ராதைக்கேற்ற ராவணன்...
குடும்ப பகை ஒரு பெண்ணின் வாழ்க்கை புரட்டி போட்டு இருக்கிறது...
பாடம் படிக்கும் பட்டாம்பூச்சி ஆக சுற்றி திரியும் பெண்ணை பள்ளியறைப் பாடம் படிக்க திருமணம் செய்து வைத்த அந்த அப்பத்தாவ தான் சொல்லனும்
...
ஒரு திருமணம் அவள் ஏன் அப்படி சொன்னா என யோசிக்க யாருமே அங்கே இல்லை...
பக்குவம் என்பது இல்லாத வயதில் இருக்கும் அவளுக்கு நடந்தது என்ன...
ஏற்கனவே பிரிந்த குடும்பம் போலையே சொந்தம் விட்டு போக கூடாது என்ற அந்த பாட்டி பண்ணின வேலையை பார்த்தீங்களா....
ஸ்ரீ மா....
சின்ன பொண்ணு... அவள் தெரிந்தே பேசியிருக்கா ஆனால் அதுக்கு காரணம் பின்னாடி வரும் நல்லாவே தெரியுது...
அவளிடம் கொஞ்சமாவது மனசு விட்டு பேசனும் இந்த ராவணனுக்கு தெரிய வேண்டாமா போசாம போய் தூங்கி இருக்கான்...
அது தான் அவளை நன்றாக பார்த்திருந்தாலோ இல்லை அவளை அவதானித்து இருந்தா சில நேரம் அவளின் தடுமாற்றம் இல்லை வித்தியாசம் பிடி பட்டு இருக்கலாம்...
இல்லை இந்த கல்யாணம் அவளுக்கு விருப்பமா அவன் அவள் வாய் வார்த்தை கேட்க தவறிட்டானே...
மத்த திருமணம் மாதிரி இல்லை தானே படிச்சுட்டு இருக்க பொண்ணு அதனால் கண்டிப்பாக அவன் கேட்டு இருக்கனும் அது முதல் இரவில் ஆனாலும் பரவாயில்லை தவறிய கணவனின் நிலை தன் கட்டிய மனைவி வாழ்க்கை அவனுக்கே தெரியாமல் பல அசம்பாவிதம் நடந்தேறி இருக்கு எதுவும் தெரியாமல் அறிந்து கொள்ள விரும்பாமல் என்ன சொல்ல
ஒரு எபிக்கு போய்ட்டு இருக்கு என் விமர்சனம்
ஆக எதுவுமே விசாரிக்காமல் ஒரு வார்த்தை அதுக்கு கொலை பண்ண சொல்லி ஆச்சு....
இப்போ அவளிடம் அவன் ஆண் என்று நிருபிச்சாச்சு ஆனால் அதற்கான சந்தோஷம் கிடைச்சுதா இல்லை...
எப்படி கிடைக்கும் அது கிடைக்காது ஏன்னென்றால் அவள் பக்கத்தில் இருக்கும் நியாயம் கண்டிப்பாக அவனோட எல்லாத்தையும் அடித்து இழுத்துட்டு போயிரும்....
ஆண் எப்போது முழு ஆண் என பரிமாணிக்கிறான் என்ற தெளிவு இருந்தால் போதும்....
தும்பை விட்டு வாலை பிடித்து என்ன பயன்..
என்ன டெரர் இவன் கொலை பண்ண சொன்னதுக்கு தூக்கிட்டு வர சொல்லி இருக்கலாம்...
இது தான் ஆத்திர காரனுக்கு புத்தி மட்டு
இப்பவும் தூக்கிட்டு தானே வந்தான் கண்ணன் உதவியோடு...
இந்த வேலையை அன்றைக்கே பண்ணி இருந்தா அவள் கால் போயிருக்காது , பொருந்தாது என்ற மனம் கூட நாளடைவில் பொருந்தி இருக்கும்...
பெண்ணின் வாழ்க்கை யாரு வேணா பகைடை காயாக வைத்து விளையாடலாம் இன்று இந்த ராதை வாழ்க்கை எல்லோருக்கும் பேசவும் விளையாடவும் என்று ஆகி போயிருக்கு..,
அவளுக்கு அவளுக்காக அவளுடைய பக்கம் இருந்து அவள் மன வலியை புரிந்து கொண்டது ஒரு ஜீவன் கண்ணன் தான் நல்லாவே தெரியுது...
அடுத்த எபிசோட் வெயிட்டிங் ஸ்ரீ மா
இந்த எபியும் அதுக்கு முந்தின எபி மீண்டும் படிச்சதில் அவளுக்கான போராட்டம் இன்னும் வரும் போலையே...
இனி தான் தலைவரை செதுக்க தொடங்கி இருக்கு தெரியுது
கல்யாணம் நடக்கும் போது அவளுக்கு பிடித்தா கேட்டாங்களா தெரியவில்லை,அவளை பஞ்சாயத்தில் நிறுத்தி பேச சொன்ன போதும் அவளுடைய மனசில் என்ன அவள் உணர்வுகளை புரிந்துக் கொள்ள ஆள் இல்லை, இப்போது கடத்தி வந்தப்போது உனக்கு வலிக்குதா என்று வேதனையை கேட்க ஆள் இல்லை...
ஆக அவளுக்கான அன்பு இன்றும் கேள்வி குறி தான்....
வெயிட்டிங் ஸ்ரீ மா