All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உன்னில் இடம் கொடுப்பாயா?? - கதை திரி

Status
Not open for further replies.

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உன்னில் இடம் கொடுப்பாயா?? - கதை திரி
 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இடம் 1

"ஹேய் ஹாய்"

"குட் மார்னிங்"

"குட் மார்னிங் கீர்த்தி"

"ஹாவ் எ நைஸ் டே கீர்த்தி"

"குட் மார்னிங் கீத்ஸ்"

"ஹேய் கீரிக்குட்டி!! வா வா குட் மார்னிங்..."

என பல குரல்களுக்கு பதில் குரல் கொடுத்து கொண்டே தன் இருக்கையில் அமர்ந்தாள் அவள்.

கீர்த்தி, கீத்ஸ் என எல்லோராலும், கீரிக்குட்டி என அவளது அருகில் அமர்ந்து இருக்கும் அவளது மித்ரன், மிதுனால் அழைக்கப்படுபவள் தான் கீர்த்தி பிரியம்வதா, நமது கதையின் மையம். இவளது வாழ்வில் நடந்த, நடந்து கொண்டிருக்கும், இனி நடக்கவிருக்கும் நிகழ்வுகளையே இந்த கதையின் வாயிலாக காண போகிறோம்.


34699

இது போல் மரியாதை தான் மிதுனுக்கும் கிடைக்கும். இந்த அலுவலகம் மூன்று தளங்களில் இருக்கிறது. ஒவ்வொரு தளமும் ஒவ்வொரு இணைய பயன்பாட்டு செயலி(Application) சம்பந்தப்பட்டது. அந்த மூன்று தளங்களில் உள்ள அனைத்து நபர்களுக்கும் கீர்த்தி மற்றும் மிதுனை நன்கு தெரியும். இவர்கள் இருவரும் தான் இந்த அலுவலகத்தின் கன்டன்ட் ரைட்டர்ஸ்(Content Writers). இவர்களுக்கு கணிணி சம்பந்தப்பட்ட அறிவும், அதாவது டெவலப்பர்ஸ்(Developers) கூறுவதை புரிந்து கொள்ளும் திறமையும், அதை மற்றவர்கள் புரிந்து கொள்ளும்படி எழுதும் ஆங்கில புலமையுமே முதன்மையான தகுதியாகும்.

இவர்களது பணி என்னவென்றால், அந்த நிறுவனத்தின் மூன்று செயலிகளில் உள்ள அனைத்து தகவல்களும் கீர்த்தி மற்றும் மிதுனிடம் பகிரப்பட்டு அது டாக்குமென்ட் செய்யப்படும். மேலும் ஒவ்வொரு செயலியின் அம்சங்கள்(Features) அனைத்தும் அழகான வார்த்தைகளால் கோர்க்கப்பட்டு, அதன் பயன்பாட்டை வாடிக்கையாளர்களுக்கு(Customers) புரிந்து கொள்ளும் விதமாக எளிமையாகவும் தொகுத்து வழங்க வேண்டும்.

ஹம்ம்... இவர்களது பணியை பற்றி எளிமையாக விளக்க வேண்டுமெனில், நாம் மிக்ஸி அல்லது க்ரைண்டர் போன்ற சாதனங்கள் வாங்கும் போது அதில் சிறிய அளவிலான ஒரு புத்தகம் இருக்கும். அதில் பழச்சாறு செய்ய இந்த ஜாரை(Jar) உபயோகப்படுத்தவும். இதை திருப்பினால் அதி வேகமாக அரைப்படும் என்பது போன்ற தகவல்கள்/குறிப்புகள் இருக்கும் அல்லவா!!. அது போல் குறிப்புகளை இணைய செயலிகளுக்கு எழுதுவதே இவர்களது பணி.

கீர்த்தி தனது இருக்கையில் அமர்ந்தவுடன், "இன்னிக்கு என்ன லேட் கீரிக்குட்டி??. என்னுடனே வந்து இருக்கலாம் இல்ல" என்று கேட்டான் மிதுன்.

கீர்த்தி மற்றும் மிதுனின் வீடும் ஒரு அப்பார்ட்மென்ட் தான். தினமும் அவனுடன் தான் வருவாள் மற்றும் வீட்டிற்கும் போவாள். இன்று தான் நானே வரேன் என்று கூறி விட்டாள்.

அவன் ஒவ்வொரு முறை கீரிக்குட்டி எனும் போதும் அவளுக்கு கோபம் பொத்து கொண்டு வரும் தான். கூடவே ஒரு வித உரிமை உணர்வும் சேர்ந்து தோன்றும். ஒருவேளை அது பொய் கோபமோ!!?? அல்லது தற்போது உரிமையுடன் அவளிடம் கேலி பேசி கிண்டல் செய்வது அவன் மட்டும் தான் என்பதால் இருக்குமோ என்னவோ!!!.

எத்தனையோ முறை அவனிடம் சொல்லி பார்த்து விட்டாள். ஆனால், என்ன சொன்னாலும் அவன் கேட்க மாட்டான். அது மட்டுமில்லாம் அவளின் மீது மிகுந்த அக்கறை கொண்டவன். கீர்த்தியை விட ஐந்து வயது தான் பெரியவன். ஆனால் ஏதோ கீர்த்தி அவனே பெற்றெடுத்த பிள்ளை போல் பார்த்து கொள்வான். சிலரை காரணம் இல்லாமலே நமக்கு நெருங்கியவர்களாக எண்ண தோன்றும் அல்லவா!!?? அது போல் தான் மிதுனுக்கு கீர்த்தி மீது தோன்றியதும். அவனுக்கு எந்த தேவை என்றாலும் அவளை தான் நாடுவான். அதே போல் தான் அவளும். ஒன்றும் புரியாமல் இங்கே அவள் வேலைக்கு சேர்ந்த போது அவன் தான் அவளுக்கு துணையாக இருந்து பார்த்து பார்த்து அனைத்தையும் செய்தான்.

இங்கே பணிக்கு சேர்ந்த கடந்த ஆறு மாதங்களாக கீர்த்தி, தனது வீட்டிற்கு சென்றதில்லை. அலைபேசியில் பேசியதை போல் தெரியவில்லை. ஏன் அவளது குடும்பத்தை பற்றி கூட பேசியது இல்லை. அவளது குடும்பத்துடன் ஏதோ பிரச்சனை போல என்பதை மட்டும் புரிந்து கொண்ட மிதுனும் அவளிடம் அதை பற்றி கேட்க மாட்டான்.

மேலும் அவளது குழுவில் அவளை தவிர இருக்கும் ஒரே ஒரு நபர் அவன் மட்டும் தான். அதனால் அவர்களுக்குள் இன்னும் இன்னும் தான் நெருக்கம் ஏற்பட்டது.

மிதுன் குடும்பம் சிவகாசியில் உள்ளது. இவன் மட்டும் வேலை நிமித்தமாக சென்னையில் உள்ளான். அவன் அலுவலகம் அருகிலே ஒரு அப்பார்ட்மென்ட்டில் நண்பர்களுடன் இணைந்து தங்கி உள்ளான். அவனது வீட்டிற்கு மூன்று வீடுகள் தள்ளி கீர்த்தி அவளது அலுவலக தோழமைகளுடன் தங்கி உள்ளாள்.

முதலில் ஒரு விடுதியில் தங்கி இருந்தாள், அதன் பின் அலுவலக நண்பர்கள் கிடைக்கவும் அவர்களுடன் குடி பெயர்ந்து விட்டாள். அவள் தங்கி இருப்பது இரண்டு படுக்கை அறை வசதி கொண்ட வீடு. பொதுவாக இந்த மாதிரி வீடுகளில் தங்கும் நபர்கள் அறைக்கு இவ்வளவு தொகை என மொத்த வாடகையை பிரித்து விடுவர். கீர்த்தி தனக்கு தனி அறை வேண்டுமென கூறி அந்த அறைக்கான தொகையை கொடுத்து விடுவாள். மற்றொரு அறையை இருவர் பகிர்ந்து கொண்டு இருந்தனர். அதில் ஒருவள் ஒரு வாரத்திற்கு முன்பு தான் அறையை காலி செய்து விட்டு சென்றாள். அவளுக்கு நாளை மறுநாள் திருமணம். அதற்காக நாளை அவளது வீட்டுக்கு பள்ளி மற்றும் அலுவலக தோழமைகள் அனைவரும் செல்ல உள்ளனர்.

கீர்த்திக்கு அங்கு செல்ல விருப்பம் இல்லை என்றாலும் அவளால் ஒரு அளவுக்கு மேல் தவிர்க்க முடியவில்லை. அவளுக்கு இந்த கல்யாணம் என்ற வார்த்தையே ஒரு வித ஒவ்வாமையை ஏற்படுத்தி விடுகிறது.

சரி நாளை பிரச்சனை அதை நாளை பார்த்து கொள்ளலாம்.

தற்போது இருக்கும் பிரச்சனை...

இவர்கள் குழுவுக்கு புதிதாய் ஒரு நபரை தேர்ந்தெடுக்க உள்ளனர். ஹெச் ஆர் டீம் போட்டியாளர்களுக்கு எழுத்து தேர்வு வைத்து அதில் தேர்வானார்களின் ப்ரொபைலை மிதுனுக்கு அனுப்பி இருந்தனர். அவனுடன் இணைந்து கீர்த்தியும் அதை பார்க்க இருந்தாள்.

அதற்கு முன் அவனது கேள்விக்கு அவள் பதிலை கூறினாள்.

"இல்ல மித்து. சாப்பிட லேட் பணணிட்டேன். அதான்" என்று கீர்த்தி பதிலை சொல்லி விட்டு வேலையை தொடர்ந்தாள்.

"ஹேய் மித்து.. இந்த பையன் நல்லா எஸ்ஸோ(Eassy) எழுதி இருக்கான். ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் (Spelling Mistakes) கூட கம்மியா தான் இருக்கு" என்று ஒரு பையனின் எழுத்து தேர்வு விடை தாளை அவனிடம் காட்டினாள்.

"இந்த பொண்ணும் நல்லா பண்ணி இருக்கு. இதை பாரு" என்று அவன் ஒரு பெண்ணின் விடை தாளை அவளிடம் நீட்டினான்.

இருவரும் அதே போல் பேசி ஒரு ஐந்து நபர்களை அடுத்த கட்ட தேர்வுக்கு தேர்ந்தெடுத்தனர்.

அதில் இருந்து மூவர் மட்டும் அதற்கு அடுத்த கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டு இறுதியாக இரு நபர்கள் ஒரு மனதாக மிதுனால் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட இரு நபர்களை பற்றியும் ஹெச் ஆர் டீமுக்கு மெயில்(Mail) அனுப்பி விட்டான் மிதுன். அதன் பின் அவர்கள் கல்லூரியில் பேசி விட்டு எப்போது இங்கே வேலையில் இணைவார்கள் என்பது பற்றிய தகவல்களை தருவார்கள்.

இந்த வேலை எல்லாம் முடிப்பதற்கே மதிய உணவு இடைவேளையே வந்து விட்டது.

உணவு முடித்து விட்டு கீர்த்தி தனது இடத்திற்கு வருவதற்கும், கீர்த்தியின் லேன்ட்லென் எக்ஸ்டென்ஷன் ஒலிப்பதற்கும் சரியாய் இருந்தது.

லேன்டலைன் எக்ஸ்டென்ஷன் என்பது வேறு ஒன்றுமில்லை. நமது சாதாரண லேண்ட்லைன் போல தான். ஆனால் அதிலிருந்து அவர்களது அலுவலகத்திற்குள் மட்டுமே பேசி கொள்ள முடியும்.

"ஹலோ" - கீர்த்தி

"ஹேய் கீர்த்து... ஒரு புது அம்சம்(Feature) எங்க செயலியில் பண்ணி இருக்கு. அதை டாக்குமென்ட் பண்ணனும். நீ ப்ரீயா இருந்தா சொல்லு... நான் எக்ஸ்ப்ளைன் பண்ணுறேன்" என்றார் அந்த பக்கம் இருந்தவர்.

"இல்ல... நான் இப்போ வரேன்" என்று அவரிடம் சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தாள்.

அதன் பிறகு மிதுனிடமும் சொல்லி விட்டு, ஒரு ரெக்கார்டர் மற்றும் தனது மடி கணிணியையும் எடுத்து கொண்டு அவரது இருப்பிடம் சென்றாள்.

ஹான்... இதை சொல்லல பாருங்களேன்... கீர்த்தியின் உயர் அதிகாரி/மென்டர்/மேனேஜர் என எல்லாம் மிதுன் தான்.

மீண்டும் தனது இடத்திற்கு வந்த கீர்த்தி அவரிடம் கேட்டு வந்த தகவல்களை எல்லாம் மிதுனிடம் கூறி, அதை எவ்வாறு ஒருங்கிணைந்து எந்த விதத்தில் கொடுப்பது என மிதுனுடன் கலந்துரையாடி முடிவு செய்து விட்டு அதற்கான வேலைகளை தொடங்கினாள்.

அந்த வேலைகளிலே நேரங்கள் கடந்து, ஆறு மணியை தொட்டு இருந்தது.

தினமும் மிதுனுடன் தான் வீட்டிற்கு செல்வாள் என்பதால் அவளை அழைத்து கொண்டு இருந்தான்.

"ஹேய் கீரி குட்டி... சீக்கிரம் வா.. உன்ன வீட்டுல விட்டுட்டு நான் வெளியே போகனும். மீதியை நாளைக்கு பாத்துக்கலாம். வா." என்று அவரை துரிதப்படுத்தினான்.

"ஹான்... இதோ... வந்துட்டேன்... வந்துட்டேன்... வா போகலாம்" - கீர்த்தி.

"நாளைக்கு நான் மேரேஜ்க்கு வர மாட்டேன்டா. பாத்து போயிட்டு வரனும். எப்படியும் உன் ஹவுஸ் மேட் வருவாங்க இல்ல??" - மிதுன்.

"ஆமா மித்து... வருவாங்க" - கீர்த்தி.

"அப்போ சரி" என்றவன் தொடர்ந்து, "எப்படி கிளம்பறீங்க??" என்று கேட்டான்.

"நாளைக்கு ஆபிஸ் வந்துட்டு, ஈவ்னிங் ஒரு நாலு மணி போல வீட்டுக்கு வந்து அப்பறம் கேப் புக் பண்ணி அதுல போயிட்டு வந்துடுவோம். இன்னும் 2 பேர் எங்க கூட வருவாங்க" என்று நாளை எவ்வாறு கல்யாணத்திற்கு செல்வார்கள் என்று கூறினாள் கீர்த்தி.

"சரி" என்று சொல்லி விட்டு, அவளை அப்பார்ட்மென்ட் வாசலில் இறக்கி விட்டு விட்டு தனது வேலையை பார்க்க சென்று விட்டான் மிதுன்.

"வீடு பத்தின வேலையா??" - கீர்த்தி.

"ஆமாடா... என்னனு முடிவு பண்ணிட்டு சொல்லறேன்டா. இப்போ நீ உள்ள போ" - மிதுன்.

"மித்து... வரும் போது வெளிய சாப்பாடு வாங்கிட்டு வரயா??" - கீர்த்தி.

அவனிடம் கேட்பதற்கு அவளுக்கு எந்த தயக்கமும் ஏற்பட்டது இல்ல. அவனை தன் நெருங்கிய உறவென அவள் மனம் எண்ணுகிறது.

சிரிப்புடன், "சரி... என்ன வேணும்??" என்று அவன் கேட்க, "ஏதோ ஒன்னு. எனக்கு இன்னிக்கு வெளிய சாப்பாடு சாப்பிடனும் தோணிடுச்சி. அதான்" என்று பதில் கொடுத்தாள்.

"சரி... வாங்கிட்டு வரேன்" என்று அவளிடம் சொல்லி அவளது தலையை கலைத்து விட்டு வெளியே கிளம்பினான் மிதுன்.

கொடுப்பாள்...

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்...

நன்றி!!!

இங்ஙனம்
திரா ஆனந்த் 🍀
 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இடம் 2

வீட்டிற்கு வந்ததும் கீர்த்தி ப்ரெஸ் ஆகி விட்டு, மிதுனின் அம்மாவிற்கு அழைத்தாள்.

34700

தனது வீட்டுடன் தான் அவள் பேசுவதில்லை. ஆனால் மிதுனின் வீட்டாரிடம் அவள் அடிக்கடி பேசுவாள். அதும் மிதுனின் அக்கா மகளுக்கு அவள் ஃபேவரேட்(Favriote) கூட.

"ஹலோ... அம்மா... எப்படி இருக்கீங்க??" - கீர்த்தி.

"நல்லா இருக்கேன்மா. நீ எப்படி இருக்க??" - மிதுன் அம்மா.

"நல்லா இருக்கேன் மா. அப்பா, அக்கா அப்பறம் எல்லாரும் நல்லா இருக்காங்களா??" - கீர்த்தி.

"எல்லாம் நல்லா இருக்காங்க. நீ தான் ரொம்ப நாளா போன் பண்ணல." - மிதுன் அம்மா.

போன் பண்ணல என்று சொன்னவுடன் அவளின் நினைவு பின்னோக்கி சென்றது. ஒரு வருடத்திற்கு முன் அவளது நாட்கள், ஒரு நாளில் மூன்று வேளையும் உணவு உண்கிறாளோ!! இல்லையோ!! தனது வீட்டிற்கு நேரம் தவறாமல் காலை மதியம் இரவு என் மூன்று வேளையும் அழைத்து பேசி விடுவாள். அப்படி பேசுவது ஏதோ அவளுக்கு அவள் குடும்பத்துடனே இருப்பது போலவும், ஒரு வித பாதுகாப்பையும் தருவதாய் உணர்வாள்.

ஆனால் இப்போது??? அவ்வாறு இல்லை என்றாலும், அந்த உணர்வை மிதுனிடம் உணர்கிறாள் என்பது தான் விந்தையிலும் விந்தை.

அவள் எதுவும் பேசாமல் இருக்கவும், மிதுன் அம்மாவே "ஹலோ... கீர்த்தி... கீர்த்திமா... லைன்ல இருக்கயா??" என்று கேட்டார்.

"ஹான்... ஆன்... இருக்கேன்மா... அது வந்து கொஞ்சம் வேலை இருந்ததுமா. அதான்மா அடிக்கடி கால்(call) பண்ண முடியல" என்று பதில் மொழி கூறினாள் நினைவு வந்தவளாய் கீர்த்தி.

"சரி சரி மா. அது எல்லாம் ஒன்னும் இல்ல. அப்படியே கொஞ்சம் மிதுன் என்ன பண்ணறானு பாத்து சொல்லு மா??. இரண்டு நாளா அவனும் ஒரு போனும் பண்ணல. நான் பண்ணாலும் வெளியே இருக்கேன் வந்து கூப்படறேன் சொல்லிட்டு கூப்பிடவே இல்ல" என்றார் அவர்.

"இல்லமா... மித்து வீடு கட்டறது விசயமா வெளியே சுத்திட்டு இருக்கறாரு... இரண்டு நாளா ரொம்ப லேட்டா தான் வீட்டுக்கு போறாரு போல. கதிர் அண்ணா சொன்னாங்க. ஆனால் இன்னிக்கு ஒன்பது மணிக்கு முன்னாடி வந்துடுவாங்க. நான் ப்ளான் பண்ணி நைட் டின்னர் வாங்கிட்டு வர சொல்லி இருக்கேன். அதனால..." என்று பதிலளித்து விட்டு, "வந்ததும் உங்களுக்கு கூப்பிட சொல்லுறேன் மா." என்று அவருக்கு ஒரு உறுதி மொழியும் அளித்தாள்.

"என்னவோ போடா. அங்கே எதுக்கு வீடு எல்லாம்??. இங்கே நமக்கு ஒரு வீடு இருக்கும் போது... சொன்னாலும் கேட்க மாட்டான். என் உழைப்புல வீடு கட்டனும்னு ஒரே பிடிவாதம்" என்று தனது புலம்பலை ஆரம்பித்தார்.

மிதுன் இங்கே வேலைக்கு வந்து முதல் மூன்று வருடத்தில், ஒரு இடத்தை வாங்கினான். அதில் தான் தற்போது வீடு கட்ட உள்ளான். அதற்கு ஒரு பில்டரை தேடி தான் தற்போது சுற்றி கொண்டு உள்ளான்.

ஏன் வீடாகவே வாங்கி இருக்கலாம்ல என்று கீர்த்தி ஒரு முறை கேட்ட போது, "அது அடுத்தவங்க விருப்பத்தின் பேரில் கட்டினதா இருக்கும். எனக்கு பிடிச்ச மாறி ஒரு வீடு கட்டனும்" என்று கூறி விட்டான். மேலும் சிவகாசியில் ஒரு வீடு இருக்கும் போது இங்க எதுக்கு என்று அவன் அம்மா கேட்டத்தை போல் இவளும் கேட்க, "அது ஒன்னும் எங்க சொந்த ஊர் இல்ல கீர்த்து. அப்பாக்கு அங்க வேலை இருக்க, வீடு வாங்கினார். எனக்கு இங்க வேலை இருக்க இங்க கட்டறேன்" என்று கூறி விட்டான்.

அதை அவனது அம்மாவிடமும் கூறியவள் தொடர்ந்து, "அம்மா மித்து மாறி ஒரு பையனலாம் ரொம்ப ரேர்(rare) மா. நீங்க அவனையே குறை சொல்லுறீங்க. அப்போ..." என்று ஏதோ சொல்ல வந்தவள் பாதியில் நிறுத்தி அதை அப்படியே மாற்றி விட்டாள்.

அந்த அப்போவை அதனால என்று மாற்றி, "அதனால உங்க பையனை நினைச்சி பெருமை படனும் மா நீங்க" என்று கூறி முடித்தாள்.

"படலாம் படலாம்... ஆமா அவன்கிட்ட அப்படியே கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கி தாடா. இருபத்தி ஆறு வயசு முடிய போகுது. அவனுக்கு பண்ணிடலாம் பார்த்த ஒத்துக்கவே மாட்டிங்கறான். வீடு கட்டிட்டு கட்டிட்டுனு சொல்லிட்டு இருக்கான்" என்று தனது அடுத்த ஆதங்கத்தை கூறினார்.

என்னதான் நன்றாய் பேசினாலும் பெற்றோர்களுக்கு அவர்கள் பிள்ளைகள் தானே முதன்மையாய் தெரிவார்கள். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு, தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும் என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்.

முதலில் கீர்த்தி பற்றி சிறிது கேட்டவர் அடுத்து தனது மகனின் பக்கம் தாவி விட்டார். இது இயல்பு தானே!!!.

தவறே செய்து இருந்தாலும், அதை திருத்தி கண்டித்து என எல்லாம் செய்து அவர்கள் பக்கம் தானே பெற்றோர் இருக்க வேண்டும். ஆனால் நான் தவறே செய்யாத போது... அவர்கள் எவ்வாறு என்னை ஒதுக்கலாம்???.

வேண்டாம் வேண்டாம் என்று நினைத்தாலும், அவளை மீறி வேண்டும் என்றே வந்து தொல்லை செய்யும் நினைவுகளை அவளால் என்ன தான் செய்ய முடியும்??.

கீர்த்தி குடும்பம் பற்றி யாருக்கும் தெரியாது மிதுனுக்கு கூட... மிதுனின் அம்மாக்கு மட்டும் தெரிந்து விடவா போகிறது??. அவளது வீட்டில் பிரச்சனை இருக்கிறது என்று கூட அவருக்கு தெரியாது. அதனால் எல்லா அம்மாக்களை போலவும், நண்பர்களிடம் பையனை/பொண்ணை பாத்துக்குங்க என்று சொல்வது போல் அவரும் கூறினார். ஆனால் அந்த நண்பனின் பெற்றோர்க்கு அவன் குழந்தையாய் தெரியும், இவன் பெரியவனாய் தெரிவான்.

"அம்மா மித்து விருப்பம் அதுவா இருக்கும் போது நம்ம இன்னும் ஒரு நாலு மாசம் வெயிட் பண்ணா அவரு வீடு கட்டி முடிச்சிடுவாரு. அந்த கேப்புல நீங்க அவருக்கு பொண்ணு பாக்க ஆரம்பீங்க... வீடு கட்டவும் ஏதோ ஒரு பொண்ண செலக்ட் பண்ணுனு சொல்லிடலாம்" என்று அவருக்கு ஒரு யோசனையை கூறினாள்.

"ஹ்ம்ம்... இது கூட நல்லா தான் இருக்கு. எப்படியும் பொண்ணு பாத்து செட் ஆக கொஞ்ச நாள் எடுக்கும் தான்" என்று மகிழ்வுடன் கூறினார்.

அதன் பின் அவர்கள் பேச்சு பொதுவாய் இருக்க எது எதோ பேசி கொண்டு இருக்க, மணி 7 ஆனது. அதை கீர்த்தி தான் முதலில் பார்த்தாள்.

"அம்மா மணி 7 ஆச்சி. அப்பா எட்டு மணிக்கு சாப்பிட வந்துடுவாங்க இல்ல... நீங்க போய் சமைங்க" என்று கூறி அவரது ஒப்புதலையும் பெற்ற பின் அழைப்பை துண்டித்தாள்.

அடுத்த சில மணி நேரங்களில் ஹவுஸ் மேட் அக்கா சங்கவியும், வந்து விட சிறிது நேரம் இருவரும் பேசி கொண்டு இருந்தனர்.

சரியாக மணி 8:48 ஆக, மிதுன் வந்து சேர்ந்தான். என்ன தான் இருவரும் நன்றாய் பழகினாலும், அவளது வீட்டிற்குள் செல்ல மாட்டான் மிதுன். முக்கால் வாசி எல்லோரும் இயல்பாய் இருப்பது அவர்களது இல்லத்தில் தான். அங்கே நாம் அதிகம் பழகாதவர்கள் வருவது கொஞ்சம் அசௌகரியமாக இருக்கும். அதாவது கீர்த்திக்கு ஒன்றும் தெரியவில்லை என்றாலும், அவளது உடன் இருப்பவருக்கு அந்த மாதிரி தோன்றலாம். எதற்கு என்று அவள் இல்லம் செல்வதை பெரும்பாலும் தவிர்த்து விடுவான் மிதுன்.

இருவருக்கும் அவன் உணவு வாங்கி வர, இவர்களது வீட்டிற்கு மேல் மொட்டை மாடி தான். இந்த நேரத்திற்கு மேல் அங்கு யாரும் செல்ல மாட்டார்கள் என்பதால், கீர்த்தி அவளது வீட்டில் இருந்து தண்ணீர் எடுத்து வர, அந்த மாடி படிகளில் அமர்ந்து உண்ண ஆரம்பித்தனர்.

"மித்து... மித்து... அம்மாக்கு போன் பண்ணி பேசுங்க... அம்மா பேச சொன்னாங்க" என்று கீர்த்தி கூற, அவனும் சரி என்று தலையை ஆட்டி விட்டு உணவை உள்ளே தள்ளினான்.

"அப்பறம் போன காரியம் என்ன ஆச்சி??" - கீர்த்தி.

"நான் கம்மி செலவுல ப்ளான் போட்டு தரவங்கள தேடுறேன்டா. அதான் லேட் ஆகுது. பாப்போம். இன்னும் ரெண்டு பேர் இருக்கறதா சொல்லி இருக்காங்க. பேசி பாக்கலாம். அப்பறம் முடிவு பண்ணலாம்.. என்ன பண்ணறதுனு" என்று அவனுக்கு பதில் கூறினான்.

"ஹ்ம்ம்..." என்று கேட்டு கொண்டவள், அடுத்து "நீ கல்யாணத்துக்கு ஏன் ஓகே சொல்ல மாட்டிங்கற??. அம்மா ரொம்ப வருத்தப்படறாங்க மித்து" என்று அடுத்து கேட்க...

'என் லவ் ஓகே ஆகிட்டா நான் ஓகே சொல்ல போறேன்' என்று மனதில் நினைத்தவன் வெளியே, "வீடு கட்டி முடிக்கலாம்டா முதல்ல... அப்பறம் பாக்கலாம்" என்று கூறினான்.

"உனக்கு ஒரு நாலு மாசம் தான் டைம். அப்பறம் உனக்கு கல்யாணம் தான். அம்மா தான் சொல்ல சொன்னாங்க" என்று கீர்த்தி கூற, "என்னது??" என்று அதிர்ச்சி ஆனான் மிதுன்.

"சரி சரி... சாப்பிட்டல்ல அம்மாட்ட பேசிட்டு போய் தூங்குங்க... குட் நைட்" என்று சொல்லி விட்டு கிளம்பினாள் கீர்த்தி.

சிறிது நேர யோசனையில் இருந்த மிதுனும், வீட்டிற்கு அழைத்து பேசி விட்டு அவனது இல்லம் சென்றான்.

அடுத்த நாள்... வெள்ளி கிழமை... அன்று மாலை சொன்னது போலவே கீர்த்தி மேலும் மூன்று பேர் அந்த அறை தோழி திருமணத்திற்கு சென்றனர்.

கேப்பில்(Cab) இருந்து இறங்கிய உடனே, அங்கே இருந்த பெயர் பலகையை பார்த்தாள் கீர்த்தி.

இதே போல் தான் அன்றும் பெயர் பலகையில் மணமக்களின் பெயர்கள் எழுதி அலங்காரம் செய்து இருந்தனர்.

சரவண வேல்

வெட்ஸ்

பவித்ரா
அதை ஆசையாய் பார்த்தாள் அன்று... ஆனால் என்று அவளது நினைவு அவளை அறியாமலே அவளை பின்னோக்கி இழுத்து செல்ல....

அந்த சரவண வேலோ அவனது ஊரில், லுங்கியை எடுத்து மடித்து கட்டி கொண்டு, "இங்க என்ன பிரச்சனை??. இன்னும் ஏன் கூலி கொடுக்காம இருக்கு??" என்று பணம் பட்டுவாடா செய்வனை கேட்டான்.

"அது வந்து தம்பி... இவன் பாதி நாள் போய் தான் வேலைக்கே வந்தான். வேலையும் ஒழுங்கா செய்யல. ஆனாலும் நாள் கணக்குனு பாதி நாள் பணம் கொடுத்தா வாங்க மாட்டிங்கறான். மதிய சோத்துக்கு முன்னமே வந்துட்டேன். ஒரு நாள் கூலி தரணும்னு பிரச்சனை பண்ணிட்டு இருக்கான்" என்று பிரச்சனையை கூறினார்.

அதை கேட்ட அவன், "ஹம்ம்..." என்று யோசித்தவன், "இவனுக்கு நாள் கணக்கு போடாம, வேலை கணக்கு போட்டு கூலி கொடுத்துடு" என்று சொல்லி விட்டு சென்றான்.

நாள் கணக்கு போட்டால் வரும் பணத்தை விட வேலை கணக்கு போட்டால் வரும் பணம் குறைவாகவே இருக்கும். ஆனால் சரவணனின் குடும்பம் அதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் இருந்தது. முதலில் இருந்தே அவர்கள் பின்பற்றி வரும் பழக்கம் அது...

அதிலும் இவன் தான் அந்த பாதி நாள் வேலையையும் சரியாக செய்யவில்லையே... அதனால், "இல்லை வேண்டாம் பாதி நாள் கணக்கே கொடுக்க சொல்லுங்க தம்பி" என்று சொன்னான்.

ஆனால் அதை கண்டு கொள்ளாமல் தனது இல்லம் சென்று விட்டான் சரவணன். அவன் அப்படி தான் ஒரு முடிவு என்று எடுத்து விட்டால் இருந்து மாற மாட்டான். ஆனால் முடிவு எடுக்கும் முன் அவன் மனம் பலவற்றை சிந்தித்து இருக்கும்.

கொடுப்பாள்...

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்...


"உன்னில் இடம் கொடுப்பாயா??" - கருத்து திரி

நன்றி!!!

இங்ஙனம்
திரா ஆனந்த் 🍀
 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இடம் 3

அலங்கார பெயர் பலகையை பார்த்து அப்படியே நின்று விட்ட கீர்த்தி தோளை குழுக்கி, "என்ன இங்கயே நின்னுட்ட கீர்த்து... வா உள்ளே போலாம்" என்று சொன்னாள் சங்கவி.

அதில் சுயநினைவு வந்த கீர்த்தி, தற்போது அந்த பெயர் பலகையை பார்க்க அங்கே அவளது தோழி சிந்துவின் பெயரும், அவளது துணையின் பெயரும் இருந்தது.

"இதோக்கா போலாம்" என்று கூறிய கீர்த்தி அவருடன் இணைந்து நடந்தாள்.

அங்கே நடந்த நிகழ்வுகள் அனைத்தும் அவனுக்கு ஒரு வித ஒட்டாத தன்மையை தந்தது. தனது வாழ்வின் மிக பெரிய மாற்றத்திற்கு இவை தான் காரணம் என்று.

ஒரு காலத்தில் திருமணம் என்பதை பற்றிய பல கற்பனைகள் அவளுக்கு இருந்தது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

மீண்டும் சங்கவியாலே நிகழ் காலம் வந்தாள் கீர்த்தி.

"வா கீர்த்து. கிப்ட் கொடுத்துட்டு வரலாம்" என்று சொல்லி அவளை மண மேடைக்கு அழைத்து சென்றாள் சங்கவி.

அவர்கள் பாதி வழி நடந்து செல்லும் போதே, சிந்து அவர்களை பார்த்து கையசைத்தாள் விரிந்த புன்னகையுடன். பதிலுக்கு கையசைத்த கீர்த்தி, சங்கவி மற்றும் நண்பர்கள் மேடையை நோக்கி முன்னேறினர்.

"காங்கிராட்ஸ்..."

"ஹேப்பி மேரிட் லைப்"

"ஹேப்பி மேரிட் லைப் அண்ணா"

"ஹார்ட்டி விஷ்ஸஸ் பார் யுவர் ஃப்யூச்சர்" என்று பல வகையான வாழ்த்துக்களை அவர்கள் இருவருக்கும் சொல்லி விட்டு, அவர்களுக்காக தாங்கள் தேர்ந்தெடுத்த பரிசு பொருளையும் அவர்களிடம் சேர்ந்து விட்டனர்.

பின்னர் இங்கே வந்ததற்கு அடையாளமாக, ஒரு புகைப்படத்தையும் எடுத்து கொண்டு உணவு பரிமாறும் பந்தியை நோக்கி சென்றனர்.

இந்த ஒன்று மட்டும் எப்போதும் புரிவதில்லை. கல்யாணத்தில் போடும் உணவின் சுவை மட்டும் வித்தியாசமாக இருப்பது ஏன் என்பது தான்.

அந்த உணவை சிலாகித்து கீர்த்தியிடம் சொன்னவாறே உண்டு கொண்டு இருந்தாள் சங்கவி.

"இந்த பூசணி அல்வா நல்லா இருக்குல்ல" - சங்கவி

"கவிக்கா இந்தாங்க. எனக்கு இனிப்பு புடிக்காது" என்று அவளின் இலையில் இருந்து மஞ்சள் நிற அந்த பூசணி அல்வாவை எடுத்து கவிக்கா என அழைக்கப்படும் சங்கவியின் இலையில் வைத்தாள் கீர்த்தி.

மேலும் இது நல்லா இருக்கு சாப்பிடு அது நல்லா இருக்கு சாப்பிடு என்று தன் தோழமைகள் எல்லாரிடமும் சொல்லி கொண்டே சாப்பிட்டாள் சங்கவி.

அதன் பின் மீண்டும் உள்ளே சென்று மணமேடையை பார்த்தவாறே அமர்ந்து கொண்டு தங்களுக்குள் பேசி சிரித்து கொண்டு இருந்தனர்.

சிறிது நேர அரட்டைக்கு பின் மீண்டும் கேப் ஒன்றை பதிவு செய்து அவரவர் இல்லம் அடைந்தனர்.

வீட்டிற்கு வந்து உறக்கத்திற்கு தயாராகி தனது படுக்கையில் படுத்த கீர்த்திக்கு ஏதேதோ எண்ணங்கள் வர, அதை தடுக்கவில்லை அவள். அதை தொடர்ந்து தனது அலைபேசியை எடுத்து பார்த்தாள்.

கால் ஹிஸ்டரியில்(Call history) சங்கவி, மிதுன், மிதுனின் அம்மாவின் அழைப்பை தவிர வேறொன்றும் இல்லை. ஒரு வருடத்திற்கு முன் வரை வாய் ஓயாமல் பேசி கொண்டு இருந்தவள் தான் இப்போது அமைதியாய் மாறி விட்டாள்.

அந்த எண்ணங்களின் ஊடே அப்படியே உறங்கி விட்டாள்.

அடுத்த நாள் காலை பத்து மணிக்கு மேலே தான் எழுந்தாள் கீர்த்தி. சங்கவியும் அவ்வாறே... விடுமுறை நாள் என்றால் காலை வேளையை பார்ப்பது அரிதிலும் அரிது அல்லவா!!.

எழுந்து பல் துலக்கி விட்டு தனது அறையில் இருந்து வெளியே வந்த கீர்த்தி, சமையலறை சென்று டீ போட்டு கொண்டு வந்தாள். அப்போது தான் சங்கவியும் தனது அறையில் இருந்து வெளியே வந்தாள். ஆனால் குளித்து முடித்து சுத்த பத்தமாக...

"என்ன கவிக்கா??. இன்னிக்கு இவ்ளோ சீக்கிரம் ரெடி ஆகி இருக்கீங்க??. அதுவும் நீட்டான டிரஸ்ஸா??" என்று டீயை அருந்தி கொண்டே கேட்டவள், அப்படியே அவருக்காக எடுத்து வைத்து இருந்த டீயையும் கொடுத்தாள்.

"ஆமாடா கீர்த்தி. ப்ரெண்ட்ஸ் வெளிய போலாமா கேட்டாங்க... நானும் சும்மா தான இருக்கேன்னு வரேன் சொல்லிட்டேன்" என்று சொல்லி கொண்டே டீயை பருகினாள் கவி.

"அப்பறம் உனக்கு காய் கட் பண்ணி வச்சி இருக்கேன். தயிர் இருக்கு. அரிசி ஊற வச்சி இருக்கேன். சமைச்சி சாப்பிட்டுக்கோ" என்று சொல்லி கொண்டே தனது ஹேண்ட் பேக்கில் இருந்து ஏடிஎம் கார்ட்டை எடுத்து அவளது அலமாரியில் வைத்து விட்டு, கொஞ்சம் பணமும் ஐடி ப்ரூப்க்கு ஒரு அரசாங்க அடையாள அட்டையும் எடுத்து பையில் வைத்தாள்.

அடையாள அட்டை ஏதாவது ஒரு அசாதாரண சூழ்நிலையில் தேவைப்படலாம் என்று கீர்த்தி தான் எப்போதும் கூறுவாள். அதனால் அதையும் எடுத்து வைத்து கொண்டாள் சங்கவி.

"கீர்த்து மா... சேஞ்ச் வச்சி இருக்கயா??" சங்கவி கேட்க, தனது பையில் இருந்து, சில்லறை காசுகளை எடுத்து கொடுத்தாள் கீர்த்தி.

லோக்கல் ட்ரெயின் மற்றும் பஸ்ஸில் பயணம் செய்ய சில்லறை வைத்து கொள்வது நமக்கும் மற்றவருக்கும் பயனுள்ளது என்பதால்.

"கவிக்கா... ஹேர்ஸ்டைல் இந்த டிரஸ்க்கு மேட்ச் ஆகலகா... வாங்க நான் பண்ணி விடறேன்" என்று அவளுக்கு தலையலங்காரம் செய்தாள் கீர்த்தி.

தனது தலையை அவளிடம் கொடுத்த சங்கவி வாட்ஸ்-அப்பில் தனது தோழர்களுக்கு எப்போது அவர்கள் சந்திக்க நினைத்த இடத்தை அடைவாள் என்று குத்து மதிப்பாக ஒரு நேரத்தை குறிப்பிட்டாள். தொடர்ந்து கீர்த்தியிடம், "கீர்த்தி மா... வீடு க்ளீன் பண்ணறவங்க வந்தா... எல்லாம் பண்ண சொல்லிடுமா... என் ரூம் நான் வந்து க்ளீன் பண்ணிக்கறேன்" என்று கூறினாள்.

அடுத்து தனது அறையில் இருந்து வெளியே வந்த கவி, தனது காலணியை அணிந்து கொண்டே, "ஹான் கீர்த்தி... ஈவ்னிங் சீக்கிரமா வர மாறி இருந்தா கால் பண்ணறேன்... எதுவும் வேணும்னா சொல்லு வாங்கிட்டு வரேன்" என்றாள்.

"சரி" என்று கீர்த்தி தலை ஆட்ட, அவளுக்கு ஒரு பாய் சொல்லி விட்டு கிளம்பினாள் கவி.

காலேஜ் படிக்கும் போதே ஊர் சுத்தின நாம்ம இப்போ இப்படி இருக்கோம்!!. ஏன்?? என்று தனது மனதுக்குள் கேட்டு கொண்டே, எல்லாத்துக்கும் நம்ம எண்ணம் சூழ்நிலை மனசு தான் காரணம் போல என்று ஒரு பெரு மூச்சு விட்டு கொண்டே மீண்டும் அந்த நாற்காலியில் அமர்ந்து, தொலைகாட்சியை ஆன் செய்தாள்.

'டக் டக்' என்று கதவை யாரோ தட்ட, திறந்தாள் கீர்த்தி.

மீண்டும் கவி தான்.

"தண்ணி மறந்துட்டு போய்டேன்" என்று ஏற்கனவே நிரப்பி வைத்து இருந்த ஒரு அரை லிட்டர் தண்ணீர் பாட்டிலை எடுத்து தனது ஹேண்ட் பேக்கில் வைத்து கொண்டு பாய் சொல்லி விட்டு ஓடினாள் சங்கவி.

சிரிப்புடன் உள்ளே வந்து, தனது வேலையை தொடர்ந்தாள் கீர்த்தி. அது தான் டிவி பார்ப்பது.

epi3.jpg

சில நிமிடங்கள் கூட அவளால் டிவி பார்க்க முடியவில்லை. என்ன பார்ப்பது என்றே அவளுக்கு தெரியவில்லை. தினமும் அல்லது வார விடுமுறைகள் என்று பார்ப்பவர்கள் என்றால் இந்த நேரம் இதை பார்க்கலாம் என்று தெரியும். நாமே ஆடிக்கு ஒரு வாட்டி அமாவாசைக்கு ஒரு வாட்டி என்று பார்த்தால் எப்படி தெரியும்.

சரி என்று சமைச்சி சாப்பிடவாது செய்யலாம் என்று சமையலறை சென்றாள்.

சரியாக அந்த நேரம் மீண்டும் அழைப்பு மணி ஒலித்தது. யாரென்று சென்று பார்த்தாள். வீடு க்ளீன் பண்ணும் அக்கா தான்.

அவரை உள்ளே விட்டு விட்டு அவள் சமைக்க சென்றாள்.

அவர்களின் அறையை தவிர, வீடு முழுவதும் கூட்டி, மருந்து தண்ணீர் விட்டு துடைத்து விட்டாள்.

அதற்குள் கீர்த்தியும் சாதம் வைத்து விட்டு, பொரியல் செய்து விட்டாள்.

அட்டெச்ட்டு பாத்ரூம் என்பதால், அவர் பாத்ரூமை க்ளீன் செய்யும் போது கீர்த்தியும் அந்த அறையில் இருந்தாள்.

அவர் சென்ற உடன் குளித்து விட்டு, உணவை எடுத்து வைத்து டிவி ஏதோ ஒரு சேனலை வைத்து அதை பார்த்து கொண்டே உண்டு முடித்தாள்.

தனியாக தங்கி இருப்பவர்கள் எல்லாம் மினி குடும்ப தலைவி/தலைவன் என்றே சொல்லி கொள்ளலாம். அவர்கள் தங்கி இருக்கும் வீட்டை பராமரிப்பது முதல் தேவையான பொருட்கள் வாங்குவது வரை அவர்கள் தான் செய்ய வேண்டும் அல்லவா??.

மாதம் மாதம் கேஸ் புக் செய்வது, கரண்ட் பில் கட்டுவது, தண்ணீர் கேன் வாங்குவது, வாடகை செலுத்துவது, சமைப்பது, சமையல் பொருட்கள் வாங்குவது என யோசித்து யோசித்து சிக்கனமாக செயல்பட வேண்டும்...

சமைக்க தெரியாதவர்கள் கூட சமைக்க கற்று கொள்வார்கள். நம்ம கீர்த்தி போல... தற்போதும் அவளுக்கு சமைக்க தெரிந்தது, சாதம், தோசை, இட்லி, பணியாரம், பொரியல் போன்ற குறைவான பொருட்களை பயன்படுத்தி செய்யும் உணவு வகைகளே!!!. நிறைய பொருட்களை பயன்படுத்தும் பருப்பு குழப்பு, ரசம், பிரியாணி போன்ற பிரதான உணவுகள் தெரியாது. ஆனால் தனியாய் வாழ தேவையான உணவுகள் செய்ய தெரியும்.

######

மிதுன் தனது தோழனின் வீட்டிற்கு சென்று கொண்டு இருநதான்.

அவனது வீட்டிற்கு அருகில் ஒரு வீட்டை பாரத்தான். முன்பெல்லாம் அந்த வீட்டை பார்க்கும் போது பெரிதாய் எடுத்து கொள்ள மாட்டான். ஆனால் இப்போது அதை பார்க்கும் போது அவனுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.

மிதுன் அவனது தோழனிடம், "இந்த வீட்டை யார் கட்டினா மச்சா??" என்று கேட்டான் சம்பர்தாய விசாரிப்புகளுக்கு பிறகு.

"அது அந்த வீட்டிலிருக்கறவங்க தங்கச்சி பையன் தான் ப்ளான் போட்டு கொடுத்ததாம். இரண்டு வருடத்துக்கு முன்னாடி தான் கட்டினாங்க. இந்த வீட்டை கட்டும் போது அந்த பையன் எம் ஈ கடைசி வருடம் படித்து கொண்டு இருந்தானாம். இப்போ ஒரு சின்ன ஏஜென்சி இல்ல கம்பெனி மாறி வச்சி வீடுங்க, சின்ன சின்ன கடைங்க எல்லாம் கட்டி கொடுக்கறான்" என்று கூறினான் அந்த தோழன்.

"ஓஓஓ... சரி அந்த பையன் பேரு என்ன??. எங்க கம்பெனி வச்சி இருக்கான்??. நானும் அவன்ட்டயே கேட்டு பாக்கலாம் நினைக்கறேன்" என்று யோசனையுடனே கூறினான் மிதுன்.

"பேசன் பில்டர்ஸ்(Passion builders). அந்த பையன் பேரு தேவ். முழு பேரு தேவாமிர்தன்" என்று மிதுனுக்கு தேவையான தகவல்களை கூறினான் அவன்.

இந்த தேவாமிர்தன் தான் நம் கதையின் நாயகன். இவனை அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம்.

கொடுப்பாள்...

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்...

"உன்னில் இடம் கொடுப்பாயா??" - கருத்து திரி

நன்றி!!!

இங்ஙனம்
திரா ஆனந்த் 🍀
 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இடம் 4

"அமிர்.... சாப்பிட வாடா" என்று கூறினார் அவர்... அம்பிகா அமிரின் அம்மா.

ஆனால் அவனிடம் இருந்து பதிலில்லை.

அவரும் ஒரு மணி நேரமாக அவனிடம் கேட்டு கொண்டு இருக்கிறார்.

"டேய் அமிர்... இன்னும் அரை மணி நேரம் தான் உனக்கு டைம். அதுக்குள்ள சாப்பிட வர" என்று அவனது அறையின் வாயில் வந்து சொல்லி விட்டு சென்றார்.

சரியாக அரை மணி நேரம் கழித்து வர, அப்போதும் அவனிடமிருந்து எந்த அசைவும் இல்லை. அவன் வேலையை பார்த்து கொண்டு இருந்தான்.

34702

"மணி இப்பவே இரண்டே முக்கால் ஆச்சி. ஒரு மணிக்கு சாப்பிட வேண்டியது. இப்ப மட்டும் நீ வரல உன் சாப்பாட்ட தூக்கி நாய்க்கு போட்டுடுவேன். வரயா?? இல்லையா??" என்று எல்லா அம்மாக்களை போல அவரும் கேட்டார்.

தன் பிள்ளை எவ்வளவு பெரிதாக வளரந்தாலும், எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும், அவன் சரியான நேரத்திற்கு சாப்பிட்டானா குளித்தானா என்று கண்காணித்து அதை செய்ய வைக்கும் தாயின் குணம் மட்டும் என்றும் மாறுவதில்லை.

சிறிது நேரம் நின்று அவனை பார்த்தார். அவன் ஒன்றும் சொல்லவில்லை என்றவுடன் கீழே சென்று விட்டார்.

ஒரு பத்து நிமிடங்களில் அமிர் என்று அழைக்கப்பட்ட நம் கதையின் நாயகன் தேவாமிர்தன் கீழே வந்தான்.

"அம்மா... அம்மா" என்று கத்தி கொண்டே சமையலறை செல்ல அவர் ஒரு தட்டில் சாதம் மற்றும் குழம்பை சேர்த்து பிசைந்து கொண்டு இருந்தார் அவனுக்கு ஊட்டி விட.

"என் செல்ல அம்மா" என்று சொல்லி கொண்டே அவரை தோளோடு சேர்த்தணைத்து, "ஆ...." என்று வாயை திறந்து காட்டினான்.

உணவை எடுத்து அவன் வாயில் திணிப்பது போல் ஊட்டி கொண்டே, "ஏன்டா வந்து அவ்வளவு நேரம் கத்திட்டு இருந்தனே... வாயை திறந்து ஒரு வார்த்தை சொன்னா குறைஞ்சா போய்டுவ??" என்று கேட்டார்.

"நான் அப்பறம் சாப்படறேன்னு சொன்ன உடனே நீ சரின்னு விட்டுட்டு போய்டுவியா மா???. ஒரு ஐந்து நிமிடம் ஆகுமா!!!. சாப்பிட்டு வந்து மீதி வேலையை பாருனு சொல்லுவ... அதான் எதுவும் சொல்லல... அதனால தான நீ எனக்கு டைம் கொடுத்துட்டு போன. இப்போ பாரு ஊட்டி கூட விடுற" என்று அவனது தாயின் தாடையை பிடித்து கொஞ்சி கொண்டே கூறினான்.

"விவரம் தான். அப்படி என்ன சாப்பிடாம கூட முடிக்க வேண்டிய வேல??" என்று கேட்டார் அம்பிகா.

"அது வந்து ஒரு வீடுக்கு தான் டிசைன் பண்ணிட்டு இருந்தேன். தோணுனதை அப்பயே பண்ணா தான் அது அப்படியே வரும். கொஞ்ச நேரம் விட்டு பண்ணா... ஏன் இப்படி பண்ணனும்??. அப்படி பண்ணா என்னனு மனசு மாறிட்டே இருக்கும். இப்ப பாரு முடிஞ்சது. பாத்து நல்லா இருந்தா பிடிச்சா வச்சிக்கலாம் இல்லனா கொஞ்சம் மாத்தலாம். அவ்வளவு தான்" என்று கூறி கொண்டே அவர் ஊட்டி விட உண்டு கொண்டு இருந்தான்.

"நீ சாப்பிட்டயா மா??" - அமிர்.

"இப்போ கேளு. நல்லா தின்னுட்டு" போலி சலிப்புடன் அம்பிகா கூற.

"ஹாஹா... நீ சாப்பிட்டு இருப்பனு தெரியும் சும்மா கேட்டேன்...." என்று சிரித்தான்.

"ஆமா... எங்கமா உன் புருஷன்?? சனி கிழமை நாளு கூட ஆளயே காணம்" என்று கேட்க, "யாரோ க்ளைண்ட்-அ பாக்கனும்னு போய் இருக்காரு" என்று பதில் கூறினார்.

"ஆனாலும் உன் புருஷன் ரொம்ப தான் பண்ணறாரு. நான் சொல்லறதை அவரு கேட்கவே மாட்டிங்குறாரு. ஏதாவது சொல்லிட்டா போதும் அடிக்கடி மூஞ்ச தூக்கி வச்சிக்கராரு... நீ வேணா பாரு அந்த ஆடிட்டர என் கம்பெனிக்கு மட்டுமே ஆடிட்டிங் பாக்க வைக்கலனா... நான் நந்தகோபாலன் புள்ள இல்ல" என்று சபதமிட்டான்.

"என் புருஷன் என்னடா பண்ணிட்டாரு. நீ சொன்னத கேட்டு புதுசா யாருக்கும் ஆடிட்டிங் பாக்கறது இல்ல. முன்னாடி இருந்தே நம்மகிட்ட மட்டும் வரவங்களுக்கு மட்டும் தானடா பாக்கறாரு. அதுக்கும் நீ எதுனா சொன்னா அவரு கோபப்படமா என்ன பண்ணுவாரு... நீ கூட தான்டா இன்னிக்கு வேல பாத்த.... அவர மட்டும் குறை சொல்லுற... அவர குறை சொல்ல நீ கரெக்ட்டா இருக்கயாடா??" என்று தனது கணவருக்கு சொம்பு தூக்க, "ஆமா... ஆமா... நீ தான் மெச்சிக்கனும்... ரொம்ப அலையாதீங்க உடம்புக்கு அடிக்கடி முடியாம போகுதுனு சொன்னா கேக்கறாரா அந்த ஆடிட்டர்??" என்று பதில் கேள்வி கேட்டான் அமிர் ஆடிட்டராய் பணி புரியும் தனது அப்பாவை பற்றி.

அவர்கள் குடும்பத்தில் அம்பிகாவுக்கும், நந்தாவுக்கும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்வார்கள். அதே போல் அமிருக்கு வருடம் ஒரு முறை பரிசோதனை செய்வார்கள். தற்போது எடுத்த புல் பாடி செக்கப்பில் அவருக்கு இரத்த அழுத்தம்(BP) அதிகரித்து இருப்பது தெரிந்தது. டென்டஷனை குறைங்க என்று மருத்துவர் கூறி அனுப்பி விட்டார். அதனால் நம்ம அமிரும் அவர் அதிக வேலைகள் செய்ய கூடாது என்று அவரை நச்சரித்து கொண்டு இருக்கிறான்.

"உனக்கு என் புருஷனோட அப்பா அம்மா பேர வச்சது தான் வச்சாரு. அவருக்கு அப்பா மாறி எப்ப பாத்தாலும் எதுனா சொல்லிகிட்டே இருக்கற" என்று நொடித்து கொண்டார். இத்தனை வாயாடலிலும் அவரது கை அவனது வாய்க்கு உணவை தருவதை நிறுத்தவில்லை. அவனும் வாயில் வைத்து மென்று உள்ளே தள்ளவும் மறக்கவில்லை.

தேவாமிர்தன் பெயர் வித்தியாசமாக இருக்கிறது அல்லவா??. ஆமாம் அம்பிகா சொன்னது போல் அது அவரது மாமனார் மற்றும் மாமியாரின் பெயர்களின் சங்கமமே. மகாதேவனில் இருந்து தேவ்வும், அமிர்தவள்ளியில் இருந்து அமிர்தாவும் எடுக்கப்பட்டு தேவாமிர்தன் என பெயரிடப்பட்டது. மகாதேவனும் அமிர்தவள்ளியும் தற்போது இறைவனடியில் அமர்ந்து தனது குடும்பத்தை பார்த்து கொண்டு இருக்கின்றனர். அதனால் அந்த வீட்டில் தற்போது மூன்று உயிர்கள் மட்டுமே வலம் வந்து கொண்டிருக்கிறது. அவைகள் நமது நாயகனை ஈன்றெடுத்த அம்பிகா - நந்த கோபாலன் தம்பதி மற்றும் நம் நாயகன் தேவாமிர்தன்.

அமிர் உண்டு முடித்து விட்டு, தனது அம்மாவுடன் அமர்ந்து அரட்டை அடித்து கொண்டு இருந்தான். அப்போது மிகவும் சோர்வாக உள்ளே வந்தார் நந்த கோபாலன்.

அவரை பார்த்ததும் தண்ணீர் எடுத்து வர சென்று விட்டார் அம்பிகா. வந்தவர் அமிர் அருகே அமர்ந்து தன்னை சிறிது அசுவாசப்படுத்தி கொண்டார்.

அம்பிகா அளித்த நீரை வாங்கி அவர் பருகியவுடன் அமிர் ஆரம்பித்து விட்டான்.

"என்னாச்சி??. ஏன்பா ரொம்ப டெயர்ட்-ஆ இருக்கீங்க?? ரொம்ப வேலையோ!!" என்று கேட்டான்.

"ஆமா தம்பி. இன்கம் டெக்ஸ் பைல் பண்ணனும்ல. அதான்... கொஞ்சம் குலறுபடி பண்ணி வச்சி இருந்தாங்க. அத கண்டுபிடிச்சி சரி பண்ணி வர இவ்வளவு நேரம் ஆகிடுச்சி" என்று காரணத்தை கூறினார்.

"உடம்ப ரொம்ப அலட்டிக்காதீங்கபா. அதான் உங்க செல்ல புள்ள மதன் இருக்கான்ல... அவனை பாக்க சொல்ல வேண்டியது தான..." என்று கேட்டான் அமிர்.

மதன்... அம்பிகாவின் அண்ணன் மகன். அவனும் ஆடிட்டருக்கு தான் படித்து விட்டு, நந்த கோபாலனிடம் அசிஸ்டெண்டாக பணி புரிகிறான். மதன், அமிரை விட இரண்டு வயது பெரியவன் என்றாலும் இருவரும் பள்ளி ஒன்றாக தான் படித்தார்கள். அவனை தான் இதை பார்க்கவில்லையா?? என்று கேட்டான் அமிர்.

"இல்ல தம்பி. மதன் இன்னொருத்தருக்கு பையில்ஸ் செக் பண்ண போய் இருக்கான். அங்கயும் ஏதோ பண்ணி வச்சிட்டாங்க போல. நிறைய இடிக்குதாம். பாத்துட்டு இருக்கானாம். வந்தா தான் தெரியும். என்ன பண்ணலாம்?? ஏது பண்ணலாம்னு??" என்று அவனது கேள்விக்கு பதில் அளித்தார் நந்தா.

அதன் பின் அவர்கள் பேச்சு வேறு பக்கம் சென்றது வேலையில் இருந்து...

மேலும் ஒரு மணி நேரம் கழிய, மதன் வந்து சேர்ந்தான் அமிரின் வீட்டுக்கு.

"வா மதன்" என்று முதலில் பார்த்த அம்பிகா வரவேற்க, அவரை தொடர்ந்தனர் மீதம் இருந்தவர்கள்.

"ஹான் அத்தை மாமா.. ஹாய்டா அமிர்..." என்று சொல்லி கொண்டே அவர்கள் அமர்ந்து இருந்த சோபாவிலே அவனும் அமர்ந்தான்.

மதன் தான் இப்போது செய்து முடித்து வந்த வேலையை பற்றி நந்தாவிடம் கூறி கொண்டு இருந்தான். அது அமிர் ஃபோர் அடித்து விட, அமைதியாக தனது கைபேசியில் மூழ்கி விட்டான்.

நந்தாவும், மதனும் சோர்வுடன் இருப்பதை பார்த்த அம்பிகா, தேனீர் போட்டு எடுத்து வந்தார். அதை அருந்தி கொண்டே அவர்கள் தங்களது பேச்சை தொடர, அம்பிகா அவர்களை என்ன பேசுகிறார்கள் என்று பார்த்து கொண்டு இருந்தார்.

மதன் நந்தாவிடம் சேர்க்க வேண்டிய தகவல்களை எல்லாம் சேர்த்து விட, "சரி மாமா... சரி அத்தை நேரமாச்சி. நான் கிளம்பறேன்" என்றான்.

"உங்க மாமாவ பார்த்த போதுமா... மாமா பெத்த பையன் ஒருத்தன் இருக்கேன்... அதும் சின்ன வயசுல இருந்தே உன் ப்ரெண்ட் அவன். நினைப்பு இருக்கா" என்று கேட்டான் அமிர்.

"ஹாஹா... மாமா ஒரு பொண்ண பெத்து இருந்தா இங்கயே செட்டில் ஆகி இருப்பேன். என்ன பண்ண எனக்கு விதிச்சது அவ்ளோ தான்" என்று போலி சோகத்துடன் அவன் கூற, அமிர் அவனை மேலும் முறைத்தான்.

"சரி சரி விடு மாப்பிள... நாளைக்கு நம்ம வெளிய போலாம். நான் ப்ரீ தான்" என்று சொன்னான் மதன்.

"நா ப்ரீ இல்ல..." என்று முகத்தை அந்த பக்கம் திருப்பி கொண்டான் அமிர்.

"ரொம்ப நடிக்காதடா. நாளைக்கு போன் பண்றேன், வந்து சேரு" என்று அவனிடம் பேச்சு வார்த்தையை முடிக்க, அம்பிகா தொடங்கினார்.

"டேய் மதன்... இன்னும் அரை மணி நேரத்தில் சாப்பிட்டே போலாம் இருடா" - அம்பிகா.

"அய்யோ அத்த... உங்க அண்ணி நாலு தடவை கூப்பிட்டாங்க... நான் போய் பார்த்த தான் என்ன கூத்து கட்டி வச்சி இருக்காங்கனு" என்று கூறி கொண்டே நந்தா, அமிரை பார்த்து தலையசைத்தவன், தனது அத்தைக்கு டாடா காட்டி விட்டு கிளம்பினான்.

மதன் அவன் வீட்டினுள் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு இறங்க, பக்கத்து வீட்டில் இருந்து மிதுனின் நண்பன் அவனை அழைத்தான்.

"ஹாய் மதன்... எப்படி இருக்க??" - மிதுன் நண்பன்.

"ஹாய்டா... நலம். நீ??" - மதன்.

"நல்லா இருக்கேன். வந்து... ஒரு உதவிடா" - மிதுன் நண்பன்.

"சொல்லுடா... என்ன??. முடிஞ்சா பண்ணறேன்" - மதன்.

"உங்க அத்த பையன் தேவ் இருக்கான்ல. அவன் இப்போ கன்ட்ஸ்டக்ஷன் தான பண்ணறான். என்னோட கொலிக்(colleague) ஒருத்தருக்கும் பண்ணி தர முடியுமா?? காஸ்ட் எஃவக்ட்டிவ்வா இருக்கனும்னு பாக்கறான்" என்று மேலும் தகவல்களை கூறி முடித்தான்.

"சரிடா... அவன்கிட்ட சொல்லி வைக்கிறேன். அப்பறம் அவனே அவருகிட்ட பேசிப்பான்" என்று மதன் கூறினான்.

"தேங்கஸ்டா..." - மிதுன் நண்பன்.

"அடச்சீ... இதுக்குலாமா தேங்கஸ்... போய் புள்ள குட்டிகளை படிக்க வக்கற வழிய பாரு போ" என்று கிண்டலாகவே மதன் கூற, "அதுக்கு தான் ஒரு அறிகுறியும் காணமே. இன்னும் கல்யாணமே பண்ணலயாம்" என்று மெலிதாக முணுமுணுத்தான்.

"சரி சரி... பாய்டா... அப்பறம் பாக்கலாம்" என்ற மதன் தனது வீட்டினுள் சென்று விட்டான்.

கொடுப்பாள்...

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்...

"உன்னில் இடம் கொடுப்பாயா??" - கருத்து திரி

நன்றி!!!

இங்ஙனம்
திரா ஆனந்த் 🍀
 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இடம் 5

"Well Done!!" (வெல் டன்) என்ற எழுத்துக்களை காண்பித்து விட்டு அடுத்து "Level Completed" (லெவல் கம்ப்ளீட்டட்) என்ற பதத்தையும் அதற்கு கீழே மூன்று நட்சத்திரங்களும் அதில் இரண்டு நட்சத்திரங்கள் மஞ்சள் நிறத்தில் நிரம்பி ஒளிர்ந்து கொண்டும், மற்ற ஒன்று ஒளியிழந்தும் காணப்பட்டது. அதற்கு கீழே score என்று அந்த லெவலுக்கான மதிப்புக்களையும், அதற்கும் கீழே Next என்ற பதத்துடன் ஒரு பச்சை நிற கட்டமும் இருந்தது. அதை தொடட்டவுடன் ஆயிரத்தி நூற்றி நாற்பத்தி ஆறாவது கட்டத்திற்கு(level) அழைத்து சென்றது அந்த ஆன்ட்ரிய்ட் மொபைலில் உள்ள ஒரு விளையாட்டு செயலியில்.

அந்த விளையாட்டு செயலியில் விளையாண்டு கொண்டு இருந்தது வேறு யாரும் அல்ல... நம் நாயகி கீர்த்தி ப்ரியம்வதா தான்.

அவள் பாதி விளையாட்டில் இருக்கும் போதே அவளுக்கு ஒரு அழைப்பு வந்தது. வேறு யார் அவளுக்கு அழைப்பார்கள்... மிதுனிடம் இருந்து தான் அந்த அழைப்பு.

"ஹலோ மித்து. என்ன இந்த நேரத்துக்கு கூப்பிட்டு இருக்க??" என்று கேட்டாள் கீர்த்தி

"ஹேய் கீரிக்குட்டி... என்ன பண்ற??" என்று பதிலுக்கு கேட்டான் மிதுன்... அவள் ஒரு கேள்வி கேட்டாள் அவளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல்.

"வேற என்ன பண்ண போறேன்!!!. கேம் தான் விளையாண்டுட்டு இருக்கேன்" - கீர்த்தி.

"எப்ப பாத்தாலும் அந்த கேம்லயே தலையை விட்டுட்டு இரு. அப்படி என்ன தான் இருக்கோ அதுல" என்று திட்டியவன், "சரி சரி அரை மணி நேரத்தில் ரெடி ஆகிடு. நம்ம வெளியே போறோம்" என்று கூறி முடித்தான்.

"அடேய்... இப்ப மணி என்ன தெரியுமா??. எட்டு தான் ஆகுது. ஞாயித்து கிழமைல இந்த நேரத்துக்கு யாரும் எழுந்து கூட இருக்க மாட்டாங்க. ஆனா நான் 6 மணிக்கே எழுந்து துணி எல்லாம் துவைச்சி காயப் போட்டுட்டு வந்து இப்போ தான் படுத்தேன். இன்னும் டீ கூட குடிக்கல. அப்பறம் இன்னும் சமைக்கனும்... சாப்பிடனும்.... அரை மணி நேரம்லாம் பத்தாது" என்று பெரிய கதையை அளந்து விட்டு, "ஆமா... எதுக்கு இன்னிக்கு வெளிய... அதுவும் இவ்ளோ சீக்கிரமே..." என்று அதன் பின் தான் நினைவு வந்தவள் போல் கேட்டான்.

"டீ இப்போ ரொம்ப முக்கியம். காலைல சாப்பாடுலாம் வெளியே போய் சாப்பிட்டுகலாம். நீ குளிச்சி ரெடி ஆகி மட்டும் வா போதும். எங்கே என்னனு போகும் போது முடிவு பண்ணிக்கலாம். நியாபகம் வச்சிக்கோ. சரியா அரை மணி நேரம்... ரெடியா இரு" என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தான் மிதுன்.

'அய்யோ... இவனோட... அரை மணி நேரத்துல வந்து காலிங் பெல் அடிக்க ஆரம்பிச்சிடுவான். பாவம் கவிக்கா... நேத்து நைட்டே லேட்டா தான் வந்தாங்க. எழுந்துடுவாங்க... அவங்க தூக்கத்த கெடுக்கனே வேணும்னே விடமா பெல் அடிப்பான். அவனுக்கும் இவங்களுக்கும் மட்டும் ஒத்தே போறதே இல்ல' என்று மனதில் எண்ணி கொண்டே அவசர அவசரமாக குளித்து விட்டு வந்தாள்.

epi5.jpg

சரியாக இருபத்தி ஐந்து நிமிடங்களில் தயாராகி, தனது வீட்டின் கதவை திறந்து வைத்தாள்... அவன் வந்து காலிங் அடிக்க வேண்டாம் என்ற எண்ணத்தில்... அதன் பின் தனக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து தனது பையில் வைத்தாள். சரியாக அரை மணி நேரத்தில் அவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்றான் மிதுன்.

அது வரையும் சங்கவி எழவில்லை என்பதால், வாட்ஸ் அப்பில் அவளுக்கு, "அக்கா... கோயிங் அயுட் வித் மிதுன்..." என்று அனுப்பி விட்டு, கதவோடு இருந்த அந்த பூட்டை பூட்டி விட்டு சாவியை எடுத்து தனது பையில் போட்டாள்... உள்ளே கவி இன்னும் உறங்கி கொண்டு தான் இருப்பதால். அதன் பின் மிதுனுடன் கிளம்பினாள் கீர்த்தி.

சங்கவியிடமும் ஒரு சாவி இருக்கிறது. வெளியே செல்வது என்றால் அவள் கதவை உள்பக்கமாக இருந்து திறந்து கொள்வாள்.

மிதுன் முதலில் கீர்த்தியை ஒரு ஹோட்டலுக்கு அழைத்து சென்றான்.

அங்கே அவர்கள் காலை உணவை முடித்து கொள்ள, அடுத்தது அருகில் இருக்கும் ஒரு கோவிலுக்கு அழைத்து சென்றான்.

அங்கே அருள்பாலித்து கொண்டிருக்கும் அன்னையை வணங்கி விட்டு, பிரகாரத்தில் அமர்ந்து இருந்தனர்.

"இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கீரிக்குட்டி" என்று அவளுக்கு தன் வாழ்த்தை தெரிவித்தான்.

அவனை ஒரு கணம் விழி விரிந்து நோக்கி விட்டு, "நன்றி" என்ற ஒற்றை சொல்லுடன் முடித்து விட்டாள்.

ஏனோ அவளுக்கு இந்த வருடம் பிறந்த நாள் கொண்டாடும் மன நிலை இல்லை. சென்ற வருடம் எவ்வாறு சென்றது இந்த நாள் என்று நினைக்கும் போது... மிகவும் வேதனையாக இருந்தது அவளுக்கு. இந்த வேதனைக்கு பேசாமல்... என்று அவளது உள் மனம் புலம்பி கொண்டு இருந்ததை மிதுனின் குரல் கலைத்தது.

"சரி சொல்லு கீர்த்து. இன்னிக்கு எங்க போலாம்??" என்று கேட்டான் மிதுன்.

"என்ன எங்க போலாம்??. நீ தான் சொல்லனும் எங்க போக கூட்டிட்டு வந்தனு" - கீர்த்தி.

"அட!! இன்னிக்கு உன் பிறந்த நாள் தான. சோ இன்னிக்கு உனக்கு பிடிச்ச ப்ளேஸ்க்கு தான் போகனும். அது தான் யூனிவர்செல் ரூல்(Universal rule)" - மிதுன்.

"ப்ச்ச்... இது ஒன்னும் அவ்ளோ ஸ்பெஷல் ஆன நாள் இல்ல. எப்பயும் போல தான். எங்கனா போகனும்னா சொல்லு. இல்லனா வீட்டுக்கு போகலாம்" என்று சலிப்பான குரலில் சொன்னாள்.

நேற்று இரவில் இருந்து அவளது பள்ளி, கல்லூரி தோழமைகள் எல்லாம் வாழ்த்துக்கள் கூறினர். ஆனால் அவளது பெற்றோரிடம் இருந்தோ, அவளது உற்ற உறவுகளிடம் இருந்தோ ஒரு அழைப்பு... ஏன் ஒரு செய்தி கூட வரவில்லை. தோழமைகளுக்கு உரிய பதிலை அளித்து சிறிது நேரம் பேசிவிட்டு, மன வருத்தத்தை போக்க தான் கேம் விளையாடினாள் அந்த இரவில்... கிட்டதட்ட ஐம்பது லெவல்களை ஒரு மூச்சில் முடித்து விட்டாள். அதன் பின் தூக்கம் கண்களை சுழட்ட தான் உறங்கினாள்.

கடந்த ஒரு வருடமாக தான் அந்த கேமை விளையாண்டு கொண்டு இருக்கிறாள் கீர்த்தி. தனது தனிமை மற்றும் ஓய்வு நேரங்களில்... துக்கம், சோகம், மன வருத்தம், தனிமை, இனிமை, மகிழ்ச்சி போன்ற உணர்வுகளையும் மற்ற நினைவுகளையும் தவிர்க்க... ஏனென்றால் அவள் மனம் இன்னும் யாரிடமும் இந்த உணர்வுகளை பகிர விரும்பவில்லை. மிதுனிடம் அவள் நெருக்கமாய் உணர்ந்தாலும் அவள் உள்ள கிடங்கை காட்ட விரும்பவில்லை.

இத்தனை எண்ணங்களிலும், மிதுன் அவளுக்கு இந்த நாளில் வாழ்த்தி வெளியே அழைத்து வந்தது மனதின் ஒரு ஓரம் மகிழ்ச்சியை அளித்தது என்பது மறுக்க முடியாத உண்மை. மிதுனிடம் அவள் ஒரு விதமான பந்தத்தை உணருகிறாள். ஆனால் கண்டிப்பாக அது காதல் கிடையாது. அன்பு... பாசம்... நட்பு... சகோதரம்... இன்னும் பல.

"சரி சரி... நானே ப்ளான் பண்ணுறேன். எல்லார மாறியும் நீயும் ஆசிரமம் போவேன் குழந்தைங்க கூட விளையாடுவேன் அப்படினு சொல்லுவ நினைச்சேன்" என்றான் மிதுன்.

சிறிதாக வாயை திறந்து அவனை மேலும் கீழும் பார்த்தவள், "சே சே... அதெல்லாம் நான் பண்ண மாட்டேன். வாழ்க்கை என்ன சினிமாவா?? கதையா??. எல்லாரும் அவங்க வாழ்க்கைய மட்டும் தான் பாக்க செய்வாங்க. அதனால அங்க போய் நேரம் செலவு செய்ய பெரும்பாலும் விரும்ப மாட்டாங்க" என்றாள்.

"எனக்கு தெரிஞ்சவங்களே நிறைய பேர் அதை செய்யறாங்க" என்றான் மிதுன்.

"ஓஓ.... அப்படியா??. சரி அவங்க செஞ்சிட்டு போறாங்க... ஆனா எனக்கு விருப்பம் இல்ல" என்றாள் கீர்த்தி.

மிதுன் கீர்த்தியை பற்றி நினைத்து இருந்த குணங்களுக்கு இது மாறாக தோன்றியது அவனுக்கு.

"ஏன் கீர்த்தி அப்படி சொல்லுற??. அது நல்ல செயல் தான??" என்று கேட்டான். ஆனால் அவனை அறியாமலே அவன் அவளை கீர்த்து/கீரிக்குட்டி என்ற அழைப்பில் இருந்து மாற்றி.

"எது?? நல்ல செயலா??. சரி ஒவ்வொருத்துருக்கும் ஒவ்வொரு மாறி தோணும். எனக்கு அப்படி தோணல. அதனால நான் பண்ணறது இல்ல" என்று சொன்னாள்.

"எப்படி உனக்கு மட்டும் அது கெட்டதா தெரியுது??" என்று சற்று கோவமாகவே கேட்டு விட்டான் மித்து அவளை பற்றிய தன் கணிப்பு தவறாக இருப்பதால்...

ஏனோ அவள் இளகிய மனம் உடையவள்... குழந்தை மனம் உடையவள்... என்ற அவன் எண்ணங்கள் மாறுவது போல் தோன்றியது மிதுனுக்கு.

இவ்வுலகில் முக்கால் பங்கு மனிதர்கள் இப்படி தான் உள்ளனர். ஒருவரை பார்த்தவுடன் அல்லது இரண்டு மூன்று நாள் பழக்கத்தில் அவர்கள் இப்படி தான் என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர். அந்த முடிவு தவறாகும் பச்சத்தில் அந்த ஒருவர் மேல கோபம் கொள்கின்றனர். அதுவும் அந்த சம்பந்தப்பட்ட நபரிடம் விளக்கம் கேட்கும் முன்னே அந்த முடிவையும் எடுத்து விடுகின்றனர். நிறைய உறவுகள்... அது நட்போ!! காதலோ!! திருமண வாழ்வோ!! தங்கள் பிரிய இந்த அவசர முடிவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் சில உறவுகளில் அந்த விளக்கம் கேட்டும் அதை ஏற்று கொள்ள முடியாமலும் விலக்கப்படுகின்றன.

இப்போது கீர்த்தி மற்றும் மிதுனிடத்தில் இந்த சின்ன கருத்து வேறுபாடு எந்த விதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். மிதுன் கீர்த்தியிடம் விளக்கம் கேட்டதே நல்ல அறிகுறியாக தான் தெரிகிறது. பார்ப்போம்.

"அது கெட்டதுனு நான் சொல்லவே இல்லையே!!. அதே போல் எனக்கு நல்லதாகவும் தெரியவில்லை" என்றாள் கீர்த்தி.

அய்யோ குழப்புறாளே.. என்று நினைத்தவன் அவளை தான் பார்த்தான். எப்படினு சொல்லு என்று சொல்லுவது போல் இருந்தது அந்த பார்வை.

"இப்ப என் பிறந்த நாளுனு அங்க எல்லாருக்கும் ஸ்பெஷல் சாப்பாடு போடறோம்னு வச்சிக்கோ. அப்ப இன்னிக்கு ஒரு நாள் சாப்பிடுவாங்க... நாளைக்கு?? நாளை மறுநாள்?? அதற்கு அடுத்த நாள்??. நம்மளும் தினமும் போய் போடுவோமா??. இல்ல... அப்பறம் பசங்க அதுக்கு ஏங்க ஆரம்பிச்சிடுவாங்க. பெரிய பசங்க புரிஞ்சிப்பாங்க. சின்ன பசங்க??.. யாருக்காவது பிறந்த நாள் வருமா!! இங்க வந்து சாப்பாடு போடுவாங்களா?? அப்படினு நினைப்பாங்க. மறைமுகமா அவங்கள பிச்சை எடுக்க வைக்கற மாறி எனக்கு தோணும் அது" என்று அவளது மனதில் உள்ளதை சொன்னாள்.

மிதுனுக்குமே அப்படி ஒரு கோணம் இருப்பது அவள் சொல்லும் வரை தோணவில்லை. அதும் மறைமுக பிச்சை என்பது அவன் மனதை மிகவும் பாதித்தது. அப்பனா யாரும் அங்க போக கூடாதா?? அவங்களுக்கு உதவ கூடாதா?? என்று தோன்றியது.

அதை மறைக்காமல் கேட்டு விட்டான். அதற்கு அவளது கோணத்தில் உள்ள பதிலை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

கொடுப்பாள்...

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்...

"உன்னில் இடம் கொடுப்பாயா??" - கருத்து திரி

நன்றி!!!

இங்ஙனம்
திரா ஆனந்த் 🍀
 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இடம் 6

மிதுன் தன் மனதில் தோன்றிய அவளை பற்றிய கேள்வியை கேட்டு விட்டான்.

"அப்பனா யாரும் ஆசிரமம் போய் உதவி செய்ய கூடாதா??" என்று கேட்டான்.

"சே.. சே... நான் அப்படி எல்லாம் சொல்லவே இல்லையே!!. உண்மையிலே உதவி பண்ணறவங்க யாருக்கும் தெரியாம, அவங்க நல்லதுக்குனு நினைச்சி தான் பண்ணுவாங்க. வலது கை கொடுக்கறது இடது கைக்கு கூட தெரிய கூடாதுனு சொல்லுவாங்க.. கேள்விப்பட்டு இருக்கயா??. அப்படி தான் இருப்பாங்க" என்றவள் தொடர்ந்து, "இப்போ நீ ஒரு நாள் அங்க ஸ்பெஷல் சாப்பாடு போட ஆகுற காசை அவங்ககிட்ட கொடுத்துட்டா... அவங்க அதை வச்சி வயிறு வாடாம ஒரு அஞ்சு நாளைக்கு எப்பவும் சாப்பிடற உணவை சாப்பிடலாம். நான் அங்க குடுக்கறேன் நான் நல்லவ நீ பாருனு யாருக்கும் காட்ட தேவையில்ல. சில பேர் அந்த நிர்வாகி கிட்டயே காசை கொடுப்பாங்க. ஆனா அவங்க டெக்ஸ் எக்ஸ்ஷம்ஷன்க்காக (Tax Exemption) தான் கொடுப்பாங்க. அதுவும் வேற எங்கயும் இன்வஸ்ட் பண்ண முடியாதுங்கற பட்சத்தில் தான். மனசார கொடுக்கறவங்க சில பேர் தான். பல பேர் தன் ஆதாயத்துக்காக தான் பண்ணறாங்க" என்று தன் எண்ணங்களை சொன்னாள் கீர்த்தி.

"அப்படி இல்ல... ஒரு நாளாவது நல்ல சாப்பாடு சாப்பிடட்டும் நினைச்சி தான் சாப்பாடு போடுவாங்க. மத்தபடி யாரும் சீன் போடனும் நினைச்சி பண்றது இல்ல" என்றான் மிதுன் விடாமல்.

"ஏன்??. அவங்க மட்டும் தான் நல்ல சாப்பாடு சாப்பிடாம இருக்காங்களா??. நாட்டுல பாதி பேரு அன்னிக்கு சம்பாரிச்சி அன்னைக்கே இல்ல வார கணக்கா சம்பளம் வாங்கி சாப்பிடுறவங்க தான். அவங்களுக்கு பண்ணலாம்ல. அது பண்ணா தெரியாது யாருக்கும். பெருசா பேசவும் மாட்டாங்க" என்றாள் கீர்த்தி.

கீர்த்தி சொல்வது சரி என்று தோன்றினாலும், மற்றவர்களை அவ்வாறு சொல்வது அவனுக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் அதற்காக அவளை வெறுக்க தான் அவனால் முடியாது. பிடிக்கவில்லை என்பதற்கும் வெறுக்கிறதுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. பிடிக்கலை என்பது அந்த ஒரு குறிப்பிட்ட விசயத்தை இங்கே குணத்தை... வெறுப்பதால் அவர்களது நல்ல செயல்/குணம் கூட தவறாய் தான் தோன்றும்.

அவளுக்காக என் கருத்தை நான் மாத்திக்கலை. ஏன் அம்மா சொல்லியே நான் கேக்காம தான் இருக்கேன் சில விசயங்களில். அதே போல் அது அவளது கருத்து. ஆனால் மற்றவர்களை தவறாய் சொல்வது தான் அவனுக்கு மனம் ஒப்பவில்லை.

"சரி. அதற்காக மத்தவங்களை தப்பு சொல்லறது சரியா??" - மிதுன்.

"ஆனால் எல்லாரும் அப்படி தான் இருக்காங்க. தான் நல்லவங்கனு காட்ட தான் நினைப்பாங்க. அடுத்தவங்க மனசை புரிஞ்சிக்காம. தன்னோட ஆதாயத்துக்கு மட்டும் தான் உதவி பண்ணறேன் வருவாங்க இல்ல இப்ப பண்ண உதவிகளை பின்னாடி சொல்லி காட்டி நம்மள ப்ளாக் மெயில் பண்ணுவாங்க. கார்னர் பண்ணுவாங்க" என்று எதையோ நினைத்து கொண்டே பேசுபவள் போல சொன்னாள் கீர்த்தி.

மிதுன் புரிந்து கொண்டான். அவளது குடும்பத்துடனான பிரச்சனைக்கும், அவளது இந்த கருத்துக்களுக்கும் ஏதோ தொடர்பு உள்ளது என்பதை. மேலும் தன்னையும் அப்படி தான் நினைக்கிறாளோ!!! என்றும் அவனுக்கு தோன்றியது. ஆனால் அதற்கு மேல் அதை பற்றி பேச விரும்பாமல், பேச்சை மாற்றினான்... காலங்கள் போக அவளே மனிதர்களை புரிந்து கொள்வாள் என்று. அவளது கருத்துக்கள் முற்றிலும் தவறு என்று சொல்ல முடியாது. அவளது எண்ணங்கள் சரி தான். ஆனால் மனிதர்களை தவறாய் எண்ணுவது தான் அவனுக்கு நெருடலாய் இருந்தது. இருந்தும் அவளை தனது கீர்க்குட்டியாய் எண்ணி பேசினான். இந்த அளவு பந்தம் அவளுடன் அவனுக்கு எப்படி வந்தது என்று தான் அவனுக்கு புரியவில்லை. சில நேரம் நம் உடன் பிறப்புகளிடமே நான் தான் பெரிய ஆள் என்ற அகங்காரம்(Ego) இருக்கும். ஆனால் இவளிடம் அவனுக்கு அப்படி தோன்றவில்லை என்பது தான் வியப்பு.

"சரி விடு மா. அப்ப நம்ம எங்க போலாம் இன்னிக்கு??" என்று மிதுன் பேச்சை மாற்ற, "ப்ச்... எனக்கு ஒன்னும் தோணலை. நீயே சொல்லு" என்றாள் கீர்த்தி.

"ஹம்ம்... எங்க போலாம்?? எங்க போலாம்??" என்று யோசித்து, "ஹான்... மூவி போலாம். அங்கயே சாப்பிட்டு அதாவது உன்னோட ட்ரீட் முடிச்சிட்டு, அப்பறம் கிப்ட் வாங்க போலாம். ஓகேவா??" என்று மிதுன் அவசரமாய் போட்ட ப்ளானை சொன்னான்.

"இந்த ட்ரீட் மேட்டர் அவசர ப்ளான் மாறி தெரில. சாவகாசமா பண்ண ப்ளான் மாறி தான் இருக்கு. ட்ரீட்னா கவிக்காவையும் கூட்டி வந்து இருக்கலாம்" என்று அவனை கலாய்த்து விட்டு, தனது எண்ணத்தையும் கூறினாள்.

"அவளாம் ஒன்னும் வர தேவை இல்லை. வந்தா என் கூட சண்ட போட்டுட்டு தான் இருப்பா. சரியான டெவில்" என்று அவளை திட்டும் மோடுக்கு போய் விட்டான்.

"அச்சோ!!. உங்க இரண்டு பேர் கூடவும் முடில என்னால" என்று சலித்து கொண்டே எழுந்தாள் கீர்த்தி.

அதன் பின் இருவரும் சேர்ந்து அங்கே ஒரு தியேட்டருக்கு மூவி பார்க்க சென்றனர்.

காலையிலே மதன், அமிருக்கு அழைத்து விட்டான். ஆனால் அந்த அமிர் தான் இன்னும் உறங்கி கொண்டு இருந்தான். அவன் எடுக்கவில்லை என்றவுடன் என்ன பண்ணலாம் என்று யோசித்து விட்டு, 'சரி அத்தை வீட்டுக்கு போகலாம். அங்கயே மார்னிங் சாப்பாடு சாப்பிட்டு விட்டு வெளியே போகலாம்' என்று எண்ணி அங்கே கிளம்பி விட்டான்.

மதன், "அம்மா நான் அத்தை வீட்டுக்கு போய்ட்டு... அங்க இருந்து அமிர் கூட வெளிய போக போறேன்" என்று சொன்னான்.

"டேய்... நேத்து நான் கேட்டது... சரி மா நான் யோசிச்சிட்டு சொல்லறேன்" என்று சொன்னவன் வெளியே கிளம்பினான்.

அந்த நேரம் மதனின் பக்கத்து வீட்டு காரனான மிதுனின் நண்பனும் வெளியே கிளம்ப அவனை பார்த்த மதன், "டேய் மச்சா... தேவ் நம்பர உன் கொலிக் கிட்ட கொடுத்துடுடா... நான் அவன் கிட்ட சொல்லி வைக்கிறேன். அப்படியே அவரு நம்பரும் எனக்கு அனுப்பி விடுடா" என்று சொன்னான்.

"சரி மச்சா. நான் அனுப்பறேன்" என்று அவன் சொல்ல, இருவரும் அவரவர் வழியில் கிளம்பினர்.

ஆக மொத்தம் யாரும் லீவ் நாள் வீட்டுல இருக்க மாட்டிங்க... சரி தான்.

மதன் தனது அத்தை வீட்டிற்குள் நுழைய, அம்பிகா அங்கே ஹாலில் அமர்ந்து சமைப்பதற்கு தேவையான ஆயத்தங்கள் செய்து கொண்டு இருந்தார். அவர் வெங்காயம் தொளித்து கொண்டு இருக்க, அமிரும் அவர் அருகே அமர்ந்து பூண்டு தொளித்து கொண்டு இருந்தான்.

epi6.png

பெண் பிள்ளைகள் இல்லாத முக்கால் வாசி வீட்டில் ஆண் பிள்ளைகள் தான் அவர்கள் அம்மாவுக்கு சமையலில் வீட்டு வேலைகளில் உதவி செய்வார்கள். அப்படிப்பட்ட ஆண் பிள்ளைகளில் நம் நாயகனும் ஒருவன். இது சின்ன விசயமாய் தெரியலாம். ஆனால் இதன் பின் எவ்வளவு பெரிய விளக்கங்கள் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதே போல் அவர்கள் வீட்டிலும் நீ இந்த வேலை எல்லாம் செய்ய கூடாது... நீ ஆண் பிள்ளை.. நீ அப்படி.. நீ இப்படி... என்று கூறி அவன் மனதில் ஒரு வித அகங்காரத்தை/கர்வத்தை ஏற்றி வைக்கவில்லை. வேலை என்பது எல்லோருக்கும் பொது. மத்தவங்க மேல இல்லைனாலும், நம்ம குடும்பத்துல உள்ளவங்க கஷ்டம் புரிஞ்சிக்கிட்டு அவங்களுக்கு உதவி செய்யனும் என்று தான் சொல்லி கொடுத்து உள்ளனர். நம் வீட்டில் இருந்து தான் சமூகம் உருவாகிறது. இந்த சின்ன சின்ன விசயங்கள் சமூகத்தில் பெரிய பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை. அதன்படி தான் அமிரும் வளர்ந்து நிற்கிறான்.

"என்ன அத்தை... அம்மாவும் பையனும் சேர்ந்து சமையல் செய்ய போறீங்களா??. கரெக்ட் தான் அமிர்... மாமா வந்து இருக்கேன்ல. அத்தானுக்கு பிடிச்ச மாறி சமைச்சி போடனும். சரியா??" என்று கிண்டலாக கேட்டு கொண்டே அவன் தலையை கலைத்து விட்டான் மதன்.

"வாடா மதன்" - அம்பிகா.

"வாடா... ரசத்துல விசத்த கலந்து உனக்கு ஊத்தறேன்" என்று கூறி கொண்டே அவன் கையை தனது தலையில் இருந்து தட்டி விட்டான் அமிர்.

அதை கேட்டு கொண்டே அங்க அமர்ந்த மதன், அவனும் சில பூண்டை எடுத்து தொளித்து கொண்டே, "சரிடா இன்னிக்கு வெளிய போலாம் சொன்னனே. அதுக்கு போன் பண்ணறேன்னு சொன்னனே நினைப்பு இருக்கா??" என்று கேட்டான்.

"ஏன் இல்ல?? அதெல்லாம் எனக்கு நல்லாவே நினைப்பு இருக்கு. உனக்கு தான் நினைப்பு இல்ல. எங்க நீ தான் போனே பண்ணல" என்று பதிலுக்கு சொல்லி கொண்டே பூண்டு தோலை தூக்கி அவன் மேல் போட்டான் அமிர்.

"உன் போன எங்க வச்சி இருக்க??. அத எடுத்து பாரு... அப்போ தெரியும் நான் போன் பண்ணனா இல்லையானு" என்று வெங்காய தோலை எடுத்து அவன் மேல் எறிந்தான் மதன்.

"போதும் டா பசங்களா. இப்படியே வீடு பூராம் எடுத்து இப்படி எறிஞ்சிகிட்டு இருந்தீங்கனா... நீங்க தான் வீடு முழுக்க கூட்டி விடனும்" என்று அவர்களை எச்சரித்தார் அம்பிகா.

"ச்சே... நாங்க ஏன் எடுத்து எறிய போறோம்" என்று இருவரும் அவர்கள் அருகில் கீழே விழுந்து கிடந்த குப்பையை எடுத்து ஏற்கனவே இருந்த தோல் குப்பைகளுடன் சேர்த்து வைத்தனர். அதன் பின், "மா நா போய் குளிச்சிட்டு வந்துடறேன்" என்று விட்டு தனது அறைக்கு ஓடினான் அமிர்... எங்கே இருந்தால் உண்மையாகவே கூட்ட சொல்லி விடுவார்களோ என்று.

அவனுக்கு வீடு கூட்டுவது கூட பிரச்சனை இல்லை. ஆனால் வந்து பார்த்து விட்டு டேபிள் அடியில குப்பை இருக்கு. செல்ப் அடியில குப்பை இருக்கு. டீபாய் நகர்த்தி கூட்டனும் என்று சொல்லுவார் அதனால் தான் ஓடி விட்டான்.

"அத்தை நானும் அவன் ரூமுக்கு போறேன்" - மதன்.

"நீ ஏன்டா போற??. அவன குளிப்பாட்டி விட போறயா??" என்று சிரித்து கொண்டே கேட்டார் அம்பிகா.

மதன் என்ன சொல்வது என்று தெரியாமல் திரு திருவென முழிக்க, "சரி சரி ரொம்ப முழிக்காத... இந்த குப்பையை மட்டும் எடுத்து குப்பை தொட்டியில் போட்டுட்டு போ. முக்கா மணி நேரத்தில் சாப்பாடு ஆகிடும். சாப்பிட்டு எங்கனாலும் வெளியே போங்க" என்று எல்லாம் எடுத்து கொண்டு சமையலறை உள்ளே சென்றார் அம்பிகா.

அந்த குப்பை எல்லாம் எடுத்து ஒரு ஓரத்தில் இருந்த குப்பை தொட்டியில் போட்டு விட்டு, "போட்டுட்டேன் த்த" என்று அவரிடமும் சொல்லி விட்டு அமிர் அறைக்கு சென்றான் மதன்.

அமிர் குளியல் அறையில் குளித்து கொண்டு இருக்க, மதன் அமிரின் மெத்தையில் படுத்து கொண்டு இருந்தான் மதன்.

குளித்து விட்டு வெளியே வந்த அமிர், அங்கே இருந்த மதனை பார்த்து விட்டு எதுவும் சொல்லாமல், இன்று வெளியே செல்வதற்கு ஏற்ற உடையை அணிந்தான்.

அம்பிகாவும் சமைத்து முடிக்க, மூவரும் சேர்ந்து வெளியே எடுத்து வந்து வைத்தனர். நந்தாவும் எழுந்து வரை நால்வரும் காலை உணவை முடித்து விட்டு அந்த நாளை தொடங்கினர்.

"சரி மா. போயிட்டு வரோம் பா" என்று அமிரும், "போய்ட்டு வரோம் மாமா.. அத்த" என்று மதனும் கூறி விட்டு, மதனின் இரு சக்கர வாகனத்திலே இருவரும் கிளம்பினர்.... கீர்த்தி, மிதுன் சென்றுள்ள திரையரங்குக்கே...

கொடுப்பாள்...

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே...

"உன்னில் இடம் கொடுப்பாயா??" - கருத்து திரி

நன்றி!!!

இங்ஙனம்
திரா ஆனந்த் 🍀
 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இடம் 7

கீர்த்தியும், மிதுனும் தியேட்டரில் அமர்ந்து படம் பார்த்து கொண்டு இருந்தனர். ஆனால் கீர்த்தி மனம் அதில் செல்லவே இல்லை. அதில் வந்த காட்சி அப்படி...

திடீரென மணமகள் காணாமல் போய் விடுகிறாள், தனது காதலனை தேடி...

அதனால் அந்த மணமகனுக்கு கட்டிக்கும் முறையில் உள்ள ஒரு பெண்ணை பார்த்து அதே மணமேடையில் கட்டி வைக்கின்றனர்.

கிட்டதட்ட அதே போல் ஒரு நிகழ்வு அவள் வாழ்வில் நடந்து, இப்போது எல்லோரையும் விட்டு விட்டு இங்கே வந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறாள்.

'சரவண மாமா கல்யாணம் உடனே நம்ம எவ்வளவு ஆனந்தப்பட்டோம். ஆனா எல்லாம் அந்த பவித்ரா மண்டபத்தில் இருந்து போற வரைக்கும் தான். அதுக்கு அப்பறம் அந்த மண்டபத்தில் நமக்கு நடந்தது எல்லாம் நினைச்சா இப்போ கூட அவ்வளவு வருத்தம் கோபம் எல்லாம் வருது. அய்யோ ஏன் மா இப்படி பண்ணீங்க??. ஏன் என்னை மாமாவ கல்யாணம் பண்ணிக்க சொன்னீங்க??. ஏன்...' என்று இன்னும் அவளது கேள்விகள் தொடரும் முன் மிதுன் அவளை அழைத்தான்.

"இடைவேளை கீர்த்து. நான் ரெஸ்ட் ரூம் போய்ட்டு வரேன். உனக்கு ஸ்னேக்ஸ் எதுனா வேனும்னா சொல்லு, வரும் போது வாங்கிட்டு வரேன்" என்று கேட்டான் மித்து.

"இல்ல மித்து... சாப்பிட எதுவும் வேணாம். குடிக்க மட்டும் எதுனா வாங்கிட்டு வா. நான் இங்கயே இருக்கேன்" என்று சொன்னாள்.

கீர்த்தியும், மிதுனும் அமர்ந்து இருந்த இருக்கை நடைபாதைக்கு அருகில் இருந்தது. அந்த நடைபாதையில் அடுத்த பக்கத்தின் ஓர இருக்கையில் தான் அமிரும், மதனும் அமர்ந்து இருந்தனர். அவர்கள் இருவரும் கூட வெளியே சென்று இருந்தனர்.

சிறிது நேரத்தில் படம் ஆரம்பித்து விட மூவரும் வரவில்லை. சில நொடிகளில் காலடி ஓசை கேட்க, சரி மித்து தான் வருகிறான் போல என்று எண்ணி, தனது கைபேசியில் ஒளியை ஏற்படுத்தி பாதையை காட்டினாள். ஆனால் வந்தது அமிரும், மதனும்...

அவளது உதவிக்கு, "ஹேய் கேர்ள்... தேங்க்ஸ்" என்று அமிர் மென் புன்னகையுடன் கூற, சிறிதாய் இதழை இழுத்து வைத்து ஒரு சின்ன தலையசைப்புடன், "ம்ம்ம்" என்ற ஒலியை எழுப்பினாள். அது அவர்களுக்கு கேட்டு இருக்குமா??. தெரியவில்லை.

கீர்த்தி மித்துக்கு தொலைபேசியில் அழைத்தாள், ஆனால் அது, "நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் வேறு ஒருவருடன் பேசி கொண்டு உள்ளார். தயவு செய்து சிறிது நேரம் கழித்து தொடர்பு கொள்ளவும்" என்று தமிழில் சொல்லி விட்டு அடுத்து, "த நம்பர் யூ ஆர் ட்ரையிங்" எனும் போதே அழைப்பை துண்டித்து விட்டாள் அதை கேட்காமல்.

மேலும் சில நிமிடங்கள் பொருத்து அவள் அவனுக்கு அழைக்கவும், அவளது தோளை தட்டி குடிக்க பாணத்தை நீட்டினான் மிதுன். அவனை பார்த்ததும் அழைப்பை நிறுத்தி விட்டு அதை கையில் வாங்கினாள்.

"இதை வாங்க தான் இவ்வளவு நேரமா மித்து. அப்பனா வாங்கமாயே வந்து இருக்கலாம்ல" - கீர்த்தி.

"இல்லடா கீர்த்து. ஒரு கால் வந்தது. அதான் பேசிட்டு வர லேட் ஆகிடுச்சி" - மிதுன்.

"ஓஓஓ" என்றவள் அதற்கு மேல் கேட்டு கொள்ளவில்லை. ஆனால் மித்துவே, "வீடு ப்ளான் போட ஒருத்தங்ககிட்ட பேச சொல்லி ஏன் ப்ரெண்ட் கிட்ட சொல்லி இருந்தேன். அவன் தான் போன் பண்ணி, அவங்க நம்பர் கொடுத்தான்" என்று சொன்னான். கீர்த்தி அதற்கு பதிலாக, கட்டை விரலையும், ஆள் காட்டி விரலையும் வட்டம் போல இணைத்து மற்ற மூன்று விரல்களையும நேராக வைத்து 'சூப்பர்' என்பதை சைகையால் சொன்னாள், அந்த குளிர் பாணத்தை ஸ்ட்ராவால்(straw) உறிஞ்சி கொண்டே...

எதெர்ச்சியாக இந்த பக்கம் திரும்பிய அமிருக்கு, அவளின் சைகை நன்றாகவே தெரிந்தது. அவள் அழகாய் தெரிந்தாள் அவன் கண்களிற்கு. அதன் பின் படம் பார்ப்பதும், சில நேரம் திரும்பி அவளை பார்ப்பதுமாய் இருந்தான் அமிர்.

படம் முடிந்து அனைவரும் வெளியே வந்தனர். அதற்குள் மதிய உணவு நேரம் வந்து இருக்க, அருகே இருந்த உணவகத்தினுள் நுழைந்தனர் கீர்த்தியும், மிதுன்.

உள்ளே நடந்து வந்த மித்து, அங்கே இருந்த நபரை பார்த்து விட்டு கீர்த்தியை பார்த்து முறைத்தான்.

அவனை பார்த்து லேசாய் சிரித்தவள், "வா மித்து... அங்க போய் உட்காரலாம்" என்று அந்த நபர் இருந்த மேசைக்கு அழைத்து சென்றாள்.

"ஹாய் கவிக்கா... ரொம்ப நேரம் வெயிட் பண்ணீங்களா??" என்று அந்த மேசையில் இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டே கேட்டாள் கீர்த்தி.

"சே.. சே... இல்ல கீர்த்து... வந்து ஒரு டென் மினிட்ஸ் தான் இருக்கும்" - சங்கவி.

"ஹலோ சார். இன்னும் கோபம் போகலையா??" என்று சங்கவி மிதுனை நோக்கி கேட்க, மிதுன் அவளை ஒன்றும் சொல்லாமல் முறைத்து விட்டு உணவுகளை ஆர்டர் செய்தான்.

அவன் அசைவ உணவு வகைகளை சொல்லி கொண்டு இருக்க, "மித்து எனக்கு சைவம் மட்டும் போதும்" என்றாள்.

"ஏன்??" - கவி

"இல்ல... பிறந்த நாள்... கல்யாண நாள்.. இல்ல எதுனா ஸ்பெஷல் டேனா நாங்க நான் வெஜ் சாப்பிட மாட்டோம்" - கீர்த்தி.

"ஓஓஓ" - கவி

"ஆனா நாங்க சாப்பிடுவோம்" என்ற மித்து தொடர்ந்து ஆர்டர் செய்தான்.

உணவு தயாராகி வரும் இடைவேளையில் கவிக்கும், மித்துவுக்கும் இருந்த வாய் கால் தகராறு கீர்த்தியின் வாய் பேச்சால் தீர்த்து வைக்கப்பட்டது.

உணவும் வர கேலி கிண்டல் பேச்சுக்களுடன் உணவு வேளையும் முடிந்தது.

கவி, "ஆமா மித்து. வீடு கட்டுற ப்ளான் என்ன ஆச்சி??" என்று கேட்டாள்.

"ஹேய்... ஆமா... யாரோ நம்பர் கொடுத்தாங்கனு சொன்னயே மித்து!!. அவங்களுக்கு கால் பண்ணி பேசலாம்ல" என்று கேட்டாள் கீர்த்தி.

"வீட்டுக்கு போய்ட்டு பண்ணலாம் நினைச்சேன்" - மித்து.

"வீட்டுக்கு போக லேட் ஆச்சினா!!. இப்பவே பண்ணி கேட்டனா... அவங்க ஃப்ரீயா இருந்தா... இன்னிக்கே இந்த அவங்கள நீ போய் மீட் பண்ணிக்கலாம்ல. இல்லனா நாளைக்கும் லீவ் போடனும் இல்லனா பர்மிஷன் போடனும்" என்று அவன் மேல் அக்கறையாய் சொன்னாள் கவி.

"சரி... சரி... பண்ணறேன்" என்ற மித்து, அமிரின் அழைப்பேசிக்கு அழைத்தான்.

இவர்களுக்கு பக்கத்து மேசையில் அமர்ந்து இருந்தவர்களில் ஒருவனின் அலைபேசியில் ஆன்ட்ராய்டு செயலியின் டிபால்ட் ரிங் டோன் ஒலித்தது. அனைத்து உயிர்களின் டிபால்ட் செயலின்படி சத்தம் வந்த திசையை நோக்கி திரும்பினர். அங்கே தான் அமிரும், மதனும் அமர்ந்து இருந்தனர். அதில் அமிரின் அலைபேசி தான் ஒலித்தது.

"ஹலோ" அட்டண்ட் செய்து அமிர் கேட்டான்.

"ஹலோ" என்றவன், "தேவ் தான நீங்க??" என்று கேட்க, அமிரும் "ஆமாம்" என்றான்.

"நான் மிதுன். ஒரு வீடு கட்டனும்... உங்கள அப்ரோச் பண்ண சொன்னாங்க" என்ற மிதுன் அவனது தோழனின் பெயரும் சொல்ல, ஏற்கனவே அதை பற்றி சொல்லி வைத்து இருந்தான் மதன்.

"ஆமாங்க... சொல்லுங்க" - அமிர்.

"வந்து நாம இன்னைக்கே மீட் பண்ணலாமா??. நாளைக்குனா ஆபிஸ் போக வேண்டி இருக்கும்" - மிதுன்.

"ஓ சுயர். பட் நான் இப்போ வெளியே இருக்கேன். ஈவ்னிங் மீட் பண்ணலாமா??" - அமிர்.

"எஸ் எஸ். தேங்க்ஸ் தேவ்" என்ற மிதுன் அழைப்பை துண்டித்தவாறே அவனது மேசைக்கு வர, கீர்த்தியும் கவியும் அவனிடம் என்னவென கேட்டார்கள்.

"தேவ்கிட்ட பேசிட்டேன்" என்ற மிதுன் மேலும் அவன் பேசிய தகவல்களை சொல்ல, அவர்கள் மேசையில் ஒரு கவனத்தை வைத்து இருந்த அமிருக்கும் கேட்டது. மதனிடமும் அதை சொன்ன அமிரும் மிதுனும் எழுந்து அவர்கள் அருகே வந்தான்.

"ஹாய் மிதுன்" என மிதுன் கேள்வியாய் பார்ததான்.

"ஹாய். நான் தான் தேவ். இப்போ தான் என்கிட்ட பேசனீங்க. நீங்க என் நேம் சொன்னது எனக்கு கேட்டது. அது தான் வந்தேன். ஈவ்ஸ்ட்ராப் பண்ணல. ஜெஸ்ட் நேம் கேட்டதால தான் கவனிச்சேன். அப்பறம் இது மதன். இவரு தான் உங்க ப்ரெண்ட வீட்டு பக்கத்துல இருக்காரு" என்றான் அமிர்.

"ஹாய் தேவ். இட்ஸ் ஓகே. அது நேச்சுரல் தான்" என்று தேவ்வை பார்த்து கூறியவன், அடுத்து மதனை பார்த்து, "ஹாய் மதன். ரொம்ப தேங்க்ஸ் ஹெல்ப் பண்ணதுக்கு. வாங்க உட்காருங்க" என்றவன், திரும்பி கீர்த்தியிடமும் கவியிடமும் தேவ்வையும், மதனையும் அறிமுகப்படுத்தினான். அவர்களும் இவர்களுக்கு வணக்கம் தெரிவித்தனர். அடுத்து இவர்களிடம், "இவங்க என் ப்ரெண்டஸ். இது கீர்த்தி... இது சங்கவி" என்று அவர்களை அறிமுகப்படுத்தினான்.

"வாங்க. உட்காருங்க" என்று சம்பர்தாயத்துக்கு தயங்கியவாறே மிதுன் கூறினான். இரு பெண்களுடன் வெளியே வந்து விட்டு தெரியாத ஆண்களை அவர்களுடன் அமர வைக்க மிதுனுக்கு தயக்கமாக இருந்தது. அதே போல் அவர்களை போங்கள் என்றும் கூற முடியாமல் இருந்தான்.

அதை புரிந்து கொண்ட மதனும், "இல்ல பரவாயில்ல மிதுன். நாங்க அந்த டேபில்லயே இருக்கோம். ஈவ்னிங் பாக்கலாம்" என்று கூறினான். அமிருக்கு தான் பேச்சு மிதுனிடம் இருந்தாலும் கவனம் கீர்த்தியின் மீதல்லவா இருந்தது. மதன், அமிரை இழுத்து செல்ல எத்தனிக்கும் போதே, உணவு விடுதி பணியாளர் ஒரு கேக்கை கொண்டு வந்து வைத்தார் அங்கே.

அமிர் கேக்கையும் அவர்களையும் பார்க்க சங்கவி தான், "இன்னிக்கு கீர்த்திக்கு பிறந்த நாள்" என்றாள்.

தேவ்வும், மதனும் தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்க, "நன்றிங்க" என்று இருவருக்கும் பொதுவாய் கூறினாள் கீர்த்தி.

அவர்கள் இப்போதே நகர்வதா அது மரியாதையாய் இருக்குமா என்று குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் பார்க்க, "நீங்களும் எங்க கூட ஜாயின் பண்ணிக்கோங்க" என்று கீர்த்தியே கூறி விட்டாள். மிதுன் கவியின் முகத்தை பார்க்க, அவளும் ஆமோதிப்பதாய் தெரிய, மிதுன் எந்த சங்கடமும் இல்லாமல் அவர்களை அங்கே அமர பணிய, அவர்களின் கை தட்டலில் கீர்த்தி கேக்கை வெட்டி கவிக்கு ஊட்டி விட்டு விட்டு மற்ற மூவருக்கும் கைகளில் தந்தாள்.

epi7.jpg

அதன் பின் உணவு வர ஐவரும் பேசியபடியே உண்டனர். அப்படியே மிதுனின் இடத்தின் அளவு இருக்கும் ஏரியா, வீடு எந்த மாதிரி இருக்க வேண்டும் என்பதை பற்றி எல்லாம் மிதுனும், தேவ்வும் பேச, மதன் கீர்த்தியிடமும், கவியிடமும் பேச்சு கொடுத்தான்.

மதன், "ஹாய்.. நீங்க எல்லாம் ஒரு ஆபிஸில் தான் வெர்க் பண்ணறீங்களா??" என்று கேட்டான்.

"ஆமாங்க" என்று பொதுவாய் கூறினர் இருவரும்.

"ஹேய் நான் மதன். பேர் சொல்லியே கூப்பிடுங்க. இல்லனா அண்ணானு கூட கூப்பிடலாம்" என்றான் மதன்.

"சரிங்க" என்ற கீர்த்தியை கூர்மையாய் பார்க்க, "அண்ணா" என்றாள்.

அதன் பின் சங்கவியும் அண்ணா என்று அழைத்து பேசி கொண்டு இருந்தாள்.

தேவ்வின் மனது கவனம் மட்டும் அடிக்கடி கீர்த்தியிடம் சென்றது.

"சரி தேவ். நீங்க ஈவ்னிங் வரீங்களா??. நம்ம இடத்தை பார்த்து விட்டு வந்துடலாம்" என்றான் மிதுன்.

"ஓகே மிதுன்" என்ற தேவ்வும் மற்றவர்களும் உண்டு முடித்து இருந்தனர். அனைவரும் மற்றவர்களிடம் விடை பெற அவர்கள் பாதையில் பயணித்தனர்.

கொடுப்பாள்...

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே...

"உன்னில் இடம் கொடுப்பாயா??" - கருத்து திரி

நன்றி!!!

இங்ஙனம்
திரா ஆனந்த் 🍀
 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இடம் 8

இரண்டு மாடிகளை கொண்ட அந்த காலத்து வீடு ஒன்று...

அதை சுற்றி அங்காங்கே சிறு செடிகளும், சில வாழை மரங்கள், சில தென்னை மரங்கள் என இருந்தது. மிக எளிமையாக கூற வேண்டுமானால் வீட்டு தோட்டம் என்று கூட சொல்லி கொள்ளலாம்... அமைதியான இடம்...

அந்த அமைதியை களைப்பது போல அந்த மாலையும் அல்லாத மதியமும் அல்லாத பொழுதில், ஒரு வயதான பெண்மணி கத்தி கொண்டு இருந்தார். இல்லை திட்டி கொண்டு இருந்தார் ஒருவரை.

அவர் சித்தம்மாள்... திட்டி கொண்டு இருந்தது. அப்படி என்றால் திட்டு வாங்குவது... அற்புதம்.

"கருவேப்பில கொழுந்து கணக்கா ஒத்த புள்ளையை பெத்தேன். அவனுக்கு ஒரு கல்யாணத்த பண்ணலாம் பாத்தா... நல்ல புள்ளைனு சொன்னீங்க... இராவோட இராவா அது எங்கையே போய்டுச்சி" என்று பல்லை கடித்து கொண்டே சொன்னவர் தொடர்ந்து, "எப்படியோ பாடுபட்டு அக்கா மவள கட்டிக்க சம்மதிக்க வைச்சா, அவக்கோட இவன் வாழற மாறியே இல்ல. அவ எங்கையோ இவன் எங்கையோனு இருக்கு. என் புள்ள வாழ்க்க இப்படி அமையனும்" என்று புலம்பினார் சித்தம்மாள்.

மேலும் அவர், "அவனுக்கு தட்டி தட்டி எப்படியோ கல்யாணம் பண்ணி வச்சா... அதையும் ஒழுங்கா வாழ முடியாம போச்சே!!" ஒரு சிறிய ஒப்பாரியை முடித்தவர், கோபத்துடன், "அப்படி உன் மவளுக்கு என்ன தாண்டி பிரச்சனை. எல்லாம் அவ விருப்பப்படி தானே நடந்தோம். அதுக்கு அப்பறமேட்டும் வீட்டை விட்டு போய், இப்படி எம் மவனை வாழ விடாம பண்ணிட்டாலே" என்று கீர்த்தியின் அன்னை அற்புதத்தை தான் மகள் என்றும் பாராமல் திட்டி கொண்டு இருந்தார் சரவண வேலின் அன்னை.

அங்கே இங்கே பார்த்து கொண்டு இருந்த நெருங்கிய உறவுகள் கூட சித்தம்மாளுக்கோ அற்புதத்துக்கோ ஒரு ஆறுதலும் கூறவில்லை. என்ன கூறுவது என்று அவர்களுக்கு தெரியவும் இல்லை.

அன்னேரம் உள்ளே வந்த சரவண வேலுக்கு அப்போது இருந்த வீட்டு சூழல் புரிந்தது. அதனால் அவன் யாரும் கேட்கும் முன்னே, "யாரும் என்ன பத்தி கவலைப்பட தேவையில்லை. அதான் நீங்க சொன்ன மாறி கல்யாணம் பண்ணிகிட்டேன் இல்ல. அதுக்கு மேல அது எனக்கும் என் பொண்டாட்டிக்கும் உள்ள பிரச்சனை. யாரும் அத பத்தி கவலை பட தேவையில்ல" என்று இதுக்கு மேல யாரும் எதுவும் பேச கூடாது என்ற தோரணையில் கூறினான். ஆனாலும் அங்கு இருந்தவர்கள் மனது அவனை பார்த்து வேதனை தான் அடைந்தது.

ஐந்து வருடமாக பெண் பார்க்கும் படலம் நடந்து இப்போது முப்பத்தி ஒரு வயதில் ஒரு சம்மந்தம் பொருந்தியது. அழகும் அறிவும் பணமும் படிப்பும் இருந்தாலும் ஏதோ தோஷம் என்ற ஒன்றை காரணம் காட்டியும், எதிர்பார்த்த அளவுக்கு படிப்பு இல்லை, சொந்த தொழில் செய்பவர்கள் வேண்டாம் மற்றும் இன்ன பிற என்று ஏதோ ஒரு காரணங்களை சொல்லி தான் நிராகரித்து இருந்தனர். அந்த பல தடைகளை தாண்டி அமைந்த பெண் தான் பவித்ரா. ஆனால்... அவளுக்கு என்னவோ தெரியவில்லை... கல்யாணத்துக்கு முதல் நாள் இரவு காணாமல் போய் விட்டாள். ஹ்ம்ம்... அதன் பிறகு அவன் வாழ்வில் நடந்தது எல்லாம் எதிர்பாராதது.

உள்ளே நடந்தவன் அங்கே இருந்த அற்புதத்தை பார்த்து கொண்டே பொதுவாக வீட்டினரிடம், "ப்ரியா வீட்டை விட்டு போனதுக்கு அவ செஞ்ச தப்பு தான் காரணம். அது மட்டும் தான் காரணம். அதை சொல்லி யாரும் இவங்களை திட்ட கூடாது" என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.

அக்கா அக்கா என்று வாய் நிறைய கூப்பிடுபவன் இப்போது அவங்க இவங்க என்று அழைப்பது அற்புதத்திற்கு தாங்க முடியவில்லை. ஆனால் என்ன செய்வது தவறு அவர் பக்கம் உள்ளது அல்லவா?!!. அவர் மீது மட்டுமல்ல அங்கு உள்ள அனைவரின் மீதும் தான் தவறு உள்ளது. ஆனால் அது அனைத்தும் இப்போது ப்ரியாவின் மீது மட்டுமே உள்ளது சரவணனின் பார்வையில்.

கலகலவென இல்லை என்றாலும் உர்ரென்று இருக்க மாட்டான் சரவண வேல். ஆனால் இப்போது எல்லாம் அப்படி தான் இருக்கிறான் உர்ரென... யாரை குறை சொல்ல...

அவன் 'ப்ரியா செஞ்ச தப்பு' என்றவுடன் உண்மை தெரிந்தவர்கள் அனைவருக்கும் ஒரு நிமிடம் பக்கென்று இருந்தது. அவனுக்கும் உண்மை எல்லாம் தெரிந்தால் என்ன செய்ய கூடும் என்று கணிக்க முடியவில்லை அவர்களால். அதனால் அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர்.

இங்கே சென்னையில்...

சங்கவியையும், கீர்த்தியையும் அழைத்து சென்று கீர்த்திக்கு ஒரு பரிசு பொருள் வாங்கினான் மிதுன்.

பரிசு பொருள் என்று வாங்க சென்ற போது கீர்த்திக்கு சரவணன் நியாபகம் தான் வந்தது. ஒவ்வொரு வருடமும் அவளுக்கு சரியாக பிறந்த நாள் அன்று உபயோகப்படுத்துவது போல் ஏதாவது ஒரு பொருளை வாங்கி கொடுத்து விடுவான். ஏன் தற்போது அவள் தன் வீட்டில் வைத்து இருக்கும் மடிக்கணினி கூட அவன் வாங்கி தந்தது தான். இப்போது அதை எல்லாம் நினைத்து பெரு மூச்சு தான் விட முடிந்தது.

எதெர்ச்சியாக கீர்த்தி, மிதுன் பக்கம் திரும்ப கவி மற்றும் மிதுன் இருவரும் சேர்ந்து பொருட்களை ஆராய்ந்து கொண்டிருந்தனர். அவர்களை நினைக்க கீர்த்திக்கு சிரிப்பு தான் வந்தது. ஒரு நேரம் அப்படி அடிச்சிக்கறாங்க... ஒரு நேரம் இப்படி ஒன்னுமண்ணா சுத்தறாங்க... இவங்கள புரிஞ்சிக்கவே முடியலையே... என்று எண்ணி கொண்டவள் அவர்கள் அருகே சென்றாள்.

"எப்படி இருக்கு கீர்த்தி??" என்று மூன்று விதமான செடிகள் இருக்கும் மூன்று வித பூந்தொட்டிகளை காட்டினர்.

கீர்த்தியும் அதை பார்த்து விட்டு 'சூப்பர்' என செய்கை செய்தாள்.

"நான் தான் சொன்னேன் இல்ல... இது கீர்த்திக்கு புடிக்கும்னு" என்று கெத்தாக மித்துவை பார்த்து கூறினாள் கவி.

"சரி தான்" என்ற மித்து அந்த செடிகளை தூக்கி கொண்டு பில் கவுண்டர் சென்றான்.

மேலும் இரண்டு தொட்டிகளை தூக்கி கொண்டு அவன் பின்னே சென்றாள் கவி. மித்து வைத்த தொட்டிகளின் அருகே அவள் கொண்டு வந்த இரண்டையும் வைத்தாள்.

மித்து கேள்வியாக பார்க்க, "எனக்கு தான்" என்றாள்.

"அதை ஏன் இங்கே கொண்டு வந்து வச்ச??. உனக்கு தனியா போய் பில் போட்டுக்கே" என்று அவன் கொண்டு வந்த மூன்றை மட்டும் தனியாக பிரித்தான்.

'மறுபடியும் ஆரம்பிச்சிட்டீங்களா??' என்று சிரிப்புடன் எண்ணி கொண்ட கீர்த்தி அந்த கடையை மீண்டும் ஒரு முறை சுற்றி பார்க்க சென்று விட்டாள்.

கவி, "ஏய் என்ன ஓவரா பண்ணற?!!. எப்படியும் எனக்கு பிறந்த நாள் அப்போ கிப்ட் வாங்கி தருவல்ல... அதுல கம்மி பண்ணிக்கோ" என்று சொன்னாள் கவி.

"ஒன்னு வாங்கறதே அதிசயம்... இதுல உனக்கு கம்மி வேற பண்ணுமா!!! ஆமா.. முதல்ல உனக்கு கிப்ட் எல்லாம் வாங்கி தருவன்னு யாரு சொன்னா??" என்று சிரிப்புடன் மித்து கேட்க, "ஹாஹா... ஹீஹீ..." என்று சிரித்தாள் கவி. அவளுக்கு தெரியாத அவனை பற்றி, இந்த இரண்டு வருடத்தில் அவளது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் மறக்காமல் வாழ்த்தி பரிசு வாங்கி தருபவனாயிற்றே!!!..

"சரி... நீ வாங்கி தரலனா பரவாயில்ல... எனக்கு கை இல்லையா??!!. நானே வாங்கிக்கறேன்" என்றவளை அவன் பார்க்கவும், "பில் மட்டும் நீ பே பண்ணிடு" என்றாள்.

அவனுடன் சிரிப்புடன் அவளுக்கும் சேர்த்தே பே செய்தான். அதற்குள் கீர்த்தியை தேடி உள்ளே சென்றாள் கவி. சும்மா அங்கு இருக்கும் பீங்கான் பொருட்களை நோட்டம் விட்டு கொண்டு இருந்தாள் கீர்த்தி.


epi8.png

"எதுனா உனக்கு புடிச்சி இருக்கா கீர்த்து??. சொல்லு வாங்கிடலாம் நம்ம அடிமை அங்க பில் கவுண்டர்ல தான் இருக்கு" என்று சிரிப்புடன் கவி சொல்ல, "ஹாஹா... உங்க சண்ட ஓஞ்சதா கா??. சும்மா பாக்கலாம்னு தான் வந்தேன்" என்றாள் கீர்த்தி.

"சரி பரவாயில்ல... ஒன்னும் தப்பு இல்ல... இரண்டு கப் எடுத்துக்கலாம்" என்று இரண்டு பீங்கான் கோப்பைகளை எடுத்து கொண்டு மித்துவிடம் சென்றாள் கவி.

"மித்து... கீர்த்துக்கு இந்த கப்ஸ் பிடிச்சி இருக்காம்" என்று கொண்டு வந்து வைத்தாள். கீர்த்தியை திரும்பி பார்த்த அவனுக்கு தெரிந்து விட்டது இது யார் வேலை என்று... இருந்தாலும் எதுவும் சொல்லாமல் வாங்கி கொடுத்து விட்டான்.

அவர்களை பார்க்க பார்க்க கீர்த்திக்கு ஆச்சர்யம் தான். இரண்டு நாள் முன் சண்டை போட்டவர்களா??!! இவர்கள் என்று. அன்று ஒரு நாள் இரவு வெளியே உணவு வாங்கி வர சொன்ன போது கூட கவிக்கு வாங்கி வரவில்லை அவன். கவியும் கேட்கவில்லை அது தெரிந்ததை போல். ஆனால் இப்போது ஒன்றாக சுற்றுவது... என்று புரியாத புதிர் தான் இவர்கள் அவளுக்கு... எப்படி புரியும்??. சிறிது யோசித்து இருந்தாலும் புரிந்து இருக்கும். ஆறு மாத காலமாய் கீர்த்தியுடன் இருந்த நட்புக்கே இவ்வளவு செய்யும் மித்து, ஐந்து - ஆறு மாத அதாவது இரண்டரை வருட நட்புக்கு எவ்வளவு முக்கியதுவம் கொடுப்பான் என்று. கீர்த்திக்கு தான் எதையும் ஆழ்ந்து யோசிக்கும் திறன் எப்போதோ போய் விட்டதே!!!. அப்படி யோசித்து இருந்தால் எப்போதோ சரவணனை பற்றி புரிந்து இருப்பாள்.

"வா கீர்த்து போகலாம்" என்று பொருட்களை எல்லாம் எடுத்து கொண்டு வந்த மித்து மற்றும் கவி கூறினர்.

"உங்களை வீட்டுல விட்டுட்டு, நான் வெளியே கிளம்பறேன். வாங்க" என்று அவனது காரை எடுத்தான் மித்து.

மித்துவின் விருப்பமான வாகனம் மகிழுந்து தான். நிறைய பேருக்கு பைக் பிடிக்க, இவனுக்கு கார் தான் பிடிக்கும். சில சமயம் யாராவது இவனிடம், "ட்ராப்பிக்கில் போகும்லாம் பைக் தான் பெஸ்ட்... கார்ல போனா எவ்ளோ நேரம் நின்னு நின்னு போக" என்று கூறினால், "பைக் போனா மட்டும் ட்ராப்பிக் சீக்கிரம் க்ளியர் ஆகிடுமா??. அந்த வெயில்ல பைக்ல நின்னு வியர்வை ஊத்தி அதும் வருத்தமா தான் இருக்கும். அதும் இல்லாம மழைலாம் வந்தா பைக்ல போறது ரொம்ப வருத்தம் தான்" என்று பைக்கின் இடையூறுகளை கூறி காரில் அந்த பிரச்சனைகள் இல்லை என்பதையும் கூறுவான் மிதுன். அப்படி ஒரு விருப்பம் கார் மீது அவனுக்கு.

அன்று மாலை சொன்ன போலவே தேவ்வும் வந்து விட்டான், மிதுன் அனுப்பிய லோகேஷனுக்கு...

கொடுப்பாள்...

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே...

"உன்னில் இடம் கொடுப்பாயா??" - கருத்து திரி

நன்றி!!!

இங்ஙனம்
திரா ஆனந்த் 🍀
 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இடம் 9

epi9.jpg

மிதுன் அனுப்பிய இடத்தை ஒரு வழியாக கண்டு பிடித்து அங்கு வந்து சேர்ந்து இருந்தான் தேவ் அவனது நண்பன் பிரதீப்புடன்.

"ஏய்!!!. கொஞ்சம் அவுட்டர் இல்ல டா" - பிரதீப்.

"ஆமா" என்ற தேவ்வும், இப்போது தான் ஆங்காங்கே முளைத்து கொண்டு இருந்த ஒன்று இரண்டு வீடுகளை பார்த்தான்.

"ஆனா சீக்கிரம் இங்கே இடம் வச்சி இருக்கவனும் பெரிய ஆளு ஆகிடுவான்டா. இட வேல்யு ஏறிடும்" என்று தொடங்க உள்ள ஒரு ஐடி கம்பெனி ப்ரான்ச் பற்றிய தகவல் உள்ள பலகையை காட்டினான் பிரதீப்.

மேலும் இந்த இடத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு கார்மெண்ட்ஸ் உம் தொடங்க உள்ளது. ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் ஒரு அரசு ஆரம்ப நிலை பள்ளியும் தொடங்க உள்ளது.

தொழில் பகுதியாய் மாறினால் அங்கு உள்ள இடங்களுக்கு வேல்யு அதிகம் ஆகும் என்பது பொதுவான கருத்து.

"ஆமாண்டா பிரதி. இப்ப இங்க இடம் வாங்க எவனும் யோசிக்க மாட்டான்
ஆனா மூணு வருடம் முன்னாடியே இங்க இடம் வாங்கி இருக்காரு நம்ம க்ளைண்ட். தெரிஞ்சி வாங்கனாறா இல்ல சும்மா வாங்கி போடுவோம் நினைச்சி வாங்கி இப்படி ஆகிடுச்சா தெரியல" - தேவ்.

அதே நேரம் அவர்களை பார்த்து விட்ட மிதுன், "ஹாய்" என்று அவர்களை நோக்கி கை அசைக்க, அவர்களும் ஒரு தலையசைப்புடன் அவனை நோக்கி வந்தனர்.

"வந்து ரொம்ப நேரம் ஆச்சா??" - தேவ்.

"இல்ல இப்போ தான் நானும் வந்தேன்" - மிதுன்.

"அப்பறம் இது பிரதீப். என் ப்ரெண்ட். கம்பெனில இவனும் ஒரு பாட்னர்" என்று பிரதீப்பை மிதுனிடமும், "இது மிதுன் நம்மகிட்ட வீடு கட்ட சொல்லி கேட்டவரு" என்று மிதுனை பிரதீப்பிடமும் அறிமுக படுத்தினான்.

"ஹாய்" - மிதுன்.

"ஹலோ" - பிரதீப்.

"சரி வாங்க. இப்போ இடத்தை பாக்கலாம்" என்று உள்ளே சென்றனர்.

மிதுன் அவனுடைய இடத்தை காட்ட, பிரதீப் அந்த இடத்தையும் அதை சுற்றி உள்ள பகுதியையும் பார்வை இட்டு கொண்டிருந்தான்.

"வாசல் எந்த பக்கம் வைக்கனும் இல்ல... எந்த அறை எந்த பக்கம் வரணும் என்று எதுனா டிமன்ட்ஸ் இருக்கா??" என மிதுனிடம் கேட்டான் தேவ்.

மிதுனும் அவன் சொன்ன சில விசயங்களை தேவ்விடம் சொன்னான்.

"கிரவுண்ட் ப்ளோர் மட்டும் பர்ஸ்ட் கட்டனா போதும் தேவ். அதே போல மேலயும் இரண்டு ரூம் கட்டற மாறி இருக்கனும். ஆனா இப்போ இல்ல கொஞ்ச நாள் கழிச்சி" என்று மேலும் தனது கோரிக்கைகளை தேவ்விடம் கூறினான்.

எல்லாவற்றையும் கேட்டு கொண்ட தேவ் மற்றும் பிரதீப், மிதுனிடம் விடை பெற்று கொண்டு தங்களது இருப்பிடம் சென்றனர்.

அடுத்த நாள்...

பேஷன் பில்டர்ஸ் கம்பெனி இருக்கும் கட்டிடம்...

தேவ், பிரதீப், கௌதம் மற்றும் கீதா நால்வரும் சேர்ந்து ஆரம்பித்த சிறிய கம்பெனி தான் இது.

பொதுவாக தேவாமிர்தன் மற்றும் பிரதீப் தான் வீட்டிற்கு டிசைன் செய்வார்கள். ஒருவர் செய்த டிசைனை மற்றவர் பார்த்து சரி செய்வார்கள். இருவருக்கும் திருப்தி எனில் மட்டுமே அதை கஸ்டமர்களுக்கு காட்டுவார்கள்.

கீதா இன்டீரியர் டிசைன், மாடுலார் கிட்சன் போன்றவற்றை வடிவமைப்பாள். அது தகுந்தவாறு வீட்டிற்கான டிசைன் உள்ளதா என்பதையும் தேவ்விடம் ஒரு முறை செக் செய்து கொள்வாள்.

அடுத்து கௌதம் கொத்தனார் முதல் சித்தாள் வரை ஆட்களை எடுப்பது, எலக்ட்ரிசிட்டி, ப்ளம்பிங் முதலிய வேலைகளுக்கு ஆட்களை தேர்ந்தெடுத்து அவர்களது வரவு செலவுகளை பார்ப்பது போன்ற வேலைகளை செய்வான்.

வேக வேகமாக உள்ளே வந்த கௌதம், "ஹேய் தேவ், பிரதி, கீத்து... ஒரு கவர்மண்ட் ப்ராஜெக்ட் டென்டர்க்கு வந்து இருக்கு. டிரை பண்ணலாமா??" என்று கேட்டான்.

"அதெல்லாம் பெரிய பெரிய கம்பெனி இல்லனா அரசியல்வாதிங்க கம்பெனி இல்லனா அவங்க சொந்தகாரங்க கம்பெனி அப்படி தான்டா கிடைக்கும்" - பிரதி.

"ஆமாம்டா முக்காவாசி அவங்களே எடுத்துப்பாங்க. ஆனா ஒன்னு ரெண்டு வெளியே தான் எடுப்பாங்க. இது சின்ன ப்ராஜெக்ட் தான். சோ நாம்மளும் டிரை பண்ணலாம்" - கௌதம்.

"ஹ்ம்ம் பண்ணலாம் தான். நம்மளும் ஒன்னரை வருசமா பண்ணறோம். சின்ன சின்ன பில்டிங்கும் கட்டி இருக்குறோம் தான்" - கீதா.

"வேணா டிரை பண்ணி பாக்கலாம். சும்மா நமக்கு கரெக்ட்டா எஸ்டிமேட் பண்ண முடியுதா??!! என்னனு. நமக்கும் ஒரு எக்ஸ்பிரியண்ஸ் தான்" - தேவ்.

"எக்சேக்ட்லி... அதே தான்." என்ற கௌதம், "மோர் ஓவர்... அந்த ப்ள்டிங் காட்டுற இடம் இப்ப தான் க்ரோத் ஆகிட்டு இருக்குது. சோ நம்ம நல்லா பண்ணுனா அதை பாத்து அந்த நெம்பர் ப்ளேஸ் பிலடிங்ஸ்க்கு கூட நம்மள அப்ரோச் பண்ண சான்ஸஸ் இருக்கு" என்றான்.

"ஓகே... எல்லாம் கரெக்ட் தான். ஆனா என்னை பொருத்த வரைக்கும், நம்ம சும்மா டிரை பண்ணி தான் பாக்குறோம். இதுல ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணி, அப்பறம் கிடைக்கலைனாலும் டிஸ்அப்பாய்ண்ட் ஆக கூடாது" என்றான் தேவ் அவர்களது கற்பனைகளை குறைக்க.

"எஸ் பாஸ். புரியுது" என்று கோரசாக சொல்ல அனைவரும் சிரித்தார்கள். எல்லோரும் அந்த கம்பெனிக்கு பாஸ் தான் என்றாலும் சூழ்நிலைக்கு தக்க யார் சரியாக தீர்வு சொல்வார்களோ, அவர்களை பாஸ் என்று மற்ற மூவர்களும் அழைப்பர். அழைத்து விட்டு தங்களுக்குள்ளே சிரித்தும் கொள்வர்.

இது அவர்களது கம்பெனி என்று அவர்கள் அடிக்கடி நியாபகம் படுத்தி கொள்வார்கள் போல... நம்மளே அடிச்சி விடுவோம்.

"சரி அப்போ நானும் கௌதமும் போய் அந்த இடம் எப்படி இருக்கனு பார்த்துட்டு வரோம்" என்று சொல்லிய பிரதீப் கௌதமுடன் வெளியே சென்றான்.

அதன் பின் கீதாவும், தேவ்வும் அவர்களது பணியில் இறங்கினர்.

இங்கே கீர்த்தி மற்றும் மிதுன் அலுவலகத்தில், கவியை பார்த்து பார்த்து சிரித்து கொண்டு இருந்தான் மிதுன். அவனுக்கு எதிரில் அமர்ந்து இருந்த கவியோ கையை கட்டி கொண்டு முகத்தை மறு புறம் திருப்பி கொண்டு சிரித்து கொண்டிருந்த மிதுனுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை போல் இருந்தாள்... இயல்பாக காட்டி கொள்கிறாளாம்...

கீர்த்திக்கு மிதுன் சிரிப்பதை பார்த்து சிரிப்பு வந்தாலும், கவி வலியில் இருக்கும் போது சிரிக்க தோன்றவில்லை. கூட இருந்து பார்த்தவள் ஆயிற்றே...

அப்படி என்ன தான் நடந்தது கவிக்கு... நடக்கிறது தான் அவளுக்கு பிரச்சனையே!!!

"உனக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை??" சிரிப்புடனே மித்து.

"என்னது தேவை இல்லாத வேலையா இதனால ஏன் மானமே போச்சி. அப்பறம் எப்படி நீ தேவை இல்லாத வேலைனு சொல்லுவ??" சிறிது கோபமாக கவி.

இந்த வாக்கியத்தை கேட்டதும் கட்டுபடுத்தி கொண்டிருந்த கீர்த்திக்கும் சிரிப்பு வந்து விட்டது.

கவி அவளை முறைக்க, "சரி சரி சாரி அக்கா" என்று கூறியவாறு ஒருவாறு சிரிப்பை அடக்கி விட்டாள்.

"சரி வாங்க போலாம். போய் வேலைய பார்ப்போம்" என்ற கவி கீர்த்தியை அருகில் அழைத்து அவளை பற்றி கொண்டே மெதுவாக அனத்தி கொண்டே எழுந்தாள் நாற்காலியில் இருந்து.

அவள் அமைதியாக எழுந்து இருந்தால் கூட அவர்களுக்கு ஒன்றும் தோன்றி இருக்காது. ஆனால் நடக்கும் போது அமரும் போது என்று அவள் போடும் சத்தத்தமும் அதற்கு ஏற்ற அவளது நடையும் தான் மித்துவும் கீர்த்துவும் சிரித்து கொண்டிருக்க காரணம்.

இன்று கவியின் நிலமையோ, 'அம்மே... அம்மே... அம்மம்மே...' என்று தான் இருந்தது.

அது என்னவென்றால், கவி சனி அன்று அவர்களது தோழர்களுடன் வெளியே சென்றாள் அல்லவா!!!. அங்கே இருந்த ஒருத்தி 'சங்கவி குண்டு ஆகிட்டா இல்ல' என்று சொல்லி விட்டாள். அதை தொடர்ந்து, 'ஆமா லாஸ்ட் இயர் பாக்கும் போது கூட இவ்வளவு குண்டா இல்ல', 'அப்போ எடுத்த டிரஸ் எல்லாம் இப்போ போட முடியுதா??. கண்டிப்பா பத்தாது' என்று எல்லாம் சொல்லி கொண்டு இருந்தனர்.

அதனால் மிஷன் வெயிட் லாஸ்ஸை தொடங்கி விட்டாள் கவி. ஒரு யூ டியுப் சேனலை பார்த்து நேற்று ஞாயிறு காலை சில உடற்பயிற்சிகள் செய்து உள்ளாள். பெரிதாக ஒன்றும் இல்ல. சின்ன சின்ன உடற்பயிற்சி தான். அதன் பிறகு தான் நேற்று கீர்த்தியின் பிறந்த நாளை கொண்டாட வெளியே வந்தது. அப்பறம் இன்று காலையும் சில வெயிட் லாஸ் உடற்பயிற்சிகள் செய்தாள். அதன் பிறகு தான் சோதனையே!!!. அதாவது மதிய உணவிற்கு பின்...

அவளது தொடை, கால் பகுதி என எல்லாம் வலிக்க ஆரம்பித்து விட்டது. அவளால் உட்கார்ந்தால் எழு முடியவில்லை. எழுந்தால் உட்கார முடியவில்லை. எழுந்தால் நடக்க முடியவில்லை. அந்த அவதி தான்.

கவியின் இடத்திற்கு செல்லும் வழியிலே மிதுன், "சரி பண்ணறது தான் ஸ்டார்ட பண்ணிட்ட... விடாம கண்டினியூ பண்ணு. உடற்பயிற்சி செய்யிறதும் நல்லது தான். விடாம பண்ணனும். வலிக்குதுனு விட கூடாது. அப்பறம் எப்ப பண்ணாலும் வலிக்க தான் செய்யும்" என்றான்.

"அய்யோ... செம்ம வலி... தினமும் என்னால தாங்க முடியுமா தெர்ல" - கவி.

"ப்ரஸ்ட் பண்ணும் போது முத ஒரு மூணு நாலு நாள் அப்படி தான இருக்கும். அப்புறம் சரியா போய்டும்" - மிதுன்.

"ஹ்ம்ம்" - கவி.

"இரத்தம் கட்டி இருக்கும். சுடு தண்ணி கொஞ்சம் காலுல ஊத்து வலி குறையும்" - மிதுன்.

"ம்ம் சரி" - கவி.

"ஒரு நாலு அஞ்சு நாளுல சரியா போய்டும் கவி. இது எல்லாருக்கும் பொதுவா வரது தான். நம்ம உடம்புக்கு புதுசா எதுனா ஒரு வேலையை அதிகமா கொடுத்துட்டா அப்படி தான் பண்ணும். இதுக்கு பயந்துட்டு நீ நிறுத்திட கூடாது. வலி சரி ஆகட்டும்னு விட்டு திரும்ப பண்ணா அப்பயும் இப்படி தான் வலிக்கும். ஆனா அதை கண்டுக்காம நீ தான் தினமும் உடற்பயிற்சி பண்ணனும். அப்ப தான் வெயிட் குறைக்க முடியும்" என்று அவளை மோட்டிவேட் செய்தான் மிதுன்.

"எஸ் நான் பண்ணுறேன்" என்று தனது கையை மடக்கி முகத்தில் தீவிரத்தை கொண்டு வந்து சொன்னாள் கவி.

"வாவ் அதே தான்" என்று இன்னும் உற்சாகத்துடனே கூறினான் மிதுன்.

ஒருவழியாக மெதுவாக கவியை அவளது இடத்தில் அமர வைத்து விட்டு தங்களது வேலை செய்ய சென்றனர் கீர்த்தி மற்றும் மிதுன். அதன் பின் பணி முடித்து அவர்களை வீட்டிற்கு அழைத்து செல்ல வந்தான் மிதுன்.

கவி, "அய்யோ திரும்ப படிக்கட்டா??!. நேரா கூட நடந்துடுவேன் போல இந்த படிக்கட்டுல இறங்குறதுக்குள்ள காலெல்லாம் நடுங்குது" என்று புலம்பி கொண்டே தனது உடலின் பாதி எடையை கீர்த்தி மீது செலுத்தி இறங்கினாள் கவி.

வீட்டிற்கு சென்றதும், முகம் கை கால் கழுவி விட்டு உடை மாற்றி கொண்டு கீர்த்தி கவிக்காக ஹீட்டர் ஆன் செய்து வைத்தாள். சிறிது நேரத்தில் கவியும் தனது கால்களில் சுடு தண்ணிர் ஊற்றி, வலி இருக்கும் இடங்களில் எல்லாம் தனது கை விரல்களை மடக்கி மெலிதாக குத்தி விட்டாள். அப்போது சிறிது வலி குறைந்து இருக்க, உறங்கி விட்டாள். பின் கீர்த்தி தான் இரவு உணவாக, வெங்காயம் கறிவேப்பிலை வர மிளகாய் என எண்ணெயில் தாளித்து மாவில் கொட்டி அதில் பணியாரம் செய்து இருந்தாள். இப்படி செய்தால் மாவு அதிகமாக புளித்து இருந்தாலும் அது தெரியாது. மேலும் கீர்த்தி தெரியாத குழம்பு சட்னி போன்றவை செய்யும் அவசியமும் ஏற்படாது. இரவு உணவை முடித்து விட்டு இருவரும் உறங்கி விட்டனர்.

கொடுப்பாள்...

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே...

"உன்னில் இடம் கொடுப்பாயா??" - கருத்து திரி

நன்றி!!!

இங்ஙனம்
திரா ஆனந்த் 🍀
 
Status
Not open for further replies.
Top