நான் சத்யா வாணி... இங்க சைட் ல தியா
பிறந்தது காஞ்சிபுரம், வளர்ந்தது இப்போ வரை வசித்து கொண்டு இருப்பது திருவண்ணாமலை மாவட்டம்...
காலேஜ் லைப்ரரி ல இருந்து பொன்னியின் செல்வன் , பார்த்திபன் கனவு படித்தேன்...
2008 மார்ச் சன் டிவி ல டெலிகாஸ்ட் ஆன ராமாயணம் ரொம்ப பிடிச்சி போய் ராமாயணம் , மஹாபாரதம், ராஜாஜி விதுர நீதி எல்லாம் படித்தேன்....
2011 ல ஒரு போட்டிக்கு குட்டி நாவல் எழுதினேன் அதை, முதல் சுற்றிலேயே ரிஜெக்ட் பண்ணிட்டாங்க அந்த நாவல் பேரு 'விடியல்'
m .sc முடிச்சிட்டு வீட்ல வெட்டி ஆஃபீஸ்ர் ஆ இருக்கும் போது என்னோட தோழி தாமரைசெல்வி சொல்லி 2016 ஜூன் ல இருந்து நாவல் படிக்க ஆரம்பித்தேன் நான் பிரஸ்ட் படிச்ச முதல் நாவல் ரமணிச்சந்திரன் மேம் அமுதம் விளையும் ஒரு நாளைக்கு ஒரு ஏபி என்று கிட்ட தட்ட ஒரு மாதம் அதை படித்தேன்...
நாவல் மீது மிகுந்த ஈடுபாடு வந்து lucky novel collection list ல இருக்க ஒவ்வொரு எழுத்தாளரா படிக்க ஆரம்பித்தேன்...
இளந்தளிர் ல ஸ்ரீ மேம் நாவல் ''என்னுள் உறையும் உயிர் நீ'' தான் நான் முதலில் படித்தது, அதில் இருக்கும் ஆரன் மயூரி யை ரொம்ப பிடிச்சி போய், அந்த நாவல் download பண்ணி ஒரு 20 தடவை படிச்சி இருப்பேன்...
அடுத்தடுத்த நாவல் தேடி ஸ்ரீ மேம் 18 நாவல் படிச்சிச்சேன், அவங்க எழுத்து மனதுக்கு ரொம்ப நெருக்கமா இருந்ததால் தேடல் தொடங்கியது...
ஸ்ரீ மேம் சைட் கண்டு பிடிச்சி செப்டம்பர் 22 2017 லாகின் பண்ணேன் அப்போ, காணும் யாவிலும் நீயே 24 ஆவது எபி போய்கிட்டு இருந்தது, கமெண்ட் போட்டு அப்புறம் இரண்டு வரியில் கவிதை என்ற பெயரில் கிறுக்க, வாவ் , செம்ம , நைஸ் தியா என்று சிலர் பாராட்ட, ராஜி ஜீஜி, திஷி சேச்சி, ருத்ரா அக்கா ஸ்டோரி எல்லாத்துக்கும் கமெண்ட் யை கவிதையா எழுத அவங்க என்ன பாராட்டி ஊக்கு விக்க...
ஆறு வருடமா தூங்கிட்டு இருந்த பூனை தொபுக்கடீர் னு எழுந்து விட்டது ஸ்ரீ மேம் 'நி(ழல்)ஜம் உயிர் கொ(ல்)ள்' கதை தலைப்பை பார்த்து...
"நா(ன்)ம் வாழ உன்னை வே(தீ)ண்டினேன்" ஒரு தலைப்பை சொல்லி ஒரு 4 வரியில் ஸ்ரீ மேம் க்கு முன்னோட்டம் அனுப்பினேன், திஷி சேச்சி, ராஜி ஜீஜி , ருத்ரா அக்கா, செல்வி அக்கா ,
வடிவேல் அண்ணா இவங்க எல்லோரோட வழிநடத்துதலில்...
நானும் கமெண்ட் கதை என்று இருக்கும் போது தான் எங்க A A K R குரூப் உருவாச்சி..
ஸ்ரீ மேம் சைட் ல கவிதை தான் எனக்கு ஒரு அடையாளத்தையும் நிறைய தோழிகளை கொடுத்தது ....
முதல் கதை நிறைவடையும் முன்னாடி மண்டைக்குள்ள இன்னும் ரெண்டு எலி ஓட அதையும் பிடிச்சி ஸ்ரீ மேம் கிட்ட சரன்டர் பண்ணிட்டேன்...
உரமும் உயிரும் உழவே
தவறவிட்ட வார்த்தைகள்
இது எல்லாம் பார்த்து நான் புள்ளி விவர புலி என்று நினைக்காதீங்க, இவை என்னோட மனசுல ஆழமா பதிஞ்சதுல தேதி ஓட சொன்னேன்..
முதல் கதை இன்னும் ஒரு பதிவில் நிறைவடைந்து விடும்
இரண்டாவது கதை கால் கிணறு தான் தாண்டி இருக்கு
மூன்றாவது கதை இன்னும் தாண்ட ஆரம்பிக்களை