All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"கல் நெஞ்சே கசிந்துருகு " கதைப் பகுதி

Status
Not open for further replies.

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராமிற்கு தலை சுற்றியது. அவனது வாழ்வில் முதல் முறையாக செய்வதறியாது திகைத்து நின்றான். இது வரை அவன் எந்த தோல்வியையும் சந்தித்தது இல்லை. எப்போதும் வெற்றியை மட்டுமே அடைந்து கொண்டிருந்தவனுக்கு இந்த தோல்வி புதிதாக இருந்தது.

இதுவரை அவன் எடுத்த எந்த வழக்கிலும் அவன் இவ்வளவு போராடியதில்லை. பிரபாகரன் கொலை வழக்கில் அவனுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அதோடு மட்டுமின்றி கொலை செய்ததாக கூறிக் கொண்டு ஒருவன் சரணடைந்து விட்டான்.

அவன் உண்மையான கொலையாளி இல்லை என்று ராமின் மனதிற்கு தெரிந்தாலும் அதை நிரூபிக்க அவனிடம் ஆதாரம் இல்லை.

கண்ணீரோடு தனது தந்தையின் மரணத்திற்காக நீதி கேட்டு வந்த பெண்ணின் முகம் தான் அவனை உறக்கத்தை கலைத்தது. என்ன வழி என்ன வழியென்று அவனும் இயன்றவரை முயன்று விட்டான்.

அவனுக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றுதான் , குற்றத்தை ஒப்புக் கொண்டு சிறையில் இருப்பவன் பணத்திற்காக பழியை தன் மீது போட்டுக் கொண்டுள்ளான் என்பதே.

அந்த மனிதனின் வீட்டினை ராமின் ஆட்கள் கண்காணித்து சொன்ன தகவல்கள் இவை தாம் " தற்போது கொலை செய்ததாக சாதிக் கொண்டு ஜெயிலில் இருக்கும் நபருக்கு குடிப்பழக்கம் கிடையாது. கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றியவருக்கு பணத் தேவை இருந்திருக்கிறது மகளை கல்லூரியில் சேர்ப்பதற்கு.


இன்று அவரது மகள் கல்லூரியில் படிக்கிறாள். எப்படி யார் பணம் கொடுத்திருப்பார்கள், பணம் கொடுத்தவர்கள் தான் கொலையாளிகளா?? என தேடித் தேடி ஓய்ந்து விட்டான்.

நேரடியாக சரணடைந்தவரிடமே பேசிப் பார்த்து விட்டான். முதலில் பேச மறுத்தவரை தன்னுடைய வழிக்கு கொண்டு வந்தவன் அறிந்து கொண்டதெல்லாம் ஒன்றுதான் ' பணம் கொடுத்தது யாரென்று தெரியாது. போன் மூலம் செய்தி சொல்லப் பட்டது " என்பது தான்.

அதுவும் பொதுத் தொலைபேசி என்பதால் ராமால் அதற்கு மேல் கண்டுபிடிக்க இயலவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றான்.

தலையில் கைவைத்து அமர்ந்திருந்தவன் தனது அலுவலக அறையின் கதவு தட்டப்படும் ஓசையில் கவனம் கலைந்து எழுந்து அமர்ந்தான்.

அவனது உதவியாளர் வாயிலில் நின்றிருந்தார். "என்ன சண்முகம். என்னாச்சு"

"சார் உங்கள பாக்க பிரபாகரன் சாரோட பொண்ணு செல்வி வந்துருக்காங்க. "

ஒரு நிமிடம் யோசித்தவன் "வர சொல்லுங்க" என்றான்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் உள்ளே வந்த செல்வியை அமர சொன்னவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

"சார்... உங்க கிட்ட எதையும் கேக்றதுக்காக நா வரல. இத உங்க கிட்ட தர தான் வந்தேன்" என்றவள் அவனிடம் ஒரு கடிதத்தை தந்தாள்.

"எங்க வீட்டுக்கு ஒரு பார்சல் வந்துச்சு. அதுல இந்த லெட்டர உங்க கிட்ட கொடுக்க சொல்லி எழுதியிருந்தாங்க. அதான் கொண்டு வந்தேன். நா வரேன் சார்"

அவள் எந்த கேள்வியும் கேட்காமல் செல்வதை பார்த்த ராமிற்கு வியப்பாக இருந்தது. தனது கம்பீரமான குரலில் " செல்வி.... ஒரு நிமிஷம்" என்றான்.

அவள் திரும்பவும் "இன்னும் கேஸ்ல எந்த முன்னேற்றமும் இல்ல. ஆனா" என அவன் முடிப்பதற்குள் " எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு சார். நா வரேன் " என்று சென்றுவிட்டாள்.

இவ்வளவு நம்பிக்கை இருப்பதை நினைத்து பெருமை கொள்வதா இல்லை தன்னால் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதை நினைத்து வருந்துவதா என குழம்பி நின்றான்.

அப்போது தான் தன் முன்னே இருந்த செய்தி தாளை பார்த்தான். அதில் இருந்த செய்தியைப் பார்த்தவனின் விழிகள் விரிவடைந்தன. தொலைபேசியை எடுத்து தனது காவல் துறை நண்பன் அபிலாஷிற்கு அழைத்தான்.

அபிலாஷ் சென்னை மாகாணத்தில் ( deputy commissioner of police) உயர் காவல் அதிகாரியாக இருந்தான். நேர்மைக்கு பெயர் போன அவனும் ராமும் பள்ளியில் ஒன்றாக பயின்றவர்கள்.

வெகு நாள் கழித்து நண்பனது எண்ணைப் பார்த்ததும் அபிலாஷுற்கு ஆச்சர்யமாயிருந்தது. தன்னுடன் பேசிக் கொண்டிருந்தவர்களை சற்று நேரம் கழித்து வருமாறு சொன்னவன் நண்பனது அழைப்பினை ஏற்றான்.

" மச்சான் எப்படி இருக்க. எதுவும் பிரச்சனயாடா . என்ன பண்ணணும் சொல்லுடா" என்ற படபடவென பொரிந்தான் அபிலாஷ்.

அவனது பேச்சில் எழுந்த புன்னகையுடன் " ஆமாடா. உன் கிட்ட பேசணும். இப்ப நீ ப்ரீயா (free)" என்றான்.

"எங்க வரணும்டா"

"நாம எப்பவும் பாத்துக்குற பார்க்ல பாக்கலாம்டா"

"சரிடா நா கிளம்பிட்டேன். இன்னும் பதினஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பேன்" என்ற படி அபிலாஷ் அழைப்பைத் துண்டித்தான்.

அவனிடம் பேசிவிட்டு போனை வைத்த ராம் செய்தி தாளை எடுத்துக் கொண்டான். அப்போது அந்த பெண் கொடுத்த கடிதம் கீழே விழ அதை எடுத்தவன் செய்தி தாளோடு சேர்த்து அதையும் எடுத்து கொண்டு தன்னுடைய நண்பனைக் காண விரைந்தான்.


அடுத்த அரை மணி நேரத்தில் இருவரும் அந்த பார்க்கில் அமர்ந்திருந்தனர். இருவரும் தங்களது அடையாளங்களை மறைந்திருந்தனர் . தங்களை யாரும் அறிந்து கொள்ள கூடாது என்பதில் அவர்கள் கவனமாய் இருந்தனர்.
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சிறு வயதில் இருந்ததை விட கம்பீரம் கூடி பேரழகனாக விளங்கும் ராமைப் பார்த்த அபிலாஷுற்கு பெருமையாக இருந்தது அவனின் நண்பன் என்பதில்.

"டேய் மச்சான் எதுக்கு கூப்டனு சொல்லுடா. இப்படியே என்னப் பாத்துகிட்டே இருந்தா என்ன அர்த்தம். தூரத்துலேர்ந்து பாக்குரவங்களுக்கு நீயும் நானும் ஏதோ ரொமாண்ட்ஸ் பண்ற போல தெரியுதுனு நினக்கிறேன் . எல்லாரும் ஒரு மாதிரியா பாக்குறாங்க. சீக்கிரம் சொல்லுடா"
பள்ளி பருவம் போல இன்றும் தன் நண்பனிடம் விளையாட்டாக கூறினான் அபிலாஷ்.

"டேய் விளையாடுற நிலமைல நா இல்ல. எனக்கு உன்னோட உதவி வேணும்." இறுக்கமான குரலில் அவன் சொல்லி முடிக்க தனது விளையாட்டைக் கைவிட்டான் அபிலாஷ்.

"என்னாச்சுடா மச்சான்" என்றவனிடம் இரு காகித துண்டுகளை காட்டினான் ராம்.

"எனக்கு சில டிடைல்ஸ் வேணும்" என பிரபாகரனின் கொலை வழக்கை எடுத்ததிலிருந்து இன்று வரை நடந்த நிகழ்வுகளை கூறினான்.

பின்னர் " இத கண்டுபிடிக்க முடியாம நா திணறிக்கிட்டு இருக்கேன். இதுல இன்னொரு கொலை வேற நடந்துருக்குடா. பேரு சுகுமாறன். இவரும் வி.எம் குருப்ஸ் கம்பெனில மேனேஜர்.

வேல செய்யும் இடத்துலயும் சரி , வீட்லயும் சரி இவங்கள ரொம்ப நல்லவங்கனு சொல்றாங்க. யாருமே எதிரிக்கு கிடையாது.

ஆனா ரெண்டு பேரையும் வயசானவங்கனு கூட பாக்காம வெட்டிக் கொன்னுருக்காங்க . இவங்க ரெண்டு பேர் கேஸ்லயும் ஒரு சில ஒற்றுமை இருக்கு.

இவங்க ரெண்டு பேரும் வி.எம் குருப்ஸ்ல வேலப் பாக்குறாங்க. ரெண்டு பேரையும் குடிபோதைல கொல பண்ணதா போலீஸ்ல இரண்டு பேர் சரணடைஞ்சுருக்காங்க. ஆனா எனக்கு அப்படித் தோணல. ஏதோ ஒண்ணு இவங்க ரெண்டு பேருக்கும் இடையில இருக்கு. அது என்னனு தெரியல. இதுல எனக்கு உன்னோட உதவி வேணும்."

"நா என்னப் பண்ணனும் சொல்லு ராம்"

"என்னோட ஆளுங்கள விட்டு இவங்க ரெண்டு பேர் பத்தின எல்லா விவரத்தையும் கண்டுபிடிக்க சொல்லிருக்கேன். நீ எனக்கு உன்னோட டிபார்ட்மெண்ட் வழியா எனக்கு உதவிப் பண்ணு"

"சரிடா நா பண்றேன்" என்றவனிடம் அவன் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூறிய ராம் அபிலாஷிடமிருந்து விடை பெற்றான்.

தனது பைக்கை உயிர்பித்து கிளம்பியவனின் விழிகளில் விழுந்தாள் அவனது காதலி. தன்னுடைய வேலை பளுவில் அவளை மறைந்திருந்தவன் அவளை இன்று காண்பான் என எண்ணவில்லை.


அவளைக் கண்ட அடுத்த நொடியே அவளிடம் பேச வேண்டும் என அவனது இதயம் கூப்பாடு போட அதை அடக்கிடும் வழி அறியாது தன்னவளை நெருங்கி தனது பைக்கை நிறுத்தினான்.

தனக்கு அருகில் வந்து நின்ற பைக்கை பார்த்த கனியோ திருதிரு வென விழிக்க அதில் அவன் விரும்பியே விழுந்தான். அன்று போல இல்லாமல் இன்று அவன் அவளிடம் பேச ஆரம்பித்தான்.

"ஹாய் கனி... நா தான் ராம்.. எப்படி இருக்கீங்க . பாத்து ரொம்ப நாள் ஆச்சு."

வெகு நாட்கள் பழகியவன் போல தன்னிடம் பேசுபவனை வித்தியாசமாய் பார்த்தவள் அவனின் வசதிக்கு தன்னை மதித்து தன்னிடம் பேசியதை எண்ணி சிறு புன்னகையோடு பதில் கூறினாள்.


" நல்லாருக்கேன் ராம் சார். நீங்க எப்படி இருக்கீங்க. இங்க என்ன பண்றீங்க. "

"சும்மா ப்ரண்ட பாக்க வந்தேன்."

"ஓ....ஓ... சரி சார் நா கிளம்புறேன்."
அவனிடம் மேற்கொண்டு என்ன பேசுவதென்று தெரியாமல் அவள் விடைபெற முயன்றாள்.

அவளைப் பார்க்கும் போது மட்டும் தன்னுடைய இயல்பு மொத்தமாய் மாறி போவதை அவன் நன்கு உணர்ந்திருந்தான்.


"என் கூட காபி குடிக்க வரீங்களா கனி"

" சாரி சார் தப்பா நினைக்காதீங்க. எனக்கு டீ, காபி குடிக்கும் பழக்கம் கிடையாது"

அவளது பதிலில் சோர்ந்தவன் "அட்லீஸ்ட் ஜூஸ் குடிக்கலாம்ல" என்றான்.

ஒரு நிமிடம் அவனை ஆழ்ந்து பார்த்தவள் "என்ன சொல்லனும் சார் சொல்லுங்க" என்று நேரடியாக கேட்டாள்.

அவள் அப்படிக் கேட்பாள் என எதிர்பாராதவன் அதிர்ந்தான். ஆனால் உடனேயே தன்னை சமாளித்துக் கொண்டு தன்னுடைய காதலைச் சொல்ல முடிவெடுத்தான்.


"அது வந்து கனி... நீங்க என்னப் பத்தி என்ன நினைக்குறீங்கனு எனக்கு தெரியல. ஆனா நா உங்கள உயிரா நினைக்கிறேன். உங்கள பாக்குறதுக்கு முன்னாடியே உங்கள விரும்ப ஆரம்பிச்சுட்டேன்.


என்னோட வாழ்நாள் முழுசும் உங்கள விரும்புவேன். நீங்க என்ன விரும்பலைனாலும். இனி என் வாழ்க்கை உங்களோட தான்" முதலில் தயக்கமாய் ஆரம்பித்தாலும் பின்னர் கம்பீரமாய் அவன் சொல்லி முடிக்கவும் இப்போது அதிர்ந்து நிற்பது கனியின் முறையானது .


"நா.... நா..." எனத் திணறினாள்.

"என்னப் பிடிக்கலயா கனி...." உயிரை கண்களில் தேக்கி வைத்து அவன் கேட்கவும் கனி கலங்கி நின்றாள்.

"உங்களப் பிடிக்கும். ஆனா லவ் எனக்கு செட் ஆகாது. நானும் உங்களுக்கு செட் ஆக மாட்டேன்"

"ஏன் செட் ஆக மாட்ட"

"எனக்கு உங்க மேல அந்த மாதிரி எதுவும் தோணல" அவள் அவனுக்கு வலித்திட கூடாதென்று மென்மையாக கூற அவனோ
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அது தான் எனக்கு தெரியுமே கனி... நா தான் உன்ன லவ் பண்றேன். நீ என்ன லவ் பண்ணல. ஆனா கடைசி வரை பண்ணாமலா இருக்கப் போற. அதுவரைக்கும் நா காத்திருக்கேன். " அவன் கூலாக சொல்ல இவளோ

"இல்ல நா என்ன சொல்ல......" எனத் தொடங்கியவளைத் தடுத்தவன் தன் கையை அவள் புறம் நீட்ட பெண்ணவளோ குழம்பி நின்றாள்.

"கையக் குடு கனி.. இனிமே ஊன்னப் பொறுத்து வரைக்கும் நாம ப்ரெண்ட்ஸ்...." என்று அழகாய் புன்னகைச் சிந்தினான்.

தன்னிடம் பேசத் தயங்கியவன் இவனா என அவள் நினைக்குமளவுக்கு அவன் பேச அவள் தான் செய்வதறியாது திகைத்து நின்றாள்.

அவன் கை நீட்டியபடி புன்னகையோடு காத்திருக்க அவனது புன்னகை வாடிட கூடாதென்று அவள் மனதில் தோன்றிய நொடி அவனது கையினைப் பற்றினாள்.

இருவரும் புன்னகை சிந்த அதைக் கலைக்கவென எங்கிருந்தோ வந்த துப்பாக்கி குண்டு கனியின் இடது கையில் பாய்ந்தது. வலியில் அவள் "ஆஆஆஆ..... அம்மா" என கதறிய படி அவள் கீழே விழத் தொடங்கவும் அடுத்த தோட்டா அவளது தோள்பட்டையை பதம் பார்த்தது. அடுத்தடுத்து இரண்டு தோட்டாக்கள் பாய அதில் நிலைகுலைந்தவள் மயங்கி சரிந்தாள். "கனி " என்ற அலறலுடன் அவளை தாங்கினான் ராம்.

கனியின் கண்கள் ராமின் முகத்தை பார்த்தப் படியே மூடின. அவன் கீழே குனிந்து அவளது முகத்தினை பார்க்க முயல மூன்றாவது தோட்டா ராமின் தலைக்கு மேல் சென்றது.

எல்லா நிகழ்வுகளும் இரண்டு நிமிடங்களுக்குள் நடத்திட எங்கிருந்து எனத் தெரியாமல் ஏழெட்டு பாதூகவலர்கள் அங்கே வந்தனர். ராமையும் கனியையும் அரண் போல அவர்கள் சூழ்ந்து கொண்டனர்.

கனியினைப் பார்த்து செய்வதறியாது ராம் பறிதவித்தான். அவனது மூளை செயல்படுவதை நிறுத்தி இருந்தது. "கனி.... கனி..." என்று ஓயாமல் அவன் புலம்ப அந்த பாதூகாவலர்களில் ஒருவன் ராமையும் கனியையும் பத்திரமாக காரில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு பறந்தான்.


அவர்கள் சென்று விட்டாலும் பாதூகாவலர்களுக்கும் முகமறியா அந்த எதிரிகளுக்கும் நடந்த சண்டையில் அந்த இடமே போர்க்களமானது.

எதிரிகள் கொல்ல வந்தது ராமையா????? இல்லை கனியையா?????? காலத்தின் கரமதில் தான் விடையுள்ளது.
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தோழமைகளுக்கு வணக்கம்.....

தாமதத்திதற்கு மன்னனிக்கவும்....

இனி தொடர்ந்து பதிவிடுகிறேன். படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை கூறவும்

அன்புடன்,
பூவினி
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே......

அடுத்த அத்தியாயத்தை பதிவிட்டுள்ளேன்.
இந்த கதையில் மூன்று ஜோடிக்கள்.

ராம் - கனி: காதலென்ற வார்த்தையை உயிராக எண்ணும் காதலன் , அவனது காதலைக் கண்டாலே விலகி போகத் துடிக்கும் காதலி

ஆதி - மதி: எதற்கும் கட்டுபடாமல் வாழும் காதலன், தொட்டதெற்கெல்லாம் நடுங்கும் காதலி.

அத்து - ஹரிணி : ஒவ்வொரு நொடியும் தன் இணைக்காக காதலில் கசிந்துகும் ஜோடி

இதில் ராம் - கனி, ஆதி - மதி என இரண்டு ஜோடிக்களின் காதல் நிகழ்காலத்தில் நடக்கிறது.

அத்து - ஹரிணி என்றோ காதலித்துவிட்டு ( கடந்த காலம்) தற்போது பிரிந்து தனது துணையை எண்ணி வருந்துகின்றனர்.

மூன்று ஜோடிக்கள் இருப்பதால் கதையில் வரும் கதாபாத்திரங்களின் எண்ணிக்கை கொஞ்சம் அதிகம் தான்.

காதல் கதையாக மட்டுமின்றி சற்று வித்தியாசமாகவும் எழுத நினைக்கிறேன்.

கேள்விகள், குழப்பம் என நிறைய இருக்கும். தொடர்ந்து படித்தால் மட்டுமே புரியும்....

இதுவரை எனக்கு லைக்ஸ் , கமெண்ட்ஸ் தந்தற்கு நன்றி.

படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்கள் மூலமே என்னை அறிந்து கொள்ள முடியும்..

அன்புடன்,
பூவினி.
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 15


தனது காதலியினை மடிதாங்கிய படி காரில் சென்று கொண்டிருந்த ராமிற்கு அவளை தவிர இந்த உலகத்தில் எதுவும் தெரியவில்லை.

மயங்கிய நிலையில் அவளைப் பார்த்தவனுக்கு உயிரே போய்விட்டது. தன் காதலை சொல்லிய அடுத்த பதினைந்து நிமிடங்களில் நடந்த அசம்பாவிதத்தை அவன் வாழ்வில் என்றும் அவனால் மறந்திட இயலாது.

அவளது முகத்தையே பித்துப் பிடித்தவனைப் போல பார்த்துக் கொண்டிருந்தான். உயிருக்கு உயிராய் யாரை நேசித்தானோ அவள் இன்று அவனுடைய கண் முன்னே உயிருக்கு போராடுகிறாள்.


எத்தனையோ கொலை வழக்குகளில் பயமறியாமல் வாதாடியவனுக்கு இன்று பயம் வந்தது. அவள் அணிந்திருந்த நீல வண்ண சுடிதார் முழுவதும் இரத்தம் பதிந்திருந்தது. அவனுடைய வெள்ளை நிறச் சட்டையில் அவன் காதலியின் இரத்தம் ஓவியங்களைத் தீட்டியிருந்தது.

அந்த மயக்கத்திலும் வலியில் அவள் முனங்க , அவளை விட இவன் தான் துடித்தப் போனான். "உனக்கு ஒண்ணும் ஆகாது கனி. ஆகவும் விட மாட்டேன். சீக்கிரம் ஹாஸ்பிட்டல் போங்க" என கர்ஜுத்தான்.

மருவத்துவமனையில் அனைத்தும் தயாராக இருந்தது. இவர்கள் வரும் முன்பே காரில் ராம் போன் செய்து ஏற்பாடுகளை தொடங்க சொல்லியிருந்தான். கனியின் தோளில் பாய்ந்திருந்த குண்டுகளை அகற்ற அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடனது.

அவளை அறைக்குள் அழைத்து செல்வதற்கு முன்பாக அவளது அருகில் சென்றவன் மென்மையாக அவளது நெற்றியில் முதல் முத்தத்தை பதிவு செய்தான் .
அவனது கண்ணீர்த் துளிகள் அவளது முகத்தினில் பட்டு சிதறின.

அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தவனை நெருங்க அங்கிருந்த யாருக்குமே துணிவில்லை. அனைவரும் அவனை விட்டு விலகியே இருந்தனர்.


அபிலாஷ் மற்றும் ஸ்ரீ இருவரும் அங்கு வந்தனர். ஸ்ரீ அண்ணனின் அருகில் அமர்ந்தது அவனது தோளினை ஆதரவாக பற்றினான். ஸ்ரீயைக் கண்டதும் ராம் அவனை அனைத்துக் கொண்டான்.

"அவளுக்கு ஒண்ணும் ஆகாதுலடா... சொல்லுடா... ரெண்டு புல்லட்ஸ். வலியில துடிச்சாடா. என்னால அவள அப்படி பாக்கவே முடியலடா. சரியாகிடும் தான. சொல்லுடா " என தம்பியை உலுக்கினான்.

"அண்ணா... ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா இரு.. அவளுக்கு ஒண்ணும் ஆகாது. நீ முதல்ல ரிலாக்ஸா இருணா. " என்றவன் ராமின் சட்டை முழுவதும் இரத்தமாக இருப்பதைப் பார்த்து அங்கிருந்தவரை அழைத்து புதிய சட்டை ஒன்றை வாங்கி வரச் சொன்னான்.


அவர் வாங்கி வந்ததும் "அண்ணா இந்த சட்டைய போட்டுகோங்க. " என்று அவனிடம் தரவும் நர்ஸ் வந்து கனியின் ஆடைகளையும், நகைகளையும் தரவும் சரியாக இருந்தது.

எந்த நீலச் சுடிதாரில் அவளை முதன் முறையாக கண்டானோ அது கிழிக்கப்பட்டு அவனது கரங்களில் கிடந்தது.

"சார் பேஷன்ட்டுக்கு ப்ளட் லாஸ் ரொம்ப ஆகிருக்கு . எங்க கிட்ட A1B+ ப்ளட் குரூப் இல்ல . உங்களால ஏற்பாடு பண்ண முடியுமா??" அறையிலிருந்து வெளிவந்த டாக்டர் சொல்லவும் ஸ்ரீ உடனே

"டாக்டர் எனக்கும் அதே குரூப் தான். நா தரேன்" என்றான்.

"ரொம்ப நல்லது" என்ற படி அவனை அழைத்துக் கொண்டு அவர் சென்றுவிட ராம் இறுகி போய் அமர்ந்திருந்தான்.

அவனருகே வந்த அபிலாஷ் "ராம்" என்றழைக்க அவனை கோபமாய் பார்த்தான் ராம்.

ராமின் கோபத்தை பற்றி அபிலாஷிற்கு நன்றாக தெரியும். எளிதில் கோபப்படாத ராம் , கோபம் வந்துவிட்டால் எல்லாரையும் ஒரு வழி செய்து விடுவான்.

"ராம் நா சொல்றத கேளு.. அவசரப்படாத. ராம்..."

"அவசரமா. நா அவசரப்படறேனா... இன்னும் அமைதியா உக்காந்துட்டு இருக்கேன் . இது உனக்கு அவசரமா தெரியுதா... எவ்ளோ தைரியம் இருந்தா என் கனி மேல கை வச்சிருபாங்க. என் கண் முன்னாடியே.. அவ வலிய துடிச்சப்ப எனக்கு உயிரே போயிடுச்சு தெரியுமா???

அவள இப்படி பண்ணவங்கள சும்மா விட சொல்றீயா. என்னால முடியாது" என்றவன் விறுவிறுவென வெளியே சென்று விட்டான்.

இரத்தம் கொடுத்துவிட்டு வந்த ஸ்ரீ தமையனைக் காணாது தேடவும் அபிலாஷ் நடந்ததை சொன்னான்.
ஸ்ரீக்கு ஒருபுறம் அண்ணன் செய்யப் போவதில் உடன்பாடு இருந்தாலும் அண்ணனை நினைத்துக் கவலைக் கொண்டான்.

அன்றொரு நாள் அவன் எண்ணியது இன்று நடப்பது போல தோன்றியது. இந்த காதல் தன் அண்ணனின் வாழ்வினை மாற்றத் தொடங்கி விட்டது என்றெண்ணியவன் மௌனமாய் அமர்ந்து விட்டான்.

அதே நேரம் ராமின் வீட்டில் ராமின் தந்தை கோபத்தில் கத்திக் கொண்டிருந்தார்.

"எப்படி இப்படி நடந்துச்சு. நீஙகளெல்லாம் எதுக்கு இருக்கீங்க. அவன எப்பவும் பாதுகாக்கணும்னு தான உங்களுக்கு சம்பளம் தரேன்.

எவ்ளோ தைரியம் இருந்தா என் பையன் மேல கை வைப்பாங்க. அப்ப நீங்க அவன சுத்தி பாதுகாப்பா இல்லாம எங்க போனீங்க... வாய்த் தொறந்து பதில் சொல்லுங்க" சிங்கமாய் கர்ஜித்த அவரிடம் யாரும் பேச துணிவில்லாமல் அமைதியாக நின்றிருந்தனர்.

"இப்ப சொல்ல போறீங்களா இல்லையா"
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"சார் .... அது வந்து.... எப்பவும் போல ராம் சாருக்கு தெரியாம அவர் பின்னாடியே நாங்க போனோம். ஆனா சார் அவரு மேடம் கிட்ட பேசுறதுக்காக அவங்க கிட்ட போனாரு. அதான் கொஞ்சம் தள்ளி நின்னு கவனிச்சிட்டு இருந்தோம்" என்று திணறியவன் இடைவெளி விட்டு

"கண்ணிமைக்குற நேரத்துல எல்லாம் நடந்து முடிஞ்சிடுச்சு சார்"

" என் பையனுக்கு நடந்தாலும் என் மருமகளுக்கு நடந்தாலும் ரெண்டும் எனக்கு ஒண்ணு தான். அவன் வாழ்க்கையில ஆசப்பட்ட முதல் விஷயம் என் மருமக தான். இந்நேரம் அவன் எப்படி துடிப்பானு எனக்கு நல்லா தெரியும்.

போங்க போய் இனிமேலாவது உங்க வேலைய ஒழுங்காப் பாருங்க. என்னோட மகனுக்கும் மருமகளுக்கும் எதுவும் ஆச்சு தொலச்சுடுவேன் கிளம்புங்க." என்றவர் அடுத்ததாய் யாருக்கு தொலைபேசியில் அழைத்தார்.

சில பல விஷயங்களை பேசி முடித்ததும் அவரின் கண்கள் சாந்தத்தை தழுவியிருந்தன.

"இனிமேல் என் மகனே நினச்சாலும் உன்ன என்கிட்டேர்ந்து காப்பாத்த முடியாது. " என முகம் தெரியா எதிரியை நினைத்தார்.


மருத்துவமனையை விட்டு தன்னுடைய தனிப்பட்ட பங்களாவிற்குள் நுழைந்த ராமிற்கு இதயம் பாரமாய் இருந்தது.

தன்னவளை நினைத்து கலங்கியவன் செய்வதறியாது திகைத்து நின்றான். இதற்கு காரணம் யாரென்று அவனால் எப்படி கண்டுபிடிக்க முடியும்.

இந்ய இளம் வயதில் அவன் எவ்வளவு பேரையும் , புகழையும் சேர்த்திருக்கின்றானோ அதே அளவு எதிரிகளையும் சேர்த்திருக்கிறான்.

யாரும் வாதாட துணியாத பல சிக்கலான வழக்குகளிலும் , நெருங்கிட முடியாத ரவுடிகளையும்
எதிர்த்து தான் அவன் களமிறங்கியிருக்கிறான்.

இதுவரை அவனை நெருங்கிட யாரும் துணிந்ததில்லை. காரணம் அவனது தந்தையும், அவரது செல்வாக்கும், செல்வமும். இன்று அதை எல்லாம் துச்சமாய் எண்ணி ஒருவன் தன்னை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறான் என்றால் அவனும் எதற்கும் அஞ்சாதவனாக தான் இருக்க வேண்டும் என எண்ணியவன் அங்கிருந்த தொலைக் காட்சிப் பெட்டியை உயிர்பித்தான்.

அதில் முக்கிய செய்தியாக இவன் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சி ஒளிபரப்ப பட்டுக் கொண்டிருந்தது.
எந்த விதத்திலும் அதில் கனியின் பெயர் வரவில்லை எனவும் இது தனது தந்தையின் செயல் என்றெண்ணியவன் தன்னுடைய பேண்ட் பாக்கெட்டிற்குள் கைவிட அவனின் கைகளில் அகப்பட்டது அந்தக் கடிதம்.

அப்போது தான் அதன் நியாபகம் வந்தவன் அதை பிரித்து படித்தான்.
அவன் முகம் இறுகிப் போய் அதைத் தூக்கி எறிந்தான்.

அதில் எழுதப்பட்டிருந்தது இது தான் " தேவையில்லாமல் எங்கள் விவகாரத்தில் தலை நுழைத்து விட்டாய். அதற்கு எங்களது சட்டபடி உனக்கு மரண தண்டனை. காத்திரு உன் இறுதி யாத்திரைக்கு" என்று எழுதப்பட்டிருந்தது.



மதியினை அவளது வீட்டில் விட்டு விட்டு வந்த மதிக்கு அவளது நினைவாகவே இருந்தது. பாவம் என்ன செய்கிறாளோ என்று ஓராயிரம் முறையாவது சிந்தித்திருப்பான்.

மதியின் நினைவுகளே அவனது மனதை ஆட்டி படைத்து கொண்டிருந்தது. ஏற்கனவே பயந்த சுபாவம் கொண்ட அவள் இன்று நடந்தேறிய சம்பவங்களால் கண்டிப்பாக நிறைய பாதிக்கப் பட்டிருப்பாள் என்றெண்ணிக் கொண்டிருந்தான்.

அவனது எண்ணத்தை பொய்யாக்கமல் மதியும் நடந்தவைகளை எண்ணி பயந்து கொண்டிருந்தாள். அவளது அன்னை அவளை ஒருவாறு சமாதானப்படுத்தி உறங்க வைத்து விட்டு தன்னுடைய அறைக்கு சென்றுவிட்டார்.

தன் அன்னை இருக்கும் வரை பயமின்றி உறங்கி கொண்டிருந்தவள் நடுநிசியில் அன்றைய நிகழ்வுகளை கனவாகக் கண்டாள்.

அது கனவென்று அவளால் பிரித்தறிய முடியாமல் அவளது பயம் அவளை வாட்டியது. அன்று நடந்த கோர நிகழ்வை கனவில் கண்டவுடன் தன்னையறியாமல் கதறிட ஆரம்பித்தாள்.

"வேணாம் விட்டுடுங்க. பாவம் மாமா...... ஐயோ ரத்தம் வருதே.... வேணாம் என்ன ஒண்ணும் பண்ணீடாதீங்க.. அம்மா .... " என்ற கத்தவும் அவளது குரல் கேட்டு உறக்கத்திலிருந்த அனைவரும் விழித்து எழுந்தனர்.

அவளது அறைக் கதவை தட்டியவர்கள் தங்களுக்கு பதில் கொடுக்காமல் தொடர்ந்து மதியின் அழுகுரல் கேட்கவும் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தனர்.

அங்கே கட்டிலில் மதி துடித்துக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்தவர்கள் பதறிட வினய்யோ கதவையே உடைத்துக் கொண்டு உள்ளே செல்ல முயன்றான்.

அவனது முயற்சிக்கு அங்கிருந்த வேலையாட்களும் சேர்ந்து உதவ ஒருவழியாக கதவை உடைத்து உள்ளே செல்ல மதியோ அதே நிலைமையில் தான் இருந்தாள்.

அனைவரையும் விட முன்னால் சென்ற வினய் மதியின் அருகே அமர்ந்து அவளை மடியில் கிடத்தி உலுக்கினான்.

"மதிமா எழுந்தரிடா.... உனக்கு ஒண்ணும் ஆகலடா... கண்ணத் திறந்து பாரு.... பாருமா" எனக் கதறவும் அங்கிருந்த அனைவரும் அவனது அன்பைக் கண்டு அமைதியாகினர்.
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்போது தான் வினய் கவனித்தான் மதியின் உடல் குளிர் ஜுரத்தில் தூக்கிப் போடுவது போல் நடுங்க துவங்கியது. வினயின் சட்டையை அவளது ஒரு கரம் பிடித்திருக்க மறுகரமோ பிடிப்பின்றி கட்டிலில் துவளத் துடங்கியது.

அதைக் கண்ட அனைவரும் செய்வதறியாது திகைக்கவும் வினய் தான் சுதாரித்து அவளது கரத்தினையும், பாதத்தையும் தேய்த்து விட்டான்.

அவளின் அன்னையும் அவளை அரவனைத்திட இடைப்பட்ட நொடிகளில் தங்களது குடும்ப மருத்துவருக்கு அழைத்திருந்தான் வினய்.

வெகு நேரம் துடித்தவள் பின்பு தான் அமைதியானாள்.

அவளை சோதித்த மருத்துவர் பெரிதாக அவளுக்கு ஒன்றுமில்லை என்றுக் கூறவும் தான் அனைவருக்கும் நிம்மதி வந்தது.

"ஆன்ட்டி இவளுக்கு இதுக்கு முன்னாடி இப்படி வந்தது இல்ல. திடீர்னு இன்னைக்கு வந்திருக்கு. எதுவும் பிரச்சனயா. சொல்லுங்க"

"பயப்படாத வினய்.. இவ எதுக்கோ பயப்படுறா அதான் காரணம். வீட்ல ஏதாவது பிரச்சனயா"

"இல்லையே ஆன்ட்டி. நாங்க அவள எதுவும் சொல்லல"

"சரிப்பா பயப்படுற அளவு ஒண்ணும் இல்ல. அவளுக்கு ஸ்லீப்பிங் டோஸ் குடுத்துருக்கேன். நல்லா தூங்கட்டும். மார்னிங் பேசிக்கலாம். " என்றவர் அவர்களிடம் விடை பெற்றார்.

அவரை வாசல் வரை வழியனுப்ப வினய் சென்றுவிட மதியின் தந்தையோ அவளின் காலடியில் அமர்ந்து மென்மையாக அவளது கரத்தினைப் பற்றிக் கொண்டார்.

இரவு முழுவதும் யாரும் பேசவில்லை , ஏன் உறங்கவுமில்லை. மருந்தின் விளைவால் மதி உறங்கியிருந்தாலும் நடு நடுவே உறக்கத்திலேயே பயந்து அவன் ஆரம்பித்தாள்.

அவளுக்கு என்ன நடந்ததென்று யாருக்கும் தெரியவில்லை. ஒவ்வொருவர் மனமும் ஒவ்வொரு விதமாக கவலைக் கொண்டது.

விடியும் நொடி வரை அவர்கள் கவலையுடன் தான் அமர்ந்திருந்தார்கள். ஒருவழியாக உறக்கத்திலிருந்து மதி கண்விழித்தாள்.

அனைவரையும் பார்த்தவள் ஒன்றும் புரியாமல் திருதிருவென விழிக்க , அவள் கண்விழித்த நொடியை எண்ணி மகிழ்வாய் இருந்தனர் அங்கிருந்தவர்கள்.

எல்லோரது அமைதியையும் கலைத்தது பாலமோகனின் குரல் " மதிமா...... உனக்கு என்னடா ஆச்சு. ஏதாவது பிரச்சனயா சொல்லுமா"

இரவில் நடந்தவைகள் அவள் நினைவில் இல்லை. ஆதலால் இந்த கேள்வியில் அவள் திகைத்தாள்.

"ஒண்ணுமில்லபா. ஏன் இப்படி கேக்குறீங்க. நா நல்லா தான் இருக்கேன். எல்லாரும் இங்க இருக்கீங்க.... என்னாச்சு "

"என்னடியம்மா என்னாச்சுனு எங்களக் கேக்குற. அப்படி உனக்கு என்ன தான் நடந்துச்சு. ராத்திரி பூரா பயந்து கத்திக் கிட்டே இருந்த. எதையாவது பாத்து பயந்துட்டியா??" அவளது அத்தை தங்கம் கேட்க ஒரு நிமிடம் அவளது முகம் அதிர்ச்சியைக் காட்டியது. மற்றவர்கள் அதை கவனிக்காவிட்டாலும் வினயின் கண்களுக்கு அது தப்பவில்லை.

"சொல்லுமா. நைட் புல்லா நீ தூங்கலடா. பயத்துல கத்திக் கிட்டே இருந்த" அவளது தாயின் கண்ணீர் குரலைக் கேட்டவளுக்கும் கண்ணீர் வந்தது.

"மதிமா.... நேத்து எதையோ பாத்து பயந்து தான காலேஜ் போகாம வீட்டுக்கு வந்த. அப்படி நேத்து என்ன பாத்த. உண்மைய சொல்லு"

"இல்ல அத்தான்.... அது வந்து" அவள் மென்று முழுங்கவும் "சொல்லுடா" என்று அவளை ஊக்கப்படுத்தினான்.

என்னவென்று சொல்லுவாள் , அவள் ஒரு கொலையை நேரில் பார்த்ததையா ????. நினைக்கும் போதே அவளது உடலில் நடுக்கம் தோன்றியது.

"ஏதோ அசம்பாவிதத்த பாத்ததா அந்த தம்பி சொன்னாரே அத நினச்சு தான் நீ பயந்தியாமா???" மதியின் தலையை வருடிக் கொண்டே அவளது தாய் கேட்கவும் அவரது வருடலில் தன்னை மறந்து இதயம் லேசாகி ஆமாம் என தலையாட்டினாள்.

"அத்தை , அம்மா நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் வெளியில இருக்கீங்களா??? நானும் மாமாவும் மதி கிட்ட தனியா பேசணும்???"

"என்னாச்சு வினய். எதுவும் பிரச்சனயா. எங்கள் ஏன் வெளிய போக சொல்ற" தவிப்பாய் கேட்ட மதியின் அன்னையுடன் அவனின் தாயும் சேர்ந்து கொண்டார்.

"அதான நாங்க எதுக்கு போகணும்"

"பிரச்சணலாம் ஒண்ணும் இல்ல அத்த. நீங்க போங்க. அவ கிட்ட பேசிட்டு நாங்க சொல்றோம். இங்க இருந்தா அழுது அழுது அவள பயமுறுத்துவீங்க அதான் போக சொன்னேன்" என்றான்.

"சரிப்பா " என்ற படி அவர் தயங்கி மதியைப் பார்க்கவும்

"அத்த... என் மேல நம்பிக்கை இல்லையா??? உங்க பொண்ண ஒண்ணும் பண்ணிட மாட்டேன். மாமா தான் கூட இருக்காருல.. அவர மீறி எதுவும் நடக்காது. போங்க"

அவனது கூற்றில் பதறியவர் " நம்பிக்கை அது இதுனு ஏன்பா பேசுற . அவள் நீ என்ன செஞ்சுட போற. எங்கள விட உனக்கு தான அவ மேல அதிக உரிமை இருக்கு. அவ கூட வாழப் போறதே நீ தான"
சொல்லிபடியே அவர் வெளியேறிட மதிக்கு அந்தநேரத்தில் ஏனோ ஆதியின் நினைவு வந்தது.

அவளை மேலும் சிந்திக்க விடாமல் வினய் பேச ஆரம்பித்தான்.

"என்ன பாத்து பயந்த சொல்லுமா... ஏதோ மாமா பாவம் விட்டுறுங்க அப்படினு நைட் புல்லா கத்துனமா??? யாரடா பாவமானு சொல்ற "

"அது.... வந்து...." எனத் திணறினாள்
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன பதில் சொல்வயென்று அவளுக்கு தெரியவில்லை. கொலையை நேரில் கண்டதை சொல்வதா என யோசிக்கத் தொடங்கினாள். சொன்னால் நீ ஏன் அங்கு சென்றாய் என்ற கேள்வி வரும்.

தினேஷால் என்று சொல்ல முடியாது. மீறி சொன்னால் ஆதி முதல் அந்தம் வரைச் சொல்ல வேண்டும். இத்தனை நாள் மறைத்தற்காக தன் மீது தான் கோபம் திரும்பும் என அவள் யோசிக்க

"சொல்லுடா" என்று அவளை ஊக்கினான் வினய்.

இதுவரை பார்வையாளராக இருந்த பாலமோகன் பேச ஆரம்பித்தார்.

"எங்க கிட்ட ஏன்டா மறைக்கிற. அப்பாவோ, இல்ல உன்னோட அத்தானோ இதுவரைக்கும் உன்ன ஏதாவது சொல்லிருக்கோமா??? அப்புறம் ஏன் பயப்படுற"

"இல்லபா.... " அவள் அழத் தொடங்கவும்

" மதிமா.... ஆதி ஈவ்னிங் கால் பண்ணியிருந்தாரு. என் கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டாரு"

அதில் அதிர்ந்து நிமிர்ந்தவள் ஆதி வினயிடம் என்ன சொல்லியிருப்பான் என்று எண்ணத் தொடங்கினாள்.

"கோவிலுக்கு போனப்ப தெரு நாயப் பாத்து நீ பயந்து ஓடி ஒளிஞ்சிருந்த இடத்துல நீ நம்ம மேனேஜர் சுகுமாறன் மாமாவ கொல்றத பார்த்திருக்க ... " எனவும் வேகமாக தலையாட்டியவள் பயத்தில் அவனது கரத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.

அவளது பயம் உணர்ந்தவன் மென்மையாக அவள் தலையை வருட தந்தையின் மடியில் தலை சாய்த்தவள் நடந்தவற்றைக் கூறினாள்.

இருவருமே அதிர்ந்து நிற்க "ஆதி உங்க கிட்ட இத முன்னாடியே சொல்லிட்டாரு தான" என்றாள்.

"இல்ல. கொலைய பாத்தத மட்டும் தான் சொன்னாரு. நேத்து காலைல உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தப்போ அத்த ரொம்ப பயந்துட்டாங்களாம். அதான் அவங்க கிட்ட எதுவும் சொல்லாம , ஈவ்னிங் எனக்கு போன் பண்ணி சொன்னாரு.

நா மாமா கிட்ட சொல்லிட்டேன். சரி கேட்டு உன்ன கஷ்டப்படுத்த வேண்டுமானு தான் கேக்கல"

இந்த நிகழ்வுகள் நடந்து இரண்டு வாரங்களாகின. ஆனாலும் தினமும் இரவில் மதி கனவு கண்டு அலறுவதை நிறுத்த வில்லை. யாருடனும் அதிகமாக பேசவில்லை.

இப்படியே போனால் அவளை பைத்தியம் என்று அனைவரும் சொல்லிவிடுவார்களோ என்ற அச்சம் மதியின் பெற்றோருக்கு வந்தது.

அவர்களின் காதுபடவே மதியை பற்றி சிலர் தவறாக பேசுவதை கேட்டதும் அவர்களது அச்சம் அதிகமானது.

இப்படி விடக்கூடாது என நினைத்தவர்கள் மாறுதல் வேண்டும் என அவளை மீண்டும் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

காலையும் , மாலையும் வினய் அவளுக்கு பாதுகாப்பாக வந்தான். கல்லூரிக்குள்ளும் அவளுக்கு பாதுகாவலாக பலரை நியமித்திருந்தான்.

ஆனால் பலன் என்னவோ பூஜ்ஜியம் தான். மதி ஒடுங்கி போய் விட்டாள். நிவியிடம் கூட பேசுவது இல்லை. கண்ணை மூடினாலே அக்கொலை தான் அவளுக்கு நினைவு வந்தது.

அவளது நிலைமைக்கு காரணம் புரியாமல் குழம்பி நின்றாள் நிவி. ஆதி மதியின் புறம் திரும்பவே இல்லை. அந்த ரவுடிகளை கண்டுபிடிப்பதிலேயே தன்னுடைய நேரத்தை செலவிட்டான்.

அவனுக்கு தெரியும் இனி மதி பாதுகாப்பாக இருப்பாள் என்று. ஆதலால் அவளது கவலையின்றி தன்னுடைய வேலையில் ஆழ்ந்தான் மதியும் வினயும் அவனை சந்திக்கும் வரை.

மதியின் நிலை நாளுக்கு நாள் மோசமாக அவளை திசைதிருப்ப அவளுக்கு திருமணம் செய்திட முடிவெடுத்தனர்.


விரைவாக எல்லா ஏற்பாடுகளும் நடைபெற அடுத்த வாரத்திலேயே அவளது திருமணம் நிச்சயிக்கப்பட்டது வினயுடன்.

திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு வந்தவுடன் ஆதிக்கு நேரில் சென்று வைக்க வேண்டுமென மதியையும் அழைத்துக் கொண்டு இதோ அவன் முன் அழைப்பிதழை நீட்டினான்.

நீண்ட நாள் கழித்து மதியை பார்த்த ஆதி அவள் தோற்றத்தை ஆராய்கையில் கண் முன்னே நீட்டப்பட்ட அழைப்பிதழைக் கண்டு புருவம் சுருக்கினான்.

"ஆதி... இந்தாங்க. நெக்ஸ்ட் வீக் எங்களுக்கு கல்யாணம். நீங்க கண்டிப்பாக வரணும்" என்ற படி வினய் மதியை அழைத்துக் கொண்டு செல்ல ஆதியோ சிங்கமாய் மாறி விட்டான்.

அவன் கையிலிருந்த அழைப்பிதழ் சின்னச் சின்னத் துண்டுகளாக வானில் பறந்தது.
 
Last edited:

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 16

கையில் இருந்த அழைப்பிதழை சுக்கு நூறாக கிழித்து வானில் பறக்க விட்டவன் , அடுத்த நொடி புயலென தன்னுடைய பைக்கில் பறந்தான்.

அவனது வேகத்தை பார்த்த வாகன ஓட்டிகள் தாமாகவே அவனுக்கு வழிவிட்டனர். பலர் அவனது வேகத்தை கண்டு வசைபாடினர்.

"இந்த காலத்து பசங்களுக்கு வண்டிய கையில எடுத்துட்டா போதும் கண்ணு மண்ணு தெரியாம ஓட்டுறாங்க. இவங்கள சொல்லிக் குத்தமில்ல. இவங்களுக்கு வண்டி வாங்கி தர பெத்தவங்கள சொல்லணும். நீங்க ரோட்ட பாத்து வண்டிய ஓட்டுங்க. ஏதாவது பொண்ண பாத்தா அப்படியே உலகத்த மறந்துடுவீங்களே!!!!!" என மனைவி ஒருத்தி தனது கணவனை மிரட்டிக் கொண்டிருந்தாள்.

தன்னுடைய வீட்டை அடைந்த ஆதி பைக்கை நிறுத்தாமல் அப்படியே கீழே போட்டுவிட்டு வேகமாக தன்னறையை நோக்கி ஓடினான்.

பைக் சத்தம் கேட்டு வெளிவந்த அவனது அன்னை செந்தாமரை வாசலில் பைக் விழுந்து கிடக்கவும் அதிர்ந்து போய் பார்த்தார்.

வேலையாட்கள் ஓடி வந்து பைக்கை தூக்கி நிறுத்தினர். ஆதியின் கோபத்தை பற்றி அனைவருமே அறிந்தது தான். கோபம் வந்துவிட்டால் அவனுக்கு என்ன செய்கிறோம் என்றே தெரியாது.

அதனால் அவனது கோபத்திற்கு பயந்த யாரும் அவனை நெருங்க மாட்டார்கள். மாடியில் பொருட்கள் உடையும் ஓசை கீழே வரை தெளிவாக கேட்டது.

செந்தாமரைக்கு பயமாக இருக்கவும் உடனடியாக தனது கணவனை அழைத்து விஷயத்தை சொன்னார்.

மனைவி சொல்வதை பொறுமையாக கேட்ட கார்த்திகேயனுக்கு மகனின் மேல் கோபம் வந்தது.

தனது அன்னையின் சுபாவம் தெரிந்தும் அவளை துன்புறுத்துவனை என்ன செய்வது என தெரியாமல் அவர் யோசிக்க அதற்குள் அவரது துணைவியின் அழுகுரல் கேட்டது.

"டேய் குட்டிமா.... இப்ப எதுக்கு அழற. அழாதடா"

"எனக்கு பயமா இருக்குங்க"

"இன்னும் பயந்துட்டே இருந்தா எப்படிடா. நீ அவனோட அம்மா. நீ தான் அவன கண்டிக்கணும். அத விட்டுட்டு பயந்தா என்னமா அர்த்தம். "

"ப்ளீஸ்ங்க நீங்க வாங்களேன்"

அலுவலகத்தில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டி மீட்டிங் நடைபெற்றது. இப்போது கிளம்பினால் ஒப்பந்தம் ரத்தாகிவிடும். ஆனால் குட்டிமாவை தவிர எதுவும் முக்கியமில்லை என்றெண்ணியவர் அங்கிருந்தவர்களிடம் மன்னிப்பு வேண்டி உடனே கிளம்பினார்.


அறையின் உள்ளே இருந்த ஆதிக்கு கோபம் மட்டுபட வில்லை . அவன் எதிர்பார்க்காத ஒன்று இன்று நடந்ததில் அவனுக்கு கோபம் வந்தது.

இதுவரை நினைத்ததை எல்லாம் நடத்தியே பழக்கப்பட்டவன் இன்று முதன் முறை தோல்வியைக் கண்டதால் தன்னிலை இழந்து நின்றான்.

கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் உடைக்க ஆரம்பித்தான் ஆதி. அவனது கோபம் மட்டுபடவில்லை. மாறாக இன்னும் இன்னும் அதிகமானது.


இந்நேரம் மதி அவன் கண் முன்னே இருந்திருந்தால் அவளை கொலையே செய்திருப்பான் .

"அவள சுத்தி என்ன நடக்குது. அதனால அவளுக்கு பாதிப்பு வரக் கூடாதுனு நாய் மாதிரி அலஞ்சு திரிஞ்சிட்டு இருக்கேன். என்கிட்டயே வந்து கல்யாண பத்திரிக்கை குடுக்குறா.... அவள....." பற்களை கடித்தான் ஆதி.

அவனுக்கு மதியை பிடித்திருந்தது. அவள் மேல் காதலா என்று கேட்டாள் கண்டிப்பாக அவனுக்கு தெரியவில்லை.

அவளை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டுமென அவனது மனதில் நினைத்திருந்தான்.

இதுவரை அவன் எந்த பெண்ணிடமும் பேசியது கிடையாது. மதியிடம் மட்டும் தான் பேசினான்.

அவனுக்கு அவளை சீண்டிப் பார்க்க பிடித்திருந்தது. அதனால் தான் அவளை அடிக்கடி சீண்டினான். அதை தவிர அவனது மனதில் அப்போது எதுவும் இல்லை.

அன்று மதியை காப்பற்ற போன இடத்தில் அவள் பயத்தினால் இவனை அனைக்கையில் தான் அவனுக்கு வித்தியாசமாக இருந்தது.

தன்னை கண்டு அனைத்து பெண்களும் ஓட அவள் தன்னிடம் பாதுகாப்பாக உணர்கிறாள் என்றதும் அவனது மனதில் அவள் மீது உரிமை உணர்வு எழுந்தது.

ஆனால் இன்று வினயுடன் அவளை கணடவன் என்னவென்று சிந்திக்கும் முன்பே திருமண அழைப்பிதழ் நீட்டப்பட கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான்.

"அன்னைக்கு எந்த உரிமையில என்ன கட்டிபிடிச்சா. என்ன பாத்தா லூசு மாதிரி இருக்கா அவளுக்கு. முடியாது மதி.... வாழ்வோ சாவோ அது உனக்கு இனிமேல் என் கூட தான். பாக்குறேன் எப்படி கல்யாணம் நடக்குதுனு" என்றெண்ணிணான்.

அவனுக்கு மதியை பிடிக்க இரண்டு காரணங்கள் இருந்தன.
 
Status
Not open for further replies.
Top