All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘கண்ணில் கனவாக நீ!!!’ கருத்துத் திரி

CRVS

Member
கண்ணில் கனவாக நீ..!
(அத்தியாயம் - 15)

ஆனாலும் இந்த சர்வா, உதியை ரொம்ப படுத்துறான்ப்பா. பாவம் அந்த பொண்ணு. முதல்ல இவன் தானே அந்தஸ்து பார்த்தது. இப்ப அவனே அவளை கட்டிக்கிறேன்ங்கறான்
இவன் அவளை மட்டும் இல்லை,
நம்மளையும் குழப்புறான், நல்லா ட்ரில் வாங்குறான்.

நினைச்சேன்... இதெல்லாம் சர்வாவோட வேலையாத்தான் இருக்கணும்ன்னு... ஏன்னா, அந்தஸ்து பார்க்கிறவங்களுக்கு
அவளை உயர்த்தி காட்டி, ஈக்குவலைஸ்க்கு கொண்டு வந்துட்டா, தலையில தூக்கி வைச்சு ஆடலைன்னாலும்
மதிக்கவாவது செய்வாங்க தானே. இதன் மூலமா அவன் பதிலடி கொடுக்க ஆரம்பிச்சிட்டான். ஆனா, எனக்கு ரெண்டு விஷயம் புரியலை..? முதல்ல ஏன் அந்தஸ்து பார்த்து அவளை தள்ளி நிப்பாட்டினான்..?
இதை ஏன் முன்னாடியே செய்யாம மத்தவங்களை அதாவது பரணி மாதிரி ஆளுங்களை உள்ளே விட்டான்...? ஒருவேளை, உதி மேல தனக்கு இருக்கும் உரிமையையும், ஆளுமையையும், பொஸஸீவ்நெஸ்ஸையும் முதல்ல உணரலையோ...?
இப்பவாவது உணர்ந்தானே...!
ம்... இனி எல்லாம் சர்வா
மயம் !
:love: :love: :love:
CRVS (or) CRVS 2797
 

CRVS

Member
கண்ணில் கனவாக நீ..!
(அத்தியாயம் - 16)

உண்மையைச் சொல்லுங்க...! இந்த சர்வா வில்லங்கமா ப்ளான் பண்ணித்தானே எல்லாத்தையும் பண்றான்.
அந்த ஜோசியர், ஜாதகம், முதல் மனைவி செத்துப் போறது, ரெண்டாவது கல்யாணம் எல்லாமே பொய் தானே..?
பக்கா ப்ளான் தானே...?
இந்த தாரிகாவோட திட்டமெல்லாமே சர்வாவுக்கு தெரிஞ்சிருக்கு தானே..?
இன்னும் கல்யாணத்தப்ப
என்ன பண்ண காத்திருக்காளோ அந்த நச்சுப் பாம்பு தாரிகா...? அவ என்ன வேணா ப்ளான் பண்ணட்டும் அதை முறியடிக்கத்தான் பரமசிவம்... அட சே... நம்ம சர்வேஸ்வரன் இருக்கான் தானே..!!!

அதுமட்டுமில்லாம, சர்வா மனசுக்குள்ள ஏதோவொரு சிதம்பர ரகசியம் இருக்குதுன்னு பட்சி சொல்லுது... அது நிசம் தானே.??

ஆனா, இதுல மாட்டிக்கிட்டு முழிக்கிறது நம்ம பப்ளிமாஸ் மட்டும் தான். முன்னாடி இருந்த அந்த இன்னோசன்ட் பப்ளிமாஸே இப்ப காணோம்.
எல்லாம் இந்த சர்வாவால....
பயபுள்ளை ரொம்ப பயமுறுத்தி
வைச்சிருக்கான். பேருக்கேத்த மாதிரியே முதலும் அவனே...
முடிவும் அவனே...!
😜😜😜
CRVS (or) CRVS 2797
 
Top