இன்றைய பெற்றோருக்கு தான் கடமையையும் பொறுப்பும் அதிகம் இருக்கிறது.
சமுகம் என்பது நாம் தான் நம்மால் இந்த சமூகம் பாதிக்க பட கூடாது.
நல்லதோ கெட்டதோ குழந்தைகள் அதை வீட்டிற்கு வெளியே தெரிந்து கொள்ளுவது தான் ஆபத்தை விளைவிக்கும்.
அதனால் அது சொல்லித் தரும் இடம் முதலில் வருவது வீடு தான்.....
அவங்க நம்மிடம் கேட்கும் எந்த அபத்தமான கேள்வியாக இருந்தாலும் நாம் பொறுமையாக அதை பற்றிய தெளிவை அவங்களுக்கு புரிய வைத்தால் போதும்.
அதே போல் நல்ல விஷயங்களை கடைபிடிக்க வலியுறுத்த வேண்டும்.
குழந்தைகள் தங்கள் கடமையை செய்ய ஊக்கிவிக்க வேண்டும் அல்லாது இதை செய்தால் இது வாங்கி தருவேன் என அவர்கள் கடமையை முடிக்க நாமே பேரம் பேசுதல் கூடாது.
அதே மாதிரி பணிந்து போக கற்றுக் கொடுக்க வேண்டும்.
பெரியவர் சிறியவர் என அனைவரிடமும் அன்பாக இருக்க நாம் நம் உறவுகளை பலப்படுத்த வேண்டும்.
இன்றைய குழந்தை என்றுமே நம்மை விட அறிவும் சிந்திக்கும் திறனும் அதிகம் எனவே அவர்களை பேச விட்டு அவர்களுடன் நட்பாக இருந்தாலே அவர்கள் தவறினை நாம் அடையாள படுத்தி திருத்த முடியும்.
அவர்கள் அதிகம் இருக்கும் நட்பு வட்டத்தில் நாமும் நட்பாக தொடரலாம் அது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்.
என்றென்றால் நம்மை விட வயது சிறிய பிள்ளைகளிடம் விளையாட்டாக பேசும் போது சில நேரங்களில் நமக்கே என்னடா எனத் தோன்றும் ஆனால் பிள்ளைகளின் எதிர்காலம் என வரும் போது நாம ரிஸ்க் எடுக்க தயங்க மாட்டோம் அதே போல் அந்த பிள்ளைகளும் நம்மிடம் நெருங்க அவர்களுக்கு நம்மால் பாதுகாப்பு தர முடியும்.
இப்போ இருக்கும் அதிவேக உலகில் தீமைகள் நம்மை பல வழிகளில் வந்தடையும் நம்மை சுற்றியுள்ள பல இடங்களில் இருக்கும் தவறுகள் எல்லாமே நாம் சரி செய்ய முடியாது இப்படி பட்ட உலகிற்கு கால் பதிக்கும் நம் பிள்ளைகளிடம் எது செய்யலாம் எது செய்யக்கூடாது என்பதும் நாம் சொல்லி புரிய வைக்க வேண்டும்.
இது தான் சரி என்று தினிக்காமல் நீ செய்தது சரியா,செய்யவிருக்கும் செயல் சரிதானா என கேள்வி கேட்கும் போது அவர்கள் கண்டிப்பாக சிந்திப்பார்கள்.
இது செய் என்பதை விட இது செய்தால் நல்லா இருக்கும் என்றும் நல்லா யோசிச்சு முடிவு செய் எனவும் அறிவுரை இல்லாமல் ஐடியா தரலாம். "அறிவுரை தரவங்களை விட ஐடியா தரவங்களத்தான் பிள்ளைகளுக்கு பிடிக்கும்"
இதெல்லாம் சொல்ல நாம யோசித்தோம் என்றால் இந்த சமூகம் அதை யோசிக்காமல் கற்றுக் கொடுக்கும் ஆனால் அது நன்மையாக இருக்குமா என்பது தான் கேள்விக்குறி.
அதே போல் படிப்பு என்பது மார்க் என்று சொல்லாமல் அது உன் தகுதி மற்றும் உன் திறமை அறிவு இப்படி எது சொன்னால் அவங்க கவணம் அதில் திரும்புமோ அந்த டைமென்சனில் சொல்லி புரிய வைக்கலாம்.....
இது எனக்கு நடந்த சம்பவத்தை சொல்லி முடிக்கிறேன்"நானும் என் பையனும் அவனுக்கு கண் டெஸ்ட் ஹாஸ்பிடல் சென்று அங்கே மருத்துவரை காண காத்திருக்கும் போது என் இடப்பக்கம் நிறைமாத கற்பிணி பெண் என் வலப்பக்கம் இருபத்தி இரண்டு அல்லத மூனோ நாலோ வயதுடைய இளைஞனும் இருக்க இவன் ரொம்ப நேரமாக அந்த பெண்ணை பார்திருந்தான் கொஞ்ச நேரத்தில் என் ஆதிக்கு வந்ததே ஒரு டவுட்"அம்மா குழந்தை எப்படி பிறக்கும் "என கேட்க அடுத்திருந்தவனோஅதிர்ந்து ஆதியை பார்க்க நான் அவனை திட்டுவேன் என்ற மனநிலையில் என்னை யும் பார்க்க எனக்கு தெளிவாக புரிந்தது இவனுக்கு ஏன் இந்த டவுட் என்று
நான் சிசேரியன் முறையை மட்டும் கொஞ்சம் அவனுக்கு புரியும் படி சொல்ல ஆதியின் கண்ணில் ஒரு வேதனை சிறு மௌனம் பின் நான் பிறக்கும் போது உங்களுக்கும் வலித்ததா என்ற அவன் வார்த்தையில் வலியை என்னால் உணர்வும் முடிந்தது.
இப்படி அவன் குழந்தை பிறப்பின் இன்றைய சிசேரியன் முறை தெரிந்து கொண்டான் அதே நேரம் தாயின் வலியும் அவன் உணர்நது கொண்டான்.
சட்டென்று எனக்கு அந்த இளைஞன் நினைவு வந்து அவனை பார்க்கும் போது அவன் கண்ணில் சிறு புன்னகையுடன் அவன் வேலை செய்ய தொடங்கிட்டான் அது தாங்க மொபைல் நோண்டறது.
இந்த கேள்விக்கு நான் பதில் மலுப்பி இது தப்பு இப்படி கேட்க கூடாது என பல மாதிரி அவனை சமாளிச்சுருக்கலாம்.
ஆனால் இந்த அவன் டவுட் வேற யாரிடம் போய் கேட்டாலும் அது அவனுக்கு தான் கஷ்டமா போகும் கரைக்டான எந்த பதிலும் கிடைக்காமல் தேவையில்லாத பல தகவல்களை தெரிஞ்சுக்குவான் நாம என்ன தெரிஞ்சக்கூடாது என்று மறைக்கறோமோ அது தான் அவங்க முதலில் தெரியும் வாய்ப்பை இந்த சமூகம் மீடியா சினிமா இப்படி எல்லாமே கத்துக் கொடுக்கும்.
நான் சொன்னது டிபைட்டா என்று எனக்கு தெரியலை எனக்கு தெரிந்த சில விஷயங்கள் இஙகே நான் பகிர்ந்து கொண்டேன் என்னிடம் இந்த பகுதியில் வந்து கலந்து கொள்ள கேட்ட என் பிரண்ட்ஸ் எல்லோருக்கும் ரொம்ப நன்றி.
ஸ்ரீ மா உங்களுக்கு தான் என் லவ் அண்ட் லவ் எல்லாமே
இந்த மாதிரி ஒரு தளம் என் வீடு மாதிரி எனக்கு தோனுன எல்லாம் சொல்ல எனக்கு ஒரு மேடை நன்றி என்ற வார்த்தை ரொம்ப சிறியது தான் ஐ லவ் யூ ஸ்ரீ மா