All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கதை திரி

Status
Not open for further replies.

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 27(4)

கடவுள் நேரில் வந்து அனைவரையும் காப்பாற்ற முடியாது தான் .சில சமயங்களில் இது போல் எச்சரிக்கை பல பெற்றோர்களுக்கு கிடைப்பதும் இல்லை ......மற்றவரின் மேல் நம்பிக்கை வைத்து தான் பெற்றோர்கள் வேலைக்கு செல்வது .......அந்த நம்பிக்கை தகர்க்க படும் போது எதற்காக,யாருக்காக ஓடி ஓடி வேலை செய்தார்களோ அவர்களே இல்லாத போது குற்ற உணர்ச்சி என்னும் கொடிய அரக்கனின் பிடியில் மாட்டி திக்கி திணறி அழகான குயில் கூடு பல சூறாவளியில் சிக்கி சின்னா பின்னமாகி விடுவதும் நடப்பது உண்டு .....ஜான்சி போன்ற சிறு பிள்ளைகள் ,ஆணோ ,பெண்ணோ ..........கண்காணிப்பில் வைத்து இருப்பது அவசியம் ..........மனித வக்கிரத்தின் அளவூ கோல் யார் அறிவார் ????/அதிர்ந்து பேச தயங்குபவன் கூட கூட்டத்தோடு இருக்கும் போது பாம் வீசி தயங்க மாட்டான் என்பதே நிதர்சனம் .ஒருவன் மனிதன் ஆவதும் ,மிருகம் ஆவதும் ஒரு சூழ்நிலையில் அவன் எப்படி ரியாக்ட் ஆகிறான் என்பதை பொறுத்தே .....அதை முன் கூட்டியே யாரால் தான் உணர்ந்து அறிய முடியும் ????நம்மால் முடிந்தது தற்காப்பு மட்டும் தான் .
View attachment 9304226a5317d94b769e9384768696ed.jpg
ஜான்சி போன்ற சிறு பிள்ளைகளின் நிலை இது என்றால் ,பருவ பெண்களை,வாலிப ஆண்களை தவறான வழிக்கு கொண்டு செல்லும் நிறைய ஊக்குவிப்பான்கள் நாட்டில் உண்டு .....அதில் நட்பு ,காதல் ,சோசியல் மீடியா ,சொசைட்டி பெரும் பங்கு வகிக்கிறது ......உன் நண்பனை பற்றி சொல் ...உன்னை பற்றி நான் சொல்கிறேன் என்பது இது தான் ......விஜய் ஆல்வின் ,பாலாஜி போன்ற நண்பர்கள் வாழ வைப்பவர்கள் .......சோனாவின் நண்பர் கூட்டம் அழிவுக்கு வழி வகுப்பவர்கள் ......தடம் மாறி போன இந்த வயது பிள்ளைகள் தான் பின் நாளில் suicide பாம்மர் ஆகவோ ,terrorist ஆகவோ ,இன்னொரு உயிர் போக காரணமாகவோ ஆகி விடுகிறார்கள் ......இந்த கூட்டத்திற்கு "காதல்"என்பது பொழுது போக்கு .... தீவிரவாதிகளின் தற்பொழுதைய ஆயுதம் "காதல் "தானாம் .காதல் என்ற பெயரில் ,காதலுக்காக எதை வேண்டும் என்றாலும் செய்ய தயாராய் இருக்கும் ஆண் /பெண்களை தீவிர வாதிகளாக மாற்றுவது தான் .அதனால் தான் 76 வழுக்குகள் RAW /NIA (RESEARCH அனாலிசிஸ் விங் /நேஷனல் இன்வெஸ்டிகஷன் AGENCY )பதிவு செய்து உள்ளது என்று நிதர்சனத்தை நினைத்து பார்த்த மதுராவின் உள்ளம் குமுறியது
View attachment child_traffic.gif

VOLUNTEER வேலையாக தொண்டு நிறுவனங்களுக்கு செல்லும் இடங்களில் இவ்வாறு பாதிக்க பட்ட பெண்கள் ,கை விட பட்ட அனாதை குழந்தைகளை பார்த்து விட்டு ஷாப்பிங் மால் ,சினிமா ,பீச் ,பார்க் போன்ற இடங்களில் சுற்றும் ஜோடிகளை பார்க்கும் போதும் மதுராவின் மனம் வேதனை அடையாமல் இருந்தது இல்லை .

'இவர்கள் யாரை ஏமாற்ற பார்க்கிறார்கள் தங்களையேவா இல்லை பெற்றோர்களையா ???? இதில் எத்தனை காதல் உண்மையானது ?எத்தனை காதல் திருமணத்தில் முடிகிறது ?இவ்வாறு நடந்த திருமணங்கள் கடைசி நொடி உயிர் போகும் வரை எத்தனை நிலைத்து இருக்கிறது ?????இதில் எத்தனை டைம் பாஸ் காதல் ????இவர்களின் பெற்றோர் இதை எல்லாம் கவனிக்காமல் என்ன செய்கிறார்கள் ?????பெற்றோரின் கண்ணில் மண்ணை தூவி விட்டு இவ்வாறு செல்லும் தைரியம் எங்கு இருந்து வருகிறது ???எங்கு பெற்றோர் தோல்வி அடைகிறார்கள் ????மதுரவால் இவவாறு எண்ணாமல் இருக்க முடியவில்லை .

எல்லாமே ஒன்றுடன் ஒன்று இணைந்தவை என்று நினைக்கும் போது பெரு மூச்சு எழுவதையும் அவளால் தடுக்க முடியவில்லை

நல்ல திருமணமே ...நல்ல தாம்பத்தியம் (இல்லறம் )
நல்ல தாம்பத்யமே ......நல்ல சந்தானம் (பிள்ளைகள் ).
நல்ல பிள்ளைகளே ...........நல்ல சமூகம்
நல்ல சமூகமே ............நல்ல உலகம்


இதை தானே எல்லா மத திருமணங்களும் வலியுறுத்துகின்றன .திருமணத்திற்கு அதனால் தானே இவ்வளவோ முக்கியத்துவம் ,சிறப்பு கொடுக்கப்படுகிறது .

உணர்வாலும் ,மனதாலும் ஒத்த கருத்துக்களை உடையவர்கள் சேர்வது தான் நல்ல திருமணம் .அது இல்லாத போது வாழ்க்கை நரகம் ---உதாரணம் கஜா -மரகதம் ,சோனா -விஜய் ,ரூபிணி -திவாகர் .

நல்ல துணை கிடைத்தாலும் அதை போற்றி பாதுகாக்க தெரியாமல் வாழக்கையை தொலைபவர்கள் நிறைய உண்டு .உதாரணம் --சொர்ணா ,சோனா,திவாகர்

நல்ல இல்லறம் இருந்தாலும் பெற்றோர்களையும் மீறும் பிள்ளைகள் கிடைப்பது நரகம் ---உதாரணம் மாசிலாமணியும் சுமனும் ,சேது ,கனகா -சோனா

நல்ல பிள்ளைகள் இல்லை என்றால் சமூகம் இல்லை -சுமன் ,சோனாவால் பாதிக்க பட்டது மற்ற வீட்டு பிள்ளைகளே .ஒட்டு மொத்த சமூகமே .

இப்படி சமூகம் முழுவதும் அழிந்து போனால் உலகம் மட்டும் எப்படி அழியாமல் இருக்கும் ???
View attachment 1_2 (1).jpg

இதில் ஒன்று தவறினாலும் உலகத்தில் உள்ள அனைவர்க்கும் இழப்பு தான் .பெரியவர்களின் இந்த தத்துவம் இந்த ஷாப்பிங் மால் ,சினிமா ,பார்க் ,பீச் காதலில் காணாமல் போகிறது .நம்பி ஏமாறுவதும் தப்பு ,நம்பியவர்களை ஏமாற்றுவதும் தப்பு .இது எதுவுமே இந்த டைம் பாஸ் காதலில் இருப்பதில்லை .விட்டில் பூச்சிகளாய் வாழ்க்கை அழிந்து ,கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதால் என்ன பயன் ???

தன் எண்ண போக்கில் உழன்று கொண்டு இருந்தவள் பின் பக்க கார் கதவு திறந்ததை கண்டு கவனம் சிதறினாள் .கதவை திறந்து கொண்டு வந்த மிருதுளா மதுராவை அணைத்து கண் கலங்கி விட்டாள் .

"தேங்க்ஸ் மதுரா .....ரொம்ப தேங்க்ஸ் மா ...............நீ சுட்டி காட்டும் வரை எங்களுக்கு புரியவேயில்லை .நானும் அவரும் ஓடி ஓடி சம்பாதிப்பது ஜான்சிக்காக தான் ......தினமும் எங்கள் இருவரின் தொழிலில் இது போன்ற வக்கிரங்களை பார்த்து கொண்டு தானே இருக்கிறோம் .............ஆனால் நீ சொல்லும் வரை அது எங்களுக்கே கூட நடக்கலாம் என்பது தோன்றாமல் போய் விட்டது ......பிரச்சனை என்று வருபவர்களுக்காக தினமும் போராடி கொண்டு தான் இருக்கிறோம் ...............ஆனால் .......எங்கள் வீட்டை கவனிக்க தவறி விட்டோம் ..........தேங்க்ஸ் மா .....இனி மதியம் அத்தை தூங்கும் போது எல்லாம் நான் ஜான்சியோடு இருக்க போகிறேன் .....இன்னும் 10
கூடுதல் டாக்டர்ஸ் என் பொறுப்பை ஏற்க வேண்டுமானாலும் நியமித்து விட போகிறேன் ....ஹாஸ்பிடல் முழுக்க cctv கேமரா பொறுத்த ஏற்பாடு செய்ய போகிறோம் ....ஜான்சிக்காக என்று இல்லை ...........இங்கு எங்கள் ஹாஸ்பிடலை நம்பி வரும் அனைவருக்காகவும் .............patients இடம் எப்படி நடக்க வேண்டும் என்று,மனஅழுத்தம் குறையவும் இங்கு வேலை பார்க்கும் அனைவர்க்கும் ஸ்பெஷல் வகுப்பு எடுக்க போகிறோம் ......விசிட்டிங் ஹௌர்ஸ் ல செக்யூரிட்டி இன்னும் tight செய்ய போகிறோம் ....தேங்க்ஸ் மதுரா ........."என்றாள் மிருதுளா

"என்ன அண்ணி இது .............இது எல்லாம் மேட்டரே இல்லை ......ஏதோ தோணினது சொன்னேன் .....நீங்க கொண்டு வந்து இருப்பது எல்லாமே மிகவும் பயன் உள்ள நடவடிக்கைகள் ...."என்றாள் மதுரா .

"மதுரா !.............தப்பா நினைச்சுக்காதே அண்ணா ரொம்பவே நல்லவங்க ...........சத்தியமா ஒரு பெண்ணின் மானத்தோடு விளையாடும் கெட்டவங்க கிடையாது .....உன்னை ரொம்பவே விரும்பறாங்க ...........உனக்காக தன் உயிரை கூட கொடுக்க தயங்க மாட்டாங்க .............இன்னைக்கு அவங்க நடந்து கொண்டதை மட்டும் வைத்து அவங்களை தப்பா நினைக்காதே .....நான் ஒரு பெண் .ஒரு பெண் குழந்தையின் அம்மா .....இன்னொரு பெண்ணின் வாழ்வில் விளையாட மாட்டேன் ......நீ அண்ணாவை வெறுத்து ஒதுக்கணும் என்று தான் அவங்க இப்படி எல்லாம் செய்துட்டாங்க ....அவங்க மேல சாப்ட் கார்னெர் வந்து ,அவங்களுக்காக உன் வாழ்வை நீ இழந்து விட கூடாது என்று தான் ....இப்படி எல்லாம் ........"என்ற மிருதுளாவை தடை செய்தது மதுராவின் புன்முறுவல் .
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"தெரியும் .........."என்றவள் ஏதோ சொல்வதற்குள் முன் பக்க கார் கதவை திறந்து கொண்டு டிரைவர் சீட்டில் விஜயும் ,அவன் அருகே ஆல்வினும் அமர்ந்து விட மதுரா அமைதியாகி விட்டாள் .

மிருதுளாவிடம் வெறும் தலை அசைப்புடன் அவள் விடை பெற ,கார் கிளம்பியது .

"சிஸ்டர் ! ரொம்ப தேங்க்ஸ் .............நீங்க சொல்லும் வரை நாங்க செய்த ..........."என்ற ஆல்வின்னை தடுத்த மதுரா ,"அண்ணா !ப்ளீஸ் ...இப்போ தான் மிருதுளா அண்ணி எல்லாம் சொன்னாங்க .........யார் வீட்டு குழந்தையாக இருந்தாலும் இதை நான் சொல்லி இருப்பேன் தான் .....இது ஒவ்வொருவரின் கடமை .....நமக்கு என்ன வந்தது என்று எதிலுமே தலையிடாமல் இருந்தால் ,இன்று ஒரு வீட்டில் பிடித்த தீ நாளை நம்ம வீட்டிலும் பரவலாம் .....அப்போது நமக்கு என்று யாருமே வரமாட்டாங்க ......."என்று மேலும் ஏதோ சொல்ல முயன்றவளை தடை செய்தது அவளின் மொபைல் அழைப்பு .

அவள் மொபைல் எடுப்பதற்குள் அழைப்பு நின்று விட ,டிஸ்பிலே பார்த்தவள் அதில் தன் அன்னையிடம் இருந்து 20 மேற்பட்ட அழைப்புகள் இருப்பதை பார்த்து நெற்றி சுருங்கினாள் .

இவள் அழைப்பதற்குள் ,பவானியே மீண்டும் அழைக்க ,அழைப்பை ஏற்றவள் ,"என்ன பவி டார்லிங் என் கூட பேசாமல் இருக்க முடியலையா என்ன .........இத்தனை தடவை கால் போட்டு இருக்கே .......என்ன மேட்டர் ........?"என்றாள்

"அடிங்க .........நீ தான் என்னை பெத்து வளர்த்தவ மாதிரி பேர் சொல்லி கூப்பிடறே .....போனை எடுக்காம என்னடீ அப்படி வெட்டி முறிச்சுட்டு இருந்தே ....... "என்றார் பவானி .

"ஒகே ......ஒகே ........மலை ஏறாதே ....சிலேண்ட் மோடில் இருந்துச்சு ....போனும் ஹாண்ட்பாகில் வைத்து இருந்தேன் .....வேலை செய்யும் போது நீ ஏன்மா கால் செய்யரே ........?"என்றாள் மதுரா .

(மதுரா செல்லம் ...நீ பார்த்த வேலை மட்டும் பவானி மேடத்திற்கு தெரிஞ்சது .....தோளை உரிச்சு உப்புக்கண்டம் தாண்டீ )

"இல்லை மதுரா .....ரொம்ப URGENT கண்ணா ............உன்னை பார்க்கணும் என்று உத்தம் சிங்க் என்பவர் ரொம்ப நேரமா இங்கே காத்துட்டு இருக்கார் ....அவர் ஜெய்ப்பூர் இளவரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் சூர்யா பிரதாப் ரத்தன் சிங் பி .ஏ வாம் .....அதான் ....அந்த ஆளை பார்த்தாலே மாமிச மலை போலெ இருக்கார் .....உன்னை தேடி வந்து இருக்கார்.உன் பெரியப்பா கூட அவனை பார்த்துட்டு டென்ஷன் ஆகிட்டு இருக்கார் .கார்த்திக் சுத்த மோசம் ....கை கால் நடுங்கி போய் நிற்கிறான் .....பயமா இருக்குடீ ....சீக்கிரம் வா ."என்றார் பவானி .

"உத்தம் சிங் ...........எனக்கு அப்படி யாரையும் தெரியாதே அம்மா .........ஜெய்ப்பூர் இளவரசரா .........என்னமா இந்த கார்த்திக் ஏதாவது ஏப்ரல் பூல் செய்யறானா .....நீயும் அதற்கு கூட்டா ?"என்றாள் மதுரா குழம்பி போனவளாய் .

இவள் போனில் பேசுவதை கேட்டு கொண்டு இருந்த விஜய் ,உத்தம் ,ஜெய்ப்பூர் இளவரசன் என்பதை கேட்டதும் அதிர்ந்து விட ,அவன் கால்கள் தானாக BRAKE அழுத்த ,கார் குலுங்களோடு நின்றது .மதுரா போனில் பேசி கொண்டே இருக்க ,ஆல்வினும் ,விஜயும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர் .

"லூசாடீ நீ ....இதில் எல்லாமா விளையாடுவாங்க .....சீக்கிரம் வா ....என்ன ஏதுன்னு விசாரித்து அனுப்பு ....."என்றார் பவானி .

"இதோ வந்துட்டே இருக்கோம் அம்மா ....பத்து நிமிசத்தில் வந்துடுவோம் ....உட்கார வை ..."என்றவள் யார் இவர்கள் என்று குழம்பி கொண்டு இருக்க ,ஆல்வின் இரு முறை அழைத்தும் மதுரா பதில் சொல்லவில்லை .

மூன்றாவது முறை ஆல்வின் வெகு சத்தமாக அழைத்த பின்னே தன் எண்ணத்தில் இருந்து வெளி வந்தவள் ,"என்ன அண்ணா ?"என்றாள் .

"யாருமா போனில் ???என்னவோ ஜெய்ப்பூர் இளவரசன் என்று எல்லாம் காதில் விழுந்தது ?"என்றான் .

"வீட்டுக்கு யாரோ உத்தம் சிங் என்பவர் வந்து இருக்காராம் ....அவரை பார்த்து பெரியப்பா ,கார்த்திக் எல்லாம் பேஜார் ஆகிட்டு இருக்காங்களாம் ....அவர் ஏதோ ஜெய்ப்பூர் இளவரசரின் பி .ஏ வாம் ....என்னை பார்க்க ரொம்ப நேரமா காத்துட்டு இருக்காராம் ....அதான் என் அம்மா போன் செய்து சீக்கிரம் வர சொல்ராங்க .....யார் இவங்க ன்னு யோசிச்சுட்டு இருக்கேன் ......தமிழ் நாட்டில் ஜெய்ப்பூர் இளவரசர் என்றால் ,ரெசார்ட்டில் இறந்து போன பெண்ணின் கணவர் தானே அண்ணா ........நான் இவரின் பி .ஏ ...இதை தவிர மற்ற யாருடனும் எனக்கு காண்டாக்ட் இருந்தது இல்லையே ....அவங்க எதற்கு என்னை தேடி வந்து இருகாங்க என்று புரியலை ...."என்றாள் மதுரா .
View attachment Vijay-Samantha-RamCharan-w.jpg

ஆல்வினும் ,விஜய்யும் பார்வை பரிமாறி கொள்ள அதை மதுரா கவனிக்க தவறினாள் .விஜய்யின் முகம் கற்பாறையாக மாறி விட ,கைகள் ஸ்டேரிங்கை பிடித்த பிடியில் நரம்புகள் புடைத்தன .

PENANCE WILL CONTINUE....
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 27(5)

அதே சமயம் மதுரா தங்கி இருக்கும் வீட்டின் முன்புறம் நின்று உத்தம் சூர்யா உடன் போனில் பேசி கொண்டு இருந்தான் .

"என்ன உத்தம் ????போய் இவ்வளவூ நேரம் ஆகுது ......."என்றான் சூர்யா -அதாவது மதுராவிடம் பேசி விட்டாயா ,மதுராவின் ரியாக்ஷன் என்ன என்று மறைமுக கேள்வி .
View attachment full.jpg

"பாஸ் !மேடம் இங்கு இல்லை .........அவங்க வருவதற்காக தான் வெயிட் செய்துட்டு இருக்கேன் ....விஜய் சார் பிளான் பிளாப் .....கார்த்திக் சேது சார் மகள் பூரணியை விரும்பறார் .....மதுரா மேடம் தான் திருமண ஏற்பாடுகள் செய்து இருகாங்க ......விஜய் லவ் மேட்டர் மேடம் தெரிஞ்சுக்கிட்டாங்க போலெ இருக்கு ....விஜய் சாரை காரில் வைத்து பூட்டி இருக்காங்க என்று ஆட்கள் சொல்ராங்க .........இப்போ கூட விஜய் சார் கூட தான் எங்கேயோ போய் இருக்காங்க ....நம்ம ஆட்கள் பின் தொடர்ந்து போனாங்க ....ட்ராபிக்கில் மிஸ் செய்துட்டாங்க ....."என்று உத்தம் முடிப்பதற்குள் எதிர் முனையில் இருந்து கர்ஜனையாக வெளி வந்தது சூர்யாவின் குரல் .

"FIRE THEM ஆல் ......"என்று .

"ஆல்ரெடி செஞ்சுட்டேன் பாஸ் .......பவானி மேடம் இப்போ தான் போன் செய்தாங்க ...........வந்துட்டே இருப்பதாக சொன்னாங்க .............வந்துட்டாங்க பாஸ் .........."என்ற உத்தம் அழைப்பை துண்டித்தான் .

உத்தம் மொபைலை அணைத்து வைக்கவும் ,கார் வேகமாக வந்து நிற்கவும் சரியாக இருந்தது .விஜய்யின் மனநிலையை அவன் கார் ஓட்டி வந்த விதத்திலேயே புரிந்து கொண்ட உத்தம் மனதிற்குள் சிரித்து கொண்டான் .கார் நின்ற உடன் முதலில் மதுரா இறங்க ,பின்னால் ஆல்வினும் ,விஜயும் இறங்கி அரண் போலே நின்றனர் .

உத்தமை பார்த்து நெற்றி சுருக்கி யோசித்த மதுரா அவனை அடையாளம் கண்டு கொண்டு ,"தன்வீர் பையா(அண்ணா ) ....."என்று ஓடி சென்று உத்தம் கைகளை பிடித்து கொண்டு குதித்தே விட்டாள் .
View attachment upendra-in-pawan-trivikram-film_b_2112160620.jpg

ஆல்வினும் ,விஜயும் அதிர்ந்து நின்றனர் .

"பையா (அண்ணா )! எப்படி இருக்கீங்க ............பார்த்து எவ்வளவூ நாள் ஆச்சு .......ஆளே அடையாளம் தெரியாத அளவூ மாறிட்டிங்க ......."என்று ஹிந்தியில் விசாரிக்க ஆரம்பித்து விட ,ஹிந்தி தெரிந்ததால் விஜய்க்கும் ,ஆல்வினுக்கும் அவர்களின் உரையாடலை கவனிக்க முடிந்தது .

"மேரி பெஹென் (என் சகோதரி ).....உங்களை ரொம்பவே மிஸ் செய்தேன் ..........."என்றான் உத்தம் தமிழில் .

"வாரே வா அண்ணா .....நல்ல தமிழ் கத்துட்டு இருக்கீங்க ......என்ன மேட்டர் ?"என்றாள் மதுரா .

"பாஸ் ஆர்டர் .........சிஸ்டர் .........."என்றான் உத்தம் .

"ஐயோ ...........நான் ஒரு லூசு ...........பாருங்க உங்களை வெளியவே நிற்க வைத்து பேசிட்டு இருக்கேன் .....அம்மா உங்களை மீட் செய்யணும் என்று ரொம்ப நாளா சொல்லிட்டே இருந்தாங்க ....எங்கே நீங்க தான் ஆள் அட்ரஸ் இல்லாம .....அப்பீட் ஆகிட்டீங்களே ..........வாங்க ...வாங்க ............அம்மா ..............அம்மா ........யார் வந்து இருக்காங்கன்னு பாருங்க ..........."என்று புள்ளி மானாக உள்ளே குதித்து ஓடினாள் மதுரா .

ஹாலில் இருந்த மற்றவர்கள் ,மதுராவின் இந்த சந்தோசத்திற்கான காரணத்தினை அறியாமல் திகைத்தனர் .

தாயின் கையை பிடித்து கொண்ட மதுரா ,"அம்மா !இவர் யாருன்னு கண்டுபிடிங்க பார்க்கலாம் ..........ரொம்ப நாளா இவரை தான் மீட் செய்யணும் என்று சொல்லிட்டே இருந்தீங்க ........யாருன்னு கண்டு பிடிங்க பார்க்கலாம் ....."என்றாள் மதுரா .

மகளின் உற்சாகம்,சுற்றி இருந்தவர்களின் திணறல் எல்லாவற்றையும் கண்ட பவானி என்ன சொல்வது என்று புரியாமல் குழம்பி நின்றார் .

"தெரியலை மதுரா ............சார் யார் ?"என்றார் பவானி .

"அம்மா !..........உன் பிஸிபேளாபாத்,உருளை கிழங்கு fry ,காலிபிளார் 65 தீவிர ரசிகர் மா அண்ணா ........என்னம்மா .........தன்வீர் அண்ணா மா ........."என்றாள் மதுரா .

பவானிக்கு நினைவூ வந்து விட ,"தன்வீர் !சொல்ல கூடாதப்பா .......நான் யாரோ என்னவோன்னு இருந்துட்டேன் ......எப்படி இருக்கே ......"என்றார் பவானி .

"நல்லா இருக்கேன் மாஜி ..........நீங்கோ எப்படி இருக்கீங்கோ ....?"என்றான் உத்தம் .

"கடவுள் புண்ணியத்தில் ஒரு குறையும் இல்லை .........ஆமாம் ஊர் விட்டு போவதாக இருந்தால் சொல்லிட்டு போக மாட்டிங்களா பா ...........இவளை பத்தி தான் தெரியும் ல .....சொல்லாம போயிட்டிங்க ......போலீஸ் கம்பளைண்ட் கொடுக்க போறேன்னு எங்களை ஒரு\வழி செய்துட்டா ......"என்றார் பவானி ஆற்றாமை உடன் .

"சாரி மாஜி .........urgent வேலை வந்துடுச்சு .........கிளம்பி போக வேண்டியதா போச்சு ........யார் கிட்டேயும் சொல்லிக்க முடியலை ............சாரி பெஹன் .............ரொம்ப சாரி ........அப்போ இருந்த நிலையில் எதை பற்றியும் யோசிக்க கூட முடியலை ............"என்றான் உத்தம் .

"மதுரா !"என்று இடை இட்ட சேது,"சார் ....எப்படி உனக்கு பழக்கம் என்று சொல்லவே இல்லையே ......."என்றார் மகனின் முகம் போகும் போக்கு விரும்பாதவராக
"இவங்க என் பெரியப்பா, தன்வீர் அண்ணா! ...அப்பாவோட அண்ணன் ...........பெரியப்பா தன்வீர் அண்ணா குன்னூரில் என் சீனியர் ..........என் காலேஜ் தான் படிச்சாங்க ............ரகுவை விட தன்வீர் அண்ணா என் பெஸ்ட் friend ........ஆக்ஷன் ஹீரோ ரேஞ்சு fight செஞ்சு இவங்க தான் சில ரவுடி கிட்டே இருந்து என்னை காப்பாத்தினாங்க .....கொட்டும் மழை என்று கூட பார்க்காம இவரும் இன்னொருத்தரும் தான் வீடு வரை துணைக்கு வந்தாங்க ....சோ அப்போ இருந்து இவர் பவானியின் தத்து பிள்ளை ஆகிட்டார் ....அம்மாவின் கை பக்குவத்திற்கு விசிறி இந்த அண்ணா ......அம்மாவும் பிள்ளையும் சேர்ந்து என்னை போர்ட்டர் ஆக்கி இருக்காங்க .....இவ்வளவூ பெரிய குண்டானில் தன்வீருக்கு சாப்பாடு சுமந்து சுமந்து என் கை ஒடிந்தது தான் மிச்சம் . "என்றாள் மதுரா புன்னகையுடன்
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"இப்போ இங்கே என்ன வேலையாய் வந்து இருக்கார் உங்க அண்ணன் ?"என்றார் சேது ஒரு வித குரலில் -ஏன் வந்தாய் என்ற மறைமுக எச்சரிக்கை விடுத்து கொண்டு இருந்தார் .
சேது அப்படி சட்டென்று கேட்பார் என்று எதிர் பார்க்காத பவானி திகைத்து போனார் .தன்வீர் வந்ததில் இருந்து அங்கு நிலவும் ஒரு வித கோல்ட் வார் பவானி உணர்ந்தே இருந்தார் .அவன் வரவை அவர்கள் யாருமே விரும்பவில்லை என்று அவருக்கு புரிந்து தான் இருந்தது .அவன் யார் என்று மகள் சொல்லும் வரை அவரும் அதே மனநிலையில் தான் இருந்தார் .

ஆனால் அவன் மகளின் மானத்தை காப்பாற்றியவன் ,மகள் அண்ணனாக ஏற்று கொண்டு இருந்த ஒருவன் ,தனக்கு மூன்றாவது பிள்ளை என்று உணர்ந்த பவானியால் சேதுவின் இந்த மறைமுக கேள்வியை ஜீரணிக்க முடியவில்லை .வீட்டு பெரியவரை எதிர்த்தும் அவரால் எதுவும் பேசவும் முடியவில்லை .

மதுராவிற்கு அந்த மாதிரி தயக்கம் எல்லாம் எதுவும் இல்லை ."என்ன பெரியப்பா கேள்வி இது ....தங்கையை பார்க்க அண்ணன் வராம .....வேறு யார் வருவா ????"என்றாள் சேதுவின் எச்சரிக்கையை உணர்ந்தும் அதை கண்டும் காணாத மாதிரி இருந்தாள் .

"உன் அண்ணன் உனக்கு அண்ணனாக மட்டும் வந்து இருந்தால் நான் ஏன் கேள்வி கேட்க போகிறேன் மதுரா ????உன் அண்ணன் இப்போ வந்து இருப்பது ஜெய்ப்பூர் ராஜவம்ச பிரதிநிதியாக ......இளவரசர் சூர்யா பிரதாப்பின் பி .ஏ வாக ....அதன் காரணத்தை தான் கேட்கிறேன் ..."என்றார் சேது கடுமையான குரலில் .

மதுரா பதில் சொல்வதற்குள் ,"சாரி பெஹன் ....உன் பெரியப்பா சொல்வது சரி தான் ....நான் இங்கு உன் அண்ணனாக வரவில்லை தான் ......இளவரசரின் பி .ஏ வாக ,அவர் கொடுத்த வேலையை செய்ய தான் வந்து இருக்கிறேன் .....இளவரசர் அனுப்பிய காரணத்தை இத்தனை பேர் மத்தியில் சொல்ல எனக்கு அனுமதி இல்லை ....தனியாக பேச வேண்டும் சிஸ்டர் .........கொஞ்சம் வருகிறாயா ....?"என்றான் உத்தம் சற்றும் அசராமல் .
View attachment MV5BY2M5MTMyNDQtZDBkOC00M2EzLWE1NjItZmZiNGMyMDkxYjAyXkEyXkFqcGdeQXVyMjA4NjIzMTA@._V1_.jpg

விஜய்யின் கோபம் எல்லை மீற ,அவனை பிடித்து நிறுத்த ஆல்வினும் ,பாலாஜியும் திணறி தான் போனார்கள் .
மதுரா அங்கு மௌன பாஷையில் நடந்த போரினையும் ,அனைவரின் எண்ணத்தையும் புரிந்து கொண்டவள் ,"அம்மா !அண்ணாவுக்கு பிடித்த பிஸிபேளாபாத் செய்மா ..........நாங்க போய் பேசிட்டு வரோம் ...வாங்க தன்வீர் அண்ணா ."என்றவள் மற்றவர்கள் எதையும் சொல்வதற்கு முன் தன்வீரோடு தோட்டத்திற்கு சென்று விட்டாள் .

மதுராவின் இந்த முடிவூ யாருக்கும் உகந்ததாக இல்லை .மதுராவின் இந்த உதாசீனத்தை தாங்க முடியாத விஜய் சட்டென்று வெளியே சென்று விட ,அவன் பின்னால் ஆல்வின் ,பாலாஜி ,சேது ,கார்த்திக் ,ரகு சென்றனர் .

தோட்டத்தில் இருந்த கல்மேடையில் அமர்ந்த மதுரா ,தன்வீர் அமர நாற்காலி கொண்டு வந்து கொடுத்து ,அவன் அமர்ந்ததும் ,"சாரி அண்ணா .....பெரியப்பா இப்படி பேசுவாங்க என்று நினைக்கலை ....சாரி "என்றாள் .

"அவர் உன் பெரியப்பாவாக மட்டும் இல்லையே பெஹன் ....விஜய் சாரின் அப்பாவாக தானே பேசுகிறார் .....இது எல்லாம் un avoidable ......இதற்கு எல்லாம் worry செய்துக்காதே ..........நாம எல்லோருக்கும் எல்லா சமயமும் நல்லவங்களா இருக்க முடியாது தானே ............இந்தா பிடி ..."என்றவன் சோனாவின் அக்ரீமெண்ட் பேப்பர் எடுத்து கொடுத்தான் .

அதை படித்து பார்த்த மதுரா அதிர்ந்து போனவளாய் நிமிர்ந்து ,"என்ன அண்ணா இது .........இப்போ எதற்கு உங்க பாஸ் இந்த வேலை செய்து இருக்கார் ...........அவர் ஏன் நாலு கோடி எனக்காக அந்த பிசாசிற்கு கொடுக்க வேண்டும் ..........இது தேவையே இல்லையே ...."என்றாள் குழப்பதுடன் .
View attachment images (19).jpg

"பாஸ் நாலு கோடி சோனாவிற்கு கொடுத்தார் என்று யார் சொன்னது ????.........."என்றான் உத்தம் புன்முறுவலுடன் .

"அண்ணா !"என்றாள் மதுரா அவன் சொல்வது விளங்காமல் .

"நாலு கோடி இல்லை ..............நாலு அரை தான் கொடுத்தார் பாஸ் ...."என்றான் உத்தம் .

"அதை கூட உங்க பாஸ் எனக்காக எதற்கு செய்யணும் ..........என்று தான் கேட்கிறேன் அண்ணா ?"என்றாள் மதுரா .

"சாரி பெஹன் .........அது தெரியணும் என்றால் நாளை காலை பாசை வந்து மீட் செஞ்சு அவர் கிட்டேயே கேட்டுக்கோ ....சொல்ல எனக்கு அனுமதி இல்லை ......இதையும் பிடி ............என்ன பார்க்றே .....ஆஃப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் தான் .....பாஸ் உங்களுக்கு அவர் பி .ஏ வேலை கொடுத்து இருக்கார் ....சோனா ,அக்ரீமெண்ட் ,இந்த வேலை லிங்க் எதுவும் இல்லை .....இஷ்டம் இருந்தா வேலையில் ஜோயின் செய் ....நோ கம்பல்சன் ......பாஸ் நாளைக்கு மீட் செஞ்சுட்டு எந்த முடிவாக இருந்தாலும் decide செய்மா .....நான் கிளம்பறேன் ......வர விருப்பம் இருந்தா இது தான் என் கார்டு ...இது என் பர்சனல் நம்பர் ....கால் செய்து சொல்லு ....நானே வந்து கூட்டிட்டு போறேன் ......ஓகே நான் கிளம்பறேன் ...."என்றான் உத்தம் .

"இருங்க அண்ணா ....நீங்க பாட்டுக்கு வந்தீங்க ...போறீங்க ..........இந்த bomb வேற சத்தம் இல்லாம வெடிக்க வச்சுட்டு கூல்லா போய்ட்டு வரேன்னு கிளம்பறீங்க ..........அம்மா கிட்டே உங்களுக்கு சாப்பாடு செய்ய சொல்லி இருக்கேன் ........இருந்து சாப்பிட்டுட்டு போங்க ...."என்றாள் மதுரா .

"இல்லை பெஹன் ....இன்றைக்கு வேண்டாம் ..........நிறைய பேருக்கு மனக்கஷ்டம் வரும் ...........இன்னொரு நாள் வந்து சாப்பிடுறேன் ....."என்றான் உத்தம் .

"என்ன உங்க பாஸ்க்கும் விஜய்க்கும் அக்னி நட்சத்திரம் படம் அசோக் ,கெளதம் என்று நினைப்போ ????சூடு ரொம்ப அதிகமா இருக்கு .............உடம்புக்கு ஆகாது ப்ரோ ...."என்றாள் மதுரா .

"மதுரா !"என்றான் உத்தம் அதிர்ந்து .

"விசுவாசத்திற்கு மறு பெயர் உண்டு என்றால் அது நீ தான் தன்வீர் உத்தம் சிங் ...."என்று பாஹுபலி பட டயலாக் விட்டு கலாய்த்த மதுராவின் தலையில் நங்கு என்று கொட்டினான் உத்தம் .

"நீ இன்னும் மாறவேயில்லை பெஹன் .....இன்னும் அதே வால் இல்லா monkey வேலை செய்துட்டு தான் இருக்கே ....."என்றான் உத்தம் .

"நாங்க எல்லாம் மாறிட்டா உலகம் தாங்காது தம்பி .....சரி சரி பொழச்சிப்போ .....பவானி செய்யும் சமையலை விரும்பி ,நல்லா இருக்குன்னு சாப்பிடும் ஒரே ஜீவன் நீ மட்டும் தான் .....போ போ எஸ்கேப் ஆகிக்கோ ....நாளை காலை பிக் up செய்துக்கோ ....."என்றாள் மதுரா .

"என்ன நீ பாட்டுக்கு வரேன்னு சொல்றே .............வீட்டில் கேட்க வேண்டாமா ..........."என்றான் உத்தம் .

"என்னப்பா பண்றது ....எனக்காகவும் ஒரு பாடிகார்ட் வேலை எல்லாம் செய்யும் அந்த லூசு .........அதான் பா உன் பாஸ் .....அந்த அப்பாடக்கர் யாருன்னு பார்க்கணுமே ............அதான் வரேன் ........."என்ற மதுரா ஓட ஆரம்பிக்க உத்தம் வாய் விட்டு சிரித்து விட்டு கிளம்பினான் .
View attachment Ram-Charan_6097.jpg

இவர்கள் இங்கே தோட்டத்தில் பேசி கொண்டு இருக்க ,வீட்டின் முன்புறம் அதே சமயம் மற்றொரு மீட்டிங் விஜய் அண்ட் கோ போட்டு கொண்டு இருந்தார்கள் .

PENANCE WILL CONTINUE......
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 28

இவர்கள் இங்கே தோட்டத்தில் பேசி கொண்டு இருக்க ,வீட்டின் முன்புறம் அதே சமயம் மற்றொரு மீட்டிங் விஜய் அண்ட் கோ போட்டு கொண்டு இருந்தார்கள் .

"அவன் ஏன் இங்கே வந்தான் ஆல்வின் ?"என்றான் விஜய் கோபமாக .
View attachment vijays-bairavaa-opening-day-show-details-photos-pictures-stills-1.jpg

"அதை சொல்ல தான் மோர்னிங் வந்தேன் ....அதற்குள் நீ செய்த கூத்தில் எல்லாம் மறந்து போச்சு .....சோனாவை சூர்யா ஆட்கள் பேக் செய்துட்டாங்கன்னு கேள்வி......என்ன ட்ரான்ஸாக்ட் ஆச்சுன்னு தெரியலை .....அது விஷயமா தான் இப்போ உத்தம் மதுராவை பார்க்க வந்து இருக்கான்னு தோணுது ......"என்றான் ஆல்வின் .

"அவன் ஏன் மதுரா விஷயத்தில் வீணா தலை இடுறான் ?"என்றார் சேது

"ஏனென்றால் சூர்யா மதுராவை லவ் செய்யறான் அப்பா .....காலேஜ் அப்போவே இவ கூட தான் பெவிகால் இல்லாத குறையை ஓட்டிட்டு அலைவான் ......இப்போ கேட்கவா வேண்டும் ......"என்றான் விஜய் விரக்தியாக .

"நாங்க இருக்கும் வரை நீ எதற்கும் கவலை படாதே கருணா ....எங்களை மீறி தான் எவனாய் இருந்தாலும் மதுராவை நெருங்க முடியும் ...."என்றார் சேது .

"சூர்யா ஒன்று நினைத்தால் அதை நடத்தி முடித்து விட்டு தான் மறுவேலை பார்ப்பான் ....."என்றான் விஜய் பெருமூச்சு விட்டு .

"அது என்னவோ சரி தான் ......அவன் போடும் பிளான் என்றுமே மிஸ் ஆனது இல்லை ......அதனால் தான் சோனா ACP ராஜேஸ்வரி கிட்டே மாட்டி வைத்து இருக்கான் "என்ற ஆல்வின் நடந்தது அனைத்தையும் சொல்ல மற்றவர்கள் அதிர்ந்து போனார்கள் .

"யார் எப்படி ,எங்கு ஆப்பு வைத்தாலும் இவங்க மட்டும் மாட்டவே மாட்டேன் என்கிறாங்க ............."என்றான் விஜய் கடுப்புடன் .

"ராஜேஸ்வரி மேடம் உன்னிடம் பேச வேண்டும் என்றார்கள் ......நம்பர் கொடுத்து இருக்கேன் ...எப்போ வேண்டும் என்றாலும் கால் செய்வாங்க ...."என்றான் ஆல்வின் .

"நான் கேட்ட மத்த டீடெயில்ஸ் உடன் இந்த ஜட்ஜ் ,மத்திய அமைச்சர் ,வக்கீல் பற்றியும் விவரம் வேண்டும் .....அப்படி மொத்தம் எத்தனை பேர் தான் கஜாவிடம் சிக்கி இருக்காங்க .....ஒவ்வொரு முறை வெவேறு ஆட்கள் உள்ளேகொண்டு வரார் ...."என்றான் விஜய் நெற்றியை தேய்த்தவாறு .

"விஜய் ரிலாக்ஸ் மேன் ....இப்போ எதுக்கு இப்படி தேவை இல்லாம டென்ஷன் ஆகுறே ?"என்றான் ஆல்வின் நண்பனின் மனம் புரிந்தவனாக .

கூடவே ரகு ,கார்த்திக் இருந்ததால் அவர்களால் மேற்கொண்டு எதையும் பேசவும் முடியவில்லை .சேது ஏதோ சொல்ல போன சமயம் உத்தம் மதுராவிடம் பேசி முடித்து விட்டு கிளம்பி வெளியே வந்தான் .வெளியே வந்தவன் காரில் ஏறாமல் எதையோ யோசித்தவன் விஜய் அருகே மீண்டும் வந்தான் .

"oppourtunity knocks தி door once விஜய் சார் .....அதை விடாமல் கெட்டியாக பிடித்து கொள்பவன் தான் புத்திசாலி ....ஒரு சில சமயங்களில் சந்தர்ப்பம் நம்மை தேடி மற்றவர்களால் வந்த போதும் ,அதை ஏற்காமல் தேவை அற்ற தடைகளை ஏற்படுத்துவது பைத்தியக்காரத்தனம் .....போன முறை என் பாஸ் மிஸ் செய்துட்டார் ...இந்த தடவை மதுரா மேடம் சம்மதித்தால் ,அவங்க கை பிடிக்க எந்த தடை வந்தாலும் தகர்க்க தயாராக உள்ளார் ....ஏனென்றால் அவர் தியாகச்செம்மல் இல்லை ......ரொம்ப நல்லவரா இருக்க போறதுனாலயே அவருக்கு யாரும் சிலை வைக்க போவதும் இல்லை ......மத்தவங்களுக்காக பார்த்து பார்த்து ,வாழ்ந்து ,வாழ்ந்து அவர் கிடைக்கவே முடியாத விலை மதிப்பு இல்லாத தேவதை போன்ற பெண்ணை இழக்க தயாராக இல்லை ....."என்றவன் மற்றவர்கள் திகைத்து நிற்கும் போதே கிளம்பி விட்டான் .
View attachment ar-murugadoss-plans-to-direct-ram-charan-48329e8d.jpg

அவன் பைத்தியக்காரன் என்று சொல்லியது ,வந்த வாய்ப்பை நழுவ விட்டவன் ,மீண்டும் மற்றவர்களால் வரும் வாய்ப்பை நழுவ விடுகிறவன் ,தியாக செம்மல் என்று தன்வீர் கிண்டல் அடித்தது எல்லாம் விஜயயை என்று ஆல்வின் ,பாலாஜி ,சேதுவிற்கு புரிந்து தான் இருந்தது .கண்கள் கனலை கக்க ,எரிமலையை நின்று கொண்டு இருந்த விஜய்க்கும் அது புரிந்து தான் இருந்தது .புரிந்தது அது மட்டும் அல்ல ...மதுராவை கரம் பிடிக்க ,மதுராவிற்காக எதையும் செய்ய சூர்யா தயார் ஆகி விட்டான் என்பதும் தான் .ஆனால் புரிந்தது தான் அவனுக்கு உவப்பாய் இல்லை என்பதே நிதர்சனம் .

போலி கொள்கை ,வறட்டு கெளரவம் ,தேவை அற்ற தாழ்வு மனப்பான்மை சில சமயங்களில் நம் கைக்கு கிடைக்கும் உயர்ந்த வாழ்வை தட்டி பறிக்கிறது .கை விட்டு வாழ்கை நழுவிய பிறகு அழுது ,புரண்டு மட்டும் என்ன பயன் ????காதல் என்பது உன்னதமானது .ஒருத்தியை காதலித்த பிறகு கை விடுவதும் தவறு ,கை நழுவ விடுவதும் தவறு .அது விஜய்க்கும் புரிந்தே தான் இருந்தது என்றாலும் அவன் கைகள் கட்டப்பட்டு இருந்தது .சோனா அண்ட் கோ என்ற மாபெரும் நெருப்பு சங்கிலியால் .அதை மீற முயன்றால் முதல் சேதாரம் மதுராவிற்கே என்னும் போது அவனால் துணிந்து எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை .மதுராவின் மானம் ,எதிர்காலம் ,அவள் குடும்பம் மட்டும் இல்லாமல் ரூபிணி வாழ்வும் அல்லவா இதில் இருக்கிறது .விவாகரத்து என்பது சோனாவாக கொடுத்தால் தான் உண்டு .அப்படியே கொடுத்தாலும் மதுராவை விஜய் மணக்க அவள் விடுவாளா என்பது மிக பெரிய கேள்விக்குறியே .ஒருவேளை காதலித்து இருப்பாளோ என்ற சந்தேகம் வந்ததற்கே ஒரு பெண்ணை கொன்று ,ஒரு பெண் மனநல காப்பகத்திற்கு சேர்க்கும் அளவுக்கு கொண்டு போய் ,மதுராவிற்கு சுமன் போன்ற அயோக்கியனை கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் சோனா திருமணம் நடக்க விடுவாளா ????

ஆனால் இது போன்ற எந்த தடைகளும் சூர்யாவின் பாதையில் இல்லை .அவன் பாதை முட்கள் அற்ற ரோஜா படுக்கை .அவன் நினைத்தை நடத்தி கொடுக்க பண பலம் ,ஆள் பலம் கொண்டவன் .பாசம் ,பந்தம் ,குடும்பம் என்ற என்ற எந்த சங்கிலியாலும் பிணைக்க படாதவன் .அவன் செயல் பட சுதந்திரம் ரொம்பவே உண்டு .விஜய்யின் தயக்கம் ,குழப்பம் ,மற்றவர்களுக்காக பார்க்கும் குணம் என்று எதுவும் இல்லாதவன் .தனக்கு மிஞ்சியே தானமும் தர்மமும் என்பவன் .

தடைகளால் கைதியாக இருப்பவன் ,தனக்கு தானே விலங்கு மாட்டி கொண்டு வெளி வர முடியாதவனுக்கும் ,எல்லா வசதிகளும் ,சந்தர்ப்பங்களும் அமைய பெற்றவனுக்கும் இடையே நடக்க இருக்கும் காதல் யுத்தத்திற்கான பரிசு மதுரா .ஆனால் அவள் மனதில் இருவரில் யார் ???

"விஜய் !வா பா உத்தம் ஏன் வந்தான் என்று மதுரா கிட்டே கேட்கணும் இல்லையா .....வா உள்ளே ..."என்றார் சேது மகனின் கவனத்தை திசை திருப்ப .

பெருமூச்சு விட்டு தன்னை வழக்கம் போல் சமாளித்து நிமிர்ந்தவன் ,தந்தையின் மனம் புரிந்தவனாக உள்ளே சென்றான் .அங்கு எந்த கவலையும் இல்லாமல் ,தனக்காக இருவர் மோதலுக்கு நிற்பதை பற்றி சற்றும் அறிந்து கொள்ள அக்கறை காட்டாதவளாக ,உத்தம் வாங்கி வந்து இருந்த ரசமலாய் இனிப்பை விழுங்கி கொண்டு இருந்தாள் மதுரா .

(நல்லா வருவே மா நீ .....ரோம் பற்றி எரியும் போது நீரோ என்னும் மன்னன் பிடில் வாசித்து கொண்டு இருந்தானாம் ....நீ அந்த category போல் இருக்கு ....ஒருவேளை "ராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை என்று விட்டா பாடுவியோ ???)

"மதுரா !......சொல்லுமா ..."என்றார் சேது அவள் எதிரே அமர்ந்து .

"ரசமலாய் நல்லா இருக்கு பெரியப்பா .....ஆனா என்ன பாதம் பால் தான் கொஞ்சமா இருக்கு ...."என்றாள் மதுரா அது தான் உலக மகா ,மெகா இம்போர்ட்டண்ட் விஷயம் என்பது போலெ

சேது முகம் போன போக்கை கண்டு,விஜய் வாயை கையால் மறைத்து தன் சிரிப்பை அடக்கி கொண்டான் .அவனை ஒரு பார்வை பார்த்த விட்டு மதுரா மீண்டும் ஸ்வீட்டில் கவனம் செலுத்தினாள் .

"நான் அதை கேட்கலை மதுரா ..."என்றார் சேது .

"ரொம்ப தேங்க்ஸ் பெரியப்பா .....எனக்கே இது பத்தாது ....நீங்க வேற பங்குக்கு வந்துடீங்களோ என்று பயந்து தான் போய் இருந்தேன் .....அம்மா !மீதம் இருப்பதை பிரிட்ஜில் வையுங்க ...நான் count செய்துட்டேன் இன்னும் 8 இருக்கு .....யாருக்கும் கொடுக்காதீங்க "என்றாள் மதுரா .

பவானி தலையில் அடித்து கொள்ள ,விஜய் பொங்கி வந்த சிரிப்பை இருமலாக மாற்றி சமாளித்தான் .அவள் குணம் அறிந்தவன் ஆயிற்றே .அவள் பண்ணும் அலம்பலை அவனால் ரசிக்க மட்டுமே முடிந்தது .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"மதுரா !உத்தம் ஏன் இங்கு வந்தான் என்று பெரியப்பா கேட்கிறாங்க ....யாரும் உன் ஸ்வீட்க்கு பங்கு வரவில்லை ."என்றாள் சுபா கடுப்போடு .

எதையும் பேசாத மதுரா அவள் அருகே வைத்து இருந்த அக்ரீமெண்ட்ஸ் இரண்டையும் எடுத்து சேதுவிடம் கொடுத்து விட்டு தன் வேலையை -அதான் ஸ்வீட் சாப்பிடும் வேலையை செவ்வனே செய்தாள் .ஒவ்வொருவராய் படித்தவர்கள் தான் திகைத்து போய் அடுத்து என்ன பேசுவது ,செய்வது என்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர் .

அக்ரீமெண்ட் விஷயம் அது வரை தெரியாத பவானி ,கார்த்திக் ,ரகு தான் அதிகமாக அதிர்ந்தது .மற்றவர்களுக்கு சூர்யாவின் அதிரடி அதிர்ச்சியை கொடுத்து கொண்டு இருந்தது .

கோபமாக எழுந்து வந்த பவானி ,மதுராவின் தலையில் கொட்டி ,"எருமை ,எருமை ....மூக்கு முட்ட சாப்பிட தெரியுது இல்ல ......ஒரு ஒப்பந்தம் சைன் செய்யும் போது ஒன்றுக்கு நாலு முறை படித்து பார்த்து சைன் பண்ண மாட்டியா ....இன்னும் என்ன எல்லாம் அந்த சோனா பிசாசு செய்து இருக்கு ....என் கிட்டே இருந்து இன்னும் எதை எல்லாம் மறைத்து இருக்கே ......படிச்சவ தானேடீ நீயே .....லட்ச லட்சமாய் இதற்கு தான் கொட்டி படிக்க வைத்தோமா .....தத்தி ....தத்தி "என்றார் பொரிந்து தள்ளினார் பவானி .டீச்சர் மகள் மக்காய் இருந்தால் அவருக்கு கோபம் வருமா வராதா ???
View attachment CSZ7_InUAAUDBpk.jpg

"ஹிட்லர் மேடம் .....ரிலாக்ஸ் ....நீங்க படம் எல்லாம் பார்ப்பதே கிடையாதா .....காசு ,பணம் ,துட்டு ,மணி ...மணி இருந்தா .....இது போல் ஆயிரம் போலி கையெழுத்து ,பத்திரம் தயாரிக்க முடியுமாம் ...நான்சொல்லலை மாதாஜி ....என் எருமை சாரி அருமை சகோதரி தான் செப்பினாங்க .....நான் கையெழுத்து போட்ட அக்ரீமெண்ட்டில் இது மாதிரி எல்லாம் இல்லவே இல்லை என்னும் போது என்னை குறை சொல்லி என்ன யூஸ் சொல்லுங்க ......சரி அதை விடுங்க என்னுடைய பத்திரமாவது போலி பத்திரம் ,போலி கையெழுத்து .....பட் அடுத்த அக்ரீமெண்ட் மிசஸ் பவானி அதான் மா உங்க புருஷர் உயர்திரு சங்கரன்,தி கிரேட் ஆடிட்டர் ,நீதி ,நேர்மை,நியாயம் ,தர்மம் என்று வாழ்ந்தவர் ஏன் மூன்று கோடி கடன் வாங்கியதாக உண்மை கையெழுத்து போட்டு இருக்காரே ......அதை என்ன சொல்ல போறீங்க ????"சித்தப்பான்னு கண் கலங்கி ....அப்பாவுக்கு போன் போட்டு கொடுத்தேன் ...அந்த பக்கம் பேசி கொண்டே இந்த பக்கம் எதையும் படித்து பார்க்காம கையெழுத்து போட்டு கொடுத்து விட்டார் உன் தந்தை ....என் தாத்தா சொன்னது போல் உன் டாடி யூஸ்லெஸ் தான் "என்று சோனா மேடம் சொன்னாங்க மிஸ்சஸ் சங்கரன் ....இப்போ சொல்லுங்க மா யார் தத்தி ...யார் சாப்பிட மட்டும் தான் லாயக்கு ?????என்ன நாட்டாமை ......சத்தத்தையே காணொம் .....தீர்ப்பை மாத்தி சொல்லுங்க .....புருஷன் என்று வரும் போது மட்டும் வாயே திறக்க மாடீங்களே .....வெண்ணை ஒரு கண்ணில் சுண்ணாம்பு ஒரு கண்ணில் என்பது இது தானோ ...."என்றாள் மதுரா சற்றும் அலட்டி கொள்ளாமல் .

மகளின் கூற்றில் உள்ள உண்மை சுட பவானி கையை பிசைந்து கொண்டு நின்றார் ."உண்மை சுட தானே செய்யும் "

"முடிந்து போன விஷயத்தை பற்றி பேசுவதால் பயன் இல்லை மதுரா .....இப்போ நடந்தது பற்றி தான் தெரிய வேண்டும் .....சூர்யா எதற்கு சோனாவிற்கு நாலு கோடி கொடுத்து இந்த அக்ரீமெண்ட் கான்செல் செய்யணும் ?"என்றார் மரகதம் .

"பாட்டி ....உங்க பேத்திக்கு சூர்யா நாலு கோடி கொடுத்ததாக நான் சொல்லவே இல்லையே .....நீங்களா கற்பனை செய்து கொண்டால் ...நான் என்ன செய்ய முடியும் ?"என்றாள் மதுரா

"என்னது ....நாலு கோடி சூர்யா கொடுக்கலையா .....அப்புறம் எப்படி இந்த பத்திரத்தில் சோனா சைன் போட்டா ?"என்றான் விஜய்

"நாலு கோடி கொடுக்கலையாம் ......நாலு அறை தான் கொடுத்தாராம் சூர்யா .....அப்படி தான் தன்வீர் அண்ணா சொன்னாங்க ...."என்றாள் மதுரா .

"என்னது .....!'பல குரல்கள் ஒரே காலத்தில் திகைப்பில் ஒலித்தது .

"சோனா அடி வாங்கினா இத்தனை பேர் சந்தோச படுவாங்கன்னு தெரியாம போச்சே .....என்ன மிஸ்டர் விஜய் ,எதற்கு இந்த அளவூ ஷாக் ...நீங்க அதை செய்ய முடியலை என்றா ?"என்றாள் மதுரா தலை நிமிராமலே .
View attachment CpkyUJ4XgAANbUC.jpg

அவன் பதில் சொல்வதற்குள் ,"அடிங்க ....சிரியவங்க ,பெரியவங்கனு மரியாதை இல்லாம .....தோலை உருச்சுடுவேன் ....என்ன இருந்தாலும் அவர் உன் அக்கா கணவர் ....மரியாதையா பேசு "என்றார் பவானி கோபமாக .

"ஓஹ் ...மாதாஜி ...நீங்க இன்னும் கதை கருவுக்கே வரலையா ....சோ sad .....ஸ்கிரிப்ட் உங்களுக்கு இன்னும் தெரியலை ....மதர் .....இவர் கணவராக இல்லை என்பது தானே சோனாவின் பிரச்சனையே .....சோனா ஆபீஸ் drugs யூஸ் செய்தபோ வாய் விட்டது தான் ...அதை சொன்ன நான் இந்த மேட்டரை சொல்லாமல் விட்டு விட்டேன் ......இவர் அவ கழுத்தில் திருமாங்கல்யமே கட்டவில்லையாம் ....ஒரு முடிச்சு கூட போடவில்லையாம் .....அதை கட்டியது கூட சொர்ணா பெரியம்மா தானம் .....தாலியே கட்டாத இவர் எப்படிம்மா என் அக்கா கணவர் ஆக முடியும் ??????இவர் இன்னும் கல்யாணம் செய்தும் பிரம்மச்சாரியாக இருப்பதால் தான் என்னை கூட்டி போய் கேட்டா பாருங்க கேள்வி ......கேள்வியா அது ...."என்றாள் மதுரா


இவ எதற்கு இதை எல்லாம் கிளறுகிறாள் என்று புரியாமல் ,விஷயம் தெரிந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர் .

"இப்போ எதற்கு மதுரா பழசை எல்லாம் பேசிட்டு இருக்கே ....விட்டு தள்ளு "என்றார் சேது பதட்டத்துடன்.

PENANCE WILL CONTINUE.....
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 28(1)
"ஓஹ் ...மாதாஜி ...நீங்க இன்னும் கதை கருவுக்கே வரலையா ....சோ sad .....ஸ்கிரிப்ட் உங்களுக்கு இன்னும் தெரியலை ....மதர் .....இவர் கணவராக இல்லை என்பது தானே சோனாவின் பிரச்சனையே .....சோனா ஆபீஸ் drugs யூஸ் செய்தபோ வாய் விட்டது தான் ...அதை சொன்ன நான் இந்த மேட்டரை சொல்லாமல் விட்டு விட்டேன் ......இவர் அவ கழுத்தில் திருமாங்கல்யமே கட்டவில்லையாம் ....ஒரு முடிச்சு கூட போடவில்லையாம் .....அதை கட்டியது கூட சொர்ணா பெரியம்மா தானம் .....தாலியே கட்டாத இவர் எப்படிம்மா என் அக்கா கணவர் ஆக முடியும் ??????இவர் இன்னும் கல்யாணம் செய்தும் பிரம்மச்சாரியாக இருப்பதால் தான் என்னை கூட்டி போய் கேட்டா பாருங்க கேள்வி ......கேள்வியா அது ...."என்றாள் மதுரா

இவ எதற்கு இதை எல்லாம் கிளறுகிறாள் என்று புரியாமல் ,விஷயம் தெரிந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர் .

"இப்போ எதற்கு மதுரா பழசை எல்லாம் பேசிட்டு இருக்கே ....விட்டு தள்ளு "என்றார் சேது பதட்டத்துடன் .

"என்ன பெரியப்பா ....அம்மா ,ரகு ,கார்த்திக் எல்லாரும் இன்னும் எவ்வளவூ காலம் தான் பாதி உண்மை தெரிந்தவர்களாக இருப்பார்கள் .....அவங்களும் full formக்கு வரட்டுமே ....."என்ற மதுரா சோனா ECR பங்களாவில் தன்னிடம் ஆடிய நாடகத்தை ,சுமன் பின் தொடர்ந்ததை ,விஜய்யும் மற்றவர்களும் எவ்வாறு ஒரு வருடமாய் தன்னை காப்பாற்றி கொண்டு இருப்பதை என்று அவள் அறிந்த விஷயங்கள் முழுவதையும் ,விஜய் தன்னை விரும்புவதை மட்டும் தவிர்த்து விட்டு மற்ற விஷயங்களை அப்டேட் செய்தாள் .

ஆடி போன பவானி ,சற்று தள்ளாட அவரை தாங்கி பிடித்தான் விஜய் .மதுராவை முறைக்கவும் தவறவில்லை .சுபா அதற்குள் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க அதை பருகியவர் சற்று தன்னை சமாளித்து கொண்டார் .

"ஒண்ணும் இல்லை ஆண்ட்டி ....ப்ளீஸ் டென்ஷன் ஆகாதீங்க ....நாங்க எல்லாம் இருக்கோம் இல்ல ...மதுராவிற்க்கு எதுவும் ஆகா விட மாட்டோம் ....ரிலாக்ஸ் ஆண்ட்டி ....பயப்படாதீங்க ....."என்றான் அவரை அணைத்து .

"தம்பி !.....உனக்கு கோயில் கட்டினா கூட பத்தாது .....என் பெண்ணின் மானத்தை ,என் குடும்ப கௌரவத்தை காப்பாற்ற வந்த என் குலசாமி அய்யா நீயி .....உனக்கு பட்ட கடனை எந்த ஜென்மத்தில் தம்பி அடைக்க போகிறேன் .....சொந்த அம்மா செத்தா கூட விசா கிடைக்கலை ,லீவு இல்லைன்னு வராத மகன் ,மகள் இருக்கும் காலம் இது ......ஆனா நீ ஒரு வருசமா என் மக மானத்தை காப்பாற்றுவதையே வேலையா செய்துட்டு இருக்கியே ......உனக்கும் எங்களுக்கும் அப்படி என்ன அய்யா பந்தம் .....ரொம்ப நன்றி "என்று கை கூப்பி கண் கலங்கி இருந்தவரை கண்டு விஜய்க்கு தர்ம சங்கடமாய் போனது .
View attachment maxresdefault (15).jpg

"ஆண்ட்டி !....ப்ளீஸ் .....இப்படி எல்லாம் பேசாதீங்க ....நான் மட்டும் இல்லை ஆல்வின் ,சுபா ,பாலாஜி,சேது அப்பா ,அம்மா ,பாட்டின்னு நிறைய பேர் ஒன்றாக சேர்ந்து தான் செய்தோம் .....கண் முன்னால் ஒரு அநியாயம் நடக்கும் போது அதை தடுக்காமல் இருக்க முடியாது தானே ....அதை தான் செய்தோம் ....இது பெரிய விஷயமே இல்லை .....நீங்க ரிலாக்ஸ் ஆகுங்க ......மதுராவிற்கு ஒன்றும் இல்லை ...அதை மட்டும் மனதில் வையுங்க .....மத்த எல்லாவற்றையும் நாங்க பார்த்துக்கொள்கிறோம் ....இது வரை மதுராவை இங்கு பிணைத்து வைத்து இருந்தது இந்த அக்ரீமெண்ட் தான் .அதான் இல்லை என்று ஆகி விட்டதே .....இனிமேல் நீங்க இங்கு இருக்க வேண்டாம் .....கிளம்பி குன்னூர் போய்டுங்க .....ஆல்வின் மதுராவிற்கு ஏற்ற நல்ல மாப்பிளையை பார்த்து ஏற்பாடு செய்வான் .....எவ்வளவூ சீக்கிரம் முடியுமோ அவ்வளவூ சீக்கிரம் மதுராவிற்கு திருமணம் முடித்து விடுங்க ...."என்றவனை கண்டு பவானி கண் கலங்க ,மதுராவோ ஒற்றை புருவத்தை மட்டும் தூக்கி அவன் பேசுவதை கேட்டு கொண்டு இருந்தாள் .
அவள் கண்களின் மின்னல் மட்டும் மதுரா அவன் பேச்சை கேட்டு உள்ளுக்குள் சிரித்து கொண்டு இருக்கிறாள் என்று சொல்லாமல் சொல்லியது .
"சரிங்க தம்பி ......நீங்க சொல்வது போலவே செய்கிறோம் .....உங்களை தான் தம்பி மலை போல் நம்பி இருக்கோம் .என் பெண்ணை கை விட்டு விடாதேபா ........இனி என் மக உன் பொறுப்பு ...."என்றார் பவானி .

"நினைப்பது எல்லாம் நடந்து விட்டால்
தெய்வம் ஏதும் இல்லை ...."----கண்ணதாசனின் எவ்வளவூ உயர்ந்த வரிகள் .அங்கு அது தான் நடந்தது .விஜய் பிளான்க்கு பவானி சம்மதம் சொல்லிய மறுகணம் ,ரகுவின் போன் ஒலித்தது .எடுத்து பேசியவன் மீண்டும் திகைத்தான்.

போன் பேசும் வரை நன்றாக இருந்தவன் ,அதை பேசிய பின் பேய் அடித்தது போல் ஆகிவிட்டதை முதலில் கவனித்தவள் மதுரா தான் .

'என்ன ஆச்சு இவனுக்கு ......பொறியில் மாட்டிய எலி போல் ரியாக்ஷன் கொடுத்துட்டு இருக்கான் !'என்று எண்ணிய மதுரா ,"ரகு ப்ரோ ....முதலில் கொஞ்சம் உட்கார் ....நீ இருக்கும் நிலை பார்த்தால் மயங்கி விழுவாய் போல் இருக்கே .....என்ன மேட்டர் .....சிக்கிம் ,பூட்டான் லாட்டரியில் ஜெயிச்சுட்டியா என்ன ?"என்றாள் .
View attachment download (2).jpg

அவள் பேசிய பிறகு தான் மற்றவர்களின் கவனம் ரகு மேல் திரும்பியது .நெருப்பு மேல் நிற்பவன் போல் நின்று கொண்டு இருந்தான் ரகு .

"என்ன ரகு ...என்னப்பா ....என்ன ஆச்சு ?"என்றார் பவானி மகனின் முகம் சரி இல்லாததை பார்த்து குழம்பி போனவராய் .

"அம்மா !............அப்பா ....அம்மா ............."என்றான் திக்கி திணறி .

"அடேய் ....தந்தி அடிக்காம மேட்டருக்கு வாடா .....என்னமோ ஏதோன்னு பக்கு பக்குனு இருக்கு .....வாய் திறந்து சொல்லி தொலை ..."என்றாள் மதுரா கடுப்பாக .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அம்மா !......அப்பாவுக்கு ட்ரான்ஸ்பெர் சென்னைக்கு போட்டு இருக்காங்களாம் ....இவர் தான் தலைமை அதிகாரியாம் .இவர் கீழே 10 பேர் வேலை செய்ய போறாங்களாம் ......வீட்டை காலி செய்துட்டு வந்துட்டு இருக்காராம் ......இங்கேயே வீடு அலட் செய்து இருக்காங்களாம் .....உங்களுக்கும் இங்கேயே பிரின்சிபால் ஜாப் (ஒரு மிக பிரபலமான தனியார் பள்ளியின் பெயரை சொன்னவன் )அங்கு கொடுத்து இருக்காங்களாம் ....இன்றைக்கு ஈவினிங் வந்துடுவாராம் .....வீடு அட்ரஸ் WHATSAPP செய்து இருக்காராம் ....நல்ல நேரம் பார்த்து உங்களை போய் பால் காய்ச்ச சொல்றார் ..... "என்றான் ரகு அழுது விடும் குரலில் .
View attachment DTo9uAeVwAEZhkb.jpg

அங்கு இருந்தவர்களுக்கு சிரிப்பதா ,அழுவதா என்று கூட புரியவில்லை .விஜய் தான் அதிகம் நொந்து போனது .அவன் மதுராவை ஒவ்வொரு தடவையும் PACK செய்ய நினைக்கும் போது எல்லாம் கடவுள் ,விதி சங்கரன் ரூபத்தில் விளையாடி பார்க்கிறது .

(சாரி கண்ணா உன் லக் அவ்வளவூ தான் )

கொதித்து எழுந்தார் பவானி ."டேய் கால் போடுடா அந்த மனுசனுக்கு ....இவர் பாட்டுக்கு எப்போ பார்த்தாலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவூ எடுக்க வேண்டியது .....மாட்டிட்டு முழிப்பது மத்தவங்க தான் .....இப்போ தான் என் மக சேதாரம் இல்லாம தப்பித்து இருக்கான்னு ஒரு நொடி சந்தோச பட்டேன் ...அது பொறுக்கலை உங்க அப்பாவுக்கு ......இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு தெரியணும் எனக்கு ."என்றார் மிக கோபமாக

"அம்மா !"என்று இழுத்த ரகு என்ன சொல்வது என்று புரியாமல் கையை பிசைந்து கொண்டு நிற்க ,அது வரை நடப்பதை அமைதியாக பார்த்து கொண்டு இருந்த மதுரா,மனதிற்குள் சில கணக்கு போட்டவள் மெல்லிய புன்முறுவல் புரிந்தாள் .

"நான் சொல்லிட்டே இருக்கேன் ....என்னடா நீ பிடித்து வைத்த பிள்ளையார் மாதிரி அப்படியே நிற்கிறே .....அந்த மனுசனுக்கு கால் போடுடா ...."என்றார் பவானி மீண்டும் .

"நீங்க போன் செய்து பேசினாலும் யூஸ் இல்லை மம்மி .....அதான் அப்படி நிற்கிறான் .....மீண்டும் கோடிக்கணக்கில் பணம் கட்ட வேண்டி வருமே ...."என்றாள் மதுரா

"என்னடீ சொல்றே ....சொல்வதை புரியும் படியாக சொல்லி தொலை."என்றார் பவானி .
View attachment 1111.jpg

"அம்மா !....இன்னுமா உங்களுக்கு புரியலை .....உங்களுக்கு பிரின்சிபால் வேலை கொடுக்க பட்டு இருக்கும் பள்ளி யாருடையது என்று தெரியுமா ????இளவரசர் சூர்யா பிரதாப்புக்கு சொந்தமானது .....ரகு இது வரை வேலை செய்து கொண்டு இருந்தது கூட அவர் கம்பெனி தான் .இங்கு மாற்றல் ஆகி வந்து இருப்பதும் அவர் கம்பெனிக்கு தான் .....என் கெஸ் சரியாக இருக்கும் என்றால் அப்பா இது வரை வேலை பார்த்து கொண்டு இருந்த ஆடிட்டிங் FIRM கூட விலைக்கு வாங்கி அப்பாவிற்கு பதவி உயர்வூ கொடுத்து ,வீடு கொடுத்து சென்னைக்கு வரவழைத்து இருப்பதும் சூர்யாவாக தான் இருக்கும் ..... சிறு கல்லான சோனாவே நாலு கோடிக்கு செக் வைக்கும் போது ,சூர்யா போன்றவர் எத்தனை கோடிக்கு செக் வைத்து இருப்பாரோ என்று அண்ணாத்தை டர் ஆகிட்டு இருக்கார் .....சரி தானே ரகு பேட்டா ?"என்றாள் மதுரா .

"உனக்கு எப்படி ...."என்று இழுத்தான் ரகு -மதுரா சொன்னது உண்மை என்று சொல்லாமல் சொல்லி .

"சிம்பிள் ப்ரோ .....நீ ஸ்கூல் பேர் சொன்னதும் கெஸ் செய்தேன் .....சென்னையில் இப்போ ட்ரெண்ட்டில் இருக்கும் டாப் மோஸ்ட் ஸ்கூல் அது தானே .....அதன் OWNER சூர்யா தானே . தவிர சூர்யாவின் ஆடிட்டிங் கம்பெனி உலக அளவில் பேமஸ் ஆச்சே ..... அப்பா சட்டென்று இப்படி எல்லாம் ட்ரான்ஸபெருக்கு ஒத்து கொள்கிறார் என்றால் அது அவர் பெடெஸ்டலில் வைத்து பார்க்கும் அளவு பெயர் பெற்ற ஒரு நிறுவனமாக இருந்தால் ஒழிய நடக்க சான்ஸ் இல்லை ......சோ உனக்கு பெங்களூரு இருந்து ட்ரான்ஸபெர் ,எனக்கு பி.ஏ வாக வேலை .சோ மீதம் இருப்பது அம்மா ,அப்பா மட்டும் தான் .அவங்களுக்கும் சென்னையிலேயே வேலை ரெடி ."என்றாள் மதுரா தோளை குலுக்கி .

"அப்படி என்ன அந்த சூர்யாவிற்கு உன் மேல் அக்கறை ......அவன் யாரு உனக்காக இதை எல்லாம் செய்ய ....என்ன நினைச்சுட்டு இருக்கான் அவன் .....அவன் கோல் கட்டினால் ஆடும் குரங்கு என்று நினைத்து கொண்டானா என்ன ?"என்று பொரிந்தார் பவானி .

"சூர்யாவிற்கு என் மேல் என்ன அக்கறை ,சக்கரை என்று எல்லாம் எனக்கு தெரியாது .....அவன் யாரு என்ன எல்லாம் எனக்கு தெரியுமா தெரியாதா என்று கூட எனக்கு சொல்ல தெரியவில்லை ....பட் இதே கேள்வியை நீங்க ஏன் விஜய் செய்யும் போது கேட்கவில்லை அம்மா ????....விஜய்க்கும் எனக்கும் என்ன உறவூ ......என்ன சம்மந்தம் ....எதற்காக வேலைமெனக்கெட்டு என்னை புதையல் காக்கும் பூதம் போல் காப்பாற்றிட்டு வருகிறார் அதுவும் ஒரு வருசமாய் .....இதை எல்லாம் சேது பெரியப்பாவின் மருமகன் என்ற முறையில் செய்கிறார் என்றால் அவர் மருமகனே முதலில் இல்லை ....இல்லை முன்னே பின்னே தெரியாத ஒரு பெண்ணிற்கு செய்கிறார் என்றால் சோனாவால் மேலும் இரண்டு பெண்கள் பாதிக்க பட்டு தான் இருக்கிறார்கள் ....அவர்களுக்கு ஏன் இவர் உதவவில்லை ????/அவர்களை காப்பாற்ற ஏன் எதையும் செய்யவில்லை ????இவர் செய்வது சரி என்றால் சூர்யா செய்வதும் சரி தானே அம்மா ?இவரை கடவுள் ரேஞ்சுக்கு பேசிய நீங்கள் முன்னே பின்னே சந்திக்காத சூர்யாவை காய்வது ஏன் ????தவிர ஆஸ்திரேலியாவில் வேலையில் இருந்த கார்த்திக் சென்னைக்கு ட்ரான்ஸபெர் வாங்க "வெற்றி குரூப்ஸ் "தானே காரணம் ...இப்படி இவங்க எல்லோருக்கும் அல்டிமேட் AIM என் பாதுகாப்பு ஒன்று தான் .அம்மா !BEGGARS காண்ட் பி CHOOSERS மா ....சூர்யா என்ன நினைக்கிறார் என்பது எல்லாம் எனக்கு தெரியாது .பட் மிஞ்சி போனால் என்னை லவ் செய்பவராய் இருக்க வேண்டும் ...இல்லை மரேஜ்க்கு விருப்பப்பட்டு இருக்க வேண்டும் .....ஏன் சொல்கிறேன் என்றால் இந்த "ரிஸ்க் எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுவது மாதிரின்னு "டயலாக் விடுவது .நாலு கோடிக்கு வழி செய்வது எல்லாம் காதலிக்கும் லூசுங்க தான் செய்ய முடியும் .....காதல் இல்லாமல் ஒருவன் ஒரு பெண்ணிற்காக இந்த அளவூ எதையும் செய்ய துணிய மாட்டான் .....அவர் செய்த உதவிக்கு நன்றி சொல்லிட்டு ,வேறு என்ன சொல்கிறார் என்று நாளை கேட்டு வருகிறேன் ....அப்படியே உங்க கேள்விகளையும் கேட்டு விடுகிறேன் ....ஒகே .....டயர்ட்டா இருக்கு .....நான் போய் தூங்குகிறேன் ...பை "என்றவள் மத்தவர்கள் அதிர்ந்து இருக்க அதை பற்றி கவலை படாதவளாய் தன் அறைக்கு சென்று தாளிட்டு தூங்க சென்றாள்

PENANCE WILL CONTINUE......
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 28(2)

அவளுக்கு எப்படியோ ...ஆனால் அவள் வெடித்து விட்டு போன BOMB நன்றாகவே வேலை செய்தது மற்றவர்களிடம் .பவானி தன் யோசனையில் முழுகி ,தன் அறைக்கு சென்று விட ,மற்றவர்களும் கிளம்பி விட்டனர் .யாரும் யாரிடமும் பேசும் நிலையில் இல்லை . எதற்காக தூங்க போகிறாள் ?????காரணம் இல்லாமல் எதையும் செய்யாத மதுராவின் இந்த செயல் எதற்காக ???ஒருவேளை அங்கு இருப்பவர்கள் நிலைமையை யோசிக்க அவகாசம் தருகிறாளோ ??அவர்களின் முன் உள்ள சூழ்நிலையை விளக்கி சொல்லி விட்டு யோசித்து முடிவு எடுக்க இவர்களுக்கும் அவகாசம் தேவை தானே .

அதே சமயம் கஜா போர்டில் தன் அறையில் அனைத்தையும் உடைத்து கொண்டு இருந்தாள் சோனா .ஒரு இரவு போலீஸ் ஸ்டேஷனில் இருந்த அவமானம் அவளை எரித்து கொண்டு இருந்தது .எவ்வளவூ பெரிய பிரெஸ்டிஜ் issue .

(அடங மான அவமானம் எல்லாம் உனக்கு இருக்கா என்ன ....)

அவள் அறையில் இருந்தது எல்லாமே விலை உயர்ந்த பொருட்கள் .அவள் பார்த்து பார்த்து சேர்த்தது.ஆனால் இன்று சூர்யா ,மதுரா ,ராஜேஸ்வரி மீது இருந்த கட்டுக்கு அடங்கா கொலை வெறியின் தாக்கம் அவள் அறை பொருட்களின் மீது திரும்பி இருந்தது .அவற்றை உடைத்த பிறகு கூட அவளின் வெறி ,கோபம் அடங்கவில்லை.நிதானம் தவறும் அளவு குடித்த பிறகு கூட பற்றி எரிந்து கொண்டு இருந்த மன தீ அடங்கவில்லை .தன்னை ஒருவர் உதாசீன படுத்துவதா என்ற வெறி .
View attachment maxresdefault (5).jpg

கோபத்தில் கொதித்து கொண்டு இருந்தவள் பல மணி நேரமாக தன் மொபைல் தேடாமல் இருந்தாள் .ஏதோ தோன்ற தள்ளாட்டத்துடன் மொபைலை தேடி எடுத்தவள் அதன் டிஸ்பிளேயில் இருந்த 50 மேற்பட்ட அழைப்பினை கண்டு நெற்றி சுருங்கினாள் .அவள் இருந்த நிலையில் எழுத்துக்கள் கண்ணில் சரியாக தெரியவில்லை .அதை அவள் தூக்கி போட போன சமயம் மீண்டும் அழைப்பு வந்தது .யார் அழைப்பது என்று பார்க்காமலே எடுத்தவள் எதிர் முனை என்ன சொல்லியதோ போதை முழுவதும் தெளிந்து விட அடுத்த நொடி பயத்தில் முகம் வெளிறி வெளிப்படையாகவே நடுங்க ஆரம்பித்தாள் .

"வரேன் .....வரேன் ..........."என்றவள் பேய் தொரத்தியது போல் அறையை விட்டு வெளியே வந்து ,தன் காரில் ஏறி மீண்டும் அவளின் ECR பங்களாவுக்கு வந்து சேர்ந்தாள் .மதுராவை முதன் முதலில் வார்த்தைகளால் குதறி எடுத்த அதே பங்களா .

வெளியே ஒரே ஒரு காவலாளி இருக்க ,வெகு வேகமாக உள்ளே நுழைந்தவள் தன் முகத்திற்கு நேரே நீட்டப்பட்ட நான்கு துப்பாக்கிகளால் அதிர்ந்து நின்றாள் .வெளியே எவ்வளவூ அமைதியாக இருந்ததோ அதே அளவு வீட்டின் உள் பாதுகாப்பு அதிகமாக இருந்தது .இந்த ஏற்பாடுகளால் ஏமாந்து போனது சோனா மட்டும் இல்லை அவளை பின் தொடர்ந்து வந்த இரு வேறு ஆட்களும் தான் .அதில் ஒருவன் ஆல்வின் செக்யூரிட்டி நிறுவனத்தை சேர்ந்தவன் ,மற்றொருவன் உத்தம் அனுப்பி வந்தவன் .இருவரின் வேலையே சோனாவை பின் தொடர்வது தான் .வழக்கம் போல் சோனா ECR பங்களாவிற்கு ஆட்டம் போட வந்து இருக்கிறாள் என்று தவறாக நினைத்து ,ரிப்போர்ட் அனுப்பி விட்டு அவர்கள் இருவரும் மெத்தனமாய் இருந்து விட்டனர் .அவர்கள் அறியாதது வீட்டின் உள் இருந்த வில்லங்கம் பற்றி .

இது தான் விதி என்பதோ ....இல்லை மதுராவின் அழிவு என்பதோ ????உள்ளே நுழைந்த சோனாவின் முகத்தின் முன் நீட்டப்பட்ட துப்பாக்கிகள் விலக ,ஆஜானுபாகுவாய் ஒருவன் முன் வந்து சோனாவை மேல் இருந்து கீழ் வரை கைகள் பல முறை செக் செய்தான் .பின் எதையும் பேசாமல் அவளை பின் தொடருமாறு சைகை செய்தவன் ,அவளின் மொபைல் போனை வாங்கி வைத்து கொண்டு மேல் இருந்த ஒரு அறை கதவின் முன் சென்று நின்று அதை தட்டினான் .

உள் இருந்து முதலில் வெளி வந்தது ஒரு துப்பாக்கி .அதனை ஏந்தியன் இவர்களை கண்டதும் விலகி வழி விட்டு ,சோனா உள் நுழைந்ததும் கதவை சாத்தினான் .அந்த அறைக்குள் நுழைந்த சோனாவின் இதயமே ஒரு கணம் பயத்தில் நின்று தான் பின் துடித்தது .அங்கு கட்டிலில் ஒரு கையில் துப்பாக்கியுடன் சாய்ந்தவாறு படுத்து இருந்தான் சுமன் .

(ஓஹ் நோ .....இவனை வெஸ்ட் BENGAL சுந்தர்பன் காட்டுக்கு தானே விஜய் பார்சல் செய்தான் .ரெண்டே நாளில் திரும்பி வந்து இருக்கான் .....ரெண்டு வாரத்திற்காவது இவனை மயக்கத்திலேயே தானே விஜய் வைக்க சொன்னான் .....பாவி பய எப்படி தப்பி வந்தான் ?)

"சுமன் !"என்று கத்தியவாறு அவன் அருகே செல்ல முயன்றவளை தடுத்தனர் சுமனின் பாதுகாவலர்கள் .

சுமனை கண்டு சோனாவே ஒரு கணம் ஆடி தான் போனாள் .அவன் இருந்த நிலை அப்படி தான் இருந்தது .முகம் வீங்கி ,கன்றி ,கறுத்து ,கை கால்களில் கட்டு போட பட்டு எகிப்து மம்மி போல் இருந்தான்.சத்தியமாக சுமனை அறிந்தவர்கள் அவன் தான் சுமன் என்று சத்தியம் செய்தால் கூட நம்பவே மாட்டார்கள் .அந்த அளவு இருந்தது விஜய்யின் கவனிப்பு .முகம் முழுவதும் பன் கணக்காக வீங்கி ,ஒற்றை கண் முழுவதுமாக ரத்தம் கட்டி முடி இருக்க ,உதடு கிழிந்து ,அங்கு தையில் போட பட்டு இருந்தது.பார்க்கவே கோராமையாக இருந்தது அவன் நிலை .இவனை போன்ற மனித மிருகங்களுக்கு இது எல்லாம் மிக சிறிய தண்டனை தான் .

View attachment 12121.jpg

"WHO ?"என்றான் குழறலாக சுமன் .

"என்ன சுமன் ...........என்ன கேட்கிறே ?"என்றாள் சோனா

"என் நிலைக்கு யார் காரணம் ?"என்றான் சுமன் வாயில் இருந்து எச்சில் ஒழுகியவாறு .அருகில் இருந்த ஒருவன் அதனை துணி கொண்டு துடைத்து விட்டான் .

"யார் காரணமா ????அப்போ இது ACCIDENT இல்லையா ?"என்றாள் சோனா திகைத்து போனவளாய் .மதுராவை கடத்த வந்த போது விபத்தில் சிக்கி இருக்கிறான் என்று இவள் நினைத்து கொண்டு இருக்க ,இவனை ஒருவன் கைமா செய்து இருக்கிறான் என்பதே அவளுக்கு மிக பெரிய ஷாக் .

(இப்படி நாலு பேரு தட்டினா தான் பெண்களின் மீதோ ,குழந்தைகள் மீதோ கை வைக்க துணியும் உங்களை போன்ற சாக்கடை புழுக்களுக்கு எல்லாம் புத்தி வரும் .....மனிதனாய் இருந்தால் இதற்கே நீங்க ரெண்டு பெரும் திருந்தனும் .....நீங்களாவது திருந்தரதாவது ....)


"ACCIDENT .....இது உனக்கு ACCIDENT டா ?????அந்த மிடில் கிளாஸ் மதுராவிற்காக என்னை தூக்கிட்டாங்கடீ .....SUNDERBEN சதுப்புநில காட்டுக்கு ......எப்படி தப்பித்தேன் என்று பார்க்கிறாயா ????கடத்தி கொண்டு போனவனின் குரல் வலையை கடித்த துப்பின்னேன் .தூக்க மருந்து இஞ்செக்ட் செய்ய வந்தான் .அவனை கொன்னுட்டு அவன் போன் மூலமா என் ஆட்களை கொண்டு மீண்டு வந்தேன் .ஆனா இவங்க வரும் வரை இருந்த இடத்திலேயே பாத்ரூம் டாய்லட் போய் அதிலேயே படுத்து கிடந்தேன் ..............என்னை இந்த நிலைமைக்கு ஆள் ஆக்கியவன் யாரு ??????அவன் இனி உயிரோடு இருக்க கூடாது .அவன் மட்டும் அல்ல அவன் குடும்பத்தில் ஒருத்தர் கூட மிஞ்ச கூடாது .....சொல்லு சொல்லு சொல்லுடீ .....யார் அவன் ????யார் மதுராவிற்கு காவலாய் நிற்பவன் ??????அவன் கண் முன்னரே மதுராவை நான் கதற கதற ..........(சென்சார் CUT )....அதை அவன் கண்டு எதையும் செய்யவே முடியாமல் கதறி துடித்து சாகனும் ......யார் அவன் சொல்லு ......."என்று கோணிய வாயால் உச்ச கட்டமாய் அலறியவன் ,கண் காட்ட அவன் அருகே நின்றவன் ,சோனாவை கன்னம் கன்னமாய் அறைந்து தள்ளினான் .

"சுமன் ...............ப்ளீஸ் ..........என்னை விட்டுட்டு ................எனக்கு எதுவும் தெரியாது ................மதுராவை காப்பாற்ற எனக்கு என்ன பைத்தியமா பிடித்து இருக்கு?????அந்த கனிகாவை போட்டு தள்ளியது போல் இவளையையும் போட தான் நினைத்தேன் .....போலீஸ் பிரச்சனை வரும் என்று நீயும் ,தாத்தாவும் தானே வேண்டாம் என்று சொல்லியது ....அதான் உனக்கு அவளை உன் பக்கம் தள்ளினேன் .....ஆனா அவளை யாரும் வந்து காப்பாற்றுவாங்கன்னு சத்தியமா எனக்கு தெரியாது சுமன் .......அவள் இந்த சென்னையை விட்டு போக கூடாது என்று தான் போலி பத்திரம் தயார் செய்தேன் ....இப்போ அது கூட இல்லை ........"என்றாள் சோனா
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"வாட் ஹப்பேனெட் ?"என்றான் சுமன் .

"எல்லாம் அந்த பாவி சூர்யா பிரதாப்பால் வந்தது ....என்னை கடத்தி கொண்டு போய் ராட்சசி மாதிரி இருந்த ஒருத்தியை வைத்து அடி பின்னிட்டான் .....வலி தாங்க முடியாம அவன் கேட்டதை போல் எழுதி கொடுத்துட்டேன் ....."என்றாள் சோனா .

"அவனுக்கு என்ன வந்தது ?"என்றான் சுமன்

"அவன் அந்த நாயை லவ் செய்யறானாம் .......அவளை தான் ,அந்த மஹாராணி சம்மதித்தால் அவனின் சாம்ராஜ்ய பட்டத்தரசியாக ஆக்கி கொள்வானாம் ......எல்லா நாயும் அவ கிட்டேயே போய் விழுந்துங்க ....அப்படி எண்ணத்தை காட்டி மயக்கினாளோ ......எவனை கேட்டாலும் மதுரா ,மதுரா என்று அவ பெயரை ஜெபிக்கிறானுங்க ....விட்டா கோயில் காட்டுவானுங்க போல் இருக்கு ............அவ செத்தாலும் சாகணுமே ஒழிய எவனுக்கும் அவ கிடைக்க கூடாது ......சாகரத்திற்கு முன் என் பிறந்தோம் என்று அவள் கதறி துடிக்கணும் ..... அதை வீடியோ எடுத்து மீடியாவில் போடணும் ....அதான் எவ டிரஸ் எங்கே அவிழும் ,எவன் எவ கூட இருக்கான்னு இதை எல்லாம் பார்ப்பதையும் ,கமெண்ட் போடுவதையும் வேலையாக வைத்து இருக்கானுகளே ............சூர்யா மதுராவை கல்யாணம் செய்யவே கூடாது .முடிந்தால் இவளையும் மற்ற பெண்களை போல் CONTAINERரில் அடைத்து வெளி நாட்டு PROSTITUTION மாபியாவிடம் விற்று விடு ......நம்மை எதிர்த்த யாரும் இனி நிம்மதியாகவே இருக்க கூடாது ......"என்றாள் சோனா வெறி பிடித்தவளாய் .

"செய்யலாம் ...........செய்கிறேன் ................நீ இங்கே இப்போ வா ..........."என்ற சுமனின் விகார இளிப்பு இவள் முகத்தில் பிரதிபலித்தது .
தன்னை சுற்றி பின்ன படும் சதி வலை அறியாதவளாய் மதுரா தன் அறையில் யோசனையில் இருக்க ,அவளை காப்பாற்ற அரணாக நிற்கும் விஜய் ,சூர்யா இவர்களின் ஆட்களும் கூட மதுராவிற்கு சுமன் தப்பித்து மீண்டு வந்து விட்டதையோ ,சுமன் சோனா சேர்ந்து செக் வைத்து இருக்கிறார்கள் என்று அறியவில்லை .

விஜய் மதுராவின் வார்த்தைகளை ஏற்க முடியாதவனாய் வழக்கம் போல் இருத்தலைகொல்லியாய் தவித்து கொண்டு இருக்க ,உத்தம் மதுரா வரும் விஷயத்தை கேள்வி பட்டதில் இருந்து சூர்யா சிறகு இல்லாமல் வானத்தில் பறந்து கொண்டு இருந்தான் .கை விட்டு போன சுவர்க்கம் மீண்டும் கையில் கிடைக்க போவதை நினைத்து நினைத்து, காதலின் பைத்தியக்கார சங்கத்தில் விஜய்க்கு துணையாக சேர்ந்து கொண்டு இருந்தான் .

மற்றொரு புறம் மகளை/சகோதரியை பற்றிய கவலையில் பவானி,கார்த்திக் ,ரகு.இன்னொரு புறம் மகனின்/பேரனின் வாழ்வு குறித்த கவலையில் சேது ,கனகா,மரகதம்,தோழியின் நிலை பற்றிய வருத்தத்தில் சுபா ,பாலாஜி என்று அந்த நாளின் மதிய பொழுது ஒரு சிலருக்கு சந்தோஷத்தையும் ,ஒரு சிலருக்கு வெறியையும் ,ஒரு சிலருக்கு துக்கத்தையும் கொடுத்து கொண்டு இருந்தது .

பவானியின் நிலையோ விவரிப்புக்கு அப்பாற்பட்டதாக இருந்தது .மகளின் புத்திசாலித்தனம் ,எதையும் யோசித்து அலட்டிக்கொள்ளாமல் செய்து முடிக்கும் ஸ்டைல் ,எதற்கும் கலங்காத குணம் அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்றாலும் ,மகளினை சூழ்ந்து இருக்கும் ஆபத்தினை கண்டு அவரால் அஞ்சாமல் இருக்க முடியவில்லை .மகளை காக்க இத்தனை ஆட்கள் இருந்தாலும் ,அதில் தலைமை ஏற்று இருக்கும் விஜய் ,சூர்யாவை பற்றி மகளின் வார்த்தைகளால் எழுந்த குழப்பம் வேறு அவரை துளைத்து கொண்டு இருந்தது .

View attachment 123123.jpg
மதுரா காரணம் இல்லாமல் எதையும் பேசவில்லை என்பதையும் ,விஜய் ,சூர்யா இருவரும் தன்னை விரும்புகிறார்கள் என்பதை நாசுக்காக கோடிட்டு காட்டி விட்டாள் என்று அந்த தாய் மனம் உடனே புரிந்து கொண்டது .ஆனால் புரிந்தது தான் அவர்க்கு ஏற்ப்பாக இல்லை .அந்த இருவரையும் அவர் மனம் மகளுக்கு ஏற்ற மாப்பிள்ளையாக ஏற்கவில்லை .இருவருமே திருமணம் ஆனவர்கள் என்ற ஒன்றே அவரை நிலைகுலைய வைத்தது .இருவரில் யாரை மகள் மணந்தாலும் அவளுக்கு கிடைக்க போகும் பெயர் "இரண்டாம் தாரம் "என்பதே .ஆண்கள் எத்தனை திருமணம் செய்தாலும் சமுதாயத்தில் இது போன்ற பட்ட பெயர்கள் எல்லாம் அவர்களுக்கு கிடைப்பது இல்லை .

மகள் சொல்லியது போல் "BEGGARS CANT BE CHOOSERS "என்ற நிலை தான் அவருக்கு .மகளை காப்பாற்ற யார் முன் வந்தாலும் இருகை கொண்டு அவர் வரவேற்க தயாராக இருக்க வேண்டிய நிலையில் தான் இருந்தார் .ஆனால் அதில் "கண்டிஷன்ஸ் அப்ளை " என்பதை தான் அவரால் ஏற்க முடியவில்லை .ஆனால பெண்ணின் மானத்தை இந்த இருவரின் துணை இல்லாமல் காப்பாற்ற முடியாது என்ற நிதர்சனமும் அவருக்கு புரிந்தே இருந்தது .எத்தனையோ பெண்களின் பெற்றோருக்கு இப்படி தங்கள் பெண்ணின் மானத்தை காப்பாற்ற வாய்ப்பு கிடைக்காமல் போனதையும் ,அதனால் உயிர் பலிகள் ஏற்பட்டு ஒட்டுமொத்த குடும்பமே சிதறி உருக்குலைந்து போவதையும் நினைக்கமால் இருக்க முடியவில்லை .

இந்த இருவரை தவிர்த்து மகளுக்காக கடைசி வரை போராடும் வல்லமை ,பணம் ,ஆள் பலம் வேறு யாருக்காவது உண்டு என்றால் அவருக்கு தெரிந்து இல்லை என்று தான் சொல்வார் .ஏன் கார்த்திக் மதுராவை மணந்தாலும் கூட இவர்களின் உதவி இல்லாமல் காப்பாற்ற முடியாது .அதற்காக எல்லாம் திருமணம் ஆனா இவர்களை எல்லாம் மாப்பிள்ளையாக ஏற்க முடியுமா என்ன ???

அவருக்கு சாதகமாக இருந்த ஒரே விஷயம் இருவரும் மதுராவின் சம்மதம் இல்லாமல் அவளை கரம் பிடிக்க முயல மாட்டார்கள் என்பதே .பெண்ணை காப்பாற்றுகிறார்கள் என்பதற்காக எல்லாம் திருமணம் ஆனவர்களுக்கு பெண்ணை கட்டி கொடுக்க இது என்ன சினிமாவா ,இல்லை காதல் கதையா ???மகளுமே இதை பைத்தியக்காரத்தனம் என்று தான் சொல்வாள் .காப்பாற்றினால் நன்றி சொல்ல முடியும் அதற்காக எல்லாம் பெண்ணை தூக்கி கொடுத்து விட முடியுமா என்ன ?

View attachment IMG_8827_1.jpg

PENANCE WILL CONTINUE......
 
Status
Not open for further replies.
Top