நயனிமா
விதி வலியது...
பேனா என்ற கத்தி கொண்டு கூர்முனையால் தாக்கும் யுக்தி எங்கே கற்றீர்கள்...வார்ததைகளை எப்படி இறக்குகீறீர்கள்....வலிகளை காட்டி சிதைக்கிறீர்கள்...என்வென்று சொல்வேன்...உமையவள் அவளின் வலியினை....நியாயமில்லா அவள் நியாயங்களுக்காக எப்படி வாதடுவேன்...
ஒரே ஒரு தருணம் வாய்ப்பளிக்க கூட வகையற்றவளா...
வலி கொண்ட நெஞ்சத்தின் துளியாவது கேட்க கூடாதா...
கானல் நீரை காதல் என்று கொண்டு கால் பதித்தேன்..
சூடுபட்டு சொல்ல முடிய வேதனைக்கு ஆட்பட்டேன்...
மயங்காமலே மயக்க சேற்றில் புதைந்தேன்...
எடுப்பார் கைப்பிள்ளையாய் சுழற்றியடிக்கப்பட்டேன்..
சூட்சமங்கள் அறியாமலே சொந்தமாய் தான் போய் சிக்கிவிட்டேன்..
புதைக்குழிக்குள் புதைந்து போதைக்குழியுனுள் தான் வீழ்ந்துவிட்டேன்...
நட்பு கைக்கொடுக்க கடைத்தேறி வந்தேன்...
அரும்பாடுபட்டு சின்னப்பின்னப்பட்டு சிக்கவைத்தேன் ...
நஞ்சு கொண்ட பாம்பை ....
எனினும் என்ன செய்ய என் போறாத காலம்...
வல்லுறுவாய் வட்டமடித்து என் வாழ்க்கையை
திட்டம் போட்டு வதைத்தன் பலன்...
உண்மை அன்பு கூட உணரமுடியாத பாவியாகி போனேன்...
மூளை மறத்து கேட்ட வேளையில் எந்த பாடம் மனதில் பதியும்...
யாரின் செயலை அது பிரித்தறியும்....
தொண்டை வரை நஞ்சு இருக்க....
மருந்து மட்டுமே தேடினேன்...
நஞ்சை முறிக்க நான் பார்த்த வேலை ...
அய்யோ ...உன் நெஞ்சைத்தையே முறித்து ...
உயிர் குடித்தது அறியாது போனேனே பாவை...
பாவம் தான்.. துரோகம் தான்...துடிக்க துடிக்க கொன்றேன்.தான்..
என் மீதான நேசத்தையும் அதிலுள்ள உள்ளேயிருந்த பாசத்தையும்...
உணர்ந்த வேலை ஆவி துடிக்க கதறி துடிக்கிறேன்...
உன் மன்னிப்பை யாசித்தே உன் முன்னே பிதற்றி நிற்கிறேன்...
ஒரு வார்த்தை என் சொல் உன் கேளாத என்று....
ஏய்த்துவிட்டேன் ...ஏமந்துவிட்டேன் என்று உன் நெஞ்சம் எரியும் பொழுதல்லாம் ...
அந்த ஜ்வாலையில் வெந்து சாகிறேன்...
வேறென்ன கேட்கிறேன்...
கேட்க முடியும் மன்னிததுவிடு என்பதை தவிர ...
யாசகமாய்....யாசகமாய் கேட்பதை தவிற வேறென்ன செய்ய...
அன்று சூசகமாய் ....இன்று பகிரங்கமாய்...