All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
அவன் என்னதான் maa ninaikiraan..... அவன் friend kita காசு பணம் அர‌சிய‌ல் எல்லாத்தையும் விட ava தான் vennum nu sonna இப்போ ava kita குப்பை ya விட கேவலம் nu solraan appadi enna தான் panninaa ava..... Ivan ஏற்படும் panna ஆளுங்க அந்த கார் la iranjathai பாத்தாங்க la யாரு அது..... Kannan யால ஒண்ணுமே panna mudiyaatha நிலை la நிக்க vechitaan..... அவல எவ்வளவு ku evvallavu கேவலம் படித்த mudiyumo அவ்வளவு கேவலம் படுத்த num நினைகிறேன்..... அவன் கொடுக்க வேண்டிய காசுக்கு rendu perum vennumaa me..... Avaluku avvallavu dress jewels எல்லாம் vaangi கொண்டு poitaan.... என்னமோ plan pannitaan... Super Super mam.... Semma semma episode
 

Banumathi Balachandran

Well-known member
அவள் தான் வேண்டும் ஆனால் அவளுக்கு வலிக்கும் அளவுக்கு வேதனைகளையும் கொடுக்க வேண்டும். அவளை அளவுக்கு அதிகமாக நேசிக்கின்றான் அதே நேரத்தில் அவளை கொலை செய்ய முயற்சித்தும் இருக்கிறான். ஏதோ பெரிய வடு அவளால் அவன் வாழ்வில்.அவளோ அவனுக்கு செய்த தவறுக்குக்காக தினம் தினம் வேதனை அடைகிறாள். என்ன நடக்கப் போகிறது
நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் கதை மிகவும் அருமையாக உள்ளது
 

Fazminul rizana

New member
எவ்வளவு தான் நம் அனுராதாவ கீழ் தராமா பேசினாலும் அவளுடைய மானத்துக்கு களங்கம் விளைவிக்க நினைக்கல நம்ம நாயகன். என்ன இருந்ததாலும் அவளை பற்றிய அக்கரை அவனது அடி மனதில் இருக்கு அல்லவா. By the way என்ன இருந்தாலும் ஸ்ரீ அக்காவுடைய hero கு தனி கெத்து தான்
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராதைகேற்ற ராவணன்...! - ஸ்ரீ கலாவின் எதிர் மறை காட்டும் நேர் நிலைக் காவியம்!

இனிய தோழி,

ஆட்கொள்ள வந்தவன்
ஆக்ரோஷம் கண்டு
ஆயர் குலத்தவள்
ஆழியாய் ஆட...

ஆட்கொல்ல வந்தவன்
ஆவேஷம் கண்டு
ஆரணங்கு அவளும்
ஆறுதல் தேட....

ஆடலும் தேடலும்
அடங்காமல் போனால்
ராதையவள் பேதையாய்
அடங்கிடுவாளோ...?

தன்மானம் காக்கும்
தடுமாற்றம் தன்னில்
உன்மானம் காக்க
மறந்திடுவானோ...?

பெண்ணவள் ஏக்கத்தில்
ஆணவன் தாக்கத்தில்
துணையாய் நிற்பவன்
விட்டிடுவானோ...?

காலத்தின் கோலத்தில்
காவிய மாற்றத்தில்
ராவணன நீதியும்
நேர் நிலை தானோ...?

பட்டதெல்லாம் போதாதா!
கெட்டதெல்லாம் போதாதா!
விட்டதெல்லாம் போதாதா!
இலக்கென்று வில்லை
இழுத்துவிட்டாயே..., அர்ஜுனா...!
உன் இலக்கு தப்பாது!
உன் வழக்கு நிற்காது!
கால மாற்றத்தில்
காலாவதி ஆனது
உன் காதலன்றோ...?

வாழ்த்துக்கள் தோழி, நன்றி



 

தாமரை

தாமரை
வில்லுக்கு விஜயன்.. சொல்லுக்கு கீதையின் நாயகன்.. இரண்டுமே சேர்ந்தவன்.. இரண்டிலுமே சிறந்தவனாக மகாநாயகனாக நிற்கிறான்.. அனுவின் தவிப்பிற்கும் கிருஷ்ணார்ஜுனனின் கோபத்திற்கும் ஒரே காரணம் , ஆனால் தலைவர் ராதை மேல இரண்டு கண்ணும் வச்சு இருக்கார போலத் தெரியுதே... திரும்பவும் சொல்றேன்.. எனக்கு இவன் லவ்வர் பாயாத்தான் தெரியுறான் ஸ்ரீமா😍😁😍😁😍😁😍😁😍
 

Subasini

Well-known member
உன் சொல்லும், இலக்கும் அவளானால் காயம் அவளுக்கு இல்லை உனக்கே உனக்கு தான்.. கடைசி வரிகள் அருமை ஸ்ரீ மா...

பெண்ணின் மானம் உயிரை விட மேலானது என்பது மறந்தான்...

கொண்டவனை போல அவளுக்கான ஆடைகளை வாங்கியவன் காக்க வேண்டிய மானத்தில் விளையாட விளைகிறான்...

பெண்ணின் மனம் கண்ணாடி போன்றது அதில் விரிசல் விழுந்தால் என்ன இணைத்தாலும்
அதன் கீறல்கள் என்றும் ஆறா ரணமாக இருக்கும் என்பதை மறந்தவன் ஆனான்....

என்ன தவறு செய்த போதும் அதன் காலம், சூழல் மறந்து தன்னை மட்டுமே யோசிக்கும் இவன் ராவணன் தான்....

பி.கு...

ஸ்ரீ மா அவன் அவளை அலறவிடறது பார்க்கும் போது உண்மையான டெரர் தான் இவன்....
ஆனால் இந்த அப்பாவி கண்ணனை பார்க்கும் போது சிம்ம விஷ்ணு பத்ரிநாத் அவரோட பையனை தான் நினைவு வரான்....

உண்மையில் அப்பாவியாக உணருவது இந்த கண்ணன் தான் அவனுக்கு நல்லதா நாலு சீன் வையுங்கள் 😂😂😂

அடுத்த எபிக்கு வெயிட்டிங்... இந்த இராவணன் அடுத்து "blood" ரூசி பார்க்கும் சீன் 😁😁😁ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? நிறைய நாள் site பக்கம் வர முடியவில்லை.. Sorry..

இப்போது வந்து பார்த்தால் காமெடி கதையான காதலாகிய மோதல் full episode. சந்தோஷமான அதிர்ச்சி...

அட்டகாசமான விளையாட்டு பிள்ளையாகவும் மைனராகவும் காட்டிய காதல் அழகனை அற்புதமான காதல் கணவனாய்... அபாரம் ஸ்ரீ மேம்... உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டும் தான்... தங்கள் கதையில் உள்ள உயிரோட்டத்தில் நாங்கள் லயத்து ஒன்றி வாழ ஆரம்பித்து விடுகிறோம்.. மனைவி மேல் மைனருக்கு உள்ள புரிதல் அப்பப்பா! தங்கள் heroவிற்கே அது தனி சிறப்பு... வாழ்த்துக்கள் ஸ்ரீ மேம்...
 
Top