All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? அழகான பதிவு..

கிருஷை போய் ராவணன் என்று யார் சொன்னது? ராமனே அவன்.. அனுவை கடத்தி வந்து சில நாட்கள் அனைவரையும் பயமுறுத்தினான். அவ்வளவே!

மற்றபடி எவ்வளவு அழகாக முன் திருமண நாளையே இப்போதும்
அதே நாளில் திருமணத்தை வைத்து அனைவரின் வாயையும் மூட வைத்து பெற்றோருக்கும் பெருமை சேர்த்து
அப்பா?? கனகராஜையே கன்னிகாதானம் செய்ய வைத்து
நம்ம காஞ்சனாவையே சிரிக்க வைத்து
நம் மூன்று ஜோடிகளையும் ஏங்க வைத்து
இன்றே முதலிரவையும் கொண்டாடி அவன் வலிக்கும் மருந்தை வைத்து எத்தனை வைத்துகளை செய்து சரித்திரம் படைத்துள்ளான் ஸ்ரீ மேம் நம் கிருஷ்...

அப்பப்பா! என்ன மாதிரியான காவியம் இது கடைசி வரை மர்மத்தை விடுவிக்காமல் அப்படியே கதையை ஒரு அழகான பதமாக கொண்டு போகும் விதம் இருக்கே!!!! அருமை ஸ்ரீ மேம்... உங்களால் மட்டுமே இது சாத்தியம்....

அற்புதமான அழகான பதிவு...
 

Banumathi Balachandran

Well-known member
பாண்டியின் ரௌடிசம் அதை ரசிக்க ஆரம்பிக்கும் சரிதா அருமை

கிருஷ் முதல் திருமண நாளில் திருமணம் செய்தது அருமை

ராதை கனகராஜின் மகளா?
அனைத்தும் அறிந்து கிருஷ் செய்யும் யுத்தம் ராதைக்காக அருமை ஸ்ரீமா
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பின்னே எதுக்கு இருக்கோம் நாங்க... 🤣🤣🤣🤣
கண்ணன் கல்யாணத்துக்கு எங்ககிட்ட வந்துதானே ஆகனும்... அப்ப கவனிச்சுக்கிறேன் 😏😏 (தலைவி @ஶ்ரீகலா note this point...) 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
 

TM Priya

Well-known member
பால்வாடி புள்ள கழுத்துல தான் தாலி கட்டிருக்க அர்ஜீனு :ROFLMAO::love::love:தெரிந்தே குற்றவாளியாக்குகிறேன்,என் உயிரை மாய்க்கக் கூட எனக்கு சுதந்திரம் இல்லையே அனுவின் இந்த வார்த்தைகளுக்குப் பின் ஏதோ ஒரு ட்விஸ்ட் வைச்சிருக்கீங்க மா...அர்ஜீன் மேல் எந்த தவறும் இல்லையே..கடைசி வரிகள் சூப்பர் மா..emotional epi...waiting for next epi
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராதைகேற்ற ராவணன்...! - ஸ்ரீ கலாவின் எதிர் மறை காட்டும் நேர் நிலைக் காவியம்!

இனிய தோழி,

கொண்டவள் மனமோ...
வலிகளின் வாதனையில்!
கொண்டவன் மனமோ...
வழிகளின் வேதனையில்!
வாதனையும் வேதனையும்
சாதனைகள் படைக்குமேன்றால்...
சாதிக்கப் பிறந்தவர்கள்
சாதனைகள் பேசட்டும்!

பதின் பருவ மொட்டொன்று
பயத்தின் போர்வையில்
படி தாண்டிய பரிதாபம்!


பரிதாபம் பரிகாசமாய்
பயணிக்கும் பாதையில்
பயத்தில் பரிதவிக்கும்
பூங்கொடியவள்...
நேர்மையின் நெகிழ்ச்சியில்
நேரிழையாய் நிமிர்ந்து நின்று
கற்பு நெறி காத்து விட்டாள்!
விட்டு விட்டுப் போனாலும்
பட்டுக் கெட்டு நின்றாலும்
பூவாய் மலர்ந்த சிறுமொட்டு
கருணையில் காருண்யம் காட்டியதோ!

இளம் வயது காளையொன்று
சுயத்தின் பார்வையில்
இடி தாங்கிய இளகாரம்!

இளக்காரம் இறுக்கமாய்
இயக்கத்தின் பாதையில்
இயல்பில் மறுதலித்து
இறுகிய மன்னனவன்...
இரக்கத்தை விட்டொழித்து
இறுதியைக் காட்டி விட்டு
இதயமற்று நிற்கையிலே
இதயத்தின் மூச்சினிலே
இரண்டறக் கலந்த மகள்
உயிர் கொண்டு ஓவியமாய்
உணர்வினைத் தூண்டிவிட்டால்
உற்றவனும் உரிமையை
உதறிவிட்டுப் போவானோ...?

பருவம் கடந்து
பக்குவமும் கண்டவர்கள்
பகுமானம் காட்டாமல்
பகுத்தறியும் மனம் கொண்டால்...
வெகுமானம் வெற்றியாய்
வேதனைகள் தீர்த்துவிட்டு
வாதனைகள் தீர்ப்பதற்கு
வாரிசுகள் வழியாமோ...!

மகளதிகாரம் மன்னனுக்கு மகிழ்ச்சி!
மகனவதாரம் மங்கைக்கு நெகிழ்ச்சி!
இருபதில் காதல் இயல்பு!
அறுபதில் காதல் அமிழ்து!


வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Last edited:

Hanza

Bronze Winner
கண்ணன் கல்யாணத்துக்கு எங்ககிட்ட வந்துதானே ஆகனும்... அப்ப கவனிச்சுக்கிறேன் 😏😏 (தலைவி @ஶ்ரீகலா note this point...) 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
அதுகென்ன... அது ஜாம் ஜாம் னு நடக்கும்... உங்க ஆளு மாதிரி ஒரே பொண்ணுக்கு ரெண்டு தடவை தாலி கட்ட மாட்டான்.....
 

Chitra Balaji

Bronze Winner
Oooooooo.... அவன் பாட்டி சாக kidakuraanga nu arjun ku கல்யாணம் pannanum nu avan அம்மா oda அண்ணன் பொண்ணு ku ava அப்பா kuda இல்லாமல் அந்த abirami kalyanam panni veikka samatham sollidichi avaluku பதினேழு வயசு தான் ah ivan enna குனிஞ்சு தலை nimurala.... Avanuku thaan avala பாத்து ஒரே shock 🤯 இவ்வாறு சின்ன பொண்ணு ah irukaale nu..... Entha சடங்கும் saanguyamum இல்லமல் வீடு laye கல்யாணம் mudichidichi... Athuyum avalodaya per ah கேட்டே avanuku avvallavu santhosham அவனே தாலி ready panni இருக்கான்.... Ava அப்பா தான் ava படிக்கட்டும் சின்ன பொண்ணு nu kutikitu poitaaru போல.... அவளும் annuppi vechitaan.... Ethuku திடிர்னு first night ஏற்பாடு panninaaga... Ethu naala ava அப்படி abaandama avan pathi சொன்னா காரணம் என்னன்னு தான் puriyala.... Abirami thaan காரணம் ah..... அவன் ava kita எவ்வளவு நல்லா nadanthukutaan chinna பொண்ணு padikiraanu ippadi pannitaa le..... என்னமோ இருக்கு ava இப்படி nadathukitathula.... முன்னாடி நாளே decide pannitaa ava என்ன panna poraanu.... Super Super mam.... Semma semma episode
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதுகென்ன... அது ஜாம் ஜாம் னு நடக்கும்... உங்க ஆளு மாதிரி ஒரே பொண்ணுக்கு ரெண்டு தடவை தாலி கட்ட மாட்டான்.....
ஆக மொத்தத்துல இந்த கதையில அவன் யாருக்கும் தாலியே கட்டமாட்டான்.... பார்ப்போம் 😎😎
 
Top