Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எனை மறந்து நான் ஓடிய நாட்களில்,
நிற்க வைத்து,
நிதானிக்க வைத்து,
நித்தமும் எனை ஆட்சி செய்த
நெஞ்சத்தின் வர்ணம் அவள் !!
தொடக்கமே உங்கள் அற்புதமான கவிதை வரிகளுடன் அசத்தி விட்டீர்கள்விஷ்ணுவின் மனதினை இதை விட சிறப்பாக உணர்த்திவிட முடியுமா
பரபரப்பும் இறுக்கமுமாக கழியும் அவன் நாட்களில் எரிச்சலுடன் அவன் ஏற்கும் அந்த அழைப்பு, அடுத்த நொடியே அவன் மனநிலையை முற்றிலும் பனிச்சாரலாய் குளிர்வித்து விடுகிறது. அவளின் அந்த ஒற்றை அழைப்பு அவன் மனஇறுக்கத்தை அப்படியே தளர்த்தி , கண்களிலும் மனதிலும் மலர்ச்சியை கொண்டு வந்துவிடுகிறதுஅதேபோல் அவளின் ஒற்றை கேள்வி அவன் மனதை அவனுக்கு படம் பிடித்து காட்டிவிடுகிறது அவளும் தன் வாழ்வில் முக்கியமான முடிவை எடுக்க அவனிடம் தான் ஆலோசனை கேட்கிறாள். வள்ளியும் ஈஸ்வரும் அவளுக்கு நெருங்கிய நண்பர்கள் தான் என்றாலும் அந்த நேரம் அவள் மனம் விஷ்ணுவை தான் தேடியிருக்கிறது. தன் மனதை உணர்ந்து கொண்ட விஷ்ணுவிற்கு ஈஸ்வர் மேல் பொறாமை உணர்வு எழுகிறது. அது வார்த்தையில் அழுத்தத்தை கொடுத்து அவன் உரிமையை நிலைநிறுத்த துடிக்கிறது.
'இத்தனை அழுத்தி அழைத்தால் பெயர் இதழோடு மட்டுமல்ல மனோதோடும் பதியும் '
அருமை, அருமை
நிகழ்காலத்தின் வேதனைக்கு கடந்த காலத்து இனிமையான நினைவுகள் தான் ஆறுதல் தருகிறது.
கடந்த கால நினைவலைகளை அழகான வார்த்தைகளால் கோர்த்து அவர்கள் உணர்வுகளை மிக மிக அழகாக, இனிமையான ஒரு பகுதியாய் கொடுத்திருக்கீங்க ஸ்ரீ சிஸ்
கடந்து சென்ற நிமிடங்களில் அவன் உணர்வுகள் புரியாவிடிலும் அதன்பின் அவனை நினைத்து நினைத்தே அவன் உணர்வுகளை புரிந்துகொண்டு வேதனை படுகிறாள். அவனின் இறுக்கமான புகைப்படம் அவள் மனதை கனக்க செய்கிறது
அட ஈஸ்வரா அவள் மனம் முழுதும் விஷ்ணுவின் எண்ணங்கள் ஆக்கிரமித்திருக்க அவள் எங்கே உன்னை தேட போகிறாள் விஷ்ணுவை குறித்து ஈஷ்வரிடமிருந்து மறைப்பதே அவளை அவனிடமிருந்து விலக வைக்கிறது.
' எவளோ ஒருத்தி, என் வாழ்க்கையை அழிச்சு வாழ்ந்துட்டு போனா, இவன் என் கஜா வளர்த்த பையன் வாழ்ந்துட்டு போறான் '
ராணி அம்மா, ராணி தான் என ஒவ்வொரு முறையும் நிரூபிக்கிறார்
அவரின் இந்த பேச்சை கேட்டு விரைவில் அனைத்தும் சரி ஆகிவிடும் என வர்ணா நினைத்து கொண்டிருக்கிறாள், பாவம் அவ்வளவு எளிதாக அவரின் செல்ல பேத்தியை தாரைவார்த்து கொடுத்துவிடுவாரா?
ரம்யா sis
//எனை மறந்து நான் ஓடிய நாட்களில்,
நிற்க வைத்து,
நிதானிக்க வைத்து,
நித்தமும் எனை ஆட்சி செய்த
நெஞ்சத்தின் வர்ணம் அவள் !!
தொடக்கமே உங்கள் அற்புதமான கவிதை வரிகளுடன் அசத்தி விட்டீர்கள்விஷ்ணுவின் மனதினை இதை விட சிறப்பாக உணர்த்திவிட முடியுமா //
உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி ரம்யா sis,athai Vida விஷ்ணுவின் உணர்வுகள் உங்களை சேர்ந்ததில் இன்னுமின்னும் மகிழ்ச்சி
//பரபரப்பும் இறுக்கமுமாக கழியும் அவன் நாட்களில் எரிச்சலுடன் அவன் ஏற்கும் அந்த அழைப்பு, அடுத்த நொடியே அவன் மனநிலையை முற்றிலும் பனிச்சாரலாய் குளிர்வித்து விடுகிறது. //
ஆமா ரம்யா sis,வாழ்க்கையில் அடுத்து என்ன என்ற கேள்வி வரும் வயது அது! அந்த வயதில் மிக ஆழமாக ஒரு உறவு பதிகிறது என்றால் அந்த நொடி இன்பமாக தானே இருக்கும்.
//அவளின் அந்த ஒற்றை அழைப்பு அவன் மனஇறுக்கத்தை அப்படியே தளர்த்தி , கண்களிலும் மனதிலும் மலர்ச்சியை கொண்டு வந்துவிடுகிறது//
அதே ரம்யா sis
//அதேபோல் அவளின் ஒற்றை கேள்வி அவன் மனதை அவனுக்கு படம் பிடித்து காட்டிவிடுகிறது அவளும் தன் வாழ்வில் முக்கியமான முடிவை எடுக்க அவனிடம் தான் ஆலோசனை கேட்கிறாள்.//
ஆமா ,நமக்குள்ள இவங்ககிட்ட கேட்டா தான் சரியா இருக்கும்னு ஒரு எண்ணம் எல்லாருமக்கும் இருக்கும்.அப்படியொரு எண்ணம் தான் விஷ்ணு மேல் அவளுக்கு.
// வள்ளியும் ஈஸ்வரும் அவளுக்கு நெருங்கிய நண்பர்கள் தான் என்றாலும் அந்த நேரம் அவள் மனம் விஷ்ணுவை தான் தேடியிருக்கிறது. //
எஸ்..இது ஈஷ்வருக்கு தெரிஞ்சா அவன் தான் பாவம்
//தன் மனதை உணர்ந்து கொண்ட விஷ்ணுவிற்கு ஈஸ்வர் மேல் பொறாமை உணர்வு எழுகிறது. அது வார்த்தையில் அழுத்தத்தை கொடுத்து அவன் உரிமையை நிலைநிறுத்த துடிக்கிறது.//
Possessive made or started the bond stronger.
//'இத்தனை அழுத்தி அழைத்தால் பெயர் இதழோடு மட்டுமல்ல மனோதோடும் பதியும் '
அருமை, அருமை //
//நிகழ்காலத்தின் வேதனைக்கு கடந்த காலத்து இனிமையான நினைவுகள் தான் ஆறுதல் தருகிறது.
கடந்த கால நினைவலைகளை அழகான வார்த்தைகளால் கோர்த்து அவர்கள் உணர்வுகளை மிக மிக அழகாக, இனிமையான ஒரு பகுதியாய் கொடுத்திருக்கீங்க ஸ்ரீ சிஸ் //
ரொம்ப சந்தோசமா இருக்கு ரம்யா sis.evalo எழுதினாலும் உணர்ந்து படித்தால் மட்டுமே அவ்வரிகள் உயிர் பெறும்.நீங்க எல்லாரும் தான் என் எழுத்துக்கு உயிர் தரீங்க.நன்றி
//கடந்து சென்ற நிமிடங்களில் அவன் உணர்வுகள் புரியாவிடிலும் அதன்பின் அவனை நினைத்து நினைத்தே அவன் உணர்வுகளை புரிந்துகொண்டு வேதனை படுகிறாள். அவனின் இறுக்கமான புகைப்படம் அவள் மனதை கனக்க செய்கிறது //
எஸ்..வேணும் ,ஆனா வேண்டாம்.அவளும் பாவம் தான்.ரெண்டு பக்கமும் பார்க்கணுமல..
//அட ஈஸ்வரா அவள் மனம் முழுதும் விஷ்ணுவின் எண்ணங்கள் ஆக்கிரமித்திருக்க அவள் எங்கே உன்னை தேட போகிறாள் விஷ்ணுவை குறித்து ஈஷ்வரிடமிருந்து மறைப்பதே அவளை அவனிடமிருந்து விலக வைக்கிறது. //
மிக சரி..இவளுக்கு அவனிடம் சொல்ல தைரியம் இல்லை.மத்தபடி ஈஷ்வர் மீதான அவளது அன்பு மாற போவதில்லை.அவள் மறைக்கும் விஷயம் தான் எட்டி நிற்க வைக்கிறது.
//' எவளோ ஒருத்தி, என் வாழ்க்கையை அழிச்சு வாழ்ந்துட்டு போனா, இவன் என் கஜா வளர்த்த பையன் வாழ்ந்துட்டு போறான் '
ராணி அம்மா, ராணி தான் என ஒவ்வொரு முறையும் நிரூபிக்கிறார் //
ராணி
//அவரின் இந்த பேச்சை கேட்டு விரைவில் அனைத்தும் சரி ஆகிவிடும் என வர்ணா நினைத்து கொண்டிருக்கிறாள், பாவம் அவ்வளவு எளிதாக அவரின் செல்ல பேத்தியை தாரைவார்த்து கொடுத்துவிடுவாரா? //
அதானே ! என்ன ஒரு நம்பிக்கை.நமக்கு தேவையான சமயத்தில் தேவையான வகையில் தான் மற்றவரின் பேச்சை எடுத்து கொள்ளுமாம் மனது.அப்படியொரு நிலையில் தான் வர்ணா.காணலாம் இனி என்ன என ?
மிக்க நன்றி ரம்யா sis
தெரிவான, ரசிப்புகள் நிறைந்த கருத்து