All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

Ramyasridhar

Bronze Winner
அன்னைக்கு தெரியாதா மகனை பற்றி... சரியாக தான் அவனை குறித்து சிந்தித்திருக்கிறார். 'அவனிடம் இதைப் பற்றி விவாதிப்பதும் ஒன்று தான், பாறாங்கல்லில் தலையை கொண்டு மோதுவதும் ஒன்று தான் '🤣🤣 கணவரிடம் தஞ்சம் புகுந்தவருக்கு ஒரு தெளிவு பிறக்கிறது. அதன்பின் அதிரடி சரவெடியாக களத்தில் இறங்கி அயனுக்கு அன்னை அவர் என நிரூபித்து விட்டார்👌👏
மகனின் வியர்வையை அன்னையவள் தன் சேலை முந்தானையால் துடைப்பதும், அதற்கு வாகாக மகன் வளைந்து கொடுக்கும் காட்சி மிக அழகு 👌 அக்காட்சியை கண்டு பெண்ணவள் தன்னை அவன் அன்னையிடத்தில் வைத்து பார்க்க முடியா நிலையை நினைத்து ஏங்கி தவிக்கிறாள். ஆணவனோ அவள் வாசனையை வைத்தே அவள் இருப்பை உணர்கிறான், அருமை அருமை சிவா மா 😍😍
சாருவை அவன் வீட்டிலிருந்து கிளப்புவதொன்றே தன் குறிக்கொள் என அவன் ஒவ்வொரு பந்தையும் வீச, அவளை தன் மகனுடன் சேர்த்து வைப்பதொன்றே தன் இலட்சியம் என அவன் வீசும் ஒவ்வொரு பந்தையும் சிக்ஸர் அடித்து விலாசி தள்ளிவிட்டார் தேவகி👏👏
அவளுக்கு திருமணம் செய்து வைக்க போகிறேன் என்றவுடன் சற்றே ஆடி தான் போகிறான் நம் அயன். இது அவன் அன்னையிடமிருந்து அவன் எதிர்பார்க்கா ஒன்று. அந்த ஏற்பாட்டை தடை செய்ய அவளை குறித்த தன் எண்ணங்களை எல்லாம் வார்த்தையால் கொட்டுகிறான். அவன் என்ன சொன்ன போதிலும் தேவகி தன் பிடியிலே நிற்கிறார். இறுதியில் அவளுக்கு இதில் விருப்பமிருக்கிறதா என்று தெரிந்து கொள்ளுங்கள் என்கையில் அவள் அத்தை எது செய்தாலும் தன் நன்மை கொண்டே இருக்கும் என்று விடுகிறாள். அவனுக்கு அவளை ஏற்றுக்கொள்ள முடியாத போதும் அவள் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்க வேண்டுமென்றே விரும்புகிறான்.
பேசி பேசியே அவன் வாயில் இருந்து வார்த்தைகளை வரவைத்து அதை கொண்டே அவனை மடக்கி தான் உண்மையை அறிந்துகொண்டதை உணர்த்திவிடுகிறார்.
அன்னை அவளை அடித்தார் என்றவுடன் இவன் மனமல்லவா துடிக்கிறது. இதற்கே இப்படி துடிப்பவன் அவளின் கடந்த காலத்தை அறியும் போது நிச்சயம் அவன் நெஞ்சில் உதிரம் கொட்டும்😔
'அவள் வெறும் பணத்துக்காக என்னை காதலிப்பது போல் நடித்து மணந்தால் என்பது மாறப்போவதில்லை. அவளுக்காக உயிரையே கொடுத்திருப்பேன், எத்தகைய இக்கட்டிலிருந்தாலும் மீட்டிருப்பேன், விபச்சாரியாக இருந்தால் கூட மணந்திருப்பேன், என் காதல் உண்மையானது. அவன் வந்து உன் மனைவவியுடைய புருஷன் நான் என்று சொன்னபோது என் இதயம் துடிப்பை தான் நிறுத்தவில்லை, ஆனால் உயிர் நொறுங்கி போயிற்று... ', 'சுட்ட மண் ஒரு போதும் ஒட்டாது ' என்றும் ' வெறும் ஒரு மில்லியன் டாலர் விலை மா என் காதல் ' என்று கூறும்போதும் ஹப்பா எத்தனை வலி, வேதனை, துயரம்.... 😭😭😭😭😭 இத்தகையவனின் காதலை பெற உத்தமை கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதை தவற விட்டது அவள் தவறல்லவா !! மீண்டும் அதை பெற அவள் பெருந்தவம் தான் செய்ய வேண்டுமெனில் அதை செய்வதில் பிழையில்லை, அதற்கு தகுதியானவன் தான் அவன். காலம் தான் அவன் மன காயத்தை ஆற்றி அவளுடன் சேர வழி வகுக்க வேண்டும். அவர்களை சேர்த்து வைக்க தேவகி சரியான பாதையை தேர்ந்தெடுத்திருக்கிறார், அது வெற்றி பெற்று அயனும் உமையும் சேர்ந்தால் மட்டற்ற மகிழ்ச்சி 😍
 
S. R. D

Well-known member
ஆர்யன் பேசுவதில் எந்த தவறும் இல்லை, அவள் நல்லவளாகவே இருந்தாலும் ஏமாற்றப்பட்ட வலி, இன்னும் போகவில்லை, சூப்பர் ஆர்யா,
அம்மாவிற்கு தெரியாதா மகனின் மனசு, அம்மா எல்லாமே நல்லபடியா நடத்திவிடுவார்
 
sivanayani

விஜயமலர்

ஆஹா ஆஹா என்ன அழகான வார்த்தை பிரயோகங்கள். மிக அழகான கருத்துப்பகிர்வுமா. ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி. உள்ளம் நெகிழ்ந்தேன். எப்போதும் ஏமாற்றப்பட்ட வலியின் வேதனை ஒரு படி மேல் அல்லவா. அந்த வலிதான் அவனது. தன்னை பற்றி அவள் அறியவைக்க அவன் காலம் கொடுத்தான். அந்த காலகட்டத்தில் கூட அவள் உண்மையை கூறினாளில்லை. சந்தர்ப்பம் கொடுத்ததும் பயன்படுத்தாது தன நலனை மட்டும் சிந்தித்து அவள் குற்றம். இவர்களை தேவகியால் மட்டுமே சேர்த்துவைக்க ம்டுய்யும். :love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
ஆர்யன் பேசுவதில் எந்த தவறும் இல்லை, அவள் நல்லவளாகவே இருந்தாலும் ஏமாற்றப்பட்ட வலி, இன்னும் போகவில்லை, சூப்பர் ஆர்யா,
அம்மாவிற்கு தெரியாதா மகனின் மனசு, அம்மா எல்லாமே நல்லபடியா நடத்திவிடுவார்
நிச்சயமாக தாய் நினைத்தால் எதையும் சாதிப்பாள். குறிப்பாக மகனிடமிருந்து.:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top