எந்த அணிக்கும் ஆதரவாக பேசவில்லை.. இது எனது பொதுவான கருத்து..
பெற்றோர்களின் வளர்ப்பிலேயே குழந்தைகள் எதிர்காலம் நல்லதாகவோ கெட்டதாகவோ அமைகிறது. நம் பழக்கவழக்கங்கள் குணங்களையே குழந்தைகள் பார்த்து வளர்கின்றனர். அவர்களுக்கு நாமே ஆசான், உலகம்..!
வெளியுலகத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ள ஆர்வம் பிறக்கும் வயதில் நாம் வழிநடத்தி பின் அவர்களை முன்னே விட்டு நாம் பின்னே இருக்க வேண்டும்.
அது நமக்கு கவனம்..! அவர்களுக்கு அது கண்காணிப்பாக இருக்க கூடாது. பின்புலமாக தெரிய வேண்டும். அடக்குவதாக தெரிந்தால் நம்மைவிட்டு வெகுதூரம் முன்னே சென்றுவிடுவார்கள். நம்மால் பிடிக்க முடியாது.
நாம் நமது குழந்தையை வெளியுலகத்திற்கு விடவில்லை, ஒரு சமூக உறுப்பினரை விடுகிறோம். அதனால் அவள்(ன்) மற்றவர்களால் நல்ல சமூகமாக பார்க்கும்படி செய்ய வேண்டும். பிறர் போற்ற வாழ வேண்டும் என்ற கருத்தைத் திணிக்க கூடாது, போதிக்க வேண்டும்.
பெருமைக்காக சொல்லவில்லை.. மேலும் எனது கருத்தை நான் எழுதிய கதையின் மூலம் சொல்ல விரும்புகிறேன்.
"உருகும் இதயம் உனைத் தேடி..!" எத்தனை பேர் படித்திருப்பீங்க என்றுத் தெரியவில்லை.. அதில் இந்த கருத்தைப் பற்றி தான் சொல்லி்ருப்பேன். (படித்திராதவர்கள் குழம்ப வேண்டாம்..
skip செய்திருங்க..)
அசோக் பெற்றோர் அவனை சரியாக புரிந்துக் கொண்டிருக்கவில்லை. அவன் பைக் சாகசம் செய்த பொழுது, அவனது திறமையைப் பாராட்டி ஆனால் அதில் உள்ள ஆபத்தை எடுத்து சொல்லியிருக்க வேண்டும். விளையாட்டு பொருட்களை பிரித்து வைத்திருக்கும் பொழுது, விசாரித்திருக்க வேண்டும். பள்ளியில் ஓழுங்கின நடவடிக்கை எடுத்த பொழுது அசோக் தரப்பு நியாயத்தைக் கேட்டிருக்க வேண்டும். ஆனால் குழந்தையை கண்டிப்பும், கவனமாகவும் பார்த்துக் கொள்வதாய் நினைத்து தவறுச் செய்திருப்பார்கள்.. அதனால் விளைந்த விளைவு கெட்ட சமூகத்தினுடன் பழக்கம். அதாவது சரியான பெற்றோரின் கவனிப்பு இல்லாமல் கெட்ட எண்ணங்கள் கொண்ட கூடா நட்பான வருணுடன் பழக்கம் ஏற்பட்டது. வருணின் பாராட்டுதல்கள் அவனை தீய வழிக்கு அழைத்துச் சென்றது.
ஆனாலும் இவ்வனைத்துக்கு பின்பும் அவனது நல்ல பண்பு ஆழ்மனதில் இருந்திருக்கிறது என்றால் அதற்கும் காரணம் அவனது பெற்றோர்களின் பழக்கவழக்கம் மற்றும் குணங்களே..! அது வருணுக்கு கிடைக்காதது அவனது துரதிர்ஷ்டம்..!
சோ பெற்றோர்களின் கையில் தான் எல்லாம் இருக்கிிறது
ரொம்ப ரம்பம் போட்டிருந்தால்.. மீ எஸ்கேப்..