All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்... மனதை கலங்க வைத்த பதிவு...

கிருஷிற்கும் அனுவிற்கும் திருமணம் நடந்து வாழ துவங்கி விட்டார்கள் என்று நினைத்தால் இப்படி ஒரு கடந்த கால நிகழ்வுகளா? இருவருமே சந்தோஷமாக இல்லையே?

அவன் அப்பாத்தாக்காக அவசரமாக செய்த திருமணம்... பாவம் அனுவை பார்க்கும் போதே பால்வாடி பொண்ணு போல இருக்காளே என்று அதிர்ச்சியடைந்தான் நம் கிருஷ்.. அனுவோட தந்தை கேட்டவுடன் படிக்கவும் அனுப்பிவிட்டான்... இருந்தும் யார் செய்த கோலம் இது?? அனு யாருக்காக இப்படி எல்லாம் செய்தாள்?? அனுவோட தாய் யார்?? இந்த இடத்திலும் ஸ்ரீ மேம் ஜாக்கிரதையாக அவர்களை குறிப்பிடவே இல்லையே... அனு செய்த செயலால் அவமானப்பட்டு கூனி குறுகியது நம் கிருஷ் அல்லவா?

சின்ன பெண் அனு.. கணவன் என்ற அன்யோன்யமும் கிருஷிடம் கிடையாது.. சாதாரணமாக கூட இருவரும் பேசி பழகவில்லை..வாய் திறந்தும் பேசவில்லை அவள்... அப்படி இருக்கும் போது யாருடைய பயமுறுத்தலில் அனு இப்படி செய்தாள்??? அச்சோ! யாரோ கிருஷ் தலை நிமிரவே கூடாது என்று செய்த செயலா? எவ்வளவு அழகாக அனுவிடம் பேசிவிட்டு படுத்த கிருஷ் காலை இப்படி ஒரு அதிர்ச்சியை எப்படி தாங்குவான்?? போங்க ஸ்ரீ மேம்! எங்களை புலம்ப வைத்து விட்டீர்கள்... மனம் தாங்க முடியாமல் அழுது புலம்புகிறது...

இருந்தாலும் அவள் அவனுக்கு பரிசளித்தது அவன் வலியை நீக்க தானா? அதை நம் கிருஷ் புரிந்து அனுவை ஆராதிப்பானா?

அழகான கவிதை வரிகள் அற்புதமாய்...

காத்திருக்கிறோம் புதிர்களின் விடையை காண...
 

Hanza

Bronze Winner
Adappavingala.... Major aagatha ponna katti vachi enna ayokkiya thanam panni irukkeenga... Ungalai kudumbathoda koondula niruthiyirukkanum.... Paal vadi ponnu madiri irukku nu sonna mattum podhathu avalai vendam nu solli veru ponnai mudichiruntha unnai aambalai nu solli iruppom... Aaya sonnanga aatukkutty sonnanga nu unga veerathai minor ponnu mele kaattina ippadi tan asinga padanum...
 

vijirsn1965

Bronze Winner
kadavule ayyo paavam chinna pen enru ninaithathu arjunuike thavaraaga poivittathe eppadiya oru pen anaivarathu munbum avanai avamaanapaduththuvaal paavam arjun avan kobamgyayamanathuthaan yean anu eppadi seithaa muthalileye thirumanaththuiku marutherukkalaam yaar thooduthalal eppadi nadanthu kondirukkiraal theriyavillai evaludaiya ammavum mamavum karanamoarunaal thaan kaalaiezhanthu vittaaloo 3 uds serththu padiththean superb vegu arumai mam(viji)
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராதைகேற்ற ராவணன்...! - ஸ்ரீ கலாவின் எதிர் மறை காட்டும் நேர் நிலைக் காவியம்!
இனிய தோழி,

அன்பின் கூடல்கள்
ஆசையின் தேடல்கள்
இயல்பான பாடல்கள்
ஈருடல் வாடல்கள்
உத்தமனின் ஊடல்கள்
ஊசலாடும் ஆடல்கள்
எண்ணத்தின் நாடல்கள்
ஏக்கத்தின் வாடல்கள்
ஐயத்தின் மூடல்கள்
ஒன்றான மடல்கள்
ஓவியத்தின் கடல்கள்
ஔசத நடல்கள்
வாழ்க்கையின் பாதையில்
வழிகாட்டும் திடல்கள்!

அறிந்தவன் அவன்
தெரியாதவள் அவள்
புரியாத மொழியில்
விரியாத வார்த்தைகள்...
கண்ணனாய் காத்தவன்
கண்ணியனாய் சேர்த்தவன்
உண்மைகள் உணர்ந்தாலும்
உரிமையில்லா உத்தமன்..
உற்றவன் கரம் சேர்த்து
உறுதுணை செய்து விட்டு
அண்ணனவன் அடிபற்றி
அமைதியாய் அகன்றிட்டால்...
ஆட்கொள்ள வந்தவன்
ஆட்கொல்லத் துணிந்து விட்டான்!
ஆட்கொல்லியானவர்கள்
அரிதாரம் கிழிப்பதற்கு!

அரிதாரம் பூசி அகம் மூடி நின்றாலும்
அவதாரப் புருஷனவன் அடக்காமல் விடுவானோ!

வாழ்த்துக்கள் தோழி, நன்றி





வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Top