மிகவும் சோகமான பதிவு நயனிமா
.அன்று அதிகாலையில் எழுந்த போது ஆர்யனுக்கு ஏதோ தப்பு நடந்தது போல், மூச்சுக்காற்று கூட குறைந்தது போல தோன்றிய உணர்வுக்கு ஏற்றார் போல சாருத்தமை கனடா சென்று விட்டதாக தேவகி கூறியது, சாருத்தமை அங்கில்லாததை ஏற்றுக்கொள்ள முடியாமல் ,மூன்று வருடத்திற்க்கு முன் அவளை விட்டு விலகிய போது ஏற்பட்ட அதே தவிப்பு,வலி,ஏக்கம் அவனை
பாடாய்படுத்தியது
.
அவள் கடிதத்தை கண்டதும் ஆத்திரமும்,வேதனையும் படுவதும்,அவள் விலகி இருக்க வேண்டும் என்று தானே அப்படி பேசினேன் என நினைப்பதும்,எப்படி என்னை விட்டு செல்லலாம் என தவிப்பதும் மனதை வருந்தச்செய்கிறது
.
சாருத்தமை சென்ற விமானத்தின் தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டு விட்டதாகவும்,விமானத்தை தேடிக்கொண்டிருப்பதாக வந்த செய்தியை கேட்டு துடிப்பதும், என்னை விட்டு தொலைதூரம் தான் போக சொன்னேன், எட்டாதொலைவு போக வேண்டும் கனவிலும் நினைக்கவில்லை, என்வார்த்தைகள், செயல்கள் அவளை வருத்தக்கூடாது என்று தான் போக சொன்னேன் என தன் தாயிடம் சொல்லி அழுவது
கண்கலங்க வைக்கிறது
.
சாருத்தமை அவனோடு இருக்கும் போது மன்னிப்பு கேட்கும் போது அலட்சியம் செய்து விட்டு,அவள் எட்டாததொலைவுக்கு சென்று விட்டதை
நினைத்து,கையில் கிடைத்த பொக்கிஷத்தை தொலைத்துவிட்டு மீண்டும் கிடைத்தால் போதும் பத்திரமாக வைத்துக்கொள்வேன் என
தவிக்கிறான்
.
ஆர்யனின் உணர்ச்சி போராட்டத்தையும் தன் தாயிடமும்,நண்பனிடமும் வெளிப்படுத்திய விதத்தை ,வார்த்தைகளாக எழுதியதை என்னவென்று
சொல்ல,,,சொல்ல வார்த்தைகள் இல்லை அருமை
.