All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

Advikasri

New member
Adei pandi I promise nee villan nu than ninaichen but arjunkku apparam semmaiya score panrathu nee than 😍😍😍
Mani paiya ithellam parththu kaththukka😜😜😜
Saritha appa va kuda anukku theriyatha🤔🤔🤔. Arjun thaimama oda ponnu thane anu
 

Hanza

Bronze Winner
adei lodukku paandi.... 😂😂😂😂 Unnoda antha dhairiyam romba pudichirukku..

avan Radhu nu sollavum Sai Radha vo nu oru nimisham stuck aagitten... Namma aalukkum oru jodi irukku nu theriyavum I am happy 😍😍😍😍

Kanagaraj tan Anu voda appa... So Saritha ku akka. One year different la. 🤔🤔🤔🤔
 

Subasini

Well-known member
வைரத்தை வைரத்தால் அறுப்பது போல...
வலியை வலியால் மாற்றும் வித்தை கற்றவனாக இன்று அவளை காதலால் கட்டியனைக்காமல் காமத்தால் ஆர தழுவிகிறான் இந்த கிருஷ்னார்ஜூனன்....


மனமோ ரணத்தால் ரத்தம் வடிக்க
வலியை மருந்தாய் அவளுள்
காதலாக கடத்தினானோ...

காமமும் காதலாகும் கட்டியணைப்பவனின் அன்பால்...

இதோ ராவணனாக அவளை கடத்தியவன்
இங்கே கிருஷ்னாஞ்சஜூனனாக அவள் மடியில் பிறப்பெடுக்கிறான்...

ஸ்ரீ மா சூப்பர் எபி...

டீஸர் மாஸ்... உங்கள் எழுத்துக்கள் எல்லாம் அவன் வலியை வலிக்க வலிக்க மருந்தாக்குவது படிக்கும் போது உணர முடிகிறது....

பெண்ணின் கண் பார்த்து அவள் காதலை மனதில் உணர்ந்த அவளின் பெண்மையை உணருபவனே ஆண் ஆக பிறபெடுக்கிறான்...
சூப்பர்.

அடுத்த எபிக்கு வெயிட்டிங் எப்படியும் அவளோட ஃபிளாஷ் பேக் வர போகுது அவளுடைய பாட்டி மற்றும் இவள் ஹிஸ்டரி படிக்க வெயிட்டிங்...
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராதைகேற்ற ராவணன்...! - ஸ்ரீ கலாவின் எதிர் மறை காட்டும் நேர் நிலைக் காவியம்!


இனிய தோழி,





அவன் உணர்வுகள்


அவள் உயிர்ப்பிலோ...? - ஆனால்


அவள் உயிர்ப்புகள்


அவன் உணர்விலோ...?





உயிர்ப்பில்லா உணர்வுகள்


உணர்வில்லா உயிர்ப்புகள்


வலியின் வீரியத்தில்


மீறும் வாழ்வுகள்....


காலம் சென்றாலும்


காயத்தின் வடுக்களாய்...!





பட்ட காயங்கள் போதாதா...


காதல் காயங்கள் ஆகாதா...


பட்ட ஊனங்கள் போதாதா...


காதலும் ஊனமாய் ஆகாதா...


ஊனத்தின் ரணங்கள்


புரையோடினாலும்...


ஈனத்தின் குணங்கள்


இரை தேடினாலும்...


தலையில் எழுதிய


பிரம்மனின் எழுத்து


காலம் மாறினும்


மாறாததன்றோ...?





சம்பவம் செய்பவன் அல்ல மனிதன்


அமரத்துவம் செய்பவனே புனிதன்!





வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Last edited:

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? அருமையான பதிவு...

பாண்டியன் அராஜகத்திற்கு அளவே இல்லை... இவன் கண்டிப்பாக கோமாளி இல்லை... நினைத்ததை நடத்தும் தன்னுடையதை தக்க வைத்து கொள்ள இறுதி வரை போராடி ஈகோ இல்லாமல் தன் துணையிடம் மண்டியிடும் வாழ்க்கையை வாழ துடிக்கும் வெற்றி நாயகன்... அற்புதமான காதலன்... காரியத்தில் கண்ணாக இருந்து சரிதாவையும் காப்பாற்றி அவள் கழுத்தில் தாலியும் கட்டி பெற்றோர் மற்றும் அவள் பெற்றோரையும் சமாளித்து அருமை ஸ்ரீ மேம்..

மூன்று ஜோடி சேர்ந்தாகி விட்டது.. மீதம் இருப்பது நம் கண்ணன்... அவனுக்கும் ராது என்ற ராதிகா உள்ளாள்... அதுவும் கிருஷின் நேர் கண்காணிப்பில்...

அடுத்து வருவது நம் கிருஷ் அனு தான்.. அவர்கள் சேர்வது எப்போது???

கனகராஜ் மறைந்திருந்து அனுவை பார்த்தாரா? கனகராஜ் அனுவிடம் நான் அப்பா என்று சொல்லி அப்பா மாதிரி என்பது... நிஜத்தில் கனகராஜ் தான் அப்பாவா? அதனால் தான் அனு அம்மாவிற்கும் இவளிற்கும் அந்த அளவிற்கு அன்பு இல்லையோ???

நிறைய கேள்விகள் மனதில்...

அற்புதமான பதிவு ஸ்ரீ மேம்...
 

TM Priya

Well-known member
Excellent srima...krishnarjun ku radhaikum marriage over.....Arjun ovonum parthu parthu panran radhaiku..but adha ava feel panla..flashback ku eager ah waiting ma..indha pandi paiyan chinna gap kidaichalum ivan velaiyai start paniran :LOL::LOL::ROFLMAO::love::love:
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராதைகேற்ற ராவணன்...! - ஸ்ரீ கலாவின் எதிர் மறை காட்டும் நேர் நிலைக் காவியம்!





இனிய தோழி,





சம்மதங்கள் இல்லாமல்


சம்பவங்கள் நடந்தேற...


சபிக்கப்பட்ட நெஞ்சங்கள்


சரணடையா தஞ்சங்கள்!





வலிக்க வலிக்க வெடித்தாலும்,


துடிக்க துடிக்க முடித்தாலும்


உணர்வுகளின் உயிர்ப்புகள்


உறையுமோ மஞ்சங்கள்!





உற்றாரும் மற்றாரும்


உணராத மர்மங்கள்..


ஊர் கூடிய உற்சவத்தில்


பேர் பாடிய சொந்தங்கள்!





கன்னிகா தானம் பெற்று


கரை சேர்ந்த உள்ளங்கள்...


கறை தீர ஓர் நாளில்


அடையுமோ அந்தங்கள்!





ராமனவன் ராவணனாய்


தன் தாரம் மீட்டு விட்டான்!


ராதையவள் சீதையென


தீக்குளித்துக் காட்டி விட்டாள்!


வேதனைகள் தீரும் முன்னே


சோதனைகள் மீறும் முன்னே


இணை சேர்ந்த பந்தங்கள்


தொட்டிடுமோ விந்தங்கள்!





ராதே கிருஷ்ணா...!


நீ காதலின் காரியவாதி!


தவிப்புகள் தீர்வதற்கு


தாபத்தை தூண்டிவிட்டு,


விதிர்ப்புகள் ஆறுவதற்கு


வித்தைகளைக் காட்டிவிட்டு


காதலில் கரையேற


கரம் வைத்த அர்ஜுனனே...


உன் காதல் லீலைகள்


இதிகாசச் சோலையிலே


மன்மதனின் லீலைகளே!





வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Top