All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
திருமணம் முடிந்ததும் அனைவரும் வீட்டிற்கு வந்தனர். அவளது முகத்தில் தெரிந்த களைப்பு கண்டு செந்தாமரை ஓய்வெடுக்க சொல்லி வற்புறுத்தும் போது தான் மதிக்குமே களைப்பு தெரிந்தது. அவரிடம் சரியென்று சொன்னவள் அவர் சொன்ன அறைக்கு சென்று கதவை தாழிட முயல புயல் போல் அங்கு வந்த ஆதி கைநீட்டி கதவை தாழிட விடாமல் தடுத்தான்.
அவனை எதிர்பாராத மதி அதிர்ந்து இரண்டடி பின் சென்றிட அவள் திகைத்து நின்ற நொடிகளை பயன்படுத்தி ஆதி அறையின் உள்ளே நுழைந்து விட்டான். அவளை ஏறிட்டாவாறே கதவை வேகமாக அடித்து சாத்திட அவளது தேகம் அதிர்ந்தது.
அவனது முகம் கோபத்தில் சிவந்திருந்த முகத்தைக் கண்டதும் அவளது பயம் அதிகமானது. அவளது முகத்தில் தெரிந்த அத்தனை மாற்றத்தையும் மனதில் குறித்துக் கொண்டே வந்தவனால் என்ன முயன்றும் கோபத்தைக் கட்டுப் படுத்திட முடியவில்லை.
அவளை நெருங்கியவன் கோபத்தோடு அவளது தோளை பிடித்து "என்னடி நினச்சிட்டு இருக்க. திமிராடி.... நானும் பாத்துக்கிட்டே இருக்கேன் என்ன மதிக்காம தெனாவட்டா இருக்க. எத்தன முறை போன் பண்ணேன். மகாராணி பேச மாட்டீங்களோ....
நேர்ல பேசலாம்னு டிரை பண்ணா கண்டுக்காம போற. என்ன பாத்தா உனக்கு எப்படி தோணுது. " என்ற படி அவளது தோளை நன்றி பிடித்து உலுக்க மதிக்கு தன்னை நினைத்தே வெறுப்பாக இருந்தது.
பின்னே ஆதிமேல் வெறுப்பும் கோபமும் மனதில் நிறைந்திருக்க அதை வெளிக்காட்ட முடியாத படி அவன் மீதான பயம் தன்னை கட்டிப் போடுவதை நினைத்து அவளுக்கு தன் மீதே வெறுப்பு வந்தது.
அவள் தனக்குள் யோசித்துக் கொண்டிருக்க ஆதியோ திகைத்துப் போய் நின்றிருந்தான். மதி தன்னை அவமானப் படுத்தியதற்காக அவளை ஒருவழி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அவன் அறையினுள்ளே நுழைந்தது. அந்த வேகத்தில் தான் எதையும் சிந்திக்காமல் அவளது தோளைப் பற்றி உலுக்கி கொண்டிருந்தான்.
ஆனால் அதன்பின்பு தான் அவன் அதை உணர்ந்தான். மனம் முழுவதும் காதல். நெஞ்சமதில் நிறைந்திருந்த மங்கையவளே.திருமணத்திற்காக செய்யப்பட்ட அலங்காரமதில் அவனது மனைவி பேரெழில் தேவதையாய் தெரிந்தாள்.
அவளது பேரழகிற்கு மேலும் அழகு சேர்க்கும் வண்ணம் இருந்தன. அவளது நெற்றியில் இருந்த குங்குமமும் ,கழுத்தில் கிடந்தத மஞ்சளின் ஈரமது காயாத தாலியும். மனம் முழுவதும் காதல் , மனதில் நிறைந்த பெண்ணவளோ கண்ணெதிரில், அவனது உரிமையை பறைசாற்றும் தாலி அவனவளது கழுத்தில்.
முதன் முறையாக அவளை அவ்வளவு நெருக்கத்தால் அதுவும் உரிமையோடு காண்கிறான். அவனது உள்ளத்தில் பெரிய போராட்டம நடந்து கொண்டிருந்தது.
இதுவரை அவள் தன்னவள், தனக்கானவள் அவளை தன்னுடன் தக்க வைத்து கொள்ள வேண்டும் , அவளது காதல் வேண்டும் என்ற எண்ணத்தை தவிர வேறு எண்ணம் அவனது மனதில் இல்லை. அதை தாண்டி யோசிக்கும் நிலையில் அவன் இருக்கவில்லை.
இன்றோ அவள் அவனது மனைவி. அவனுள் இனம் புரியாத தடுமாற்றம் ஏற்பட்டது. அந்த உணர்வு அவனுக்குப் பிடித்திருந்தது. அதிலேயே உழன்று கொண்டிருந்தவன் அவளது முகத்தினை காதலோடு ஏறிட்டு பார்த்திட தீச்சுட்டார் போல் அவனது கரத்தை அவளிடமிருந்து எடுத்தவன் மனதளவில் உடைந்து போய்விட்டான்.
தன்னையே நொந்து கொண்டு இருந்த மதிக்கு அவளை நினைத்து அருவருப்பாக இருந்தது. அந்த அருவருப்பு அவளது கண்களில் தென்பட அதைக் கண்டு தான் அவன் விலகி போய் நின்றான்...
அவளது அந்த அருவருப்பான பார்வையில் அவனது காதல் மனம் அடிபட்டு போனது. தன்னை வெறுத்திடும் அருவருத்திடம் காதல் மனைவியை கண்டு மௌனமாகி நின்றான். அவனது வலி அவனது கண்களில் தெரிந்தது. எதற்கும் கலங்காத அவனது விழிகளில் இருந்து கண்ணீர் துளிகள் 'என்னப் பாத்தா உனக்கு அருவருப்பா இருக்கா மனு. ஏன் மனு என்ன இப்படி உயிரோட கொல்ற. உன் மேல உயிரையே வச்சிருக்கேன்டி. புரிஞ்சுக்க மாட்டியாடி. நீ என்னப் பாத்த பார்வையிலே செத்துடேன்டி' மனதினுள் நினைத்தவன் சிலை போல நின்றான்.
அவளோ அவனது மனநிலையை உணரும் நிலையில் இல்லை. அவளது கோபம் அவளது கண்ணை மறைத்திருந்தது. கோபத்தில் அவனது முகத்தைப் பார்க்க பிடிக்காமல் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆதி மதியின் அறைக்குள் நுழைந்ததை அங்கிருந்த பெண்கள் பார்த்து விட்டனர். இருப்பினும் அவனை தடுப்பது யார். இல்லை தடுத்தாலும் தான் அவன் கேட்டுக் கொள்வானா. அதனால் அனைவரும் எதுவும் செய்ய முடியாமல் அறையின் வாயிலில் தவிப்போடு நின்றிருந்தனர்.
மண்டபத்தில் வினய் பேசியதைக் கேட்ட நிவி அவனைப் பற்றி மதியிடம் கூற வேண்டும் என முயன்றாள். ஆனால் அதற்கான நேரம் அவளுக்கு கிடைக்கவேயில்லை. மதி ஆதியின் வீட்டிற்கு சம்பிரதாயங்களுக்காக சென்றுவிட, மதியின் பெற்றோர் அவள் வீட்டிற்கு வரும் போது அவளை வரவேற்க வேண்டிய ஏற்பாடுகளை செய்ய அவர்களது வீட்டிற்கு சென்றுவிட்டனர்.
இப்போது தான் அவர்களிடம் பேச அவளுக்கு நேரம் கிடைத்திருக்கிறது.
இதற்கு மேலும் அமைதியாக இருக்க அவளது மனம் ஒப்பவில்லை.
"அப்பா.... நா உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்"
யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்த பால மோகன் திரும்பி அவளைப் பார்த்தபடி "ஒரு நிமிஷம் நா கூப்டுறேன். "
என்ற படி அழைப்பை துண்டித்து விட்டு "சொல்லுமா" என்றார். அவரை பொறுத்த வரையில் மதியும் நிவியும் வேறு வேறு அல்ல.
"அப்பா.... நீங்க நினைக்குற மாதிரி வினய்...." என்று அவள் முடிப்பதற்குள்
"மாமா....." என்று வினயின் குரல் கேட்டது. "வினய்.... என்னாச்சுடா" அவனை நோக்கி அவர் செல்ல நிவிக்கு வினயின் மீது கோபம் அதிகரித்தது.
"டேய்..... உன்ன..... உண்மய சொல்ற நேர்த்துல வந்து தடுக்குறீயா. என்ன நடந்தாலும் இன்னைக்கு உன்ன சும்மா விடமாட்டேன்" மனதினுள் பொறுமியபடி பாலமோகனை பின் தொடர்ந்தார்.
ஹாலில் வினய் நின்றிருக்க அவனுக்கு அருகில் அவர்களது குடும்ப வக்கீல் நின்றிருந்தார். வீட்டிலிருந்த அனைவரும் என்னவென்று புரியாமல் திகைத்து நிற்க "என்னாச்சு வினய்.... அட வாங்க கோவிந்தன்.... கல்யாணத்துக்கு வராம வீட்டுக்கு வந்துருக்கீங்க. "
அவர் பேசிக் கொண்டே போக வினயும், கோவிந்தனும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். கோவிந்தன் வேண்டாம் என்பது போல் தலையாட்ட வினயோ அதை மறுத்துக் கொண்டிருந்தான்.
அவர்களது கண் ஜாடையை கவனித்துக் கொண்டிருந்த நிவிக்கு எதுவோ புரிந்தது போல இருந்தது. " என்ன நா பேசிக் கிட்டே இருக்கேன். நீங்க எதுவுமே பதில் சொல்ல மாட்டேன்குறீங்க. "
"மாமா....."
"சொல்லுபா"
"இந்த பேப்பர்ஸ்ல சைன் பண்ணுங்க" கோவிந்தன் கையிலிருந்து சில காகிதங்களை வாங்கியவன் பால மோகனிடம் நீட்டினான்.
"என்னப்பா இது. ஏதாவது கம்பெனி பேப்பர்ஸா"
"ஆமாம் மாமா... இதுல உங்க கையெழுத்து வேணும் "
"பேனா குடுப்பா. நா கையெழுத்து போடுறேன்" என்றவரிடம் அவன் பேனாவை நீட்ட அதை வாங்கி கையெழுத்து போட முயல்கையில் "அப்பா.... சொல்றனேனு தப்பா நினைக்காதீங்க. அதை படிச்சு பாத்து சைன் போடுங்க. இந்த காலத்துல யாரையும் நம்ப கூடாது. உள்ள ஒரு மாதிரி வெளிய ஒரு மாதிரி நடந்துப்பாங்க. தயவுசெஞ்சு படிச்சு பாத்து சைன் " அவள் சொல்லி முடிப்பதற்குள் "நிறுத்துமா" என்று கத்தினார் தங்கம்.
"யார் வீட்டுக்கு வந்து யார குறை சொல்ற. என் பையனப்பத்தி உனக்கு என்ன தெரியும். "
"சார் நான் சொல்றேனு தப்பா நினைக்காதீங்க. அந்த பொண்ணு சொல்ற மாதிரி படிச்சு தான் பாருங்களேன். அதுல என்ன வந்துட போகுது. " கோவிந்தனும் நிவியின் கருத்தையே ஆமோதிக்க நிவிக்கு கூடுதல் பலம் கிடைத்தது போல இருந்தது.
'மாட்டுனடா கருவாயா.... இப்ப என்ன பண்றேனு பாரு' என மனதினுள் நினைக்க வினயோ அவளை முறைத்துக்கொண்டிருந்தான்.
"என்ன சந்தேகப் படுறீங்களா மாமா" அவனது குரலில் இருந்த வருத்தத்தில் பால மோகன் அனைத்தையும் மறந்து அந்த பத்திரங்களில் கையெழுத்து இட்டார்.
"அப்பா" "சார் " என்ற நிவியின் குரலும், கோவிந்தனின் குரலும் அவரது செவியினில் விழவில்லை.
"நா எப்பவுமே உன்ன நம்புறேன்டா. உனக்கு புரியுதா?"
அவரை அணைத்து விடுவித்தபடி "தேங்க்ஸ் மாமா" என்றான்.
"சார்.. இப்பவாவது அத படிச்சு பாருங்களேன். "
"என்னாச்சு கோவிந்தன். ஏன் அதயே திரும்ப திரும்ப சொல்றீங்க." என்று கேட்டவர் அப்போது தான் வினய் கோவிந்தனிடம் கண்ஜாடை காட்டிவதை கவனித்தார்.
"நா இதப் படிக்கணும் அதான. இதுல என்ன இருக்குனு எனக்கு தெரியாது. ஆனா என் மருமகன நா நம்புறேன்" என்ற படி அதனை படிக்க துவங்கினார். படித்தவருக்கு தலை சுற்றியது.
"வினய் ஏன் இப்படி பண்ண" என்ற படி பத்திரங்களை கீழே போட்டபடி அவர் மயங்கி விழ வினய் ஓடிச் சென்று அவரைத் தாங்கினான். அவரது கையிலிருந்த காகிதங்கள் அந்த அறை முழுவதும் பறந்தன.
"அத்த தண்ணி கொண்டு வாங்க" என மதியின் அன்னையை வேண்ட அதற்குள் நிவி தண்ணீர் கொண்டு வந்திருந்தாள். "மாமா.... மாமா" அவரது முகத்தில் தண்ணீர் தெளித்தபடி அவன் அழைக்க இமைகள் பிரித்தவர் "நீயும் என்ன ஏமாத்திட்டியே வினய்" என முணுமுணுக்க அவரை தூக்கியவன் அவரது அறையை நோக்கி செல்ல சிதறி கிடந்த காகிதங்களை சேகரித்தபடியே நிதி மனதினுள் அவனை அர்ச்சனை செய்தாள்.
'பாவி.... பாவி.... நல்லா இருந்தவர இப்படி மாத்திட்டியேடா. நீயெல்லாம் மனுஷனா' என்படி சிதறிக் கிடந்த காகிதங்களை எடுத்தவள் அதைப் படித்துப் பார்த்தாள். அவளுக்குமே அதிர்ச்சி. என்னவென்று தெரியவில்லை அவள் மனதை ஏதோ ஒன்று வருடிச் செல்ல மௌனமாயிருந்தாள்.
சரியாக அந்த நேரம் கீழிறங்கி வந்த வினய் அவளின் கைகளில் இருந்த பத்திரங்களை பிடுங்கினான். "ஒழுங்கா போய்டு. உன்னால தான் இவ்வளவும். உன்ன பாத்தாலே
கடுப்பாகுது. மாமாக்கு மட்டும் ஏதாவது ஆச்சுனி நா மனுஷனா இருக்க மாட்டேன்."
நிவியால் ஒன்றும் பேச முடியவில்லை. கண்ணீரோடு அவ்விடத்தை விட்டு வெளியேறி போனாள்.
ஹரிணியின் வீட்டில் ஏற்பாடுகள் பலமாயிருந்தன. தங்களது வருங்கால மருமகன் வீட்டிற்கு வருகிறான் என்றவுடன் ஹரிணியின் பெற்றோர்கள் நல்ல விருந்து செய்து கொண்டிருந்தனர். வீடே அமர்க்களமாயிருந்தது.
அன்று வெட்கத்துடன் அவனை விட்டு விலகி ஓடிய ஹரிணி அதன்பிறகு அவன் புறம் பார்வையைத் திருப்பவே இல்லை. அவன் எவ்வளவு முயன்றும் தோல்விதான். மற்றவர்கள் முன்பு பேசவும் முடியாமல் , அவளை விட்டு விலகவும் முடியாமல் அவன் தவித்துக் கொண்டிருக்க அவனது தேவதையோ அவனை கண்டுக் கொள்ளாது இருந்தாள்.
இரண்டு நாட்கள் கழித்து அவனது அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. புதிய எண் என்றதும் குழப்பத்துடன் அழைப்பை ஏற்றவன், பேசுபவர் ஹரிணியின் தந்தை என்றும் தன்னை பார்க்க விரும்புகிறார் என்றதும் அவனுக்கு மகிழ்வதா இல்லை வருந்ததுவதா என்று தெரியவில்லை.
காதல் கைகூடியதற்கு மகிழ்வதா இல்லை தற்போது தன்னுடைய வீட்டில் இதை பற்றி கூற முடியாத தன் நிலையை எண்ணி வருந்ததுவதா என்று அவனுக்கு தெரியவில்லை.
இருப்பினும் தன்னை அழைத்தவரை பார்க்க அவளது வேண்டி அவன் ஹரிணியின் வீட்டிற்கு கிளம்பினான் தன் வீட்டில் யாரிடமும் சொல்லாமல்.
"அம்மு இங்க வா. கொஞ்சம் இந்த டேபிள பிடி. அந்த பக்கம் நகர்த்திடலாம். அங்க இருந்தா தான். நல்லா இருக்கும்." என்ற தாயின் குரலில் தன் கண்ணத்தில் கை வைத்து அமர்ந்திருந்தவள் எழந்து நின்றாள். நேற்றிலிருந்து தனது தாயும் , தந்தையும் செய்யும் வேலைகளை அவளும் பார்த்து கொண்டு தானே இருக்கிறாள்.
"ம்மா ஏன் இப்படி செய்றீங்க . அந்த டேபிள் அங்க இருந்தாலே நல்லதான் இருக்கும். மாத்திலாம் வைக்க வேணாம்"
"சொன்ன பேச்சு கேளு அம்மு. வா வந்து உதவி பண்ணு" இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கே வந்தார் ராஜன்.
"சுத்தம் போச்சு. நீங்க அம்மாவுக்கு மேல இருக்கீங்க. அப்பா அவங்க ஒன்னும் குடும்பத்தோட என்ன பொண்ணு பாத்து பிடிக்குதா இல்லயானு சொல்ல வரல. உங்களுக்கு அவர பிடிக்குதானு கேட்க தான் வராரு. நீங்க தான் சொல்லனும் உங்களுக்கு பிடிக்குதானு."
"அம்மு உனக்கு பிடிச்சா எங்களுக்கும் பிடிக்கும்டா. அதுல மாற்றுக் கருத்தே இல்ல. ஆனா அந்த தம்பி ரொம்ப வசதில்ல. இங்க அசௌரியமா நினைக்க கூடாதுல. அதுக்கு தான் இதெல்லாம்." அவர் சொல்லவும் தன்னுடைய விருப்பத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கும் அவர்களை நினைத்து அவளுக்கு கண்கள் கலங்கியது.
"சும்மா மச மசனு நிக்காம இத பிடி. நாம நகர்த்திடலாம். நீங்க அத உள்ள வச்சுட்டு வாங்க" தாயின் குரலில் நிகழ்வுலகிற்கு வந்தவள் டேபிளை தூக்க போக "உள்ள வரலாமா" என்ற அத்துவின் குரல் கேட்டது.
அவன் இவ்வளவு சீக்கிரம் வந்திடுவான் என்று யாரும் எதிர்பார்க்காததால் திகைத்து விழிக்க , "வரலாம்ல" என்று மீண்டும் கேட்டான். "அடடே வாங்க தம்பி " என ஹரிணியின் பெற்றோர்கள் இருவரும் ஒருமித்த குரலில் அவனை வரவேற்றனர்.
உள்ளே வந்தவன் "நகருங்க அம்மா. " என்றவன் அந்த டேபிளை அலேக்காக தூக்கினான். " எங்க வைக்கணும் சொல்லுங்க" என்று கேட்டான்.
அவன் அப்படி கேட்டதும் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் சாந்தி விழித்து கொண்டிருக்க ஹரிணியோ அவன் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள். இருவரையும் மாறி மாறி பார்த்தவன்.
"சரி இங்க வைக்கிறேன். வேற இடம் மாத்தனும்னா சொல்லுங்க "
"ஐயோ தம்பி நீங்க போய் இதெல்லாம். நகருங்க தம்பி" என்று ராஜன் அவனை கீழே வைக்க சொல்ல அவனோ பத்திரமாக அதை ஹரிணியின் தாய் சொன்ன இடத்திலேயே வைத்து விட்டு நகர்ந்தான்.
"என்ன தம்பி நீங்க. சொல்ல சொல்ல கேட்க மாட்டேன்குறீங்க." உண்மையான வருத்தத்துடன் அவர் கூறிட மெல்லியதாய் சிரித்தவன் "நம்ம பேமிலி தான அங்கிள். நா செஞ்சா என்ன?"
அவனது கூற்றில் அவரது மனம் மகிழ்ந்தது. அவனை வரவேற்று அமர சொல்லி அருந்திட தண்ணீர் கொடுத்தனர். சிறிது நேர மௌனத்திற்கு பின்னர் அத்து பேச்சை துவங்கினான்.
"அங்கிள்.... நா வந்து" "எனக்கு உங்களப் பத்தி நல்லா தெரியும் தம்பி. நீங்க சொல்ல வேண்டாம்" என அவன் ஆரம்பிப்பதற்குள் அவர் முடித்துவிட அடுத்து என்ன பேசுவதென்று அறியாமல் அவன் சங்கடமாய் உணர்ந்தான்.
"தம்பி.... படிப்பு முடியட்டும் நானே வீட்டுக்கு வந்து பேசுறேன். அதுவரைக்கும் ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருங்க"
அவன் தனது சம்மதத்தை தெரிவிக்க அதன் பின்பு அங்கு மகிழ்ச்சி ஆரம்பம் ஆனது. இனிவரும் காலங்களில் எல்லாம் துன்பம் என்றறியாமல் அனைவரும் மகிழ்வாய் இருந்தனர்.
"அண்ணா நாம தேடிட்டு இருந்த கிழவிய கிட்டதட்ட கண்டுபிடிச்சாச்சுனா. அவளும் சென்னையில தான் அண்ணா இருந்துருக்கா. "
"இப்ப தாண்டா சந்தோஷமா இருக்கு. அந்த பெருச பிடிச்சுட்டா அந்த பொண்ண கண்டுபிடிச்சுடலாம். ஏய்..... பொண்ணே..... நல்லா சந்தோஷமா இருந்துக்கோ. இனிமேல் உனக்கு சந்தோஷமே கிடையாது. எங்க கண்ல நீ பட்ட அடுத்த நொடி உன்ன கொன்னுடுவோம்" என்ற படி பேய் சிரிப்பு சிரித்தான்.
இது எதையும் அறியாத ப்ரியா, ஆசிரமம் குழந்தைகளுடன் மகிழ்வாய் விளையாடிக் கொண்டிருந்தாள்.
சொன்ன மாதிரி புதன் கிழமை வந்துவிட்டேன். உங்களுக்கு இது சின்ன பதிவு தான். ஆனால் எனக்கு மிகப் பெரியது.
மொபைலில் டைப் செய்யவே முடியவில்லை. இந்த தளத்தில் எழுதும் அனைவரையும் கண்டு வியப்பாய் இருக்கிறது. ரெண்டு பக்கங்களுக்குள் கை வலிக்கிறது எனக்கு. உண்மையாகவே அனைவரும் சிறந்தவர்கள்.
என்னால் முடிந்த வரை பதிவு செய்திருக்கிறேன். படித்துவிட்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்று கனியை இறக்கிவிட்டு விட்டு வந்து இன்றோடு இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. அவனது மனம் முழுவதும் கனியே நிறைந்திருந்தாள். அவனது மனம் அவளை மீண்டும் காண வேண்டுமென துடித்துக் கொண்டிருந்தது. அவனது காதலை அவளுக்கு உணர்த்திட வேண்டுமென அவனது இதயம் துடித்ததிட இதற்கு மேலும் முடியாது என்று எண்ணி அவளைக் காண அவளது ஹாஸ்டலுக்கு சென்றான்.
முன்பு போல தயங்கி நிற்காமல் ஹாஸ்டலின் வரவேற்பறைக்கு சென்றவன் அங்கிருந்த வார்டனை சந்தித்தான். இதுவரை திரையில் மட்டுமே பார்த்திருந்த ராமை நேரில் பார்த்ததும் அவர் சுற்றுப்புறம் மறந்து அவனிடம் பேச அவனோ "நா கனியைப் பாக்கணும் . கொஞ்சம் வர சொல்றீங்களா" என்றான்.
அவரோ அவனின் குரலில் நிகழ்காலம் உரைத்து " கொஞ்சம் வைட் பண்ணுங்க சார். வர சொல்றேன்" என்ற படி எழுந்து சென்றார். அவரது மூளை ஆராய்ச்சி செய்து கொண்டே சென்றது ராமிற்கும் கனிக்கும் என்ன தொடர்பென்று.
அடுத்த ஐந்து நிமிடங்களில் கனி அவன் முன் நின்றிருந்தாள் . அவளது முகம் எந்தவொரு உணர்ச்சியையும் பிரதிபலிக்க வில்லை.
"கனி உன் கிட்ட கொஞ்சம் பேசணும். என் கூட வா தனியா போய் பேசலாம். எல்லார் முன்னாடியும் வேணாம். "
"என்ன பேசணும் ராம் சார். எனக்கு எதுவும் பேச வேண்டாம். "
"கனி நா பேசணும் சொன்னேன். வெளிய வர. அவ்ளோ தான் " என்று அவனுரையை முடித்து விட்டு அவன் தனது காரின் அருகே நின்றான். அவனது குரலில் இருந்த அழுத்தத்தை உணர்ந்தவள் அவள் செல்லாமல் அவன் அங்கிருந்து செல்ல மாட்டான் என்பதையுணர்ந்து எல்லாவற்றிற்கும் இன்றோடு முற்று புள்ளி வைக்க வேண்டுமென எண்ணி அவனோடு சென்றாள்.
அவள் காரில் ஏறியதும் காரை கிளப்பியவன் தங்களது ஐந்து நட்சத்திர உணவகத்தின் முன் வந்து நிறுத்தினான். அவள் இறங்கும் முன்பே இறங்கியவன் அவளுக்கு கார் கதவை திறந்து விட்டு நிற்க அங்கிருந்த ஊழியர்கள் அவனை அதிர்ச்சியோடு பார்த்து கொண்டிருந்தனர். முதலாளியே கார் கதவை திறந்து விடுமளவுக்கு அந்த முக்கியமான நபர் யார் என்று அறிய அவர்களது உள்ளம் பரபரத்தது.
அவன் திறந்த கதவின் வழியே இறங்காமல் மறுபுறம் வழியாக இறங்கியவள் அவனை முறைக்கவும் தவறவில்லை. அவளின் செய்கையில் அவனுக்கு கோபம் வராமல் சிரிப்பு தான் வந்தது. அவன் அனுமதி இல்லாமலே அவனது இதழ்கள் முணுமுணுத்தன " ஐ லவ் யூ ப்ரூட்டி "
"என்ன சொன்னீங்க. சரியா கேட்கல"
"ம்ம்ம்... " என இழுத்தவன் அவளை மேலிருந்து கீழாக ஒரு ஆராய்ச்சி பார்வை பார்த்தான். பச்சையும் மஞ்சளும் கலந்த டாப்ஸ், கருநீல நிற பேண்ட் மற்றும் துப்பட்டா அணிந்திருந்தாள். காதினில் சிறிய வெள்ளை கல் தோடு என அழகாய் ஜொலித்த அவனது தேவதையை கண்டவனுக்கு உலகமே மறந்து போனது.
அவனது பார்வையில் அவளது முகம் சிவந்தது கோபத்தினால். வேறொருவராய் இருந்திருந்தால் இந்நேரம் என்ன செய்திருப்பாளோ ராமிடம் கடுமை காட்ட அவளால் முடியவில்லை.
"என்ன பேசணும் சீக்கிரம் சொல்லுங்க. எனக்கு வேல இருக்கு. " அவனது முகத்தை பார்க்காமல் அவளுரைக்க அவனோ அவளை காதல் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.
"ராம் சார்..... ப்ளீஸ்..... நா கிளம்புறேன்..." என்ற படி அவள் நகர முற்பட அவளது கைகளை இறுக்கமாக பற்றியவன் அவளை அந்த நட்சத்திர உணவகத்தின் உள்ளே அழைத்து சென்றான். "கைய விடுங்க சார். சொன்னா கேளுங்க நானே வரேன். கைய விடுங்க" அவளது கதறலை காதில் வாங்கி கொள்ளாதவன் தன் காரியத்தில் கண்ணாயிருந்தான்.
அனைவரும் அவனை வியப்பாய் பார்ப்பதை கூட அவன் உணரவில்லை. எங்கிருந்தோ வந்த புகைப்படக் காரர்கள் அவர்களை புகைப்படம் எடுக்க முயல ராமின் பாதுகாவலர்கள் ஓடி வந்து அவர்களை தடுத்தனர்.
அவளை அந்த விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்த தன்னுடைய தனிப்பட்ட அலுவலக அறைக்கு அழைத்து சென்ற பின்னர் தான் கைகளை விட்டான்.
"சார் உங்களுக்கு என்னப் பைத்தியமா.... ஏன் இப்படி நடந்துக்குறீங்க. "
"கனி நா சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளு.... எனக்கு இன்னைக்கு பதில் தெரிஞ்சாகணும்"
"என்ன பதில்"
"என்னோட காதலுக்கு"
"சார்..... புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க. நா உங்கள காதலிக்கல. எனக்கும் உங்களுக்கும் ஒத்து வராதுனு நா சொல்லிட்டேன். ஏன் புரிஞ்சுக்க மாட்டேனு பிடிவாதம் பிடிக்குறீங்க. "
"ஏன் கனி ஏன் என்ன உனக்குப் பிடிக்கல. உனக்கு பிடிச்ச மாதிரி நா மாற முயற்சி பண்றேன் கனி.... எனக்கு நீனா உயிருடி. உங்கூட ரொம்ப நாள் பழகுனு மாதிரி இருக்கு. உன்ன என் கைக்குள்ளயே வச்சுக்கணும் போல இருக்கு. உனக்காக என்ன வேணாலும் செய்லாம்னு தோணுது. அது மாதிரி உனக்கு ஏன்டி என் மேல தோணல. " சாதரணமாய் ஆரம்பித்தவன் பின்பு கரகரப்பான குரலில் முடிக்க அவனை விட அவளுக்கு தான் வலித்தது.
ஆனால் இல்லாத காதலை இருப்பதாக சொல்ல முடியாதே. "ராம் சார்...."
"போதும் நிறுத்துடி சும்மா சார் சார்னு சொல்லிட்டு. ஒழுங்கா பேர சொல்லிக் கூப்டு" அவள் ஆரம்பிப்பதற்கு முன்பே கத்தினான்.
மெதுவாக "ரா..... ராம்".... "எனக்கு உங்க மேல லவ் வரல. இனிமேல் வருமானும் தெரியலை. தேவயில்லாம உங்க வாழ்க்கைய வீணாக்காதீங்க. ப்ளீஸ் இதோட இத விட்டுடுங்க. "
அவள் சொல்ல சொல்ல ராமின் கண்களில் உயிர் போகும் வலி தெரிந்தது. காதல் புனிதமானது. காதலிக்கப்படுவது வரமானது. ஆனால் மனமெல்லாம் நிறைந்திருக்கும் தன்னவளின் இதழ்வழியே தன் மீது துளி அளவும் காதலில்லை என கேட்பதை விட கொடுமையானது இவ்வுலகில் இல்லை.
கைகெட்டும் தூரமதில் தன்னுடைய உலகமாய் நினைத்த ஒருத்தி இருக்கும் போது , அவளை விட்டு செல்ல வேண்டுமென்பதைவிட உயிரை விடுவதே மேல் என தோன்றியது அந்த உயிர் காதலனுக்கு.
"சுந்தர்.... எனக்கு தெரியும் இது உங்களுக்கு கஷ்டம்னு. ஆனா இது தான் உங்களுக்கு நல்லது. ஏன்னா" "போதும் நிறுத்துடி..... இதுக்கு மேல ஒண்ணும் சொல்ல வேண்டாம். " என்ற படி அவன் வெளியேறிட அவளோ திகைத்து நின்றாள்.
ஐந்து நிமிடங்களுக்கு பின் இருவர் அந்த அறைக்குள் நுழைந்து " மேம் சார் உங்கள் ஹாஸ்டல்ல விட சொன்னாங்க. வாங்க"
"இல்ல ராம்... ராம் எங்க"
"உங்கள அங்க விட சொல்லி தான் எங்களுக்கு ஆர்டர் மேம்" அவளது மனம் முழுவதும் வலி ராமினை காயப்படுத்தியாக தன்னை தானே நொந்து கொண்டவள் தனக்காக கார் கதவை திறந்து கொண்டு நின்றவரிடம் நன்றியுரைத்து விட்டு கிளம்பினாள்.
வீட்டிற்கு வந்த ராமிற்கு ஒன்றுமே புரியவில்லை. உலகமே வெறுமையாக தெரிந்திட அறையை விட்டே வெளியே வராமல் இரண்டு நாட்கள் அடைந்திருந்தான். வீட்டில் உள்ளவர்கள் அவனை கேள்வி கேட்க அதிலிருந்து தப்ப எண்ணி காரினை எடுத்துக் கொண்டு வெளியே சென்றவனுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது.
அவனது தேவதை அங்கே வேறொருவனுடன் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தது. கனியின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி ராமின் மனதில் மிகப் பெரிய காயத்தை தோற்றுவித்தது. அவர்களது நெருக்கத்தை கண்டவனுக்கு தலையில் நெருப்பை அள்ளி கொட்டியது போல இருக்க அங்கிருந்து சென்று விட்டான்.
அன்று கனியை பார்த்தவன் தான் அதன்பிறகு அவளை காணவில்லை. அவனால் அவளது மறுப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அணு மட்டுமின்றி தன்னவளின் மனதில் வேறொருவன் இருக்கிறான் என்பதை ஜீரணிக்க முடியாமல் திணறினான். அதன் தாக்கம் அவனது நடவடிக்கைகளில் நிறைய மாற்றம் தென்பட்டது.
தனது வழக்கறிஞர் தொழிலை மட்டும் பார்த்து கொண்டிருந்தவன் தனது தந்தையிடம் சென்று தொழிலையும் சேர்த்து கவனித்து கொள்வதாய் சொல்லியவன் அதன்படி தொழிலையும் கவனித்து கொண்டான்.
முதலிரு நாட்களுக்கு தடுமாறியவன் எல்லாவற்றையும் தானே கற்றுக் கொண்டு திறம்பட செயல்பட்டான். அவனது வேலைகளே அவனுக்கு அதிகமாய் இருந்தாலும் கனியை பற்றி நினைக்காமல் இருப்பதற்காகவே தந்தையின் தொழிலை எடுத்து முடிந்த அளவு தன்னை வேலையில் ஈடுபடுத்தி கொண்டான்.
கிடைக்கும் ஓய்வு நேரங்களில் உடற்பயிற்சி செய்தான்.ஒரு பெண்ணால் நிராகரிக்கப்பட்ட வலி அவனது இதயத்தை எப்போதும் குத்திக் கொண்டே இருந்தது.
அவள் எளிதாக அவனை விட்டு சென்று விட்டாள். அவனோ அவளை மறந்திடவும் முடியவில்லை. நினைக்கவும் முடியவில்லை ஏனெனில் அழையா விருந்தாளியாக அவளது மறுப்பு வேறு அவனது நினைவில் வந்து நின்றது.
அவன் வீட்டிற்கு வருவதே அரிதாகி போனது. வீட்டிலிருந்து வரும் அழைப்புகளையும் ஏற்பதில்லை. வீட்டிலிருந்து யாராவது பார்க்க முயற்சி செய்தாலும் அவர்களை அழகாய் தவிர்த்தான்.
மொத்தத்தில் பைத்தியக்காரனை போல இருந்தவனைக் கண்டு அனைவரும் பயந்தனர். அலுவலகத்தில் இருந்தவர்களிடம் இதுவரை இன்முகத்தை மட்டுமே காண்பித்து வந்தவன் இப்போதெல்லாம் அவர்களை வறுத்து எடுத்தான்.
யார் பேசினாலும் பதில் பேசுவது இல்லை. அதிகபட்சமாக "ம்ம்ம்" என்ற பதிலே அவனிடமிருந்து வந்தது. அவனது தோற்றமே மாறியிருந்தது. அவனிடம் பேசவே யாருக்கும் தைரியமே இல்லை.
தன்னை யாருமே நெருங்காத வண்ணம் பார்த்து கொண்டான். அவனது உதவியாளரின் (கோகுல்) நிலைமை தான் மோசமாகி போனது. முன்பெல்லாம் கடிந்து ஒரு வார்த்தை பேசாதவன் இப்போதெல்லாம் கத்துவதை கண்டு அவனுக்கு கஷ்டமாயிருந்தது.
மற்றவர்கள் எல்லாம் ராமை நெருங்காமல் விலகியே இருக்க எந்நேரமும் நெருப்பாய் கொதித்தவனின் அனலை தாங்கி கொண்டு அவனுடனே இருந்தான் கோகுல். அன்றும் அது போல தான் ராமிடம் திட்டு வாங்கி விட்டு வந்து உணவில் கை வைத்தான் சிறிது நேர இடைவெளி கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தவாறு.
அவனது மகிழ்ச்சியை குலைத்திட அங்கே வந்தாள் செல்வி. கொலை செய்யப்பட்ட பிரபாகரனின் மகள். அவளை கண்டதும் தொண்டுக்குள் வைத்த உணவு சிக்கிக் கொள்ள இருமினான் கோகுல். அவனது கரங்கள் தண்ணீரைத் தேட தண்ணீர் இருந்த பாட்டில் மேஜையிலிருந்து நழுவி கீழே விழுந்தது.
உணவை வாயில் வைத்துக் கொண்டு அவன் இருமியதைக் கண்டவள் கீழே கிடந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவனிடம் நீட்டினாள். "என்னாச்சு சார்.. பொறுமையா குடிங்க ."
ஒருவழியாக தண்ணீரை குடித்து தன்னை சமன் செய்து கொண்டவன் பீதியோடு செல்வியைப் பார்த்தான். அவளோ அவனை வித்தியாசமாக பார்த்தாள். அவனது பயத்திற்கு காரணம் ராம் ஏற்கனவே கோபத்தில் இருக்கிறான். மீண்டும் அவன் அறைக்கு செல்ல வேண்டுமா என்று தான். அதோடு மட்டுமின்றி முன்னொரு நாள் செல்வி வந்து விட்டு போன அன்று முழுவதும் அவன் கோபத்தில் இருந்ததை கண்டவனாயிற்றே.
இப்போது என்ன நடக்க போகிறதோ என்பது தான் அவன் மூளையில் ஓடிக் கொண்டிருந்தது. "சார்.... சார்....." மெல்லிய குரல் அவனது செவிகளில் விழ அவளை ஏறிட்டவனுக்கு அவளது உருவ மாற்றம் கண்கூடாக தெரிந்தது. கண்களிலும் வெறுமை குடி கொண்டிருந்தது.
அவளது தோற்றம் அவனுக்கு பரிதாபமாக இருக்க உண்ணாமல் கை கழுவியவன் "சொல்லுங்க மேம்.... "
"சாரப் பாக்கணும். " அவள் தயங்கிட "இருங்க நா கேட்டுட்டு வரேன்." என்று எழுந்து சென்றுவிட அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள் செல்வி.
ராமின் அறைக் கதவை தட்டுவதற்கே கோகுலின் கைகள் நடுங்கியது. சற்று முன்பு வாங்கிய வசவுகள் அவனது செவியுனுடே வந்து போனது. திரும்பி பார்த்தவனுக்கு சோர்வுடன் கண்களை மூடிக் கொண்டிருந்த செல்வி தெரிய வேறு எதையும் யோசிக்காமல் கதவை தட்டினான்.
"ம்ம்ம்..... " சிங்கத்தின் உறுமல் போல கேட்டது அவனுக்கு. மெதுவாக கதவை திறந்தவன் "சா... சார் " என்று இழுக்க அவனது சாரை கேட்டவனுக்கு இன்னும் கோபம் வந்தது.
"என்ன கோகுல்.... உங்க கிட்ட இப்ப தான சொன்னேன். என்ன தொந்திரவு பண்ணாதீங்கனு.... மறுபடியும் வந்து நிக்குறீங்க. வெளிய போங்க"
"இல்ல சார்... உங்கள பாக்க"
"யாரையும் பாக்க மாட்டேனு சொன்னதா எனக்கு நியாபகம்"
"இல்ல.... சார்... பிரபாகரன்" அந்த பெயரை கேட்டவன் ஒரு நிமிடம் கண்களை மூடி திறந்தான். அவனது முகத்தில் வருத்தம் நிறைந்திருந்தது. "செல்வியா...."
"ஆமாம் சார்..."
"உள்ள அனுப்பு" என்ற சொன்னவன் கண்களை மூடி தனது இருக்கையில் சாய்ந்தான். அவன் எடுத்து கொண்ட வழக்குகளில் இதுவரை அவன் தீர்த்திடாத வழக்கல்லவா.
தன்னுடைய சொந்த பிரச்சனைகளில் அவன் இந்த வழக்கையே மறந்து விட்டான். அவனது மனம் குற்றவுணர்ச்சியில் துடித்தது.
உள்ளே நுழைந்த செல்வி ஒரு நிமிடம் திகைத்து விழித்தாள். அவள் அறிந்த வரை ராம் அமைதியாய் அதே சமயம் அழுத்தமாகவும் , ஆளுமையுடனும் இருப்பான். இன்று அவனது தோற்றமே வித்தியாசமானதாக இருந்ததைக் கண்டு அவளது மனதில் பல கேள்விகள் எழுந்தது.
அவள் அவனையே பார்த்துக் கொண்டு தன்னுள் சிந்தித்து படியே இருக்க , ராம் தனது தொண்டையினை செருமி அவளை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தான்.
அவனது கண்கள் அவளை காணாமல் எங்கோ பார்த்து கொண்டிருந்தது. இதுவரை யார் முன்பும் அவன் அப்படி தலை குனிந்திருந்தது இல்லை. இதற்கெல்லாம் காரணம் அவள் தானே. தன்னை சமன் செய்து கொண்டவன் ஒரு சிங்கத்தின் ஆளுமையோடு நிமிர்ந்து நின்றான். "சொல்லுங்க செல்வி.... "
அவனது குரலில் முன்பெல்லாம் கம்பீரம் இருக்கும், இப்போது அதனோடு கூட கடுமையும் இருப்பதாக தோன்றியது செல்விக்கு.
"சார்... அப்பா கேஸ்ல..... " அவள் இழுக்கவும் "சாரி செல்வி இது வரைக்கும் நா எதுவும் கண்டுபிடிக்கல. எனக்கு கொஞ்ச நாள் டைம் கொடுங்க. கண்டிப்பா நா உங்க கேஸ முடிச்சு கொடுத்துடுவேன்"
"அது..... இல்ல.... சார்..... " என அவள் மீண்டும் தயங்கவும்
"என்னாச்சு செல்வி.... சொல்லுங்க"
"இல்ல சார்.... நேத்து வீட்ட சுத்தம் பண்ணப்போ இந்த டைரி கிடச்சுது. அப்பாவோட டைரினு நினைக்குறேன். ரொம்ப பழைய டைரியா இருக்கு. உங்களுக்கு எதுவும் பயன்படுமானு கேக்க தான் வந்தேன் சார்"
"டைரிய கொடுங்க பாக்கலாம்" அந்த டைரியை வாங்கி பார்த்தவனுக்கு அந்த டைரி ஹிந்தியில் எழுதப் பட்டிருப்பது புரிந்தது.
"செல்வி உங்க அப்பாக்கு ஹிந்தி தெரியுமா? உங்க அப்பா மும்பை போயிருக்காரா?"
"இல்ல சார் தெரியாது. அவங்க பேசி நா பாத்தது இல்ல. அப்பா தமிழ் நாட்ட விட்டு எங்கயும் போனது இல்ல சார் "
"ஒரு வேள உங்களுக்கு தெரியாம இருக்கலாம்ல"
"எனக்கு தெரியாம இருக்கலாம் சார். ஆனா அம்மாவுக்கு கூட தெரியாம எப்படி இருக்கும். "
ஒரு நொடி தனது புருவம் சுருக்கி யோசித்தவன் அவளிடம் "சரி நீங்க போங்க. உங்க நம்பர கோகுல் கிட்ட தந்துட்டு போங்க. "
என்றான்.
"சரிங்க சார்.. நா வரேன்." என்ற படி அவனறையை விட்டு அவள் வெளியேறி வர அதுவரை தனது நகத்தை கடித்துக் கொண்டு இருந்தான் கோகுல். அவள் வந்ததும் அவளது முகத்தில் அழுததற்கான அறிகுறியோ சோகமோ தென்படுகிறதா என அவளை ஆராயத் தொடங்கினான்.
அவனது செயலில் அதிர்ச்சி அடைந்தவள் "என்ன பண்றீங்க" என கேட்கவும் தான் அவளை சற்று அதிகப்படியாகவே பார்த்ததை உணர்ந்தவன்
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.