All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஒன்று - அவளது கண்கள். என்று அவளது கண்களை கண்டானோ அன்றிலிருந்து இன்றுவரை அவனால் அவளது கண்களை மறக்க முடியவில்லை.
இரண்டு - ஆதியின் அன்னை செந்தாமரை. செந்தாமரை மிகவும் பயந்த சுபாவம் கொண்டவர். யாராவது லேசாக குரலை உயர்த்தினாலே பயந்துவிடுவார். மிகவும் மென்மையானவர்.
ஆதிக்கு அவனது தாயை மிகவும் பிடிக்கும். சிறு பிள்ளை போல் அவர் பயப்பட இவன் அவரை பெரிய மனிதன் போல தேற்றுவான்.
மதியை முதன் முதலில் கண்டவணுக்கு அவளின் பயந்த சுபாவம் தன் தாயை நினைவூட்ட உடனே அவளுக்கு உதவ ஒப்புக் கொண்டான்.
இதை எண்ணிக் கொண்டிருந்தவனுக்கு அப்போது தான் தாயின் நினைவு எழுந்தது. தலையிலடித்துக் கொண்டவன் வேகமாக அறையை விட்டு வெளியேறி கீழே வந்தான்.
அவன் எதிர்பார்த்தது போலவே அவனது அன்னை கண்ணீரோடு ஹாலில் நின்று கொண்டிருந்தார்.
மெதுவாக அவரை நெருங்கியவன் "அம்மா " என்றழைக்க
"ஆ... ஆதி" என திணறினார்.
"ம்மா.... ப்ளீஸ் பயப்படாதீங்க ஒண்ணுமில்ல. சும்மா கொஞ்சம் டென்ஷன் அதான். சாரிமா இனிமேல் இப்படி பண்ண மாட்டேன் " என்று அவரை சோபாவில் அமர வைத்தவன் கீழே அமர்ந்து அவரது மடியில் தலை வைத்தான்..
அவரது கரங்கள் அவனது தலையை வருட , வீட்டுக்குள் நுழைந்த கார்த்திகேயன் இருவரையும் பார்த்து வாய் பிளந்து நின்றார்.
"ஏய்.... குட்டிமா..... வா... வானு என்ன வர சொல்லிட்டு இப்படி ஹாயா உக்காந்துருக்க. என்ன நடக்குது இங்க"
தந்தையை கண்டவன் அவரிடம் ஒன்றும் கூறாமல் எழுந்து மாடியிலுள்ள தன்னறைக்கு சென்றான்.
அவனுக்கு ஏதோ மனவருத்தம் என்பதை உணர்ந்த அவர் அவனாக சொல்லட்டும் என்று அமைதி காத்தார். தன்னுடைய அமைதி பின்னாளில் ஒரு சிறு பெண்ணின் வாழ்வை மாற்ற போவது அவருக்கு தெரியவில்லை.
அன்று நிதிஷ் தன்னுடைய காதலை சொல்ல முயன்றபோது மறுத்து விட்டு வந்த ஹரிணிக்கு உயிர் பிடுங்கி எறிந்தது போல வலித்தது.
வீட்டுக்கு வந்தவள் யாரிடமும் பேசாமல் மௌனமாக அறையில் அடைந்து கொள்ள அவளது பெற்றோர்கள் தான் குழம்பி போயினர்.
"அம்மு என்னாச்சுடா.... காபி கொண்டு வந்துருக்கேன். குடிமா. ரொம்ப டல்லாருக்க. உடம்பு முடியலயா???" அன்னையின் குரலில் நிமிர்ந்தவள் எதுவும் பேசாமல் அன்னையின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டாள்.
அவளது அன்னை அவளது தலையை வருடியவாறே... " என்னாச்சுடா... ஏன் ஒரு மாதிரி இருக்க"
"ஒண்ணுமில்ல. நா கொஞ்ச நேரம் தூங்கவா"
"சரிமா.. நீ தூங்கு... நா போறேன்" என்ற படி வெளியேற அறைக்கதவை சாத்தியவள் கதவருகே சாய்ந்து அமர்ந்து விட்டாள்.
" ஏன் அத்து உங்களுக்கு என்ன பிடிக்கல. நா அழகா இல்லயா. உங்க அளவுக்கு பணம் இல்ல தான் ஆனா மனசு பூரா காதல் இருக்கு.
என்ன எல்லாருக்கும் பிடிக்கும். எல்லாருமே என் கிட்ட நல்லா பேசுவாங்க. ஆனா நீங்க மட்டும் என் கிட்ட பேசவே மாட்டேன்குறீங்க.
காலேஜ்ல அத்தன பேரு என்ன லவ் பண்றேனு சொல்றாங்க. ஆனா நீங்க ஏன் என்ன லவ் பண்ணல.
உங்கள மட்டுமே மனசுல நினச்சிட்டு இருக்கேன். உங்களுக்கு அது புரியலயா????
கடைசி வரைக்கும் இப்படியே போயிடுமோ. என்னால முடியல. எனக்கு நீங்க வேணும். எப்பவும் உங்க கூட இருக்கணும்.
அழுக வரும்போது உங்க தோள்ல சாஞ்சுகணும். கஷ்டம் வரும் போது உங்க மடியில படுத்துக்கணும்.
என்னோட தலைய நீங்க வருடும் போது கண்ண சிமிட்டாம உங்களயே பாக்கணும்.
உங்க கூட சண்ட போடணும். அடுத்த நொடியே சரண்டர் ஆகிடணும். உங்க கஷ்டத்துல கூட இருக்கணும்.
ஆறுதல் தேவப்படும் போது உங்கள அனைத்து ஆறுதல் சொல்லணும். அம்மாவா மடிதாங்கணும். உங்க கோபத்த பாக்கணும்.
என் கண்ணீர உங்க சட்டையில துடைக்கணும். சின்ன பிள்ள மாதிரி உங்கள கொஞ்சணும்.
உங்க கை கோர்த்து ரொம்ப தூரம் போகணும். இந்த உலகத்துல மொத்த அன்பையும் உங்களுக்கு கொடுக்கணும்.
என்னோட உலகத்த உங்களோட மட்டும் சுருக்கிக்கணும் . விடியும் போது, உறங்கும் போதுனு ஒரு நொடி கூட விலகாம உங்க கூட இருக்கணும்.
என்னோட உயிர், உடம்புல இருக்குற ஒவ்வொரு அணுவுலயும் உங்கள சுமக்கணும். மரணமே வந்தாலும் என் நினைவையே இழந்தாலும் உங்கள மட்டும் நினைக்கணும்.
இது மாதிரி இன்னும் எவ்வளவோ ஆசை இருக்கு. ஆனா எதுவுமே நடக்காதுல. ஏன்னா உங்களுக்கு என்ன பிடிக்கலயே.
என்ன பாத்தா உங்களுக்கு எந்த உணர்வும் வரலயா அத்து. என்ன பாத்து யாராவது ரொம்ப அழகாயிருக்கணு சொன்னா முன்னாடிலாம் சிரிப்பேன். இப்பலாம் கோபம் வருது. உங்களுக்கு தெரியாத அழகு எனக்கு வேணாம்.
தொண்டையில் ஏதோ அடைப்பது போல இருந்தது. மூச்சு விட முடியவில்லை. அப்படியே அழுதபடி தரையில் சரிந்தவளது விழிகள் மட்டும் கண்ணீரை நிறுத்த வில்லை.
அவளின் மன்னவனோ அவளை தான் யோசித்தான். "ஹனி.... ஏன் அப்படி சொன்ன ... கொஞ்ச நேரம் அமைதியா இருந்திருந்தா நானே லவ் சொல்லிருப்பேன்ல.
மனசு பூரா காதல வச்சிகிட்டு இப்படி விலகி போறியே நியாமா ஹனி. எனக்கு உன்னோட காதல் வேணும். இப்படி பண்ணாத ஹனி புரிஞ்சிக்க ஹனி.
உன் மேல உயிரையே வச்சிருக்கேன். உனக்காக என்ன வேணாலும் செய்வேன். உன் கிட்ட எப்படி என்னோட லவ்வ சொல்ல போறேன்.
என்ன கொல்லாத ஹனி. ப்ளீஸ் என் கிட்ட வந்துரு. கனவுல கூட நினைக்க முடியாத அளவுக்கு அன்ப காட்டிட்டு அத என் கிட்ட தராமலே போய்டாத.
ஹனி என்ன நடந்தாலும் சரி. நா உன்னை விட்டு போக மாட்டேன். வாழ்வோ சாவோ இனிமேல் அது உன்னோட தான்.
ஐ லவ் யூ ஹனி" என்று மருகினான் . அவனது கண்களில் இருந்து சில கண்ணீர் துளிகள் பூமியை நோக்கி விழுந்தன அவனின் காதலின் வலியால்.
பெண்களின் கண்ணீர் சிப்பியின் முத்தென்றால் , ஆண்களின் கண்ணீர் பல்லாயிரம் அடி ஆழத்தில் ஒளிந்திருக்கும் வைரமாகும்.
அவ்வளவு எளிதில் யார் கண்ணிலும் படாத அது தன்னிடத்தை விட்டு வெளிவரும்போது அதன் மதிப்பு பன்மடங்காகும்.
இருவரது மனமும் காதலை சுமக்க அதை வெளிபடுத்தாமல் தங்களுக்குள் மறுகி கொண்டிருந்தனர்.
அதன் பிறகு வகுப்பிலும் சரி , வீட்டிலும் சரி ஜீவனற்ற உடலாகவே இருந்தாள் ஹரிணி. கண்களில் வழிந்த சோகம் , அவளின் இழப்பு மிகப் பெரியது என எடுத்துக் காட்ட அது என்னவென்று அறியாமல் அனைவரும் திண்டாட அத்துவோ உயிரோடு மரித்துக் கொண்டிருந்தான்.
அவளை நெருங்கி அவன் பேச முயன்றால் நிதிஷின் காதலுக்காக என்று நினைத்து அவனிடம் பேசாமல் ஒதுங்கினாள். தினமும் இரவில் தலையணையில் முகம் புதைத்து தனது கண்ணீரால் அதனை நனைத்தாள்.
அவளது பெற்றோருக்கு அவளது துன்பம் புரியவில்லை. நாட்கள் கடந்தால் சரியாகிவிடுவாள் என்றெண்ணியிருக்க தலையணையில் தினமும் அவளது கண்ணீர் தடம் கண்டவுடன் இதற்குமேல் அமைதி கூடாதென்று அவளிடம் பேச முயன்றனர்.
அது ஒரு புறம் இருக்க அத்துவோ 'என்னாச்சு ஹனி... ஏன் இப்படி இருக்க. என்னால உன்ன பாக்க முடியல. என்னோட உயிரோட கொல்ற. ஹனி.... ஹனி...." இடைவிடாத ஜெபமாய் அவள் பெயரை அவன் சொல்லிக் கொண்டிருக்க இருவரது காதலும் வெளிவர வேண்டிய நாளும் வந்தது.
அன்று கல்லூரிக்கு வந்த ஹனியின் நடவடிக்கைகள் முன்பு போலவே இருந்தன. இத்தனை நாட்களாய் உயிரற்ற ஜீவனாய் இருந்தவள் இன்று தான் பூமியில் பிறந்தவள் போல மகிழ்ச்சியாய் இருந்தாள்.
அவளை வெகு நாள் கழித்து மகிழ்ச்சியாய் பார்த்த அவளது தோழிகள் அதைக் கொண்டாட அத்துவுக்கும் அவளது மகிழ்ச்சி மன நிறைவை அளித்தது.
யாரும் அறியாமல் அவளது சிரித்த முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளை தான் அவனால் நெருங்க முடியவில்லையே.
ஹரிணியின் மனமோ அடுத்த நாளை எண்ணி மகிழ்ச்சியில் திளைத்தது. கண்டிப்பாக நாளை தன் வாழ்வின் திருப்புமுனையாக இருக்கும் என்றெண்ணியவளுக்கு உறக்கம் வரவில்லை.
மகிழ்ச்சியில் சிறு பிள்ளை போல குதிப்பவளை கண்ட பெற்றோருக்கு அவளை நினைத்து ஒரு புறம் மகிழ்வாய் இருந்தாலும் நாளை அவள் செய்ய போகும் செயலின் விளைவு என்னவாயிருக்கும் என்றெண்ணி கவலையாயிருந்தது.
அறையினில் அமர்ந்த ஹரிணி கடந்த வருடம் எடுத்த குரூப் போட்டோவில் சிரித்தபடி நிற்கும் அத்துவை தனது கண்களால் ரசித்துக் கொண்டிருந்தாள்.
"அத்து நாளைக்கு என்ன நாள் தெரியுமா??? முதன் முதலா உங்க குரல கேட்டு என் மனச உங்க கிட்ட பறிகொடுத்த நாள்.
ஒரு வருஷம் ஓடி போயிட்டு. ஆனா உங்க மேல லவ் மட்டும் அதிகமாகிட்டே இருக்கு.
என்ன நடந்தாலும் சரி நா உங்கள முதன் முதலா உணர்ந்த நாள்லயே என்னோட காதலையும் சொல்ல போறேன்.
நாளைக்கு உங்க பதில் எதுவாயிருந்தாலும் என்னோட காதல நா உங்க கிட்ட சொல்லிடேன்ற திருப்தி போதும் எனக்கு" எனறபடி அவனது புகைப்படத்தை அனைத்தபடி தூங்க முயன்றாள்.
ஆனால் அவளுக்கு உறக்கம் வருவேனா என்று அடம் பிடித்தது. மனம் முழுதும் கனவுடனும் ஆசையுடனும் மறுநாளின் விடியலுக்காக காத்திருந்தாள்.
மறுநாளும் விடிந்தது அவளது அத்துவுடன் இணைப்பதற்கு மட்டுமின்றி பிரிப்பதற்கும்.
சூரிய வெளிச்சம் எப்போது வருமென காத்திருந்தவள் அவன் மெல்ல உதிப்பதை அறிந்து ஆனந்தமாய் எழுந்து கொண்டாள்.
அன்று உலகமே அவளுக்கு அழகாக தெரிந்தது. சிறு சிறு விஷயங்களும் மகிழ்வையே தந்தது.
காலையிலேயே எழுந்து தலைக்குளித்தவள் அவளுக்கு பிடித்த வெளிர் நீல நிற புடவையையும், அதே நிறத்தில் பிளவுசும் அணிந்தாள்.
நீண்ட தலைமுடியை தளர்வாக பின்னியவள் ஒன்றை ரோஜாவை சூடிக் கொண்டாள். காதில் சின்ன ஜிமிக்கி , கழுத்தில் சின்ன சிறு டாலருடன் கூடிய மெல்லிய சங்கிலி, கையில் பிரேஸ்லெட், எல்லாவற்றிக்கும் மகுடமாய் அவளின் நெற்றியில் வெள்ளை கல் பொட்டும், சிறு கீற்றாய் குங்குமமும் இருந்தது.
கண்ணாடியில் தன்னை பார்த்தவளுக்கு நிறைவாய் இருக்க அறையை விட்டு வெளியே வந்தாள்.
புடவையில் பேரழகியாய் தெரியும் மகளை கண்ட சாந்தி தன் கண்ணே பட்டு விடக் கூடாது என நினைத்தவர் முத்தமிட்டு அவரது மகிழ்ச்சியை வெளிப்படுத்த , அவளது தந்தையோ பாசத்தோடு அவளது தலையை வருடினார்.
"வாம்மா... நானே உன்ன காலேஜ்ல விட்டுட்டு ஆபிஸ் போறேன் . "
"வேணாம்பா. எப்பவும் போல பஸ்லயே போயிக்குறேன். "
"சொன்னாக் கேளு அம்மு. நம்ம சுத்தி எப்ப என்ன நடக்கும்னு நமக்கு தெரியாது. பாதுகாப்பா இருக்குறது தான் புத்திசாலித்தனம். என் கூடவே வா"
அவர் சொல்ல வருவதை புரிந்து கொண்டவள் "சரிப்பா போலாம்"
"ரெண்டு பேரும் சாப்டுட்டு போங்க" என்ற அன்னையின் குரலில் உணவருந்த சென்றனர்.
கல்லூரியில் அவளை இறக்கி விட்டுவிட்டு அவளது தந்தை விடை பெற்று செல்ல அதுவரை இருந்த இதமான சூழ்நிலை மாறி அவளது இதயத்தை பதட்டம் சூழ்ந்து கொண்டது.
தன்னவனிடம் காதல் சொல்ல போகிறோம் என்று எண்ணும் போது அவளது இதயத் துடிப்பு அதிகமானது.
கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்தவளை கல்லூரியில் ஒட்டு மொத்த மாணவர்களும் , மாணவியரும் ஆச்சர்யமாய் பார்த்தனர்.
அவள் அந்த கல்லூரியின் சிறந்த அழகியென்று அனைவருக்கும் தெரியும் ஆனால் இன்று பேரழகியாய், தேவதையாய் தங்கள் முன்பு இருப்பவளை இமை மூடாது பாரத்திருந்தனர். அவளது பால் நிறத்திற்கு அந்த வெளிர் வண்ண சேலை மிகவும் பொருந்தியிருந்தது
அவர்களது பார்வை அவளுக்கு சங்கடத்தை கூட்ட என்ன செய்வதென்று தெரியாமல் மெல்ல நடைபோட்டாள்.
அப்போது தான் கல்லூரிக்குள் நுழைந்த ப்ரியா இவளை பார்த்து விட்டு அவளருகே ஓடி வந்தாள்.
"ஏய்..... ஹரிணி சூப்பரா இருக்க. என்ன திடீர்னு புடவை கட்டிருக்க. எதுவும் விசேஷமா?? " என்ற படி மகிழ்ச்சியில் அவளது கன்னத்தை பிடித்து கிள்ளினாள்.
ஹரிணியிடமிருந்து எந்த பதிலும் வராததால் அவளது பார்வை இருந்த திசையை பார்த்து அதிர்ந்து போனாள். எல்லா மாணவர்களின் கண்களிலும் ப்ரியா வின் மேல் கொலை வெறி அப்பட்டமாய் தெரிந்தது.
சுற்றும் முற்றும் பார்த்தவள் அனைவரது பார்வையும் தங்களை நோக்கியே இருப்பதை உணர்ந்து ஹரிணியின் நிலையை யோசித்து அவளை அங்கிருந்து அழைத்து சென்றாள்.
வகுப்பிற்குள் வந்தவளது பார்வை அத்துவின் இடத்தை நோக்கி சென்றது. அங்கே அவன் இல்லையென்றதும் நிம்மதி பெருமூச்சு விட்டவள் தன்னிடத்தில் அமர்ந்தாள். அவளை சுற்றி அமர்ந்த அவளது வகுப்பு பெண்கள் கேள்வி கேட்டு அவளை ஒரு வழி ஆக்கினர்.
நேரம் செல்ல செல்ல ஹரிணிக்கு பதட்டம் அதிகமானது. இதுவரை அவளிடம் காதல் சொல்ல பலர் காத்திருந்தனர். இன்று அவள் காத்திருக்கிறாள்.
அவளை வெகு நேரம் காக்க வைத்துவிட்டு அவளது மன்னவன் வகுப்பினுள் நுழைந்தான். இதுவரை அவனை ஓரக்கண்ணால் மட்டுமே ஹரிணி பார்ப்பாள். அதை அவனும் அறிவான்.
இன்று அவன் வந்து அமர்ந்ததும் அவனையே கண்சிமிட்டாமல் அவள் பார்க்க அவளது பார்வையில் அவன் தான் தவித்து போனான்.
புடவையில் தேவதையாக இருந்தவளை கண்டவன் தன்னையே மறந்து போனான். சிலையென அழகோவியமாய் இருந்தவளை அவனும் பார்க்க நாணத்தில் அவளது கண்கள் நிலம் நோக்கின.
கல்லூரியே அவளது ஒற்றை பார்வைக்காக ஏங்க அவளோ அவனை மட்டுமே மனதில் சுமக்கிறாள்.
காதலனாய் அவனுக்கு கர்வம் இருந்தாலும் காதலை சொல்ல முடியாததில் வருத்தம் இருந்தது.
பெண்மைக்கே உரிய இயல்பான கூச்சமும், தயக்கமும் அவளைக் கட்டி போட எப்படி காதலை சொல்வது என யோசித்தவள் இதற்கு மேலும் மௌனம் கூடாதென எழுந்தவள் அத்துவை நோக்கி சென்றாள்.
அவளையே பார்த்திருந்தவனுக்கு அவள் தன்னை நோக்கி வரவும் குழப்பமானது. அவனருகே வந்தவள் அவனது முகத்தை காண முடியாமல் எங்கோ பார்த்தபடி " உங்க கிட்ட கொஞ்ச பேசணும். வரீங்களா" என்றாள்.
அவனால் அவள் பேசியதை நம்ப முடியவில்லை. சட்டென எழுந்தவன் "கேன்டீனில் போய் பேசலாம் வாங்க" என்ற படி வெளியேறிவிட்டான். அதற்கு மேல் அவளருகே நிற்க அவனால் இயலவில்லை.
அவள் எல்லாரிடமும் இயல்பாக பேசுவாள் என்பதாலும் இவர்களது உரையாடல் யாருக்கும் கேட்கவில்லை என்பதாலும் அனைவரும் இதனை இயல்பாக பார்த்தனர்.
இரண்டு நிமிடத்தில் கேன்டீனில் இருந்தவனது மனம் இன்று அவளிடம் தனது காதலை சொல்லிட வேண்டுமென உருவேற்றிக் கொண்டிருந்தது
மெல்ல நடை போட்டு தன்னை நோக்கி வந்தவளைக் கண்டதும் அவனது இதயத் துடிப்பு எகிறியது.
இனம் புரியா உணர்வு அவனை சூழ்ந்து கொண்டது. முகமெல்லாம் வியர்த்து வழிந்ததை கண்டவன் மெல்ல புன்னகைத்து கொண்டான்.
அவனருகே வந்தவள் அவனை தயக்கத்தோடு ஏறிட்டு பார்த்தாள். "வாங்க அங்க உக்காந்து பேசலாம்" என்ற படி அவன் ஒரு மேஜையை நோக்கி நடக்க அவன் பின்னால் சென்றாள்
"சொல்லுங்க "
"இல்ல அது வந்து"
"ம்ம்ம்..."
அவனது விழி பார்த்து காதலை சொல்ல தயங்கியவள் பெருமூச்சை வெளியேற்றி விட்டு கண்களை மூடிக் கொண்டாள்.
விழி மூடியபடி அருகே சிற்பமாய் இருந்தவளை திருட்டு தனமாய் ரசித்தான் அத்து.
கண்களை மூடியவள் மெல்ல " உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க வசதியானவர்னு எனக்கு தெரியும். ஆனா அதுக்காக பிடிக்கும்னு சொல்லல.
காலேஜ்ல சேர்ந்த முதல் நாளே எனக்கு உங்கள பிடிச்சிருச்சு . உங்க மேல உயிரையே வச்சிருக்கேன்.
காலம் முழுக்க உங்க கூட உங்க நிழல்ல உங்களுக்கு பிடிச்ச மாதிரி வாழணும்னு ஆசப்படுறேன்.
உங்களுக்கு விருப்பம் இல்லைனா பரவால்ல சொல்லிடுங்க நா..." என இடைவெளிவிட்டவள் " நா அதையும் ஏத்துப்பேன்" என்று கூறியவள் எந்த பதிலும் கிடைக்காமல் எதிர்புறம் அமர்ந்தவனை பார்க்க அங்கோ அவன் இல்லை.
அவளுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.
"ஹனி.." உயிரை உருக்கும் குரலில் திரும்பி பார்த்தவள் பின்னால் அவன் மண்டியிட்டு அமர்ந்திருப்பதைக் கண்டு சட்டென எழுந்து நின்றாள்.
படங்களில் காதலை சொல்லும் ஹீரோ ஒரு காலை மண்டியிட்டு மற்றொரு காலை மடக்கி இருப்பதை போல அவனும் அமர்ந்திருந்தான்.
அவளது கரத்தினை பற்றிவன் "நீ உன்னோட காதலை சொல்லிட்ட. என்னோட காதலையும் கேளு ஹனி. எனக்கு உன்ன மாதிரி சொல்ல தெரியாது.
உயிரில்லாத உடலா இருக்குற என்னோட வாழ்க்கையில எனக்கு உயிர் கொடுப்பியா ஹனி.
என் வாழ்க்கையில எனக்கு கிடச்ச மிகப் பெரிய வரம் நீ தான். எப்பவும் என் கூடவே இருக்கணும் " என்றபடி அவளது முகத்தினைப் பார்த்தான்.
அவன் தனது காதலை ஏற்றுக் கொள்வானா என்ற சந்தேகத்தில் வந்தவள் , அவனும் அவளை விரும்பியதாக கூறவும் கண்ணீர் சிந்த ஆரம்பித்தாள்.
ஒரு வருட காத்திருப்பு இன்று அவளது கை சேர்ந்து விட்டது. அவளது கண்ணீரைக் கண்டு பதறியவன் எழுந்து
"என்னாச்சு ஹனி.. ஏன் அழற. ஜ ஆம் சாரிடா. நா ஏதாவது உன்ன கஷ்டப்படுத்தியிருந்தா. ப்ளீஸ் அழாத"
கண்ணீரை துடைத்துக் கொண்டவள் கேள்வியாய் அவனைப் பார்க்க , மங்கையின் விழி வழியே மனம் படித்தவன் அவன் காதல் கொண்ட தருணத்தையும், சொல்ல முடியாமல் போன தருணத்தையும் கூற அவளது இதழ்கள் புன்னகை புரிந்தன.
"தேங்க்ஸ்.... தேங்க் யூ சோ மச்" என்றவள் தலை குனிந்து நிற்க
"இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க ஹனி" என்ற படி அவளை உரிமையுடன் பார்வையிட அவனது உரிமை பார்வையில் அவளுக்கு வெட்கம் வர சட்டென வகுப்பை நோக்கி ஓடினாள்.
"ஹனி... ஹனி..." என அவன் அழைக்கும் குரல் கேட்டாலும் நாணத்தை கொண்ட திரும்பாமல் ஓட உலகமே கை வசப்பட்டதை போன்றதொரு உணர்வில் இருந்தான் அத்து.
இவர்கள் இருந்த இடம் சற்று தள்ளி இருந்ததாலும் , கேன்டீனில் யாரும் இல்லையென்பதாலும் யாருக்குமே அங்கு நடந்த எதுவும் தெரியாமல் போனது.
அவள் சென்ற திசையையே வெறித்துப் பார்த்தவன் தலையைக் கோதிக் கொண்டு தன்னை நிலைப்படுத்தி வகுப்பிற்கு சென்றான்.
இருவரது முகமும் பிரகாசமாய் இருந்தது. வகுப்புகள் நடந்தாலும் இருவரும் ஒருவரை ஒருவர் திருட்டு தனமாய் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அன்றைய பொழுது இன்பமாய் அவர்களுக்கு கடந்து போக , கல்லூரி முடிந்ததும் வீட்டிற்கு செல்ல வேண்டுமென்ற வருத்தம் இருவரது முகத்திலும் தெரிந்தது.
எல்லாரும் வெளியேறிட அவர்களுடன் வந்த ஹரிணி சின்ன தலையசைப்பை அவனுக்கு கொடுத்தாள். அவனும் முறுவல் செய்து தலையசைத்தான்.
சந்தோஷமாக தனது பைக்கை எடுத்துக் கொண்டு அவன் வீட்டிற்கு செல்ல , தனது தந்தைக்காக காத்திருக்க ஆரம்பித்தாள் சாலையில்.
அதுவரை அவர்களை மகிழ விட்ட விதி தனது விளையாட்டைக் காட்டியது. அவனையே நினைத்துக் கொண்டிருந்தவள் சுற்றுபுறம் மறந்து விட்டாள்
தனது தந்தையை எதிர்புறம் கண்டவள் அவரிடம் நற்செய்தியை சொல்ல வேண்டுமென இரு பக்கமும் பார்த்தபடி சாலையைக் கடக்க வேகமாக நிலை தடுமாறியபடி வந்த கார் ஒன்று அவளது மீது மோத அதில் தூக்கி எறியப்பட்டவள் சாலையின் ஓரமிருந்த மைல் கல்லில் மோதி வயிற்றில் பலமாக அடிபட மயங்கி விழுந்தாள்.
கண்முன்னே தனது மகளுக்கு நடந்த விபத்துக் கண்டவர் பதறித் துடித்து அவளருகே ஓட அதற்குள் கூட்டம் கூடியிருந்தது.
"ஹரிணி என்னாச்சுமா.... ஐயோ ஹரிணி எழந்தரிடா" என கதற அங்கிருந்தவருள் ஒருவர் "யாராவது 108 க்கு கால் பண்ணுங்க" என்றார்.
எல்லாரும் எப்படி இருக்கீங்க. என்னை நியாபகம் இருக்கா?? . இல்ல மறந்தாச்சா???
முதல்ல உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். சாரி....சாரி.... என்னால தொடர்ந்து அப்டேட் கொடுக்க முடியாததுக்கு. கடந்த சில மாதங்களாக அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை.
என்னால எழுத முடியல. இனிமேல் வாரத்திற்கு இரண்டு அப்டேட் தருகிறேன் .
கனியை மருத்துவமனையில் விட்டுவிட்டு வந்த ராமிற்கு கனியினது நினைவே ஓடிக் கொண்டிருந்தது. தன்னை குறி வைத்து நடத்தப்பட்டு தாக்குதலில் அப்பாவியான கனி மாட்டிக் கொண்டது அவனுக்கு துன்பத்தை தந்தது.
யாரை உயிருக்கு உயிராக காதலிக்கின்றானோ அவனது உயிருக்கு விட அதிகமாக நினைக்கிறானோ அவளது உயிர் இன்று ஆபத்தில் சிக்கியதை அவனால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
நினைக்க நினைக்க அவனுக்கு கோபம் எரிமலைபோல கொந்தளித்தது. அவனுக்கு எதிரே இருந்த மேஜையில் இரத்தக் கறைப் படிந்த அவனது சட்டை இருந்தது. மண்டியிட்டு அதனருகே தரையில் அமர்ந்தான் அந்த இளம் செல்வந்தன்.
இதுவரை தரையிலேயே அமர்ந்து பழக்கமில்லாதவன் இன்று அமர்ந்திருந்தார். அவனது கரங்கள் நடுக்கத்துடன் அந்த சட்டையினை வருடியது. அவனுடைய உயிர் வரை ஒரு வலி பரவியது. தன்னவள் வலியில் துடித்த நிமிடங்களை நினைத்தவனது கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் சிதறி காய்ந்திருந்த இரத்த்தக் கறைகளை மீண்டும் ஈரமாக்கின.
தனது வாழ்வில் நினைவு தெரிந்த அவன் சிந்தும் முதல் கண்ணீர்த் துளி. தன்னை சமன்படுத்திக்கொண்டு கண்ணீரைத் துடைத்தவனது கண்கள் அழுததற்கான அடையாளத்தை துறந்து அழுத்தமாய் இருந்தன.
அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவன் தனது தொலைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தான். அடுத்த பத்து நிமிடங்களில் அவன் முன்னே ஐம்பது பாதுகாவலர்கள் வந்து நின்றனர். அவர்களை ஒரு பார்வை பார்த்தவன் கம்பீரமாய் எழுந்து நின்றான்.
அவனது கண்களில் வழக்கமாக இருக்கும் கனிவு இன்று இல்லை. எல்லாரும் அவனது இந்த புதிய முகத்தினை அதியமாய் பார்க்க அவனோ யாரையும் கண்டு கொள்ளாது பேசத் தொடங்கினான்
இல்லை கர்ஜித்தான் .
"எல்லோரும் நியூஸ் பாத்துருப்பீங்க. சோ உங்களுக்கு நா எதையும் விரிவா சொல்ல வேண்டியது இல்ல . இன்னும் ஒரு மணி நேரத்துல அவனுங்க கண்டுபிடிக்கணும். எல்லாரும் என் கண்ணு முன்னாடி இருக்கணும். இல்லனா நா என்ன பண்ணுவனு எனக்கு தெரியாது. யார் மேலயும் கை வைக்கமா கொண்டு வாங்க. மரணத்தோட வலி பயம் எப்படி இருக்கும்னு நானே அவங்களுக்கு காட்டணும். போங்க. " என்று அவன் கத்தியதில் அனைவரது உடலும் பயத்தில் நடுங்கியது.
அடுத்த நொடியே எல்லோரும் சென்றுவிட தனது அறையை நோக்கி சென்றவன் தன்னுடைய அடையாளமாய் எப்போதும் அணிந்திருக்கும் வெள்ளை சட்டையையும் , கருப்பு பேண்டையும் தவிர்த்து விட்டு டீ- சர்ட் , ஜீன்ஸ் பேண்டை அணிந்தான். வெகு வருடங்களுக்கு பிறகு தன்னுடைய காப்பினை எடுத்தவன் அதனை கையில் மாட்டிக் கொண்டு தன்னுடைய மீசையை முறுக்கி விட்டுக் கொண்டான்.
இவன் அமைதியே உருவான ராமல்ல. இவனது முகத்தில் புன்னகை மருந்திற்கும் இல்லை.
கண்ணாடியில் எந்த முகத்தை பார்க்க கூடாது என்று இது நாள் வரை நினைத்திருந்தானோ அப்படி நின்றிருந்தான்.
கண்களை முடித் திறந்தவன் தன்னுடைய அறையை விட்டு வெளியே வந்தான். அலை பேசியில் தன்னுடைய பாதுகாவலர்களுக்கு அழைத்தவன் ஏதேனும் தகவல் கிடைத்ததா என கேட்டான்.
சென்ற பத்து நிமிடத்தில் அவர்கள் என்ன சொல்ல முடியும் , மௌனத்தையே பதிலாக தந்தனர். அவர்களது மௌனத்தின் அர்த்தத்தை உணர்ந்தவன் கோபத்தில் கத்தத் துவங்கினான்.
அவனுடைய சத்தத்தில் வீட்டிலிருந்த வேலைக்காரர்கள் எல்லாரும் அரண்டு போய் அவன் முன்னே நின்றிருந்தனர். அவனுடைய மாற்றத்தையும் கோபத்தையும் கண்டு இது தங்களது முதலாளி தான என வியந்தனர்.
மீசையை முடுக்கி விட்டு கையிலிருந்த காப்பை மேலேற்றி விட்டு , அழுத்தமாய் அவன் வந்த தோரணையில் அங்கிருந்தவர்கள் அனைவரும் பயத்தில் நடுங்கினர்.
அவனோ யாரையும் கண்டு கொள்ளாது தன்னுடைய பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான். அவனைப் பின்தொடர்ந்து ஐந்து பாதுகாவலர்கள் வந்து கொண்டிருந்தனர் எப்போதும் போல்.
மருத்துவமனையில் கனியின் அறையிலிருந்து வெளிவந்த மருத்துவர் அவள் நலமாக இருப்பதாக சொல்லவும் நிம்மதி பெருமூச்சு விட்டான் ஸ்ரீ.
அதை தமையனுக்கு தெரிவிக்க நினைத்து அவனுக்கு அழைக்க முயன்றிட அவனுடைய தமையனோ அழைப்பி னை ஏற்கவில்லை. மீண்டும் மீண்டும் முற்சித்தவன் அதை கைவிட்டுவிட்டு கனியின் அறைக்கு சென்றான்.
அங்கே கட்டிலில் கட்டுப் போடப்பட்டு சோர்ந்து போய் படுத்திருந்த கனியைக் கண்டவன் அவளருகே விரைந்து சென்றான். எல்லோரிடமும் இயல்பாக பழகுபவள் இல்லையென்றாலும் அவனிடம் தன்னியல்பை தொலைத்து நட்பாக பழகினாளே.
இன்று அவள் இந்த நிலையில் இருப்பதைக் கண்டு அவனது கண்கள் கலங்கியது. காதலுக்கு மட்டுமல்ல நட்பிற்கும் வலியுண்டல்லவா!!!
அவளது தலையை ஆறுதலாக வருடிக் கொண்டிருந்தான். அதே நொடி அண்ணனை நினைத்து உள்ளுக்குள் வலித்தது அவனுக்கு. கனகயைப் பார்க்கையில் தனக்கே இவ்வளவு வலியெனில் அண்ணனிற்கு எப்படி இருந்திருக்கும் என நினைத்துக் கொண்டான். அவனைப் பற்றி முழுமையாக அறிந்த ஒரே ஒருவன் ஸ்ரீ தானே.
மதியின் திருமண விஷயம் அறிந்ததிலிருந்து ஆதி தன்னியல்பை மறந்திருந்து இருந்தான். அவனால் மதியை யிருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என்று தோன்றியது அவனுக்கு. இதுதான் காதலென்றால் அவன் மதியைக் காதலிக்கிறான்.
தன் நினைவில் உழன்று கொண்டிருந்தவன் மதியை காதலிப்பதாய் உணர்ந்ததும் ஆதியின் அதிர்ச்சிக்கு அளவேயில்லை. அவளை பாதுகாக்க நினைத்தானே ஒழிய அவளை காதலியாக உணர்ந்தது இல்லை.
இந்த நொடி கூட அவளை இழந்து விட கூடாது என்று தான் எண்ணுகிறான் . அதை தாண்டி அவனுக்கு வேறேதும் தோன்றவில்லை.
அவனது சிந்தனையை தூண்டியது அலைபேசியில் வந்த குறுந்தகவல். எரிச்சலோடு அதை எடுத்துப் பார்த்தவனுக்கு கோபம் வந்தது.
அவனது கல்லூரியில் இன்று கிரிக்கெட் போட்டி. அவனது தலைமையில் இன்று இறுதி போட்டி. தற்போதிருக்கும் மனநிலையில் விளையாட முடியும் என்று அவனுக்குத் தோன்றவில்லை.
இருப்பினும் கல்லூரிக்கு கிளம்பினான் மதியை சந்திக்க வேண்டுமென்பதற்காக. தன்னைச் சுற்றி நடப்பவைகளை அவள் உணர்ந்திருந்தாலும் எதிலும் ஆர்வமற்று அமர்ந்திருந்தாள். அவள் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவது நிவியிடம் மட்டுமே.
கடந்த போன தினங்களில் அவனும் பார்த்துக் கொண்டு தானே இருந்தான் அவளிடம் தென்பட்ட மாற்றத்தை.யாரிடமும் பேசாமல் எங்கோ வெறித்துப் பார்த்தபடி இருக்கிறாள்.
இரவு நேரங்களில் பயம்கொண்டு அழுகிறாள் என அவளுடைய தோழி மூலம் தெரிந்து கொண்டான்.
மதியின் திருமணத்திற்கு இன்னும் நான்கு தினங்கள் தான் இருக்கின்றன. கல்லூரியில் இருந்தால் மாறுதல் கிடைக்குமென அவளை கல்லூரிக்கு அனுப்பியிருந்தனர் மதியின் பெற்றோர்.
கிரிக்கெட் மைதானத்தில் அனைத்து வகுப்பு மாணவ மாணவிகளும் குழுமி இருந்தனர். நிவி மதியின் அருகே அமர்ந்து மதியையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை நம்பியல்லவா மதியை விட்டு சென்றிருக்கிறார்கள்.
தூரத்திலிருந்து ஆதி இவர்கள் இருவரையும் பார்த்து விட்டான். ஆட்டம் தொடங்கிட இன்னும் அரை மணி நேரம் இருந்தது. எதையோ யோசித்தவன் தன்னுடைய அலைபேசியை எடுத்து காதில் வைத்தான்.
அடுத்த நொடி நிவியின் அலை பேசி அலறியது. அதில் ஆதியின் எண்களை பார்த்ததும் பயம் கொண்டாள். மெதுவாக தன்னை திடப்டுத்திக் கொண்டு அலைபேசியை காதினில் வைத்தாள்.
"இரண்டு நிமிடத்தில் மதி லைப்ரரி கிட்ட இருக்கணும் " கட்டளையாய் கூறியபடி காலை கட் செய்ய அதில் கடுப்பான நிவி " கடவுளே எனக்கு வர கோபத்துக்கு ...... ஒன்னும் பண்ண முடியாது. ஒரு நாள் இல்ல ஒரு நாள் இந்த நிதி அவன பழி வாங்குவா" என மனதினுள் அவனைத் திட்டியவாறு மதியை அழைத்து சென்றாள்.
ஆதி அவர்களுக்கு முன்பாகவே அங்கு நின்றிருந்தான். மதியை பார்த்ததும் அவளை நெருங்கியவன் கண் ஜாடையில் நிவியை விலகிப் போக சொல்ல அவளோ தயங்கி நின்றாள். அதைக் கண்டு பல்லைக் கடித்த ஆதி அவளை முறைக்க மாயமாய் மறைந்து போனாள் நிவி.
மதியோ தன்னைச் சுற்றி நடப்பதில் எந்த வித கவனமும் இன்றி நின்றிருந்தாள். அவளை நெருங்கிய ஆதி " மதி என்னப் பாரு" என்றான்.
அந்த குரல் அவளிடத்தில் ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் அவள் தலை நிமிர்ந்து அவனைப் பார்க்க வில்லை.
ஆதிக்கு அவளது நிலை புரியவில்லை. அவனது நினைவில் இருந்ததெல்லாம் அவளது திருமணமே...
அவளை வினயுடன் இணைத்து பார்க்க அவனது மனம் ஒப்பவில்லை. அதன் விளைவாய் கோபம் வந்தது.
அவளது கரத்தினை அழுத்தமாக பற்றியவன் "என்னப் பாருடி" என்று உறுமினான். அந்த உறுமலில் மதியின் உடல் வெளிப்படையாகவே நடுங்கியது. கனவிலிருப்பவளை எழுப்பியது போலிருந்தது ஆதியின் குரலும் அவனது தொடுகையும்.
இத்தனை நாட்கள் தன்னுணர்வற்ற இருந்தவளை நிகழ்வுலகிற்கு கொண்டு வந்தது அவனது குரல். அவளுடைய ஆழ் மனது அவனுடைய குரலை எளிதில் அடையாளம் கண்டு கொண்டது. இதுவரை குரல் உயர்த்திக் கூட அவளிடம் யாரும் பேசியதில்லை அவனைத் தவிர.
அப்போதும் தான் தான் எங்கிருக்கிறோம் , யாருடன் இருக்கிறோம் என்பதை உணர்ந்தாள். அவளது கையில் இருந்த அழுத்தத்தை உணர்நதவள் அவனை நிமிர்ந்து பார்க்க, அவன் மேல் இருந்த பயம் அவளை அழ வைத்தது.
என்ன உனக்கும் உங்க ஆச அத்தானுக்கும் கல்யாணம்னு கனவுல இருக்கியா. நா உன்ன லவ் பண்றேனு சொல்லிருக்கேன்ல. அப்படி இருந்தும் எப்படிடி கல்யாணத்துக்கு ஒத்து கிட்ட. நா அப்படியே உன்ன விட்டுடுவேனு நினைக்குறீயா. முடியாது இந்த ஜென்மத்துல நீ தான் எனக்கு பொண்டாட்டி. புரியுதா" என்ற படி அவளது கையில் அழுத்தத்தைக் கூட்டினான் .
வலியில் கண்மூடியவளுக்கு அன்று நடந்த நிகழ்வுகள் நினைவிற்கு வந்தன. வெறிபிடித்தவள் போல ஆதியை உதறித் தள்ளினாள்.
"கைய எடு . ச்சீ... என்னத் தொடுற வேல வச்சுக்காத. நான் உனக்கு என்ன பாவம் பண்ணேன். நீ என் கிட்ட லவ் பண்றேனு சொன்னதுக்காகவும், அன்னைக்கு என் கூட நெருக்கமா இருந்த மாதிரி நடிச்சேல அத பாத்து தான் அந்த தினேஷ் என்ன பழிவாங்கனும்னு விரட்டிட்டு வந்தான்.
அதனால தான் இப்படியெல்லாம் நடந்துச்சு. என்னால நைட்ல தூங்க முடியல தெரியுமா? பைத்தியம் மாதிரி அதையே யோசிச்சிட்டு இருக்கேன். மறுபடியும் ஏன் வர. என்ன நிம்மதியா இருக்க விடு" என்று கத்தியவாறு ஓடினாள்.
ஆதி திகைத்து போய் நின்றிருந்தான். ஆனால் அடுத்த நொடி யே அவனது முகம் புன்னகையை பூசிக் கொண்டது நாளை செய்ய போவதை எண்ணி. " மதி என்ன பேசனுமோ பேசிக்கோ. நாளைக்கு நா மட்டும் தான் பேசுவேன்".
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.