All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கதை திரி

Status
Not open for further replies.

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"வாட் .....கம் அகைன் .....சிவகாமி மேடம் ,ருத்ரா சார் இதற்கு ஒத்துக்கொண்டார்களா ....இது என்ன புது ட்விஸ்ட் ...நான் வேற தானே கேள்வி பட்டேன் ...."என்றாள் மதுரா .

"அவங்க உனக்கு பாட்டி முறை ....ருத்ரா உனக்கு மாமா முறை ....சும்மா சார் ,மேடம் என்று எல்லாம் சொல்லிட்டு திரியாதே .....அப்புறம் இதை பற்றி சூர்யாவிடமும் ,விஜய் இடமும் நீயே பக்குவமாக சொல்லி விடு ....நாளைக்கு அவங்களோடு உன் பெயர் அடிப்பட கூடாது இல்லை ....அவங்களும் மனதில் ஆசை வளர்த்துக்க வேண்டாம் .....நீயே சொல்லிடு ...."என்று பேசி கொண்டே இருந்தவர் ,கதவை தட்டி விட்டு சிவகாமி ,ருத்ராவோடு உள்ளே வர எழுந்து நின்றார் .

"அத்தை !என்ன நீங்க என்ன இங்கே ?"என்றார்

"மருமக இப்படி ஹாஸ்பிடலில் கிடக்கா .....ஆத்தாக்காரி ஒரு தகவல் சொன்னாயா எனக்கு ...விஷயம் தெரிந்து நானா அடிச்சு பிடிச்சு ஓடியாரேன் ...."என்றவர் ,"என்ன பேத்தி பொண்ணு .....எப்படி இருக்கே ....பார்க்க கொத்தவரங்காய் மாதிரி இருக்கே ..அதான் மயக்கம் போட்டு விழுறே .....திருமணத்திற்கு முன் நல்லா சாப்பிட்டு உடம்பை தேத்திக்கோ ....என் பேரனை கவனிக்கணுமே ..."என்றார் அவர் .

அதை கேட்டு பவானி முகம் மலர ,ருத்ராவின் முகம் அஷ்டகோணலாய் மாற ,மதுராவின் முகம் யோசனையை தத்து எடுத்தது .

"செஞ்சுட்டா போச்சு மேடம் ...."என்றாள் மதுரா

"ச்சூ இன்னும் என்ன மேடம் .....கூடம் என்று சொல்லிட்டு திரியரே ...அழகா ,உரிமையா பாட்டி என்று கூப்பிடு ராசாத்தி ....பவானி நீ போய் நான் குடிக்க காபி வாங்கி வா ....ருத்ரா !டாக்டர் கிட்டே போய் மதுரா சாப்பிடும் மாத்திரை பத்தி எல்லாம் தெரிஞ்சுக்கோ ....டாக்டர் நல்லவர் தானே ,ஒழுங்கா வைத்தியம் பார்ப்பவரா என்று விசாரி ....."என்றவர் அவர்கள் சென்றதும் ,மதுராவின் கட்டிலின் அருகே அமர்ந்து ,"சொல்லு பேத்தி பொண்ணு என் பேரனை கட்டிக்க உனக்கு சம்மதமா ?"என்றார் .

வெளியே வந்த ருத்திராவிற்கு எங்கேயாவது ஓடி விடலாம் போல் தோன்றியது .கையில் மட்டும் ராஜீ கிடைத்தால் அவளை உண்டு இல்லை என்று செய்யும் வெறியே வந்தது அவனுக்கு .அவளும் காலையில் இருந்து விடாமல் இவனை அழைத்து கொண்டு தான் இருக்கிறாள் ....இவன் கால் அட்டென்ட் செய்தால் தானே ....

'இவள் அப்பா விஷயத்தை சொல்லி இருப்பார் ....உடனே மேடம் டென்ஷன் ஆகி இருப்பாங்க .....இவ கால் செய்தால் உடனே அட்டென்ட் செய்யணுமா என்ன ....இத்தனை வருடம் தவிக்க விட்டே இல்லை ....படு ...நல்லா அவஸ்தை படு .....இன்னொருத்தி கழுத்தில் தாலி கட்டுறேன் ...வந்து மூக்கு முட்ட கொட்டிக்கொ ....'என்று உள் மனம் உலைக்களமாக பற்றி எரிந்து கொண்டு இருந்தது .

பாட்டியின் முடிவிலும் ஏதும் தவறு இல்லை என்று தான் அவன் சொல்வான் .....பிடி கொடுத்தலாவது இவளுக்காக பாட்டியிடம் பேசலாம் ....முடியவே முடியாது என்பவளை என்ன தான் செய்வது ?
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யுத்தகளத்தில் நிற்பவர்களிடம் அமைதியை எதிர் பார்க்கும் ஒரு லூசு பெண்ணை காதலித்து விட்டு அவன் படும் அவஸ்தை இருக்கே...கொஞ்சம் அசந்தாலும் ஆப்பு வைப்பதில் ,கொல்வதில் கஜாவை மிஞ்ச உலகில் யாருமே இல்லை என்னும் போது சமாதானம் ,வெள்ளை புறா ,அன்பு பாசம் என்று போகாத ஊருக்கு வழி காட்டும் அதி புத்திசாலி அவன் காதலி .கௌதம புத்தர் ,காந்தியின் பெண் பால் போல் அகிம்சை என்று உபதேசம் செய்து கொண்டு இருப்பவளை என்ன தான் செய்வது .இவள் எல்லாம் போலீஸ் துறைக்கு போனதே பெரிய உலக அதிசயம் .அங்கும் அகுயிஸ்ட்களுக்கு "கோனார் நோட்ஸ் "போல் கிளாஸ் எடுக்கிறாளோ என்னவோ ....யார் கண்டது ......என்றுமே தர்ம மார்க்கம் உதவாது .....அதர்மத்தை தடுக்க தர்மத்தை காப்பாற்ற ,மேலும் பல அப்பாவி மக்கள் பாதிக்க படாமல் தடுக்க சில சமயம் போர் அவசியமாகிறது .இதை தானே கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனுக்கு கீதாஉபதேசமாய் செய்து இருக்கிறார் .

ஓவர்ரா சினிமா பார்ப்பாளோ ...அதில் தான் வில்லன் என்பவன் பேடி மாதிரி ஹீரோவின் ஒட்டுமொத்த குடும்பத்தினரை காவு வாங்குவான் .சில சமயம் "collateral டேமேஜ் "என்று நிஜ வாழ்வில் இவனை போன்றவர்களின் குடும்பத்தினர் மாட்டுவதும் உண்டு தான் .அதற்காக எல்லாம் இவ்வளவூ காலம் போராடி விட்டு கஜாவை ஒட்டுமொத்தமாய் அழிக்க முயலும் சமயத்தில் ,"புத்தம் சரணம்"மா சொல்ல முடியும் ????தன் பாட்டி சிவகாமி போல் எத்தனை பெண்களோ ...எத்தனை குடும்பங்கள் சிதறி போய் இருக்கிறதோ ...இதற்கு எல்லாம் முடிவு கட்டாமல் விட தான் முடியுமா ????

தன் எண்ண போக்கில் உழன்று கொண்டு இருந்தவன் ,"ருத்ரா "என்று பின்னால் இருந்து குரல் கேட்க அதிர்ந்து திரும்பினான் .பின்னால் அவன் எண்ணங்களின் நாயகியே நின்று இருந்தாள் .

முகம் வீங்கும் வரை நன்றாக அழுது ,அதை மறைக்க ராஜீ செய்து இருந்த மேக் அப் ருத்ராவின் கண்களில் இருந்து தப்பவில்லை .எதையும் பேசாமல் அங்கு இருந்து ருத்ரா நகர முயல ,அவன் கை பிடித்து நிறுத்தினாள் ராஜீ .

"வாட் கேன் ஐ டூ போர் யூ ACP மேடம் ?"என்றான் ருத்ரா வெகு நக்கலாக .
images (1).jpg

"எதற்கு அப்பா கிட்டே உங்க பாட்டி அப்படி சொன்னாங்க .....அப்பா ,அம்மா ரெண்டு பெரும் ரொம்பவே கோபமா கிட்டாங்க .ஒரு நாள் கூட என்னை அடிக்காத அம்மா இன்று என்னை அடிச்சுட்டாங்க .....நான் தான் சொல்றேன்ல......அந்த கஜாவோடு உள்ள சண்டை எல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு வாங்க .....இல்லை உங்க பாட்டி ,அப்பாவே இந்த அடி தடி ,பழிவாங்கல் எல்லாம் பார்த்துக்கட்டும் ....நாம எங்காவது போய்டலாம் என்று ....எதற்குமே ஒத்து வராம இப்படி எல்லாம் பொய் சொன்னா மட்டும் உடனே உங்க கிட்டே ஓடி வந்துடுவேன்ன்னு கனவு காணாதீங்க ."என்றாள் ராஜீ .

"பேசி முடிச்சுடீங்களா மேடம் ...இப்போ நான் பேசலாமா ....பாட்டி உன்னை வரவழைக்க இப்படி பொய் சொன்னாங்க என்று நீயா நினைச்சுட்டா அதற்கு நான் பொறுப்பு இல்லை .....பாட்டி எனக்கு திருமணம் ஏற்பாடு செய்தது உண்மை .....பொண்ணு மதுராக்ஷி ....பவானி அத்தையின் மகள் .உடம்பு சரி இல்லாம இங்கே தான் அட்மிட் ஆகி இருக்கா ....அவளை பார்த்துக்கொள்ள தான் நானும் பாட்டியும் வந்து இருக்கோம் .....என் வருங்கால மனைவி ஆச்சே ....நான் தானே கவனிச்சுகணும் ......அவ உன்னை மாதிரி கண்டிஷன் எல்லாம் போடலை .....நாங்க இருக்கும் சூழ்நிலை புரிந்தவள் .....நாங்க பிடித்து இருப்பது புலியின் வால் ....விட்டுட்டு போக முடியாது என்ற நிதர்சனம் புரிந்தவள் .....எங்க மேல் ரொம்பவே நம்பிக்கை வைத்து இருக்கா ......புலியை கொல்லாமல் விட மாட்டோம் என்பதும் அவளுக்கு தெரியும் .....உன்னை மாதிரி வெளியே போலீஸ் கெத்து காட்டிட்டு உள்ளே தொடைநடுங்கியா அவ இல்லை ......எது வந்தாலும் துணிந்து மோத சொல்கிறாள் ......பொண்ணு என்றால் இப்படி இருக்கணும் .....நாங்க விலகிட்டால் இன்னும் பல குடும்பம் அழிந்து விடும் என்ற உண்மை புரிந்தவள் .......இன்னும் சொல்ல போனால் நீ பிடித்ததாக உனக்கு பாராட்டு மழை பொழிகிறதே அதற்கு மூல காரணமே நாங்க தான் என்ற உண்மை அறிந்தவள் ......நாங்க இல்லை என்றால் இந்நேரம் நீ காப்பாற்றிய பெண்கள் பாலியல் தொழிலில் தான் ஈடு படுத்த பட்டு இருப்பார்கள் என்பது உனக்கு எப்பொழுது தான் விளங்கும் ராஜீ ?....வந்துட்டா பெருசா பேச .....ஏய் என் பாட்டி தனி மனுசியா போராடி அதில் வந்த பணத்தில் தாணேடீ நீயே வளர்ந்தே ,படிச்சே ,,,ஏன் இப்போ உன் அம்மாவின் வைத்திய செலவு கூட செய்வது என் பாட்டி தான்டீ ....இது எல்லாம் வேண்டும் ....வரும் போது எதையும் கவனிப்பது இல்லை ....ஆனா இப்போ மட்டும் கசக்குதா .....போடி ....பச்சையா ஏதாவது சொல்லிட போறேன் ....இது வரை பாட்டி தான் மதுராவை திருமணம் செய்யணும் என்று என் கிட்டே சொன்னார்கள் .....இப்போ உன் முகத்துக்கு முன் நான் சொல்றேன் .....மதுராவை மட்டும் தான் நான் மணக்க போகிறேன் ....உன்னால் முடிந்ததை பார்த்துக்கோடீ ...."என்று கர்ஜித்தான் ருத்ரா .

PENANCE WILL CONTINUE.....
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 31

கண் கலங்கி தலை குனிந்து நின்ற ராஜீ ,"ப்ளீஸ் ருத்ரா ...இப்படி எல்லாம் பேசாதே ....மனசு கஷ்டமா இருக்கு ....."என்றாள் .

QWE1111.jpg

"ஆமா எனக்கு மட்டும் குளுகுளுன்னு இருக்கு பாரு ......ஏன்டீ மனசு முழுக்க இவ்வளவூ ஆசை வைத்துட்டு இப்படி படுத்தி எடுக்கறே .....எங்களுக்கு தெரியாதா எங்களை எப்படி பார்த்துக்க வேண்டும் என்று ....எங்களுக்கு மட்டும் எங்க உயிரின் மேல் ஆசை இல்லையா என்ன ????நாங்களும் நல்லவங்க தாண்டீ ...எங்களை சுற்றி எங்களுக்கு உதவி செய்து கொண்டு இருப்பவர்களும் நல்லவங்க தாண்டீ .....சாக்கடை நாத்தம் அடிக்குதேன்னு மூக்கை போத்திட்டு போக முடியாது ராஜீ .....அநியாயம் கண் முன்னே நடக்கும் போது ஒரு மனுஷனாய் தட்டி கேட்கவில்லை என்றால் நான் எல்லாம் ஆண் என்று சொல்லி கொள்வதில் அர்த்தமே இல்லை .....பக்கத்து வீட்டில் தானே தீ பிடிச்சு இருக்குன்னு சும்மா இருந்தா அதே தீ நாளை நம்மையே பொசுக்கி விடும் .....எங்கேயோ ,யாருக்கோ ஏதோ நடந்துட்டு போகட்டும் என்று இருந்தால் ,நாளை நமக்கு நடக்கும் போது யாரும் உதவ வரமாட்டார்கள் .....எனக்கு தெரிந்தே மற்றவர்கள் கஜா அவனின் ஆட்களால் மற்றவர்கள் துன்பப்படுவதை பார்த்து விட்டு ,கண்டும் காணாமல் போக முடியாது ராஜீ .....படுத்தா தூக்கம் வராது .....இது தான் நாங்க ...என் குடும்பம் .....கஜாவை அடக்கும் வரை ஓய மாட்டோம் .....உனக்கு பிடிக்கவில்லையா ...நீ விலகிவிடு .....கௌதம புத்தர் மாதிரி யாராவது கிடைப்பான் ....விஷ் யூ ஹாப்பி MARRIED லைப் வித் ஹிம் ."என்றவன் அவளை சுற்றி கொண்டு செல்ல முயல ,மீண்டும் அவன் கைகளை பிடித்து நிறுத்தினாள் ராஜீ .

"ப்ளீஸ் உன் ராஜிக்காக .....செய்ய மாட்டியா ...."என்றாள் அவள் .

பெருமூச்சு விட்டு கண்களை அழுந்த மூடி திறந்த ருத்ராவின் கோபம் எல்லையை கடந்தது .அவளை அருகில் இருந்த டாக்டர் அறைக்கு தள்ளி சென்றவன் ,கதவை மூடி விட்டு ,"செய்ய தானே வேண்டும் ....செய்துடறேன் ..."என்றவன் அவள் அதிர்ந்து நிற்கும் போதே அவளை இழுத்து அணைத்து அவளை முத்தமிட ஆரம்பித்தான் .

அவளின் எதிர்ப்பு எல்லாவற்றையும் வெகு சுலபமாக முறி அடித்தவன் ,மேலும் மேலும் அவளை தன் வசம் ஆக்கி கொண்டு இருந்தான் .அவளாலும் அதிக நேரம் அவனை எதிர்க்க முடியவில்லை .அணைத்து முத்தமிடுவது அவளின் சரி
பாதி ஆயிற்றே ...அவளின் உயிர் ,மனதளவில் அவளின் கணவன்.அவனின் கைகளில் மெழுகு சிலையாய் உருகி நின்றாள்.

அவர்களின் நெருக்கம் எவ்வளவூ நேரம் தொடர்ந்ததோ ,சட்டென்று அருகில் ஏதோ உடையும் சப்தம் கேட்க இருவரும் அதிர்ந்து விலகி நின்றனர் .இன்னும் கொஞ்ச நேரம் கடந்து இருந்தால் ,எல்லா எல்லைகளையும் கடந்து இருப்பார்கள் ....

எதையும் பேசாமல் விலகி நின்ற ருத்ரா ,தன் தலையை அழுந்த கோதி விட்டு ,பெரு மூச்சுகள் எடுத்து தன்னை சமாளித்து கொண்டான் ....

"நான் வெளியே நிற்கிறேன் ....கெட் ட்ரெஸ்ஸெட் ....."என்றவன் வெளியே போய் நின்று விட்டான் .

தான் என்ன செய்து வைத்து இருக்கிறோம் என்று ராஜேஸ்வரி தலையை பிடித்து அமர்ந்து விட்டாள் .என்றுமே எல்லை மீறாதவனை எல்லை மீற போகும் அளவுக்கு தான் கொண்டு போய் இருக்கிறோம் .....இந்த அளவுக்கு அவன் மேல் பைத்தியமாய் இருந்து கொண்டு தான் பிடிக்கும் பிடிவாதம் பைத்தியக்காரத்தனமாய் அவளுக்கே தோன்ற ஆரம்பித்து இருந்தது .

தன் ஆடைகளை சரி செய்து கொண்டு வெளியே வந்தவளை எதிர் கொண்ட ருத்ரா ,"நடந்ததற்கு நான் மன்னிப்பு கேட்க போவதில்லை ....இப்பவும் உன்னை தான் விரும்பறேன் .....உன்னை தான் திருமணம் செய்ய நினைக்கிறன் .....உன் கண்டிஷன்ஸ் அப்படியே இருக்கிறது என்றால் இனி என் கண் முன்னே வந்து விடாதே ......என்னை இன்று போல் கண்ட்ரோல் செய்துட்டு இருக்க மாட்டேன் ....என்னை மிருகமாக்கி விடாதே ராஜீ .....என்னுள் எரியும் நெருப்புக்கு நீ தான் மருந்து ...அது நீயாக இல்லை என்றால் மீண்டும் கிட்டே வராதே ....நான் பெண்களை மதிப்பவன் தான் ....ஆனால் நீ என்று வரும் போது என் மேல் எனக்கே நம்பிக்கை இல்லை .....குட் பை ...."என்றவன் விலகி சென்று விட ,விக்கித்து நின்றாள் ராஜேஸ்வரி .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செதுக்கி வைத்த சிலையாக எவ்வளவூ நேரம் நின்றாளோ ,அவளின் தோளில் ஒரு கை அழுத்த ,ருத்ரா என்று புன்னகையோடு திரும்பியவள் ,அங்கு சிவகாமி ஒரு பெண்ணோடு நிற்பதை கண்டு முகம் மாறினாள் .

"அட ராஜீ ...என்னமா இந்த பக்கம் ....ஓஹ் கேஸ் விஷயமா வந்தாயா ......ம்ம் சொல்லவே மறந்துட்டேன் ...இது யாருன்னு தெரியுதா பாரு .....பவானி அத்தை பொண்ணு மதுராக்ஷி மா ....நம்ம ருத்ராவிற்கு பார்த்து இருக்கும் பெண் ...."என்று அவர் அறிமுகம் செய்ய அழகாய் கை கூப்பிய அவளை கண்டு ராஜேஸ்வரி மிடறு விழுங்கினாள் .

மதுராக்ஷியின் சாந்தமான மனதை கொள்ளை கொள்ளும் அழகு ராஜேஸ்வரியையே திக்குமுக்கு ஆட வைத்தது .
"எப்படி இருக்கா ராஜீ என் பேத்தி ????நம்ம ருத்ராவுக்கு ஏற்ற அழகு ,அறிவு ,கம்பீரம் ...ஜோடி பொருத்தம் செமையா இருக்குன்னு பார்க்கும் எல்லோருமே சொல்ராங்க ....சரி மா ...உனக்கு உன் வேலை இருக்கும் ....பாவம் மதுக்குட்டியையும் என்னால் ரொம்ப நேரம் நிற்க வைத்து பேசறேன் .....உன் அப்பா ,அம்மா கிட்டே சொல்லு கூடிய சீக்கிரம் இவங்க திருமண பத்திரிகையுடன் வீட்டுக்கு வரோம் என்று ....ராஜீ நீ தான் மணப்பெண் தோழியா நின்று ருத்ரா ,மதுரா திருமணத்தை நடத்தி கொடுக்கணும் .....ராசாத்தி ...மதுக்குட்டி ...வாடா மா ...உனக்கு கால் வலிக்க போகுது ....."என்றவர் மதுராவோடு கிளம்பி விட வழிந்த கண்ணீரை கூட துடைக்க தோன்றாமல் தன் காரில் ஏறி கிளம்பினாள் ராஜேஸ்வரி .

அவள் கிளம்புவதை தங்கள் அறையில் இருந்து பார்த்த மதுரா ,சிவகாமியிடம் ,"ஏ பாட்டி ...இது உனக்கே ஓவர்ரா இல்லை .....என்ன என்கவுண்டர் கேட்குதோ உமக்கு ?"என்றாள் புன்னகையுடன் .

"அடி போடி ...இவளை மாதிரி எத்தனை பேரை பார்த்துட்டேன் .....நேத்து மழையில் மொளைச்ச காளான் ....இவளுக்கு போய் நான் பயப்படுவேனா என்ன ....?"என்றார் சிவகாமி .

"அதானே ...நீங்க யாரு ...என்ன .....ஆனா ரொம்ப ஓவர்ரா செய்வது போல் இருக்கு பாட்டி ...பாவம் ருத்ராவும் ,ராஜீயும் .....உங்க சாணக்கிய தந்திரத்தை வீட்டுக்கு வெளியே வைத்து இருக்கலாம் ....இப்போ பாருங்க ரெண்டு பேரும் எவ்வளவூ கஷ்ட படறாங்க ."என்றாள் மதுரா .

"ஆமாடீ அம்மா ...எனக்கு மட்டும் என் பிள்ளைகளை கஷ்டப்படுத்தி பார்க்கணும் என்று வேண்டுதல் பாரு ....தேன் குடிக்கணும் என்றால் தேனீக்கு பயபட்டால் வேலைக்கு ஆகாது செல்லம் ...அடிச்ச வேப்பிலை வேலை செய்யுது .....விட்டு பிடிப்போம் ."என்றார் சிவகாமி .

இவர்கள் பேசி கொண்டு இருக்கும் போது பதட்டத்துடன் உள்ளே வந்த சுபா ,"மதுரா !..கொஞ்சம் உட்காரேன் ...இந்தா இந்த தண்ணீரை கொஞ்சம் குடி .....நான் சொல்வதை கேட்டு பதட்ட படாதே ...."என்றாள்

"built up கொடுக்காம மேட்டருக்கு வாமா ..."என்றாள் மதுரா .

"அது ஒண்ணும் இல்லை ...ஆண்ட்டிக்கு கொஞ்சம் லேசா மயக்கம் வருதாம் ... நெஞ்சு படபடன்னு இருக்குன்னு சொல்லறாங்க.சந்திரா பார்த்துட்டு இருக்காங்க ....உன்னை பாக்கணுமாம் ...ப்ளீஸ் நீ பதட்ட படாதே ....ஆன்ட்டிக்கு ஒண்ணும் இல்லை ...."என்றாள் சுபா .

பார்வையை பறி மாறி கொண்டனர் சிவகாமியும் ,மதுராவும் ."அடியேய் ....முதலில் நகரு ....பதட்ட படாதேன்னு சொல்லி சொல்லியே மனுஷியை காபரா கிளப்பி விடுறே ....எங்கே இருகாங்க ...கூட்டி போ "என்ற மதுரா முன்னே நடக்க சுபா பின்னால் ஓட வேண்டி இருந்தது .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வழியில் பதட்டத்துடன் நின்று இருந்த கார்த்திக்கின் தலையில் நங்கு என்று ஒரு கொட்டு வைத்த மதுரா ,"நாங்க என்ன சொன்னோம் ...நீ என்ன செய்து வைத்தே ..."என்றாள்

"அடியே குரங்கு ....இப்படியா கொட்டுவே ...வலிக்குதுடீ ...நீங்க ரெண்டு பேரும் சொன்னதை தான் செய்தேன் ....ஆனா ருத்ரா பெவிகால் போடாத குறையாய் ராஜீ மேல் ஓட்டிப்பான் ,ஆங்கிலச் படம் பிரீ ஷோ ஓட்டுவார் என்று எனக்கு என்ன ஜோசியமா தெரியும் ????பார்த்த எனக்கே ஹார்ட் அட்டாக் வராத குறை ....அத்தையின் நிலைமை சொல்ல வேண்டுமா ...."என்று அழு குரலில் கார்த்திக் கூற,தலையில் அடித்து கொண்டனர் சிவகாமியும் ,மதுராவும் .

"பாட்டி ...போகும் போக்கை பார்த்தால் ...நிலைமை கை மீறி போய்டும் போல் இருக்கே ...ஆனா சும்மா சொல்ல கூடாது இந்த காட்ஜில்லாவும் மீன் சாப்பிடுமான்னு இருந்துட்டு ,உங்க பேரன் புகுந்து காதல் மன்னனாய் விளையாடி இருக்கார் போல் இருக்கே .....சீக்கிரம் ரெண்டு]பேருக்கும் திருமணத்தை முடியுங்க ...."என்றாள் மதுரா புன்னகையுடன் .

"கொஞ்சம் ஓவர் ரா தான் சீண்டி விட்டுட்டோமோ ..."என்றார் சிவகாமி .

"கொஞ்சம் இல்லை பாட்டி ....ரொம்பவே ...."என்ற மதுரா தன் அன்னை இருந்த அறைக்குள் நுழைய ,ஓடி வந்து அவளை அணைத்து கொண்ட பவானி கதறி விட்டார் .

"மன்னிச்சுடு மதுரா .....இந்த பாவியை மன்னிச்சுடு ....உன் வாழ்வை நானே கெடுத்துட்டேன் ...அய்யோஓஒ என் மக மனசுல ஆசை வளர்த்து விட்டேனே .....ரொம்ப அவசர பட்டுட்டேன் ....என்னை மன்னித்துவிடு கண்ணம்மா ....."என்று அழுதவரை எவ்வளவூ சமாதானம் செய்தும் அவர் அழுகை நிற்கவில்லை .

"அம்மா !"மதுரா உச்சஸ்தாயில் கத்தி விட அதிர்ந்து போன பவானியின் அழுகை தானாக நின்றது .

"அம்மா !...முதலில் உட்காருங்க ....இந்த ஜூஸ் குடிங்க ."என்றவள் சந்திரா கொடுத்த ஜூஸ்சை பவானிக்கு புகட்டி விட்டு ,"கொஞ்சம் கவனிங்க மா .....நீங்க ருத்ராவுடன் திருமணம் என்று சொல்லிய உடன் கனவுலகில் டூயட் பாட நான் என்ன லூசா ????என்ன அப்படி ஜெர்க் ஆகறீங்க ....இல்லை தெரியாம தான் கேட்கிறேன் நான் என்ன லூசா ???ரியாலிட்டின்னு ஒண்ணு இருக்குமா .....நீங்க சொல்லும் போதே இது நடக்காதுன்னு எனக்கு தெரியும் ....ஏனென்றால் ருத்ரா விரும்புவது ராஜேஸ்வரியை தான் .இத்தனை வருடமாய் அவங்களை தான் மனைவியா நினைத்து வாழ்ந்துட்டு இருக்கார் ......ராஜிக்கு இவங்க போகும் வழி ,போராடும் முறை பிடிக்கவில்லை ....சோ திருமணமே வேண்டாம் என்று சொல்லிட்டு இருக்காங்க தான் .ஆனா அவங்க ருத்ராவை தவிர வேறு யாரையும் மணக்க மாட்டாங்க .....ரெண்டு பேரும் ஈகோ பார்த்துட்டு வாழ்க்கையை அழிச்சுட்டு இருக்காங்கா ...அதான் பாட்டி நீங்க போய் கேட்ட உடன் இருவருக்கும் நிதர்சனத்தை புரிய வைக்க இப்படி ஒரு நாடகம் ஆடினாங்க ...பாட்டி வைச்ச ஆப்பில் ரெண்டு பேருக்கும் டர் ஆகிடுச்சு ......நீங்களும் சும்மா இருக்கமா செய்ந்நன்றி அது இதுன்னு இவங்களை கார்னெர் செய்ய பார்த்தீங்க .....தெரியாம தான் கேட்கிறேன் ....எதையும் எதிர் பார்க்காமல் உங்க அப்பா இவங்களுக்கு செய்த உதவிக்கு நீங்க எப்படி பலன் எதிர் பார்க்கலாம் ....ஏதோ என் மகளை காப்பாற்றுங்கன்னு கேட்பதோடு நின்று இருக்காமா ...உங்களுக்கு ஏன் இந்த வேலை ????மகளை காப்பாற்றுன்னு சொல்லி இருந்தாலே இவங்க குடும்பம் மொத்தமும் எனக்காக உயிரை கூட கொடுக்க தயங்கி இருக்க மாட்டாங்க ....அப்படி இருக்கும் போது நீங்க செய்ததற்கு பெயர் பிளாக்மெயில்..... எப்போ இருந்து இப்படி ஒரு சுயநலம் பிடித்தவங்க ஆனீங்க ?????அப்பா தான் எப்பவுமே மத்தவங்க நினைப்புக்கு மதிப்பு கொடுக்காம தனக்கு தோன்றியது தான் சரி என்று முடிவு எடுத்துட்டு அதை நம் மேல் திணிப்பாங்க .....நீங்க எப்போ இருந்து அப்பா மாதிரி ஆனீங்க மா ????எதை முடிவூ செய்வதாக இருந்தாலும் ,ஏன் பத்து ரூபாய் சாக்லேட் வாங்குவதாக இருந்தாலும் என்னை கேட்டு கேட்டு தானே மா வாங்குவீங்க .....சின்ன பொருளுக்கே அப்படி என்னும் போது இது என் வாழ்க்கை மா .....இதில் எதையும் விசாரிக்காம நீங்களா முடிவு எடுத்து என் மேல் திணித்தா கூட பரவாயில்லை .....பாட்டி குடும்பத்தின் மீதும் தானே திணிச்சு விட்டிங்க ....ஏன் மா .....உங்க கிட்டே இதை நான் எதிர் பார்க்கவேயில்லை என்று தான் சொல்வேன் ..."என்ற மதுராவின் பேச்சை கேட்ட பவானியின் தலை தானாக தொங்கி போனது .

"பவா !...ஒரு அம்மாவா நீ செய்தது எங்களுக்கு புரியுது .....ஆனா நீ செய்த விதம் தான் சரி இல்லை ...எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்ய முடியாது ...அதுவும் ஒரு பெண்ணின் திருமணத்தில் ...நீ கேட்டு இருந்தாய் என்றால் மதுரா சொன்னது போல் அவளுக்காக எங்க உயிரையும் கொடுக்க தயங்கி இருக்க மாட்டேன் தான் ...ஆனா நீ கேட்டது என் பேரனின் நிம்மதியை ...அவன் சந்தோசத்தை ....அதை எப்படிம்மா நான் பணயம் வைக்க முடியும் ????இத்தனை வருடம் அவன் மனசுல ராஜி தான் அவன் மனைவி என்று சொல்லி சொல்லி வளர்த்து விட்டு கடமை,தியாகம் என்று எப்படி அவங்க ரெண்டு பேரின் மனசை கொல்ல முடியும் ????... என் குடும்பம் தான் எனக்கு மற்ற யாரையும் விட எனக்கு முக்கியம் ...ருத்ராவுக்கும் அப்படி தான் ...அதனால் தான் இது வரை "ஏன் "என்று என்னை ஒரு வார்த்தை கேட்கவோ ,என்னால் முடியாது என்று சொல்லவே இல்லை .....இந்த வயசில் அவனுக்கு என் மேல் இந்த அளவூ மதிப்பு இருக்கும் போது அவன் மேல் எனக்கு பாசம் இருக்காதா என்ன ....நீ ஏண்டீ வருத்தப்படறே ...மதுரா மாதிரி ஒரு பெண்ணை பெத்துட்டு .....இவ மேல் அன்பு கொண்டவங்க எத்தனை பேர் இவளை சுற்றி இருக்காங்க என்பதாவது உனக்கு தெரியுமா ?விஜய் ,சூர்யா ,ஆல்வின் ,உத்தம் ,கார்த்திக் ,சேது ,பாலாஜி ,சுபா ,எங்க மொத்த குடும்பம் என்று மதுராவை காக்க நாங்க இத்தனை பேர் இருக்கும் போது நீ எதற்கடி இப்படி உன்னையே போட்டு வருத்திக்கறே ?"என்றார் சிவகாமி .


PENANCE WILL CONTINUE.....
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூஸ் ...மை டியர் ரசகுல்லாஸ் .....
deep-friendship.jpg

என்ன தவம் செய்தேன் 31 அத்தியங்கள் தாண்டி சென்று கொண்டு இருக்கிறது .கிட்டத்தட்ட ஆகஸ்ட் மாதம் ஆரம்பித்த கதை நவம்பர் மாதமே முடிய போகிறது ----இன்னும் தொடர்வது உங்களின் ஆதரவால் தான் ....

என்னாலும் எழுத முடியுமா என்று யோசித்து குழம்பி ,மலை போல் குவிந்து கிடக்கும் கதைகளை முடிக்கும் ஆவல் ,ஊக்கம் கொடுத்தது உங்கள் அன்பு மட்டுமே .

சில செயல்களுக்கு மதிப்பு என்பதே இருக்காது ...போடவும் முடியாது ...உங்களின் கருத்து ,பாராட்டு ,ஊக்கம் அந்த வகையை சார்ந்தது .படித்து விட்டு போயிட்டே இருந்து இருக்கலாம் ...ஆனால் தினமும் தவறாமல் கமெண்ட் செய்யும் உங்களின் பண்பு ,அன்பு தினமும் காலையில் எழுத தூண்டுகிறது .

வெறும் நன்றி இதற்கு ஈடு இல்லை தான் .என்றாவது INTHA குடும்பத்தினர் அனைவரும் சந்திக்கும் ஏற்பாடு நடந்தால் உங்கள் அனைவரையும் நேரில் பார்த்து நன்றி கூறும் நேரம் வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் .
images (8).jpg

ஒரு தோழி எழுதி இருந்தார் ,"இரவூ மூன்று வரை உங்கள் எபிஸோட்ஸ் அனைத்தையும் படித்து விட்டேன் ."என்றார் .இது நாள் வரை மற்ற எழுத்தாளர்களின் படைப்பை நான் இப்படி படிப்பேன் .....ஆனால் என் எழுத்தையும் இப்படி ஒருவர் கண்விழித்து படிப்பது என்பதே மிக பெரிய சன்மானம் .

இன்னொரு தோழி "கவிதையினால் "என் எழுத்துக்களுக்கு புகழாரம் சூட்டி விட்டார் .

என்னடா இப்படி கடி கடிக்கிறேன் என்று பார்க்கறீங்களா ...எல்லாம் ஒரு பாசம் தான்.(இதற்கு பெயர் தான் பாசமா என்று நீங்கள் முறைப்பது தெரிகிறது ;););))

உங்களின் இந்த கதை பற்றிய உங்களின் கருத்துக்களை கொஞ்சம் ஷேர் செஞ்சுடுங்க ...தினமும் தான் செய்யறேன் என்கறீங்களா ....கொஞ்சம் கஷ்டம் பார்க்காம கொஞ்சம் பெருசா என்ன குறை ,நிறை என்று ஒரு நாற்பது பக்கங்களுக்கு மிகாமல் புகழ்ந்து தள்ளிடுங்க ....முட்டை ,தக்காளி வீச நினைப்பவர்கள் அதை குக் செய்து வீட்டுக்கு அனுப்பிடுங்க ....மதுரா மாதிரி நாமளும் மத்த வீட்டு சாப்பாடுன்னு என்றால் கடோகஜன் தான் பா .....:devilish::devilish::devilish::devilish::devilish::devilish:

உங்கள் கருத்துக்களை பார்த்து கேரளா ,சென்னை floods தோற்கணும் ....அதாவது அந்த அளவூ என் கண் வேர்க்கணும் மக்கா .:LOL::LOL::LOL::LOL::LOL:

ஏதாவது தோழியரின் போய் இருந்தால் கல் எல்லாம் தூக்க வேண்டாம் ....வீடு கட்டும் போது ஒரு லாரி மொத்தமாக வாங்கி கொடுத்துடுங்க ....ஹி ஹி ஹி ....

இன்னொரு தேங்க்ஸ் ...நானும் என் மகளும் உடல் நலம் தேற விஷ் செய்த அனைவர்க்கும் ரொம்ப தேங்க்ஸ் பா ...இத்தனை சொந்தம் ,நட்பு கிடைத்தது நான் செய்த தவம் .....எங்கேயோ படித்த ஆங்கில சென்டென்ஸ் ."god லவ்ஸ் மீ thats why HE BROUGHT YOU IN MY LIFE ".என்று தான் உங்கள் அனைவரின் நட்பை நினைக்கிறன் ....:love::love::love::love::love::love::love::love:

500_F_49637851_0hRQqpHePGR8qevqJO7bfPISs3IMpJZg.jpg
Words-of-Thanks.jpg
thank-you-3.jpg

WITH LOTS OF LOVE
YOURS
HONEY
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 31(1)

"பாட்டி !"என்ற கூவலுடன் ஓடி வந்த ருத்ராவும் ,ராஜேஸ்வரியும் சிவகாமியை அணைத்து கொண்டனர் .

"சாரி பாட்டி ....சாரி ...சாரி .....எங்களுக்காக தான் நீங்க செய்யறீங்க என்பது புரியாமல் உங்களை போய் தப்பா நினைச்சுட்டேன் .....மன்னிச்சுடுங்க பாட்டி ..."என்றாள் ராஜேஸ்வரி கண்ணீருடன் .

"பைத்தியக்காரி ....எனக்கு என்னடீ வேண்டும் ...என் பிள்ளைங்க சந்தோசமா இருக்கனும் அவ்வளவூ தான் ...."என்றார் சிவகாமி கண் கலங்கி .

"சாரி பாட்டி ....தேங்க்ஸ் பாட்டி ."என்றான் ருத்ரா .

"போடா வெண்ணை ....உனக்கு பல்பு எரிய வைக்க என்ன எல்லாம் பிளான் போட வேண்டியதா போச்சு ...டேய் நான் உன் பாட்டி டா ...என்னை மாமா வேலை எல்லாம் பார்க்க வைச்சுட்டே .....கலிகாலம் ....பவானிக்கு வேற ஹார்ட் அட்டாக் வரும் அளவூ செய்துட்டே ...இந்த அளவூ மனசுல அவ மேல் காதலை வைச்சுட்டு ...அவ தான் லூசு மாதிரி உளறிட்டு இருக்கானா ...அவளை உளற விட்டு வேடிக்கை பார்த்த அரிக்கேன் விளக்கு டா நீயி ...ஏதோ மதுரா ஐடியா கொடுத்தா ....எல்லாம் நல்லா நடந்தது ..."என்றார் சிவகாமி .

"உன் வேலை தானா இது ....?"என்றார் பவானி தெளிந்தவராக .

"வாட் டு டூ மாம்ஸ் ....இந்த தரகர் வேலை என்னை விடாது போல் இருக்கு .....பாட்டி என் பேரனை திருமணம் செய்துகரியா என்று வரும் போதே எனக்கு டவுட் தான் ....ஏற்கனவே ருத்ரா ராஜியை விரும்புவதை கேள்வி பட்டு இருக்கேன் ...பாட்டிக்கும் ராஜியை ரொம்ப பிடிக்கும் ...அப்படி இருக்கும் போது நிச்சயமா தன் பேரனின் ஆசைக்கு எதிரா எதையும் செய்ய மாட்டார் என்று புரிந்து விட்டது ....பேசிய உடன் பாட்டியும் சொல்லிட்டாங்க ....இது மாதிரி எனக்கும் ருத்ராவுக்கும் திருமணம் என்று புரளி கிளப்பி விட்டு இருப்பதாக ...என்னால் முடிந்தது ராஜிக்கு ருத்ரா இங்கு இருக்கும் தகவலை அனுப்பி ,இவங்களை மீட் செய்து பேச வைத்தது ....மீதம் எல்லோருக்கும் தெரியும் ...."என்றாள் மதுரா .

"அம்மாடீ ராஜீ ...இப்போவாது சொல்லு ...என் பேரனை கல்யாணம் செய்துக்கரியா ?"என்றார் சிவகாமி .

"ஹ்ம்ம்ம் "என்று கன்னத்தில் கை வைத்து யோசிக்க ருத்ரா போலியாக முறைக்க ,"நிச்சயமா எனக்கு இந்த காட்ஜில்லா தான் வேண்டும் ."என்றாள் ராஜேஸ்வரி .

"ஊரெஈஈஈ ...."என்ற கூச்சல் அந்த ஹாஸ்பிடலை அதிர வைத்தது .

பவானி சந்தோசமாக இருப்பதாக காட்டி கொண்டாலும் ,அவரையும் அறியாமல் அவர் முகம் சுருங்கி போனது .
"பவா !.....உன் மகளுக்கு என்னடீ குறை ?????திருமலையில் அந்த ஏழுமலையானுக்கு நித்திய திருமணம் கோலாகலமாக ,விமர்சையாக நடப்பது போல் உன் மகளின் திருமணமும் ஒரு விழாவாகவே நடக்கும்டீ ...நீ வேண்டும் என்றால் பாரு நான் சொல்வது நடக்குதா இல்லையா என்று .இவ மனசுக்கு இவளை ராணி மாதிரி ,ஒரு தேவதை மாதிரி தங்குபவன் தான் கணவனாக வருவான் ...."என்றார் சிவகாமி .

Padmavathi-Srinivasa-Kalyanam-set-14in-paperpulp1.jpg
"உங்க வாய் முகுர்த்தம் பலிக்கட்டும் அத்தை ..."என்றார் பவானி மனநிறைவாக .
16465196_1548795705148015_7847197174424141824_n.jpg

அதை கேட்டு விஜய் முகம் சுருங்கி விட ,அங்கு இருந்து வேகமாக வெளியேறி விட்டான் .அவன் பின்னால் ஆல்வின் ,பாலாஜி ,சுபா சென்றனர் .அதனை பார்த்து கொண்டு இருந்த மதுராவின் நெற்றி சுருங்கியது .சூர்யாவோ வானத்தில் மிதந்து கொண்டு இருந்தான் .

"பாட்டி உங்க வீட்டு திருமணத்திற்கு மட்டும் ஏற்பாடு செய்துடீங்க ....எங்க வீட்டு திருமணம் என்ன ஆவது ?பொண்ணு வீட்டுக்காரர் இங்கேயே தானே இருக்கார் .....பேசி ஏற்பாடு செய்யுங்க ."என்றாள் மதுரா .

"சரியா சொன்னே பேத்தி பொண்ணு ....."என்றவர் ,"சூர்யா !...என் பேரன் ரகுக்கு உன் தங்கை சந்திராவை கொடுக்க உனக்கு சம்மதமா ?"என்றார் .

பவானி புன்னகைக்க ,சூர்யா ,சந்திரா ,ரகு அதிர்ந்தனர் .சூர்யா தங்கையை பார்க்க ,புன்னைகையுடன் அவள் தலை குனிய ,"எனக்கு சம்மதம் பாட்டி ...."என்றான் சூர்யா புன்னகையுடன்
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"என்ன பவானி ...சந்திராவை உன் மருமகள் ஆக்கி கொள்ள உனக்கு சம்மதமா ?"என்றார் சிவகாமி .

"பெரியவங்க நீங்க ஏற்பாடு செய்தா அது சரியாய் தான் இருக்கும் ...."என்றார் பவானி .

"ரகு உன் அம்மா ,தங்கை ஒகே சொல்லிட்டாங்க ...உன் பதில் என்ன ?"என்றார் சிவகாமி .

பதில் பேசாத ரகு தலையை திருப்பி கொள்ள ,சந்திராவின் முகம் வாடி போக ,சூர்யாவும் ,மதுராவும் கோப பட ,அவர்களை கண் பார்வையாலேயே அடக்கிய சிவகாமி ,"என்ன உனக்கு இஷ்டம் இல்லையா ரகு .....ஒரே ஒரு காரணம் ஏற்று கொள்ளும் படியா சொல்லு பார்ப்போம் ....அவ பணக்காரி ...பணக்காரங்க எல்லாம் கெட்டவங்க என்று டயலாக் விடாதே .....ஒரே ஒரு காரணம் ப்ரூப் ஓடு சொல்லு .....உன்னை தவிர வேறு ஒருவனை சந்திரா காதலித்தா ....பல பேருடன் சுத்தினா .....ஆண்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றினாள் .....நடத்தை ....."என்றவரை ,ரகுவின் "பாட்டி "என்ற அலறல் நிறுத்தியது .

"பெரியவங்க என்று பார்க்கிறேன் ...இல்லை என்றால் நடப்பதே வேற ....."என்றான் ரகு கோபத்த்துடன் .

"அவங்க மேல் ஏன் பயாரே .....இதை தானே நீ பாலிஷா இத்தனை வருடமாய் அண்ணி கிட்டே சொல்லிட்டு இருந்தே ...அவங்க கெட்டவங்க என்று .....அதையே தானே பாட்டி நேரிடையாக சொல்ராங்க ...."என்றாள் மதுரா கோபத்துடன் .

"மதுரா !...."என்றவனை கை காட்டி நிறுத்திய மதுரா ,"இவங்க உன்னை விரும்புவதை தவிர வேறு எந்த தப்பும் செய்யலை அண்ணா .....போதும் எங்களை நம்பு ....உனக்கு எந்த கெடுதலாவது நினைப்போமா .....அண்ணி ரொம்ப நல்லவங்க அண்ணா ..... அப்பா அம்மாவே தேடினாலும் இவங்க மாதிரி ஒரு மனைவி உனக்கு கிடைக்கமாட்டாங்க அண்ணா ....புரிஞ்சுக்கோ ."என்றாள் மதுரா .

"ரகு !.....நான் தூக்கி வளர்தவ சந்திரா .....மதுரா எப்படி குணவதியோ ...அதே போல் தான் சந்திராவும் ...."என்றார் சிவகாமி .

"இவன் பெரிய மனுஷன் பாருங்க ...இவன் கிட்டே போய் கெஞ்சிட்டு இருக்கீங்க .....சந்திரா நான் உங்களுக்கு நல்ல மாப்பிளை பார்த்து தரேன் .....இவன் வேண்டாம் ...."என்ற மதுரா சந்திராவின் கை பிடித்து வெளியே கூட்டி செல்ல முயல ,"நீ ஆணியே பிடுங்க வேண்டாம் ...."என்ற ரகு சந்திராவின் கை பிடித்து ,இழுத்து கொண்டு வெளியே ஓடினான் .

சப்பா ...முடியலை டா சாமி ...இவனுங்க திருமணம் செய்ய நம்ம டங்குவார் அறுந்து போகுது ....."என்றாள் மதுரா புன்னகையுடன்
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மதுரா கேலி பேசி கொண்டு இருக்க சிவகாமி கண் காட்ட ,மதுரா பவானியை பார்த்தாள் .

'இப்போ என்ன ?'என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை அவளால் .'நீங்களே கேளுங்க 'என்று மதுரா சைகை காட்ட ,பவானியின் அருகில் அமர்ந்த சிவகாமி ,"என்ன பவா .....இன்னும் எந்த கோட்டையை பிடிக்க இந்த யோசனை ."மறுபடியும் முதலில் இருந்தா என்று அவரால் எண்ணாமல் இருக்க முடியவில்லை .

"அது ஒண்ணும் இல்லை அத்தை .....ராணிமா அப்பாவை நினைத்தால் தான் .....எந்த முடிவையும் அவரே எடுக்கணும் என்று ரொம்ப எதிர் பார்ப்பார் .....எங்களுக்கு பழகி போச்சு ...ஆனா அவரை கேட்காம இப்படி ரகுவுக்கு திருமணம் ஏற்பாடு செய்து இருப்பது தெரிய வந்தது ...நாங்க அவ்வளவூ தான் .....எனக்குமே அவரை கேட்காம முடிவு எடுப்பது சரியாய் படலை ....என்ன இருந்தாலும் அவர் என் பிள்ளைகளின் அப்பா அத்தை ....எங்க வீட்டில் அவர் தான் எல்லாமுமே ....."என்றார் பவானி .

"என்னமா அந்த அளவூ அப்புஸ் மேல் லவ்வோ லவ் வா ....?"என்றாள் மதுரா .

கசந்த புன்முறுவல் புரிந்த பவானி ,"அன்பு ,காதல் இது எல்லாம் தானா வரணும் ராணிமா ....இல்லறம் என்பது கணவன் ,மனைவி இருவரும் சமம் என்று வாழ்ந்து காட்டுவது .அர்த்தநாரீஸ்வரர் மாதிரி ......இது எல்லாம் எதிர் பார்த்து எதிர் பார்த்து ஏமாற்றம் மட்டுமே மிச்சம் என்ற நிலையில் இருக்கிறேன் ......ஒரு கை தட்டினால் ஓசை வராது .....ஒரு சில தருணங்களில் கடவுள் ஏன் வெளிநாட்டில் பிறக்க வைக்கவில்லை என்று தோன்றி விடும் .....அங்கு பெண் சுதந்திரம் இல்லறத்தில் அதிகமாகவே உண்டு ......எந்த முடிவும் இருவரும் கலந்து ஆலோசித்து எடுப்பார்கள் .....பிரைவேட் டைம் என்று பெண்களுக்கு தினமும் உண்டு ....ஓய்வாக அமர்ந்து டீ குடித்து கொண்டு எனக்கு பிடித்த பாடலை கேட்க கூட அடுத்தவர் என்ன சொல்வார் என்று பயந்து பயந்து இருக்க வேண்டி இருக்காது ......ஜோதிகா ,சரண்யா ,ஊர்வசி ,பானுப்ரியா நடித்து வந்துதே "மகளிர் மட்டும் "படம் ....நீ கூட்டி போனியே .......அது போல் தான் எனக்கும் தோன்றும் ,"நானும் இங்கே தான் டா இருக்கேன் "என்று கத்த தோன்றும் .ஏதோ வேலைக்கு போகிறேன் ...அதனால் அவர் கையை எதிர் பார்க்காமல் இருக்கிறேன் ....எனக்கு இருக்கும் இந்த வாய்ப்பு எத்தனை பெண்களுக்கு கிடைக்கும் ????.....திருமணம் என்பது மாயாஜால சிறை தான் ."என்றார் பவானி .

"பவானி !...என்னவோ புதுசா நடப்பது போல் ஏன் புலம்பிட்டு இருக்கே ?????சங்கரன் அப்படித் தான் என்று தெரியாதா ......நாய் வாலை நிமிர்த்த முடியாது ....விட்டு தள்ளு ...உன் பசங்களை பாரு .....இப்போ என்ன சங்கரன் கிட்டே சம்மதம் வாங்கணும் ....அவ்வளவூ தானே .....என் கிட்டே விடு ."என்றவர் சங்கரனுக்கு மொபைல் அழைப்பு விடுத்தார் .

"மேடம் நல்லா இருக்கீங்களா ...."என்றார் சங்கரன் பேசுவது யார் என்று தெரிந்ததும் .
images (19).jpg

"எத்தனை தடவை சொல்வது சங்கரா ...இப்படி மேடம் என்று அழைக்காதே என்று ....சரி சரி ...நீ மாற மாட்டே ...சரி அழைத்த காரணம் சொல்லிடறேன் ...சூர்யா பிரதாப் ரத்தன் சிங் தெரியுமா உனக்கு ?"என்றார் சிவகாமி ஒன்றும் அறியாதவர் போல் .

"தெரியும் மேடம் ...இப்போ சென்னையில் அவர் கிட்டே தான் வேலை பார்க்கிறேன் .....அவரின் எல்லா கம்பெனிக்கும் ஆடிட் நடந்துட்டு இருக்கு .....நான் தான் இன்ஸ்பெக்ஷன் செய்துட்டு இருக்கேன் ...என்னை பற்றி என் பழைய முதலாளி சொன்னார் என்று எனக்கு சென்னையில் வேலை ,தங்க பங்களா மாதிரி வீடு ,பவானிக்கு பிரின்சிபால் வேலை ,ரகுவுக்கு ட்ரான்ஸபெர் என்று எல்லாமே செய்து கொடுத்து இருக்கார் .வீடு நல்ல நாள் பார்த்து போகணும் ...."என்றார் சங்கரன் .

"ஓஹ் நல்லது நல்லது .....சூர்யா குடும்பம் ரொம்ப நாளாக எங்களுக்கு பழக்கம் .....சூர்யாவிற்கு ஒரு தங்கை உண்டு ...சந்திரா என்று பெயர் ....கெட்வெல் ஹாஸ்பிடல் கேள்வி பட்டு இருக்கியா அதை அவ தான் நடத்திட்டு இருக்கா .....ரொம்ப அழகா இருப்பா ...நான் தூக்கி வளர்த்த பெண் ....குணமும் தங்கம் .....தங்கைக்கு வரன் பார்க்கும் பொறுப்பை சூர்யா தம்பி என்னிடம் தான் கொடுத்து இருக்கார் .....சந்திராவிற்கு ஏற்ற மாப்பிளை ,குடும்பம் என்று யோசிக்கும் போது தான் உன் நினைவூ வந்தது ....உன் மகனுக்கு சந்திராவை கேட்கட்டுமா சங்கரா .....?"என்றார் சிவகாமி .

ஸ்தம்பித்து போனார் சங்கரன் ,"மேடம் !.....மேடம் ......அவங்க ராஜா பரம்பரை .....பத்து தலைமுறைக்கு சொத்து இருக்கு ....கோடீஸ்வரங்க ....எப்படி மேடம் எங்களுக்கும் அவங்களுக்கும் ஒத்து வரும் ????அவங்க ராஜா பரம்பரையை எதிர் பார்ப்பாங்க ....பேச்சுக்கு வேண்டும் என்றால் இது எல்லாம் சரியா இருக்கும் ...நடைமுறைக்கு ஒத்து வராது ."என்றார்

"அவங்க ராஜா பரம்பரை கேட்கிறாங்க என்றால் உன்னிடம் நான் ஏன் பேச போகிறேன் ...அவர்கள் எதிர் பார்ப்பது நல்ல பையனை .....குணமான குடும்பத்தை .....பணத்தை இல்லை சங்கரா .....அவங்க மகளை தங்கள் மகளாக பார்த்து கொள்ளும் மாமியார் ,மாமனாரை ....அது நீயும் பவானியும் என்பது என் கருத்து ....இல்லை ..வரும் மருமகளை கொடுமை செய்வோம் என்று ஒருவேளை சொல்ல வருகிறாயோ ....இல்லை அவர்கள் எதிர் பார்க்கும் நல்ல பையன் உன் மகன் இல்லை என்கிறாயா ....?"என்றார் சிவகாமி -சங்கரனின் ஈகோவை சீண்டி பார்க்கும் விதமாக .

"மேடம் !அவங்களுக்கு சம்மதம் என்றால் எனக்கும் சம்மதம் தான் .....என் மகனை விட ,என் குடும்பத்தை விட வேறு நல்ல குடும்பம் அவங்களுக்கு கிடைக்காது .வரும் மருமகளை மகளாக தான் பார்த்து கொள்வோம் ."என்றார் சங்கரன் .

"ரொம்ப சந்தோசம் சங்கரா .....ஒரு நிமிஷம் லைன்னில் இரு "என்றவர் மதுரா அவர் காதில் எதையோ சொல்ல ஒரு கணம் நெற்றி சுருங்கினார் ,"ஏன் ?"என்று சைகையில் கேட்க ,மதுரா புன்னகை மட்டுமே புரிந்தாள் .

"சங்கரா ...இன்று இரவு எட்டு மணிக்கு நீ பிரீயா ....ஒண்ணும் இல்லை உன்னிடம் சூர்யா தம்பி நேரிடையாக பேசணுமாம் ...அதான் ....சரி இரவு எட்டு மணிக்கு ,சூர்யாவின் 5 ஸ்டார் ஹோட்டல் "ப்ளூ டைமோண்ட் "வந்துடு ...உன்னை உன் ஹோட்டலில் இருந்து அழைத்து வர கார் வரும் ....வச்சிடவா ....பவானியை கேட்டதாக சொல்லு ."என்றவர் அழைப்பை துண்டித்தார் .

"என்னை ஏன் உன் டாடியை மீட் செய்ய சொல்றே ...அதுவும் இன்றே ....நிதானமாக செய்யலாம் ....எதற்கு இந்த அவசரம் ?'என்றான் சூர்யா .

"பெரியவர்களை அதுவும் சொந்த அப்பாவை இப்படி பேச கூடாது தான் .....இருந்தாலும் வேறு வழி இல்லை ....நாய் வாலை யாராவது நிமிர்த்தியே தானே ஆகணும் ...."என்றாள் மதுரா கண்கள் மின்ன ....

அந்த அறையில் இருந்த பவானி ,சிவகாமி ,சூர்யா ,கார்த்திக் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர் .அடுத்த செக் மேட் சங்கரனுக்கு .

PENANCE WILL CONTINUE......
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 31(2)

"இப்போ சந்தோசமா பவானி .....சூர்யா உன் வீட்டுக்காரரிடம் பேசி விடுவான் ....அவராகவே ரகு விஷயத்தில் முடிவு எடுப்பதாக அவருக்கு தோன்றும் .....சரி நான் கிளம்பறேன் ....உடம்பை பார்த்துக்கோ ...மதுராவிற்கு நாங்க இருக்கோம் .....அவளை பற்றிய கவலை உனக்கு வேண்டாம் "என்றார் சிவகாமி .

"சரிங்கத்தை ."என்று புன்னகை புரிந்தார் பவானி ஆனால் அது அவரின் கண்களை எட்டவில்லை என்பதை கண்டு கொண்டது மதுராவின் கண்கள் .

சிவகாமி கிளம்பும் போது சூர்யாவிற்கு கண் காட்ட அவரோடு அவனும் வெளியே சென்றான் .அங்கு காரிடோரில் ஏற்கனவே விவாதம் நடந்து கொண்டு இருந்தது .இவர்கள் வருவதை கண்டதும் விஜய் ,ஆல்வின் ,பாலாஜி பேச்சு தடை பட்டது .

"உங்க ரெண்டு பேரையும் பொறுப்பான பசங்க என்று நினைத்தேன் ....ஆனா சின்ன பிள்ளை தனமா ஹாஸ்பிடலில் அடித்து கொண்டு இருக்கீங்க ......ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு தான் கொண்டாட்டம் என்று பெரியவங்க சொல்வாங்க .....அந்த ராட்சசனை அவன் பேய் கூட்டத்தை வைத்து கொண்டு இப்படியா செய்து வைப்பீங்க ....ரெண்டு பேரும் மதுராவை காதலிக்கறீங்க .....சரி ....ஆனா ரெண்டு பேரும் சேர்ந்து அவளை மணக்க முடியாது .....யாரை கணவனாக ஏற்பது என்பது அவள் விருப்பம் .....ஏதாவது அவளை போர்ஸ் செய்தீங்க என்று கேள்வி பட்டேன் தோலை உரிச்சுடுவேன் .....எனக்கு மதுரா முக்கியம்.....அவளை காப்பாத்துங்க ...ஆனா எந்த தகிடு தத்தம் வேண்டாம் ....முடிவூ அவள் தான் எடுக்கணும் .....அவ குழப்பத்தில் இருக்கா .....கொஞ்சம் அவளை பிரீயா விடுங்க .....அவள் யாரை தேர்ந்து எடுக்கிறாளோ அவனோடு திருமணம் முடிப்பது என் வேலை ....என்ன புரிஞ்சுதா ....?"என்றார் சிவகாமி .

"சரி பாட்டி ....."என்றனர் சூர்யாவும் ,விஜய்யும் தலை தொங்கி போனவர்களாய் .

"கருணா ...என்ன பிரச்சனை ...நாங்க வரும் போது உன் முகமே சரி இல்லை ....."என்றார் சிவகாமி .

"பிரச்சனை தான் பாட்டி ....மதுரா கிட்டே பார்ம் ஹவுஸ்சில் அந்த சுமன் தவறாக நடக்க முயன்றான் என்று கை காலை உடைத்து சுந்தர்பன் காட்டுக்கு பேக் செய்தேன் ...அங்கு பேசும் மொழி இவனுக்கு தெரியாது ....சரியான மெடிக்கல் கேர் இல்லாமல் நோய் பிடித்தே அணு அணுவாய் துடித்து சாவான் என்று ,யாரும் உதவ மாட்டார்கள் என்று ஏற்பாடு செய்தேன் .....அங்கு போவதற்குள் ஆந்திரா -ஒரிசா பார்டர்ரில் போன ஆளின் குரல் வலையை கடித்து துப்பி தப்பித்து இருக்கிறான் ....ரெண்டு நாட்களுக்கு முன் ....எங்கே இருக்கான் ...என்ன ஏது என்று விவரம் தெரியலை ....அடிபட்ட பாம்பு ...கொத்தாமல் விடாது ."என்றான் விஜய் கோபத்துடன் .

"அப்படியே கௌதம புத்தர் ....கருணை காட்டறார் ....அங்கேயே போட்டு தள்ளுவதை விட்டு விட்டு ,தலையை சுற்றி ஏன் மூக்கை தொடரே ....பைத்தியாமாடா உனக்கு ?"என்றான் சூர்யா கோபத்துடன் .

"ஏன் ரித்திகா இறந்த உடன் ரெண்டு பேரை போட்டு தள்ளின நீ இவனை ஏன் விட்டு வைத்தே ??/மாசிலாமணி சாருக்காக தானே .....எனக்கும் அவர் அப்பா மாதிரி ...தொழில் கற்று கொடுத்த குரு ....என் கையால் கொல்லவில்லையே தவிர அவன் நரகத்தை அனுபவித்து சாகும் படி தான் ஏற்பாடு செய்தேன் ...இங்கு எங்காவது செத்து வைத்தான் என்றால் மாசிலாமணி சாருக்கு தான் மன வேதனை ....அதான் கண் காணமால் மகன் சென்று விட்டான் என்று நினைக்கட்டும் என்று இப்படி செய்தேன் .....இவனுங்க கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்து விட்டார்கள் ....."என்றான் விஜய் .

"இப்போ எங்கே இருக்கான் ..."என்றான் சூர்யா .
 
Status
Not open for further replies.
Top