All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கதை திரி

Status
Not open for further replies.

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 25(2)
"என்ன என்னவூ உங்களுக்கு எல்லாம் தெரியும் என்று குதிச்சே .....இப்போ என்ன .....உங்க வீட்டு பெண்ணிற்கு எதை செய்யணும்ன்னு தெரியும் என்று சொன்னீங்க ....எதை செய்ய போறீங்க ...ஈம காரியத்தையா ?????இதோ நிற்கிறாங்களே அவ அப்பா ,அம்மா ,பாட்டி இவங்களுக்கு கூட அவளுக்கு எது தேவை ,தேவை இல்லை என்று தெரியாது .....ஏதோ ஒரு பிசாசிற்கு பயந்து இந்த பாசக்கார பெண்ணை ஹாஸ்டெலில் போடீங்களே ...இது தான் உங்க வீட்டு பெண்ணுக்கு நீங்க செய்யும் நல்லதா ????சரி அப்படி தான் போடீங்க .....பெரியம்மா ,பாட்டி மாறி மாறி தனி வீடு எடுத்து கூட இருந்து இருக்கலாம் தானே .....அது என்ன அந்த "கஜா போர்ட் ;என்ன "பெரிய சொர்கபுரின்னு அதை விட்டு வராம இந்த பச்சை மண்ணை கண் காணாத தூரத்தில் விட்டிங்க .....எல்லோரும் இருந்தும் தனக்குனு யாரும் இல்லை என்று பல முறை ஊர்வசியிடம் புலம்பி இருக்கா அது தெரியுமா உங்களுக்கு ...ஒரு அனாதை கூட யாரும் இல்லாமல் தான் அனாதையாகி இருப்பாங்க .....ஆனா நீங்க .......பொத்தி பாதுகாக்க வேண்டியவளை வேண்டாத பொருள் போலெ தூக்கி அடித்தது அதுவும் ஒரு பிசாசுக்காக .............."என்று பொரிந்து தள்ளினாள் .

"மதுரமா ......வீடுன்னு எடுத்து தங்கினா அங்கேயும் சோனா வந்து தங்கி இந்த பெண்ணை படுத்தி எடுப்பான்னு தான் ஹாஸ்டெலில் போட்டோம் .......எனக்கு பிறந்தது ரெண்டு ...அதில் ஒன்று தான் எனக்குன்னு இல்லாம போச்சு .....மீதம் இருக்கும் இவ ஒருத்தியாவது கடைசி வரை எங்க கூட இருக்கனும் என்று தான் மதுரா பூரணியை ஹாஸ்டெலில் விட்டோம் .....சந்தோசமா இல்ல ......வேறு வழி இல்லாம தான் .....சோனாவால் ஏற்கனவே இரு பெண்களில் ஒருத்தி இறந்துட்டா ...இனோருத்தி பைத்தியக்கார ஹாஸ்பிடலில் இருக்கா .அந்த நிலைமை பூரணிக்கு வர வேண்டாம் என்று தான் ..........அதுங்க அரக்க ஜென்மம் .....தானும் அன்பாய் இருக்காது ...மத்தவங்களையும் நம்மிடையே அன்பா இருக்க விடாதுங்க ......நாங்க இருப்பது புதை குழி .....அவங்களா விடுதலை கொடுத்தா தான் உண்டு ......நாங்க தான் மாட்டிட்டு முழிக்கறோம் ....இந்த புள்ளையாவது அந்த கொடுமை இல்லாமல் இருக்கட்டும் என்று தான் அப்படி விட்டோம் ......பாசம் இல்லாம இல்லை .....பாசம் இருக்கறதுனால தான் ...."என்ற பூரணி வாய் விட்டு கதறி அழுதார் .

அங்கு இருந்த அனைவரின் கண்களும் கலங்கி தான் இருந்தன .

"உனக்கு தெரியுமா மதுரா ....வீடு முழுக்க அவங்க மூன்று பேர் போட்டோவா இருக்கும் .....ஆன எங்க பூரணி போட்டோ ஒன்று கூட நாங்க வைத்து இறுக்கலை ......இவ போட்டோவை பார்த்துட்டு ,இவ அழகை பார்த்துட்டு இவளை ஏதாவது செய்து விட போகிறா என்ற பயம் ......எங்களுக்கு மட்டும் வேண்டுதலா இல்லை ஆசையாமா ..இந்த குழந்தை பெண்ணின் அருகே இருப்பதை விட்டு அவங்க கூட இருக்கணும்னு ........எங்களுக்கு வேறு வழி இல்லை .....பூரணிஎன்ற பெண் அந்த குடும்பத்தில் இல்லை என்ற மாயை உருவாக்கி வைத்து இருக்கிறோம் ......"என்றார் மரகதம் குரல் தழு தழுக்க.

"போன வருடம் நாங்க எல்லோரும் -ஐ மீன் அப்பா ,அம்மா ,பாட்டி ,பூரணி எல்லோரும் tour போய் இருந்தோம் மது .நல்ல வேளை பூரணியை ஹாஸ்டெலில் விட்டுவிட்டு தான் அங்கு அந்த நரகத்திற்கு திரும்பினோம் ......உள்ளே கூட நாங்க நுழையலை ....அதற்குள் சோனா ....என்ன ஹனிமூன் எல்லாம் என் தங்கையோடு முடிந்ததா என்று நடு ஹால்லில் நிற்க வைத்து கேட்டா .....இது மாதிரி வார்த்தை எல்லாம் பூரணி தாங்குவாளா ......அவ என் தங்கை அவ ...எனக்கு ரூபிணியும் ,பூரணியும் வேறு இல்லை மது .....ஆனா அது எல்லாம் சோனாவிற்கு புரியுமா சொல்லு ....எனக்கு இவளை ரொம்ப பிடிக்கும் ....வளர்ந்த குழந்தை இவ .....ஆனா இவர்கள் போய் பார்க்கும் போது அந்த tourக்கு பிறகு நான் இவளை பார்க்க போவதே இல்லை ..... .....இந்த கொடுமை எல்லாம் அவ பட வேண்டாம் என்று தான் ,அவளாவது நிம்மதியா இருக்கட்டும்னு தான் இவங்க ஹாஸ்டெலில் விட்டார்கள் ."என்றான் விஜய் கண்கள் கலங்கி .

"ஆமாம் மதுரா ...இவங்க எல்லோரும் சொல்வது ரொம்ப கொஞ்சம் தான் .....என் மக பாசம் இல்லாம வேண்டும் என்றால் வளர்ந்து இருக்கலாம் .....ஆனா அவ பாதுகாப்பா ,இந்த கேவலங்களின் நிழல் படாம ,தினம் செத்து செத்து பிழைக்காமல் இருக்கா அதுவே போதும் ......பாசத்தை கூட வெளிய காட்ட முடியாதா துரதிஷ்டசாலிங்க நாங்க .....இதோ இவன் மகனாய் இருக்கான் ...அதனால் பைத்தியம் பிடிக்காமல் ,உயிரோடு இருக்கோம் .....அவ்வளவூ தான் ...."என்றார் சேது .

"அம்மா !"என்று அழுத படி கதவை திறந்து கொண்டு ஓடி வந்து அவர்களை அணைத்து கொண்டு கதறி அழுதாள் பூரணி .

பூரணி தான் அநாதை இல்லை ....அந்த எண்ணமே அவளுக்கு மறைய வேண்டும் என்று தான் மதுரா ,கார்திக்க்கோடு மேல் ஏறி வரும் போதே பிளான் செய்து விட்டாள் .இரு கோடுகள் தத்துவம் தான் .தன்னுடைய பிரச்சனை பெரிது என்று வருந்தி கொண்டு இருப்பவளுக்கு ,அவள் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளின் பூதாகாரத்தை விளக்கி விட ,பூரணி தனக்காக தான் அவர்கள் விலகி இருக்கிறார்கள் என்ற உண்மை உணர்த்த பட்டது

கார்திக்க்குக்கு சிக்னல் தர தான் இவர்களை அழைத்து திரை சீலையை மதுரா விலக்கியது .ஒரே கல்லில் இரண்டு மாங்காய் ஆக இவர்களுக்கு கார்த்திக் பூரணியை காட்டியது போல் ஆனது ,கார்திக்க்குக்கும் சிக்னல் கொடுத்தது போல் ஆனது .இவளின் எண்ணப்படி திரை சீலை மூடப்பட்ட உடன் ,கார்த்திக் பூரணியை அழைத்து கொண்டு அறைக்கு உள்ளே வந்தான் .கனமான திரை சீலை இவர்களை மறைத்து விட அங்கு நடந்த சம்பாஷணைகளை பூரணி தன் காதால் கேட்டு அது வரை 'தனக்கு என்று யாருமே இல்லை 'என்ற எண்ணத்தை உடைத்து வெளி வந்தாள் .

(அம்மா .....தாயே ...நீ கிடைக்கும் பாலில் எல்லாம் சிக்ஸர் அடிக்கறே .....உன்னிடம் மாட்ட போவது எந்த அப்பாவி ஜீவன் என்று தெரியலையே:oops::oops::oops::unsure::unsure: ....யாராய் இருந்தாலும் பாவம் அவங்க ....கார்த்திக் ...நீ ரொம்ப உஷாருதேன்....தங்கச்சின்னு சொல்லி எஸ்கேப் ஆகிட்டே ....இவளை வைத்தே உனக்கு லைப் கிடைச்சுடுச்சு ....)

வெகு நேரம் ஆனது பாட்டி ,மகள் ,பேத்தியின் அழுகை நிற்க ....விஜயும் ,சேதுவும் கூட கண்ணீர் வழிய தான் நின்றனர் .

"சோ பூரணி மேடம் .....இப்போ புரிந்ததா உங்க அப்பா ,அம்மா ,பாட்டி ,உங்க கருணா அண்ணன் எல்லோரும் உங்க மேல பாசமா தான் இருகாங்க ....உங்களை உங்க அருமை சகோதரி சோனா தேவியாரிடம் இருந்து காக்கவே உங்களை ஹோஸ்டேலில் விட்டது ....பாசம் இல்லாம இல்லை .....என்னையும் இவங்க எல்லோரும் வேலையை விட்டு போ போ என்று சொல்லாம இருந்ததே இல்லை .......சோனா கிட்டே போனேன் .....தன் வேலையை காட்டிட்டா .....ஒரு வருசமாய் உங்க கருணா அண்ணன் எனக்கு பாடி கார்ட் வேலை பார்த்துட்டு தான் இருக்கார் ....அதையும் மீறி ரெண்டு நாளுக்கு முன் ஒரு பொம்பளை பொறுக்கி சுமன் என்பவனிடம் வேறு அந்த பிசாசு மாட்டி விட்டு இருக்கா ......சந்தோச பட்டுகோ ....இந்த கொடுமை எல்லாம் உனக்கு நேரவில்லை என்று ......இன்னொரு விஷயம் உனக்கும் கார்திக்க்கும் மேரேஜ் செய்ய இவங்க எல்லோரும் ஒற்று கொண்டாங்க ....சோ உன் ஆளோடு ஹாப்பி ட்ரீம்ஸ் .....இந்த லெட்டரை கிழித்து போடட்டுமா ...இல்லை பிரேம் செய்து கொடுக்கட்டுமா ....நடு ஹாலில் மாட்டி வைத்துக்கறீயா ....இல்லை வேறு ஏதாவது பிரச்சனை வந்தால் யூஸ் செய்ய பயன்படும் .....என்ன சொல்றே ...."என்ற மதுராவை ஓடி வந்து அணைத்து கொண்டவள் மதுராவின் கன்னத்தில் மாறி மாறி முத்தம் இட்டாள் .

(அட சே ....மதுராவுக்கு விஜய் ,இல்ல சூர்யா முத்தம் கொடுப்பாங்கன்னு வெயிட் செய்துட்டு இருந்தா ....இப்படி எல்லாம் ஒரு சீன் பார்க்க வேண்டி இருக்கு .....என்ன கொடுமை சார் இது .....சாரா டார்லிங் கேட்டா மாதிரி ஒரு குஜிலிப்பானே இல்லாம போகுது .....பிரச்சனை ...பிரச்சனை .....லாட்ஸ் of பிரச்சனை மட்டும் தான் ....ஒரு ரொமான்ஸ் ,ஒரு லவ் எதுவும் இல்லை ....மீ கோபம் ....:eek::eek::devilish::devilish:)

அதற்குள் ஊர்வசி உள்ளே வர ,"ஹே பூரணி ....அங்க பாரு ....அந்த புள்ள ஊர்வசி நீ எனக்கு கிஸ் கொடுத்துட்டு இருக்கறதை பார்த்து ஸ்டன் ஆகி நிக்குறா ......இங்கன பாரு நான் கார்த்திக் இல்லை ....உணர்ச்சி வசப்பட்டு கார்த்திக்குன்னு நெனைச்சு என்னைய கட்டி பிடித்து முத்தம் கொடுத்துட்டு இருக்கே .....அங்க பாரு அந்த மங்கூஸ் மண்டையன் என்னை முறைச்சுட்டு இருக்கான் .....இது எல்லாம் எனக்கு தேவையா .....ஊர்வசி டியர் ....இவங்க கிட்டே பேசி பேசி பசி எடுக்குது ...சோ என்ன செய்யரே ....எனக்கு போய் இன்னொரு பிளேட் புளியாவரை ,கேசரி வைத்து எடுத்துட்டு வந்துடு....அப்படியே வீட்டுக்கு பார்ஸலும் கட்டிட்டு பேபி ....ஒகே "என்றாள் மதுரா .

கார்த்திக் கடுப்பாகி அவள் தலையில் கொட்டினான் ."பக்கி ...பக்கி மானத்தை வாங்காதே பக்கி ......"என்றான் .
"டேய் யாரை பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டே நீயி .....இதோ இந்த நாள் உன் டைரியில் குறித்து வைத்துக்கோ கார்த்திக் .....இனி இந்த மதுராக்ஷி டாட்டர் of சங்கரன் ,கிராண்ட் டாட்டர் of முத்துவேல் இங்கே சாப்பிட மாட்டேன் ....."என்றாள் முகத்தை கோபமாக வைத்து கொண்டு .

"கார்த்திக் என்னப்பா இது ...பசிக்குதுனு சொல்ற பொண்ணை போய் .....நாங்க வந்த உடன் அவ சாப்பிடுவதை நிறுத்தி எழுந்துட்டா பா ......புள்ள கோவிச்சுட்டா பாரு "என்றார் மரகதம் .

"யாரு அவ கோவிச்சுகிட்டா .....பாட்டி கொஞ்சம் அக்கட சூடு ...."என்றான் கார்த்திக்

திரும்பி பார்த்த அனைவரும் சிரித்து விட்டனர் .ஒரு டேபிள் மேல் ஏறி அமர்ந்து ஊர்வசி எடுத்து வந்த சாப்பாட்டை ரவுண்டு கட்டி சாப்பிட்டு கொண்டு இருந்தது சாட்சாத் மதுராவே தான் .

"என்னவோ டைரியில் குறித்து வைத்துக்கோ என்று அண்ணாமலை ரஜினி ரேஞ்சுக்கு டயலாக் விட்டே .....இப்போ என்ன செய்துட்டு இருக்கே "என்றான் விஜய் வந்த சிரிப்பை அடக்கிய படி .

"ஆமாம் சொன்னேன் ....ஆனா என்ன சொன்னேன் ....அங்கே சாப்பிட மாட்டேன் என்று தானே சொன்னேன் ....நான் இங்கே தானே சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன் ...."என்றவளை கண்டு கார்திக்க்கும் விஜயும் நற நற வென்று பல்லை கடித்தனர் .....அவர்களால் முடிந்தது அது மட்டும் தான் .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ஆமாம் ....தம்பி கார்த்திக் ....என்ன சொன்னீங்க ...நான் பக்கியா.....திருப்பியும் உனக்கு ஒரு போட்டோ செஷன் சங்கு கிட்டே வைக்கணும் போலெ இருக்கே ....சரி சரி .....கோசு ,முரு,சங்கு முன்னாடி கண்ணை கசக்கிட வேண்டியது தான் .....பாருங்கத்தை ...இந்த கார்த்திக் என்னை நம்ப வைத்து மோசம் செய்துட்டு ...இப்போ யாரோ ஒரு பூரணி பின்னால் அலையறான் ......டயலாக் சரியா இருக்கா கார்த்திக் ...இல்லை வேறு ஏதாவது ஆட்ட் செய்யணும் என்றாலும் சொல்லு ....பண்ணிடலாம் ..."என்றாள் மதுரா
28-1398665259-samantha-03.jpg

"தாயே ......உன்னை பற்றி மறந்து போய் வாய் விட்டுட்டேன் .....மன்னிச்சுடு பத்ரகாளி .....ஊர்வசி அந்த புளியாவரை அண்டா எங்கே இருக்குன்னு சொல்லுமா ....போய் தூக்கிட்டு வந்துடுறேன் ...இல்லை இந்த பரதேவதை எனக்கு ஆப்பு என்ற பெயரில் பெரிய கடப்பாரையை சொருகிடுவா .....என்னை வேறு நம்பி ஒரு பொண்ணு இருக்கு .....மதுரா உனக்கு பிடிச்ச ஐஸ்கிரீம் பத்து பேமிலி பாக் பெரிய அண்டா சைசுக்கு வாங்கி தரேன் ...என் மீது கருணை காட்டு ......"என்றான் கார்த்திக் கை எடுத்து கும்பிட்டு .

அங்கு இருந்தவர்கள் வாய் விட்டு சிரித்தனர் .

"வாயை திறக்கும் முன் இந்த பயம் இருந்து இருக்கனும் .....சரி போனா போகுது ...பூரணிக்காக விடறேன் ...பட் நீ சொன்ன ஐஸ்கிரீம் பேக் ---பத்து மறக்கவே கூடாது ....இப்போ பொழைச்சி போ ..."என்றவள் சாப்பிடுவதில் தன் கவனத்தை திருப்ப கார்த்திக் நிம்மதி பெருமூச்சு விட்டான் .

"என்ன கார்த்திக் அவ கிட்டே இப்படி பம்முறீங்க .....அரிகாப்புடி சைஸில் இருக்கா ...அவளுக்கு பயந்துட்டு இருக்கீங்க .....நம்ம ஆண் சங்கத்திற்கே களங்கம் ..."என்றான் விஜய் கார்த்திக் தோளில் கை போட்டு .

"கருணா சார் ....சத்தமா சொல்லிடாதீங்க .....நீங்க காலி ......"என்றவன் மதுரா இங்கே கவனிக்கவில்லை என்பதை கண்டு ,நிம்மதி ஆனவன் ,"சார் !வேலியில் போகும் ஓணானை டவுசருக்குள் விட்டுட்டு குத்துதே ,குடையுதேன்னு அலறி பிரயோஜனம் இல்லை சார் ......அவ கிட்டே மாட்டி நொந்து நூடுல்ஸ் ஆகி இருக்கும் நல்ல எண்ணத்தில் சொல்கிறேன் .....இப்படி எல்லாம் பேசி வைக்காதீங்க .....இந்த திருமணத்தை நிறுத்த தெரியாத்தனமா ஆபீஸ் collegue கூட எடுத்த போட்டோவை காட்டினேன் .....வச்சா பாருங்க ஆப்பு சங்கு மூலமா ......ஆறு மாசம் அவர் அடிச்ச வேப்பிலையில் ஆஸ்திரேலியா ஓடினவன் தான் ரெண்டு நாள் முன்னாடி தான் திரும்பினேன் ......இப்போ கேளுங்க .....சொல்றேன் ...ஆல் இந்தியன்ஸ் ஆர் மை பிரோதெரஸ் அண்ட் சிஸ்டேர்ஸ் ....."என்றான் நொந்த குரலில் .

"என்ன கார்த்திக் சேதாரம் பலமோ ..."என்றான் விஜய் நக்கலாக ....

"கணக்கு வழக்கே இல்லை ...."என்றான் கார்த்திக் .

சேது கார்திக்க்கை கூப்பிட அவரிடம் அவன் சென்று விட ,விஜய் மதுராவிடம் சென்றான் .

"இன்னும் வெளியே போனா மத்தவங்க பர்ஸ் சப்பிட்டே காலி செய்யும் பழக்கம் நிறுத்தலையா நீ .....பத்து பேக் ஐஸ்கிரீம் ....உனக்கே ஓவர் ரா இல்லை .....கொஞ்சம் அடங்கு ..."என்றான் யாருக்கும் கேட்காத குரலில் .

அடிக்கண்ணில் விஜயயை பார்த்தவள் எதையும் பேசாமல் சாப்பிட்டு கொண்டு இருந்தாள் ."என்ன சொன்னது கேட்டதா ......ஓவர் ரா வாலு வெளியே வருது .....கார்திக்க்குக்கு நான் இருக்கேன் ....."என்றான் விஜய் நக்கலாக .

அவளை கடுப்படித்து விட்டதாக நினைத்து அவன் திரும்ப ,"மிஸ்டர் ....விஜய கருணாகரன் ...ஒன் செகண்ட் .....கொஞ்சம் இங்கே வாங்க .....வெளியே போனா நான் சப்பிட்டே மத்தவங்க பர்ஸ் காலி செய்வேன் என்று உங்களுக்கு எப்படி தெரியும் சார் ....."என்றாள் ஒரு மாதிரி குரலில் .
Samantha-signs-a-remake-film.jpg

அதிர்ந்து திகைத்து நின்றான் விஜய் .ஸெல்ப் ஆப்பு தானே வைத்து கொண்டோம் என்று புரிய ஆடு திருடின கள்ளன் மாட்டியது போலெ விழித்து நின்றான் ."அதான் ஒரு வருசமாய் உனக்கு பாடிகார்ட் வேலை செய்யறேன் இல்லை ...தெரியாதா உன் வேலை எல்லாம் ....."என்றான் விஜய் சமாளிப்பாக .

"இந்த நொண்டி சாக்கு எல்லாம் எவளாவது காதில் பூ சுத்தி இருப்பா மிஸ்டர் விஜய் ...அவ கிட்டே சொல்லுங்க .....உங்க கிட்டே ஏதோ ஒன்று ஆரம்பம் முதலே சரி இல்லை .....எதையோ மறைக்கறீங்க ......எல்லோர் கிட்டவும் இயல்பா இருக்கும் நீங்க என்னிடம் மட்டும் atrificial லா உங்க குணத்திற்கு எதிராக தான் இருக்க ட்ரை செய்யறீங்க ......ஒரு 75% நம்பும் படியாக இருக்கு .....ஏதோ மறைக்கறீங்க ......சீக்கிரம் கண்டு பிடிக்கறேன் ....."என்றவளை கண்டு மிடறு விழுங்கினான் விஜய் .(மாட்டினியா ....விஜய் .....கேட் அண்ட் மௌஸ் விளையாட்டு ஆரம்பம் .)

"சும்மா நீயே கற்பனை செய்துட்டு உளறாதே ....கிளம்பும் வழியை பாரு ..."என்றான் கடுகடு முகத்தோடு

"விஜய் !எங்க அம்மா ஒரு பழமொழி சொல்வாங்க .....சூரியன் ,நிலா ,உண்மை எவ்வளவூ தான் மறைத்து வைத்தாலும் மறையாது .....எப்படியாவது வெளியே வந்தே தீரும் ....இது நான் சொல்லலை ...புத்தர் சொன்னது ......தலைவர் mgr கூட ஒரு பாடலில் ,"என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே ...இருட்டினில் நீதி மறையட்டுமே ....தன்னாலே வெளி வரும் தயங்காதே ...ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே "என்று பாடி இருக்கிறார் .....இப்போ இது வரை நார்மல் ஆக பேசி கொண்டு இருந்த நீங்க ,தான் உங்க உண்மை முகம் .....கேள்வி கேட்டதும் சிடுசிடுத்தீர்களே அது முகமூடி .....நீங்க சாதரணமாக பேசி இருந்தா கூட இந்த அளவூ உறுத்தி இருக்காது .......நிச்சயம் கண்டு பிடித்தே தீருவேன் ....தட்ஸ் எ சாலென்ஜூ ."என்றவள் கை கழுவ சென்று விட விஜய் திக்ப்ரமை பிடித்து அந்த இடத்திலேயே நின்று விட்டான் .

அவனுக்கு தெரியவில்லை இனி மேல் அணு ஆயுத போர் அவனுக்கும் அவளுக்கும் இடையே மூல போகிறது என்பதை .இத்தனை வருடம் அவன் கட்டி காப்பாற்றிய ரகசியம் வெட்ட வெளிச்சமாக போகிறது .....சூர்யாவையும் மதுராவையும் தானே சேர்த்து வைத்து மணமேடை ஏற்ற போவதை .....

கை கழுவியவாறு முன் பக்க கண்ணாடியில் ,பின்னால் சிலை மாதிரி நின்று கொண்டு இருந்த விஜய்யின் முகபாவங்களை கவனித்து கொண்டே இருந்தாள் மதுரா என்பதை உணராத விஜய் ,அவள் சொல்லி சென்றவற்றால் குழம்பி போய் நின்றான் .
samantha_best_wallpaper.jpg

'சோ sad விஜய் .......இப்படி 'எங்க அப்பா கூதிருக்குள்ள இல்லைன்னு' காமெடி பண்றியே ......போட்டு வாங்குவது கூட தெரியாத பச்சை புள்ளையா நீயி ..........உன் ரியாக்ஷன் பார்த்தா அப்போ ஏதோ இருக்கு .....சோனா காரணம் இல்லாம என்னை டார்கெட் செய்யலை .......ஏதோ இருக்குன்னு சந்தேக பட்டு தான் பிளான் போட்டு இருக்கா ........இதுல உன்னை கண்டு அந்த கஜா அண்ட் கோ பயப்படுத்து ......இரு மவனே ...மாட்டினே ....ஒரு வருஷமா ஆபீஸ்லே படுத்தி எடுத்தே இல்லை ......கவனிச்சுக்கிறேன் .......'என்று மனதிற்குள் முடிவு எடுத்தாள் மதுரா .

PENANCE WILL CONTINUE.....
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 25(3)
கை கழுவி வந்தவள் ,"பெரியப்பா !அம்மா ஊரில் இருந்து வந்து இருகாங்க ......அவங்களும் கார்த்திக் அம்மாவும் இணை பிரியா தோழிகள் .....சோ அம்மா கன்வின்ஸ் செய்துட்டா அவங்களே உங்க வருங்கால சமந்தியம்மாவை சரி கட்டிடுவாங்க ......அங்கு மதுரை ஆட்சி தான் ....சோ இங்கே தாஜா செய்தால் அங்கே ஒர்க் அவுட் ஆகும் .......எங்க கூட வாங்க ...போய் கவுத்துடலாம் .....ஐயோ நான் பாட்டுக்கு பேசிட்டு போறேனே .....உங்களுக்கு என் அண்ணன் கார்திக்க்கை மாப்பிளையாக ஏற்க சம்மதம் என்று நீங்க வாய் திறந்து இன்னும் சொல்லவே இல்லை ...."என்றாள் மதுரா சேதுவிடம் .

"அடியேய் .....செய்றது எல்லாம் செஞ்சுட்டு ......இப்போ ஒன்றும் தெரியாதவ மாதிரி பெர்மிஷன்னா கேட்குறே ...."என்றார் மரகதம் அவள் காதை திருகி .

"அட இது நல்லா இருக்கே ....உங்க பேத்தி விழுந்து விழுந்து இந்த 'பெட்ரோமாஸ் லைட் 'தான் வேணும்ன்னு நாலு வருஷம் லவ் செஞ்சா அதை கேட்க மாடீங்க .....சரி போனா போகுதே ....பார்க்க கொஞ்சம் பார்பி டால் மாதிரி இருக்காளே .....ஆஆ ஊஒ நா டாம் திறக்கறாளே என்று கோர்த்து விட்டா ....மீ பச்சை புள்ள அதை போய் இப்படி torture செய்யறீங்களே ......இது தான் நல்லதிற்கு காலம் இல்லை என்று சொல்லறாங்களோ ....."என்றாள் மதுரா .
Samantha-Ruth-Prabhu-Wallpapers-07-1352x900.jpg

"வாய் ...வாய் ......"என்று முதுகில் ஒன்று போட்டார் கனகா பாசத்துடன் .

"சொல்லுங்க பெரியப்பா .....நான் தப்பா ஏதாவது செய்துட்டேனா .....உங்களுக்கு ஒகே தானே ......உங்களுக்கு பூரணி திருமணம் பற்றி ஆயிரம் எண்ணம் இருக்கும் ....நான் தப்பு செய்து இருந்தா சாரி பா ...."என்றாள் மதுரா .

அவள் தலையை ஆதூரமாக தடவி கொடுத்த சேது ,"என் மூத்த பொண்ணு என் ரெண்டாம் பெண்ணின் வாழ்க்கை சிறப்பாக்கி தான் இருக்கா ......நாங்க எங்க மகளுக்கு செய்ய முடியாததை நீ செய்து இருக்கே .....எங்களால் அவ இத்தனை வருடம் இழந்த சந்தோசம் ,கனவு ,எதிர்பார்ப்பு எல்லாவற்றையும் கார்த்திக் மூலமாக நீ திருப்பி கொடுத்து இருக்கேடா ......எங்களுக்கு இந்த திருமணத்தில் பரி பூரண சம்மதம் ....நாங்களே பார்த்து இருந்தா கூட இவ்வளவூ நல்ல மாப்பிளை ,கணவன் கிடைத்து இருக்காதுடா ...."என்றார் சேது மதுராவை அணைத்து .

"அது சரி பெரியப்பா ......நான் செய்தது ஒகேன்னு சொன்னீங்க .....அது சரி .....அது என்ன ...இந்த காட்ஜில்லா வை பார்த்து இவ்வளவூ நல்ல மாப்பிள்ளைன்னு சர்டீபிகட் தறீங்க ...அவனே ஒரு லூசு ...."என்றவள் ஓட ஆரம்பிக்க ,"ஏய் ! எருமை நில்லுடீ ....உன்னை ......"என்று தூரத்தினான் கார்த்திக் .

சேது ,கனகா ,மரகதம் ,பூரணி என்று ஒவ்வொருவரின் பின்னே ஒளிந்து கார்த்திக் கையில் சிக்காமல் போக்கு காட்டியவள் ,கடைசியாக விஜய் பின் ஒளிந்தாள் .

"விஜய் !விஜய் ...காப்பாத்து விஜய் .....அந்த அனகோண்டா அடிக்க வரான் ....."என்று இருவரும் அவனை சுற்றி சுற்றி ஓடினார்கள் .....இந்த முறை விஜய் காதில் புகை வரவில்லை ....இருவரையும் கண்டவனின் கண்களில் பாசமே இருந்தது .சிறு குழந்தைகளின் விளையாட்டை ரசிக்கும் ஒரு பெற்றவனின் முக பாவத்தோடு கைகளை முன் புறம் கட்டி புன்னகைத்து கொண்டு இருந்தான் .

"கருணா சார் !அந்த சிம்பான்சியை பிடிங்க ....உங்க வீட்டு மாப்பிளை சொல்றேன் ....பிடிச்சு கொடுங்க ..."என்றான் கார்த்திக் .

"டேய் !இது போங்கு ஆட்டம் ....உனக்கும் எனக்கும் தான் வழக்கு ...அவரை ஏன் உள்ளே இழுக்கறே ......முடிஞ்சா நீ பிடி ...இல்லை தோத்துட்டேன்னு ஓத்துக்கோ ....."என்றாள் மதுரா விஜய் முதுகு புறம் இருந்து எட்டி பார்த்து .

"எனக்கு பதில் எங்க தலை களத்தில் இறங்கும் மதுரா ...இவர் தான் சொன்னார் ஏதோ ஒரு சங்கத்திற்கு கேவலம் ....உன்னிடம் இப்படி நான் மாட்டுவது ....இப்போ சங்க தலைவரே மோதி பார்க்கட்டும் ....அப்போ தெரியும் ...."என்றான் கார்த்திக் .

"ஒஹ்ஹ்ஹ்ஹ்ஹ ...நீ அப்படி வரியா கார்த்திக் .......அப்போ பிடிச்சுடலாம் ....."என்றான் விஜய் மதுராவை அடிக்கண்ணால் பார்த்தவாறு .

"முடியவே முடியாது கருணா சார் .....அவ மின்னல் மாதிரி ஓடுவா ...பிடிப்பது கஷ்டம் .....அவளா மாட்டினா தான் உண்டு ....."என்றான் கார்த்திக் எச்சரிக்கும் விதமாக .

"அவளை பற்றி எனக்கு தெரியாதா ......பேய் மாதிரி ஓடுவா .....பார்த்து இருக்கேன் .......இந்த தடவை பிடிக்கறேன் ......"என்றவன் திரும்ப அங்கு மதுரா இல்லை .

"ஹ்ம்ம் ....நீங்க இப்படியே டைலாகு பேசிட்டு இருங்க ...அவ ஓட ஆரம்பித்து பத்து மணி நேரம் ஆச்சு ."என்றான் கார்த்திக் தலையில் கை வைத்த படி .

கார்த்திக் தோளில் கை வைத்த பூரணி ,"ஆமாம் தனியா நின்று யார் கூட பேசிட்டு இருக்கீங்க ..."என்றாள் .

"என்னது ...தனியாவா ..."என்று திரும்பி பார்த்தவன் திகைத்தான் ...அங்கு விஜய்யும் இல்லை .'அடங கோக்கமாக்க ...இதுங்க ரெண்டும் சேர்ந்து என்னையவ காமெடி பீஸ் ஆகிடுச்சுங்களே .....இவ முன்னாடி வேறு மானம் போச்சே .'என்று நொந்து கொண்டான் .

மான் போல் துள்ளி குதித்து ஓடி கொண்டு இருந்தாள் மதுரா .பின்னால் துரத்தி கொண்டு இருந்தான் விஜய் .
Samantha-Ruth-Prabhu-Running-Large-HD-Wallpapers.jpg

"பிடிக்க முடியாதே ....பிடிக்கவே முடியாதே ......"என்று சொல்லி கொண்டே ஓடியவள் படிகளில் தாவி ஏறி மொட்டை மாடிக்கு ஓடினாள் .
அங்கு நிறைய இடம் ஓடி விளையாடுவதற்கு ஏற்பதாக பெரிய மைதானம் போலெ இருந்தது .நடுநடுவே நாற்காலி ,டேபிள் ,பூந்தொட்டிகள் இருக்க விஜய் மதுராவை பிடிக்க முடியாமல் போனது .

"என்ன பாஸ் .....பிடிக்க முடியவில்லை என்றால் இப்போ கூட தோத்துட்டேன்னு ஓத்துக்கோங்கோ ...பொழைச்சி போகறீங்கன்னு விட்டுடறேன் .....வசதி எப்படி ???/"என்றாள் மதுரா வாயை குவித்து நாக்கினை வெளியே துருத்தி அழகு காட்டி ஓடியவள் அறியவில்லை ஒரு ஆணின் மனதில் அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உணராதவளாய்
" கையில் சிக்கினே நீ காலி ....."என்றான் விஜய்

"சிக்கும் போது பார்த்துக்கலாம் ஜி ...அதற்கு முதலில் பிடிக்கணும் .....பிடிக்காம உதார் விட கூடாது ......முதலில் பிடிங்க ......"என்று அங்கும் இங்கும் துள்ளி குதித்து தாவி ஓடியவளை பிடிக்க முடியமால் திணறி தான் போனான் விஜய் .

(ஹே விஜய் ....என்னப்பா இது .....உன்னால ஹீரோயின் பிடிக்க முடியலையா .....அதானே அது மான் குட்டியா இருந்தா பிடிக்கலாம் அது டைனோசர் குட்டி ஆச்சே ......பார்த்துப்பா சேதாரம் உனக்கு பலமாகிட போகுது ....)
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கார்திக்க்காக ஆரம்பித்த விளையாட்டு ,விளையாட்டு என்ற எல்லையை தாண்டி போய் கொண்டு இருப்பதை இருவரும் அறியவில்லை .அவன் மனம் காட்டு தீயாய் பற்றி எரிய தேவை ஒரு சின்ன தீண்டல் ,செல்ல சிணுங்கல் ,அவளின் கடைக்கண் பார்வை என்பதை இருவரும் அறியாமல் மீள முடியாத உணர்ச்சி என்னும் சூறாவளியில் சிக்கி தவிக்க ஆவன இருவரும் செய்து கொண்டு இருந்தனர் .


வெளிசலங்கையாக சிரித்து கொண்டே ஓடி கொண்டு இருந்தாள் மதுரா .

"ராட்சசி !நில்லுடி .ஹே ஏன்ஜெல் நில்லுடீ .....மது ...மது ...நில்லு ....உன்னை ........"என்று பின்னால் ஓடி கொண்டு இருந்தான் விஜய் .
10 வருடமாய் அவள் மேல் உள்ள காதல் ,அது வெளியே தெரியாமல் இருக்க அவன் போட்டு கொள்ளும் முகமூடி அனைத்தையும் விஷ்வாமித்ரன் தவத்தை கலைக்க வந்த மேனகையாய் அவளின் நெருக்கம் தூள் தூளாய் உடைத்து கொண்டு இருந்தது

ஓடி கொண்டு இருந்தவளின் கால் கல்லில் மோத நின்றவளை தாவி பிடித்தான் விஜய் ."இப்போ என்னடீ சொல்றே ......தோத்தது நீ தான் ......தோத்ததிற்கு என்ன தண்டனை கொடுக்கலாம் ....ஹ்ம்ம்ம் ......"என்று தலை ஒரு புறமாய் சாய்த்து ,ஒரு கையை அவள் தோளிலும் ,மறு கையை அவள் இடுப்பிலும் வைத்து இருந்தவன் ,தாங்கள் நின்று இருக்கும் நெருக்கத்தை உணரவில்லை .

"கார்த்திக் முன்னாடி ஒரு ஆயிரம் தோப்புக்கரணம் போட வைக்கலாமா ....இல்லை "என்று உதட்டை கடித்து யோசித்தவன் ,மதுராவிடம் இருந்து பதில் இல்லாததை கூட கவனிக்கவில்லை .

"இப்பொழுதைக்கு கார்த்திக் கிட்டே மரியாதையா நடக்கணும் ...என்னை எப்போ பார்த்தாலும் ராயல் சலூட் வைக்கணும் ......தோப்புக்கரணம் போட சொல்லும் போது எல்லாம் போடணும் ......இது தான் உனக்கு இந்த நாட்டாமை சொல்லும் தீர்ப்பு .....என்னடீ ....வாய் எங்கே போச்சு ...."என்று கேட்டவன் மதுராவின் ஸ்தம்பித்த நிலையையும் ,தாங்கள் இருக்கும் நெருங்கிய நிலையையும் அப்போது தான் உணர்ந்தான் .
AA.png

இப்பொது திகைத்து ஸ்தம்பிப்பது அவன் முறையானது .....அவ்வளவூ நெருக்கத்தில் தன் மனம் கவர்ந்தவள் .....தன் கை அணைப்பில் அவள் ......அந்த எண்ணம் மனதில் எழுந்தது மறுகணம் ஒருவித சிலிர்ப்பு அவன் உடலில் ஓட ,அதை உணர்ந்த மதுராவின் கண்கள் மேலும் விரிந்தன .ஒரு கை விரல் அளவூ தான் அவர்களுக்கு இடையே இடைவெளி இருந்தது .

அங்கு என்ன நடக்கிறது என்று புரியாத மௌன நிலையில் இருவரின் கண்களும் கூர் ஈட்டிகளாக ,ஒன்றை ஒன்று உரசி நின்றன .ஒருவித ஸ்தம்பிப்பு ,உறைந்த நிலை .சுற்றி உள்ள உலகம் அனைத்தும் மறைந்து இந்த பிரபஞ்சத்தில் அவர்கள் இருவரும் மட்டுமே இருப்பது போன்ற மாயை.இதயங்கள் ரெண்டும் பந்தய குதிரையின் வேகம் எடுத்து இருக்க மூச்சு விடவும் மறந்து போய் அணைத்தும் அணைக்காத நிலையில் எவ்வளவூ நேரம் நின்றார்களோ அவர்களுக்கே தெரியாது .

"ஏன்ஜெல் !"என்று முணுமுணுத்து விஜயின் குரலில் இருந்த ஏதோ ஒன்று,என்ன என்று புரியாமல் மதுரா அவன் கைகளில் சிலையாக நின்றவளின் கால்கள் தங்கள் பலத்தை இழக்க ,கீழே சரிந்தவளை தாங்கி பிடித்தான் விஜய் .

images (2).jpg

PENANCE WILL CONTINUE......
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 25(4)
39945115_444887719366871_60822290629897905_n.jpg

"ஏன்ஜெல் !"என்று முணுமுணுத்து விஜயின் குரலில் இருந்த ஏதோ ஒன்று,என்ன என்று புரியாமல் மதுரா அவன் கைகளில் சிலையாக நின்றவளின் கால்கள் தங்கள் பலத்தை இழக்க ,கீழே சரிந்தவளை தாங்கி பிடித்தான் விஜய் .

இந்த நிமிஷம் ....என் நிமிஷம்
எந்தன் வாழ்வில் பொன் நிமிஷம்
பாலை வனத்தில் ஒரு தேவதை மேகம்
பாலை வார்த்ததொரு பால் நிமிஷம்
வாழ்வின் கடைசி
அந்த நிமிஷம் வரைக்கும்
வாசனை வீசும் பூ நிமிஷம்


இப்படியே இப்படியே இருந்து விட கூடாதா
என் கண்ணில் உன் இமைகள்
பொருந்தி விட கூடாதா .......


இப்படியே இப்படியே
இறந்து விட கூடாதா
இப்படியே காலங்களும்
உருண்டு விட கூடாதா ........


வெட்டவெளி பூ வனாமாய்
மலர்ந்து விட கூடாதா
விண்மீன்கள் நிலவாக
வளர்ந்து விட கூடாதா


அன்பே உன் பக்கத்தில்
அணைக்கின்ற வெப்பத்தில்
உயிருள்ள காலம் வரை
ஊடாட கூடதா


நிம்மதியே நிம்மதியே
நெஞ்சை விட்டு போகாதே
என் உயிரை தீக்குழியில் எரிந்து
விட்டு போகாதே


பல்லவியே பல்லவியே
பாடல் விட்டு போகாதே
வாசல் வரை வந்த
நதி வற்றி விட கூடாதே


மனம் கொண்ட
நம்பிக்கை மாறிவிட கூடாதே
மார்போடு உன் சூடு அறிவிட கூடாதே


பாடல் வரிகள் அவனுக்காகவே எழுத பட்டது போல் இருக்க கை வளைவில் மைவிழியாளை கண்டு உறைந்து நின்றான் விஜய் .இத்தனை வருடமா மறைத்து ,புதைத்து வைக்க பட்டு இருந்த அவனின் காதல் விஷ்வரூபம் எடுத்து அவனை புரட்டி போட்டது .

கைகள் அவளை மெல்ல மேலே தூக்க ,அடுத்து அவன் ஏடா கூடமாக எதையும் செய்து வைக்கும் முன் ,அவன் கரங்களில் இருந்து மதுரா விலகி இருந்தாள் .

"தேங்க்ஸ் பா ...விழுந்து இருந்தேன் ...மண்டை சிதறு தேங்காய் ஆகி இருக்கும் ......நல்ல வேலை பிடிசீங்க .....ஆமாம் ஒரு டவுட் விஜய் ......பத்தடி தூரம் நிற்கும் நீங்க இது நாள் வரை நிற்கும் போதே அந்த பிசாசு affair அது இதுன்னு பேசுச்சு ...இப்போ என்னை தொறத்தி விளையாடி இருக்கீங்க .....hug வேற ....சினிமாவில் காட்டுவது போல் தாங்கி பிடித்து வேற அப்படியே நின்று இருக்கீங்க .....இதுக்கு என்ன சொல்ல போறாளோ ....தேங்க்ஸ் மாம்ஸ் ..."என்றவள் அவன் அதிர்ந்து நிற்கும் போதே ஒன்று நடக்காதது போல் கீழ் இறங்கி போக சென்றாள் .

(அட ச்சே வடை போச்சே ......விஜய் மாதிரி மேன்லி ஹீரோ ,அதுவும் காதலன் அணைத்து இருந்தா மொத்த உலகம் அவுட் ஆப் போகஸ் ஆகி இருக்கனும் ......எதுக்கு இவ தேவை இல்லாம அந்த சோனா பிசாசை நியாபக படுத்தி பொங்கி வரும் பாலில் தண்ணீர் தெளித்தது போல் எல்லாத்தையும் இப்படி கெடுத்துடாளே .....வெண்ணை கிடைக்கும் போது பானை உடைந்த கதையாய் ஆகி போச்சே விஜய் உன் நிலைமை ......:oops::rolleyes::rolleyes::rolleyes::cautious::cautious:)

தலையை அழுந்த கோதி ,கண்களை மூடி தன் உணர்ச்சி கொந்தளிப்பை கட்டுக்குள் கொண்டு வர போராடி ,திணறி கொண்டு இருந்தான் விஜய் .மதுரவால் மட்டுமே உண்டாக்க கூடிய உணர்ச்சிகள்,இன்று அவளாலேயே பேயாட்டம் அவனுள் போட்டு கொண்டு இருந்தது .அவற்றை வெல்ல துணை மதுரா மட்டுமே ....

ஆனால் அவளோ இவன் நெருங்க முடியாத முள் வெளிக்கு உள்ளே அல்லவா இருக்கிறாள் .ஆசை ,மோகம் ,காமம் என்னும் தீயில் பற்றி எரிந்து கொண்டு இருந்தான் அந்த காதலன்

அவன் நிலையை தாங்க முடியாத இயற்கையே கண்ணீர் விடுவது போல் வானம் பிளந்து கொண்டு ஊற்ற ஆரம்பித்தது அவனை குளிர்விக்க.பெய்து கொண்டு இருந்த மழையில் கால் மடங்கி தலை கவிழ்ந்து தரையில் மண்டியிட்டு அமர்ந்தான் விஜய் .

"விஜய் !"என்றாள் மதுரா கதவின் ஓரம் இருந்து .

தலை நிமிர்ந்த விஜய் எதையும் பேசாமல் அவளையே பார்த்து கொண்டு இருக்க ."இதற்கு பிறகும் உண்மை சொல்லமாடீங்களா .....எதுவுமே இல்லை என்று தான் சாதிக்க போறீங்களா ........இதோ இப்படி துடிச்சுட்டு இருக்கீங்களே அது என் கற்பனை என்று சொல்வீர்களா .....இது மாதிரி நீங்க இருப்பது முதல் தடவை இல்லை ....ஆறு மாதம் முன்பு கூட இதே நிலையில் தான் இருந்தீங்க விஜய் ....கீழே விழாம இருக்க உங்களை பிடித்து கொண்டேனே அப்போது ......நீங்க போடுவது வேஷம் விஜய் ......அதுவும் என்னை சுற்றி இருக்கும் போது மட்டும் .....வாயை மூடி இருப்பது எதற்குமே தீர்வூ இல்லை விஜய் ......இதற்கு மேலும் நீங்க வாயை திறக்க மாட்டேன் என்று சொன்னால் கூட நான் விட மாட்டேன் .........எனக்கு பதில் வேண்டும் .....நீங்க சொல்லலை என்றால் கூட எப்படியும் கண்டு பிடிப்பேன் விஜய் ........எழுந்து வாங்க ....உடம்புக்கு ஏதாவது ஆக போகுது ......"என்றவள் யோசனையோடு கீழ் இறங்கி சென்றவள் படி முடியும் இடத்தில கையில் புது ட்ரெஸ் உடன் நிற்கும் சேதுவை கண்டு தயங்கி நின்றாள் .

"பெரியப்பா !....அது வந்து "என்று திணறியவளை கண்டு புன்னகைத்தார் சேது .

ஏதோ விஜயிடம் பேச தான் அவர் அவனை தேடி வந்தது .வந்தவர் அவர்கள் இருந்த நிலையை கண்டு வந்த சுவடே இல்லாமல் திரும்பி விட்டார் .கடவுளுக்கு மானசீகமாக நன்றி சொல்லவும் மறக்கவில்லை .விஜய் கை வளைவில் இருந்து கொண்டு இருக்கும் போது சேது வந்ததை கண்ட பிறகு தான் மதுரா தன்னை சமாளித்து கொண்டது

"நீ சந்தேக படுவது சரி தான் .....அவன் அணிந்து இருப்பது முகமூடி தான் ......உன்னை காக்க ......அவன் உணர்ச்சி வெளியே தெரியாத வரை தான் உனக்கு பாதுகாப்பு என்று தனக்கு தானே அவன் போட்டு கொண்ட இரும்பு கவசம் அது .......ஆனால் உண்மை வேறு விதமானது ......இதற்கு மேல் என்னால் வேறு எதையும் வெளிப்படையாக சொல்ல முடியாது மதுரா .....எங்க கையை அவன் சத்தியத்தில் கட்டி போட்டு இருக்கான் .....மறைமுகமா உனக்கு என்னால் உதவ முடியும் ......ஹான்செல் அண்ட் க்ராடில் கதை தெரியுமா ...அது போலெ இவன் மறைக்கும் உண்மை பல பேரிடம் சிதறி இருக்கு .......எல்லாதையும் சேர்த்து பாருமா .....அவன் எதை மறைகிறான் என்று தெரிந்து விடும் .....ஆல்வின் தெரியுமா .....அவன் இவனுடைய உயிர் நண்பன் ......புள்ள ரொம்ப நேரம் மழையில் நனைகிறான் .....நான் போய் டிரஸ் கொடுத்து தெளிய வைத்து கூட்டி வரேன் ......."என்று முதல் படி ஏறியவர் நின்று "மதுரா !"என்று அழைத்தார் .

"நீ இதில் கடைசி வரை போக வேண்டியது இருக்கும் ......விடை எதுவாக வேண்டும் என்றாலும் இருக்கும் .....உன் கடைசி மூச்சு வரை இது உனக்கு தான் என்று முடிவாக தோன்றினால் மட்டும் இறங்கு .....இல்லை என்றால் மறைக்க பட்டது மறைக்க பட்டதாகவே இருக்கட்டும் ......வாழ்கையில் என் மகன் நிறைய கஷ்டம் பட்டு விட்டான் ......பாதி வழி ரயில் சிநேகம் அவனுக்கு எந்த விதத்திலும் உதவாது .....அவன் உயிருக்கே கூட ஆபத்தாகி விடும் ........கடைசி வரும் உடன் வரும் இதய துடிப்பு தான் அவனுக்கு விடிவூ காலம் கொடுக்கும் .....எந்த பாதையில் செல்வது என்று யோசித்து முடிவூ எடுமா ........அவனை கஷ்டப்படுத்துவது நீ என்றாலும் என்னால் அதை அனுமதிக்க முடியாது .....யோசிமா ....யோசித்து முடிவூ எடு ...."என்றவர் நில்லாமல் சென்று விட மதுராவின் முகம் தீவிர சிந்தனையில் ஆழ்ந்து விட்டது .

அடுத்த சில வினாடிகளில் உடை மாற்றி விஜய் வரவும் ,அவன் முகம் உணர்ச்சிகள் அற்ற கற்பறையாக இறுகி இருப்பதையும் ,அவன் தன்னை மீட்டு விட்டான் என்பதையும் கண்டாள் மதுரா .மழையும் நின்று விட ஊர்வசி குடும்பத்திடம் சொல்லி கொண்டு கிளம்பினார்கள் அவர்கள் .

"பூரணி !நீ போய் கார்த்திக் வண்டியில் வா "என்றவள் எதையும் பேசாமல் விஜய்யின் கறுப்பு நிற மெர்சிடிஸ் பென்ஸ் suvயில் முன் பக்கம் ஏறி அமர்ந்து கொண்டாள் .
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புன்னகையுடன் கனகா ,சேது ,மரகதம் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர் .அவள் தங்கி இருக்கும் வீட்டை நோக்கி அவர்கள் கார் பயணமானது எவ்வளவூ மெதுவாக செல்ல முடியுமே அவ்வளவூ மெதுவாக ஊரை சுற்றி கொண்டு .டேக் diversion இல்லாமலே ஊரை ஊரை சுற்றி காண்பித்து கொண்டு இருந்தான் .

(ஆமாம் இதற்கு எல்லாம் குறைச்சல் இல்லை .....லவ் செய்யும் அனைவரும் செய்யும் கோல்மால் எல்லாம் செய்ய வேண்டியது ,கேட்டால் நோ லவ்ன்னு சீன் போட வேண்டியது .....இவனை ......ஒன்றும் செய்ய முடியாது ....மதுரா நீ களத்துல இறங்கு ......மயிலே மயிலேனா இறகு போடாது ....:cautious::cautious::cautious::rolleyes::rolleyes:)

அவன் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய அவன் கனவு கார் .அதில் தன்னவள் .....அவன் செய்யும் வேலையை மற்ற நால்வரும் கண்டும் காணாமல் இருந்தனர் .மதுரா அவன் ஆமை ஊர்வலத்தை கவனித்தாலும் எதையும் சொல்லாமல் தீவிர யோசனையில் இருந்தாள் .

(தலை யோசிக்க ஆரம்பிச்சாச்சு .......மவனே நீ காலி )

"எந்த கோட்டையை பிடிக்க மதுரா தேவியார் இந்தளவூ யோசிக்கிறார் என்பதை அடியேன் அறியலாமா ..."என்றான் விஜய் காரின் உள் மௌனம் தாங்க முடியாது .

மெல்லிய புன்னகை மட்டுமே சிந்திய மதுரா தன் தலையை இடம் வலம் ஆட்டிவிட்டு வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் .

"பேசினா முத்து உதிர்த்துடும் பாரு ....."என்று சத்தமாகவே முணுமுணுத்தான் விஜய் .கடுப்பானவன் ஒரு பென்ட்ரைவ் ஒன்றை கார் மியூசிக் சிஸ்டத்தில் நுழைத்தான் .

"தேரே மேரே பீச்சு மெயின்
கைஸா ஹை யே பந்தன் அஞ்சானா
(உனக்கும் எனக்கும் இடையில் உள்ள பந்தம் -முடிச்சு என்ன )
மெயின் நஹி ஜானா ,தூ நஹி ஜானா
(அது எனக்கும் தெரியாது ....உனக்கும் தெரியாது )
ஒருவர் இழுக்கும் போது மற்றவர் ஓடி வருகிறோம்
மெல்லிய நூல் இழையால் இழுக்கப்பட்டு
காதலில் பைத்தியமாய் இருப்பவர் போல்
என் கைகள் அணியும் வளையல்கள் உன் கரங்கள் மூலமாகவே
என் பல்லக்கு வரும் உன் வாசல் மட்டுமே
எது நடந்தாலும் .......


என்ற பாடலை கூட சேர்ந்து பாடி கொண்டு இருந்தான் விஜய் ....அவன் குரல் வளத்தில் அந்த காரில் இருந்தவர்கள் மயங்கி தான் போனார்கள் .அத்தனை உயிரோட்டம் ....மனதை மயக்கும் குரல் .

இவள் ஒரு சாஹரிட்டி நிகழ்ச்சியில் ரசித்து பாடிய பாடல்களில் இதுவும் ஒன்று .ஆனால் காரில் ஒலித்த பாடல் லதா மங்கேஸ்கர் குரலில் இல்லை .இவள் குரலில் ஒலித்து கொண்டு இருந்தது .அவனே அறியாமல் இன்னொரு clue கொடுத்து கொண்டு இருந்தான் .மதுராவின் முகம் மேலும் யோசனையை தத்து எடுத்தது .

அவள் வீட்டினருகே கார் வந்து விட ,வெகு வேகமாக கார் கதவை திறந்து கீழ் இறங்கினாள் .மற்றவர்கள் இறங்க இறங்கும் வரை காத்து இருந்தவன் ,கடைசியாக இறங்க முயன்றான் .

"விஜய் !என் பர்ஸ் பின்னால் விழுந்து இருக்கு கொஞ்சம் சீட்டுக்கு அடியில் இருந்து எடுத்து கொடுங்கள் ...."என்றாள் மதுரா .
கார் சீட்டில் முட்டி போட்டு கீழ் குனிந்து அவள் இருந்த இடத்தில் அவன் தேடி கொண்டு இருக்க இந்த ஓட்டுனர் கதவூ பக்கம் நின்றவள் ,கார் கீயை எடுத்து கதவை அறைந்து சாத்தி விஜயயை உள்ளே வைத்து பூட்டினாள் .

அதிர்ந்து திரும்பினான் விஜய் .உள்ளே இருந்து 'என்ன செய்கிறாய் ?என்ன இது ?என்று அவன் கத்தினான் .

தன் வாய் மீது ஒரு விரல் வைத்து அமைதியாய் இருக்கும் படி வெளியில் இருந்து சைகை காட்டியவள் ,தான் உள்ளே சென்று திரும்ப வருவதாக சைகை காட்டி விட்டு உள்ளே சென்றாள் .தலையில் கையை வைத்து கொண்டு அமர்ந்து விட்டான் விஜய் .

அதற்குள் வீட்டினுள் வந்தவர்களை வரவேற்று ,சந்தோசத்துடன் பேசி கொண்டு இருந்தார் பவானி .தன் அருகே பூரணியை வைத்து அவள் கைகளை பிடித்து கொண்டு இருந்தவர் சட்டென்று அதிர்ந்தார் .

"அம்மாடீ பூரணி .....என்னமா இது உன்னை யாரும்மா அடித்தது ????கன்னத்தில் விரல் தடம் பதிந்து கன்னமே இப்படி கன்னி போய் கிடக்கு .....சுபா !ஐஸ் பேக் கொண்டு வாம்மா ..."என்று பதறினார்

"ரொம்ப பதற வேண்டாம் அம்மா .....நான் தான் நாலு காட்டு காட்டினேன் ...."என்றாள் கதவின் அருகே நின்று மதுரா .

எழுந்து வந்த பவானி ஓங்கி மதுராவின் கன்னத்தில் ஒரு அறை விட்டார் ."என்னடி நினைச்சுட்டு இருக்கே ....அதுவே குழந்தை பொண்ணு .....உன் வெறியாட்டத்தை எல்லாம் அவ மேல காட்டி இருக்கே ...பைத்தியமாடீ புடிச்சு இருக்கு உனக்கு ....."என்றார் கோபத்துடன் .

"யாரு ......யாரு ....இவ குழந்தை .....எந்த ஊரில்மா குழந்தை,'என் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை 'என்று எழுதி வைச்சுட்டு தற்கொலை செய்ய ஊர் விட்டு ஊர் வந்து இருக்கும் .....இவ குழந்தையா .....'கண்ணு !தற்கொலை செய்ய போறீயா ...ஆல் தி பெஸ்ட்ன்னு 'விஷத்தையோ ,தூக்கு கயித்தையோ நீங்க தூக்கி கொடுங்க .....கரெக்ட்டா இருக்கும் ...."என்றாள் மதுரா

"என்னது ...தற்கொலையா ....."என்று பதறி ,திகைத்து திரும்பினார் பவானி ."ஐயோ ....என்ன பூரணி கண்ணு ...எதுக்குமா இந்த முடிவூக்கு வந்தே ?"என்றார் அவளை அணைத்து கொண்டு .

"ஹ்ம்ம்ம் .....வேறு என்ன உலக நன்மைக்காகவா தற்கொலை செய்ய போறா .....எல்லாம் காதல் தோல்வி தான் .....என்ன ஒரு லவ் ஸ்டோரி தெரியுமா அம்மா .....எங்கேயுமே நான் கேட்டதும் இல்லை ...படிச்சதும் இல்லை .....இந்த மஹாராணியை எவனோ ஒரு கிறுக்கன் காப்பாத்தி நைட் புல்லா துணை இருந்து இருக்கான் ....அந்த ஒரே ராத்திரியில் தாயுமானவனாக ,ஒரு நண்பனாக ,ஒரு பாதுகாவலனாக இருந்து இருந்தவனுக்கு நன்றி சொல்வதற்கு பதில் இந்த அம்மாயி தன் மனதையே கொடுத்து இருக்கா .இந்த விஷயம் நாலு வருசமா வேறு யாருக்கும் தெரியாது ....நாலு வருசமா அவனை தன் கணவனாக நினைத்து அவன் கூட மனதளவில் குடும்பம் நடத்தி ,பேரன் பேத்தி வரை எடுத்துட்டா ......இவ காதலிப்பது அவனுக்கு தெரியவே தெரியாது ....போய் அவன் கிட்டேயாவது சொல்லி இருக்கனும் ,இல்லை பேரெண்ட்ஸ் கிட்டயாது சொல்லி இருக்கனும் .....அவனுக்கு வேறு பெண்ணோடு மேரேஜ் பிக்ஸ் செய்தாங்கன்னு கேள்வி பட்டு இருகாங்க மேடம் ......சோ கிழக்கே போகும் ரயில் ,கடலோர கவிதைகள்ன்னு முடிவுக்கு வந்துட்டா .....இப்போ சொல்லுங்க அம்மா ....இவளை நான் அடித்ததில் தப்பு இருக்கா ?"என்றாள் மதுரா

PENANCE WILL CONTINUE.......
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 26

"ஏன் பூரணி .....இப்படி முடிவூ எடுக்கும் முன் அப்பா ,அம்மா ,பாட்டி பத்தி நெனைச்சு பார்க்கவே தோணலியா உனக்கு .....வாய் திறந்து இவங்க கிட்டே ஒரு வார்த்தை சொல்லி இருந்தா அந்த பையனுக்கே உன்னை பேசி முடிச்சு இருப்பங்களே ...."என்றார் பவானி கண்ணில் நீர் வழிய .

"அது எப்படி அம்மா சொல்லுவா ...அதான் அவனுக்கும் வேறு பொண்ணுக்கும் திருமணம் என்று பெரியவங்க பேசி வைத்து இருக்காங்கலே ......இவங்க கிட்டே சொல்லி இருந்தா மட்டும் என்ன செய்து விட போறாங்க ?"என்றாள் மதுரா .

"லூசாடீ நீ ?எத்தனையோ திருமணம் மணமேடை வரை வந்து கடைசி நிமிடத்தில் கூட ஜோடி மாறி போய் இருக்கு ...என்னவூ பேசி வைத்து இருக்காங்களாம் ....எப்படி போய் பேசுவதுன்னு தயங்கிட்டு இருக்கே ....."என்றார் பவானி கடுப்போடு

"ஓஹ் அப்படி ஒன்னு இருக்கோ ......சரி மாப்பிளை வீட்டில் இவங்க போய் பேச தயங்கறாங்க மா ....பொண்ணு அவன் குடும்ப நண்பரின் மகளாம் .......ரொம்ப அழகா வேறு இருப்பாளாம் அதான் .,..."என்றாள் மதுரா .

(இது வரை ஒகே ...இப்போ இந்த ஸெல்ப் டப்பா தேவையா மதுரா ?????:cautious::cautious:)

"யாராய் இருந்தா என்ன ....அவ எவ்வளவூ பெரிய அழகியா இருந்தா என்ன .....இவங்க குடும்பம் போலே வருமா ...இல்லை பூரணியின் அழகு ,குணம் முன் அந்த பெண் தான் நிற்க முடியுமா ....நீங்க வாங்க அக்கா நாம போய் பேசலாம் ......"என்றார் பவானி .

"அம்மா !இது ரொம்ப மோசம் ....என்ன தான் உங்களுக்கு உங்க கோ -சிஸ்டர் மேல இந்த அளவூ பக்தி இருந்தாலும் அதற்குன்னு என்னை அழகி இல்லை என்று சொன்னதை மிக வன்மையாக கண்டிக்கிறேன் யுவர் ஹனேர் "என்றாள் மதுரா

"என்னடி உளறிட்டு இருக்கே ....எவளையோ சொன்னா உனக்கு என்ன ?"என்றார் பவானி

"அந்த எவளோ இந்த இவளே "என்று கையால் சைகை காட்டிய மதுரா என்ன சொல்கிறாள் என்று பவானிக்கு விளங்கி விட அதிர்ந்து போனார் .
revathi.jpg

தன் தாயின் அருகே அமர்ந்து அவர் கையை தன் கையில் வைத்து கொண்ட மதுரா ,"நம்ம பூரணி காதலித்து புருஷனாய் நினைத்து நாலு வருசமாய் வாழ்ந்து வந்தது ,அவன் கிடைக்கவில்லை என்று தற்கொலைக்கு முயன்றது எல்லாம் கார்திக்க்காக தான் அம்மா ......இப்போ சொல்லுங்க பூரணிக்காக கோசலை அத்தை கிட்டே பேச போறீங்களா இல்லை என் மக வாழ்க்கை தான் முக்கியம் என்று பக்கம் பக்கமாய் டயலாக் விட போறீங்களா ....இருங்க இன்னும் கொஞ்சம் இருக்கு .......கோசலை அத்தை முதல் முறை பெண் கேட்டு வந்த போது கார்த்திக் கை உடைந்ததே ,அது தானாக உடையலை ....கார்த்திக் சார் அவராக அந்த பேச்சை நிறுத்த உடைத்து கொண்டது ....ஏன் என்று கேட்கறீங்களா .....தங்கச்சியாக மனதில் நினைக்கும் என்னோடு அவனால் திருமணம் என்பதை ஏற்க முடியலை ......ரகுவும் அவனும் தானே மா என்னை தூக்கி வளர்த்தாங்க ....எங்க ரெண்டு பேருக்கும் அண்ணன் தங்கை என்ற உணர்வூ தான் இருந்தது .......கணவன் மனைவியாக நினைப்பே குமட்டுது மா .......பூரணிகாக இதை சொல்லை ......பூரணி என்ற ஒரு பெண் வரவில்லை என்றால் கூட இதே நிலை தான் எனக்கும் கார்திக்க்கும் ......அவன் போட்டோ ,வீடியோ விஷயத்தை இதனால் தான் ஊதி பெருசாக்கி ,திருமண பேச்சை நிறுத்தி விட்டு வேலைக்கு ஓடினேன் .......பெரியவங்க உங்களுக்கு ஆசை இருக்கலாம் ....ஆனா எங்க மனதில் இருப்பது பாசம் மட்டும் தான் ......புரிஞ்சுக்கோங்க மா ....கார்த்திக் எனக்கு அண்ணன் போன்றவன் ......"என்றாள் மதுரா .

சற்று நேரம் எதையும் பேசாத பவானி ,"சொல்லி இருக்கலாமே மதுக்குட்டி .....ரொம்ப கஷ்டமா இருக்குடா ...இதை சொல்ல நீயும் அவனும் பயந்து ,தயங்கி .....ரொம்ப படுத்திட்டேனா .......சாரி டா கண்ணம்மா .....நீ கவலை படாதே....பூரணி தான் கார்த்திக் மனைவி ......கோசலை கிட்டே நான் பேசிக்கறேன் ....இனி உன் விருப்பம் இல்லாமல் உன் திருமணம் பற்றி பேச மாட்டேன் ....நீ யாரை கை காட்டுகிறாயோ அவர் தான் உனக்கு கணவன் ...."என்றார் பவானி மகளை அணைத்து .

"ஹிட்லர் !பிரேக் போடுங்க ...என்ன நீங்க பாட்டுக்கு அரசியல்வாதி election டைம் வாக்குறுதி மாதிரி வாக்கு கொடுத்துட்டே போறீங்க .....சங்கு ஒருத்தர் போதும் உங்களுக்கு சங்கு ஊத .....ஆத்துகாரரை மறந்துட்டு பேசிட்டே போறேளே மாமி ...."என்றாள் மதுரா .

"அவர் கிடக்கார் ......விட்டு தள்ளு .....கார்த்திக் பூரணியை கூட்டிட்டு ஓடி போய்ட்டான் ரீல் விட்டா போச்சு .....ஆனா ஒண்ணு உன் சம்மதம் இல்லாம உன் திருமணம் நடக்காது .....கோசலை ,அண்ணாவை நாளைக்கே வர சொல்லிடுறேன் ......"என்றார் பவானி

"சோ ஸ்வீட் ஆப் யு மீ டியர் அம்மா .......திருமணம் முடிந்து குன்னூர் போகும் வரை பூரணி நம் கூடவே இருக்கட்டும் .......எவ்வளவூ சீக்கரம் முடியுமோ அவ்வளவூ சீக்கரம் இவங்க மேரேஜ் முடிச்சிடலாம் ......பெரியப்பா ...பெரியம்மா ...பாட்டி ....இப்போ ஒகேவா .....சோ ரிலாக்ஸ் சா இன்னைக்கு இங்கேயே தங்கிடுங்க .....கார்த்திக் !என்னால் முடிஞ்ச தரகர் வேலை செய்துட்டேன் .....சோ எல்லோருக்கும் ஈவினிங் ஸ்னாக்ஸ் ,நைட் விருந்து உன் ட்ரீட் ......"என்றவள் ,"அம்மா !கருணா சார் ஏதோ அக்ரீமெண்ட் விஷயமா வர சொன்னார் .....போய் முடிச்சு கொடுத்துட்டு வந்துடுறேன் ....."என்றவள் அனைவரிடமும் விடை பெற்று வெளியே வந்தாள் .

கார் கதவை திறந்தவள் ,"சாரி விஜய் ...அம்மாவை சரி செய்துட்டு வர லேட் ஆகிடுச்சு ....சாரி யார் கொஞ்சம் நகர்ந்து பேசேன்ஜ்ர் சீட்டில் உட்காருங்க விஜய் ."என்றாள்

அவளை முறைத்த விஜய் ,"எதுக்கு நான் நகரனும் ...முடியாது ...கீழே இறங்கு .....டைம் ஆச்சு நான் கிளம்பனும் ....சாவியை கொடு ."என்றான்

"நீங்க நகரவில்லை என்றால் உங்க மடி மீது தான் நான் அமர்ந்து வண்டி ஓட்டணும் .....உங்களுக்கு ஒகே னா எனக்கு ப்ரோப்லேம் இல்லை விஜய் ...."என்றவள் உள்ளே ஏறி விட ,பதட்டத்துடன் பக்கத்துக்கு சீட்டுக்கு]நகர்ந்தான் விஜய் .

"தட்ஸ் எ குட் பாய் ......"என்றவள் காரை கிளப்பினாள் .
DhEHJiCUcAA23r-.jpg

(ஐயோ ...ஐயோ ஒன்றும் தெரியாத அப்பாவி ஆண் பிள்ளையை பட்ட பகலில் கடத்திட்டு போறாளே ......காலம் கெட்டு போச்சு ......விஜயயை காப்பாற்ற யாருமே இல்லையா ........தெய்வமே இந்த அநியாயத்தை தடுக்க யாருமே இல்லையா )
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
(நிறைய பேர் சூர்யாவை காணோம் என்று கேட்டு கொண்டே இருந்தனர் .சோ இப்போதைக்கு கொஞ்ச தூரம் மதுராவும் ,விஜய்யும் காரில் தனியாக போகட்டும் ......ரொம்ப நாள் கழிச்சு விஜய் தனியா மதுரா கூட இருக்கான் ....சோ நாம அவர்களை டிஸ்டர்ப் செய்யாமல் சூர்யாவை ஒரு லுக் விட்டுட்டு வந்துடலாம் .)

ஊர்வசி வீட்டில் மதுரா பூரணி rescue மிஷன் ஈடு பட்டு இருந்த போது உத்தம் சூர்யாவின் பர்சனல் பிட்னெஸ் அறைக்குள் சென்றான் .

"பாஸ் !"என்றான் உத்தம்

"சொல்லு உத்தம் .......டுடே என்ன ஸ்பெஷல் ?"என்றான் தன் exercise தொடர்ந்தவாறே.
Ram-Charan_2.jpg

"பாஸ் !நேத்து நைட் நீங்க தூங்கிட்டிங்க .....சோ சோனா சைன் செய்த டாக்குமெண்ட்ஸ் உங்க கிட்டே கொடுக்கலை ...இந்தாங்க ..."என்றவன் மூன்று அக்ரீமெண்ட்களை சூர்யாவிடம் கொடுத்தான் .

முதல் அக்ரீமெண்ட் மதுரா வேலை ரிசைன் செய்தால் நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டிய ஒரு கோடி ரூபாய் தேவை இல்லை ....மதுராவின் ஆபீஸ் வேலையில் எந்த தப்பும் இல்லை .கஜா இண்டஸ்ட்ரீஸ் விட்டு மதுரா செல்வது அந்த நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு 'என்று அச்சடிக்க பட்டு இருக்க சோனா சைன் போட்டு அது ரிஜிஸ்டர் செய்ய பட்டு இருந்தது .

இரண்டாவது அக்ரீமெண்ட் சங்கரன் வாங்கிய கடன் வட்டியுடன் ,ரொக்கமும் பெற்று கொண்டதாகவும் ,எந்த கடனும் அவர் மேல் இல்லை என்று இருந்ததிலும் சோனா கையெழுத்து போட்டு இருந்தாள் .அதுவும் ரிஜிஸ்டர் செய்ய பட்டு இருந்தது.

"உத்தம் !ஈவினிங் .....மதுரா கிட்டே இந்த அக்ரீமெண்ட்ஸ் ரெண்டையும் கொடுத்திடு .....அங்கே ஒரு லெட்டர் இருக்கு .....மதுராவுக்கு என் ஆஃபிஸில் பி .ஏ வேலைக்கு அப்பாய்ண்ட்மென்ட் ஆர்டர் ......"என்றான் சூர்யா அந்த இரண்டு டாக்குமெண்ட்ஸ் உத்தமிடம் கொடுத்த படி

"பாஸ் !நீங்க போய் கொடுத்தா சினிமாவில் ,கதைகளில் வருவது போலே மேடம் இம்ப்ரெஸ் ஆகிடுவாங்க தானே .....எதற்கு சான்ஸ் மிஸ் பண்றீங்க ....நீங்களே போய் கொடுங்க .....நடுவில் நான் எதற்கு நந்தி மாதிரி ????"என்றான் உத்தம் .

"ஆஸ் எ பிரண்ட் இதை நான் செய்யறேன் .......இதை வைத்து மதுராவின் மனதில் இடம் பிடிக்க நினைப்பது கேவலம் உத்தம் ......எங்க பிரண்ட்ஷிப்க்கு இது ஒத்து வராது .....அவ என்னை எனக்காக ஏற்கணும் .....இதுக்காக எல்லாம் இல்லை ."என்றான் சூர்யா புன்னகைத்த படி .

"அப்போ அந்த முன்றாவது டாக்குமெண்ட் விஜய் கிட்டே கொடுத்துடுவா ?"என்றான் உத்தம் சூர்யா கையில் இருந்த கடைசி டாக்குமெண்ட் சுட்டி காட்டி .

Ram-Charan-_shirtless_zanjeer.jpg

முன்றாவது அக்ரீமெண்ட் மேல் சூர்யாவின் கண்கள் மறுபடியும் விழுந்தது.கொட்டை எழுத்தில் இருந்தது 'டைவோர்ஸ் நோட்டீஸ் 'என்று .மதுராவின் நாலு கோடிக்கு சைன் வாங்கும் போது விஜய்க்கும் ,சோனாவிற்கும் விவாகரத்து பாத்திரத்திலும் கையெழுத்து சோனாவிற்கே தெரியாமல் வாங்கி இருந்தனர் .சங்கரன் விஷயத்தில் சோனா செய்தது ,திரும்ப அவளுக்கே சூர்யா ரூபத்தில் திரும்ப வந்து விட்டது .அந்த பத்திரத்தில் சென்னை உயர் நீதி மன்ற chief ஜஸ்டிஸ் கையெழுத்து போட்டு விவகாரத்தை உறுதி செய்து இருந்தார் . .மீதம் தேவைபடுவது விஜய் கை எழுத்து மட்டுமே .

(என்னது ..........சோனாவுக்கும் ,விஜய்க்கும் சட்ட பூர்வ விவாகரத்து ஆகிடுச்சா !!!!!ஒட்டு மொத்த இந்தியவிற்கும் நாளை அரசு விடுமுறை அறிவிச்சுடுங்க பா ....எவ்வளவூ நல்ல நாள் .....விஜய் கண்ணா உனக்கு விடுதலை விடுதலை .....விடுதலை .......உன் பாதை பிரீ .......எங்கே ஐயர் ,எங்கே மண்டபம் ....எங்கே மேளா தளம் ....எங்கே மாலை ...எங்கே தாலி .....எங்கே மதுரா ....கூட்டி வந்து மணமேடையில் அமர வையுங்க பா .......விஜய் வந்து ஒழுங்கு மரியாதையா தாலி கட்டு .:love::love::love::love::love::D:D:D)

PENANCE WILL CONTINUE................
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 26(1)
ram-charan-story_647_050716035725.jpg


"என்ன பாஸ் இது .....இது கொடுத்தா விஜய் எவ்வளவூ சந்தோசபடுவார் .....அவர் நாலு வருட நரகத்தில் இருந்து விடுதலை கிடைத்து விடுமே ....."என்றான் உத்தம்

"உத்தம் !இது மட்டும் விஜய் கையில் கிடைச்சுதுன்னு வை .....அவ்வளவூ தான் .....மதுராவை தூக்கி போய் அவன் தாலி கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது .......நான் மதுராவிற்கு தான் ஹீரோ .....விஜய்க்கு நான் வில்லன் ........கொஞ்சம் நானும் selfish தான் ....இந்த தடவை மதுரா என் கையில் இருந்து தப்ப முடியாது ...தமிழில் ஒரு பழமொழி கேள்வி பட்டு இருக்கியா உத்தம் ????'தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும் என்று சொல்வாங்க .அதே மாதிரி தான் இது ......நான் நல்லவன் தான் ....ஆன விஜய் அளவுக்கு நல்லவன் இல்லை .....அவனை மாதிரி தியாக செம்மல் வேலை எல்லாம் என்னால் செய்ய முடியாது .அவனுக்கு
வேண்டும் என்றால் கார்திக்க்கு மதுராவை தாரை வார்க்க மனம் இருக்கலாம் ......ஏதோ சோனா கழுத்தில் தாலியே கட்டாமல் ,அவளை திருமணம் செய்ததாகவும் அதனால் அவனுக்கு மதுராவை மணக்கும் தகுதி இல்லை என்றும் அவன் லூசு மாதிரி செய்யும் வேலை எல்லாம் எனக்கு சாதகமாக தான் இருக்கிறது ...இந்த பத்திரம் அவன் கையில் கிடைத்தா எப்படி மாறுவான்ன்னு சொல்ல முடியாது .....சோ இந்த விஷயம் அவனுக்கு தெரியாத வரை சந்தோசம் ......சோனாவுக்கு இப்படி நாம் சைன் வாங்கியது தெரியாது ......உயிர் போகும் நிலை வந்தாலும் கூட இவளாகவே விஷம் சாப்பிட்டுட்டு விஜய் தான் கொடுத்தான்ன்னு சொல்லி அவனை கம்பி எண்ணும் வரை விடமாட்டா .....இல்லை திவாகர் விட்டு ரூபிணிக்கு tourture தர ட்ரை செய்வா .....விஜய் திவாகரை கொல்லுவான் ....சோ எந்த பக்கம் பார்த்தாலும் விஜய் நிலைமை பரிதாபம் தான் .....மதுரா எனக்கு தான் மனைவி ஆவா ."என்றான் சூர்யா ஜூஸ் அருந்தியபடியே .

(எப்பா ....என்னமா பிளான் போடுறே சூர்யா .....கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நீ தானா ......விஜய் என்னமா செய்ய போறே ...:eek::eek::eek::eek::oops::oops::oops::oops:.)

"ஆல் தி பெஸ்ட் ...ஆல்வின் சார் ரிப்போர்ட் செய்து இருக்கார் ."என்றான் உத்தம் .

"என்ன ?"என்றான் சூர்யா அது வரை இருந்த இலகு தன்மை மறைந்து

"சந்திரா மேடத்தை கடத்த நினைத்தாங்களே ......அது அவங்க பெயரில் இருக்கும் அந்த 50 கோடி ஈ .சி .ஆர் பரம்பரை சொத்துக்காக தான் என்கிறார் ..... அந்த பக்கம் மத்திய அரசாங்கம் புது ஹார்பர் கொண்டு வர போறாங்களாம் .....லாஜிஸ்டிக்ஸ் சப்போர்ட் வேறு உண்டாம் ....கிட்டத்தட்ட 4000 கோடி ப்ராஜெக்ட் இருக்கலாமாம் .....இன்னும் அரசு அறிவிப்பு வரவில்லை .....சோ சந்திரா மேடம் கடத்தி அவங்களை திருமணம் செய்து அந்த இடத்தை பைசா செலவு இல்லாமல் அடைய திட்டம் அது என்கிறார் .....இந்த விஷயம் சென்னையில் உள்ள 3 மிக பெரிய புள்ளிகளுகு மட்டுமே தெரியுமாம் ...முதல் ஆள் கேசவ் ராவ் ....அவர் இது மாதிரி செய்ய மாட்டார் .....ரெண்டாவது கஜேந்திரன் ......மூன்றாவது மதுரை சுந்தரபாண்டியன் ....கடைசி நொடியில் வெற்றி குரூப்ஸ் ருத்ரா ......இவங்களில் யாரவது ஒருத்தர் தான் என்கிறார் ஆல்வின் ."என்றான் உத்தம் .

கேசவ் ராவ் ,மதுரை சுந்தரபாண்டியன் ,ருத்ரா இந்த மாதிரி கேவலமான வேலை எல்லாம் செய்ய மாட்டார்கள் .100% உறுதி .கஜேந்திரன் கார்னெர் செய்ய சொல்லிடு ...நம்ம ஆட்களுக்கும் நியூஸ் அனுப்பிடு ...."என்றான் சூர்யா யோசனையாக

"இன்னொரு விஷயம் .....கஜாவிற்கும் அந்த சுமனிற்கும் உள்ள லிங்க் சோனா மட்டும் தான் ......வேறு எப்படி லிங்க் என்று தெரியவில்லை ......கஜாவும் சுமனும் சேர்ந்து ஏன் இதை செய்து இருக்க கூடாது ????அவனுக்கு பெண் ,இந்த ஆளுக்கு இடம் ...."என்றான் உத்தம்

"இருக்கலாம் ......அந்த ஆள் தும்மினால் கூட எனக்கு நியூஸ் வரணும் .....அவங்க வீட்டு எல்லா இனகமிங் ,அவுட் கோயிங் கால்ஸ் ,சோசியல் மீடியா மெசேஜ் எல்லாம் ட்ராக் செய்ய சொல்லிடு .....பெஸ்ட் 24 ஹவுர் surveillance இருக்கட்டும் ......அந்த இந்தர் இண்டஸ்ட்ரீஸ் ஷேர் நம்ம கிட்டே எவ்வளவூ இருக்கும் உத்தம் ???"என்றான் சூர்யா தாடையை தேய்த்த படி ....

"8-10% இருக்கலாம் சார் ....."என்றான் உத்தம் .

"குட் .....மதுரா கிட்டே அக்ரீமெண்ட் கொடுக்க போகும் போது ருத்ரா கிட்டே இந்த ஷேர் கொடுத்துடு .....எதிரிக்கு எதிரி நண்பன் ..........சின்ன தடயம் கஜா ,சுமன் மேல் கிடைக்கட்டும் .......என் கையால் தான் அவர்களுக்கு சாவு .....அந்த சீனா டீல் என்ன ஆச்சு ?""என்றான் சூர்யா கண்கள் சிவக்க .

"எல்லாமே ஹை எண்டு உடைகள் .......இதை வைத்து தான் போட்டதை பிடிக்கலாம் என்று அந்த ஆள் இருக்கிறான் .....கருணா சார் ஓரம் கட்டிட்டு எல்லா வேலையையும் அவரே செய்ய போவதாக கேள்வி .....நிச்சயம் கடன் வாங்கி தான் செய்ய முடியும் ......லீகல் ரூட் போகணும் என்று பேங்க் லோன் அப்ளை செய்வார் ...சார்ஸ் விற்கலாம் ......"என்றான் உத்தம்

"வெற்றி குரூப்ஸ் இந்த தடவை இறங்கலையா உத்தம் ???இவ்வளவூ பெரிய டீல் .....எப்படி விட்டு கொடுத்தாங்க ????"என்றான் சூர்யா யோசனையோடு

"தெரியலை சார் .....bidding ப்ரோசிஸ் மூலம் தான் அந்த சீனா கம்பெனி இந்த டீல் ஏற்பாடு செய்தது .ஆனா இந்த தடவை கஜாவின் quote தான் ரொம்ப கம்மியா இருந்தது .....வெற்றி குரூப்ஸ் quote ரொம்ப அதிகம் ......கஜா இதை எப்படி செய்தார் என்று புரியவில்லை .."என்றான் உத்தம் .

"நாம உள்ளே போக வேண்டி இருந்தா அதற்கு தயாராக இரு உத்தம் ......அந்த ஷிப்மென்ட் சீனா ரீச் ஆக கூடாது ......seize செய்ய முடியலைன்னா ஹோமம் வளரத்துடு ......அந்த ஆள் ஜெயிக்க கூடாது ."என்றான் சூர்யா ஒரு வித குரலில் .....அதாவது கண்டைனரில் போகும் ஏற்றுமதி உடைகளை மொத்தமாக எரிக்க சொல்கிறான் ......


"
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"இன்னொரு விஷயம் ....நேத்து நைட் நாம ட்ராப் செய்த பிறகு சோனா ஹெவி ட்ரக்ஸ் எடுத்துட்டு patrol இருந்த ஏ .சி .பி ராஜேஸ்வரி கிட்டே ஆட்டம் காட்டி இருக்கா ......கையில் வேறு தடை செய்ய பட்ட போதை பொருட்கள் லீகல் லிமிட் தாண்டி வைச்சு இருக்கா .....பெயில் கூட கிடைக்காத சட்டத்தில் எப் .ஐ .ஆர் போட்டுருக்காங்க ....இப்போ ஹாஸ்பிடலில் இருப்பதாக கேள்வி ......விஷயம் கேள்வி பட்டு கஜா போய் இருக்கார் ....."என்றான் உத்தம் .

"மதியத்திற்குள் வெளியே வந்துடுவா ...."என்றான் சூர்யா எதிர்காலத்தை கணிப்பவன் போல் .

"வர முடியாது சார் ....un bailable section ......"என்றான் உத்தம் அதிர்ந்தவனாய் .

"நான் சொல்வது நடக்குதா இல்லையா என்று பாரு ...."என்றான் சூர்யா .

அதே சமயம் சென்னை கமிஷனர் அலுவலகம் .ஏ .சி .பி ராஜேஸ்வரி பரபரப்பாக அனுமதி பெற்று உள்ளே நுழைந்தார் .உள்ளே நுழைந்தவர் அங்கு இருந்தவர்களை கண்டு ஒரு நொடி அதிர்ந்து போனார் .அந்த அறையில் மத்திய அமைச்சர் ,நாட்டின் மோஸ்ட் பேமஸ் கிரிமினல் லாயர் ஆதிசேஷன்,சென்னை உயர் நீதி மன்ற நீதிபதிகளில் ஒருவர் ,ஹியூமன் ரைட்ஸ் கமிஷன் ஆணையர் ,கஜேந்திரன் ,சோனா ,மற்றும் ஒருவன் நின்று இருந்தனர் .

"சார் !"கமிசினருக்கும் ,மற்றவர்களுக்கு ஒரு சலூட் வைத்தார்.

"மிஸ் .ராஜேஸ்வரி !உங்களை பத்து நாள் சஸ்பெண்ட் செய்து இருக்கேன் .....உங்க மேல ஹியூமன் ரைட்ஸ் கமிஷன் வழக்கு பதிவு செய்து இருக்கு .அந்த விசாரணை முடிந்த பிறகே நீங்க டூட்டியில் ஜாயின் செய்ய முடியும் ...."என்றார் கமிஷனர் .

"சார் !ரீசன் தெரிஞ்சுக்கலாமா ?"என்றாள் ராஜேஸ்வரி .
1524343355_hqdefault (1).jpg

"சொசைட்டியில் நல்ல நிலையில் இருக்கும் லீடிங் இண்டஸ்ட்ரியலிஸ்ட் கஜேந்திரன் சார் பேத்தி மீது முன் பகை காரணமாக நீங்கள் கஞ்சா வழக்கு பதிவு செய்து இருப்பது ......."என்றார் லாயர் .

"சாட்சியோடு தான் பிடித்தேன் .....எல்லாத்துக்கும் வீடியோ ஆதாரம் இருக்கு ..."என்றார் ராஜேஸ்வரி .

"எங்கே அந்த ஆதாரம் ?"என்றார் லாயர் .

"இதோ சார் ."என்றார் ராஜேஸ்வரி கமிஷனர் இடம் ஒரு c .d யை கொடுத்து .

அதை ஓட விட்டால் அதில் ராஜேஸ்வரி சோனாவை அடிப்பது மட்டுமே பதிவு ஆகி இருந்தது.அதுவும் மறுபடியும் மறுபடியும் ....வேறு எதுவுமே இல்லை .திகைத்து போய் நின்றார் ராஜேஸ்வரி .

"பாருங்க சார் ....எப்படி மிருகத்தனமாய் ஒரு அப்பாவி பெண்ணை அடித்து இருகாங்க .....யூனிபோர்ம் போட்டா எப்படி வேண்டும் என்றாலும் அடிக்கலாம் என்று சட்டம் இருக்கா என்ன ???"என்றார் லாயர் .

"கையும் களவுமாக தடை செய்ய பட்ட போதை பொருட்களுடன் தான் இவர்களை கைது செய்தேன் சார் ."என்றார் ராஜேஸ்வரி .

"அந்த பையே சோனா மேடத்தினுடையது கிடையாது .கீழே கிடந்த பையை உங்க கிட்டே கொடுக்க வந்தவர்களை தான் நீங்க இப்படி அடித்தது .நீங்க அடிச்ச அடியில் தான் அவங்க மயக்கம் போட்டு விழுந்திருக்காங்க ....மெடிக்கல் ரிப்போர்ட் இது ....அந்த பைக்கு சொந்தக்காரன் இதோ இங்கே நிற்கிறானே இந்த கேடி முனியன் தான் .அவன் தான் வெற்றி குரூப்ஸ் சொல்லி சோனா மேடம் பையை மாற்றி கொடுத்தது ....சோ நீங்க விசாரித்து ,ஸ்டேஷனில் வைத்து அடித்து இருக்க வேண்டியது அந்த வெற்றி குரூப்ஸ் வெற்றியையும் ,ருத்ராவையும் .....இவன் அவங்க கிட்டே வேலை செய்பவன் ....."என்றார் லாயர் .

"சார் நீங்க சோனா மேடத்தை கூட்டிட்டு கிளம்பலாம் .....உங்களை மாதிரி நல்லவர்கள் எல்லாம் போலீஸ் அலுவலகம் பக்கம் வரலாமா .....கிளம்புங்க சார் ...அதான் ஜட்ஜ் சார் வழக்கே ஜோடிக்க பட்டது என்று சொல்லி விட்டார்களே ....."என்றார் மத்திய அமைச்சர் .

அவர்கள் அனைவரும் கிளம்பி விட கமிஷனர் எதிரில் உள்ள நாற்காலியில் பொத்தென்று அமர்ந்தாள் ராஜேஸ்வரி ..தண்ணீர் பாட்டில் அவள் புறம் நகர்த்தி வைத்தார் கமிஷனர்.பாதி பாட்டில் குடித்தவள் அவரை நிமிர்ந்து பார்த்தாள் .

இண்டர்காம் ஆன் செய்தவர் ,"வெளியே மிஸ்டர் ஆல்வின் இருப்பார் அவரை என் அறைக்கு வர சொல்லுங்க ."என்றார் .

சற்று நேரத்தில் உள்ளே வந்தான் ஆல்வின் ."என்ன சார் நான் சொன்னது மாதிரி நடந்துடுச்சா .....?"என்றான் அவர் காட்டிய நாற்காலியில் அமர்ந்த படி .
A.jpg

"இதோ மேடம் முகத்தை பார்த்தாலே தெரியலையா ஆல்வின் .....நீ சொன்னது தான் நடந்தது என்று ....ராஜேஸ்வரி ஆல்வின் தெரியுமா ?"என்றார் கமிஷனர் சுதர்சன் .

"மீட் செய்து இருக்கேன் சார் டெல்லியில் ....அந்த டெல்லி பெண்கள் கடத்தல் வழக்கு ...ஆல்வின் சார் தான் ரொம்ப ஹெல்ப் செய்ததாய் என் பிரண்ட் சொல்லி இருந்தார் ."என்றார் ராஜேஸ்வரி .

"இவர் தான் நேத்து நீங்க சோனவை அர்ரெஸ்ட் செய்த உடன் இந்த வழக்கு எப்படி எல்லாம் மாற்ற படும் என்று வார்ன் செய்து விட்டார் .அவர் சொன்ன படியே தான் நடந்து இருக்கு ......ஒரு பக்கம் உங்க சஸ்பெண்ட் .இன்னொரு பக்கம் வெற்றி குரூப்ஸ் ஆளுங்களை போதை மருந்து கடத்தல் வழக்கில் சிக்க வைத்தாகி விட்டது ...."என்றார் சுதர்சன் .

"ஒரே நாள் இரவில் எப்படி சார் ....மத்திய அமைச்சர் ,பேமஸ் கிரிமினல் லாயர் ,ஹை கோர்ட் ஜட்ஜ் ...அந்த அளவூ அந்த சோனா என்ன பெரிய ஆளா ?"என்றார் ராஜேஸ்வரி .

PENANCE WILL CONTINUE.......
 
Status
Not open for further replies.
Top