All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் புத்தகங்கள் மற்றும் அமேசான்

Status
Not open for further replies.

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
29254

29255
ஹாய் டியர்ஸ்

மீண்டும் ஒரு சந்தோஷமான விஷயத்தோடு உங்களை சந்திக்க வந்திருக்கேன்🤩🤩

"உன்னை அமுதவிஷமென்பதா..!!" இரண்டு பாக நாவல் என் 13வது புத்தகமாக வெளிவருகிறது... தொடர்ந்து வாய்ப்பாளித்து வழி நடத்தும் Srikala Tamil Novels ஸ்ரீ அக்காவிற்கும் என் புத்தகங்களை வெளியிடும் ஸ்ரீகலா பதிப்பகத்தாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்❤️❤️🙏🙏

நம்ம டீமன் ஷௌர்யாவையும் அவன் போண்டா டீயையும் யாரும் மறந்து இருக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன்.. அப்படி மறந்து போய் இருந்தா ஞாபகபடுத்த இதோ ஒரு சின்ன டீ❤️❤️

***********

அம்ரு நிமிர்ந்து திகைப்போடு ஷௌர்யாவின் முகத்தைப் பார்த்தவாறு நின்றிருப்பது பின்னால் இருந்து பார்க்கும் போது அவருக்கு வேறு கோணத்தில் தெரிய.. “ச்சீ..ச்சீ.. கருமம்.. கருமம்.. இதென்ன வீடா இல்ல வேற ஏதாவதா..?!” என்று பெருங்குரல் எடுத்து கத்தினார்.

அதில் ஷௌர்யா புருவத்தை உயர்த்தியவாறே கழுத்தை மட்டும் திருப்பிப் பார்த்திருக்க.. அவரைப் பற்றி நன்கு அறிந்த அம்ருவோ அந்தக் குரலிலும் வார்த்தையிலும் முகமெங்கும் கலவரமாகத் தலையைச் சாய்த்து பார்த்தாள்.

அவர்கள் இருவரையும் முகம் சுழித்து ஒரு பார்வை பார்த்தவர், வீட்டை சுற்றி பார்வையைச் சுழல விட்டவாறே “வீட்டுல ஒருத்தரும் இல்லைன்னு இவனைக் கூட்டி வெச்சு கூத்தடிக்கறீயா..?! அப்போவே சொன்னேன், இந்த சி***யை நம்பாதேடான்னு கேட்டானா..” என்று ஆத்திரத்தோடு கத்தியவரை அதற்குக் கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத முகபாவனையோடு திரும்பி நின்று பார்த்தான் ஷௌர்யா.

அதே நேரம் செல்வியின் குரல் கேட்டு அனைவரும் வெளியில் வரவும், இடைவிடாமல் அம்ருவை திட்டி தீர்த்துக் கொண்டிருந்த தன் தாயை கண்டு அவசரமாக அவரை நெருங்கிய முகுந்த், “ம்மா... நீ எங்கே இங்கே..? மொதல்ல உள்ளே வா..” என்று கையைப் பற்றி இழுத்தான்.

அவரோ முகுந்த்தின் கையை ஆத்திரத்தோடு உதறி விட்டு, “ஏன்.. வராமலே அப்படியே இருந்துடுவேன்னு நினைச்சு தான் இந்தக் கூத்தெல்லாம் இங்கே நடக்குதா.. இங்கே இத்தனை பேர் இருக்கும் போதே இவ இப்படி.. ச்சீ.. ச்சீ.. அப்போவே இவளை பத்தி சொன்னேனே கேட்டீயா, இப்போ பாரு..” என்று ஆங்காரத்தோடு பேசியவரை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் திகைத்துப் போய்த் திருதிருத்தான் முகுந்த்.

அங்கிருந்த அனைவருக்குமே இப்படி எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத சூழலில் அவரைக் கண்ட அதிர்வு ஒரு பக்கமென்றால் அவர் பேசி கொண்டிருக்கும் பேச்சு மறு பக்கம் திகைப்பில் நிற்க செய்திருந்தது.

ஏற்கனவே அம்ருவின் மேல் அவருக்கு இருந்த கோபமும், அதன் பிறகு அவரின் பேச்சை கேட்காமல் முகுந்த் திருமண முடிவெடுத்து நடந்த நிகழ்வுகளும் இது அத்தனைக்கும் காரணமான அம்ருவின் மேல் மொத்தமாகத் திரும்பி அவளை ஜென்ம விரோதியாகப் பார்த்து அவர் விட்டிருந்த வார்த்தைகள் தான் முகுந்த் அவரோடு பேசுவதை நிறுத்த காரணம் என்று அறிந்திருந்தவர்கள் இப்போது என்ன செய்வது என்று புரியா நிலையில் தான் இருந்தனர்.

ஆனால் இந்தக் கவலைகள் எல்லாம் அவருக்கு இல்லாமல் போக.. “எப்படி எப்படி இருந்த பிள்ளை டா நீ.. நான் சொன்ன சொல்லுக்கு மறுவார்த்தை பேசாம இருந்தீயே டா.. என்னைக்கு இந்த மேனாமினுக்கியை பார்த்தீயோ அப்போ பிடிச்சுது நமக்குச் சனி.. எத்தனை முறை படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டு இருந்தா.. இப்படி ஒண்ணுத்துக்கும் இல்லாதவளை கட்டி கூடவே சீதனமா அவ அண்ணனையும் சேர்த்து வெச்சு சோறு போடற தலையெழுத்து உனக்கு ஏன் வர போகுது..” என்று அவர் தடையேதுமில்லாமல் வசைபாடிக் கொண்டிருக்க..
அங்கிருந்தவர்களையும் செல்வியையும் ஒரு சுவாரசியமான கேலியோடு பார்த்த ஷௌர்யா, வாகாகத் தனக்குப் பின்னால் இருந்த இருக்கையில் சாய்தமர்ந்து வேடிக்கை பார்க்கும் விதமாகக் கால் மேல் கால் போட்டுக் கொண்டான்.

அதே நேரம் சூர்யாவின் தோளில் உறங்கி கொண்டிருந்த அஜ்ஜூ, இந்தச் சத்தத்தில் தூக்கம் கலைந்து எழுந்தவன், சற்றுத் தொலைவில் நின்றிருந்த முகுந்த்தை கண்டு “ப்பாஆஆஆ..” என்று அவனிடம் செல்ல வேண்டும் என்று கையை நீட்டவும், சூர்யா இப்போது இருக்கும் சூழ்நிலையால் அவனை வேறு பேசி சமாளிக்க முயன்றான்.

ஆனால் இது செல்வியின் காதில் சரியாக விழுந்ததில் “என்னது... அப்பாவா.. யாரு பிள்ளைக்கு யாரு அப்பா..? இன்னொரு முறை சொல்லட்டுமே வாயை உடைச்சிடுவேன்.. இதோ கல்யாணம் ஆகி ஒரு வருஷமாகப் போகுது உனக்குன்னு ஒரு பிள்ளை இருந்து இருந்தா, இப்படி எவன் பெத்ததோ உன்னை அப்படிக் கூப்பிடுமா.. நீ தான் ஏமாளி, அவளை அப்படியே நம்பின..” என்று பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்தார் அவர்.

“ம்மாஆஆ.. இப்போ எதுக்கு அதெல்லாம், முதலில் உள்ளே வா.. எல்லாம் நடக்கும் போது நடக்கும்..” என்று அனைவரையும் சங்கடமாகப் பார்த்துக் கொண்டே உள்ளே அழைத்து இல்லையில்லை இழுத்து செல்ல முயன்று கொண்டிருந்தான் முகுந்த்.

ஆனால் “அட கூறுகெட்டவனே.. இன்னுமா நீ அவளை நம்பற.. அதுகெல்லாம் வாய்ப்பே இல்லைன்னு தான் படிச்சு படிச்சு சொன்னேனே.. இப்படியே இவளை நம்பி நீ ஏமாறு.. உனக்குன்னு ஒரு புள்ள வந்து உன்னை அப்பான்னு கூப்பிடாது, இதோ இப்படி ஏதாவது கூப்பிட்டாதான் உண்டு..” என்று கடந்த சில வருடங்களாக அம்ருவின் மேலும் இந்த இறுதி ஒரு வருடமாக முகுந்த்தின் மேலும் சேர்த்து வைத்திருந்த ஆத்திரத்தில் வந்திறங்கி இருந்தவருக்கு அதற்கேற்ற சூழ்நிலையும் அமைய.. அசையாமல் நின்று கொண்டு வசை மழை பாடிக் கொண்டிருந்தார் செல்வி.

அதுவரை இழுத்து பிடித்த பொறுமையோடு செல்வியைச் சமாளிக்க முயன்று கொண்டிருந்த முகுந்த் அங்குச் சொகுசாக அமர்ந்திருந்த ஷௌர்யாவின் முன் தன் தனிப்பட்ட வாழ்க்கை அலசி ஆராயப்படுவதை விரும்பாமல், “சரி அப்படியே இருக்கட்டுமே.. அது பத்தி நான் தானே கவலைப்படணும்.. எல்லாம் தெரிஞ்சு தானே கல்யாணம் செஞ்சேன்.. இதுல உங்களுக்கு என்ன பிரச்சனை.. கடைசி வரை நாங்க இப்படியே இருந்துக்கறோம் நீங்க இதில் தலையிடாதீங்க..” என்று கோபத்தில் கத்தினான்.

“எது நான் தலையிட கூடாதா..?! நான் கேக்காம வேற யாரு கேப்பா.. உனக்குப் பொறக்க போறது தான் டா நம்ம குடும்ப வாரிசு.. இப்படி எவனுக்குப் பொறந்தது எல்லாம் வாரிசாகிட முடியுமா என்ன..?!” என்று குதித்தவர்,
“இதுகெல்லாம் முழுக் காரணமும் இதோ இங்கே நிக்கறாளே இவ தான்.. இவ தான் எவனோ பசை இருக்கறவனைத் தேடி போனாளே அப்போவாவது நீ என் பேச்சை கேட்டு உஷாராகி இருந்தா இன்னைக்கு நமக்கு ஏன் இந்த நிலைமை.. இவ பணத்துக்காகப் பல்லை இளிக்க.. அவனோ வந்த வரைக்கும் லாபம்னு தொட்டுட்டு தூக்கி போட்டுட்டான்.. வயித்துல புள்ளையோட மறுபடி போக்கிடம் இல்லாம திரும்பி வந்து நீலி கண்ணீர் விட்டு இவ சொன்ன கதையைக் கேட்டு நீ அப்படியே உருகிட்ட.. இந்த மேனாமினுக்கியும் வந்த வரைக்கும் லாபம்னு உன் கூட ஒட்டிகிட்டா.. இப்போ பாரு இங்கே இன்னொருத்தனை பிடிச்சுட்டா.. ச்சீ.. நல்ல குடும்பத்துல பொறந்தவளா இருந்தா இந்நேரம் நாண்டுகிட்டு இருப்பா.. ஆனா இவ சொந்த லாபத்துக்காகத் தெரிஞ்சே நம்ம குலத்தை அழிச்சு இப்படி வாரிசு இல்லாம செஞ்சுட்டாளே..” என்று அம்ருவையும் அவளோடு நெருக்கமாக நின்றிருந்தவன் அவளுக்கு யார் என்று தெரியாமலும் வசைபாடிக் கொண்டிருந்தவரை கண்டு கோபத்தோடு “அம்மா.. என்ன பேசறீங்க..?” எனக் குரல் எழுப்பினான் சூர்யா.

“யாருக்கு யார் அம்மா.. இந்தப் போலி சொந்தம் கொண்டாடறதை எல்லாம் என் புள்ளையோட நிறுத்திக்கங்க.. அவன் தான் ஏமாளி.. நான் இல்லை.. அம்மாவாம் இல்லை அம்மா.. என்னைக்கு உங்க குடும்பம் இவன் வாழ்க்கையில் நுழைஞ்சுதோ அன்னைக்கே எங்க குடும்பம் நாசமா போச்சு.. இதுல இவருக்கு ரோஷம் வேற வருதாம்.. ரோஷம்..” என்று தோளில் முகத்தை இடித்துக் கொண்டார்.

“ம்மா.. இதோ இதுக்குத் தான் உங்க மேலே எனக்குக் கோபம்.. அதான் உங்க கூடப் பேசலை.. இப்போ நீங்களா தேடி வந்து ஏன் மா இப்படிப் பேசறீங்க..” என்று கிட்டத்தட்ட கெஞ்சும் குரலில் கேட்டவனுக்கு செல்வியை எப்படிச் சமாளிப்பது என்றே தெரியவில்லை.

அவன் பார்த்து வளர்ந்த செல்வி இப்படி இல்லை.. சிறு வயதில் மகனுக்காக மற்றவர்களோடு சண்டையிடும் தாயாகத் தெரிந்தவர் இன்று அதையே செய்யும் போது வில்லியாகத் தெரிந்தார். மாற்றம் அவரிடத்தில் இல்லை மகனின் மேல் கொண்ட அதீத பாசமும் தன் கைக்குள் மகன் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அது பொய்த்து போனதை தாங்க முடியாத ஏமாற்றமும் அதற்கு எங்கிருந்தோ வந்தவள் காரணமாகி போனாளே என்ற ஆத்திரமும் அவளை விடத் தான் முக்கியமற்றவள் ஆகி போனோமா என்ற கோபமும் தான் அவரை இப்படி மாற்றி இருந்தது.

அதுவும் கடந்து போன மூன்று வருடங்களில் இவர்களின் வாழ்வில் நடந்த அத்தனை பெரிய பிரச்சனைகளுக்கும் தெரிந்தோ தெரியாமலோ ஒருவகையில் அம்ருவே காரணமாகி போனதால் அவளின் மேல் அபரிமிதமான கோபத்தைத் தனக்குள்ளேயே வளர்த்துக் கொண்டே இருந்தவர் இன்று வாய்ப்பு கிடைக்கவும் கொட்டி கவிழ்த்து விட்டார்.

“இப்போ என்ன டா சொல்றே.. ஆமா நானா தான் தேடி வந்தேன்.. உனக்குத் தான் பெத்த பாசம் இல்லை.. எனக்கும் பிள்ளை பாசம் இல்லாம போயிடுமா என்ன..? அதான் வந்தேன்.. ஆனா இங்கே நாங்க எல்லாம் வேணாம்னு ஒதுக்கி வெச்சுட்டு நீ இவங்க கூட இருக்கறதை பார்த்தா வயிறு எரியுதே டா.. எப்படி வாழ வேண்டியவன் நீ.. உன்னை இப்படி ஒன்னும் இல்லதவனாக்கி வெச்சுட்டாளே..” என்று கோபத்தில் தொடங்கி அழுகையில் முடித்தார்.

அவர் கோபமாகப் பேசியதை கூடப் பொறுத்துக் கொண்டவனால் இந்த அழுகையைக் காண முடியாமல் போக அவரின் கையைப் பற்றிக் கொண்ட முகுந்த், “எனக்கு உன் மேலே பாசம் இல்லையா மா.. எங்கே என்னைப் பார்த்து சொல்லு..?” என்றான்.

“நான் எப்போ அப்படிச் சொன்னேன்.. இப்போ மறந்துட்டேன்னு தானே சொன்னேன்..” என்றார் அவர். “அதுக்குக் காரணம் நீங்க தான் மா.. யோசிக்காம ஏதேதோ பேசிடறீங்க.. அம்ரு பாவம் மா, அவளைப் போய்..” என்று விளக்கி புரிய வைக்க முயன்றவனை உதறிக் கொண்டு விலகியவர், “அதானே பார்த்தேன்.. இப்போ கூட நான் இவளை எதுவும் சொல்லிட கூடாதுன்னு தான் உன் கவலை இல்லை..?!” என்றார் ஆத்திரத்தோடு.

அதே வேகத்தில் அம்ருவை நெருங்கியவர், முன்பே ஒரு புயலுக்கு இரண்டாக ஒரே நேரத்தில் சுழன்று அடிக்கத் துவங்கியதில் ஓய்ந்து போய் நின்றிருந்தவளை பார்த்து, “அப்படி என்ன சொக்கு பொடி டி என் புள்ளைக்குப் போட்டே.. உன்னை ஒரு வார்த்தை சொல்ல கூட விட மாட்டேங்கிறான்.. இப்படி என் குடியை கெடுத்து நீ வயிறு வளர்க்கறதுக்குப் பதில் உன் பிள்ளையைப் பிச்சை எடுக்க விட்டு நீ வேற தொழில் பார்க்க..” என்று வன்மத்தோடு அவர் வார்த்தைகளைக் கொட்டி கொண்டிருக்க “ஷட் அப்ப்ப்ப்..” என்று ஆவேசமாக இடையிட்டு இருந்தது ஷௌர்யாவின் குரல்.

தனக்கு முன்பிருந்த சிறு மேசையைக் காலால் உதைத்துக் கொண்டு அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து உக்கிரமாக அவன் பேசிய அந்த அழுத்தமான குரலிலும் ஓங்கி ஒலித்த பாங்கிலும் செல்வியே ஸ்தம்பித்து நிற்க.. மற்றவர்களோ செல்வியின் வார்த்தைகளில் அதிர்ந்து போய் அசைவற்று நின்று இருந்தனர்.

அம்ருவிற்கும் செல்விக்கும் இருந்த இடைவெளியில் வந்து நின்றவன், “இதுக்கு மேலே ஒரு.. ஒரே ஒரு வார்த்தை வந்தது..” என்று பல்லை கடித்துக் கொண்டு விரல் நீட்டி எச்சரிக்கவும், அதுவரை ஒருவித திடுக்கிடலில் நின்றிருந்த செல்வி தன் பிள்ளையும் தனக்குத் துணைக்கு வராமல் அப்படியே நிற்பதை கண்டு எழுந்த ஆத்திரத்தோடு “ஏன் பேச கூடாது..? அப்படித் தான் பேசுவேன்..” என்றார் வீம்பாக.

“தைரியம் இருந்தா பேசி பாரு..!!” என்று ஷௌர்யாவும் பதிலுக்கு முறைக்க.. “அதென்னவோ இவளை பத்தி பேசினா மட்டும் அப்படியே ஊருல இருக்க ஆம்பளைங்க எல்லாம்..” என்று பின் விளைவு புரியாமல் செல்வி குரல் எழுப்பிய அடுத்த நொடி ‘பளார்’ என்ற சத்தம் கேட்டு இருக்க.. முகுந்த் கீழே விழுந்து கிடந்தான்.

இதைக் கண்டு அதிர்ந்து “ஐயோ என் புள்ளை..” எனப் பதறி செல்வி முகுந்த்தை நெருங்க முயல, “ஒரு.. ஒரு அடி எடுத்து வெச்சே.. அப்படியே மிதிச்சே கொன்னுடுவேன்..” என்று தன் காலடியில் கிடந்த முகுந்த்தின் கழுத்துக்கு நேராக இடது காலை ஷௌர்யா தூக்கவும், “வேணாம்.. வேணாம்..” என்று பதறினார் செல்வி.
“இது உனக்கு விழ வேண்டிய அடி.. ஆனா ஒரு பொம்பளை மேலே கை வெச்சு எனக்குப் பழக்கம் இல்லை.. அதான்.. ஆனா இவ்வளவு நேரம் உன்னைப் பேச விட்டதுக்கே இவனை..” என்று மீண்டும் மிதிக்க முயல, “ஐயையோ.. என் புள்ளையை யாராவது காப்பாத்துங்களேன்..” என்று சுற்றி இருந்தவர்களைப் பார்த்துக் கதறினார் செல்வி.

“இப்போ மட்டும் இவங்க துணை எல்லாம் வேணுமோ..!!” என்று நக்கல் செய்தவன், “உன் பிள்ளைனா மட்டும் வலிக்குது.. என் பிள்ளையைப் பத்தி வாய்க்கு வந்ததைப் பேசுவீயோ.. எங்கே இனி ஒரு வார்த்தை பேசி பாரு.. கொல்லி போட உனக்குப் பிள்ளை இல்லாம செஞ்சுடுவேன்.. இவ்வளவு நேரம் உன் பிள்ளையையும் அவனைக் கட்டிகிட்ட பாவத்துக்கு உன் மருமகளையும் பேசறேன்னு சும்மா இருந்தா..” என்றவன் ஷௌர்யாவின் இந்தத் திடீர் தாக்குதலை எதிர்பாராமல் அவன் காலடியில் நாற்காலிக்கு நடுவே விழுந்து எழுந்து கொள்ள முடியாமல் கிடந்த முகுந்த்தையும், சற்றுத் தொலைவில் கண்ணீரோடு செய்வதறியாது கைகளைப் பிசைந்து கொண்டு தன் அண்ணன் சிவா அருகில் நின்று இருந்த வருவையும் ஒரு பார்வை பார்த்தவன், “கூட்டிட்டு போ..” என்று வருவிடம் முகுந்த்தை சுட்டி காண்பித்துக் கூறவும், அதற்காகவே காத்திருந்தது போல் ஓடி வந்து முகுந்த்தை தூக்கினாள் அவன் மனைவி வரு.

“ஹவ் டேர் யூ.. உன் இஷ்டத்துக்கு ஓவரா பேசற.. அது எப்படி எப்படி.. என்னென்ன பேசின..! இன்னும் ஒரு முறை தைரியம் இருந்தா இந்த ஷௌர்ய வர்மன் பொண்டாட்டியையும் பிள்ளையையும் பேசி பாரேன்..” என்று முகுந்த் அந்தப் பக்கம் நகர்ந்ததும் சொடகிட்டு மிரட்டவும், செல்வி பயத்தில் எச்சில் கூட்டி விழுங்கினார்.

“முதல் முறை என் பையன் வாயை உடைப்பேன்னு சொன்னதுக்கே உன் வாயை உடைச்சு இருக்கணும்.. ஆனா நான் இருக்க அப்பான்னு எவனையோ கூப்பிட்டது அவன் தப்புன்னு தான் சும்மா இருந்தேன்.. ஆனா அதுக்குள்ளே..” என்று ஷௌர்யா பார்த்த பார்வையில் நிஜமாகவே செல்விக்கு நடுக்கம் வர தொடங்கியது.

“நீ இவ்வளவு நேரம் பேசினீயே பணம்.. சொத்து அதுக்காக ஏமாத்தினாங்க எக்ஸ்டிரா.. அது எல்லாமே செஞ்சது நீ.. அதுவும் உன் சொந்த அண்ணன்னு கூடப் பார்க்காம.. உன் அண்ணன் பொண்ணையே அவ்வளவு அசிங்கபடுத்தின நீ.. என் பிள்ளையைப் பத்தி பேசறீயா.. அவன் சொத்து மதிப்பு தெரியுமா உனக்கு.. இன்னொரு வார்த்தை உன் வாயில் இருந்து வந்தது, அடுத்த வேளை சாப்பாட்டுக்கு உன்னைக் குடும்பத்தோட பிச்சை எடுக்க வெச்சுடுவேன் ஜாக்கிரதை..” என்று எச்சரித்தவன், அதே வேகத்தில் அம்ருவின் பக்கம் திரும்பி “பிள்ளையை வாங்கிட்டு போய் வண்டியில் ஏறு..” என்றான் கட்டளை குரலில்.

அதை மறுக்கவோ எதிர்க்கவோ அங்கிருக்கும் யாருக்குமே தோன்றவில்லை. அப்படியே அம்ரு திகைப்பில் அசைவற்று நின்று இருக்க.. பொறுமையற்று ஷௌர்யா திரும்பி பார்த்த ஒரு பார்வை அவளைத் தானாக ஷௌர்யா சொன்னதைச் செய்ய வைத்தது.

**********

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
29432
ஹாய் டியர்ஸ்

"உன்னை அமுதவிஷமென்பதா..!!" கதை இரண்டு பாகங்களாக வெளி வந்துள்ளது❤️❤️

டீமன் ஷௌர்யாவையும் அவன் போண்டா டீ அம்ருவையும் மறந்து இருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்🤩🤩 அவர்களை புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கில் சென்று வாங்கலாம்❤️❤️

உன்னை அமுதவிஷமென்பதா 1&2 விலை - ₹670 (30% தள்ளுபடி)
சலுகை விலை - ₹470


வெளிவந்துள்ள அத்தனை புத்தகங்களையும் மொத்தமாக வாங்க விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கில் சென்று வாங்கலாம்.. மே 2 முதல் மே 15க்குள் மொத்தமாக 12 புத்தகங்களையும் சேர்த்து ஆர்டர் செய்பவர்களுக்கு கொரியர் சார்ஜ் இலவசம்❤️❤️

12 புத்தகங்களின் விலை - ₹4610 (30% தள்ளுபடி)
சலுகை விலை - ₹3240

**********
இப்போ அம்ரு - ஷௌர்யா ஒரு குட்டி டீ

அம்ருவோடு பேசிக் கொண்டிருந்த ஷியாமுக்கு ஷௌர்யாவிடமிருந்து அழைப்பு வரவும் அவன் கிளம்பி விட்டான். அதன் பின் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் அவளின் மனதில் இதே கேள்வியே ஓடிக் கொண்டிருந்தது.

ஏதோ ஒரு விஷயத்திற்காக தன்னை தண்டிக்க நினைக்கிறான் என்று தெளிவாக அன்றே புரிந்து கொண்டவளுக்கு அது எதற்காக என்ற கேள்வியே இன்று வரை பெரிதாக இருந்தது. அனுபவிக்கும் தண்டனையை விட பெரிய வலி அதை நாம் எதற்காக அனுபவிக்கிறோம் என்று தெரியாமல் அனுபவிக்க நேர்வதே.. அதை தான் இந்த சில நாட்களாக அம்ரு அனுபவித்து கொண்டிருக்கிறாள்.

அதே மனநிலையிலேயே அனைத்து வேலைகளையும் செய்து முடித்தவள், தனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குள் முடங்கிக் கொண்டாள். இங்கு ஷௌர்யாவை பார்ப்பதற்காக சூர்யாவும் முகுந்தும் வீட்டின் வெளியே வெகு நேரமாக காத்திருந்தனர்.

திடீரென சூர்யா சொன்னதால் இங்கு வந்து விட்ட முகுந்துக்கு இது யார் வீடு என்று கூட தெரியவில்லை. “நாம இங்கே எதுக்கு யாரை பார்க்க வந்து இருக்கோம் மச்சான்..?” என்றவனை திரும்பி பார்த்தவன், “மிஸ்டர் ஷௌர்ய வர்மன் வீடு இது.. இவர் ஒரு பிக் ஷாட், இவர் மூலமா போனா நம்ம வேலை கொஞ்சம் ஈசியா நடக்கும்.. இப்போ போல தட்டி கழிக்க மாட்டாங்க.. அதான் ஹெல்ப் கேட்டு வந்து இருக்கோம்..” என்றான் சிறு தயக்கத்தோடான குரலில்.

“ஓ.. இவரை உனக்கு தெரியும்னு நீ சொல்லி இருந்தா, முன்னேயே வந்து பார்த்து இருக்கலாமே..” என்றவனுக்கு நாட்களை வீணடித்து விட்டோமே என்ற கவலை எழுந்தது.
“இல்ல முகுந்த், எனக்கு இவரை நேரிடையா தெரியாது.. இதுவரை சந்திச்சதும் இல்லை.. எனக்கு தெரிஞ்சவங்களுக்கு வேண்டியவரு.. அப்படித்தான் தெரியும்.. ஆனா இவரை பத்தி நிறைய கேள்விப்பட்டு இருக்கேன்.. அவ்வளவு சீக்கிரம் பார்த்துட முடியாது தான், இருந்தாலும் இதையும் முயற்சி செஞ்சு பார்த்துடுவோம்..” என்றான்.

“ஓஹோ பார்க்கறதே அவ்வளவு கஷ்டம்னா நாம உனக்கு வேண்டியவங்க மூலமா அப்பாயின்மெண்ட் வாங்கிட்டோ, இல்லை அவங்களையும் கூட்டிட்டோ வந்து இருக்கலாமே சூர்யா..” என்ற முகுந்துக்கு கிடைத்திருக்கும் இந்த அறிய வாய்ப்பை தவறவிட கொஞ்சமும் மனம் இல்லை.

“அது.. அது.. இப்போதைக்கு சரிபட்டு வராது முகுந்த்.. அதான் நானே பேசி பார்க்க நினைச்சேன்.. காத்திருந்து பார்ப்போமே..” என்று சூர்யா எதையோ சொல்லி சமாளிக்க முயன்று கொண்டிருந்த போது அங்கிருந்த பாடிகார்ட்டின் அலைபேசி வழியே இணைப்புக்கு வந்தான் பிரபு.

“யாரு நீங்க.. எதுக்காக அங்கே வந்து காத்து இருக்கீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா..?”

“வணக்கம்.. நாங்க ஷௌர்யா சாரை பார்க்கணும்..”

“அவர் ஒரு முக்கியமான மீட்டிங்ல இருக்காரே.. எப்போ அது முடியும்னு சொல்ல முடியாது.. என்ன விஷயமா பார்க்க வந்து இருக்கீங்க..”

“பர்சனல் ரீசன்”

“அப்பாயின்மெண்ட் இருக்கா..”
“இல்லை”

“நீங்க வருவீங்கன்னு சாருக்கு தெரியுமா..?!”

“தெரியாது..”

“அப்படி எல்லாம் அவரை உடனே பார்க்க முடியாதுங்க..”

“எனக்கும் தெரியும் சார்.. பட் இப்போ எங்க சிச்சுவேஷன் அப்படி இருக்கு..”

“அப்போ நீங்க ரொம்ப நேரம் காத்திருக்க வேண்டி இருக்கும்”

“பரவாயில்லை.. வெயிட் செய்யறோம்..” என்றதும் அழைப்பு கை மாறி இருந்தது. அடுத்து பிரபு பாடிகார்டிடம் என்ன சொன்னானோ இருவரையும் அங்கு லானில் போடபட்டிருந்த இருக்கையில் அமர வைத்து விட்டு அவன் விலகி சென்று விட்டான்.

வெளி வாயிலில் இருந்து லானில் போடப்பட்டு இருந்த நாற்காலிக்கு வரவே ஒருமணிநேரத்திற்கும் மேல் இவர்கள் காத்திருக்க வேண்டி இருந்ததால் முகுந்தின் மனம் தக்க முன் ஏற்பாட்டோடு வந்து இருந்தால் இந்த காத்திருப்புக்கு அவசியமே வந்து இருக்காது என்றே எண்ணியது.

இவர்களிடம் பேசி முடித்த பின் பிரபு ஷௌர்யாவுக்கு அழைக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லாமல் அனைத்தையும் கான் காலில் கேட்டுக் கொண்டு வீட்டிலிலுள்ள தன் அலுவலக அறை ஜன்னல் வழியே இவர்களையே பார்த்து கொண்டு கண்கள் வெறுப்பிலும் ஏளனத்திலும் ஜொலிக்க நின்றிருந்தான் ஷௌர்யா.

தன் அறையில் இருந்த ஜன்னலின் கீழே சுவரில் மடங்கி சரிந்து அமர்ந்திருந்த அம்ருவுக்கு தொடர் வேலைகளினாலும் ஒரே விஷயத்தை தொடர்ந்து யோசித்ததனாலும் உடலும் மனமும் மறுத்து போய் இருந்தது. இப்போது அவளுக்கு தேடலோ வலியோ யோசனைகளோ எதுவுமே இல்லை.
தேடினாலும் கிடைக்காது முயற்சித்தாலும் முடியாது என்றான பிறகு அதை செய்வதில் என்ன பயன் என்பது போல தான் இருந்தது அவளின் மனநிலை. அதற்காக இந்த வாழ்வை ஏற்றுக் கொண்டு வாழ தயாராகி விட்டாள் என்று அர்த்தம் இல்லை.

ஆனால் இது எதை நோக்கி போகிறது என்று அதன் போக்கில் போக தன்னை தாயார் செய்ய துவங்கிவிட்டாள். இன்று ஷியாமோடு பேசியதிலிருந்து அவள் புரிந்து கொண்டது ஒன்றே ஒன்று தான்.

தான் நினைத்ததை விட இந்த டீமன் மிக கொடியவன் என்பதே அது.
அவன் செய்கைக்கான காரணம் என்ன என்று உடன்பிறந்தவனுக்கே புரியாத ஒரு நிலை இருந்தும் அவனும் அதை சென்று உரிமையோடு கேட்க தயங்கி இவளிடமே அனைத்தையும் கேட்டு அறிய முயன்றதில் இருந்தே அவனிடம் நெருங்குவதோ விஷயத்தை வாங்குவதோ எளிதல்ல என்று தெளிவாகியது.

எனவே இனி இதையெல்லாம் யோசிப்பதில் பயனில்லை என்ற தெளிவான முடிவுக்கு வந்தவள், ஒருவேளை தனக்கென இங்கிருந்து வெளியேறும் ஒரு வாய்ப்பு அமைந்தால் அதை சரியாக பயன்படுத்தி கொள்ளும் தருணத்தை எதிர்நோக்கி காத்திருக்க தொடங்கினாள்.

அப்படியே பார்வையை திருப்பியவளின் கண்களில் எதிர் மேசையில் இருந்த அவளின் அலைபேசி படவும், இப்போது இருக்கும் இந்த சோர்வான மனநிலையை மாற்ற எண்ணி அதை எடுத்து உயிர்பித்தவள் அதில் இருக்கும் பாடல்களை ஒலிக்க செய்தாள்.

எப்போதும் நண்பர்கள் சூழ கலகலத்து கொண்டு இருப்பவளின் தனிமையில் துவண்டு இருக்கும் இன்றைய மனதிற்கு இந்த மெல்லிசை சற்று ஆறுதலை தந்தது. அப்படியே அதில் விழி மூடி லயித்து இருந்தவளின் உடல் தன்னை அறியாமலேயே இசைக்கு ஏற்ப மெல்ல அசைய தொடங்கியது.
அம்ருவுக்கு சிறு வயதில் இருந்தே நடனம் மிக பிடித்தமான ஒன்று.

சந்தோசம் துக்கம் எதுவாக இருந்தாலும் அந்த நேரத்து மூடுக்கு ஏற்றது போல சில பாடல்களை போட்டு ஆடுவாள்.

அதுவே அவளை பொறுத்தவரை அந்த நேரத்து மனதிற்கு ஒரு நிறைவை கொடுக்கும் ஒன்றாக இருக்கும். இன்றும் அது போல இத்தனை நாள் இருந்த குழப்பமும் தவிப்புமான மனநிலையை மாற்ற எண்ணியவள், அப்போது ஒலித்து கொண்டு இருந்த பாடலுக்கு பாதியில் எழுந்து ஆட துவங்கினாள்.

காடு இருண்டு விட கண்கள் சிவந்து விட
காதல் ராதை அலைந்தாள்
அவனை தேடி அவள் தன்னை தொலைத்து விட்டு
ஆசை நோயில் விழுந்தாள்

உதடு துடிக்கும் பேச்சு இல்லை
உயிரும் இருக்கும் மூச்சு இல்லை
வந்த பாதை நினைவு இல்லை
போகும் பாதை புரியவில்லை

என்று கால் தரையில் படாமல் மனதின் வேதனை மறக்க கூடவே பாடியவாறே சுழன்று ஆடிக் கொண்டு இருந்தாள் அம்ரு. ஏதோ தன்னிலையையே கூறுவது போல் இருந்த அந்த இறுதி வரிகளை பாடும் போது எவ்வளவோ தடுக்க முயன்றும் அவளையும் அறியாமல் ஒரு கேவல் வெளியே வர, இதழ் கடித்து அதை தனக்குள்ளேயே புதைக்க முயன்றவாறே ஆட்டத்தை நிறுத்தாமல் நிறுத்த தோன்றாமல் தன் வலிகளை மறக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு தொடர்ந்து ஆடி கொண்டிருந்தாள்.

உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால்
பேதை ராதை ஜீவன் கொள்வாள்
கண்ணா இங்கே வா வா
கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க..

என்று ஆடிக் கொண்டே அதுவரை மூடி இருந்த விழிகளை திறந்தவள், அப்போதே அறையின் வாயிற்கதவில் கைகளை கட்டி ஒற்றை காலை மடக்கி சாய்ந்து கொண்டு ஷௌர்யா நிற்பதை கண்டு அப்படியே அசையாமல் நின்றாள்.

‘ம்ம்... அழைப்பு எல்லாம் பலமா தான் இருக்கு, ஆனா நீ கூப்பிட்டவுடனே இங்கே உன் கண்ணனால் ஓடி வர முடியாது மை டியர் போண்டா டீ... பிகாஸ் இது இந்த கம்சனோட கோட்டை... நான் அனுமதித்தால் தான் இங்கே காத்து கூட உள்ளே நுழைய முடியும்...” என்றவன் திரும்பி செல்ல முயன்று பின் அப்படியே நின்றான்.

“உன் டான்ஸ் அவ்வளவு ஓர்த் இல்லைனாலும்... ரோட்டில் இப்படி ஆடினா இதைவிட குறைவா போட்டு எனக்கு பழக்கம் இல்ல..” என்று தன் பேண்ட் பாக்கெட்டில் கை விட்டு ஒரு கட்டு பணத்தை எடுத்து அம்ருவின் மேல் விட்டெறிந்தான்.

முகத்தில் வந்து மோதி சிதறிய பண கட்டை ஒரு முறை பார்வையை சுழற்றி பார்த்தவள், மீண்டும் வெடித்து கிளம்பிய அழுகையை தனக்குள்ளேயே புதைக்க முயன்று தோற்று, அப்படியே விழி நீர் வழிய மடங்கி அமர்ந்தாள்.

இங்கு வந்த பின்பு இப்படிபட்ட வார்த்தைகளும் அவமானங்களும் எதற்கென்றே தெரியாமல் அவளுக்கு அடிக்கடி கிடைத்து கொண்டு தான் இருக்கிறது என்றாலும் அதை ஏற்று கொள்ளவோ கடந்து செல்லவோ அவ்வளவு எளிதாக அவளால் முடியவில்லை.

ஒவ்வொரு முறையும் வலிக்க தான் செய்கிறது. ஆனால் எதிர்க்கவோ சண்டையிடவோ தான் முடியவில்லை, அதன் பலனே இந்த கண்ணீர்... ‘எப்பவும் சிரிச்சிட்டே எப்படி இருக்கே.. உனக்கு அழவே தெரியாதா..?’ என தன்னை சுற்றி இருந்தவர்கள் எல்லாம் கேட்டது நினைவு வந்து ‘ஒருவேளை இப்போது தேவைப்படும் என்று தான் அப்போ அழாம சேர்த்து வெச்சேன் போல..’ என்றே அவளுக்கு நினைக்க தோன்றியது.

அப்போது மீண்டும் அழுத்தமான காலடி ஓசை அவளை நெருங்கவும், கண்ணீரோடு விழி உயர்த்தினாள் அம்ரு. “நீ இப்படி உருகி உருகி கூப்பிடுவேன்னு தெரிஞ்சு தானோ என்னவோ நீ கூப்பிடறதுக்கு முன்னமே உன் கண்ணன் அந்த காதல் மன்னன் இங்கே வந்தாச்சு..” என்றான் கேலி வழிந்து ஓடும் குரலில்.

ஷௌர்யாவின் வார்த்தைகளையும் அதன் பொருளையும் புரிந்து கொள்ளவே அம்ருவுக்கு வெகு நேரம் பிடித்தது. அதை புரிந்து கொண்ட அடுத்த நொடி முகம் பிரகாசிக்க மற்றது எல்லாம் மறந்து ஒரு சந்தோஷ தவிப்போடு எழுந்து அறையின் வாயிலை நோக்கி பாய்ந்து ஓடியவளின் கையை பற்றி ஷௌர்யா சுண்டி இழுத்ததில் அவன் மேலேயே வந்து மோதி நின்றாள் அம்ரு.

“அவ்வளவு ஆசையா அவனை பார்க்க..” என்று முகம் சிவக்க பல்லை கடித்து கொண்டு கேட்டவனை அத்தனை நெருக்கத்தில் கண்டு எழுந்த பயத்தை விட, எதிர்பாராமல் அமைந்த இந்த சந்தர்பத்தை தவற விட்டுவிட்டால் இதன் பின் இப்படி ஒன்று அமையாமலே போக வாய்ப்புண்டு என்ற தவிப்பே அம்ருவிடம் அதிகம் இருந்தது
“பிளீஸ்ஸ்ஸ் சார்..” என்று இவ்வளவு நேரம் யோசித்து வைத்ததையெல்லாம் மறந்து கண்ணீரோடு கெஞ்ச துவங்கியவளை கொஞ்சமும் இறக்கமே இல்லாமல் பார்த்து கொண்டிருந்தான் ஷௌர்யா.

தன் கெஞ்சலுக்கும் தவிப்புக்கும் அவனிடம் எந்த ஒரு பிரதிபலிப்புமே இல்லாமல் கல் போல் நிற்பதை கண்டு அவனிடமிருந்து விடுபட்டு கொள்ள போராடியவளுக்கு அது கொஞ்சமும் முடியவில்லை.

இடது கையை மடக்கி பின்னால் பிடித்து அழுத்தி கொண்டிருக்க வலது கையால் ஷௌர்யாவை தன்னிடமிருந்து விலக்கி நிறுத்த அம்ரு எடுத்த அத்தனை முயற்சியும் ஒன்றுமில்லாமல் போனது. அவனையும் அவனின் உடும்பு பிடியையும் அசைக்க கூட முடியவில்லை.

“உன் காதல் கண்ணாளன் வந்ததை சொன்னதுக்கே இப்படி ஓட துடிக்கறீயே, கூட வந்து இருக்க உன் பாசமலரை பத்தி சொன்னா என்ன பண்ணுவே..?” என்று கேலி போல கேட்டாலும் அவளின் முக பாவத்தை ஊன்றி கவனித்து கொண்டே தான் கூறினான்.

அவனிடமிருந்து விடுபடும் முயற்சியில் இருந்தவளின் கரங்கள் ஷௌர்யாவின் அந்த வார்த்தைகளில் அப்படியே நின்றது. திகைப்பும் நம்பிக்கை இல்லா தன்மையோடும் கண்களில் நீர் கோர்க்க ஷௌர்யாவின் முகத்தை பார்த்தவளின் முகமும் கண்களும் ‘இது நிஜம் தானா’ என்பது போல அத்தனை ஏக்கத்தை சுமந்து இருந்தது.

“ஹப்பாஆஆ... நவரசமும் நாட்டியம் ஆடுதே இந்த முகத்துல.. இத்தனை தேடலும் தவிப்பும் அண்ணனுக்கா இல்லை உன் கண்ணனுக்கா..?!” என்று இடக்காக கேள்வி கேட்டவனையும் அவன் கேலியையும் எதிர்க் கொள்ள முடியாமல் சற்று நேரத்திற்கு முன் யோசித்து எடுத்த அத்தனை முடிவுகளும் மறந்து போக..

“பிளீஸ் சார்.. என்னை போக விடுங்க, நான் அவங்களை பார்க்கணும்..” என்று அதற்கு மேல் எதிர்க்க முடியாமல் கெஞ்சியவளுக்கு கையெடுத்து கும்பிடும் வாய்ப்பு கூட மறுக்கப்பட்டு அவளின் கைகள் அவனிடம் சிறைபட்டு கிடந்தது.

கொஞ்சமும் அசையாமல் அம்ருவையே பார்த்தப்படி நின்றிருந்தான் ஷௌர்யா. “பிளீஸ்.. பிளீஸ்.. பிளீஸ்..” என்று அம்ரு விதவிதமாக கெஞ்சியதில் ஆச்சர்யமான முகபாவத்தை காண்பித்தவன், “அவங்களை பார்க்கணுமா.. ஓ பார்க்கலாமே..” என்று குரலில் என்ன பாவம் என்று பிரித்தறிய முடியா ஒரு பாவத்தில் கூறினான் ஷௌர்யா.

என்னத்தான் கெஞ்சி கொண்டு இருந்தாலும் அவன் ஒத்து கொள்வான் என்ற நம்பிக்கை அம்ருவுக்கு துளியும் இல்லை. இப்போது திடீரென இப்படி ஷௌர்யா கூறியதில் திகைத்து போய் அடுத்த வார்த்தை வராமல் விழித்தவள், “நி.. நி.. நிஜ.. மாவா.. சார்..” என்றாள்.

“எஸ்..” என்று தலையை ஒருவிதமாக ஷௌர்யா அசைக்கவும், அப்போ நான் போகட்டுமா..” என்று முகம் மலர கேட்டவளை கண்டு “ஹ்ம்ம்” என்றான்.

அந்த ஒரு செய்கையில் அப்படி ஒரு நிம்மதி எழ, அவசரமாக அவனிடமிருந்து விலக அம்ரு முயல, ஷௌர்யாவோ தன் பிடியை கொஞ்சம் கூட தளர்த்தவில்லை.

மீண்டும் மீண்டும் அதிலிருந்து விடுப்பட முயன்று பார்த்தவள், கேள்வியாக நிமிர்ந்து ஷௌர்யாவின் முகத்தை பார்க்க..

“ஆனா ஒரு கண்டிஷன்..” என்றான் உள்ளடங்கிய ராட்சச புன்னகையோடான இதழ் வளைவுடன். “க.. க.. கண்டிஷனா..?!!” என்று திகைத்தாலும் இவனிடமிருந்து தப்பித்து அவர்களை சந்தித்து அனைத்தையும் கூறிவிட்டால் போதும் மற்றதை அவர்கள் பார்த்து கொள்வார்கள் என்று தோன்றவும், “எதுவா இருந்தாலும் ஒகே சார்..” என்றாள் அவசரமாக.

“நீ உனக்கு தேவைனா என்ன செய்யவும் ரெடியா தானே இருப்ப.. ஆனா நான் அந்த மாதிரி ஆள் இல்லை பாரு, அதனால...” என்று கிடைத்த அந்த சந்தர்பத்திலும் அவளை குத்தி விட்டு சிறு இடைவெளி விட்டவன், “கொஞ்ச நேரத்துக்கு முன்னே கண்ணா மன்னான்னு உன் முன்னாள் காதலனை நினைச்சு ஆடினியே, அதே போல இந்நாள் கணவனான என்னை நினைச்சு உருகி ஒரு ஆட்டம் போடறே..” என்றான் ஏளனமும் எகத்தாளமும் போட்டி போடும் குரலில்.

இதை கொஞ்சமும் எதிர்பாராததால் அதை கேட்டு “ஆங்” என்று அதிர்வில் அம்ரு வாயை பிளக்க.. “ம்ம்” என்று கண்களை மூடி திறந்து இதை நீ செய்தே ஆக வேண்டும் என்பது போல தலையசைத்தான் ஷௌர்யா.

“சார் பிளீஸ்.. இப்போ நான் ஆடற மனநிலையில் எல்லாம் இல்லை..” என்று எப்படியாவது அவனுக்கு புரிய வைத்துவிட வேண்டும் என்று தொடங்கியவளை இடைவெட்டி, “அதெல்லாம் எனக்கு தேவை இல்லாதது.. உன் ஆட்டத்தை பார்த்து ரசிக்கவோ இல்லை உன் அழுகுல மயங்கியோ எல்லாம் நான் இதை சொல்லலை.. உனக்கு அவங்களை பார்க்கணும்னா நீ ஆடியே ஆகணும்..” என்றான் கறார் குரலில்.

‘எப்படி எந்த ஒரு உணர்வுக்கும் மதிபளிக்காமல் கல்லை போல இவனால் இருக்க முடிகிறது.. யார் எப்படி போனாலும் இவன் நினைத்தது மட்டும் தான் நடக்கணும் போல.. ச்சீ.. உன்னை போல ஒருத்தனை நான் என் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை..’ என்று மனதிற்குள் திட்டியவள் முகத்தை வெறுப்போடு திருப்பி கொண்டாள்.

“ம்ம், இந்த பாட்டு கூட எனக்கு ஒகே தான்..” என்று திடுமென ஒலித்த ஷௌர்யாவின் குரலில் நினைவு கலைந்து நிமிர்ந்தவள் “எந்த பாட்டு..?” என்றாள் புரியா குழப்பத்தோடு.

“அதான் இப்போ நினைச்ச இல்ல.. அதான்..” என்றவனின் இதழ்கள் இகழ்ச்சியாக வளைந்தது. ‘என்ன பாட்டு..?’ என புரியாமல் முகத்தை சுருக்கியவளுக்கு அப்போதே சற்றுமுன் தான் மனதில் நினைத்தது நினைவுக்கு வந்தது.

அதில் அதிர்வோடு ஷௌர்யாவின் முகத்தை அம்ரு பார்க்கவும், “என் டைம் ரொம்ப பிரிஷியஸ்.. டோன்ட் வேஸ்ட் இட்..” என்ற கறாரான குரல் அவனிடமிருந்து வந்தது.

அதெல்லாம் முடியாது என மறுத்து கிடைத்திருக்கும் அறிய வாய்ப்பை தவற விட்டுவிட்டால் மீண்டும் தன்னை சேர்ந்தவர்களை காணும் சந்தர்ப்பம் கிடைக்குமோ என்னவோ என்ற எண்ணம் எழுந்து தவிக்க செய்ய.. ஆனால் அதற்காகவும் ஷௌர்யா சொன்னதற்கு ஒத்து கொள்ள மனம் வராமல் போனதில் “எனக்கு அந்த பாட்டு தெரியாது..” என்றாள் தப்பிக்கும் மார்கத்தை எதிர்பார்த்து.

“அவ்வளவு தானே..” என்று அசால்ட்டாக கூறியவன் அவளை பிடித்திருந்த பிடியை உதறி, அருகில் இருந்த அம்ருவின் அலைபேசியையே எடுத்து அதிலேயே யூடியூப்பில் அந்த பாடலை ஒரு வெற்றி புன்னகையோடு ஓடவிட்டான்.

இப்போது அம்ருவுக்கு வேறு வழி இல்லாமல் போகவும், கோபமும் அழுகையும் போட்டி போட..

உன்ன போல ஒருத்தர நான் பார்த்தது இல்ல
ஓ உசுர பார்த்து வானம் கூட
குறுகுமே மெல்ல

என்று ஆத்திரமும் வெறுப்புமாக முகத்தை அவனை திட்டுவது போன்ற பாவனையில் வைத்து கொண்டு அம்ரு ஆடவும், “ம்ப்ச்.. இது இல்லையே அந்த பிலீங்.. அப்போ ஆடும் போது வந்துதே கண்ணான்னு உருகும் போதெல்லாம் அப்படியே உதடு துடிக்க உள்ளே இருந்து ஒரு தவிப்பு.. அப்படி வேணும்.. பழைய காதலனுக்கே அப்படி ஒரு பிலீங்கனா, நீ கஷ்டப்பட்டு நல்ல பொண்ணாவோ உண்மையான காதலியாவோ நடிக்க வேண்டிய அவசியமெல்லாம் எதுவும் இல்லாம.. இதோ இவ்வளவு பெரிய மாளிகையில் கூட்டிட்டு வந்து உனக்கு ஒரு வாழக்கை கொடுத்திருக்க இந்த புருஷருக்கு எப்படி ஒரு தவிப்பும் நடிப்பும்.. ச்சீ.. ச்சீ.. காதலும்ம்ம்.. நன்றியும் அப்படியே உள்ளே இருந்து பொங்கி வரணும்.. அப்படி நடிக்கணும்.. இல்லையில்லை ஆடணும்.. ஒகே..” என்றான்.

சாமி போல வந்தவனே
கேட்கும் முன்னே தந்தவனே
நான் வணங்கும் நல்லவனே
நல்ல உள்ளம் கொண்டவனே
என் ஒட்டுமொத்த
ஜென்மத்துக்கு சொந்தம் நீ தானே

ஷௌர்யாவின் வார்த்தைகளை கேட்டு பொங்கிய கோபத்தில் கையில் கிடைக்கும் எதையாவது எடுத்து அவன் தலையிலேயே போடலாம் என்று எழுந்த எண்ணத்தை மறைத்து கொண்டு எப்படியாவது தன்னை சார்ந்தவர்களை கண்டுவிடும் ஆவலில் அதை மட்டுமே முன் நிறுத்தி மனதை முகத்தில் காண்பிக்காமல் பல்லை கடித்து கொண்டு மீண்டும் அடுத்த வரிகளை தொடர்ந்து ஆடினாள் அம்ரு.

“கட்.. கட்.. கட்.. நான் எதிர் பார்க்கறது இது இல்லையே, நான் உனக்கு கொடுத்து இருக்கும் வாழ்க்கைக்கு நீ என்னை எப்படி பார்க்கணும்னு அந்த பாட்டே சொல்லுது.. அதுக்கு தகுந்தா மாதிரி ஆட சொன்னா நீ அழுது வடியற.. நியாயமா பார்த்தா நீ எதிர் பார்க்காத வாழ்க்கையை நான் உனக்கு கொடுத்ததுக்கு நன்றி கடனா நீ எனக்கு கோவில் கட்டி இவ்வளவு நேரத்துக்கு அதுக்கு பூசாரியா மாறி இருக்கணும்.. நீ என்னன்னா..?!! உன் பர்பார்மன்ஸ் கொஞ்சமும் எனக்கு பிடிக்கலை, டீல் கேன்சல்..” என்று எழுந்து அறையிலிருந்து வெளியேற முயன்றான்.

அவசரமாக ஓடி சென்று ஷௌர்யாவின் முன் நின்று வழியை மறித்தவள், “பிளீஸ்.. போகாதீங்க, எனக்கு அவ்வளவு தான் வருது..” என்றாள் மன்றாடும் குரலில். “அது என் பிரச்சனை இல்லையே.. நான் எதிர்பார்த்தது கிடைச்சா.. நீ எதிர்பார்க்கறது உனக்கும் கிடைக்கும்.. டீலா நோ டீலா..?” என்று துளியும் இறங்கி வராமல் இரக்கமில்லா குரலில் கூறினான்.

“ஒகே நான் டிரை செய்யறேன்..” என்றவள் வேகமாக குளியலறைக்குள் நுழைந்து முகத்தை குளிர்ந்த நீரால் அடித்து கழுவி மனதை ஒருவாறு தயார் செய்து கொண்டு வந்தாள். ஏதோ நடன மங்கையின் நாட்டியத்தை பார்க்கும் அரசனின் தோரணையோடு அங்கு அமர்ந்திருந்தவனை கண்டு மறந்தும் எந்த உணர்வும் வெளிவந்து விடாமல் முகத்தை புன்னகை பூசியது போல வைத்து கொண்டவள் மீண்டும் அடுத்த வரிகளுக்கு ஆட துவங்கினாள்.

உன்ன எதிர்பார்த்து தான் என் இதயம் வாழ்ந்ததோ
தன்னை அறியாமலே உன்னை அது சேர்ந்ததோ
இல்லை இனி ஏதும் என்று வாடி நின்ற போதிலே
முத்துமணி தேரில் என்னை ஏற்றி வந்த வள்ளலே
ஒரு வார்த்தையில் என்னை உருவாக்கினாய்
உன் உறவென்பது யுக யுகங்களை
கடந்தது தானே

“வாவ்... கேட்கவே நல்லா இருக்கே.. ம்ம்.. ம்ம்..” என்று தொடர்ந்து ஆடு என்பது போல ஷௌர்யா கையசைக்க...

உன்னுடைய சாலையில் நின்று மலர் தூவவே
கன்னி வரம் கேட்கிறேன்
நானும் அரங்கேறவே
உன்னருகில் வாழுவதொன்று
போதும் இந்த மண்ணிலே
வேறு ஒன்றும் தேவை இல்லை
யாவும் உந்தன் அன்பிலே
எனை ஆளவே வந்த மகராசனே
நான் உனக்காகவே பல பிறவிகள்
துணை வருவேனே

“வாரே வா.. வாரே வா.. என்ன ஒரு எக்ஸ்பிரஷன், என்ன ஒரு நடிப்பு.. இப்படி எல்லாம் நடிச்சு தான் உலகத்தை ஏமாத்துவீங்க இல்லை.. ஆனாலும் வர்மா ஹாப்பி தான்.. ஓகே நம்ம டீலை பார்ப்போமா..!!” என்றவன் எழுந்து முன்னால் செல்ல.. ஏக்கமும் எதிர்பார்ப்புமாக அவனை பின் தொடர்ந்தாள் அம்ரு.

அந்த தளத்திலேயே இருந்த மற்றொரு அறைக்குள் நுழைந்தவனை புரியாமல் பார்த்தாவாறே பின் தொடர்ந்தவள், ஒருவேளை இந்த அறைக்குள் தான் அவர்கள் காத்திருக்கிறார்களோ என்ற ஆவலோடு பார்வையை சுழற்றியவள் அங்கு யாருமற்று இருப்பதை கண்டு கேள்வியாக ஷௌர்யாவை பார்க்க.. அவனோ எதிரில் தெரிந்த கண்ணாடியாலான ஜன்னலை பார்வையால் சுட்டி காண்பித்தான்.

புரியா பாவனையோடே அதை அம்ரு நெருங்கவும் அங்கு இருந்த திரையை தன் கையில் இருந்த ரிமோட்டின் மூலம் விலக்கினான் ஷௌர்யா. அங்கு எதிரில் இருந்த லானில் சூர்யாவும் முகுந்தும் தவிப்போடு வாயிலையே பார்த்து கொண்டு நின்றிருப்பது தெரிந்தது.

இவ்வளவு நேரம் கூட ஒருவேளை இவன் நம்மை ஏமாற்றுகிறானோ என்ற ஒரு சிறு சந்தேகம் மனதின் ஓரத்தில் இருந்து கொண்டே தான் இருந்தது. ஆனால் கண் முன் தன்னை சேர்ந்தவர்களை கண்ட நொடி மற்றது எல்லாம் மறந்து போக.. வாயிலை நோக்கி பாய்ந்து ஓடினாள் அம்ரு.

ஆனால் அம்ரு அறையின் வாயிலை நெருங்குவதற்கு முன்பே “ஷேடோ” என்று ஷௌர்யா ஒரு குரல் கொடுத்து இருக்க.. அதற்காகவே காத்திருந்தது போல தாவி ஓடி வந்து அறை வாயிலில் நின்றது அது.

அதில் அம்ரு பிரேக் இட்டது போல தன் ஓட்டத்தை நிறுத்தவும், மூச்சு வாங்க நாக்கு வெளியில் தொங்க இவளை தான் பார்த்து கொண்டிருந்தான் ஷேடோ. “சிட்” என்று ஷௌர்யாவின் குரல் கட்டளை தொனியில் ஒலிக்கவும், அது அங்கேயே வழியை மறித்தது போல அமர்ந்து கொண்டது. இதை கண்டு உடல் பதற ஈச்சிலை கூட்டி விழுங்கியவள் பரிதாபமாக திரும்பி ஷௌர்யாவை பார்த்தாள்.

அவனோ சாவகாசமாக தன் முன் இருத்த டீபாயின் மேல் காலை நீட்டி அமர்ந்து கொண்டு, “உன் அண்ணனையும் அந்த கண்ணனையும் பார்க்கலாம்னு தான் சொன்னேன்.. பார்த்தாச்சு இல்லை..” என்றான்.

‘இதற்கா இத்தனை பாடு என்றும், கண் முன்னே இருப்பவர்களிடம் அடைக்கலம் தேடி புக முடியவில்லையே என்ற தவிப்பும் சேர, தாங்க முடியாத ஏக்கத்தோடு திரும்பி ஜன்னலை பார்த்தவள், “பிளீஸ் சார்” என்று தொடங்கவும் அதற்கு மேல் அவளை பேச விடாமல் “நான் சொன்னதை செஞ்சுட்டேன்..” என்று அத்தோடு பேச்சை முடித்து கொண்டான் ஷௌர்யா.

தன் பலவீனமான மனதை பயன்படுத்தி அவனுக்கு தேவையானது போல் வளைத்து கொண்டு இப்போது தன் சுயத்தை காண்பிப்பவனை வெறுப்பும் ஆத்திரமுமாக பார்த்தவள், “நீயெல்லாம் மனுஷனே கிடையாது.. ராட்ஷஷன்.. அசுரன்.. அரக்கன்..” என்று வெறுப்போடு கத்தினாள்.

“இதுவே உனக்கு இப்போ தான் தெரியுதா..?!” என்று அதையும் கூட தூசி போல தட்டியவன் தன் கையில் இருந்த அலைபேசியில் கவனமாக இனியும் இவனிடம் பேசுவது வீண் என்று உணர்ந்தவள், வேகமாக சென்று ஜன்னலை நெருங்கி அவர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்ப முயன்றாள்.

ஆனால் பாவம் அம்ருவுக்கு தெரியவில்லை. அது சாதாரண கண்ணாடி போலவே தெரிந்தாலும் அந்த கண்ணாடியில் உயரக தொழில்நுட்பத்தோடு உள்ளே இருந்து மட்டுமே வெளியில் பார்க்குமாறு டிசைன் செய்யப்பட்டு இருப்பதும் அங்கு இருந்து கத்தினாலும் கூட வெளியில் கேட்காது என்பதும்.
தன்னாலான முயற்சிகளை எல்லாம் செய்து பார்த்தவள், பொங்கி வந்த அழுகையோடு உதடு பிதுக்கி செய்வதறியாது திரும்பி ஷௌர்யாவை பார்க்க.. அவனோ ஏதோ வேடிக்கை பார்க்கும் பாவனையோடு கன்னத்தை கைகளில் தாங்கி அமர்ந்து அம்ருவின் செயல்களை எல்லாம் கொரூரமாக ரசித்து கொண்டு இருந்தான்.

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
29534
ஹாய் டியர்ஸ்

அனைவருக்கும் வணக்கம்❤️❤️ இன்றோடு நான் எழுத வந்து ஐந்து வருடங்கள் ஆகிறது🤩🤩

இவ்வளவு நாளாவா இங்கே இருக்கேன்னு எனக்கே தோணுது.. நம்பவே முடியல.. இப்போ தான் எழுத தொடங்கியது போல இருக்கு.. அதுக்குள்ள ஐந்து வருஷம் ஓடியே போச்சு..

சரி இங்கேயே தான் இவ்வளவு நாளா லிவிங்ஸ்டன் ஆச்சே.. அப்படி என்ன செஞ்சு இருக்கோம்னு திரும்பி பார்த்தா இந்த ஐந்து வருஷத்தில் 25 கதைகள் எழுதி முடிச்சு இருக்கேன்🤩🤩

எனக்கே எழுத வருமா வராதான்னு ஒரு சந்தேகம் இருந்த நேரத்தில் துளியும் யோசிக்காமல் எனக்கு எழுத வாய்ப்பளித்து இன்று வரை உடன் நின்று வழி நடத்தும் Srikala Tamil Novels ஸ்ரீ அக்காவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்❤️❤️😍😍

நான் ஒவ்வொரு கதை எழுதும் போதும் உடன் நின்று ஊக்கமளித்து நிறை குறைகளை பகிர்ந்து கொண்டு அடுத்தடுத்து என்னை எழுத தூண்டி கொண்டிருக்கும் என் அன்பான வாசக தோழமைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்❤️❤️😍😍

இந்த நாளை கொண்டாடும் விதமாக இந்த வருட புத்தக கண்காட்சியில் நேரடி புத்தகமாக வெளிவந்த "மெல்ல உனதாகிறேன்..!!" கதையை கிண்டிலில் பதிவேற்றம் செய்துள்ளேன்🤩🤩

இப்போதைக்கு இது ப்ரீ இல்லை டியர்ஸ்.. ப்ரீ தரும் போது சொல்கிறேன்..

இந்தியாவில் வசிப்பவருக்கான லிங்க்👇


வெளிநாட்டில் வசிப்பவருக்கான லிங்க் 👇


*********

இப்போது கதையில் இருந்து ஒரு குட்டி டீ

தன் அலுவலகத்துக்கு அருகில் இருக்கும் காபி ஷாப்பில் மற்றவர் பார்வையில் படாமல் ஓரமாக இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த சந்துவுக்கு எப்போது வீட்டுக்கு போவோம் என்று இருந்தது. உடனே கிளம்பி விட்டால் அர்வி கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டி இருக்குமே என்பதற்காகவே கன்னத்தில் கை வைத்தப்படி அமர்ந்திருந்தாள் சந்து.

இன்னும் அரைமணிநேரம் இங்கேயே அமர்ந்து இருந்து விட்டு வீட்டிற்குக் கிளம்ப எண்ணி இருந்தவளின் மனதில் வீட்டிற்குச் செல்லும் முன் என்னவெல்லாம் வாங்க வேண்டும்..? நாளைய சமையலுக்குத் தேவையானது எல்லாம் இருக்கிறதா..? பிரேமாவுக்கு மருந்து வாங்க வேண்டுமா..? என்பது போன்ற பல கவலைகள் ஓடிக் கொண்டிருக்க.. “ஆர் யூ மிஸ் சைந்தவி..?” என்றவாறே தன் குளிர் கண்ணாடியை கழற்றியவாறே அவள் முன் வந்து நின்றான் அஜய்.

அதில் பார்வையை உயர்த்தியவள் லேசான திகைப்போடும் பதட்டத்தோடும் ‘ஆம்’ எனத் தலையசைக்கவும், அவள் முன் இருந்த இருக்கையில் அமர்ந்தவன் “ஐ அம் அஜய் கிருஷ்ணா..” எனக் கூறி கையை நீட்ட.. ஒரு இயந்திர தனத்தோடு அஜய்யின் கையைப் பற்றிக் குலுக்கினாள் சந்து.

“சோ..” என அஜய் எதையோ பேச துவங்கவும், “நீங்.. நீங்க.. எப்படி.. இங்கே..?” எனத் தந்தி அடிக்கும் குரலில் சந்து பேச துவங்கி இருக்க.. அவளையே கேள்வியாகப் பார்த்தவன், “ஏன்.. என்னைப் பார்க்க தானே நீங்க இங்கே காத்துட்டு இருக்கீங்க.. இல்லை.. வேற..” என்று யோசனையாக நிறுத்தினான் அஜய்.

“இல்லையில்லை.. உங்களைப் பார்க்க தான்.. ஆனா நீங்க வரமாட்டீங்கன்னு நினைச்சேன்..” எனவும் வியப்பாகப் புருவத்தை உயர்த்தியவன் “ம்ம்.. இண்டரஸ்ட்டீங்..” என லேசான புன்னகையோடு சொன்னவாறே இருக்கையில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்தான் அஜய்.

அவனின் செய்கையில் அதற்கு மேல் பேச்சு வராமல் சந்து தயங்கி நிறுத்தி அஜய்யின் முகம் பார்க்க.. “நான் வர மாட்டேன்னு நீங்க நினைக்க என்ன காரணம்னு நான் தெரிஞ்சுக்கலாமா..?” என்றவனின் பார்வை கூர்மையாக சந்துவின் முகத்தில் பதிந்திருந்தது.

அதற்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் சந்து கையைப் பிசைந்தவாறு அமர்ந்திருப்பதைச் சில நொடிகள் இடையிடாமல் பார்த்துக் கொண்டிருந்தவன், “நான் வர மாட்டேன்னா.. இங்கே நீங்க வேற யாருக்காவது காத்துட்டு இருந்தீங்களா..? இல்லை.. நான் வர கூடாதுன்னு நினைச்சீங்களா..?” என நிறுத்தி நிதானமாகத் தன் கேள்வியைக் கூட கேட்டு முடிக்கவில்லை அதற்குள் “இல்லை யாருமே வர மாட்டாங்கன்னு தான் நினைச்சேன்..” என அவசரமாகச் சொல்லி இருந்தாள் சந்து.

அதில் அவனையுமறியாமல் ஒரு குறுநகை இதழ்களில் தோன்ற “ஒகே.. எனக்கு இந்தக் கல்யாணத்தில் சம்மதம்.. உங்களுக்கு ஓகேனா.. மேலே பேசலாம்.. நாளைக்கு மார்னிங் கால் செய்ங்க..” என்றவன் எழுந்து கொள்ள.. அதிர்வுக்கு மேல் அதிர்வை தாங்க முடியாமல் திகைத்த பார்வையோடு சந்து பதிலின்றி அப்படியே அஜய்யை பார்த்துக் கொண்டிருக்க.. “ஒகே பார்ப்போம்..” எனக் கையசைத்து விட்டுக் கிளம்பினான் அஜய்

**************************

சைந்தவி வேலையில் பிசியாக இருக்க.. குழந்தை அமர்ந்திருந்ததால் விலகி இருந்த சேலை இடைவெளியில் தெரிந்த வெண்ணிற இடையை வெறித்தவாறே சமையலறை வாயிலில் நின்றிருந்தான் கார்த்திக்.

அவளின் வேகமான வேலைக்கேற்ப அங்கங்கு விலகி இருந்த சேலையின் வழி தெரிந்த அவளின் அழகை எல்லாம் ஒரு மயக்கத்தோடு பார்த்தவாறே சத்தமில்லாமல் வந்து சைந்தவியைப் பின்னால் இருந்து அணைக்க முயன்றான் கார்த்திக்.

அந்த இறுதி நொடியில் எதுவோ தோன்ற சட்டெனத் திரும்பியவள் அங்கு நின்றிருந்த கார்த்திக்கை கண்டு சட்டெனப் பின்னால் நகர்ந்தாள் சந்து. அதில் தன் எண்ணம் ஈடேறாமல் போன கோபத்தோடு அவளைப் பார்த்தவன், “வர வர ரொம்ப அழகாகிட்டே போறே டி..” என்றான் ஒருவிதமாக இளித்துக் கொண்டே.

அதற்கு எந்தப் பதிலையும் சொல்லாமல் பார்வையைத் திருப்ப முயன்றவளுக்கு கார்த்திக்கின் இந்த விதமான பார்வை வெறுப்பைக் கொடுத்ததில் அங்கிருந்து வெளியில் செல்ல நினைக்க.. அவளின் எண்ணம் புரிந்தது போல் வழியை மறித்தது போல் வந்து நின்றான் கார்த்திக்.

அதில் கொஞ்சமும் பொறுமையற்ற பார்வையோடு நிமிர்ந்தவள் “இப்போ என்ன வேணும் உங்களுக்கு..?” என்றாள் எரிச்சலை உள்ளடக்கிய குரலில். “ஹ்ம்ம்.. வேண்டியது என்னன்னு சொன்னா கிடைக்குமா..?” என ஒரு மாதிரி இழுத்து கார்த்திக் நிறுத்தவும், அப்படி ஒரு கோபம் வந்த போதும் கூட வேறு வழியின்றி பல்லை கடித்துக் கொண்டு பொறுமை காத்தாள் சந்து.

“இன்னைக்கு என்ன சமையல் சந்தும்மா..” என்று அவள் மேல் உரசுவது போல் கார்த்திக் முன்னேறவும், அதில் வேகமாகப் பின்னால் சந்து நகர.. ஹாலில் இருந்து “அக்கா டிபன் ரெடியா..?” என்ற அரவிந்த்தின் குரல் கேட்கவும் சரியாக இருக்க.. “ச்சே” என்ற முணுமுணுப்போடு பல்லை கடித்துக் கொண்டு வெளியேறினான் கார்த்திக்.

அதில் திரும்பி சுவரில் சாய்ந்தவாறு கண்ணை மூடி ஒரு நிம்மதி பெருமூச்சை வெளியிட்டவள், “இதோ அஞ்சு நிமிஷம் அர்வி..” என்றவாறே சட்னியை அறைக்க முயல.. “இன்னும் ஆகலைனா பரவாயில்லை கா.. மெதுவாவே செய்.. நான் வெளியில் பார்த்துக்கறேன்..” என்றான்.

*********
படிக்க விருப்பம் உள்ளவர்கள் படித்து மகிழுங்கள்❤️❤️

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை அறிய ஆவலோடு காத்திருக்கிறேன்😍😍😍 உங்கள் கருத்துக்களை அங்கேயே என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்❤️❤️

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்

நீங்க ரொம்ப நாளா கேட்டுட்டு இருந்த நம்ம டீமனும் அவன் போண்டா டீயும் இப்போ கிண்டிலில் வந்துட்டாங்க..

இப்போது முதல் பாகம் மட்டும் பதிவேற்றி உள்ளேன்.. விரைவில் அடுத்த பாகமும் பதியப்படும்..

இப்போதைக்கு இது ப்ரீ இல்லை.. ப்ரீ கொடுக்கும் போது சொல்கிறேன்..

இந்தியா லிங்க்


வெளிநாட்டு லிங்க்


படித்து விட்டு மறக்காமல் உங்கள் கருத்துக்களையும் ரேட்டிங்கையும் அங்கேயே பதிவிடுங்கள்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
29989

ஹாய் பிரெண்ட்ஸ்

இதோ ஒரு சந்தோஷமான விஷயத்தை உங்களோடு பகிர்ந்துக்க வந்து இருக்கேன் 😍😍

சுடர்க்கொடி மாத இதழின் இந்த மாத வெளியிடாக என் "காதல் தீரவே வா என்னருகிலே..!!" கதை புத்தகமாக வந்துள்ளது ❤❤

இதோ அதிலிருந்து ஒரு குட்டி டீசர் 😍😍

********
மாலை பள்ளி முடிந்து வெளியில் வந்த வெண்பாவிற்காகத் தனது காரின் மேல் சாய்ந்து நின்று காத்திருந்தான் பிரகாஷ். வெண்பாவை கண்டவுடன் புன்னகையோடு அவன் கையசைக்கப் பதிலுக்கு தானும் கையசைத்தவாறே அவனை நெருங்கினாள் வெண்பா.

“என்ன இன்னைக்கு உனக்கு ஆஃபீஸ் இல்லையா..? இந்த நேரத்தில் இங்கே என்ன செய்யறே..?” எனக் கேட்டவாறே தன் கை கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்தவளுக்குக் கார் கதவைத் திறந்து பிடித்தவன் “ஆபீஸ் எல்லாம் இருக்கு.. ஒரு முக்கியமான விஷயம் உன்கிட்ட சொல்லணும், அதுவும் உடனே சொல்லணும்.. அதான் கிளம்பி வந்துட்டேன்..” என்றான் பிரகாஷ்.

“அப்படி என்ன அவசரம் ப்ரகா.. நைட் வீட்டுக்கு வந்து சொல்லி இருக்கலாம் இல்லை..” என கேட்டவாறே காரில் ஏறி அமர்ந்து கொண்டவள் முகத்திலும் அவன் சொல்லப் போகும் விஷயத்தை அறியும் ஆவல் எட்டிப்பார்த்தது.

அதைக் கண்டு கொண்டவனும் புன்னகையோடு “இல்லை.. இதை இப்போவே உன்கிட்ட சொல்லியாகணும், அதான் ஓடி வந்துட்டேன்..” என்று காரை செலுத்திக் கொண்டு இருக்க.. ஸ்கூல் பையன் போலக் கட்டு அடிச்சிட்டுக் காரணம் வேற சொல்லு..” என அவனை போலியாக அடிப்பது போல் கையை ஓங்கி கொண்டே சிரித்தாள் வெண்பா.

“ஹையையோ.. டீச்சரம்மா மீ நெம்ப குட் பாய்..” என பயந்தது போல் பிரகாஷ் நடிக்கவும், இருவரும் அப்படியே கலகலவென பேசியவாறு வந்திறங்க.. இறங்கி நின்ற இடத்தை கண்டு ஆச்சர்யமாக விழி விரித்தவள் கேள்வியாக திரும்பி பிரகாஷை பார்த்தாள்.

அதை கண்டு கண் சிமிட்டியவன், அவளை உள்ளே அழைத்து சென்றான். வெண்பாவிற்கு மிகவும் பிடித்த ரெஸ்டாரண்ட்டிற்கு அவளை அழைத்து வந்திருந்தான் பிரகாஷ்.

“என்ன மேன்..? ரொம்பக் குஷியா இருக்கப் போல, என்ன விஷயம்..?” என அவன் அழைத்து வந்திருந்த இடத்தை வைத்தே பிரகாஷின் மனநிலையை யூகித்துக் கேட்டு இருந்தாள் வெண்பா.

“ஆமா.. ஆ.. மா..” என ராகம் போட்டு இழுத்தவன் அவள் அமர்வதற்கு இருக்கையை வாகாக இழுத்துப் பிடிக்க.. அதில் அமர்ந்து கொண்டவள் “சரி இப்போ சொல்லு.. அப்படி என்ன விஷயம்..?” என ஆர்வமாகக் கேட்கவும், “சொல்றேன்.. சொல்றேன்.. கொஞ்சம் வெயிட் கரோ ஜி..” என்றவன் வெயிட்டரை அழைத்து இருவருக்கும் பாசந்தியை ஆர்டர் செய்தான்.

“ஹ்ம்ம்.. ஃபேவரட் ரெஸ்டாரண்ட்.. ஃபேவரட் ஸ்வீட்.. கலக்குற பிரகாஷ்..” எனக் கேலி செய்து சிரித்தவள், “எப்படியும் ஸ்வீட் வந்து அதை சாப்பிட்ட பிறகே விஷயத்தை சொல்லுவான் எனப் புரிந்து அமைதியாக இருந்தாள்.

அவள் எதிர்பார்த்தபடியே பாசந்தியை எடுத்து முதலில் வெண்பாவிற்கு ஊட்டினான் பிரகாஷ். அதை மறுக்காமல் வாங்கிக் கொண்டவள் “இப்போ சொல்லு, அப்படி என்ன குட் நியூஸ்..? நீ இவ்வளவு சந்தோஷமா இருக்கே..? ஒருவேளை நீ அப்பா ஆகப் போறியா மேன்..? அதுவும் எனக்குத் தெரியாம..!” எனக் கேட்டு வெண்பா கலகலவெனச் சிரிக்க.. “அடிங்..” எனப் போலியாக அவளை அடிக்கக் கையை ஓங்கியவன் “என் ப்ராஜெக்ட் அப்ரூவல் ஆகி இருக்கு.. கூடிய சீக்கிரம் நம்ம கனவு பலிக்கப் போகுது பேபி..” என்றான் பிரகாஷ்.

நிஜமாகவே இதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திராதவளுக்கும் அப்படி ஒரு சந்தோஷம்.. “ஹேய்..” என கத்தி கொண்டு எழுந்தவள் வேகமாகப் பிரகாஷை அணைத்துக் கொள்ள..

இவர்களின் இரண்டு வருட கனவு நிறைவேறப் போகும் தருணத்தை எண்ணி கொஞ்சம் நெகிழ்ந்து தான் இருந்தனர் இருவரும்.

“இது எப்போ நடந்தது ப்ரகா..?” எனக் காதில் விழுந்ததை இன்னும் நம்பவே முடியாத உணர்வில் மீண்டும் வெண்பா கேட்க.. “மதியம் தான் மெயில் வந்தது..” என்றவன் தன் அலைபேசியை அவளிடம் கொடுத்து விட்டு இனிப்பை சாப்பிடுவதில் கவனமானான்.

அதற்குள் அனைத்தையும் படித்து முடித்து இருந்தவள் “கங்கிராட்ஸ் ப்ரகா.. யூ ட்ருலி டிசர்வ் திஸ்.. ஆனா இது மட்டும் போதாது, இனி தான் நாம இன்னும் நிறைய உழைக்கணும்..” என்றவளை நம்பிக்கையோடு பார்த்தவன், “கண்டிப்பா.. நல்லா செய்யறது மட்டுமில்லை சூப்பராவும் செய்வோம்.. நீ என் கூட இருக்கும் போது எல்லாமே சரியா நடக்கும்..” என்றான் உணர்ந்து புரிந்த குரலில் பிரகாஷ்.

*********

மறுநாள் காலை முதல் வேலையாக ஆதியை தேடிக்கொண்டு அவன் வீட்டிற்கு வந்தாள் வெண்பா. அவளை அதிசயமாகப் பார்ப்பது போல் பார்த்து வைத்தவன் எதுவும் பேசாமல் அமைதி காக்க.. “என்னவோ நேரில் வந்து சொல்ல சொன்னீங்களாமே..! என்ன சொல்லணும் சொல்லுங்க..” என நேர் பார்வையோடு கைகளைக் கட்டிக்கொண்டு ஆதியின் முகத்தைப் பார்த்தாள் வெண்பா.

“நானாஆஆ..? நான் எதையும் சொல்ல சொல்லலையே..!” என்று ஆதி உதட்டைப் பிதுக்கவும், “என்ன என்னைப் பார்த்தா விளையாட்டா இருக்கா..? என முறைத்தவளை கேள்வியாகப் பார்த்தவன் “நான் எப்போ அப்படிச் சொன்னேன்..” என்றான் அப்பாவியான குரலில்.

அவனை நம்பா பார்வை பார்த்தவாறே “பிரகாஷ்கிட்ட ஏதோ நான் வந்து சொன்னா செய்யறேன்னு சொன்னீங்களாமே..!” என்று மீண்டும் வெண்பா கேட்கவும், “யாரு நானாஆஆ...?” என ஒன்றுமறியாத பச்சைப் பிள்ளை போன்று பாவனைச் செய்து கொண்டிருந்தான் ஆதி.

அதில் உண்டான கோபத்தில் அருகே இருந்த பூந்தொட்டியை கீழே தள்ளியவள் “என்ன என்னை வெச்சு விளையாடுறீங்களா..! நான் வந்து சொன்னா என்னை இனி தொந்தரவு செய்ய மாட்டேன்னு பிரகாஷ்கிட்ட சொன்னீங்களாமே..! இப்போ சொல்றேன் கேட்டுக்கோங்க, என்னை நீங்க இனி தொந்தரவு செய்யக்கூடாது..” என்று படபடவெனப் பொரிந்து தள்ளினாள் வெண்பா.

அதில் அவளின் படபடப்பிற்கெல்லாம் துளியும் சம்பந்தமே இல்லாதது போல் குளிர்ந்த நீரை எடுத்து அவள் முன் நீட்டியவன், “நான் அப்படி எதுவும் சொல்லலையே..?” என்றியிருக்க.. இப்போது அருகிலிருக்கும் எதையாவது எடுத்து ஆதியின் தலையில் போட வேண்டும் என்கிற வெறி வெண்பாவிற்கு எழுந்தது.

அதில் அவனை முறைத்துக் கொண்டே வெண்பா நின்றிருக்க.. “இங்கே பார் ஓய்ட்டி.. ஒண்ணு நான் சொன்னதை அவன் தப்பா புரிஞ்சுட்டு இருக்கணும்.. இல்லைனா உன்கிட்டே மாற்றி சொல்லி இருக்கணும்..” என்றவன் நிதானமாக அவள் முன் இருந்த இருக்கையில் அமர்ந்தவாறே அவளுக்கும் ஒரு இருக்கையைக் காண்பித்தான்.

ஆனால் அதில் அமராமல் வெண்பா முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்றிருக்க.. தானும் எழுந்து கொண்டவன் “நானா தேடிப்போய் பிரகாஷ்கிட்ட எதுவும் பேசவும் இல்லை.. கேட்கவும் இல்லை.. அவனா என்னைத் தேடி என் வீட்டுக்கு வந்து இதைச் செய்யாதே அதைச் செய்யாதேன்னு என்கிட்டே சொன்னான்.. அதுதான் அதை நீ சொல்லாதே தேவைன்னா வெண்பா வந்து சொல்லட்டும்னு சொன்னேன்..” என விளக்கினான் ஆதி.

“அதான் நானே வந்து சொல்லிட்டேன் இல்லை.. இனி என்னை தொல்லை செய்யாதீங்க..” என ஆதி சொல்ல வருவதை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் வெண்பா பதில் அளித்திருக்க..

அடுத்து ஆதியின் பேச்சிலும் செயலிலும் செய்வதறியாது திகைத்தவள் சில நொடிகள் செயலற்று நின்று பின் தன்னை மீட்டெடுத்துக் கொண்டு வேகமாக அவனிடமிருந்து விடுபடப் போராட..
அவனோ நிதானமாக அவளுள் மூழ்கிக் கொண்டு இருந்தான்.

அது வேறு வெண்பாவிற்கு ஆத்திரத்தை தூண்ட.. ஒரு வேகத்தோடு தன்னிடமிருந்து அவனைப் பிடித்துத் தள்ளியவள் ‘பளார்’ என அறைந்து விட்டு அங்கிருந்து வேகமாக வெளியேறி இருந்தாள்.

இதை எதிர்பாராமல் திகைத்தவன் அவனது கன்னத்தில் கை வைத்தபடியே நின்றவன், எதிலிருந்தோ தப்பிப்பது போல ஓடிக்கொண்டிருப்பவளையே புன்னகை முகமாகப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் ஆதி.

**********

உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கும்.. விலை ரூ. 40 மட்டுமே.. விருப்பம் உள்ளவர்கள் வாங்கி படித்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்❤❤

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
30079
ஹாய் டியர்ஸ்

ஒரு சந்தோஷமான விஷயத்தை உங்களோடு பகிர்ந்துக்க வந்துருக்கேன்😍😍

எஸ்எம்எஸ் அழகிய சங்கமம் 3 போட்டியில் வெற்றி பெற்ற "நின்னைச் சிந்தையாலும் தொடேன்..!!" கதை விரைவில் புத்தகமாக வெளி வர இருக்கிறது❤️❤️

இந்த போட்டியை சிறப்பாக நடத்திய எஸ்எம்எஸ் தள குழுமம் மற்றும் ஸ்ரீகலா பதிப்பகத்தாருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்😍😍

தொடர்ந்து வாய்ப்பளித்து வழி நடத்தும் ஸ்ரீ அக்காவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்❤️❤️

விரைவில் புத்தகமாக வரவிருக்கும் இந்த புத்தகத்தை வாங்க விரும்புபவர்கள் வாங்கி படித்து மகிழுங்கள்❤️❤️❤️

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்


"உன்னை அமுதவிஷமென்பதா..!!" (இரண்டாம் பாகம்) பதிவேற்றம் செஞ்சாச்சு❤️❤️❤️


ஆவலோடு காத்திருந்தவர்கள் எல்லாம் படித்து விட்டு உங்கள் கருத்துக்களையும் ரேட்டிங்கையும் மறக்காமல் என்னோடு அங்கேயே பகிர்ந்து கொள்ளுங்கள்..


முதல் பாகம் லிங்க்




வெளிநாட்டில் வாசிப்பவர்களுக்குக்கான லிங்க்




இரண்டாம் பாகம் லிங்க்




வெளிநாட்டில் வாசிப்பவர்களுக்கான லிங்க்




இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
30421

ஹாய் டியர்ஸ்

#pentopublish5

இதோ நானும் வந்துட்டேன் 😍😍

நீங்க ஆசைப்பட்டு கேட்ட க்ரைம் திரில்லர் வகை முழு நாவல்...

"தன்மயா..!!"



படித்து விட்டு பிடித்திருந்தால் மறக்காமல் உங்கள் கருத்துக்களையும் ரேட்டிங்கையும் அங்கேயே பதிவிடுங்கள்..

இது போட்டி கதை என்பதால் உங்களின் ஒவ்வொரு கருத்தும் ரேட்டிங்கும் அங்கு கணக்கிடப்படும்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
30512

ஹாய் டியர்ஸ்

வாழ்த்துக்கள் தெரிவித்த அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

#pentopublish5

கதையான "தன்மயா..!!" இன்று ஒரு நாள் (24 - 8 - 2022) மதியம் 12.30 மணி முதல் நாளை மதியம் 12.30 வரை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்...

கொலையாளி கதையை படித்து விட்டு அதே போல் முழு நீள க்ரைம் திரில்லர் கதை வேண்டுமென என்னிடம் கேட்ட தோழிகள் இந்த கதையை படித்து மகிழலாம்..

இது ஒரு இன்வஸ்டிகேஷன் திரில்லர் கூடுதலாக இதில் நம் சஞ்சய் வருகிறான்.. விருப்பம் உள்ளவர்கள் படித்து மகிழுங்கள்..

கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னோடு அங்கேயே பகிர்ந்து கொள்ளுங்கள்.. இது போட்டி கதை என்பதால் உங்களின் ஒவ்வொரு கருத்துக்களும் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.. பாசிட்டிவ் நெகட்டிவ் என எதுவாக இருந்தாலும் உங்கள் கருத்துக்களை அங்கே பதியுங்கள்.. நன்றி ❤️❤️



இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
30522

ஹாய் டியர்ஸ் ❤️❤️

இன்றைய நாளை மறக்க முடியாத நாளாக மாற்ற மற்றுமொரு சந்தோஷமான விஷயத்தோடு வந்திருக்கிறேன் 😍😍

என் கதைகளை இனி யூ டியூபிள் ஆடியோ நாவல்ஸாகவும் கேட்கலாம் ❤️

உங்களுக்காகவே கவி சந்திரா ஆடியோ நாவல்ஸ் இன்று முதல் செயலப்பட துவங்குகிறது..

மறக்காமல் கீழே உள்ள லிங்கில் சென்று சேனலை சப்ஸ்க்ரைப் செய்து அருகில் உள்ள பெல் ஐகானையும் கிளிக் செய்து கொள்ளுங்கள்❤️❤️

அப்போது தான் நான் போடும் வீடியோ உங்களை தவறாமல் வந்தடையும்..


அப்படியே உங்களின் கருத்துக்களையும் மறக்காமல் அங்கே சொல்லி செல்லுங்கள் 😍😍

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 
Status
Not open for further replies.
Top