வருடங்கள் பல கடந்து நிகழ்கிறது அமிர்தன் - அதரா சந்திப்பு. பார்த்தவுடனே அவனை கண்டுகொண்டாள் அவள். பல வருடங்களாக அவளுடன் பயணிக்கும் அந்த சங்கிலி அவனின் முகத்தை என்றும் மறவா வண்ணம் நினைவடுக்குகளில் சேகரித்து வைத்திருக்கிறது. அவளின் தெரிந்த பாவனையில் அவனும் சில நிமிடங்களில் அவளை கண்டுகொண்டான். உடனே அதரா என்றழைத்து அவள் முன் நிற்கிறான். அவனின் தித்திப்பான அழைப்பிலேயே அவளின் மனம் அவன்பால் சரிந்துவிட்டது. அவனும் அன்னையின் அழைப்பில் 'தாரா' என ப்ரத்யேகமாக அவள் பெயரை சுருக்கி அழைத்து பிறகு பேசலாம் என்று சென்றுவிடுகிறான். இருவருக்குமே மற்றவரின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு விட்டது அந்த சந்திப்பில்
அவனின் இருப்பு அவளுக்கு ஏதோ ஒரு வகையில் சஞ்சலத்தை ஏற்படுத்துகிறது. அதனால் அவனிடம் இயல்பாகவும் அவளால் பேசமுடியவில்லை. ஆனால் அவன் தன் விளையாட்டுப் பேச்சினால் அவள் தயக்கத்தை களைந்தெறிந்து விட்டான். நீ சிரிக்கும் போது அழகா இருக்க தாரா, அதே கோபமா பார்க்கும்போது இன்னும் அழகா இருக்க என அவன் சொன்னதும் அழகாக இருந்தது. அதற்கு தனிமையில் எதிர்வினை ஆற்றும் அவள் செயலும் மிக அழகாக இருந்தது. அந்தந்த பருவத்திற்குரிய இயல்புகளை தொலைத்து இறுக்கமாக இருந்தவளை அவன் வரவு கொஞ்சம் கொஞ்சமாக இலகுவாக்குகிறது
அவளுடனான அவனின் பயணம் அவளுக்கு இதுவரை கிடைக்காத ஒரு பாதுகாப்பை கொடுக்கிறது. அவனின் வரவும் அவளின் பொருட்டே இருக்கிறது. காரணமின்றி அவனின் அழைப்பும், இதழோர சிரிப்பும்
அவளுக்காகவே இங்கேயே கல்லூரியில் சேர்கிறான் ( பையனுக்கு அரசியலில் மிகுந்த ஆர்வம் என வேந்தன் நம்பிக்கொண்டிருக்கிறார், பாவம்
)
அவளுள் ஏற்படும் தடுமாற்றமும், அவன் பார்வை சொல்லும் செய்தியும் அவளை அவனை தவிர்க்க வைக்கிறது. அதுவே அவனுக்கு இன்னும் அவளை நெருங்க தூண்டுகிறது. நீண்ட நாட்கள் கழித்து அவளை சந்தித்த மகிழ்ச்சியில் இவனோ அவள் கையை பற்றுகிறான் அவளோ அவன் தொடுகையில் அறைந்து விடுகிறாள்
(அவளின் பாதுகாப்புணர்வு அவ்வாறு செய்ய வைத்துவிட்டது)
உரிமை மறுக்கப்பட்டதில் அவன் ஒதுங்கிறான் அவளோ அவனை தேடுகிறாள்
அவன் வராமை மீண்டும் அவளுக்கு பாதுகாப்பின்மை நிலையை ஏற்படுத்துகிறது. அப்படி ஒரு இக்கட்டான நிலையில் அவள் தவிக்கும் போது வரும் அவன், அவளை தன்னுடன் இருத்திக்கொள்கிறான். அவள் அவனருகில் அமரும் முன் அவளை சங்கடப்படுத்திய அந்த ஆளுக்கு குத்து விட்டது
அருகில் அமர்ந்தவளிடம் தன் காதலை அழகாக உரைத்துவிட்டான். என்னைக்கா இருந்தாலும் அந்த கை என்னோடு மட்டும் தான் இணையப் போகுது என எவ்வளவு திடமாக சொல்கிறான் ( அவள் உரைக்காமலே அவள் மனதையும் அறிந்துவிட்டான்
) அவளும் அவனை விரும்பினாலும் சம்மதம் தெரிவிப்பாளா தெரியவில்லை
வேந்தன் இதை அறிந்தால் நிச்சயம் எதிர்ப்பார், அவனின் அம்மாவோ கட்சி ஆட்களுடன் பேசவே யோசிக்கிறார், இப்படி தடைகள் ஏராளமாக இருக்கிறது. ஆனால் அவன் வார்த்தையில் இது நடந்தே தீரும் எனும் நம்பிக்கை ஏராளமாக இருக்கிறது. இனி எப்படி கதையை நகர்த்த போகிறீர்கள் என அறிய மிகுந்த ஆர்வமாக இருக்கிறது சிஸ்