All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உன்னில் இடம் கொடுப்பாயா?? - கதை திரி

Status
Not open for further replies.

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இடம் 28

கீர்த்தி வி்ட்டு சென்ற பின் தேவ் சோகமாக இருக்க, அவன் தோளை ஒரு கரம் தொட்டு தன் இருப்பை உணர்த்தியது.


திருப்பி பார்த்தான்... சரவணா தான்...

"என்ன தம்பி??. பிரியா கூட சண்ட போல..." என்று கேட்டான்.

"ஆமா ணா... நான் நல்லது நினைச்சி தான் இங்கே வந்தேன். ஆனா..." என்று தவறாக செய்து விட்டோமோ என்ற எண்ணத்தில் இடைவெளி விட்டு இடைவெளி விட்டு பேசினான் தேவ்.

"நீ செஞ்சது தப்புனு சொல்ல முடியாது. அதே போல் பிரியா பேசறது தப்புனும் சொல்ல முடியாது" என்று சரவணா அவன் தோளை தட்டி கொண்டே சொன்னான் சரவணா.

"அது எப்படினே இரண்டு பேருமே சரினு ஆகும்??" - குழப்பமாக தேவ்.

"அது அப்படி தான்" - சரவணா.

தேவ் முறைக்க, "சரி சரி... உக்காரு" என்று அங்கே இருந்த ஒரு திண்ணையில் அமர சொன்ன சரவணா, தானும் அமர்ந்தான்.

"அதாவது நம்ம ஏன் எப்பவுமே முன்னாடி போய், பாதுகாப்பு கொடுக்கறேன்ங்கற பேருல நமக்கு பின்னாடி ஒழிச்சி வைக்கனும். அவங்கள முன்னாடி விட்டு கூட நம்ம அவங்க துணையா அவங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கலாம்ல" என்று சரவணா கேட்க, 'இதுக்கும் இப்ப அவ வந்து பேசிட்டு போனதுக்கும் என்னங்க சம்மந்தம்' என்ற ரீதியில் தேவ் அவனை பார்த்தான்.

"ஹாஹா... நீ இப்ப எதுக்கு இத சொல்லறேன்னு நினைக்கறது புரியுது. ஆனா சில சின்ன சின்ன செயல்கள் தான் பெரிய பெரிய செயல்களுக்கு அடித்தளமா இருக்கு. இப்ப பிரியா வந்து சொன்னது, நான் தப்பே பண்ணாலும் அத சரி பண்ற வாய்ப்பு எனக்கு குடு. நீ என் கூட துணையா இருனு தான். எல்லாத்தையும் நீயே பண்ணி, அவள உன் பின்ன ஒழிஞ்சிக்க வைக்கற. நாள பின்ன வேற ஏதாவது பிரச்சனை வந்தாலும், அவ யாராவது வந்து சரி பண்ணுவாங்களானு தான எதிர்பாப்பா??" என்று கேட்டான் சரவணா.

இப்போது லேசாக புரிவது போல் இருந்தது தேவ்வுக்கு.

"ம்ம்ம்... இப்படி யோசித்து பாரேன். உனக்கு ரொம்ப வேண்டியவங்களுக்கு எதுனா உடல் உறுப்பு தேவைப்படுது... அவ்வளவு ஏன் இரத்தம் தேவைப்படுது. பிரியாவுது ஒத்து போகும்னு தெரிஞ்சா, அவ விருப்பம் இல்லாம, அவ உடல் நிலை தெரியாம, ஒரு நல்லதுக்கு தான்னு அவள நீ அத பண்ண வைக்கலாமா??" என்று கேட்டு அவனது குழப்பத்திற்கு ஒரு முற்றும் போட்டான் சரவணா.

"ஓஓஓ... ஆனா நான் இப்படி யோசிக்கல..." - தேவ்.

"ம்ம்ம்... புரிஞ்சது" - சரவணா.

"ஆனா இவள இப்படி எப்படி சமாதானம் பண்ணறது??" - தேவ்.

"எனக்கு தெரிஞ்சி பிரியாவுக்கு உன் கூட சண்டை போடவோ, உன்ன வருத்தப்பட வைக்கவோ விருப்பம் இல்ல. உன்கிட்ட பேசுனா கண்டிப்பா வார்த்தைகள்ல கட்டுப்பாடு இருக்காது. உன்ன வருத்தப்படுத்தும்னு தான் பேசாம இருந்து இருக்கா நினைக்கறேன்" என்று சரவணா கணிப்பை கூறினான்.

"அப்ப நான் தான் வழிமந்தமா போய் வாங்கி கட்டிட்டு வந்து இருக்கனா??" என்று சரவணாவை தொடர்ந்து கூறினான். மேலும் அவனே, "பரவாயில்ல... அவள பத்தி புதுசா ஒன்னு தெரிஞ்சிகிட்டனே" என்று சொல்லி கொண்டான்.

"அப்ப அவள சுலபமா சமாதானப்படுத்திலாம் சொல்லறீங்க??" - தேவ் சரவணாவிடம்.

"அதே தான்" - சரவணா.

தலையை ஆட்டி கொண்டே தேவ் யோசிக்க, "சரி நீங்க பாருங்க. நான் வெளியே போய்ட்டு வரேன்" என்று சொல்லி விட்டு சரவணா கிளம்பினான்.

அவருக்கு பதில் சமிக்கை செய்து விட்டு, தனது எண்ணங்களில் முழ்கினான் தேவ்.

மதிய நேரம் ஆக, பெரியவர்கள் அனைவரும் வந்து விட்டனர்.

அனைவரும் உள்ளே வந்து அமர தமிழ் அனைவருக்கும் ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள்.

அனைவரும் தண்ணீர் அருந்த, அங்கே இருந்த பிரியாவை முதலில் பார்த்தது சங்கரின் பசங்க தான்.

"சித்தி" என்று கத்தி கொண்டே அவளிடம் செல்ல, முதலில் எல்லோரும் அவர்கள் தமிழை தான் சொல்கிறார்கள் என்று நினைத்தார்கள். பின்னர் தான் அது பிரியா என்று தெரிய, ஒவ்வொரும் ஒவ்வொரு மனநிலையில் அவளை பார்த்தனர். ஆனால் அவர்கள் அனைவருக்கும் இருந்த ஒரு பொதுவான உணர்ச்சி, கோபம் தான்.

'எப்படி சொல்லாம கொள்ளாம வீட்டை விட்டு போகலாம்??' என்று கீர்த்தியின் பெற்றோரும், 'இவ்ளோ நாள் எங்க இருந்தா என்ன பண்ணறா எதுவும் தெரியல!!' என்று சங்கரும், அவன் மனைவியும் எண்ண, 'இப்ப என்னத்துக்கு இங்க வந்தாளாம்??' என்று கீர்த்தியின் பெரியம்மாவும், 'இப்ப என்ன குண்டு போட போறாளோ!!' என்று சித்தமாளும் என சித்தம் கலங்கி இருந்தனர் அனைவரும்.

எல்லோரும் எதுவும் பேச ஆரம்பிக்கும் முன், தமிழ், "எல்லோரும் இப்ப தான வந்தீங்க!!. களப்பா இருக்கும். அதனால போய் குளிச்சிட்டு வாங்க. சாப்பிட்டு ஆறுதலா பேசலாம்... எதுவும் எங்கையும் ஓடி போய்டாது" என்று சொன்னாள்.

உடனே கீர்த்தியின் பெரியம்மா, "ஓடி போய்ட்டு தான வந்து இருக்கு!!. திரும்ப போகாதுனு என்ன நிச்சயம்??" என்று குத்தலாக சொல்ல, அற்புததிற்கும் சண்முகத்துக்கும் வருத்தமாய் இருந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால் எதும் பேசாமல் அமைதியாய் இருந்தனர்.

"பெரிம்மா... அதெல்லாம் அப்பறம் பேசிக்கலாம். இப்ப போய் எல்லாம் குளிச்சிட்டு வாங்க" என்று சொல்லி அனுப்பி வைத்தாள் தமிழ்.

என்ன கோபம் தான் இருந்தாலும் தன் மகளை ஒருவர் ஓடி போனவள் என்று சொல்வதை, அற்புதத்தால் ஏற்க முடியவில்லை.

தமிழ் கேட்டு கொண்ட படியே அனைவரும் கலைந்து செல்ல, தமிழ் தனது அலைபேசியை எடுத்து கொண்டு தனியாக சென்றாள்.

சரவணாவுக்கு அழைத்து, "மாமா எங்க இருக்கீங்க??. எல்லாரும் வீட்டுக்கு வந்துட்டாங்க. சீக்கிரம் வாங்க" என்று அவன் அழைப்பை ஏற்றவுடன் கூறினாள்.

"இங்க பக்கத்துல தான் இருக்கறேன். வரேன். அவங்க வந்ததும் எதுனா சண்டய ஆரம்பிச்சாங்களா??" என்று சரவணா கேட்க, "ஆமா மாமா. பெரிம்மா தான் சுருக்குனு பேசிட்டாங்க. அற்புதம் சித்திக்கு கூட மூஞ்சே இல்ல" என்று சோகமாக சொன்னவள், "சரி மாமா. நீ சீக்கிரம் வா. நான் அவங்க எல்லாத்தையும் சாப்பிட்டு பேசிக்கலாம் சொல்லி வச்சி இருக்கேன்" என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தாள் தமிழ்.

கீர்த்தியும், அவர்கள் மேல் பொய் சொன்ன குற்றசாட்டு இருந்தாலும், தான் சொல்லி கொள்ளாமல் சென்றது பெரிய தவறு என்று புரிந்தது. நாட்டில் நடக்கும் பிரச்சனைகள் எல்லாம் தினமும் செய்திகளில் கேட்கிறார்கள் தானே.

அந்த யோசனையிலே கீர்த்தி இருக்க, தமிழ் உள்ளே வந்தாள்.

"ஏய்!!!... பிரியா.... வா வந்து எல்லாம் எடுத்து வை... வந்துடுவாங்க" என்று அவளை அழைத்து கொண்டு சென்றாள் தமிழ்.

இவர்கள் அனைத்தையும் எடுத்து வைக்க, குடும்பத்தார் அனைவரும் வந்து சேர்ந்தனர்.

தமிழ் பரிமாற அனைவரும் உண்டு முடித்தனர். அதை தொடர்ந்து சரவணாவும் வர, சரவணா, தமிழ், பிரியா மூவரும் ஒன்றாய் அமர்ந்து உண்டனர்.

அது வரை பொறுத்தது போதும் என்று அற்புதம் தான் ஆரம்பித்தார்.

"அடியேய்... எங்கடி போய் தொலஞ்ச... நீ வேலைக்கு தான் போறேன்னு தெரிஞ்சாலும், எங்க எப்படி இருப்பனு தெரியாம எவ்ளோ பயந்து போய் இருந்தோம். தெரியுமா??. நீ சொன்ன மாறி உன் விருப்பப்படி தானடி எல்லாம் பண்ணோம். இதா இவன்" என்று சரவணாவை காட்டி, "மட்டும் நீ எங்க இருக்க என்ன பண்ணறனு சொல்லனா எதுவும் தெரியாம பைத்தியம் புடிச்சி போய் இருக்கும்டி எனக்கு" என பிரியாவை திட்ட தொடங்கினார்.

அடுத்து சண்முகம், "நீ என்கிட்ட சொல்லி இருக்கலாம்.... எதா இருந்தாலும், நான் பாத்துட்டு இருந்து இருப்பேன். நீ இப்படி பண்ணுவனு நான் கொஞ்சம் கூட நினைக்கல. இரண்டு தடவ நான் உன் மேல வச்சி இருந்த நம்பிக்கைய உடச்சிட்ட" என்றவர் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

"உனக்கு இவ்வளவு ஏத்தம் இருக்க கூடாதுடி. என்னமோ இவ பாட்டுக்கு எல்லா முடிவும் எடுக்கறா!!!. யாரும் எதுவும் சொல்லாம கண்டுக்காம இருக்காங்க. அதான் இப்படி எல்லாம் பண்ணிட்டு திரியறா..." என்று பிரியாவின் பெரியம்மா சொல்ல, அடுத்து ஆளாளுக்கு ஒன்று பேசினர்.

கீர்த்தி அவர்கள் சொல்வதை எல்லாம் அமைதியாய் கேட்டு கொண்டு இருந்தாள். சரவணாவும் அவர்களை பேச விட்டு பார்த்து கொண்டு இருந்தான்.

அவர்கள் எல்லோரும் தங்களது உணர்ச்சி கொந்தளிப்பை கொட்டி தீர்த்தவுடன், சரவணா பேச ஆரம்பித்தான்.

"பிரியாவோட பஞ்சாயத்தை அப்பறம் பாக்கலாம். அதுக்கு முன்னாடி நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கனும்" என்று சரவணா சொல்ல, எல்லோரும் அமைதியா இருக்க அவன் குரல் சத்தமாய் கேட்டது.

அனைவரும் அவனை கேள்வியாய் பார்க்க, சித்தம்மாள் தான், "என்ன தம்பி கேட்கனும்??" என்று கேட்டார்.

சண்முகத்திற்கு புரிந்து விட்டது... அவன் எதை பற்றி கேட்க போகிறான் என்று, எனவே அவரும் அமைதியாய் பார்த்தார் அவனை.

"எனக்கு கல்யாணம் நின்ன அப்போ, பிரியாகிட்ட கேட்டு அவ சம்மதிக்கலனு... ஏன் யாரும் என்கிட்ட சொல்லல??" என்று அவன் கேட்ட கேள்வியிலே அனைவரும் அவனை அதிர்ச்சியாய் பார்க்க, "அதை விட முக்கியமா, பிரியா வேண்டாம்னு மறுத்தும், நீங்க ஏன் என்கிட்ட வந்து பிரியா இல்லனா தமிழ்... இரண்டு பேருல யாரையாவது ஒருத்தர கல்யாணம் பண்ணி ஆகனும்னு சொன்னீங்க??" என்று சண்முகத்தை பார்த்து கேட்டான்.

சங்கர் என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்க, சண்முகம் எந்த வித பதட்டமும் இல்லாமல் அவனை நோக்கினார்.

சரவணா மேலும், "நான் தமிழுக்கு பதிலா, பிரியாவையே கட்டிகிறேன் சொல்லி இருந்தா என்ன பண்ணி இருப்பீங்க?? அவளை கட்டாயப்படுத்தி இருப்பீங்களா?? இல்ல எதுனா சொல்லி ப்ளாக் மெயில் பண்ணி இருப்பீங்களா??" என்று கோபமாகவே கேட்டான்.

'ஆமால்ல... அப்ப என்ன பண்ணி இருப்போம்??' என்று மற்றவர்கள் யோசிக்க, சண்முகம் அதற்கும் கொஞ்சமும் அலட்டி கொள்ளாமல், தனது பதிலை கூறினார்.

அந்த பதிலை தெரிந்து கொள்ள பிரியாவும், ஆர்வமாய் இருந்தாள் என்பது குறிப்பிடத்தக்கது.

சண்முகம் தற்போது உண்மையை தான் சொல்கிறாரா அல்லது தற்போதுள்ள சூழ்நிலையை பொறுத்து சமாளிக்கிறாரா என்பது போல் தான் இருந்தது... அனைவரின் பார்வையும்...

கொடுப்பாள்....
 
  • Like
Reactions: Ums

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இடம் 29


சரவணாவின் கேள்விக்கு எல்லாரும் அந்த சமயம் தாம் என்ன செய்து இருப்போம் என்று யோசிக்க, சண்முகமோ எந்த வித தடுமாற்றமும் இன்றி தனது பதிலை கூறினார்.

"நீ தமிழ தான் கட்டிகனும்னு நினைச்சி தான் பிரியா இல்லனா தமிழ நீ கல்யாணம் பண்ணனும்னு கேட்டேன்" என்றார் சண்முகம்.

'நான் கேட்ட கேள்வி உங்களுக்கு புரிந்ததா?' என்பது போல் ஒரு பார்வையை சரவணா பார்த்து வைக்க, சண்முகமே மேலும் தொடர்ந்தார், "நீ பிரியாவ கட்டிக்க நிச்சயமா சம்மதிக்க மாட்டனு தெரிஞ்சி தான் அதுல அவ பேர சேத்து உன்கிட்ட சொன்னேன். இல்லனா நீ அந்த நேரத்துல கல்யாணமே வேண்டாம்னு சொல்லி இருப்ப!" என்று எல்லாம் தெரிந்து தான் நான் அவ்வாறு செய்தேன் என்று கூறினார் சண்முகம்.

"ஆனா மாமா... என்னால நம்ப முடியல" என்று சரவணா, சொல்ல மற்றவர்களின் முகமும் அதையே பிரதிபலித்தது.

"சரி விடு. நீ கேட்ட கேள்விக்கே பதில் வேணும்னா... நீ பிரியாவுக்கு சரி சொல்லி இருந்தா அவளுக்கு புடிக்கலனு அப்பவே சொல்லி இருப்பேன் உன்கிட்ட... அது உன்ன வருத்தப்படுத்தும்னு தெரிஞ்சி இருந்தாலும்... ஒருத்தருக்கும் விருப்பம் இல்லாம பண்ணி வக்கற கல்யாணத்துல நிறைய மனதாங்கல்கள் வரும். அத வெளிய சொல்லனாலும் மனசுகுள்ளயாவது இருக்கும். புடிச்சி கல்யாணம் பண்ணறவங்களுக்கு வராதானு கேட்டா... கண்டிப்பா வரும்... ஆனா அந்த நேரத்துல நம்ம தான புடிச்சி கல்யாணம் பண்ணோம்... அத நம்ம சரி பண்ணனும்னு யாராவது ஒருத்தராவது முயற்சி எடுப்பாங்க. ஆனா புடிக்காம கல்யாணம் பண்ணா... அவங்கனால தான் என் வாழ்க்கை இப்படி ஆச்சினு அடுத்தவங்கள குறை சொல்லியே அவங்க மீத வாழ்க்கைய வாழ மாட்டாங்க... அது தான் வித்தியாசம்" என்று ஒரு நீண்ட விளக்கத்தை சண்முகம் கொடுத்தார்.

அந்த பதில் சரவணாவுக்கு ஏற்புடைய பதிலாய் இருக்க, மனம் சமாதானம் அடைந்து தனது அடுத்த கேள்வியை கேட்டான்.

"சரி... இது எல்லாம் ஏன் என்கிட்ட சொல்லல??" என்று கேட்டான் சரவணா.

"எது எல்லாம்??" என்று அசால்ட்டாய் கேட்டார் சண்முகம்.

சரவணா கேட்டதில் பயந்து இருந்து உறவுகள், சண்முகம் கேட்ட எதிர் கேள்வியில் அதிர்ச்சியாகி பேந்த பேந்த முழித்தனர்.

"மாமா... என்ன விளையாடுறீங்களா??. நான் இத்தன நாள் பிரியாவ தப்பா நினைச்சிட்டு இருந்தேன்னு உங்களுக்கு தெரியாதா??. அத ஏன் நீங்க யாரும் சரி பண்ணலனு கேட்டேன்!" இப்போது சரவணா கோபமாகவே கேட்க, சண்முகம் அதற்கும் அசரவில்லை.

"இங்க பாரு சரவணா. நாங்க யாரும் மறைக்கனும்னு நினைக்கல. அதே போல உன்கிட்ட இத தனியா வந்து சொல்லனும்னு கூட எங்களுக்கு தோணல." என்று சொன்ன சண்முகம், பின் மெல்லிய குரலில், "பிரியா வீட்ட விட்டு போவான்னும் நாங்க நினைக்கல. அவ ஏன் போனான்னும் தெரியல. என் பொண்ண நான் சரியா புரிஞ்சிக்கலயா?? இல்ல நான் சரியா வளக்கலையானும் தெரியல. ஆனா உண்மையா நான் அவ மேல வச்சி இருந்த நம்பிக்கைய உடைச்சிட்டா!!" என்று வலியுடன் முடித்தார்.

"அப்பா... இல்லப்பா... நான் உங்கள ஏமாத்தனும்னு எதுவும் பண்ணல பா" என்று ஓரமாய் நின்று இருந்தவள், அவரிடம் ஓடி வந்து அவரது கையை பிடித்து கொண்டு கண்ணீருடன் சொல்லி கொண்டு இருந்தாள் கீர்த்தி.

ஆனால் அவர் அவளை நம்பாமல் ஒரு பார்வை பார்த்து, தனது கையை அவளிடம் இருந்து பிரித்து கொண்டார். அவரை பிடித்து இருந்த கைகளை கூட கீழே இறக்காமல் அவர் விலகிய பிறகும் அந்தரத்திலே வைத்து விட்டு, கண்ணீரை நிப்பாட்டாமல் அழுது கொண்டு இருந்தாள் கீர்த்தி.

சரவணாவோ, பேச்சு திசை மாறியதை எப்படி மீண்டும் தன் பக்கம் திருப்புவது என்று புரியாமல் இருக்க, சண்முகமே அவனுக்கு பதில் விடையளித்தார்.

"இவ வீட்ட விட்டு போன அப்பறம் நீ ரொம்ப கோவமா இருக்க மாறி இருந்தது, அந்த நேரத்துல இத பத்தி உன்கிட்ட சொல்ல எங்களுக்கு பயமா இருந்தது. எங்க நாங்க உன்கிட்ட பொய் சொல்லிட்டோம். உன்ன ஏமாத்திட்டோம்னு நினைச்சிடுவியோன்னு. தெரியும் போது தானா உனக்கு தெரியட்டும். நம்மளா சொல்ல வேண்டாம்னு இருந்தோம்" என்று எல்லோர் சார்பாகவும் அவரே பதில் அளித்தார். அதற்கு எல்லோர் முகமும் ஆமோதிப்பாக இருக்க, சரவணாவுக்கும் இதற்க்கு மேல் அதை கிண்டி கிளறி பெரிய பிரச்சனை ஆக்க வேண்டாம் என்றே தோன்றியது.

அவனுக்கு தேவையான கேள்விக்கு பதில் கிடைத்து விட்டதால் சமாதானம் ஆகி விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்.

ஒரு பெரு மூச்சை விட்டு, "சரி... விடுங்க... ஆனது ஆச்சி. இனி அத பத்தி பேசி எதுவும் ஆக போறது இல்ல. அதனால அத எல்லாம் மறந்துடலாம். நான், என் பொண்டாட்டி தமிழ், என் அக்கா பொண்ணு... என் பொண்ணு மாறி பிரியா. இதுல எந்த மாற்றமும் இல்ல தான. அது போதும்" என்று எல்லாருக்கும் பொதுவாய் கூறி விட்டான்.

அதன் பிறகு எல்லோரும் ஒரு நிம்மதி பெரு மூச்சு விட்டனர்.

ஆனால் இன்னுமுமே கீர்த்தி மட்டும் அழுது கொண்டு இருக்க, எல்லோர் பார்வையும் தற்போது அவளிடம் திரும்பியது.

இவ்வுளவு நேரம் அடங்கி இருந்த பிரியாவின் பெரியம்மா, "இப்ப எதுக்கு இந்த அழுகாச்சி நாடகம்??" என்று கீர்த்தியை நோக்கி கேட்டார்.

கண்ணீர் நின்று அதிர்ச்சியாக அவள் பார்க்க, அற்புதத்திற்கு தான் கோபம் கட்டுகடங்காமல் வந்தது. எல்லாரும் குறை சொல்லும் அளவுக்கு நடந்து கொண்டாளே என்று.

அதனால் பிரியாவின் அருகில் சென்று அவள் முதுகில் ஒரு அடி வைத்து, "எதுக்குடி வுட்ட வுட்டு போன??. ஊருக்குள்ள எதுவும் தெரியாம பாத்துதுகிட்டாலும், வூட்டுல இருக்கவங்களுக்கு தெரியாம இருக்குமா!!!. நீ கேட்ட மாறி தானே எல்லாம் நடந்தது. அப்பறம் என்ன எலவுக்குடி வூட்ட வுட்டு போன??" என்று தனது ஆதங்கத்தை எல்லாம் கொட்டி தீர்த்தார்.

எல்லாரும் அவரவர் கருத்தில் செயல்களில் நல்லவர்களாய் இருந்தாலும், கூட இருப்பவர்களின் பேச்சை எண்ணியே தன் குணத்தை மாற்றி, உடனுக்குடன் முடிவு எடுத்து எதிர் இருப்பவரின் பக்கத்தை பொறுமையாக கேட்பதில்ல.

பிரியா கல்யாணம் வேண்டாம் சொன்னப்ப கூட கோபப்படாமல், முடிந்தளவு முயற்சித்து முடியாமல் போனதால் பிரியாவின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து தான் இருந்தார். ஆனால் இப்போது அவர் அடிப்பது என்றால், இவள் அவரை எந்தளவு புண்படுத்தி இருப்பாள்... சுற்றி இருந்தவர்கள் அவரை எவ்வாறு காயப்படுத்தி இருப்பார்கள்... அது எந்த அளவுக்கு இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சட்டென அற்புதம் சென்று அவளை அடிப்பார் என்று எண்ணாத குடும்பத்தார் ஒரு நொடி இடைவெளியில், "அற்புதம்", "அக்கா", "பெரிம்மா" என அழைத்து இருந்தனர்.

தமிழ் சென்று பிரியாவை இழுத்து தன் அருகில் நிறுத்தி கொண்டாள்.

சரவணா, "என்ன கா நீ பைத்தியம் மாறி பண்ணிட்டு இருக்க??. அவ வேலைக்கு தான் போனா... ஏதோ ஓடி போன மாறி நினைச்சிட்டு வந்து அடிக்கற!!. முத அவளுக்கு என்ன பிரச்சனைனு கேளு. அதுக்கு அப்பறம் என்ன முடிவு பண்ணறதுனு பாக்கலாம். சும்மா நீயே எதாவது கற்பனை பண்ணி எதாவது பண்ணிட்டு இருக்காத" என்று கோபமாக கேட்க, சண்முகம் இறுகிய முகத்துடன், "நீயும் இப்படி பண்ணுவனு நான் நினைக்கல அற்புதா!!. நான் உங்க இரண்டு பேரையுமே சரியா புரிஞ்சிக்கல நினைக்கறேன்" என்று கூறி விட்டு, அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டார்.

அவரும் பாவம் என்ன செய்வார்!!!... தன் மனைவி எதையும் யோசித்து தான் முடிவெடுப்பாள் என்ற எண்ணம் போய்... சூழ்நிலையால் உணர்ச்சி வசப்பட்டு உணர்வுகளை கொட்டுவார் என்று எண்ணவில்லை. இத்தனை வருடம் இந்த மாறி நிகழ்வு ஒன்றும் ஏற்படவில்லை என்றாலும் தன் மகள் மற்றும் மனைவி பற்றிய அவரது கணிப்பு அல்லது புரிதல் தவறாய் இருந்ததாய் அவருக்கு தோன்றியது.

அற்புதா அவரை, 'என்னை நீங்க புரிஞ்சிக்கலையா??' என்ற ஒரு பார்வை பார்த்து விட்டு, "இங்க பாரு சரவணா... அவளுக்கு என்ன பிரச்சனைனாலும் நம்மகிட்ட வந்து சொல்ல வேண்டியது தான!!. அத விட்டுட்டு அது என்ன வீட்ட விட்டு போற பழக்கம். நாள பின்ன இது யாருக்காவது தெரிஞ்சாலும், இவள தான கொற சொல்லுவாங்க. அதும் இல்லாம நாட்டுல எவ்வளவு பிரச்சனை எல்லா எடத்துலயும் நடக்குது. அது எதுவும் தெரியாம இவ பாட்டுக்கு எங்கனா கிளம்பி போய் இருக்கா!!. அவ எங்க இருக்கா என்ன பண்ணறானு நீ கண்டு புடிச்சி சொல்லுற அந்த ஒரு வார்த்துல கருக்கு கருக்குனு இருந்தது எங்களுக்கு தான தெரியும்" என்று தனது மன உளைச்சல்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் பக்க நியாயமும் தற்போது அவனுக்கு புரிய, அதற்கு என்ன சொல்வது என்று புரியாமல் இருந்தான் சரவணா. பிரியாவுக்கு அழுகை மேலும் பீறிட்டது. தான் வேலைக்கு செல்கிறேன் என்று வீட்டில் சொல்லி சென்று இருக்க வேண்டுமோ!!! என்று காலம் கடந்து யோசித்தாள்.

அற்புதம் போல தானும் உணர்ச்சி வசப்பட்டு அவள் பக்க நியாயத்தை கேட்காமல் பழி சுமத்தியதாக தோன்றியது. அப்படி இருக்க எப்படி நான் அற்புதாவை குறை சொல்வது இல்லை பிரியாவை தான் குறை சொல்வது என்று புரிந்து கொண்டார்.

"எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருங்க" என்றவர், "பிரி குட்டி அப்பாவ மன்னிச்சிடுடா... நீ என்ன நினைச்ச... ஏன் அப்படி பண்ணனு கேட்காம அப்பா உன் மேல கோபப்பட்டுட்டேன். இங்க வாங்க" என்று நாற்காலியில் அமர்ந்து கொண்டே தனது கையை நீட்டினார்.

"அப்பா" என்று ஓடி வந்து அவர் கையை பிடித்து கொண்டவள், அவர் மடியில் தலை சாய்த்தவள், கேவி கேவி அழுதாள்.

"நான் வேணும்னு எதுவும் பண்ணல பா", "என்ன யாருக்கும் புடிக்காம போச்சி", "நான் இங்க இருக்கறது யாருக்கும் புடிக்கல", "அதான் பா நானே போய்ட்டேன்" என்று ஒரு வார்த்தைக்கு நடுவிலும் மூக்கை உறிஞ்சி கொண்டே பேசினாள்.

அவரது தலையை வருடி கொடுத்து கொண்டே, "சரிடா... சரிடா குட்டி... ஒன்னும் இல்ல... ஒன்னும் இல்ல..." என்று சொல்லி கொண்டு இருந்தார்.

அவளது அழுகை ஒருவாறு நின்று தேம்பலாய் மாறி, சிறிதாக விக்க, தமிழ் தண்ணீர் எடுத்து வந்து நீட்டினாள்.

சண்முகம் அதை வாங்கி தன் மகளுக்கு புகட்டி விட்டு, பொறுமையாக, "என்னடா ஆச்சி??" என்று கேட்டார். அவளும் அன்றைய தனது மனநிலையை அவரிடம் விளக்க ஆரம்பித்தாள்.

கொடுப்பாள்...
 
  • Like
Reactions: Ums

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இடம் 30



எவ்வளவு தான் யோசித்து, அறிந்து, புரிந்து, வளர்ந்து, மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் அளவு முன்னேறினாலும், தன் குடும்பம், தனக்கு என்று வரும் போது குழந்தையாய் தான் மாறி போகின்றனர். அதே போல் தான் பிரியாவும், தனது அப்பாவிடம் அனைவரின் மீதும் குற்ற பத்திரிக்கை வாசித்து கொண்டு இருந்தாள்.

"மாமா கல்யாணம் முடிஞ்சி வீட்டுக்கு வந்தாமா பா... அப்ப யாருமே என்கிட்ட பேசல..." என்றவள் தொடர்ந்து சரவணாவை நோக்கி கையை நீட்டி, "மாமா கூட என்கிட்ட பேசல... ஒரு வேள நான் மாமாவ கட்டிக்க மாட்டேன் சொன்னது... அவருக்கு கோபம் நினைச்சிட்டேன். அடுத்து அவருகிட்ட என்ன பேசறதுனு பயமா இருந்துச்சி" என்று சொன்னாள்.

அடுத்து அவள் இன்னொருவரை பற்றி கூறும் முன் சரவணா இடை புகுந்து, "அச்சோ... மாமா அப்படி எல்லாம் நினைக்கலடா குட்டி... எனக்கு தெரியாது இல்ல... நீயும் சம்மதிக்கலனு... அதான் கொஞ்சம் கோபமா இருந்துட்டேன். சாரி டா" என்று அவள் அருகில் வந்து கூறினான் சரவணா.

"ஆன்... ஆன்... எனக்கு இப்போ தெரியும் மாமா. ஆனால் அப்ப எனக்கும் தெரியாது இல்ல" என்று சொன்னவள், அடுத்து தன் தாயை பற்றி கூறினாள்.

"பா... அம்மா இருக்கில்ல... முத எல்லாம் சாப்பிட வா... சாப்பிட வானு... அந்த அந்த நேரம் ஆன போதும்... கூப்டுட்டே இருக்கும் இல்ல... ஆனா அப்ப என்ன கண்டுக்கவும் இல்ல... வூட்டுல சமைக்கவும் இல்ல... வந்து அது பொறந்த வூட்டுல உக்காந்துகிச்சி. நான் இங்க வந்தாலும், எல்லாரும் மூஞ்சை திருப்பிட்டு திருப்பிட்டு போனாங்க... எனக்கு வரவே பயமா இருந்துச்சி... நான் இருந்தா சும்மா சிரிச்சி பேசிட்டு இருந்தா கூட அமைதி ஆகிடுவாங்க. எனக்கு அப்ப ஏதோ நான் இவங்க மகிழ்ச்சிய கொடுக்க வந்தவ மாறி இருக்கும்" என்று ஒவ்வொருவர் முகத்தையும் பார்த்து பார்த்து தான் தந்தையுடம் சொன்னாள்.

"அப்பறம் தமிழ் தான் எனக்கு சாப்பாடே கொண்டு வந்து கொடுத்தா... மத்தவங்க யாரும் என்ன கண்டுக்கல... நான் இங்க இருக்கறதும் யாருக்கும் புடிக்கல" என்று தலையை குனிந்து கொண்டே சொன்னவள், "அப்பறம் உனக்கு கூட என்ன புடிக்காம போச்சி தான பா. அதான் நீயும் என்கிட்ட பேசாம இருந்த??!. நீங்க எல்லாம் பக்கத்துல இருந்து பேசாம இருந்தது எனக்கு ரொம்ப வருத்தமா இருந்துச்சி. நீங்களும் என்னால மகிழ்ச்சியா இல்ல. நான் இருந்தா நீங்க ஆனந்தமா இருக்க மாட்டீங்கனு நினைச்சி தான் நான் போனேன் பா" என்று இவ்வளவு நேரம் யாரிடம் குறைகளை கூறி கொண்டு இருந்தாளோ, அவர் மேல குற்றம் வாசித்தாள்.

அதற்கு அவர் எதுவும் சொல்லாமல் இருக்க, சித்தம்மாள் முன் வந்து, "உன்னால எங்களுக்கு என்ன வருத்தம். எ ஆச பேத்தி நீ. பக்கத்துலயே இருந்து உன்ன வளத்தேன். கல்யாணம்னு ஒன்னு முடிஞ்சி வந்தா எல்லாரும் அது சம்மந்தமா வேல எல்லாம் முடிக்க தான் இருப்பாங்க. ஒரு ஒரு வாரத்துக்காவது வேல இருக்கும். அதான் எல்லாம் அத பாத்துட்டு இருந்தாங்க" என்று சொல்ல, அவரை தொடர்ந்து, "ஏண்டி எங்களுக்கு உன் மேல கோவப்பட கூட உரிமை இல்லயா??. நாங்க பாத்து வளத்த புள்ள நாங்க சொல்லறத கேட்கும்னு ஒரு நம்பிக்க எங்களுக்கும் இருந்து இருக்கும்ல. திடீர்னு நீ மாத்தி பேசவும் எங்களுக்கு ஏத்துக்க முடியல" என்று பிரியாவின் பெரிம்மா சொன்னார்.

"இல்ல பெரிம்மா..." என்று பிரியா திக்க, அற்புதம், "ஏண்டி நம்ம முக்கால்வாசி நாள் எங்க அம்மா வீட்டுல தான் சாப்பிடுவோம். என்னமோ அத மட்டும் குறைனு அப்படி சொல்லிட்டு இருக்க... இதுக்கு முன்ன நான் உன்கிட்ட பேசாம இருந்ததே இல்லயா??. மனசு புத்தகமா... உடனே உடனே அடுத்த அடுத்த பக்கத்துக்கு திருப்ப, எங்களுக்கும் உன் கிட்ட எதிர்பார்ப்பு இருந்து இருக்கும்ல... அது நடக்கலனதும் கோவம் வந்துடுச்சி. அதுக்கு நீ வூட்ட வுட்டு போவயா??" என்று இன்னுமே மனசு கேட்காமல் தான் பேசினார்.

பிரியா அடுத்து என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்க, "சரி... போதும்... எல்லாம் நிறுத்துங்க..." என்ற சண்முகம் தனது மகளை நோக்கி திரும்பினார்.

"அந்த நேரத்துல நம்ம மாறியே தான் பிரியாவும் யோசிச்சி இருந்து இருப்பா!!. நம்ம பெரியவங்க யாராவது ஒருத்தர் ஒத்தாசையா இருந்து இருந்தா இந்தளவுக்கு வந்து இருக்காது. அப்பாவ மன்னிச்சிடுடா... நான் உன்கிட்ட எல்லாத்தையும் பேசி புரிய வச்சி இருக்கனும்" என்று அவளை பார்த்து சொல்ல, "என்னயும் மன்னிச்சிடு பா. நானும் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம்னு பண்ணாம உங்க யார் கிட்டயாவது பேசி இருக்கனும்" என்று அவளும் கூறி முடித்தாள்.

அதன் பின் குடும்பம் அனைத்தும் பிரியாவுடன் பேசி கொண்டு இருக்க, எங்க வேல பண்ணுறா?? என்ன பண்ணுறா?? எங்க தங்கி இருக்கா?? ப்ரெண்ட்ஸ் யாராவது இருக்காங்களா?? என்று எல்லாத்தையும் பேசி கொண்டு இருந்தனர்.

சரவணா இப்போது தனது அலைபேசியை எடுத்து கொண்டு வெளியே சென்றான். இவர்கள் பேசி கொண்டு இருக்கும் போதே தேவ், இரு முறை அழைத்தான். அந்த தவறிய அழைப்புகளை பார்த்து விட்டு அவனுக்கு அழைக்க தான் சென்றான்.

"ஆன்... அண்ணா..." என்று அழைப்பை ஏற்றவுடன் தேவ் சொல்ல, "சொல்லு தேவ்... எதுக்கு கூப்பிட்டு இருந்த??" என்று சரவணா கேட்டான்.

"அண்ணா... அதான் எல்லாரும் இன்னிக்கு வந்துடுவாங்கனு சொன்னீங்க இல்ல. அதான் வந்துட்டாங்களா?? கீர்த்துவ எதுனா சொன்னாங்களா?? என்ன ஆச்சினு கேக்க தான் ணா கூப்பிட்டேன்!!" என்று சொன்னான் தேவ்.

"ம்ம்ம்... எல்லாரும் வந்தாச்சி... எல்லாம் பேசியும் முடிச்சாச்சி. ஒன்னும் பிரச்சனை இல்ல" என்று சொன்ன சரவணா, மேலும் நடந்தவற்றை கொஞ்சம் மேலோட்டமாக சொன்னான்.

அதை எல்லாம் கேட்டு கொண்ட தேவ், அன்று அவன் தாயிடம் பேசியதை எண்ணி பார்த்தான். அவன் அம்மா சொன்னதை போல் தான் அனைவரும் எண்ணி இருக்கின்றனர்.

"அவங்க

'அம்மா... நீங்க ஒரு தீர்க்கதரிசி மா' என்று மனதுக்குள் தன் அம்மாவை மெச்சி கொண்டவன், சரவணாவின் பேச்சில் கவனம் செலுத்தினான்.

"ம்ம்ம்... சரி ஓகே ணா... ரொம்ப அழுதுட்டாளா??" என்று மெதுவாக கேட்டான் தேவ்.

சரவணாவுக்கு சிரிப்பு தான் வந்தது, இவ்வளவு நேரம் என்ன சொன்னேன் அதை எல்லாம் விட்டு விட்டு, அவள் அழுதாளா என்பது தான் இவனுக்கு பெரிய பிரச்சனையா?? என்று. ஆனாலும் அவள் மேல் இவ்வளவு அக்கறை வைத்து இருப்பது, சரவணாவுக்கும் மகிழ்ச்சியே!!.

"அதெல்லாம் ஒன்னும் இல்ல" என்று சரவணா தேவ்வுக்கு சொல்ல, தேவ்வும், "சரி ணா... அப்போ எல்லா பிரச்சனையும் ஓவர் தான!!!. நான் ஊருக்கு கிளம்பலாம் இருக்கேன் ணா" என்று சொன்னான்.

"ஏன் டா?? அதுக்குள்ள... நான் உங்க இரண்டு பேர் பத்தியும் மாமாகிட்ட பேசலாம் நினைச்சேன்" என்றான் சரவணா.

"இல்ல ணா. என் மாமா பையன் மதன் கல்யாணம் முடியனும். அதுக்கு அப்பறம் பேசிக்கலாம். அதுக்குள்ள நான் கீர்ததுவ வேற சமாதான படுத்தனும்ல. அவ அங்க வந்ததும் பேசி சரி பண்ணலாம். அப்பறம் நானே வந்து மாமா கிட்ட பேசறேன் ணா" என்று தனது எண்ணத்தை கூறினான் தேவ்.

"சரி ஓகே... எப்ப கிளம்பற??" என்று கேட்டான் சரவணா.

"இன்னிக்கு நைட் ணா" - தேவ்.

"சரி... முடிஞ்சா வரேன்" - சரவணா.

"ஓகே ணா. பாய்" என்று அழைப்பை துண்டித்தான் தேவ்.

அதன் பிறகு வீட்டின் உள்ளே வந்த சரவணா, மற்றவர்களுடன் இணைந்து கொண்டான்.

"பிரியா குட்டி... எத்தன நாள் லீவ் போட்டு இருக்க??. திரும்ப எப்ப போகனும்??" என்று கேட்டான் சரவணா.

"ஒரு வாரம் மாமா. அடுத்த ஞாயித்து கிழமை கிளம்புனா போதும்" என்று சொன்னாள்.

"என்னது??. திரும்ப போகனுமா??" என்று சித்தம்மாள் கேட்க, "ஆமா பாட்டி" என்று பிரியா பதில் சொன்னாள்.

மற்றவர்களும் புரிந்து கொண்டனர், நன்றாக இருந்து இருந்தால் யாரும் அவள் வேலைக்கு செல்வதை தடுத்து இருக்க மாட்டோம் அல்லவா!!! என்று.

அன்று இரவு தேவ் ஊருக்கு கிளம்பும் போது அங்கு சரவணாவும், சுந்தரும் அவனை வழி அனுப்ப வந்து இருந்தனர். அவர்களிடம் சிறிது நேரம் பேசி விட்டு சென்னை கிளம்பினான் தேவாமிர்தன்.

இங்கு கீர்த்தியோ ஒரு வார விடுமுறையையும் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கழித்தாள்.

ஒரு வாரம் முடிந்து அவள் ஊருக்கு கிளம்ப தயாராகும் போது, குளிக்கற சோப்பு, துணி துவைக்கற சோப்பு, ஷாம்பூ எல்லாம் இருக்கா??. வாங்கிட்டு வரவா??. நெறுக்கு தீனி என்ன வேணும்??. முறுக்கு, தேன் மிட்டாய், கடல பருப்பி வாங்கிட்டு வரவா?? என்று நடுவில் இருந்த ஒரு வருடமும் இவள் தான் அனைத்தையும் செய்து கொண்டாள் என்பதை மறந்து, கல்லூரி செல்லும் போது அவளுக்கு பேக்கிங் பண்ண என்ன பண்ணுவார்களோ அதே போல் கேட்டனர் அவர்கள் எல்லாம்.

"அது எல்லாம் இருக்கு. ஆனா திங்க மட்டும் வாங்கிட்டு வந்துடுங்க பா" என்று சிரிப்புடன் கூறினாள் பிரியா.

ஒரு வழியாக, மூட்டை முடிச்சை கட்டி முடித்து இருக்க, சண்முகமும், சரவணாவும் வந்து அவளை பஸ் ஏற்றி விட்டனர்.

இப்போது தான் கீரத்திக்கும் மனதுக்கு நிறைவாய் அமைதியாய் மகிழ்ச்சியாய் இருந்தது.

அவள் மனதுக்குள், இதுக்கு எல்லாம் தேவ்க்கு தான் நன்றி சொல்லனும். அவன் மட்டும் இங்க வரலனா, நான் பயந்துகிட்டு அங்கயே இருந்து இருப்பேன். இதை எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்கு இழந்து இருப்பேன் என்று மனதில் எண்ணி கொண்டாள்.

பாவம்!! அவனை வேற வருத்தப்படுற மாறி திட்டிட்டோம். அவனுக்கு முதல ஒரு தேங்க்ஸ்ஸு, ஒரு பெரிய சாரியும் சொல்லனும். நேருல போய் சொல்லலாம் என்று நினைத்து கொண்டு பேருந்தில் கண் மூடி உறங்கி விட்டாள்.

கொடுப்பாள்...

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே...

"உன்னில் இடம் கொடுப்பாயா??" - கருத்து திரி

நன்றி!!!

இங்ஙனம்
திரா ஆனந்த் 🍀
 
  • Like
Reactions: Ums
Status
Not open for further replies.
Top