All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உன்னில் இடம் கொடுப்பாயா?? - கதை திரி

Status
Not open for further replies.

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இடம் 20




வீட்டுக்கு சென்ற தேவ், "அம்மா நான் ஒரு பொண்ண லவ் பண்றேன்" என்று தனது தாயிடம் சொன்னான்.

"சரிடா. எப்ப கல்யாணம் பண்ணலாம்??. நாளைக்கு எனக்கு கொஞ்சம் வேல இருக்கு. அதனால நாளானைக்கு பண்ணலாமா??" என்று சிரிப்புடன் அம்பிகா கேட்டார். அவன் கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் அன்று வீட்டுக்கு வந்து சொன்ன நினைவுடன்...

கல்லூரி முதல் ஆண்டு முதல் நாள் சென்று விட்டு வீட்டுக்கு வந்த தேவ், "அம்மா நான் ஒரு பொண்ண லவ் பண்றேன். அந்த பொண்ண எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிடு" என்றான்.

"என்னடா சொல்லற??" - அம்பிகா.

"ஆமா அம்மு... இன்னிக்கு தான் பாத்தேன். அந்த பொண்ணும் பர்ஸ்ட் இயர் தான் போல... பர்ஸ்ட் இயர் கம்ப்யூட்டர் டிப்பார்டமென்ட்க்கு வழி கேட்டுட்டு இருந்தது" என்றான் தேவ்.

"ஓகோ" - அம்பிகா.

"எனக்கு ரொம்ப புடிச்சிடுச்சி. நான் லவ் பண்றேன். நான் படிச்சி முடிச்சதும் அந்த பொண்ணு வீட்டுல பேசி நீ தான் கல்யாணம் பண்ணி வைக்கனும்" - க்யூட்டான முக பாவத்துடன் தேவ்.

"அதெல்லாம் முடியாது. நீ லவ் பண்ணா நான் ஏத்துக்கனுமா??. முடியாது. எனக்கு அந்த பொண்ணு அவங்க குடும்பம் எல்லாம் புடிச்சா தான் நம்ம வீட்டுக்கு மருமகளா வருவா" என்று விளையாட்டுக்கு பேசுகிறான் என்று தெரிந்தாலும் தனது கருத்தை கூறினார்.

"சரி சரி" என்றவன் அடுத்த நாள் கல்லூரி சென்று விட்டு சோகத்துடன் வந்தான்.

"என்னடா ஆச்சி??" - அம்பிகா.

"அந்த பொண்ணு வேண்டாம்மா நமக்கு" சோகமாக தேவ்.

"நான் எப்படா ஏத்துகிட்டேன்?? வேண்டாம்மானு சொல்லுற??" - அம்பிகா.

ஆனால் அதை தேவ் கண்டு கொண்ட மாதிரி கூட தெரியவில்லை.

"அந்த பொண்ணு எங்க டிபார்ட்மென்ட் தான். ப்ர்ஸ்ட் இயர் தான். ஆனா பி.ஜி. என்ன விட ஆறு வருடம் பெரியவங்க. கல்யாணம் ஆகி இப்ப பி.ஜி பண்ண வந்து இருக்காங்க" என்று அதே பாவமான முகத்துடன் கூறினான்.

"ஹாஹா" என்று சிரித்தவர், "அமிர் கண்ணா நீ எதுக்கு கவலைப்படுற??. அம்மா எதுக்கு இருக்கேன். நான் நல்ல அழகான பொண்ணா பாசமான பொண்ணா உனக்கு கண்டு புடிக்கிறேன். இப்போ அமிர் குட்டி நல்லா படிக்கற வேலைய மட்டும் பாப்பாங்களாம்" என்று கூறி அவனது தலையை வருடி விட்டார்.

பெற்றோர்க்கு அவர்கள் பிள்ளைகள் செய்தது எந்த காலத்திலும் மறக்காது. இப்போதும் அதே முதல் வருட மாணவனாய் அவனை நினைத்தே அந்த எப்ப கல்யாணம் பண்ணலாம் என்று கேட்டார் அம்பிகா.

"அம்மா நான் விளையாடல... சீரியஸா சொல்லறேன்" என்றான் தீவிரமான முகத்துடன்... நான் வளர்ந்து விட்டேன். என்ன சொல்கிறேன் என்பதை புரிந்து தான் சொல்கிறேன் என்னும் பாவத்தை குரலில் கொண்டு வந்து.

அவன் குரலில் அவன் உண்மையாகவே தான் சொல்கிறான் என்று புரிந்து கொண்டவர், ஒரு நிமிடம் திகைத்து, "யாரு அந்த பொண்ணு??. எந்த ஊரு??. அவங்க குடும்பம் என்ன பண்ணறாங்க??. எப்படி உனக்கும் அவளுக்கும் பழக்கம்??" என்று பல கேள்விகளை அவனை நோக்கி கேட்டார்.

தனது தாயின் கேள்விகளை காதில் வாங்கியவன், அவரை அழைத்து சென்று ஒரு சோபாவில் அமர வைத்து ஒவ்வொரு வினாவுக்கான விடையையும் கூற தொடங்கினான்.

"அம்மா மெதுவா... ஒவ்வொரு கேள்வியா கேளு மா. இப்ப என்ன அவளை பத்தி தெரியனும் அவ்ளோ தானே!!. அவ பேரு கீர்த்தி பிரியம்வதா. ஊரு அது. அங்க அவங்க விவசாயம் பண்ணிட்டு இருக்காங்க. இது தான் அவங்க குடும்பம். இப்போ இங்க சென்னைல தான் வேல பாத்துட்டு இருக்கா. அவளுக்கும் என்ன புடிச்சி இருக்கு. என்ன அவங்க வீட்டுல கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாங்களோனு கொஞ்சம் பயப்படுறா!!. நான் அவங்க வீட்டுல பேசலாம்னு நினைக்கிறேன். உனக்கு ஓகே வா??" என்று மனப்பாடம் பண்ணி வைத்து ஒப்பிப்பது போல் அனைத்தையும் சொல்லி அவரது சம்மதத்தையும் கேட்டான்.

"எல்லாம் முடிவு பண்ணிட்டு அப்பறம் என்கிட்ட வந்து கேக்கற??" என்று பொய் கோபத்துடன் கேட்டார் அம்பிகா.

"சே...சே... அப்படி இல்லமா. முத சம்மதிக்க வச்சிட்டு அப்பறம் தான் அவங்க வீட்டுல சம்மதம் கேக்கறது" என்றான் தேவ் கண்ணை சிமிட்டி கொண்டே.

"சரி... சரி... நான் அந்த பொண்ணுகிட்ட பேசிட்டு அப்பறம் ஏன் முடிவ சொல்லுறேன்" என்று சொல்லி விட்டு விட்ட தன் வேலையை பார்க்க சென்று விட்டார்.

கீர்த்தி குடும்பத்தில் நடந்ததை தனது தாயிடம் சொல்ல சிறிது தயங்கினான் தேவ். கீர்த்தியின் குடும்ப உறுப்பினர்களும் தனது தாயும் ஒரே தலைமுறையை சேர்ந்தவர்கள் தான். பெரும்பாலும் அவர்களுக்கு பொதுவான கருத்துக்கள்... இப்படி தான் இருக்க வேண்டும் அப்படி தான் இருக்க வேண்டும் என்பது போல இருக்கும். அதே போல தன் தாயும் கீர்த்தியை தவறாக நினைத்து விட்டால் என்ன செய்வது என்று எண்ணி தான் சொல்லாமல் மறைத்தான். ஆனால் அவனால் அது முடியவில்லை. மனம் அமைதி பெறவில்லை. சொல்லி இருக்கலாமோ என்றே எண்ணி கொண்டு இருந்தான்.

சரி முதலில் கீர்த்தியை அம்மாவுக்கு அறிமுகப்படுத்தலாம். அப்பறம் இத பத்தி சொல்லிக்கலாம் என்று முடிவு எடுத்து அடுத்த இரண்டு நாளில் இருவரையும் சந்திக்க வைத்தான். கூடவே மதனின் அன்னையும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படியாப்பட்ட சந்திப்பு ஆனாலும் அது பெரும்பாலும் ஒன்று அது காலை/மதியம்/இரவு உணவு பொழுதாகவோ அல்லது மாலை நேர சிற்றுண்டி பொழுதாகவோ தான் இருக்கும்.

அப்படி இந்த சந்திப்புக்கு அவர்கள் தேர்ந்தெடுத்த நேரம் மாலை நேர சிற்றுண்டி பொழுது தான்.

"வணக்கம் மா" என்று பொதுவாய் இருவரையும் பார்த்து சொன்னாள் கீர்த்தி பிரியம்வதா.

"வா மா... உட்காரு. நான் தான் அமிரோட அம்மா... அப்பறம் இவங்க அவனுக்கு அத்த... மதனோட அம்மா" - அம்பிகா.

அவளுக்கு மதனை தெரியும் என்பதால் அதையும் சேர்த்து சொல்லி விட்டார் அம்பிகா. மேலும் மதனுக்கு பார்த்து இருக்கும் பெண் சங்கவி இவள் அறை தோழி என்பதுவும் இவர்களுக்கு தெரியும். பெயரை கேள்வி பட்டவர்கள் பார்க்கும் வாய்ப்பு இப்போது தான் கிட்டியது.

"என்ன படிச்சி இருக்க??" - மதன் அம்மா.

"அட நம்ம நாட்டுல முக்கால்வாசி பேரு படிச்ச படிப்பு தான் மா. பொறியியல்" - சன்ன சிரிப்புடன் கீர்த்தி.

அவர்களும் சிரிப்புடன், "அதுவும் சரிதான். இவங்க எல்லாம் படிக்கறனால இன்ஜீனியரிங் காலேஜ் கட்டறாங்களா?? இல்ல நிறைய காலேஜ் கட்டி வச்சி இருக்கறதால இவங்க எல்லாம் படிக்கறாங்களா??னு தெரில" என்று கூறினார்கள்.

அப்படியே சில நேர பேச்சு போக, "உங்க வீட்டுல வந்து நாங்க பேசவா??" என்று கேட்டார் மதனின் அம்மா.

"இல்ல மா. இது சரி வராதுனு நான் தேவ்கிட்டயே சொல்லிட்டேன் மா" என்றாள் கீர்த்தி.

"நீ புடிச்சி இருக்குனு சொன்னதா அமிர் சொன்னான்!!" என்று சந்தேகமாக அம்பிகா கேட்க, "அமிர்??" என்று கேள்வியாக கீர்த்தி பார்த்தாள்.

முன்னாடி அவர் அமிர் என்று பெயரை பயன்படுத்தியதை அவள் கவனிக்கவில்லை. அம்மா அத்தை என்ற பதமே முதன்மை பெற்று அவளது மூளையில் பதிந்து இருந்தது. அப்படி கவனித்து இருந்தால் இந்த 'கேள்வி பார்வை'க்கு வேலை இல்லாமல் போய் இருக்கும்.

"அது தேவ் தான். வீட்டுல அமிர்னு தான் கூப்பிடறது. அவங்க தாத்தா பேரு தேவ்னு வரும். அதான்" என்று சொல்லி விட்டு அவள் பதிலை எதிர்பார்த்தார்.

"எங்க வீட்டுல ஒத்துக்க மாட்டாங்க மா. ஏற்கனவே என் மேல கோவமா இருந்தாங்க. நான் இங்க வேலைக்கு வந்தது இன்னும் கோவம் வந்து இருக்கும்" என்று கூறினாள் கீர்த்தி.

"எல்லாம் எப்படி மா... உடனே ஏத்துப்பாங்க நம்ம தான் பேசி புரிய வைக்கனும். மதன் கல்யாணம் முடிஞ்சதும் நாங்க வந்து பேசறோம்" என்று கூறினார் மதன் அம்மா.

"இல்ல மா... அது வந்து" என்று கீர்த்தி கூற அதை எல்லாம் அவர்கள் கண்டு கொள்ளவில்லை.

"எப்படி மா வந்த?? இங்க இருந்து உன் வீட்டுக்கு போக தூரமா?? நாங்க உன்ன விட்டுட்டு போகவா??" என்று முன்பு பேசியதை விட்டு அடுத்த பேச்சுக்கு தாவினர்.

நடுவில் புகுந்து சம்மந்தம் இல்லாமல் முதலில் பேசியதற்கு எப்படி மறுப்பு சொல்வது என புரியாமல், "பக்கம் தான் மா. நான் போய்ப்பேன்" என்று கூறி விட்டாள்.

அவர்கள் சென்றவுடன் தேவ்வை தான் மனதுக்குள் திட்டினாள்... இன்று மாலை அழைத்து, "ஏய்!! அம்மா உன்ன பாக்கனும் சொன்னாங்க... ஈவ்னிங் அந்த ரெஸ்டாரண்ட் போய்டு..." என்றவுடன் அழைப்பை துண்டித்து விட்டான்.

இங்கே வந்தால் அவர் வந்தால் அவர் கல்யாணத்தை பத்தி பேசுவார் என்று அவள் எண்ணவில்லை. தான் யோசித்து இருக்க வேண்டுமோ... தேவ் அம்மா ஏன் தன்னை பார்க்க வேண்டும் என்று கூறினார் என்று. அவன் காதலை வீட்டில் சொல்லி இருக்கக்கூடும் என்று வள் எண்ணவில்லை.

சரி எப்படி இருந்தாலும், தன்னை பற்றி தெரிந்தால் இவருக்கும் என்னை புடிக்காமல் போய் விடும் என்று நினைத்து கொண்டாள்.

ஆனால் அவளுக்கு எங்கே தெரிய போகிறது... நேற்றே, தேவ் தன் தாயிடம், அவளை ஒரு மூன்றாம் பாலாய் வைத்து அனைத்தையும் கூறி விட்டான் என்றும், அதற்கு அவர் அவர் நடுநிலையாய் ஒரு நீதிபதியாய் தனது தீர்ப்பை கூறி விட்டார் என்றும்.

பின்னர் சொல்லலாம் என்று தான் நினைத்து இருந்தான் தேவ். ஆனால் தன் தாயிடம் அனைத்திற்கும் தீர்வு இருக்கும் என்பது காந்தம் போல் தேவ்வின் மனதில் ஒட்டி கொண்ட நம்பிக்கை. அதனால் கீர்த்தியை பார்க்கும் முன்னே தன் தாயிடம் அனைத்தையும் கூறி பதிலையும் பெற்று கொண்டான்.

சூழ்நிலை எவ்வாறு இருந்து இருக்கும்... அந்த நிலைமையில் எல்லோரின் எண்ணமும் எவ்வாறு இருந்து இருக்கும் என்றும் தனது தாயின் வாயிலாக கண்டு கொண்டவன், அடுத்து கீர்த்தியின் வீட்டை நோக்கிய தனது பயணத்தை உறுதி செய்தான். அவனுக்கும் அவன் தாய்க்கும் இருக்கும் ஒரே ஒரு சந்தேகம் சரவணாவை பற்றியது தான்... அவன் எப்படி பட்டவன் என்று!!!. அதை சரவணாவிடம் பேசும் போது தான் புரிந்து கொள்ள முடியும் என்று எண்ணி கொண்டான்.

அம்பிகாவும் தேவ்வை வைத்து கொண்டே தனது கணவரிடம் அவனது காதலை பற்றி கூறி விட்டார். பத்து நிமிட பெண் பார்க்கும் படலத்தில் முடிவு செய்வதை போல முப்பது நிமிடம் அவளை பார்த்து இருக்கிறார். கணிக்காமல் இருப்பாரா அவளை... மேலும் அவளது கடந்த காலம் வேறு தெரிந்து இருக்க சொல்லவும் வேண்டுமா??!!. நந்தகோபாலன் சம்மதமும் கிடைத்து விட்டது அமிருக்கு.

அடுத்து அலுவலகத்தில் இவனுக்கு என்று ஒதுக்கி இருந்த வேலைகளை ஐந்து நாட்களில் மடமடவென முடித்து கொடுத்து விட்டான். அதில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும் அதை கௌதம் சமாளித்து கொள்வான் என்ற நிம்மதியுடன் இதோ சரவணாவின் வீட்டு வாசலில் சரவண வேலின் மனைவி தமிழரசியின் முன் நிற்கிறான்.

கொடுப்பாள்...

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே...

"உன்னில் இடம் கொடுப்பாயா??" - கருத்து திரி

நன்றி!!!

இங்ஙனம்
திரா ஆனந்த் 🍀
 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் தம்பிக்கு அக்சிடென்ட் ஆகி இருந்துச்சி. அதான் கதைய தொடர்ந்து பதிவு பண்ண முடியல. இனி தொடர்ந்து வரும் தோழமைகளே. காத்திருப்புக்கு நன்றிகள் பற்பல....
 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இடம் 21

தேவ்வின் தாயையும் அத்தையும் சந்தித்து வந்ததில் இருந்து கீர்த்தி அவனிடம் சொல்லி, அவனது தாயிடம் கீர்த்தி - தேவ்வின் திருமணம் சாத்தியமில்லை என்று சொல்லுமாறு கூற வேண்டும் என்று இருந்தாள். ஆனால் அவனிடம் அவளால் அதை கூற தான் முடியவில்லை. ஏனென்றால் அவன் தான் ஒரு வாரத்தில் கீர்த்தியின் ஊருக்கு செல்ல இருப்பதால் பயங்கர பிஸியாக இருந்தேன்.

உதாரணமாக ஒரு தொலைபேசி உரையாடல்.

"தேவ்" - கீர்த்தி.

"சொல்லுடா கீர்த்து" - தேவ்.

"சாப்டீங்களா??" - கீர்த்தி.

"ஆன்... அதெல்லாம். நீ சாப்டயா டா??" - தேவ்.

"நானும் சாப்பிட்டேன்" - கீர்த்தி.

"சரி. கீர்த்து என்ன பண்ணுறாங்க??" - தேவ்.

"ஒன்னும் பண்ணல. சும்மா தான் இருக்கா!!!. நீங்க என்ன பண்ணுறீங்க தேவ்??" - கீர்த்தி.

"கொஞ்சம் வேல... அதான் பாத்துட்டு இருக்கேன்" - தேவ்.

"ஓஓஓ... அப்ப ப்ரீ ஆகிட்டு பேசறீங்களா??. ரொம்ப பிஸியா?" - கீர்த்தி.

"பரவாயில்ல நீ பேசுடா. அடுத்த வாரம் ஊருக்கு போறேன்ல. அதான் இதெல்லாம் முடிச்சிடலாம்னு சீக்கிரமா பண்ணிட்டு இருக்கேன். வெயிட் பண்ணி பேசனும்னா நீ இரண்டு வாரம் கழிச்சி தான் பேச முடியும். பரவாயில்லையா??" - தேவ்.

"சரி... அப்படி என்ன அவசரமான வேல அது... அடுத்த வாரத்துல பண்ண வேண்டி இருக்கு. இவ்ளோ சீக்கிரமா எல்லா வேலையையும் முடிக்கற அளவுக்கு??" - கீர்த்தி.

"அது ரொம்ப முக்கியமான வேல... முடிஞ்சதும் சொல்லுறேன். உன்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்ல போறேன்" - தேவ்.

தேவ் அவ்வாறு சொன்னது மகிழ்வாய் இருந்தாலும், எதை பற்றி பேச இந்த அழைப்பு என்பது நினைவு வந்து, அவளை மகிழ்ச்சிக்கு 144 தடை உத்தரவு விதித்தது. அதற்கு பணிந்து அவளது மகிழ்ச்சியும் வெளி வராமல் உள்ளேயே அடங்கி விட்டது.

"ம்ம்... சரி" என்றவள், மேலும் தொடர்ந்து, "வந்து... தேவ் உங்க அம்மா உங்ககிட்ட என்ன பத்தி எதுனா பேசுனாங்களா??" என்று கேட்டாள்.

அவனிடம் இருந்து எந்த மறுமொழியும் வரவில்லை.

அதனால் கீர்த்தியே தொடர்ந்து, "அவங்க நினைக்கிறது நடக்காதுனு அவங்ககிட்ட சொல்லறீங்களா தேவ்!!!. அவங்க ஆசையை வளத்துக்க போறாங்க" என்று கூறினாள் கீர்த்தி.

அப்போதும் அவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

"தேவ்..." ஒரு சில நொடிகள் இடைவெளி விட்டு மீண்டும் "தேவ்" என்று அழைத்தாள் கீர்த்தி.

தனது காதில் இருந்து அலைபேசியை எடுத்து பார்த்தாள்... 02:12 என்று இருந்த நொடிகள் அதிகரித்து கால் இன்னும் தொடர்பில் இருப்பதை உறுதி செய்தது... கட் ஆகவில்லை. பிறகு ஏன் அவன் பேசவில்லை. நான் சொன்னது அவனுக்கு பிடிக்கவில்லையோ!!என்று எண்ணி கொண்டு மீண்டும் அவனது பெயரை அழைத்தாள்.

"ஆன்... ஆன்... சொல்லுடா கீர்த்து. ஒன்னு கேட்டாங்க அதுக்கு பதில் அனுப்பிட்டு இருந்தேன். என்ன சொல்லிட்டு இருந்த??" என்று கேட்டான்.

"ஒன்னும் இல்ல தேவ். நீங்க உங்க வேலய பாருங்க. நான் அப்பறம் பேசறேன்" என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தாள்.

இவ்வாறு தான் அந்த ஒரு வாரமும் சென்றது. அவனிடம் மற்ற செயல்களை பேசும் நன்றாக இருக்கும் அவன்... கல்யாணத்தை பற்றி பேசும் போது மட்டும் வேலையாகி விடுவான்.

அதை அவன் வேண்டும் என்றே செய்கிறானா?? இல்லை உண்மையில் வேலை வந்து விடுகிறதா?? என்று அவளுக்கு புரியவில்லை.

ஆனால் எனக்கும் இந்த சந்தேகம் இருக்கு. கீர்த்தியிடம் பொய்யான வாக்குறுதி... அதாவது தனது தாயிடம் பேசி கல்யாணம் பற்றிய பேச்சை நிறுத்துகிறேன் என்று சும்மா கூட சொல்ல விருப்பம் இல்லாமல் தான் அவன் தவிர்க்கிறான் என்று... பார்ப்போம்.

இன்று...

தேவ் ஊருக்கு சென்ற பின், கீர்த்தி தன் அலுவலகத்தில் வேலை பார்த்து கொண்டு இருந்தாள்.

புதிதாக வேலைக்கு எடுத்த இரண்டு பேரில் ஒருவருக்கு அவள் தான் மென்டர். என்ன செய்ய வேண்டும்?? என்ன செய்ய கூடாது?? என்று சொல்லி கொடுத்து விட்டு, ஒரு மிக சிறிய டாஸ்க்கையும் அசைன் செய்தாள்.

மதிய உணவு இடைவேளையின் போது, மிதுன், கவி மற்றும் கீர்த்தி ஒரு மேடையில் அமர்ந்து உண்டு கொண்டு இருந்தனர்.

மித்து, "கல்யாணத்துக்கு இன்னும் மூணு வாரம் தான் இருக்கு. எப்ப இருந்து லீவ் போடற??" என்று கேட்டான்.

கவி, "கல்யாணத்துக்கு ஒரு மூணு முன்னாடி இருந்து, கல்யாணம் முடிஞ்சி ஒரு ஒரு வாரம் லீவ் போடறேன். கிட்டதட்ட மூணு வாரம் வரும்" என்று கூறினாள்.

"அடேசாமி... மூணு வாரம்லாம் லீவ் போட விட்டுட்டாங்களா உங்க டீம்ல!!" என்று ஆச்சரியமாக கேட்டாள் கீர்த்தி.

"ம்ம்... கொடுத்துட்டாங்க" என்று தனது டீமை நினைத்து அல்ப்ப பெருமைப்பட்டு கொண்டு ஆமோதித்தாள் கவி.

"ஏய் கவி!!! லாங் லீவ் எடுத்தா சனி ஞாயிறு கூட லீவ் கணக்கில் எடுத்துப்பாங்க. அதனால முடிஞ்சா கல்யாணம் முடிஞ்சி வர ஒரு நாள் வெள்ளி கிழமை போல வந்துட்டு போ கவி" என்று சொன்னான் மித்து.

"ஓஓ... பாக்கறேன் மித்து. முடிஞ்சா வந்துட்டு போறேன்" என்றாள் கவி.

"ஏய் கீரி குட்டி!!. கவி ரூம் வேக்கேட் பண்ணிட்டா நீ மட்டும் தான. அவ கிளம்புன அப்பறம் நீ தான் ரொம்ப கடினப்படனும்ல சோத்துக்கு" கிண்டலான சிரிப்புடன் கேட்டான் மித்து.

"ம்ம்ம்... அதுக்கு நான் இனிமே காலைல விரதம் இருக்கலாம்னு நினைக்கறேன். எனக்கு நல்லா சமைக்க தெரிஞ்ச ஹவுஸ் மேட்டா வரணும்னு. அப்பறம் மதியமும் நைட்டும் இங்க ஆபிஸ் கேன்டீன்லயே சாப்பிட்டு போய்டலாம் பாக்கறேன். ஒருத்திக்குனு மட்டும் என்ன சமைக்கறது??" சமாளிப்பாக கீர்த்தி.

"சமைக்க தெரியாததுக்கு எப்படி சமாளிக்குது பாரு..." கவி சொல்ல, "போடு" என்று மித்துவும் கவியும் ஹை ஃபை செய்தனர்.

கீர்த்தி அவர்களை பார்த்து முறைக்க, "சரி சரி... கிண்டல்லாம் அப்பறம்... யார்னா ரூமுக்கு வரேன் சொல்லி இருக்காங்களா??. முடிஞ்ச வரை கவி கிளம்பறத்துக்குள்ள வர மாறி இருந்தா நல்லா இருக்கும். நீ தனியா இருக்கனும் இல்லனா" என்று கேட்டான் கீர்த்தியிடம்.

"இன்னிக்கு தான் நம்ம ஆபிஸ் ப்ளாக்ல போடனும் மித்து. பாக்கலாம். கவிக்கா போகும் போது அவங்க அட்வான்ஸ் அமொன்ட் கொடுத்து அனுப்பனும். யாருனா வந்துட்டாங்கனா அவங்க கிட்ட வாங்கி கவிக்கா கிட்ட அப்பயே கொடுத்துடலாம். இல்லனா நா கொடுத்துட்டு அப்பறம் வர புது ஹவுஸ் மேட் கிட்ட வாங்கிக்கலாம்" என்று சொன்னாள் கீர்த்தி.

"ஒன்னும் அவசரம் இல்ல கீர்த்திமா. நான் லீவ்லாம் முடிஞ்சி வந்து கூட வாங்கிக்கறேன். அதுக்குன்னு நீ அவசர படாத நல்லவங்களா பாத்து வச்சிக்கலாம். லேட் ஆனாலும் பரவாயில்ல. அது வரை நம்ம பக்கத்து வீட்டுல எங்க டீம் ஒரு பொண்ணு இருக்கு. அவங்க கூட இருந்துக்கோ நைட் மட்டும்" என்று சொன்னாள் கவி.

"ம்ம்ம்... சரிக்கா பாக்கறேன்" என்று ஒப்பு கொண்டாள் கீர்த்தி.

"நம்ம டீம்க்கு புதுசா ஒரு ஜூனியர் பொண்ணு வந்து இருக்குல்ல... அந்த பொண்ணு எங்க ஸ்டே பண்ணி இருக்காம்??" - மித்து.

"அந்த பொண்ணு நம்ம ஆபிஸ் பக்கத்துலயே ஒரு பிஜீல. ஏன் கேக்கற??" - கீர்த்தி.

"அந்த பொண்ண உன் வீட்டுக்கு வர சொல்லலாம்னு தான்" - மித்து.

"ஹாஹா... வாய்ப்பில்ல ராஜா" கவி தான் சிரிப்புடன்.

"ஆமா மித்து. வர மாட்டாங்க. நம்ம ப்ளாக்லயே போடுவோம். வரவங்க வரட்டும்" என்றாள் கீர்த்தி.

"ஏன் வர மாட்டாங்க??" குழப்பமாக கேட்டான் மித்து.

"அது அப்படி தான். வர மாட்டாங்கனா வர மாட்டாங்க தான்" மீண்டும் கீர்த்தி.

"ஏன்??" உண்மையிலே புரியாமல் தான் கேட்டான் மித்து.

"உனக்கு அதெல்லாம் புரியாது காமாட்சி??" சிரிப்புடன் கவி விசுவின் வசனத்தை அடித்து விட, கீர்த்தி பெரிதாக சிரித்தாள்.

"ஏய்!! என்னங்கடி... என்னயே கிண்டல் பண்ணி சிரிக்கறீங்களா!!" என்று அவர்கள் இருவரின் தலையிலும் கொட்ட, இவர்கள் அவனை கிள்ள என்று அந்த நாளை கழித்தனர்.

மாலை கீர்த்தி தேவ்வுக்கு அழைக்க அவன் எடுக்கவில்லை. அவன் தான் டிராவலில் இருந்தான். இரண்டு முறை அழைத்து பார்த்து விட்டு, விட்டு விட்டாள்.

இங்கு கீர்த்தியின் வீட்டில்...

சரவண வேலின் வீட்டில் நுழைந்த தேவ், அங்கே ஈர தலையுடன் போராடி கொண்டு இருந்த தமிழரசியை தான் முதலில் பார்த்தான். பார்த்ததும் அவளது வயது மற்றும் கழுத்தில் இருக்கும் தாலியை கொண்டு புரிந்து கொண்டான் அவள் யாரென்று. அவள் தான் தமிழரசி என்றும், சரவண வேலின் மனைவி என்றும்.

"வணக்கம் சிஸ்டர்" - தேவ்.

"வணக்கம். வாங்க.." என்று சொல்லி அங்கு இருந்த திண்ணையில் மர சொல்லி விட்டு உள்ளே சென்று ஒரு சொம்பில் நீர் எடுத்து வந்து கொடுத்தாள். சம்பர்தாயத்திற்காக அதை வாங்கி ஒரு முழுங்கு குடித்தான்.

epi21.jpg

"நீங்க?? யாரை பாக்க வந்து இருக்கீங்க??" என்று கேட்டாள் தமிழ்.

"நான் தேவாமிர்தன்ங்க. இங்க சரவண வேல்னு..." என்று இழுக்க, "ஆமாங்க. இந்த வீட்டுல தான் இருக்காரு" என்று சொன்னாள்.

அவள் தன் கணவன் என்று சொல்லாததை குறித்து கொண்டு, "அவரை பாக்க தான் வந்தேன்" என்றான் தேவ்.

"அவரு இப்ப வெளியே போய் இருக்காரு. அவரு வர சாயந்தரம் ஆகிடும்" என்று சொன்னவள், "நீங்க எங்க தங்கி இருக்கீங்க??. உங்க நம்பர் கொடுத்துட்டு போங்க. அவரு வந்ததும் உங்களுக்கு கூப்பிட சொல்லுறேன்" என்றாள்.

"சரிங்க. இங்க பக்கத்துல தான். இந்த ஹோட்டலில் தங்கி இருக்கேன்" என்று சொன்னவன், "அப்பறம் தேவாமிர்தன்னு மட்டும் சொன்னா அவருக்கு தெரியாது. அதனால சென்னையில இருந்து வந்து இருக்காங்க. உங்ககிட்ட முக்கியமா ஒன்னு பேசனுமாம்னு சொல்லுங்க சிஸ்டர்" என்று கேட்டு கொண்டான்.

"சரிங்க" என்று சொன்னவள், ஒரு வித யோசனையுடனே தலையை ஆமோதிப்பாக அசைத்தாள்.

"இந்தாங்க... இதுல என் நம்பர் இருக்கு. இதுக்கு கால் பண்ண சொல்லுங்க" என்று தனது விசிடிங் கார்ட்டை கொடுத்தான் தேவ்.

"ம்ம்" என்று சின்ன ஒலியை எழுப்பி விட்டு, அந்த கார்ட்டை வாங்கி கொண்டாள் தமிழ்.

"சரிங்க வரேன்" என்று புறப்பட்டு விட்டான் தேவ்.

அவன் சென்றதும் இவரு யாராய் இருப்பாரு என்று யோசனையிலே அன்றைய பொழுதை கழித்தாள்.

மாலை நெருங்க, வெளியே சென்ற சரவணா வந்து விடுவான் என்று அவனுக்கு தேவையான சிற்றுண்டியை செய்ய தயாரானாள் தமிழ்.

ஆன்... இது சொல்லவில்லை பாருங்களேன்... வீட்டில் இருக்கும் அனைவரும் வேண்டுதல் என்ற பெயரில் கோவிலுக்கு சென்று உள்ளனர் வேல இருக்கு என்ற பெயரில் சரவணாவைவும், அவனுக்கு துணைக்கு என்ற பெயரில் தமிழையும் மட்டும் வி்ட்டு விட்டு.

தனியாய் இருந்தாலாவது பேசவாவது செய்வார்களா என்ற நம்பிக்கையில்!!!.

ஆமாம் இந்த தமிழுக்கும், சரவணாவுக்கும் என்ன பிரச்சனை யாரால் இருக்கும்??. இன்னிக்கு வரட்டும் அந்த சரவணா. அவங்க இரண்டு பேரும் பேசறத வச்சி கண்டு புடிச்சிடலாம்.

கொடுப்பாள்...

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே

"உன்னில் இடம் கொடுப்பாயா??" - கருத்து திரி

நன்றி

இங்ஙனம்
திரா ஆனந்த் 🍀
 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இடம் 22




மாலை பள்ளி வேளை முடிந்து மணி அடித்தவுடன் உற்சாகமாய் வீட்டிற்கு செல்லும் குழந்தைகளின் மனநிலைக்கு எதிரான மன நிலையில், தனது வேலைகளை எல்லாம் முடித்து விட்டு களைப்பாய் வீட்டின் உள்ளே வந்து சோர்வாய் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான் சரவண வேல்.

அவன் வந்ததை பார்த்து விட்டு எதுவும் பேசாமல், மின்விசிறியை போட்டு விட்டு ஒரு தட்டில் தான் செய்து வைத்த சிற்றுண்டியையும், ஒரு தம்ளரில் தேனீரையும் கொண்டு வந்து வைத்தாள் தமிழ்.

இந்த தேனீரும், காபியும் நமது நாட்டில் இன்றியமையாத ஒரு உணவு பொருளாய் மாறி விட்டது. வெளியே சென்று வந்தால் டீ, யாராவது வீட்டிற்கு வருகிறார்களா டீ, காலை எழுந்ததும் காபி, வெளியே கடைக்கு சென்றால் காபி, யாரின் வீட்டிற்கு சென்றால் அங்கேயும் டீ என பல விதங்களில் பங்கு வகிக்கிறது இந்த டீ மற்றும் காபி. இந்தியாவின் தேசிய பாணம் "டீ" என்று தான் உள்ளது. இந்த வாக்கியத்தை கூட சில இடங்களில் கண்டேன். "Everytime is a tea time in India". (இந்தியாவில் எல்லா நேரமும் தேநீர் நேரம்தான்).

இந்த "டீ" என்ற பாணம் முதன் முதலில் சீனாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. அதே போல் காபி 1671ல் எழுதப்பட்ட கதைகள் மூலம் முதன்முதலில் 9 ஆம் நூற்றாண்டின் எத்தியோப்பியன் ஆடு மேய்ப்பவர் கால்டி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது எனவும் கூறப்படுகிறது.

2020ல் மட்டும் கிட்டதட்ட 1.10 மில்லியன் டன் டீ உட்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா தயாரித்ததில் 80% இந்தியாவாலே உட்கொள்ளப்பட்டது.

இந்தியாவில் டீ அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம் "அசாம்" உட்கொள்ளும் மாநிலம் "குஜராத்" மற்றும் காபி அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம் "கர்நாடகா" உட்கொள்வது தென் இந்தியாவாக உள்ளது. அதில் தமிழ் நாடு முதல் இடத்தில் இருக்கிறது. (2009ஆம் ஆண்டின் படி).

இதை பற்றி பேசினால் போய் கொண்டே இருக்கும். உங்களுக்கே தெரியும் எங்கே இருந்து இதை எல்லாம் தெரிந்து கொண்டு இருப்பேன் என்று. அதனால் மீதத்தை உங்களது கைகளுக்கும் கண்களுக்கும் விட்டு விட்டு இப்போது நம்ம கதைக்கு போகலாம்.

அவன் உண்டு முடிக்கும் வரை அமைதியாய் இருந்தவள், அவனிடம் பேச சென்றாள்.

இவ என்ன நம்ம கிட்ட வரா... இவ நம்ம கிட்ட பேசவே மாட்டாளே... என்னவா இருக்கும் என்று மனதில் நினைத்தவன், கண்களை அவளின் மேல் வைத்தவன், வாயை திறந்து எதுவும் கேட்கவில்லை.

'அப்படியே வாய திறந்து பேசிட்டா வாயில இருக்க முத்து எல்லாம் கொட்டிடும்... நாங்க எடுத்துட்டு போய் வித்து விலை பேசி தமிழ்நாட்டையே தமிழ் பேருக்கு மாத்தி வாங்கிடுவோம் பாரு... நீ பேசனும்னு இங்க யாரும் காத்துட்டு இருக்கல... உன்கிட்ட பேசவே எனக்கு விருப்பம் இல்ல... வேற வழி இல்லாம தான் உன் முன்னாடி வந்து நிக்கறேன்' என்று இதை அனைத்தையும் மனதில் நினைத்து கொண்டு வெளியே, "உங்கள பாக்க இன்னிக்கு ஒருத்தர் வந்து இருந்தாரு" என்றாள்.

"யாரு??" என்று சரவணா கேட்க, "தேவாமிர்தன்னு சொன்னாங்க" என்று தமிழ் கூறினாள்.

"அப்படி யாரையும் எனக்கு தெரியாதே!!" என்று சரவணா யோசனையுடன் சொல்ல, "ஆமா... அதையும் அவரே சொன்னாரு" என்று தமிழ் கூறினாள்.

"எதையும்??" - சரவணா.

"அதான் அவரு பேர மட்டும் சொன்னா உங்களுக்கு யாருனு தெரியாதுனு" - தமிழ்.

"அப்பறம்... எப்படி சொன்னா தெரியுமாம்??" சிரிப்புடன் அவளை பார்த்து கொண்டே கேட்டான் சரவணா. ஏன் எல்லாத்தையும் ஒன்னா சொல்ல முடியாதாக்கும் உன்னால என்ற நினைப்புடன்.

"எப்படி சொன்னா தெரியும்னு சொல்லல. ஆனா சென்னையில இருந்து வந்து இருக்கேன். முக்கியமா பேசனும்னு சொல்ல சொன்னாங்க" என்று தேவ் சொன்னதை சொல்லி முடித்தாள்.

"ம்ம்" என்று அவளிடம் சொன்னவன், 'ஒருவேளை பிரியா சம்மந்தமா எதாவது இருக்குமோ!!' என்று எண்ணியவன், தமிழிடம், "இப்ப அவரு எங்க??" என்று கேட்டான்.

"அவரு இங்க இருக்க இந்த ஹோட்டலில் தான் தங்கி இருக்காங்களாம். இந்த கார்ட கொடுத்தாங்க. உங்கள போன் போட சொன்னாங்க" என்று சொல்லி அந்த விசிட்டிங் கார்டை அவனிடம் கொடுத்து விட்டு, அவன் குடித்து விட்டு வைத்த தம்ளரையும், சிற்றுண்டி தட்டையும் எடுத்து கொண்டு உள்ளே சென்றாள்.

அந்த விசிடிங் கார்டில் தேவாமிர்தன், பேஷன் ப்ள்டர்ஸ் என்று இருந்தது. கூடவே அவனது தொலைபேசி எண்ணும் அதில் இருந்தது. புரிந்து கொண்டான். இது கண்டிப்பாக பிரியா சம்பந்தப்பட்ட காரியம் தான் என்று. இல்லை என்றால் தனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே!!!. அவனுக்கு தான் தெரியுமே மிதுன் இந்த கம்பெனி உதவியுடன் தான் வீடு கட்ட உள்ளான் என்றும் அவனுக்கு முன்னதாகவே தெரிந்து இருந்தது.

தேவ்வின் எண்ணுக்கு சரவணா அழைக்க அது பிஸியாக இருந்தது. அவன் அப்போது தான் தன் தாயிடம் பேசி கொண்டு இருந்தான்.

"ஆமா மா. ஹோட்டலுக்கு வந்துட்டேன்" - தேவ்.

...

"இல்லமா... இன்னும் பாக்கல. வெளியே போய் இருக்காங்களாம். அவங்க வெய்ப் தான் இருந்தாங்க" - தேவ்.

....

"எனக்கு கூப்பிட சொல்லி நம்பர் கொடுத்துட்டு தான் வந்து இருக்கேன் மா" - தேவ்.

....

"ம்ம்ம்... சரிமா" - தேவ்.

....

"ஓகே மா. வச்சறேன்" என்று அந்த அழைப்பை துண்டித்தான்.

அதற்காகவே காத்திருந்தது போல் உடனே அவனது மொபைல் இந்த இடைப்பட்ட நேரத்தில் அவனுக்கு வந்து இருந்த செய்திகளை எல்லாம் நோட்டிஃப்கேஷன் வாயிலாக சத்தம் இட்டு தெரிவித்தது. அதில் வந்த செய்திகளை பார்த்து கொண்டு இருக்கும் போது தெரியாத எண்ணில் இருந்து வந்த ஒரு தவறிய அழைப்பு ஒன்றும் இருந்தது.

இது சரவணாவாக இருக்க அதிகளவு வாய்ப்பு இருப்பதால், உடனடியாக அதற்கு அழைப்பை மேற்கொண்டான்.

தேவ் அழைப்பை எடுக்கவில்லை என்றதும், குளித்து விட்டு வந்து வேறு உடை மாற்றி கொண்டு இருந்தான் சரவணா. ரிங் முடியும் தருவாயில் எடுத்து காதில் வைத்து, "ஹலோ" என்றான் சரவணா.

"ஹாய்... உங்ககிட்ட இருந்து கால் வந்து இருந்தது. நீங்க சரவண வேலா??" என்று சந்தேகமாக தான் கேட்டான் தேவ்.

"ஆமா தேவாமிர்தன். நீங்க என்கிட்ட எதோ முக்கியமா பேசனும்னு சொன்னதா என் மனைவி சொன்னாங்க. அதான்" என்று அலைப்பேசியை காதுக்கும் தோளுக்கும் இடையில் வைத்து அழுத்தி பிடித்து கொண்டு சட்டை பட்டனை போட்டு கொண்டே சொன்னான் சரவணா.

"ஆமாங்க... நம்ம நேரில் மீட் பண்ணி பேசலாமா??" தேவ் சிறிது தயக்கத்துடன் கேட்டான்.

"சரிங்க தேவாமிர்தன். நாளைக்கு இந்த இடத்துக்கு ஒரு 11 மணி வாக்குல வந்துடுங்க. நானும் என் நண்பனும் வந்துடுறோம்" என்று இடத்தையும் நேரத்தையும், கூடவே என் நண்பனும் என் கூட வருவான் என்ற தகவலையும் சேர்த்து சொன்னான் சரவணா.

"சரிங்க. நாளைக்கு பாக்கலாம். அப்பறம் நன்றிங்க என்ன செய்தினே தெரியாம நேரில் பாக்க ஒத்துகிட்டதுக்கு" என்று சொன்னான் தேவ்.

"எனக்கு ஒரு ஊகம் இருக்கு. பாக்கலாம் அது தானானு" என்று தற்போது மொபைலை தனது இடது கையால் பிடித்து கொண்டு பேசினான் சரவணா.

சின்ன சிரிப்புடன், "அதா தான் இருக்கும்னு நானும் நினைக்கிறேன்ங்க" என்ற தேவ், "சரிங்க நாளைக்கு பாக்கலாம். பாய்" என்று சொல்லி, சரவணாவின் ஒப்புதலான "ம்ம்" வந்ததும் அழைப்பை துண்டித்தான்.

அதன் பின் தன் வேலைகள் சிலவற்றை தனது மடிக்கணினி வழியாக முடித்தவன், இரவு உணவையும் ஆர்டர் செய்து உண்டான்.

அவன் உணவை முடிக்கவும் கீர்த்தி அழைப்பதற்கும் சரியாய் இருந்தது. அழைப்பை ஏற்று காதில் வைத்து கொண்டே கைகளை கழுவினான்.

"ஹலோ தேவ்" என்றாள் கீர்த்தி, அழைப்பு ஏற்கப்பட்டது என்று அறிந்தவுடன்.

"ஆன்... சொல்லுங்க மேடம்... என்ன நான் ஒரு ஹலோ சொல்ல முன்னவே நீங்களே சொல்லிட்டீங்க??. அவ்ளோ அவசரமா??" என்று இப்போது கைகளை அங்கே இருந்த சிறிய டவலில் துடைத்து கொண்டே கேட்டான்.

"எடுத்தும் ஹலோ சொல்லனும். நீங்க லேட் பண்ணா அந்த வாய்ப்பு ஆட்டோமேட்டிக்கா அடுத்தவங்களுக்கு போய்டும்" என்று கீர்த்தியும் பதிலுக்கு சொன்னாள்.

"போனை எடுத்ததும் ஹலோ சொல்லனும்னு ஒன்னும் அவசியம் இல்ல. இந்த 'ஹலோ' டெலிபோன் கண்டுபுடிச்ச கிரகாம் பெல் ஓட கேர்ள் ப்ரண்ட் பேராம். அவரு டெலிபோன் வழியாக முதல்ல பேசனது அவரு கேர்ள் ப்ரண்ட் 'மார்க்ரெட் ஹலோ' தானாம். அதனால எடுத்ததும் 'ஹலோ'னு அவரு சொன்னாராம். அப்பறம் அதுவே வழக்கம் ஆகிடுச்சாம்" என்று ஹலோவுக்குரிய விளக்கத்தை சொன்னான் தேவ்.

"ஏய் ஹலோ... அது உண்மைனாலும் அது மட்டும் காரணம் இல்ல... ஹலோ இஸ் எ நவுன்... அதாவது பெயர் சொல்... அடுத்த பக்கம் ஒருத்தர் இருக்காங்களா?? இல்லையா?? நம்ம பேசறத கவனிக்கறாங்களா??னு இல்ல என்ன கவனிங்கனு சொல்றதுக்கான ஒரு வார்த்தை... ஓகே??" என்று அவளும் சொல்லி ஒன்றும் இல்லாத விசயத்தை ஆராய்ந்து கொண்டு இருந்தார்கள்.

ஒரு வேளை எல்லா காதலர்களும் இப்படி தான் இருப்பார்களா??. என்ன பேசுவது என்று தெரியாமல் ஏதாவது ஒரு விசயத்தை பிடித்து கொண்டு அதை கொண்டு பேசிட்டு இருப்பாங்களோ?? என்னவோ போ...

அய்யய்யோ!!! காதலர்கள்னு சொல்லிட்டமே!!!. இது கீர்த்திக்கு தெரிஞ்சா அப்படி எல்லாம் இல்லனு சாதிப்பாளே!!!. சரி இதெல்லாம் நம்ம பேசிகிட்டது அவளுக்கு தெரிய வேண்டாம்.

"சரி சரி... விடு விடு... என்ன பண்ற?? சாப்பிட்டயா??" என்று உலகில் உள்ள அனைத்து ஆண்களை போலவும் தனக்கு பிடித்த பெண்ணிடம் அடங்கி போனான் தேவ்.

அதே போல் தான் கீர்த்தியும் உலகில் உள்ள அனைத்து பெண்களை போலவும் தனக்கான ஆண் என்றவனிடம் மட்டும் அடங்காமல் எகிறி கொண்டு இருந்தாள். அவனின் அடங்கிய பதில் வந்தவுடன், தானும் இறங்கி வந்து அடுத்த பேச்சிற்கு தாவினாள்.

"ஆன்... அதெல்லாம் சாப்பிட்டேன். நீங்க??" என்று கேட்டாள் கீர்த்தி.

"சாப்பிட்டேன்" - தேவ்.

"நீங்க போன வேல என்ன ஆச்சி?? முடிஞ்சதா??" - கீர்த்தி கேட்டாள்.

"இல்லடா... நாளைக்கு தள்ளி போய்டுச்சி" என்று தேவ் சொல்ல, "ஓஓ.. பரவாயில்ல விடு. உங்களுக்கு சாதகமா தான் நடக்கும்" என்று சொன்னாள்.

சின்ன சிரிப்புடன், "ஆமா... அப்படி தான் நடக்கும். நான நடக்க வைப்பேன்" என்று தேவ் உறுதியுடன் சொன்னான்.

அதன்பின மேலும் சில பல பேச்சிற்கு பின், இரவு வணக்கத்துடன் அந்த அலைப்பேசி அழைப்பை அணைத்து விட்டு, தங்களது படுக்கையில் படுத்து புரண்டு சிறிது நேரத்திற்கு பின்னே உறங்கினர் இருவரும்.

கொடுப்பாள்...

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே...

"உன்னில் இடம் கொடுப்பாயா??" - கருத்து திரி

நன்றி!!!

இங்ஙனம்
திரா ஆனந்த் 🍀
 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இடம் 23




சரவண வேல் சொல்லி இருந்த இடத்திற்கு பத்து நிமிடத்திற்கு முன்பே வந்து அமர்ந்து இருந்தான் தேவ்.

தேவ் வந்து அமர்ந்த சில நொடிகளில் சரவணா மற்றும் சுந்தர் தனி தனி வண்டிகளில் இரு வேறு திசையில் இருந்து வந்தனர். இருவரும் வண்டியை நிறுத்தி விட்டு, தேவ் அருகில் வந்து முதல் முறை பார்ப்பதால், "நீங்க தேவாமிர்தன்??" என்று கேட்டு உறுதி படுத்தி கொண்டனர்.

"நான் தான் சரவண வேல். இது என் நண்பன் சுந்தர்" என்று அறிமுகப்படுத்தி கொண்டான்.

அதன் பின் மூவரும் அங்கு இருந்த கல் மேடையில் அமர்ந்தனர். யார் பேச்சை ஆரம்பிப்பது என்று புரியாமல் சில நிமிடங்கள் அமைதியில் கழிந்தது.

மீண்டும் சரவணாவே, "சொல்லுங்க... ஏதோ முக்கியமான செய்தியை பத்தி பேசனும் சொன்னீங்க??" என்று கேட்டான்.

"இந்த நீங்க வாங்க போங்க எல்லாம் வேண்டாமே. நான் உங்களை விட சின்ன பையன் தான். என்னை தேவ்னே கூப்பிடுங்க" என்று சொல்லி அதற்கு சரவணாவின் சிரிப்புடன் கூடிய ஒப்புதலான தலையசைப்பை பெற்ற பின், "கீர்த்தியை பத்தி பேச தான் வந்தேன்" என்றான் தேவ்.

"ம்ம்ம்... சொல்லுங்க பிரியாவை பத்தி என்ன??" என்று அமைதியாய் கேட்டான் சரவணா.

"வந்து... நீங்க ஏன் கீர்த்தியை கண்டுக்கவே இல்ல. இப்ப அவ எப்படி இருக்கானு ஒன்னும் தெரிஞ்சிக்கல" என்று கேட்டான்.

"யார் சொன்னா?? இப்ப பிரியா இந்த கம்பெனில வேல பாக்குறா. இந்த இடத்தில தங்கி இருக்கா. அவ ப்ரெண்ட் பொண்ணுக்கு கூட இப்ப கல்யாணம் ஆக போகுது. அதனால புதுசா யாரையாவது அந்த ரூம்ல தங்க வைக்க தேடிட்டு இருக்காங்க" என்று தற்போது நடக்கும் காரியம் வரைக்கும் சொன்னான் சரவணா.

இதை சத்தியமாக தேவ் எதிர்பார்க்கவில்லை. கீர்த்தியை பற்றி என்றளவில் அவர் கணித்தது அவனுக்கு பெரிதாக தெரியவில்லை. ஆனால் இவ்வளவு விசயம் தெரிந்து இருக்கும் என்று எண்ணவில்லை என்பதை அவன் முக மாற்றத்தில் இருந்தே புரிந்து கொண்டார்கள்.

நானும் இப்படி தான் முத முத கேட்டுட்டு ஷாக் ஆனேன் என்று சுந்தர் மனதில் தேவ்வை பார்த்து சொல்லி கொண்டான்.

"அப்போ என்ன பத்தி தெரியுமா??" தயக்கமாகவே கேட்டான் தேவ்.

"ம்ம்ம்.... தெரியும். என்ன நான ப்ரெண்ட்னு நினைச்சேன். ஆனா இப்ப பாத்தா அப்படி இல்லனு தோணுது" வார்த்தைகள் சந்தேகமானதாக இருந்ததாலும் குரல் சரியாய் தான் சொல்கிறேன் என்று திடமாக ஒலித்தது.

"ம்ம்ம்" என்று தலையசைத்தவன், "எனக்கு கீர்த்தியை புடிச்சி இருக்கு. அவளுக்கும் தான். ஆனா எங்க கல்யாணம் நடக்காது. வீட்டுல யாரும் ஒத்துக்க மாட்டாங்க... முக்கியமா எங்க மாமானு சொன்னா!!. அவரு ஒத்துக்கிட்டா தான நம்ம கல்யாணம்ன்னா" என்றான் தேவ்.

'என்ன கீர்த்திக்கும் புடிச்சி இருக்கா??. எப்படி?. சரி... அப்பயும் ஏன் வீட்டுல ஒத்துக்க மாட்டாங்கனு சொன்னா?. அதிலயும் நான்??. நான் ஏன் ஒத்துக்க மாட்டேன். என்ன பத்தி அவளுக்கு தெரியாதா??. அவ மகிழ்ச்சி தான எங்களுக்கு எல்லாம் முக்கியம். ஒருவேளை இப்படி இருக்குமோ முதல்ல ஒருத்தரை புடிச்சி இருக்கு சொல்லிட்டு இப்ப வேற ஒருத்தங்கள புடிச்சி இருக்குனு சொல்லறதாலயோ!!?' என்று கொண்டு இருந்தான் சரவணா.

அவன் அமைதியை சிறிது நேரம் பொறுத்து கொண்ட தேவ் மீண்டும் அவனே, "நீங்க யோசிக்கறது புரியுது. நீங்க கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லியும் அவ உங்களை மறுத்தது உங்களுக்கு வருத்தமா தான் இருக்கும். ஆனா அவ நிலைமையில் இருந்து கொஞ்சம் யோசிச்சி பாத்த அவ பக்கம் இருக்க நியாயம் புரியும்" என்று மேலும் எடுத்து சொன்னான்.

சுந்தர் வரும் போதே எதுவும் பேச கூடாது. அவர்களை பேசுவதை கவனிக்க மட்டுமே வேண்டும் என்ற எண்ணத்தில் தான் வந்து இருந்தான். அதை அருமையாக கடைப்பிடித்தும் கொண்டு இருந்தான். ஆனால் இப்போது அது தகர்ந்தது.

"என்ன சொல்லறீங்க தேவ்?? எனக்கு புரியல!!. பிரியா மறுத்துட்டாளா??" என்று கேட்டான் வேக வேகமாக சரவணாவிற்கு முன்பே.

அவர்களை புரியாமல் பார்த்த தேவ், "ஆமா" என்று கூறி கொண்டே தலையை ஆட்டினான்.

"இல்லயே பிரியா சம்மதிச்சிட்டா. ஆனா சரவணா தான் சம்மதிக்கல. அதான் தமிழ கட்டி வச்சாங்க" என்று சுந்தர் சொல்ல, "இல்ல... கீர்த்தி என்கிட்ட என்ன சொன்னானா... மாமா சம்மதிச்சிட்டாங்கனு எல்லாரும் என்கிட்ட பேச வந்தாங்க. நான் முடியாதுனு சொல்லிட்டேன். அது தான் என் மேல எல்லாருக்கும் கோவம். மாமா கூட என்ன புரிஞ்சிக்கலனு சொன்னா" என்று தேவ் சொன்னான்.

"இதுல ஏதோ பெரிய குழப்பம் இருக்குனு நினைக்கறேன்" சுந்தர் யோசனையுடன் சொன்னான்.

தேவ் இன்னும் அறியா குழந்தை புரியா பாலகனாய் தான் இருந்தான். அவனுக்கு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று புரியவில்லை அதனால் தான்.

"எனக்கு புரியல.. இதுல என்ன குழப்பம்??. ஆமா நீங்க என்ன சொன்னீங்க??. இவரு சம்மதிக்கலனா.. ஆனா கீர்த்தி..." என்று இழுத்து அவனும் குழப்பத்தை புரிந்து கொண்டான்.

இப்போது எல்லாதையும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன், "நீங்க சொல்லுங்க... என்ன நடந்ததுனு உங்க பக்கம் இருந்து" என்று தேவ் கேட்டான் சரவணாவை நோக்கி.

"என் கல்யாணத்துக்கு நான் ரெடி ஆகிட்டு இருந்தேன். அப்போ திடீர்னு ஒரே சலசலப்பு சத்தம். என்னனு பாக்க வெளிய போனேன்" என்று சொல்லி கொண்டு இருந்தான் சரவணா.

சரவணா தனது அறையில் இருந்து வெளியே வர அங்கே அவனது தாய் மற்றும் அண்ணன் நின்று கொண்டு இருந்தனர்.

"என்ன மா?? என்ன ணா?? என்ன சத்தம் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு??" என்று கேட்டான்.

"அது வந்து..." சங்கர் இழுக்க, "நாசமா போறவ... இவ்ளோ நாள் அமைதியா இருந்துட்டு இப்ப ஓடி போய்ட்டாலாம் கன்னு" என்று சித்தம்மாள் பட்டென்று செய்தியை உரைத்தார்.

ஒரு நிமிடம் தன் காது அதன் பணியை சரியாய் தான் செய்கிறதா என்ற சந்தேகம் கொண்டான் சரவணா. ஏனோ தன் கல்யாணம் நின்று விட்டது என்பதை அவன் மனம் நம்பவில்லை.

முதலில் பவித்ராவின் தொலைபேசி எண் இவனுக்கு கிடைத்த போது, அவளுக்கு பேச அழைத்தான். அவள் இவன் கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்தாள். இவன் கேட்பதும் பொதுவான நல விசாரிப்புகளாகவே இருந்தது. இவனை பற்றி தெரிந்து கொள்ள அவள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அப்போது அது அவனுக்கு பெரிதாக தெரியவில்லை. கூச்ச சுபாவம் உள்ளவர்கள் போல... நாட்கள் சென்றால் சரி ஆகி விடும் என்று எண்ணி, தன் கல்யாணத்தை பற்றி சிந்தனையை திரும்பினான்.

ஆனால் அப்போதே யோசித்து, பேசி தீர்த்து இருக்க வேண்டுமோ என்று தற்போது எண்ணினான்.

எல்லோரும் போல இவனும் தன் கல்யாண வாழ்வை எண்ணி பல கற்பனைகள் வளர்த்து வைத்து இருந்தான். எல்லாம் பவித்ராவுடன் தான். அது இல்லை என்பதை அவனால் ஏற்று கொள்ள முடியவில்லை.

சிலர் இவனிடமே வந்து, பவித்ராவை பற்றி திட்டி இவனை நல்ல விதமாக கூட பேச... அது கூட அவன் காதில் விழவில்லை. அமைதியாய் மண மகன் அறையில் சென்று அமர்ந்து விட்டான்.

அறையில் இருந்த நாற்காலியில் தலையை பின்னால் சாய்த்து கொண்டு கண்களை மூடி கொண்டு நிலைமையை கிரகிக்க முயற்சி செய்து கொண்டு இருந்தான். வெளியே நடக்கும் பேச்சு வார்த்தைகள் அனைத்தும் தெள்ள தெளிவாக அவன் காதுகளில் விழுந்து கொண்டு இருந்தது. ஒரு புறம் சரவணா பற்றி நல்லவையாகவும், ஒரு புறம் அவனை பற்றியே தூற்றியும் பேசி கொண்டு இருந்தனர்.

சில மணி நேரங்கள் கடக்க, ஒரு முடிவு எடுத்து விட்டான். இத்தனை பேச்சுகளுக்கும் பின் அவனுக்கு திருமணத்தில் இருந்த ஆசையே போய் விட்டது.

சுந்தர் அவன் தற்போது என்ன யோசித்து கொண்டு இருப்பான் என்பதை கண்டு கொண்டான். சிறு வயது முதலே நம்முடன் இருக்கும் தோழமையின் தனி திறமை அது.

தான் கண்டு கொண்டதை சங்கரிடம் சென்று, "மாமா... எனக்கு என்னவோ சரவணா இனி கல்யாணமே வேண்டாம்னு முடிவு எடுத்துடுவானோனு தோணுது மாமா" என்று சொன்னான்.

அதை கேட்ட சில வினாடி இடைவெளியில் தனது அன்னை தனது முதல், இரண்டாவது அக்காவின் கணவர்கள் மற்றும் சில குடும்ப உறுப்பினர்களிடம் பேசி, பிரியாவை சரவணாவுக்கு முடிப்பது என்று முடிவெடுத்தனர். அதன்படி ஒரு குழு பிரியாவிடமும், மற்றொரு குழு சரவணாவிடமும் சென்றது.

சங்கர், "டேய் சரவணா... என்ன யோசிட்டு இருக்க??" என்று கேட்க, "ஒன்னும் பெருசா இல்ல" என்று பதில் சொன்னான்.

"சரிடா.. நாங்க எல்லாம் சேர்ந்து ஒரு முடிவு பண்ணி இருக்கோம். உனக்கும் நம்ம பிரியாவுக்கும் கல்யாணம் பண்ணலாம்னு" என்று சொன்னான் சங்கர்.

"என்ன??. என்ன டா லூசு தனமா பேசிட்டு இருக்க?. பிரியாவ போய் நான் எப்படி கல்யாணம் பண்ண முடியும். அறிவு இருக்கா??" என்று கோபமாக கேட்டான்.

"நீ புரியாம பேசாதடா... பிரியா கூட கல்யாணத்துக்கு சரி சொல்லிட்டா. இப்ப மட்டும் கல்யாணம் நடக்கல. யார் யார் என்ன பேசுவாங்கனு சொல்ல முடியாது. உனக்கு இனி பொண்ணு பாத்தாலும் நம்மள தான் குறை சொல்லுவாங்க. அதனால கம்முனு வந்து பிரியா கழுத்துல தாலி கட்டு" என்று சிறிது கோபத்துடன் கூறினான் சங்கர்.

சுந்தர் கூட, "ஆமாடா மாமா. ஒத்துக்கோ" என்று சொன்னான்.

"டேய் நீயும் அவங்க கூட சேர்ந்துட்டு இப்படி பேசி தொலயாதடா" என்று மற்றவர்களிடம் காட்ட முடியாத கோபத்தை சுந்தரிடம் காட்டினான்.

"நான் தூக்கி வளத்த புள்ள. பிரியாவ எனக்கு கட்டி வக்கிறத பத்தி இனி யாரும் பேச கூடாது. புரியுதா??" என்று கோபத்துடன் தனது நிலைப்பாட்டை திடமாக கூறினான்.

பிறகு சிறிது நேரத்தில், பிரியாவின் அப்பா சண்முக சுந்தரம் வந்து, "டேய் மாப்பிள்ள" என்று அழைத்தார்.

"மாமா... பிரியாவ இதுல இழுக்காம என்ன வேணா பேசுங்க மாமா" என்று சொன்னான் சரவணா தளர்வான குரலில்.

"இல்ல மாப்பிள்ள. அத பத்தி இல்ல. தமிழ உனக்கு கட்டிக்க சம்மதமா??. மத்த எல்லாருக்கும் சம்மதமாம்" என்று கேட்டார்.

சிறிது நேரம் அவன் யோசனையில் இருக்க, "டேய் மாப்பிள இங்க பாருடா... உங்க அக்கா ஆத்தா எல்லாம் உனக்கு இன்னிக்கே கல்யாணம் நடக்கனும்னு இருக்காங்க. ஒன்னு பிரியா இல்லனா தமிழ்... நீயே முடிவு பண்ணிக்கோ" என்று சொல்லி விட்டு வெளியே சென்று விட்டார்.

வெளியே வந்த அவர் மற்றவர்களிடம், "அவன் தமிழ கட்டிக்க சம்மதம் சொல்லிடுவான். போய் அடுத்த வேலைய பாருங்க" என்று சொன்னார், அவனை பற்றி அறிந்த படியால்.

உள்ளே சரவணா, தனது சண்முக மாமாவை பற்றி நன்கு அறிந்து இருந்ததால், கண்டிப்பாக இருவரில் ஒருவரை தனக்கு கட்டி வைத்து விடுவார் என்று. அதனால் தான் தூக்கி வளர்த்த பிள்ளைக்கு, தமிழ் எவ்வளவோ பரவாயில்லை என்று அவனது எண்ணம் சென்றது.

சில நிமிடங்களுக்கு பிறகு சுந்தர் வந்து, "சித்தப்பா... சரவணா தமிழ கட்டிக்க சம்மதம் சொல்லிட்டான்" என்றான்.

அதன் பின் என்ன?? மங்கல வாத்தியங்கள் முழங்க, தமிழின் கழுத்தில் தாலியை கட்டினான்.

கொடுப்பாள்...
 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இடம் 24

"தமிழுக்கும் எனக்கும் கல்யாணம் முடிஞ்சி வந்தப்புறம்... பிரியா என்ன ஏதோ ஏக்கமா பாப்பா... 'என்ன ஏன் மாமா வேண்டாம் சொன்னனு' கேக்கற மாறி எனக்கு தோணும் அந்த பார்வை. அதனாலயே என்னால அவகிட்ட பேச முடியாது" என்று பெரு மூச்சு விட்டவன், "சில நேரம் தோணும் நம்ம பிரியா இப்படிலாம் நினைக்க மாட்டானு. ஆனா அவ நடந்துக்கறத பாத்தா எனக்கு அப்படி தான் தோணுச்சி. அப்பறம் கொஞ்ச நாள்ல வேலைக்கு போறேன்னு யார்கிட்டயும் சொல்லாம கொள்ளாம கிளம்பி போய்ட்டா. இங்க என்னையும் தமிழையும் சேத்து பாக்க முடியாம தான் கிளம்பிட்டானு இருந்துச்சி. அதா அவ எங்க இருக்கா என்ன பண்ணறானு தெரிஞ்சாலும், அவள போய் பாக்கல... அவகிட்ட பேசல" என்று தனது அன்றைய நிலையை முழுவதும் சொல்லி முடித்தான் சரவண வேல்.

சரவணாவின் கடந்த கால நிகழ்வில் எந்த இடையூறும் செய்யாமல், அவன் சொல்வதை முழுமையாக பொறுமையாக கேட்டான் தேவ்.

பிறகு சிறு யோசனையுடன், "ஆனா கீர்த்தி என்கிட்ட சொன்னது வேற மாறி இருந்துச்சி" என்றவன் கீர்த்தி சொன்னதை முழுவதுமாக இவர்களிடம் சொல்லி முடித்தான்.

சுந்தர், "கண்டிப்பா இது நம்ம வீட்டு பெரியவங்களோட வேலையா தான் இருக்கனும்" என்றான்.

"ம்ம்ம்" என்ற சரவணா இன்னும் யோசனையுடனே, "ஆனா மாமா ஏன் என்கிட்ட வந்து 'நீ பிரியா இல்லனா தமிழ் இரண்டு பேருல யாராவது ஒருத்தர கட்டிக்கனும்' சொன்னாங்கனு தெரில. அது கண்டுபிடிக்கனும். எனக்கு அவர்கிட்ட ஒரு கேள்வி இருக்கு. அதுக்கு அவர் சொல்லற பதில் மட்டும் அப்படி இருந்துச்சி. அவ்வளவு தான்" என்று பல்லை கடித்து கொண்டே சொன்னான் சரவணா.

அவன் என்ன நினைத்து கொண்டு இப்படி பேசி கொண்டு இருக்கிறான் என்று சுந்தருக்கும், தேவ்வுக்கும் புரியவில்லை. ஆனால் சுந்தர் மட்டும் நினைத்தான்... இவன் மட்டும் எதாவது கண்டு புடிச்சான். பெருசா எதாவது செஞ்சி வச்சிடுவான். இவனை கொஞ்சம் பக்கத்துல இருந்து பாத்துக்கனும் என்று.

சிறிது நேர அமைதிக்கு பின் சரவணா, "சரி தேவ். அப்பறம்??" என்று கேட்டான்.

தேவ் அடுத்து என்ன கேட்கிறான் என்று புரியாமல் திருதிருவென முடித்தான்.

அதில் சிறிதாய் வர இருந்த சிரிப்பை அடக்கி, "எங்க குடும்பத்துல இருக்க மிஸ்அண்டர்ஸ்டேன்டிங்-ஆ சரி பண்ண மட்டும் நீங்க இங்க வரலனு எனக்கு தோணுது. உங்களுக்கு எப்படி தோணுது மிஸ்டர்.தேவாமிர்தன்??" என்று கேட்டான் சரவணா.

தேவ்வும் எதையும் மறைக்காமல், தெளிவாக அவன் நிலை மற்றும் கீர்த்தியின் நிலையை கூறினான்.

"கீர்த்திக்கு நீங்க முழு மனசோட எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டீங்கனு ஒரு எண்ணம். அதான் உங்ககிட்ட பேசி எல்லாம் சரி பண்ணலாம்னு வந்தேன்" என்று முடித்தான்.

'என்னை எப்படி இப்படி நினைக்கலாம்... அவளுக்கு ஒரு நல்லது நடக்குதுனா... அவளுக்கு பிடிச்ச வாழ்க்கை கிடைக்குதுனா அத நான் எப்படி தடுப்பேன். அவ மகிழ்ச்சி தான் என்னோட ஆனந்தம். அது அவளுக்கு புரியலையா??' என்று சரவணாவின் ஒரு மனம் எண்ண, அவனது மறு மனமோ, 'நீ மட்டும் அவளை தப்பா நினைச்சி அவள ஒதுக்கி வைக்கல' என்று கேட்டது.

'ஆமா... சரி தான்... என்னை மாறியே தான் பிரியாவும் நினைச்சி இருக்கா. முதல்ல இந்த பையனை பத்தி இன்னும் கொஞ்சம் விசாரிச்சிட்டு அப்பறம் என்ன பண்ணுறதுனு முடிவு பண்ணலாம்' என்று மனதுடன் பேசி ஒரு தீர்வு கண்டு விட்டான் சரவணா.

"சரிங்க தேவ். நான் கொஞ்சம் யோசிக்க வேண்டி இருக்கு. அதுக்கு முன்ன வீட்டுல இருக்கவங்க கிட்ட கொஞ்சம் பேசி தெரிஞ்சிக்க வேண்டியது இருக்கு. அது எல்லாம் முடிஞ்சதும் நம்ம இத பத்தி பேசலாம்" என்று தேவ்வை நோக்கி சொன்னான் சரவணா.

"ம்ம்... சரிங்க" - தேவ்.

"இது பிரியாவுக்கு தெரியுமா??" என்று சரவணா கேட்டு கொண்டு இருக்கும் போதே கீர்த்தியிடம் இருந்து வீடியோ கால் வந்தது. தேவ்வும் ஆர் கோளாரில் அட்டன் செய்து விட்டான்.

"ஹாய் கீர்த்து" முகம் முழுவதும் புன்னகையுடன் தேவ் சொல்ல, சரவணாவும் சுந்தரும் தலையில் கை வைத்து கொண்டு குனிந்து கொண்டனர்.

"என்ன சார் போன காரியம் உங்களுக்கு சாதகமா நடந்துடுச்சி போல... அதான் புன்னகை மன்னனா காட்சி கொடுக்கறீங்களோ!!" என்று கீர்த்தியும் அவனது சிரிப்பை கண்ணாடி போல் பிரதிபலித்து கேட்டாள்.

"கிட்டதட்ட முடிஞ்ச மாறி தான்" என்று இன்னும் புன்னகை மாறாமலே கூறி, "இப்ப நான் எங்க இருக்கேன் கண்டுபுடி பாக்கலாம்??" என்று சின்ன குறும்பு குரலில் கீர்த்தியிடம் கேட்டான் தேவ்.

"இந்த கால்க்கு முன்னாடி வரை தெரியாம இருந்து இருக்கும். இப்ப தெரிஞ்சிடும் மாமா" என்று சுந்தர் சரவாணாவிடம் சொல்ல, சரவணாவும் தேவ்வை ஒரு பார்வை பார்த்து விட்டு, சுந்தரிடம் 'ஆமா' என்பதை போல தலையசைத்து, "எல்லாம் அவன் செயல்" என்று தலையை வானத்தை நோக்கி உயர்த்தியவாறு கூறினான்.

இங்க காலில் கீர்த்தி, "எங்க இருக்க??. எதோ வேல சம்மந்தமானு சொன்னயே அங்க தான..." என்று கீர்த்தி சொல்லி கொண்டே, இத்தனை நேரம் பார்த்து கொண்டு இருந்த தேவ்வின் விட்டு சுற்று புறத்தை சிறிது உற்று பார்த்தாள்.

சில வினாடிகளிலே அது எந்த இடம் என்று கண்டு பிடித்து விட்டாள். அங்கயே பிறந்து வளர்ந்து வால் இல்லா வாணரமாய் தனது கூட்டத்துடன் சுற்றி திரிந்த இடங்களில் அதுவும் ஒன்று தான் என்று.

"தேவ்... நீ... நீங்க எங்க ஊருலயா இருக்கீங்க??" என்று லேசான படபடப்புடன் கேட்டாள் கீர்த்தி.

"ஆமா" என்றவன் அடுத்த கேள்வியாக, "யார் கூட இருக்கேனு சொல்லு பாக்கலாம்??" என்று கேட்டான் அவளை ஆச்சரியப்படுத்திடும் ஆனந்தப்படுத்திடும் நோக்கத்துடன்.

சரவணா, "பாவம் இந்த தம்பிக்கு அடுத்து என்ன நடக்கும்னு தெரில. எவ்வளவு ஆர்வமா சொல்லிட்டு இருக்கு பாரு" என்று சுந்தரிடம் சொல்லி கொண்டு இருந்தான்.

"யாரு கூட??" என்று சத்தமாக கேட்டாள். சத்தியமாக அந்த குரலில் மகிழ்ச்சியும் இல்லை... படபடப்பும் இல்லை... ஆர்வமும் இல்லை... அது தேவ்வுக்கு புரியவும் இல்லை. அவன் தான் குஷி மூடில் இருக்கிறானே...

"அங்க பாரு" என்று சரவணா மற்றும் சுந்தர் பக்கம் தனது அலைபேசியை திரும்பி காட்டினான். அவர்கள் இருவரும் அவளை பார்த்து கையை அசைத்து "ஹாய் பிரியா" என்றனர்.

"மாமா... அண்ணா..." - கீர்த்தி.

"பிரியா மா... எப்படி இருக்க??" - சுந்தர்.

"நல்லா இருக்கேன் னே. நீங்க?? அண்ணி தம்பி எல்லாம் எப்படி இருக்காங்க??" - கீர்த்தி.

"எல்லாம் நல்லா இருக்காங்க மா. நீ இங்க இருந்தே எல்லாம் சொல்லி புரிய வச்சி இருக்கலாம்மா. இவன்கிட்ட சொல்ல புடிக்கலைனாலும்" என்று சரவணாவை காட்டி சொல்லி விட்டு தன்னை காட்டி, "என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல" என்று ஆதங்கமாக சொன்னான்.

"இல்லனே... எனக்கு அப்ப என்ன பண்ணறதுனே தெரில. அதான்" என்று சமாளிப்பாக சொல்லி விட்டு அடுத்து தனது மாமனின் முகம் பார்த்தாள். அவனும் அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான்.

"மாமா... எப்படி இருக்க?? தமிழ் எப்படி இருக்கு?? அம்மா அப்பா பாட்டி பெரிய மாமா அத்த அச்சு சஞ்சு எல்லாம் எப்படி இருக்காங்க??" என்று கண்ணில் சிறிது நீர் படர்ந்தவாறே கேட்டாள்.

"ம்ம்... எல்லாம் நல்லா இருக்காங்க..." என்று சொன்ன சரவணா மெதுவாக தயங்கி தயங்கி, "ரொம்ப சாரி குட்டி. உன்ன தப்பா நினைச்சிட்டேன்" என்று சொல்லி நடந்தவற்றை கூறினான்.

"தேவ் வந்து எல்லாம் சொன்னப்பறம் தான் எனக்கு எல்லாம் தெரிஞ்சது. உன்னையும் புரிஞ்சது. மறுபடியும் மன்னிச்சிக்க குட்டி" என்று சொன்னான் சரவணா.

"என்ன மாமா நீ??. நானும் அப்படி தான உன்ன தப்பா நினைச்சேன். என்னையும் மன்னிச்சிக்க மாமா" என்று அவளும் சொல்ல, அவர்கள் மாறி மாறி பேசி கொண்டு இருந்தனர்.

தேவ் பாவமாக நானும் இங்க தான் இருக்கேன். என்கிட்டயும் பேசுங்க என்று சொல்ல முடியாமல் உம்மென்று அமர்ந்து இருந்தான். எல்லாம் வெளிபுறத்துக்கு தான். உள்ளே மகிழ்ச்சியாக தான இருந்தான்.

சிறிது நேரம் இவர்கள் மூவரின் பாச அலப்பறைகள் முடிய சரவணா, "சரி குட்டி... தேவ்கிட்ட போன் கொடுக்கறேன்" என்று சொல்லி அலைபேசியை கைமாற்றினான்.

தேவ் வாங்கி ஆசையாக, "கீர்த்து" என்க, அவள், அவன் முகத்தை கூட பார்க்காமல் அழைப்பை துண்டித்து விட்டாள்.

தேவ் புரியாமல் குழப்பமாக அலைப்பேசியை பார்க்க, இருவரும் அவனை பாவமாக பார்த்தனர்.

"என்னாச்சி தேவ்??" - சுந்தர் கேட்டான்.

"கட் ஆகிடுச்சி போல. நான் அப்பறம் பேசிக்கறேன்" தேவ் அது தான் உண்மை என்று அவர்களுடன் சேர்த்து தனக்கும் சொல்லி கொண்டான்.

"அது கட் ஆகல மாப்பிள்ள. கட் பண்ணிட்டா" சுந்தர் விவரிக்க, "என்ன?? ஏன்??" என்று புரியாமல் தேவ் கேட்டான் அவனை பார்த்து.

"அவ தான் உன் மேல கோவமா இருக்கா இல்ல. அது தான்" என்று அவன் கேள்விக்கான பதில் சரவணாவிடம் இருந்து வந்தது.

"ஆனால் ஏன் கோவம்??. நான் என்ன பண்ணேன்" என்று தேவ் மீண்டும் புரியாமல் தான் கேட்டான்.

"அது அவளே வந்து சொல்லுவா" என்று சுந்தர் சொல்ல, அவனை தொடர்ந்து சரவணா, "அவ வந்து திட்டுனா அது எல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க. திட்டிட்டு அத எல்லாம் மறந்துடுவா" என்று சொல்லி விட்டு இருவரும் சென்று விட்டனர்.

போகும் வழியிலே சரவணா, தனது தோழன் ஒருவனுக்கு அழைத்து தேவ்வை பற்றியும் அவனது குடும்பத்தை பற்றியும் விசாரித்து சொல்லுமாறு கேட்டு கொண்டான்.

சுந்தர், "இந்த தேவ் பயல பாத்த நல்ல பய மாறி தான் மாமா தெரியுது. எதுக்கும் அவன் விசாரிச்சிட்டு சொல்லட்டும். அப்பறம் பாத்துக்கலாம்" என்று தனது தோழனிடம் சொன்னான்.

"எனக்கும் அவ நல்லவனா தான் தெரியுது. பாப்போம்" என்று பேசி கொண்டே மீதி தூரத்தை கடந்து வீட்டுக்கு சென்றனர்.

அங்கே தேவ், "நான் என்னடா பண்ணேன்" என்று வடிவேலுவின், 'நான் எதுக்குடா சரிபட்டு வர மாட்டேன்' என்ற பாவப்பட்ட ரியாக்ஷனுடன் அமர்ந்து இருந்தான்.



அவனுக்கு நேர் மாறாக அங்கே கீர்த்தி, "அவன் எப்படி அப்படி பண்ணலாம்" என்று கவுண்டமணியின், "அவன் ஏன்டா என்ன பாத்து அப்படி ஒரு கேள்வி கேட்டான்" என்ற கோப ரியாக்ஷனுடன் நடந்து கொண்டு இருந்தாள்.



கொடுப்பாள்...

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே...

நன்றி!!!

இங்ஙனம்
திரா ஆனந்த் 🍀
 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இடம் 24

"தமிழுக்கும் எனக்கும் கல்யாணம் முடிஞ்சி வந்தப்புறம்... பிரியா என்ன ஏதோ ஏக்கமா பாப்பா... 'என்ன ஏன் மாமா வேண்டாம் சொன்னனு' கேக்கற மாறி எனக்கு தோணும் அந்த பார்வை. அதனாலயே என்னால அவகிட்ட பேச முடியாது" என்று பெரு மூச்சு விட்டவன், "சில நேரம் தோணும் நம்ம பிரியா இப்படிலாம் நினைக்க மாட்டானு. ஆனா அவ நடந்துக்கறத பாத்தா எனக்கு அப்படி தான் தோணுச்சி. அப்பறம் கொஞ்ச நாள்ல வேலைக்கு போறேன்னு யார்கிட்டயும் சொல்லாம கொள்ளாம கிளம்பி போய்ட்டா. இங்க என்னையும் தமிழையும் சேத்து பாக்க முடியாம தான் கிளம்பிட்டானு இருந்துச்சி. அதா அவ எங்க இருக்கா என்ன பண்ணறானு தெரிஞ்சாலும், அவள போய் பாக்கல... அவகிட்ட பேசல" என்று தனது அன்றைய நிலையை முழுவதும் சொல்லி முடித்தான் சரவண வேல்.

சரவணாவின் கடந்த கால நிகழ்வில் எந்த இடையூறும் செய்யாமல், அவன் சொல்வதை முழுமையாக பொறுமையாக கேட்டான் தேவ்.

பிறகு சிறு யோசனையுடன், "ஆனா கீர்த்தி என்கிட்ட சொன்னது வேற மாறி இருந்துச்சி" என்றவன் கீர்த்தி சொன்னதை முழுவதுமாக இவர்களிடம் சொல்லி முடித்தான்.

சுந்தர், "கண்டிப்பா இது நம்ம வீட்டு பெரியவங்களோட வேலையா தான் இருக்கனும்" என்றான்.

"ம்ம்ம்" என்ற சரவணா இன்னும் யோசனையுடனே, "ஆனா மாமா ஏன் என்கிட்ட வந்து 'நீ பிரியா இல்லனா தமிழ் இரண்டு பேருல யாராவது ஒருத்தர கட்டிக்கனும்' சொன்னாங்கனு தெரில. அது கண்டுபிடிக்கனும். எனக்கு அவர்கிட்ட ஒரு கேள்வி இருக்கு. அதுக்கு அவர் சொல்லற பதில் மட்டும் அப்படி இருந்துச்சி. அவ்வளவு தான்" என்று பல்லை கடித்து கொண்டே சொன்னான் சரவணா.

அவன் என்ன நினைத்து கொண்டு இப்படி பேசி கொண்டு இருக்கிறான் என்று சுந்தருக்கும், தேவ்வுக்கும் புரியவில்லை. ஆனால் சுந்தர் மட்டும் நினைத்தான்... இவன் மட்டும் எதாவது கண்டு புடிச்சான். பெருசா எதாவது செஞ்சி வச்சிடுவான். இவனை கொஞ்சம் பக்கத்துல இருந்து பாத்துக்கனும் என்று.

சிறிது நேர அமைதிக்கு பின் சரவணா, "சரி தேவ். அப்பறம்??" என்று கேட்டான்.

தேவ் அடுத்து என்ன கேட்கிறான் என்று புரியாமல் திருதிருவென முடித்தான்.

அதில் சிறிதாய் வர இருந்த சிரிப்பை அடக்கி, "எங்க குடும்பத்துல இருக்க மிஸ்அண்டர்ஸ்டேன்டிங்-ஆ சரி பண்ண மட்டும் நீங்க இங்க வரலனு எனக்கு தோணுது. உங்களுக்கு எப்படி தோணுது மிஸ்டர்.தேவாமிர்தன்??" என்று கேட்டான் சரவணா.

தேவ்வும் எதையும் மறைக்காமல், தெளிவாக அவன் நிலை மற்றும் கீர்த்தியின் நிலையை கூறினான்.

"கீர்த்திக்கு நீங்க முழு மனசோட எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டீங்கனு ஒரு எண்ணம். அதான் உங்ககிட்ட பேசி எல்லாம் சரி பண்ணலாம்னு வந்தேன்" என்று முடித்தான்.

'என்னை எப்படி இப்படி நினைக்கலாம்... அவளுக்கு ஒரு நல்லது நடக்குதுனா... அவளுக்கு பிடிச்ச வாழ்க்கை கிடைக்குதுனா அத நான் எப்படி தடுப்பேன். அவ மகிழ்ச்சி தான் என்னோட ஆனந்தம். அது அவளுக்கு புரியலையா??' என்று சரவணாவின் ஒரு மனம் எண்ண, அவனது மறு மனமோ, 'நீ மட்டும் அவளை தப்பா நினைச்சி அவள ஒதுக்கி வைக்கல' என்று கேட்டது.

'ஆமா... சரி தான்... என்னை மாறியே தான் பிரியாவும் நினைச்சி இருக்கா. முதல்ல இந்த பையனை பத்தி இன்னும் கொஞ்சம் விசாரிச்சிட்டு அப்பறம் என்ன பண்ணுறதுனு முடிவு பண்ணலாம்' என்று மனதுடன் பேசி ஒரு தீர்வு கண்டு விட்டான் சரவணா.

"சரிங்க தேவ். நான் கொஞ்சம் யோசிக்க வேண்டி இருக்கு. அதுக்கு முன்ன வீட்டுல இருக்கவங்க கிட்ட கொஞ்சம் பேசி தெரிஞ்சிக்க வேண்டியது இருக்கு. அது எல்லாம் முடிஞ்சதும் நம்ம இத பத்தி பேசலாம்" என்று தேவ்வை நோக்கி சொன்னான் சரவணா.

"ம்ம்... சரிங்க" - தேவ்.

"இது பிரியாவுக்கு தெரியுமா??" என்று சரவணா கேட்டு கொண்டு இருக்கும் போதே கீர்த்தியிடம் இருந்து வீடியோ கால் வந்தது. தேவ்வும் ஆர் கோளாரில் அட்டன் செய்து விட்டான்.

"ஹாய் கீர்த்து" முகம் முழுவதும் புன்னகையுடன் தேவ் சொல்ல, சரவணாவும் சுந்தரும் தலையில் கை வைத்து கொண்டு குனிந்து கொண்டனர்.

"என்ன சார் போன காரியம் உங்களுக்கு சாதகமா நடந்துடுச்சி போல... அதான் புன்னகை மன்னனா காட்சி கொடுக்கறீங்களோ!!" என்று கீர்த்தியும் அவனது சிரிப்பை கண்ணாடி போல் பிரதிபலித்து கேட்டாள்.

"கிட்டதட்ட முடிஞ்ச மாறி தான்" என்று இன்னும் புன்னகை மாறாமலே கூறி, "இப்ப நான் எங்க இருக்கேன் கண்டுபுடி பாக்கலாம்??" என்று சின்ன குறும்பு குரலில் கீர்த்தியிடம் கேட்டான் தேவ்.

"இந்த கால்க்கு முன்னாடி வரை தெரியாம இருந்து இருக்கும். இப்ப தெரிஞ்சிடும் மாமா" என்று சுந்தர் சரவாணாவிடம் சொல்ல, சரவணாவும் தேவ்வை ஒரு பார்வை பார்த்து விட்டு, சுந்தரிடம் 'ஆமா' என்பதை போல தலையசைத்து, "எல்லாம் அவன் செயல்" என்று தலையை வானத்தை நோக்கி உயர்த்தியவாறு கூறினான்.

இங்க காலில் கீர்த்தி, "எங்க இருக்க??. எதோ வேல சம்மந்தமானு சொன்னயே அங்க தான..." என்று கீர்த்தி சொல்லி கொண்டே, இத்தனை நேரம் பார்த்து கொண்டு இருந்த தேவ்வின் விட்டு சுற்று புறத்தை சிறிது உற்று பார்த்தாள்.

சில வினாடிகளிலே அது எந்த இடம் என்று கண்டு பிடித்து விட்டாள். அங்கயே பிறந்து வளர்ந்து வால் இல்லா வாணரமாய் தனது கூட்டத்துடன் சுற்றி திரிந்த இடங்களில் அதுவும் ஒன்று தான் என்று.

"தேவ்... நீ... நீங்க எங்க ஊருலயா இருக்கீங்க??" என்று லேசான படபடப்புடன் கேட்டாள் கீர்த்தி.

"ஆமா" என்றவன் அடுத்த கேள்வியாக, "யார் கூட இருக்கேனு சொல்லு பாக்கலாம்??" என்று கேட்டான் அவளை ஆச்சரியப்படுத்திடும் ஆனந்தப்படுத்திடும் நோக்கத்துடன்.

சரவணா, "பாவம் இந்த தம்பிக்கு அடுத்து என்ன நடக்கும்னு தெரில. எவ்வளவு ஆர்வமா சொல்லிட்டு இருக்கு பாரு" என்று சுந்தரிடம் சொல்லி கொண்டு இருந்தான்.

"யாரு கூட??" என்று சத்தமாக கேட்டாள். சத்தியமாக அந்த குரலில் மகிழ்ச்சியும் இல்லை... படபடப்பும் இல்லை... ஆர்வமும் இல்லை... அது தேவ்வுக்கு புரியவும் இல்லை. அவன் தான் குஷி மூடில் இருக்கிறானே...

"அங்க பாரு" என்று சரவணா மற்றும் சுந்தர் பக்கம் தனது அலைபேசியை திரும்பி காட்டினான். அவர்கள் இருவரும் அவளை பார்த்து கையை அசைத்து "ஹாய் பிரியா" என்றனர்.

"மாமா... அண்ணா..." - கீர்த்தி.

"பிரியா மா... எப்படி இருக்க??" - சுந்தர்.

"நல்லா இருக்கேன் னே. நீங்க?? அண்ணி தம்பி எல்லாம் எப்படி இருக்காங்க??" - கீர்த்தி.

"எல்லாம் நல்லா இருக்காங்க மா. நீ இங்க இருந்தே எல்லாம் சொல்லி புரிய வச்சி இருக்கலாம்மா. இவன்கிட்ட சொல்ல புடிக்கலைனாலும்" என்று சரவணாவை காட்டி சொல்லி விட்டு தன்னை காட்டி, "என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல" என்று ஆதங்கமாக சொன்னான்.

"இல்லனே... எனக்கு அப்ப என்ன பண்ணறதுனே தெரில. அதான்" என்று சமாளிப்பாக சொல்லி விட்டு அடுத்து தனது மாமனின் முகம் பார்த்தாள். அவனும் அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான்.

"மாமா... எப்படி இருக்க?? தமிழ் எப்படி இருக்கு?? அம்மா அப்பா பாட்டி பெரிய மாமா அத்த அச்சு சஞ்சு எல்லாம் எப்படி இருக்காங்க??" என்று கண்ணில் சிறிது நீர் படர்ந்தவாறே கேட்டாள்.

"ம்ம்... எல்லாம் நல்லா இருக்காங்க..." என்று சொன்ன சரவணா மெதுவாக தயங்கி தயங்கி, "ரொம்ப சாரி குட்டி. உன்ன தப்பா நினைச்சிட்டேன்" என்று சொல்லி நடந்தவற்றை கூறினான்.

"தேவ் வந்து எல்லாம் சொன்னப்பறம் தான் எனக்கு எல்லாம் தெரிஞ்சது. உன்னையும் புரிஞ்சது. மறுபடியும் மன்னிச்சிக்க குட்டி" என்று சொன்னான் சரவணா.

"என்ன மாமா நீ??. நானும் அப்படி தான உன்ன தப்பா நினைச்சேன். என்னையும் மன்னிச்சிக்க மாமா" என்று அவளும் சொல்ல, அவர்கள் மாறி மாறி பேசி கொண்டு இருந்தனர்.

தேவ் பாவமாக நானும் இங்க தான் இருக்கேன். என்கிட்டயும் பேசுங்க என்று சொல்ல முடியாமல் உம்மென்று அமர்ந்து இருந்தான். எல்லாம் வெளிபுறத்துக்கு தான். உள்ளே மகிழ்ச்சியாக தான இருந்தான்.

சிறிது நேரம் இவர்கள் மூவரின் பாச அலப்பறைகள் முடிய சரவணா, "சரி குட்டி... தேவ்கிட்ட போன் கொடுக்கறேன்" என்று சொல்லி அலைபேசியை கைமாற்றினான்.

தேவ் வாங்கி ஆசையாக, "கீர்த்து" என்க, அவள், அவன் முகத்தை கூட பார்க்காமல் அழைப்பை துண்டித்து விட்டாள்.

தேவ் புரியாமல் குழப்பமாக அலைப்பேசியை பார்க்க, இருவரும் அவனை பாவமாக பார்த்தனர்.

"என்னாச்சி தேவ்??" - சுந்தர் கேட்டான்.

"கட் ஆகிடுச்சி போல. நான் அப்பறம் பேசிக்கறேன்" தேவ் அது தான் உண்மை என்று அவர்களுடன் சேர்த்து தனக்கும் சொல்லி கொண்டான்.

"அது கட் ஆகல மாப்பிள்ள. கட் பண்ணிட்டா" சுந்தர் விவரிக்க, "என்ன?? ஏன்??" என்று புரியாமல் தேவ் கேட்டான் அவனை பார்த்து.

"அவ தான் உன் மேல கோவமா இருக்கா இல்ல. அது தான்" என்று அவன் கேள்விக்கான பதில் சரவணாவிடம் இருந்து வந்தது.

"ஆனால் ஏன் கோவம்??. நான் என்ன பண்ணேன்" என்று தேவ் மீண்டும் புரியாமல் தான் கேட்டான்.

"அது அவளே வந்து சொல்லுவா" என்று சுந்தர் சொல்ல, அவனை தொடர்ந்து சரவணா, "அவ வந்து திட்டுனா அது எல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க. திட்டிட்டு அத எல்லாம் மறந்துடுவா" என்று சொல்லி விட்டு இருவரும் சென்று விட்டனர்.

போகும் வழியிலே சரவணா, தனது தோழன் ஒருவனுக்கு அழைத்து தேவ்வை பற்றியும் அவனது குடும்பத்தை பற்றியும் விசாரித்து சொல்லுமாறு கேட்டு கொண்டான்.

சுந்தர், "இந்த தேவ் பயல பாத்த நல்ல பய மாறி தான் மாமா தெரியுது. எதுக்கும் அவன் விசாரிச்சிட்டு சொல்லட்டும். அப்பறம் பாத்துக்கலாம்" என்று தனது தோழனிடம் சொன்னான்.

"எனக்கும் அவ நல்லவனா தான் தெரியுது. பாப்போம்" என்று பேசி கொண்டே மீதி தூரத்தை கடந்து வீட்டுக்கு சென்றனர்.

அங்கே தேவ், "நான் என்னடா பண்ணேன்" என்று வடிவேலுவின், 'நான் எதுக்குடா சரிபட்டு வர மாட்டேன்' என்ற பாவப்பட்ட ரியாக்ஷனுடன் அமர்ந்து இருந்தான்.

அவனுக்கு நேர் மாறாக அங்கே கீர்த்தி, "அவன் எப்படி அப்படி பண்ணலாம்" என்று கவுண்டமணியின், "அவன் ஏன்டா என்ன பாத்து அப்படி ஒரு கேள்வி கேட்டான்" என்ற கோப ரியாக்ஷனுடன் நடந்து கொண்டு இருந்தாள்.

கொடுப்பாள்...
 
  • Like
Reactions: Ums

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இடம் 25

அன்று விடுமுறை நாள் என்பதால் சரி தேவ்வுக்கு அழைத்து பேசலாம் என்று அவனுக்கு காணொலி அழைப்பை ஏற்படுத்தினாள் கீர்த்தி.

தேவ்வும் அந்த பக்கம் எடுத்தவுடன், அவனது புன்னகை முகத்தை தான் பார்த்தாள். அந்த முகம் அவளை அறியாமலே அவளது இதழிலும் சிரிப்பை வரவழைத்தது. அந்த சிரிப்புடனே, அவன் சென்ற காரியத்தை பற்றி கேட்டாள். அதனால் தான் அவன் மகிழ்ச்சியாக இருக்கிறான் என்று நினைத்து.

அவன் சொன்ன பிறகே அவன் இருக்கும் இடத்தையும், அவன் சென்ற காரியத்தை பற்றியும் அறிந்து கொண்டாள். ஆனால் அறிந்து கொண்ட செய்தியை தான் அவளால் ஏற்று கொள்ள முடியவில்லை. அதை பற்றி மேலும் அவளது யோசனை செல்லும் முன் கைபேசி கை மாறியது.

பல நாட்களுக்கு பின் தனது குடும்பத்தாரிடம் பேசுவதால், சற்று நெகிழ்வாக பேசி கொண்டு இருந்தாள் தனது அண்ணனிடமும் மாமாவிடமும். அடுத்து மீண்டும் அலைபேசி தேவ்விடம் செல்ல, பேச முடியாமல் துண்டித்து விட்டாள்.

அவளது மனது அமைதி இல்லாமல், பால்கனியில் வலது புறத்திலிருந்து இடது புறமும், இடது புறத்திலிருந்து வலது புறமாகவும் மாறி மாறி நடந்து கொண்டு இருந்தாள். கைகளும் ஒரே ரிதமாக அசையாமல், கண்ட மேனிக்கு மேல கீழே என்று அசைந்து கொண்டு இருந்தது அவளது மனதை போல...

'தேவ் எப்படி அப்படி பண்ணலாம்??' என்ற கேள்வி அவள் மனதில் வந்து அவன் மீது ஒரு வித கோபத்தை தோற்றுவித்தது.

அந்த சமயம் அங்கே வந்த சங்கவி கீர்த்தியை பார்த்து, "என்ன கீர்த்தி?? அப்படியும் இப்படியும் உலாதித்து இருக்க?? வாக்கிங் ஆ??. அப்படியே இருந்தாலும் அதை ஏன் இப்படி மதிய நேரத்துல பண்ணிட்டு இருக்க??. வேணா என் கூட காலைலயும் சாய்ங்காலமும் வாக்கிங் வாவே... நானும் தனியா தான போறேன்" என்று அவளே கேள்வியை கேட்டு, அவளே ஒன்றை ஊகித்து, அவளே அதற்கான தீர்வு என்று ஒன்றையும் விடாமல் பேசி கொண்டே போக, "அக்கா" என்று சத்தமாக அழைத்து அதை தடை செய்தாள் கீர்த்தி.

'ஏன் மா??' என்ற கேள்வி பாவையுடன் அவளை பாவமாக பார்த்தாள் சங்கவி.

கொஞ்சம் தன்னை அசுவாசப்படுத்தி கொண்டு, "கா... கவிக்கா... நான் லீவ் போட்டுட்டு எங்க ஊருக்கு போலாம் இருக்கேன்" என்றாள் கீர்த்தி, சங்கவியிடம்.

"என்ன??" என்று அதிர்ச்சியாக கவி. ஏனென்றால் கீர்த்தி தான் அவர்கள் குடும்பத்தை பற்றியோ அவர்கள் வீட்டை பற்றியோ பேசியதில்லை. அப்படி இருக்க அங்கு செல்வது எல்லாம்... நினைத்து கூட பார்க்க முடியவில்லை. ஆனால் அது கவிக்கும் மகிழ்ச்சியே...

"ஆமா கா. போக வேண்டிய சூழ்நிலை. ஒரு வாரம் லீவ் எடுத்துட்டு போகலாம் இருக்கேன்" என்றவள், தனது அலைபேசியை எடுத்து மிதுனுக்கு அழைத்தாள். அவனிடம் தானே இவள் விடுமுறை எடுக்க அனுமதி பெற வேண்டும்.

"ஹலோ மிதுன். நான் ஒரு வாரம் லீவ் போட்டு எங்க ஊருக்கு போறேன்" என்று அவன் அழைப்பை ஏற்றவுடன் அவன் பதில் பேச நேரம் கொடுக்காமல், இவள் தன் தேவையை கூறினான்.

மிதுனுக்கு, தேவ் சென்ற காரியம் தெரிந்ததால் அது சம்மந்தமாக தான் கீர்த்தி ஊருக்கு செல்ல இருக்கிறாள் என்று புரிந்து கொண்டான்.

அதனால் அவள் மகிழ்ச்சியான மனநிலையில் தான் கேட்கிறாள் என்று சிரிப்புடன், "சரிடா.... எடுத்துக்கோ... நான் பாத்துக்கிறேன் உன் வேல எல்லாம்... எதுனா நோட்ஸ் எடுத்து வச்சி இருந்தா எனக்கு பார்வேட் பண்ணி விட்டுடு டா" என்று சொன்னான்.

"இரண்டே ரெண்டு தான் மித்து இன்னும் மீதி இருக்கு. நான் ஒரு ரவ் ட்ராப்ட் மாறி அத மட்டும் போட்டு வச்சிடுறேன். நீ அத பைன் ட்யூன் பண்ணிடு" என்று தனது கோபத்தை மறந்து வேல பக்கம் தாவினாள் கீர்த்தி.

"சரி கீரி குட்டி..." என்று மித்து மேலும் ஏதோ சொல்ல வர, கீர்த்தி இடை புகுந்து, " ஆன்... அப்பறம் இரண்டு டாஸ்க் நம்ம ட்ரைனீ பசங்களுக்கு அசைன் பண்ணி இருக்கு. நாலு நாள் ஆச்சி... அது மட்டும் பண்ணிட்டாங்களானு பாக்கனும்" என்று விடுபட்ட வேலையையும் சொன்னாள்.

"ஓகே டா... பாத்துக்கறேன்" என்று சொன்ன மித்து, "சரி எப்போ கிளம்பற??.. எதுல கிளம்பற??. டிக்கெட் புக் பண்ணிட்டயா??" என்று கேட்டான்.

"இன்னிக்கே மித்து. இல்ல புக் பண்ணல... இன்னிக்கு சனிகிழமை தான நேத்துனா கூட டிராவல்ஸ்ல எல்லாம் புக் ஆகி இருக்கும். இன்னிக்கு ப்ரீயா தான் இருக்கும். நான் டிராவல்ஸ் ஆபிஸ் போய்ட்டு செக் பண்ணிக்கறேன் மித்து" என்று தனது திட்டத்தை கூறினாள் கீர்த்தி.

"சரி டா. பாத்து போயிட்டு வா. கிளம்பும் போது நான் வந்து பஸ் ஏத்தி விடுறேன்" என்று சொன்னான்.

"சரி மித்து. நான் ரெடி ஆகிறேன்" என்று சொல்லி விட்டு ஒரு ஐந்து நாட்களுக்கு உடை எடுத்து ஒரு டிராவல் பேகில் வைத்து விட்டு, குளிக்க சென்றாள்.

குளித்து விட்டு வந்தவள், "கவிக்கா நான் ஒரு வாரம் ஊருக்கு போறேன். அப்போ நீங்க தனியா இருப்பீங்களே!!. சாரி கா... எனக்கும் தெரியல... ஆனா நான் கண்டிப்பா போய் ஆகனும்கா... நீங்க?? எப்படி???" என்று என்ன சொல்வது என்று தயக்கமாக அவளை பார்த்து கொண்டு இருந்தாள் கீர்த்தி.

"எனக்கு ஒன்னும் இல்லமா. உனக்கு சொன்னது தான். பக்கத்து வீட்டுல என் டீம் மேட்ஸ் தான். நான் தங்கிக்கறேன்" என்று சொல்லி அவளது கையை தட்டி கொடுத்தாள் கவி.

அவளை பார்த்து ஒரு சின்ன சிரிப்பை உதிர்த்தாள் கீர்த்தி. "சரி கா... நான் போய்ட்டு வந்துடுறேன்" என்றாள்.

"சரி டா. பாத்து போயிட்டு வாமா" என்று சொன்னாள் கவி.

தலையை ஆட்டி விட்டு, தனது கைபேசியை எடுத்து மிதுனுக்கு அழைத்தாள் கீர்த்தி.

"மித்து... நான் ரெடி" என்று அவன் அழைப்பை ஏற்றதும் சொன்னாள் கீர்த்தி.

"சரி டா. ஒரு கால் மணி நேரம் வந்துட்டேன் பக்கத்துல" என்று சொன்னான் மித்து.

"சரி மித்து. மெதுவாவே ஒட்டிட்டு வா. பஸ்க்கு ஒன்னும் அவசரம் இல்ல" என்று சொன்னாள் கீர்த்தி.

"சரி டா. வரேன்" என்று அழைப்பை துண்டித்தான் மித்து.

மித்து தங்களது வீடு இருக்கும் இடம் வந்தவுடன், கீழே தனது காரில் அமர்ந்து கொண்டே கீர்த்திக்கு அழைத்தான். அவளும் அழைப்பை ஏற்று வரேன் என்று சொல்லி விட்டு, கவியிடமும் சொல்லி கொண்டு கிளம்பினாள் கீர்த்தி.

"சரி கா. வரேன். பாத்து இருங்க" என்று தனது பைகளை எடுத்து கொண்டு, கையை இட வலமாக அசைத்து 'டாடா' என்று சொல்லி கொண்டு, செருப்பை மாட்டிக் கொண்டு கிளம்பினாள்.

மித்துவுமும், கீர்த்தியும் பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கே விசாரிக்க, இன்னும் அரை மணி நேரத்தில் ஒரு பேருந்து அவர்கள் ஊருக்கு புறப்பட உள்ளது என்று சொன்னார்கள். பேருந்து கிளம்பும் வரை கீர்த்தியுடன் அங்கேயே அமர்ந்து இருந்து, பஸ் கிளம்பியதும் தான் மித்து விடை பெற்றான்... ஊருக்கு போன உடன் கால் பண்ணு என்ற கட்டளையுடன்.

கிட்டதட்ட ஒரு வருடம் கழித்து தனது சொந்த ஊருக்கு செல்ல இருக்கின்றாள் கீர்த்தி பிரியம்வதா... அங்கே தேவாமிர்தன் செய்த வேலையின் தாக்கம் ஆரம்பிக்கும் முன் செல்ல வேண்டும் என்ற எண்ணமும் அவள் மனதில் வந்து செல்ல தவறவில்லை.

இங்கே, கீர்த்தியின் சொந்த ஊரில்...

அவர்கள் விட்டு சென்ற இடத்திலே அமர்ந்து, எதனால் அவர்கள் அப்படி சொல்லி விட்டு சென்றார்கள் என்று புரியாமல் முழித்து கொண்டு இருந்த தேவ், சற்று நேரத்தில் எல்லாம் வரும் போது பாத்துக்கலாம். நம்மனால சமாளிக்க முடியாத காரியம் எதுனா இருக்கா என்ன!! என்று தனக்குள்ளே சொல்லி கொண்டு ஒரு தோள் குலுக்கலுடன் தான் தங்கி இருந்த விடுதிக்கு சென்றான் தேவ்.

அங்கிருந்து கிளம்பிய சரவணா, சுந்தரிடம் விடை பெற்று கொண்டு நேராக தனது இல்லம் சென்றான். தமிழிடம் இதை பகிர்ந்து கொள்ள... ஏனோ அவன் மனம் லேசாக இருக்க, இயல்பாகவே மனைவியை தேடியது. ஒருவேளை வீட்டில் உள்ளவர்களால் தான் பிரச்சனை என்ற பட்சத்தில், மனைவியை தேடினானோ என்னவோ...

சரவணாவின் இல்லம்...

"தமிழு... அடியேய் தமிழு" என்று சொல்லி கொண்டே உள்ளே வந்தான் சரவணா.

"என்னது இந்த மாமா நம்ம பேர சொல்லி கூப்பிடுது. இது அந்த அளவுக்கு எல்லாம் சீன் இல்லயே... ஒருவேளை இப்படி நடக்கனும்னு நம்ம கனவு காணுறமோ" என்று தனக்கு தானே பேசி கொண்டு, 'நம்ம கனவு தான்' என்று முடிவு எடுத்து விட்டு பாத்திரங்கள் துலக்கி கொண்டு இருந்தாள்.

"இவள..." என்று பல்லை கடித்து வி்ட்டு, "கூப்பிட்டுட்டு இருக்கேன். காது என்ன வாடகைக்கு விட்டு இருக்கயா??" என்று கேட்டு கொண்டே அவளின் பக்கத்தில் வந்து நின்றான் சரவணா.

"என்னது??. என்ன கூப்பிட்டிங்களா??" என்று ஆச்சரியமாய் கேட்டு விட்டு, "என்ன எதுக்கு கூப்பிட்டுறீங்க??. உங்களுக்கும் எனக்கும் என்ன பேச்சு வார்த்த இருக்கு??. என்கிட்ட பேச உங்களுக்கு எதுனா இருக்கா என்ன??" என்று இன்னும் ஆச்சரியத்தை விடாமல் வைத்து கொண்டு கேட்டாள் தமிழ்.

"உனக்கு வாய் கொழுப்புடி!!. பாக்க பூன மாறி இருந்துட்டு என்ன பேச்சு பேசற" என்று அவளை பார்த்து இன்னும் நன்றாக பல்லை கடித்து கூறி விட்டு, "யாருடி உன்கிட்ட பேசறது இல்ல. நீ தான் என்ன பாத்துட்டு மூஞ்ச திருப்பிட்டு போன... நானா போனேன்??" என்று கேட்டான் சரவணா..

"நீங்க மட்டும் அப்படியே என்கிட்ட வந்து கிளு கிளுனு பேசிட்டீங்க பாரு" என்று கை வேலையை பார்க்க, வாய் அதன் வேலையாய் தனது மாமனிடம் பேசி கொண்டு இருந்தது.

"வாயி... வாயி.." என்று சொன்னவன், "உன்கிட்ட ஒரு முக்கியமான சேதி தான் சொல்ல வந்தேன். ஆனா அதுக்கு முன்ன இன்னொரு பஞ்சாயத்தை முடிக்கனும் போலயே" என்று சொல்லி கொண்டு, தமிழை தனது பக்கம் திருப்பினான் சரவண வேல்.

"என்னவா இருக்கும்??" என்று கொண்டே அவன் இழுத்த திசைக்கு திரும்பினாள் தமிழரசி.

கொடுப்பாள்...
 
  • Like
Reactions: Ums

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இடம் 26

34877

தமிழரசியை தேடி வந்த சரவண வேல் அவளை சமையல் அறையில் கண்டு கொண்டான்.

அவன் தான் கொண்டு வந்த செய்தியை அவளிடம் சொல்ல நினைக்க, அதற்குள் தமிழ் அவனை கிண்டல் செய்ய, தான் கொண்டு வந்த செய்தியை பின்னுக்கு தள்ளி விட்டு இப்போது இந்த பஞ்சாயத்தை பார்ப்போம் என்று எண்ணி விட்டான். முன்னாடி அவன் மனதில் இருந்த தடைகள் எல்லாம் இப்போது தேவ் வந்து விளக்கியவுடன், விலகி விட்டது என்பது தான் உண்மை.

அந்த பக்கம் திரும்பி பாத்திரங்களை துலக்கி கொண்டு இருந்த தமிழின் கையை பற்றி தன் பக்கம் திருப்பினான் சரவணா.

'எதை பத்தி பேச போறாங்களா இருக்கும்??' என்று மனதில் எண்ணி கொண்டே, அவன் இழுத்த இழப்பிற்கு அவன் பக்கம் திரும்பினாள் தமிழ்.

கேள்வியாக தமிழ் அவனை பார்க்க, "நீ தானடி மூஞ்ச மூஞ்ச திருப்பிட்டு போன!! என்கிட்ட பேசமா... இப்ப ஏதோ நானே எல்லாம் பண்ண மாறி பேசற!!" என்று கேட்டான் சரவணா.

"ஆமா... நான் மூஞ்ச திருப்பிட்டு தான் போனேன். அதுக்கு காரணம் இருக்கு. ஆனா நீங்க மட்டும் எப்படி இருந்தீங்களாம்??" என்று கேட்டாள் தமிழ்.

அவள் சொன்ன கடைசி வாக்கியத்தை கண்டு கொள்ளாமல் விட்டு தள்ளியவன், "அது என்ன உனக்கு மட்டும் ஒரு காரணம் இருக்கு??. என்கிட்ட மூஞ்சு கொடுத்து பேசாம இருக்க" என்று தனக்கு தேவையானதை முதலில் கேட்டான்.

தலையை குனிந்து சில வினாடி யோசித்து, சிறிது தயங்கி, பின் ஒரு முடிவுடன் சொல்லி விடலாம். சொல்லி பிரச்சனையை முடித்து வாழ்க்கையை தொடரலாம். எவ்வளவு நாள் தான் வாழ்க்கையை வீணாக்குவது. வாய்ப்பு கிடைக்கும் போது பயன்படுத்தி கொள்வதில் தவறில்லை என்று எண்ணி சொல்ல தொடங்கினாள் தமிழ்.

அவனிடம் இருந்து கொஞ்சம் தள்ளி நின்று, அங்கிருந்த ஸ்லாப்பில் சாய்ந்து கொண்டு சொல்ல தொடங்கினாள்.

"எனக்கு சின்ன வயசுல இருந்தே உங்களை ரொம்ப புடிக்கும். உண்மையா சொல்லனும்னா உங்களுக்கு கல்யாணம் பண்ணனும்னு முடிவு பண்ணதும் எங்க வீட்டுலயோ இல்ல நம்ம சொந்த காரங்கள யாரையாவது தான் பாப்பீங்கனு நினைச்சேன். ஆனால் நீங்க வெளியே பாத்தீங்க. இருந்தாலும் சரி ஓகே, நீங்க நல்லா இருந்தா சரினு நினைச்சேன். அப்பறம் அந்த பொண்ணு போனதும், நம்ம பிரியாவ கட்டி வைக்க கேட்ட உடனே சரினு சொல்லிட்டீங்க... எப்படி உங்களால அப்படி சொல்ல முடிஞ்சது??. அதுவும் நம்ம பிரியாவ..." என்று சொல்லி அவன் முகத்தை பார்த்தாள். ஆனால் சரவணா எதுவும் சொல்லாமல் கைகளை கட்டி கொண்டு அவளையே பார்த்து கொண்டு இருந்தான்.

"ச்சே... எனக்கு உங்களையும் பிரியாவையும் பாக்கும் போது, அவளுக்கு கூட இருந்து எல்லாம் சொல்லி கொடுத்த அம்மா அப்பா மாறி தான் தோணும். எப்படி சாப்பிடனும்ல இருந்து நீச்சல் வரைக்கும் நீங்க தான சொல்லி கொடுத்தீங்க??. எப்படி உங்களால அப்படி சம்மதம் சொல்ல முடிஞ்சது??. ஆனால் பிரியா எனக்கு விருப்பம் இல்லனு சொல்லிட்டா... இல்லனா..." என்று சொல்லி விட்டு, அப்படி நடக்கவில்லை என்ற ஒரு அசுவாச பெரு மூச்சையும் விட்டாள்.

"அடுத்து அப்பா வந்து என்கிட்ட நான் சம்மதம் சொல்லிட்டேன். ஏன்னா எனக்கு தான் உங்களை புடிக்குமே!!. ஆனால் நீங்க உடனே சம்மதம் சொன்னது எனக்கு புடிக்கல. எப்படி உடனே உடனே பொண்ண மாத்தனதும் சம்மதம் சொல்ல முடியும்??. ம்ம்ம்??" என்று அவனை நிமிர்ந்து பார்த்து தலையை சற்று உயர்த்தி 'ஏன்?' என்பதை குறிப்பதாய் தனது வலது கையின் கட்டை விரலை மட்டும் உயர்த்தி மற்ற நான்கு விரல்களையும் மடக்கி வைத்து கேட்டாள்.

இப்போதும் சரவணாவிடம் இருந்து எந்த எதிர் வினையும் அவளுக்கு கிட்டவில்லை. ஆனால் ஆரம்பித்த தமிழால் இப்போது நிறுத்த முடியவில்லை. விரும்பவும் இல்லை.

"முதல்ல பொண்ணு தேடும் போது நான் கண்ணுக்கு தெரில. ஆனா உங்களுக்கு ஒரு பிரச்சனைனு வரும் போது, அந்த நேரத்துல யாரும் கிடைக்கலனு என்ன தேர்ந்தெடுத்த மாறியும் ஒரு எண்ணம். அதுவும் அந்த பொண்ணு போனதும் என்கிட்ட முதல்ல வந்து கேக்கல... பிரியாவ தான் பாத்தீங்க. அவ மறுத்த அப்பறம் தான் என்கிட்ட வந்தீங்க எல்லாம்... ஏன் நான் கடைசி ஆப்ஷனா இருந்தேன். நான் என்ன அவ்வளவு மட்டமா போய்ட்டனா??" என்று கேட்டு, தனது மனதில் உள்ள ஆதங்கத்தை எல்லாம் சொல்லி முடித்தாள்.

"அப்பறம் ஏன் உங்களை கல்யாணம் பண்ணிகிட்டேன்னு கேட்டீங்கனா... உங்கள எனக்கு புடிக்கும்... சின்ன வயசுல இருந்தே உங்க மேல விருப்பம். கல்யாணம் பண்ணிக்க ஆசை. அதான்... அதுக்காக மட்டும் தான். அதே போல் நீங்க எல்லார் முன்னாடியும் அவமானப்பட்டு நிக்கறது எனக்கு புடிக்கல. அதுக்காகவும் தான்" என்று தான் எடுத்த முடிவின் காரணத்தையும் சொன்னாள் தமிழ்.

அவளை பேச விட்டு பொறுமையாக எல்லாம் கேட்ட சரவணா, தற்போது அவளுக்கு விளக்கம் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தான்.

"தமிழு... இங்க பாரு... நான் உன்கிட்ட இத உறுதியா சொல்ல முடியும். அது வந்து என்னன்னா... பிரியாவ கல்யாணம் பண்ண நான் சம்மதிக்கல. என்கிட்ட வந்து என்ன சொன்னாங்கனா பிரியா சரி சொல்லிட்டா நீ அவளை கல்யாணம் பண்ணிக்கோனு. அதனால எனக்கு பிரியா மேலயும் கோவம் தான். நான் ஒத்துகலைனு தான் உன்ன கல்யாணம் பண்ண சொன்னாங்கனு நினைச்சேன். பிரியாவும் சம்மதிக்கலனு எனக்கு இப்ப தான் தெரியும்" என்று சொன்னவன், தேவ்வை சந்தித்தது, அவன் சொன்னது மற்றும் பிரியாவுடன் பேசியது என எல்லாம் சொன்னான் சரவணா.

அவனும் ஒப்பு கொள்ளவில்லை என்பதுவும், தன்னை திருமணம் செய்யவும் சரவணாவை கட்டாயப்படுத்தினார்கள் என்பதுவும், தமிழுக்கு ஆறுதலாய் இருந்தது என்றதில் எந்த பொய்யுமில்லை. அவள் முகம் சிறிது தெளிவு பெற்றது அதன் பின்.

அதையும் குறித்து கொண்ட சரவணா, மேலும் தொடர்ந்து, "ஆனால் முதல்ல சொந்தத்துல பாத்தாங்கடா. எனக்கு இருபத்தி ஏழு வயசுல பாக்க ஆரம்பிச்சாங்க நினைக்கறேன். அப்ப நீ சின்ன பொண்ணு... இருபது வயசு தான்... நான் தான் வேணாம் சொல்லிட்டேன்... சின்ன பொண்ணுனு... ஆனா உனக்கு சில ஆசைகள் இருக்கும் கட்டிக்க போறவன பத்தினு நினைச்சி தான் உன்கிட்ட பேசல... அதும் இல்லாம பிரியா வீட்டை உட்டு போனது கூட ஒரு மாறி வருத்தமா இருந்தது. என்னால தானோனு... இப்ப தான் அது குறைஞ்சி இருக்கு" என்று சொன்னவன், "உனக்கு என்ன புடிக்கும்னு முன்னாடி தெரியாது. தெரிஞ்சி இருந்தா உன்ன வருத்தப்படுத்தி இருக்க மாட்டேன். மன்னிச்சிக்க" என்று அவளது கைகளை பற்றி கொண்டு சொன்னான் சரவணா.

தமிழும் கண்ணை எடுக்காமல் அவனை தான் பார்த்து கொண்டு இருந்தாள்.

"ஆனா ஏன் முதல்ல பிரியாவ கேட்டாங்க... உன்ன கேக்காமானு எனக்கு சத்தியமா தெரியாதுடா... நாளைக்கு எல்லாம் வந்துடுவாங்க இல்ல. அவங்ககிட்ட கேட்டுக்கலாம். சரியா??" என்று அவளது தலையில் கை வைத்து கொண்டு கேட்டான்.

"ம்ம்ம்" என்று மண்டையை ஆட்டிய தமிழ், சிறிது நேரம் அப்படியே இருந்தாள். பின்னர் நினைவு வந்தவளாய், "சரி... சரி... நேரமாச்சி... மதிய சோத்துக்கு... வா... சாப்பிடுவயாம். எடுத்து வக்கறேன்" என்று சொல்லி அவனிடம் இருந்து பிரிந்து, உணவு பாத்திரங்களை எடுத்து கொண்டு வெளியே கூடத்திற்கு சென்றாள் தமிழ்.

அவனும் கை கால் கழுவி விட்டு வந்து சாப்பிட அமர்ந்தான்.

அவனுக்கு பரிமாறி கொண்டே, "மாமா... இப்பவும் நான் உனக்கு சின்ன பொண்ணு மாறி தான் தெரியுறனா இல்ல..." என்று சற்று தயக்கத்துடன் தான் கேட்டு கொண்டு இருக்க, சரவணா இடையிட்டான்.

"பொண்டாட்டி மாறி தான் தெரியுற" என்று சொல்லி, தனது கையில் எடுத்து வைத்து இருந்த ஒரு வாய் சாதத்தை அவளுக்கு ஊட்டி விட்டான். சிரிப்புடன் அவளும் வாங்கி உண்டாள்.

இருவருக்கும் சில கேள்விகள் இருந்தாலும், அது எல்லாம் அவர்கள் இருவருக்கும் இடைப்பட்ட கேள்விகள் இல்லை என்பதால், இருவரும் மிக சாதாரணமாக சொல்ல போனால் அன்னோனியமாக பேச ஆரம்பித்து இருந்தனர். அவர்கள் கேள்விகள் அனைத்திற்கும் நாளை அவர்கள் குடும்பத்தார் வந்தவுடன் விடைகள் தெரிந்து விடும்.

"சரி மாமா. நீ சாப்பிடு. நான் போய் எனக்கும் ஒரு தட்டு எடுத்துட்டு வரேன்" என்று சொல்லி விட்டு எழுந்து உள்ளே சென்றாள்.

சரவணா தமிழை காதலிக்கிறானா என்று அவனுக்கே தெரியவில்லை. ஆனால் அவள் மட்டும் தான் தன் மனைவி. தான் அவளுக்கு மட்டும் தான் சொந்தம் என்ற முடிவை அவன் திருமணத்தின் போதே எடுத்து விட்டான். ஆனாலும் அவளுக்கு பிடிக்குமா என்ற உறுத்தல் இருந்தது. அதுவும் இப்போது இல்லை. அவன் மனதில் இருந்த தடைகள், குழப்பங்கள், கவலைகள் எல்லாம் முடிந்த போல் ஒரு எண்ணம் அவனுக்கு. அதனால் புன்னகை முகத்துடன், தனது மனைவியுடன் அமர்ந்து உண்டான்.

தனது ஹோட்டல் அறையில், தேவ் உணவை ஆர்டர் செய்து விட்டு அமர்ந்து, தன் தாய்க்கு அழைத்தான்.

அந்த பக்கம் அவர் எடுத்தவுடன், "அம்மா" என்று அவசரமாக அழைத்தான்.

"ஏன் இப்படி கத்துற?? என்ன ஆச்சி??. ஆமா சாப்பிடுற நேரம் ஆச்சி. சாப்பிட்டயா??" என்று தான் ஒரு தாய் என்பதை நிரூப்பித்தார் அம்பிகா.

"ஆன்... இன்னும் இல்ல மா. இப்ப தான் ஆர்டர் பண்ணி இருக்கேன். வந்துடும் ஒரு பத்து நிமிடத்துல" என்றவன், "அம்மா.. நான் போய் கீர்த்து மாமாட்ட பேசிட்டேன் மா" என்று அங்கே நடந்தவைகளை சொன்னான் தேவ்.

அவன் சொன்னதை எல்லாம் பொறுமையாக "ம்ம்ம்" கொட்டி கொண்டே கேட்டார் அம்பிகா.

"ஆனா அம்மா... இந்த கீர்த்து ஏன் என் மேல கோவமா இருக்கானு தான் எனக்கு தெரியல மா. உனக்கு ஏன்னு தெரியுதா??" என்று கேட்டான் தேவ்.

"டேய் அமிர் பையா... எனக்கு எப்படி டா தெரியும்" என்று அம்பிகா கேட்க, "அப்பறம் அன்னிக்கு மட்டும் அவங்க கல்யாணத்துல இப்படி தான் எல்லாம் நினைச்சி இருப்பாங்கனு சொன்ன" என்று கேட்டான்.

"டேய்... அது பெரியவங்க அவங்க சூழ்நிலை வச்சி அப்படி நினைச்சி இருப்பாங்கனு தோணுச்சி. அதான் சொன்னேன். ஆனா இப்ப இருக்க பசங்க எல்லாம் என்ன யோசிக்கறீங்கனே புரிய மாட்டிங்குதே. அப்பறம் எப்படி நான் கணிக்கறது. நீ பேசாம அவளுக்கு போன் பண்ணி பேசி பாரு" என்றார் அவர்.

"ம்ம்.. ஆனா அம்மா" என்று அவன் பேசி கொண்டு இருக்கும் போதே அவன் அறை கதவை தட்டினார் யாரோ.

"அம்மா ஒரு நிமிடம். சாப்பாடு வந்துடுச்சினு நினைக்கறேன்" என்று சொல்லி கொண்டே போய் வலது கையால் கதவை திறந்து உணவை வாங்கி கொண்டான்.

"சரி பா... முத சாப்பிடு... சாப்பிட்டு அப்பறம் கீர்த்திக்கு போன் பண்ணி பேசு" என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தார்.

'ம்ம்... நான் பண்ணா தான் அவ எடுக்க மாட்டீங்கறாளே' என்று முணங்கி கொண்டே சாப்பிட ஆயுத்தமானான் தேவ்.


கொடுப்பாள்...
 
Last edited:
  • Like
Reactions: Ums

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இடம் 27

கீர்த்தி தனது சொந்த ஊருக்கு வந்து சேரும் போது, மணி கிட்டதட்ட இரவு பத்து முப்பது. போக்கு வரத்து அதிகமாக இல்லாமல் தெருவே வெறிச்சென்று இருக்க, பயப்படாமல் தனது இல்லம் நோக்கி நடை போட்டாள்.

தனது வீட்டிற்கு சென்று பார்க்க, வீடு பூட்டி இருந்தது. எங்க போய் இருப்பாங்க?? என்று ஒரு தனக்குள்ளே கேட்டு கொண்டு, தனது பாட்டி வீட்டை நோக்கி நடந்து சென்றாள். இங்கே இல்லை என்றால் கண்டிப்பாக அங்கே தான் இருப்பார்கள் என்று அவளுக்கு தெரியும் அதனால். ஆனால் அங்கேயும் அவளால் தனது பெற்றோரை காண இயலாது என்று தெரியாமல் இருந்தாள்.

சரவணாவும், தமிழும் இரவுணைவை முடித்து படுத்து கிட்டதட்ட இரண்டு மணி நேரங்களுக்கு மேல் இருக்கும். ஆனால் இன்னும் இருவரும் உறங்கவில்லை. உறக்கம் வரவுமில்லை.

இத்தனை நாள் இல்லாமல் இன்று ஒரு அறையில் படுக்க தமிழுக்கு சிறு தயக்கம் இருந்தது. தங்களுக்குள் இருந்த மன வேறுபாட்டை பேசி தீர்த்து கொண்டாலும், உடனடியாக மண வாழ்க்கையில் இணைய மனம் வரவில்லை. வாழ்க்கையில் கடந்த நாட்கள் திரும்ப வராது என்று புரிந்து தான் தமிழ், சரவணாவிடம் அனைத்தையும் கூறினாள். இருந்தாலும் இந்த தயக்கம்... ஏன் என்று தான் புரியவில்லை அவளுக்கு.

சரவணாவோ, நாளை தங்கள் குடும்பத்தார் வந்தவுடன், அவர்களிடம் என்ன எல்லாம் கேட்க வேண்டும், அடுத்து பிரியாவை சென்று அழைத்து வர வேண்டும், அடுத்தது பிரியாவுக்கும் தேவாவுக்கும் திருமணம் குறித்து பேச வேண்டும் என்ற எண்ணங்களில் முழ்கி இருந்தான். தனக்கருகில், தூக்கத்தை துளவி கொண்டு இருக்கிறாள் என்று புரியாமல் தனது எண்ணங்களில் மிதந்து கொண்டு இருந்தான்.

விடிய விடிய முழித்து இருப்பார்களோ என்னவோ தெரியவில்லை... அதற்கு இடம் கொடாமல், 'டக்... டக்... டக்...' என அவர்களது வீட்டு கதவு தட்டப்பட்டது.

இந்த நேரத்தில் யாராய் இருக்கும்?? என்ற எண்ணத்துடன் தமிழ் கதவை திறக்க செல்ல சரவணா தடுத்து, "நீ இரு. நான் போய் பாக்கறேன்" என்று சென்று கதவை திறந்தான்.

எதிரே கீர்த்தி பிரியம்வதா, சோர்வுடன் நின்று இருந்தாள்.

"ஏய்!!!. குட்டி... என்ன நீங்களே கிளம்பி வந்துட்டீங்களா" என்று மகிழ்வுடன் கேட்டான் சரவணா.

"ஆமா மாமா... நானே வீட்டில் இருந்து பேசனும் தோணுச்சி மாமா" என்று சொன்னவள், "எங்க மாமா தமிழ் அக்கா??. அம்மா பாட்டி அப்பா எல்லாம்??" என்று கேட்டாள்.

அப்போது தமிழ் வந்து, "நீ உள்ள வாடி முதல்ல" என்று உள்ளே இழுத்து செல்ல, சரவணா கதவடைப்பு விட்டு வந்தான்.

"தமிழு எப்படி இருக்க??" - புன்னகையுடன் பிரியா.

"யாரை கேட்டுடி யார்கிட்டயும் சொல்லாம வீட்டை விட்டு போன??" என்று முறைப்புடன் கேட்டு கொண்டே பிரியாவின் வலது கையின் முழங்கைக்கு மேல இருந்த சதையை பற்றி கிள்ளினாள் தமிழ்.

"ஆஆஆ... அய்யோ... அம்மா... வலிக்குது..." என்று கத்தியவள், அங்கே இருந்த அவளது தாய் மாமனை பார்த்து, "என்ன மாமா சும்மா வேடிக்க பாத்துட்டு இருக்க வந்து காப்பாத்து" என்று கூறினாள் பிரியா.

"ஏண்டி... வலிக்கற மாறியே கிள்ளல... அதுக்கே இத்தனை ஆர்பாட்டம் பண்ற... நடிப்பு கள்ளி" என்று சொன்னவள், "நாட்டுல எத்தனை நடக்குது. அப்டி என்ன ஆத்திரம்?? சொல்ல கொள்ளாம போற அளவுக்கு??" என்று கேட்டாள் தமிழ்.

"தெரில தமிழ்... அப்ப நான் இங்க இருக்கறது சரி இல்ல தோணுச்சி... நான் அதிகப்படியா இருக்க மாறி இருந்தது" என்று சோகமான குரலில் கூறினாள்.

"சரி... சரி... விடு... இப்ப எல்லாம் சரி ஆகிட்டுல்ல... எதுனா மீதி இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம். எல்லாம் வந்த அப்பறம்" என்றான் சரவணா.

அதுவரை சோகமாக இருந்த பிரியா, "ஆமா எல்லாம் எங்க போய்ட்டாங்க?? யாரையும் காணோம்" என்று அப்போது தான் நினைவு வந்து கேட்டாள்.

"ரொம்ப சீக்கிரம் கேட்டுட்ட..." என்ற தமிழ், "சாப்பிட்டயா??" என்று கேட்டாள்.

'இல்ல' என்று உதட்டை பிதுக்கி தலையை ஆட்டினாள் பிரியா.

"சரி இரு. எதுனா செஞ்சி எடுத்துட்டு வரேன்" என்று சமையலறையை நோக்கி சென்றாள்.

பிரியாவின் அருகே வந்த சரவணா, "என்ன குட்டி?? தேவ்கிட்ட பேசுனயா??" என்று கேட்டான்.

"இல்ல மாமா" - பிரியா.

"நல்ல பையன் தான் மா. எனக்கு சரி தான். ஆனாலும் வீட்டுல பேசலாம். இந்த சின்ன காரியம் பண்ணதுக்கு கோபப்படாதடா. உனக்கு நல்லதுனு நினைச்சி தான பண்ணான்" என்று சொன்னான்.

தேவ்வை பற்றி விசாரிக்க பணிந்து இருந்த சரவணா தோழன், "மேலோட்டமா விசாரிச்ச வர நல்லவிதமா தான் சொன்னாங்க" என்று சொன்னவன் மேலும் மதன் பற்றியும், அவனுக்கு இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நடிக்கவிருப்பது பற்றியும், தேவ்வின் தாய் தந்தை பற்றி எல்லாம் கூறினான். அது எல்லாம் திருப்திகரமாக இருக்கவும், வீட்டில் பேசி அவர்களுக்கே திருமணம் செய்ய எண்ணி இருந்தான் சரவணா.

அவள் யோசனையில் இருக்க, "சரி சாப்பிட்டு நீயும் தமிழும் படுத்துக்குங்க" என்று சொல்லி விட்டு ஒரு கயிற்று கட்டிலை எடுத்து வாசலில் காத்தாட படுத்து கொண்டான்.

தமிழ் எடுத்து வந்த உணவை உண்டு விட்டு, அவளுடன் சென்று சரவணாவின் அறையில் படுத்து கொண்டாள் பிரியா.

அடுத்த நாள் காலை ஒன்பது மணிக்கு தான் எழுந்தாள் பிரியா.

எழுந்து வெளியே வந்து பார்க்க, அங்கே தேவ் அமர்ந்து தமிழிடமும், சரவணாவிடமும் பேசி கொண்டு இருந்தான்.

"என்ன தமிழ் அண்ணி நீங்க??. உங்க தங்கச்சிய இப்படியா இவ்வளவு நேரம் தூங்க வச்சி அழகு பாக்குறது" என்று கேட்டு கொண்டு இருந்தான்.

"அட விடுங்க தேவ், நேத்து ரொம்ப நேரம் கழிச்சி தான.. அதுவும் தூரம் பஸ்ல வந்து இருக்கா!!. களப்பா இருக்காதா??" என்று பதிலுக்கு பேசி கொண்டு இருந்தாள் தமிழ்.

அவர்கள் இவளது தூக்கத்தை பற்றி பேசி கொண்டு இருந்தது கூட இவளுக்கு ஒன்றும் தோன்றவில்லை. அது என்ன அண்ணி?? என்று தான் யோசனையாக அவர்களை பார்த்தாள்.

"என்ன தமிழ்??. புதுசா வந்தவங்க எல்லாம் உன்ன அண்ணினு கூப்பிடுறாங்க" என்று கேட்டாள் பிரியா.

அதற்கு தமிழ் பதில் சொல்லும் முன் முந்தி கொண்ட தேவ், "அது ஒன்னும் இல்ல கீர்த்து", என்று தமிழை காட்டி, "இவங்களுக்கு நான் தம்பியா இருந்தா, நீ எனக்கு தங்கச்சி ஆகிடுவியாம்" என்றவன் தொடர்ந்து, சரவணாவை காட்டி, "இவங்களுக்கு தம்பியா இருந்தா கட்டிக்கும் முறை ஆகிடுவியாம். அதான் இவருக்கே தம்பியா இருக்கலாம் முடிவு பண்ணி, இவங்கள அண்ணியா தத்து எடுத்துகிட்டேன்" என்றான் தேவ்.

அவன் சொன்னதை கேட்டு முறைத்த பிரியா, அதற்கு மேல் அவருக்கு முக்கியதுவம் கொடுத்து அவனை நோக்காமல், "எல்லாரும் எப்ப வருவாங்க??" என்று கேட்டாள்.

"மதியத்துக்கு மேல ஆகிடும்னு சொன்னாங்க" என்று தமிழ் பதில் தர, "ம்ம்ம்" என்று தலையை ஆட்டினாள்.

அனைவரும் அமர்ந்து காலை உணவை முடிக்க, சரவணா, "நான் வெளியே போயட்டு வரேன்" என்று சொல்லி விட்டு கிளம்பினான்.

தமிழும் தனது சமையலறை அரசாங்கத்தில் நுழைய, தேவ், "நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனும் கீர்த்து" என்று சொன்னான்.

கீர்த்தி, "இல்ல..." என்று சொல்ல ஆரம்பிக்க, அவளது கை பிடித்து, வெளியே தோட்டத்திற்கு அழைத்து சென்றான்.

"சொல்லு கீர்த்து!!. நான் என்ன பண்ணிட்டேன்னு கோபமா இருக்க??" என்று கேட்டான்.

"என்ன பண்ணிட்டயா?? நீ என்ன பண்ணல??" என்று கேட்டவள், அவன் இன்னும் புரியாமல் இருக்க, "யார கேட்டு இங்க வந்த??. எங்க மாமாகிட்ட நீ எதுக்கு பேசுன?? முதல்ல நீ யாரு இங்க வந்து என்ன பத்தி பேச??" என்று அவனை பார்த்து சரமாரியாக கேள்விகளை கேட்டாள் கீர்த்தி.

'நீ யாரு??' என்று அவள் கேட்டதும், தேவ்வுக்கு ஒரு மாதிரியாகி விட்டது.

"கீர்த்து... நான் உனக்காக தான்..." என்று ஏதோ சொல்ல வர, அதை விடாமல், "என்ன எனக்காக... நான் உன்ன நம்பி தான என்னை பத்தி எல்லாம் சொன்ன... ஆனா நீ என்ன பண்ண... என் வாழ்க்கைய நீ எப்படி உன் கையில எடுக்கலாம்??. ம்ம்ம்??" என்று கேட்டாள்.

"ஆமா.. ஆனா உன்ன உன் குடும்பத்து கூட சேத்து வக்க தான்... நான் இங்க வந்தேன்" என்று அவன் இன்னும் தன்னிலை விளக்கம் கொடுத்தான்.

ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் கீர்த்தி, "இல்ல.. உனக்கு புரியல தேவ்... நீ எனக்கு நல்லது பண்ணறதா நினைச்சி... என் வாழ்க்கைல எனக்குனு இருக்க சில கடமைகள், உரிமைகள நீ எடுத்துக்கற... எனக்கு நீ எப்படியோ... ஆனால் என் குடும்பத்துக்கு நீ யாரோ தான!!!.. இருபது வருடமா நம்ம வளத்த பொண்ணு நம்ம கிட்ட பேசறதுக்கு பயந்துகிட்டு, வேற ஒருத்தங்க அதுவும் பாத்து பழகி வெறும் மூணு மாசமே ஆன ஒருத்தங்க துணையை தேடி இருக்குனு வருத்தப்படுவாங்கல" என்று சொன்னவள், "அவங்க மாமாவ கல்யாணம் பண்ணிக்க சொன்னப்ப கூட நான் யாரையும் எனக்கு உதவி பண்ணுங்கனு கேக்கல... என்னோட முடிவ நானே தான் சொன்னேன். அது என்னோட உரிமை, அவங்களுக்கு என்ன புரிய வக்கறது என்னோட கடமை. அத நான் யாருக்கு விட்டு கொடுக்க விரும்பல" என்றாள்.

அதை கேட்டு என்ன சொல்வது என்று புரியாமல் தேவ் இருக்க, "உண்மையில நீ எனக்கு உதவி பண்ணனும் நினைச்சி இருந்தா, நான் பண்ண தப்ப எனக்கு புரியல வச்சி, அத என்னையே சரி பண்ண வச்சி இருக்கனும். உனக்கு புரியுதா??. ஒருத்தங்களோட நல்லது கெட்டது எல்லாம் அவங்க தான் அனுபவிக்கனும். நான் பண்ண தப்புக்கு உனக்கு தண்டனையோ, நீ பண்ண நல்லதுக்கு எனக்கு சன்மானமோ கிடைக்காது. அது தேவையுமில்ல" என்று சொல்லி விட்டு வீட்டின் உள்ளே சென்று விட்டாள் கீர்த்தி.

கீர்த்தி இவ்வாறு எல்லாம் நினைக்க கூடும் என்று தேவ் சத்தியமாக கனவில் கூட எண்ணவில்லை. அவளுக்கு உதவ தான் நினைத்தான். அவளை மகிழ்விக்க எண்ணினான். அதற்காக தான் இங்கே வந்து சரவணாவிடமும் பேசினான். ஆனால் அதுவே அவளை, அவனை பார்த்து, 'நீ யார்??' என்று அவன் நினைக்கவில்லை. அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தேவ் இருக்க, அவன் தோளின் மீது ஒரு கரம் பதிந்தது.

கொடுப்பாள்...
 
  • Like
Reactions: Ums
Status
Not open for further replies.
Top