All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘கண்ணில் கனவாக நீ!!!’ கருத்துத் திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்கா தலைக்கு இப்படி காயம் பட்டுடுச்சே. பாவம் சர்வா.

பயப்பிள்ள அம்புட்டு காயத்திலும் அவள் அழுவதை ரசிச்சுட்டு இருக்கான் 🫢🫢

இந்த ரேகா பொண்ணுக்கு பரணி மேல ஒரு பீலிங்ஸும் இல்ல. தலையை கடவுளா பார்த்து வைக்கிறா. எப்போ தான் காதலன்னு ஒன்னு பண்ணுவா 🤔🤔

தல என்னவோ முடிவுடன் இருக்கான். என்னனு தான் கா புரியல.

செமையா போகுது கா. Beauty யை விட்டு பாட்டியை தூக்கி சகோர் பண்ணிட்டான். செம செம கா ❤️❤️❤️❤️❤️
 

CRVS

Member
கண்ணில் கனவாக நீ..!
(அத்தியாயம் - 10)

தாரிகாவை சர்வாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்க எங்களுக்கும் தான் விருப்பமில்லை. அதே மாதிரி, ரேகாவை பரணிக்கு கல்யாணம் பண்ணி வைக்கவும் எங்களுக்கு இஷ்டமில்லை தான். ம்... இப்ப என்ன பண்ணலாம்...???

அய்யய்யோ..! இவன் வில்லங்கம் புடிச்சவன்...! இவன் வருங்கால மனைவின்னு
சொல்றது கூட இந்த பப்ளிமாஸா இருக்கலாம்...
யார் கண்டா..?

அடப்பாவி...! இவனே அவளை பரணியை நினைச்சுக்க சொல்றான்.... நினைச்ச பிறகு
காயவும் (வைக்க) செய்யறான்.
சரியான விவகாரம் பிடிச்சவன்.

அய்யய்யோ...! இந்த ரேகாவைப் பார்த்தா "அறியாத வயசு, புரியாத மனசு... ரெண்டுங் கெட்டானா இருக்காளே" ன்னு பாடத் தோணுது.

சர்வாவை பார்த்தா....
"இவன் பார்வைக்கு என்ன பொருள்....?ன்னு கேட்கத் தோணுது.

இதுல இந்த தாரிகாவை...
எந்த லிஸ்ட்ல சேர்க்குறதுன்னே
தெரியலை. அவன் வேணும், ஆனா, அவனுக்குன்னு குச்சியை கூட தூக்கி போடமாட்டா....!

அய்யோ கடவுளே...! இதுங்க பண்ற கூத்தையெல்லாம் பார்த்து...
மனிதர்கள் பலவிதம்....
அதில் ஒவ்வொன்றும்
ஒரு விதம்ன்னுத் தான் எனக்கு
புலம்பத் தோணுது.
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 

vijirsn1965

Bronze Winner
Naangu episodes searththu padiththean anaithum arumaiyaaka irunthathu Sarva vaithaan purinthu kollave mudiyavillai avanuku irukkum thoshaththai vaithu Tharika solvathu pola yaarukkum theriyaamal UdhayaReka vai muthal thaaramaaka mudiththu viduvaarkalo appo Bharani yin nilai yean Udhaya vai intha alavu alakazhikkiraan Sarva ennathaan veandum avanuku etho ontru irukkirathu over possesive ah irukkiraane super super arumai mam viji
 

CRVS

Member
கண்ணில் கனவாக நீ..!
(அத்தியாயம் - 11)

அட... எப்ப பார்த்தாலும் என்னோட மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளா இருக்கணுங்கற... இந்த ஒரு வார்த்தையை சொல்லி, சொல்லியே பொண்ணுங்களை ஆயிரம் தடவை தீக்குளிக்க வைச்சடறாங்கப்பா. ஆனாலும், ஒரு பெண்ணாவது நான் நேசிக்கிறவரு என்னை சந்தேகப்படாதவரா இருக்கணும்ன்னு பதிலுக்கு ஒரு வார்த்தை சொல்றாங்களான்னா....
மஹூம்.... சுத்தம். அந்தளவுக்கு புத்திசாலியா இருந்தா வாலண்ட்ரியாப் போய் ஏன் வான்டட் ஆகப் போறாங்க
சொல்லுங்க.

ஆனாலும், இந்த தாரிகாவுக்கும் பரணிக்கும் நாக்குப் பொருத்தம்
செம. பேசாம இவங்க ரெண்டு பேரும் ஜோடி சேர்ந்தா எப்படி
இருக்கும்ன்னு இமேஜின் பண்ணிப் பாருங்களேன்.
அப்படியே இன்னொரு தாமோதரன் மந்தாகினி ஜோடிக்கு டூப்புத் தான்.

தா ரி கா & பரணி ஜோடி சேருறது இருக்கட்டும்... முதல்ல இவங்க ரெண்டு பேருக்கும்
நேரம் சரியில்லைன்னு தானே
அந்த ஜோசியர் சொல்லி இருக்கணும் ... அதை ஏன் மிஸ் பண்ணிட்டாரு.
:LOL: :LOL: :LOL:
CRVS (or) CRVS 2797
 
Top