Ramyasridhar
Bronze Winner
"அதரா தான் என் வாரிசு, அவதாம்ல நம்ம குடும்பத்தை பார்த்துக்க போறா " என்று பெரியநாயகம் சொன்னது போல் தான் அதராவின் மனமும் செயலும் இருக்கிறது. அவர் கூட தன் சின்னக்குட்டி குட்டியாக இருக்கும் போதே இதை செய்வாள் என நினைத்திருக்க மாட்டார்.
பெண்ணின் பேச்சின் மீது கொண்ட ஆர்வத்தில் அன்று மேடை ஏற்றிய பேச்சியும் பின்னாளில் இதுவே அவளின் வாழ்வாக மாறும் என அறிந்திருக்கவில்லை. ஒருவேளை தெரிந்திருந்தால் அன்றே மகளை மேடையேற்றி இருக்க மாட்டார்
அவரின் ஏழ்மை நிலையால் வேந்தனிடம் மறைமுகமாக மட்டுமே மறுப்பு தெரிவிக்க முடிந்தது. அது எடுபடாமல் போகவும் அவருக்கு பணிந்து போக மட்டுமே முடிந்தது, பாவம் எளியோரை ஏய்ப்பது என்பது வலியோருக்கு மிகவும் எளிது தானே...
விதி வலியது தான், இல்லையென்றால் இப்படி வெண்பாவுக்கு நேர்ந்து, அவளின் உயிரை காக்கும் பொருட்டு மீண்டும் வேந்தனிடம் கையேந்தி நிற்கும் நிலை வந்திருக்குமா அதற்கு ஈடாக அதாராவின் வாழ்வும் மாறும் நிலை வந்திருக்குமா.......
அக்காவிற்காக ஆரம்பித்தது மொத்த குடும்பத்திற்குமானதாக அவள் வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது. 16வயதிலேயே எவ்வளவு பெரிய சுமை... படிப்பும் பாதியில் நின்று போனது. எல்லாவற்றையும் விட அவளின் சிறு வயதிற்கே உரிய சந்தோஷங்கள் எல்லாம் பறி போய் ஒரு இறுக்கமான வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
எத்தனை இன்னல்களை ஒவ்வொரு நாளும் சந்திக்கிறாள் அதுவும் சின்ன வயதிலேயே, கொடுமை அவள் உழைப்புக்கேற்ற நியாயம் கிடைக்கிறதா என்றால் அதுவும் இல்லை. இவள் உழைப்பை அவர் சுரண்டி, தான் செய்ததாக காட்டிக்கொண்டு மக்களையும் அவளையும் ஏமாற்றி கொண்டிருக்கிறார் வேந்தன்