All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உன்னில் இடம் கொடுப்பாயா?? - கதை திரி

Status
Not open for further replies.

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இடம் 10

நாட்கள் அதன் போக்கில் நகர, பிளானிங் டிசைன் இதர வேலைகள் எல்லாம் முடிந்து இப்போது வீட்டிற்கு கடைக்கால்(அஸ்திவாரம்) போடுவதற்கான நாளும் வந்து விட்டது. அதற்காக மிதுனின் வீட்டில் இருந்து அவனது தாயும் தந்தையும் வந்து இருந்தனர். மிதுனின் தந்தை மற்றும் அவனது அக்கா கணவர் தற்போது அவன் இருக்கும் வீட்டில் அவனது நண்பர்களுடன் தங்கி கொள்ள, மிதுனின் தாய் மற்றும் அவனது அக்கா, அவர்கள் பெண் எல்லாம் கீர்த்தி, கவி இருக்கும் வீட்டில் தங்கி கொண்டார்.

"அம்மா, அக்கா, கீர்த்தி, கவி எல்லாம் ரெடியா?? போலாமா??" என்று கீர்த்தி வீட்டு வாசலில் வந்து கேட்டான் மிதுன். விடுப்பு நாட்கள் அதிகமாக மீதம் இருந்ததால் கவி மற்றும் கீர்த்தியும் அன்று விடுப்பு எடுத்து இருந்தனர். அதனால் கீர்த்தியும் கவியும் கூட அவர்களுடன் செல்ல இருந்தனர்.

மிதுன் மற்றும் அவனது குடும்பத்தினர் மிதுனின் காரில் கிளம்ப, கீர்த்தி மற்றும் கவி, கவியின் இரு சக்கர வாகனத்தில் கிளம்பினர்.

சற்று நேரத்தில் மிதுனின் வீடு கட்டும் இடத்திற்கு அனைவரும் சென்றனர். அங்கே அருகில் இன்னும் இரண்டு மூன்று வீடுகளுக்கும் கடைக்கால் போட இருப்பதால் அங்கே சிறிது கூட்டமாக தான் இருந்தது. மிதுனின் குடும்பத்தார் முன்னின்று அனைத்தும் செய்ய, பேஷன் ப்ள்டர்ஸிலிருந்து தேவ் மற்றும் கீதா வந்து இருந்தனர்.

தேவ்வின் பார்வை கீர்த்தியையே தொடர்ந்து கொண்டிருந்தது. அதை அவன் தோழி கீதா பார்த்து விட்டாள்.

epi10.png

"என்ன தம்பி?? கண்ணெல்லாம் எங்கையோ இருக்கு??" - கீதா.

"அதெல்லாம் சரியான இடத்துல தான் இருக்கு. நீ என்ன நினைக்கறையோ அதே தான்" என்று பெரிதாக அலட்டி கொள்ளாமல் சொன்னான் தேவ்.

"என்னடா பொசுக்குனு ம்'ன்னு சொல்லிட்ட... நான் கூட நீ இல்ல... மாட்டேன்... தெரில... சும்மானு சொல்லுவனு நினைச்சேன். அப்பறம் நான் அப்படி இப்படி பேசி உன் மனச உனக்கே புரிய வச்சி..." என்று அவள் நிறுத்தாமல் பேசி கொண்டே போக, தேவ் தன் ஒற்றை வாக்கியத்தில் அதை நிறுத்தி இருந்தான்.

"ஒரு மாசம் முன்னாடி கேட்டு இருந்தனா இது எல்லாம் நடந்து இருக்கும். இப்போ அதுக்கு எல்லாம் அவசியம் இல்ல" என்று சொல்லி இருந்தான் தேவ்.

அவனை திரும்பி பார்த்து தலையாட்டி பொம்மை தனது தலையை ஆட்டி கொண்டே, "சரி தான்" என்று சொன்ன கீதா, கீர்த்தியிடம் சென்று பேச்சு கொடுத்தாள்.

"வணக்கம்... நான் கீதா... பேஷன் ப்ள்டர்ஸ்ல ஒன் ஆப் தி பாட்னர். எல்லாரும் பிசியா இருக்காங்க. யாரும் அறிமுகப்படுத்த மாட்டாங்க போல. நம்மளே பேசிக்கலாம்னு வந்துட்டேன்" என்று சிரித்து கொண்டே சொன்னாள் கீதா.

அவளை பார்த்து மெல்லிய சிரிப்பை கொடுத்த கீர்த்தி, "ஹாய்!! நான் கீர்த்தி பிரியம்வதா. அந்த ஐடி கம்பெனியில மிதுனோட வேர்க் பண்ணறேன். அப்பறம் இது சங்கவி. நாங்க மூணு பேரும் ப்ரெண்ட்ஸ்" என்று சொல்லி கவியையும் அறிமுகப்படுத்தினாள்.

"வணக்கம்" என்று கீதா கவியை பார்த்து சொல்ல, கவியை அதை எதிரொலித்தாள்.

அதன் பின் அவர்கள் மூவரும் பொதுவாய் பேசி கொண்டு இருந்தனர்.

அதற்குள் அனைத்து வேலைகளும் முடிந்து இருக்க, அனைவரும் அங்கே இருந்து கிளம்ப இருந்தனர்.

கீதா, "ஓகே... எல்லாம் முடிஞ்சது போல... நானும் கிளம்பனும். வாய்ப்பு கிடைச்சா திரும்ப சந்திக்கலாம்" என்று இருவரிடமும் சொல்லி விட்டு கிளம்பினாள்.

பேஷன் ப்ள்டர்ஸ் வந்ததும், கீதா தான் அறிந்தவற்றை தனது நண்பர்களிடம் கூறினாள். அது தான் தேவ்வின் கீர்த்தி மீதான காதலை.

"ஏய்!!! அந்த பொண்ணு கிட்ட சொல்லிட்டயா??" - பிரதீப்.

இல்ல என்பதை போல இட வலமாக தலை அசைத்தான் தேவ்.

"ஏன்??" - கௌதம்.

"ஏன்னா!!! இவ்ளோ நாள் எனக்கு அது காதலானு புரியல!!. இப்போ தான் புரிஞ்சி இருக்கு" - தேவ்

"என்னது!? என்னடா உலறுற??" - பிரதீப்.

"ஆமா பிரதி. முதல்ல அவளை எனக்கு பாத்தப்ப புடிச்சி இருந்தது. அவ பண்ணறது எனக்கு தனியா தெரிஞ்சது. அதனால தான் அவ என் நினப்ப விட்டு போகல நினைச்சேன். வேற ஏதாவது இன்ட்ரஸ்டிங்ஆ தெரிஞ்சா அவ என் நினப்புல இருந்து போய்டுவா நினைச்சேன். அப்பனா அது ஈர்ப்பா தான இருக்கும். அதுக்குள்ள அத காதல்னு நினைச்சி அவகிட்ட அத சொல்லி, அப்பறம் அவ மேல எனக்கு இருந்த ஈர்ப்பு போய்டுச்சினா அது அவ லைப் என் லைப் எல்லாத்தையும் சிக்கல் ஆக்குன மாறி ஆகிடும். அதுல இருந்து எப்படி வெளில வரதுனு தெரியாம ரொம்ப வருத்தப்படனும். அதான் கொஞ்சம் வெயிட் பண்ணேன்" என்றான் தேவ்.

"இப்ப என்ன தெரிஞ்சது?? உன்னோட இந்த காத்திருப்புனால.." கீதா கேட்க மற்றவர்களும் ஆமோதிப்பாக அவனை பார்த்தனர்.

"எனக்கு அவளோட செயல்கள் வித்தியாசமா தெரியாத சாதாரண பொண்ணா தெரியுற அப்பவும் என் நினைவுல அவ இருக்கனும் அப்போ தான் அவ என் மனசுல நீங்காத இடம் புடிச்சி இருக்குனு அர்த்தம். அதுக்கு தான் இப்போ வரை வெயிட் பண்ணி என்ன நானே அனலைஸ் பண்ணேன். அப்பறம் இப்ப எனக்கு அவ மேல வந்து இருக்கற உணர்வு ஷாட் டெர்ம்(Short term) உணர்வு இல்லனு புரிஞ்சது. இனி அவ கிட்ட சொல்லி அவ விருப்பத்தை கேட்கனும். அது தான் இன்னும் மீதி." என்று தன்னிலை விளக்கம் கொடுத்தான் தேவ்.

"ஓஓஓ" என்று அவன் சொன்னதை தங்களுக்குள் கிரகித்து கொண்டனர் அவன் தோழர்கள்.

"அப்ப அந்த பொண்ணுக்கு உன் மேல எதுவும் தோணலனா என்ன பண்ணுவ??. இல்லனா வேற யாரையாவது விரும்பனா??" - கௌதம்.

"வேற என்ன பண்ண முடியும் கௌ... என்ன பத்தி சொல்லி மறுபடியும் யோசிச்சி பாக்க சொல்லுவேன். அப்பவும் புடிக்கலனாவோ இல்ல நீ சொன்ன மாறி வேற யாரையாவது விரும்புனாவோ கொஞ்ச நாள் சோக கீதம் பாட வேண்டியது தான். அப்பறம் அப்போ என் மனநிலைக்கு என்ன தோணுதோ அத பண்ண வேண்டியது தான்" - தேவ்.

ஏன் அவளுக்கு கல்யாணம் ஆகி இருக்கலாம் என்று யாரும் நினைக்கவில்லை என்று தெரியவில்லை. அப்படியும் இருக்கலாம் தானே!!!. என் அவங்களுக்கு சாதகமான பக்கங்கள் மட்டுமே பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை திருமணம் ஆனதிற்கான அடையாளம் எதுவும் இல்லாததால் இருக்கலாம். என்னவோ!!!

"சரி சீக்கிரம் சொல்லிடு. ரொம்ப நாள் காத்திருந்து அவ உன் மனசுல நல்லா பதிஞ்சிட போறா!!!. அதுக்குள்ள பேசி என்ன ஏதுனு முடிவு பண்ணிடலாம். இன்னும் அம்மாக்குலாம் தெரிஞ்சா என்ன சொல்லுவாங்களோ!!" என்று சொன்னாள் கீதா.

"ஹ்ம்ம் அது கொஞ்சம் யோசிக்க வேண்டியது தான். எனக்கு தெரிஞ்சி அம்மா, யாரு என்னனு தெரியாத பொண்ண விரும்புறேன் சொன்னா கண்டிப்பா கோபப்படுவாங்க. அவங்க குடும்பத்தை பத்தி சொல்லி அவங்களுக்கு புரிய வைக்கனும். அதுக்கு முன்ன நமக்கு முக்கியமா அந்த பொண்ணுக்கு என்ன புடிச்சி இருக்கா?? அப்பறம் அந்த பொண்ண பத்தி தெரிஞ்சுக்கணும்" என்று கூறினான் தேவ்.

"ஹ்ம்ம்... சரி எப்படி போய் அந்த பொண்ணு கிட்ட போய் பேச போற??. ஒரே ஒரு முறை தான அந்த பொண்ணு கிட்ட பேசி இருக்க இதுக்கு முன்ன" என்று கௌதம் கேட்டான்.

"ஆமாடா... பாக்கனும் எங்க போய் பேசறதுனு தான் ஒன்னும் தோணல" என்றான் தேவ்.

"பேசாம அவங்க ஆபிஸ்லயே போய் பேசிட்டா என்ன??" - பிரதீப்

"அது சரி வராது. அவ வெர்க் பண்ணற இடத்துல போய் அப்படி பண்ணா அவ மேல தப்பான இம்ப்ரஷன் வர சான்ஸ் இருக்கு. சோ அது வேண்டாம்" என்று கீதா மறுத்தாள்.

"அப்போ அவங்க அப்பார்ட்மெண்ட்ல" - பிரதீப்.

"ஆபிஸே வேண்டாம் சொல்லுறேன். இதுல வீடா??!!" லேசான முறைப்புடன் கீதா.

"அப்போ எப்படி தான் மீட் பண்ணறது??" - பிரதீப்.

கீதாவும் பிரதீப்பும் யோசனையில் ஆழ, அப்போது தன் நினைவில் இருந்து களைந்தான் தேவ்.

"அடப்பாவிங்களா??!!. போய் வேலைய பாருங்கடா. என் பீலிங்க்ஸ் தான் நான் சொன்னேன். நீங்க என்னடானா இப்பவே என்ன அவகிட்ட ப்ரபோஸ் பண்ண வச்சி நாளைக்கு கல்யாணம் பண்ணி நாளானைக்கு தேன் நிலவு அனுப்பிட்டு அடுத்த பத்து மாசத்துல என் குழந்தைக்கும் பேர் வச்சிட்டு தான் மறு வேலை பாப்பீங்க போல. இடத்தை காலி பண்ணுங்கடா முதல்ல. என்ன பண்ணனும்னு நான் யோசிச்சிகிறேன்" என்று கிண்டலாக ஆனால் நானே பார்த்து கொள்கிறேன் என்பதை தெளிவாக சொன்னான் தேவ்.

அதனை புரிந்து கொண்ட அவர்களும் அதற்கு மேல் அந்த பேச்சை வளர்க்காமல் அவர்கள் களைந்தனர்.

"இருந்தாலும் அவனுக்கு எவ்வளவு ஆச பாரேன். கல்யாணம் பண்ண அடுத்த நாளே அவன தேன் நிலவுக்கு அனுப்பி பத்தே மாசத்துல குழந்தைக்கு பேரு வைக்கனுமாம். ரொம்ப தான்" என்று பிரதீப் கீதா சொல்வது தேவ்வுக்கு கேட்டு சின்ன புன்னகையும் தோற்றுவித்தது.

சில நிமிடங்களிலே அடுத்து கீர்த்தி விசயத்தில் என்ன செய்வது என்ற சிந்தனையை பின்னுக்கு தள்ளி தேவ்வும் தனது வேலையை செய்தான்.

மறுபக்கம், சித்தம்மாள் கடவுளிடம் தனது பிரார்த்தனையை தொடங்கினார்.

"அம்மா தாயே என் மகனும் பேத்தியும் சீக்கிரமா சேர்ந்து நல்லபடியா வாழனும். அப்படி நடந்தா இங்கே என் மகனோட குழந்தைக்கு முத முடி இறக்கறேன். ஒரு நாள் முழுசா இந்த கோவில்ல சேவகம் செய்யறேன்" என்று அந்த அம்மனிடம் வேண்டி கொண்டு இருந்தார்.

அவராலும் என்ன தான் செய்ய முடிந்தது. சரவணனுக்கு திருமணம் மட்டுமே செய்ய முடிந்தது. அதன் பின் அவனும் சரி அவளும் சரி மற்றவர்களை பெரிதாக கண்டு கொள்ளாமல் தனித்தனியாகவே வாழ்கின்றனர். இவரும் எது சொன்னாலும் சரவணன், "நீங்க சொன்ன மாறி கல்யாணம் நடந்தது தான??. அப்பறம் என்ன??" என்று கூறியே அவரை மேலும் பேச விடாமல் செய்கிறான்.

இத்தனைக்கும் அவர்கள் செய்த முழு தவறும் அவனுக்கு தெரியாது. சின்னதாய் தெரிந்த அவர்கள் தவறுக்கே அவர்கள் பேச்சை கேட்காமல் கோபத்துடன் சுத்தி கொண்டு இருக்கிறான். முழுவதும் தெரிந்தால் என்ன நடக்குமோ!!!

கொடுப்பாள்...

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே...

"உன்னில் இடம் கொடுப்பாயா??" - கருத்து திரி

நன்றி!!!

இங்ஙனம்
திரா ஆனந்த் 🍀
 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே!!!

கதைக்குள்ள போக முன்னாடி உங்ககிட்ட ஒரு செய்தியை சொல்லிக்கனும் நினைக்கறேன். இன்னிக்கு அத்தியாயம்ல உண்மையான வாழ்க்கையில இப்படி தான் நடக்குமானு எனக்கு தெரியாத ஒரு விசயத்தை எழுதி இருக்கேன்.

இப்படி தான் ஒருத்தருக்கு இன்னொருத்தர பிடிக்குமானு தெரியல. பிடிக்க வைக்கனுமானு தெரியல. ஒருத்தர எப்படி புடிக்குதுனு என் ப்ரெண்டஸ்ட கேட்ட அப்போ, வார்த்தைகளை வச்சி எல்லாம் சொல்ல முடியாது. அவங்களுக்கே தோணும் சொல்லிட்டாங்க.

அதனால ஆர்வம்(Curiosity) -> ஈர்ப்பு(Attraction) -> காதல்(Love)... இப்படி தான் கீர்த்திக்கு தேவ் மேல காதல் வர மாறி வச்சி இருக்கேன். இது கொஞ்சம் தர்க்க ரீதியா(Logical) ஒத்துக்கற மாறி இருந்தது எனக்கு. உங்களுக்கு எப்படி தோணுது சொல்லுங்க.

P.S : தெரியாதவங்க Calls or messages லாம் கண்டிப்பா தவிர்த்து விடுங்க தோழமைகளே...
__________________________________

இடம் 11

"டேய் மதன்... நான் கேட்டது என்ன ஆச்சி??. நானும் ரெண்டு நாளா நீ அப்ப சொல்லுவ... இப்ப சொல்லுவனு பாத்துட்டு இருந்தேன். ஆனா அந்த நினைப்பே உனக்கு இருக்க மாறி எனக்கு தெரில. எனக்கு இன்னிக்கு ஒரு பதில் தெரிஞ்சி ஆகனும்" என்று மதனிடம் கேட்டார் அவனின் அம்மா.

அவர் நின்றிருந்த தோரணை நீ பதில் சொல்லாமல் இங்கிருந்து நகர முடியாது என்று இருந்தது.

ஒரு பெரு மூச்சை விட்ட மதனும், "அம்மா... எனக்கு என்ன அவ்வளவு வயசா ஆகிடுச்சி???. அதுக்குள்ள கல்யாணம் பண்ணனும் சொல்லுறீங்க. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்" என்று கேட்டான்.

"கொஞ்ச நாள்னா... எவ்வளவு நாள்??. இன்னும் இரண்டு மாசத்துல இருபத்தி ஏழு ஆகிடும். எல்லாம் கல்யாணம் பண்ற வயசு தான். அதனால நீ சரி சொல்லி தான் ஆகனும்" என்று மதனின் அம்மாவும் பதிலுக்கு சொன்னார்.

"அம்மா நீ என்கிட்ட சம்மதம் கேட்கற மாறி தெரில. உன் முடிவுக்கு சரி சொல்லுனு கட்டாய படுத்துற மாறி தான் இருக்கு" என்றான் மதன்.

அதை கேட்டதும் அவனது அம்மாவுக்கு ஒரு மாதிரி இருந்தாலும், அவனை புரிந்து வைத்து இருந்தார். அதனால், "இங்க பாரு மதன், உன் கூட படிச்சவங்கலாம் சின்ன பசங்க, அதனால தான் அவங்களுக்கு எல்லாம் இன்னும் கல்யாணம் ஆகல. உனக்கு அதான் இது சீக்கிரமா நடக்கற மாறி இருக்கு. ஆனா உன் வயசு வரும் போது அவங்களுக்கும் எல்லாம் நடக்கும். அதனால நீ சங்கடப்பட அவசியமே இல்ல. புரியுதா??" என்று அவனது கன்னத்தில் கை வைத்து, அவனுக்கு தேவையான விளக்கங்களை அவன் மனதை புரிந்து விளக்கினார் மதனின் அம்மா.

சில நேரம் நம் உடன் இருக்கும் தோழமை வட்டத்திற்கு திருமணம் ஆகாமல் நமக்கு தான் முதலில், சீக்கிரமாக பண்ணுகிறார்கள் என்பது போல் இருந்தால் முக்கால் வாசி நபர்கள் மறுக்க தான் செய்வார்கள். நம்ம மதனும் அந்த மனநிலையில் தான் இருந்தான். ஆனால் தாய் அறியாமல் இருக்க முடியுமா??. அதை கண்டு களைந்தும் விட்டார். ஆம் மதனின் தலை அவருக்கு சம்மதமாய் அசைத்து விட்டு தான் அங்கிருந்து அவனது உடலுடன் நகர்ந்தது.

அடுத்து என்ன??. அவரது வேலையை அவர் தொடங்கி விட்டார்.

இங்கோ, விடிய விடிய யோசித்து அடுத்து என்ன செய்யலாம் என்ற முடிவு எடுத்து விட்டான் தேவ். அதன்படி அவற்றை எல்லாம் நாளை செயல்படுத்த முடிவு எடுத்து தற்போது நிம்மதியாக உறங்கினான்.

எப்படியோ கீர்த்தியின் தொலைபேசி எண்ணை அடைந்து விட்டான் தேவ். அந்த 'எப்படியோ' எப்படி என்பதை அப்பறம் பாக்கலாம்.

அதிலிருந்து, தினமும் காலை ஆறு மணிக்கு அவளது தொலைபேசிக்கு ஒரு செய்தி வந்தது... விதவிதமாக அந்த நாளை வரவேற்க...

எ ப்யூட்டிபுல் டே ஸ் வெயிட்டிங் பார் தி ப்யூட்டிபுல் சோல் டு ட்ராவல். கெட் ரெடி டு ட்ராவல் ப்யூட்டிபுல் (A beautiful day is waiting for the beautiful soul to travel. Get ready to travel beautiful)

இது போன்ற பல அர்த்தமற்ற ஆனால் புன்னகையை வர வைக்கும் வாக்கியங்களை வார்த்தைகளை கோர்த்து அவளுக்கு அனுப்பி கொண்டு இருந்தான். அப்படியே ஒரு வாரம் சென்றது.

தெரியாதது மேல் அது என்னவென்று தெரிந்து கொள்ள ஒரு ஆர்வம் வரும் அல்லவா!! அந்த ஆர்வம் கீர்த்திக்கும் தற்போது முளைத்து இருந்தது.

முதலில் இரு நாட்கள் யாருடா இது தெரியாம அனுப்பிட்டாங்க போல... அவங்களே விட்டுடுவாங்க பதில் இல்லைனதும் என்று விட்டு விட்டாள். அடுத்தடுத்த நாளும் அதே போல் வர, ஒரு முடிவெடுத்து கீர்த்தி, "சாரி... நீங்க யாருனு எனக்கு தெரியல... மே பி நீங்க வேற யாரோனு நினைச்சி எனக்கு மெசேஜ் அனுப்பிட்டு இருக்கீங்க" என்று பதில் செய்தி அனுப்பி வைத்தாள். ஆனால் அதற்கு அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. சரி புரிந்து கொண்டார்கள் போல இனி எந்த செய்தியும் வராது என்று நினைத்து கொண்டாள். அவளது எண்ணத்திற்கு மாறாக அடுத்த நாள் மீண்டும் அந்த நாளை வரவேற்கும் விதமாக ஒரு செய்தி வந்தது.

இவளுக்கு என்ன செய்யலாம் என்று ஒன்றும் தோன்றவில்லை.

போலிஸில் கம்ப்ளென் செய்யலாமா??... ஆனால் என்னவென்று புகார் செய்வது??. இதை போய் சொன்னால், "யம்மா யாரோ தெரியாம அனுப்பி இருப்பாங்க போல... உனக்கு புடிக்கலனா ப்ளாக் பண்ணிட்டு அடுத்த வேலையை பாருமா. எங்க வேலையும் வந்து கெடுத்துகிட்டு போமா" என்று ஒரு காவலர் சொல்வது போல் அவளது மனதில் ஒரு காட்சி ஓடியது.

'ஆமா அவங்க தவறாய் எதுவும் அனுப்பவில்லை தான... அதனால கண்டிப்பா அப்படி தான் சொல்லி நம்மள திட்டி அனுப்புவாங்க.' என்று கண்டு கொண்டாள்.

ப்ளாக் பண்ணிடலாமா?? ஆனால் ஏனோ தினமும் காலையில் அந்த வார்த்தைகளை படிப்பது அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அனைத்து நண்பர்களிடமிருந்தும் உறவுகளிடமிருந்தும் ஒதுங்கி இருக்கும் அந்த தனிமையான பொழுதில்... கவியும் மிதுனும் உடன் இருந்தனர் தான் என்றாலும், இந்த அறிமுகமற்ற நபரின் சின்ன அனுசரசனையாக வார்த்தைகள் மிகவும் பிடித்து இருந்தது அவளுக்கு. அதனால் தினமும் அந்த செய்திகளை படித்து கொண்டும் அதை ரசித்து கொண்டும் இருந்தாள். இப்படியே இரு வாரங்கள் கடந்து இருந்தது.

"வன் சர்ப்ரைஸ் இஸ் வெயிட்டிங் பார் யூ இன் த ரெஸ்டாரண்ட் டுடே அட் 5:00 PM. கோ அன்ட் கெட் இட்" என்ற செய்தி வந்து இருந்தது.

போகலாமா?! வேண்டாமா?! என்று குழம்பி கொண்டு இருந்த கீர்த்தியின் மூளையை, கீர்த்தியின் மனதில் முளைத்து இருந்த க்யூரியாசிட்டி வென்று விட்டது. அந்த ஆர்வத்தின் காரணமாக தனியாக அந்த விடுதிக்கு சென்றாள் கீர்த்தி, மிதுன் மற்றும் கவியிடம் எதுவும் சொல்லாமல்...

சரியாக நான்கு முப்பதுக்கு அந்த ரெஸ்டாரண்டை அடைந்து அங்கு இருந்த ஒரு நாற்காலியில் சென்று அமர்ந்தாள் கீர்த்தி. அந்த நேரம் அங்கே வந்த தேவ், "ஹாய் கீர்த்தி. இங்க என்ன பண்ணுறீங்க??. உங்க ப்ரெண்ட்ஸ் மிதுன் அப்பறம்... ம்ம்... சங்கவி?? ரைட்?? அவங்க வரல??" என்று கேட்டான்.

'நீ இப்ப தானா வரணும்' என்று போன்ற ஒரு பார்வையை அவனிடம் செலுத்தி விட்டு, "இல்ல சும்மா தான் வந்தேன்ங்க" என்றாள்.

"ஓஓ... ஓகே" என்ற தேவ்வும் அங்கேயே அமர்ந்து விட்டான்.

epi11.jpg

கீர்த்திக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அதனால், "நீங்க??" என்று கேட்டாள், அவன் பதில் கூறி விட்டு கிளம்பி விடுவான் என்று. ஏனோ அவளுக்கு இருந்த ஆர்வம் அதிகமாகி கொண்டே சென்றது... அது என்ன சர்ப்ரைஸாய் இருக்கும் என்று... இது போன்ற இடையூறுகளால்...

இது அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் புரியும். ஒரு செயல் நடக்க காத்திருக்கும் போது, கடைசி நொடிகளில் தான் அதன் ஆதிக்கம் அதிகமாய் இருக்கும். அதாவது மட்டை பந்து போட்டி பார்க்கும் போது இறுதி ஓவரில் இரண்டு பந்துகளில் ஆறு ரன் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இருக்கும் ஒரு படபடப்பான ஆர்வம் போல்.

"ஒரு ஸ்பெஷல் பர்சன பாக்க வந்தேன்" என்றான்.

"ஓஓ.. அவங்க வந்துட்டாங்களா??" எப்போடா கிளம்பி போவ என்று மறைமுகமாக கேட்டாள்.

அதற்கு நேரிடையாய் பதில் கூறாமல், "ஐந்து மணிக்கு தான் அவங்கள பாக்கறேன் சொல்லி இருந்தேன்" என்றான்.

"சரி" என்று சொல்லி விட்டு அமைதியாய் இருந்தாள் கீர்த்தி. வேற என்ன தான் செய்வது.

"எதுனா சாப்பிடறீங்களா??. ஆர்டர் பண்ணலாமா??" என்று கேட்டான் தேவ்.

"ம்ம்" - கீர்த்தி.

அங்கிருந்த ஒருவரை பார்த்து, "ஒரு காபி" என்று தேவ் சொல்லி விட்டு, கீர்த்தியை பார்க்க அவளும், "காபியே ஓகே" என்றாள். அவர் காபியை எடுத்து வந்து வைக்கவும் மணி ஐந்து ஆகவும் சரியாய் இருந்தது.

கீர்த்தி காபியை எடுக்க கையை கொண்டு வரும் போது அவளின் முன் தன் கையை நீட்டி, "ஹியர் இஸ் யுவர் சர்ப்ரைஸ்" என்றான்.

தூக்கிய கை அப்படியே இருக்க கீர்த்தி அவனை பார்த்து மலங்க மலங்க விழித்தாள்.

"ஹான்... என்னது??" என்று கண்ணை கூட சிமிட்டாமல் அவனை பார்த்து கொண்டே கேட்க, அவன் தனது தொலைபேசியை எடுத்து, "யுவர் சர்ப்ரைஸ் உனக்கு முன்னாடி தான் இருக்கு. என்னை பாக்க விருப்பம் இல்லையா??" என்று அனுப்பி விட்டு, கண்ணை அவளது மொபைலை பார்க்கும் படி செய்கை செய்தான்.

அதை படித்ததும் அவளது என்ன சொல்வது என்று தெரியவில்லை. "ம்ம்ம்... வந்து... அது" என்று ஏதாவது சொல்ல வார்த்தைகளை தேட அந்த நிகழ்வுக்கு தோதாக ஒரு வார்த்தையும் கிடைக்கவில்லை.

"இட்ஸ் ஓகே. முதல்ல காபி குடிங்க மேடம்" என்று இலகுவாக கூறிய தேவ் தனது காபியையும் பருகினான்.

சூடான அந்த பாணம் உள்ளே நுழைய, அவளது உணர்ச்சிகள் சமநிலையை அடைந்தது. அதன் பின் அவனிடம் பேச தொடங்கினாள்.

"வந்து... நீங்க ஏன் எனக்கு மெசேஜ் பண்ணீங்க??" என்று கேட்டாள்.

"எனக்கு உன்கிட்ட பேசனும். உன்ன ரொம்ப புடிச்சி இருந்தது. அத உன்கிட்ட சொல்லனும். அப்பறம் கல்யாணம் பண்ணனும்" என்று சொன்னான்.

முதல் சொன்ன இரு வாக்கியங்களை புன்னகையுடன் கேட்டவள், அடுத்து சொன்ன கல்யாணம் என்ற வார்த்தையில் அவள் மனதில் ஒரு அதிர்வு வந்து சென்றது. அது அவளது முகத்திலும் பிரதிபலித்தது.

அதை பார்த்த அவன், "நான் உன்ன வற்புறுத்தல. என் விருப்பத்தை சொல்லனும் நினைச்சேன். சொல்லிட்டேன். அதுக்கு உன்னோட பதிலையும் எதிர்பார்க்கிறேன். சாதகமாவோ!! பாதகமாவோ!!" என்று சொல்லி கொண்டே அவளது முகத்தை பார்த்தவன், "ரொம்ப அவசரம் இல்ல. நீ பொறுமையா யோசிச்சி சொல்லு. அது வரை நம்ம பொதுவா பேசிப்போம். அதே போல் உன் பதில் வேற மாறி இருந்தாலும், நம்ம நண்பர்களா மாற முயற்சி பண்ணலாம். நீ என்னோட அந்த காலை மெசேஜ்களை விருப்புற நினைக்கறேன். கண்டிப்பா அத நிறுத்த மாட்டேன்" என்று அவளுக்கு உறுதியும் கூறினான்.

நம்ம சரி சொல்லலனா, இது நமக்கு கிடைக்காதோ!! அது நமக்கு கிடைக்காதோ!! என்று எதன் அடிப்படையிலும் அவள் தன்னை பிடித்து இருக்கு என்று சொல்ல கூடாது. உண்மையில் என்னை... தேவ்வை... தேவாமிர்தனை பிடித்தே அவள் சரி சொல்ல வேண்டும் என்று நினைத்தான்.

அவள் ஒப்பு கொள்வாளா??. அது பின்பு தான் தெரிய வரும். பார்ப்போம்.

"சரி... நான் பேச வேண்டியது சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லிட்டேன். உனக்கு ஏதாவது கேட்கனுமா?? இல்ல சொல்லனுமா??" என்று கேட்டான்.

"ஆமா" என்று தலையை அசைத்தவள், "நீங்க தான்னு சொல்லியே என்கிட்ட பேசி இருக்கலாம்ல. ஏன் யாரோ மாறி மெசேஜ்ல பேசுனீங்க??" என்று கேட்டாள்.

"நான் நானா வந்து பேசி இருந்தா இந்தளவுக்கு என்கிட்ட பேசி இருக்க மாட்டனு தோணிச்சி. உனக்குள்ள எதையோ ஒளிச்சி வச்சி இருக்கனு... தேவ்வா பேசி இருந்தா எப்பையோ ப்ளாக் பண்ணி இருப்ப இல்லனா இப்போ இந்த ரெஸ்டாரண்ட்க்கு வந்து இருக்க மாட்ட அதான்" என்று விளக்கம் கொடுத்தான்.

அவன் சொன்னது முற்றிலும் சரி என்பது அவளுக்கும் தெரியும். அதனால் "சரி" என்று சொல்லி விட்டு தனது இருக்கையில் இருந்து எழுந்து மெதுவாக தனது வலது கையை இட வலமாக ஆட்டி, "பாய்" என்று சொல்லி விட்டு கிளம்பினாள்.

கொடுப்பாள்...

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே...

"உன்னில் இடம் கொடுப்பாயா??" - கருத்து திரி

நன்றி!!!

இங்ஙனம்
திரா ஆனந்த் 🍀
 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இடம் 12

நாட்கள் சில கழிய, கீர்த்தி தேவ்வுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. இருந்தாலும் அவன் தொடர்ந்து தினமும் காலை அவளுக்கு செய்திகளை அனுப்பி கொண்டு தான் இருந்தான். கீர்த்தியும் அவனுடன் நன்றாய் பேச ஆரம்பித்து இருந்தாள்.

பேஷன் பில்டர்ஸில்...

"ஏய்... இந்த தேவ் பையன் கீர்த்தி கிட்ட நல்லா பேச ஆரம்பிச்சிடானாம். ஆனா அந்த பொண்ணு என்ன பதில் சொல்லுச்சினு தான் இன்னும் தெரியல" என்று சொல்லி கொண்டு இருந்தாள் கீதா.

"இரு வரட்டும்... என்ன ஆச்சினு அவன்கிட்ட நான் கேக்கறேன். நம்ம உதவி பண்றோம் சொன்னோம். வேணா சொன்னானே என்ன ஆச்சினு அப்டேட் பண்ணானா பாரு" என்று கீதாவுக்கு பதிலளித்தான் பிரதீப்.

"வேணாடா... அவனா வந்து சொல்லுவான்... நீயா கேட்டு பல்ப் வாங்கிக்காத", இது கௌதம்.

"பாக்கலாம்டா... எப்படி சொல்லாம போறான் பாக்கறேன்" மீண்டும் பதிலுக்கு பிரதீப்.

தேவ்வும் வர, "என்ன ரெஸ்பான்ஸ் வந்துச்சி??" என்று முன்னுரை முகவுரை எதுவும் இல்லாமல் தேவ்வை பார்த்து கேட்டான் பிரதீப்.

"ஏன் உனக்கு கண்ணு இல்லயா??. நம்ம குரூப் மெயிலுக்கு தான் வந்து இருக்கு போய் பாரு" என்றான் தேவ்.

"என்னது மெயிலுக்கா!!??" என்று ஆச்சரியமாக பிரதீப் கேட்க, கீதாவும் புரியாமல் முழித்தாள்.

கௌதமுக்கு அவன் என்ன சொல்கிறான் இவர்கள் என்ன புரிந்து கொண்டார்கள் என்பது புரிந்து விட, கலகலவென சிரித்தான்.

இப்போது மூவருமே கௌதமை பார்க்க, அடக்கப்பட்ட சிரிப்புடன் தேவ்வை பார்த்து, "அவங்க கீர்த்தி மேட்டர் என்ன ஆச்சினு கேட்டாங்க!!" என்று சொன்னவன், கீதா, பிரதியை பார்த்து அடக்க நினைத்தும் முடியாமல் சிரித்து விட்டான்.

பிறகு, "அவன் அந்த கவர்மெண்ட் ப்ராஜெக்ட் ரெஸ்பாண்ஸ் பத்தி சொல்லுறான்" என்று தேவ்வை கை காட்டி அவர்களிடம் சொன்னான்.

"ஓஓஓ... சரி சரி... இப்ப சொல்லு!!!. கீர்த்தி என்ன சொன்னா??" என்று கீதா தேவ்வை பார்த்து கேட்க, மற்ற மூவரும் அவளை முறைத்தார்கள்... ப்ராஜெக்ட் ரிசல்ட் என்ன ஆச்சினு தெரில... இப்ப இது தான் முக்கியமா என்பது போல்...

"ஹீ ஹீ" என்று சிரித்து சமாளித்தவள், "என்ன ஆச்சி??" என்று கேட்டாள்.

"நமக்கு அந்த ப்ராஜெக்ட் கிடைக்கல. ஐநூறு ரூபாய் வித்தியாசத்துல அந்த கம்பெனிக்கு கிடைச்சிடுச்சி" என்று அதை பற்றிய செய்திகளை கூறினான் கௌதம்.

"ஓஓஓ..." என்று கூறிய கீதா மேலும், "அப்பனா இனி நம்ம எஸ்டிமேட் பண்ணி பைனல் அமவுண்ட் அனுப்பும் போது ஒரு ஆயிரம் ரூபாய் கம்மி பண்ணி அனுப்பிக்கலாம். அப்ப தான் நமக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கு" என்று சொன்னாள்.

"ஹாஹா" என்று சிரித்த மற்றவர்கள், "சரி தான் அப்படியே பண்ணிடலாம் பாஸ்" என்றார்கள்.

"என்னங்கடா... என்னமோ கிண்டலா சிரிக்கற மாறியே இருக்கு. இது நல்ல ஐடியா தான" என்று அவர்களை பார்த்து கேட்க, "ஆமாடா... இப்ப யாரு இல்லனு சொன்னா??" என்று கீதாவை பார்த்து கேட்ட கௌ மற்றவர்களை பார்த்து, "நீங்க சொன்னீங்களாடா??" என்று கேட்டான்.

"இல்ல" என்று சொல்லி கொண்டே தலையை இட வலமாக அசைத்தார்கள்.

"என்னவோ போங்கடா" என்று அவள் தன் வேலையை பார்க்க போக, மற்றவர்களுடம் சிரிப்புடன் வேலையை பார்க்க சென்றனர்.

தேவ் மனதில்... 'இந்த ப்ராஜெக்ட் கிடைக்கலனு வருத்தப்படுவாங்னு நினைச்சேன். பரவாயில்ல எல்லாம் இலகுவா எடுத்து கிட்டாங்க' என்று நிம்மதி கொண்டான். கௌவும் அதையே தான் எண்ணினான்.

அதன் பின் அவர்கள் நாள் சில வேலைகளில் கழிந்தது.

இந்த பக்கம் மதனின் அம்மா, தனது வேலையை சரியாய் செய்து அவனுக்கு ஒரு வரன் பார்த்து விட்டு இருந்தார். அந்த பெண்ணின் புகைப்படத்தை மதனிடம் இன்று காட்டவும் இருந்தார்.

அன்று மாலை அமிரும் அவர்கள் வீட்டிற்கு வந்து இருந்தான்.

அமிர், "அத்த... அத்த... எங்க இருக்கீங்க??" என்று கத்தி கொண்டே வந்தான்.

"இங்க தான்டா இருக்கேன் பையா. என்ன ஆச்சி கத்துகிட்டே வர??" என்று கேட்டார்.

"சும்மா தான் அத்த. உங்கள பாத்து ரொம்ப நாள் ஆச்சி. அதான் வந்தேன்" என்று அவரிடம் செல்லம் கொஞ்சி கொண்டு இருந்தான்.

"சரி சரி... இங்க உட்காரு... நான் போய் உனக்கு குடிக்க எதுனா எடுத்துட்டு வரேன்" என்று உள்ளே சென்றார். அவனும் அவரை வால் பிடித்து கொண்டே சமையலறை சென்றவன், அங்கே இருந்த சிறிய இடத்தில் ஏறி அமர்ந்து கொண்டான்.

"அத்த... அத்த..." என்று அழைத்தான்.

"என்ன பையா??" என்று அவர் கேட்க, "அத்த... மதனுக்கு பொண்ணு பாத்து இருக்கீங்களாம்" என்று இவன் கேட்டான்.

"ஆமா" - அவன் அத்த.

"என்கிட்ட காட்டவே இல்ல. நான் முத பாக்க வேண்டாமா?? என் தங்கச்சிய" சிணுங்கலாக கேட்டான் அமிர்.

"நான் எல்லார்கிட்டயும் ஒன்னா காட்டலாம் நினைச்சேன்" என்றவர், "இந்தா டீ இத குடிச்சிட்டு இரு. நா போய் போட்டோ எடுத்துட்டு வரேன்" என்று அவன் கையில் தம்ளரை திணித்து விட்டு உள்ளே சென்றார்.

அமிரும் சிரித்து கொண்டே சமையலறையில் இருந்து வெளியே வந்து அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்.

epi12.jpg

"இந்தா பொண்ணு போட்டோ... பாரு எப்படி இருக்குனு" என்று அந்த புகைப்படத்தை அவன் கையில் கொடுத்தார். அதை வாங்கி பார்த்தவன் இந்த பொண்ண எங்கையோ பாத்த மாறி இருக்கே என்று யோசித்து கண்டு கொண்டான். அவன் பார்த்த வரையில் அந்த பெண் அவனுக்கு திருப்தியாக தான் இருந்தது.

"சூப்பர் அத்த. பொண்ணு நல்லா இருக்கு. எனக்கு கொஞ்சம் தெரிஞ்ச பொண்ணு தான். நான் பாத்த வரை நல்லா தான் பேசனாங்க" என்று அவரிடம் கூறினான் அமிர்.

"அப்போ இன்னும் வசதி. எப்படியாவது பேசி அவனையும் சரி சொல்ல வச்சிட்டு டா பையா. ப்ளிஸ்... அத்தைக்காக..." என்று அவனது கன்னத்தை பிடித்து கொண்டு கேட்டார்.

"அத்த... நான் சொல்லி பாப்பேன். அவ்ளோ தான் அவன் பொண்ணு புடிக்கல சொன்னா வேற பொண்ணு பாக்கலாம். அவன் கல்யாணம் வேண்டாம்னு சொன்னானா மிரட்டலாம். டீல்??" என்று ஒற்றை புருவத்தை தூக்கி தனது வலது கையை நீட்டினான்.

அவரும், "டீல்" என்று சொல்லி கொண்டே தனது வலது கையை அவனது கையுடன் கோர்த்து லேசாக குலுக்கினார்.

அதற்கு பின் இவர்கள் இருவரும் எதுவோ பேசி சிரித்து கொண்டு இருக்க ஒரு ஒரு மணி நேரத்தில், மதனும் அவனது தந்தையும் ஒன்றாக வீட்டின் உள்ளே நுழைந்தனர்.

"இரண்டு பேரும் ரெடி ஆகிட்டு வாங்க. சாப்பாடு எடுத்து வைக்கிறேன். சாப்பிடலாம்" என்று சொன்னார் மதனின் தாய்.

"சரி மா" என்று அவரிடம் கூறியவன், "டேய் அமிர்... சொல்லவே இல்ல... வீட்டிற்கு வந்து இருக்கேன்னு" என்று கேட்டான்.

"நான் எங்க அத்தய பாக்க வந்தேன். சரி நீ போய் ப்ரஸ் ஆகிட்டு வா பேசலாம்" என்று பதில் கூறி அனுப்பி வைத்தான்.

"சரி டா" என்று சிரித்து கொண்டே சொல்லி விட்டு சென்றான் மதன்.

"நீங்களும் போய் ரெடி ஆகி வாங்க மாமா" என்று மதனின் அப்பாவை பார்த்தும் கூறினான் அமிர்.

அதன் பின் நால்வரும் சேர்ந்து இரவுணவை உண்டு முடித்தனர்.

மதனின் அம்மா, "மதனு... உனக்கு ஒரு பொண்ணு பாத்து இருக்கேன்" என்று சொன்னவர் அந்த புகைப்படத்தை எடுத்து கொடுத்தார்.

மதனின் அப்பா ஏற்கனவே அந்த பொண்ண பாத்து விட்டார். மேலும் அவர்களது குடும்பத்தை பார்த்தும் விசாரித்து திருப்தி என்ற பின்னே இப்போது மதனிடம் இப்போது பேசுகின்றனர்.

"அதுக்குள்ள பாத்துட்டீங்களா மா??" என்று கேட்டான் மதன்.

"ஆமா... நீ பாத்து சொல்லு" என்றார் அவர்.

"சரி மா. பாத்துட்டு நாளைக்கு சொல்லறேன்" என்று அவனது அறைக்கு சென்று விட்டான்.

அவர் உம்மென்று இருக்க, "விடு அத்த. எங்க போய்ட போறான். நாளைக்கு தான சொல்லறேன் சொன்னான். உடனேவா எல்லா நடக்கும்" என்று கூறியவன், "மாமா நான் இன்னிக்கு இங்க தான் இருக்க போறேன். உங்க தங்கச்சிக்கும் மாப்பிள்ளைக்கும் போன் பண்ணி சொல்லிடுங்க" என்றான்.

சிரிப்புடன், "சரிடா மருமகனே" என்றார் அவர்.

அவனும் சிரிப்புடன் தலையசைத்து விட்டு மதனின் அறைக்கு சென்றான் அமிர்.

"டேய் அமிர் வாடா" என்றான் மதன்.

"பாத்தியா மதனு. பொண்ணு போட்டோவ" என்று கேட்டான் அமிர்.

"இல்லடா. பாக்கனும்" - மதன்.

"பாத்தா நீ ஷாக் ஆகிடுவ. நமக்கு தெரிஞ்ச பொண்ணு தான்" - சிரிப்புடன் அமிர்.

"யாரு??" என்று யோசனையுடனே கேட்டு கொண்டே அந்த புகைப்படத்தை எடுத்து பார்த்தவன்... சத்தியமாக அதிர்ச்சி ஆகி விட்டான் என்பது குறைவான வார்த்தை தான்.

"ஏய்!!!.. இது... இது... இந்த பொண்ணு..." என்று அவன் ஒவ்வொரு வார்த்தைக்கும் வினாடி கணக்கில் இடைவெளி விட்டு சொல்லி கொண்டு இருக்க, பொறுமை இழந்த தேவ்வே அந்த வாக்கியத்தை சொல்லி விட்டான்.

"ஆமாடா... இது நம்ம அன்னிக்கு தியேட்டர் பாத்த பொண்ணு தான். பேரு சங்கவி" என்று.

"ம்ம்ம்" என்று மண்டையை மட்டும் ஆட்டினான் மதன்.

"நீ தான அந்த பொண்ணு கிட்டயும், என் கீர்த்தி கிட்டயும் பேசிட்டு இருந்த. உனக்கு ஓகே தான??" என்று கேட்டான் அமிர்.

அவன் பேசி கொண்டு இருந்தீர்கள் என்று கூறிய பின்பு தான் மதனுக்கு அது தோன்றியது.

அது என்னவென்றால் அவர்களை தன்னை அண்ணா என்று அழைக்க கூறியதும், அவர்களும் தன்னை அண்ணா என்று அழைத்ததும்.

சங்கவி, 'அண்ணா' என்று சொல்லி பேசிய வார்த்தைகள் யாவும் தற்போது அவனுக்கு நினைவு வந்தது. அடுத்து என்ன சொல்வது என்று தெரியாமல், அமிரிடம் அன்று நடந்தவைகளை கூறினான் மதன்.

"ஓஓ. இது எல்லாம் பண்ணி வச்சி இருக்கயா??. எனக்கு ஒன்னும் தெரில" என்று யோசனையுடன் அமிர் கேட்டான்.

"நீ எங்க கவனத்தை அங்க நடந்த பேச்சுல வச்சி இருந்த" என்று சிறு கோபத்துடன் கூறினான் மதன்.

"சரி சரி அதெல்லாம் இப்ப எதுக்கு விடு. இப்ப என்ன பண்ணலாம்னு சொல்லற?? அத்த கிட்ட என்ன சொல்லலாம்" ஊன்று அமிர் கேட்க, "சத்தியமா எனக்கு தெரில டா என்ன பண்ணறதுனு" என்று மதன் பதிலளித்தான்.

மேலும், "இது சரியானு தெரிலடா. அந்த பொண்ணு என்ன பத்தி என்ன நினைக்கும்!!??" என்று அமிரிடம் புலம்பி கொண்டு இருந்தான்.

"சரி சரி விடு. எதா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம். தூங்கி எழுந்தா நமக்கும் யோசிக்க நல்லா இருக்கும்" என்று மதனிடம் கூறியவன் அவனை தூங்கவும் வைத்தான்.

அடுத்து அமிர் ஒருவருக்கு அழைத்து பேசி விட்டு ஒரு முடிவு எடுத்து விட்டு, மதனுடன் படுத்து அவனும் உறங்கி விட்டான்.

கொடுப்பாள்...

மதன் இடத்தில் நீங்க இருந்தால் என்ன செய்வீங்க தோழமைகளே... உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...

"உன்னில் இடம் கொடுப்பாயா??" - கருத்து திரி

நன்றி!!!

இங்ஙனம்
திரா ஆனந்த் 🍀
 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இடம் 13

அந்த கிராமத்தில் ஒரு பெரிய மரத்தின் அடியில், அதன் நிழலில் இருந்த பெரிய கல்லில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர் இருவர்.

அதில் ஒன்று சரவண வேல், மற்றொன்று அவனின் நண்பன் சுந்தர்.

பொதுவாக ஒரே ஊரில் இருப்பவர்கள், சொந்த காரர்ளாகவே இருப்பர். அதே போல் தான் சரவண வேலும் சுந்தரும் ஒன்றாக படித்து இருந்தாலும், சரவண வேல் சுந்தருக்கு மாமா முறை வரும். கீர்த்தி ப்ரியம் வதா, சுந்தருக்கு தங்கை முறை வரும்.

"டேய் மாமா... உனக்கு எப்படி அப்படி நினைக்க தோணுச்சி... தங்கச்சி அப்படி பண்ணி இருக்கும்னு எனக்கு இப்ப கூட நம்பிக்கை இல்ல" என்று சுந்தர் சரவண வேலிடம் கூறினான்.

"ஆனா அவ அப்படி தான் மாப்பிள நடந்துகிட்டா" - சரவண வேல்.

"நம்ம கண்ணு முன்னாடியே வளந்த புள்ள மாமா. எப்படி அப்படி பண்ணி இருக்கும்??. நம்ம வீட்டுல இன்னொரு தடவ கேட்கலாமா??" என்று சுந்தர் கேட்டான்.

"எனக்கும் முதல்ல அப்படி தான் மாப்பிள்ள தோணுச்சி. ஆனா கல்யாணம் முடிஞ்சி வீட்டுக்கு வந்ததும் அவ பண்ணது எல்லாம் பாத்தா அது தான் உண்மைனு தோணும்" என்றவன் தொடர்ந்து மேலும் கோபமான குரலில், "வீட்டுல யார்கிட்டயும் ஒரு வார்த்த கூட சொல்லமா, யாரோ ஒருத்தர் கிட்ட சொல்லிட்டு வீட்ட விட்டு போய் இருக்கா. வீட்டுல மத்தவங்கள கூட விடுடா. என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல. சின்ன வயசுல இருந்து எது வேணும்னாலும் என்கிட்ட தான வந்து நிப்பா. இதையும் சொல்லி இருந்தா மாட்டனா சொல்லி இருப்பேன்" என்று சுந்தரை பார்த்து கேட்டான்.

"ஆனா நீ மாட்டனு சொன்னது தான மாமா பிரச்சனை. நீ சரின்னு சொல்லி இருந்தா ப்ரியா இப்ப இங்கே தானே இருந்து இருப்பா" என்று சுந்தர் பொறுமையாக கேட்டான்.

"அதுக்காக எதுல என்னனு யாருக்கிட்ட கேட்கறோம்னு ஒரு தெளிவு வேண்டாமா??" அவன் எதை பற்றி கூறுகிறான் என்று புரிந்து கொண்ட சரவணன் கோபத்துடன் கூறினான்.

"சரி சரி. அத விடு. அதுவே உண்மையானு தெரில. அத சொல்லி இப்ப சண்ட போட வேண்டாம்" என்று அவனை அமைதி படுத்தியவன், "அதுக்காக அப்படியே விட்டுடுட முடியுமா??. என்ன இருந்தாலும் சின்ன புள்ளடா. எங்க என்ன பண்ணுதுனு தெரிஞ்சிக்காம இருக்கலாமா?!" என்று கேட்டான் சுந்தர்.

"தெரிஞ்சி வச்சிக்கலைனு தெரியுமா??. எங்க இருக்கா என்ன பண்ணுறா எல்லாம் தெரியும். பாதுகாப்பா தான் இருக்கா" என்ற சரவண வேல் மேலும் அவன் தகவல்களை கேட்டு சேகரிக்கும் முன் அங்கே இருந்து சென்று விட்டான்.

சுந்தர் தான் மனதில், 'வெளியே எல்லார்கிட்டயும் வெறுக்கற மாறி நடிச்சிகிட்டே அவள பத்தி எல்லாம் தெரிஞ்சி வச்சி இருக்கான். ம்ம்ம்... இவன் போய் பேசுனா எல்லாம் சரி ஆகிடும். ஆனா அத மட்டும் பண்ண மாட்டான். சரி கொஞ்ச விட்டு பிடிப்போம்' என்று எண்ணியவன், 'அய்யோ இன்னும் நிறைய பேசனும் நினைச்சனே. முக்கியமானத பத்தி பேசறதுக்குள்ள ஓடிட்டானே' என்று புலம்பி கொண்டே தன் வேலையை பார்க்க சென்று விட்டான்.

இங்கே சென்னையில்,

மதிய உணவு உண்ண அந்த டேபிளில் அமர்ந்து இருந்தனர் கீர்த்தி மற்றும் சங்கவி.

"ப்ச்... இந்த மித்துவ பார்த்து ரொம்ப நாள் ஆகுது" என்று கவி சிறிது சலிப்புடன் கூற.

"ஆமாக்கா... என் டீம்னு தான் பேரு... நானே வேலைய தவிர அவன்கிட்ட வேற எதுவும் பேச முடியறது இல்ல. அவ்ளோ பிசி சாரு" என்று அதே சலிப்புடன் கீர்த்தியும் கூறினாள்.

"ம்ம்ம்" - கவி.

"பாருங்க. எப்பவும் மித்து கூட தான காலைல வருவோம். இப்போ பாருங்க... உங்க ஸ்கூட்டில தனியா வரோம். மார்னிங் டாக்ஸ் எல்லாம் மிஸ் பண்ணுறேன் கா" என்று சோகமாக கூறினாள் கீர்த்தி.

"ஆனா இருந்தாலும்... ரொம்ப வேல போலகா. பாவம். இங்க ஆபிஸ் வரணும். அப்பறம் வீடு கட்டறத போய் பாக்கனும். அதும் இல்லாம கொஞ்சம் ஸ்டோர்ஸ்க்கு எல்லாம் கேட்டலாக்(Catalogue) எல்லாம் பண்ணி கொடுக்கறாங்க. அதும் இல்லாம புதுசா வேலைக்கு எடுத்த பசங்க கூட வந்துட்டாங்க. அவங்களையும் பாத்துக்கணும். ம்ம்ம்... அதான் நம்ம கூட ஸ்பெண்ட் பண்ணற டைம் கம்மி ஆகிடுச்சி. அவங்க அவங்க வாழ்க்கையில எல்லாரும் முன்னேறுவாங்க இல்ல. நமக்காக காத்திருக்கனும்னு இல்ல. ஆனா நமக்கு உதவி தேவை அப்போ இருப்பேன்னு ஒரு நம்பிக்கை கொடுத்து இருக்காரு இல்ல கா. அதுவே போதும்" என்று அவனுக்கு இப்போது பரிந்து கொண்டு தன் மனதில் இருப்பதை எல்லாம் பேசினாள் கீர்த்தி.

இதை மட்டும் மிதுன் கேட்டு இருந்தால் மிகவும் மகிழ்ந்து இருப்பான். அன்று கீர்த்தியின் பிறந்த நாள் அப்போது கோவிலில் அவள் பேசியதை கேட்ட மித்துவுக்கு கீர்த்தி தன்னையும் நம்பவில்ல என்று எண்ணினானே!!!. ஆனால் இப்போது அவள் வாயால் அவளுக்கு தேவையான போது அவன் உதவுவான் என்ற அவளது நம்பிக்கை... கேட்டு இருந்தால் மகிழ்ந்து இருப்பான்.

"ம்ம்ம்... புரியுது... நான் உங்க இரண்டு பேருகிட்ட ஒரு முக்கியமான செய்தி சொல்லனும். அது கொஞ்சம் எனக்கு முடிவு எடுக்க உதவி பண்ணனும்" என்று கூறினாள்.

அந்த பேச்சு போய் கொண்டு இருக்கும் நேரத்திலே மிதுன் அங்கே வந்து சேர்ந்தான்.

மிதுன், "ஹாய் கேர்ள்ஸ்... எப்படி இருக்கீங்க??" என்று புன்னகையுடன் கேட்டான்.

"வா மித்து" என்று பொதுவாக இருவரும் கூறினார்கள்.

"மித்து... உனக்கு இன்னிக்கு முக்கியமான வேலை எதுனா இருக்கா??. இல்லனா நம்ம டின்னர் போலாமா??" என்று மெல்லிய குரலில் மெதுவாக கேட்டாள் கவி.

அவளது குரலில் இருந்தே அதை புரிந்து கொண்டவன், "சரி போலாம். இப்போ சாப்பிடுங்க" என்று மூவரும் ஒன்றாக உண்டார்கள்.

வேலையை முடித்து கொண்டு அனைவரும் அவர்களது வீட்டிற்கு சென்றனர். இரவு உணவு நேரத்திற்கு தகுந்த நேரம் பார்த்து மூவரும் ஒரு உணவு விடுதிக்கு சென்றனர்.

உணவை ஆர்டர் செய்து விட்டு, அதற்காக காத்திருக்கும் நேரத்தில் பேசி விடலாம் என்று நினைத்தாள் கவி.

"வந்து எனக்கு வீட்டுல மாப்பிள பாத்து இருக்காங்க" என்று சொன்னாள்.

"ஏய்!!! சூப்பர் கங்க்ரெட்ஸ்." - மிதுன்.

"காங்கோ கவிக்கா" - கீர்த்தி.

"உனக்கு மாப்பிள்ள பிடித்து இருக்கா??" - மிதுன்.

"அது தான் எனக்கு தெரியல" என்று கவி சோர்வுடன் சொன்னாள்.

ஆனால் இது எதெர்ச்சியாக நடக்கிறதா??!! இல்லை எல்லாம் விதியின் மாஸ்டர் ப்ளானா??!! என்று தெரியவில்லை. அதே உணவு விடுதிக்கு தான் தேவ்வும் வந்து இருந்தான். அவர்களிடம் பேச அவன் அருகில் செல்லும் போது தான் அந்த இறுதி உரையாடல் நடந்தது. அதனால் அவர்களிடம் சென்று பேசாமல்... அருகில் இருந்த டேபிளில், அவர்கள் பேசுவது கேட்குமாறு அவர்களுக்கு முதுகு காட்டி அமர்ந்து விட்டான். அவனுக்கு இதுவும் நல்லது தான் என்று தோன்றியது, மதனிடம் மேலும் பேசும் முன் இவர்கள் மனநிலை தெரிந்து கொண்டால் அதற்கு தகுந்தது போல் அவனிடம் பேசலாம் என்று. அதாவது இவர்கள் மறுப்பது போல் தோன்றினால், மதனின் எண்ணம் சரி தான் என்று பேசலாம்... இல்லை இவர்கள் சரி என்றால் அவனிடம் பேசி புரிய வைக்கலாம்... அதற்கு பிறகு அவன் முடிவு தான் என்று.

"ஏன் அப்படி சொல்லுற??. பிடிச்சது பிடிக்கல தெரியலைனா... அவங்க கிட்ட பேசி பாத்துட்டு முடிவு எடுக்கலாம் நினைக்கறீயா??" என்று கேட்டான் மித்து.

"ம்ம்ம்... அதுவும் தான். அதுக்கு முன்னாடியே ஒரு குழப்பம்" அதே குழம்பிய குரலிலே சொன்னாள்.

"என்னக்கா குழப்பம்??" யோசனையுடன் கீர்த்தி கேட்டாள்.

"அது வந்து..." என்று ஒரு வேகத்தில் அவள் சொல்ல ஆரம்பிக்கும் போது உணவு கொண்டு வந்து வைத்தார்கள். அதனால் அமைதி ஆகி விட்டாள். ஆனால் பேச்சை ஒருவன் கேட்டு கொண்டு இருக்கிறான் என்று தெரியாமல், யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்று அவர்கள் உணவை வைத்து விட்டு சொல்லும் வரை அமைதியாய் இருந்தாள்.

epi13.jpg

அவர்கள் சென்றவுடன் ஒரு பெரு மூச்சை விட்டு, "அது வந்து... மாப்பிள்ளை யாருனா... அன்னிக்கு நம்ம தியேட்டர்ல பாத்தமே அவங்க தான்." என்று சொன்னாள்.

"யாரு?? தேவ்வா??" என்று அதிர்ச்சியாக கேட்டது கீரத்தியல்ல மித்து தான்.

கீர்த்தியின் மனதில், 'என்கிட்ட அப்படி இப்படி எல்லாம் பேசுனாங்க... இப்ப வீட்டுல இருந்து பொண்ணு பாத்து இருக்காங்கலாம்... எப்படி அதை ஏத்துக்கலாம் இவரு. எவ்வளவு தைரியம் இருக்கனும். இதுக்கு இருக்கு உங்களுக்கு' என்று புலம்பி கொண்டும் ஏன் என்றே தெரியாமல் அவனை திட்டி கொண்டும் பின்னால் அவனிடம் உரிமை இருக்குமா என்று தெரியாமல் அவனுக்கு ஒரு தண்டனையும் யோசித்து கொண்டு இருந்தாள்.

அதற்குள் கவி, "சே சே. அவரு இல்ல. அவரு கூட வந்தாரு இல்ல. அவரு" என்று சொன்னாள்.

அப்போது காரணம் புரியாமல் ஒரு நிம்மதி கீர்த்தியிடம் தோன்றியது.

"அந்த அண்ணாவா?? பேரு கூட மதன்" என்று கேட்டாள் கீர்த்தி.

"ஆமா அப்பறம் எக்ஸாக்ட்லி அது தான் பிரச்சனை" என்று மறுமொழி கூறினாள் கவி.

இருவரும் புரியாமல் அவளை பார்க்க, அதை விளக்கி கூறினாள்.

"அவர அண்ணானு தான கூப்பிட்டு பேசி வச்சி இருக்கேன். இப்ப போய் கல்யாணம்னு சொன்னதும் சரி சொன்னா என்னை பத்தி என்ன நினைப்பாரு??" என்று கேட்டாள்.

தேவ்வுக்கு தோன்றியது இது தான். இரண்டு பேரும் ஒரே மாதிரி யோசிக்கறாங்களே!!! என்பது தான். ஆனால் தற்போது நிச்சயமாக கவியின் முடிவு கீர்த்தியும், மிதுனும் பேசும் படி தான் அமையும் என்று புரிந்தது. மேலும் அவர்கள் என்ன பேசுகிறார்கள் அவர்களது முடிவு எதை நோக்கி செல்லும் என்பதை அறிய கூர்ந்து கவனித்தான்.

அடுத்தடுத்து அவர்களுடன் நடந்த உரையாடலை கேட்டவன் மனம் மகிழ்ந்தது மட்டும் அல்லாமல் முகமும் புன்னகையில் விரிந்தது. அடடா!!! மாமியாரும் மருமகளும் ஒரே மாறி எண்ணம் கொண்டவங்களா... கிட்டதட்ட ஒரே மாறி பேசறாங்களே!!! வியந்தவன், அதன் பின் அவர்கள் அங்கே இருந்து கிளம்பும் முன் தேவ் அங்கே இருந்து சென்று விட்டான். அடுத்து என்ன செய்யலாம் என்ற முடிவுடன்.

கொடுப்பாள்...

கவி, மதனின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை கண்டிப்பாக கணித்து இருப்பீர்கள். ஆனால் எப்படி என்ன காரணம் என்பதை எல்லாம் அடுத்த அத்தியாயத்தில் பாக்கலாம் தோழமைகளே...

இந்த அத்தியாயம் தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...

"உன்னில் இடம் கொடுப்பாயா??" - கருத்து திரி

நன்றி!!!

இங்ஙனம்
திரா ஆனந்த் 🍀
 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இடம் 14

அம்பிகா அன்று மதனின் வீட்டிற்கு அமிருடன் வந்து இருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு அமிர் அவருக்கு தான் அழைத்து மதனின் மனநிலையை கூறி இருந்தான்.

அன்று அவரின் பதிலை கேட்ட அமிருக்கும் ஒரு தெளிவு ஏற்ப்பட்டது. கிட்டதட்ட அதே போல் தான் நேற்று கீர்த்தியும் கவிக்கு கூறினாள். அதனால் தான் மாமியாரும் மருமகளும் என்று எண்ணினான் அமிர். அவன் மனதில் எப்படி இருந்தாலும் கீர்த்திக்கும் தனக்கும் திருமணம் கண்டிப்பாக நடக்கும் என்ற எண்ணம் இருந்தது. அதன் விளைவு தான் அந்த மாமியார் மருமகள் என்ற பதம்.

சரி அப்படி என்ன தான் கீர்த்தி கூறினாள்.

"அவர அண்ணானு தான கூப்பிட்டு பேசி வச்சி இருக்கேன். இப்ப போய் கல்யாணம்னு சொன்னதும் சரி சொன்னா என்னை பத்தி என்ன நினைப்பாரு??" என்று கேட்டாள் கவி.

அதை கேட்டதும் ஒரு நிமிடம் இருவருக்கும் என்ன சொல்வது என்று புரியவில்லை.

பின் சுதாரித்து மித்து தான் முதலில் பேச்சை ஆரம்பித்தான்.

"கவி... இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல. இத காரணமா காட்டி இந்த மாப்பிள்ள வேண்டாம் சொல்லறது ரொம்ப சின்னபுள்ள தனமா இருக்கும்" என்றான்.

"ஆமாக்கா... நம்ம வாழ்க்கையில் எத்தனையோ பேர எத்தனையோ சூழ்நிலைல சந்திச்சி இருப்போம். அப்போ அன்னிக்கி இருந்த சூழ்நிலைல அவர அண்ணானு கூப்பிட வேண்டியதா போச்சி. அவ்ளோ தான்" என்றாள் கீர்த்தி.

"ஆனாலும்..." என்று கவி இழுக்க, "சரி. இப்படி யோசிச்சி பாருங்க அக்கா. அன்னிக்கு நம்ம அவருகிட்ட ரொம்ப எதார்த்தமா பேசுனனோம். எப்படி??" என்று புருவத்தை உயர்த்தி, கையை நீட்டி கட்டை விரலை தவிர மற்ற நான்கு விரல்களையும் லேசாய் மடக்கி வைத்து கேட்டாள்.

"அவரு அவரை அண்ணானு கூப்பிட சொன்னதால தான. அவரு நம்மள கம்பர்ட்டபிள்ளா பில் பண்ண வச்சி இருக்காரு. அப்பறம் புதுசா பாத்த நம்மகிட்ட ரொம்ப கொழஞ்சி கொழஞ்சி பேசல. அதுல இருந்தே அவரு நல்லவரு தெரியலையா கா!!" என்று கேட்டாள்.

"ஆமா தான்" - கவி.

"அது மட்டுமில்லாம, இப்ப நம்ம சொல்லுற உறவு முறை எல்லாம் நம்மளா நம்ம நெருங்கிய சொந்தங்கள வச்சி சொல்லிகிட்டது தான். அது எல்லாம் சரியா இருக்கனும் கிடையாது. ஒரு பத்து தலைமுறைக்கு முன்னாடி ஒரு அண்ணா தம்பி இருந்து இருக்கலாம்... காலம் போக போக அந்த குடும்பங்கள் பிரிஞ்சி இருக்கும். அப்பறம் யாருனோ தெரியாதவங்களா ஆகி இருப்பாங்க. எதோ ஒரு வகையில உன் வயசுலயே உனக்கு ஒரு பேத்தி கூட இருக்கலாம். அதெல்லாம் நமக்கு தெரியாது. சோ ஒரு வார்த்தை சொன்னனு அத புடிச்சிட்டு தொங்காத..." என்று ஒரு பெரிய விளக்க உரையை கூறி விட்டு ஒரு குவளை நீரை எடுத்து அருந்தினாள்.

இது... இது தான்... அமிரின் தாயும் அவனிடம் கூறியது. ஆனால் வேறு வார்த்தைகளில், வேறு கோணத்தில்.. ஆனால் அர்த்தம் இது தான்.

'அடடா!!! மாமியாரும் மருமகளும் ஒரே மாறி எண்ணம் கொண்டவங்களா... கிட்டதட்ட ஒரே மாறி பேசறாங்களே!!!. பிற்காலத்துல பெரிய பிரச்சனை எதும் இல்லாம இருப்பாங்க நினைக்கறேன். வந்தாலும் அவங்களே சரி பண்ணிப்பாங்க. நம்ம தலையிட தேவையில்ல' வியந்து எதிர்கால திட்டத்தையும் போட்டு விட்டான் மனதிற்குள்ளே.


epi14.jpg

அவர்கள் மீண்டும் பேச்சை ஆரம்பிக்க, கவனத்தை அவர்கள் பக்கம் திருப்பினான் தேவ்.

"அதே தான் கவிமா. அந்த அண்ணாங்கற வார்த்தைக்காக நீ அவர ஒதுக்க வேணாம். ஆனா அந்த வார்த்தைக்கு உணர்வு இருந்தா கண்டிப்பா நீ வேணாம் சொல்லிடலாம். சரியா??" என்று கேட்டான் மித்து.

"ம்ம்ம்... புரிஞ்சது" என்று மித்துவை பார்த்து மண்டையை ஆட்டி விட்டு, கீர்த்தி கையை பிடித்து புன்னகைத்த கவி, "ஆனாலும் நீ இப்படி எல்லாம் யோசிப்ப... இப்படி எல்லாம் பேசுவனு நினைக்கல கீர்த்து" என்று ஆச்சர்யமாகவே சொன்னாள்.

"ஈஈஈ" என்று தனது பல்லை காட்டியவாறே வலது கை ஆள்காட்டி விரலால் தனது பின்னந்தலையை கீறினாள் கீர்த்தி. மித்துவும் அவளிடம் ஏதோ வம்பு வளர்க்க என பேசி கொண்டே உணவை உண்டனர்.

கவியின் மனதை புரிந்து கொண்ட தேவ், இதுவே போதும் என்று அவர்கள் பார்க்கும் முன் கிளம்பி விட்டான். அவனது அடுத்த திட்டம் தனது தாய் அம்பிகாவை வர வைத்து அவனுடன் பேச வைப்பது.

அதை நிறைவேற்ற தான் இன்று இங்கு வந்து இருக்கிறார் அம்பிகா.

அமிர், மதன் மற்றும் அம்பிகா சில பொதுவான பேச்சுக்கு பின், மதனுக்கு வந்த வரனை பற்றி கேட்டார். அவர் இந்த நேரத்தில் இங்கு வரும் போதே புரிந்து கொண்டான் மதன், இதை பற்றி தான் பேச போகிறார் என்று.

அம்பிகாவும் சுற்றி வளைக்காமல், "அந்த பொண்ணு உன்ன அண்ணானு கூப்பிட்டது தான் உன் பிரச்சனையா??" என்று கேட்டார்.

"ம்ம்ம்... அப்படியும் சொல்லிக்கலாம் அத்த" தயக்கத்துடனே மதன்.

"இங்க பாரு மதன். நம்ம ஊருல நம்ம யார பாத்தாலும் எதுனா முறை வச்சி தான் கூப்பிடுவோம். நம்மள பொருத்த வரைக்கும், நம்மள விட கொஞ்சம் பெரியவங்கனா அண்ணா அக்கா, இன்னும் பெரியவங்கனா அத்த, மாமா, வயசானவங்கனா தாத்தா, பாட்டி அப்படி தான் கூப்பிடுவோம். ஆனா கடைசி வரை அந்த உறவு அப்படியே இருக்கும்னு சொல்ல முடியாது. நம்ம இப்ப கூப்பிட்டுகிட்டு இருக்கற முறையும் சரினு சொல்ல முடியாது. இவ்வளவு ஏன் சின்ன தொழில்ல இருந்து பெரிய தொழில் வச்சி இருக்கவரைக்கும்... அப்படி தான். பஸ் கண்டக்டர்ட இந்த இடம் ஒரு டிக்கெட் அண்ணானு சொல்லுவோம். டாக்டர் அங்கிள் எனக்கு கை ரொம்ப வலிக்குதுனு சொல்லுவோம். ஒருத்தங்கள தெரியாத இடத்துலயோ இல்ல அவங்களுக்கு மரியாத குடுக்கனும்னாவோ நம்ம அப்படி தான் சொல்லுவோம்" என்றார்.

"ம்ம்ம்... சரி தான் அத்த" என்று தெளிவில்லாத மனதுடனே கூறினான் மதன்.

"கண்டிப்பா அந்த பொண்ணுக்கு உன் மேலயோ உனக்கு அந்த பொண்ணு மேலயோ சகோதர உணர்வு வந்தா விட்டுடலாம். சும்மா பேச்சு முறைக்காக சொல்லி இருந்தா யோசிக்கலாம் தப்பு இல்ல தான. அந்த பொண்ணு கிட்ட பேசி பாரு. அப்பறம் கூட உன் முடிவ சொல்லு" என்றார் அம்பிகா.

"இல்லனா அந்த சந்திப்பே நடக்கலனு நினைச்சிக்கோ அதுவும் இல்லனா அது சார் மாதிரி உன்ன குறிப்பிட்டு சொல்ல பயன்படுத்தப்பட்ட ஒரு வார்த்தைனு நினைச்சிக்கோ. சோ அந்த ஒரு வார்த்தை சொன்னனு அதயே புடிச்சிட்டு தொங்காத... உன் உணர்வுக்கு மதிப்பு கொடுத்தா போதும்" என்று ஒரு வழி சொல்லி முடிவெடுக்க விட்டார்.

இதற்கு மேல் அவன் குழம்பாமல் சரியான முடிவு எடுத்தால் நன்றாய் இருக்கும்.

அதன் பின் இருவரும் யோசிக்க, எத்தனையோ படங்களில் கூட இந்த மாறி வந்து இருக்கு. நம்ம மட்டும் இவ்ளோ யோசிக்கலாம் என்று எண்ண, படக்காட்சிகள் நினைவு வந்தது.

"ப்ரதர் எனக்கு ஆல்ரெடி ஆள் இருக்கு" நஸ்ரியா ஆர்யாவிடம்.

"தம்பி ரோஸ் மில்க் வாங்கி தரேன்டா" சமந்தா விஜய்யிடம்.

இதை எல்லாம் விட இவர்களது நிலைமைக்கு ஏற்றார் போல், "அண்ணா நாங்க பக்கத்து வீட்டுல புதுசா குடி வந்து இருக்கோம். அம்மா சக்கர வாங்கிட்டு வர சொன்னாங்க" என்று ஸ்ரீ திவ்யா விஷ்ணுவிடம்.

அப்பறம்... என்று மூளை இன்னும் நினைவடுக்கில் ஏதேனும் தகவல்கள் இது தொடர்பாக உள்ளதா என்று தேட, போதும் போதும் லிஸ்ட் ரொம்ப பெருசா போய்ட்டு இருக்கு என்று மனம் வந்து அந்த வேலையை தடுத்து நிறுத்தியது.

இதே போல் தானே பேச்சை ஆரம்பிக்க பேசினோம் என்று யோசித்து விட்டு அடுத்தவர் மனதை புரிந்து கொண்டு முடிவு எடுக்கலாம் என்று எண்ணினர்.

அதே போல் எல்லோரும் சேர்ந்து அவர்கள் இருவருக்கும் ஒரு மீட்டிங் அரேன்ஞ் செய்தனர்.

"ஹாய்" - மதன்.

"ஹலோ" - சங்கவி.

"வணக்கம் அன்ட் வெல்கம்" என்று மதன் இலகுவாக சொல்லி ஒரு புன்னகையை அவள் முகத்தில் வர வைத்தான்.

அதன் பின் சில பேச்சுக்களில் அந்த சந்திப்பு வெற்றிகரமாக முடிந்து இருவரும் வீட்டில் தங்களது சம்மதத்தை சொல்லி விட்டனர். மேலும் இன்னும் நான்கு மாதங்கள் கழித்து திருமணம் என்று முடிவு எடுத்தனர் அவர்கள் வீட்டில். அந்த இடைவெளியை அவர்களும் பயன்படுத்தி ஒருவரை ஒருவர் நன்றாக அறிந்து கொள்ள முடிவெடுத்தனர்.

சோ அவர்கள் தொலைபேசியிலும், சிற்சில சந்திப்புகளிலும் தங்களுடைய மனதை அடுத்தவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக காட்டி, பிற்கால வாழ்க்கைக்கு தேவையான புரிதலை வளர்த்து கொண்டு இருந்தனர்.

அப்படியே நாட்கள் சில கடக்க, அன்று கீர்த்தி அவளது அலுவலகத்தில் ஒரு இடத்தில் அமர்ந்து வேலை செய்யாமல், தனது மடிகணினியையும், தனது குறிப்பேட்டையும் எடுத்து கொண்டு அங்கும் இங்கும் யாரோ ஒருவரை வைத்து பேசி கொண்டே குறிப்புகள் எடுத்து கொண்டு இருந்தாள்.

கொடுப்பாள்...
 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இடம் 15

கவி, மதன் தொடர்பான நிகழ்வுகள் எல்லாம் முடிந்து சில வாரங்கள் கடந்து இருந்தது.

இந்த வாரத்தில் கீர்த்திக்கு வேலைகள் நிறைய இருந்தது. எப்போதும் இருக்கும் வேலையை விட அதிகமாக... காரணம் என்னவென்றால், அவள் பணி புரியும் அலுவலகத்தில் மூன்று இணைய பயன்பாட்டு செயலிகள் உள்ளது. அது நாம் அறிந்தவையே... அதில் ஒரு செயலி ஏதோ பிரச்சனையின் காரணமாக கிட்டதட்ட பத்து மணி நேரமாக வேலை செய்யவில்லை. இவர்கள் செயலி உலகம் முழுதும் பயன்படுத்தும் செயலி இல்லை என்றாலும், சொல்லி கொள்ளும் அளவு வாடிக்கையாளர்கள் இருந்தனர். அவர்கள் தான் இதை புகார் செய்தனர். அதற்கு முன்னே செயலிகள் சரியாக வேலை செய்கிறதா என்று கண்காணிக்கும் குழு கண்டுபிடித்து விட்டது. அதன் காரணத்தை ஒரு ஆவணமாக தயாரித்து அவர்கள் வெளியில் காண்பிக்க வேண்டும். அந்த வேலையை கீர்த்திக்கு தான் ஒதுக்கி இருந்தான் மிதுன்.

அது தொடர்பாக தான் அந்த செயலியின் தலைவர் பொறுப்பில் இருப்பவருடன் பேசி, சில சந்தேகங்கள் கேட்டு, இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணியாக கூறப்படுவதின் பிரச்சனை மற்றொரு குழுவுடன் பேசி அறிந்து ஆவணம் தயாரித்து கொண்டிருக்கிறாள்.

"ஏன் இந்த பிரச்சனை வந்து இருக்கு??" - கீர்த்தி.

அவர் காரணத்தை விளக்குகிறார்.

"இதை எப்படி இனிமேல் நடக்காம தடுக்கிறது??" - கீர்த்தி.

"இந்த உலகத்தில் எதுமே நூறு சதம் சரியானதுனு எதுமே கிடையாது. ஆனால் இதுல எந்த பிரச்சனை வந்தாலும் வேற ஒன்னுக்கு மாத்தி விட்டுடுவோம். அதனால வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட மாட்டாங்க" - அவர்.

"ஓஓஓ.." - கீர்த்தி.

"ம்ம்ம்... நமக்கு உடம்பு சரி இல்லாம போகுது இல்ல. அது மாதிரி தான். நீ இந்த பேக்அப் ப்ளான்(Backup plan) வச்சி இருக்கிறோம்னு மட்டும் எழுதிடுமா" என்று சொல்லி விட்டு சென்றார் அவர்.

கீர்த்திக்கு இருக்கும் அடுத்த வேலை, இதனால் பாதிக்கப்பட்டவர் எத்தனை பேர் எந்த பகுதியில் இருப்பவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டார்கள் என்று கேட்டு அறிந்து அதையும் சேர்க்க வேண்டும்.

அவள், அவள் வேலையை பார்க்கட்டும். நம்ம அதுக்குள்ள மத்தவங்கள போய் பார்த்துட்டு வந்துடலாம்.

இங்கே பேஷன் பள்டர்ஸ்ஸில்...

புதிதாய் ஒரு கட்டிடம் கட்டுவதற்கான திட்டமிடலில் ஈடுபட்டு இருந்தனர் நம் நாயகனும் அவனின் தோழர்களும். இரண்டு மணி நேரமாக அனைவரும் பேசி ஒரு வழியாக ஒரு முடிவு எடுத்து விட்டனர்.

ஐவரும் ஒன்றாக அமர்ந்து தேனீர் பருகி கொண்டே இலகுவாக பேசி கொண்டு இருந்தனர்.

"கீர்த்தி உனக்கு என்ன தான் பதில் சொன்னாள்??" என்று கேட்டாள் கீதா.

"ஆமா... என்ன ஆச்சி?? செட் ஆச்சா?? இல்லயா??. ஒன்னுமே சொல்ல மாட்டிங்குற" - பிரதீப். கௌதமும் கேள்வியாக பார்த்தான்.

"எங்கடா??. நல்லா பேசறா தான். ஆனால் என்னோட காதல் கல்யாணத்த பத்தி தான் ஒன்னும் சொல்ல மாட்டிங்குற" என்றான் தேவ்.

"ஓஓஓ... நீ கேக்கும் போது என்ன பண்ணுறா??. போன வச்சிட்டு போய்டுறாளா?? இல்ல அமைதியா இருக்குறாளா?? இல்ல பேச்சை மாத்திடுறாளா??" என்று கீதா யோசனையுடன் கேட்டாள்.

"இதுல எதுமே நடக்கலையே!!!" - தேவ்.

"ஏன்??. வேற என்ன தான் பண்ணுனா??" ஆர்வத்துடன் கீதா கேட்க, "நான் தான் அவகிட்ட கேட்டதே இல்லையே. அப்பறம் எப்படி இதுல ஏதோ ஒன்னோ இல்ல வேற எதுவுமோ நடக்கும்??" என்று புருவத்தை தூக்கி கேட்டான்.

"ஆமா... இதுல எல்லாம் தெளிவு தான். அவங்ககிட்ட பேசனா தான தெரியும். முதல கேளுடா. அன்னிக்கு என்னமோ பெரிய இவனாட்டம் அவளுக்கு புடிக்கலைனா விட்டுடுவேன். தொல்லை பண்ண மாட்டேன் சொன்ன... அதெல்லாம் நடக்கனும்னா நீ முத கேட்கனும்" என்று கௌதம் சொல்ல, அவன பாவமாக பார்த்த தேவ், "ஏன்டா எதிர்மறை செயல வச்சி சொல்லுற, நான் அவ சரி சொன்னதுக்கு அப்பறம் வீட்டுல சொல்லி கல்யாணம் பண்ணுவேன் சொன்னனே அது நடக்கனு சொல்லி இருக்கலாம்ல" என்று கேட்டான்

அதை கேட்ட மற்றவர்கள் சிரித்து விட்டனர்.

"சரி சரி... உன் கல்யாணம் சீக்கிரம் நடக்கனும்னா... நீ அந்த பொண்ணுகிட்ட இத பத்தி பேசுனா தான தெரியும்" என்றான் கௌ.

"ம்ம்ம்... சரிடா அடுத்த வாரம் பேசறேன்" என்ற தேவ்வை மற்ற மூவரும் ஏன் என்ற பாவனையுடன் பார்க்க, "அவளுக்கு இந்த வாரம் நிறைய வேலை இருக்காம்டா. அதான்" என்க, அவர்களும் சரி என தலையாட்டி விட்டு தங்களது வேலையில் மூழ்கினர்.

இந்த பணிகள் எல்லாம் முடித்து தேவ் அன்று இரவு தாமதமாக தான் வீட்டிற்கு சென்றான்.

"என்ன அமிர்??. இன்னிக்கு ரொம்ப வேலையா??" என்று கேட்டார் அம்பிகா.

"ஆமா மா" என்று சோர்வான குரலில் கூறிவிட்டு தனது அறைக்கு சென்றான்.

முகம் கை கால் கழுவி விட்டு வீட்டில் பயன்படுத்தும் இலகுவான உடை அணிந்து மீண்டும் வெளியே வந்தான்.

"அம்மா இன்னிக்கு எனக்கு ரொம்ப பசிக்குது" என்று தனது வயிற்றை தடவி கொண்டே வந்து சாப்பிட அமர்ந்தான்.

"என்ன மா சாப்பாடு??" - அமிர்.

"சப்பாத்தியும், உருளை கிழங்கு பொரியலும்" - அம்பிகா.

"ஐ... சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சி. என்ன இன்னிக்கு ஆச்சிரியாம இத பண்ணி இருக்கீங்க??. இட்லி தோசைனு இருந்தவங்க... இப்ப சப்பாத்தி பண்ணி இருக்கீங்க??" சிரிப்புடன் தேவ்.

அவனை முறைப்புடன் பார்த்தவர், "ஏன்ன்ன்... மாவு தீந்து போச்சி அதான். நீ என்ன நினைச்ச??. ஊன் பையனுக்கு புடிக்கும்னு சமைச்சி அவனுக்காக காத்துகிட்டு இருந்தேன்னா" என்றார்.

ஏனென்றால் சென்ற வாரம் தான் இதே உணவை சமைத்து இருந்தார்.

"ஈஈஈ... கோச்சிக்காத அம்மு குட்டி. சும்மா சொன்னேன்" என்று கன்னம் கிள்ளிவன் தனது கையில் இருந்த ஒரு வாய் உணவை அவருக்கு ஊட்டி விட்டு உண்ண ஆரம்பித்தான்.

அவன் உண்டு முடிக்க அமிரின் அப்பாவும் தான் பேசி கொண்டு இருந்த அழைப்பை முடித்து கொண்டு வந்தார்.

"அப்பா சாப்டீங்களா??" என்று கேட்டான்.

"இன்னும் இல்ல... நீயும் வந்த அப்பறம் சாப்பிடலாம் நினைச்சேன்" என்றவரும் வந்து அமர அவருக்கு பரிமாறினார் அம்பிகா.

"இல்லப்பா... ரொம்ப பசிச்சது. அதான் வந்ததும் சாப்பிட உக்காந்துட்டேன்" என்று மெல்லிய குரலில் கூறினான்... தனக்காக அவர்கள் காத்திருக்கும் போது, அவர்கள் உண்டார்களா என கேட்காமலே போனேனே என்று.

அவனை பார்த்து புன்னகைத்த இருவரும், "அதெல்லாம் தெரியும் சாப்பிடு" என்றார்கள். அதன் பின் மூவரும் ஒன்றாக அமர்ந்து உண்டார்கள்.

அப்பாவும், மகனும் சாப்பிட்டு விட்டு அவர்கள் தட்டை மட்டும் கழுவி பக்கத்திலே கவிழ்த்து விட்டு வந்து வரவேற்பறையில் வந்து அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர். அதற்குள் அம்பிகாவும் தனது உணவை முடித்து கொண்டு சமையலறையை சுத்தம் செய்து விட்டு வந்து அவர்களுன் அமர்ந்தார். அது அவர்களின் குடும்ப நேரமாக இப்போது மாறி விட்டது. பேசி சிரித்து உறங்கும் நேரமும் வர அவர்கள் அறையை நோக்கி நடையை கட்டினர்.

அப்படியே ஒரு வாரமும் கடக்க, அன்று விடுமுறை நாளில் கீர்த்திக்கு அழைத்தான் தேவ்.

"சொல்லுங்க தேவ்" - கீர்த்தி.

"ஏய்... கீர்த்தி இன்னிக்கு வெளியே பாக்கலாமா??. ஒரு முக்கியமான விசயத்தை பத்தி பேசனும்" என்று சுத்தி வளைக்காமல் நேரிடையாக சொல்ல வேண்டியதை சொல்லி விட்டான் தேவ்.

அவன் எதை கேட்க போகிறான் என்பதை அவன் சொல்லமாலே புரிந்து கொண்டவள் யோசிக்க நேரம் வேண்டும் என்பதால், "சரி நாளைக்கு பார்க்கலாம்" என்றாள்.

"சரி" என்று சொன்னவனும் சில பல பேச்சுக்கு பின் அழைப்பை துண்டித்தான்.

கவியும் வெளியே சென்று இருந்ததால், கீர்த்திக்கு தனிமையில் யோசிக்க நிறைய நேரம் இருந்தது.


epi15.jpg

அவளது மனதில் கேள்விகள் வலம் வர ஆரம்பித்தது.

வினா : தேவ்வை காதலிக்கறயா??

தெரியல.

வினா : தேவ்வை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா??

தெரியல.

வினா : தேவ்வை புடிக்குதா?? இல்லையா??

தெரியல.

வினா : தெரியல தெரியல என்ற பதிலில் இருந்தே தெரியலையா?? உனக்கு தேவ்வை புடிச்சி இருக்கு என்று.

.....

அடுத்து என்ன என்று புரியாமல் இருக்கும் போது மனம் மற்றொரு வினாவை வினவியது.

வினா : கவிக்கு பாத்தா மாப்பிள்ளை தேவ்வா இருக்குமோனு நினைச்சப்ப ஏன் வருத்தப்பட்ட?? தேவ் மேல கோபப்பட்ட??

.....

புரிந்து கொண்டாள் தேவ்வை அவளுக்கு ஸ்பெஷலாக பிடித்து இருக்கிறது என்று. ஆனால் எப்படி??.

ரொம்ப நாட்களாக அவனுடன் பேசி கொண்டு இருப்பதால் பிடித்து இருக்குமோ!!!.

ஒரு வேளை அவளுக்கே தெரியாமல் அவன் மேல் ஒரு ஈர்ப்பு இருந்து அதனால் தான் அவனுடன் பேசி கொண்டு இருந்தாளோ!!!

அவளுக்கு புரியவில்லை. இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது. மனதில் ஒரு வித தித்திப்பு திருப்தி ஏற்பட்டது. தேவ்வுடனான வாழ்வை எண்ணி...

ஆனால் இதை எப்படி தேவ்விடம் ஒப்புக் கொள்வது. தனக்கும் தனது குடும்பத்துக்கும் உள்ள உறவு நிலையில் இது எல்லாம் சாத்தியமா??. தனது அம்மா பாட்டி எல்லாம் உறுதியாக இதற்கு ஒப்பு கொள்ள மாட்டார்கள் என்று தெரியும். அதுவும் சரவண மாமா ஏற்று கொள்ளாமல் கண்டிப்பாக என்னால யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது.

அதனால் தேவ்விடம் நானும் அவரை விரும்புவதை சொல்லலாமா?? வேண்டாமா??.

ஒரு வேளை நான் சொல்லி அவரு என்ன தப்பா நினைச்சிட்டா!!!. நான் யாரை பத்தியும் யோசிக்காதவளா... இப்படி சுயநலமா இருக்க இவள போயா விருப்புனேன் நினைச்சிட்டா!!! என்று தன் மனதில் பல எண்ணங்களை போட்டு குழப்பி கொண்டு இருந்தாள் கீர்த்தி.

ஆனால் நமக்கு தெரிந்த ஒன்று அவளுக்கு இப்போது தெரியவில்லை அல்லது அதை எல்லாம் யோசிக்கும் நிலையில் அவள் இல்லயா??. அது என்னவென்றால் இந்த உலகில் சுயநலம் இல்லாத மனிதர்கள் யாரும் இல்லை என்பது தான்.

தேவ்கிட்ட நம்ம விருப்பத்தை சொல்லி அப்பறம் சேர முடியலனா அவருக்கும் வருத்தம் எனக்கும் வருத்தம். வேண்டாம் என் விருப்பத்தை கண்டிப்பா நான் அவர்கிட்ட சொல்ல மாட்டேன். சொல்ல கூடாது. நான் கடைசி வரைக்கும் இப்படியே தனியா தான் இருப்பேன் என்று மனதினுள்ளே ஒரு முடிவு எடுத்து விட்டு, அது வருத்தமாய் இருந்தாலும் ஏற்று கொண்டாள்.

ஆனால் காரணம் இல்லாமல் இவள் முடிவை அப்படியே ஏற்று கொள்ள தேவ் என்ன முட்டாளா??. என்ன பிரச்சனை என்று அறிந்து அதற்கு தீர்வு காணாமல் விட மாட்டான். முயற்சி செய்யாமலே தோல்வியை ஒப்பு கொள்ள முடியாது அல்லவா??.

ஆனால் வெற்றி தோல்வி இரண்டையும் ஏற்று கொள்ள கூடிய மன பக்குவமும், இரண்டு முடிவுகளிலும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற திட்டமிடலும் கொண்டவன் ஆயிற்றே அவன்.

கொடுப்பாள்...

இந்த அத்தியாயம் தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...


"உன்னில் இடம் கொடுப்பாயா??" - கருத்து திரி

நன்றி!!!

இங்ஙனம்
திரா ஆனந்த் 🍀
 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இடம் 16

காலை எழுந்து உணவு உண்டு விட்டு ஆறுதலாக தனது படுக்கையில் படுத்து இருந்தாள் கீர்த்தி.

இன்று மதிய உணவிற்கு மேல் தான் தேவ்வும், கீர்த்தியும் சந்திக்க இருக்கின்றனர்.

பதினொரு மணிக்கு தனது மொபைலில் அலாரம் வைத்து விட்டு கண்களை மூடி தனது படுக்கையில் படுத்து விட்டாள்.

தூங்கி விட்டாள் என்று சொல்ல முடியாது. விழித்து இருக்கிறாள் என்றும் சொல்ல முடியாது. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு நிலையில் இருந்தாள். கவியும் வந்து அவளை பார்த்து விட்டு தனது அறைக்கு சென்று விட்டாள்.

'டிக்... டிக்... டிக்...' என சரியாக 11 மணி 00 நிமிடத்திற்கு அலாரம் அடித்து தனது பணியை சரியாக செய்தது.

அந்த சத்தத்தில் எழுந்தவள், வெளியே வந்து கவியுடன் சேர்ந்து மதிய உணவை சமைத்து முடித்தாள். இருவரும் பொதுவாக பேசி கொண்டே உண்டு முடித்தனர்.


epi16.jpg

அதன் பிறகு தனது அறையின் உள்ளே சென்று பொறுமையாக இன்று எந்த ஆடையை போட்டு கொள்ளலாம் என்று தேடி, ஒரு கரு நிற பளாசா பேன்டயும் அதற்கு பொருத்தமாக ஒரு பிங்க் நிற மேலாடையும் எடுத்து வைத்து விட்டு குளித்து விட்டு வந்தாள். பிறகு அந்த ஆடையை அணிந்து அதற்கு ஏற்றவாறு தலையில் முன்பிருந்து முடிகளை பின்னலிட்டு பின்புறமாக உள்ள முடிகளை விரித்து விட்டாள். தனக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து வைத்து கொண்டு தனது அறையில் இருந்து வெளி வந்தாள் கீர்த்தி. அப்போது மணி 2யை கடந்து இருந்தது.

வெளி வந்தவள் கவியிடம் சென்று, "நான் வெளிய போய்ட்டு வரேன் கா... பாய்" என்று சொன்னாள்.

"எவ்வளவு தூரம் போறடா??. பக்கம்னா ஸ்கூட்டி எடுத்துட்டு போ. வரப்ப பஸ்க்கோ ட்ரைன்கோ வெயிட் பண்ண தேவை இல்ல. சீக்கிரம் வந்துடலாம்" என்று கேட்டாள் கவி.

சிறிது நேரம் யோசித்தவள், "சரி கா. நான் ஸ்கூட்டியே எடுத்துட்டு போறேன்" என்று சொல்லி விட்டு சாவியை எடுத்து கொண்டு கிளம்பினாள்.

நேராக அவள் சென்ற இடம் கடற்கரை தான். அங்கு தான் தேவ் அவளை வர சொல்லி இருந்தான். தானே வந்து அழைத்து கொள்வதாக தான் முதலில் கூறினான். ஆனால் அவள் தான் மறுத்து விட்டாள்.

அவன் சொன்ன இடத்தை அடைந்தாள். இன்னும் தேவ் வந்து இருக்கவில்லை. சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து அந்த வானை நோக்கி கொண்டு இருந்தாள்.

அவசர அவசரமாக அவளை அடைந்த தேவ், "கீர்த்தி... மன்னிச்சிடுடா கிளம்பும் போது ஒரு கால் வந்தது. அத பேசிட்டு வர நேரம் ஆகிடுச்சி. நீ எப்பா வந்த??. ரொம்ப நேரம் தனியா இருந்தயா??" என்று வந்ததும் மன்னிப்பை யாசித்து விட்டு, காரணத்தை தெரிவித்து விட்டு அதன் விளைவுகளை பற்றி கேட்டான் தேவாமிர்தன்.

"அச்சோ ரொம்ப நேரம்லாம் ஆகி இருக்கல தேவ். நீங்க அத நினைச்சி கவலபடாதீங்க" என்று ஒரு புன்னகையுடன் அவனுக்கு பதில் அளித்தாள் கீர்த்தி பிரியம்வதா.

தலையசைத்து விட்டு அவனும் ஒரு புன்னகையுடன் அவளுக்கு அருகில் அமர்ந்து விட்டான்.

நேரங்கள் சில கடக்க இருவரும் எதுவும் பேசி கொள்ளவில்லை. இருவருக்கும் தெரியும் எதை பற்றி பேச இங்கு வந்து உள்ளனர் என்று. கீர்த்தி அவன் கேட்டதும் பதில் சொல்லலாம் என்று இருந்தாள். தேவ் சிறிது நேரம் இந்த தனிமையை ரசிக்கலாம். அதன் பின் அவளது முடிவு என்னவென்றாலும் அதை பற்றி தான் யோசிக்க முடியும் என்று அமைதியாய் இருந்தான்.

கீர்த்தி மூன்று முறைக்கு மேல் அவனை திரும்பி பார்த்து விட்டு வேடிக்கை பார்க்க, தேவ் போதும் என்று நினைத்து அவளுடன் உரையாடலை தொடங்கினான்.

"என்னை உனக்கு புடிக்குமா கீர்த்து??" எந்த ஒரு முன்னுரையும் முகாந்திரமும் இல்லாமல் சட்டென கேட்டு விட்டான். அதற்கு அவளது மறுமொழியும் பட்டென வந்து விழுந்தது.

"புடிக்கும் தேவ்".

"என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பமா??" என்று கேட்டான் தேவ்.

நேற்று அவளது மனமே இந்த கெஸ்டீன் பேப்பரை லீக் பண்ணி விட்டதல்லவா!!. அதனால் அவளது பதில்கள் எந்த தடையுமின்றி பட்டென வந்தது.

"என்னால உன்ன கல்யாணம் பண்ணிக்க முடியாது தேவ்" - கீர்த்தி.

கீர்த்தி லாவகமாக கல்யாணம் செய்ய விருப்பமா?? இல்லையா?? என்ற வினாவுக்கான விடையை தவிர்த்து விட்டு ஒரு பதிலை கூறினாள். ஆனால் அதை அவனும் கண்டு கொண்டு அவளது லாவகத்தை ஒன்றும் இல்லாமல் செய்து விட்டான்.

என்ன தான் அவளது பதில் என்னவாக இருந்தாலும் அதை எண்ணி வருந்தாமல் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றே யோசிக்க வேண்டும் என்று அவன் நினைத்து இருந்தாலும், அப்போது சட்டென அதை செயல்படுத்த முடியவில்லை. தான் எந்த விதத்தில் தாழ்ந்து விட்டோம் அவளின் பார்வையில் என்று எண்ணினான்.

ஒரு முழு நிமிட இடைவெளிக்கு பின், "ஏன் கல்யாணம் பண்ண முடியாதுனு தெரிஞ்சிக்கலாமா??" என்று கேட்டான் அவளை பார்க்காமல்.

அவளும் அவனை பார்க்காமல், "சில தனிப்பட்ட காரணங்கள்" என்று சொல்லி முடித்தாள்.

இப்போது அவளை திரும்பி பார்த்தவன், "என்ன பிடிக்காதது தான் காரணம்னா நீ அதை என்கிட்ட சொல்லிடலாம். நான் உன்னை தொல்ல பண்ண மாட்டேன். அதே போல் என் பிராமிஸ நான் காப்பாத்துவேன்" என்று முதல் முறை அவளிடம் தனது விருப்பத்தை சொல்லும் போது அவனது வாக்குறுதிகளை நினைவு படுத்தி சொன்னான் தேவ்.

அவனை தனக்கு பிடிக்கவில்லை என்று சொல்வதை விட, தனது சூழ்நிலையை அவனுக்கு சொன்னால் நன்றாக இருக்கும். அவன் தன்னை புரிந்து கொள்வான் என்று தோன்றியது அவளுக்கு.

நேற்று பல முறை யோசிக்கும் போது தோன்றாத இந்த எண்ணம் இப்போது இவன் அருகில் இருக்கும் போது தோன்றியது.

ஒரு முறை மூச்சை நன்றாக இழுத்து விட்டு அவனிடம் எல்லாம் சொல்ல தன்னை ஆயுத்தப்படுத்தி கொண்டாள். ஆம்.. முடிவெடுத்து விட்டாள். தேவ்விடம் அனைத்தையும் பகிர்ந்து கொள்வது... அதன் பின் அவனது முடிவை பொருத்து தன் குடும்பத்திடம் பேசுவது என்று.

"தேவ்... எனக்கு உங்களை புடிக்கும் தேவ். கல்யாணம் பண்ணிக்க கூட விருப்பம் தான். ஆனா எங்க வீட்டுல அவங்க முழு மனசா என்னை உங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க மாட்டாங்க தேவ். அவங்களுக்கு நான்... என்னை..." என்று அடுத்து எப்படி சொல்வது என்று திணற அவள் கையை பிடித்து அழுத்தி கொடுத்தான் தேவ்.

"ரிலாக்ஸ்... எல்லா வீட்டுலயும் பொண்ணு காதல்னு சொன்ன ஒத்துக்க மாட்டாங்க தான். நம்ம பேசி புரிய வைக்கலாம்" என்று அது தான் காரணம் என்று எண்ணி கொண்டு ஆறுதல் படுத்தினான் தேவ்.

"ப்ச்ச்.. தேவ்.. அது காரணம் இல்ல" என்று அவள் சொல்ல, "பின்ன??" என்று புரியாமல் கேட்டான் தேவ்.

"எங்க மாமாவோட கல்யாணம் அப்போ தான் எல்லாமே மாறிடுச்சு" என்று வெறுமையான குரலில் கூறினாள் கீர்த்தி.

அவன் அவளையே பார்த்து கொண்டு இருக்க, அவள் தொடர்ந்தாள்.

"எங்க அம்மா பேரு அற்புதம். அப்பா சண்முக சுந்தரம். அம்மா கூட பிறந்தவர்க மூணு பேரு ஒரு அக்கா இரண்டு தம்பிங்க... அதுல கடைசி தம்பி பேரு சரவண வேல். அவங்களுக்கு தான் ஒரு ஒன்பது மாசம் முன்னாடி கல்யாணம் வச்சி இருந்தாங்க. அப்ப நான் காலேஜ் கடைசி வருடம் படிச்சிட்டு இருந்தேன்" என்று தன்னை பற்றிய முன்னுரையை கூறிவிட்டு அதன் பின் நடந்தவைகளை அவனிடம் முழுதாக கூறினான்.

அதை எல்லாம் கேட்ட தேவ் என்ன சொல்வது என்று புரியாமல் இருந்தது சில விநாடிகளே...

அவளது இரு கைகளையும் தனது இரு கைகளால் பிடித்து கொண்டு, "இதுல உன் பக்கம் எந்த தப்பும் இருக்க மாறி எனக்கு தெரிலடா. அதே போல அந்த நேரத்துல அவங்களுக்கும் வேற வழி தெரிஞ்சி இருக்காது. அதனால தான் உன்ன உங்க மாமாவ கல்யாணம் பண்ணிக்க சொல்லி இருப்பாங்க. நம்ம அவங்களுக்கு சொல்லி புரிய வைக்கலாம்" என்றான் தேவ்.

"புரிஞ்சிப்பாங்களா??" ஏக்கமாய் வந்தது அவள் குரல்.

"கண்டிப்பா..." - தேவ்.

"ம்ம்ம்" என தலையை ஆட்டியவள், "ஆனா நான் திரும்ப வீட்டுக்கு போனா என்னை திட்ட மாட்டாங்களா??. நான் அவங்களுக்கு பெரிய துன்பத்தை தான கொடுத்துட்டு வந்து இருக்கேன். மாமா என்னை பத்தி என்ன நினைப்பாரு. எனக்கு எதும்னாலும் அவரு தான் முன்னாடி வந்து நிப்பாரு. இப்ப அவரையே வருத்தப்படுத்திட்டு வந்த மாறி ஒரே கில்டியா இருக்கு" என்று தனது மனதில் தோன்றியதை எல்லாம் பேசி கொண்டு இருந்தாள். இத்தனை நாள் இதை பற்றி பேச ஆள் இல்லாமல் மனதில் கிடந்ததை எல்லாம் அவனிடம் கொட்டி கொண்டு இருந்தாள்.

பொறுமையாக அனைத்தையும் கேட்டவன், அவளுக்கு ஆறுதல் சொல்லி பக்கத்தில் இருந்த ஒரு உணவு விடுதிக்டு அழைத்து சென்று சின்னதாய் உண்ண வைத்தான். பின் அவள் கவியின் ஸ்கூட்டியை எடுத்து கொண்டு தனது வீட்டுக்கு செல்ல துணையாய் தேவ் வந்தான்.

அவள் அவளது வீட்டிற்குள் சென்றவுடன் அந்த அப்பாரட்மென்டில் சிறிய பார்க் போன்ற இடத்தில் அமர்ந்து ஒருவருக்கு அழைப்பை விடுத்து அங்கே வர சொன்னான்.

வந்தது வேறு யாரும் அல்ல... மிதுன் தான்... அவன் தேவ்வுக்கு கீர்த்தியின் தொலை பேசி எண்ணை கொடுத்தது...

கீர்த்தி சொன்ன கதைகளை எல்லாம் முடிந்த அளவு சுருக்கமாய் தேவ் மிதுனிடம் சொன்னான்.

"எனக்கு என்னவோ கீர்த்தியோட மாமாகிட்ட முத பேசனா எதாவது முடிவு எடுக்கலாம் நினைக்கறேன்" என்று மிதுன் சொல்ல, "எனக்கும் அதே தான் தோணுச்சி" என்று அவனை ஆமோதித்தான் தேவ்.

"ஆனாலும் கீர்த்திக்கு உன் மேல ரொம்ப நம்பிக்கை போல..." என்று மித்து மெலிதான குரலில் சொன்னான்... இத்தனை மாதங்கள் தன்னுடன் இருந்தும் தன்னிடம் இதை எல்லாம் அவள் பகிர்ந்து கொள்ளவில்லையே என்று.

"ம்ம்ம்.." என்றவன், "ஆனா அவளுக்கு ரொம்ப தயக்கம்... யாருக்கு தெரிஞ்சாலும் அவளை கெட்டவனு நினைச்சிடுவாங்கனு ஒரு எண்ணம் போல" என்று சொன்னான் தேவ்.

"ஆனா உன்கிட்ட அப்படி தோணல போல" மீண்டும் மிதுன்.

"தெரியல... ரொம்ப நாளா மனசுல இருந்ததால ஒரு சந்தர்பம் வரும் போது சொல்லிட்டானு நினைக்கறேன்" என்றான் தேவ். புரிந்தது என்று தலையசைத்தான் மிதுன்.

அடுத்த ஏழாம் நாள் அந்த கிராமத்தின் சாலையில் தேவ்வின் கருநிற மகிழுந்து நகர்த்து கொண்டு இருந்தது கீர்த்தியின் வீட்டை நோக்கி.

அந்த பெரிய வீட்டின் காம்பவுண்டின் அருகில் காரை நிறுத்தி விட்டு இறங்கி உள்ளே நடந்தான் தேவ். சென்னை போல அங்கே வாட்ச் மேன் எல்லாம் இருப்பது இல்ல. அதனால் கேட்டை திறந்து அவனே உள் நுழைந்தான்.

அங்கே ஒரு இளம் பெண் மஞ்சள் நிற புடவை அணிந்து, குனிந்து முன்புறமாக எல்லா முடிகளையும் போட்டு துண்டை வைத்து தனது முடிகளை அடித்து காய வைத்து கொண்டு இருந்தாள்.

தேவ் போய், "ஹலோ... இங்க சரவண வேல்" என்று அவன் கேட்கும் போது தான் நிமிர்ந்து முடிகளை பின்புறமாக போட்டாள் அவள்... அழகாய் இருந்தாள் அவள்...

கீர்த்தி சொன்னவற்றில் இருந்து அவள் யார் என்று ஒருவாறு கணித்து விட்டான்... அவள்... தமிழரசி... சரவண வேலின் மனைவி...

கொடுப்பாள்...

இந்த அத்தியாயம் தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...


"உன்னில் இடம் கொடுப்பாயா??" - கருத்து திரி

நன்றி!!!

இங்ஙனம்
திரா ஆனந்த் 🍀
 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இடம் 17




ஒரு அழகிய மாலை வேளையில் அந்த ஆடிடோரியத்தில் பெண்கள் மட்டும் குழுமி இருந்தனர்.

மேடையில் அந்த பள்ளியின் தாளாளர், முதல்வர் இன்ன பிற பொருப்புகளில் இருப்பவர்களும் தங்களது உரையை நடத்தி கொண்டு இருந்தனர். ஆனால் அங்கே குழுமி இருந்த மாணவிகளோ தங்களுக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல என்ற விதத்தில் தங்களுக்குள் கிசுகிசுத்து கொண்டு இருந்தனர்.

அவர்கள் உரை எல்லாம் முடிய மேடையில் நடன நிகழ்ச்சி ஒன்று இரண்டு இருந்தது. அதற்கு பாடல்கள் போடப்பட மேடையில் அந்த மாணவிகள் ஆட கீழே அமர்ந்து இருந்த மாணவிகள் அனைவரும் கை மட்டும் தட்டி கொண்டு அவர்களது இருக்கையில் பசை போட்டார் போல ஒட்டி கொண்டு இருந்தனர்.

அப்படியே அரை மணி நேரம் கழிய அனைத்து முக்கிய பொருப்பில் இருப்பவர்களும் சென்று விட்டனர்.

"சரி... இப்போ நீங்க எல்லாம் கொண்டாடுங்க" என்று சொல்லி விட்டு அந்த பெண்கள் தங்கி இருக்கும் விடுதியின் வார்டனும் சென்று விட்டார்.

அதன் பின் குத்து பாட்டுகள் போடப்பட, அங்காங்க இருந்த மாணவிகள் அனைவரும் சிறு சிறு குழுக்களாய் மாறி அப்படி ஒரு ஆட்டம் போட்டு கொண்டு இருந்தனர். அங்கே தான் நம் நாயகி கீர்த்தியும் அவளது தோழிகளுடன் ஒரு குழுவாய் செம்ம ஆட்டம் போட்டு கொண்டு இருந்தாள்.

(தங்களுக்கு பிடித்த பாடல்களை இங்கே இட்டு நிரப்பி கொள்ளுமாறு எழுத்தாளரான என்னால் தாழ்மையாக கேட்டு கொள்ளப்படுகிறது).

கீர்த்தியும் அவளது தோழிகளும் பேசி வைத்து ஒரே போல் ஆடை அணிந்து இருந்தனர். ஏழு மணி முதல் எட்டு மணி வரை வியர்வை வழிய வழிய இடை விடாத அப்படி ஒரு ஆட்டம் போட்டு விட்டு, "சரி... வாங்க... சாப்பிட்டு வந்து மீதியை கண்டினியூ பண்ணலாம்" என்று அவர்களுள் ஒருத்தி அழைக்க எல்லாரும் சென்றனர்.

ஆடிடோரியத்தில் இருந்து வெளியே வர அங்கே தான் விளையாட்டு மைதானம் இருந்தது.

"ஏய்!!.. சாப்பாடு எல்லாம் பாஸ்கட் பால் கேர்ட்ல வச்சி இருக்காங்கலாம். வாங்க போலாம்" என்று ஒருத்தி சொல்ல அவளை தொடர்ந்து கீர்த்தியும் அவளது தோழிகளும் நடந்தனர்.

ஒரு வாரமாய் அவர்கள் தேர்ந்து எடுத்து கொடுத்த அசைவ உணவு வகைகள் அனைத்தும் இருக்க, தோழிகள் அனைவரும் சென்று அவர்களுக்கு வேண்டியவை அனைத்தையும் வாங்கி வந்து ஒரு திண்டில் அமர்ந்து பேசி கொண்டே உண்டு கொண்டு இருந்தனர்.

அப்படி என்ன அந்த நாள் என்று யோசிக்கிறீர்களா??... அன்று ஹாஸ்டல் டே... அது தான் இத்தனை ஆர்பாட்டம்... ஒவ்வொரு வருடமும் நடக்கும் இந்த விழா... ஆனால் இந்த வருடம் இவர்களுக்கு மிகவும் ஸ்பெஷலானது. ஏன்னென்றால் கீர்த்தி மற்றும் அவளது தோழர்களுக்கு இந்த வருடம் தான் கல்லூரி இறுதி ஆண்டு. நாளை முதல் ஸ்டெடி ஹாலிடேஸ் தொடங்குகிறது. அதன் பின் தேர்வுக்கு தான் வருவார்கள்.

வேண்டுமளவு உண்டு விட்டு அடுத்து ஐஸ்கீரிம், ப்ரூட் சாலட், பழச்சாறு எல்லாம் வைத்து இருக்கும் இடமான இன்டோர் கேம்ஸ் கோர்ட்டை அடைந்தனர். அதையும் உண்டு விட்டு மீண்டும் ஆடிடோரியம் சென்று விட்ட ஆட்டத்தை தொடர்ந்தனர்.

மணி பனிரெண்டு ஆக பாடல்கள் எல்லாம் நிறுத்தப்பட்டு விடுதிக்கு செல்ல சொன்னார்கள். அதை எல்லாம் கேட்கும் ரகமா அவர்கள், அப்போது தான் நமது தோழிகள் ட்ரெயின் ஓட்ட, தெரிந்தவர் தெரியாதவர், வேற டிபார்ட்மெண்ட், சீனியர், ஜுனியர் என அனைவரும் அதில் தொத்தி கொள்ள அந்த ஆடிடோரியத்தையே ஒரு ரவுணட் வந்தனர்.

பாடல் எல்லாம் நிறுத்தப்பட வேறு வழி இன்றி அனைவரும் விடுதிக்கு சென்றனர். ஆனாலும் போகும் வழி எங்கும் கத்தி கொண்டே சென்றனர்.

போன வாரம் தான் பாய்ஸ் ஹாஸ்டல் டே நடந்தது. ஆடிடோரியத்தில் இருந்து பாய்ஸ் ஹாஸ்டல் செல்ல கேர்ள்ஸ் ஹாஸ்டல் தாண்டி தான் செல்ல வேண்டும். அப்போது அவர்கள் போட்ட சத்தத்தை விட இவர்கள் சத்தம் அதிகமாக இருக்க வேண்டும் என்று தொண்டை வத்த கத்தி கொண்டே சென்றனர்.

கீர்த்தியும் அவளது தோழிகளும் அறைக்கு வந்தும் அமைதியாக இல்லாமல், தங்களது மொபைலில் பாடலை போட்டு ஆடி கொண்டு இருந்தனர். எல்லாம் முடித்து அவர்கள் உறங்க நேரம் அதிகாலை மூன்றை தாண்டி இருந்தது.

அனைத்து மாணவிகளும் இன்று அவர்களது வீட்டிற்கு செல்ல உள்ளனர். கொஞ்ச பேர் காலை ஒன்பது மணிக்கே கிளம்பி சென்று விட்டனர்.

நமது நாயகி தான் காலை பதினொன்றை மணி வரை உறங்கி கொண்டு இருந்தாள். அவளது அறையில் இருந்து மற்ற இருவரும் கிளம்பி விட்டனர். பக்கத்து அறையில் இருந்த மற்றொரு தோழி வந்து, "கீர்த்தி எழுந்திரு" என்று இவளை எழுப்பினாள்.

"ம்ம்ம்" என்று புரண்டு எழுந்து அவளை பார்க்க அவளும் தயார் ஆகி இருந்தாள் வீட்டிற்கு செல்ல...

"சீக்கிரம் போய் பல்லு விளக்கிட்டு வா. சாப்பிட போலாம்" என்றாள்.

"ஏய் உமா... ரெடி ஆகிட்டயா நீயும்??" - கீர்த்தி. உமா தலையசைக்க, "இவளுங்க எல்லாம் எப்ப டி எழுந்து கிளம்பனாங்க??" - கீர்த்தி.

"உன்ன எழுப்பனா நீ தான் எழுல... லேட் ஆன வெயில்ல போகனும்னு காலைல நேரமாவே கிளம்பிட்டாங்க. நான் உன்ன எழுப்பறேன் சொல்லிட்டேன்" என்றாள் அந்த உமா.

அதன் பின் கீர்த்தியும் ப்ரஷ் ஆகி வர இருவரும் சென்று உண்டு விட்டு வந்தனர். முக்கால்வாசி ஹாஸ்டல் காலி ஆகி இருந்தது. மீதம் இருந்தவர்கள் இப்போது கிளம்பி கொண்டு இருந்தனர்.

"கீர்த்தி... எப்போ கிளம்பற??" என்று கேட்டாள் உடன் இருந்த அவள்.

"ரெண்டு மணி கிட்ட... இப்ப எங்க ஊரு பஸ் இருக்காது. அங்க போய் பஸ் ஸ்டாப்ல உட்கார இங்க இருந்துட்டே போவேன்" என்றாள் கீர்த்தி.

"சரிடி... நான் இன்னும் அரை மணி நேரத்துல கிளம்பறேன்" என்றாள் உமா.

கிளம்பி வந்த உமா, "ஏய் கீர்த்தி... காலேஜ் பஸ் கரெக்ட்டா ரெண்டு மணி வரை தான் பஸ் ஸ்டாப்புக்கு போகுமாம். அதனால நீ கொஞ்சம் சீக்கிரமே கிளம்பிக்கோ" என்று சொல்லி விட்டு அவளுக்கு பாய் சொல்லி விட்டு கிளம்பினாள் உமா.

அதன் பின் கீர்த்தியும் கிளம்பி தனது ஊரை வந்து அடைந்தாள். அப்போது மணி இரவு எட்டு இருக்கும். அவளை அழைத்து செல்ல சரவண வேல் வந்து இருந்தான்.

"மாமா எப்படி இருக்கீங்க??" - கீர்த்தி.

"நல்லா இருக்கேன். நீ??" - சரவணா

"சூப்பர் மாமா" என்று பேசி கொண்டே அவர்களது வீட்டை அடைந்தனர்.

அற்புதத்தின் வீடு சரவணாவின் வீட்டிற்கு அருகில் தான் இருக்கிறது. அவளை அங்கே விட்டு விட்டு தன் இல்லம் சென்றான் சரவணா.

அற்புதமும் சண்முகமும் வாசலிலே நின்று கொண்டு இருந்தனர். தனது உடைமைகளை எல்லாம் வீட்டினுள்ளே வைத்து கொண்டே தனது பெற்றோர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லி கொண்டு இருந்தாள்.

"ம்ம்ம்... மா என்ன சோறு?? ரொம்ப பசிக்குது" என்றாள் கீர்த்தி.

"தோசை" என்று அவளது அம்மா சொல்ல, "ஆரஞ்சு சட்னியா??" என்று அவள் கேட்டாள்.

அவள் அம்மா தலையசைக்க, "ஐஐஐ... சூப்பர்" என்று ப்ரஷ் ஆக சென்றாள்.

தக்காளி சட்னியை தான் அவள் ஆரஞ்சு சட்னி என்கிறாள்... அதன் நிறத்தின் காரணமாக.

அவள் வந்ததும் தோசை சுட்டு போட போட கணக்கு வழக்கில்லாம் உள்ளே சென்று கொண்டு இருந்தது. ஒரு கட்டத்தில் போதும்மா என்ற சொல்லுடன் நிறுத்தி கொண்டாள்.

சிறிது நேர பேச்சிற்கு பின் மூவரும் சென்று உறங்கி விட்டனர்.

மீண்டும் கீர்த்தி எழுந்தது, அடுத்த நாள் காலை தனது மாமாவின் பசங்களின் குரல் வண்ணத்தால் தான். அதாவது அவளது தாயின் முதல் தம்பி சங்கரின் பிள்ளைகள்.

"அக்கா... எந்திரி... சீக்கிரம் வா. வெளிய போலாம் சொன்னாங்க" என்று அவளை எழுப்பி கொண்டு இருந்தனர்.

"ஆன்... எழுந்துட்டேன்... எழுந்துட்டேன்டா..." என்று சொல்லி கொண்டே எழுந்தாள். அவள் எழும் வரை அவர்கள் அமைதியாய் இருக்க போவதில்லை என்று அவளுக்கு தெரியும்.

இன்று அவர்கள் அனைவரும் துணி எடுக்க செல்ல உள்ளார்கள். அவளது தாய் அற்புதத்தின் கடைசி தம்பி.. தங்க கம்பி... சரவண வேலின் திருமணத்திற்காக...

இங்கே இவர்கள் வீட்டில் இருந்து அற்புதம், சரவண வேல், சங்கரின் மனைவி, சரவணாவின் தாய் சித்தம்மாள், கீர்த்தி மற்றும் சங்கரின் மகன்கள் இருவர் கிளம்பி இருந்தனர். பெண் வீட்டாரின் பக்கம் பவித்ரா மணபெண், அவளது தாய், தந்தை மற்றும் சித்தி கிளம்பி இருந்தனர்.

பவித்ரா அங்கே வந்து பெரிதாக இவர்கள் குடும்பத்தில் கலந்து கொள்ளவில்லை. அவள் தாயுடன் மட்டும் பேசி கொண்டு இருந்தாள். கீர்த்தி இரு முறை பேச முயற்சித்து விட்டு அமைதியாகி விட்டாள்... புதிதாய் பேசுபவர்களிடம் பேச கூச்சம் போல்... எங்க போய்ட போறாங்க நம்ம வீட்டுக்கு தான வரனும் என நினைத்து கொண்டாள்.

இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நடக்க உள்ளது. கீர்த்தி இறுதி தேர்வுகள் முடிந்த மூன்றாம் நாள்.

பவித்ராவை பெண் பார்க்க செல்லும் போதும் கீர்த்தி கல்லூரியில் இருந்ததால் அவளை புகைப்படத்தில் தான் பார்த்தாள். நேரில் பார்க்கவும் அழகாய் தான் இருந்தாள். ஆனால் பேச்சு மட்டும் வைத்து கொள்ளவில்லை இவர்கள் குடும்பத்தை சார்ந்தவர்களுடன்.

அவளுக்கு தான் விருப்பமில்லையே... இந்த திருமணத்தில்... அவளது பெற்றவர்களிடம் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. அதனால் பவித்ரா ஒரு ப்ளான் செய்து விட்டாள்.

"அம்மா... எனக்கு இந்த டிரஸ் தான் வேணும்" என்று தனது தாயிடம் ஒன்றை எடுத்து காட்டினாள் கீர்த்தி.

"இது வேணா எடுடி. வேற எடு" அற்புதம் பதிலுக்கு கூற, பாவமாய் தனது மாமனை பார்த்தாள் கீர்த்தி.

"ஏன்கா இதுவே எடுத்துக்கட்டுமே" அவளுக்கு சாதகமாய் சரவணா பேச, "டேய்... கருப்பு வேண்டாமுனு தான் சொல்லறேன்" என்றார் அற்புதம்.

"சரி விடு" என்று கீர்த்தியிடம் சொன்னவன், "இந்த மாடல்ல வேற கலர் இருந்தா எடுத்து தாங்க" என்று கடை சிப்பந்தியிடம் கேட்டான்.

"அது ஒரே கலர் இருக்குங்க. மத்த எல்லாம் தீந்திடுச்சி... வர இரண்டு நாள் ஆகும்" என்றார் அவர் பதிலுக்கு.

மீண்டும் தனது தேடுதல் வேட்டையை தொடங்கி, கரும்பச்சை நிறத்தில் ஒரு ஆடையை எடுத்து முடித்தாள் கீர்த்தி. மேலும் ஒரு புடவையும் இன்க் ப்ளூ நிறத்தில் எடுத்து முடித்தாள்.

"மாமா... நாங்க கேண்டீன் போறோம். நீங்க எடுத்து முடிச்சிட்டு கால் பண்ணுங்க. அம்மா எப்ப கேட்டாலும் இப்ப தான் போனேன் சொல்லுங்க" என்று தனது சரவணாவிடம் சொல்லி விட்டு கொஞ்சம் காசையும் வாங்கி கொண்டு தனது பெரிய மாமா சங்கரின் பசங்களுடன் சென்று விட்டாள்.

சரவணாவின் திருமணத்தை நினைத்து அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க, அவர்கள் பார்த்த பெண்ணுடன் அது நடக்கவில்லை.

ஆனால் எல்லோரும் ஆசைப்பட்டது போல் கீர்த்தியுடன் நடக்காமல் தமிழரசியுடன் நடந்தது விதியின் விசித்திரமான விளையாட்டு என்று தான் சொல்ல வேண்டும்.

கொடுப்பாள்...

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே...

"உன்னில் இடம் கொடுப்பாயா??" - கருத்து திரி

நன்றி!!!

இங்ஙனம்
திரா ஆனந்த் 🍀
 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இடம் 18

கீர்த்தியின் ஸ்டெடி ஹாலிடேஸில் படிப்பதை தவிர, தனது மாமனின் கல்யாணத்திற்கு தேவையான மற்ற அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு, தனது மாமன் பிள்ளைகளுடன் ஆட்டம் போட்டு விட்டு மீண்டும் தனது கல்லூரி விடுதிக்கு சென்றாள் தனது இறுதி தேர்வுக்காக...

தேர்வு நடந்த ஒன்றரை வாரமும் எந்த கொண்டாட்டமும் இல்லாமல், ஷிப்ட் போட்டு படிப்பதிலே கழிந்தது.

"நீ நைட் எப்ப படுப்ப" - ஒருத்தி.

"ஒரு மணிக்கு மேல" - மற்றொருத்தி.

"அப்ப நீ படுக்கும் போது என்ன எழுப்பி விட்டுட்டு படு. நான் இப்ப போய் தூங்கறேன்" - முதலாமவள்.

"சரி" என்று விட்டு படிக்க அமர்ந்தாள் அவள்.

தேர்வு எழுதி விட்டு வந்த அன்று மதியம் படுத்து தூங்கி விட்டு மீண்டும் இரவில் படிப்பது என்றே சென்றது.

ஆரம்பித்த தடமும் தெரியாமல் முடிந்த மாயமும் புரியாமல் கீர்த்தியின் கல்லூரி வாழ்க்கை முடிந்து விட்டது.

அன்று இறுதி தேர்வு முடிந்த நாள் மட்டுமில்லாமல் மொத்தமாக விடுதியை காலி செய்து கிளம்பும் நாள்...

இன்று ஒரு இரவு தங்குபவர்கள் தங்கலாம்... ஆனால் அடுத்த நாள் காலை உணவு இங்கு சமைக்கப்பட மாட்டாது. அதே போல் நாளை காலை பதினொரு அளவில் விடுதி இழுத்து மூடப்படும் என்பதால் அனைவரும் இன்றே கிளம்ப உள்ளனர்... ஒன்றிரண்டு நபர்களை தவிர... ஆனால் நம் நாயகியின் தோழிகள் அனைவரும் இன்றே கிளம்புகின்றனர்.

எல்லோரின் பெற்றோரும் வந்து இருக்க, "அம்மா நல்லா இருக்கீங்களா??", "அப்பா எப்படி இருக்கீங்க??", "அண்ணா அக்கா பாப்பா தம்பி எல்லாம் நல்லா இருக்காங்களா??" என்று தனது தோழிகளின் உறவுகளை பற்றி கேட்டு கொண்டு இருந்தனர்.

கீர்த்தியையும் அழைத்து செல்ல சங்கர் வந்து இருந்தான். கல்யாண மாப்பிள்ளை என்பதால் சரவணா வரவில்லை. இல்லையென்றால் அவளை அழைத்து செல்ல அவன் தான் வந்து இருப்பான்.

தனது பெட்டிகளை எடுத்து கொண்டு கீர்த்தி மூன்றாம் தளத்தில் இருந்து கீழே இறங்க அவளது தோழிகளும் அவளை உடமைகளை எடுத்து வந்து காரில் அருகில் வைத்தனர். ஒரே முறையில் அனைத்தும் காரில் ஏறிவிட்டது.

கீர்த்தியும் மற்றவர்களின் உடமைகளை எடுத்து வந்து கிரவுண்ட் ப்ளோரில் வைத்து விட்டு, "அடிக்கடி போன் பண்ணுங்கடி", "வருடம் ஒரு டைம்மாது நம்ம பாத்துடனும்", "எங்க மாமாக்கு இரண்டு நாளில் கல்யாணம்... முடிஞ்சா வந்திடுங்கடி" என்று சில பல நிறைவேறா பொய் வாக்குறுதிகளை சொல்லி கொண்டு கிளம்பினாள்.

வீட்டிற்கு வந்த கீர்த்தியை கண்டு கொள்ள தான் ஆள் இல்லை. அடுத்த நாள் மண்டபத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் அனைவரும் பரபரப்பாக சுற்றி கொண்டு இருந்தனர்.

அந்த நாளும் கடந்து அடுத்த நாள் கல்யாணம் இன்று நிச்சயதார்த்தம் என்று அளவில் வந்து இருந்தது காலம்.

பவித்ரா பேச தெரியாத பொம்மை போல் பதுமையாய் அலங்கரிக்கப்பட்டு மேடையில் அமர்ந்து இருந்தாள். சரவண வேலுக்கு இது பல நாட்கள் தள்ளி நடக்கும் திருமணம் என்பதால் மகிழ்ச்சி பொங்க அமர்ந்து இருந்தான்.

ஆம்... அவனுக்கு தற்போது வயது முப்பத்தி இரண்டு... ஐந்து வருடமாய் பெண் தேடி கொண்டு இருந்தனர். இப்போது தான் அமைந்து இருக்கிறது.

epi18.jpeg
தமிழரசி கீர்த்தியிடம், "ஏன்டி உங்க மாமாவுக்கு மூஞ்சில ஒரு ஒளி வட்டம் தெரியுற மாறி இல்ல" என்று கேட்டாள்.

கீர்த்தியும், "ஆமா கா... அது தான் கல்யாண கலையாம்..." என்று சிரிப்புடன் கூறி விட்டு, "ஆமா அது என்ன உங்க மாமா... உனக்கு மாமா இல்லையா??" என்று தனது பாட்டியின் அக்காவின் பேத்தியிடம் கேட்டாள் கீர்த்தி.

"ஆமா... ஆமா... மாமா தான்" என்று ஒரு மாதிரி குரலில் கூறியவள், அடுத்து யாரோ கூப்பிட அவர்களிடம் பேச சென்று விட்டாள்.

நிச்சய பத்திரிக்கை வாசித்து முடிக்க, எல்லோரும் உணவு உண்ண பந்தி நடக்கும் இடத்திற்கு சென்றனர்.

அங்கே ஏற்கனவே பந்தி நடந்து கொண்டு இருக்க, கீர்த்தியும் தமிழும் அதில் ஒரு ஆளாய் இருந்தனர்.

"அந்த வரிசைக்கு தண்ணி ஊத்திடு பிரியா" என்று தமிழ் சொல்ல, "சரி தமிழ்" என்று கீர்த்தியும் அங்கு செல்ல, மற்றொரு வரிசையில் ரசம் கேட்க அந்த வாலியை வைத்து இருந்தவரிடம் ஒருவர் சொல்ல என்று பந்தி ஆர்பாட்டமாக இருந்தது.

சிறிது நேரத்தில் பொண்ணு மாப்பிள்ளை வந்து உண்ண அவர்களுக்கு பரிமாறினார்.

நாளை காலை ஆறு மணி போல் முகூர்த்தம் என்பதால், பொண்ணுக்கு நான்கறை மணிக்கே அலங்காரம் செய்ய ஆரம்பித்தது விடுவர் என்பதாலும் அனைவரையும் சீக்கிரம் உறங்க சொன்னார்கள். ஆனால் அது எல்லாம் மணபெண்ணுக்கு தான். மற்றவர்களுக்கு இல்லை என்பதால் மற்றவர்கள் அனைவரும் ஒரு மணி வரை நாயம் அடித்து விட்டு பிறகு தான் உறங்கினர்.

அவர்கள் உறங்க தான் காத்திருந்தது போல் பவித்ரா அவளது காதலனுடன் சென்று விட்டாள்... அவளது வளமான வாழ்வை நோக்கி. ஆனால் இங்கே இருப்பவர்களின் வாழ்வு எப்படி இருக்கும் என்று அவள் கவலைப்படவில்லை. தன்னை பற்றி யோசிக்காதவர்களை பற்றி தான் ஏன் யோசிக்க வேண்டும் என்று நினைத்தாளோ!!! சென்று விட்டாள்.

மணி மூன்றரை ஆக ஒவ்வொருவராக எழுந்தனர். அடுத்து மணப்பெண்ணை எழுப்ப சென்ற பவித்ராவின் தாய்க்கு அவள் கண்ணில் அகப்படவில்லை. சிறிது சிறிதாக இந்த செய்தி கசிந்து அனைவரையும் அடைந்தது.

ஒரு பக்கம் மாப்பிள்ளை வீட்டின் பக்கம் இருந்த சிலர் பெண் வீட்டாரை திட்டி கொண்டு இருக்க, ஒரு பக்கம் மாப்பிள்ளை வீட்டாரையும் மாப்பிள்ளையை பற்றியும் சிலர் புரளி பேசி கொண்டு இருந்தனர்.

சரவணாவின் குடும்பம் மட்டும் அடுத்து என்ன செய்வது என்ற யோசனையில் இருந்தது. இந்த மாதிரி ஒரு சூழலில் காலம் காலமாய் என்ன செய்வார்கள்?! அதை தான் இவர்களும் செய்ய முடிவெடுத்தனர். அது தான் இப்போது சொந்தத்தில் கட்டி கொள்ளும் முறை உள்ள பெண்ணை பார்த்து இதே முகூர்த்தம் மணம் முடித்து வைப்பது என்று.

அப்படி கட்டி கொள்ளும் முறை உள்ள பெண்களை கணக்கு எடுக்க, முதல் ஆளாய் இருந்தது நம் நாயகி கீர்த்தி பிரியம்வதா தான். சொந்த அக்கா மகள் வேறு.

கீர்த்தியும், தமிழும் ஒரு அறையில் இருக்க அங்கே வந்த அற்புதம், "பிரியா... மாமாவ நீ கல்யாணம் பண்ணிக்கோடா இந்த முகூர்த்ததிலே" என்று கேட்டார்.

ஒரு முழு நிமிடம் உறைந்து போய் நின்று விட்டாள் நம் நாயகி.

குரல் மெதுவாய் இருந்தாலும் அது அவளிடம் சம்மதம் கேட்பது போல் இல்லை.

ஆழ்ந்த மூச்சு எடுத்து கொண்டு, "ம்மா... இல்லமா... மாமாவ என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது மா" என்று தனது எண்ணத்தை தெளிவாக கூறினாள் கீர்த்தி.

"ஏய்... ஏன்டி??. இப்போவே அவனை பத்தி எல்லாம் தப்பு தப்பா பேச ஆரம்பிச்சிட்டாங்க. இப்ப கல்யாணம் நடக்கலனா இனி எப்பவும் நடக்காதோனு பயமா இருக்கு. நம்ம குடும்பத்தை பத்தி என்ன நினைப்பாங்க. உன் மாமன நினைச்சி பாரு. அஞ்சு வருடமா தேடி இப்ப தான் அமைச்சது. அதுவும் இப்படி ஆகி போச்சி. இதுக்கே அவன் ரொம்ப வருத்தத்தில் இருக்கான். இது அப்பறம் கல்யாணம் நடக்குமா நடக்காதானு ஒரு கேள்வி குறி வந்தா பாவம்டி" என்று கண்ணீர் கண்களுடன் கூறினார்.

"ம்மா... புரியாம பேசாதமா... மாமாவே இத ஏத்துக்க மாட்டாரு" என்று கீர்த்தி கூற, "அவன் சரின்னு சொல்லிட்டான்" என்று அடுத்த குண்டை தூக்கி போட்டார் அற்புதம்.

இந்த செய்தியை கீர்த்தியால் நம்புவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

தனது மாமாவா இப்படி சொன்னார்??. சரவணா மாமாவா?? ஒத்துக்கிட்டாங்களா?? எப்படி??

மீண்டும் ஒரு உறைநிலையை கடந்து இயல்பு நிலைக்கு திரும்பி, "ம்மா என்னால நம்ப முடியல. மாமா சரின்னு சொல்லி இருக்க மாட்டாங்க" என்றாள் மீண்டும் மீண்டும் அதையே.

"ஏய்!!! நான் சொல்லுறது உனக்கு புரியுதா இல்லையா!!! அவன் ஒத்துக்கிட்டான்" என்றார் அற்புதம் சிறிது சத்தமாக.

"இல்லமா" என்று திரும்ப கீர்த்தி ஆரம்பிக்க, "ஏய்" என்ற அவரின் சத்தத்தில் அது அடங்கியது.

"இப்ப அவனை நீ கல்யாணம் பண்ணிக்கற அவ்வளவு தான்" என்றார்.

அவரின் சத்தத்தில் அங்கு வந்து இருந்தார்கள்... கீர்த்தியின் தந்தை, அவளது முதல் மாமனின் மனைவி, அவளது பெரியம்மா மற்றும் அவரது கணவன், அவளது அக்கா... யாரும் அற்புதத்தின் வார்த்தைக்கு எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை. அதிலே புரிந்து கொண்டாள் அவர்களது எண்ணமும் அது தான் என்று.

ஒரு திடமாக முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருந்தாள் கீர்த்தி.

சில நிமிட அமைதிக்கு பிறகு கண்களை மூடி கைகளை இறுக்க மூடி கொண்டே, "எனக்கு இந்த கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்ல. என்னால மாமாவ கல்யாணம் பண்ணிக்க முடியாது" என்று தெளிவாக பிசிறில்லாத குரலில் அனைவருக்கும் பொதுவாய் கூறி முடித்தாள் கீர்த்தி பிரியம்வதா.

அவளது குடும்பத்தில் யாரும் கீர்த்தியிடம் இருந்து இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லை என்பதை அவர்கள் முகத்தில் இருந்தே புரிந்து கொள்ளலாம். ஏன்னென்றால் கீர்த்தி அவளது குடும்பத்தின் மீது வைத்து இருந்த பாசம் அனைவரும் அறிந்ததே. அவள் இப்படி சொன்னதை அவர்களால் ஏற்று கொள்ளவே முடியவில்லை.

"இவ்வளவு சொல்லியும் உனக்கு மனசு வரலையா?? நம்ம குடும்பம் மானம் மரியாத... உன் மாமன் மானம் மரியாத... அவன் மனசு... அவன் எவ்வளவு வருத்தப்படுவான்னு எதையுமே புரிஞ்சிக்காம பேசற இல்ல" என்று அற்புதம் தனது ஆதங்கத்தை அழுகையுடன் சொல்லி முடித்தார்.

எல்லாருமே கீர்த்தியின் மீது சிறிது கோபத்துடன் தான் இருந்தனர்.

கீர்த்தி பெரியம்மா, "என் புள்ளக்கி கல்யாணம் ஆகாம இருந்து இருந்தா நானே கூட பண்ணி வச்சி இருப்பேன். உன்ன தான அவன் அவ்வளவு பாசமா அப்படி பாத்துக்கிட்டான். இப்ப அவனையே தூக்கி எறிஞ்சிட்ட இல்ல" அவர் ஒரு புறம் புலம்ப...

கீர்த்தியின் அப்பாவோ எந்த பக்கம் யாருக்கு சாதகமாக பேச என்று தெரியாமல் முழித்து கொண்டு இருந்தார்.

அவருக்கு இருவருமே முக்கியம்... பிள்ளை போல் இருந்த சரவணாவும், தனது பிள்ளையும்... இருவருமே முக்கியம். ஆனால் அவரிடம் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது அவள் ஒப்பு கொள்வாள் என்று. அது இல்லை என்றவுடன் தனது பிள்ளையை தான் சரியாக கணிக்கவில்லையோ என்று ஒரு அதிருப்தி இருந்தது.

அதன் பின் கீர்த்தி சொன்னதை கேட்ட யாரும் அவளை வற்புறுத்தவில்லை... அதே போல் அவளிடம் முகம் கொடுத்தும் பேசவில்லை.

கொடுப்பாள்...

இன்னும் ஒரு அத்தியாயத்தில் flash back முடிந்து விடும்.

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே...

"உன்னில் இடம் கொடுப்பாயா??" - கருத்து திரி

நன்றி!!!

இங்ஙனம்
திரா ஆனந்த் 🍀
 
  • Like
Reactions: Ums

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இடம் 19

யார் என்ன சொன்னாலும் அதை எல்லாம் கேட்டு கீர்த்தி தன் நிலையில் இருந்து மாறாமல் இருந்தாள்.

"நீங்க சொல்லறது எல்லாம் எனக்கு புரியுது. அதுக்காக மாமாவ போய்... என்னால முடியாது" என்று கீர்த்தி அதையே மீண்டும் மீண்டும் கூறி அவர்களது இரத்த அழுத்தத்தை அதிகரித்து அவளின் மேல் அவர்களுக்கு இருந்த பாசத்தின் அளவை குறைத்து கொண்டு இருந்தாள் கீர்த்தி.

அற்புதம் அனைவரிடமும் பொதுவாய் "நீங்க எல்லாம் வெளியே போங்க. நான் அவகிட்ட தனியா பேசி சம்மதிக்க வைக்க பாக்கிறேன்" என்று கூறி அனைவரையும் வெளியே அனுப்பி வைத்தார்.

அனைவரையும் வெளியேற்றியது கீர்த்திக்கும் சிறிது நிம்மதியாக இருந்தது... தனது மன உணர்வுகளை தாயிடம் சொல்லலாம். சொன்னால் புரிந்து கொள்வார் என்று நினைத்து கொண்டு.

கதவை அடைத்த அற்புதம் ஏதோ கூற வர, அதற்கு முன்னே அதை தடுத்து மீண்டும் கீர்த்தியே பேசினாள்.

"அம்மா... நான் முதல்ல என்னோட கருத்தை சொல்லிடறேன். அப்பறம் நீ சொல்லு. நான் இப்போ பேசறது உனக்கு புடிக்காம கூட இருக்கலாம். ஆனா இது தான் மா உண்மை. மாமாவ நான் இப்ப கல்யாணம் பண்ணா... அது இந்த ஒரு நிமிடத்தோட முடிஞ்சுடாது மா. இன்னும் ஒரு தலைமுறைய தாண்டி நாங்க வாழனும். அதுல அன்பு பாசம் அக்கறை இது எல்லாம் இருக்கனும் தான்.அது எல்லாம் கண்டிப்பா எனக்கு மாமாகிட்ட கிடைக்கும் தான். அத யார் வேணா கொடுக்கலாம் மா. ஆனா அது மட்டும் போதாது மா... இந்த வயதுக்கான சில உணர்வுகளும் இருக்கனும் மா. அந்த உணர்வுகள் எல்லாம் எனக்கு மாமாட்ட வராது மா. புரிஞ்சிக்கோ மா. கணவன் மனைவி உறவுனா எப்படி இருக்கனும்னு தெரியாத சின்ன பொண்ணு இல்லமா நான். என்கிட்ட மாமாவால அந்த உணர்வுகள் கண்டிப்பா வராது. கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வைக்கலாம். ஆனா வாழ வைக்க முடியாது மா. அப்படியே வாழ்ந்தாலும் அதுல திருப்தி இருக்காது" என்று தன் உணர்வுகளை சொல்லி முடித்தாள்.

'அப்போ எல்லாம் பேசி பழகி அப்பறம் புடிச்சவங்க மட்டும் தான் கல்யாணம் பண்ணிக்கறாங்களா??' என்று கேள்வி அவர்கள் மனதில் இருப்பதை அவரின் முக பாவத்தில் இருந்தே புரிந்து கொண்டவள் அதற்கான பதிலையும் கூறினாள்.

"இப்ப கூட எனக்கு நீங்க யாரை மாப்பிள்ளையா பாத்தாலும் நான் கல்யாணம் பண்ணிக்கறேன். அவங்க மேல எனக்கு எந்த ஒரு அபிப்பிராயமும் இருக்காது மா. அதை ஈர்ப்பாவோ காதலாவோ என்னால மாத்த முடியும் மா. ஆனா மாமாகிட்ட அது முடியாது மா. அவரு நம்ம மாமா மா" என்றாள்.

"ஏய்!!!. எல்லாம் கல்யாணம் ஆனா சரியா போகிடும்டி" என்று அற்புதம் மீண்டும் தன் எண்ணத்திலே குறியாக இருந்தார். அவள் சொன்னதை அவர் காதில் வாங்கி மனதில் ஏற்றாரா என்று தெரியவில்லை.

epi19_1.jpeg

அதற்கு மேல் அவருக்கு புரிய வைக்க முடியாத கீர்த்தி, "அம்மா இத நல்லா புரிஞ்சிக்கோ மா. நீ என் கைய புடிச்சா எப்படி எனக்கு எந்த உணர்வும் வராதோ.. அது மாதிரி தான் மாமா என் கைய புடிச்சாலும் எனக்கு எந்த உணர்வும் வராது" என்று கூறியவள், "இதுக்கு மேல எப்படி சொல்லி புரிய வைக்கிறதுனு எனக்கு தெரில மா. நீ என்னை என்ன வேணா சொல்லிக்கோ!! எப்படி வேணா நினைச்சிக்கோ!!. என்னால மாமவ கல்யாணம் பண்ணிக்க முடியாது. முடியவே முடியாது." என்று தீர்மானமான பதிலை கூறி விட்டு அந்த அறையிலே ஒரு மூலையில் சென்று அமர்ந்து விட்டாள்.

அவள் சொன்னது புரிந்தாலும், அதை ஏற்று கொள்ள தான் முடியவில்லை அற்புதத்திற்கு. ஏனென்றால் அவர் எண்ணம் அது தான் கல்யாணம் நடந்தால் அனைத்தும் சரியாகிவிடும். இயல்பான குடும்ப வாழ்க்கை சாத்தியப்படும். நம் ஊரில் முக்கால்வாசி பெரியவர்கள் இப்படி தான் நினைத்து கொண்டு இருக்கின்றனர். மீதியில் சிறியவர்கள் தங்கள் எண்ணங்களை பெற்றவர்களிடம் தெளிவாய் எடுத்துரைக்க தெரியாமல் இருக்கின்றனர்.

வெளியே வந்த அற்புதம், "அவ முடியாதுனு சொல்லிட்டா". ஒரு வாக்கியம் தான் அதற்கு மேல் அவர் பேசவில்லை. பேச முடியவில்லை. அடுத்து என்ன சொல்வது செய்வது என்றும் தெரியவில்லை.

அதன் பின் யாரும் அவளிடம் எதுவும் கேட்கவில்லை. முகம் கொடுத்தும் பேசவில்லை.

ஆனால் அடுத்து யாரிடம் கேட்க என்றும் புரியவில்லை. சொந்த அக்கா மகளே முடியாது என்று சொல்லி விட்டாள். மற்றவர்கள் எவ்வாறு ஒப்பு கொள்வர் என்ற பயமே அனைவருக்கும் முதன்மையாய் இருந்தது.

கீர்த்தியின் பெரியம்மா மீண்டும் மீண்டும் அவளை குற்றம் சொல்லி வசை பாடி கொண்டு இருந்தார். அப்படி பார்த்தால் இவர் ஏன் வெளியே மாப்பிள்ளை பார்த்து இருக்கனும். சரவணனுக்கே தன் பெண்ணை கட்டி இருக்கலாமே... ஆனால் இதை சொல்லி மேலும் ஒரு பிரச்சனையை வளர்க்க விரும்பவில்லையோ அல்லது இந்த மாறி ஒரு விசயம் இருப்பது அவர்களுக்கு அப்போது தோன்றவில்லையோ அது அங்கே உள்ளவர்களுக்கே வெளிச்சம்.

ஆனால் இப்போது அவர்கள் குடும்பத்தில் பவித்ராவை பற்றிய பேச்சு கூட குறைந்து கீர்த்தி பற்றிய பேச்சே மிகுந்து இருந்தது.

சண்முக சுந்தரம் என்ன சொல்வது அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தவிக்க, சித்தம்மாள் ஒரு புறம் புலம்ப மூக்கை உறிஞ்சி அழுது கொண்டு இருந்தார்.

அந்நேரம் அங்கு வந்த தமிழரசியின் அப்பா சித்தமாளிடம், "அத்த... ஏன் வருத்தப்படுறீங்க??. தமிழ சரவணனுக்கு கல்யாணம் பண்ண எனக்கு முழு சம்மதம்" என்று கூறினார்.

எல்லோரும் மகிழ்ச்சியாக அவரை பார்க்க அற்புதம் மட்டும், "தமிழுக்கு அதுல சம்மதமா மாமா??" என்று கேட்டார்.

கீர்த்தியிடம் பேசியதில் இருந்து, ஏனோ தமிழின் சம்மதமும் இதற்கு முக்கியம் என அவருக்கு தோன்றி விட்டது. இந்த ஒரு வகையிலாவது அவள் கருத்து ஏற்று கொள்ளப்பட்டதே... அதுவே மகிழ்ச்சி தான்.

அற்புதத்தின் அக்கா அவளை முறைக்க அதை கண்டு கொள்ளாமல் அற்புதம் அவரையே பார்க்க, "ம்ம்... சம்மதம் சொல்லிட்டா" என்றார். தமிழும் தனது தலையை குனிந்து கொண்டே ஆம் என்பது போல் ஆட்டி இருக்க, எல்லோரும் இப்போது மீண்டும் மீண்ட மகிழ்ச்சியுடன் தமிழுக்கும் சரவணனுக்குமான திருமணத்தை நடத்தினர்.

அதில் சரவணா மற்றும் தமிழ் இருவருமே ஏனோ தானோ என்று தான் பங்கேற்றனர் என்பது ஒரு புறம் இருந்தாலும், வந்திருந்த உறவினர்களும் சிறு முணுமுணுப்பான பேச்சுடன் இருந்தாலும், அதை யாரும் பெரிதாய் கண்டு கொள்ளவில்லை. தற்போது திருமணம் குறித்த நேரத்தில் நடந்து விட்டது என்பது மட்டுமே அவர்களுக்கு போதுமானதாக இருந்தது.

வீட்டிற்கு அனைவரும் வந்து இருக்க, கீர்த்தி என்ற ஒரு உயிர் அங்கு இருப்பதை போல் யாரும் கண்டு கொள்ளவில்லை.

"ஆர்த்தி கரச்சி எடுத்துட்டு வாங்க" என்று ஒருவர் சொல்ல, கீர்த்தியின் பெரியம்மா பெண் மற்றும் இருவர் இணைந்து எடுத்து வந்தனர்.

கீர்த்தியை யாரும் கண்டு கொள்ளவில்லை என்பது கூட அவளுக்கு பெரிதாய் தெரியவில்லை. தனது மாமாவின் திருமணத்தை அவள் எவ்வாறு மகிழ வேண்டும் என்று இருந்த கற்பனைகள் அனைத்தும் வீணாய் போனது தான் அவளுக்கு கவலையாய் இருந்தது. அதற்கு கவலைப்படும் அளவிற்கு தனக்கு தகுதி உள்ளதா?? என்ற எண்ணமும் வராமல் இல்லை அவளுக்கு.

கீர்த்தி சரவணாவின் முகத்தையே தான் பார்த்து கொண்டு இருந்தாள். அவன் இவள் பக்கம் திருப்பவும் இல்லை. அவளிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. யார் என்ன சொன்னாலும் மாமா தன்னை புரிந்து கொள்வார் என்று இருந்த கீர்த்தியின் நம்பிக்கை தகர்ந்தது.

epi19.jpeg

அந்த நாள் சில சடங்கு சம்பர்தாயங்களுடன் கழிந்தது.

அதன் பின் வீட்டில் அனைவரும் முன்பும் சுற்றுவதை குறைத்து கொண்டாள். எந்நேரமும் தனது அறையிலே இருந்தாள். தனது முதல் மாமாவின் பசங்க மட்டும் அவ்வபோது வந்து அவளிடம் பேசி செல்வார்கள். தமிழ் அவளிடம் பேச நினைத்தாலும் ஆள் மாத்தி ஆள் அவளுடன் இருப்பதால் அவளால் அடிக்கடி கீர்த்தியிடம் சென்று பேச முடியவில்லை. ஆனால் இந்த திருமண பரபரப்பு குறைந்தவுடன் முடிந்தளவு நேரம் கிடைக்கும் போது சென்று வருவாள்.

அப்படியே ஒரு மாதம் செல்ல அவளுக்கு அவள் கேப்பஸ்ஸில் தேர்வான கம்பெனியில் இருந்து வேலைக்கு வந்து சேர்ந்து கொள்ளுமாறு மெயில் வந்தது. அதை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்ல சென்றாள் சரவணாவின் வீட்டுக்கு.

இப்போது எல்லாம் இரவு நேரம் தவிர மற்ற நேரம் எல்லாம் அற்புதம் தன் தாய் வீட்டில் தான் இருக்கிறார். சண்முக சுந்தரம் வேலை காரணமாக அதிகளவு பகல் பொழுதை வெளியே தான் கழிப்பார். அதனால் தான் கீர்த்தி தனிமையின் பிடியில் தனது வீட்டில் இருந்தாள்.

அவள் வெளியே வர அப்போது எதிரில் சரவணா வந்தான். "மாமா" என்று அவள் அழைக்க கேட்காதவன் போல் சென்று விட்டான். சரி என்று வீட்டின் உள்ளே செல்ல பேசி சிரித்து கொண்டே அவரவர் வேலைகளை அவரவர் பார்த்து கொண்டு இருந்தனர். இவள் வந்ததும் பேச்சையும் சிரிப்பையும் நிறுத்தி விட்டு வேலைகளை மட்டும் செய்தனர். இவள் அருகில் சென்றாலும் எழுந்து சென்று விட்டனர்.

போதும் என்று முடிவெடுத்த விட்ட கீர்த்தி, தனது பயணத்தை தானே உறுதி செய்து விட்டாள். பக்கத்து வீட்டு பையனை அழைத்து வீட்டில் சொல்ல சொல்லி விட்டு கிளம்பி விட்டாள்.

சென்னை சென்று அந்த கம்பெனியின் அருகிலே ஒரு பெண்கள் விடுதி இருக்க அங்கே சென்று தங்கி விட்டாள். ஒரு மாதம் அந்த கம்பெனியில் வேலை செய்ய, பின்னர் அவளது அறை தோழி மூலம் தற்போது வேலை செய்யும் கம்பெனி பற்றி தெரிந்து இங்கு வந்தாள். அதன் பின் வேலை, மித்து, கவி என அவள் நாட்கள் சென்றாலும், அவளது குடும்பத்துடனான பொழுதுகளை மிகவும் மிஸ் செய்தாள்.

இதை எல்லாம் தேவ்விடம் சொன்ன கீர்த்தி, "இந்நேரம் தமிழ் ப்ர்க்னெண்ட்டா கூட இருக்கலாம். அவ்ளோ ஆனந்தமா இருந்து இருக்கலாம்" என்று சொன்னவள், "ஏதோ மாமாவ நான் கை விட்டுட்ட மாறி எல்லாம் நடந்துகிட்டாங்க. என் வாழ்க்கை நல்லா இருக்கனும். எனக்கு புடிச்ச மாறி இருக்கனும்னு அவரை துன்பப்படுத்துன மாறி பேசுனாங்க. அதெல்லாம் உண்மை தான!!!. நான் ஒரு சுயநலவாதினு எனக்கே தெரியுது. நான் கெட்டவனும் எனக்கே புரியாது. இருந்தாலும் என்னால இப்ப கூட மாமாவ கல்யாணம் பண்ணி இருந்தா இது எல்லாம் நடந்து இருக்காதுனு நினைக்க தோணலை" என்று தன் எண்ணங்களை கூறினாள்.

இதில் சுயநலவாதி... கெட்டவள்... என்ற எண்ணம் அவளது குடும்பத்தாரின் செயல்களால் அவளால் அவள் மீது திணிக்கப்பட்ட கருத்துகள் என்று தேவ் புரிந்து கொண்டான். அவளது குடும்பத்தின் சிறு சிறு உதாசீனங்களால் தான், இப்போது இந்த கடற்கரையில் அவனது கையை பிடித்து கொண்டு கன்னங்களில் கண்ணீர் வழிய தன்னை தானே குற்றவாளி ஆக்கி கொண்டு புலம்பி கொண்டு இருக்கிறாள் என்பதையும் புரிந்து கொண்டான். ஆனால் அவள் தான் புரிந்து கொள்ளவில்லை அல்லது முயலவில்லை. அவரவர் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்க அவர்களுக்கு தான் உரிமை உள்ளது என்று.

அதன் பின் தேவ், கீர்த்திக்கு தன்னால் ஆன சமாதானங்களை கூறி, அவளை அவளது வீட்டில் சேர்ப்பித்தான்.

மிதுனை அழைத்து இதை எல்லாம் சொல்ல, மிதுன் "எனக்கு என்னவோ கீர்த்தியோட மாமாகிட்ட முத பேசனா எதாவது முடிவு எடுக்கலாம் நினைக்கறேன்" என்று மிதுன் சொல்ல, "எனக்கும் அதே தான் தோணுச்சி" என்று அவனை ஆமோதித்தான் தேவ்.

"எல்லாம் அவர சுத்தி அவருக்காக தான கீர்த்தி மேல கோபப்பட்டாங்க. அவருக்கு புரிய வச்சா போதும். மத்தவங்களும் புரிஞ்சிப்பாங்க. இல்ல அவரே கூட மத்தவங்களுக்கு சொல்லி புரிய வைப்பாரு" என்று மிதுன் மேலும் சொல்ல, தேவ்வும் அதை ஆமோதித்தான்.

அதன் பின் தேவ், மித்துவுக்கும் சில சமாதானங்களை கூறி அமைதிப்படுத்தி விட்டு தனது வீட்டிற்கு சென்றான்... அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற முடிவுடன்.

கொடுப்பாள்...

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே...

"உன்னில் இடம் கொடுப்பாயா??" - கருத்து திரி

நன்றி!!!

இங்ஙனம்
திரா ஆனந்த் 🍀
 
Status
Not open for further replies.
Top