All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Introduce Yourself And Make Friends

Lakshmi perumal

Bronze Winner
ஹாய் நட்பூஸ் நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே நெல்லை சீமையில் ஒரு கடை கோடி கிராமத்தில் தற்போது வசிப்பது சிங்காரச்சென்னை,வாசிப்பு எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என் வாசிப்பு அம்மாவின் சீதனம் என்றே சொல்வேன், அதேபோல் மெல்லிசை பாடல்களை மிகவும் ரசித்து கேட்பேன், எழுத்தாளர் அனு அம்மாவின்தீவிர ரசிகை நான் ஓரளவு அவர்களின் எல்லா நாவலுமே படித்திருக்கிறேன்.
 
என் பெயர் அருணாதேவி.
நான் தற்சமயம் சென்னையில் வசித்து வருகிறேன்.
சென்னை தலைமைச்செயலகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வருகிறேன்.
எனது சொந்த ஊர் கடலூர்.
எனக்கு திருமணமாகி ஒரு மகன் நான்காம் வகுப்பு படித்து கொண்டுள்ளான்
எனக்கு சிறு வயதிலேயே கதை படிக்கும் ஆர்வத்தையும் பழக்கத்தையும் ஏற்படுத்தியவர் என் தந்தை.
பல்வேறு ஆசிரியர்களின் நாவல்களை படித்துள்ளேன். தங்களது இணையத்தில் உள்ள அனைத்து நாவலாசிரியர்களின் நாவல்களையும் படித்து வருகின்றேன். அனைவரும் மிகவும் அருமையாக எழுதுகிறீர்கள். உண்மையில் தினமும் பலமுறை படிப்பேன்.
 

Sarasmathu1428

New member
Con
ஹாய் பேபிஸ்

என் பெயர், தீபா சுந்தர்..
எழுத்துலகத்தில் நான் தீபஷ்வினி...

என் ஊர் திருநெல்வேலி.. ஆனா
நான் பிறந்து வளர்ந்தது கல்யாணம் முடிந்தது எல்லாம் மும்பையில்

நாவல் படிக்க ரொம்ப பிடிக்கும்.. நிறைய நாவல்கள் படிச்சிருக்கேன்..

எழுத ஆசை வந்தது, யார் கிட்ட ஹெல்ப் கேட்க என்று முழிச்சிட்டு இருந்தேன்.


அப்போதான் ஸ்ரீமேம் "சப்தமில்லா ஸ்வரங்கள்" நாவல் போய்ட்டு இருந்து...

அந்த நாவலுக்கு fbயில் கமெண்ட்ஸ் பண்ணும் போது தான்,
என் டார்லி மோகனா கார்த்திக், ப்ரியா ராஜன் எனக்கு அறிமுகம் கிடைத்தது, அவங்க கிட்ட என் ஆசையை, கனவை சொன்னேன்,

எழுத சொன்னாங்க, ஹி ஹி ரெண்டு சோதனை எலி கிடைச்சா விடுவேனா எழுதிட்டோம்ல... அதுதான்
"உன் சுவாசத்தில் நான்"


இப்போ நான்கு கதை முடிச்சிட்டேன், மூன்று நாவல்கள் வெளி வந்து விட்டது..

இப்போ நானும் ஒரு எழுத்தாளர் ஆகிட்டேனுங்கோ...


உங்கள்
தீபஷ்வினி???
congratulations sis
 

Sarasmathu1428

New member
தோழிகள் அனைவர்க்கும் வணக்கம்.

நான் ஜோஸ்பின் வான்மதி. என்னை வெளியில் யாருக்கும் வான்மதி என்றால் தெரியாது. இங்கே நம் தளத்தில் வான்மதி என்றால் மட்டுமே தெரியும். நான் வசிப்பது முத்துநகர். நான் என் பதினைந்து வயதில் கதை படிக்க ஆரம்பித்தேன். புத்தக பேய் என்று தான் வீட்டில் கூப்பிடுவார்கள். அப்படி படிப்பேன். கதை, கட்டுரை, கவிதை எதையும் விட்டு வைப்பதாய் இல்லை. தனியாக இருந்தால் இசையோடு தான் இருப்பேன். நிறைய பாடல்கள் கேட்பேன். பாடல் கேட்டாலும், கதை படிக்க ஆரம்பித்தாலும் பூமிக்குள் புதைந்தாலும் தெரியாது. அப்படி ஒரு பைத்தியம்.

திகில் நாவல்கள் நிறைய படிப்பேன். இப்பொது ஸ்ரீஉடைய நாவல்கள் படிக்க ஆரம்பித்த பிறகு ரொமான்டிக் நாவல்கள் அதிகம் படிக்கிறேன். ஸ்ரீ மட்டுமே அதற்க்கு முழு பொறுப்பு. :p

இங்கே இந்த தளத்தில் நிறைய தோழிகள் அறிமுகம் கிடைத்தது. இது எனக்கான தனி உலகம். நன்றி ஸ்ரீ.
So sweet of you I'm also like you
 
Top