All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
🙌🙌🙌🙌🙌❣❣❣
Part 2 வேணும் ஸ்ரீ...
Part 2 எழிதியே ஆகனும் ஸ்ரீ....

Appuram antha part la Jo thaan kuuttitu varanum...சண்டை வரும்.சந்தோசமா இருக்க நான் விட்டாலும் நீங்க விட மாட்டீங்க போலயே 🤔🤔🤔🤔🤔



Aiiiii part 2 😍😍😍😍 we want part 2, part 3, part 4, part 5, part 6, part 7, part 8, part 9, part 10...
🤣🤣🤣🤣🤣🤣 எழுதலாம் எழுதலாம்..போட்டு தள்ள லிஸ்ட் ரெடி பண்ணு eluthidalaam 🤣🤣🤣
 

Ramyasridhar

Bronze Winner
Ramya sis ❣

நிஜமா என்னால தனித்தனியா பிரிச்சு பார்க்க முடியலை..அத்தனை நேர்த்தி உங்களது விமர்சனத்தில்..உதயா மாதிரி நானும் பலமுறை ரசித்து, ஸ்பரிசித்து பார்க்கிறேன் 🙏நன்றி இத்தகைய நிறைவான கருத்திற்கு வார்த்தை வடலவில்லை இத்தனை நேரம்...


//
எதை நான் கேட்பின் உனையே தருவாய்

இந்த கதையில் பயணித்தது ஒரு இனிமையான அனுபவம் என்று சொன்னால் அது மிகையாகாது. முதலில் இந்த தலைப்பே என்னை ஈர்த்துவிட்டது. அதே போல் கதையும் தொடக்கம் முதல் இறுதி வரை சுவாரசியம் மிக்கதாகவே இருந்தது. மதுரையில் தொடங்கி மீண்டும் மதுரையில் அழகரின் தரிசனத்தோடு முடித்திருந்தது மனநிறைவை தந்தது.//

மிக்க நன்றி ரம்யா sis 😍
கதையின் தலைப்போடு கதையையும் ரசித்ததற்கு
❤.

// என்னை கவர்ந்தவை

பெரும்பாலான கதைகளில் நாயகனும் நாயகியும் எதிர் எதிர் எண்ணங்கள் உடையவர்களாகவே இருப்பர். ஆனால் இதில் நீங்கள் எதிர் எதிர் துருவம் தான் ஈர்க்கும் என்னும் விதியை மாற்றி ஒத்த குணம் உடையவர்களுக்கும் ஈர்ப்பு ஏற்படும் என்று அழகாக காட்டிய விதம் அருமை 😍😍//

இது போலவும் காட்ட நினைத்ததின் வெளிப்பாடு ரம்யா sis..
இது உங்களை கவர்ந்ததில் மிகுந்த மகிழ்ச்சி
💘

//மூன்று ஜோடிகளுக்கும் சரிவிகிதத்தில் முக்கியத்துவம் கொடுத்தது👌//

❤🧡💚நன்றி sis 💚🧡❤

//அன்பான குடும்பத்தோடு பயணிக்க வைத்தது. அண்ணன் - தம்பிகள், அக்காள் - தங்கைகள் ஒற்றுமை மற்றும் பாசத்தை காட்டிய விதம் 👌காளிராஜ் - வசுந்தரா அன்பான அப்பா, அம்மாவாக தங்கள் பெண்களையும் மாப்பிள்ளையையும் வழிநடத்தினார்கள் என்றால் சங்கர் - நண்பனின் துரோகத்தால் அனைத்தையும் இழந்த போதிலும் நற்பண்புகளை இழக்காமல் அப்பண்புகளை தனயன்களுக்கும் கொடுத்து விட்டே சென்றிருக்கிறார்👌//

நிலை மாறும் மனிதர்கள் .. அம்மனிதர்களின் நிலை ( status) மாறினால் அவர்கள் மனம் மாறுமா ? அப்படியொரு எண்ணம் ! அதை பதிய முயன்றது இக்கதை 💘

//கல்யாண வைபோகத்தில் திருமண அழைப்பிதழ் தொடங்கி சடங்கு, சம்பிரதாயங்கள் அதற்குரிய விளக்கங்கள், மணமேடை அலங்காரங்கள், மாப்பிள்ளை - பெண் உடை வர்ணனை, பெண்ணின் அலங்காரம் என ஒன்றையும் விட்டுவிடாமல், அவர்கள் திருமணத்தை நான் அருகில் இருந்து பார்த்தது போல் ஒரு அனுபவம் 🤩🤩//

எனக்கும் நிறைய இடங்களில் அர்த்தம் தெரியாத வைபோகமாக தான் இருந்தது ரம்யா sis.sari அப்படினா என்ன ! ஏன் செய்றாங்க என சொல்ல படிச்சு பார்த்து கதையில சேர்த்தேன்.அதோடு அவையெல்லாம் தமிழர் பண்பாட்டு மரபுகள்.அதற்கான நினைவூட்டல் அவை ❣
உங்களுக்கு திருமணத்தை அருகில் கண்ட அனுபவம் கிடைத்ததில் எனக்கு அத்தனை மகிழ்ச்சி 😍



//மதுரையையும் ஸ்விஸையும் சுற்றி காட்டிய விதம். மதுரை நகர் சிறப்பை அழகாக காட்டியிருந்தீர்கள் 👌😊குறிப்பாக ஸ்விஸ் பயணதின் போது உங்கள் வர்ணனை அனைத்தும் அற்புதம் 😯😯👌👏இரயில் பயணம், ஷுரிச் ஏரியில் படகு சவாரி, ரோப் கார் பயணம், தோட்டம், சுவர் சித்திரங்கள், சிங்கத்தின் சிற்பம், பனிக்கட்டிகளில் விளையாடியது என அனைத்தும் மறக்க முடியாதது. புகைப்படங்களும் கூடுதல் சிறப்பு சேர்த்தது. அங்குள்ள உணவு வகைகளையும் நீங்கள் விட்டு வைக்கவில்லை. மொத்தத்தில் உங்கள் வர்ணனையே என்னையும் அவர்களோடு ஸ்விஸ் பயணத்தை அனுபவிக்க வைத்து விட்டது 😊😊//

அத்தனை விஷயங்களையும் குறிப்பிட்டு பட்டியலிட்டு சொல்வதற்கு நான் தலை வணங்குகிறேன் 🙏
இனிமே அது நம்ம ஸ்விஸ்..நானும் போனதே இல்லை..அதான் அவங்க கூட நானும் சுத்தி பார்த்து விட்டேன் ரம்யா sis 😍


//மூன்று ஜோடிகளும் ஒவ்வொரு வகையில் ஈர்த்தாலும், கார்த்தி - சைத்து இவர்கள் செய்த சேட்டைகளை மறக்கவே முடியாது. ஒன்றிரண்டு காட்சிகளை தவிர்த்து அனைத்து காட்சிகளிலும் சிரிக்க வைத்தவர்கள் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 கார்த்தி - இப்படியொரு தம்பி நமக்கும் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியவன். சேட்டை ஒருபக்கம் என்றாலும் இன்னொரு புறம் அவனின் முதிர்ச்சியான பேச்சாலும் செயலாலும் பெரிதும் கவர்ந்தவன்😍//

நிறைய பேர் அவனை சொல்றாங்க.. ப்ரெண்ட் அஹ் ,இணையா, மகனா ,உறவா ,நீங்க தம்பியா சொல்லியிருக்கீங்க ..
வேணும்னா இப்படி பண்ணலாமே , ஸைத்துவும் கார்த்திக் போல தான்..நானும் ,அம்முவும் ஸைத்து போல தான்..எங்களை நீங்க தத்து எடுத்துகோங்களேன் 🤷🤷🤷

நாங்க ரசம் வச்சு தருவோம் ரம்யா sis ❣💘


//பெரிய முற்கள் சின்ன முற்களை போட்டி போட்டு துரத்தி விளையாடியதில், வெற்றி பரிசாக சூரியன் மலர்ந்திருக்க
என பொழுது புலர்வதை குறிக்கும் இந்த வரிகள் என்னை மிகவும் ஈர்த்தவை😯👌//

Wowww..இத்தனை குறிப்பிட்டு நீங்கள் சொல்வதால் எனக்கே இவ்வரிகள் மிக பிடிக்கிறது 😘😘😘

//இணைப்பு தகவல்கள் - நான் அறியா பல தகவல்களை என்னிடம் சேர்த்தவை👌👌👌

நெகிழ்வு பலகை தொடங்கி வம்மி நிறம், பட்டியலட்டை, நிரலாக்கம், ஆளரி அட்டை, இயங்கலை, ......... சுயமி வரை நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கில சொற்களுக்கு அழகான தமிழ் வார்த்தையை கொண்டு சேர்த்தது 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏//


இத்தனை இத்தனை திருத்தமான வாசகர்கள் இருக்கும் போது ,எனது முயற்சி இன்னும் பெரிதாக இருக்க வேண்டும் என உள்ளம் ஏங்கிறது..


//விக்ரமின் வலி

இந்த இடத்திற்கு தகுதியானவன் நீ,
இது உன்னுடைய இடம்.
ஆனால் உனக்கில்லை.

என அவனின் மொத்த வலிகளையும் மூன்று வரிகளில் ஆழமாக உணர்த்திய விதத்தை பாராட்டாமல் இருக்க முடியாது 👏👏👏//

இது எனது ஆழ்மன வரிகள்.. அது உங்களை கவர்ந்தது என்பது எனது உள்ளதோடு உறவாடுகிறது உங்களது விருப்பம் ❤

//தந்தை
அவர் !

உடல் தந்த உயிர்.
உயிர் காத்த மனிதன்
மனிதம் சொல்லி தந்த ஆத்மா
ஆத்மார்த்தமாக நேசிக்க கற்று தந்த
அவர்.. !
எங்கள் தந்தை


........
நோய் பிணி என்றால் அன்னையை
தேட வேண்டுமா?
அவர் தான் எங்களுக்கு
தாயுமானவனாக
இருக்கிறா(ந்தா)ரே !

என முடியும் வரிகள்//

எத்தனை ரசனை உங்களிடம்
உங்களது குறிப்பிடல்
என் மனதிற்கு அத்தனை இன்பம் தருகிறது.விரல் தாளமாக இந்த வரிகள் தட்டி பார்க்கிறது.இதழ்கள் ராகமாக இவ்வரிகளை வாசித்துப் பார்க்கிறது. மனமோ பாடலை இங்கேயே சங்கமிக்கிறது..🙏நன்றி என்னை நானே ரசிப்பது போல செய்து உள்ளீர்கள் 💘



//
விக்ரம் - அதிதி
அதீதங்களும்
அடிபட்டு போகும்
அன்பனின் ஆர்ப்பரிக்கும்
காதல் முன்!


கார்த்தி - சைத்து
விழிநீர் தாங்காத நான்
உனக்கான கண்ணீரிலும் ஆனந்தம் கொண்டு நிற்கிறேன்
..........................
அனைத்தும் வேண்டுமெனும் நேரம்
அத்தனையும் தந்து
ஆதி அந்தமாய் நின்றாய்
இப்பொழுது வேண்டுமென கேட்கிறேன்
உன் கவனத்தை...
உன் சுவாசத்தை...
உன் காதலை...
உன் தீவிரத்தை...

என முடியும் வரிகள்

...........
இனி ஒரு பிறவியென்றாலும்
உன்னில் நான்.. நான் மட்டுமே
காதலாகவும் உன் உடமையாகவும்

என முடியும் வரிகள்

......
சிக்கி தவிக்கும் என்னை, அன்பால்
வதம் செய்யும் வசியக்காரன் நீ..!

என முடியும் வரிகள்

கெளதம் - சைத்து
என்னை பிடிவாத காதல்

செய்யடி பெண்ணே.. !
உன் காதலின் சுவாசத்தில்,
நொடி நொடியும் புதிதாய்
உயிர்த்தெழுந்து காதல் மோட்சம்
பெறுகிறேன்...

கடற்கரை மணலில் அவன் கரம்
பிடித்து நடக்க ஆசைப்படும் அதே
பழைய கால காதல் பெண் தானே நான்!
........
கண்ணீர் அவனுக்காக எனும் போதும்,
அதன் முதல் துளியை அவன் உதட்டின்
ஈரத்தில் மறந்திட துடிக்கும்
பேராசைக்காரி தானே நான் !

......
காதல் பித்தம் தலைக்கேற்ற
செய்கிறாய் அன்பே... !
உனது நொடி நொடி ரசிப்பும், சிறு சிறு
லயிப்பும் எனக்காக மட்டுமாக
இருந்திட கேட்கும் காதல் பித்தம்
தலைக்கேற்றுகிறாய் என் ஆருயிரே.. !

என முடியும் வரிகள்

.......
ஆழமாய் பதிந்து போன உன் நெற்றி
பொட்டின் அழுத்தத்தில் சொல்லிவிடு
இனி நான் மட்டுமே அங்கு தஞ்சம்
கொள்வேனென....

என முடியும் வரிகள்..

மொத்தமாய், மிக மொத்தமாய்
உன் பார்வையில் என்னை
ஆயுள் கைதியாக சிறையெடு !
வாழ்ந்து பார்க்கிறேன் உன் விழிகளுடனாவது!
..........
நான் நீயாக
நீ என்பது நானாக
நாம் என்பது மட்டும் வாழ்வாக

எதை நான் கேட்பின் உனையே தருவாய்
என் மொத்த பிரதிபலிப்பே... !


இவ்வாறு உங்கள் அனைத்து கவிதை வரிகளையும் குறிப்பிட்டு சொல்லிக்கொண்டே போகலாம்......
உங்கள் கவிதைகள் அனைத்தையும் தொகுத்து போட்டாலே கதையும் அதனுள் அடங்கிவிடும். எளிமையான அந்த வரிகளிலேயே அவர்களின் உணர்வுகளை நாம் புரிந்து கொள்ளலாம்.....//

இதை விட என்ன இன்பம் நான் காண முடியும்..எனது படைப்பிற்கான உங்களது ரசிப்பது என்னை மூச்சு முட்டவும் வைக்கிறது.மூச்சு தந்தும் உயிர்க்க வைக்கிறது.

கதையோடு எழுதிய வரிகள் ..பெரிதாக நான் தமிழும் கற்று தேறவில்லை..

அதிலும் உங்களுக்கு வார்த்தைகள் பிடித்தது என்றால் நீங்கள் மனதால் வாசிகிறீங்க..உணர்வால் எழுதுறீங்க..
நன்றி என்னும் வார்த்தை, உங்களது ரசிப்பின் முன் சிறிதாகி போகிறது
.
// அத்தனை விஷயங்களையும் குறிப்பிட்டு பட்டியலிட்டு சொல்வதற்கு நான் தலை வணங்குகிறேன் 🙏
இனிமே அது நம்ம ஸ்விஸ்..நானும் போனதே இல்லை..அதான் அவங்க கூட நானும் சுத்தி பார்த்து விட்டேன் ரம்யா sis 😍 //

ஆமாம் சிஸ் அது நம்ம ஸ்விஸ் தான் 😍

//நிறைய பேர் அவனை சொல்றாங்க.. ப்ரெண்ட் அஹ் ,இணையா, மகனா ,உறவா ,நீங்க தம்பியா சொல்லியிருக்கீங்க ..
வேணும்னா இப்படி பண்ணலாமே , ஸைத்துவும் கார்த்திக் போல தான்..நானும் ,அம்முவும் ஸைத்து போல தான்..எங்களை நீங்க தத்து எடுத்துகோங்களேன் 🤷🤷🤷

நாங்க ரசம் வச்சு தருவோம் ரம்யா sis ❣💘//

அதற்கென்ன தாராளமாக தத்தெடுத்துக்கலாம்🤷‍♀️ ஆனால் இந்த ரசம் மட்டும் வேண்டாமே 😜

// இத்தனை இத்தனை திருத்தமான வாசகர்கள் இருக்கும் போது ,எனது முயற்சி இன்னும் பெரிதாக இருக்க வேண்டும் என உள்ளம் ஏங்கிறது..//

உங்களால் முடியும் சிஸ் 🌷🌷

// எத்தனை ரசனை உங்களிடம்
உங்களது குறிப்பிடல்
என் மனதிற்கு அத்தனை இன்பம் தருகிறது.விரல் தாளமாக இந்த வரிகள் தட்டி பார்க்கிறது.இதழ்கள் ராகமாக இவ்வரிகளை வாசித்துப் பார்க்கிறது. மனமோ பாடலை இங்கேயே சங்கமிக்கிறது..🙏நன்றி என்னை நானே ரசிப்பது போல செய்து உள்ளீர்கள் //

😍😍😍😍😍

// இதை விட என்ன இன்பம் நான் காண முடியும்..எனது படைப்பிற்கான உங்களது ரசிப்பது என்னை மூச்சு முட்டவும் வைக்கிறது.மூச்சு தந்தும் உயிர்க்க வைக்கிறது.//

🥰🥰🥰🥰🥰

//கதையோடு எழுதிய வரிகள் ..பெரிதாக நான் தமிழும் கற்று தேறவில்லை..//


நீங்கள் எழுதுவதை பார்த்தால் அப்படி தெரியவில்லை சிஸ் 😍

//அதிலும் உங்களுக்கு வார்த்தைகள் பிடித்தது என்றால் நீங்கள் மனதால் வாசிகிறீங்க..உணர்வால் எழுதுறீங்க..
நன்றி என்னும் வார்த்தை, உங்களது ரசிப்பின் முன் சிறிதாகி போகிறது//


அதற்கு காரணம் உங்கள் எழுத்து மனதிற்கு மிக நெருக்கமாக இருந்தது தான்🌷🌷🌷😍😍😍

நன்றி எல்லாம் வேண்டாம் சிஸ், இதேபோல் அருமையான கதையுடன் விரைவில் வாருங்கள்🌷🌷🌷
 

fathima nuhasa

Bronze Winner
Appuram antha part la Jo thaan kuuttitu varanum...சண்டை வரும்.சந்தோசமா இருக்க நான் விட்டாலும் நீங்க விட மாட்டீங்க போலயே 🤔🤔🤔🤔🤔





🤣🤣🤣🤣🤣🤣 எழுதலாம் எழுதலாம்..போட்டு தள்ள லிஸ்ட் ரெடி பண்ணு eluthidalaam 🤣🤣🤣
Sowmi puhazh cheliyan maran 😜😜😜😜
 

Ramyasridhar

Bronze Winner
@Ramyasridhar sis ❣


//விக்ரம் - அதிதி ஒவ்வொரு நொடியையும் வீணாக்காமல் காதலில் மூழ்கி திளைத்தவர்கள் என்று சொல்லலாம் ( காதல் பறவைகள் ) ஊடல் ஏற்பட்ட போதும் அதை விரைவில் சரி செய்து கொண்டவர்கள். விட்டுக்கொடுத்தல், மற்றவரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தல், தவறு செய்தால் உடனே தங்கள் இணையிடம் சரணடைவது என இவர்கள் புரிந்துணர்வால் மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாகவே திகழ்ந்தனர் 😍😍😍😍//

ஆமா sis 😊
Perfect couple eppadi இருப்பாங்க என காட்ட நினைத்தேன்..அதான் அப்படியொரு பாத்திரங்கள ❤



//கார்த்தி - சைத்து திருமணம் இப்போது வேண்டாம் என்ற ஒத்த கருத்தினால் இணைந்தவர்கள். வாழ்க்கையை இலகுவாக கடப்பவர்கள். விளையாட்டு பிள்ளைகள் போல் தெரிந்தாலும் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பும், அக்கறையும் அளப்பரியது. ஒரு சின்ன பிரிவால் அவர்கள் அறியாமல் உள்ளத்தில் புகுந்திருந்த காதலை உணர்ந்தவர்கள். அதன்பின் பிரிவு என்ற வார்த்தையே அறியாதவர்கள் (இணைபிரியா பறவைகள்) அவர்கள் சேட்டைகளை போல் அவர்களின் காதலையும் நம்மை இரசிக்க வைத்தவர்கள் 😍😍😍😍😍//


Perfect..இப்போது வேண்டாம் என்ற ஒத்த கருத்தினால் இணைந்தவர்கள் 💘
வார்த்தையில் அர்த்தம் தேட,
உயிரில் கொண்ட காதல் இல்லாது,
அவர்கள் அவர்களாகவே இருக்கும் இணைகள்..அவர்கள் வாழ்வு சரியோ தவறோ கொண்டாடி வாழ்பவர்கள் 💚


//கெளதம் - உதயா அழுத்தமான தம்பதிகள். உள்ளம் முழுதும் நிறைந்த தீவிர காதலை தங்கள் இணையிடம் வெளிப்படுத்தாமல் தங்களுக்குள் சிக்கலை ஏற்படுத்தி கொண்டவர்கள். அவர்கள் வார்த்தையில் சொல்லாத அவர்கள் காதலை உங்கள் கவிதை வரிகள் சொல்லிவிடும். மீண்டும் உங்கள் கவிதை வரிகளை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. பிடித்தம், பேராசை, ஆழமான அன்பு, பித்தம் என அவர்கள் சொல்லா காதலை உங்கள் வரிகள் சொல்லிவிட்டது 👌👌👏👏😍😍உணர்வுகளை அடக்கிவைத்து அது ஒரு நாள் வெடித்து சிதறி அவர்களை பிரித்து வைத்து இன்னும் அவர்களை காதல் பித்தம் கொள்ள வைத்தது எனலாம். அதன்பின்னே அவர்கள் உணர்வுகளை இணையிடம் வெளிப்படுத்தி தெளிவு அடைந்தார்கள்😍😍😍😍😍 ( காதல் தீவிரவாதிகள் இவர்கள் ) சொல்லா காதல் செல்லாது என்பதற்கும் இவர்கள் உதாரணம்.//

மிக சரி..சொல்லா காதல் செல்லாது .ஆழ்மன தேடல், அதற்கான போராட்டம் தான் இவர்கள் பாத்திரம்..இவர்களது எதிர்பார்ப்பு வார்த்தையில் சொல்ல எதிர்ப்பார்ப்பு 🙄அது தான் இவர்கள்..


//" எதை நான் கேட்பின் உனையே தருவாய் " இந்த தலைப்பு இவர்களுக்கே பெரிதும் பொருந்தும் என்று நினைக்கிறேன். முந்தைய ஒரு பதிவில் நீங்கள் போட்ட புகைப்படமும் அதன் வாசகமும் இவர்கள் இருவருக்குமே பொருந்தும் என நினைக்கிறேன். ( இவை இரண்டிலும் என் புரிதல் சரியா இல்லை தவறா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும் சிஸ் )//



இதுவும் சரி தான் sis 😍..

சைத்து antha செய்தித்தாள் படிக்கும் காட்சியில் உணர்வால் கார்த்திக்கை தேடு வாள் அந்த இடத்தில் இவர்களுக்கும் பொருந்தும்..

இறுதியில் விக்ரமிற்கு இன்னும் காட்சி இருந்தது..அவைகளை நான் எடுத்து செல்லவில்லை..அந்த நிலையில இவர்களுக்குக் பொருந்தும்..

இந்த வாக்கியம் காதலுக்கான தேடல்.. ஏங்கி தவிக்கும் காதல்..அப்படி பார்த்தால் அதிதி தான் இப்படியொரு காதலுக்கு காத்திருப் பாள் ,அங்கு அவளுக்கும் பொருந்தும்..


இப்படி எண்ணி வைத்த தலைப்பு இது ரம்யா sis..


நீங்கள் ,உங்களது ரசிப்பு
எனது எழுத்துகளை சிறக்க செய்கிறது.

உங்களது வார்த்தைகள் எனக்கு
வாழ்த்தாக அமைகிறது..

உங்களது குறிப்புகள் எனக்கு
ஊக்கமாக அமைக்கிறது..

உங்களது பாராட்டுகள் என் மனதோடு இணைகிறது..

இறுதியில் எதை நான் ( எந்த கதை கரு) தந்தாலும் ,உங்களையே ( உங்களது விமர்சனம்) தரும் உங்கள் பண்பு என்னை பெரிதாய் மிக பெரிதாய் உணர்ச்சி அடைய செய்கிறது..

நன்றி !

உங்களது ரசிப்பில்
நெகிழ்வாய் நான்..
உங்களது வாழ்த்தில்
உயிர்ப்பாய் நான் 🙏🙏
🙏❣😍
[/QUOTE/]

தெளிவான விளக்கங்கள் கொடுத்ததற்கு நன்றி சிஸ்🙏😍 ஆமாம், கார்த்தி - சைத்துவுக்கு கூட கதையின் தலைப்பை வைத்து ஒரு கவிதை படைத்திருப்பீர்கள். எனது குறிப்புகள் உங்களுக்கு ஊக்கமாக அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி சிஸ். கதை மனதோடு ஒன்றிவிட்டது. உணர்வுகளை கதாபாத்திரங்களின் வாயிலாக கடத்துவதில் நீங்கள் வல்லவர்.அது உங்கள் முதல் கதையிலிருந்தே வெளிப்பட்டிருக்கிறது. உங்கள் பலத்தில் அதுவும் ஒன்று. உங்கள் மெனக்கெடலும், மனோதோடு ஒன்றிய கதாபாத்திரங்களும், உணர்வுபூர்வமான உங்கள் கவிதை வரிகளுமே என் விரல்களை ஒவ்வொன்றையும் குறிப்பிடும் படி செய்தது. நான் கதையில் பயணிக்கும் போதே முடிவு செய்தது தான், நான் இரசித்ததை கதையின் முடிவின் போது தவறாமல் பதிய வேண்டுமென்று. ( இப்போது என்னால் தளத்தில் அதிக நேரம் செலவிட முடிவதில்லை, அதனால் தான் என் கருத்துகளும், பதில்கள் தவறுவதற்கும், தாமதமாவதற்கும் காரணம். தாமதத்திற்கு மன்னிக்கவும் ) முடிந்தவரை என் மனதை தொட்டதை சொல்லிவிட்டேன் என்றே நினைக்கிறேன். அனைவரின் பாராட்டுகளுக்கும் நீங்கள் தகுதியானவரே !! (You deserve it ) இன்னும் நீங்கள் சிறந்த படைப்புகள் படைக்க எனது வாழ்த்துக்கள்🌷🌷🌷🌷 😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
// அத்தனை விஷயங்களையும் குறிப்பிட்டு பட்டியலிட்டு சொல்வதற்கு நான் தலை வணங்குகிறேன் 🙏
இனிமே அது நம்ம ஸ்விஸ்..நானும் போனதே இல்லை..அதான் அவங்க கூட நானும் சுத்தி பார்த்து விட்டேன் ரம்யா sis 😍 //

ஆமாம் சிஸ் அது நம்ம ஸ்விஸ் தான் 😍

//நிறைய பேர் அவனை சொல்றாங்க.. ப்ரெண்ட் அஹ் ,இணையா, மகனா ,உறவா ,நீங்க தம்பியா சொல்லியிருக்கீங்க ..
வேணும்னா இப்படி பண்ணலாமே , ஸைத்துவும் கார்த்திக் போல தான்..நானும் ,அம்முவும் ஸைத்து போல தான்..எங்களை நீங்க தத்து எடுத்துகோங்களேன் 🤷🤷🤷

நாங்க ரசம் வச்சு தருவோம் ரம்யா sis ❣💘//

அதற்கென்ன தாராளமாக தத்தெடுத்துக்கலாம்🤷‍♀️ ஆனால் இந்த ரசம் மட்டும் வேண்டாமே 😜

// இத்தனை இத்தனை திருத்தமான வாசகர்கள் இருக்கும் போது ,எனது முயற்சி இன்னும் பெரிதாக இருக்க வேண்டும் என உள்ளம் ஏங்கிறது..//

உங்களால் முடியும் சிஸ் 🌷🌷

// எத்தனை ரசனை உங்களிடம்
உங்களது குறிப்பிடல்
என் மனதிற்கு அத்தனை இன்பம் தருகிறது.விரல் தாளமாக இந்த வரிகள் தட்டி பார்க்கிறது.இதழ்கள் ராகமாக இவ்வரிகளை வாசித்துப் பார்க்கிறது. மனமோ பாடலை இங்கேயே சங்கமிக்கிறது..🙏நன்றி என்னை நானே ரசிப்பது போல செய்து உள்ளீர்கள் //

😍😍😍😍😍

// இதை விட என்ன இன்பம் நான் காண முடியும்..எனது படைப்பிற்கான உங்களது ரசிப்பது என்னை மூச்சு முட்டவும் வைக்கிறது.மூச்சு தந்தும் உயிர்க்க வைக்கிறது.//

🥰🥰🥰🥰🥰

//கதையோடு எழுதிய வரிகள் ..பெரிதாக நான் தமிழும் கற்று தேறவில்லை..//

நீங்கள் எழுதுவதை பார்த்தால் அப்படி தெரியவில்லை சிஸ் 😍

//அதிலும் உங்களுக்கு வார்த்தைகள் பிடித்தது என்றால் நீங்கள் மனதால் வாசிகிறீங்க..உணர்வால் எழுதுறீங்க..
நன்றி என்னும் வார்த்தை, உங்களது ரசிப்பின் முன் சிறிதாகி போகிறது//


அதற்கு காரணம் உங்கள் எழுத்து மனதிற்கு மிக நெருக்கமாக இருந்தது தான்🌷🌷🌷😍😍😍

நன்றி எல்லாம் வேண்டாம் சிஸ், இதேபோல் அருமையான கதையுடன் விரைவில் வாருங்கள்🌷🌷🌷
@Ammubharathi dei ஓடி வா.. நம்மள ரம்யா sis தத்து eduththukiraangalaam 😍😍😍😍


நன்றி ரம்யா sis..உங்களது அன்பிற்கு, நம்பிக்கைக்கு, நல்வாழ்த்திற்கு ❤❤❤
 
Top