிர்பாராத அந்த அடியில் அப்படியே சுருண்டு சற்று தள்ளிப் போய்க் கார்த்திகா விழ.. அவளின் காலை கட்டிக் கொண்டிருந்த விக்கியும் அவளோடு சேர்ந்து விழுந்தான்.

***************
விலை ₹40

உங்களுக்கு அருகில் உள்ள கடைகளில் கிடைக்கும்..

விருப்பம் உள்ளவர்கள் வாங்கி படித்து மகிழுங்கள்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்

மீண்டும் ஒரு சந்தோசமான செய்தியோடு உங்களை பார்க்க வந்து இருக்கேன்😍😍

"யானும் நீயும் எவ்வழியறிதும்..!! 1&2

நம்ம ஆனந்த் - ஆரா இப்போ புத்தகமா வர போறாங்க❤️❤️

ஜூலை 15ம் தேதி முதல் புத்தகம் விற்பனைக்கு வரும்..

இன்று முதல் புத்தக ஆர்டர் எடுக்கப்படும்..
(7-7-2023 முதல் 14-7-2023 வரை) கொடுப்பவர்களுக்கு 20% தள்ளுபடி உண்டு..

முதல் பாகம் ₹435
இரண்டாம் பாகம் ₹440

கவி சந்திரா பதிப்பகம்
+91 99623 18439

விருப்பம் உள்ளவர்கள் வாங்கி படித்து மகிழுங்கள் ❤️❤️

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்

பிளான் பி (Plan B )

கதையை இனி அமேசானிலும் படிக்கலாம்.. வித்தியாசமான ஒரு குட்டி முயற்சி..

நம் அனைவரின் வாழ்விலும் எப்போதாவது ஒரு முறையேனும் இப்படி யோசித்து இருப்போம்..

ச்சே.. அன்று அப்படி செய்யாமல் இருந்திருந்தா இன்று இப்படி ஒரு பிரச்சனை நமக்கு வந்தே இருக்காது என்ற எண்ணமும் எனக்கு மட்டும் ஒரு வாய்ப்பு கிடைச்சா அன்று அப்படி நடந்ததை மாற்றி இருப்பேனே என்ற ஏக்கமும் இருக்கும்..

எதிர் பாரா சூழ்நிலையில் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும் என்பதை இந்தக் கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்..


படித்து விட்டு உங்கள் கருத்துக்களை அங்கேயே என்னோடு பகிர்ந்து கொள்ளுங்க..

நிறைய பேர் நீங்க போடும் கமெண்ட் அங்கே வரலைன்னு ss கொடுத்து பீல் செஞ்சு இருந்தீங்க.. உங்க கமெண்ட் அங்கே பப்ளிஷ் ஆகணும்னா கமெண்ட் முழுக்க தமிழிலோ இல்லை ஆங்கிலத்திலோ தான் இருக்க வேண்டும்.. இல்லைனா ரேட்டிங் மட்டுமே காண்பிக்கும்..

இப்போதைக்கு இந்த கதை ப்ரீ இல்லை..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்

என் பிறந்தநாள் ட்ரீட் கேட்ட செல்லங்கள் அனைவருக்கும் இதோ ஒரு சர்ப்ரைஸ்❤️❤️

"உயிரென உனை சேர வா..!!"

இதுவரை எங்கும் பதிவிடாத புத்தம் புது கதை ❤️❤️

நேரடி அமேசான் அப்லோட் 😍😍



படித்துவிட்டு உங்கள் மேலான கருத்துக்களை அங்கேயே என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..

உங்கள் கருத்துக்களை கேட்க ஆவலோடு காத்திருக்கிறேன்❤️❤️

ஒரு சிலர் அவர்கள் போடும் ரிவ்யூ அங்கு வருவது இல்லை என கவலைப்படுகிறீர்கள்.. பதிவிடப்படும் ரிவ்யூ ஒன்று முழுக்க தமிழிலோ இல்லை முழுக்க ஆங்கிலத்திலோ இருக்க வேண்டும்... இல்லையென்றால் உங்களின் ரேட்டிங் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் ரிவ்யூ அங்கு வராது..

இப்போதைக்கு இந்த கதை ஃப்ரீ இல்லை..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்


முதலில் உங்களிடம் இந்த தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.. என் உடல்நிலையின் காரணமாகவே இந்த தாமதம்.. எனக்கான நேரம் கொடுத்து பொறுமையாக காத்திருந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்❤️❤️


"உயிரென உனை சேரவா..!! கதையின் இரண்டாம் பாகம் பதிந்து விட்டேன்..


படித்து விட்டு உங்கள் ரேட்டிங் மற்றும் ரிவியூவை அங்கேயே பதிவிடுங்கள்..


சென்ற முறை போல் ஒரு சிலருக்கு லிங்க் வேலை செய்யாமல் போனால் 24 மணி நேரத்துக்கு பிறகு முயற்சி செய்யுங்க.. அமேசானின் புது அப்டேட் சிலருக்கு இப்படி உள்ளது..


இரண்டாம் பாகம் லிங்க்👇🏻












முதல் பாகம் லிங்க் 👇🏻












இப்போதைக்கு இந்த கதை ப்ரீ இல்லை..


சென்ற முறை முதல் பாகத்திற்கு நீங்கள் கொடுத்த அன்பிற்கும் ஆதரவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் 😍😍


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
Status
Not open for further replies.
Top