All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கதை திரி

Status
Not open for further replies.

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"தவறு இவர்கள் மேல் இல்லை ....சமுதாயத்தின் மேல் .....ஆண்கள் எத்தனை திருமணம் செய்தாலும் இவர்களுக்கு எந்த பட்டபெயரும் வருவது இல்லை .....ரெண்டாம் தாரம் என்ற பெயர் பெண்ணிற்கு மட்டும் தான் .....உங்களுக்கு ஏற்பட்ட குத்தல் பேச்சுக்களை பார்த்து வளர்ந்தவள் அத்தை நான் .....ஆதி மாமாவை யாரும் விரல் நீட்டி அப்படி சொன்னது இல்லை ...அப்படி சொன்னதை கேட்டு நீங்க எத்தனை முறை கண் கலங்கி நின்று இருந்தீர்கள் என்று கூட இருந்து பார்த்தவள் நான் ....மேடை போட்டு பெண் சுதந்திரம் ,பெண்ணியம் பேசிடலாம் ...ஆனால் இது போன்ற பட்டப்பெயர்கள் என்றும் நீங்குவதில்லை .....இப்போ ஒரு திருமணத்திற்கு சென்றேன் ...மணமகளின் அப்பாவிற்கு முதல் மனைவி இறந்து விட்டு இருக்க ,மனைவியின் தங்கையையே மணந்து இருந்தார் .இதற்கும் அந்த பெண்ணிற்கு முதல் திருமணம் ,மனனமகளை விட 5-6 வயது மட்டுமே அதிகம் ....ஆனால் அங்கு இருந்தவர்கள் அந்த மனைவியை எப்படி அறிமுகம் செய்தார்கள் தெரியுமா ?????இவங்க தான் உயர்திரு ------ரெண்டாம் மனைவி .....மனைவியை இழந்தது அந்த ஆண் ....ஆனால் ரெண்டாம் தாரமாய் மணந்த அந்த பெண்ணுக்கு தான் பட்ட பெயர் ......நீங்க எல்லாம் பட்ட கஷ்டத்தை என் மகள் பட ,அதை பார்க்க நான் தயாராய் இல்லை .....என் மகளுக்கு இவர்களில் இருவரில் யாரை மணந்தும் தியாகம் செய்ய வேண்டிய கடமை இல்லை .....இதனால் என் மகளுக்கு யாரும் சிலையும் வைக்க போவது இல்லை ......"என்றார் பவானி ரௌத்திரமாக .

இதற்கு பதிலை அவர்களால் சொல்ல முடியவில்லை .சமுதாயத்தின் நிதர்சனம் இது தானே ....சமுதாயமும் மக்களும் சில விஷயங்களை தவிர்த்து தேவை அற்ற ஒன்றுக்காகவே போராடுகின்றனர் என்பது தான் உண்மை .

சபரிமலைக்கு 18-60 வயது வரை போகலாம் என்று வாதிடுபவர்கள் ,பெண்களின் மாதவிடாய் காலத்தில் கட்டாய அலுவலக விடுமுறை என்று போராடவில்லை .அனைத்து போது இடங்களிலும் இலவச நாப்கின் என்று போராட வில்லை .பல்வேறு போட்டி தேர்வுகளில் பெண்களுக்கு வயது வரம்பு சலுகை என்று போராடவில்லை .வெளிநாடுகளில் கற்பழிப்பு போன்ற குற்றங்களை விசாரிக்க "ஸ்பெஷல் victims யூனிட் "என்ற போலீஸ் டிபார்ட்மென்ட் ஒவ்வொரு நகரத்திலும் செயல் படும்.அது இந்தியாவில் ஒவ்வொரு நகரத்திலும் தேவை என்று போராடவில்லை .ஒவ்வொரு நகரத்திலும் pedhophiles ,sexual offenders லிஸ்ட் கொண்ட வெப்சைட் ,அந்த அந்த தெருவில் வசிக்கும் பெண்கள் தொடர்பான குற்றவாளிகளின் டீடைல் பிரசுரிக்க படுவதில்லை .ஜாதி ,மதம் பார்த்து தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் சில இடங்களில் பதிவு செய்ய படுகிறது .

அரசு அலுவலகத்தில் பணியாற்றும் கணவன்மார்கள் கட்டாயமாக தங்கள் மனைவிக்கு மாதம்தோறும் கை செலவுக்கு பணம் தர வேண்டும் .அப்படி இல்லை என்றால் மனைவி புகார் கொடுத்தால் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க படும் .ஆனால் பெரும்பாலான குடும்ப தலைவிகள் இந்த சுதந்திரத்தை பெறுவது இல்லை .மனதிற்குள் மூடி மறைத்து ,வெளியே சொல்ல முடியாமல் புழுங்கி கொண்டு இருக்கும் பெண்கள் தான் அதிகம் .

இது எல்லாம் எவ்வளவூ இன்றியமையாதது என்று புரியாமல் போராடாமல் இருக்கும் இவர்கள் தான் "பேச்சுவாக்கில் "சொல்ல படும் இது போன்ற வார்த்தைகளுக்காக போராட போகிறார்கள் ?? விதவை ,கைம்பெண் ,ரெண்டாம் தாரம் ,மலடி போன்ற சொற்கள் ,குழந்தை இல்லை என்றால் இந்த விரதம் ,அந்த கோயில் என்று பெண்களை மட்டும் அலைக்கழிக்கும் நிலை தான் உள்ளது .சொன்னால் சொல்லி விட்டு போகட்டும் என்ற மனப்பாண்மை அனைவர்க்கும் வந்து விடாது .ஒரு சொல் வெல்லும் ,ஒரு சொல் கொல்லும் என்பது இது தான் .

இதில் பவானியின் குமுறல் நியாயமானது தான் .60 வயதான பின்னும் இது போன்ற அடைமொழிகள் தொடரும் வயதான பெண்களை ,அவர்கள் அறிமுகம் செய்ய படும் விதத்தை இன்றும் கண்கூடாக பார்க்க முடியும் .

சிவகாமியும் இதனை தாண்டி வந்தவர் என்னும் போது ஒரு அன்னையின் குமுறலை எதிர்த்து அவரால் பேச முடியவில்லை .

"புரியுது பவா .....மக்கள் மனம் மாற வேண்டும் .....அதற்கு இன்னும் எவ்வளவூ காலம் ஆகுமோ ...."என்றார் சிவகாமி

"சமுதாயம் எப்படியாவது போகட்டும் ....எனக்கு என் மகள் தான் முக்கியம் அத்தை ..."என்றார் பவானி .

"சரி பவா இதற்கு என்ன செய்ய போகிறாய் ?"என்றார் சிவகாமி .

"அத்தை ...என்னால் எப்போ ,எப்படி ,யாரால் என் மகளுக்கு ஆபத்து வரும் என்று என்னால் ஒவ்வொரு நொடியும் உயிரை கையில் பிடித்து கொண்டு வாழ முடியாது .......இந்த மாதத்திலேயே மதுராவிற்கு திருமணம் முடித்து விடலாம் என்று நினைக்கிறேன் .........அதற்கு உங்கள் உதவி வேண்டும் ...அதற்காக தான் வந்து இருக்கிறேன் ."என்றார் பவானி .

"உதவி என்று எல்லாம் ஏன் சொல்கிறாய் .....என்ன செய்ய வேண்டும் என்று சொல்லு ...."என்றார் ஆதி .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"என் அப்பாவுக்கு நீங்க வாக்கு கொடுத்து இருக்கீங்க ....என்னையும் என் குடும்பத்தையும் கடைசி வரை பார்த்து கொள்வதாக .....அது உங்களுக்கு நினைவு இருக்கிறதா அத்தை ."என்றார் பவானி .

"மறக்கும் உதவியையா உன் அப்பா செய்து இருக்கார் ....போடி பைத்தியக்காரி .....உங்க அப்பா கிட்டே பேசிய எல்லாம் எனக்கு ஞாபகம் இருக்கு ...."என்றார் சிவகாமி .

"நான் கேட்க போவது நியாயமா என்று கூட தெரியாது அத்தை ...என் அப்பா செய்த உதவிக்கு உங்கள் பதில் உபகாரத்தை நான் கேட்பது தவறு தான் ....ஆனால் நியாயம் ,நீதி ,நேர்மை இது எல்லாம் பார்க்கும் நிலையில் நான் இல்லை ......இதற்கு எனக்கு மன்னிப்பும் கிடையாது தான் ...."என்றவரை இடை மறித்த ருத்ரமாறன் ,"அத்தை .....என்ன கேட்கணுமோ கேளுங்க ...எதற்கு தயங்கறீங்க ....நாங்களும் உங்க குடும்பத்தினர் தான் ."என்றான் .

பெருமூச்சை வெளியிட்ட பவானி ,"அத்தை !.....என் மக மதுராவை உங்க வீட்டு மருமகளாக ஏற்று கொள்வீர்களா .....உங்க பேரன் ருத்ரமாறனுக்கு என் மகளை திருமணம் செய்து வைப்பீர்களா ....இது தான் என் அப்பாவுக்கு நீங்க பட்டு இருக்கும் நன்றி கடனுக்கு உபகாரம் ......என் மகளின் மானத்தையும் ,உயிரையும் காப்பாற்றி கொடுங்க அத்தை ."என்றார் பவானி சிவகாமியின் காலடியில் அமர்ந்து , மடியில் தலை வைத்து .

"பவானி ""அத்தை ","அம்மா "---என்று ஏக காலத்தில் பல குரல்கள் ஒலித்தன .

PENANCE WILL CONTINUE....
.
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
HI FRIENDS I GAVE UPDATE TODAY.

sorry to inform that my family members daughter and hubby are not well.esp my daughter is down with viral fever for the past few days.she is very cringy and want me to be with her whole time.

for the past 3 days im awake beacuse she is vomiting and coughing in night.so im not getting enough sleep.

diwali time .so taking care of relatives and daughter is taking toll on me.unable to concentrate.

if possible i give update by wednesday.

wish you happy diwali to all.may this day of light bring joy,happiness and all the good things in your life.

this diwali is so special for me beacuse i got such good and wonderful friends like you all.thanks you all for your support and kindness

thanks friends.keep on reading and reviewing.
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 30(3)

"என்னை எல்லோரும் மன்னிச்சுடுங்க .....எனக்கு வேறு வழி இல்லை ....உங்கள் குடும்பத்தை தவிர வேறு யாராலும் என் மகளை காப்பாற்ற முடியாது .....

..இந்த குடும்பத்திற்கு என்று ஒரு பெயர் இருக்கு .ஆள் பலம் ,பண பலம் ,சமூகத்தில் நல்ல பெயர் இருக்கு ..... மத்தவங்க செய்யறதுக்கும் ,கணவனாய் உரிமையோடு செய்யறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு ..இவை கொடுக்கும் மதிப்பும் மரியாதையையும் ,ரெண்டாம் தாரம் என்ற பெயர் கொடுத்து விடாது .ருத்ரா தம்பியை தவிர இப்போ இருக்கும் நிலைக்கு வேறு யாராலும் என் மகளுக்கு ஒரு நல்ல வாழ்வை கொடுக்கவே முடியாது .......கேட்டது தப்பு ,எங்க நிலைக்கு ரொம்பவே அதிகம் என்று தெரியும் தான் .ஆனா வேறு வழி இல்லை .எல்லோரும் என்னை மன்னிச்சுடுங்க ."என்றார் பவானி கண்கள் கலங்க .

வெகு நேரம் அங்கு கனத்த மௌனம் நிலவியது .யாராலும் எதையும் பேச முடியவில்லை .பவானியின் நிலை அவர்களுக்கு புரியாமல் இல்லை .அவர்கள் அந்த வார்த்தைகளால் பாதிக்க பட்டவர்கள் என்னும் போது ,பவானியையும் குறை சொல்ல அவர்களால் முடியவில்லை .கடலில் முழுகி கொண்டு இருப்பவனுக்கு பற்று கோல் போல் ருத்ரா பவானியின் கண்களுக்கு தெரிந்ததில் வியப்பில்லை தான் .

சற்று நேரம் எதையோ யோசித்த சிவகாமி ,"பவானி !.....நான் சொல்வதை மனதில் வை .....சில காலம் உங்களை எல்லாம் மறந்து எங்கள் பிரச்சனையில் முழுகி இருந்து விட்டோம் தான் ....முளையில் கிள்ளி இருக்க வேண்டிய பிரச்சனையை இவ்வளவூ தூரம் பலர் சேர்ந்து வளர்த்து விட்டோம் .அது உன் மகளின் வாழ்வை குறி வைக்கிறது .....எப்போ இருந்தாலும் மதுரா இந்த வீட்டு பெண் என்பதில் எந்த மாற்றமும் இல்லை .....அவளை பற்றிய கவலை உனக்கு தேவை இல்லை .இனி மதுரா எங்கள் பொறுப்பு ."என்றார் பவானி .

"அத்தை !......அப்போ திருமணம் ?"என்றார் பவானி சிவகாமி என்ன சொல்ல வருகிறார் என்பது புரியாமல் .

"மதுரா என் பேரனுக்கு தான் பவா .....இந்த வீட்டின் மருமகள் அவ தான் ....இனி அவளை பற்றிய கவலை உனக்கு வேண்டாம் ......"என்றார் சிவகாமி புன்னகையுடன் .

"பாட்டி !"என்றான் ருத்ரா அதிர்ந்து போனவனாய் .என்றுமே சிவகாமி எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டு பட்டே பழக்கமானவர்கள் அந்த குடும்பத்தினர் .இன்றும் தன் பாட்டியின் முடிவை எதிர்க்க துணியாதவனாய்
கண் கலங்க நின்றான் ருத்ரமாறன் .

"ரொம்ப சந்தோசம் அத்தை .....இப்போ தான் மனசு நிம்மதியா இருக்கு ...நான் கிளம்பறேன் ..."பலரின் வாழ்வில் சூறாவளியை கிளப்பி விட்டு ,பவானி நிம்மதியோடு கிளம்பி விட ,அந்த வீட்டினரின் மனம் தான் குழம்பி போனது .

மன வலியோடு ருத்ரா தன் அறைக்கு செல்ல முயல ,சிவகாமியின் குரல் அவனை நிற்க வைத்தது .

"ஹலோ யாரு ....முருகானந்தமா .....நல்லா இருக்கேன் ...நீ எப்படி இருக்கே .....செண்பகம் எப்படி இருக்கா ....உடம்பு இப்போ பரவாயில்லையா .....ஒண்ணும் இல்லை பா ...நம்ம ருத்ராவுக்கு திருமணம் ஏற்பாடு ஆகி இருக்கு .....பொண்ணு நம்ம சொந்தம் தான் .....பவானி தெரியும் தானே .....அவ பொண்ணு மதுராக்ஷி .....இப்போ தான் பேசி முடிச்சோம் ......அதான் உடனே உனக்கு சொல்லிடலாம் என்று அழைத்தேன் .....செண்பகம் ,ராஜேஸ்வரியிடம் சொல்லி விடு பா ......என்னப்பா செய்யறது .....நாம ஆசை பட்டோம் ....வாஸ்தவம் தான் ......இவனும் ஐந்து வருடமாய் ராஜிக்காக காத்துட்டு தான் இருந்தான் ....உன் மக தான் பிடி கொடுக்கவே மாட்டேன் என்கிறாளே .....என்னவோ நீதி ,நேர்மை ,நியாயம் ,தர்மம் என்று பிதற்றிட்டு இருக்கா .....ஆமா நாங்க நிறைய தப்பு செய்யறோம் தான் ....ஆனா அது ஒரு மனித மிருகத்தை எதிர்த்து என்று உன் மகளுக்கு புரியவே மாட்டேன் என்னும் போது என்னை என்ன செய்ய சொல்றே....முள்ளை முள்ளால் எடுப்பது எப்படி குற்றமாகும் ?????? .....அவ நல்லவளாவே இருந்துட்டு போகட்டும் ....இந்த ரவுடி குடும்பம் அவளுக்கு வேண்டவே வேண்டாம் முருகா .....அதான் ....எனக்கும் வம்சம் விருத்தி ஆகணும் இல்லை ?????இப்பவே ருத்ராவுக்கு வயசு ரொம்ப ஆகிடுச்சு ........சரி நீயும் உன் குடும்பமும் வந்து திருமணத்தை நடத்தி கொடுங்க .....எனக்கு என்று இருப்பது நீங்க தானே ......சரி வச்சுடறேன் ..."என்றார் சிவகாமி ராஜேஸ்வரியின் அப்பா முருகானந்தத்திடம்

அதிர்ந்து நின்ற ருத்ராவின் தோளில் தட்டியவர் ,"எப்பவோ கிடைக்கும் பலாக்காய்க்கு ஆசை பட்டு இன்று கிடைக்கும் களாகாயை விட்டு விடாதே ருத்ரா ......உனக்கு அவ மேல காதல் கத்திரிக்காய் இருக்கலாம் .....அவளுக்காக நீ ஆயுசு முழுவதும் தவம் இருக்கலாம் ....ஆனா என்னையும் ,உன் அம்மாவையும் நினைத்து பாரு .....இன்னும் எத்தனை வருடம் ,ஏன் நாளைக்கு உயிரோடு இருப்போமா என்பதே நிச்சயம் இல்லை ....எத்தனையோ தடவை மயிரிழையில் உயிர் தப்பி இருக்கோம் .....இது வரை அந்த ஆளை எதிர்த்துட்டே என் வாழ்வும் உன் அப்பா வாழ்வும் போய்டுச்சு .....ஒரு சந்தோசம் உன் திருமணத்தால் கிடைக்கட்டுமே ......உன் மகனை கொஞ்சும் ஆசை இருக்குடா ருத்ரா ......இந்த ஒரு நிம்மதியாவது எங்களுக்கு கிடைக்கட்டும் ....."என்றவர் கசந்த புன்முறுவல் புரிந்து தன் மகனோடு சென்று விட்டார் .

அவர் சென்றதும் பாரம் தாள முடியாதவனாய் ,பொத்தென்று அங்கு இருந்த சோபாவில் அமர்ந்தான் ருத்ரா .தலையை பிடித்து கொண்டு எவ்வளவூ நேரம் அப்படியே இருந்தானோ அவனுக்கே தெரியாது .அவன் மொபைல் அழைக்கும் சப்தம் கேட்டு கலைந்தவன் ,மொபைல் பார்க்க டிஸ்பிலே ,அது "பெட்டர் ஹாப் காலிங் "என்றது

அதே சமயம் காரில் சென்று கொண்டு இருந்த பவானியை கார்த்திக் அழைத்து கொண்டு இருந்தான் .

"டேய் .....உனக்கு நேரம் காலமே இல்லையா .....நான் தான் கால் கட் செய்துட்டே இருக்கேன்லே ...அப்பவே தெரிய வேண்டாமா ....ஏதோ முக்கியமா விஷயம் என்று ...ஆள் வளர்ந்த அளவூ உனக்கு அறிவு வளரவே இல்லை கார்த்திக் ."என்று அவனுக்கு ஒரு ஷொட்டு வைத்தார் .

"கொஞ்சம் நிறுத்தறீங்களா ......ஒரு மனுஷன் விடாமல் கால் செய்துட்டு இருக்கான் என்றால் அதுவும் அவசரம் என்று புரிய வேண்டாமா உங்களுக்கு .....சூர்யாவை பார்க்க மகளை அனுப்பிவிட்டு துணைக்கு என்னையும் அனுப்பி விட்டு ,பத்து நிமிடத்திற்கு ஒரு முறை அப்டேட் கொடுக்கணும் என்றது நீங்க தான் .....இதோ அப்டேட் தரேன் கேட்டுக்கோங்க .....உங்க மக சூர்யாவின் ஹாஸ்பிடலில் மயக்க நிலையில் இன்டென்சிவ் கேர் யூனிட்டில் இருக்கா ......ஒரு மணி நேரம் ஆச்சு இன்னும் மயக்கம் தெளியலை .....அந்த சூர்யாவிற்கு இருக்கும் பாசம் ,அன்பு கூட உங்களுக்கு இல்லை .....போதுமா .....எதிராளியையும் பேச விடுங்க "என்று பொரிந்து தள்ளினான் கார்த்திக் .


"கார்த்திக் !"என்று பவானி அலறி விட அதில் பயந்து போன ரகு நடு ரோட்டில் காரை நிறுத்தி பலரிடம் திட்டு வாங்கினான் .

சமாளித்து கொண்டு கார் கிளம்ப ,"என்ன கார்த்திக் சொல்றே ....ராணிமாவுக்கு என்ன ஆச்சு ?....அந்த சூர்யா ஏதாவது தப்பா .....அவளை ...."என்று கேட்க வந்ததை கேட்க முடியாமல் நிறுத்தினார் .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ஏன் அத்தை எப்பவுமே ..உங்களுக்கு மத்தவங்க கிட்டே இருக்கும் நல்லது தெரியவே தெரியாதா ....நல்லது செய்யறவங்களை வில்லன் ரேஞ்சுக்கு தான் பார்ப்பீங்களா ....அந்த சூர்யா உங்க மகளின் காலேஜ் நண்பன் "சின்ன தம்பி பிரபு "வாம் .அப்பவே மதுராவின் மானத்தை காப்பாத்தியவன் தான் இப்போ துச்சாதனன் வேலை செய்வானா ....வாயில் ஏதாவது வந்துட போகுது அத்தை ...சீக்கிரம் சூர்யாவின் "லைப் சப்போர்ட் "ஹாஸ்பிடலுக்கு வந்து சேருங்க .....மனுஷன் இருக்கும் நிலை புரியாம நீங்க வேறு ஏதாவது பேசி கொலை வெறியை கிளப்பி விடாதீங்க ."என்றவன் அழைப்பை துண்டித்து விட்டான் .

அதே சமயம் "லைப் சப்போர்ட் "ஹாஸ்பிடல் டாக்டர்களை ஒரு வழி செய்து கொண்டு இருந்தான் சூர்யா என்றால் மிகையில்லை .அவர்களும் என்ன தான் செய்வார்கள் ...எல்லா டெஸ்டும் "நார்மல் "என்று தான் வருகிறது ....ஆனால் மயக்கம் தெளியவில்லை என்னும் போது தலையை பிய்த்து கொண்டு இருந்தனர் .

"சூர்யா "!ரிலாக்ஸ் ......அவங்களை அவங்க வேலை செய்ய விடு .....நம்ம ஹாஸ்பிடல் டாக்டர்ஸ் வேர்ல்ட் பெஸ்ட் என்று உனக்கே தெரியாதா என்ன .....நீ டென்ஷன் ஆகி அவங்களையும் பயமுறுத்தாதே ...."என்றான் உத்தம் சூர்யாவின் தோளில் கை வைத்து .

"எப்படிடா ...அமைதியா இருக்க முடியும் ????ஒரு மணி நேரம் ஆச்சு ....மது மயங்கி ...ஏன் என்று புரியாம குழம்பிட்டு இருக்காங்க ....பெஸ்ட் டாக்டர்ஸ் ,பெஸ்ட் ஹாஸ்பிடல் இருந்து என்ன பயன் .........அவளுக்கு ஏதாவது ஆகட்டும் ...இவங்களை எல்லாம் உயிரோடு எரிச்சுடறேன் ..."என்றான் கோபத்துடன் .

அவனை சமாதானம் செய்வது இயலாத காரியம் என்பது தெரிந்த விஷயம் என்று உத்தம் பெரு மூச்சு விட்டு தள்ளி நின்றான் அதே சமயம் அவன் மொபைல் அழைப்பு ,அழைப்பது "விஜய் "என்றது .

'ரவுண்டு டூ வா .....கடவுளே காப்பாத்து 'என்று உலகில் உள்ள கடவுள்களை எல்லாம் வணங்கி விட்டு அழைப்பை ஏற்றான் உத்தம் .

"மதுவுக்கு என்ன .....எப்படி இருக்கா ?"என்றது விஜய்யின் சிம்ம குரல் .போனினை காதை விட்டு தள்ளி பிடித்து ,காதை ஒரு தடவை அழுத்தி விட்டான் .விஜய் அந்த அளவுக்கு கத்தினால் இவன் காது கொய்ங் என்றது .

"இன்னும் மயக்கத்திலே தான் இருக்காங்க ....எல்லா டெஸ்டும் நார்மல் என்று தான் இருக்கு ...ஆனா ஏன் இன்னும் மயக்கம் தெளியலை என்று தான் குழம்பிட்டு இருக்காங்க ...."என்றான் உத்தம் .

"எந்த டாக்டர் டிரீட்மென்ட் தருவது ????அவரிடம் போனை கொடுங்க உத்தம் ."என்றான் விஜய் .

"விஜய் சார் .....உங்களுக்கு பெஹன் மேல் உள்ள பாசம் புரியாமல் இல்லை ....ஆனா இப்போ தான் சூர்யா சார் கிட்டே மாட்டி எல்லாரும் அலண்டு போய் இருக்காங்க .....நீங்களும் ஆரம்பிக்காதீங்க .....லெட் தேம் டூ தேர் ஜாப் ...."என்றான் உத்தம் .

"உத்தம் !.....இங்கே என் கூட ஆல்வின் வைப் மிருதுளா இருகாங்க ....அவங்களும் டாக்டர் தான் ....நேத்து மது ஒரு முறை மயங்கி விழுந்துட்டா ....இவங்க தான் ட்ரீட் செய்தாங்க ....அதை பற்றி இப்போ ட்ரீட் செய்யும் டாக்டர்ஸ் கிட்டே அவங்க பேசணும் .....போய் போனை டாக்டர் கிட்டே கொடுங்க .....போனை சூர்யா எங்கே வைத்து தொலைச்சான் ???அவனுக்கு கால் செய்து அவன் எடுக்காமா தான் உங்களுக்கு கால் செய்து சொல்றேன் ...இன்னும் டைம் வேஸ்ட் செய்யாதீங்க ....டாக்டர் கிட்டே போன் கொடுங்க ....குயிக் ...."என்றான் விஜய் கோபத்துடன் .

உத்தம் போன் உடன் இன்டென்சிவ் கேர் யூனிட் ஓட ,அதே நேரம் விஜய்யின் கார் அந்த ஹாஸ்பிடலின் காம்பௌண்ட்டுக்குள் புயலென சீறி பாய்ந்து வந்து நின்றது .விஜய் இறங்குவதற்குள் இறங்கி இருந்த ஆல்வின் ,மதுரா அட்மிட் ஆகி இருக்கும் தளத்தின் விவரத்தை கேட்டு அறிந்து இருந்தான் .மிருதுளாவும் டிரீட்மென்ட் கொடுக்கும் டாக்டர் இடம் போனில் பேசியவாறே நடக்க ,லிஃப்டுக்கு கூட காத்து இருக்காமல் படிகளில் தாவி ஏறினான் விஜய் .

அவர்கள் பின்னாலேயே வந்து சேர்ந்தனர் பவானியும் ரகுவும் .இவர்கள் மதுராவை பற்றி விசாரித்து ,லிப்ட் மூலம் மாடிக்கு வந்து ,வி ,ஐ .பி பகுதிக்கு வந்து சேர்வதற்கும் ,விஜய்யின் ருத்ரதாண்டவம் நடக்கவும் சரியாக இருந்தது .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விஜய் அறைந்த அறையில் சூர்யா தள்ளி சென்று விழுந்தான் ."என்ன டா செய்து தொலைச்சே என் மதுவை ......கடன்காரா ....எங்களை விட்டு போகவே மாட்டாயா ....காலேஜ் டைம்மில் தான் உயிர் எடுத்தேன்னு பார்த்தா இப்போ ஏன் டா மறுபடியும் வந்து உயிரை எடுக்கறே .....என் மதுவுக்கு மட்டும் ஏதாவது நடக்கட்டும் .....உன்னை உயிரோடு விட மாட்டேண்டா ....."என்று சூர்யாவை புரட்டி எடுக்க முயன்ற விஜயை சூர்யாவிடம் இருந்து பிரிக்க முடியாமல் ஆல்வின் ,உத்தம் ,பாலாஜி , செக்யூரிட்டி ஆட்கள் மிகவும் போராட வேண்டி இருந்தது .

சூர்யாவும் விஜயை விடும் நோக்கில் இல்லை .பல வருட பகை ,புகைச்சல் இருவருக்கும் .அதை தீர்த்து கொள்ளும் சமயம் கிடைக்க ,சூர்யாவும் விஜயை புரட்டி எடுத்தான் .

"உன்னை இப்போ யார் வர சொன்னது .....அவளை விட்டு ஒரு முறை போனாய் தானே .....அப்படியே இருந்து தொலையேன் .....உன்னை யார் மீண்டும் எங்களுக்கு நடுவே வர சொன்னது .....இனி மதுரா எனக்கு தான் .....அவளை இனி யார் வருத்தவும் விட மாட்டேன்டா .....என் மதுராவை இனி நினைக்க கூட உனக்கு தகுதி இல்லை ....அதான் உன் உத்தம பத்தினி சோனா இருக்காலே ....அவ எல்லாம் ஒரு மனுசி ....அவளை அடக்க முடியலை பெரிய இவனாட்டம் வந்துட்டே ....காதலிச்சா மட்டும் பத்தாது .....அவளை கண் கலங்க விட கூடாது ....கடைசி வரை எது வந்தாலும் உறுதியா நின்று கை பிடிப்பவன் தான் ஆம்பிள்ளை .....நான் ஆம்பிள்ளை டா .....இனி எவன் மதுராவின் நிழலை தொட நினைத்தால் கூட அவன் உயிர் அவனுக்கு இல்லை ."என்று உறுமி கொண்டு இருந்தான் .

அது வி .ஐ .பி பகுதி என்பதால் ,தனி தளத்தில் அமைந்து இருப்பதால் அங்கு நடக்கும் அடிதடி வெளியே தெரியவில்லை .இல்லை என்றால் அன்றைய தலைப்பு செய்தி மதுராவாக தான் இருந்து இருப்பாள் .

"காதலிக்காக அடித்து கொண்ட காதலர்கள் ","மதுராவின் மாலை யாருக்கு ?","அடிதடி சண்டையில் இறங்கிய இளம் தொழில் அதிபர்கள் "என்று செய்தி ஓடி இருக்கும் .

இவர்கள் காதல் பற்றி அறியாத கார்த்திக் ,ரகு ,பவானி மட்டுமே தாங்கள் கேள்வி பட்டத்தை ஜீரணிக்க முடியாதவர்களாய் ,அங்கு நடந்த அடி தடியை கண்டு சர்வமும் நடுங்கி நின்றனர் .சூர்யா ,விஜய் கதை அறிந்தவர்களுக்கு இந்த அளவுக்கு அதிர்ச்சி இல்லை என்றாலும் இருவரும் இப்படி லோக்கல் ரேஞ்சுக்கு இறங்கி அடித்து கொள்வார்கள் என்று அவர்களும் எதிர் பார்த்து இருக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும் .

பிராமபிராயத்தனம் என்று சொல்வார்களே அதை செய்து இருவரையும் பிரித்து விட்டனர் மற்றவர்கள் .அந்த தளத்தின் ஒவ்வொரு மூலைக்கு இருவரையும் பிரித்து நிறுத்தினர் .முகம் வீங்கி ,வாய் கிழிந்து ரத்தம் வழிய ,சட்டை கசங்கி ,எப்பவுமே டிப் டாப்பாக இருக்கும் இருவரா இப்படி என்று தான் நினைக்க தோன்றியது அங்கு இருந்தவர்களுக்கு .

பிரித்து வைத்தாலும் இருவரும் ஒருவரை ஒருவர் கண்களால் எரித்து கொண்டு இருந்தனர் .ஹிரோஷிமா ,நாகசாகி குண்டுகளுக்கு இணையான கோப அலை இருவரிடமும் இருந்து வெளிப்பட்டு கொண்டு இருந்தது என்றால் மிகையல்ல ....

அதுவும் அதிர்ந்து கூட பேசாத விஜய்யின் இந்த முகம் பவானியை கதி கலக்கியது . சூர்யாவையும் அவர் அறிவார் என்றாலும் இருவரின் மறுமுகம் அவரை புரட்டி போட்டு கொண்டு இருந்தது .இருவரும் அடித்து கொள்வது அவர் மகளின் உடல் நிலையை குறித்து என்னும் போது அவரின் பதற்றம் மேலும் கூடி போனது .

PENANCE WILL CONTINUE.....
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 30(4)

இப்படி அங்கு ஒரு பிரளயமே நடப்பது அறியாமல் மயக்கமா உறக்கமா என்று பிரித்து கூற முடியாத அளவூ இருந்த மதுரா ரெண்டு மணி நேரம் கழித்து கண் விழித்து தலைமை மருத்துவருக்கு ஏற்பட இருந்த ஹார்ட் அட்டாக்கை நிறுத்தினாள் .சூர்யா போன்ற அரக்கனை நினைத்தே பதறி கொண்டு இருந்தவர் அங்கு விஜய் என்னும் மற்றொரு அரக்கன் வந்து விட்டதையும் ,இருவரின் அடிதடி நர்ஸ் மூலம் கேள்வி பட்டு இருந்தவர் வேண்டாத தெய்வம் இல்லை என்றே சொல்லலாம் ....சூர்யா குதித்த குதியில் ஏற்கனவே நடுங்கி கொண்டு இருந்த அவர் ,மதுராவிற்கு காப்பாத்தவே முடியாத நோய் என்ற கோணத்தில் தான் டெஸ்ட்களை செய்து கொண்டு இருந்தார் .மிருதுளா மதுராவின் நிலை பற்றி கூற ,அவரின் கண்களுக்கு அவள் தெய்வமாகவே தோன்றி விட்டாள் .உயிர் யாராய் இருந்தாலும் வெல்லம் தானே ....சூர்யா ,விஜய் கையால் சாக அவருக்கு என்ன வேண்டுதலா என்ன .

மதுரா கண் விழித்து விட தான் உயிர் பிழைத்த சந்தோசத்தில் திக்குமுக்கு ஆடி போனார் அவர் .வெளியே வந்து அவர் மதுராவின் மயக்க காரணத்தை சொல்லி ,பயப்பட ஏதும் இல்லை சொல்லி முடிப்பதற்குள் அவரை இடித்து தள்ளாத குறையாய் விஜயும் ,சூர்யாவும் மதுரா இருந்த அறைக்குள் ஓடினார்கள் .
samantha-wallpaper.jpg

மிருதுளாவிடம் பேசி கொண்டு இருந்த மதுரா உள்ளே நுழைந்த இருவரின் கோலத்தை கண்டு ஒரு நொடி ஆடி தான் போனாள் .பின் மெல்ல கோபம் ஏற இருவரையும் முறைத்தாள் .அவள் நலமாக இருக்கிறாள் என்பதால் ஆசுவாச பட்ட இருவரும் ,மதுராவின் கோப பார்வையை எதிர் கொள்ள முடியாதவர்களாய் ஆளுக்கு ஒரு பக்கம் தலையை திருப்பி கொண்டனர் .

"என்ன இது ????மனசுக்குள்ள சின்ன பசங்க என்று நினைப்போ ....அண்ணி இவங்களுக்கு டிரீட்மென்ட் பாருங்க ."என்றாள் மிருதுளாவிடம் .

"அதெல்லாம் வேண்டாம் மதுரா ....இட்ஸ் நத்திங் ."என்று பேசி கொண்டு இருந்த சூர்யாவின் குரல் மதுராவின் முறைப்பில் அடங்கி போனது .

"என்ன குணா கமல் என்ற நினைப்போ ...'ஹ்ம்ம் எனக்கு உண்டான காயம் தன்னாலே ஆறிடும் ...அது என்ன மாயமோ தெரியலை ....என்ன மர்மமோ புரியலை ...எனக்கு ஒண்ணுமே ஆகறது இல்லை .'என்று டயலாக் விட ,இல்லை "ராக்கி "பட சில்லவெஸ்டெர் ஸ்டாலோன் என்று நினைப்போ உங்க ரெண்டு பேருக்கும் ?...போய் அமைதியா அந்த சோபாவில் உட்காருங்க ....மிருது அண்ணி நீங்க இவங்களுக்கு டிரீட்மென்ட் ஆரம்பியுங்க ."என்றவளின் கோப குரலுக்கு கட்டு பட்டு அமர்ந்தனர் இருவரும் .

வெளியே அப்படி சண்டை போட்டவர்களா இவர்கள் என்றே தோன்றியது மற்றவர்களுக்கு .ஆண் சிங்கங்களான இருவரையும் கட்டு படுத்தும் ஆற்றல் தன் மகளின் ஒற்றை பார்வைக்கு இருப்பதை கண்ட பவானி இவர்கள் வாழ்வில் தான் ஒரு பார்வையாளர் என்பதையும் ,அவ்வளவூ சுலபமாக ருத்ரா உடன் தன் மகளின் திருமணம் நடந்து விடாது என்பதையும் புரிந்து கொண்டார் .

"இது ஹாஸ்பிடல் என்ற நினைப்பு இருக்கா இல்லையா உங்க ரெண்டு பேருக்கும் ????மனசுக்குள்ள "அக்னி நட்சத்திரம் ",கார்த்திக் -பிரபு என்று எண்ணமா ???எப்போ பார்த்தாலும் முட்டிட்டே இருக்கீங்க ....வெளியே போய் சொல்லிடாதீங்க பெரிய பிசினெஸ் மாக்னெட்ஸ் என்று ...சிரிக்க போறாங்க .....திரும்ப இது போல் சின்ன பிள்ளை அடிச்சு கொள்வது போல் செஞ்சு வச்சீங்க ....என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது .....ஊர் உலகத்தில் இருப்பவனுங்க உங்களை கொல்ல துடிப்பது போதாது என்று நீங்க ரெண்டு பேருமே ஒருவரை ஒருவர் கொல்ல போவதாக பொது இடத்தில கத்தி இருக்கீங்க .....டிரீட்மென்ட் முடிச்சாச்சு இல்லை ...ரெண்டு பெரும் கெட் அவுட் ஆப் திஸ் ஹாஸ்பிடல் ....."என்றாள் மதுரா கோபமாக .

அவளை எதிர்த்து ஒரு பேச்சு கூட பேசாத இருவரும் தலையை தொங்க போட்டு கொண்டு வெளி ஏறி விட , இது அனைத்தையும் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த பவானிக்கு மகளின் இந்த பக்கம் வியப்பாக இருந்தது என்றால் ஆண்கள் இருவரின் நடவடிக்கை உட்ச பட்ச திகைப்பை தான் கொடுத்தது .

வெளியே வந்த இருவரும் அங்கு இருந்த காரிடோரில் இருந்த நாற்காலியில் ஆளுக்கு ஒரு பக்கம் அமர்ந்து கொண்டனர் .முறைப்பு தொடந்து கொண்டு தான் இருந்தது .இவர்கள் மீண்டும் அடித்து கொள்ளாமல் இருக்க ,அடித்து கொண்டால் பிரித்து விட என்று ஆல்வின் ,உத்தம் ,பாலாஜி தயாராக நின்றனர் .

விஜயை முறைத்து கொண்டு இருந்த சூர்யாவின் தோளில் கை வைத்து அழுத்தினாள் சந்திரா .
shriya_saran_hot_photos_nuvva_nena_010.jpg

"என்ன ப்ரோ ...ஹாஸ்பிடல்லையே ஒரு வழி செஞ்சுட்டிங்க போல் இருக்கு இருவரும் .....டீன் ஹார்ட் specialist பார்க்க போகும் அளவூ அவரை படுத்தி எடுத்து இருக்கீங்க .....செம்ம பைட் போல் இருக்கு .....ச்சே ஒரு நல்ல சீன் மிஸ் செய்துட்டேனே ."என்றாள் அவன் அருகே அமர்ந்தவாறு .

"என்ன நக்கலா ?எங்கே போய் தொலைந்தே ....உனக்காக தானே இந்த ஹாஸ்பிடல் கட்டி கொடுத்தேன் ....அவசரம் என்னும் போது எங்கே தொலைந்தே ..."என்றான் சூர்யா கடுப்போடு .

"தோடா .....நீ அவசரம் என்று குதிக்கிறாய் என்பதற்காக செய்து கொண்டு இருக்கும் ஆபரேஷன்னை அப்படியே விட்டா வர முடியும் ??????உனக்கே ஓவர் ரா இல்லை ....ஆமா நீங்க ரெண்டு பேரும் முட்டி மோதுவது என்றால் அது ஒரே ஒரு ஆளுக்காக தான் இருக்கும் ......வழக்கமா அது நடப்பது தான் ....இந்த முறை யாருக்காக இந்த அடி ,தடி ,ரத்த வெள்ளம் எல்லாம் ?"என்றாள் சந்திரா .

"மதுரா தான் மயக்கமாகிட்டா ......அவளை தான் அட்மிட் செய்து இருக்கோம் ."என்றான் சூர்யா .

"அதானே பார்த்தேன் ...நீ இந்த அளவுக்கு டீன் வரை டென்ஷன் படுத்தி இருக்கியே என்று அப்பவே யோசித்தேன் .....மீண்டும் கோகிலா மாதிரி ....மீண்டும் மதுரா என்ட்ரி யா ....ஒகே ஒகே எனக்கு என்டெர்டெய்ன்மெண்ட் தான் இனி ..."என்றாள் சந்திரா புன்னகையுடன் .

"என்னடீ ரொம்ப ஓவர் ரா பேசிட்டு போறே ...கொழுப்பா ?"என்றான் சூர்யா கடுப்போடு .

"இல்லை ப்ரோ நக்கல்ஸ் ....."என்றவள் ,"இரு ப்ரோ உள்ளே போய் ஒரு அட்டெண்டென்ஸ் போட்டுட்டு வந்துடறேன் ....."என்று மதுராவின் அறைக்குள் சென்றாள் சந்திரா .

அங்கு இருந்த ரகு இவளை கண்டு ஜெர்க் ஆக ,அவனை கண்டு இவள் மிட்டாய் கடையை பார்த்த குழந்தை லுக் விட ,இந்த பார்வை பரிமாற்றம் ,இருவரிடம் தென்பட்ட மாற்றத்தை மதுராவின் கழுகு கண்கள் ஒரே நொடியில் கண்டு விட்டது .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
'ஓஹ் அண்ணாத்தை இந்த அளவு ரியாக்ட் செய்யறான் என்றால் இது தான் மூன் போல் இருக்கு .....ஆளு பார்க்க சும்மா நச்சுன்னு ஸ்ரேயா கணக்கா ,செமையா தான் இருக்கா .....இந்த ரசகுல்லாவையா இந்த மடையன் வேண்டாம் என்று இருக்கிறான் .....சூர்யா தங்கச்சியா .....சுப்பா ....தரகர் வேலையை நிரந்தரம் ஆகிடுவாங்க போல் இருக்கே .....'என்று தனக்குள் நினைத்து கொண்டாள் மதுரா .

"ஹாய் மதுரா ....ஐ ஆம் ..."என்றவளை இடை மறித்த மதுரா ,"டாக்டர் சந்திரா ....ஓனர் ஆப் திஸ் ஹாஸ்பிடல் .....சூர்யா பிரதாப் ரத்தன் சிங் ஆசை தங்கை ....முன்னே பேசி இருக்கோம் ....யாம் ஐ கரெக்ட் . ?"என்றாள் தன் கைகளை நீட்டிய படி .

"எஸ் யு ஆர் கரெக்ட் ....."என்றவள் மிருதுளாவிடம் மதுராவின் உடல் நலத்தை பற்றி கேட்டு அறிந்து கொண்டு பவானிக்கு மதுராவின் உடல் நலத்தை பற்றி கூறி பயப்பட எதுவும் இல்லை என்று தேறுதல் கூறினாள் .

அவளை அங்கேயே நிறுத்தி கொண்டு மதுரா பேச ஆரம்பித்து விட ,ரகு மெல்ல வெளியேறினான் .அதை கண்டு சந்திராவின் முகம் வாடி போக ,மதுரா உள்ளுக்குள் சிரித்து கொண்டாள் .

"ராணிமா ...போதும் ரெஸ்ட் எடு ....அவங்க டாக்டர் இல்ல ....வேலை இருக்கும் ...சும்மா பேசி பேசியே எனெர்ஜியை வேஸ்ட் செய்துக்காதே ....படுத்து தூங்கு ."என்றார் பவானி .

"அட என்னமா நீங்க .....மாமியாரும் மருமகளும் ஒருவரை ஒருவர் தெரிஞ்சுபீங்க என்று பேசினால் ,அவங்களை நீங்க பேக் செய்யறதிலேயே குறியா இருக்கீங்க ......போங்க மா நீங்க ...."என்றாள் மதுரா .

"என்னடி சொல்றே ...மருமகளா யாருடீ அது ?"என்றார் பவானி .

"இதோ உன் கண் முன்னாலேயே நிற்கிறாங்களே ....தங்க சிலையாட்டம் .....டாக்டர் சந்திரா இவங்க தான் என் அண்ணி ...உங்க மருமக ...."என்றாள் மதுரா புன்னைகையுடன் .

"இன்று ராசிபலனில் தனக்கு "திகைப்பு "என்று போட்டு இருந்தார்களோ என்று பவானி யோசிக்கவே ஆரம்பித்து விட்டார் .ஒருத்தர் எத்தனை திகைப்பை தான் ஒரு நாளில் எதிர் கொள்ள முடியும் ?ஒரு வேளை மகள் தன்னிடம் விளையாடுகிறாளோ !!!

"வர வர உன் விளையாட்டுக்கு அளவே இல்லாமல் போய்ட்டு இருக்கு ராணிமா .....சாரி டாக்டர் ...அவ இப்படி தான் எதையாவது உளறிட்டு இருப்பா ...நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க ...."என்றார் பவானி பதறியவராய் .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அம்மா !...யாரு இவங்க தப்பா நினைச்சுக்க போறாங்க ....அம்மா கொஞ்சம் கண்ணை நல்லா திறந்து பாருங்க ....அண்ணி என்று கூப்பிட்ட உடனே அவங்க அண்ணனோடு டூயட் பாடவே போய்ட்டாங்க .....5-6 வருசமா ஒன் சைடு லவ் மா ....பார்க்க சும்மா நச்சுன்னு இருக்காங்க .டாக்டர் வேற ....ஜெய்ப்பூர் இளவரச குடும்பம் ....இவ்வளவூ இருந்தும் உங்க செல்ல புள்ளை நோன்னு சொல்லிட்டு லூசு மாதிரி இவங்களை ரிஜெக்ட் செய்துட்டு இருக்கு .....இவங்களும் 'சற்றும் மனம் தளராத விக்ரமாதித்த மகாராஜா வேதாளம் பிடிக்க போவதை போல் தொறத்தி தொறத்தி லவ் செய்துட்டு இருகாங்க.....ஹ்ம்ம் நோ ரெஸ்பான்ஸ் ."என்றாள் மதுரா .

"உங்களுக்கு எப்படி மதுரா இது எல்லாம் தெரியும்.அவங்க சொன்னாங்களா ?"என்றாள் சந்திரா அதிர்த்தவளாய் .

"யாரு அவங்க .....ஓஹ் மேரா அண்ணத்தையா ....சொல்லிட்டு தான் மறுவேலை பார்ப்பான் பாருங்க ....6 மாதம் முன்னாடி குன்னூர் வந்த போது உங்களை பார்க்கில் வைத்து கடிச்சி வைச்சானே அப்போ தெரிய வந்தது .....அவன் நண்பன் அதான் கார்த்திக் என்னும் ஓட்டை வாய் இருக்கே ...அதை கொஞ்சம் கிளறினேன் ....ஏபிசி என்று எல்லாத்தையும் ஒப்பிச்சுட்டான்.ஆமா தெரியாம தான் கேட்கிறேன் ..உங்களுக்கு இந்த பெட்ரோமாஸ் லைட்டே தான் வேண்டுமா ? ...."என்றாள் மதுரா .

பதில் பேசாமல் சந்திரா வேதனையோடு தலை குனிந்து விட ,"ஏன் ...ரகு இப்படி சொன்னான் ராணிமா ?"என்றார் பவானி நீண்ட யோசனைக்கு பிறகு -அவர் கண்கள் சந்திராவை மேல் இருந்து கீழ் அளவெடுத்து கொண்டு இருந்தது .

"அட நீங்க வேற ...அவனுக்கு தங்கை திருமணம் ,பெற்றோர் என்ன சொல்வார்கள் என்பது எல்லாம் இல்லை ...நீங்க ஓவர்ரா கற்பனை வளர்த்துக்காதீங்க ....அவனுக்கு நட் போல்ட் கழண்டு போய் இருக்கு ....இவங்க கோடீஸ்வரங்களாம் .....பணக்காரங்க எல்லோரும் கெட்டவங்களாம் ....குடும்பத்தை பிரித்து விட்டு தான் மறுவேலை பார்ப்பங்களாம் ...திருமணம் எல்லாம் அவங்களுக்கு பொழுது போக்காம் .....உதாரணம் நம்ம அப்பா அவர் ஆசை அண்ணனை பிரிய காரணம் காஜா ,அவரின் பணம் .விஜய் -சோனா மேரேஜ் லைப் பார்த்துட்டு இவங்களும் சோனா போல் இருப்பாங்க ....இப்போ இல்லை என்றால் பின் நாளில் மாறிடுவாங்களாம் ....அவனுக்கு ஏழைக்கு ஏத்த எள்ளு உருண்டை தான் லாயக்காம் ....இவங்க வளர்ந்த முறை ,இவங்க வசதியான வாழ்வு முறை ,அவன் வேலை ,சம்பளம் ,குடும்ப முறைக்கு ஒத்து வராதாம் .இவங்க அழகுக்கு முன் அவன் நிற்க முடியாதாம் .....இப்படி எல்லாம் பார்க்கில் உளறிட்டு இருந்தான் .வந்த கோபத்திற்கு அங்கேயே அப்பி இருப்பேன் ....யாரை யார் கூட இணை கூட்டுவது என்று தெரியாத கூமுட்டைமா அவன் ....பயங்கர inferiority காம்ப்லெஸ் பிடிச்சவனா இருக்கான் ....பணமா வாழ்க்கையை நிர்ணயிக்க போகுது ....மனசு ஒன்றாம வாழ்ந்து தான் என்ன பயன் என்று புரியாதவன் ....மனசு ஒன்றாம வாழ்வதற்கு பதில் ரிஸ்க் எடுத்து பிடிச்ச வாழ்க்கையை வாழ்ந்து தான் பார்ப்போமே என்று யோசிக்க மாட்டேன் என்கிறான் ....எனக்கு உங்க மேல தான் கோபம் சந்திரா .....அன்னைக்கு அவன் பார்க்கில் பேசின பேச்சுக்கு நீங்க இந்நேரம் வேறு யாரையாவது திருமணம் செய்துட்டு அவன் முன் வாழ்ந்து காட்டி இருக்க வேண்டும் ...இன்னும் இவன் மட்டும் தான் உலகில் ஆண் என்று காலில் விழுவதால் தான் உங்கள் மேல் இத்தனை இளக்காரம் ...."என்றாள் மதுரா ஆற்றாமையுடன் .

PENANCE WILL CONTINUE.....
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 30(5)
shriya_saran_hot_photos_nuvva_nena_005.jpg


"பேசிட்டு போகட்டும் மதுரா ....அவர் தானே சொன்னது ....என் காதல் உண்மையானது ...அவரை தவிர இந்த ஜென்மத்தில் வேறு யாரையும் நான் மணக்க போவதில்லை என்பது தான் நிஜம் ....நினைவில் முடியாவிட்டால் கனவில் அவரோடு வாழ்ந்து விட்டு போகிறேன் ...அவ்வளவூ தானே ....ரிலாக்ஸ் ...நீங்க டென்ஷன் ஆகாதீங்க ....அவர் கிடைக்கவில்லை என்றால் உடனே தற்கொலை என்று எல்லாம் போகும் அளவூ நான் கோழை இல்லை ...வாழ்ந்தால் தானே அவரை கடைசி மூச்சு உள்ள வரை காதலிக்க முடியும் .எது நடக்க வேண்டுமோ அது நடக்கும் .....நீங்க உடம்பு தேறும் வழியை பாருங்கோ ...உங்களுக்கு இருக்கும் பிரச்சனையில் என் கவலையையும் இழுத்து போடுக்காதீங்க ....டேக் ரெஸ்ட் ...நான் பிறகு வந்து பார்க்கிறேன் ...பை மதுரா ...வரேன் ஆன்ட்டி ..."என்றவள் அந்த அறையை விட்டு வெளியேறினாள் .

"என்னமா ....சூர்யா கிட்டே பேசிடலாமா ...உங்க ஆசை மகன் தான் இவங்களை வேதனை படுத்தறான் என்றால் நீங்களும் வேண்டாம் என்று சொல்லி அவங்களை மேலும் நோகடிக்காதீங்க .....ரொம்ப நல்லவங்க மா அண்ணி ....ரொம்ப சாப்ட் கேரக்டர் ....பணக்காரங்க என்ற பந்தா எல்லாம் துளியும் கிடையாது .ஜெம் ஆப் எ வுமன் ....இவங்களை மிஸ் செய்தால் இழப்பு நமக்கு தான் அம்மா ....இவங்களை விட நீங்க தேடி பார்த்தாலும் எல்லாம் அமைந்த பெண் கிடைப்பது ரொம்பவே கஷ்டம் அம்மா ...."என்றாள் மதுரா தாயின் கரங்களை பிடித்து கொண்டு .

"அது இல்லை ராணிமா ....அரண்மனை மாதிரி வீட்டில் வளர்ந்தவங்க ...நம்ம வீட்டில் எல்லாம் வந்து இருப்பாங்களா ....அவங்க அளவுக்கு வசதி எல்லாம் நம்மால் செய்ய முடியுமா ....சொந்த ஹாஸ்பிடல் அதுவும் சென்னையில் மட்டும் இல்லை இந்தியாவில் மிக பெரிய ,நல்ல பெயர் உள்ள ஹாஸ்பிடல் வைத்து இருபவங்களை போய் நாம அடுப்படியில் விட முடியுமா என்ன ????"என்றார் பவானி .

"மாமியார் புத்தியாமா ?????ஏன் அவங்களை மருமகளாய் நினைக்கறீங்க முதலில் ????ரெண்டாவது மகளாய் நினையுங்க ........ஏன் எனக்கு ஒன்று தேவை என்றால் ஓடி ஓடி செய்ய மாட்டிங்களா என்ன ???இது நாள் வரை நாம நாலு பேரும் சேர்த்து வைத்து இருப்பது எல்லாம் எதற்காக ?என்றைக்காவது நான் சமையல் கட்டில் நிற்க அனுமதித்து இருக்கீங்களா ?????போகும் இடத்தில என்னை என்ன சொல்வார்கள் என்று டயலாக் மட்டும் விடுவீர்களே தவிர நான் கேட்கும் அத்தனையும் ஹால் சோபாவிற்கே தானே மா வரும் ????அது போல் அண்ணியையும் இன்னொரு மகளாய் நினைத்து செயுங்க ....ஏன் உங்க மகளை மட்டும் அடுப்படியில் நிற்க வைக்க மாட்டீர்கள் இன்னொரு வீட்டு பெண் என்றால் உங்களுக்கு வந்து செய்ய வேண்டுமா என்ன ???தவிர இந்த கால பெண்கள் சகலகவல்லிகள் மா ...வீட்டையும் ,வெளி வேலையையும் ஜஸ்ட் லைக் தட் செய்துட்டு போயிட்டே இருப்பாங்க ...வீடு ,அலுவலகம் ,மாமனார் ,,மாமியார் ,குழந்தைகள் எல்லாம் தசாவதானியாக கவனித்து கொண்டு இருப்பவர்கள் .அவங்களுக்கு தேவை துணை, ஒரு encouragement மட்டுமே ...அது நாம கொடுப்போம் .... ஏன் நீங்களே அப்படி தானே ....வீடு ,ஸ்கூல் ,நாங்க அப்பாவின் பெற்றோர் என்று அவர்கள் இருந்த வரை பம்பரமாய் சுழன்று கொண்டு தானே இருந்தீர்கள் ,இன்னும் இருக்கிறீர்கள்உங்களால் முடியாத போது வீட்டு வேலைக்கு ஆள் வைத்து கொள்வோம் . ....பிறகு என்ன அம்மா ...."என்றாள் பவானி .

"இல்லை ...அப்பா என்ன சொல்வாங்களோ என்று ............"என்றார் பவானி .

"அட நீங்க வேற மா .....அவருடைய ஐகான் சூர்யா ....அந்த ஐகானின் தங்கையை தன் மகனுக்கு வேண்டாம் என்று சொல்லிவிட போகிறார் ...சும்மா காமெடி பண்ணாதீங்க ...அண்ணி மட்டும் ரகு கிட்டேயே பேசுவதற்கு பதில் அப்பா கிட்டே பேசி இருந்தாங்க ,இந்நேரம் ரகுவோடு திருமணம் முடிந்து வீட்டில் ரெண்டு மூன்று குட்டி க்ரிஷ் ,இல்லன்னா ராதாங்க விளையாடிட்டு இருப்பாங்க .....நீங்க அண்ணியை மகளா பாருங்க ...அவங்க தானா உங்களை சொந்த அம்மா போல் பார்த்துப்பாங்க ...."என்றாள் மதுரா .

"ஆனா சூர்யா தம்பி உன்னை ...."என்றார் பவானி மகளிடம் எப்படி கேட்பது என்று தயங்கியவராய் .

"அம்மா !....நான் உங்க மக ....வழக்கம் போல் கெத்தா கேளுங்க ....இப்படி தயங்குவது எல்லாம் டீச்சர் அம்மாவுக்கு என் ஆசை ஹிட்லருக்கு ஒத்து வரலை ....சூர்யா என்னை காலேஜ் டேஸ்ல இருந்து லவ் செய்யறார் ....விஜயும் அப்படி தான் ...."என்றவள் விஜய் டைரி விஷயம் ,அலுவலகத்தில் சூர்யா தன்னிடம் சொன்னது எல்லாம் சொல்லி முடித்தாள் .

மீண்டும் திகைப்பில் ஆழ்ந்த பவானி ,"நீ என்னமா முடிவு செய்து இருக்கே ..."என்றார் குரல் உள்ளே போனவராய் .

"அம்மா !ரெண்டு பேருமே என் நன்மையை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுபவர்கள் ...எனக்காக என்றால் உயிரை கொடுக்கவோ ,எடுக்கவோ தயங்காதவங்க ....இது எல்லாவற்றையும் விட என் சிறந்த நண்பர்கள் .....ஒரு சிலது இன்னும் குழப்பது மா ....இந்த மயக்கம் கூட அந்த ஸ்ட்ரெஸ்னால தான் வந்தது .....ஏதோ ஒன்று எனக்கு கிளிக் ஆகாமல் கண்ணாமூச்சி ஆடிட்டு இருக்கு ...நானும் யோசித்து பார்த்துட்டே இருக்கேன் ....என்னன்னு தான் பிடிபட மாட்டேன் என்கிறது ...அது புரியாமல் எந்த முடிவையும் இப்போது எடுக்க முடியாது அம்மா ."என்றாள் மதுரா யோசனையோடு .அதன் பிறகும் தாயின் முகம் தெளியாததை கண்ட மதுரா ,"இன்னும் என்ன அம்மா ...."என்றாள்

"இல்லை .....இவங்க ரெண்டு பேரில் நீ யாரை சூஸ் செய்தாலும் நீ அவங்களுக்கு ரெண்டாம் தாரம் என்று தான் உலகம் சொல்லும் ....அது என்னால் தாங்க முடியாது ...அதனால் காலையில் சிவகாமி அத்தையிடம் போய் அவங்க பேரன் ருத்ரமாறனை உனக்கு கேட்டு வந்தேன் .....அவங்களும் சரி என்று சொல்லி விட்டார்கள் ....நீ ருத்ரா தம்பியை தான் மணக்க வேண்டும் மதுரா ....."என்றார் பவானி .
 
Status
Not open for further replies.
Top