All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Raji,
Indha kadhai iniki thaaan start panen.... Yenaiye marrandhutten ....🙄🙄🙄na yaru nu kadaisila yosika vachuteenga.....👏👏👏👏👏Sema ......guess work panavey mudila yaru hero yaru villain , ila yaru unmaiyana sirajseev nu Suthama therila ...... Manvi nilamai romba paavam
நன்றி ☺

மான்வியும் கில்லாடி தான்😉
 

Shalini M

Bronze Winner
பழைய பாக்கி 1 இன்னைக்கு ud 1 டியர் எஸ்ட்ரா venummuna தெளிவா கேளு செல்லம் total 3vanum அப்படின்னு🤣🤣🤣
Three ud venum sis..... nengalum தெளிவா மறக்காம போடுங்க ud ah....
Reception mood la மறந்தரதிங்க....
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நேற்று தான் அணைத்து பதிவுகளையும் படித்து முடித்தேன். செம விறுவிறுப்பாக கதை சென்று கொண்டிருக்கிறது. பத்திரிக்கை துறையில் சாதிக்க நினைக்கும் மான்வி, வெங்கட்டை இணைத்து கொண்டு தகவல்கள் சேகரிப்பது, பின் துணிச்சலாக சென்று அங்கே வேலை பார்ப்பவர்களை போல உள்நுழைந்து தகவல் திரட்டுவது அருமை. சிரஞ்ஜீவ் - ஒற்றை பார்வையிலேயே அனைவரையும் நடுங்க வைக்கிறான். கண்ணசைவிலேயே காரியத்தை நடத்துகிறான். மான்வி அந்த டிஸ்ஸு பேப்பரை கீழே எரியும் போதே மாட்டிக்கொள்ள போகிறாள் என தோன்றியது. ஆனால் உடனே மாட்டிக்கொள்வாள் என நினைக்கவில்லை. அவள் சுதாரிக்கும் முன் இவன் அவர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டான். அவளின் தைரியத்தையே அடியோடு களைந்து விட்டானே... ஹப்பா படிக்கும் நமக்கே நடுக்கத்தை கொண்டு வந்து விட்டீர்கள். தன்னை மீட்டுக்கொள்ள முடியவில்லை என்றாலும் தன் தொழிலில் சிறுது கவனம் செலுத்த தொடங்கும் சமயம் மீண்டும் அவனை சந்திக்க நேர்கிறது. அவன் பார்வையில் இவள் தன்னை மறைத்து கொண்டாலும் அவன் பார்வையில் எதுவுமே தப்பவில்லை. லிப்ட்டில் அவன் அவளை மீண்டும் மிரட்டுவது நீங்கள் சொன்னது போல் பிஸிக்கல் டார்ச்சரை காட்டிலும் மனதால் பலகீன படுத்துவது இன்னும் கொடியது. ஹப்பா அவன் கதாபாத்திரத்தை எவ்வளவு அழகாக செதுக்கியிருக்கறீர்கள். அவன் பெயரை கேட்டவுடனே நடுங்க வைக்கும் வண்ணம், அபாரம் 👏👏👏👏 ஈஸ்வருக்கும் அவனுக்கும் உள்ள முக ஒற்றுமை மான்வியை அவனை பழிவாங்க உந்துகிறது. அதை அவள் ஈஸ்வரிடம் கூறும் போது அவன் உடனே சம்மதித்து, அதை வெகு சிரத்தை எடுத்து செயல்பட விழைகிறான். நடு இரவில் சிரஞ்சீவை போல் காட்சி தந்து மான்வியை ஆனந்தத்தில் ஆழ்த்துகிறான். ஆனால் அடுத்த நாள் அவர்கள் இரயிலில் இருந்து இறங்கியவுடன் கடத்த படுகிறார்கள். பிரதாப் வந்தவுடன் ஈஸ்வர் பேசும் போது தப்பிக்கும் பொருட்டு தான் அவ்வாறு பேசுகிறான் என்ற எண்ணம் தான் தோன்றியது. பின்னர் மான்வியுடன் உரையாடும் போது தான் அவனின் மாற்றம் புரிகிறது. முதலிலேயே அவன் குணத்தை குறித்து நீங்கள் கோடிட்டு காட்டியிருந்தாலும் கூட அவன் வித்தியாசமாக, இண்டெர்ஸ்ட்டிங்காக செய்ய ஆசைப்படுகிறான், அதனால் தான் மான்வியின் ப்ரொப்பசனை கூட ஊக்குவிக்கிறான் என்று தோன்றியது. ஆனால் அவனுள் இப்படியொரு முகம் ஒளிந்திருக்கும் என நிச்சயமாக தோன்றவில்லை. அவனின் இந்த மாற்றம், கதையின் அபாரமான திருப்பம் என உங்களை பாராட்ட வேண்டும். ஒரு திரைப்படத்தின் இன்டெர்வல் சீன் போல் தான் இருந்தது இந்த காட்சி . மான்வி ஒப்புக்கொள்ளவில்லை என்றவுடன் அவளை கட்டிபோடவும் தயங்கவில்லை அவன். பேசிய சிறுது நேரத்திலேயே அனைவரையும் அவன் கட்டளைக்கு பணிய வைத்துவிட்டான். பிரதாப்பே குழம்பிவிட்டார் நாம் தான் இவனை கடத்தினோமா என்று. அவனின் இந்த மாற்றம் மான்வியை அருவருக்க வைக்கிறது. அவன் தீட்டிய திட்டத்தை செயல்படுத்தி வெற்றி பெற்று விட்டார்கள். லிப்ட்டில் சீரஞ்சீவ் போல நடித்து எப்படியோ சமாளித்தும் விட்டான். மான்வி சிரஞ்ஜீவ்வுக்கு எச்சரிக்கை விடுக்கும் முன் அவன் போட்ட திட்டத்தை நிறைவேற்றி விட்டான். சீரஞ்சீவ் கூட எப்படி நடந்து கொள்வான் என அனுமானிக்க முடியும் ஆனால் ஈஸ்வர் எப்போது எப்படி செயல்படுவான் என அனுமானிக்க முடியாதபடி இருக்கிறது அவன் பாத்திரம். இப்போது ஈஸ்வர் தான் வில்லனா எனும் வகையில் கதை நகர்வது அருமை 👌
வாவ்... இருவரை பற்றி அருமையா சொல்லிட்டிங்க..

இருவரும் இரு சிங்கங்கள் தான்
 
Top