All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
வானெல்லாம் கருமேகங்கள் போர்வையாய் விரிந்திருக்க , சிந்திய மழையது பெருவெள்ளமாய் தெருக்களில் ஓட, பெய்திருந்த மழையின் நினைவாய் சின்ன சிறு தூறல் அங்கே சாரலாய் தூவ அந்த அந்தி மாலை பொழுதது ரம்மியமாய் இருந்தது.
இயற்கையது தன் கரம் கொண்டு ஏழு நிற வண்ணமதை (வானவில்) வானில் தீட்டியிருக்க அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர் அங்கிருந்த சிறுவர்கள்.
அன்று ஏனோ உலகமே அழகாய் தோன்றியது ஆதிக்கு. அழகான உடை உடுத்தி ராஜ குமாரனை போல இறங்கிடும் தன்னுடைய மகனை கணவனுக்கு உணவு பரிமாறியபடி இமைக்காமல் பார்த்தார் செந்தாமரை.
அவரது பார்வை போன திசையை பார்த்த கார்த்திகேயனும் மகனின் கம்பீரத்தில் மலைத்து நின்றார். மெதுவாக தன்னுடைய மனைவியை நோக்கி கண்சிமிட்டியவர் 'எனது மகனைப் பார்த்தாயா? ' என்பது போல பெருமையுடன் தனது மீசையை முறுக்கி விட்டுக் கொண்டார்.
அதில் செந்தாமரையின் முகம் உண்மையான செந்தாமரையின் நிறத்தினை பூசிக் கொண்டது. பெற்றவர்களின் காதல் நாடகத்தை கண்ட ஆதிக்கு புன்னகை அரும்பியருந்தது.
அவன் அணிந்திருந்த கருப்பு சட்டையும், சந்தன நிற பேண்ட்டும் அவனது நிறத்திற்கு வாகாய் பொருந்தியிருந்தது.
அவனது கையில் அவன் அணிந்திருந்த சில்வர் ஜெயின் அவனுக்கு மேலும் அழகைச் சேர்த்தது. தன்னுடைய தாயின் அருகில் வந்தவன் "ம்மா.... கொஞ்சம் வெளியில போகணும். என் கூட வாங்க"
அவன் எங்கே அழைக்கிறான் என்றுத் தெரியாவிட்டாலும் தன்னை அழைத்ததில் மகிழ்ந்தவர் தனது கணவனை அழைக்காததைக் கண்டு மௌனமானார்.
அவரது முகத்தில் தோன்றிய கேள்வியை உணர்ந்தவன் " நீயும் அவரும் ஒண்ணுதான.தனியா அவரக் கூப்டாதான் வருவாரா??? " என்று கேள்வியோடு தந்தையை நோக்கினான்.
கார்த்திகேயனோ தன்னிடம் ஜாடையாகவாவது பேசிய மகனை நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்தார். "ஆமாம்டா குட்டிமா நீயும் நானும் ஒண்ணுதான.. " என்று ஆழ் குரலில் கேட்க தாமரையின் தலை தானாய் ஆடியது.
"அப்புறம் என்ன போகலாம் வா" என மனைவியின் கரம் பற்றியவர் தங்களது அறையை நோக்கிச் சென்றார்.
ஆதி அழைத்ததும் எங்கே என்று கேட்காமல் அவனுடன் வந்த பெற்றோரை அவன் அழைத்து வந்த இடம் மதியின் வீடு. பூவைப் போல மென்மையாய் சாரல் தூறிக் கொண்டிருக்க காரை விட்டு இறங்கிய செந்தாமரையோ திரு திருவென விழிக்க , கார்த்திகேயனோ உடனே அந்த வீட்டை அடையாளம் கண்டு கொண்டார்.
அவரது நெற்றியில் சிந்தனையின் சுவடுகள் நீண்ட சுருக்கங்களை தீட்டியிருந்தன . 'ஆதி எதுக்காக பாலமோகன் வீட்டுக்கு கூட்டிட்டு வரான். என்னவா இருக்கும்' அவரது சிந்தனை தடை செய்தான் அவளது புதல்வன்.
"ம்மா.... வாங்கமா.... உள்ள போகலாம்"
"இது யார் வீடு ஆதி"
"எல்லாம் வேண்டியவங்க வீடு தான் வாங்க...." என்ற படி அவன் முன்னால் செல்ல கணவனை குழப்பமாய் பார்த்தார் செந்தாமரை.
கணவனது கண்ணசைவில் நிம்மயியுற்ற பின்னே ஆதியை பின் தொடர்ந்தார். திடிரென ஆதியின் நடை தடை பெறவும் கேள்வியோடு அவனை நோக்க அவரது மகனோ சுற்று புறம் மறந்து எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனது பார்வை போன திசையை கண்டவர் ஒரு நிமிடம் சிலையாகி போனார்.
கருமேகங்கள் மழையெனும் அமிர்தமதை மண்ணுக்கு தந்திட மறைந்து விட்ட வெண்ணிற முகில்களுக்கு பதிலாக பால் வண்ண உடையுடுத்தி பேரெழில் தேவதையாய் ஜொலித்தாள் மதி.
வீட்டு மாடியின் முகப்பதினில்(balcony ) மழைச்சாரல் தன்னை பனியில் நனைந்த ரோஜாவை போல மாற்றியிருப்பதை அறியாமல் எங்கேயோ வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தாள் மதி. பேரெழில் கொண்ட தேவதையது நின்றிப்பதை ஒத்திருந்தது அவளது நிலை.
தன்னுடைய நிலையே இதுவென்றால் தனது மகனது நிலையைக் காண திரும்பியவர் அதிர்ந்து நின்றார். அவர் அறிந்த வரை ஆதி அவரையும் அவன் தனது சகோதரியாக கருதும் அந்த பெண்ணையும் தான் நிமிர்ந்து பார்த்திருக்கிறான். இன்றோ கண்களிலேயே காதலை படரவிட்டு மாடியில் நின்றிருந்த பெண்ணை பார்ப்பது அவருக்கு அதிர்ச்சியாயிருந்தது.
இந்த வீட்டிற்கு அவன் அழைத்து வந்த விவரமதை ஒரு நொடியில் யூகித்தவருக்கு மனம் முழுவதும் மகிழ்ச்சியே... அடுத்த நொடியே அவரது கணவனிடம் தனது கண்டுபிடிப்பை தெரிவித்துவிட அவரது கணவனோ அதிர்ந்து போய் நின்றிருந்தார்.
"அடடே.... வாங்க தம்பி" என்ற காவலாளியின் வார்த்தைகளில் தன்னுணர்வு அடைந்த ஆதி அவரிடம் தலையசைப்பை பரிசலித்து விட்டு வீட்டினுள் நுழைந்தான்.
முன்பொரு நாள் அவன் மதியை காப்பாற்றி அழைத்து வந்திருந்ததினால் அவனை அங்கிருந்த யாரும் தடுக்க வில்லை.
வீட்டினுள் நுழைந்தவனை முதலில் எதிர் கொண்டது பாலமோகன் தான். "தம்பி.... வாங்க... வாங்க.... அன்னைக்கே உங்கள பாக்கணும்னு நினச்சேன்... அப்பா ... அம்மாவும் வந்துருக்காங்கலா.... வாங்க கார்த்திகேயன்... வாம்மா..." என்ற படி ஆர்ப்பாட்டமாய் வரவேற்றார்.
பாலமோகனும் , கார்த்திகேயனும் தொழில் நிமித்தம் அடிக்கடி சந்தித்துள்ளனர். அவர்களை வரவேற்று அமர செய்தவர் அங்கிருந்த தங்கையிடம் விவரம் சொல்ல அவரின் பங்குக்கு அவர்களை வரவேற்றவர் உள்ளே சென்றார்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் அனைவருக்கும் காபி மற்றும் இனிப்பு வகைகளை எடுத்து கொண்டு வந்தார் மதியின் தாய் சரளா.
இனிமையாய் நகர்ந்து கொண்டிருந்தன மணித்துளிகள் மதி படிகளில் இறங்கி வரும் வரை. மதி வந்ததும் ஆதி அவளை விட்டு பார்வையை எங்கும் திருப்பவில்லை. "வாம்மா மதிச்செல்லம் வந்து ஆண்டி கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோ" என்ற அன்னையின் குரலில் நிமிர்ந்து பார்த்தவள் ஆதியைக் கண்டதும் திகைத்தாள்.
அவளின் திகைப்பை ரசித்தவன் அவளையே பார்க்க மதியோ மீண்டும் தலை கவிழ்ந்து அவனின் தாயின் பாதம் பணிய அவளை தனது மருமகளாக எண்ணி மனமாற வாழ்த்தினார் செந்தாமரை.
மதியின் இதயம் வேகமாக துடித்தது. ஏனோ இனம் புரியாத பயம் அவளை சூழ்ந்து கொண்டது. கார்த்திகேயனிடம் ஆதியின் உதவியைப் பற்றி பேசிக்கொண்டிருந்த பாலமோகன் மனைவியிடம் கண்ஜாடைக் காட்ட அடுத்த நொடி தட்டில் பழம் மற்றும் பூவோடு மதியின் திருமண பத்திரிக்கையை கார்த்திகேயன் மற்றும் செந்தாமரையிடம் நீட்டினார்.
"இன்னும் நாலு நாள்ல என் பெண்ணுக்கு கல்யாணம் நீங்க கண்டிப்பா வரணும்" என்று முடிக்க அதிர்ந்து போய் மகனை பார்த்தார் செந்தாமரை. அவனோ மதியை பார்த்துக் கொண்டிருந்தான்.
கணவனோ எதுவும் கூறாமல் பத்திரிகையை வாங்கி கொள்ள அவருக்கு தான் இதயம் கனத்தது.
ஆதியோ சற்று தொலைவில் நின்றிருந்த மதியை பொறுமையாய் நெருங்கி " மதி" என்றழைக்க அவளோ உடல் நடுங்க அவனை நிமிர்ந்து பார்த்தாள். "உனக்கு கல்யாணமாம் உங்க அப்பா சொல்றாங்க. ஆனா கல்யாணம் உன் அத்தான் கூடனு தப்பா சொல்றாங்க" என்றுரைக்க அங்கிருந்த அனைவரும் அதிர்ந்திட "ஆதி..." "தம்பி ..... என்ன விளையாடுறீங்களா" என்று கார்த்திகேயனும் பால மோகனும் சப்தமிட அவர்களை கண்டு கொள்ளாமல் தன்னுடைய பேண்ட் பாக்கெட்டினுள் ஸ்டைலாக கைவிட்டு நின்று கொண்டிருந்தவன் யாரும் எதிர்பாராத நொடியில் தனது பாக்கெட்டினுள் இருந்த திருமாங்கல்யத்தை மதியின் கழுத்தில் கட்டியிருந்தான். சரியாக அந்த நிமிடம் வீட்டினுள் நுழைந்தான் வினய்.
மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தாள் ஹரிணி. அணிந்த உடை முழுவதும் உதிரத்தால் நனைந்திருக்க தன்னுணர்வின்றி மயங்கி கிடந்தாள்.
காலையில் பட்டு புடவையில் தேவதையென நடமாடிய மகள் இப்படி சுயநினைவின்றி இருப்பதைக் கண்டு அந்த அன்பான தந்தையுள்ளம் கண்ணீர் வடித்தது.
அவரது இதழ்கள் ஓயாமல் இறைவனை வேண்டிக் கொண்டிருந்தன. நிமிடங்கள் அதிகரித்தாலும் யாரும் எந்த தகவலையும் சொல்லவில்லை. யுகங்களாய் கழிந்த நொடிகளில் இறைவனை வேண்டிக் காத்திருக்கும் பக்தனை போல அவசர சிகிச்சை பிரிவின் வாசல் கதவையேப் பார்த்துக் கொண்டிருந்தார் ராஜன்.
தவத்திற்கு பலன் போல அறைக் கதவு திறக்கப் பட்டது. தனது வயதையும் மறந்து அடுத்த நொடி ஓட்டமாய் அங்கே போய் நின்றார்.
வெள்ளைச் சீருடை அணிந்து ஒரு செவிலி அங்கே நிற்கவும் 'எம் பொண்ணுக்கு ஒண்ணுமில்லையேமா. சொல்லுங்கமா'
என்று கேட்கையிலேயே அவருக்கு கண்கள் கலங்கியது.
அவரது நிலையைப் பார்த்த செவிலி பெண்ணிற்கு அவர் மீது இரக்கம் தான் தோன்றியது. "ஐயா.... உள்ள டாக்டர்ஸ் பாத்துகிட்டுருக்காங்க. கொஞ்ச நேரம் பொறுமையாய் இருங்க. இந்தாங்க இதெல்லாம் உங்க பொண்ணு போட்டிருந்த நகைங்க." என்ற படி அவரது கரங்களில் நகைகளை கொடுத்து விட்டு மீண்டும் உள்ளே சென்று விட்டார்.
அந்த நகைகளை வாங்கியவரது கைகள் நடுங்க தொடங்கியது. அவரது இதயம் வேகமாக துடிப்பது அவருக்கு தெளிவாக கேட்டது. எந்த நொடியும் அதன் வேகம் நின்றுவிடும் என்று அவருக்குத் தோன்றியது.
கைகளில் இருந்த நகைகளை பார்த்தவருக்கு கண்ணீர் கரைபுரண்டு ஓடத் துவங்கியது. 'இந்தாங்க உங்க பொண்ணு என்று இருபது வருடங்களுக்கு முன் தன் மனைவியின் உதிரத்திலிருந்து வெளிவந்த மகளை கரங்களில் ஏந்திய பொழுது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இன்று அதே மகளின் உதிரங்களந்த நகைகளை கரங்களில் ஏந்திக் கொண்டிருக்கிறார்.
ஆண்மகன் என்பதையும் மீறி அவர் கதறி அழ மருத்துவமனை வளாகமே அவரை பார்த்து பரிதாபப்பட்டது.
தன்னவள் தன்னிடம் காதலை வெளிப்படுத்தியதை நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்தான் அத்து. கை தொடும் தொலைவில் தன்னவள் இருந்தும் இத்தனை நாள்கள் தன் காதலை சொல்ல முடியாததை நினைத்து அவனது உள்ளம் கதறிக் கொண்டிருந்தது. இன்றோ அவளது விழியோடு தன் விழியும் கலந்து காதலை சொல்லியத் தருணங்கள் அவனது சிந்தையில் எழுந்து அவனை பித்தம் கொள்ள வைத்தன.
கண்ணிமைக்கும் நேரத்தில் அனைத்தும் நடந்து முடிந்து விட்டது. இதோ இந்த நொடி மதி ஆதியின் மனைவி. அனைவரும் அதிர்ச்சியில் உறைந்திருக்க முதலில் சுயவுணர்வுக்கு வந்தவன் வினய் தான்.
"ஆதி....." என்றுக் கூக்குரலிட்டவன் ஆதியின் சட்டைக் காலரை கொத்தாக பிடித்து ஆதியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். அதில் ஆதியின் உதடு கிழிந்து இரத்தம் வந்தது.
அதைக் கண்டு செந்தாமரையின் மனம் துடித்தது. இருப்பினும் மகன் செய்தது தவறல்லவா?
ஆகையால் அவரால் அவனுக்கு ஆதரவாக செயல்பட முடியவில்லை.
அடுத்த அறையை கொடுக்க கையை ஓங்கிய அடுத்த நொடி
பலமான எதைக் கேட்டது. வினய் அங்கிருந்த நாற்காலியில் மோதி விழுந்திருந்தான்.
ஆதி ருத்ரமூர்த்தியாக நின்றிருந்தான். கண்கள் சிவந்திருக்க உதட்டலிருந்த இரத்தத்தை தனது கைகுட்டையால் துடைத்தவன் வினயை துவம்சம் செய்யும் எண்ணத்தோடு அவனை நெருங்கினான்.
ஆதி வினயை அடிக்க கையை ஓங்கிய சமயம் ஆதியின் கன்னத்தில் இடியென ஒரு கரம் பதிந்தது. ஆதியின் உதடுகளில் வழிந்த உதிரம் சற்று முன் செய்திருந்த வேலை நிறுத்தத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் தனது பணியைத் துவங்கின.
ஏற்கனவே ருத்னமூர்த்தியாய் இருந்தவன் இப்போது தன்னை அடித்தவரின் உயிரைப் பறித்திடும் கோபத்தோடு திரும்ப அதிர்ந்து போய் நின்றான். ஓங்கியகருந்த அவனது கரங்கள் தொய்ந்து நிலம் நோக்கி விழுந்தன. அவனது கண்களோ கோபத்திற்கு பதில் வலியை பிரதிபலித்தன.
அந்த நொடி ஆதியின் கண்களில் தெரிந்தது ஏமாற்றமே......
தாமதத்திற்கு மன்னிக்கவும். ஒவ்வொரு முறையும் உங்களிடம் மன்னிப்பை வேண்டிக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து பதிவிடதான் நினைக்கிறேன். ஆனாலும் இயலவில்லை. பணி முடிந்து இரவு எழுத நினைத்தால் முடியவில்லை. மேலும் என்னிடம் மடிக்கணினி இல்லை. தொலைபேசியிலிருந்து தான் பதிவிடுகிறேன்.
ஆகையால் பெரிய பதிவினை தர முடியாமல் திணறுகிறேன்.
இருப்பினும் தொடர்ந்து பதிவிட முயலுகிறேன். தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் மேலும் உற்சாகத்துடன் எழுதுவேன்.
சிறுவயது முதலே அவனை யாரும் அடித்தது இல்லை. அவனது தந்தையும் தாயும் அவனை எதற்காகவும் அடித்தது ஏன் திட்டியதும் கூட இல்லை.
பள்ளிகளிலும், கல்லூரியிலும் கூட அவனை யாரும் எதிர்த்தது கிடையாது. இதுவரை அவனது வாழ்வினில் அவன் யாரிடமும் தலை வணங்கியது கூட கிடையாது.
அப்படிபட்டவன் தன் மனதில் காதலியாய் வரித்தவளது முன் ஒருவன் தன்னை அடிக்கவும் அது அவனது தன்மானத்தை சீண்டியது போலானது.
எந்தவொரு ஆண் மகனும் தன் மனம் கவர்ந்தவளது முன் தன்னை நாயகனாகவே காட்டிக் கொள்ள நினைப்பான்.
வினய் அவனை அடித்ததும் மதியின் பார்வையில் தான் கீழிறங்கி விட்டோமோ என்ற நினைவில் தான் வினயை கொன்று விடும் கோபத்தில் அவனை நெருங்கினான்.
ஆனால் அதற்குள் தனது கன்னத்தில் இடியென யாரோ அறையவும் தனது கோபம் முழுவதையும் அவர்புறம் திருப்பி அவரை துவம்சம் செய்திடும் எண்ணத்தோடு நிமிர்ந்து பார்த்தான்.
அங்கு அவன் கண்ட காட்சியில் ஓங்கியிருந்த அவனது கைகள் தாமாக தொய்ந்து விழுந்தன. அவனது கண்களிலோ உயிர் போகும் வலி தென்பட்டது.
வலியோடு நிமிர்ந்து பார்த்தவனது உதடுகள் முணுமுணத்தன "மனும்மா" என்று. அவனது உச்சரிப்பு அங்கு யாருக்கும் கேட்கவில்லை. அவனும் அதை நினைத்து வருந்யவில்லை.
சற்று முன் தன்னை அடித்த வினயை கொன்று விடும் அளவிற்கு கோபம் கொண்டவன் தன் முன் இருப்பவரைக் கண்டு அமைதியினான்.
ஏனெனில் அவனை அறைந்தது ஐந்து நிமிடங்களுக்கு முன் தாலிக்கட்டி தன்னுடைய மனைவியாக ஏற்றுக் கொண்டவள் அல்லவா???
"ஏண்டா இப்படி பண்ண. நா உனக்கு அப்படி என்னடா பண்ணேன். எங்கிட்ட ஒரே ஒரு தடவ உதவி தானக் கேட்டேன். அதுக்காக எனக்கு இந்த தண்டனையா???? என் வாழ்க்கையையே இப்படி நாசம் செஞ்சிட்டியே. சொல்லுடா ஏன் இப்படி பண்ண" என்ற படி அவனை மாறி மாறி அறைந்து கொண்டிருந்தாள் மதி.
கீழே விழுந்து கிடந்த வினயை அவனுடைய தாய் தங்கம் ஆறுதலாய் கைபிடிக்க அவன் மெல்ல எழுந்தான். அவனது நெற்றியில் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
மதியோ தனது அடிகளை நிறுத்தவில்லை. ஆதியோ துளி கூட கோபமோ வன்மமோ காட்டவில்லை.மரம் போல நின்றிருந்தான். அவனது கண்களில் இருந்த வலி அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை ஒருவரைத் தவிர. அவருக்கு ஆதியின் மனம் நன்றாக புரிந்தது.
இருப்பினும் ஒரு பெண்ணின் விருப்பமின்றி அவளது கழுத்தில் தாலிக் கட்டியவனுக்கு ஒரு பெண்ணாய் அவரால் துணைப் போக முடியவில்லை.
கார்த்திகேயனோ மகனது செயலில் தலை குனிந்து நின்றிருந்தார். இது வரை யாரிடமும் தலை வணங்கும் அவர் அங்கிருந்த அனைவரையும் காண வெட்கி தலைகுனிய , செந்தாமரையின் கண்களோ குளம் கட்ட , மதியின் தந்தை தனது பங்கிற்கு அவனை அடிக்க வர, அவரை மதியின் தாய் தடுத்தார்.
இது எதுவுமே அவனது கருத்தில் பதிவில்லை. அவனது கண்கள் முழுதும் தன்னை அடிக்கும் மனையாளையே பார்த்துக் கொண்டிருந்தது. அவளது கண்களையே பார்த்துக் கொண்டிருந்தது. அவளது கண்களில் இருந்த அதீத வெறுப்பில் ஆதியின் கர்வமெல்லாம் தீயிலிட்ட மெழுகாய் உருகியது.
எந்த கண்களை அவன் ரசித்தானோ , எந்த கண்களில் கரைந்திட துடித்தான் அந்த கண்களில் அவன் வெறுப்பை காண்கிறான் . என்ன முயன்றும் அவனது இதயப்பகுதி அருகே பலமாய் ஒரு வலி பரவுவதை அவனால் தடுக்க முடியவில்லை.
அவனை அடித்தடித்து ஓய்ந்தவள் தரையில் சரிந்து அமர்ந்து கண்ணீர் விட அவளை நோக்கி ஓடி வந்தார் சரளா. "மதிம்மா" எனவும் ஆறுதல் தேடி அன்னை மடியினில் தஞ்சம் அடைந்தாள் அந்த பேதை.
பயந்த சுபாவம் வேறு என்பதால் அவளிடம் யாரும் குரல் உயர்த்திக் கூட பேசியது இல்லை.
நிமிடத்திற்கு நிமிடம் அவளது அழுகை அதிகரித்தது. அதை பார்த்துக் கொண்டிருந்த பாலமோகனுக்கு கோபம் பெருகியது. ஆதி மீது தான் அந்த கோபம் திரும்பியது.
அழுது கொண்டிருந்த மதியிடம் வந்தவர் "மதிம்மா நீ அழ வேண்டிய அவசியம் இல்லடா. உனக்கு விருப்பமில்லாம அவன் உன் கழுத்துல தாலிக் கட்டுனா நீ அத ஏத்துக்கனும்னு இல்ல. அத அவன் முகத்துலயே வீசி எறிடா. வினய உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுறேன்" என்ற படி மணியிடம் அவளது தாலிக்காக கரத்தினை நீட்டினார்.
அதைக் கேட்டு அனைவரும் அதிர்ந்தனர் என்றால் ஆதியோ மதியின் பதிலுக்காக காத்திருந்தான்...
மதியின் பதில் அவனை குளிர்விக்குமா???? இல்லையா??????
ராமினது முகம் தனது இயல்பை தொலைத்திருந்தது. அவனை பின் தொடர்ந்து வந்த காவலர்களைக் கூட அவன் கவனிக்கவில்லை. அவனது நினைவில் நின்றதெல்லாம் கனி மயங்கி விழுந்த அந்த நொடி தான். இலக்கில்லாமல் சென்று கொண்டிருந்தவனது அலை பேசி ஒலித்தது. அதைக் கூட கவனிக்காமல் அவன் வேகமாய் சென்றுக் கொண்டிருந்தான்.
அவனது நேரமோ என்னவோ சாலையில் ஆட்களது நடமாட்டம் குறைந்திருந்தது. அழைப்பு துண்டிக்கப்பட்டு மீண்டும் ஒலித்தது. அதில் தன்னுணர்வு வரப் பெற்றவன் தன்னுடைய கோபத்தை தற்காலிகமாக ஒதுக்கி வைத்தான். ஏனெனில் அழைப்பு வந்தது அவனது தனிப்பட்ட அலைபேசிக்கு. இந்த அலை பேசி எண்ணானது மூவருக்கு மட்டுமே தெரியும். ஸ்ரீ, அவனது தந்தை, கமலா அம்மா. தவிர்க்கவியலா சந்தர்ப்பங்களில் மட்டுமே இந்த எண்ணிற்கு அழைப்பாரகள்.
ஓரமாய் தனது வாகனத்தை நிறுத்தியவன் அவனது அலைபேசியை எடுத்து பார்க்க அதில் அப்பா என்ற பெயர் ஒளிர்ந்தது. அதை கண்டதும் இன்று நடந்த நிகழ்வினை அறிந்து அவனது நலத்தை விசாரிப்பதற்காக அழைப்பதாக எண்ணிக் கொண்டு அந்த அழைப்பினை ஏற்றான்.
'ராம்... நீ நம்ம பீச் ஹவுஸ்க்கு போ. " கட்டளையாய் ஒலித்தது ஈஸ்வரனின் குரல். என்ன ஏதேன்று சொல்லாமல் அவனிடம் கட்டளையிடும் தந்தை மீது அவனுக்கு கோபம் வரவில்லை. மாறாக தன்னுடைய காதலியின் நிலைக்கு காரணமானவர்களை தேடிச் செல்ல வேண்டும் என்ற எண்ணமே அவனில் நிலைத்திருந்தது.
"இல்லப்பா.... எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. நா அத முடிச்சிட்டு வரேன்பா"
"ராம் ... நா சொன்னத செய்" என்ற கட்டளையோடு அவர் அழைப்பை துண்டிக்க அவரது பேச்சினை எதிர்த்து பேசி பழக்கம் இல்லாததால் கால்களை தரையில் உதைத்து தன்னுடைய கோபத்தை கட்டுப் படுத்திக் கொண்டவன் அவனது தந்தையின் கட்டளைப்படி அவர்களது பீச் ஹவுஸிற்கு செல்ல தனது பயணத்தை மாற்றினான். இடையிடையே அவனது பாதுகாவலர்களிடம் கொடுத்த பொறுப்பை பற்றிக் கேட்கவும் தவறவில்லை அவன்.
அவன் அந்த கெஸ்ட் ஹவுஸை அவன் அடைந்ததும் அவனுக்காகவே காத்திருந்ததை போல காவலாளி வாயிற்கதவை திறந்து வைத்துக் கொண்டு காத்திருந்தான். இவன் அங்கே சென்றதும் ஒரு வணக்கத்தோடு அவன் விடைபெற ராமோ நடப்பவை எதையும் கண்டு கொள்ளாமல் வீட்டிற்குள் சென்றான்.
வீட்டினுள் சென்று பார்த்தவனுக்கு அதிர்ச்சி. அங்கே நான்கு நபர்களின் கைகள் கட்டப்பட்டு கீழே தரையில் மண்டியிட்டு அமர்ந்திருந்தனர். அவர்களை அவனுக்கு யாரென்று தெரியவில்லை. ஆனால் அவர்களுக்கோ அவனைக் கண்டதும் பேயைக் கண்டது போலானது. அந்த நொடி ராமின் அலை பேசி மீண்டும் ஒலித்தது.
அவனது தந்தை தான்
" அப்பா... சொல்லுங்க" என்ற படி அழைப்பை ஏற்றான். அவனது மனம் மிகவும் குழம்பியிருந்தது.
"ராம் நீ யாரத் தேடி அலைஞ்சியோ அவங்க தான் இப்போ உன் கண்ணு முன்னாடி இருக்காங்க. உனக்கு என்ன பண்ணனும்னு தோணுதோ அத நீ பண்ணிக்கோ.... " கம்பீரமாய் ஒலித்தது ஈஸ்வரனின் குரல். தன்னுடைய மகனுக்கு சளைத்தவர் இல்லையே அவரும்.
தந்தை சொன்னதை கேட்டதும் ராமிற்கு கோபம் வந்தது. தன்னவளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அவனே நியாயம் செய்ய வேண்டும் என நினைத்திருந்தான். ஆனால் அவனது தந்தையோ அவனை ஒன்றும் செய்யவிடாமல் அவரே எல்லாவற்றையும் செய்து விட்டார். ஒரு ஆண்மகனாய் அவனது தன்மானம் சீண்டப்பட்டது.
"அப்பா.... நீங்க எதுக்காக இத பண்ணீங்க. நானே பாத்துருப்பேன். என்னால முடியாதுனு நினச்சிட்டீங்களா" அவனது மனநிலையை உணர்ந்த ஈஸ்வரனோ " ராம் எனக்கு உன் மனசு புரியுது. நீ அவங்கள கண்டு பிடிக்கறதுக்கு கண்டிப்பா என்னோட பேர யூஸ் பண்ண மாட்ட. உன்னால கணடிப்பா நீ கண்டுபிடிச்சுடுவ. ஒரு அப்பாவா எனக்கு நிறைய கடமை இருக்கு . என் நீ வேற என் மருமகள் வேற இல்ல. என் மகன் மேலயும் மருமகள் மேலயும் கை வைக்க எவ்ளோ தைரியம் இருக்கணும். அவங்கள நானே கொன்னுருப்பேன். ஆனா நீ இவங்கள தேடுதுனால தான் உங்கிட்ட ஒப்படைச்சிருக்கேன். என்னப் பொறுத்த வரைக்கும் நா எந்த தப்பும் பண்ணல. நீ அவனுங்கள கவனி" என்ற படி அழைப்பு துண்டிக்கப்பட ராமிற்கு தனது தந்தையை நினைத்து பெருமையாய் இருந்தது . அத்தனை பணிச்சுமைகளுக்கு இடையிலும் தன்னை கண்காணிக்கிறாரே என்று. ஆனால் அவன் ஒன்றை கவனிக்க வில்லை. அவனது தந்தை கனியை தன்னுடைய மருமகள் என்று குறிப்பிட்டதை.
அலைபேசியை வைத்து விட்டு திரும்பியவனின் கண்ணில் பட்டனர் அந்த நான்கு நபர்களும். அதில் கோபத்தின் உச்சிக்கு சென்றவன் அலைபேசியை தூரப்போட்டுவிட்டு அவர்களை நோக்கிச் சென்றான். ராம் ஆறடி உயரம் மட்டுமின்றி அதற்கேற்றாற்போல் வலுவேறிய உடலைக் கொண்டவன்.
முதலில் இருந்தவனின் அருகே சென்றவன் முகத்தில் ஒரு சிறிய குத்து விட அவனது உதடும் மூக்கும் உடைந்து ரத்தம் வந்தது.அதிலேயே மற்றவர்கள் பயப்பட தொடர்ந்து இடைவெளியே இன்றி பதினைந்து நிமிடங்கள் அவனை அடித்தான் ராம். ராமின் பாதுகாவலர்களே இதை எதிர்பார்க்கவில்லை போலும் அவர்களது முகத்திலேயே அவர்களது அதிர்ச்சி தெரிந்தது. எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கும் அவனைப் பார்த்து அவர்கள் வியந்ததுண்டு. இன்று முதல் முறையாக அவனது கோபத்தோடு அவனது உடல் வலிமையையும் பார்க்கின்றனர்.
இன்னும் சற்று அடித்தால் அவனது உயிர் போய்விடும். அதற்குள் ராமின் பாதுகாவலர்கள் அவனை தடுத்திட அடுத்தவனை நோக்கி சென்றான். ஒருவழியாக தனது வெறித் தீர அனைவரையும் அடித்தவன் தனது ஆட்களை அழைத்து "இவனுங்கள கூட்டிட்டு போய் அந்த ரூம்ல வைங்க. இன்னும் அரை மணி நேரத்தில பாக்குறேன் " என்ற படி வெளியே சென்றான்.
அவன் அந்த ரௌவுடிகளிடம் உண்மையை சொல்லும்படியோ காட்டிக் கொடுக்கும் படியோ கேட்கவே இல்லை. அவன் அடித்த அடியில் அனைவரும் உயிர் போகும் வலியில் துவண்டிருந்தனர். அவர்களை நீங்கி வெளியே வந்த ராமிற்கு மருத்துவமனையில் இருந்த கனியின் நினைவு வந்தது. தனது அலைபேசியை எடுக்க அதில் ஸ்ரீயிடமிருந்து ஏகப்பட்ட அழைப்புகள் இருந்தன. தன்னுடைய வலது கையால் தலையைக் தாங்கிக் கொண்டவன் படபடக்கும் இதயத்தோடு ஸ்ரீக்கு அழைத்தான்.
அவனது அழைப்பிற்காக காத்திருந்தது போல அடுத்த கணமே அவனது அழைப்பை ஏற்றான் ஸ்ரீ. "கனி நல்லாயிருக்கா அண்ணா. நீ எங்க இருக்க" என்றான் எடுத்த எடுப்பிலேயே. அவனுக்கு நன்றாக தெரியும் கனியைப் பற்றி தான் தனது அண்ணன் நினைத்துக் கொண்டிருப்பான் என்று.
ராமின் மனம் நிம்மதியடைந்தது. "தேங்க்ஸ்டா ஸ்ரீ . அவ கூடவே இருந்து பாத்துக்க. கண்ணு முழிச்சிட்டாளாடா" ஏக்கத்தோடு வெளி வந்தது அவனது குரல்.
"ம்ம்... நீ எங்க இருக்க அண்ணா" என்றவனிடம் நடந்ததைக் கூறினான். ஸ்ரீக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. தன்னுடைய அண்ணன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நினைப்பை தவிர அவனிடம் வேறு ஒன்றுமில்லை. "அண்ணா... இத யார் செய்ய சொன்னதுனு கேட்டியா "
"இல்லடா...... நா எதுவும் கேட்கல. "
"ஏண்ணா.... அவங்க கிட்ட உண்மைய கேளு. இப்படி பண்ணவங்கள சும்மா விடக் கூடாது"
"சரிடா நா அதெல்லாம் பாத்துக்குறேன். நீ கனிய பத்ரமா பாத்துக்கோ" என்ற படி அழைப்பைத் துண்டித்தவன் மீண்டும் அந்த நால்வரிடம் வந்தான்.
வலியில் சுருண்டு கிடந்தவர்கள் மீண்டும் இவனைக் கண்டதும் அரண்டனர். சின்ன சிரிப்போடு அவர்களை நெருங்கியவன் மீண்டும் தனது கோபத்தை அவர்களிடம் காட்ட அவர்களின் அலறல் ஒலி மட்டுமே அடுத்த சில மணி நேரங்களுக்கு கேட்டது. வலித் தாங்க முடியாமல் அவர்களுள் ஒருவன் "சார் எங்கள மன்னச்சிடுங்க சார்.... நாங்களா எதுவும் பண்ணல சார்.
எங்களுக்கு தெரிஞ்சத நாங்க சொல்லிடுறோம் சார். எங்கள விட்டுங்க" என்று ராமின் காலை பிடித்து கதற அவனை நிதானமாக ஏறிட்ட ராமோ " யார் செய்ய சொன்னாங்கனு நா கேட்கவேயில்லையே... இது நீங்க என் கனி மேல கை வச்சதுக்கான தண்டனை. இந்த கணக்கே இன்னும் முடியல. " என்றான் அமர்த்தலாக.
அதில் அரண்டு போனவர்கள் "சார் நாங்கலாம் ஏழைங்க சார். பணத்துக்கு ஆசப்பட்டு இப்படி பண்ணிட்டோம். இனிமேல் இப்படி பண்ண மாட்டோம். விட்டுங்க சார். " என்றனர்.
ஒரு நிமிடம் அமைதியாயிருந்தவன் " யார் உங்கள இப்படி பண்ண சொன்னது"
"சார் எங்களுக்கு யாருனு தெரியாது. ஒரு வாரத்துக்கு முன்னாடி எங்க விட்டுக்குள்ள ஒரு கவர் இருந்துச்சு. அதுல உங்கள பத்தின விவரம் அப்றம் உங்கள கொல பண்ணனும்னு இருந்துச்சு. அதோட பணமும் வச்சிருந்தாங்க. வேலய முடிச்சா இன்னும் பணம் கிடைக்கும்னு எழுதி இருந்துச்சு. வேற எதுவும் எங்களுக்கு தெரியாது சார் "
அவர்களது பதிலில் அவன் குழம்பி போயிருந்தான். அவனுக்கு எதிரிகள் அதிகமல்லவா. யாரையென்று அவன் சந்தேகிப்பது. இவர்களும் பொய் சொல்ல வில்லை என்பது அவர்களது கண்களில் இருந்தே தெரிகிறது. அவர்களுக்கு உண்மையை சொல்லாவிட்டால் விடுதலை கிட்டுமோ என்ற எண்ணம் மட்டும் தான். குழம்பி போனவன் அமைதியாய் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துவிட்டான்.
"சார்... எங்கள் விட்டுங்க சார். நாங்க தான் உண்மைய சொல்லிட்டோம்ல. "
அதைக் கேட்ட ராம் அவனது பாதுகாவலர்கள் புறம் திரும்பி "இவனுங்க எல்லாரையும் வெளிச்சமே வராத இருட்டு ரூம்ல அடைச்சு வைங்க. ஒரு வேள சாப்பாடு மட்டும் போட்டுங்க. நடுநடுவுல கொஞ்சம் கவனிங்க. உயிரோட மதிப்பு என்னனு இவனுங்களும் தெரிஞ்சுகிட்டும். நா சொல்ற வரைக்கும் விட வேண்டாம் " என்ற படி வெளியேறினான்
அதே நேரம் மற்றோரிடத்தில் "ராம் நீ இந்த முற தப்பிச்சுருக்கலாம். ஆனா உன்னக் கொல்லாம விட மாட்டேன். என்னோட இந்த நிலமைக்கு நீ பதில் சொல்லியே ஆகனும்" என்று கத்திக் கொண்டிருந்தான் ஒருவன். அவனது கண்கள் பழிவெறியில் சிவந்திருந்தன.
அந்த ஆதரவற்றோர்கள் இல்லத்தின் நிறுவனர் அறையில் கவலையோடு அமர்ந்திருந்தார் சீதா. அன்று தனக்கு கடிதம் வரவில்லை என்று ப்ரியா அழுத போது தான் கடைசியாக அவளைப் பார்த்தது. அதன்பின்பு அவளைப் பார்க்கவே இல்லை.
அவளது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என அவர் நன்கறிவார். அதனால் தான் அவளது அலை பேசி எண் மற்றும் அவளது இருப்பிடம் என எதையும் தெரிந்து கொள்ளாமல் இருந்து விட்டார். ஏனெனில் தனக்கு தெரிந்தால் எங்கே ஏதாவது ஒரு சூழ்நிலையில் தன்னையும் மீறி யாரிடமாவது உண்மையைக் கூறி விடுவோம் என்று.
எப்போதும் தன்னால் அவளுக்கு எந்த துன்பமும் வரக் கூடாது என எண்ணி தான் அவர் அப்படி ஒரு முடிவு எடுத்தது. ஆனால் இன்று அதுவே பெரிய பிரச்சனையாகுமென்று அவர் நினைக்கவில்லை.
மாதந்தோறும் அவள் வந்தாலும் அவளுக்கு தோன்றும் நாட்களில் தான் வருவாள். இந்த நாளில் தான் வருவாள் என்று உறுதியாக கூற முடியாது. அன்று அவள் அழுது விட்டு போய் இன்றோடு இரண்டு மாதம் ஆகப் போகிறது. இது வரை அவளும் வரவில்லை தகவலும் வரவில்லை.
அவள் நலமுடன் இருக்கிறாளா என்று அறிய அவரது உள்ளம் அதைக் கொண்டது. அதோடு மட்டுமல்லாது ஏதோ அசம்பாவிதம் நடக்க போவதாக அவரது உள்ளுணர்வு கூறிக் கொண்டே இருந்தது. ஆகையால் அவளை எச்சரிக்க நினைத்தார்.
சரியாக ஒரு வாரத்திற்கு முன்பு சீதாவிற்கு ஒரு கடிதம் வந்தது. அதில் ப்ரியாவின் உயிருக்கு இருந்த ஆபத்து அவளை நெருங்கி வருவதாகவும் இன்னும் வெகு விரைவில் பிரியாவின் உயிரை காவுகொல்ல முயற்சி செய்வார்கள். ஆகையால் ப்ரியா சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் அழித்துவிடுமாறு எழுதியிருந்தது. அவளது புகைப்படம், அடையாளம் என அவளை காட்டிக் கொடுக்கும் எதுவுமே அங்கு இருக்க வேண்டாம் என குறிப்பாக கூறப்பட்டிருந்தது.கிட்டதட்ட பதினெட்டு வருடங்களுக்கு பின்பு அவருக்கு ப்ரியா சம்பந்தமாக கடிதம் வருகிறது. அதனால் தான் இவ்வளவு பயம் கொள்கிறார்.
ப்ரியாவும் அந்த நேரம் சீதாவை தான் நினைத்துக் கொண்டிருந்தாள். "ம்மா.... சாரிமா.... உங்கள பார்க்க வர முடியல. எனக்கு உங்கள பாக்கணும் போல இருக்குமா.... எனக்குனு இந்த உலகத்துல இருக்குற ஒரு உறவு நீங்க தானமா.... ஐ மிஸ் யூ அம்மா" என்ற படி கண்ணீர் விட்டாள்.
இரண்டு மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு வெளியே வந்த மருத்துவக்குழுவினர் வெளியே ஓய்ந்து போய் அமர்ந்திருந்த ஹரிணியின் தந்தையை பார்த்து சினேகமாய் ஒரு புன்னகை புரிந்தனர். அவர்களது புன்னகையை கண்டவுடன் தான் உயிர் பெற்றார் ராஜன். எழுந்து அவர்களருகே ஓடியவர் "டாக்டர்... என் பொண்ணு எப்படி இருக்கா. அவளுக்கு ஒண்ணுமில்ல தான" என மூச்சு வாங்க கேட்கவும் "பதட்டப்படாதீங்க சார். அவங்களுக்கு ஒண்ணுமில்ல. கீழ விழுந்ததுல அவங்க வயித்துல தான் கொஞ்சம் பலமா படி பட்டுருக்கு. அதோட உதிரப்போக்கு இவ்வளவு நேரம் இருந்ததால தான் கொஞ்சம் பயந்தோம். பட் (but) இப்போ நல்லாயிருக்காங்க. எந்த பிரச்சினையும் இல்ல. ரொம்ப வீக்கா இருக்காங்க . நல்லா சத்தான ஆகாரமா கொடுங்க . அப்போ தான் சீக்கிரம் சரியாவாங்க " என்றவர் அங்கிருந்து செல்ல அவசர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண பகுதிக்கு ஹரிணியை இடம் மாற்றினார்கள்.
ஹரிணி இன்னமும் மயக்கத்தில் தான் இருந்தாள். அவளருகே அமர்ந்து தலையை வருடிக் கொண்டிருந்த ராஜனுக்கு அப்போது தான் மனைவியின் நினைவு வந்தது . இவ்வளவு நேரம் தங்களை காணாது மனைவி என்ன பாடுபடுகிறாளோ என்ற கவலையுடன் மனைவிக்கு அழைத்தார்.
கணவனையும் மகளையும் காணவில்லை என தவித்திருந்தவர் அவர்களுக்கு பலமுறை அழைத்து தோற்றிருந்தார். இப்போது கணவரிடமிருந்து அழைப்பு வரவும் பதட்டத்தோடு பேச கணவர் கூறிய தகவலை கேட்டதும் அடுத்த நொடியே அழ ஆரம்பித்து விட்டார். ஒருவழியாக மனைவியை சமாதானப்படுத்தியவர் மகளது நலத்தைப் பற்றிக் கூறினார்.
மனைவியின் பாதுகாப்பை ஒரு வழியாக உறுதி செய்து கொண்டவர் மகளது முகத்தினைப் பார்த்தப்படியே அமர்ந்திருந்தார். மறுநாள் விடியற்காலை எப்போதும் விடிய அத்துவுக்கு மட்டும் ஆனந்தமாய் இருந்தது. இன்று தன்னவளை காண வேண்டும் என ஆவலுடன் கிளம்பினான். காலையிலேயே குளித்து முடித்து வெளிவந்தவனை கண்டு அங்கிருந்த அனைவரும் ஆச்சர்யமாய் பார்க்க அவனோ அவர்களை புன்னகையுடன் ஏறிட்டான். அந்த நேரம் பார்த்து வந்த அவனது மாமா "தம்பி..... எனக்கு ஒரு உதவி வேணும் . செய்ய முடியுமாப்பா" என்றார். இதுவரை அவனிடம் எதுவும் கேட்காதவர் இன்று இப்படிக் கேட்கவும் "சொல்லுங்க மாமா... நா என்ன பண்ணனும்" என்றான்.
"ஆபிஸ் விஷயமா நா கொஞ்சம் மும்பை வரைக்கும் போகணும்பா. என் கூட வர முடியுமா மூணு நாள்ல வந்துடலாம். காலேஜ்ல முக்கியமான கிளாஸ் இருந்தா வேணாம்பா. இல்லனா வரீயா" என்றார். கட்டளையிட்டு வா என்றழைக்க கூடிய உரிமை இருந்தும் பணிவாக அழைப்பவரை எண்ணி வியந்தவன் "என்ன மாமா நீங்க வானு சொன்னா வர போறேன். எதுக்காக இப்படி கேக்குறீங்க" என்றான்.
"சரிப்பா ... நா போய் ரெடியாகுறேன். நீயும் கிளம்பி வா. இன்னும் அரை மணி நேரத்தில் கிளம்பணும்" என்று சென்று விட்டார்.காதலியை சந்திக்க வேண்டும் என மனம் கதறினாலும் அதனை நிராகரித்தவன் கடமையை செய்ய தயாரானான்.
இருப்பினும் மனதின் வலியை அவனால் கட்டுப் படுத்த இயலவில்லை. காதலியின் நினைவுகளை சுமந்து கொண்டு மும்பைக்கு தயாரானான். அந்த நேரத்திலும் தோழனை அழைத்து தான் மூன்று நாட்களுக்கு கல்லூரிக்கு வர இயலாது என்பதை தெரிவித்து விட்டே சென்றான் ஹரிணிக்கு விவரம் தெரிய வேண்டும் என்பதற்காக.
தன்னுடைய உடமைகளுடன் வெளிவந்தவனை அழைத்துக் கொண்டு அவனது மாமா மும்பை செல்ல விமான நிலையத்தை அடைந்தார்.
ஹரிணியை பார்க்க அவளது தாய் பொழுது விடிந்ததும் விடியாததுமாக ஓடி வந்தார். அங்கே படுக்கையில் வதங்கி போய் படுத்திருந்த மகளைப் பார்க்கவும் அவருக்கு கண்ணீர் பெருகியது. மருத்துவமனை என்பதையும் மறந்து கண்ணீர் விட்டு கதறி அழ அந்த சமயம் அங்கே நோயாளிகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த டாக்டர் தேவ் ஹரிணியின் வார்டுக்கு வந்தான்.
வந்துப் பார்த்தவன் ஒரு கணம் தன்னையே மறந்து விட்டான். கண்டிப்பாக அவன் ஒரு தேவதையை அங்கே எதிர்பார்க்கவில்லை. ஹரிணியின் பேரழகு அவனை கவர்ந்திழுத்தது. அவனது இதயமும் அவனது அனுமதி இன்றி அவளது பாதத்தை சரணடைந்தது.
அதற்குள் அங்கிருந்த செவிலிப் பெண் "இந்தாம்மா இங்கெல்லாம் அழகு கூடாது. டாக்டர் வந்துருக்காங்கல வெளியில் போங்க" என்று கத்தினாள்.
பின்னே அவளுக்கு கோபம் வராதா. இந்த மருத்துவமனையிலேயே கல்யானமாகாத மருத்துவர்களில் இவன் தான் அழகாக இருப்பான். ஹீரோ போன்ற தோற்றத்தில் இருந்தவனை தன்னுடைய காதலன் என்று சொல்லிக் கொள்ள அங்கிருந்த அத்தனை செவிலிப் பெண்களுமே விரும்பினர்.
இதுவரை யாரையுமே கண்டுக் கொள்ளாமல் இருந்தவன் ஹரிணி யை வைத்த கண் வாங்காமல் பார்ப்பது அவளுக்கு பிடிக்கவில்லை. ஏமாற்றமடைய அவளது மனம் விரும்பவில்லை. அந்த கோபத்தை தான் அவள் சாந்தியிடம் (ஹரிணியின் தாய்) காட்டியது.
ஆனால் அந்த மருத்துவனோ அந்த செவிலியின் புறம் திரும்பி "அவங்கள கத்த வேணாம்னு சொல்லிட்டு நீங்க தான் கத்துறீங்க ஷீலா . ரிபோர்ட்ஸ் எடுங்க" என்றான்.
"அதில்லைங்க டாக்டர்" என அவனது முன் தனது கோபத்தை காட்ட இயலாமல் அவன் கேட்ட ரிபோர்ட்ஸை எடுத்து தந்தாள். அதைப் படித்து பார்த்தவன் ஹரிணியின் பெயரை மனதிற்குள் கூறி மகிழ்ந்தான். அங்கே கட்டிலில் தேவதையைப் போல துயில் கொண்டிருந்தவளின் அருகே சென்றவன் "ஹரிணி இங்க பாருங்க" என அவனது குரல் கூட அவளுக்கு வலியை உண்டு பண்ணுமோ என பயந்து மென்மையாக அழைத்தான். அவளோ அவனது அழைப்பில் கண்விழிக்காமல் "ம்ம்ம்" என்று முனங்கியபடி தனது உறக்கத்தை தொடர்ந்தாள்.
அவளை எழுப்ப முனைந்த அவளது தந்தையையும் தாயையும் தடுத்தவன் உறங்கும் அவளின் அழகை ரசித்தவாறு புன்னகையோடு விடை பெற்று சென்றான்.அங்கே புதிதாய் ஒரு காதல் மொட்டு அவனுள் அரும்பியது. அது மலருமா??? இல்லை முடியுமா???
"டேய் மணி அந்த கிழவி பத்தி ஏதாவது தகவல் தெரிஞ்சுதாடா?? "
"இல்லணா.... நாங்களும் எல்லா இடத்துலயும் கேட்டுகிட்டு தான இருக்கோம். பத்து வருஷத்துக்கு முன்ன காணப் போனதால யாருக்குமே எதுவும் தெரியல அண்ணா"
" நமக்கு கடைசியா இருக்குற ஒரே ஒரு வழி அந்த கிழவி தான். அந்த கிழவனுங்க தான் கடைசி வரைக்கும் எதையுமே சொல்லல.
சாகும்போது கூட வாயத் திறக்க மாட்டேனு செத்துடானுங்க. பாஸ் என்னடானா நம்மள திட்டு திட்டுனு திட்டுறாங்க. எப்படியாவது அந்த கிழவி கண்டு பிடிக்கனும் சீக்கிரம். அப்போ தான் நாம தேடுறவங்கள நாம நெருங்க முடியும்"
"நாங்க கண்டிப்பா கண்டுபிடிச்சுடுவோம்ணா"
"ம்ம்.... கண்டு பிடிச்சு தான் ஆகனும் வேற வழி இல்ல "
தாலியைக் கழட்டிக் கொடு என பாலமோகன் கேட்பார் என்று அங்கிருந்த யாருமே நினைக்கவில்லை. அனைவரும் அதிர்ந்து போய் நின்றனர். பெண்கள் நால்வரும் அவரது வார்த்தையை ஜீரணிக்க இயலாது துடித்தாலும் ஆதியின் தவறு அவர்களை மௌனாமாக்கியது.
ஆதியோ உயிரைக் உருக்கும் பார்வையை கண்ணில் தேக்கி மதியைப் பார்த்தான். அவனால் கோபப்பட்டு கத்தி சண்டையிட முடியும் . ஆனால் ஏற்கனவே தன்னுடைய காதலியின் கண்களில் கண்ட வெறுப்பில் உயிரற்ற உடலாயிருந்தவன் மேற்கொண்டு ஏதாவது செய்து அவளை கோபப்படுத்தவோ துன்புறுத்தவோ விரும்பவில்லை.
அவனது கண்களில் தெரிந்த ஏக்கத்தை கண்ட கார்த்திகேயனால் ஒன்றுமே செய்யயிலவில்லை. பாலமோகனை எதிர்த்து மதியை உடனழைத்துச் செல்ல ஒரு நொடி போதும் அவருக்கு. ஆனால் மதிக்கு அவர்களுடன் வர விருப்பம் இருக்க வேண்டுமே. கட்டாயப்படுத்தி திணிக்க கூடிய உறவல்லவே திருமணம்.
"உன் கிட்ட தான் மதி கேக்குறேன். அத கழட்டிக் கொடு. அவன் மூஞ்சிலயே தூக்கி வீசுறேன். " என்ற படி மதியை நெருங்கினார். மதியோ ஆதியை பார்த்தாள் அவனது விழி மொழி அவளுக்கு புரியவில்லை. ஆனாலும் தமிழ் பண்பாடு அவளது தாலியைக் கழட்ட ஒப்பவில்லை.
தந்தை தன்னை நெருங்குவதைக் கண்டவள் பின்நகர்ந்தபடி "வேணாம்பா.... நா கழட்ட மாட்டேன்" எனவும் அங்கிருந்த அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் மகிழ்ச்சி. ஆதியோ வரம் தந்த தெய்வத்தைப் போல மதியை பார்த்தான்.
"என்ன உளர்ற மதி. அவன் உன்னோட விருப்பம் இல்லாம கட்டாயப்படுத்தி தாலிக் கட்டியிருக்கான். அத நீ ஏத்துகிட்டு அவன் கூட வாழப் போறீயா"
"அப்பா.... என்னப் பொறுத்த வரைக்கும் கல்யாணம்குறது ஒருத்தர் கூட தான். என் கழுத்துல ஒருத்தர் தான் தாலிக் கட்ட முடியும். இப்ப அது முடிஞ்சுடுச்சு. இனிமே இப்படி பேசாதீங்க"
"அப்பா நீங்க யாருக்கு கல்யாணம் பண்ண நினைக்குறீங்க. நா இப்ப வெண்மதி பாலமோகன் இல்லப்பா. வெண்மதி ஆதித்யா. பிடிச்சோ பிடிக்கலயோ இனிமே இது தான் என் வாழ்க்கை. அத மாத்த முயற்சி பண்ணாதீங்க" மதி அழுத்தமாக அதே சமயம் பிடிவாதமாக கூற பாலமோகனுக்கு அவளை அறையலாம் போன்று கோபம் வந்தது. அதை செயலாற்ற நினைத்த நொடி அவரது கரத்தினைப் பிடித்து அவரை அருகிலிருந்த அறைக்கு அழைத்து சென்றான் வினய்.
"என்ன வினய்... எதுக்காக இங்க கூட்டிட்டு வந்த. மதி பைத்தியம் மாதிரி உளறுறா. நீ எதையும் மனசுல வச்சுக்காத. நா எப்படியாவது மதிகிட்ட பேசி உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுறேன்."
"வேணாம் மாமா... மதி விருப்பப்படியே விடுங்க"
"வினய்.... ஏன்பா இப்படி சொல்ற. அவ புரியாம பேசுறா"
"ஆமாம் மாமா மதி புரியாத தான் பேசுறா
. ஆனா நா புரிஞ்சு தான் பேசுறேன். மதிக்கு ஆதி தான் மாமா ஏத்தவன்"
"வினய்..." பாலமோகன் அதிர்ச்சியாக "மாமா நா சொல்றத கேளுங்க" என்று மதி ஆதி இருவரின் சந்திப்பு முதல் இதுவரை நடந்த அனைத்தையும் அவரிடம் கூறினான்.
"என்ன வினய் சொல்ற இவ்ளோ நடந்துருக்கு"
"ஆமாம் மாமா. மதிகிட்ட ஆதி அவ்ளோ க்ளோஸா பழகியும் மதி ஏன் அவனைப் பத்தி நம்ம கிட்ட சொல்லல. பிடிக்கலனா சொல்ல வேண்டிய தான. இத விட அவ பயந்து போய் ஓடி வந்தால்ல அதுக்கு அப்புறம் அடிக்கடி கனவு கண்டு கத்துவா நியாபகம் இருக்கா மாமா"
"ஆமாம்"
"அப்படி ஒரு நாள் அவ கனவு கண்டு பயந்து உளறுனா 'ஆதி எனக்கு பயமாயிருக்கு. என்ன விட்டுட்டு போகாத. என் கூடவே இருனு' அதுக்கு அப்புறம் அவங்க ரெண்டு பேரையும் நா கண்காணிக்க ஆரம்பிச்சுட்டேன்.
அவங்க ரெண்டு பேருக்கும் இடையில நடந்ததயெல்லாம் கண்டுபிடிச்சேன். அப்போ தான் நீங்க மதிய கட்டிக்க சொல்லி சொன்னீங்க. எனக்கு அதிர்ச்சியா இருந்தாலும் மதி இப்ப இருக்கும் நிலையில் அவளுக்கு ஒரு துணை தேவைனு எனக்கு தோணுச்சு.
ஒரு வேள ஆதி மதிய லவ் பண்ணா கண்டிப்பாக இந்த கல்யாணம் நடக்காதுனு எனக்குத் தெரியும். அதனால தான் முதல் பத்திரிக்கைய அவனுக்கு வச்சு கோபத்த தூண்டிவிட்டேன்.
அப்றம் ஏண்டா அவன் மதி கழுத்துல தாலிக் கட்டுனதுக்கு சட்டயப் பிடிச்சேனு நினைக்குறீங்களா???? ஆதி மதி கல்யாணம் பண்ணனும்னு தான் நினச்சேன் . ஆனா மதியோட விருப்பம் இல்லாம பண்ணனும்னு நினக்கல. அதான்" என்று புன்னகைத்தான்.
அவன் சொன்னதையெல்லாம் கேட்டவருக்கு தேவையில்லாமல் அவனது மனதில் ஆசையை வளர்த்து விட்டுவிட்டோமோ என்ற குற்றவுணர்ச்சி தோன்றியது. அவனிடம் அதை சொல்லவும் செய்தார்.
"நீங்க வேற மாமா. இப்ப தான் நா நிம்மதியா இருக்கேன். மதிய நா அப்படியெல்லாம் நினச்சது இல்ல மாமா. அவ என்னோட குழந்தை மாதிரி. இன்னைக்கு ஆதி வரலான ஏதாவது பண்ணி அவன் கலயாணத்தன்னைக்கு மதி கழுத்துல தாலிக் கட்ட வச்சிருப்பேன். நீங்க கவலய விடுங்க. " என்றான்.
அவர் அமைதியாக நிற்கவும் அவரது கரம் பற்றியவன் "மாமா ப்ளீஸ்...." என்றான். அதில் அவர் அரைகுறையாக தலையசைக்க "ம்மா இன்னொரு விஷயம். இப்ப இங்க நடந்தது யாருக்கும் தெரிய வேண்டாம். கல்யாண வேலையெல்லாம் அப்படியே நடக்கட்டும். கல்யாண மேடை வரைக்கும் வந்து நா கலயாணத்துல விருப்பம் இல்லனு சொல்லிடுறேன். அப்போ ஆதிய விட்டு மதிக்கு எல்லார் முன்னாடியும் தாலிக் கட்ட சொல்லுங்க. ஏன்னா இன்னைக்கு நடந்தது வெளியில தெரிஞ்சாலோ நாளைன்னைக்கு கல்யாணம் நடக்காம போனாலோ மதிக்கு தான் பிரச்சனை.
நா சொன்னபடி செஞசா யாரும் மதி குறை சொல்ல மாட்டாங்க. சரியா மாமா"
தனது மகளுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் சிலுவை தடுக்க எண்ணும் தங்கை மகனை நினைத்து அவருக்கு கண்ணீர் வந்தது. "வேணாம்பா. உன்னோட பேரு கெட்டுப் போய்டும்"
"அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. எனக்காக ஒத்துக்கோங்க"
" தங்கம் என்ன சொல்லுமோ தெரியலயேப்பா"
"அம்மாக்கு இதெல்லாம் முன்னாடியே தெரியும் மாமா. அவங்களுக்கும் நா செய்றதுல சம்மதம் தான் . சரி வாங்க போகலாம் அங்க எல்லாரும் வைட் பண்றாங்க"
அவர்கள் அறையில் நுழைந்த மறுகணமிருந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தாலும் யாரும் பேசவில்லை
. வெளியே வந்த வினயும், பாலமோகனும் தங்களது முடிவை சொல்ல ஒரு வழியாக ஆதி- மதி திருமணம் நாளை மறுநாள் நடைபெறுவதாக அனைவராலும் நிச்சயிக்கப்பட்டது.
அடுத்த வந்த ஒரு நாள் அனைவருக்கும் ஒரு நொடி போல வேகமாய் முடிந்து போனது. ஆதி மதியிடம் பேச முயலவில்லை.
திருமண முகூர்த்தமும் வந்தது. "மாப்பிள்ளையை அழச்சுட்டு வாங்கோ" ஐயரின் குரலில் அங்கே மணமகன் கோலத்தில் அமர்ந்திருந்தான் வினய்.
தாலியைக் கையில் கொடுத்து "கெட்டி மேளம்... கெட்டி மேளம்" என சொல்லும் போது மணவறையை விட்டு எழுந்தான் வினய்.
திருமணத்திற்கு வந்திருந்த கூட்டம் சலசலத்தது. அதன் பிறகு எல்லாம் திட்டமிட்டபடியே நடந்தது. திடீர் மாப்பிள்ளையாய் ஆதி மதியின் கழுத்தில் அனைவரது முன்னிலையிலும் மாங்கல்யத்தை கட்டினான்.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.