Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இருவரும் ஒருவரையொருவர் நோக்கும் அந்த அழகான தருணம் புகைப்படமாகியது செம
ஆனால் அத்தருணத்தில் ஈஸ்வரை எல்லாரும் சேர்ந்து காமெடி பீஸ் ஆகிவிட்டதாகவே தோன்றுகிறது
தேவகி தக்க சமயத்தில் வர்ணாவை அதட்டி ராணி அம்மாவை ஈஸ்வர் - வர்ணா திருமணம் குறித்து பேசவிடாமல் தவிர்த்துவிட்டார்.
தேவகி கேட்கும் கேள்விகளுக்கு வர்ணாவின் விளக்கம் எல்லாமே விஷ்ணு மேல் உள்ள காதலும் ஆயாவின் மேல் உள்ள பாசம் இரண்டுமே அவளுக்கு முக்கியமென்றும், ஒன்றிற்காக மற்றோன்றை இழக்க முடியாதென்றும், காதலுக்காக அவனிடம் தாலியும், பாசத்திற்காக ஆயா வீட்டிலும் இருக்கேன். இந்நிலை மாற அவர்கள் இருவரும் தான் மனசு வைக்க வேண்டுமென எவ்வளவு அழகாக சொல்லிவிட்டாள்
மன்னிப்பு உணர்ந்து கேட்கணும், நான் சொல்லி கேட்டாள் ஆயாவின் மரியாதையை பகடி ஆக்கியதாகும். அதேபோல் ஆயாவும் மனதார மன்னிக்க வேண்டும், எனக்காக மன்னித்தால் என் அய்த்தானுக்கு மரியாதை இல்லாமல் போய்விடும் என இருவரும் தனக்கு முக்கியமென்றும், எதுவானாலும் அவர்கள் மனதார நடக்க வேண்டுமென்றும் எவ்வளவு தெளிவாக பேசுகிறாள். அவளின் இந்த எண்ணம் நியாம் தான். இரண்டு கண்களும் அவளுக்கு முக்கியமல்லவா..
நிசப்த இரவு, கண்முன் மனம் நிறைந்த உறவு, வேண்டிடும் தனிமை, தகித்திடும் இளமையென நிமிடங்கள் அமிர்த விஷமாய் நகர
எட்ட நின்ற போதிலும் இருவரின் பார்வை பரிமாற்றத்திலேயே நெருக்கத்தை உணர வைக்க உங்களால் மட்டுமே முடியும் அமிர்த விஷம் என்னவொரு ரசனை உங்களுக்கு
இதழ் தொட்டு உயிர் மீட்டி
லட்சம் காதல் செய்திட நான் தவமிருக்க,
நீயோ,
விழி தொட்டு இதழ் மீட்டி
பொல்லா காதல் செய்தென்னை வதைக்கிறாய்!
மீளாது உன் விழியில் நான் தவமிருக்க,
மாறாது எனை உன்னில் ஏற்றுக்கொள்ளடி கண்ணே !
உங்கள் கைகள் அற்புதமான வரிகளால் மாயாஜாலம் தான் செய்கிறது சிஸ்
*****************************************************
உறவென்னும் இருப்பக்க பந்தம், ஒருபக்கம் இறுக்கி கைப்பற்றப்பெற்றும், மற்றோரு பக்கம் காற்றில் பறக்க விட்டாள் என்ன ஆகும்? ஒன்று பந்தம் அறுபடும், இல்லை இறுக்கி பற்றப்பெற்ற பந்தம் பெரிதாய் வீழ்ந்து போகும். எந்நிலையிலும் கையை இறுக்கும் உறவை, அது எத்தனை வலி தந்த போதும் அவன் கைவிட நினைக்கவில்லை என ஈஸ்வரின் நிலையை எவ்வளவு நுணுக்கமாக சொல்லியிருக்கீங்க சிஸ்
சின்னத்தாய் பற்றி பேச கூட பிடிக்கவில்லைராணி அம்மாள் அவருக்கு தக்க பதிலடி கொடுத்தாலும், பேத்தியை பற்றிய தவறான பேச்சில் அந்த இரும்பு மனிதியும் சற்று கலங்கி போய்விட்டார். அந்நேரத்தில் அவர் மனதிற்கு ஆறுதலாகவும் துணையாகவும் ஈஸ்வர் இருக்கிறான். உண்மை தான், அவன் அவர்களை காக்கும் காவலனே தான்.
ஒருவரின் வலியை பிறர் சொல்லி கேட்டறிந்து இரக்கம் கொள்வதற்கும் அந்த வலியை உணர்வுபூர்வமாக உணர்ந்து தன் வலி போல் உணர்வதற்கும் உள்ள நூலளவு வேறுபாட்டை கூட அவ்வளவு தெளிவாகவும் அழகாவும் உணர்த்திட்டீங்க சிஸ்.
அவன் அவளுக்கு உணவு பரிமாறுவதும், எனக்கு எப்போது நீ இது போல் செய்ய போகிறாய் என கேட்டதும் அவள் கண்கலங்கி அவனிடமே ஆறுதல் தேடி சரணடைவது, போகணுமா என்று இவளும், என்னுடனே இருந்துவிடு என இவனும் எண்ணுவது, அவன் பதைபதைப்பை இவள் ரசிப்பது, அவன் எதிர்பாரா நேரத்தில் அவளது அணைப்பு என மௌனமாக கரையும் அந்த ஐந்து நிமிடங்களுமே இருவர் மனதையும் நெகிழ்த்தி நிறைத்து விட்டது
இந்த ஐந்து நிமிடத்திற்கு நன்றி ! எனக்குள்ளே எத்தனை குழப்பம் வந்தாலும், நீங்க என்னோட இடத்திலிருந்து யோசிச்சு எனக்காக இருக்கிறது இன்னுமின்னும் ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனா, என்னைய இவ்வளவு காதல் செய்ய வைக்காதீங்க அப்புறம் உங்களுக்கு தான் கஷ்டம்.
கேட்க தோணலை, காரணம் தெரியலை, அதையும் நீங்களே கண்டுபிடிங்க, அப்படியே நான் உங்ககிட்ட தொலைஞ்சு போறதுக்கும்.
ஹப்பா நம்ம வர்ணாவா விஷ்ணுகிட்ட இப்படி பேசுனது அவங்க ஆயா கிட்ட அவன் மன்னிப்பு கேட்கறனு சொன்னதும் புள்ளைக்கு பேச்சை பார்த்தீங்களா...... விஷ்ணு மட்டும் கேடி இல்லை சிஸ் இந்த வர்ணாவும் தான்
மன்னிப்பு வேண்டி வந்தவனிடம், வலியென்றால் என்னவென்று அதன் அடியாழம் வரை அவனுக்கு உணர்த்தி விட்டார் ராணி அம்மா. என்னுடைய வலி யாருக்கும் வரக்கூடாதென்று வேண்டிக்கிறேன், உனக்கும் தான் என்று சொன்னதில் நிற்கிறார் நம் கிரேட் ராணி அம்மா அவனிடம் பேசுவதை கூட அவர் விரும்பவில்லை, இதில் எங்கிருந்து அவனை மன்னிப்பதைப் பற்றி யோசிக்க அவன் எவ்வளவு இறங்கி தன்னிலையை விளக்கி மன்னிப்பு கோரிய போதும் அவரின் ரணம் அவனிடம் பேச பேச அதிகரித்ததே அன்றி குறைந்த பாடில்லை
அவனின் பிறப்பால் இன்னும் எத்தனை அவமானங்களும் கஷ்டங்களும் தாங்க வேண்டுமோ தவறு செய்தவர்கள் நிம்மதியாக போய்விட்டார்கள். அவர்களால் பாதிக்கப்பட்ட ராணி அம்மாவும் விஷ்ணுவும் தான் நிதம் அந்த வலிகளை அனுபவிக்கிறார்கள். அவர்களோடு வர்ணாவும் அந்த வலியுடனே பயணித்துக்கொண்டு இருக்கிறாள். இதற்கு என்று தான் முடிவோ.......
ஏன் !
எதற்கிந்த கண்ணீர்,
ஏன் இந்த வலி.
பிடித்தங்கள் ஒருபக்கம்,
பிடிவாதம் மறுபக்கம்.
இரசிப்புகள் ஒருபக்கம்,
ரட்சிப்பது மறுபக்கம்.
அடைமழை வேண்டி நான் தவமிருக்க,
என்றும் இந்த ஒற்றை நீர்த்திவலை மட்டும் என் விதியாய்... !
அவரிடம் இதற்கு மேல் பேசமுடியாதென்று கிளம்புவன் கண்களில் ஒற்றை நீர்த்திவலை திரண்டு நிற்கிறது , அவள் கண்களிலோ கண்ணீர் அருவியாய் பொழிகிறது. விரைவில் அதை சந்தோஷச் சாரலாகவும், ஆனந்த நீர்த்திவலையாகவும் மாற்றுங்கள் சிஸ்.
சிக்ரி பற்றிய தகவல்கள் சிஸ்
Ramya sis ❣
//இருவரும் ஒருவரையொருவர் நோக்கும் அந்த அழகான தருணம் புகைப்படமாகியது செம //
//ஆனால் அத்தருணத்தில் ஈஸ்வரை எல்லாரும் சேர்ந்து காமெடி பீஸ் ஆகிவிட்டதாகவே தோன்றுகிறது //
எல்லாம் இந்த வள்ளி புள்ள நால தான் sis
//தேவகி தக்க சமயத்தில் வர்ணாவை அதட்டி ராணி அம்மாவை ஈஸ்வர் - வர்ணா திருமணம் குறித்து பேசவிடாமல் தவிர்த்துவிட்டார்.//
ஆமா இல்லைனா அவங்க அம்மா பொய்யான வாக்குறுதி தந்தது போல ஆகிடும்ல..
//தேவகி கேட்கும் கேள்விகளுக்கு வர்ணாவின் விளக்கம் எல்லாமே//
//விஷ்ணு மேல் உள்ள காதலும் ஆயாவின் மேல் உள்ள பாசம் இரண்டுமே அவளுக்கு முக்கியமென்றும், ஒன்றிற்காக மற்றோன்றை இழக்க முடியாதென்றும், காதலுக்காக அவனிடம் தாலியும், பாசத்திற்காக ஆயா வீட்டிலும் இருக்கேன். இந்நிலை மாற அவர்கள் இருவரும் தான் மனசு வைக்க வேண்டுமென எவ்வளவு அழகாக சொல்லிவிட்டாள்
மன்னிப்பு உணர்ந்து கேட்கணும், நான் சொல்லி கேட்டாள் ஆயாவின் மரியாதையை பகடி ஆக்கியதாகும். அதேபோல் ஆயாவும் மனதார மன்னிக்க வேண்டும், எனக்காக மன்னித்தால் என் அய்த்தானுக்கு மரியாதை இல்லாமல் போய்விடும் என இருவரும் தனக்கு முக்கியமென்றும், எதுவானாலும் அவர்கள் மனதார நடக்க வேண்டுமென்றும் எவ்வளவு தெளிவாக பேசுகிறாள். அவளின் இந்த எண்ணம் நியாம் தான். இரண்டு கண்களும் அவளுக்கு முக்கியமல்லவா..//
ஆமா ,அவளுக்கு ரெண்டு பக்கமும் யோசிக்கணும்.சோ இப்படிதான் எல்லாத்தையும் யோசிச்சு பேசுற ! ஆனா, முக்கியம் சமயத்தில் ! ஐயோ பாவம் ஷீ
//நிசப்த இரவு, கண்முன் மனம் நிறைந்த உறவு, வேண்டிடும் தனிமை, தகித்திடும் இளமையென நிமிடங்கள் அமிர்த விஷமாய் நகர
எட்ட நின்ற போதிலும் இருவரின் பார்வை பரிமாற்றத்திலேயே நெருக்கத்தை உணர வைக்க உங்களால் மட்டுமே முடியும் //
Wow..உங்களால் இவ்விடங்களை உணர்ந்து படிக்க முடிந்ததில் மகிழ்ச்சி ரம்யா sis me happyooo happy
//அமிர்த விஷம் என்னவொரு ரசனை உங்களுக்கு //
ரசனையை ரசித்து பாராட்டும் உங்களை போன்ற நண்பர்களால் எழுத்து இன்னும் மெருகேருகிறது ,நன்றி sis
//இதழ் தொட்டு உயிர் மீட்டி
லட்சம் காதல் செய்திட நான் தவமிருக்க,
நீயோ,
விழி தொட்டு இதழ் மீட்டி
பொல்லா காதல் செய்தென்னை வதைக்கிறாய்!
மீளாது உன் விழியில் நான் தவமிருக்க,
மாறாது எனை உன்னில் ஏற்றுக்கொள்ளடி கண்ணே !
உங்கள் கைகள் அற்புதமான வரிகளால் மாயாஜாலம் தான் செய்கிறது சிஸ் //
நன்றி ரம்யா sis
*****************************************************
//உறவென்னும் இருப்பக்க பந்தம், ஒருபக்கம் இறுக்கி கைப்பற்றப்பெற்றும், மற்றோரு பக்கம் காற்றில் பறக்க விட்டாள் என்ன ஆகும்? ஒன்று பந்தம் அறுபடும், இல்லை இறுக்கி பற்றப்பெற்ற பந்தம் பெரிதாய் வீழ்ந்து போகும். எந்நிலையிலும் கையை இறுக்கும் உறவை, அது எத்தனை வலி தந்த போதும் அவன் கைவிட நினைக்கவில்லை என ஈஸ்வரின் நிலையை எவ்வளவு நுணுக்கமாக சொல்லியிருக்கீங்க சிஸ் //
ஆமா ,அவன் ஏன் விஷ்ணு மீது இவளோ கோபப்படுறான் என்ற கேள்விக்கு பதில இங்கிருந்து தான் வரும்.பின் வரும் அத்தியாயத்தில் ithe காட்சி ஈஷ்வர் கோணத்தில் விரியும்.அப்போ ஏன்னு explain aagum
//சின்னத்தாய் பற்றி பேச கூட பிடிக்கவில்லைராணி அம்மாள் அவருக்கு தக்க பதிலடி கொடுத்தாலும், பேத்தியை பற்றிய தவறான பேச்சில் அந்த இரும்பு மனிதியும் சற்று கலங்கி போய்விட்டார்.//
ஆமா sis..யாராவது திட்டினா திருப்பி திட்டிலாம்.ஆனா,அவங்க சபித்த வார்த்தை நெஞ்சின் அடி ஆழத்தில் தங்கிக் கொள்ளும் சமயஙகளில் பெரு வலி தரும்
//அந்நேரத்தில் அவர் மனதிற்கு ஆறுதலாகவும் துணையாகவும் ஈஸ்வர் இருக்கிறான். உண்மை தான், அவன் அவர்களை காக்கும் காவலனே தான்.//
Yes ,this s the point. Avan காவலன் தான் அந்த வீட்டுக்கு.
//ஒருவரின் வலியை பிறர் சொல்லி கேட்டறிந்து இரக்கம் கொள்வதற்கும் அந்த வலியை உணர்வுபூர்வமாக உணர்ந்து தன் வலி போல் உணர்வதற்கும் உள்ள நூலளவு வேறுபாட்டை கூட அவ்வளவு தெளிவாகவும் அழகாவும் உணர்த்திட்டீங்க சிஸ்.//
அவ்வரிகள் உங்களை சேர்ந்ததில் மிகுந்த மகிழ்ச்சி ரம்யா sis
//அவன் அவளுக்கு உணவு பரிமாறுவதும், எனக்கு எப்போது நீ இது போல் செய்ய போகிறாய் என கேட்டதும் அவள் கண்கலங்கி அவனிடமே ஆறுதல் தேடி சரணடைவது, போகணுமா என்று இவளும், என்னுடனே இருந்துவிடு என இவனும் எண்ணுவது, அவன் பதைபதைப்பை இவள் ரசிப்பது, அவன் எதிர்பாரா நேரத்தில் அவளது அணைப்பு என மௌனமாக கரையும் அந்த ஐந்து நிமிடங்களுமே இருவர் மனதையும் நெகிழ்த்தி நிறைத்து விட்டது //
உங்களது இத்தனை ரசிப்பது நிறைந்த கருத்து எனது மனதை நிறைகிறது.இன்னுமின்னும் கதையில் ஆழ்ந்து poga சொல்கிறது
//இந்த ஐந்து நிமிடத்திற்கு நன்றி ! எனக்குள்ளே எத்தனை குழப்பம் வந்தாலும், நீங்க என்னோட இடத்திலிருந்து யோசிச்சு எனக்காக இருக்கிறது இன்னுமின்னும் ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனா, என்னைய இவ்வளவு காதல் செய்ய வைக்காதீங்க அப்புறம் உங்களுக்கு தான் கஷ்டம்.
கேட்க தோணலை, காரணம் தெரியலை, அதையும் நீங்களே கண்டுபிடிங்க, அப்படியே நான் உங்ககிட்ட தொலைஞ்சு போறதுக்கும்.
ஹப்பா நம்ம வர்ணாவா விஷ்ணுகிட்ட இப்படி பேசுனது அவங்க ஆயா கிட்ட அவன் மன்னிப்பு கேட்கறனு சொன்னதும் புள்ளைக்கு பேச்சை பார்த்தீங்களா...... விஷ்ணு மட்டும் கேடி இல்லை சிஸ் இந்த வர்ணாவும் தான் //
இது தான் சரியான விஷயம்.ரெண்டுமே kd தான்.அப்பாவி புள்ளனா அது ஈஷ்வர் தான்..ஐயோ பாவம் அவன்
//மன்னிப்பு வேண்டி வந்தவனிடம், வலியென்றால் என்னவென்று அதன் அடியாழம் வரை அவனுக்கு உணர்த்தி விட்டார் ராணி அம்மா. என்னுடைய வலி யாருக்கும் வரக்கூடாதென்று வேண்டிக்கிறேன், உனக்கும் தான் என்று சொன்னதில் நிற்கிறார் நம் கிரேட் ராணி அம்மா //
எஸ் அவங்க பெருந்தன்மை என்றும் மாறாது.இதன் பின்னும் சில இடஙகளில் கோபம் கொண்டாலும் ,அவங்க இயல்பை விரைவில் மீட்டிடுவாங்க
// அவனிடம் பேசுவதை கூட அவர் விரும்பவில்லை, இதில் எங்கிருந்து அவனை மன்னிப்பதைப் பற்றி யோசிக்க அவன் எவ்வளவு இறங்கி தன்னிலையை விளக்கி மன்னிப்பு கோரிய போதும் அவரின் ரணம் அவனிடம் பேச பேச அதிகரித்ததே அன்றி குறைந்த பாடில்லை //
அவன் மன்னிப்பு மட்டும் கேட்டிருந்தா அவங்க இயல்பா கடந்து இருப்பாங்க.அவன் அவங்க அம்மாவை niyaayappaduthura மாதிரி pesunathaa அவங்க உணர்ந்தாங்க,அதான் அந்த வார்த்தைகள்.
//அவனின் பிறப்பால் இன்னும் எத்தனை அவமானங்களும் கஷ்டங்களும் தாங்க வேண்டுமோ தவறு செய்தவர்கள் நிம்மதியாக போய்விட்டார்கள். அவர்களால் பாதிக்கப்பட்ட ராணி அம்மாவும் விஷ்ணுவும் தான் நிதம் அந்த வலிகளை அனுபவிக்கிறார்கள். அவர்களோடு வர்ணாவும் அந்த வலியுடனே பயணித்துக்கொண்டு இருக்கிறாள். இதற்கு என்று தான் முடிவோ.......//
விரைவில் ,அத்தியாயம் 17 பின் அனைத்தும் சுபமே
//ஏன் !
எதற்கிந்த கண்ணீர்,
ஏன் இந்த வலி.
பிடித்தங்கள் ஒருபக்கம்,
பிடிவாதம் மறுபக்கம்.
இரசிப்புகள் ஒருபக்கம்,
ரட்சிப்பது மறுபக்கம்.
அடைமழை வேண்டி நான் தவமிருக்க,
என்றும் இந்த ஒற்றை நீர்த்திவலை மட்டும் என் விதியாய்... !//
//அவரிடம் இதற்கு மேல் பேசமுடியாதென்று கிளம்புவன் கண்களில் ஒற்றை நீர்த்திவலை திரண்டு நிற்கிறது , அவள் கண்களிலோ கண்ணீர் அருவியாய் பொழிகிறது. விரைவில் அதை சந்தோஷச் சாரலாகவும், ஆனந்த நீர்த்திவலையாகவும் மாற்றுங்கள் சிஸ்.
சிக்ரி பற்றிய தகவல்கள் சிஸ் //
விரைவில் மாத்திடாலாம் sis aduththa மூன்று அத்தியாயம் கொஞ்சம் இப்படித்தான் இருக்கும்.அதன் பின் மாறிடும்
உங்களது தெளிவாக பதிவில் நிறைவாய் நான்.
உங்களது ரசிப்பில் மகிழ்வாய் நான்.
நன்றி ரம்யா sis everytime when I read your comment ,I will be like கண்ணெல்லாம் heart thaan ponga